Wednesday, March 20, 2013

பீறிட்டுக் கிளம்பும் மாணவர்களின் உணர்ச்சி -தனித் தமிழீழம்


மாணவர் போராட்டம்...


உடைந்தது அறுபது ஆண்டு மெளனம்!

இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965--ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்’ என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் சொன்னார். அன்றைய மொழிப் போர்க் கிளர்ச்சி மூன்று விபரீதமான நகர்வுகளை இந்திய அரசிடம் உருவாக்கியது.

1. இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களில் நுழைந்திராத (காஷ்மீர் தவிர) இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. ராணுவத்தின் கரகரத்த பூட்ஸ் ஓசையை தங்களது சொந்த பூமியில் தமிழக மக்கள் கேட்டனர்.

2. முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கை செய்யப்பட்டது. அஞ்சல் நிலையம் ஒவ்வொன்றும் காவல் நிலையமாக மாறியது. போலீஸ்காரர்கள் ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் படித்தனர்.

3, முதன் முதலாக மாணவர்கள் மீது பாய்ந்தது இந்தியத் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (Defence of  India rules). மாணவர் தலைவர்கள் 10 பேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்​பட்டனர்.அன்று மாணவர் கிளர்ந்தெழுதலின் பின்னணியில் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், ''போராட்டத்தைக் கைவிடுங்கள்; தமிழினப் பாதுகாப்பும் இந்தி எதிர்ப்பும் எங்கள் கைகளில் பத்திரமாக இருக்கும்'' என மாணவர்களிடம் உறுதியளித்தது. அவர்கள் அடுத்து வரவிருக்கும் 1967 பொதுத் தேர்தலில் அரியணை ஏறுவது நிச்சயம்; இந்தி எதிர்ப்பை நடுவணரசுடன் மோதி முன்னெடுப்பார்கள் என்று அன்றைய மாணவர்களாக இருந்து போராடிய நாங்கள் நம்பினோம்; நம்பி ஏமாந்தோம். அதுதான் உண்மையான வரலாறு.


அதிகாரச் சுகிப்பு மனமும் போர்க்குணமும் ஒருபோதும் ஒன்றிணையாது. ஆட்சியதிகாரம், போராட்டக் குணத்தை புலம்பெயரச் செய்துவிடும் என நாங்கள் அப்போது அறியவில்லை. ஓரிரு ஆண்டுகள் கடந்ததும் அந்த உண்மை எங்களுக்குப் புலனானபோது 1969-ல் இந்தி எதிர்ப்புப் போரில் மீண்டும் தீவிரம்கொண்டோம். அதன் உச்சம் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள், தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றி விடுதலை முழக்கம் எழுப்பினர். நாற்காலிக்காரர்கள் மாணவர்களிடம் மறுபடியும் ஓடி வந்தனர். துப்பாக்கிகளோடு அல்ல; துயரம் தோய்ந்த முகத்தோடு; கெஞ்சுதல் 
சொற்களோடு. ''இப்போது ஆட்சியில் நாங்கள்தானே இருக்கிறோம்; உங்களின் ரத்தம்தானே! எங்களை நீங்கள் நம்பவில்லையா?' என்றனர். மீண்டும் ஒருமுறை நாங்கள் ஏமாந்தோம். 1965 இந்தி எதிர்ப்பு மௌனிக்கப்பட்டது.



அதிகார அரசியலை மாணவர்களால் இனம் கண்டுகொள்ள முடியாமல்போனாலும், அதிகார மனிதர்களைக் கீழே இறங்கி வரவைக்க மாணவர்களால் முடியும் என்பதை உணர்ந்தோம்.

அன்று அடக்கப்பட்ட மாணவர்களின் உணர்ச்சி இன்று பீறிட்டுக் கிளம்புகிறது.
'தனித் தமிழீழம் அடையும் வரை ஓய மாட்டோம். தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து’ என்ற முழக்கத்தை இன்றைய மாணவர்கள் முன்வைக்கின்றனர். 'கொலைகாரர்​களின் நாடாக இலங்கை இருந்துவிட்டுப் போகட்டும். கொலை செய்யப்பட்டவர்களின் ஈழப் பகுதி விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்பது மாணவர்களின் கோரிக்கை. 'ஈழத்தைத் தனி நாடாக ஆக்க, ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்’ என்றும் இவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல்வாதிகள் வைக்கும் போலி வாக்குறுதிகளைப் போல அல்லாமல் தீர்க்கமாக இருக்கின்றன இவர்களது முழக்கங்கள்.


அல்ஜீரிய மக்கள், பிரான்சின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினர். மக்களின் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது பிரெஞ்சு அரசு. 'அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்போம். ராணுவத்தில் சேர மாட்டோம்’ என்றனர் இளைஞர்கள். மிகப்பெரிய எழுத்தாளரும் பிரெஞ்சு அறிஞருமான ழீன் பால் சார்த்தர், 'இளைஞர்களின் இந்த மறுப்பு நியாயமானது. தேசபக்தியின் பெயரால் நடக்க இருந்த மோசடியை முறியடித்து விட்டனர்’ என்று பாராட்டினார். இன்றைய தமிழக மாணவர் போராட்டத்தைக் கவனிக்கும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

ஈழ மண்ணுக்காக இந்த மாணவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இலங்கை நட்டுவைத்த உலகக் கொடுமையின் உயரமான விருட்சம் வேறெங்கும் துளிர்விடக் கூடாது என்ற மானுடநேயப் பார்வைகொண்டவர்களாய் மாணவர்கள் வெளிப்படுகிறார்கள்.    .


'ஈழத் தமிழர்க்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது’ எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவிய தீ 1965-ஐ நினைவூட்டுகிறது. 60 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் துருப்பிடித்துப் போகாத உணர்வுகளைக் காலம் தனது கைகளில் ஏந்தி மாணவர்களிடம் வழங்கியிருக்கிறது. 'போர்க் குற்றம் பற்றிப்பேச அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டதுதான் இன்றைய மாணவர்களின் தீர்க்கதரிசனத்துக்கு உதாரணம்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த முன்மொழிதல்கள் தீப்பொறிகளாக விதைக்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் வெப்பம் தெறித்தது. இதுபோன்ற உணர்வுவசப்பட்ட தன்னெழுச்சிகள் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காதென்று சில மேல்மட்ட அறிவாளிகள், படிப்பாளிகள் சிந்திக்கிறார்கள். போராட்டத்தின் நோக்கம் சரியாக இருக்கும்போது அந்த வடிவத்தை மேலும் செழுமைப்படுத்த எண்ணாமல், பழி சுமத்த முயலும் போக்கே  இவர்களிடம் வெளிப்படுகிறது. இன்னும் சிலரோ 'கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள். தொழிற்கல்விக் கூடங்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பெரும்பான்மை மாணவர்கள் போராட்டக் களத்தில் இல்லை’ என்று உட்பெருமிதம் கொள்கிறார்கள்.
1965-ன் தொடக்கத்திலும் இப்படித்தான் நேர்ந்தது. சமூகத்துக்குப் பயன்படாத கல்வி எங்களுக்கு மட்டும் ஏன் என்று மனசாட்சி குத்தியெடுக்க, இந்தத் தொழிற்கல்வி மாணவர்​களும் பின்னர் இணைந்தனர் என்பது வரலாறு. சில காலங்களில் சில பிரச்னைகள் தன்னெழுச்சி​யாகவே மேலெழும். அந்த எழுச்சியை வழிநடத்தத் தலைமையும் அமைப்பும் இருக்கிறதா என்பதே முக்கியமானது. 1965 போராட்டத் தன்னெழுச்சியினூடாக தலைமையும் மாணவர் அமைப்பும் உருக்கொண்டன. பேரணி, வகுப்புப் புறக்கணிப்பு, அஞ்சலக முற்றுகை, ரயில் மறியல் எனக் கட்டம் கட்டமாகத் திட்டமிட்டு அறிவித்​தோம். தை, மாசி, பங்குனி என்ற இளவேனில் மாதங்கள் இந்தப் போராட்டத்தில் கரைந்துபோயின.
இன்றைய போராட்டத்தில் இத்தகையத் தலைமையும் வழிகாட்டுதலும் உருவாகி இருக்கிறது என்று நான் காண்கிறேன். பல பகுதிகளிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் அமைப்புகள் அவர்களுக்குள் கலந்துபேசி கோரிக்கைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். பொழுதுபோக்குக் கலாசாரத்துக்கும், போக்கிரித்​தனத்துக்கும் ஆளாகாமல், தன் பிள்ளை நேர்மைகொண்ட நெஞ்சினராய் நீதிக்குப் போராடுகிறான் என்பதால், பெற்றோரும் பிள்ளை​களின் வசமாகிவிடுகிறார்கள். குடும்பங்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்தது. இதன் முன்னுதாரணம் 1967 பொதுத் தேர்தலில் சாட்சியமாகியது.
போராடும் மாணவ சக்தியை ஒருபோதும் ஆட்சியாளர்களாலோ ஆதிக்கச் சக்திகளாலோ அடக்கிவைக்க முடியாது. ஆனாலும் மயக்கிவைக்க பல்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். 60 ஆண்டு நெடிய மயக்கநிலை உடைந்திருக்கும் காலம் இது. மாணவர்களின் எழுச்சியை வெறுமனே ஈழத் தமிழர்களுக்கான குரலாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அதன் பெயரால் அவர்கள் அரசியல் உணர்வும் பெற்றுள்ளனர். அது வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. தமிழக மாணவர்களின் எழுச்சியை உலகின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் ஊடகங்கள், குறிப்பாக வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன. டெல்லி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதன் தொடர்பில் டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, வட இந்திய ஊடகங்கள் உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றன. ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை, இன்றும் வன்புணர்ச்சிக் கொடுமை தொடர்வதை வடக்கிலும், கிழக்கிலும் 90 ஆயிரம் விதவைகள் வதைபடுவதை வட இந்திய ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்க அரசியலைப் புரிந்துகொண்ட மாணவர்களுக்கு இது புரியாமல் இருக்காது.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற நாங்கள், அப்போது 20-களில் இருந்தோம். இப்போது 60-களில் நிற்கிறோம். இன்று களம் கண்ட மாணவர்கள் 20-களில் நிற்கிறார்கள். 20-களிலேயே வெல்வார்கள். களத்தில் நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான்;
'போராடுவதற்காகக் கற்றுக்கொள். கற்றுக்கொள்​வதற்காகப் போராடு.’

ஓயாது மாணவர் அலை!

சொந்தங்களுக்கு தமிழகக் கல்லூரி மாணவர்களின் கண்ணீர் பொங்கிப் பிரவாகம் எடுத்து​வருகிறது.
 கல்லூரிகளுக்குத் காலவரையற்ற விடுமுறை அறிவித்தாலும், தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தகிக்கிறது. பல்வேறு ஊர்களில் பொதுமக்களும் தன்னெழுச்சியுடன் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஈழ விவகாரத்துக்காகத் தொடர் உண்ணா​விரதம் இருக்கும் மாணவர்​களின் கொதிப்புகள், குமுறல்கள் இங்கே...  
''மிரட்டியது கல்லூரி நிர்வாகம்!''
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முதலில் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் குண்டுக்​கட்டாகத் தூக்கிச் சென்ற காவல்துறையால், ஏழு நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கைவைக்க முடியவில்லை. ஆனாலும், மாணவர்களின் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டை போடத் தவறவில்லை. பந்தல் அமைக்க வந்தவர்களை மிரட்டுதல், தண்ணீர் கேன் கொண்டுவந்தவர்களை எச்சரித்தல், மின்தடை ஏற்படுத்துதல், ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் மீது கழுகுப் பார்வை... என்று, பல வழிகளில் போராட்டத்தை முடக்க நினைத்தும் முடியவில்லை.
உண்ணாவிரதப் பந்தலில் இருந்த சவுந்திர​ராஜன் உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் சோர்வுடன் பேசினார். ''எங்கள் பல்கலைக்கழகத்தில் போராட்டம் ஆரம்பித்த உடனேயே, காலவரையற்ற விடுமுறை அறிவித்துவிட்டனர். விடுதியில் இருந்தவர்களையும் வெளியேற்றிவிட்டனர்.  'உங்களை ஃபெயில் ஆக்கிடுவேன். போராட்டத்தைக் கைவிடுங்க’ என்று நிர்வாகத் தரப்பில் இருந்து மிரட்டினர். எதற்கும் அசராமல்​தான் எட்டாவது நாளாக உண்ணா​விரதம் இருக்கிறோம். சில மாணவர்களுக்கு உடல்நிலை ரொம்பவும் முடியாமல், அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'' என்றார்.
''அகிம்சை வழியில் போராடுவதுகூட தவறா?''
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் பல மாணவர்களுக்கு உடல்நிலை மோசமடைய... மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மீண்டு வந்தனர். சட்டக் கல்லூரி மாணவர் யுவராஜ், ''எங்களுக்கு விடுதியில் தங்குவதற்கு இடம் இல்லை. கல்லூரியிலும் உட்கார்ந்து போராட அனுமதி இல்லை. எங்குதான் சென்று போராடுவது? அதனால்தான் காந்தி சிலைக்கு முன் அகிம்சைப் போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.  அங்கு வந்த போலீஸார், எங்களைக் கேவலமாகப் பேசித் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். நாங்கள் அசரவில்லை. அந்த இடத்திலேயே படுத்துவிட்டோம். ஆனால், எங்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் தனசேகரன் என்ற மாணவனுக்கு தலையில் பலத்த அடி. ஆம்புலன்ஸைக்கூட போலீஸார் அழைக்கவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி, 'நடிச்சது போதும்... வண்டியில ஏறுங்கடா’ என்று மிரட்டினார். கடைசியாக அந்த மாணவனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டங்கள் ஓயாது'' என்றார்.
''போராட்டத்தில் வெளிமாநில மாணவர்கள்!''
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருப்பது கூடுதல் சிறப்பு. பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான வாசகம் ஏந்திய பலகையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். மாணவர் ரத்தினவேல், ''ஐ.ஐ.டி-யில் தமிழ் மாணவர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். இங்கு ஒரு போராட்டம் செய்தால், நிச்சயமாக அது இந்தியாவையே ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைக்கும். அதனால்தான் இங்கே ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். பீகார், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநில மாணவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதுதான் எங்களுக்கு மனநிறைவாக இருந்தது. எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
''பெற்றோரிடம் பேசுகிறது போலீஸ்!''
கோவையில் சட்டக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாண்டியனிடம் பேசினோம். ''பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர். தனியார் இடங்களில் இருந்தபோதும், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கின்றனர். உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை அழைத்து உளவுப் போலீஸார் பேசுகின்றனர். தனியார் கல்லூரி மாணவர்களை நிர்வாகத்தின் மூலம் மிரட்டுகின்றனர். இதுவெல்லாம் சரியானது அல்ல. தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. முதல் கட்டமாக, கோவையில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்துள்ளோம். விரைவில், கோவையை உலுக்கும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார். இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரம், பெரியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்களும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
''தொப்புள் கொடி உறவுகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்..?''
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 27 பேர், கடந்த 13-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாள், கார்த்திக், ராகுல், அசோக்குமார் ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். போலீஸார் ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தென்னரசுவிடம் பேசியபோது, ''இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்..? என்ற கேள்வியின் அடிப்படையில்தான் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறோம்'' என்றார்.
''அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி!''
திருச்சி சட்டக் கல்லூரியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் நான்கு பேர் உடல்நலம் பாதித்து மயங்கி விழ, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மீதியுள்ள 15 பேர் கல்லூரியின் நுழைவுவாயில் அருகே உண்ணாவிரதம் இருக்கின்றனர். பாரதிலிங்கம் என்ற மாணவரிடம் பேசினோம். ''ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வதே பெரிய துரோகம். அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி. அவர்களின் உண்மையான நோக்கம் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இலங்கையில் நிறைந்திருக்கும் வளங்களுக்கு ஆசைப்பட்டும்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது. இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம்'' என்றார்.
''ராஜபக்ஷேவைத் தூக்கிலிட வேண்டும்!''
செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். தலைமைத் தபால் அலுவலகம், ஸ்டேட் பேங்க் போன்ற மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலை மறியல்களும் அடிக்கடி நடத்தப்பட்டன.  
உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான கோகுல கிருஷ்ணனிடம் பேசினோம். ''தமிழ்நாட்டை நம்பி இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நிரந்தரமாகவும் சுதந்திரமாகவும் இங்கே வாழ இந்தியக் குடியுரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஐ.நா. கொண்டுவந்துள்ள தீர்மானம் ஒரு மாயமான தீர்மானம். அதில் போர்க்குற்றம் என்ற வார்த்தை மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இனப்படுகொலை என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். இரட்டை வேடம் போடும் அந்தத் தீர்மானத்துக்குப் பதிலாக இந்தியாவே தமிழர்களைக் காக்க தனியாக ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும். இத்தனைத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை அனைத்து தமிழர்கள் மத்தியிலும் பொதுஇடத்தில் வைத்து பகிங்கரமாகத் தூக்கிலிட வேண்டும்'' என்று சீறினார்.
''கடற்படையால் கொல்லப்பட்டவர்களைக் கணக்கெடுங்கள்!''
சேலம் சட்டக் கல்லூரியில் தொடங்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கிறது. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டிருந்தாலும், அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒருங்கிணைந்து கலெக்டர் அலுவலக முற்றுகை, ரயில் மறியல் எனப் பல போராட்டங்களை நடத்துகின்றனர். மாணவர் சின்னமுத்து, ''மத்திய அரசு உளவுத் துறை மூலமாக அறிக்கை தயாரிப்பதாகத் தகவலைச் சொல்லி மாணவர்களின் போராட்டத்தை நசுக்கப் பார்க்கின்றனர். எங்களைக் கணக்கெடுப்பதை விட்டுவிட்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுநாள் வரை எத்தனை இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது என்று கணக்கெடுக்கட்டும். இல்லை என்றால், இந்தியாவில் பிரிவினைவாதம் ஏற்படுவதைத் தடுக்கவே முடியாமல் போய்விடும்'' என்றார்.
''தூதரக உறவுகளைத் துண்டிக்க வேண்டும்!''
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர் கணேஷ் பிரபுவிடம் பேசினோம். ''போர்க் குற்றம் புரிந்த ராஜபக்ஷே உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும். இலங்கையுடனான தூதரக உறவுகளைத் துண்டிப்பதோடு, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் இந்தியா முன் வர வேண்டும்'' என்றார்.
தமிழகக் கொந்தளிப்பு டெல்லிக்குத் தெரியுமா?
- ஜூ.வி. டீம்
 ''லீவு விட்டாச்சுன்னா மாணவர் இல்லியா?''
பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி மாணவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திலீபன் அரங்கில் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதைத் தடுக்க வழி தெரியாமல் தவிக்கும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் ஆகியவை, பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வழிக்கு கொண்டுவர முயற்சித்தது. ஆனால், போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், கோபம் அடைந்த நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி, மாணவர்களுடன் செல்போனில் பேசினார். 'இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இனிமேலும் நீங்கள் கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது’ என, காட்டம் காட்டி இருக்கிறார். சளைக்காத மாணவர்கள், 'அப்படின்னா நீங்க ரெண்டு நாள் லீவு போட்டீங்கன்னா, அப்போ நீங்க கலெக்டர் இல்லியா..?’ என்று பதிலுக்குக் கேட்டதும் இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.


 ''இலங்கையா? தமிழ்நாடா? இந்திய அரசே முடிவு செய்!''


தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு சார்பில், கடந்த 18-ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை மற்றும் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம், குருநானக், டி.பி.ஜெயின், நந்தனம், பச்சையப்பா, பிரெஸிடென்சி உட்பட 23 கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் விண்ணைப் பிளந்தது.


 ''இந்திய அரசே... இந்திய அரசே... இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால், இந்தியா எங்களுக்கு எதிரி நாடு!'' என்ற அதிரடி கோஷம் கேட்டு காக்கிகளே கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள். சுற்றிலும் மண்டை ஓடு அடுக்கப்பட்ட பல்லக்கில், ராஜபக்ஷே கத்தியுடன் கோர முகத்துடன் அமர்ந்திருக்க... அந்தப் பல்லக்கை சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் சுமப்பது போன்ற கார்ட்டூனையும் காண முடிந்தது. மொத்த மாணவர்களும் பெருந்திரளாக கவர்னர் மாளிகையை நோக்கி ஓட... 'இனியும் தாமதித்தால் கலவரமே நடக்கலாம்’ என்று கருதிய போலீஸார், மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

thanx - ju vi 

Tuesday, March 19, 2013

தமிழ் இனத்தலைவரின் தன்னிகரற்ற பல்டி பேட்டி

ஐ.மு.கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகல்: கருணாநிதி அறிவிப்பு! 
 
 
சென்னை: ஐ.மு.கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் இது தொடர்பான அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு, படித்தார்.

அந்த அறிக்கையில், "ஈழத் தமிழர் பிரச்னையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வாவின் காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும், தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் குரலெழுப்பி வந்துள்ளது.

அறிஞர் அண்ணா காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

தந்தை செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப்புலிகள் மற்றும் விடுதலைப்போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட;

அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும். தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ, மொழி வாழ, நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப்போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து,

அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக, தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட, அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த, இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு, உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர்மறை கருத்துரைப்பதோ, இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை, அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆழ்ந்து பார்த்து, அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.

எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளி்த்த பேட்டியில் கூறியதாவது:

இனிமேல் பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

பொதுவாக பிரச்னை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே!

அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

எதுவும் கிடையாது.

2009 ஆம் ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்ட போது எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது நீங்கள் எடுத்திருக்கும் முடிவு காலதாமதமானது என நினைக்கிறீர்களா?


2009 ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.

பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்படுகிறதே.?

பொது என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.

டெசோ அமைப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.

தி.மு.க அமைச்சர்கள் எப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வார்கள்?

இன்றோ அல்லது நாளையோ.

தி.மு.க வெளியேற மத்திய அரசுக்கு ஏதும் கெடு நிர்ணயித்து இருந்தீர்களா?

நாங்கள் கூறியிருக்கும் திருத்தம் உள்ள தீர்மானத்தை ஏற்க 21ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறோம். திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை.

உடனடியாக நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால் தேர்தலை சந்திப்பீர்களா?

எப்போது வந்தாலும் சந்திப்போம்.

மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பத‌ற்காகதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள்.நீங்கள் வெளியேறியதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?

அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிடம் இருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?

பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
 
 
மக்கள் கருத்து 
 
 
1.மாணவர் போராட்டத்தைக் கண்டு கதிகலங்கி நிற்கும் நீர் ஒரு வாரத்தில் விலகுவீர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பரவாயிலலை இரண்டு நாட்களிலேயே விலகிவிட்டீர். இதிலிருந்தே மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி என்று தெரிகிறது.

அடுத்து (உண்மையான) உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்வீர் என்று எதிர் பார்க்கிறோம். ஆனால் நீர் தலைகீழாக நின்றாலும் திமுக அழிவதைத் தடுக்க முடியாது. ஏனென்றால் உம் துரோகத்தின் அளவு அவ்வளவு பெரிது
 
 
 
2. 2014 தேர்தல் பிரசாரத்தில்: பார்த்தாயா தமிழா, உன்னைக் காக்க உன் உரிமையை நிலை நாட்ட நானும் எங்கள் கழகமும் எத்தகைய தியாகத்தை செய்திருக்கிறோம் பார்த்தாயா. 2009-ல் தில்லாலங்கடி காங்கிரஸை நம்பி ஏமாந்தேன். 2012-ல் அதை உணர்ந்த (?!) உடனே எங்கள் பதவிகளை துறந்துவிட்டோம். என் எண்ணம், மூச்சு, உயிர் எல்லாமே தமிழை சுற்றித்தான், தமிழர் நலமொற்றித்தான் என்பதை மறவாதே......
 
 
3. இன்னைக்கி செவ்வாய்க் கெழமை கரிநாள் .... பகுத்தறிவு ஜோசியப்படி நல்ல நாள் இல்லை ... எனவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கேற்ப பெரியாரின் இளவல்கள் நாளை அமைச்சர் பதவி விலகுவார்கள் !!!!! நல்லா 9 வருசம் ஒக்காந்து தின்னவய்ங்க செய்யுற அலும்பப்பாரு !!!! நீங்கள்ளாம் நல்லா வருவீங்கடா நல்லா வருவீய்ங்க 
 
 
4இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு எல்லாரும் இப்புடி கூவுறீக?

- இவிங்க மந்திரிங்க ராசினாம கடுதாசிய அந்தந்த மாவட்ட செயலாலரிடம் கொடுப்பாக
- அவுக தலைமைக்கழக செயலாளருக்கு அனுப்புவாகா
- அவுக கட்சி தலைவரிடம் கொடுப்பாக
- அவுக பொதுக்குழு, செயற்குழுவ கூட்டி முடிவெடுத்து... அப்புறமா
- டெல்லியில உள்ள கட்சி கொரடாவாண்ட கொடுக்க கொரியருல அனுப்புவாக
- அவுக நாடாளுமன்ற ஸ்பீக்கரம்மாகிட்ட கொடுப்பாக
- அப்புறம் அவிங்க ஜனாதிபதிகிட்ட அனுப்புவாக

இப்புடி ஊரெல்லாம் சுத்தி ராசினாமா செய்யரத்துக்குள்ள சனவரி 2014 வந்துராது?

அதுவரைக்கு அஞ்சானெஞ்ஜன் மந்திரிதானே மந்திரிதானே. இப்ப என்ன செய்யுவீக?
 
 
திமுக விலகல் குறித்து சொல்ல ஒன்றுமில்லை: சோனியா காந்தி 
 
 
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விலகுவதாக திமுக அறிவித்துள்ளது குறித்து இப்போதைக்கு சொல்ல ஏதுமில்லை என்று காங்கிரஸ் கட்சித் ஹலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, இது குறித்த தகவல் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது,.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த சோனியாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, திமுக விலகல் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்,.


thanx - vikatan
 
 
எனது ட்வீட்ஸ்
 
 
1. தமிழ் இனத்தலைவர் திடீர் னு தியாகி ஆகிட்டாரே? நிஜமாவே திருந்திட்டாரோ?
 
 
 
2. உயிருனும் மேலான உடன் பிறப்பே!ஆதாயம் இல்லாம நான் ஆத்தோட போக மாட்டேன்.பொறுத்திரு.எல்லாம் ஒரு ராஜ தந்திரமே!
 
 
 
3. டியர்.உன்னை டைவர்ஸ் பண்ணலை. உனக்குக்குடுத்த ஆதரவை விலக்கிக்கறேன்.ஆனா வீட்டுக்கு டெயிலி வருவேன்.ஹி ஹி
 
 
 
4. அய்யோ ராமா ! எல்லாம் டிராமா!
 
 
5. திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி# எப்டிப்பார்த்தாலும் தானைத்தலைவரால தமிழ்நாட்டுக்கு நட்டம் தான் வரும் போல
 
 
6. வாழ்க்கை ஒரு வட்டம்.இன்னைக்கு விலகுனவங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க.
 
 
7 த இ தலைவர் -மேடம்.என் நாடகம் எப்டி? சோனியா - சி பி ஐ ரெய்டு வரப்போகுது.முடிஞ்ச வரை சொத்தைக்காப்பாத்திக்கப்பாருங்க
 
 
8. அழகிரி - அப்பா. நாம எல்லாரும் களி சாப்டற மாதிரி கனா கண்டேன்.பலிச்சிடுமோ?
 
 
 மக்கள் கருத்து 
 
 
1. ஆனால் வருங்கால சரித்திரத்தில் உங்கள் குடும்பத்தை பற்றி சொல்ல நிறைய இருக்கும். நாடு விட்டு நாடு வந்து மாமியார் இறந்து, கொழுந்தன் இறந்து, கணவன் இறந்து பதவிக்கு வந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய இனப் படுகொலையை முன் நின்று நடத்திய மாபெரும் வீராங்கனை என்றும் இந்திய சுதந்திர போரை முன் நின்று நடத்திய காங்கிரஸ் இயக்கத்தை ஒழித்தவர் என்றும் சரித்திரம் பதியும். 
 
 
 
2. எப்படி சொல்லுவிங்க? என்னத்த சொல்லுவிங்க? பிள்ளையை பிரதமராக்க கனவு கண்டுகிட்டு இருக்கவங்க என்னத்த சொல்ல முடியும்? எப்போவோ செய்ய வேண்டிய வேலையை ரெம்ப தாமதமா செஞ்சுருக்காரு திமுக தலைவரு. இது இப்படியே இருக்கணும்னு தான் நாங்க எல்லாரும் வேண்டிகிறோம். 
 
 
3. திமுக விலகல் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்,. ----> பின்ன என்ன, சென்னை டூ திஹாருக்கு ஒரு ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க'ன்னா வெளிப்படையாக சொல்வார்?

தேசிய விருது பெற்ற படங்கள் - பட்டியல்.விஸ்வரூபம் , பரதேசி ,வழக்கு எண் 18/9....

வழக்கு எண் 18/9' சிறந்த பிராந்திய மொழி படம்; விஸ்வரூபம் , பரதேசி படத்திற்கும் விருதுகள்! 


புதுடெல்லி: 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த பிராந்திய மொழி படமாக 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக இந்தி நடிகர் இர்ஃபான் (பான் சிங் தோமர் படத்திற்காக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு சிறந்த கலை மற்றும், நடன அமைப்பு ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.

சங்கர் மகா தேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது. 'கஹானி' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



தேசிய அளவில் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பான் சிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.


சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது (படம்: சம்ஹிதா) 


சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற 'போலோ நா...' என்ற பாடலுக்குக் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியான 'உஸ்தாத் ஓட்டல்' படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குனர் 

தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறந்த இயக்குநர் மராத்தியில் வெளியான 'தாக்'படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.

இந்திரா காந்தி விருது புதுமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான இந்திராகாந்தி தேசிய விருது சிட்டகாங் (இந்தி) மற்றும் 101 சூடியங்கள் (மலையாளம்) படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ரிதுபர்னோ கோஷ் பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் (சித்ராங்கதா) மற்றும் இயக்குனர் நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.


விருது பட்டியல்

சிறந்த நடிகர் ( 2 பேருக்கு ) இர்ஃபான் கான், விக்ரம் கோக்கலே
சிறந்த நடிகை உஷா ஜாதவ் (மராத்தி நடிகை)
சிறந்த சமூக படம் ஸ்பிரிட் (மலையாளம்)
சிறந்த இயக்குனர் சிவாஜி லேடன் பாட்டீல்
சிறந்த பொழுதுபோக்கு படம் விக்கிடோனர், உஸ்தாத் ஹோட்டல் (மலையாளம்)
சிறந்த துணை நடிகர் அனு கபூர்
சிறந்த துணை நடிகை டோலி அலுவாலியா (விக்கிடோனர்)
சிறந்த திரைக்கதை -  ஓ மை காட்
சிறந்த அனிமேஷன் படம் - டெல்லி சபாரி


நன்றி - விகடன் 




2012 ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் சங்கர்மகாதேவனுக்கும் விஸ்வரூப படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன. இன்று அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் விவரம் வருமாறு:



தமிழ் திரைப்படமாக பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 / 9 என்ற திரைப்படம் சிறந்த பிராந்திய படமாகவும், சிறந்தஒப்பனைக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீயும், கதாநாயகியாக ஊர்மிளாமகந்தாவும் நடித்துள்ளனர். கஹானி என்ற இந்தி திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக விருது பெறுகிறது. இந்தி திரைப்படம் பான்சிங் தோமர் என்ற படத்தில் நடித்த இர்பான் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்வரூபம் 2 விருதை தட்டி சென்றுள்ளது. சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பிற்கு விஸ்வரூபம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விக்கி டோனர் என்ற இந்தி திரைப்படம் சிறந்த பொழுது போக்கு படமாகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி என்ற திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதைபெற்றுள்ளது.

சிட்டாகாங் என்ற படத்தில் பாடியமைக்காக சங்கர்மகாதேவனும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி மொழி படத்தில் நடித்த உஷாஜாதவ் சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.


நன்றி - தினமலர்

Monday, March 18, 2013

விகடன் விமர்சனக் குழு -சுண்டாட்டம் - சினிமா விமர்சனம்

விளையாட்டு’ வாழ்க்கையில் வினை ஆவதே 'சுண்டாட்டம்’.
 ஹீரோ இர்ஃபான், கேரம் கில்லி. தாதா நரேனின் பிரியத்துக்குப் பாத்திரமாகி, அவரது கேரம்போர்டு கிளப்பில் ஆஸ்தான பிளேயர் ஆகிறார். இன்னொரு பக்கம் தங்கையின் தோழி அருந்ததியுடன் அவருக்குக் காதல். இர்ஃபான் வரவால் கிளப்பில் ஓரம்கட்டப்படுகிற மது, கொலைவெறியுடன் திரிகிறார். மதுவின் வன்மம், அருந்ததியினுடைய அண்ணனின் எதிர்ப்பு, நரேனின் உயிருக்குக் குறிவைக்கும் எதிர் கோஷ்டி என்று மூன்று விதமான சூழலுக்கு நடுவே இர்ஃபான் எப்படி மீண்டு வந்தார் என்பது திக் திடுக் க்ளைமாக்ஸ்!



வழக்கமான காதல், வழக்கமான மோதல் கதைதான் என்றாலும், படமாக்கிய விதத்திலும் திரைக்கதையின் நேர்த்தியிலும் புருவம் உயர்த்த வைக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா ஜி.தேவ். சிற்சில கிளிஷேக்கள் இருந்தாலும், சினிமா மொழியைக் கச்சிதமாகக் கையாண்டுள்ள விதத்தில்... கை கொடுங்க பாஸ்!


நெடுநெடு உயரம், விடலை உடம்பு, காதல் கொப்பளிக்கும் கண்கள் என இர்ஃபான், இந்தப் படத்துக்கு நல்ல தேர்வு. நண்பனை அடித்துவிட்டார்கள் என்றதும் நரேனின் ஆட்கள் என்று தெரியாமலே போட்டுப் பொளப்பது, போதையில் தரையில் 'மண்சோறு’ சாப்பிடுவது, எதிரியின் ஏரியாவுக்குள் நுழையும்போது எல்லாம் கண்ணில் காட்டுகிற தயக்கம் என எல்லாவற்றிலும் செம ஃபிட்.
நிறைவாகச் செய்திருக்கிறார் அருந்ததி. மஞ்சள் பற்கள், போதை யில் செருகிய கண்கள், தளர்ந்த நடை என போதை அடிமையாக வரும் காசி கேரக்டரில் செம மிரட்டு மிரட்டுகிறார் மது. ''அவன் எப்படித் தப்பிச்சான்?'' என்று கூலிப்படை நண்பனைக் கத்தியால் குத்தும் இடத்திலும், ''நான் வேலைக்கு ஆக மாட்டேன்னு நினைச்சுட்டியா?'' என்று மனைவி யைக் கொன்று சாக்குமூட்டையில் போட்டுவிட்டு அலறிக் கதறும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

 நரேனும் சரி, அவரது அடியாட்களாக வரும் ஸ்டாலினும் சென்னையின் இருட்டு ஏரியா மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலங்கள் பாலகுருநாதனின் மிரட்டும் ஒளிப்பதிவும் அச்சுவின் அதிரடிக்கும் பின்னணி இசையும்.



கதையின் முதல் பாதியில் அரை மணி நேரமும் இரண்டாம் பாதியில் அரை மணி நேரமும் சுண்டாட்டம் நொண்டி விளையாடுகிறது. அருந்ததியின் அண்ணனுக்கு அம்புட்டு பில்டப் கொடுத்துவிட்டு, கடைசியில் காமெடி பீஸ் ஆக்கிவிடுகிறார்கள். நரேனைப் போட்டுத் தள்ளுவது என்கிற அசைன்மென்ட்டை நரேனின் அடியாளுக்குக் கொடுத்துவிட்டு அடிக்கடி டென்ஷன் ஆகும் அந்த 'பாய்’ யார் பாஸ்? அவ்வளவு படைபலம் உள்ள பாய் கேரக்டரே, நரேனைப் போட்டுத் தள்ளியிருக்கலாம். 


அதே மாதிரி மிருக பலம்கொண்ட மதுவே இர்ஃபானைக் கொன்றுவிட முடியுமே? ஆளாளுக்கு அசைன்மென்ட் கொடுத்துவிட்டு ஆலாய்ப் பறக்கிறார்கள்.


கேரம் விளையாட்டு சாம்பியன்களின் உடல் மொழி, ஆடும் ஸ்டைலை நுட்பமாகப் புகுத்திய தற்கும் அழகியலுடன் படமாக்குவதற்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அதே உழைப்பைத் திரைக்கதையிலும் காட்டி இருந்தால், இன்னும் சுண்டி இழுத்திருக்கும்.

thanx - vikatan

மிரளவைத்த போலி கிரெடிட் கார்டு நெட்வொர்க்

மிரளவைத்த போலி கிரெடிட் கார்டு நெட்வொர்க்
மதுரை.. சிவகங்கை... பள்ளிக்கரணை!
போலி கிரெடிட் கார்டுகளால் மிரண்டுபோயிருக்கிறது மதுரை. நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்து​பவரா? அப்படியானால், அவசியம் படியுங்கள்... 


கடந்த 29.12.12 அன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஜி.ஆர்.டி. நகை மாளிகையில் 22 வயது மதிக்கத்தக்க ஒருவன் 20 லட்ச ரூபாய்க்கு நகை வாங்கி இருக்கிறான். மறுநாள் இன்னொருவன், 27 லட்சத்துக்கு நகை வாங்கி இருக்கிறான். அந்த இருவரும் கொடுத்த கிரெடிட் கார்டுகள் போலியானவை என்பது கேஷியருக்குத் தெரியவில்லை.


சில நாட்களுக்குப் பிறகு, வெளிநாட்டு வங்கி ஒன்றில் இருந்து உள்ளூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாக சம்பந்தப்பட்ட நகைக் கடையைத் தொடர்புகொண்டு, 'வெளி​நாட்டைச் சேர்ந்த ஒருவரது கிரெடிட் கார்டு உங்கள் கடையில் மிஸ்யூஸ் செய்யப்பட்டுள்ளது. கவனமாக இருக்கவும்’ என்று தகவல் வந்திருக்கிறது. நகைக் கடை மேனேஜர் பிரபாகரன் உடனே, மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.


சம்பவம் நடந்த நாளில் நகைக் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்து சந்தேகத்துக்கு உரிய இருவரை வட்டமிட்டு இருக்கிறது போலீஸ். குறிப்பிட்ட அந்த நபர்கள் வந்த நேரத்தில், நகைக் கடை உள்ள ஏரியாவில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பர்களின் பட்டியலை எடுத்தது. இரண்டு எண்களில் மட்டும், வேறு எந்த எண்ணுக்கும் அழைப்பு போகாமல் மாறி மாறி பேசப்பட்டு இருந்தது. 


அந்த செல்போன் நம்பரின் முகவரியில் விசாரித்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது. அந்த நம்பர் பயன்படுத்தப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்து, சில தினங்களில் அந்த நம்பரைப் பயன்படுத்திய இருவரையும் பிடித்தனர். சிக்கிய ராம்குமார், ராஜராஜேஸ்வரன் இருவரும்தான் ஜி.ஆர்.டி.யில் போலி கிரெடிட் கார்டு கொடுத்து நகை வாங்கியவர்கள் என்பது தெரிந்தது. இருவருமே மதுரை செல்லூர் ஜான்சிராணிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.


இருவரிடமும் விசாரித்தபோது, 'இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொடுத்தால், எங்களுக்கு கமிஷன் தருவதாக விளாங்குடி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணிபுரியும் மருதுபாண்டி என்பவர் கூறினார். அதன்படி செய்தோம்'' என்று கூலாகச் சொல்லி இருக்கின்றனர். அதிர்ந்த போலீஸார், மருதுபாண்டியையும், அவருக்கு உதவியாக இருந்த சதீஷ்குமார் என்பவரையும் அமுக்கிவிட்டனர்.


சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தைச் சேர்ந்த பாசில் ரகுமான் என்பவர் போலி கிரெடிட் கார்டுகளை மருதுபாண்டிக்கு சப்ளை செய்திருக்கிறார். அவரையும் பிடிக்குள் கொண்டுவந்து இருக்கிறது போலீஸ். அவரிடம் இருந்து 45 பவுன் தங்க நகையும்  காரும் பறிமுதல் செய்யப்பட்டன.


போலீஸ் விசாரணையில் பாசில் ரகுமான், ''சென்னை பர்மா பஜாரில் சைனா மொபைல் போன்களை விற்பனை செய்துவந்தேன். அப்போது, பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ப​வருடன் பழக்கம் ஏற்பட்டது. அவன்தான் எனக்கு போலி கிரெடிட் கார்டுகளை அச்சடித்துக் கொடுத்தான். எவ்வளவு பொருட்கள் வாங்கு​கிறாயோ, அதன் மதிப்பில் 25 சதவிகிதத்தை மட்டும் எனக்குக் கொடுத்தால் போதும் என்று சொன்னான். அந்த டீலிங் பிடித்திருந்ததால், இந்தத் தொழிலில் ஈடுபட்டேன். நல்ல லாபம் கிடைத்தது' என்று கூறி இருக்கிறான்.


அடுத்து, சுரேஷ்குமாரையும் அமுக்கியது போலீஸ். அவனிடம் நடத்திய விசாரணையில், 'இன்டர்நெட் மூலம் பொருட்கள் வாங்குபவர்​களிடம் இருந்து, அவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கு ஒரு டீம் இருக்கிறது. அவர்கள் திருடிய விவரங்களை என்னைப் போன்றவர்களுக்கு விற்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, நாங்கள் அந்த விவரங்களை வாங்குவோம். அந்த டேட்டாக்களை எந்தத் தகவலும் பிரின்ட் செய்யப்படாத கிரெடிட் கார்டுகளில் பதிவுசெய்வோம். கார்டின் மேல் உள்ளூர் நபர் ஒருவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பிரின்ட் செய்வோம். அட்டையின் மேல் இருக்கும் நபர் மதுரைக்காரராக இருப்பார். ஆனால், கணக்கு எண் சீனாக்காரனுடையதாக இருக்கும். நம்ம ஊர்க்காரர்களின் கணக்கில் பத்து ரூபாய் குறைந்தாலும், அதைப் பெரிய பிரச்னையாக்கிவிடுவார்கள். அதனால்தான் வெளிநாட்டுக்காரர்கள் கணக்கில் கை வைப்போம். 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், அவர்களுக்கு சில டாலர்களே குறையும். அதை அவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்'' என்று அதிர்ச்சித் தகவலைக் கக்கினான்.


மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் பேசினோம். 'போலி கிரெடிட் கார்டு தயாரித்த ஒட்டு​மொத்தக் கும்பலையும் பிடித்துவிட்டோம். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, மக்கள் உஷாராக இருக்க வேண்டும்'' என்று எச்சரித்தார்.


வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமாக அதிகமாக, பிரச்னைகளும் அதிகரிக்கவே செய்கிறது. உஷாரா இருங்க மக்களே!


- கே.கே.மகேஷ்,

படங்கள்: பா.காளிமுத்து

thanx - ju vi 

Sunday, March 17, 2013

30 வகை ஆந்திரா ரெசிபி -சமையல்கலை

னிமாவானாலும் சரி, சமையலானாலும் சரி... கலர்ஃபுல்லாக, 'சுர்ர்ர்’ என்று சுண்டி இழுப்பதுதான் ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டி! அத்தகைய ஆந்திர சமையலில் 30 ரெசிபிகளை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் சீதா சம்பத்.


 ''குண்டா பொங்கடாலு, டேட்ஸ் ஒபட்டு, ஆப்பிள் ரபடி, உண்ட்ரல்லு, பூரணம் பூரேலு, யுகாதி பச்சடி என்று வெரைட்டியான ஆந்திர ரெசிபிகளை தேடித் தேடி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளேன். இவற்றை செய்து பரிமாறினால், 'சால பாக உந்தி’ என்ற பாராட்டு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்'' என்று உறுதி கூறும் சீதாவின் ரெசிபிகளை, சிறப்பாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

30 வகை ஆந்திரா ரெசிபி
தொகுப்பு: பத்மினி; படங்கள்: எம்.உசேன்
முருங்கைக் குழம்பு


தேவையானவை: முருங்கைக்காய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பூண்டு - 4 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, சின்ன வெங்காயம் - 10, பால் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டுப் பல், மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு காய் வேகும் வரை கொதிக்கவிடவும். உடனே பாலை கலந்துவிடவும். கெட்டியானதும் தீயை நிறுத்தவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து, உப்பு போட்டு நன்கு வதக்கவும். இதை சூடான குழம்பில் சேர்க்கவும்.
இந்தக் குழம்பை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

கத்திரிக்காய் ஊறுகாய்
தேவையானவை: கத்திரிக்காய் - 500 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் - 50 கிராம், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, 'கட்’ செய்யவும்.  புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்திரிக்காயுடன் கலக்கவும். அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்... கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

வொயிட் டோக்ளா
தேவையானவை: அரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு -  கால் கப், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - கால் கப்புக்கு சற்று குறைவான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, உப்பு கலந்து, இட்லிக்கு கரைப்பது போல கரைத்து, இரவு முழுக்க மூடி வைக்கவும். மிளகு, சீரகத்தை வறுத்து தூள் செய்யவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவவும். மாவுடன் பேக்கிங் சோடா, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கலக்கவும். கரைத்து வைத்த மாவை தட்டில் அரை பாகம் வரும்படி விட்டு ஆவியில் வேக வைத்து எடுத்து, 'கட்’ செய்யவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இதனை கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

 ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பொட்டுக்கடலை - ஒரு கப், பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதேபோல, சீரகம், பொட்டுக்கடலை, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை வறுத்து, மற்ற பொருட்களுடன் கலந்து, உப்பு சேர்த்து பொடி செய்தால்... ஆந்திரா பருப்பு பொடி தயார்.
இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட... அட்டகாசமான ருசியில் இருக்கும். அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் சேர்த்துச் சாப்பிடால், சுவை கூடும்.

ஓட்ஸ்  பனானா ஸ்மூத்தி
தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், பால் - முக்கால் கப், யோகர்ட் - கால் கப், வாழைப்பழம் - ஒன்று, தேன் - 2 டீஸ்பூன், வால்நட் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: ஓட்ஸை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும்... யோகர்ட், வாழைப்பழ துண்டுகள், தேன், கொஞ்சம் பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்கவும். எடுத்த கலவையை கண்ணாடி கிளாஸில் விட்டு, மீதம் உள்ள பால் விட்டு கலக்கவும். வால்நட்ஸை மேலே தூவிவிடவும்.

மூளி சப்ஜி
தேவையானவை: முள்ளங்கி துண்டுகள் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சீரகத்தை சேர்த்து, பொரிந்ததும், எள் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு... வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, வெந்து வரும்போது முள்ளங்கி துண்டுகள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் போட்டுக் கலந்து வதக்கவும். லேசாக தண்ணீர் தெளித்துக் கிளறவும். முள்ளங்கி வெந்ததும் இறக்கவும்.

தக்காளி  பருப்பு ரசம்
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 4, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, தண்ணீர் - 5 கப்,  ரசப்பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை சுத்தம் செய்து, வேக வைத்து மசித்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தக்காளி, பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்து எடுக்கவும். கடாயில் 3 கப் தண்ணீர் விட்டு, அரைத்த தக்காளி விழுது, புளிக் கரைசல், உப்பு, ரசப்பொடி, மஞ்சள்தூள் போட்டு, கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்புக் கரைசல் சேர்த்து நுரைத்து வரும்போது தீயை நிறுத்திவிடவும். கடாயில் நெய் விட்டு காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

வெந்தையக்கீரை தொக்கு
தேவையானவை: வெந்தயக்கீரை இலை - 2 கப், தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் சேர்த்து பொரியவிடவும். இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். வெந்து வரும் சமயம் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறவும். இதில் சுத்தம் செய்த கீரையைப் போட்டு சுருள வதக்கி எடுக்கவும். நன்கு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடானதும், அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாக சுருளக் கிளறி எடுக்கவும்.

படோலி
தேவையானவை: அவரைக்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, துருவிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் அரைத்த விழுதை கொட்டிக் கிளறவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து கடாயை மூடி வைக்கவும். 3 நிமிடத்துக்கு ஒரு முறை மூடியைத் திறந்து, கிளறிக் கொள்ளவும். நன்கு வெந்து வந்ததும் (கையில் ஒட்டாத பதம்)... நறுக்கி, வேக வைத்து, வதக்கிய அவரையை சேர்த்துக் கலக்கவும். ஒன்றாக சூடுபட வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கலந்தால்... படோலி ரெடி.

சிலகாடா ஸ்வீட்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ, பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து, வேக வைத்து, ஆறியதும் வட்ட வடிவில் 'கட்’ செய்யவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து  கரைய விட்டு, கம்பி பதத்தில் பாகு தயார் செய்து, வள்ளிக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டு கலக்கவும். ஏலக்காய்த்தூள், நெய் விட்டுக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதை ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

பெசரபப்பு கீர்
தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், பால் - 3 கப், நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், கோவா (சர்க்கரை இல்லாதது) - ஒரு கப், முந்திரித் துண்டுகள், திராட்சை இரண்டும் சேர்த்து - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பயத்தம்பருப்பை சுத்தம் செய்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து, ஒரு கப் பால் விட்டு வேக வைத்து எடுத்து, கரண்டியால் மசித்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை, கோவா கலந்து, மீதமுள்ள பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, கீர் போன்ற பதத்துக்கு வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரித் துண்டுகள், திராட்சையை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

பாலக்  - லைம் தால்
தேவையானவை: பாலக் (பசலைக் கீரை) - ஒரு கட்டு, துவரம்பருப்பு - கால் கப், வெங்காயம், எலுமிச்சம் பழம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 5 (அல்லது விருப்பத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு - 2 பல் , எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாலக், வெங்காயம், பச்சை மிளகாயை சுத்தம் செய்து, நறுக்கி, துவரம்பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் கலந்து மத்தால் கடைந்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், நசுக்கிய பூண்டு தாளித்து, பருப்புக் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

மாங்காய் புளியோதரை
தேவையானவை: மாங்காய் - ஒன்று, பச்சரிசி சாதம் - 3 கப்,  காய்ந்த மிளகாய் -  4, பச்சை மிளகாய் - 2, கடுகு,  சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள்,
மஞ்சள் தூள் தாளித்து, பச்சை மிளகாயை நீளவாட்டில் நறுக்கிப் போட்டு புரட்டவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, வறுத்து வைத்திருக்கும் பொருட்களை கலக்கவும். இதை அப்படியே சாதத்தில் சேர்த்து, மாங்காய் துருவல் போட்டு லேசாக கலக்கவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மூடி வைத்து, பின்பு பரிமாறவும்.

சூஜி லாடு
தேவையானவை: ரவை - ஒரு கப், தேங்காய் கொப்பரை - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், பால் (அ) நீர் - 25 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, வறுத்த திராட்சை - 30.
செய்முறை: கொப்பரையை துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு முந்திரி துண்டுகள், திராட்சையை வறுக்கவும். இதனுடன் ரவையை சேர்த்து வறுக்கவும். பிறகு கொப்பரைத் துருவலையும் கலந்து, அடுப்பை குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். காய்ச்சிய பால் (அ) சுடுநீர் விட்டுக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: பால் விட்டு தயாரித்தால், ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். சுடுநீர் விட்டு உருண்டை பிடித்தால் நாள் பட இருக்கும்.

குண்டா பொங்கடாலு
தேவையானவை: அரிசி - 2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா கால் கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளைச் சுத்தம் செய்து, ஒன்று சேர்த்து 6 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். இஞ்சி - பச்சை மிளகாயை அரைத்து அதில் கலக்கவும் (பொடியாக நறுக்கியும் போடலாம்). கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், சீரகம் சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மூடி வைக்கவும். குழிப்பணியார சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை எடுத்து  விடவும். வெந்ததும் திருப்பிவிடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்தால்... குண்டா பொங்கடாலு தயார்.
சட்னி, தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

டேட்ஸ் ஒபட்டு
தேவையானவை: மைதா - ஒரு கப், விதையில்லாத பேரீச்சம் பழம் - ஒரு கப், வெல்லம் - சிறிய எலுமிச்சம்பழ அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை, பாதாம், - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.  
செய்முறை: மைதா, உப்பு, எண் ணெயைச் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். பேரீச்சம்பழத்தை ஆவியில் வேக வைத்து மசிக்கவும். வெல்லத்தை தூளாக்கி, மசித்த பேரீச்சம்பழத்துடன் கலந்து, கடாயில் சேர்த்து, அடுப்பில் வைத்து, கெட்டியாக கிளறவும். இதில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பூரணமாக தயாரித்து, ஏலக்காய்த்தூள் சேர்த் துக் கலந்து எடுத்து வைக்கவும்.
பிசைந்து வைத்த மாவில் எலுமிச்ச பழ அளவு எடுத்து சிறிய சப்பாத்தி போல இட்டு அதன் மீது 2 டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து மூடி மீண்டும் தட்டி, சூடான தவாவில் போட்டு,  வெந்ததும் திருப்பி போட்டு நெய் தடவி எடுத்தால்... டேட்ஸ் ஒபட்டு தயார். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தேங்காய் -  கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து அரைத்து எடுக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).

சுரைக்காய் பூரேலு
தேவையானவை: சுரைக்காய் துருவல் - 2 கப், அரிசி மாவு - 5 கப், பச்சை மிளகாய் - 5 (அ) 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் (அ) அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் துண்டுகளாக்கி அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், சீரகம், சுரைக்காய் துருவல், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து, அரிசி மாவை தூவி நன்கு கலக்கவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது). இந்த கலவையை சிறு உருண்டைகளாக செய்து ஈரத்துணியில் உருண்டையை வைத்து தட்டி, காயும் எண்ணெயில் போட்டு சிவந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவும். இதனை பேப்பர் டவலில் வைத்து எடுத்தால், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும்.

தக்காளி -  கத்திரிக்காய் கறி
தேவையானவை: வயலட் கத்திரிக்காய் - 6, கடுகு, சீரகம், - தலா அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், தக்காளி - 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் மூன்றையும் நீள வாட்டில் நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து, வறுபட்டதும் நறுக்கிய வெங்காய துண்டுகள் சேர்த்து, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல வந்ததும் மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கவும். கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு கலந்து 2 நிமிடம் மூடிவைக்கவும். உடனே திறந்து தக்காளி துண்டுகள் போட்டு கலந்து வேக வைத்தால். கிரேவியாக வந்து இருக்கும். கிரேவி திக்கானதும் தீயை நிறுத்திவிடவும். வேறு பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இது... தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது.

 பியம் பாயசம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - 3 கப், நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், சர்க்கரை இல்லாத கோவா - அரை கப், முந்திரி, திராட்சை - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாலை நன்கு காய்ச்சவும். கழுவிய அரிசியை சேர்த்துக் கலந்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். பிறகு, கோவாவையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்தால்... பியம் பாயசம் தயார்.
இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.

ஆந்திரா முறுக்கு
தேவையானவை: அரிசி - ஒரு கிலோ, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா 100 கிராம், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 25 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளை தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் வடித்து துணியில் நிழல் உலர்த்தலாக காய வைக்கவும். கடாயை சூடு செய்து... அரிசி, பருப்பை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகக் கலந்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும். இந்த மாவில், நெய், பெருங்காயத்தூள், உப்பு கலந்து, தண்ணீர் விட்டுப் பிசையவும். இதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து நீள வாட்டில் உருட்டி முனைகளை ஒட்டி 'ரிங்’ வடிவில் செய்து, காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் (முறுக்கு அச்சில் போட்டும் பொரித்தெடுக்கலாம்).  
குறிப்பு: இந்த மாவையே பகோடா, ஓமப்பொடி, ரிப்பன் பகோடா செய்யவும் பயன்படுத்தலாம்.

பூரணம் பூரேலு
தேவையானவை: அரிசி - 3 கப், கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறுப்பு உளுத்தம் பருப்பை அரிசியுடன் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கால் கப் சர்க்கரையை கலக்கவும். பயத்தம்பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து கெட்டியாக அரைத்து எடுத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். இத்துடன் மீதமுள்ள சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் கலந்து நன்கு பிசைந்து உருண்டைகளாக  உருட்டவும். உருண்டைகளை அரிசி - உளுத்தம்பருப்பு மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடவும். வெந்ததும் திருப்பிவிடவும். பொன்னிறமாக வெந்ததும், எண்ணெய் வடித்து எடுக்கவும்.

தொண்டைக்காய் கறி
தேவையானவை: கோவைக்காய் - 20, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். வெங்காய துண்டுகளையும் போட்டு ஒரு சுற்றி சுற்றி எடுக்கவும். கோவைக்காய் துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, கடாயில் போட்டு, எண்ணெய் விட்டு வதக்கவும். வெந்து வரும் சமயத்தில், வெங்காய கலவையை கோவைக்காயுடன் சேர்த்துக் கிளறி, நல்ல வாசனையுடன் சேர்ந்தாற்போல வந்ததும் எடுக்கவும்.

யுகாதி பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - கால் கப், புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், பச்சை மாங்காய் (துருவியது) - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை ஊற வைத்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து எடுக்கவும். அதில் வெல்லத்தூளை போட்டு கரைக்கவும். இதனுடன் வேப்பம்பூ, துருவிய மாங்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கரை சலை கொதிக்கவிட்டு திக்காக இருக்கும் பதம் பார்த்து இறக்கினால்... உகாதி பச்சடி தயார்.

ஆப்பிள் ரபடி
தேவையானவை: ஆப்பிள் - 2, பால் - அரை லிட்டர், சர்க்கரை - ஒரு கப், பாதம் - 10 (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாலை நன்கு காய்ச்சி வைக்கவும். ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறி... சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும். திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.

 கார்ன் ஃப்ளேக்ஸ் -  பிஸ்கட் மிக்ஸர்
தேவையானவை: கார்ன் ஃப்ளேக்ஸ் - 250 கிராம், குட்டியான உப்பு மற்றும் ஸ்வீட் பிஸ்கட்  இரண்டும் சேர்த்து - 100 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், முந்திரி - 3 டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையானது.
செய்முறை: சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கார்ன் ஃப்ளேக்ஸை பொரித்து டிஷ்யூ பேப்பரில் போடவும் (எண்ணெயை உறிஞ்சிவிடும்). பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள்தூள்,  சர்க்கரைப் பொடியைக் கலக்கவும். வேர்க்கடலை, முந்திரி, திராட்சை தனித்தனியாக வறுத்து கலக்கவும். கறிவேப்பிலையை வறுத்து சேர்க்கவும். பிஸ்கட்களையும் சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே மிளகாய்த்தூளை கலக்கவும். கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ரெடி.

கலாகந்த்
தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சவும். இதனுடன் எலுமிச்சைச் சாறை கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும். 10 நிமிடத்தில் பால் திரிந்து நிற்கும். அதிலிருந்து பனீரை வடிகட்டி எடுக்கவும்.
மீதி ஒரு லிட்டர் பாலை, பாதியாக சுண்டும் அளவு காய்ச்சவும். பனீரை உதிர்த்து பாலுடன் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இது சுண்டி அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து... நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டு பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கவும்.

 மசாலா இட்லி
தேவையானவை: இட்லி - 4, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளாகாயை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்துள், உப்பு, துண்டு இட்லிகள் சேர்த்துக் கிளறி... ஒரு நிமிடம் மூடி வைத்துக் கிளறி பரிமாறவும்.

உண்ட்ரல்லு
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், தண்ணீர் - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சூடானதும் சீரகத்தை வறுத்து, தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும்போது உப்பு, கடலைப்பருப்பை சேர்க்கவும். இதில் அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, கட்டி தட்டாமல் கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் நெய் தடவிக் கொண்டு கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டினால்... உண்டரல்லு தயார்.
இதனை விநாயக சதுர்த்தி அன்று, விநாயகருக்கு  படைப்பார்கள்.

பயறு சட்னி
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒன்றை டீஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பயறை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெறும் கடாயில் சீரகம், மிளகாயை வறுத்துப் பொடி செய்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்த பயறை தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு, சீரகம் - மிளகாய் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால்... பயறு சட்னி தயார்.
இதை டிபன் அயிட்டங்களுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

thanx- vikatan