Saturday, May 04, 2013

காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி

"காதலும் செக்ஸும் கடவுளை அடையும் வழிகள்தான்!”
 
 
மீரா நாயர்
 
 
 
 
 
லிவுட்டில் இந்தியப் பெயரைப் பதிவு செய்திருக்கும் முதல் பெண் இயக்குநர் மீரா நாயர்!


எடுத்தது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள்தான் என்றாலும், அத்தனையும் சர்ச்சையைக் கிளப்பியவை. கடைசியாக இவர் எடுத்த 'காமசூத்ரா’ படம் கிளப்பிய புயலில் நாடே அதிர்ந்தது. அடுத்த சர்ச்சைக்கு அச்சாரம் போடும்விதமாக, மீண்டும் மும்பையை மையமாக வைத்து 'பம்பாய் 2000’ என்ற புதுப்பட புராஜெக்ட்டில் மும்முரமாக இறங்கிஇருக்கிறார் மீரா.



தென்னாப்பிரிக்காவில் தன் வீட்டில் இருந்த மீரா நாயர், பாரீஸில் இருக்கும் நமது நிருபருக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் அளித்த பேட்டி...


''சினிமாவுக்குள் எப்படி நுழைஞ்சீங்க..?''


''நான் நல்ல படிப்பாளி. அதனால எல்லாரை யும்போல நானும் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ வருவேன்னுதான் ஆரம்பத் தில் நம்பிக்கிட்டிருந்தேன். ஆனா, ஸ்கூல் முடிக்கிறப்பதான் என்னோட தாகம் வேறனு எனக்கே புரிஞ்சுது. எனக்கான துறை நாடகம்தான்னு உணர்ந்தேன். அனல் பறக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்துத் தயாரிக்கப்பட்ட பரீட்சார்த்த நாடகங்கள், தெருமுனை நாடகங்கள்னு எல்லாவற்றிலும் வெறியா நடிச்சேன். அவை எனக்குத் தவம் மாதிரி!


அந்தச் சமயத்துலதான் ஹார்வர்டு யுனிவர் சிட்டில, முழு ஸ்காலர்ஷிப்போட நாடகத் துறையில் படிக்க எனக்கு சீட் கிடைச்சது. ஆனா, நாடகங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க, அவை ரொம்பக் கட்டுப்பெட்டித் தனமானவைனு புரியவும், என் இன்ட்ரஸ்ட் சினிமா பக்கம் திரும்பியது. 


அதிலும் வெறுமனே நடிச்சுட்டுப் போக இஷ்டம் இல்லை. கதை, கேமரா, நடிகர் -நடிகைகள், ஃபைனான்ஸ், ஷூட்டிங், எடிட்டிங்னு எல்லாமே என் கன்ட்ரோல்ல இருக்கணும்னு விரும்பினேன். 'கிரியேட்டிவ் ஃப்ரீடம்’ எனக்கு ரொம்ப முக்கியம். இப்படித்தான் சினிமா இயக்குநராக அவதாரம் எடுத்தேன்.



என்னதான் ஹாலிவுட்டில் படம் எடுத்தா லும், இந்தியர்களையே நடிக்கவைப்பது என்று எனக்குத் தனிப்பட்ட ஒரு கொள்கையும் உண்டு...''


''இந்தியாவின் வறுமையை மட்டுமே படம் பிடித்து, சர்வதேச அரங்கில் விற்கிறீர்கள் என்று உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு தெரியுமா..? உதாரணம் 'சலாம் பாம்பே’ படம்.''



''இந்தப் 'பாராட்டு’ எனக்கு மட்டும் புதுசு அல்ல; ஏற்கெனவே சத்யஜித்ரேவுக்குக் கிடைத்ததுதான். 'சலாம் பாம்பே’ பற்றிப் பேசுவோம். படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்தவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு உண்மை புரிந்திருக்கும். இந்தியா வின் வறுமையும் இருண்ட விஷயங்களும் மட்டுமே அதில் 'ஹைலைட்’ செய்யப்படவில்லை.


 'சாவா.... வாழ்வா’ என்று அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளை வெற்றிகரமாகச் சமாளித்து உயிர் வாழும் மும்பை தெருவோரக் குழந்தைகளின் பிரச்னைகளைத் தான் அந்தப் படம் வெளிப்படுத்துகிறது.



இந்தப் படத்துக்காகத் தெருவோரக் குழந்தைகள் 30 பேரைவெச்சு, மூணு மாசம் வொர்க்ஷாப் ஒண்ணு நடத்தினோம். இந்தப் படத்தின் கலெக்ஷனைக்கொண்டு 'சலாம் பாலக் டிரஸ்ட்’னு ஆரம்பிச்சோம். வீடற்ற குழந்தைகளின் படிப்பு, மருத்துவம், சாப்பாட் டுச் செலவுகளை இந்த 'டிரஸ்ட்’ மூலமா கவனிச்சுக்கிட்டு இருக்கோம்.''


'' 'காமசூத்ரா’ படம் எடுத்ததுபற்றி..?''



''செக்ஸ் பற்றிய போலித்தனமும் அறியாமையும் மலிஞ்சுகிடக்கிற இந்த நாட்டுல, 'காமசூத்ரா’ படத்துக்கு சென்சார் பிரச்னை வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால், நான் ஒரு பெண் என்கிற ஒரே காரணத்துக்காக இந்த அளவு எதிர்ப்பு வரும் என்பது நான் எதிர்பார்க் காதது. 


முழுசா ரெண்டு வருஷம் சுப்ரீம் கோர்ட் படி ஏறி, இறங்கவேண்டியதாயிடுச்சு. படத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை யில், நான் நினைச்சதைச் சாதித்தாலும் 'ஸ்டோரி’ல கொஞ்சம் அடி வாங்கிடுச்சு 'காமசூத்ரா’ படம். ரொம்ப ஸ்ட்ராங்கான இரண்டு பெண்கள் தங்கள் தனித்தன்மையை ஆண்களிடம் விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் தங்களுக்குள்ளேயே எப்படிக் காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் 'காமசூத்ரா’ சொல்கிறது.



சராசரி இந்திய சினிமா மாதிரி, ஹீரோயினுக் குத் துண்டுத் துணியை மாட்டிவிட்டு, ஆபாச அசைவுகளுடன் 'சோளி கே பீச்சே கியா ஹை’ என்று டான்ஸ் ஆடவிட்டிருந்தால் உடனே சென்சாரில் அனுமதி கிடைத்திருக்குமோ என்னவோ?!



இந்த மாதிரி பாசாங்குகள் எதுவும் இல்லாமல், செக்ஸ் பிரச்னைபற்றித் தெளிவாக ஒரு படம் எடுத்தேன் பாருங்கள்... அது என் தப்புதான். 'அச்சச்சோ... ஒரு பெண் இப்படிப் படம் எடுக்கலாமா? நம்ம கலாசாரம், கௌரவத்தைக் குழிதோண்டிப் புதைச்சுட்டாளே’னு குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க... இத்தனைக்கும் 'காதலும் செக்ஸும் கடவுளை அடைவதற்கான வழிகளில் ஒன்று’ என்ற தத்துவம் சொல்லப்பட்டது நம் நாட்டில்தான்!''



'' 'காமசூத்ரா’வுக்கு இந்தியப் பெண்களின் வரவேற்பு எப்படி இருந்தது?''


''உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவுல இந்தப் படம் சூப்பர் ஹிட். தியேட்டர்ல ஆண்களோட சேர்ந்து படம் பார்க்கிறதுக்குப் பெண்களுக்குத் தயக்கம் ஏற்படும்னு உணர்ந்தேன். அதனால, படம் ரிலீஸ் ஆகும்போதே, ஒவ்வொரு தியேட்டரிலும் வாரத்துக்கு மூணு நாள் பெண்களுக்காகப் பிரத்தியேகமா 'மேட்னி ஷோ’ போடணும்னு விநியோகஸ்தர் களிடம் ஒப்பந்தம் போட்டேன். இந்த ஐடியா சூப்பரா 'வொர்க் அவுட்’ ஆச்சு. 'இன்ட்டிமேட் லவ்’ பத்தியெல்லாம் பெண்கள் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டாங்கனு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். அதுக்கு 'காமசூத்ரா’வின் வெற்றியே சாட்சி!''


- பாரீஸிலிருந்து
எ.அன்பரசன்


மீரா நாயர் பிறந்தது புவனேஸ்வரில். டெல்லி பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி முடித்த கையோடு அமெரிக்காவுக்குப் பறந்தவர், கிட்டத்தட்ட 10 வருடங்கள் அங்கேதான் வசித்தார். 'மிசிசிபி மசாலா’ படத்துக்காக உகாண்டா தலைநகர் கம்பாலாவுக்குப் போனது, இவர் வாழ்க்கையில் திருப்புமுனை. அங்கே இவர் சந்தித்த அரசியல் விஞ்ஞானி மஹ்முத் மம்தானிதான், இன்று இவரது கணவர். ''சினிமாவுக்காக உலகம் பூரா சுத்தினாலும் என் கணவரும் குழந்தையும் இருக்கும் இடம்தான் எனக்குச் சொர்க்கம்!'' என்கிறார் மீரா.


thanx - vikatan


 readers views


1.
>>செக்ஸும் கடவுளை அடைவதற்கான வழிகளில் ஒன்று’ << இதைதான் "ஓஷோ" தன்னோட "காமத்தில் இருந்து கடவுளுக்கு" (செக்ஸ் டு சூப்பர் கான்ஷியஸ்னஸ்) புத்தகத்தில் அழகாக சொல்லி இருப்பார்....
ரவி, தலைப்பை வைத்து அது காமத்தை பேசும் என்று நினைக்காதிர்கள், அது மிக, மிக, மிக, மிக, ...... அற்புதமான புத்தகம். வாசித்துப்பாருங்கள். நித்தி அரைவேக்காடு. நான் கூட அறைவேக்கடுதான் காரணம், பதில்கள் என்னிலிருந்து வருவதில்லை, நான் அறிந்தவற்றிலிருந்து வருகிறது. ஆனால் ஓசோ அப்படியல்ல, அவரை படித்திருந்தால் நிச்சயமாக நித்தி உங்கள் நினைவில் வந்திருக்க மாட்டார். அல்லது நித்தி அரைவேக்காடு என்பதை மிக எளிதாக புரிந்துகொண்டிருக்க முடியும்.
அப்போ ஏன் நித்தியை பிடித்தார்கள் !
சலாம் பாம்பே மற்றும் மிஸ்சிபி மசாலா ( டென்ஸல் வாஷிங்டன் நடித்தது ) தவிர மற்ற அனைத்து படங்களும் அரை வேக்காடு படங்கள். ஒண்ணு பஞ்சாபிகளைப் பற்றியதாக இருக்கும் இல்லைன்னா,வெள்ளையர்களை மனதில் வைத்து எடுத்த படங்களாய் இருக்கும்.
கமல் எடுத்த படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்று கூறியதுகள் இவரைப் படமேடுக்கவிடாமல் துரத்தியது..
அட 'காமசூத்ரா'வில ஒண்ணுமே இல்ல... சப்புன்னு இருக்கும்...
என்னது 1.1.98-ல video conferencing ஆ? என்ன பூ சுத்துறீங்க?
இப்ப காம சூத்ரா எடுங்கள் makkal ரொம்ப மாறிட்டாங்க ....பலான பட சன்னி லியோனையே நம் மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள்
உங்க துணிச்சல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பெண்களை அடிமையாக்கி, தன் உடல் ஆசைக்கு மட்டும் தெய்வமாக நினைக்கு ஆண்களின் போலித்தனத்தை தோலுரித்து காட்டி இருக்கிறீர்கள் காம சூத்த்ராவில். மறைவிலேயே பெண்களை காமத்துக்கு பயன்படுத்தி, வெளி உலகில் பெண்களை தெய்வமாகவும், பெண்களின் பாதுகாவலராகழ்வும் நடித்து வரும் ஆண்களின் அடிமைத்தனத்தை விளாசி இருப்பது நல்ல முயற்சி.
இந்திய பெண்ணாக இருந்தாலும் புதுமை விரும்பியாக இருக்கும் மீரா நாயருக்கு ஜெய்...
>>நான் நினைச்சதைச் சாதித்தாலும் 'ஸ்டோரி’ல கொஞ்சம் அடி வாங்கிடுச்சு 'காமசூத்ரா’ படம்<< கதையா முக்கியம்????
>>ஆனா, ஸ்கூல் முடிக்கிறப்பதான் என்னோட தாகம் வேறனு எனக்கே புரிஞ்சுது<< ஒ..ஒ..ஒ... சரிங்க.... எங்களுக்கும் புரிஞ்சுது ....
ரே இந்தியாவை உள்ளபடியே காட்டியவர். என்பதால் வறுமையைக் காட்ட வேண்டியதாயிற்று .

இவர் "எப்படி இந்தியாவைக் காட்டினால் வெள்ளக்கார மச்சான்களுக்குப் பிடிக்கும்" என்று யோசித்துப் படம் எடுப்பவர். இரண்டும் ஒன்றா?
இதைத்தானே சுவாமி நித்தியானந்த போன்றவர்களும் போதிக்கிறார்கள். தின்று கொழுத்த பேர்களுக்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றாகவே தெரியும்.
ரே அவர்களுடன் ஒப்பீடு செய்யுமளவுக்கு, இந்தியாவில் எவனும் இன்னும் படம் எடுக்கவில்லை.
காமசூத்ரா ஒரு அற்புத கலைவடிவ படம். மேலும், மீரா நாயர் மிட்சல் என்பவரை மணந்து விவாகரத்து பின்னரே மஹமூத்தை திருமணம் - இரண்டாம் - செய்தார். செக்ஸ் கடவுளை அடையும் வழி என்று புரிந்து கொண்டதால் தானோ என்னவோ நம் அரசியல்வாதிகள் அந்த ஆட்டம் போடுகிறார்கள் :)
காமசூத்ரா’படத்தில் ரேகா நடித்து உள்ளார்.
காம சூத்ரா ஒரு boring படம்! ஒரு ஆர்வம் தூண்டாத கட்சி அமைப்பு, amateur நடிப்பு!

செக்ஸ் காட்சிகள் இல்லை என்றால் இந்த படம் வசூலில் மண்ணை கவ்வி இருக்கும்! நம்பிக்கை இல்லை என்றால் வீடியோ பாருங்கள்!

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 9


ஸ்டெர்லைட் எதிர்ப்பில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்த போதிலும், ம.தி.மு.க-வும் சமூக அமைப்புகளும் தீவிரம் காட்ட தொடங்கின. இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வழி தெரியாமல் ஆலை நிர்வாகம் அஞ்சவே செய்தது.


இந்த நிலையில், 1997 செப்டம்பர் 30-ம் தேதி ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அங்குள்ள ஒரு உலை வெடித்து சிதறியதால் அமிலங்கள் தீப்பற்றி எரிந்தன. சுற்றுப்புற கிராங்களில் இருந்தவர்கள் கூட பார்க்கும் அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு நெருப்பு எரிந்து கொண்டு இருந்தது. உலை வெடித்த சப்தம் அதிகமாக இருந்ததால் மக்கள் அச்சம் அடைந்தார்கள். நல்லவேளையாக இதில் பெரும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், சங்கர், பெருமாள் என்ற இரு தொழிலாளர்கள் உடல் முழுவதும் எரிந்து சில எலும்புகளை மட்டுமே அள்ளி வர முடிந்தது. பலர் காயம் அடைந்தனர்.




இந்த சம்பவம் நடந்த போது ம.தி.மு.க-வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கொண்டிருந்தனர். ஆலையில் நடந்த விபத்தால் அதிர்ந்து போயிருந்த நிர்வாகம், மக்களின் எதிர்ப்பை சமாளிக்க வழி தெரியாமல், 'ஆலையின் உள்ளே நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகளின் சதியே காரணம்' என தெரிவித்தது. இது மக்களிடம் கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிகரித்ததே தவிர அவர்களை திசை திருப்ப முடியவில்லை. இதனால் பின்வாங்கிய ஆலை நிர்வாகம், ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டு விட்டது என்பதை ஒப்புக் கொண்டார்கள்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி லிபரான தலைமையிலான அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1998 டிசம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வைகோ ஆஜராகி வாதாடினார். பின்னர் இந்த வ்ழக்கு வேறு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்த போதும் வைகோ உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.



ஜீரோ கழிவு திட்டம்



ஆலை நிர்வாகத்தின் தரப்பில் வாதாடியவர்கள், 'இந்த ஆலையானது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்து இருக்கும் நிபந்தனைக்களுக்கு உட்பட்டே செயல்படுகிறது. ஆலையை சுற்றிலும் காற்றின் தன்மையை பரிசோதிக்க கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் காற்று மாசுபடாமல் கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களது ஆலையில் அமைக்கப்பட்டு இருக்கும் கருவிகள் உலகத் தரம் வாய்ந்தவை. அவை சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத வகையில் ஆலையை செயல்பட வைப்பதாக இருக்கிறது.




இது தவிர, ஆலையில் இருந்து வெளியேறும் புகையை நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மூலம் அதன் தனமையை குறைத்து அதன் பிறகே வெளியேற்றுகிறோம். சஃயூரிக் அமில ஆலை உள்ளிட்ட எல்லா ஆலைகளிலுமே இதே நடைமுறையையே கடைப்பிடிப்பதால் புகையால் காற்று மாசுபடுவதற்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாக சல்ஃயூரிக் அமில ஆலையில் இந்த கருவியை 2006-ல் பயன்படுத்திய பின்னர் ஒரு டன் அமிலம் உருவாகும்போது வெறும் ஒரு கிலோ சல்பர் டை ஆக்ஸைடு மட்டுமே உருவாகிறது. மொத்தத்தில் எங்களது ஆலை ஜீரோ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனம். அதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பே கிடையாது' என ஆணித்தரமாக வாதாடினார்கள்.


மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக ஆலையின் சார்பாக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது ஏற்கெனவே ஆலையின் சார்பில் செலவிடப்படும் 500 கோடி ரூபாயுடன் சேர்த்து செலவிடப்படுவதாக சுட்டிக் காட்டினார்கள். உலகில் எந்த இடல்த்தில் உள்ள ஆலையும் இது போன்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் அதிகமான தொகையை செலவிடுவதும் இல்லை என்று கூட ஆலையின் சார்பாக வாதாடினார்கள்.

ஏற்க மறுத்த நீதிமன்றம்



ஆலையின் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்து பொய்யானவை என்றும்,  ஆலைக்கு அனுமதி பெறுவதிலேயே முறைகேடு செய்தவர்கள் மக்கள் நலனுக்காக நிறைய செலவு செய்வதாக தெரிவிப்பதை ஏற்கக் கூடாது என்றும் ஆலைக்கு எதிராக வாதாடப்பட்டது. மேலும், " இந்த ஆலையால் சுற்றுப்புற மக்கள் கடுமையாக


பதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு நோய்கள் மக்களை பாதிப்பதற்கு ஆலையின் காற்றே காரணமாக இருக்கிறது. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் சுற்றுப்புற பகுதியில் உள்ள நீர் நிலைகள் மட்டும் அல்லாமல் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிப்பு அடைந்து இருக்கிறது.



நச்சை வெளியேற்றும் இந்த ஆலை அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதியில் தொடங்கப்பட்டதே தவறானது. அதனால் ஆலையை மூட வேண்டும்" என ஆலைக்கு எதிராக களம் இறங்கியவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இந்த வாதங்களை நீதிமன்றம் கவனமாக பரிசீலித்தது. இதற்கு முன்பு பல முறை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட குழுக்களைன் அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதனால் ஆலையின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே தீர்ப்பு ஆலைக்கு எதிராக வந்தது.

தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள்



சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி எலிப்பி தர்மாராவ் அளித்த தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் மட்டும் 
அல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த தீர்ப்பில், ஆலையின் சார்பாக விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பு அடைந்து இருப்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காற்று, நீர் ஆகியவற்றை மாசுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது.



தேசிய சூழலியல் பூங்காவாக மன்னார் வளைகுடா பகுதியில் அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து 25 தொலைவுக்குள் இந்த ஆலை அமைந்து இருக்கிறது. ஆனால் விதிமுறைக்கு உட்பட்டு 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமை பரப்பு ஏற்படுத்தப்படவில்லை. மாறாக அதற்கான விதியை தளர்த்தி 25 மீட்டர் சுற்றவுக்கு பசுமை பரப்பை குறைத்துக் கொள்ள தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து உள்ளது. அது போன்ற அனுமதி கொடுத்து இருப்பது தவறானது. அதனால் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வழங்கிய அனுமதியும், அதனை தொடர்ந்து விரிவாக்கத்தின் போது வழ்ங்கிய அனுமதியும் செல்லாது.



1995-ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுப்பதற்கு முன்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படவிலை. அதே போல சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறித்தும் ஆய்வு செய்யாமலே அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆலையின் விதிமுறை மீற்ல்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும்,  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்டு கொள்ளவே இல்லை. இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புற பகுதியை மாசுபடுத்திவிட்டன. இதை எல்லாம் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆலையை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.



சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28-ம் தேதி அளித்த இந்த தீர்ப்பின்படி ஆலை மூடப்பட்டதா..? அல்லது உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் தட்டியதா? என்பதை நாளை பார்க்கலாம்...





diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html



 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html

அஜித் 42!


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜித். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜித். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 42 துளிகள் இங்கே...


தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.


தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.


தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.


அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.


1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.


'அமர்க்களம்' படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.


தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் 'அமர்க்களம்' படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜித்தே நீக்க சொல்லிவிட்டார்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தல.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜித்.


அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. 'நியூ', 'மிரட்டல்', 'நான் கடவுள்', 'ஏறுமுகம்' என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.


'வாலி', 'வில்லன்', 'வரலாறு' போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! 'ஆனந்தப் பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'நீ வருவாய் என' போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜித் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.


இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜித். ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.


கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.


சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜித் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜித் வெறியர்.


பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜித் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.


'நேருக்கு நேர்' படத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜித் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜித் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.


அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜித்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.


சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். 'வாலி', 'வரலாறு' என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், 'மங்காத்தா' படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.


சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜித்.


அஜித் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"


தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!


வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!


சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!


வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!


உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!


சாய்பாபாவுக்குப் பிறகு அஜித்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!


ரேஸ் போட்டிகளில் அஜித்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜித்!


ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!


தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!


'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!



thanx - vikatan



பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!


அஜித்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!


உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜித்தை வம்பிழுப்பார்கள்!


எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!


படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!


மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜித்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!


அனோஷ்கா, தந்தையை 'அஜித் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜித்துக்கு!


மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜித்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!


தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜித். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!


தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.


சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த ஒரே முன்னணி நடிகர் அஜித் மட்டுமே!


    thanx - vikatan