Monday, March 11, 2013

பாரம்பரிய நெல் ரகங்கள்.


நெல்லின் நேசர்

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

சிவப்புக் குடவாழை. வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக் குறுவை..."
போதும்... நிறுத்துங்க! இதெல்லாம் என்னங்க?"
இதெல்லாம் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள். இதுபோன்று நம்ம மண்ணுல வெளைஞ்சிட்டு இருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கொண்டு போய்ட்டாங்க. இன்னைக்கு நம்ம சமகால விவசாயிகளுக்கு இதோட பெருமையும் தெரியலை. அருமையும் புரியலை. கடந்த ஏழெட்டு வருஷமாய்ப் போராடி சுமார் 63 வகையான நம்ம பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டுபிடிச்சு பரவலாக்கியிருக்கோம்!" என்கிறார்நெல்லின் நேசர்ஆன ஜெயராமன்.
நமது நெல்லைக் காப்போம்என்கிற பிரசார இயக்கத்தின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அவர். பாரம்பரிய நெல் வகைகள் குறித்தும் இயற்கை வேளாண்மை பற்றியும் ஆய்வாளருக்குரிய தகவல்களுடன் படபடவெனப் பேசும் அவர் அதிகம் படித்தவரில்லை. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமம். பூர்விக விவசாயக் குடும்பம். அப்பா விவசாயி. கடனாளியானதுதான் மிச்சம். அவர் தம் காலத்திலேயே நிலங்களை விற்று விட, பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த ஜெயராமன், அச்சாபீஸ் வேலைக்குப் போய் விட்டார்.
அந்த நேரத்துல சுவாமி மலைக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்தாரு. அவரோட பேச்சு என்னில ரொம்பவே ஈர்த்துச்சு. அப்புறம் என்ன? அச்சக வேலைக்கு குட்பை சொல்லிட்டு, வேளாண் தொழிலுக்கு நேரா வந்துட்டேன். 2005 கேரளாவின் வயநாடு மாவட்டத்துல கும்பளங்கி கிராமத்துலதணல்அமைப்பு சார்பாநமது நெல்லைக் காப்போம்கருத்தரங்கு.
மலையாளிங்க தங்களோட பாரம்பரிய நெல் ரகங்களைப் பத்தி ரொம்பவே பேசினாங்க. எனக்கு அப்பத்தான் பொடனியில யாரோ பொடேர்னு அடிச்ச மாதிரி இருந்திச்சு. அப்ப... தமிழ்நாட்டுல நம்பளோட பாரம்பரிய நெல் ரகங்கள்லாம் என்னாச்சு? எங்கே போச்சுன்னு ஒரு தேடல் எனக்கு அன்னையிலேர்ந்தே தொடங்கிடிச்சு!" கதிரிலிருந்து உதிரும் நெல்மணிகளைப் போல சொற்களை உதிர்க்கிறார் ஜெயராமன்.

தமிழ்நாடு முழுவதும் சுத்தித் திரிஞ்சேன். பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்கிற விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடிச்சேன். அவுங்கள்ட்ட கையேந்தினேன். அவுங்க தர்ற நெல்லைக் கொண்டாந்து எங்க ஆராய்ச்சி மைய வயல்ல விதைப்பேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கி கோட்டை போலக் குவிச்சி வெச்சுக்குவேன்!" என்பவரை ரொம்பவே சிரமப்பட்டிருக்கீங்க போல..." என இடைமறித்தோம்.
நெல்லுல பலவகை இருக்கு இல்லே. அதுபோல அந்தந்த மண்ணுக்கு அந்தந்த நெல்லுனு இருக்கு. ஒரு தபா பனங்காட்டுக் குடவாழை நெல் தேடி அலைஞ்சேன். அது கடலோரப் பகுதி நிலத்துல விளையுற நெல். வேதாரண்யம் ஏரியாவுல அது விதைச்சிருந்த விவசாயியைக் கண்டுபுடிச்சிட்டேன். வெவரம் சொல்லி நெல்லு கேட்டேன். அவுரு தர மாட்டேன்னுட்டாரு. நான் சளைக்கலை. தொடர்ந்து அஞ்சாறு தபா அவுர்ட்ட அலைஞ்சேன். நெல்லெல்லாம் கிடையாதுன்னுட்டு ரெண்டு பிடி நாத்து மட்டும் தந்தாரு. அதை நட்டு பனங்காட்டுக் குடவாழை நெல் விதையினைச் சேர்க்கத் தொடங்கினேன். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்ட நெல் ரகம்ங்க அது. காய்ச்சல் கண்டவங்களுக்கு பனங்காட்டுக் குடவாழை அரிசியில் கஞ்சி வெச்சுத் தொடர்ந்து குடுத்து வந்தா மளமளன்னு காய்ச்சல் கொறைஞ்சுடும்ங்க!" என்று திடீரென உணவு முறை வைத்தியராக மாறுகிறார் ஜெயராமன்.
பாரம்பரிய நெல் ரகங்கள்ல ஒவ்வொண்ணும் பலவித நோய்களுக்கான அருமருந்து. மாப்பிள்ளைச் சம்பானு ஒரு ரகம். அந்த அரிசிச் சோறு தின்னா சர்க்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை. சிவப்புக் கவுனி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை அரிசி யானைக்கால் நோயைக் குணப்படுத்தும். பால்குட வாழை அரிசி சமைச்சி சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச் சம்பா நெல்லுனு ஒண்ணு இருந்திச்சு. அதனை தங்க பஸ்பம்னே சொல்வாங்க. இதையெல்லாம் பறி கொடுத்துவிட்டு வெறும் சக்கையை விளைவிச்சுட்டு இருக்கோம்!" என்று ஆதங்கப்படுகிறார். அவர் சொல்லிச் செல்லும் நெல் ரகங்களின் பெயர்ப் பட்டியல் மேன்மேலும் நீள்கிறது.

அறுபது நாள் சாகுபடியிலிருந்து நூற்றியெண்பது நாள் சாகுபடி வரைக்குமாக சுமார் நூற்றுக்குட்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை இவர் சேமித்து வைத்திருக்கிறார். அதற்கென ஒரு வங்கியும் இயங்கி வருகிறது.
செம்மை நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)யில் ஒரே ஒரு தூரில் விளைந்த நெல் மணிகளை மட்டும் அதற்கான கதிருடன் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார் நம்மிடம். தூயமல்லி நெல் ரகம் அது. ஒரு தூரில் 113 கதிர்கள்! சீரக சம்பா, வாசனை சீரக சம்பானு ரெண்டு வகை நெல்.
இதுல வாசனை சீரக சம்பா நெல் வயல்ல பூக்கும் போதும் சரி, அந்த அரிசியை வீட்டில் சமைக்கும் போதும் சரி, சும்மா சீரக வாசனை கும்முனு தூக்கியடிக்குமாம்!
திருத்துறைப்பூண்டி, ஆதிரெங்கம் கிராம ஆய்வுப் பண்ணையில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்நெல் திருவிழாநடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமாக சுமார் இரண்டாயிரம் விவசாயிகள் வந்து செல்கின்றனர். எந்தப் பாரம்பரிய விதை நெல்லினை இங்கு வந்து பெற்றுச் சென்றாலும், அந்த விவசாயி அதன் அறுவடைக்குப் பின்னர் இரண்டு மடங்கு விதை நெல்லினை சமூகக் கடமையாக இங்கு கொண்டு வந்து திருப்பிச் செலுத்த வேண்டும்.


THANX - KALKI

ஆதார் அடையாள அட்டை - மத்திய அரசின் சதியா?

ஆதார்... உரிமைகள் உறிஞ்சும் 'அட்டை'!

பாரதி தம்பி

ஆதார் என்பது அடையாள அட்டை அல்ல; அது வெறும் குறியீட்டு எண் மட்டுமே'' என்கிறார் திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா. ''அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அது அடையாள அட்டை இல்லை. ஆதார் என்பது ஓர் ஆள்காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் சட்டத்துக்கே விரோதமானது'' என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.


நாடு முழுவதும் 'பயோமெட்ரிக் அடையாள அட்டை’ எனப்படும் ஆதார் அட்டைகுறித்துக் கடும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை சுமார் 24 கோடிப் பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ஆதார்குறித்து தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை.



 அதை ஏதோ ரகசிய நடவடிக்கைபோலவே மறைத்து மறைத்துச் செய்கிறார்கள். நந்தன் நீல்கேணியைத் தலைவராகக்கொண்ட UIDAI -(Unique Identification Authority of India) என்ற அமைப்புதான் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இது அரசாங்கத்தின் அங்கம் அல்ல; தனியார் ஏஜென்ஸி. பொதுவாக, இதுபோன்ற பிரமாண்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு, அதன் பிறகுதான் நடைமுறைப்படுத்தப் படும். ஆதார் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. 'இன்ஃபோசிஸ்’ நந்தன் நீல்கேணியை 'ஆதார்’ சேர்மனாக பிரதமரே நேரடியாக நியமித்தார். விறுவிறுவெனக் கணக்கெடுப்பு தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது.



'ஆதார் வந்துவிட்டால் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் அனைத்தும், நேரடியாகவே மக்களின் வங்கிக் கணக்கில் பணமாகவே சென்று சேர்ந்துவிடும்’ என்பதுதான் ஆதார் அட்டையைப் பற்றிச் சிலாகித்துச் சொல்பவர்களின் முக்கிய வாதம். 'உங்கள் பணம், உங்கள் கையில்’ என்று கவர்ச்சிகரமாக விளம்பரமும் செய்கின்றனர்.


 ஆனால், உண்மை என்ன? அரசாங்கம் பொதுமக்களுக்கு மானிய விலையில் பொருட்களாக வழங்கினால், அது மக்களுக்குப் பயன்படும். மானியத்தொகையை மட்டும் தருகிறோம் என்றால், என்ன அர்த்தம்? இப்போது ஒரு குடும்பத்துக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 30 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. 'இனி மேல் மாதா மாதம் அந்த 30 கிலோ அரிசிக்கான மானியத்தைத் தந்துவிடுகிறோம். விரும்பும் அரிசியை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்கிறது அரசு. மானியத்தை வைத்துக்கொண்டு சந்தை விலையில் எதையும் வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.  


அரிசி மட்டுமல்ல... கேஸ் சிலிண்டர், விவசாயம், கல்வி, சுகாதாரம் என ஒரு குடும்பத்துக்கு அரசு வழங்கும் அனைத்துவகையான மானியங்களை யும் பணமாகக் கணக்கிட்டுத் தரப்போகிறார்கள். மீதிப் பணத்தைப் போட்டு நாம் சந்தை விலையில் அந்தப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். 'ஊழல் இல்லாமல் முழு மானியமும் மக்களுக்குக் கிடைக்கும்’ என்கிறார்கள். அது கிடைக்குமா,


கிடைக்காதா என்பது ஒரு பக்கம் இருக் கட்டும். ஆனால், இதுவரை மக்கள் மானிய விலையில் பெற்றுவந்த பொருட்களை எப்படி சந்தை விலை கொடுத்து வாங்க முடியும்? கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் தந்துவிட்டு, ஒரு சிலிண்டர் மார்க்கெட்டில் 1,000 ரூபாய் என்று விலை உயர்த்திவிட்டால் என்ன செய்வது? அப்படி விலை உயராது என்பதற்கு, அரசாங்கத் திடம் எந்த உத்தரவாதமும் இல்லை. சொல்லப்போனால் இந்த 'மானியங்கள் கட்’ நடவடிக்கையே பொருட்களின் விலை உயர்வுக்கான ஆரம்பகட்ட வேலை என்று கணிக்கிறார்கள் அரசியல் பொருளாதார நிபுணர்கள்.



'ஆதார் அட்டை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று சென்னை நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடுத்தார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜு. மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகா வைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஆதாருக்குத் தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்க, அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சுப்ரீம் கோர்ட். சென்னை வழக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றலாகியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கறிஞர் ராஜுவிடம் பேசினோம்.


''மானியங்களை ரத்து செய்யச் சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள், மன்மோகன் சிங்குக்கும் ப.சிதம்பரத் துக்கும் நெருக்கடி கொடுக்கின்றன. பொது விநியோக முறை என்பதையே ஒழித்துக்கட்டினால்தானே வால்மார்ட்டின் கல்லா நிறையும்? பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாச அடிமையாக இருக்க விரும்பும் காங்கிரஸ் அரசு, படிப்படியாக ஓர் அரசாங் கத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்கிறது. இதுதான் இதில் உள்ள உண்மையான அபாயம். மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதைவிட, ஓர் அரசுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்? 'மானிய விலைப் பொருட்களுக்குப் பதில் பணம்’ என்ற இந்தத் திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வந்தால், நாட்டில் ரேஷன் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்படும். ரேஷன் அரிசி இல்லை எனில், நெல் கொள்முதலும் தனியார்வசம் அளிக்கப்படும். உணவுத் தானியங்களை வாங்கிப் பதுக்கி செயற்கை யான தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் பார்ப்பார் கள். மிகைப்படுத்திச் சொல்லவில்லை... இந்தப் பாதையில் பயணித்தால், இலக்கு அதுவாகத்தான் இருக்கும்.





 இன்னோர் உண்மை, இந்த அரசு இத்துடன் நிற்கப்போவது இல்லை. ரேஷன் கடை களைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகள் மூடப் படும். அதற்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு, 'முடிந்த இடத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்பார் கள். கல்வி மானியம், விவசாய மானியம் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டால் நாட்டின் பெரும்பான்மை யினராகிய ஏழை மக்கள் எப்படி வாழ்வது? சாதாரண மக்களை வஞ்சிக்கும் இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குகின் றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசு பெரும் நிறுவனங்களுக்கு வழங்கிய மானியத் தொகையின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்!'' என்று மிரளவைக்கிறார் ராஜு.



இன்னொரு பக்கம், 'பயோமெட்ரிக் அடையாள அட்டை’ என்ற இந்தத் திட்டம், பல வகையான அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அனைத்தும் அடங்கிய ஒரே அட்டை வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் ஏற்கெனவே அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் முயற்சிக்கப்பட்டு இருக்கிறது. நடைமுறைத் தோல்வி காரணமாக இந்த நாடுகள் இதை நிறுத்திவிட்டன. ''குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்த நாடுகளிலேயே முடியவில்லை என்றால், 132 கோடி மக்களைக்கொண்ட இந்தியாவில் இதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது சாத்தியமே இல்லை'' என்பதுதான் நிபுணர்களின் வாதம்.  



''ஆதார் அட்டைக்காக 10 விரல் ரேகைகளை யும் கருவிழியையும் பதிவுசெய்கிறார்கள். ஒரு குற்றவாளியின் கைரேகை, கருவிழியை விசாரணை நோக்கத்துக்காகப் பதிவுசெய்வதாக இருந்தாலே, நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். அதுவும் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் மட்டும்தான் எடுக்க முடியும். சாதாரணமாக நான் உங்கள் கருவிழி ரேகையைப் பதிவுசெய்தால், அது தண்டனைக்குரிய குற்றம். 



ஆனால், இவர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் அனைத்து மக்களின் கை ரேகையையும், கருவிழியையும் பதிவுசெய்கின்றனர். கேட்டால் உரிய பதிலைச் சொல்லாமல், 'ஆதார் அட்டை வாங்குவது கட்டாயம் இல்லை. அது மக்களின் விருப்பம்தான்’ என்று பம்முகின்றனர். அப்படிச் சொல்கிறார்களே தவிர, வங்கியின் சில சேவைகள், பல்வேறு வகையான உதவித்தொகைகள், பிராவிடன்ட் ஃபண்ட் எடுப்பது போன்றவற்றுக்கு ஆதார் கேட்கின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டைக்கான தேவையை உருவாக்கி, மக்கள் தாங்களாகவே வாங்கும்படி நிர்பந்திக்கிறார்கள்.



இத்தனை கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்களை ஒரு தனியார் நிறுவனம் சேகரிப்பது இந்த நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் ஆபத்து. 'அரசாங்கம் கேட்டுக்கொள்ளாமல், நீதிமன்றம் அனுமதிக்காமல், நாங்கள் இந்த விவரங்களை வேறு யாருக்கும் வழங்க மாட்டோம்’ என்று நந்தன் நீல்கேணி சொல்கிறார். ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இந்திய மிடில்கிளாஸ் மக்கள் 'ஆதார் அட்டையை’ ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் என நினைத்து வாங்குகிறார்கள். இதன் பிரமாண்ட அபாயத்தை மக்களால் இப்போது கற்பனை செய்து பார்க்க முடியாது. வால்மார்ட் வருகிறான் என்றால், 'விலை கம்மியா இருக்கும்’ என்றுதானே நினைக்கிறார்கள். சந்தையைக் கைப்பற்றி, பிறகு ஏகபோகமாக மாறுவான் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லையே... அதுபோலவே, இந்த ஆதார் என்பது நம்மை இடைவிடாமல் கண்காணிக்கும் உளவாளியாக மாறப்போகிறது. யாரும் எதையும் தன்னிச்சையாகச் செய்துவிட முடியாது. ரகசியம் என்று எதுவும் இருக்காது'' என்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சுரேஷ்.



மறுபுறம் காங்கிரஸ் அரசு ஆதார் அட்டையை வேகவேகமாகக் கொண்டுவருவதற்குக் காரணம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல். அண்மையில், ''காங்கிரஸுக்கு 2014 தேர்தல்பற்றிக் கவலை இல்லை. 'உங்கள் பணம்... உங்கள் கையில்’ திட்டம் இருக்கிறது!'' என்று வெளிப்படையாகவே சொன்னார் ராகுல் காந்தி. அதாவது, இதுவரை ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை மறைத்து மறைத்து செய்துவந்த ஆளும் கட்சி, இனி மேல் கம்பீரமாக அரசாங்கச் செலவிலேயே லஞ்சம் கொடுக்கலாம். இது 'கொள்கை முடிவு’ என்பதால் நீதிமன்றமும் தலையிட முடியாது.



உங்கள் சட்டைப் பையில் வாக்காளர் அடையாள அட்டை முதல், ஏ.டி.எம். அட்டை வரையிலான பலவித அட்டைகளோடு இனி ஆதாரும் இருக்கலாம். ஆனால், 'ஆதார் அட்டை’ வெறும் பத்தோடு பதினொன்று அல்ல; அது உங்கள் ஜனநாயக உரிமைகளை, தனி மனிதச் சுதந்திரத்தை உறிஞ்சப்போகும் 'அட்டை’!



நன்றி - விகடன் 

Sunday, March 10, 2013

அழகிரிக்கு அஸ்தம காலமா? ஆனந்த விகடன் அலசல்

அவஸ்தை காலம் ஆரம்பித்துவிட்டது அழகிரிக்கு!

 தி.மு.க. தலைவரின் மகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர், மத்திய அமைச்சர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, ஏழு தென் மாவட்டங்களில் அவர் வாக்குதான் வேதம், விரும்பியவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தாரைவார்ப்பார், அவருக்கு ஒன்று என்றால், உயிரைக் கொடுப்பதற்கு மதுரை வட்டாரத்தில் பெரும் படையே இருக்கிறது, கட்சித் தலைவர் போட்டியில் அவருக்கு தாய் தயாளுவின் ஆதரவு, ஸ்டாலினைப் பிடிக்காத முக்கியஸ்தர்கள் அனைவரும் இவரது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்... என்று உச்சி முகர்ந்து சொல்லப்பட்ட அழகிரி, இப்போது காற்று அடங்கிய பலூன் மாதிரி கம்மென்று கிடக்கிறார்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் அழகிரி. 'தலைவரின் மகன்’ என்ற ஒற்றைத் தகுதியுடன் அவர் எதிர்பார்த்த மகுடம், ஸ்டாலின் தலைக்குச் சென்றுவிட்டது. தென் மண்டல அமைப்புச் செயலாளரை, தென் மாவட்டத்து மாவட்டச் செயலாளர்களே மதிப்பது இல்லை. தி.மு.க-வில் அவர் பேச்சைக் கேட்டுவிட்டு, இப்போது எதுவும் செய்யப்படுவது இல்லை. மாநிலத்தில் ஆட்சி போனதால், மதுரை வட்டாரத்தில் லாபம் எதிர்பார்க்கும் கட்சிப் புள்ளிகள் கரைய ஆரம்பித்துவிட்டார்கள்.


 நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாததால் அங்கும் அவருக்கு நல்ல அறிமுகம் இல்லை. தயாளு, இவரை ஆதரித்துச் செயல்படும் அளவுக்கு ஆரோக்கியமான உடல்நிலையில் இல்லை. 'தலைமைக்கான தேர்தல் வந்து போட்டி வந்தால், நான் ஸ்டாலின் பெயரைத்தான் வழி மொழிவேன்’ என்று கருணாநிதியே சொன்ன பிறகு, ஸ்டாலினைப் பகைப்பவர்கள்கூட வலியப்போய் அவரிடம் சிரிப்பைப் பதிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாக் கஷ்டமும் சொல்லிவைத்தது மாதிரி ஒரே சமயத்தில் அழகிரியைத் தாக்கும் என்பது யாரும் எதிர்பாராதது!


இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அழகிரி மட்டுமே அனைத் துக்கும் காரணம். கருணாநிதியின் மூத்த மகனாக, கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக, மத்திய அமைச்சராக... ஏதேனும் ஒரு பொறுப்பிலேனும் புலிப் பாய்ச் சல் காட்டியிருக்கிறாரா அழகிரி?


கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார் தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம். அழகிரிக்கென இப்போது இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். ஆனால், தான் கேட்ட கேள்வி தனது கட்சித் தலைவரின் மகனையே பதம் பார்க்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். உர மானியத்தில் 5,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக பரபரத்த விவாதத்தின்போது கே.பி.ராமலிங்கம் கேட்ட ஒரு கேள்விக்கு, ரசாயனம், உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா எழுந்து பதில் சொல்ல முற்பட்டார். 




அவ்வளவுதான்... பா.ஜ.க-வின் வெங்கய்ய நாயுடு பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார். ''எவ்வளவு பெரிய விவாதம் இங்கு நடக்கிறது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய துறையின் அமைச்சர் எங்கே? அவர் எப்போதுமே அவையில் இருப்பது இல்லை. எல்லாவற்றுக்கும் இணை அமைச்சரே பதில் சொல்வதாக இருந்தால், அழகிரிக்கு எதற்கு அமைச்சர் பதவி? மொத்தத்தில் அவரது போக்கு சரியில்லை'' என்று பொரிந்துதள்ள... மொத்த பா.ஜ.க. உறுப்பினர்களும் அழகிரிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.



 மத்திய அமைச்சரவையில் அழகிரியின் மீதான அதிருப்தி ஒன்றும் புதிய விஷயம் அல்ல; பல முறை பிரதமரே அழகிரியின் ஆப்சென்ட்டால் அப்செட் ஆகி இருக்கிறார். நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும், மணிக்கணக்கில் பேச வேண்டும், பதிலுக்குப் பதிலடி தர வேண்டும் என்று அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், சபையில் பங்கேற்க வேண்டும், தேவையான பதில்களையாவது தர வேண்டும். அதுவும் முடியாவிட்டால், 'எழுத்துபூர்வமாகப் பின்னர் பதில் தருவேன்’ என்று சொல்ல வேண்டும். இவை எதையுமே அழகிரி பின்பற்றவில்லை என்ற ஆதங்கம் பிரதமருக்கு இருக்கிறது.


மத்திய அமைச்சர் பதவி என்பது அழகிரியின் அரசியல் எதிர்காலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஆனால், அந்த வல்லமை மிகுந்த வாய்ப்பை அழகிரி தவறவிட்டுக்கொண்டே இருக்கிறார். தி.மு.க-வின் மற்ற எம்.பி-க்கள் பிரதமரையும், சோனியாவையும், ராகுலையும் சகஜமாகச் சந்திக்க முடிகிறது. ஆனால், அழகிரியால் மட்டும் முடியவே இல்லை. கேட்டால், 'மொழிப் பிரச்னை’ என்கிறார்கள்.

 தி.நகரில் சாதாரண வியாபாரியாக இருந்த பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி ஆங்கிலமும் இந்தியுமா பேசி அவ்வளவு ரயில்வே திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார்? லாலுபிரசாத் யாதவ் கொச்சை ஆங்கிலத்தைக்கொண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு, வார்ட்டன் பல்கலைக்கழகங்களை யும் அகமதாபாத்தின் ஐ.ஐ.எம்-மையும் அசத்த வில்லையா? திறன்மிக்க அமைச்சராகப் பிரகாசிக்க... கட்சியின் உறுப்பினராக மத்தியில் லாபி செய்ய... மொழி ஒரு தடை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்!



டெல்லியை விடுங்கள்... கட்சியில் என்ன பிரச்னை? 'செயல்வீரர்’, 'இடைத் தேர்தல் வெற்றிகளின் வித்தகர்’ என்றெல்லாம் சொல்லித்தானே கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பதவி வந்த பிறகு, ஒரே ஒருமுறை தன்னுடைய வீட்டில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தவிர, கட்சிக்காகக் களம் இறங்கி அவர் என்ன வேலை பார்த்தார் என்று யாருக்கேனும் நினைவிருக்கிறதா? ஓரிரு நாள் பிரசாரங்களில் தலைகாட்டுவது மட்டுமே, ஒருவரை ஆக்ட்டிவ் அரசியல்வாதி ஆக்கிவிடாதே!




அதிலும் 'திருமங்கலம் ஃபார்முலா’ அழகிரிக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், தி.மு.க-வின் ஜனநாயக - ஓட்டு அரசியல் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை... தி.மு.க-வுக்கு தேசிய அளவில் இருந்த நற்பெயரை அது எந்த அளவுக்குச் சிதைத்தது என்பது கட்சித் தலைவரின் மனசாட்சிக்குத் தெரியும்.



கடந்த காலத்தில் அழகிரியின் பிறந்த நாள் விழாக்களில் பெருமளவு திரண்ட தென் மாவட்டச் செயலாளர்களும் முக்கிய அமைச்சர் களும் இந்த முறை சொற்ப எண்ணிக்கையாகச் சுருங்கிப்போனது ஏன்? உண்மையில் ஒரு சமஸ்தானத்தின் சர்வாதிகாரச் சக்ரவர்த்தியாக இருக்க மட்டுமே ஆசைப்படுகிறார் அழகிரி. 'யாரங்கே!’ என்று கட்டளையிட்டால், மூத்த அமைச்சர்களும் அண்ணா பாசறையில் திராவிடம் பயின்ற மூத்த தலைவர்களும் ஓடி வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?



எல்லாவற்றையும்விட அ.தி.மு.க. ஆட்சியில் தனது நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக்கூடவா அழகிரி உணர மாட்டார்?



கிரானைட் வழக்கில் அவரது மகன் துரை தயாநிதியை விடாமல் துரத்துகிறது அ.தி.மு.க. அரசு. வேறு ஏதாவது ஒரு வழக்கில் அவரை வளைத்துப் போடக் கண்கொத்திப் பாம்பாக வாய்ப்புக்குக் காத்திருக்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தயா சைபர் பார்க்கின் சுற்றுச்சுவர்களை இடித்துத்தள்ளுகிறது மாநகராட்சி. எல்லாவற்றுக்கும் மேலாக பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீஸின் சந்தேகக் கரங்கள் அழகிரியையும் துரை தயாநிதியையும் நோக்கி நீள் கின்றன.



குடும்ப உறவுகளில் சுமுகமாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஸ்டாலின், கனிமொழி, துர்கா, ராசாத்தி அம்மாள் தொடங்கி அத்தனை பேரும் ஆகாது அவருக்கு. அவ்வளவு ஏன்? தனது மகள்கள் கயல்விழியிடமும் அஞ்சுகச்செல்வியிடமும் ஓரிரு வார்த்தைகள் பரிவாகப் பேசி ஓர் ஆண்டுக்கு மேலாகிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. அவர்களைவிடவா கட்சியும், பதவியும், அதிகாரமும் அழகிரிக்கு நிம்மதியைத் தந்துவிட முடியும்?



இப்போதைக்கு அழகிரி நம்புவது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் அனுஷா ஆகிய மூவரை மட்டும்தான். எல்லாப் பிரச்னைகளின்போதும் அழகிரிக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பது அவர்கள்தான். ஆனால், அந்த மூவருக்குமே அவரது 'செயல்பாடு’கள் பிடிக்குமா என்ன?



நன்றி - விகடன் 

மினரல் வாட்டர் குடிப்பவரா நீங்க? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

உயிர் 'குடிக்கும்' நீர்!

டி.எல்.சஞ்சீவிகுமார்
கோடையில் நாளன்றுக்கு ஆறு லிட்டர் விஷத்தைத் தினமும் நீங்கள் அருந்தவிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?


 ஆம்... சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பாட்டிலிலும் கேன்களிலும் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் நீர், கொஞ்சம் கொஞ்சம் உயிர் குடிக்கும் விஷம்தான் என்று பகீர் கிளப்புகின்றன சமீபத்திய ஆய்வுகள்!


தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வீடுகளிலும் நிறுவனங்களிலுமாக, 50 சதவிகித மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் விலை கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். உண்மையிலேயே நாம் குடிக்கும் இந்தக் குடிநீர் ஆரோக்கியமானதுதானா என்றால்... சந்தேகமே! மிகச் சில நிறுவனங்களைத் தவிர, இன்று பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் குடிக்கத் தகுதி இல்லாதது; நம்மில் பலருக்கும் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கியக் காரணமே இந்த குடிநீர்தான் என்பது அதிரவைக்கும் நிஜம். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியில் இருப்பது... வேறு என்ன? ஊழல்!


தவறு ஆரம்பிப்பது எங்கே?


இந்தியத் தர நிர்ணய அமைப்புதான் (Bureau of Indian Standards) நாடு முழுவதும் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும். அந்த நிறுவனங் களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த அமைப்புதான். ஆனால், சமீபத்தில் சென்னை தரமணியில் இருக்கும் இந்த அமைப்பின் இரண்டு விஞ்ஞானிகளைச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் தொடங்க அனுமதி அளிக்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டிக் கைது செய்தார்கள். லைசென்ஸ் வாங்கவே சுமார் 10 லட்ச ரூபாய் வரை ஒரு நிறுவனம் லஞ்சம் கொடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் கொடுக்கும் குடிநீரின் தரம் எப்படி இருக்கும்?


இப்படித்தான் இருக்கும்!


சில மாதங்களுக்கு முன்பு இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன், சென்னையில் செயல்படும் சுமார் 10 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி அவற்றை குடிநீர் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். அவற்றை 'பாக்டீரியோலாஜிக்கல்’ பரிசோதனை செய்தபோது அத்தனை நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட(?) குடிநீருமே, மக்கள் குடிக்கத் தகுதி இல்லாதது என்று முடிவு வந்தது. இதில் அதிர்ச்சி அடையவைக்கும் இன்னோர் உண்மை, அந்த நீரில் நச்சுத்தன்மைகொண்ட கனிமங்கள் இருப்பதுடன், ஈகோலி (Escherichia coli) மற்றும் கோலிஃபார்ம் (Coliform bacteria)  போன்ற மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரி யாக்களும் இருந்துள்ளன. ஈகோலி பாக்டீரியா எதில் இருந்து உற்பத்தியாகிறது தெரியுமா? மனிதனின் மலத்தில் இருந்து!


தமிழக நிலவரம் இது!


ஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. ஆண்டுதோறும் சராசரி யாக 40 சதவிகிதம் வளர்ச்சி அடைகிற தொழில். கடந்த 2010 முதல் 2012 வரை இந்தியத் தர நிர்ணய அமைப்பு 96 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை 80 நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 இருக்கின்றன. சென்னையில் மட்டுமே நாளன்றுக்கு 70 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் விற்பனை ஆகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 765 என்றால், போலி நிறுவனங்கள் சுமார் 2,000-க்கு மேல் இருக்கின்றன.


இந்தியத் தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டலத் துணை இயக்குநர் அன்பரசு, ''இது சீஸன் பிசினஸ். கோடை தொடங்கிவிட்டால், இவற்றைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருக்கிறது. ஆங்காங்கே போர்வெல்களில் தண்ணீரை உறிஞ்சி குடிசைத் தொழில்போலச் செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்து கிறோம். நிறைய நிறுவனங் களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளோம்'' என்கிறார்.


இந்தியத் தர நிர்ணய அமைப்பு மட்டுமே மொத்த போலி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே போலி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரைப் பரிசோதிக்கப் போதிய வசதிகள் இல்லை. மெட்ரோ நகரமான சென்னை மாநகராட்சியின் குடிநீர் பரிசோதனைக்கூடமே முடங்கிக்கிடக்கிறது. இதற்கு எட்டுக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாதனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணம் கைக்கு வரவில்லை.


கிண்டியில் இருக்கும் மத்திய அரசின் கிங் இன்ஸ்டிட்யூட்டின் உணவுப் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கலாம் என்றால், அங்கு மைக்ரோ பயோலாஜிஸ்ட் பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.


குடிநீரை எப்படிச் சுத்திகரிக்க வேண்டும்?



கச்சா தண்ணீரைக் கொதிக்க வைத்து 'டோஸிங் சிஸ்டம்’ மூலம் கடினத் தன்மையற்றதாக மாற்ற வேண்டும். அடுத்து மண் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, மைக்ரான் கார்டிரேஜ் வடிகட்டி ஆகிய மூன்று முறைகள் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்ணிய மண் மற்றும் அசுத்தத் துகள்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக எதிர்மறை சவ்வூடு பரவல் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புகள் நீக்கப்பட வேண்டும். அடுத்து, நுண் வடித்தல் மற்றும் புற ஊதாக் கதிர்கள் மூலம் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக்கூடம் இருக்க வேண்டும். இங்கு பரிசோதனை செய்த குடிநீரை இந்தியத் தர நிர்ணய அமைப்புக்கு சாம்பிள் சோதனைக்கு அனுப்பி குடிக்க உகந்தது என்று சான்று பெற்ற பின்பே, விற்பனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், அந்த அமைப்பு மாதம் இருமுறை நிறுவனத்தின் கச்சா தண்ணீரையும் சோதனை செய்யும்.



ஆனால், உண்மையில் நடப்பது என்ன?


சில நிறுவனங்களே மேற்கண்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. தில்லு முல்லு செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் பன்னாட்டு நிறுவனங்களும் உண்டு. முறையாகச் சுத்திகரிப்பவர்கள் தங்களின் பாட்டிலின் மீது நிறுவனம், பிராண்ட் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு செய்த தொழில்நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதித் தேதி ஆகியவற்றைத் தெளிவாக எழுத வேண்டும். ஆனால், எத்தனை நிறுவனங்கள் இவ்வளவு விவரங்களுடன் தங்கள் குடிநீரை விற்பனை செய்கின்றன? தனியாரை விடுங்கள்... தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காசு கொடுத்து வாங்கும் 'ரயில் நீர்’ தண்ணீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது குடிக்க உகந்ததுதான் என்று சான்று வாங்கும் துணிச்சல் ரயில்வே துறைக்கு இருக்கிறதா?



பெரும்பாலான போலி நிறுவனங்கள் புறநகரில் விவசாயிகளிடம் போர்வெல் மற்றும் கிணற்றுத் தண்ணீரை மலிவு விலைக்கு வாங்கு கின்றன. சுத்திகரிப்பு முறைகளில் செலவு இல்லாத சிலவற்றை மட்டும் செய்துவிட்டு, தண்ணீரை அப்படியே பேக் செய்கின்றன. சிலர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி, அதில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டுவிடுகிறார்கள். தண்ணீரில் இருக்கும் தேவையான மற்றும் தேவையற்ற கனிமங்கள் அத்தனையுமே அடியில் படிந்துவிடும். ஆனால், அலுமினியம் சல்பேட்டின் ரசாயனத் தன்மை குடிநீரில் இருக்கும். இந்த முறையில் பாக்டீரியாக்களும் அழியாது. அதனால் தான், ஈகோலி பாக்டீரியாக்கள் சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தண்ணீரிலும் இருக்கின்றன. இன்னும் சிலர் மேற்கண்ட எதையுமே செய்வது இல்லை. தண்ணீரை அப்படியே அடைத்து எந்த லேபிளும் ஒட்டப்படாத ப்ளைன் 20 லிட்டர் கேன்களில் விற்கிறார்கள். இவை பலவற்றில் லார்வா புழுக்கள் நெளிவதை வெறும் கண்கொண்டே பார்க்கலாம்.


''நாங்கள் முறையாகத்தான் சுத்திகரிக்கிறோம்!''


மேற்கண்ட குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியரிடம் முன்வைத்து விளக்கம் கேட்டேன்... ''ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பது உண்மைதான். அவ்வளவு ஏன்? அங்கீகாரம் பெற்ற பல
நிறுவனங்களே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்குவதுகுறித்த புகாரை அளித்ததே எங்கள் சங்கம்தான். அதன் அடிப் படையில்தான் விஞ்ஞானிகள் முரளி மற்றும் வெங்கட்நாராயணன் கைதுசெய்யப்பட்டார் கள். சுமார் 450 நிறுவனங்கள் 'ஐ.எஸ்.ஐ. 2002’ லைசென்ஸ் இல்லாமலே தொழில் செய்கிறார் கள். இதுகுறித்து சுகாதாரத் துறையில் நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நேர்மையாகத் தொழில் செய்யும் எங்கள் உறுப்பினர்களின் தொழிலும் பாதிக்கப்படுகிறது!'' என்றார்.


உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!


தீர்வு என்ன?


'நாம் குடிக்கும் குடிநீர் குடிக்க உகந்ததுதானா?’ என்று நாமே சோதனை செய்துகொள்ள முடியும் என்கிறார் காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு. ''பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு பரிசோதனைக் கருவியை விற்பனை செய்கிறார் கள். விலை சுமார் 4,000 ரூபாய். இதைக் குடிநீரில் வைத்தால், மீட்டரில் பரிசோதனை முடிவுகளைக் காட்டும். குடிக்க உகந்ததா என்று அறிந்துகொள்ளலாம். 100 சாம்பிள் வரை இதில் சோதனை செய்யலாம். சென்னை எல்டாம்ஸ் சாலையில் பி.டி.ஆர். ஃபவுண்டேஷனில் சுமார் 250 ரூபாய்க்கு கையடக்க சோதனைக் கருவி கிடைக்கும். தவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் குடிநீர் பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும்!'' என்கிறார்.
ஆனால், அரசு இயந்திரம் செய்ய வேண்டிய பணியையும் வரி கட்டும் மக்கள் செய்வது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.


அப்படியே செய்தாலும் மேற்கண்டவை எல்லாம் நடுத்தர மற்றும் வசதியானவர்களால்தான் செய்யமுடியும். ஆனால், ஏழைகள்? அவர்களுக்கும் வழி சொல்கிறார் சரவணபாபு. ''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.


மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.


 மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.


தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.


நன்றி - விகடன் 

ஏய் மிஸ்டர்.எதுக்கு கட் ஷூ வை காட்றீங்க ?


வாய்ப்பு கிடைத்தால், அனுபவித்துபாருங்களேன்...!
இதுவல்லவா சுகம்...!



    அதிகாலை பொழுதில் அலாரம் வைத்து எழுந்து, குளிரையும் பொருட்படுத்தாமல் 
குளித்துவிட்டு லேசாக சிந்துகின்ற பனிதுளிகளில் நனைந்தபடி, பகலில் பேருந்து
 நெரிசலில் சிக்கித்தவிக்கும் சாலையில் தனியொருவனாக நடையிட்டு, கூட்டமே 
இல்லாமல் வருகிற பேருந்தில் ஏறிக்கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, 
செல்போனில் நமக்கு பிடித்த பாடல்களை கேட்டுகொண்டு போகின்ற சுகம் என்னை 
பொருத்தவரை ஒரு பெரிய சுகம்தான்... 



வாய்ப்பு கிடைத்தால், அனுபவித்துபாருங்களேன்...!
1.சயின்ஸ் டீச்சர் சரோஜா - ஒரு செல் உயிரினம் உதாரனம் தருக.


 லொள் மாணவன் - மிஸ், இப்போ எல்லாருமே 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க 



====================


2.  தமிழக மக்களின் நலன் காக்க மத்திய அரசு தவறிவிட்டது : ஜெ குற்றச்சாட்டு # 18 மணி நேர மின் வெட்டுக்கு 356 யூஸ் பண்ணி கலைச்சிருக்கனுமா? 



---------------------


3. பெண்களுக்கு ஜாக்கெட் தைக்கும் ஆண் டெய்லர் நல்ல ஜி கே உள்ளவராக இருப்பார் # அவதானிப்பு ்





-------------------



4. நமீதா எல்லாரையும் மச்சான்னு கூப்பிடறாங்க, எங்க ஊர்ப்பொண்ணுங்க அண்ணான்னு கூப்பிடுதுங்க # நமீதாவின் தாராள மனசு யாருக்கு வரும்? 




-----------------------


5. எல்லா ஊரிலும் வதந்திக்கு பரப்பளவு அதிகம் !! எங்க ஊர் வசந்திக்கு வரப்பளவு அதிகம் # 36 ஏக்கராக்கு ஓனர் 




-----------------------


மாறிய அனைத்தும் வாழ்ந்தன,

மாறாத அனைத்தும் அழிந்தன!

இனிய காலை வணக்கம்.



6. ஒவ்வொரு நல்ல ஃபிகரைப்பார்க்கும்போதும் அடடா வடை போச்சே என ரகசியமாய் புலம்புவது நான் மட்டும் தானா?





-----------------------


7. அப்போ -பிரசவம் = ஹோம் டெலிவரி , இப்போ - பிரசவம் = ஹோம் தியேட்டர் டெலிவ



--------------------------



8. என்னை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டது-ஜெ# எங்களை நீங்க அவமானப்படுத்தலை ? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு - கேப்டன் 




------------------------



9. ஸார். ஜெ வெளிநடப்பு செஞ்சதும் நீங்களும் பின்னாலயே போய்ட்டீங்களே ஏன் ? 



மோடி - ஆல்பாபீட் படி J க்கு பின்னாலதானே M ? 




-------------


10. ஜெ - புறாவுக்கு பெல் அடிச்சா மின்சாரக்கண்ணா.இந்த சுறாவுக்கே பெல் அடிச்சா எப்டி கண்ணா? 




------------------------


இனிய காலை வணக்கம் நண்பர்களே...



11. பெண் போராட்டக்காரர்கள் அழகாக இருக்கிறார்கள் . பிரணாப் முகர்ஜியின் மகன் ு # மாட்னே மவனே! இந்த பேச்சுக்கு எத்தனை போராட்டம் வரப்போகுதோ?




-------------------


12. T20 தோல்விக்கு காரணம் நடுவரிசை பேட்ஸ்மேன்களே!-தோனி! # ஓ அவங்க கை வரிசை எடுபடலையாக்கும்? 


--------------------



13. ஏய் மிஸ்டர்.எதுக்கு கட் ஷூ வை காட்றீங்க ? 



நாங்க ஐ லவ் யூ சொன்னா நீங்க செருப்பை காட்றீங்க.நீங்க ஐ லவ்யூ சொன்னா நாங்க ஷூ காட்டுவோம் 




----------------------


14. புருஷன் நல்லா இருக்கனும்னா விரதம் இருந்தே? 



ச்சே ச்சே வெயிட் 90 கிலோ ஏறிடிச்சு.வருசத்துக்கு ஒரு நாளாவது பட்டினி இருக்கனும்னு DR் சொன்னாரு 



--------------------------


15. எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்:மத்திய அரசு # நல்ல வேளை , யூனிபார்ம் தர்லை 



----------------------






16. மத்திய அரசால் ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டனத்துக்குரியது: கருணாநிதி # போற போக்கைப்பார்த்தா திமுக ,அதிமுக கூட்டணி வந்துடும் போல 




----------------------


17. 10 நிமிடத்தில் மணி அடித்து பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டனர்! - ஜெ# உங்க கண்ணுக்கு முன்னாலயே மணியை அடிச்சிருக்காங்கன்னா என்ன ஒரு தில்?



----------------------------


18. மேடம் .ஏன் வெளிநடப்பு பண்ணீட்டீங்க? 


 1, யாரும் என் கால்ல விழலை.


2, பேசும்போது கை தட்டலை.


3,புரட்சித்தலைவின்னு கூப்பிடலை ;-((( 




--------------------------


19. டியர்.நீங்க மேன் ஆப் ஜெம் சும்மாவா? 



டெயிலி ஒரு பாக்கெட் ஜெம் மிட்டாய் சாப்பிடறேனே? ;-)) 



=======================


20. நான் எனது எண்ணப்படிதான் வாழ்வேன், மற்றவர்களை பற்றி கவலையில்லை - ஆண்ட்ரியா # சரி சரி இப்போ யார் கூட வாழ்றீங்க? 



-----------------------


21. கதைக்கேற்ப கிளாமராக நடிக்கவும் நான் தயார் - பானு # "விஷால"மான மனசு 



-----------------------


22. தென் மாநில நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தமன்னா முதலிடம் # பல்லி மாதிரினு யார்யா கிண்டல் பண்ணது? பாப்பா கில்லி மாதிரி 



-----------------------



23. மீண்டும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்த நயன் பாவ மன்னிப்பு கோரினார் #,2 டைம் கேட்டாரா? 



======================



24. தென் மாநில நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தமன்னா முதலிடம் # பல்லி மாதிரினு யார்யா கிண்டல் பண்ணது? பாப்பா கில்லி மாதிரி 




---------------------


25. @ ஜனவரி 10 காலை மணி 10 ,



 ரசிகர் - சார் .விஸ்வரூபம் ரிலீஸ் ஆகுமா ? ஆகாதா ? 



ஓனர்.- இன்னும் பேச்சுவார்த்தை நடந்திட்டிருக்கு.வெயிட் ;-)) 



========================