Monday, January 13, 2014

அகடம் - சினிமா விமர்சனம் ( ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை திரைப்படம் )

தினமலர் விமர்சனம்

உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் கின்னஸ் சாதனை சான்றிதழுடன் 2 மணிநேரம், 2 நிமிடங்கள் ஓடக்கூடிய விதத்தில் நல்லதொரு விழிப்புணர்வு மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'அகடம்'

போலி மருந்துகளின் போக்கிரி தனங்களாலும், மனித உயிர்கள் பற்றி கவலைப்படாமல் அதை தயாரிப்பவர்களின் பொல்லாத குணங்களாலும், தன் குழந்தையையும், குடும்பத்தையும் அநியாயமாக இழக்கும் ஹீரோ, தன் மனைவியின் ஆவி உதவியுடன், போலி மருந்து பொறுக்கிகளின் கதையை முடிக்கும் கதை தான் 'அகடம்' படத்தின் கையடக்க கரு, கதை, களம் எல்லாம்!

கதாநாயகர் தமிழ், போலி மருந்து தயாரிப்பாளர்களின் கூட்டாளியாகவே களம் இறங்கி, தன் மனைவி பாத்திமா எனும் ஸ்ரீபிரியங்காவின் உயிரற்ற உடலுடனும், உயிரோட்டமான ஆவியுடனும் கயவர்களை பயமுறுத்தி பழிதீர்க்கும் காட்சிகள் திக் திக் திகில் காட்சிகள்!


கதையின் நாயகி பாத்திமாவாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா கை குழந்தையுடன், ஆவியாக அசால்ட்டாக பயமுறுத்தியிருக்கிறார். சஞ்சய்-பாம்பே பாஸ்கர், ஜான் - ஸ்ரீனிஐயர், அசோக்-கலைசேகரன், பிச்சை பெருமாள்-சவரண பாலாஜி, குழந்தை அப்துல் கலாமாக வரும் மாஸ்டர் அஜெய், விலைமாதுவாக வரும் அனிஷா உள்ளிட்ட அனைவரும் தாங்கள் ஏற்ற பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பலே, பலே!

கே.பாஸ்கரின் பின்னணி இசை, இ.ஜே.நவுஷத்கானின் ஒளிப்பதிவு, இசட்.முகமது கிஷாக்கின் இயக்கம் எல்லாம் சேர்ந்து சில காட்சிகளை 'ஜவ்'வாக இழுத்தாலும், நல்ல 'மெடிக்கல் மெசேஜ்' உடன் சிறந்து நிற்கும் 'அகடம்', புதிய முயற்சிக்கு 'மகுடம்!'
 
  • நடிகர் : தமிழ்
  • நடிகை : ஸ்ரீ பிரியங்கா
  • இயக்குனர் :இசட்.முகமது கிஷாக்
thanx - dinamalar


கோல்டன் குளோப் விருதுகள் -11 ஹாலிவுட் திரைப்படங்கள் (லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் )

  • சிறந்த நடிகர் விருது பெற்ற லியார்னடோ டிகாப்ரியோ
    சிறந்த நடிகர் விருது பெற்ற லியார்னடோ டிகாப்ரியோ
ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை படைப்புகளுக்காக வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்து முடிந்தது. லியார்னடோ டிகாப்ரியோ சிறந்த நடிகராகவும், அமெரிக்கன் ஹஸல் சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


கோல்டன் குளோபில் விருது பெற்றவர்களுக்கு ஆஸ்கரில் விருது பெறவும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து நிலவுவதால், ஆஸ்கரைப் போலவே, ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருதுகளும் சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கும். இந்த வருடத்திற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடந்தது. 

  • சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதுடன் ஜெனிஃபர் லாரன்ஸ்
    சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதுடன் ஜெனிஃபர் லாரன்ஸ்

இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ, இரண்டாவது முறையாக, வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார். 


காமெடி மியூசிக்கல் வகையில் சிறந்த திரைப்படமாக அமெரிக்கன் ஹஸல் திரைப்படமும், டிராமா வகையில் சிறந்த படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதை, உலகம் முழுவது வெற்றிகரமாக ஓடி, விமர்சகர்கள் பாராட்டையும் பெற்ற கிராவிட்டி படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ காரன் பெற்றர். சென்ற வருடம் கோல்டன் குளோபில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸ், இந்த முறை சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.


  • சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஃபோன்ஸோ காரன்
    சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஃபோன்ஸோ காரன்

முழு விருது விவரங்கள் பின்வருமாறு:

 
# சிறந்த திரைப்படம் (டிராமா) - 12 இயர்ஸ் எ ஸ்லேவ் 


# சிறந்த திரைப்படம் (காமெடி/மியூசிக்கல்) - அமெரிக்கன் ஹஸல் 


# சிறந்த நடிகர் (டிராமா) - மேத்யூ மெக்கானஹே (டாலஸ் பையர்ஸ் க்ளப்) 


# சிறந்த நடிகர் (காமெடி/மியூசிக்கல்) - லியார்னடோ டிகாப்ரியோ (வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்) 


# சிறந்த நடிகை (டிராமா) - கேட் ப்ளான்செட் (ப்ளூ ஜாஸ்மின்) 


# சிறந்த நடிகை (காமெடி/மியூசிக்கல்) - ஏமி ஆடம்ஸ் (அமெரிக்கன் ஹஸல்) 


# சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன் 


# சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் - தி கிரேட் பியூட்டி (இத்தாலி) 


# சிறந்த உறுதுணை நடிகர் - ஜாரெட் லிடோ (டாலஸ் பையர்ஸ் க்ளப்) 


# சிறந்த உறுதுணை நடிகை - ஜெனிஃபர் லாரன்ஸ் (அமெரிக்கன் ஹஸல்) 


# சிறந்த இயக்குநர் - அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி) 


thanx -  the tamil hindu

  • சிறந்த நடிகையாகத் தேர்வான ஏமி ஆடம்ஸ்
    சிறந்த நடிகையாகத் தேர்வான ஏமி ஆடம்ஸ்

Sunday, January 12, 2014

YEVADU- சினிமா விமர்சனம்(தெலுங்கு)-2013

அல்லு அர்ஜூனும்,காஜல் அகவாலும் லவ்வர்ஸ்,ஆனா அந்த ஊர்ல இருக்கும் தாதாவும் அதே காஜலை லவ்வறான்.அதனால ஏற்படும் தகராறுல காஜல் ஆள் அவுட்.அல்லு அர்ஜூன் முகம் எல்லாம் எரிஞ்சு ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகறார்.இது ஒரு பக்கம்,அப்படியே வண்டியைத்திருப்புனா....


ராம்சரண்-ன் எதிரி சாய்குமார்(இவரும் தாதா தான்,)சவுரி இல்லாத ஃபிகரைக்கூட  ஆந்திராவுல பாத்துடலாம்,ஆனா தாதா இல்லாத சினிமாக்கதையைப்பாக்க முடியாது போல.3000 கோடி பிராஜக்ட்டுக்காக வில்லன் தாதா சாய் குமார் ஹீரோ இருக்கும் ஏரியாவில் நில ஆக்ரமிப்பு செய்யறான்.அதைத்தட்டி கேட்கும் ராம்சரனை  10 அடி நீளம் உள்ள  கத்தி(வாள்)யால28 தடவை குத்தி கொல்றான்.இப்போ ராம்சரண் ஹாஸ்பிடல்ல.


ஃபேஸ் ஆஃப் படத்தில் வருவது போல ராம்சரணின் முகத்தை(தோல்) ,அல்லு அர்ஜூனுக்கு வெச்சு ஆபரேஷன் பண்றாங்க.அவர் வந்து வில்லன் குரூப்பையும்,படம்  பாக்கும் ஆடியன்சையும் ஒரு சேரப்பழி வாங்கறார்,அய்யோ,அம்மா,முடியல.உஷ்,அப்பா

ஹீரோவா ராம்சரண்.இவர் 2 பாட்டுக்கு பிரமாதமா டான்ஸ் ஆடறார்.எமிஜாக்சன் கூட இடைவேளை வரையும்,அதுக்குப்பின் ஸ்ருதியோடவும் டூயட் பாடறார்.


எமிஜாக்சன் மதராசப்பட்டினம் ல அழகா வந்துபோவார்.இதுல எடுபடலை,மேக்கப் கர்ணகொடூரம்.ஜாக்கெட்,டிசைன்ல டெய்லர் தெச்ச பின் ஜாக்கெட் போட்ட பின் கத்திரிக்கோலால இந்தப்பக்கம் கொஞ்சம்,அந்தப்பக்கம் கொஞ்சம் வேணும்னே வெட்டிக்கிட்ட மாதிரி இருக்கு,சரி,ரசிச்சு வெப்போம்.


ஸ்ருதி,காரக்கொழம்பைத்தலைல ஊத்திக்கிட்ட  மாதிரி ஒரு செம்பட்டைத்தலை.ஃபோன் பண்ணி ஏன்?னு விசாரிச்சா அது தான் கோல்டன் ஹேராம்.ஹே!ராம்!  (யார்  யாரோ மோகன் லால் ஃபோன் பண்ணி அப்டிச்சொன்னார்,இப்டிச்சொன்னார்,ஐ ஆம் ஹேப்பி-ன்னார்னுஅடிச்சு விடும்போது,நாமும்,அடிச்சுவிட்டா என்ன?)

ஸ்ருதிக்கு லிப்ஸ்டிக் போட யாராவது சொல்லிக்கொடுத்தா தேவலை,அப்டியேஅப்பிக்குச்சு.லோகட்,ஜாக்கெட்,யார்,வேணா,எப்படி,வேணா
,போடலாம்,அதுக்கு.எந்த,தகுதியும்,தேவை,இல்லை,ஆனா,.லோ,ஹிப்,சேலை
கட்ட
தகுதி,வேணும்.தொப்பை,இருக்கக்கூடாது, இடையில்,வளைவு,இருக்கனும்.

இதை,எல்லாம்,கவனத்தில்,கொள்வது,நல்லது,அபாயகரமான,இறக்கத்தில்,
போகும்,ஊட்டி,சாலை,மாதிரி,லோ,ஹிப்,இறக்கமா,அதே,போல்,பயங்கரமான
லோ,கட்,ஜாக்கெட்டில்,டான்ஸ்,மூவ்மெண்ட்டில்,துள்ளல்கள்,அதிகம்

வில்லன்,சாய்,குமார்,நெத்தில,2,அடி,நீளத்துக்கு,3இஞ்ச்,அகலத்துலகுங்குமம்
,வெச்சு,காமெடி,பண்றார்.சாரி,அதுதான்,வில்லத்தனமாம்.முடியல.


இடைவேளை,வரை,வில்லன்,ஆட்களை,ராம்சரண்,ஸ்கெட்ச்போட்டு,
தூக்குவதிலேயே,போயிடுது.

அதுக்குப்பின்,ஃபிளாஸ்பேக்

ஓவர்,லிப்ஸ்டிக்,ஓமனா

படத்தில்,உருப்படியான,ஒரே,ஒரு,வசனம்


1.எதிரிகளுக்கு,நம்,மீது,இருக்கும்,பயம்,தான்,நமக்கு,முதலீடு

(இந்த,வசனத்தை,இன்னும்,எத்தனை,படத்துல,பாக்க?)


சபாஷ்,இயக்குநர்


1.எமி,ஜாக்சன்,ஸ்ருதி,காஜல்,அகர்வால்,என3,பேரை,புக்,பண்ணி(படத்துக்கு)
கொடுத்த,சம்பளத்துக்கு,இணையான,கிளாமர்,காட்ட,வெச்சது


2.அட்டகாசமான,3பாடல்கள்,2டூயட்,ஒரு,குத்தாட்டம்


சொதப்பல்ஸ்,சொப்னா


1.நடு,ரோட்டில்,வில்லனின்,அடியாள்,காரில்,இருந்து,பைக்கில்,இருக்கும்,
ஹீரோவை,சுடறார்.குறி,தவறிடுது,உடனே,வில்லனின்,அடியாள்,ஏன்,ஓடனும்

ஹீரோவிடம்,ஆயுதம்,இல்லையே?இன்னும்,சுட்டிருக்கலாம்


2,ராம்,சரண்,வில்லனின்,அடியாளை,சேஸ்,செய்யும்போது,அவன்,அடிபட்டு,

எதிர்பாராத,விதமா,இறந்துடறான்,அவனை,யார்,அனுப்பினாங்கனு,
ஹீரோவால,விசாரிக்க,முடியலடெட்,பாடி,பேண்ட்,சர்ட்,பாக்கெட்ல
செக்,பண்ணி,இருந்தா,செல்,ஃபோன்,கிடைச்சிருக்கும்,அதுல,மெசேஜோ,
ரிசீவ்டு கால்,பாத்திருக்கலாம்



சி.பி,கமெண்ட்-ஆந்திராவில்,செம,ஹிட்,னு,அடிச்சு,விடுவாங்க,யாரும்
நம்பிடாதீங்க. மாமூல் மசாலா ரிவஞ்ச் சப்ஜெக்ட் - ஸ்ருதியின் கிளாமர் தூக்கல் ,மீதி நேரம் தூங்கல் 


ஈரோடு,அண்ணா,தியேட்டரில்,படம்,பாத்தேன்


டிஸ்கி-ட்விட்டர் ல தல தளபதி ரசிகர்கள் பைட் நடக்குதேன்னு சலிச்சுப்போய் யவடு தெலுங்குப்படத்துக்குப்போனா அங்கே 2 க்ரூப் வீரமா? ஜில்லாவா?பைட்டிங்

-ரேட்டிங் = 2.25 / 5



Friday, January 10, 2014

வீரம் - சினிமா விமர்சனம்


ஒட்டன்சத்திரம் - இந்த ஊர் ல  ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை  தனித்தனியா லவ் பண்றாங்க .இப்டியே  அண்ணனை விட்டா  அவர்  நம்ம எல்லாரையும்  பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு  ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம்  கூட சேர்ந்து  ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள் , கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம்  ஜாலியாப்போகுது .


இவர் ஊருக்கே  எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப்.அவங்கப்பாவும்  அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ  நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு.போகும்போது  ரயில் ல  ரவுடிகள்  தாக்க வரும்;போது ஹீரோ  செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கைப்பார்த்து  ஷீலா தீட்சித் மாதிரி .இடைவெளை.


அதுக்குப்பின்  ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே  இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்டி  கரை சேர்க்கிறார்? என்பதே  மிச்ச மீதிக்கதை 


ஆரம்பம் அதிரடிப்படம்  கொடுத்து அடுத்த 70 வது நாளில்  ஒரு  வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம  கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள்  ஒரு ஹீரோ  படம்  ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க . அந்த பாணியில் இருந்து  விலகி அஜித் இதில்  விநாயகம் கேரக்டரில்  நடிச்சுப்பட்டையைக்கிளப்பி இருக்கார் . 


இவர் வசனம் பேசும் காட்சிகளில்  பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே  கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி  இருக்கார். 

என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து  3 சாப்பிட நேரும்போது  கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்& பெப்பர்  லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக  தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும் , ஒரு படம் அப்படி , அடுத்த படம் இப்படி என மாத்தனும் .


டூயட் காட்சிகளில்  நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு  ஓக்கே . 


சந்தானம்  இதிலும்  கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தபப்டத்தில் வந்தாலும்  ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர் இதில் பம்மி  இருப்பது ஏனோ? அவர் அடிக்கும்  ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில்  தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல .


 இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது, 

தமனா தான்  ஹீரோயின் . பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்ப்தால்  முடிந்த வரை  கண்ணீயமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர் ? ) 


விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே . கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் . 


இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி  சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என  தெரியாமல்  காமெடிக்காட்சிகளை வெச்சு  ஒப்பேத்தி  இருக்காங்க . 



சபாஷ் சத்யா 


1. படத்தில்  அஜித் வரும் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் வழக்கம் போல் கெத்து. மழையில்  குடையுடன்  வரும்  மாஸ்  சீன் , ரயில்  ஃபைட்டுக்கான ஓப்பனிங்க் பில்டப் , க்ளைமாக்ஸ் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அருமை 



2. ஹீரோ அண்ட்  கோ அமைதியான குடும்பம் என அறிமுகப்படுத்தி எல்லோரும் சாப்பிட உட்காரும்போது செல் ஃபோன்  ரிங்க் டோனாக “அட்ரா அட்ரா நாக்கு முக்க “ பாட்டு ஒலிப்பதும் நாசர்   திகைப்பதும்  செம காமெடி 



3. ஹீரோ , ஹீரோயின் இருவரின்  ஓப்பனிங்க் காட்சிகளில் சமாதானப்புறா பறக்க விடுவது , ஒரு காட்சியில்   நிர்மூல வானத்தின் பின்னணியில் கழுகு ஒன்று மேலே பறக்க அஜித்க்கு  கிரவுண்ட்   ஷாட் ஆங்கிளில்  பில்டப்  கொடுப்பது எல்லாம் அக்மார்க்  அஜித் ஸ்டைல் பிராண்ட்.விநாயகம்  என்ற பெயரில்  தீப ஒளிவிளக்கு வரிசை வருவது  வீரா படத்தில் மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாட்டின் ஓப்பனிங்க் லீடில்  இருந்து  உருவப்பட்டிருந்தாலும்  நேர்த்தியான காட்சி 


4.  ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இடைவேளை வரை கலகலப்பாக நகரும்  குடும்பக்கதை படத்துக்கு பெரிய பிளஸ். ஆல் செண்ட்டர் ரசிகர்களும் ரசிக்கும்படி முன் பாதி அமைஞ்சிருக்கு 


சொதப்பல் சொப்னா 


1. பெட்ரோல் பங்க்கில் மோதி கார் வெடிக்கும் காட்சி  மிக மோசமான கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ் ஒர்க் . இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம் . 


2. பின் பாதியில்  வரும் காட்சிகள்  சோர்வைத்தருது. என்ன நடக்கப்போகுது என்பதை எளிதில்  யூகிக்க முடியுது . அஜித் மாதிரி  ஒரு மாஸ்  ஹீரோவை பின் பாதியில்  ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது  இரிட்டேட்டிங்க்.


3.அஜித்க்கு பாடல் காட்சிகளில்   அணிவித்த  கூலிங்க் கிளாஸ் ஃபிரேம்  மேட்ச் ஆகலை . ரேபான் மெல்லிய ஃபிரேம் தான் செம கெத்து 


4. எஜமான் , சின்னக்கவுண்டர் படங்களில்  வில்லன்கள் ஏதாவது பெரிய சதி வேலைகள் செய்வாங்க, அதை  ஹீரோ முறியடிப்பார். இதில் அது மாதிரி  சுவராஸ்ய   முடிச்சுகள்  இல்லை 


நச் டயலாக்ஸ் 


சந்தானம்


1.  இங்கே பாருங்க வக்கீல் சார்.....

 அங்கே எல்லாம் பார்க்க  முடியாதுங்க , யூ புரொசீட்



2.  மழை வர்றதுக்கு முன்னே காய வெச்சிருக்கும் துணிகளை எடுத்துவிடுவது மாதிரி , மூஞ்சில அடிக்கும்  முன்  முன் ஜாமீன் எடுத்து வெச்சுடுவோம் 


3.  ஆடு அரிவாளை வாய்ல கவ்விட்டு வந்து  என்னை வெட்டு வெட்டுங்குது 


4.  சாரி அக்கா , என்னை மறந்துடு


 என்னது ? அக்காவா?

 பின்னே, பொண்ணுங்க மட்டும் தன்னைக்காதலிச்சப்பையனை கழட்டி விடும்போது அண்ணன், தம்பி அப்டினு சொல்ற மாதிரி பசங்க ஏன் காதலியை கழட்டி விட அக்கா, தங்கைன்னு அள்ளி  விடக்கூடாது? 



5.  நாங்க போறோம்.

 ஏன்? பம்பு செட்ல போய் இரண்டு பேரும் மீதிக்குளியலைப்போடறதுக்கா? 



6.  ரொம்ப நேரமா உன் மூஞ்சியைப்பார்த்துட்டு  இருக்க முடியலை, சீக்கிரம் சொல்லு உன் ஃபிளாஸ்பேக்கை 




7. பைலைப்போடுங்கடா கீழே 


 போலீசைப்போட வேணாமா?

 அட, கலவரத்துக்குப்பிறந்தவங்களா!


8. வாசக்கதவைச்சாத்திட்டியா?

லேடி - ம் 


கொல்லைக்கதவை?

 ம்

 ஜன்னல் கதவை?

 பீரோக்கதவைக்கூட சாத்தியாச்சு , வாங்க 


9. நான்  சொன்னபடி செய்யலை, இன்னைக்கு ராத்திரி நீ திராட்சை சாப்பிட முடியாது  ( டபுள் மீனிங்க் )



10 உன்னை அசிங்கப்படுத்தறதுல ஒரு அரசாணையே வெளியிடலாம் போல 


11 முதன் முதலா எங்கண்ண,ன் கண்ணாடியைப்பார்க்கறாரு 

 அப்போ இத்தனை நாளா செங்கல்லைப்பார்த்தா ஷேவிங்க் செஞ்சாரு ? 


12  டேய், கடைசி வரை நீங்க அண்ணி கையால சாப்பிடவே மாட்டீங்க , இந்தப்பன்னி கையால தான் சாப்பிடுவீங்க 



13  ஏண்டா, தம்பிங்க எனும் போர்வைல நீங்க எல்லாம் மாமா வேலை தானே பார்த்துட்டு இருந்திருக்கீங்க ?


14   வண்டியைத்தள்ளி ஸ்டார்ட் பண்ணத்தேவை இல்லை போல, தானா ஸ்டார்ட் ஆகிடும் போல ( டபுள் மீனிங்க் ) 


15  அதெப்பிடிடா இஞ்செக்சன் போட்டுக்கற குழந்தை மாதிரியே மூஞ்சியை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுது ? 
டேய்  பிசையறதை  நிறுத்துடா , கண்  கொண்டு பார்க்க முடியலை 


16  பீடி ஊதற வாயை வெச்சு பீ பீ ஊத வெச்சுடுவான் போல  இருக்கே?


17   ஆடத்தெரியாத  சிலுக்கு  கால்லசுளுக்குன்னாளாம்


18.  பறவை மேல இவ்ளவ் பாசத்தைக்காட்ட காரணம் ?


 டேஸ்ட் தான் 


19  ஐ  கோழி 

 பின்னே வீராட் கோலின்னா சொன்னேன்?


20   நீங்க ஒரு நல்ல குடும்பப்பொறுக்கின்னு பாப்பா சொல்லுது 


21  வீட்ல விளக்கேத்தலை ?

 லாரி டிரைவர் பின்னால போய் இருக்கார் ,வந்ததும் எல்லா விளக்கையும் ஏத்திடுவார் 


22  தமனா - விளக்கேத்த  ஹெல்ப் பண்ணுங்களேன் 


அஜித் - டியூப் லைட் போட்டுக்குங்க , நல்ல வெளிச்சம்  கிடைக்கும் 


23 , அவங்க என்ன குழம்பா ஊத்தறாங்க? போதும் போதும்னு சொல்ல? பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கடா 


24  மாலை போடச்சொல்லிக்குடுத்தாங்களே, ஜட்டி போடச்சொல்லிக்குடுத்தாங்களா?


25   எங்கண்ணன்  கெஞ்ச ஆரம்பிச்சார்னா அனக்கோண்டாவே அழும் 


26  அவரைக்குத்து மதிப்பா எடைப்போட்டுடாதீங்க . குத்து - மதிப்பா எடை போடுங்க  


27 அந்தக்காலத்துலயே எங்கப்பா தினமும் 1000பேருக்கு சோறு போட்டவரு. சந்தானம் - ஏன்? உங்கப்பா ஹோட்டல்ல சர்வரா இருந்தவரா? # ஜோக் உ ராஜாஜி @ சாவி

28 எல்லாரும் மூட்டையைக்கட்டுங்க. சந்தானம் - ஏன் ? துணி துவைக்கப்போறியா?

29 சந்தானம் - நைன்ட்டி ( கட்டிங்) அடிச்ச ஆன்ட்டியைக்கூட நம்புவாங்க.நைட்டி போட்ட உன்னை மாதிரி ஆம்பளையை நம்ப மாட்டாங்க

30 தலைகால் புரியாம ஆடிட்டேன்.இப்போ தான் தல எது ? வால் எது?னு தெரியுது # வில்லன்


அஜித் பஞ்ச்

சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும்.அவன் தான் மனுசன்

2 இது என் குடும்பம்.இவங்களை அடிக்கனும்னா என்னைத்தாண்டி தாஆஆண்டி த்தொட்றா பாக்கலாம்

3 சுடுகாட்டுக்கு எப்டிப்போகனும்னு கேட்டாங்க.நான் வழி சொன்னேன்.இந்நேரம்் போய்ச்சேர்ந்திருப்பாங்க

4 நீ கண்ணை மூடி 8 வரைக்கும் எண்ணு அதுக்குள் அங்க்கிள்் எல்லாரும் ஒளிஞ்சுக்குவாங்க

நம்ம கூட இருக்கறவங்களை நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மைப்பாத்துக்குவான் # 2014 ன் முக்கிய வசனம்

பொண்ணு னு ஒருத்தி நம்ம வாழ்க்கைல வந்துட்டா அவளுக்காக நாம் மாற வேண்டி இருக்கும்.ஏன் இந்த கஷ்டம்? நாம் நாமாவே இருப்போம்

7 நான் ம் னு சொன்னா 4 பேரும் உன்னை உழுதுடுவாங்க

8 எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

9 4 பேர் தான் இருக்கீங்க. 5 பேர் னு சொல்றே.யார் அந்த அஞ்சாவது ஆள் ? 
யாருக்கும் அஞ்சாத ஆள் !

10 நீ எந்த ஜாதின்னு நினைக்கறயோ அந்த ஜாதி. உழைக்கிற ஜாதி

11 இனி விதைச்ச விவசாயி தான் ரேட்டை நிர்ணயம் செய்வான்

12 சாப்பாடு போட்டு அதுக்கப்புறம் ஏன் வெளுத்து வாங்கறீங்க? ஏன்னா அடி வாங்க உடம்பு ல தெம்பு இருக்கனும் இல்ல




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. வீரம் ,ஜில்லா 2 ம் சரி விகிதத்தில் + - இருப்பதால் 2 ம் ஒரே ரேட்டிங்கில் .மக்கள் தீர்ப்புக்காக ஐ ஆம் வெய்ட்டிங்.என்ன நான் சொல்றது?

2 அஜித் அடிக்குரலில் வசனம் பேசும் ஸ்டைல் செந்தூரப்பூவே வில் கேப்டன் பேசுவது போல். குட்

3 ரசிகர்கள் அல்லாத பொது ஜனங்களைக்கவர்வதில் ஜில்லாவை விட வீரம் முன்னிலை # இடை வேளை வரை

4 வீரம் இடைவேளை வரை சந்தானம் காமெடி ,அஜித் ஷார்ப் டயலாக் டெலிவரி னு ஜாலியாப்போகுது.பேமிலி ஆடியன்சை அதிகம் வர வைக்கும் கதை சம்பவங்கள்+

இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ரயில் பைட்டுக்கான ஓப்பனிங் பில்டப் தீனா பட காபி ஷாப் பைட்க்கு இணையான சீன்

6 தமனாவை குட்டைப்பாவாடையில் பாடல் காட்சியில் பார்த்ததும் GOOD டைப்பாவாடை என தோணுது

7 பைக் ஓட்டும்போதும் கை தட்னாங்க.மாட்டு வண்டி ஓட்னாலும் தட்றாங்க

8 அஜித் தமனா ஜோடிப்பொருத்தம் சுமார் தான் னு சொல்றவங்க தயிர் சாதம் VS லெமன் பிக்கிள் காம்பினேசனை கிண்டல் பண்ற மாதிரி # லெமனா வந்த தமனா

9 இனி ஏறுமுகம் தான் என்பதை சிம்பாலிக்கா சொல்வது மாதிரி தமனாவுக்கு ஓப்பனிங் ஷாட் கிரேன் ஷாட்

10 இன்னொரு டெண்டர் இருக்கு டயலாக் முடிந்ததும் கொட்டும் மழையில் குடையுடன் அஜித் வரும் காட்சி மாஸ் சீன்

11 ஒட்டன் சத்திரம் வெற்றிச்சித்திரம்

12 அஜித்தின் ஓப்பனிங் சீன் எஜமான் ரஜினி மாதிரி .சமாதானப்புறாக்கள் பின்னணி ல வருதே அது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

13 விஜயா புரொடக்சன் டைட்டில் ஐடியா சூப்பர்.எம் ஜிஆர் ,ரஜினி வரிசையில் அஜித்



சி பி கமெண்ட்ஸ் 

வீரம் - பேமிலி ஆடியன்சைக்கவர்ந்திழுக்கும் முன் பாதி , யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி - 


விகடன்மார்க் =43


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


,ரேட்டிங் =3.25 / 5

ரஜினிக்கு ஒரு எஜமான்.கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர் .அஜித்துக்கு ஒரு வீரம்

திருப்பூர் டைமண்ட் தியேட்டர் . வீரம் . மதியம் 1 மணி ஷோ .திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் உடன் பார்த்தேன்


டிஸ்கி: ஜில்லா-சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2014/01/blog-post_10.html 

ஜில்லா - சினிமா விமர்சனம்

ஊருக்கே  தாதா  மோகன் லால்.அவரோட  டிரைவரோட பையன் தான் விஜய்.சின்ன வயசுல  நடந்த  ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின்  உயிருக்கு வந்த ஆபத்தில்  இருந்து விஜய் காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட  நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால  சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல  இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு .


காஜில் அகர்வால்  போலீஸ் ஆஃபீசர் ( யாரும் சிரிக்கப்படாது,இந்தக்கதைல எல்லாரும் போலீஸ் தான் , ஹீரோ , ஹீரோயின்,காமெடியன்).ஹீரோயின் போலீஸ் -னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார்.போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி , கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது. 

மோகன் லாலுக்கு  போலீஸ்னாலே ஒரு  சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா  இருக்கனும்னு. விஜய்  அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார். 


ராமர் அவதாரம் எடுத்த ராவணன்  சீதையைத்தொடப்போனப்ப ராமர் நல்ல மனசும் வந்துட்டதால  டச்சிங் டச்சிங்க் பண்ணாமயே வீணாப்போன மாதிரி ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும் ,மோகன் லாலுக்கும் முட்டிக்குது.இடைவேளை.


அதுக்குப்பின் என்ன நடக்குது? தங்கச்சி செண்ட்டிமெண்ட் , அம்மா  செண்ட்டிமெண்ட் ( நம்ம அம்மா இல்ல , நிஜ அம்மா ) ,தம்பி செண்ட்டிமெண்ட் எல்லாத்தையும் கசக்குப்பிழிஞ்சு ( ஃபேமிலி ஆடியன்ஸ் வேணுமே? ) படத்தை முடிக்கறாங்க .


எது எப்படியோ தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது  பூஸ்ட் அப் குடுக்கும் படம்  தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு , கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ்.பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு .விஜய் , மோகன் லால் காம்போ காட்சிகளில்  மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு .


விஜய் இந்தப்படத்தில்  ரொம்ப இளமையா , அழகா , புதுப்புது மேனரிசத்தோட ,வசன உச்சரிப்பில்   சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு . 

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில்   அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து . போலீஸ்  யூனிஃபார்மில் கலக்கிட்டார். 

பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால  பரோட்டா  பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம். 


காஜல் அகர்வால்  படம்  முழுக்க   4 ரீல் கூட வர்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் குங்கும நெற்றியுடன் வர்றார்.மற்ற காட்சிகளில் எல்லாம் சாதா நெத்திதான். முந்திரி இல்லா கேசரி மாதிரி இருக்கு.அவருக்கு மேக்கப் விமன் யார்னு பார்த்து  பாதி சம்பளம் கட் பண்ணனும் , லிப்ஸ்டிக் எடுபடாத கலரில். அவர் இயல்பான இதழே கனகாம்பரக்கலர் தானே? எதுக்கு வானவில்லுக்கு வல்லியனா ஒரு மேக்கப் ? இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ரொம்ப நல்ல கேரக்டர் போல , கிளாமர் காட்சிகளில்  அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.வரும் காலத்தில் இந்த மாதிரி நல்லவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேணாம் என விஜயைக்கேட்டுக்கொள்கிறேன்.

புரோட்டா  சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில்  சிரிக்க முடியுது. 


முன் பாதி  திரைக்கதையில்  இருந்த வேகம்  பின் பாதியில்  இல்லை . கடைசி 30 நிமிடங்கள்  இழுவை . மொத்த படம்  3 மணி நேரம் என்பதால்  ரசிகர்கள்  பொறுமை காக்க வேண்டி  இருக்கு. எடிட்டிங்கில் இன்னும்  ட்ரிம் பண்ணி  இருக்கலாம். 

விஜய்  ஒரு பாட்டு பாடி  இருக்கார். நல்ல வாய்ஸ் . குத்தாட்டத்தை  விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு  ஒரு ஷொட்டு . 

படம்  முழுக்க ஆங்காங்கே வரும்  ஜில்லா ஜில்லா தீம் இசை  ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது 
திருப்பூர்  சிவன் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ,டிக்கெட்  ரேட் 200  ரூபா

சபாஷ்  சத்யா 


1. கண்டாங்கி சேலை பாட்டில் மூங்கில்  தோட்ட லொக்கேஷன் , பின் புலத்தில் கேரள கத களி ஆட்டக்காரர்கள் கண்ணுக்கு விருந்து 



2  கேரள மார்க்கெட்டுக்காக மோகன் லாலுக்குத்தரப்பட்ட முக்கியத்துவம் , அவரின் பிரமாதமான பர்ஃபார்மென்ஸ் அப்ளாஸ் அள்ளுது

3 தாதா கதை என்றாலும்  வன்முறைக்காட்சிகள் எதையும் காட்டாமல்   ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ் காட்சிகளால் திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் 


4.  இமானின் இசை , பின்னணி இசை , ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக் சன்  எல்லாமே   ஒரு கமர்ஷியல் மசாலாப்படத்துக்கு என்ன தேவையோ அதை  நிறைவேற்றிய விதம் 



சொதப்பல் சொப்னா 



1. விஜய் அப்பாவுக்கு என்ன தான் செல்வாக்கு  இருந்தாலும்  இன்ஸ்பெக்டர் போஸ்ட் வாங்காமல் டைரக்டா  அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டே வாங்கித்தருவது ஓவர்னா   அவர் வாழும் அதே  ஏரியாவிலேயே போஸ்ட் வாங்குவது சாத்தியமே  இல்லை. போலீஸ்  முத  ரூல்ஸே அவங்க பிறந்த  ஊர், வாழும்  ஊரில் பதவி வகிக்கக்கூடாது என்பது தானே? 


2. போலீஸ்  மீட்டிங்க் நடக்கும்போது  வராண்டாவில்  எல்லாரும்  நிக்கறாங்க.  ஏ சி சார்க்கு  ஒரு சேர்  கூடவா கிடைக்கலை? ஏன் ஜீப் மேல ஏறி  நின்னு  “ அன்பார்ந்த வாக்காளப்பருமக்களே “ரேஞ்சுக்கு காமெடி பண்றார்? 


3. போலீஸ் கமிஷனர்  ஐயப்ப சாமி  தாடி வைக்கலாம், ஆனா ஸ்டைலிஸ் பிரெஞ்ச்  தாடியுமா? 


4. காஜல் சேறில் விழுந்து எழுந்து நடக்கும்போது பின்னால் விஜய் ஃபாலோ பண்ணும்போது “அழகே பிரம்மனிடம் மனுக்குடுக்க போய் இருந்தேன் “பாடல் பல்லவி  இசை  பி ஜி எம்மா வருதே ஏன்? 


5. வாசல்ல நிறுத்தி வெச்ச பைக்கை  மோகன் லால் தள்ளி விடும்போது பெட்ரோல் டேங்க்  மூடி ஓப்பன் ஆகி  பெட்ரோல் கொட்டுதே எப்படி? அதை லாக் பண்ணித்தானே சாவியை எடுக்க முடியும் ? சாவி இல்லாம எப்படி  ஓபன் ஆச்சு? 

6. விஜய்  தன் தம்பியை  ஒரு ரூமிலடைத்து  வெளியே போகும்போது வில்லனைப்பத்தி  ஒரு எச்சரிக்கை ஏன் செய்யலை ? செஞ்சிருந்தா அவர்  தப்பி  ஓடி வில்லன்  கிட்டே மாட்டி  இருப்பாரா? 


7. மரணத்தின்  விளிம்பில்  இருக்கும் தம்பி “ஹாஸ்பிடலுக்குப்போகாதே , அப்பா கிட்டே கூட்டிட்டுப்போ , என்னைக்கொன்னது யார்னு சொல்றென்”னு சொல்வது ஏன்? செல் ஃபோன் எதுக்கு இருக்கு?ஹாஸ்பிடல் போய்ட்டே  ஃபோன்ல சொல்லலாம், எஸ் எம் எஸ் ;பண்ணலாம் . 


8. சூரி  எதுக்காக  தம்பி அடைக்கப்பட்ட  ரூமுக்கு  உள்ளே கதவைத்திறந்து போறார்? அது தேவையே  இல்லையே?

தாரை தப்பட்டை  முழங்க  ரசிகர்களின்  வெற்றிக்கொண்டாட்டம்


நச் வசனங்கள்

1எதிரிய எதிர்ல வெச்சுக்கலாம் . ஆனா துரோகிய தூரத்துலக்கூட வெச்சுக்கக்கூடாது.... # பன்ச்


2  போலீஸடிச்சுப் பாத்திருப்ப - போலீஸையே அடிச்சுப் பாத்துருப்ப? # அதான் காஜல் ..!


3ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒன்னு குணமாகிப்போகனும், இல்ல பொணமாகிப்போகனும் ....!!


4. அழிக்குறவந்தாண்டா சிவன் - இந்த சிவன அழிக்குற சக்தி எவனுக்குமில்லை ... # மோகன்லால் பஞ்ச் # ஜில்லா


5 தீயிலயும் , பகையிலயும்  மிச்சம் வைக்ககூடாது 


6.சிவனையும் , பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போய்ட்டே  இருப்பேன் 

 உன் பின்னால 1000 பேர்  இருக்கலாம், என் பின்னால ஒரே ஒரு ஆள் இருக்கான் 


7. ஏம்மா  , இவன்  காக்கி கலர் ல கவர் வந்தாலே  பிரிச்சு மேஞ்சுடுவான், நீ காக்கியையே கவர் பண்ணிட்டு வந்திருக்கியே 


8  சார், உங்க பொண்ணோட  2......

 வாட்?


 2 கண்ணைப்பார்க்கும்போது......


டேய், அது பொண்ணோட அப்பாடா.. 


9. பொண்ணோட  வண்டிச்சத்தம் இங்கே கேட்குது


 வண்டிச்சத்தத்தை வெச்சே இத்தனை கணிக்கறானே......


10  அவளை  டிரஸ்  இல்லாம பார்த்துட்டேன் 

 பார்த்துட்டியா? 

 ஐ மீன்  யூனிஃபார்ம்  டிரஸ்  இல்லாம 

11  வண்டியை  விட்டு  இறங்கு எவ்ளவ்  பெரிய ஆளா  இருந்தாலும் இறக்கிடுவேன் , அதான் போலீஸ் 



12  திருடன்  போலீஸ்  விளையாட்டுல  திருடனும் நாமளாத்தான்  இருக்கனும், போலீசும் நாமாத்தான்  இருக்கனும் 


13  போலீஸ்  கிரிமினலா  யோசிச்சு தன் புத்தியைக்காட்டிடுச்சு, கிரிமினல் போலீஸ் ஆகி நம்ம புத்தியைக்காட்ட வேணாம் ? 


14 தொப்பி போட்ட போலீசை விட தொப்பை போட்ட போலீஸ்  தான் அதிகம் 


15 சரி, நான் இப்போ மேட்டருக்கு வர்றேன் 

 அதான்  முடிச்சிட்டியே ? 

16  விஜய்  டூ காஜல் = அப்போ  நீ என் பின்னால கை வெச்சியே, அது உன் டர்ன், இது என்  டர்ன்  ( டர்னிங்க் பாயிண்ட்டாம் ) 




17   நான்  சொன்னது எல்லாம் உண்மை  தான், ஆனா தாத்தாவை மட்டும் தத்து எடுத்துக்கிட்டேன் 


18  தப்பைத்தடுக்கனும்னு  எப்ப  நீ நினைச்சியோ அப்பவே நீ போலீஸ் 


ஆகிட்டே 


19  சீன்  முடியறதுக்குள்ளே  சீன் போடக்கூடாது 


20  போலீஸ் காப் ? வளைகாப்பே நடத்திடுவான் போல 



21  கட்டைல தானே அடிப்பான்னு சொன்னே ? இப்போ   கொ.... கொலையே பண்ணப்பார்த்தானே? 


22 நான் நினைச்சா இவன் முடிப்பான்.இவன் சாதா சக்தி இல்ல.ஜீவன் உள்ள சக்தி # மோகன் லால் பஞ்ச்


23 நாட்ல வண்டி ஓட்டத்தெரியாதவன் கூட உண்டு.பிகரை ஓட்டத்தெரியாதவன் யாரும் இல்ல # சூரி


24 போலீஸ் அடிச்சுப்பார்த்திருப்பே.போலீசையே அடிச்சுபார்த்திருக்கியா ? # தம்பி ராமையா


25 சூரி - புரொடியூசர் நீ தானே?


வாட்? 



பொண்ணைப் புரொடியூஸ் செஞ்சது நீ தானே? கோ புரொடியூசர் எங்கே?


26 விஜய் - சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன்.ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ண மாட்டேன்

27 மோகன் லால் - இந்த சிவன் இல்லாம சக்தி இல்லை. விஜய் - சக்தி இல்லாம எவனும் இல்லை # இடைவேளை பஞ்ச்


28 மத்தவங்க கிட்டே தோத்தாத்தான் தோல்வி , சொந்தப்பையன் கிட்டே தோத்தாலும் அது வெற்றி தான்



சி பி கமெண்ட் - ஜில்லா - முன் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி ஓக்கே. புதுக்கதை.நோ ரீ மேக். ஹிட் ஆகிடும்


எதிர்பார்க்கும் .விகடன் மார்க் - 43


, ரேட்டிங் = 3.25 / 5

சன் டி வி வீடியோ கிராஃபர் ரசிகர் ஷோ கூட்ட ஆட்டத்தை அப்டேட்டிங்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்



1 ஒன் ஆப் த பெஸ்ட் ஓப்பனிங் சீன் டூ விஜய் # கண்ணாடி சில்லுகள் சிதற ஆக்சன்

2 காஜல் அகர்வாலுக்கு ஓப்பனிங் சீன் சரி இல்ல.ஹீரோயினை கோபமான முகத்துலயா காட்டனும் ? வாடால்லிக்கலர் லிப்ஸ்டிக் வேற :-(

விரசாப்போகையிலே மெலோடி சாங்க்.விஜய் ன் அலட்டிக்காத டான்ஸ் ஸ்டெப் கலக்கல்.ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு ,டான்ஸ் மாஸ்டர் ராக்ஸ்

4 சிவனும் சக்தியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ் டா வரிகள் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது

5 பைட் சீன் களில் விஜய் புதுசா ஒரு மேனரிசம் காட்றார் .குட்

6 ஜிங்கிளமணி குத்தாட்டப்பாட்டு கலக்கல்.அதற்கான டான்ஸ் ஸ்டெப் பில் இன்னும் வெரைட்டி காட்டி இருக்கலாம்.அந்த 2 லேடீஸ்க்கு முகமும் முத்தல்


7 ஜில்லா @ இடைவேளை. கமர்சியல் கலக்கல்.தலைவா வை தாண்டிடுச்சு.ரீமேக் கதை இல்லை.புதுசு.ட்விஸ்ட் குட்


8 எப்போ மாமா ட்ரீட்டு .அக்மார்க் விஜய் டான்ஸ் கலக்கல்.பின்றார்யா. இசை குட். காஜில் ஸ்லீவ்லெஸ் ரெட் டிரஸ்




தியேட்டர் மேட்டர் - திருப்பூர் சிவன் தியேட்டரில் ஆகாய மனிதன் எனும் யுவராஜ் கூடப்படம் பார்த்தேன்.அதி காலை 5 மணி க்கு ஷோ என்பதால் 4 55 க்குப்போனா அவங்க 4 50 க்கே படம் போட்டுட்டாங்க , மோகன் லால் ஓப்பனிங்க் சீன் பார்க்க முடியல .தியேட்டர் சுமார் தான் , ஏ சி , டி டி எஸ் எல்லாம் ஓக்கே .