Tuesday, October 09, 2012

DOUBLES - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9kS-pDSKSOXPTGdytPnYQp_8dAdemS2IEed7Q1N7rFnkGueTbZVo6E6pNimI7g5a10xL15vqEAvcp__8jUv_5lcKNqC6hD-r1g6LSnKWCHKZpB1c96BG73iy8RgMZHzBGZQOU5sKCfwo/s1600/Doubles.jpgமம்முட்டி -நதியா - டாப்சி டீக்கடை பன்னு நடிச்ச மலையாளப்படமான டபுள்ஸ் ஆல்ரெடி கேரளாவுல 2011 லயே ரிலீஸ் ஆனாலும் இப்போ மாற்றான் வர்றதால அதே மாதிரி ட்வின்ஸ் கதை உள்ள இந்தப்படத்தை தமிழ்ல புதுவை மாநகரம்னு டப் பண்ணி ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. 

மம்முட்டியும் ,நதியாவும்  அண்ணன் தங்கை.பெரிய பெரிய பள்ளங்களில், மலைப்பள்ளத்தாக்குகளில் விபத்துக்கு உள்ளாகும் வாகனங்களை, பயணிகளை காப்பாற்றும் கிரேன் ஓட்டுனர் கம் ஓனர்ஸ்.இவங்க வாழ்க்கைல ஒரு டைம் டாப்ஸி குறுக்கே வர்றாங்க.அதாவது ஒரு விபத்துல இவங்க மாட்டினப்போ மம்முட்டி காப்பாத்தறாரு.

பாப்பா கிட்டத்தட்ட ஒரு அநாதை.இதே ஆள் ஆம்பளையா இருந்தா ஒரு பய கண்டுக்க மாட்டான். ஆனா இது ஒரு 70 மார்க் ஃபிகரு.மின்னலை விட வெளுப்பான தேகம். நம்மாளுங்க மாநிறமா இருந்தாலே மாமாங்கம் ஆனாலும் விடாம கடலை போடுவானுங்க.வாத்து மாதிரி நிறத்துல  குட்டி கிடைச்சா அவங்க பண்ற கூத்து எப்படி இருக்கும்?


 மம்முட்டி தன் வீட்டுக்கே கூட்டிட்டி வந்துடறாரு.இது நதியாவுக்கு பிடிக்கலை. ஏன்னா ஆல்ரெடி அவர் சுரேஷை லவ் பண்ணுனப்போ அல்லது பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப அவர் ஆ ராசாவை விட மோசமான திருடன், வேணாம்னு அடக்கி வெச்ச அண்ணன் இப்போ தொபுக்கடீர்னு ஒரு பொண்ணு கால்ல விழறதை பொறுத்துக்க முடியலை .



http://www.spiderkerala.net/attachments/Resources/6702-13329-mammootty-in-doubles.jpg


டாப்ஸிக்கு என்ன பிரச்சனைன்னா அவர் வந்த கார்ல வில்லனோட பணம் 50 லட்சம் எவனோ ஆட்டையை போட்டுட்டான்.வில்லன் பணம் வேணும்னு மிரட்றான்.அந்தப்பணத்தை எடுத்தது மம்முட்டி அல்லது அவர் கூட இருக்கும் நண்பர்கள் அல்லது பணியாளர்கள்தான்னு சந்தேகப்படறாங்க.. 


 யார் அந்தப்பணத்தை எடுத்தது?  யார் இந்த குப்பைக்கதையை எடுக்கத்தெரியாம சொதப்பி படத்தை மேலும் கெடுத்தது என்பதே மிச்ச மீதிக்கதை..


சி பி ஐ டைரிக்குறிப்பு , மக்கள் ஆட்சி படங்கள்ல கம்பீரமான உடைகளில் வந்து கண்ணியமா நடிச்சு கைதட்டல் வாங்குன மம்முட்டிக்கு இது சறுக்கல் படம். அவரது உடை தேர்வு மகா மட்டம். பாலி டெக்னிக் படிக்கற பையன் மாதிரி கசா முசா சட்டை.. நடிக்க வாய்ப்பு கம்மி.. ஃபிரண்ட்ஸ் பட வடிவேல் காமெடியை உல்டா பண்ணி படத்தின் முன் பாதில இவர் போடும் மொக்கைக்கு தண்டனையா  காபி வித் கலா மாஸ்டர் புரோகிராம் நடத்தி இவரை கோர்த்து விட்டுடனும்.. 


நதியா ஆள் இன்னும் இளமையாத்தான் இருக்கார். ஆனா கேரக்டருக்கு சம்பந்தமே இல்லாம அவர் வெறுப்பை கொட்டுவது ஏன்? எப்போ பாரு அவர் முகம் ஏன் கடு கடுன்னே இருக்கு? டாப்ஸியை ஷூட்டிங்க் ஸ்பாட்ல எல்லாரும் மொய்க்கும்போது இவரை யாரும் கண்டுக்கலைன்னு அங்கலாய்ப்போ என்னவோ? 


டாப்ஸி.. இவர் இதுவ்ரை நடிச்ச படத்துலயே முழுக்க முழுக்க உடம்பை கன்யாஸ்த்ரீ ரேஞ்சுக்கு மூடி இருப்பது இந்தப்படத்துலதான். இந்த இடத்துல ஒரு பஞ்ச் டய்லாக் சொல்லிக்க ஆசைப்படறேன். குணச்சித்திர நடிகைகளை கிளாமர் நடிகை ஆக்கி காட்டு காட்டுன்னு காட்ட வெச்சவங்களைக்கூட மன்னிச்சுடலாம் ( அஞ்சலி, ஓவியா @ கலகலப்பு -சுந்தர் சி), ஆனா ஆல்ரெடி செம காட்டு காட்டின நடிகையை முழுக்க போர்த்தி நடிக்க வெச்சவங்களை மன்னிக்கவே கூடாது,..  # சும்மா


இவங்க 3 பேர் போக ஆனந்த்ராஜ், ஒய் ஜி மகேந்திரானு பலர் உண்டு. அங்கங்கே தலையை காட்டிட்டு போறாங்க.. சொல்லிக்கற அளவு ஏதும் இல்லை.. 


http://www.metromatinee.com/MetromatineMoviewNews/images/tapasee%20pannu6.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும்  இடங்கள்



1. இந்த படு டப்பாவான படத்தை என்னமோ ஆக்‌ஷன் த்ரில்லர் ரேஞ்சுக்கு போஸ்டர் டிசைன் ரெடி பண்ணி ,சம்பந்தமே இல்லாம புதுவை மாநகரம்னு டைட்டில் வெச்சு ,தமிழ் ஆடியன்ஸை ஏமாத்துன லாவகம். 



2. ஓப்பனினிங்க் ஷாட்ல அந்த கிடு கிடு பள்ளத்தாக்குல  மம்முட்டி, நதியாவுக்கு டூப்பா போடப்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் அந்த அதல பாதாளத்துல கயிற்றில் இறங்கும் சாகச காட்சி அபாரம்


3. நதியா, டாப்ஸிக்கான உடைத்தேர்வு கன கச்சிதம்.. 







மனம் கவர்ந்த வசனங்கள்



1. அந்த கொலைக்கேஸ்ல மாட்னவனை காப்பாத்த அந்த லாயர் 5 லட்சம் ரூபா ஃபீஸா கேட்கறார்.. 


 சார். அந்த பணத்தை என் கிட்டே கொடுங்க.. நானே அந்த கொலையை செஞ்சதா சொல்லி உள்ளே போய்க்கறேன்


2.என் சம்பளத்தை என் மனைவிக்கு அனுப்பறீங்களே, எதுக்கு என்னை வேலை வாங்கறீங்க.. அதுக்கும் அவளையே கூப்பிட்டுக்க வேண்டியதுதானே? 



3. சர்வர் - சார்.. பில்


 இதை நீயே பே பண்ணிட்டு டிப்ஸும் நீயே வெச்சுடு.. 


4. போலீஸ் - டேய்.. என்னாதிது? ஃபுல் டைட்டா? ( போதையா?) 


லைட்டா.. 



5. அவன் மாடில இருந்து கீழே விழுந்துட்டான்


 இப்போ எங்கே இருக்கான்?

 போஸ்ட்மார்ட்டம்ல


 எப்படியோ, ஒரு மாற்றத்தை கொண்டு வந்தா சரி.. 



6. உனக்கு என்ன தாண்டா வேணும்? 


சாப்ட்டு 7 நாள் ஆகுது 


ஏன் ? பசி எடுக்கலையா?


 பசி இருக்கு. ஆனா காசு இல்லை 



http://southtamil.files.wordpress.com/2010/02/nadhiya-moithu-stills3.jpg?w=227



இயக்குநரிடம்  கடுப்பாய் சில கேள்விகள்



1. ஹீரோயின் டாப்ஸி டீகடை பன்னு அர்த்த ராத்திரில லூசு மாதிரி மம்முட்டி ரூம்ல என்னமோ தேடுது. என்னான்னு கேட்டா கார்ல மிஸ் ஆன அந்த 50 லட்சமும் இருக்கா?ன்னு பார்க்கறேன்குது. சப்போஸ் அவர் தான் பணத்தை எடுத்திருந்தாலும் உடனே பேங்க்ல தானே  போட்டு வைப்பாங்க.. பணத்தையும் தன் ரூம்ல வெச்சு அந்த பணத்துக்கு உரிமையாளரையும் பக்கத்துலயே தங்க விடுவாங்களா? 


2. தாப்ஸி அர்த்த ஜாம மோஹினி மாதிரி அலையறதுக்கு கூட ஒரு சால்ஜாப் சொல்லலாம். நதியா ஏன் கேனம் மாதிரி தூங்காம மிட் நைட்ல அங்கேயும் இங்கேயும் சுத்திட்டு இருக்கு.?



3. நதியா மம்முட்டிக்கு தங்கச்சியா?டாப்சிக்கு  சக்களத்தியா? எதுக்கு எப்போ பாரு எரிஞ்சு விழறாங்க? 2 பேருக்கும் நிஜமாவே சண்டையா? ரியக்லிஸ்டிக்கா இருந்தாக்காட்டி படத்துக்கு சம்பந்தம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு படத்துல சேர்த்துட்டீங்களா?


4. நடு ராத்திரில வில்லன் கதவை தட்றான். தனியா இருக்கும் டாப்ஸி தட்டும் நபர் யார்? என்ன? எதுக்கு இந்த டைம்ல தட்றீங்க? என எதுவுமே கேட்காம திறக்காரே? மாட்டிக்கறாரே? அது எப்படி? நிஜமாலுமே அவர் அப்டித்தானா? ( ஆமான்னா நாம போய் அவர் வீட்டுக்கதவை தட்டப்போறதில்லை சும்மா ஒரு ஜி கேவுக்காக )



5. மம்முட்டி - டாப்ஸி 2 பேருக்கும் நோ லவ். நோ நட்பு, அதிகம் பேசிக்கிட்டது கூட இல்லை.. அப்டி இருக்கும்போது அவருக்காக மம்முட்டி ஏன் 50 லட்சம் செலவு பண்ணனும்? அனாமத்தா அப்டி செலவு பண்ண ஆம்பளை என்ன அடி முட்டாளா? அவனவன் சொந்த சம்சாரத்துக்கே 50 ரூபாய்க்கு அருண் ஐஸ்க்ரீம் வாங்கித்தரவே 1000 தடவை யோசிக்கறான். யார்னே தெரியாத ஒரு பொண்ணுக்கு அவளால எந்த யூசும் இல்லாதப்ப எந்த கேனயனாவது 50 லட்சம் ரூபா  செலவு பண்ணுவாங்களா? அதுவும் தன் கிட்டே இருக்கும் எல்லாத்தையும்  வித்து பணம் ரெடி பண்ணறார்.. 



6. பூக்களை பறிக்காதீர்கள் பட ஜோடியான சுரேஷ் - நதியா இதிலும் ஜோடியா இருந்தாலும் 2 பேருக்கும் ஒரு டூயட் இல்லை. ஒரு காதல் ஒரு ரொமான்ஸ் எதுவும் இல்லை.. அதே போல் மம்முட்டி - டாப்ஸி ஜோடிக்கும் எதுவும் இல்லை.. இப்படி வாய்ப்பு இருந்தும் யூஸ் பண்ணிக்கலைன்னா எப்படி கதைல ஒட்டுதல் வரும்? மம்முட்டி - டாப்ஸி லவ் எப்பிசோடு 2 ரீல் காட்டி இருந்தாலாவது அவர் பண்ற செலவுக்கு அர்த்தம் உண்டு..


7. டாப்ஸி ஓப்பனிங்க் சீன்ல பர்தா போட்டுட்டு வர்ராங்க.. மெல்லத்திறந்தது கதவுல அமலா மாதிரி ..  அவங்க முகம் பார்க்கனும்னு ஒரு கோஷ்டி காமெடிங்கற பேர்ல நடு ராத்திரில ஏணி எல்லாம் வெச்சு பெட்ரூம்ல எட்டிப்பார்க்கறாங்க.. படு கேவலம்.. பகல்ல பார்க்க முடியாதா? இந்த லட்சணத்துல ஹீரோ டாப்ஸி குளிக்கும்போது பாத்ரூம்ல எட்டிப்பார்க்க ட்ரை பண்றாரு. நிஜமாவே அவர் முகத்தைத்தான் பார்க்க ஆசையா? 


8.  டாப்சியோட சம்பளம் ரூ 68 லட்சம் . புக் பண்ணிட்டு தயாரிப்பாளர்ட்ட சம்பளம் வாங்கிக்கொடுத்துட்டு படத்துல மொத்தமா  15 ரீல்ல அவர் காட்சிகள் ஜஸ்ட் 4 ரீல் தான். உங்களுக்கு மனசாட்சி உறுத்தலை?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI6mhjydGf-e52Tekyc9e5OX0Bm7I0G-sXYmtRn2JsuozNSZ_Eye-l_6a6dv1xV8AenBsBnCN6I_EBUSuuW-kf-AqRc303msRdQEa9vZDZX_hc5hZXAMNKwQAmdkOz7caoTeIhiX68eM1o/s1600/tapsi-hot-images0217.jpg



சி.பி கமென்ட் - இந்த குப்பைப்படத்தை பார்க்கறதுக்கு சுறா 1000 மடங்கு பெட்டர் . ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன்.

சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி @ மங்கையர் மலர்

http://homepreneur-online.com/wp-content/uploads/2009/08/image003.jpg 

என்னைச் செதுக்கிய சோதனைகள்!

சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி

காட்டுப்பாக்கத்தில்சூரிய புத்திரிதொடருக்காகப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தமயூரிசுதா சந்திரனுடன் ஒரு சுவையான சந்திப்பு நடந்தது.
வாங்க, வாங்க, வணக்கம்" என சரளமான தமிழ் பேசி வரவேற்றார் சுதா சந்திரன்,
என்ன அப்படிப் பார்க்கறீங்க? நான் மும்பையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணுன்னாலும் நல்லா தமிழ் பேசுவேங்க.. என் சரியான தமிழ் உச்சரிப்புக்குக் காரணம் விஜயகாந்த் சார்தான்.. ‘வசந்தராகம்படத்துல அவருடன் இணைந்து நடிச்சப்போ, செட்டுல இங்லீஷ்லயே பேசிச் சமாளிச்சுடலாம்னுதான் பார்த்தேன். ஆனா அவர் விடலை.
தமிழ் சினிமாவுல நடிக்கன்னு வந்தாச்சு. அதுக்கப்புறம் தமிழ் கத்துக்கலைன்னா எப்படி? தமிழை சுலபமாகக் கத்துக்கலாம்"னு சொல்லிச் சொல்லியே என்னைத் தமிழ் பேச வெச்சுட்டாரு. அவருக்கு என் நன்றி!" என்று கலகலப்பாக ஆரம்பித்தார் சுதா சந்திரன்.
நீங்க சினிமாத் துறைக்கு வந்து இருபத்தேழு வருஷமாயிடுச்சாமே!

ஆமா... என்னவோ, இப்பதான் ஃபீல்டுக்குள்ள நுழைஞ்சமாதிரி ரொம்ப ஜாலியா, சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு. தினம் புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே இருக்கேன், புதுபுது முகங்களைச் சந்திக்கறேன்.
குடும்ப விஷயத்திலும் ரொம்ப அதிர்ஷ்டசாலி நான். அருமையான, அழகான, அன்பான குடும்பத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் அப்பா, நான், என் கணவர் ரவி டாங் என எங்கள் மூன்று பேரையும் கொண்ட அற்புதமான குடும்பம் என்னுடையது" என்றவரை இடை மறித்து,
எல்லா சானல்களிலுமே வருகிறீர்களே.. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?" என்று கேட்டபொழுது, சரசரவென வந்து விழுந்தது ஒரு பெரிய லிஸ்ட்!
ஹிந்தி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி. இதுல பஞ்சாபி கொஞ்சம் ஸ்பெஷல் ஏன்னா, என்னை 18 வருடங்களுக்கு முன் கைப்பிடித்தவர் ஒரு பஞ்சாபி!"
இத்தனை வருஷமாய் மேக் அப், கேமரா, ஆக்டிங்ன்னு இருந்துட்டீங்களே..சினிமாத் துறையைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன...?
இது ஒரு வொன்டர்ஃபுல் இன்டஸ்ட்ரி... சவால்கள் நிறைந்தத் துறை. கொஞ்சம் திறமை + நிறைய பொறுமை + நிறைய, நிறைய உழைப்பு இருந்துட்டா, எந்த உச்சிக்கும் போகலாம்! இதுவரை யாரும் என்னிடம் எதுக்காகவும் மிஸ்பிஹேவ் பண்ணினதே கிடையாது.
அந்தக் குறிப்பிட்ட விபத்துக்குப் பிறகு, செயற்கைக் கால் பொருத்திக்கிட்டு, ‘மயூரிபடம் செஞ்சீங்க; அதுவும் நாட்டியத் தாரகையா! இப்ப அதைப் பற்றி உங்க எண்ண ஓட்டம் எப்படியிருக்கு?

‘மயூரிபடம் முடிஞ்சப்பறம் ஏதோ ஃப்ளூக்ல ஒரு படம் ஹிட் ஆயிடுச்சு. தொடர்ந்து ஒரு ஹேன்டிகேப்ட் பெர்சனால் மீடியாவில் நிச்சயம் ஜெயிக்கவே முடியாதுன்னு என் காதுபடவே நிறைய பேர் சொன்னாங்க.. அந்தச் சொற்களை, நான் சவாலாய் எடுத்துகிட்டேன்... ஜெயிச்சே தீரணுங்கிற என்னுடைய வெறிதான், ஒரு ஏக்தா கபூர் என்னை வைச்சு ஹிந்தி சீரியல்கள் பண்ணி, என்னை ஒரு style icon ஆக என் ஹெவி நகைகளுக்காகவும், ஸ்டைலான பொட்டுகளுக்காகவும், சேலைகளுக்காகவும் பேச வெச்சுருக்கு. நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நம்மால் நிச்சயம் முடியுங்கிற மனோபாவத்தை வளர்த்துக்கிட்டா நம்மால், எதையும் சாதிக்க முடியும் என்பது என் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த பர்சனல் பாடம்.
விபத்துல என் கால் போனபோது, ‘உன்னால் இனி நடனம் ஆடவே முடியாதுன்னு சொன்னவங்க முன்னாடி நடனம் ஆடியே காட்டணும்னு வெறியாயிடுச்சு. அதற்கு ஏற்றார் போல் எனக்கு உதவி செய்ய கடவுள் நல்ல மக்களை எனக்கு அனுப்புவார், அனுப்பியிருக்கார்.
எங்கப்பாதான் போதும்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, கொஞ்சமாவது ஸ்லோடவுன் பண்ணிகோ"ன்னு சொல்லுவாரு. நமக்காவது ரெஸ்டாவது!


http://www.tamiloviam.com/img/Kalasam-Sudha1.jpg
உங்க பெற்றோர்கள் உங்களோட ஒவ்வொரு முன்னேற்றத்துலயும் உறுதுணையா இருந்திருக்காங்க இல்லயா?
நிச்சயமா.. அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே நான் கேட்டுப்பேன்,
முதல் முதல்லா நான் ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடும்போது, ராகு காலத்துல மட்டும் எக்காரணம் கொண்டும் கையெழுத்து போடாதேன்னு பெத்தவங்க சொன்னாங்க; ஆனா அத அப்படியே ஃபாலோ பண்றேன்.

நான் ஒரு பஞ்சாபியைத் திருமணம் செஞ்சுக்கப் போறேன்னு வீட்ல சொன்னபோது, உனக்கு சரிபடாது. கல்யாணம் பண்ணிக் கிட்டு ஆறே மாசத்துல பொட்டிய தூக்கிட்டு திரும்பி வருவேன்னு அம்மா சொன்னாங்க. அதையும் ஒரு சவாலாய் எடுத்துகிட்டேன். கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் காத்திருந்து... அவரை நல்லா புரிஞ்சுக்கிட்டு, அப்புறம் தான் திருமணம் செஞ்சுக்கிட்டேன். எங்களுக்குள்ள காதல் என்பதைவிட புரிந்துணர்வுங்கிறது ரொம்ப அழுத்தமாக, ஆழமாய் இருந்தது, இருந்துகிட்டும் இருக்கு.
என் அம்மா, தான் இறக்கும் தருவாயில் வெப் காமெரா வழியாக அப்பொழுது கனடாவில் இருந்த என் கணவரைப் பார்த்து கைகள் கூப்பி நன்றி"னு சொன்னதை நான் எப்பொழுதும் நினைச்சுப் பார்த்துப்பேன்.
உங்கள் வெற்றிக்கான காரணம்?
100% கடும் உழைப்பு மட்டும்தான். செய்யும் வேலையை மனதார விரும்பி செய்றேன்...எனக்கு சாக்குப் போக்கு பிடிக்காது... ஏதோ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன்னு சிலர் சொல்வாங்க. கடவுள் உழைப்பாளிங்க பக்கம்தான் நிற்பார், உழைக்காமல் இருப்பவங்க பக்கம் வெற்றிங்கிறது எப்படி வரும்?
நவராத்திரி சமயத்துல நம்ம பெண்களுக்கு நீங்க சொல்லும் வாழ்த்து மொழி என்ன?
நம் இந்திய பெண்கள் எல்லாருமே தைரியசாலிங்க. குடும்பத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா, பாறை மாதிரி உறுதியாய் இருப்பாங்க. மேற்கத்திய நாடுகள்ல போய் பாருங்க ஏதாவது ஒரு சின்ன மனஸ்தாபம் வந்தாகூட மனம் ஒடிஞ்சுப் போய், குடி, தற்கொலைன்னு பெண்கள் போயிடுவாங்க. நம்ம பெண்கள் எதிலும் எப்பவும், ஸ்டெடியா நின்னு ஜெயிக்கக் கூடியவங்க. எப்பொழுதுமே ஏன்? இப்படி நடந்ததுனு கேள்வி கேட்காதீங்க! ‘அடுத்தது என்ன?’னு யோசியுங்க. வெற்றித் திருமகள் உங்கப் பக்கம் இருப்பாள்" என சிரித்தப்படி, முடிக்கிறார் சுதா சந்திரன் .
சந்திப்பு : நளினி சம்பத்குமார்


நன்றி - மங்கையர் மலர்  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuH8t2SD0bCCtNj9W7kWogHHeTuNMXATxv2rqef7VGs5zz1YS-rgYSUtRqrFciE_EhoURXOBmMEptss7uL-LFCrZS3Eueh4PLgSVJRQe467lBq2S60FItn8L9NpCaA_I6FRwS5xd2X1IY/s1600/sutha+chandran.jpg

ஓப்பனிங்க் சீன்ல 8 கஜம் பட்டுப்புடவையா? அது எதுக்கு?

1.டீச்சர் -நீயும் , அவளும் எழுதுன “ எனக்குப்பிடித்த நாய்” கட்டுரை ஒரே மாதிரி இருக்கே? காப்பி அடிச்சியா?


  நோ மிஸ் போத் சேம் டாக்



------------------


2. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று காட்டாதவர் எங்கள் தானைத்தலைவர் கலைஞர் # கறுப்பு சட்டை



--------------


3. தமிழகத்தின் கறுப்புப்பக்கங்களுக்கு முக்கிய காரணகர்த்தா கறுப்பு சட்டை அணிந்தார்!



---------------------------


4. உண்மையான அன்பிற்காக உயிரையும் விடு , ஆனால் உயிர் போகும் நிலை வந்தாலும் உண்மையான அன்பை விட்டு விடாதே #  SMS



----------------------


5. மிஸ், உங்க பேன் கார்டு நெம்பர்  என்ன?


 கார்டு வைக்கற அளவு எல்லாம் தலைல பேன் இல்லைங்க 



----------------------


6. ஆபிஸ்லயும் அரட்டை அடிச்சுட்டு ,வீட்டுக்கு வந்தும்  அரட்டை அடிக்கும் பெண்களுக்கு தாஜ்மகால் தான் கட்டனும் ;-0 # சும்மா



--------------------


7. இந்திய ரகசியங்களை விற்க முயன்றஅன்சாரிக்கு போலிஸ் காவல்-# அன்சாரி அவிசாரி ஆனாரே அடடே!




-----------------------


8.
சஜியின் அம்மா மீனா 6 மணி நேரம் எடுத்துக்கொண்டு வரைந்த புத்தர் ஓவியம் (5 3/4 மணி நேரம் யோசிப்பு கால் மணி வரைவு?)
Embedded image permalinka

சஜி தன் பிறந்த நாளில் தன் பெற்றோருடன் மீனா.வெங்கடேஷ் 
நண்பர் மகள் (மேக்கப் போடவே 1 மணி நேரமாம் )
a
தனது ஓவியங்களுடன் சஜி
நண்பரின் ம்கள் வரைந்த ஓவியம் (சட்டை பட்டன்)
a
நேற்று ஒரு அழகிய மாலை.கீழ் வானம் சிவந்தபோது
8.சார் ,உங்க படம் பட்டாசா இருக்கும்னு நினைச்சேன்.இப்படி அடாசா இருக்கே? 
----------------
9. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் துப்பாக்கி படத்துக்கு வருகை தரும் ஆடியன்ஸ் துப்பாக்கி லைசன்சும் எடுத்திருக்க வேண்டும் - காவல் துறை அறிவிப்பு 
----------------
10. சுதா சதா உதாசீனப் படுத்தினால் அவரை புகழ்ந்து ஒரு பா இயற்றுக:-) 
--------------------
11. ஆணியம் யுரேனியம் பெண்ணியம் அலு(ம்பு )மினியம் # சும்மா :-) 
---------------------
12. அத்தான்.சாம்பார்ல உப்பு இருக்கான்னு பாருங்க. 
பார்த்துட்டேன் ,இல்லை ;-)   
--------------------
13. சேலை கட்டும்போது கொசுவம் மடித்து ஒழுங்கு படுத்த உதவ வேண்டி இருப்பதால் என் அன்பே இனி சுடிதாரே நீ உடுத்து ;-) 
-------------------
14. சமையல் பண்றீங்களா?பாப்பாவை குளிக்க வெச்சு ரெடி பண்றீங்களா?ஆளுக்கு ஒரு வேளை.
 ஓ ,பாப்பாவோட அம்மாவை வேணா ரெடி பண்றேன் :-)் 
------------------
15. டியர்.பீச்க்கு வந்து ஏதும் பேசாம கால் கிலோ பேரீச்சம்பழம் சாப்பிட்டுட்டு இருக்கீங்களே ஏன் ?
 நாம" டேட்"டிங்க் வந்திருக்கோமே # லயன் டேட்ஸ்் 
---------------------
16.  ரொம்ப அமைதியான பெண்ணை கல்யாணம் செய்தால் தம்பதிக்குள் வாய் சண்டையே வராது # அடிதடிதான் - ஜி ஹெச் பாண்டியன் :-) 
-----------------
17.
சவுரியே பலருக்கு சவுரியமா 





---------------


18. உன்னைக் கட்டிப்பிடித்து தூங்குவதிலும் சில பிரச்சனைகள், உடனே கட்டி வலிக்குது என் கிறாய் 



----------



19. சோனியா மருமகன் ஊழலில் சிக்குகிறார் ; ரூ. 300 கோடி மதிப்பு நில ஊழல் புகார்# ரொம்ப கம்மியா இருக்கே.பாரம்பரியப்பெருமை என்னாவது? 




----------


20. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குசேலை முந்தானைக் கதவுகள் கண்ணியம் கருதி மூடி இருந்தாலும் ஜாக்கெட் ஜன்னல்கள் புற முதுகு காட்டும் - 




------------------


21. பின்நவினத்துவம என்பது தன் பின்னல் அழகை கூந்தல் பராமரிப்பு அழகு நிலையம் சென்று பெண் நவீனப்படுத்திக்கொள்வதே 




---------------------


22.  மேடம்.இன்ட்ரோ சீன்ல 8 கஜம் பட்டுப்புடவைல வர்றீங்க.



குழப்பாதீங்க.ஓப்பனிங் "சீன்"னு சொல்லிட்டு புடவை ல வரச்சொன்னா எப்டி?



---------



மல்லிகை மகள் மாத இதழ் வலைபேச்சு பாகம் 1
 






மல்லிகை மகள் மாத இதழ் வலைபேச்சு பாகம் 2