Wednesday, August 07, 2013

தலைவா - காமெடி கும்மி கலா ட்டா

 

1. இவர் பேரு மகேஷ்.இவர் படங்களை சுட்டு ஒருத்தர் படம் நடிச்சுட்டே இருந்தாரு.ஆனாலும் பெய்லியர் ல இருந்து அவரை யாராலும் காப்பாத்த முடியல



------------------------


2. சுமாரா ஓடி இருக்க வேண்டிய விஸ்வரூபத்தை செம ஹிட் ஆக்கியதே தடையால் வந்த எதிர்பார்ப்பால் தான். தலைவா அந்த லிஸ்ட்டில் சேர்ந்துடும் போல


------------------------


3. என் படம் ஓடும் தியேட்டர்ல பாம் வெச்சுடுவோம்னு மிரட்றாங்க. அப்டி வெச்சா உங்க எல்லா படத்தையும் பார்க்க வைப்பேன்னு நீங்களும் மிரட்டுங்க.



-----------------------------


4. ரிசர்வேசன் செஞ்ச டிக்கெட்டுக்கு காசை திருப்பித்தருவீங்களா ?



 டிக்கெட் வித்ததே பெருசு.போங்க போங்க. ரிலீஸ் ஆகும்போது பாத்து கழிச்சுக்குங்க 



-----------------------------


5. கமல் மைன்ட் வாய்ஸ் - நம்ம டெக்னிக்கை வெச்சு ஆளாளுக்கு கல்லா கட்டிடுவாங்க போல.



-------------------------------





6. தீவிரவாதிகள் அறிவிப்பு - எந்த ஹீரோ படம் ஹிட் ஆகனும்னாலும் இங்கே பாம் வைப்பதாக சும்மானாச்சுக்கும் பூச்சாண்டி காட்டப்படும்.நிதி உதவி தாரீர்



--------------------------


7. தலைவா - 2 மணி நேரம் 50 நிமிசம் ஓடுதாம்.170 நிமிசம்.கூட்டுத்தொகை 8, அஷ்டமத்துல சனி அப்டினு எந்த ஜோசியரும் கிளம்பலையா?



-------------------------


8. விஜய் டூ ஜெ - மேடம்.இது அரசியல் படம் இல்லை .டைட்டிலைப்பார்த்து தப்புக்கணக்கு போடாதீங்க. THE LIVE AA = த லைவ் ஆ னு டைட்டிலை மாத்திடாறோம்




-----------------------


9. கமல் டூ விஜய் - விஸ்வரூபம் 2 க்கு நான் ஐடியா பண்ணி வெச்சிருந்த மார்க்கெட்டிங்க் டெக்னிக்.நீங்க பாட்டுக்கு யூஸ் பண்ணிக்கிட்டா எப்டி ?



-----------------------


10. அமலாபால் மைன்ட் வாய்ஸ் - படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள நான் அமலா தயிர் ஆகிடுவேன் போல.ஹூம்




-----------------------------





11. தலைவா ரிலீஸ் ஆகலைன்னா த LIE வா



----------------------



12. அஜித் மைன்ட் வாய்ஸ் - ஆரம்பம் முந்திக்கும் போல .அது ;-))



-------------------------


13. SAC - எனக்கு என்ன தோணுதுன்னா.



., விஜய் - அம்மா.அவரை கம்முனு இருக்கச்சொல்லு.இல்ல . வேற ஜில்லாக்கு பார்சல் தான் 



---------------------------------



14. நிச்சயம் ஆன பொண்ணும் ரிசர்வேசன் செஞ்ச விஜய் படமும் ஒண்ணு. கைக்கு எட்டுனது கண்ணுக்கு எட்டுனாத்தான் நிஜம்



---------------------------------



15. தலைவா - வருவீயா? வரமாட்டியா? வர்லைன்னா உன் பேச்சு கா கா



---------------------------






16. SAC - உலகம் சுற்றும் வாலிபன் க்கு எதிர்ப்பு வந்தது.MGR கலக்கினார்.இப்போ விஜய் டர்ன்.



 விஜய் - என்னை நாடு கடத்தாம இவரு விட மாட்டார் போல 



------------------------------


17. விஜய் - எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக்கொண்டிரு #அதான் அணை போட்டுட்டாங்களே



----------------------------



18. கேப்டன் டூ விஜய் - ஆபாவாணனின் காவியத்தலைவனே கவுத்துடுச்சு.அப்பவாவது உஷார் ஆகி இருக்க வேணாமா?





--------------------------------


19. காவலன் படத்துக்கு  mu ka  செய்தது போல் ஜெ தலைவா வுக்கு தொந்தரவு கொடுத்தால் அவருக்குத்தான் கெட்ட பெயர்.விஜய் இமேஜ் உயரும்



-----------------------



20. 9 8 2013 ரம்ஜான் ஸ்பெஷல் கிடா வெட்டு @ ட்விட்டர்.அனைவரும் வருக;-)))



----------------------------





21. ஸார்.நீங்க விஜய் படத்தை மட்டும் தான் ஓட்டுவீங்களா? 



 ஷகீலா படத்தைக்கூட ஓட்டுவேன்.தியேட்டர் ஆபரேட்டர்னா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும் 



-------------------------------


22. டாடி.பட ரிலீஸ் அன்னைக்கு 10,000 பேருக்கு அன்ன தானம் பண்றோமே எதுக்கு ?



 படத்துக்கு கதை தானம் வாங்குனோம்னு தெரியாம இருக்கத்தான் 



-----------------------------------


23. ஷாருக்கான் ன் சென்னை எக்ஸ்பிரசை விஜய் ன் தலைவா பாக்ஸ் ஆபீசில் முந்தும் என மும்பை டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கணிச்சிருக்காங்களாம் # துப்பாக்கி



---------------------------



24. அமலா பால் - நான் வர்ற சீன்ஸ் எல்லாம் ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்பாங்க 




-----------------------------


25. சத்யராஜ் - என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க? 



விஜய் - ஷூட்டிங்கே முடிஞ்சாச்சு.என் கேரக்டர் என்னான்னே புரிஞ்சுக்க முடியுல 



--------------------------------

26. விஜய் - தலைவா ல அரசியலை டச் பண்ணி இருக்கேன். 



 அட போங்க.அப்போ அமலா பாலை டச் பண்ணலையா? 



---------------------------


 a

27. விஜய் - சாரி , மணிரத்னமா இருந்தாலும் 2 வருசத்துக்கு கால்ஷீட் நோ , ஃபுல்



. பி ஏ - சார் , அவர் வந்தது அவரோட நாயகன் -னை ஏன் உல்டா?னு கேட்க



--------------------------------


28. விஜய் -இந்தத்தடவை மிஸ் ஆகாது .



 ஜெ - ரிலீசே ஆகாதுங்கறேன்



---------------------------


29. இனி தமிழ் நாட்டில் பாம்பு படம் எடுத்தால் கூட அரசிடம் அப்ரூவல் பெற வேண்டும்.ஜெ அதிரடி உத்தரவு .அரசுத்துறை அதிர்ச்சி # சும்மா


---------------------------


30. விஜய் - மேடம்.உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா படத்தை ஒரு டைம் பார்த்துடுங்க .



ஜெ - அய்யய்யோ.அந்த ரிஸ்க் நான் எடுக்க மாட்டேன்.



------------------------------





 அ



31. ஒரு பொய்யாவது சொல் கண்ணே.தலைவா மெகா ஹிட் என்று.அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் # விஜய் ரசிகன் டூ அஜித் ரசிகை



-------------------------



32. விஜய் - சி எம் மை பார்க்கனும்.



 வாட்ச்மேன் - அதோ அந்த ஜன்னல் வழியா பார்த்துட்டு போய்டுங்க # கொடநாடு



----------------------------


33. தலைவர் சரியான பாதையில தான் போய்கிட்டிருக்காரு-குஷ்பு # தலைவா விஜய் கோட நாடு போய்ட்டு இருக்கும் ரூட் மேப் ஹவ் யூ கெட்?்




---------------------------


34. ஹவுஸ் ஓனர் சம்சாரம் தீவிர விஜய் ரசிகையாம்.FB் லஇருக்காம்.தலைவா காமெடி கும்மி போஸ்ட் படிச்சுட்டு 500 ரூபா வாடகை ஏத்திடுச்சு # அடங்கோ



----------------------------


35. நல்ல வேளை.தலைவா போஸ்டர்களில் விஜய் எதிலும் வேட்டி சட்டையில் இல்லை # அதுக்கும் தடை போட்டாலும் போடுவாங்க



-------------------------------


36. தலைவா வை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்! # கவர்மென்ட் சம்பளம் வாங்கிக்கிட்டு ஆபீஸ் டைம்ல OCல பார்க்கறாங்க.வாழ்வு தான்



----------------------------


37. தலைவா அரசியல் படம் அல்ல -விஜய் திட்டவட்டமாக அறிவிப்பு #சரிங்ணா.தலைவா வுக்கும் ,டைம் டூ லீடு க்கும் என்ன அர்த்தம்ங்க்ணா?



-----------------------------


38. என் வீட்டில் வெடி குண்டு வைக்க வரும் விஜய் ரசிகர்கள் சங்கு சக்கரம் ,புஷ்பாவானம் சாரி புஷ்வாணம் ,மத்தாப்பும் வைக்குமாறு கேடடுக்கொள்கறேன் , ஓ சி ல தீபாவளிகொண்டாடிக்கறேன்



------------------------------------


39. நேத்து என் கனவுல விஜய் சி எம் ஆகிட்டாரு.அஜித் எ க தலைவர்.அமலா பால் டெபுடி சி எம் ஹி ஹி



--------------------------


40. தலைவா விமர்சனம் எழுதினால் வீட்டில் வெடிகுண்டு வைப்போம் - விஜய் ரசிகர்கள் மிரட்டல் #, அண்ணே ஒரு விளம்பரம்




------------------------------------

தலைவா ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? புதிய சிக்கல்!







விஜய் நடித்த தலைவா திரைப்படம் நாளை மறுநாள் (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.




சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. தலைவா திரைப்படத்தை வெளியிட அரசின் ஒத்துழைப்பு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம்.




 இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற முடிவுடன், தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.


அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம் என அறிவித்துள்ளனர்.

தர்மபுரி இளவரசன் கொலை? - விசாரணை அறிக்கை

இளவரசன் கொலை செய்யப்படவில்லை: கோர்ட்டில் சூப்பிரண்டு தகவல்

தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:


இளவரசன் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய சாட்சிகளிடமும் விசாரணை செய்தோம்.


இளவரசன் உடல் ஜூலை மாதம் 4–ந்தேதி தண்டவாளம் அருகே கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது அவர் கையில் கட்டி இருந்த கை கடிகாரமுள் பிற்பகல் 1.30 மணியை காட்டியபடி நின்றது.


அதே நேரத்தில் தான் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறது. அந்த ரெயில் எஞ்சின் டிரைவர் அந்த வழியாக சென்ற போது அடிபட்ட நிலையில் எந்த உடலையும் தான் காணவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


திவ்யா மற்றும் இளவரசனின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையிலும் இளவசரன் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.


இளவரசன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வந்த இந்திய மருத்துவ நிபுணர்களின் குழுவினரின் அறிக்கையிலும், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படவில்லை. அதற்கான சூழ்நிலைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படவில்லை.


விசாரணை முழுமையாக நடந்து முடிந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


ஆனால், இளவரசன் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. எந்த சாட்சியமும் அதை நிரூபிப்பதாக இல்லை. எனவே இளவரசன் கொலை செய்யப்படவில்லை.


இவ்வாறு அந்த அறிக்கையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.


thanx  - maalaimalar

குணவதி - அரசுப் பணியில் முதல் திருநங்கை பேட்டி

ஆசுவாசம்

அரசுப் பணியில் முதல் திருநங்கை!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு


அரசுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் திருநங்கை குணவதி, ஒட்டன்சத்திரத்தைச் சார்ந்தவர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வேலை எனக்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறும் குணவதி, முதுகலையில் ஆங்கில இலக்கியம் தேர்ச்சி பெற்றவர்.


இந்த வேலையில் அமர்வதற்குள் நான் அனுபவித்த வலிகள் அதிகம்! என் போன்றோருக்கு ஏற்படும் தொடக்க நிலைச் சங்கடமே, பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து ஒரே இடத்தில் பெற முடியாததுதான். அந்த அவலச் சங்கடம் எனக்கும் நேர்ந்தது. ஐந்தாம் வகுப்புவரை ஒரு பள்ளியிலும், எட்டாம் வகுப்பு வரை மற்றொரு பள்ளியிலும் பயின்ற எனக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூ வரைக்குமாக படித்த திண்டுக்கல் டட்லி ஸ்கூல் சற்றே ஆறுதலைத் தந்தது.


அப்போதிருந்தே எனக்கு டீச்சர் வேலை மீது தணியாத மோகம். அதனாலேயே கல்லூரியில் பி.., ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். மூன்று வருடம் ரெகுலர் காலேஜ். இனிமையான நாட்கள். இளங்கலை ஆங்கில இலக்கியம் தேர்ச்சி பெற்றதும் அஞ்சல் வழிக்கல்வியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றேன். அதே சமயத்தில் கம்ப்யூட்டர் டீச்சர் ஆகும் அளவுக்கு, கணிப்பொறியில் தேர்ச்சி அடைந்திருந்தேன்."


குணவதி, காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தின் STRC (State Training Research Centre)ல் பயிற்சி பெற்றவர். ‘திருநங்கைகள் முன்னேற்றச் சங்கம்ஒன்றை ஏற்படுத்தி இயங்கி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 250 திருநங்கைகள் அதன் உறுப்பினர்கள். அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கென சேவை செய்துவரும் இவர், தனக்கென அரசுப்பணி வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்தார். அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்து போனது. மாதம் ஐந்தாயிரத்து இருநூறு ரூபாய் தொகுப்பூதியத்தில் தாற்காலிக அரசுப்பணி.


குழந்தைகள் திருடு போவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் குணவதிக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் வெளி நபர்கள், குழந்தைகள் வார்டுக்குள் வராமல் தடுப்பதும், குழந்தைகள் திருடு போய்விடாமல் கண்காணிப்பதும் குணவதியின் வேலை!" என்கிறார் திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் சுப்பிரமணி.


தமிழக அரசு மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் அரசுப்பணியாளராக வேலை கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் பணியை முழுத் திருப்தியுடன் செய்து வருகிறேன். இருந்தாலும், எம்.., ஆங்கில இலக்கியத்திலும், கம்ப்யூட்டர் பணியிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கும் எனக்குத் தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு," என்கிறார்.


Thanks - Kalki

அடடே வாங்கண்ணா வணக்கங்ணா

1. மு க - வெற்றிக்கனி நமக்கே!



கேப்டன் - தானா கனியல.புகை போட்டு பழுக்க வெச்சீங்க.கெடுதல் தான்



--------------------------


2. மு க - இது சரித்திர வெற்றி



 கேப்டன் - தரித்திர வெற்றி!



--------------------------


3. கூட்டணி மாறி வாக்களிப்பது துரோகம்!-சரத்குமார் # சோமாரி ,கேப்மாரி ,மொள்ளமாரி ,வளையாமாரி எல்லா மாரிகளும் புழங்கற இடம்ங்ணா




-----------------------------


4. மு க - கடைசில கப்பு எங்களுக்குத்தான்.



கேப்டன் - ஆமா.கப்பு தாங்கல.அரசியல் சாக்கடை



-----------------------


 5. மீடியாக்கள் எங்களை கண்டு கொள்ள வில்லை --சரத்குமார் # நயன் தாரா வே நட்டாத்துல போவுதாம்.புதுமுகம் மோட்டார் போட் கேட்டுச்சாம்



----------------------


6. திமுக.க்கு அளித்துள்ள ஆதரவை வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளகூடாது - காங்கிரஸ் செய்திதொடர்பாளர் # இது வரை அப்டி நினைக்கலை.இப்போ தோணுது



----------------------------


7. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை: திருமாவளவன் # வள வளனு என்ன பேச்சு.?நீங்க எல்லாம் ஆட்டத்துலயே இல்ல



--------------------------------


8. அதிமுக ஆட்சியை நான் மனதார புகழ்வேன் ! - சரத்குமார் # ஒரு பொய்யாவது சொல் கண்ணா.ஈடு இணையற்ற தலைவி என.அந்த பொய்யில் பொழப்பு ஓடும்



-------------------------


9. விஜய் - தலைவா ட்ரெய்லரை இது வரை 10 லட்சம் பேர் பார்த்தாச்சு.இது இருந்து என்ன தெரியுது?



 ஓ சி ன்னா தமிழன் யோசிக்காம களம் இறங்குவான்னு



---------------------------


10 அஜீத் மாதிரி பேர் வாங்கணும்-் புதுமுகம் ஜெய் ஆனந்த். 'திறப்புவிழா' படத்தின் ஹீரோ !!!"# ஆகட்டுண்டா தம்பி ராஜா நட ராஜா.மெதுவா செல்லய்யா



--------------------------


11. கொடுத்துட்டாரே சோனியா தன் ஆதரவை.கெடுத்துக்கிட்டாரே மு க தன் பேரையே! வெட்கம் மானம் சூடு சுரணை ஏதும் காணலை




-------------------------


12. ஒரு நல்ல தலைவனாத்தான் தமிழர்களை காப்பாத்த முடியல.ஒரு நல்ல அப்பாவா பொண்ணை கரை சேத்துடறேனே?




-----------------------------


13. மடமை ! பெண்ணிடம் கால் ல விழு # ராஜ்யசபா



-----------------------


14. மு க - நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு!



சோனியா - அடடே வாங்கண்ணா வணக்கங்ணா! சுய மரியாதை சுகமா?



----------------------------


15. உயிருனும் மேலான உடன்பிறப்பே! நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும் காங்கிரஸ் காலில் தான் விழுந்து கிடப்போம்.திருந்தி விட மாட்டோம்


-----------------------


16. ஐஸ்- ராஞ்சனா ஹிட் ஆனதுக்கு ஏன் டாடி சோகமா இருக்கீங்க?
  இனி பாலிவுட் தயாரிப்பாளர்கள் தனுஷை மொய்ப்பாங்களே?

 ரஜினி -அவங்க மட்டுமா மொய்ப்பாங்க?



-------------------



17. மு க - கடைசில நான் தான் ஜெயிச்சேன்



. கேப்டன் - கேவலமான வெற்றியை விட கவுரவமான தோல்வி மேல்




---------------------------


18. பாமக பொதுக்கூட்டத்திற்குஹைகோர்ட் மீண்டும் அனுமதி # ஜெ- எல்லாம் நம்ம ஐடியாதான்.கூண்டோட பிடிக்க பிளான்


------------------------


19. ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு # உன்னால நான் கெட்டேன்.என்னால நீ கெட்டே.2 பேரும் சேர்ந்து ஊரை அடிச்சு உலைல போடலாம் வா.



-------------------------


20. ஆத்திச்சூடி நூலை அனைவருக்கும் பரிசளிக்கும் அஜித் # என் நூல் என்ன மட்டமா?னு சாரு இன்னும் கிளம்பலையா?




------------------------------

Tuesday, August 06, 2013

அஜித்-ஆரம்பம் -விஷ்ணுவர்தன் பேட்டி (NAKKEERAN)

 


அஜித் கதாபாத்திரம் புத்தனோ காந்தியோ கிடையாது” - விஷ்ணுவர்தன் பேட்டி!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ஒரு வழியாக டைட்டில் வெச்சாச்சு. ’ஆரம்பம்’ என கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஒரு அற்புத கனெக்‌ஷன் பற்றி கடைசியாக பார்ப்போம்.


இப்போது சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விஷ்ணுவர்தன் பேசியதை கவனிப்போம். பேட்டியில் பேசியபோது விஷ்ணுவர்தன் “ ஹீரோ நல்லவனாக மட்டுமே இருக்கண்டும். அவன் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். சினிமா மூலம் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதே தவறு. எல்லா இடத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். 

எல்லோரையும் சுற்றி தினம் தினம் ஆயிரம் குற்றம் நடக்கின்றன. ஆனால் மக்கள் அதை கவனிப்பது இல்லை. ஆனால் ஹீரோ மட்டும் அநியாயத்தை பார்த்தால் பொங்கி எழ வேண்டும் என நினைக்கிறார்கள்.

எல்லோருக்குமே ஒரு கருப்பு பக்கம் உண்டு. யாருமே புத்தரோ காந்தியோ கிடையாது.அதனால் தான் என் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் கெட்டவர்களுக்கு கெட்ட முடிவு வருவது போல் அமைத்திருப்பேன். அஜித்தின் கதாபாத்திரமும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 


அஜித்தால் என்ன செய்ய முடியுமோ அதை படமாக்கி இருக்கிறோம். அவருக்காக எந்த பில்டப்பும் கொடுக்கவில்லை. தனது இமேஜை பற்றி அஜித் கவலைபட்டதே கிடையாது” என்று கூறியுள்ளார். இப்ப ரசிகர்களின் கனெக்‌ஷன் மேட்டருக்கு வருவோம். 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் முந்தைய கதையாக வெளிவந்த பில்லா 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அஜித் ”இது வெறும் ’ஆரம்பம்’ தான்” என சொல்வார்.

எனவே விட்டுப்போன பில்லா திரைப்படத்தின்(பில்லா 2-வுக்காக விஷ்ணுவர்தனும் ஒரு கதை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது) தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.
thanx - nakkeeran
'ஆரம்பம்' என்று தலைப்பு வெளியிட்டதில் இருந்து அஜித் - விஷ்ணுவர்தன் படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்த நாள் அன்று நடைபெற உள்ளது.

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் 'ஆரம்பம்'. விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

'ஆரம்பம்' படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், பேட்டி கூட அளிக்காமல் இருந்த படக்குழு, தற்போது படத்தினைப் பற்றிய தகவல்களை வெளியிட ஆரம்பித்து இருக்கிறது.

இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன், " 'பில்லா' படத்திற்குப் பிறகு நானும் அஜித்துடன் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்து இருக்கிறது. கண்டிப்பாக அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும்.


'ஆரம்பம்' ஒரு கேங்ஸ்டர் படம் அல்ல. நிறைய திருப்புமுனைகள் நிறைந்த ஆக்ஷன் கதையாகும். நிறைய இடங்களுக்கு கதை பயணிக்கும். அதனை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறோம்.

இவ்வளவு நடிகர்கள் நடிக்கும் படத்தினை 120 நாட்களில் முடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆரம்பம்' படத்தினைப் பற்றி என்ன கூறினாலும், அது அஜித் படம் என்ற பெயரை மட்டுமே கொடுக்கும். அவருடைய நடிப்பும், வசீகரமும் படம் முழுவதும் நிறைந்து இருக்கும்.

இப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறேன். அதுமட்டுமன்றி, தேசிய விருது வென்ற லால்குடி இளையராஜாவின் செட் வடிவமைப்பும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தன.

எனது திரையுலக வாழ்க்கையில், ஆரம்பத்தில் இருந்தே யுவனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் எந்த மாதிரி இசையை எதிர்பார்ப்பேன் என்பது யுவனுக்குத் தெரியும்.

படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, கதைக்குப் பொருத்தமான தலைப்பை பரிசீலித்து வந்தோம். நிறைய தலைப்புகள் யோசித்தோம். இறுதியாக 'ஆரம்பம்' என்ற தலைப்பே கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது" என்று தெரிவித்து இருக்கிறார்.
a

மணல்கொள்ளை-தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க்-8

1.Mr.manithaN‏@Am_mathan எதிர்ப்பில்லாத கற்பழிப்பு 'மணற்கொள்ளை'.  #tsy20130806
 


2.குற்றாலத்தான்‏@bluefortfish மணல்கொள்ளை எதிர்ப்பு வெரும் அவையில் நிறைவேற்றும் தீர்மானம் போலவே அமைவதால் தான் நீர்த்து போகிறது. #tsy20130806



3.புகழ் ‏@MEKALAPUGAZH மணற்கொள்ளை சிசுக்கொலை. எதிர்ப்பதே மனிதாபிமானம்  #tsy20130806



4.ஜானகிராமன்‏@periyakulam மணல் கொள்ளை அடிகொம்பில் உட்கார்ந்து நுனிகொம்பை வெட்டும் செயல் .  #tsy20130806



5.Bala Venkatraman‏@ikulithalai என்றைக்கோ உறையூரில் மண் மாரி பொழிந்ததாம். இந்த மணற்கொள்ளையர்கள் மீது தணல் மாரி பெய்யாதோ ?  #tsy20130806



6.VIBHU‏@GOVINDARAJEN காதலெனும் மனக்கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் அரசியல்வாதிகளே,உங்கள் கவனத்தை சிறிது மணல்கொள்ளை பக்கம் திருப்புங்களேன். #tsy20130806



7.பச்சபுள்ள‏@mp_samy மாதம் மும்மாரி மழை பெய்தால் மணல்கொள்ளையை எதிர்ப்பதற்கு பொதுமக்களுக்கு அவசியம் இருக்காது  #tsy20130806



8.ஊர ஏமாத்துறவன்‏@trajuvel பல ஆண்டுகள் மணல்கொள்ளையை வேடிக்கை மட்டுமே பார்த்த தமிழக அரசு திடிரென எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது! #tsy20130806



9.புகழ் ‏@MEKALAPUGAZH மணல் கொள்ளை  -   ஆவின் மடி அறுக்கும்  கொடுஞ்செயல். எதிர்க்கமட்டுமல்ல  ஒழிக்கவேண்டியது  அரசின் முதல் செயல். #tsy20130806



10.நீதி அரசன்‏@FrancisPichaiah சில்லரைகளை அள்ளி வீசி எதிர்ப்புகளை கட்டிப்போடுகிறான் கோடிகளை மணல்கொள்ளையில் ஈட்டிய அரசியல் கேடி  #tsy20130806

நீ ஒரு பொம்பளை பொறுக்கியாமே? உண்மையா?

1. மிஸ்! நீங்க ஒரு டைம் சிரிச்சாலே உங்களைப்பத்தி சொல்லிடுவேன்.



 எப்டி?



 நான் ஒரு பல் டாக்டர்.பல்ஸ் பார்த்தே கண்டுபிடிச்சுடுவேன்



----------------------------


2. டேய்.நீ எதுக்குமே லாயக்கில்லாதவன்டா.



அப்டி சொல்லாதீங்க டீச்சர்.லாயக்கில்லாதவனுக்கு ஒரு உதாரணமாவாவது நான் இருக்கேனே?




------------



3. சமீபத்துல என்ன சினிமா பார்த்தீங்க மிஸ்?




 எல்லா படமும் பால்கனில இருந்து தான் பார்ப்பேன் .ரொம்ப கிட்டக்கா போகமாட்டேன் # அல்டாப்பு அலமு



--------------------------



4.  டியர்.மடில கனம் இருந்தாத்தானே வழில பயம் ?



கழுத்தில கனம் இருந்தாலும்.ஐ மீன் நெக்லஸ். செயின்



-----------------------------


5.டியர்.நீங்க பெண்ணியவாதியா? ஆணாதிக்கவாதியா ?



 ஸாரி .அதை பகல் ல சொல்றேன்.புத்திசாலி புருசன் பொண்டாட்டி கிட்டே நைட் ல ARGUE பண்ணமாட்டான்



-------------------------



6. வணக்கம். செய்திகள் வாசிப்பது செண்பகம்.



 ஸாரி பார் த டிஸ்டர்பன்ஸ்.யூ ஆர் அண்டர் அரெஸ்ட்




-----------------------


7. எனக்கு தூக்கம்னா ரொம்ப பிடிக்கும் .24 மணி நேரமும் தூங்கிட்டே இருப்பேன் டியர்.



அய்யய்யோ அப்போ என் லவ்வை வாபஸ் .நீ பாட்டுக்கு தூங்கிட்டா?



---------------------------


8. டியர்.என்னைத்தவிர.வேற யாராவது கேர்ள் பிரன்ட்ஸ் இருக்காங்க்ளா?



எந்த பிரன்ட்சும் கிடையாது.ஆல் எனிமீஸ்.உங்கம்மா அப்பா etc


-------------------------------


9. டியர்.தொந்தரவு பண்ணாதே.deepஆ திங்க் பண்ணிட்டு இருக்கேன்.




ஓஹோ.யார் அந்த deepa? (தீபா)



--------------------------


10 ஜட்ஜ் - நீ ஒரு பொம்பளை பொறுக்கியாமே? உண்மையா?




 கைதி - பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.டீசன்ட்டா லேடீஸ் கலெக்ட்டர்னு சொல்லத்தெரியாதா



-------------------------



11. முதல் இரவில் டீச்சர் - அத்தான்.ஏன் 10 நிமிடம் லேட்




? இப்போ என்ன? பெஞ்ச் மேல் ஏறி நிக்கனுமா? கட்டில்லயா?




----------------------------


12. டியர்.போன மாசம் பர்த்டே க்கு இப்போ பி லேட்டட் விஷ் பன்றீங்க்ளே ஏன்?




ஸ்கூல் ஆபீஸ் னு எங்கே போனாலும் லேட்டா போயே பழக்கம் ஆகிடுச்சு



------------------------


13. சிஷ்யா! பெண்ணாசையை ஒழிக்கனும்.



 குருவே! ஒரு பொண்ணோட ஆசையை நாம ஏன் ஒழிக்கனும்? அது ஆணாதிக்கம் ஆச்சே



--------------------------


14. சார்.உங்க படத்துல கதையே இல்லையே?




விளையாடறீங்க்ளா?,டைட்டிலே இப்போ தான் சொல்றோம்.கதையை 100 வது நாள் விழாவில் தான் சொல்வோம்




-----------------------


15. ஸாரி டியர்.கோபத்துல உங்களைத்திட்டும்போது டங்க் ஸ்"லிப்" ஆகிடுச்சு.



ஐ ஜாலி.அப்போ உனக்கு 4 உதடு?



-----------------------











Monday, August 05, 2013

டீனேஜ் பெண்களின் “சேரா” நிலைக் காதல்+வலை தளக் காதல்-தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க்-7

1.வித்யா‏ @RajaThamizhachi வலைதளத்தில் காதல் என்பது , கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை தான்... #tsy20130805


2.N.ரஜினிராமச்சந்திரன்‏@rajinirams அப்பாவி பெண்களை"காதல்"செய்வதாக சொல்லி வலைவீசி ஏமாற்ற ஏற்ற தளம் "வலைதளம்" #tsy20130805


3.சந்துல சவுண்டு‏@iamsubramani இன்று நாராசமாய் பார்க்ப்படும் 'வலைதளம்' என்பதும் 'காதல்' என்பதும் மிக அழகிய தமிழ் சொற்கள் முன்பு  #tsy20130805


4.செ.செந்தில்குமார்‏@SeSenthilkumar வளைக்கரம் ஒன்றைக் காதலிக்க வலைத்தளமும் வலை தரும்!  #tsy20130805


5.Muthiah‏@muthiahrm கைத்தலம் பற்றுமா வலைத்தளக் காதல்?  #tsy20130805


6.நீதி அரசன்‏@FrancisPichaiah வலைதளம் அது காதல் தளம் காதலர் களுக்கு பெற்றோருக்கோ அது கவலை தளம் #tsy20130805


7.Mr.manithaN‏@Am_mathan காதலித்த பின்தான் கண்டுகொண்டேன்  அவள் 'வளைக்கரத்தில்' இல்லாமல் என்ன இருந்துவிட போகிறது இந்த 'வலைத்தளத்தில்'.. #tsy20130805


8.LKG‏@chinnapiyan காதல் வலையில் சிக்க வைக்க வலை தளங்கள் ஏராளம். #tsy20130805


9.ஊர ஏமாத்துறவன்‏@trajuvelநேரில் காதலை சொல்ல தயங்கியவர்களுக்கு வலைத்தளம் தான் தூதுவனாக அமைந்தது!!! #tsy20130805


10.VIBHU‏@GOVINDARAJEN நன்மையும்,தீமையும் கலந்தே இருப்பது இணையம்.காதலும் அப்படித்தான்.இரண்டையுமே பக்குவமாக கையாளவேண்டும். #tsy20130805


11.குற்றாலத்தான்‏@bluefortfish காதலுக்கு வலையும் இல்லாம தளமும் இல்லாம தவிக்கவன் தான் வலைத்தளம் நாடுவான்! #tsy20130805


12.கோ.செந்தில்குமார்‏@oorkkaaran வஞ்சகர்களும் விரிக்கலாம் காதல் வலை.. அதிலும் வலைதளம் என்றால் மோசமான நிலை! #tsy20130805


13.அடங்கா பயல்‏@ikaatupayal காதலுக்கு பல கோணங்கள் வலைதளத்தில் #tsy20130805


14.மாந்துறையான்‏@kiramaththan வயதைத் தாண்டி  வந்ததெனக்கு வலைதளங்களின் மேல் காதல்! #tsy20130805


15.ஜானகிராமன்‏@periyakulam காதல் பயிருக்கு இன்றைய விளைநிலம் வலைத்தளம் . #tsy20130805

PILLA JAMINDAR - சினிமா விமர்சனம்

 

ஒண்ணே  முக்கால் லட்சம் கோடி அடிச்ச குரூப் எல்லாம் கமுக்கமா  இருக்கும்போது ஆஃப்டர் ஆல் 5000 கோடி சொத்துக்கு அதிபதி ஆகப்போகும் ஜமீன் தார் வாரிசு ஹீரோ  ஓவரா  அலப்பறை பண்றார் .அளவுக்கதிகமா  வகுப்பறை ல பாடம் நடத்தும் டீச்சரும் , வாழ்க்கைல அலப்பறை பண்ற டார்ச்சரும்  நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை அப்டிங்கற பழமொழிக்கு  ஏற்ப   அவருக்கு ஒரு ஆப்பு காத்திருக்கு . 


 அதாவது அவரோட   தாத்தா  உயில் ல ஒரு கொக்கி வெச்சுட்டு போயிடறார் . டக்னு கழட்ட அது   ஃபிகரோட   ஜாக்கெட் கொக்கி இல்லை . சட்ட சிக்கல் நிபந்தனைக்கொக்கி . அதாகப்பட்டது  சில கண்டிஷன்ஸெல்லாம் போடறார் . ரொம்ப ரொம்ப கஷ்டமான அந்த கண்டிஷன் ஸ் என்னான்னா 

1. ஹீரோ  காலேஜ்ல டிகிரி முடிக்கனும் ( டிகிரியையே முடிச்சுக்கட்டக்கூடாது , படிச்சு பாஸ் ஆகனும் ) 


2. காலேஜ் சேர்மென் எலக்‌ஷன்ல ஜெயிச்சு   பதவில நிலைக்கனும் 


இந்த கேவலமான கண்டிஷன்ஸை  ஹீரோ எப்படி எதிர் கொள்ளறார் என்பதே  கோமாளித்தனமான திரைக்கதை



ஹீரோ நான் ஈ பட ஹீரோ வான நானி . அந்தப்படத்துல  பிரமாதமா நடிச்சவர் இந்தப்படத்துல சொதப்ப 2  காரணங்கள்  


1.  திரைக்கதை  புளிச்சுப்போன மாவு


2. இளைய தளபதி  விஜய் , புரட்சித்தளபதி விஷால்  மாதிரி  எல்லாம் இமிடேட் பண்ணி நடிச்சு சின்னத்தளபதி பரத் ரேஞ்சுக்கு கேவலமா  இவர் இறங்கிப்போனது ( பரத்துக்கு எங்காவது எந்த  மூலைலயாவது  ரசிகர்கள் ரசிகைகள்  இருந்தால் மன்னிக்க ) 


டான்ஸ் மூவ்மெண்ட்ல  விஜய் , காமெடி காட்சிகள் ல விஷால் இதுதான் நானியோட டார்கெட் . ஆனா அதுல என்ன காமெடின்னா டான்சில்கூட ஓக்கே , காமெடி சீன்கள் ல படு கேவலமான பாடி லேங்குவேஜ் , முடியல 


ஹீரோயின் 2 பேரு. ஆந்திராவில  எப்பவும் 2 ஹீரோயின்ஸ் தான் . படத்துல  ஒரு கதையும்  உருப்படியா இல்லைன்னாக்கூட  தமிழன் தேடித்தேடி தெலுங்குப்படம் பார்க்கக்  காரணமே   உருப்படியா  2  ஃபிகராவது  படத்துல மேம்போக்கா  , பதவிசா ,இளசா,  சொகுசா இருப்பாங்கன்னுதான் ( இந்த பத்தில தமிழன்னு சொன்னது  என்னைத்தான்  ஹிஹி )



ஒரு ஹீரோயின்   பிந்து மாதவி . மன்மதன் படத்துல  சீன் காட்டுச்சே  அந்த பாப்பா . ஸ்லீவ்லெஸ்   டாப் போட்டுக்கிட்டு   படம் பூரா ஆங்காங்கே வந்து சம்பந்தமே இல்லாம கெக்கே பிக்கேனு  சிரிச்சுட்டுப்போகுது.  ஹீரோவுக்கு
பாப்பா லவ்வரா ? ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்டா ?  டேட்டிங்க் கேர்ளா? எதுவுமே டீட்டெயிலா இல்லை . ( டீட்டெயில் சொல்லிட்டா மாட்டும் நீ என்ன செய்யப்போறே? ) 


 மெயின் ஹீரோயின் ஹரி ப்ரியா . பாப்பா கையில் 10 லட்சம் ரூபா குடுத்து   சிரி அப்டினு சொன்னாக்கூட   உம்முனு இருக்கற உப்புமா  ரகம் போல . எப்போ பாரு உம்முன்னு இருக்கு  . சிரிச்சாலே பார்க்க சுமாரா தான் இருக்கும் உம்மானாம்மூஞ்சி ஃபிகருங்க எல்லாம் உம்முன்னு இருந்தா எப்ப டி?  மற்ற படி  லோ கட்  , லோ ஹிப்  , ஸ்லோ மோஷன் , லூஸ் மோஷன் காட்சிகள் எல்லாம் உண்டு . கண்டு பயன் பெறுக 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச  தம்பிக்கு எந்த ஊரு படத்தைத்தான்   நகாசு வேலை  பண்ணி   படம் எடுத்து இருக்கோம்கறதை   மூச்சு விடாதது 



2.  படத்துல  இருக்கோ இல்லையோ  ஏகப்பட்ட சீன்கள் இருப்பது மாதிரி 2 ஹீரோயின்களை வெச்சு  கிளாமர்  ஸ்டில்ஸோட  போஸ்டர் ரெடி பண்ணினது 





 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. என்ன தான் ஜமீன் தாரா  இருந்தாலும் நைட் படுக்கும்போது நைட் டிரஸோ , லுங்கி , வேட்டி, கைலி யோதானே கட்டிட்டு படுப்பாங்க .  நீட்டா பேண்ட் ,சர்ட்  போட்டு  டக் இன் பண்ணி டை கட்டி  கோட் சூட் போட்டுட்டு  ஷூ கூட கழட்டாம ஃபுல் மேக்கப்போட   எந்த கேனயனாவது  டெய்லி படுத்து  தூங்குவானா? ஓப்பனிங்க் சீன்லயே இந்த சொதப்பல் 


2.   ஹீரோ  ஏதோ  கோபத்துல  ஒருஆளை  கன்னத்துல  வெட்டுக்காயம்  வர்ற அளவு தாக்கிடறார்.   ஃபாரீன்ல போய் சிகிச்சை பண்ணாலே  அந்த காயம்  மறைய 6 மாசம் ஆகும். ஆனா அடுத்த நாளே   மழு மழுனு   அவர் கன்னம் இருக்கு , என்னய்யா  கண்ட்டிநியூட்டி பார்த்து கிழிச்சீங்க . இந்த  லட்சணத்துல   படத்துக்கு அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்  24 பேராம் 



3.  ஒரு  காட்சில  ஹீரோ  வெங்கடாசலபதி  ஒயின்ஷாப்ல மீட் பண்ணலாம்கறார். ஆனா காட்சில  பார்வதி ஒயின் ஷாப் போர்டு இருக்கு 



4. ஹீரோ கைல காசு இல்லை . ஏ டி எம் கார்டு டி ஆக்டிவேட்டட் . ஜமீன் பணம் கிடையாது . மாசம் ரூ 2,500  மட்டுமே   கல்விச்  செலவுக்கு  தரப்படுது. அடிக்கடி   ஹீரோ பணமே இல்லைனு புலம்பறார்  . ஆனா   ஒருசீன்ல  5லட்சம் செலவு  பண்ணி  டான்ஸ் பார்ட்டி வைக்கறார் . அவர் என்ன டி எம் கே எம் எல் ஏவா?

5. சிக்கிமுக்கி கல்பாட்டு  மியூசிக் அச்சுஅசல்   அழகியதமிழ்மகன் பாட்டான “ மதுரைக்குப்போகாதடி” பாட்டுஇசை   உல்டா




மனம் கவர்ந்த வசனங்கள்

1. நான்   பேசனும்னு நினைக்கும்போதுதான்பேச முடியும்  .  நீ  பேசநினைக்கும்போது   முடியாது. ஏன்னா  நான் பாஸ்


2.  நான் பீட்சா டைப், நீ   தாம்பூலம் டைப், நம்க்குள்ளே  சிங்க்   ஆகாது


3. எத்தனை  சேவல் கூவுனாலும்  , கூடுனாலும்  முட்டை போடாத  கோழி அது , ஹி ஹி



4. பொட்டு  வைக்கக்கூட  மறக்கற பொண்ணுங்க  மருதாணி  வைக்க  ஆரம்பிச்சுட்டா   காதலிக்கறா -னு அர்த்தம்



5.  எக்சாம் ஹாலில் -

  டேய், எனக்கு ஒரு பிட் கொடு



 இதென்ன டீக்கடை   பஜ்ஜியா? எடுத்துத்தர?



6. சிங்கம்  காட்ல இருந்தாலும்  , ஜூ வில் இருந்தாலும்  வேட்டையாடித்தான்  சாப்பிடும்



7. நம்பிராஜனைப்பார்த்தியா?


 பக்கத்துல ஏதாவது  ஒயின்  ஷாப் இருக்கா பார்த்தியா?




8.  அம்மா  , தர்மம் பண்ணுங்கம்மா, ஆண் குழந்தையாப்பொறக்கும்

 அட போப்பா  , என் புருஷன்  ஓடிப்போய்  7வருஷம் ஆகுது , இவன்  வேற கடுப்பைக்கிளப்பிட்டு 


9. நாங்க வாழ நினைச்ச   எங்க வாழ்க்கையையும்   சேர்த்து நீ வாழனும்  ,இதுதான் எங்க  ஆசை



10.  வெற்றில  என்ன  இருக்கு?  ஒரு முறை   தோற்றுப்பார் .  இந்த  உலகமே  உனக்கு  புரிபட ஆரம்பிக்கும் 



11.  யோவ்,குளிக்கறியா?

 இல்லை , சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுட்டு இருக்கேன் , ஆத்தங்கரைல வந்து என்ன கேள்வி இது ராஸ்கல் ?






ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- தெலுங்கு படத்துக்கு விகடன்ல மார்க் போடறதில்லை , இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக   36



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - பத்து பைசாவுக்குக்கூட படம் தேறாது , டிவி ;ல போட்டாக்கூட யாரும்  பார்க்கவேணாம்