Sunday, September 30, 2012

பத்ம வியூகம் – ஜெயமோகன்- சிறுகதை

தூண்டு விளக்கேந்திய தாதி கதவை ஓசையின்றித் திறந்து, உள்ளே வந்தாள். அவளிடம்
தீபமிருந்ததனால் அறையின் இருட்டு மேலும் அழுத்தமானதாகப் பட்டிருக்கக்கூடும்.
படுக்கையைக் கூர்ந்து பார்த்தாள். சற்றுப் புரண்டு அசைவு காட்டினேன். அணைந்து
விட்டிருந்த கன்யா தீபத்தை ஏற்றிவிட்டு, கைவிளக்குடன் என்னை நெருங்கினாள்.
குனிந்து மெல்லிய குரலில், “நேரமாகி விட்டது மகாராணி” என்றாள்.


“என்ன?” என்றேன். தொண்டைக்கும் நாவுக்கும் பேச்சே பழக்கமில்லாதது போலிருந்தது.
என் மனமோ பெரும் கூக்குரல்களினாலும் அலறல்களினாலும் நிரம்பி வழிந்து
கொண்டிருந்தது. அப்பிரவாகத்திலிருந்து ஒரு துளியை மொண்டு உதடுகளுக்குக்
கொண்டுவரப் பெருமுயற்சி தேவைப்பட்டது.
”விடிந்து வருகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பவேண்டும் என்று உத்தரவு”
என்றாள் தாதி.


“எங்கு?” என்றேன். என்னால் எதையுமே யோசிக்க முடியாதபடி மனம்
ஓலமிட்டுக்கொண்டிருந்தது.


தாதி தயங்கினாள். உதடுகளை ஈரப்படுத்தியபடி, “இன்று இளவரசருக்கு நீர்க்கடன்”
என்றாள்.


குளிர்ந்த உலோகப் பரப்புள்ள வாள் ஒன்று என் அடிவயிற்றில் பாய்ந்தது
போலிருந்தது. மனம் ஒரு கணம் நின்றுவிட, ஏற்பட்ட அமைதி வலிபோல் என் உடம்பெங்கும்
துடித்தது. பிறகு விம்மல்கள் என் வயிற்றை அதிரவைத்தபடி எழுந்தன. மார்பை மோதி,
தொண்டையை இறுக வைத்தன. உதடுகளைக் கடித்துக் கொண்டேன்.


தாதி குனிந்து, “மகாராணி” என்றாள். என்ன சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
நான் என்னை இறுக்கி, அனைத்தையும் உடலுக்குள் அழுத்திக்கொண்டேன். ஒரு சில
கணங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன். என் குரல் பிறகு நிதானமாகவே வெளிப்பட்டது.
“ஏற்பாடுகள் எல்லாம் ஆயிற்றா?” என்றேன்.


“ஸ்தேதவனத்திலிருந்து பட்டத்துராணியும் பிறரும் நேராக கங்கைக் கரைக்கே வந்து
விடுவார்களாம்.”


எழுந்தேன். உடல் மிகவும் கனமாக இருந்தது. சம நிலையிழந்து துவண்டது. தாதி
என்னைப் பிடிக்கலாமா என்று யோசித்து முன்னகர்ந்தாள். வேண்டாம் என்று கையை
அசைத்தேன். மெதுவாக நடந்தேன். அரண்மனை அமைதியாக இருந்தது. தீபங்கள் நீரில்
மிதப்பவைபோல அலைய, தாதிகள் நடனமாடினார்கள். இரவுக்குரிய ஒலிகள் வெளியே கேட்டபடி
இருந்தன. இளம் தாதி ஒருத்தி வந்து “நீராட ஏற்பாடுகள் செய்துவிட்டேன்” என்றாள்.


இளம் வென்னீர் உடலைத் தழுவி வழிந்தது. மனம் அதில் சிறிது இளைப்பாறுவது
ஆச்சரியமாக இருந்தது. கூந்தலைத் துவட்டிவிட்டு வெண்ணிற உடைகளை அணிந்துகொண்டேன்.
ஒரேயொரு வைர மாலையை மட்டும் அணிந்தேன். சிதையிலும் நான் நகைகளை அணிந்தாக
வேண்டும். நான் சுபத்திரை. பாண்டவ குலத்தின் மகாவீரனின், உபசக்ரவர்த்தியின்
பத்தினி. யாதவகுலத் தலைவனின் தங்கை. அந்த இரு வேடங்களையும் ஒருபோதும் நான்
கழற்ற முடியாது. என் மகன் போர்க்களத்தில் இரும்புக்கதையால் மண்டை உடைபட்டு,
உடல் முழுக்க அம்புகள் தைத்திருக்க, விழுந்து கிடப்பதைப் பார்க்க
நேர்ந்தபோதுகூட அதை மறக்க நான் அனுமதிக்கப்படவில்லை.


செய்தியைக் கூற அன்று
அண்ணாவே வந்தார். எப்போதுமுள்ள தன்னம்பிக்கை நிறைந்த அந்தப் புன்னகை. அமைதியான
குரல். “சுபத்திரை, நீ யாதவ இளவரசி, பாண்டவ ராணி. அதை நீ ஒருபோதும் மறக்க
மாட்டாய் என்று தெரியும்…” பிற தாய்மார்களையும் மனைவிகளையும் போல் மார்பிலும்
வயிற்றிலும் அறைந்தபடி, தலைவிரிகோலமாக ஓட முடியவில்லை. அபிமன்யுவின் உடல்மீது
விழுந்து கதற முடியவில்லை. அவன் பால் குடித்த இந்த மார்புகளை அறைந்து அறைந்து
உடைத்திருந்தேனென்றால் என்னால் தூங்க முடிந்திருக்கும். எப்போதும் அண்ணாவின்
பார்வை உடனிருந்தது. அவரது அழுத்தமான சொறகள். அனைத்துமறிந்த நிதானம்.


“சுபத்திரை, பசுக்கள் திமிறும் திமில்கலைக் கருத்தரிக்கின்றன. குதிரைகள் மண்ணை
மிதித்துப் பாயும் நான்கு குளம்புக்லைக் கருத்தரிக்கின்றன. ஷத்திரியப் பெண்கள்
வீர மரணம் அடையும் மகாபுருஷர்களைக் கருத்தரிக்கிறார்கள்.” அவரை எப்படி
வெறுத்தேன் அன்று! வாழ்நாளில் முதல் முறையாக அவருடைய இனிய குரல் எனக்கு
நெருப்பாகப் பட்டது. அவருடைய நிதானம் அருவருப்பைத் தந்தது. அவருடைய தர்மோபதேசம்
மாறாத நியாயங்கள், சுற்றி வளைக்கும் தருக்கங்கள். அவர் மனிதர் அல்ல. வெறும்
ராஜதந்திரி. உறவு கிடையாது, பாசம் கிடையாது. நெகிழ்ந்துருகிக் கன்னத்தில்
வழியும் ஒரு துளிக் கண்ணீரை அவர் அறிய மாட்டார். அழகிய சொற்றொடர் ஒன்றை அவர்
அத்தருணத்தில் கூறக்கூடும்.


“அண்ணா எங்கிருக்கிறார்?”


“கண்டவனத்தில் சக்ரவர்த்தியுடன் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.”


நான் கேட்க வேண்டிய அடுத்த கேள்விக்காகத் தாதி காத்திருந்தாள்.

“அவர்?”

“இரவு இரண்டாம் நாழிகைவரைகூட இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு ரதத்தில்
ஏறி…”

“சரி” என்றேன். தாதி பின்வாங்கினாள். ஆம், அவர் இன்றிரவு திரௌபதியை நெருங்க
முடியாது. புண்பட்ட புலிபோல் அவள் இருப்பாள். அவளை யாருமே நெருங்க முடியாது.
கிருபரும் அஸ்வத்தாமாவும் வைத்த நெருப்பில் அவளுடைய ஐந்து புதல்வர்களும்
உயிரோடு எரிந்தார்கள். அதைத் தன் கண்ணால் பார்க்கும் சாபம் பெற்ற பிறவி அவள்.
என்ன செய்துகொண்டிருப்பாள் இந்நேரம்? வாளெடுத்து ஆயிரம் பேரின் இதயத்தைக்
கிழித்து, அந்த உதிரத்தில் நீராடினால் ஒருவேளை அவள் மனம் ஆறக்கூடும். ஆரிய
வர்த்தத்தையே சாம்பலாக்கினால் அவள் மனம் ஆறக்கூடும். இந்நிலையில்கூட அவளைப்
பற்றி இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அவள் தன் புதல்வர்களை இழந்த செய்தியைக்
கேட்டபோதுகூட முதன் முதலில் மனதில் எழுந்தது திருப்திதான். அழட்டும். அடிவயிறு
பற்றியெரியட்டும். அவளுடைய ஆங்காரமல்லவா இந்த ஆரியவர்த்தத்தில் பேரழிவை
விதைத்தது. அத்தனைக்கும் பிறகு மணிமுடி சுடர அவள் சக்கரவர்த்தினியாக
சிம்மாசனமேறி அமர்ந்து சிரிக்க வேண்டுமா? தர்மம் அதற்கு அனுமதிக்குமா?
வைரமுடியின் ஒளி அவள் முகத்தில் விழும்போது கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர்
உகுக்க வேண்டும். பாரதவர்ஷம் அவள் பாதங்களைப் பணியும்போது அவள் உடல்
எரியவேண்டும். சப்ரமஞ்சக் கட்டிலில் மலர்ப் படுக்கைமீது ஒரு நாள்கூட அவள்
நிம்மதியாகத் தூங்கக்கூடாது. என் குழந்தை களத்தில் சிதைந்து கிடப்பதைக்
கண்டபோது; ஒரு கணம் அக்காட்சி உச்சமாக, அருவருப்பாக, அந்நியமாகத் தோன்றி என்னை
உறைய வைத்த பிறகு, அந்த குளிர்ந்த வெட்டு என் வயிற்றில் பதிந்தபோது; அடிப்பாவி
என் குழந்தையை பலிவாங்கி விட்டாயே என்றுதான் கூவினேன். என் குரல் என்
மனதுக்குள்ளேயே ஒலித்து அடங்கியது.

உறைந்த ரத்தம் கரிய தடாகமாகச் செம்மண்ணில்
பரவியிருக்க, அதன் மீது கிடந்த உடலில் நான் என் கையால் அணிவித்த மஞ்சள் மேலாடை
கிடந்தது. ஆனால் அந்த முகம்! அது என் குழந்தையல்ல. அந்தக் கணங்களில் அந்த
விலகல்தான் எவ்வளவு ஆறுதலூட்டுவதாக இருந்தது. இது அபிமன்யு இல்லை. அவன் வேறு
எங்கோ இருக்கிறான். எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் என்முன் தோன்றி
ஏமாந்துவிட்டாயா என்று சிரிப்பான்.


எப்படிச் சிரிப்பான்? உதடுகள் சிறியவையாக, சிவப்பாக இருக்கும். மேலுதட்டின்
இளநீல மயிர் மட்டும் இல்லையென்றால் பச்சைக் குழந்தைதான். சிரிக்கும்போது சிறிய
கண்களைப் பாதி மூடிவிடுவான். வலுவான அகன்ற தோள்களைக் குலுக்குவான். எப்போதும்
சிரிப்புதான். எதற்கெடுத்தாலும் கிண்டல். என் தோள்களைப் பிடித்து உலுக்குவான்.
அவனுக்காக அச்சம் மிகுந்தவளாக, மடமை நிரம்பியவளாக என்னையறியாமலேயே நான்
வேடமிடுவேன். கனத்த கரங்கள். வடு நிரம்பிய முழங்கை. அண்ணாந்து பார்க்க வைக்கும்
உயரம். அகன்ற மார்பு. அதைப் பார்த்ததும் மனம் மலரும். மறுகணம் கண்பட்டுவிடுமோ
என்று சுருங்கும்.

முன்பின் தெரியாத உத்வேகம் அவனுக்கு. அன்னையின் மனம்
தவிப்பது ஒருபோதும் அவனுக்குத் தெரிவதில்லை. அவன் நடக்கத் தொடங்கிய நாள்முதல்
தொடங்கிய அவஸ்தை அது. சாளரத்தில் ஏறி, பரணில் தொற்றி, தொங்கியபடி வீரிட்டலறும்.
ஏணியில் ஏறி உச்சிப்படியில் நின்று சிரிக்கும். பலாமரத்துக் கிளைகளின் நுனியில்
தொங்கி ஆடி அடுத்தக் கிளைக்குச் செல்வான். தென்னை மரத்திலிருந்து கங்கை நீரில்
தலைகுப்புறக் குதிப்பான். குதிரை மீதமர்ந்து நீரோடைகளைப் பறந்து தாண்டுவான்.
வாளைச் சுழற்றி மேலே வீசி கீழே நின்று பிடிப்பான். மதம் பிடித்த யானையை அடக்கி
ஏறி அமர்வான. “அபிமன்யு, அபிமன்யு கவனம் கவனம்!” இதுவே என் தாரக மந்திரமாக
ஆயிற்று. வேகம்தான் எப்போதும். எந்த நிமிடமும் மூடப்பட்ட கதவுகளை உதைத்துத்
திறக்கத் துடிப்பவனைப் போல. “அவசரப்படாதே அபிமன்யு” என்று எத்தனை தடவை
கண்ணீருடன் மன்றாடியிருப்பேன். உதிரம் வழிய வந்து நிற்பான். எலும்பு உடைந்து
படுத்துக் கிடப்பான். என் குழந்தைக்குத் தெரிந்திருந்தா இவ்வளவுதான் தன்
நாட்கள் என்று? அய்யோ, என் செல்வத்தை நான் கண்ணாரப் பார்க்கவேயில்லையே.
மார்போடணைத்து திருப்தி வர முத்தமிட்டதில்லையே. இந்த ஆபகரணங்கள், பட்டாடைகள்,
மகாராணிப்பட்டம் எல்லாவற்றையும் வீசிவிட்டு என் குழந்தையுடன் பத்து நாள்
எங்காவது இருக்கிறேன். அடர்ந்த காட்டில் ஒரு குடிலில். அவனுக்குப் பாத சேவை
செய்கிறேன். அவன் தூங்க், விழித்திருந்து கண் நிறைய அவனைப் பார்க்கிறேன். அவன்
என்னை அம்மா என்று அழைப்பதை மீண்டும் கேட்டால் போது. ஆசை தீர ஆயிரம் முறை
கூப்பிடச் சொல்லிக் கேட்டால் போதும். பிறகு அவனைக் கொண்டு செல்லட்டும். இல்லை;
அவனுக்குப் பதில் நான் வருகிறேன். போதும் இனி எனக்கு இங்கு எதுவும்
மிச்சமில்லை.


“தேர் வந்துவிட்டது. மகாராணி” என்று தாதி வந்து சொன்னாள். நான் எழுந்து மெல்ல
வாசலை நோக்கி நடந்தேன்.


*2*
குளிராக இருந்தது. வானமெங்கும் நட்சத்திரங்கள் விரிந்து கிடந்தன. பூமியை மாறாத
காதலுடன் பார்க்கும் ரிஷிகளின் கண்கள். என்னதான் பார்க்கிறார்கள் அப்படி?
மண்ணில் மனிதர்கள் கொள்ளும் துயரங்கள் அவர்களுக்கு அத்தனை மகிழ்வூட்டுகின்றனவா
என்ன? அவர்கள் ரிஷிகள். பந்தபாசங்களை வென்றவர்க்ள். பாமர மனதின் துக்கம்
அவர்களுக்குப் புரியாது. ஆகவேதான் அங்கிருந்தபடி தர்ம நியாயங்களைத்
தீர்மானிக்கிறார்கள். அண்ணாவும் ரிஷிதான். சதுரங்கம் விளையாடும் ரிஷி.
வெற்றிமீது மட்டும் பற்றுக்கொண்ட ரிஷி. மனிதர்களும் பேரரசுகளும் சதுரங்கக்
காய்கள்.


தேர் நிதானமாக ஓடியது. பிரதான வீதி ஓய்ந்து கிடந்தது. தூசி மணம் நிரம்பிய
குளிர்ந்த காற்று உடைகளைச் சிறகுகளாகப் படபடக்கச் செய்தது. இன்னமும் இரவின்
ஒலியே கேட்டது. அவ்வப்போது சில பறவைகளின் ஓய்ந்த ஒலிகள். வீடுகளில் விளக்குகள்
அலைய ஆட்கள் நடமாடுவது தெரிந்தது. ஆனால் குரல்கள் இல்லை. ஒருவேளை இந்த நகரமே
இன்று நீர்க்கடனுக்குத் தயாராகிறது போலும். எத்தனை ஆத்மாக்களை இன்று கங்கை
வாங்கிக் கொள்ளுமோ? அவற்றைக் கடலுக்குக் கொண்டு செல்லும் சக்தி அவளுக்கு
இருக்குமா? முலையூட்டிய மார்பில் பிணங்களை சுமந்து செல்லும் விதி அவளுக்கு.


காற்று வேகமடையும்போதெல்லாம் எண்ணங்கள் பிய்ந்து ரதத்திலிருந்து பறந்து
பின்னோக்கிச் செல்வதாகப் பட்டது. மெல்ல முகத்திலறையும் காற்றின் வேகத்தில்
தெரியும் ரதவேகம் மட்டும் மனதில் எஞ்சியது. தரையில் கால்படாத குதிரை போல மனம்
அந்த ரதத்துடன் சேர்ந்து ஓடியது. காலமும் இடமும் கரைந்து போய் எங்கு
வேண்டுமானாலும் நான் செல்ல முடியும் என்று பட்டது. என் உடலின் எடை குறைந்தது.
என் தசைகள் மென்மையும் இறுக்கமும் கொண்டன. என் சிரிப்பில் அதிர்வும் குரலில்
குழைவும் ஏறியது. அப்போதுதான் நான் சுபத்திரை என்று உணர்ந்தேன். ஆம், நான்
அணிந்திருப்பது ஒரு வேடம். இந்த கனத்த உடல் ஓர் ஆடை, இதைக் கழற்றி வீசிவிட்டால்
நான் சிற்றோடைகள் மீது ரதத்துடன் சேர்ந்து பறக்கும் சுபத்திரை. இரு கைகளிலும்
வாளேந்தி இருவரிடம் போரிடும் யாதவ இளவரசி. ரைவத மலையின் கிரி பூஜையன்று
தோழிகளுடன் மதுவருந்திவிட்டு கும்மாளமிடுபவள். வெறிகொண்டு புரவிமீதேறி உருளும்
பாறைகள் நிரம்பிய மலைச்சரிவில் காற்றாக இறங்குபவள். இது எல்லாம் கனவு.
விழித்துக்கொண்டால் நான் துவாரகையில் என் அறையில் இருப்பேன்.

சுதர்மையும்
கிரிஜையும் பக்கத்து அறையிலிருந்து வருவார்கள். வாட்போர் கற்றுத் தந்த அக்ரூகர்
தாத்தா, பிரியத்துடன் கதை சொல்லும் சாத்யகி மாமா, கண்டிப்பான சாம்பன் மாமா….
எப்போதும்கூட இருக்கும் தோழனாக அண்னா. குறும்பும் முரட்டுத்தனமும் பாசமும்
நிரம்பியவன். எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மதிநுட்பம் வாய்த்தவன். அண்ணா,
நீதான் எப்படி மாறிவிட்டாய், உன் கண்களில் மாறாமல் தெரிந்த அந்தக் குறும்பு
எங்கே?


ரதம் குலுங்கியது. பிறகு மீண்டும் வேகம் எடுத்தது. இதே போன்ற ஒரு மத்ஸ்ய
ரதத்தில் தான் துவாரகையை விட்டு வந்தேன். ரதத்திற்குள் கையில் நாணேற்றப்பட்ட
வில்லுடன் அன்று சற்றும் அறிந்திராத, எனக்கு மாறாக புதிராகத் தோன்றிய, மாவீரன்
இருந்தான். பின்னால் அக்ரூகரின் தலைமையில் யாதவப் படை துரத்தி வந்தது. அம்புகள்
சிறு பறவைகள்போல வந்து தரையிறங்கின. ரதத்தில் நாணொலியின் டங்காரம். குறிதவறாத
அம்புகள் பட்டு யாதவர்கள் குதிரை மீதிருந்து பாறைகள் நிரம்பிய மண்ணில் விழுந்து
அலறினர். மனதில் கனிவெறி ஏறியபடியே வந்தது. கிரிபூஜையின்போது மதுவின் போதை
தலையைக் கிறங்க வைக்கும். அது மேலும் மேலும் என்று குதிரையைத் தூண்டச்
செய்யும். இப்போது மது இல்லை. ஆனால் மனதில் பலமடங்கு போதை. நாணேற்றும்
கரங்களில் புரளும் தசைகளை ஓரக்கண்ணால் பார்த்தேன். மயிர் அடர்ந்த கரிய மார்பு.
மான் தோல் சரடால் கட்டப்பட்டு, காற்றில் பறக்கும் சுருண்ட காகபட்சக் குழல்.
சல்லடத்தின் இறுக்கத்தில் இறுகி இறங்கிய வயிறு. வேகம் வேகம் என்று ஆத்மா
துடிதுடித்தது. முடிவற்று திசைவெளியில் அப்படியே ஊடுருவியபடி இருக்கவேண்டும்
போலிருந்தது.


யாதவ தேச எல்லையைக் கடந்தோம். வெகு தொலைவில் காண்டவப்பிரஸ்தத்தின் மலைகள்
தெரிந்தன. மழை வரப்போகும் தருணம். மங்கிய ஒளியில் யாதவ தேசத்துப் புல்வெளி
வெகுதூரம் வரை பரவியிருந்தது. வானில் பெரும் மேகக் குவியல்கள் மெல்ல நகர்ந்தன.
கூட்டம் கூட்டமாக பசுக்களை ஓட்டியபடி இடையர்கள் சென்றனர். தூரத்தில்
மேகமொன்ரின் இடுக்கு வழியாக செம்பொன்னிற வெயில் ஒரு தூண்போலப் புல்வெளியில்
விழுந்து கிடந்தது. அப்பகுதி மரகதப் பரப்பாக ஜொலித்தது. குதிரைகள்
களைத்துவிட்டன. நுரை தள்ளிய வாயுடன் அவை தலைகுனிந்தன. அவற்றின் உடல்களிலிருந்து
வியர்வை முத்துக்களாக உதிர்ந்து கொண்டிருந்தது. குதிரை வியர்வையின் மனதைக்
கிளரச் செய்யும் மணம் எழுந்தது. என் கண்முன் அறியாத தேசமொன்றின் வாசல்
திறப்பதைக் கண்டேன். தூரத்தில் காட்டின் விளிம்பு தெரிந்தது. தியானத்திலமர்ந்த
பெரும்பாறைகள். பசும்காடுகள் மண்டிய மலைச்சரிவுகள். மலைச்சிகரஙக்ளும் வானும்
மௌனமாகக் கரைந்து ஒன்றாகும் இளநீலம். யாதவநிலத்தின் நாற்புறமும் திறந்த மண்ணில்
வாழ்ந்து பழகிய நான் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறையாகவே அந்தப் புதிய தேசத்தை
உணர்ந்தேன். அங்கு குதிரைமீது ஏறி முடிவற்றுப் பாய்ந்து செல்ல முடியாது. முதல்
முறையாக அச்சம் உள் மனதில் தலைகாட்டியது.


தேரின் உள்ளிருந்து உடலில் சிறு உதிரக்கறைகளுடன் வெளிவந்தார் அவர். தேரை ஓரமாக
நிறுத்தி, குதிரைகளை அவிழ்த்து ஓரமாக நீரோடையில் நீரருந்த விட்டேன்.
புல்பரப்பில் அமர்ந்து கால்களை நீரில் விட்டு அளைந்தபடி அமர்ந்திருந்தேன்.
வானம் கறுத்திருந்ததனால் நீர் குளிராக இருந்தது. என்னருகே வந்து அமர்ந்தார்.
குதிரையின் வியர்வை மணம் என் நாசிகளை நிரப்பியது. என் தோளைத் தொட்டார். சுட்டு
விரலின் நாண்வடு மரக்கட்டை போல உறுத்தியது. கிளர்ச்சி உடம்பெங்கும் கதகதப்பாகப்
பரவியது. “சுபத்திரை, நமது எல்லைக்கு வந்துவிட்டோம். இனி இதுதான் உன் தேசம்.”
நான் தலை குனிந்தான். என் புஜங்களைப் பற்றினார். “அச்சமாக இருக்கிறதா?” மீசை
மிக அருகே தெரிந்தது. கண்களின் ஒளி குறுவாள் நுனிகள் போலக் குத்திவிடும் என்று
அச்சமூட்டுவதாகத் தெரிந்தது. “இல்லை: என்றேன். அக்கணங்களில் உள்ளூர வியந்து
கொண்டிருந்தேன். எப்படி இந்த முடிவை எடுத்தேன்? “நான் அர்ச்சுனன்” என்று இவர்
கூறியதும் எப்படி என் மனத்தின் தளைகளெல்லாம் அறுந்தன. அண்ணாவின் உயிர் நண்பர்,
பெரும் வீரர். என்னை நாடி வந்தவர். இல்லையில்லை. அவற்றையெல்லாம் விட என்னைக்
கவர்ந்தது இன்னொன்று. அவரது சாகசம் பற்றிய கதைகள். புரட்டுகள், ஜாலங்கள்.
போகுமிடமெல்லாம் அவர் வென்றடைந்த பெண்கள். வென்றடக்க ஒரு முரட்டுக் கரும் புரவி
கிடைத்த சந்தோஷம் என்னுடையது. அபாயம் தரும் ஈர்ப்பு அது. அறிய முடியாத
ஆபத்துகளும் இன்பங்களும் நிரம்பிய ஒரு வாசலைத் திறக்கும் துடிப்பு.
”எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?” என்று கேட்டபடியே என் இடையில் கையை
வளைத்து, தோள் வளைவில் முகம் புதைத்தார். மெல்ல நகர்ந்த கைகள் பின்புறம் என்
கச்சை அவிழ்த்தன. உதடுகள் வெப்பமாக அழுந்தின. என் உடம்பு வெம்மையும்
இறுக்கமுமாக எழுந்தது. மறுகணம் அந்த அலட்சியமான சுதந்திரம் என்னைச் சுட்டது.
கைகளால் அவர் மார்பைப் பிடித்துத் தள்ளினேன். திமிறினேன். என் வளையல்கள்
குலுங்கின. மாலைகள் நெறிபட்டன. அவை என்னைக் கேலிப் பொருளாக மாற்றுவதை
உணர்ந்தேன். அவருக்கு என் திமிறல் உற்சாகத்தைத் தந்தது. சிரித்தபடி,
“குதிரைக்குட்டி போலிருக்கிறாய்” என்றார்.


என் வேகம் தளர்ந்தது. கூசிச் சுருங்கிப்போனேன். நான் ஒரு முரட்டுக் குதிரையை
வெல்லவில்லை. ஒரு சிறுத்தையால் வேட்டையாடப்பட்டிருக்கிறேன். அவரைத் தள்ளுவது
பயனற்றது என்று பட்டது. அவர் என் உடலைக் கையாண்ட விதத்தில் இருந்த அனுபவத்
தேர்ச்சி என் அங்கங்களை உறைய வைத்தது. என் மனம் கூர்மையடைந்தது. அந்த எண்ணம்
வந்த உடனே அந்த ஆயுதத்தின் கூர்மையை எண்ணி என் மனம் உவகை கொண்டது. ”சரி, உங்கள்
ராஜபத்தினி என்ன சொல்லப் போகிறாள் இதற்கு?” என்றேன்.


அவர் பிடி தளர்ந்தது. முகம் வெளிறியது. எழுந்து அமர்ந்தார். தலை குனிந்தபடி,
“எனக்கும் அவளை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது” என்றார். “ஒரு கணம்
கங்கைபோல அரவணைப்பாள். மறுகணம் பாம்பு போலிருப்பாள்.”


என் மனம் இறுகியது. பிறகு நெகிழ்ந்தது. இந்த ஜகப் புரட்டனுக்குள் இருக்கும்
அஞ்சிய குழந்தையை இதோ நான் கண்டுகொண்டிருக்கிறேன். அவர் தலையை என்
மார்போடணைத்தபடி, “கவலைப்படாதீர்கள்” என்றேன். மனதைக் கருணை நீராட்டிய போதிலும்
உள்ளூர ஒரு வெற்றிக்களிப்புதான் இருந்தது.


“நீ ஒரு இடைச்சியாக வேடமிட்டு திரௌபதியிடம் போ. அவளிடம் எனக்கு வேறு
யாருமில்லை; நீயே அடைக்கலம் என்று கூறு. அடைக்கலம் தந்துவிட்டாளென்றால் பிறகு
விஷயத்தைச் சொல்வோம். அவள் வாக்கு மாறக் கூடியவளல்ல” என்றார்.
“ஏற்றுக்கொள்ளவில்லையென்றால்?”
”நிச்சயமாக ஏற்றுக்கொள்வாள். அவளுடைய கர்வம் ஒரு கோட்டைபோல. அதை உடைத்து உள்ளே
போனால் அவள் ஒரு குளிர்ந்த தடாகம்.”


மீண்டும் என் ஆங்காரம் படமெடுத்தது. கசப்பு மனமெங்கும் பரவியது. அதன்பிறகு அவர்
என்னைத் தொட முயலவில்லை. எரியும் மனத்துடன் நான் ரதத்தில் ஏறிக்கொண்டேன்.
மழைத்துளிகள் உதிரத் தொடங்கின. வானம் உடைந்து கொட்ட ஆரம்பித்தது. புல்வெளியில்
மழையின் வெண்பட்டுத் திரை நெளிந்தது. அதைக் கிழித்தபடி ரதம் ஓடியது.
காண்டவப்பிரஸ்தத்தின் அடர்ந்த காடு மீது மழை கொட்டும் ஓலம் பெரியதோர்
சைன்யத்தின் போர்க்குரல் போல ஒலித்தது. அச்சம் புறக்குளிரைவிட அழுத்தமான
குளிராக என் மீது பரவியது. எனக்காக வியூகமிட்டிருக்கும் படை எது? ஒரே கணத்தில்
நான் உள்ளே நுழைந்து விட முடியும். ஆனால் அதன் நிச்சயமின்மையே என்னை ஈர்க்கும்
சக்தியாக இருந்தது. காட்டில் ரதம் நுழைந்தபோது உடம்பு ஏனோ சிலிர்த்தது.


*3
*
கங்கை நீர் கலங்கலாகச் சுழித்துச் சென்றது. அதன் கரைகளில் உயரமற்ற புதர்
மரங்கள் அடர்ந்திருந்தன. கரையோரமாக செந்நிற உத்தரீயம் போலப் பாதை கிடந்தது.
புரவிகளின் பாதங்கள் புழுதிமீது ஓசையின்றிப் படிய, நீரில் மிதப்பதுபோல ரதம்
நகர்ந்தது. திரையை விலக்கிப் பார்த்தபடியே வந்தேன். இருள் இன்னும் பிரியவில்லை.
ஆயினும் கூட்டம் நிறையவே இருந்தது. மரத்தடிகளில் மூட்டை முடிச்சுகளுடன்
வயோதிகர்கள் அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி முகத்திரை போட்டபடி, கூட்டம்
கூட்டமாகப் பெண்கள். ஊடே குழந்தைகள் விளையாடின. மாட்டு வண்டிகள் அவிழ்த்துப்
போடப்பட்டிருந்தன. மாடுகள் மணி குலுங்கத் தலையாட்டியபடி, அசை போட்டுக்கொண்டு
படுத்துக்கிடந்தன. கங்கை நீரின்மீது மட்டும் ஒளி சற்று அதிகமாக இருந்தது. அதன்
செந்நிற ஆழத்திற்குள் எங்கோ இருந்து ஏதோ ஒளிவிடுவது போலிருந்தது.
படித்துறைகளில் புரோகிதர்கள் நிரம்பியிருந்தனர். கட்டுக் கட்டாகத் தர்ப்பை
கிடந்தது. வெண்கலப் பாத்திரங்கள் கங்கையின் அலைபாயும் ஒளியை மௌனமாகப்
பிரதிபலித்தபடி காத்து நின்றன. கங்கையின் கரையோரமாக நீலமும் சிவப்பும்
வெள்ளையுமாக நீர்ப்பூக்கள் இலைப் பரப்புடன் சேர்ந்து நெளிந்தன.


அரசகுல ரதம் வருகிறது என்று தெரிந்தும் எவரும் கிளர்ச்சி அடையவில்லை. எழுந்து
பார்க்கவுமில்லை. வெகுசிலர் ஆர்வமின்றி திரும்பிப் பார்த்தனர். வெறித்த கண்கள்
என்னைத் தொட்டு மீண்டன. மரங்களின் மேல் நுனிகளில் இளம்பசுமை துலங்க
ஆரம்பித்துவிட்டது. இன்னும் அரை நாழிகையில் நன்கு புலர்ந்துவிடும். என்ன இது?
இவ்வளவு கூட்டமிருந்தும் ஏன் ஒலியே இல்லை? மனித உடல்கள் நீர்மீன்கள் போல
ஒலியின்றி வாயசைஹ்தபடி மெல்ல நடமாடுகின்றன. விசித்திரமானதொரு பொம்மலாட்டம்
போலிருந்தது. திடீரென்று அக்கூட்டத்தில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும்
மட்டும் இருப்பதைப் பார்த்தேன். இளைஞர்களேயில்லை. மீண்டும் அடிவயிற்றில் அந்த
வாள் பாய்ந்தது. அத்தனை பேருமா? அத்தனை பேருமா? உடம்பு நடுங்க, கண்களை மூடி,
நெற்றியை விரல்களால் அழுத்தியபடி, இறுகி அமர்ந்தேன். மனம் ரத வேகத்தின்போது
கொண்ட விடுதலையுணர்வு முழுக்கப் பின்னகர்ந்து துவாரகை போல, முற்பிறப்பு
ஞாபகம்போல, எங்கோ மறைந்தது. எல்லாம் வெறும் கனவு. நான் இதுதான். இந்த கனக்கும்
உடம்பு. கனக்கும் மனம். இந்தப் பாரம்தான் நான். இந்த வெறுமைதான் நான்.
ரதம் தயங்கியது. வீரர்கள் குதிரைகளில் வந்து எதிர்கொண்டனர். என் ரத
முகப்பிலிருந்து தண்டேந்தி என் குலத்தையும் சிறப்பையும் கூறி என்னை
அறிவித்தான். அப்பெயர் வரிசை மிக அருவருப்பூட்டுவதாக எனக்குக் கேட்டது.
அவற்றில் எதுவுமே நானல்ல என்று கூவ வேண்டும் போலிருந்தது. வம்சங்கள்,
பட்டங்கள், பதவிகள். கங்கைக் கரையெங்கும் மூடுபடமிட்டுக் கூனியமர்ந்திருந்த
விதவைகளின் உருவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. ரதம் உள்ளே போயிற்று. புல்வெளியில்
பர்ணசாலைகள் வரிசையாக இருந்தன. செம்பட்டு முகப்பு போடப்பட்டது. திரௌபதியின்
பர்ண சாலை போலும்.


சற்றுத் தள்ளிப் பெரிய வட்ட வடிவ பர்ணசாலையைச் சுற்றிக்
காவல் வீரர்கள் உருவிய வாளுடன் நின்றனர். மன்னருக்கு ஒருபோதும் இத்தகைய
பாதுகாப்பு இருந்ததில்லை. ஆனால் இனி வேறு வழியில்லை. காட்டிற்குள் சிரஞ்சீவியான
அஸ்வத்தாமா தணியாத கோபத்துடன் அலைந்துக் கொண்டிருக்கிறான். இனி குருவம்சத்தில்
எவரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒருபோதும் போர் அவர்களை விட்டு விலகாது.
வெற்றிமாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள்
நிம்மதியாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும்
மிச்சமிருக்கும்.


என் பர்ணசாலை முன் ரதம் நின்றது. இறங்கிக்கொண்டேன். என்னைப் பார்த்ததும் பெரும்
அழுகையோசைகள் கேட்டன. என் தலையை அலை வந்து முட்டியது. என் வயிறு அதிர்ந்து
கொண்டிருந்தது. ஆனால் திடமான காலடிகளுடன் நடந்தேன். பர்ணசாலைக்குள் அரசகுலப்
பெண்கள், யார் யார் என்று பார்க்கவில்லை. விதவைகளுக்குப் பெயர் எதற்கு?
அடையாளம் எதற்கு? அவர்கள் சிதை காத்திருக்கும் ‘வெறும் சடலங்கள்’. ஒருவேளை
இதுவே அவர்கள் இறுதியாகப் பார்க்கும் வெளியுலகாக இருக்கக்கூடும். குழந்தைகளே,
வானையும் மரக்கூட்டங்களையும் மலர்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருப்தியாக கங்கையில் நீராடுங்கள்.
”மகாராணி” என்று ஒரு தாதி மரவுரியைக் கொண்டுவந்து நீட்டினாள். அதை அணிந்து
கொண்டேன். கனமாக உடலை அறுத்தியது. விரத உணவு வந்தது. கசப்பும் துவர்ப்பும். ஒரு
மண்டலமாக சக்ரவர்த்தியும் பரிவாரமும் இந்த உணவை உண்டு இந்த உடையை அணிந்து
விரதம் அனுஷ்டிக்கிறார்கள். யாருக்காக? எந்த அக்னியை அணைக்க? தாதியைக்
கையசைத்து அழைத்தேன். “அண்ணா எங்கிருக்கிறார்?” என்று கேட்டேன்.
“ராஜ சபையில் மகாராணி.”
”வியாச மகரிஷி வந்திருக்கிறார்” என்றார் ஒரு முதிய தாதி. “அவருடன் உரையாடியபடி
சோலைக்குள் செல்வதைப் பார்த்தேன்.”
“நான் உடனடியாக வியாச ரிஷியைப் பார்த்தாக வேண்டும்” என்றேன். “உபசக்ரவர்த்தி
எங்கே?”
தாதி இன்னொருத்தியைப் பார்த்தாள். தயங்கியபடி, “இரவு ரதமேறி நகருக்குள்
சென்றார். இன்னும் வரவில்லை” என்றாள்.


புதல்வனையோ கணவனையோ இழக்காத பெண் யாராவது கிடைத்திருக்கக்கூடும் என்று
கசப்புடன் எண்ணிக் கொண்டேன். இந்தக் கசப்பு எப்போது என் மனதில் நிரம்பியது?
எந்தக் கணத்தில்? பாயும் ரதத்தில் கடிவாளத்தைப் பற்றியபடி நின்று நான்
ஓரக்கண்னால் பார்த்து ரசித்த ஆண்மகன் தன் இறுகும் தசைகளுடன் இப்போதும் என் மன
ஆழத்தில் இருக்கிறான். இந்த மனிதர் – இவருடைய முகமும், குரலும், அசைவுகளும்
இவரைப் பற்றிப் பிறர் கூறிக்கேட்கும் ஒவ்வொரு சொல்லும் -என்னைக் கசப்பால்
நிறைக்கிறார். அதை அவர் அறிந்திருக்கக்கூடும். என் கண்களை ஏறிட்டுப் பார்த்துப்
பேச அவரால் முடியாது. என் முன் நிற்கும்போது அவர் உடலெங்கும் ஒரு சிறு தவிப்பு
அலையும்.


அந்தத் தாழ்வுணர்வு கோபமாக, மூர்க்கமாக வெளிப்படவும் கூடும். ஆனால்
என்னால் ஏன் இன்னமும் அவரை அலட்சியம் செய்ய முடியவில்லை? எத்தனை முயன்றும்
அவரைப் பற்றி எண்ணாமல் ஒரு பொழுதுகூடத் தாண்டுவதில்லையே. அவர் மீது என்னுள்
இன்னும் காதல் மிஞ்சியுள்ளதா என்ன? காதலா? அது வெறும் அறைக்கூவல். அவர் உள்
மனதின் அச்சம் தெரியவந்த கணமே அது அணைந்து போயிற்று. அவர் பெண்களை உடலாக
மட்டும் கையாளும்போதுதான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும். அவர் கையில்
துவண்டு நிமிர்ந்து, சரம்சரமாக எய்யும் காண்டீபமே அவர் வரித்துக் கொண்ட
பாவனைத்தோழி போலும். அவர் திறமையெல்லாம் உள்ளூர ஓடும் வெறுமையின் வேகம் போலும்.
பெண்களின் உடல் வழியாக அவர் தேடுவது யாரை? காண்டீவமாக மாறித் தன் உடலின் ஒரு
உறுப்பாக இணைந்து கொள்ளும் ஒருத்தியையா?
யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. பேசாத சொற்களெல்லாம் மனதில் தேங்கி
அவற்றின் வேகம் என்னைப் பைத்தியமாக அடித்துவிடும் என்று பட்டது. மகாராணி
பட்டத்தைத் துறந்து ஒரு பெண்ணாக, பேதையாக, குழந்தையாக, புழுவாக அழுது துடிக்க
வேண்டும். வியாச ரிஷியின் வெண்தாடி பரவிய குழந்தை முகம் மனதில் சிறு ஆறுதலாக
எழுந்தது.
தாதி என்னைச் சோலைக்குள் கூட்டிச் சென்றாள். பசுமையான மரங்கள் அடர்ந்து நிற்க
ஊடே பாதை நெளிந்து சென்றது. பாறையொன்றில் அண்ணாவும் வியாச மகரிஷியும்
அமர்ந்திருந்தனர்.


என்னைப் பார்த்ததும் வியாச மகரிஷி புன்னகையுடன், “வா குழந்தை” என்றார்.
அமரும்படி சைகை காட்டினார். அவர் பாதங்களைப் பணித்துவிட்டுத் தரையில்
அமர்ந்தேன். அண்ணா சிந்தனை நிரம்பிய முகத்துடன் என்னைப் பார்த்தார்.
“வருவீர்கள் என்று எவரும் கூறவேயில்லை தாத்தா” என்றேன்.


“இன்று நீர்க்கடன். நான் வந்தாக வேண்டுமல்லவா?” என்றார் வியாசர்.
என் கண்களும் மனமும் திறந்துகொண்டன. என் உடல் வழியாக அழுகை சுழற்காற்று
மரத்தைக் கடந்து செல்வதுபோலக் கடந்து சென்றது.
வியாசர் என் நெற்றிமயிரை வருடினார். “நான் என்ன சொல்ல இருக்கிறது குழந்தை?
அழுது அழுதுதான் உன் மனம் ஆறவேண்டும்” என்றார்.
“இதெல்லாம் எதற்காக தாத்தா? யாருடைய லாபத்திற்காக? இந்த கங்கைக்கரை முழுக்க…”
“பார்த்தேன்” என்றார் வியாசர். “எதற்காக என்று மட்டும் கேட்காதே. அப்படிக்
கேட்க ஆரம்பித்தால் தெய்வங்களே திகைத்து நின்றுவிடுவார்கள்…”


“என் அபிமன்யு.. என் தங்கம்.. அவன் தலை பிளந்து.. என்னால் மறக்கவே முடியவில்லை
தாத்தா…”


என் அழுகையைப் பார்த்தபடி வியாசர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். பிறகு கம்மிய
குரலில் “நான் என்ன சொல்லுவது அம்மா? உனக்கு ஒரு குழந்தைதான். எனக்கு…?
குருவம்சமே என் குழந்தைகளல்லவா? வென்றதும் வீழ்ந்ததும் என் உதிரமல்லவா? இதோ
இன்ரு கங்கை அள்ளிச் செல்லும் அத்தனை ஆத்மாக்களுக்கும் பிதாமகனல்லவா நான்?”


சட்டென்று என் மனம் சீறியெழுந்தது. ”இதோ இருக்கிறாரே, கேளுங்கள் தாத்தா.
எல்லாவற்றிற்கும் காரணம் இவர்தான். இவருடைய குயுக்தியும் தந்திரமும்
தருக்கமும். ஆட்சிக்காக சகோதரன் கழுத்தை சகோதரன் அறுக்கலாம் என்று இவர் ஒரு
உபதேச மஞ்சரி எழுதி அதைக் களத்தில் தினம் தினம் பௌராணீகர்கள் பாடினார்கள்.
கொல்லு கொல்லு என்று இரவு முழுக்க கோஷம் எழுந்தது….”


“போர் எப்போதும் வெற்றி ஒன்றால் மட்டுமே அளக்கப்படுகிறது அம்மா.”


”இப்போது இதோ வெற்றி கிடைத்துவிட்டதே. இவருக்குத் திருப்திதானா? என் குழந்தை..
என் செல்வம்.. அவன் மரணத்திற்கு யார் காரணம்? இதோ இவர்தான். என் குழந்தையைக்
கொன்றவர் இவர்தான். சதுரங்கத்தில் ஒரு காயாக அவனை வைத்து விளையாடினார். அடுத்த
நகர்வுக்குத் தேவையெழுந்தபோது தன் சுண்டுவிரலால் அவனைச் சுண்டி எறிந்தார்.
அரவான், கடோத்கஜன்… கடைசியில்க் அபிமன்யு. சொந்த ரத்தத்தில் பிறந்தவர்களைக்
கொல்லும்படி தான் சொன்ன உபதேசத்தைத் தனக்கும் பொருத்திக்கொண்ட மகான் இவர்…”
“சுபத்திரை, நீ உன் வேதனையில் பேசுகிறாய்” என்றார் வியாசர்.
“என் குழந்தை எப்படி இறந்தான்? அவன் என் கருவில் இருந்த போது பத்மவியூகத்தில்
நுழையும் வழியை இவர் கற்றுத் தந்தார். வெளியேறும் வழியைக் கூறாமலேயே
விட்டுவிட்டார். எங்கும் எதிலும் முட்டி மோதி நுழைபவனாக, வெளியேறும் வழி
தெரியாதவனாக, அவன் வளர்ந்தான். ஏன் என் குழந்தைக்கு அவன் பிறந்து வளர்ந்து களம்
காணும் தினம் வரை இவர் வெளியேறும் வழியைச் சொல்லித் தரவில்லை? சதி. வேறு என்ன?
இவருக்கு பந்தமில்லை. பாசமில்லை. தர்மம் என அவர் நம்பும் ஒன்றை நிறைவேற்றுவது
தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.”
“யார்தான் அப்படி இல்லை?” என்றார் வியாசர். “உன் தருமம் தாய்மை என நீ
எண்ணுகிறாய். அதைத் தவிர வேறு எதுவும் உன் கண்ணில் படவில்லையே….”
”எதற்கு என் குழந்தைக்கு பத்ம வியூகத்திலிருந்து வெளியேறும் வழியை இவர்
கற்றுத்தரவில்லை? அதைச் சொல்லச் சொல்லுங்கள் முதலில்.”
அண்ணா தணிந்த குரலில், “பலமுறை சொல்லிவிட்டேன் சுபத்திரை. உன் காது
மூடியிருக்கிறது. பத்ம வியூகம் சிறிய படைகளை நடத்தும்போது செய்ய வேண்டியது.
நகரங்களைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றியும் அமைப்பதுண்டு. துரோணர் அதைப்போல
குருஷேத்திரத்தில் வகுப்பார் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?


அந்தத் தருணத்தில் அர்ச்சுனன் சம்சப்தர்களுடன் போரிடப்போவான் என்று எப்படி நான்
ஊகித்திருக்க முடியும்? தருமர் அத்தனை வீரர்கள் இருக்க அபிமன்யுவைப் போய் அதை
உடைக்கச் சொல்வார் என்றோ, அவனைப் பின் தொடரந்த தருமரையும் பீமனையும் பிற
படைகளையும் ஜயத்ரதன் ஒருவனே தடுத்துவிடுவான் என்றோ நான் எப்படி எண்ண முடியும்?”


அண்ணா நிறுத்தினார். உடைந்த குரலில், “அதைவிட ஞானமும் விவேகமும் நிரம்பிய
குருநாதர் துரோணரும், பாண்டவ ரத்தமான கர்ணனும், மகா தார்மிகரான சல்லியரும்,
சுத்த வீரனான துரியோதனனும் சேர்ந்து ஒரு சிறுவனை சூழ்ந்து எதிர்த்துக்
கொன்றார்கள் என்பது இப்போதுகூட என்னால் நம்ப முடியாதவையாகவே உள்ளது.”
“போரில் வெற்றியே அளவுகோல்” என்றார் வியாசர் மீண்டும். “மனிதர்களால் போரைத்
தொடங்க மட்டுமே முடியும். பிறகு எல்லாம் விதியின் தாண்டவம்.” அவர் தலை மேலும்
குனிந்தது. பெருமூச்சுடன், “மனிதர்கள் போரிடாத சத்திய யுகம் ஒன்று வரக்கூடும்”
என்றார்.
“ஆம், எல்லாம் என் தத்துவம்தான்” என்றார் அண்ணா என்னிடம். “ஆனால் என் மனதை
ஆற்றும் வலிமை அவற்றுக்கு இல்லை. அபிமன்யு என் குழந்தை. பாதி நாள் துவாரகையில்
ருக்மிணியும் சத்யபாமையும் அவனை வளர்த்தார்கள். என் பிள்ளைக்கலியைத் தீர்க்க
வந்த தெய்வ அருளாக அவனை எண்ணினேன். இந்த மார்பிலும் தோளிலும் போட்டு அவனை
வளர்த்தேன். காடுகள் தோறும் அழைத்துச் சென்று அவனுக்கு வித்தைகள்
கற்றுத்தந்தேன்….”
“ஆம். அவன் களத்தில் காட்டிய வீரபராக்ரமங்களை இன்று பாரதவர்ஷமே பாடுகிறது”
என்றார் வியாசர். அவர் அண்ணாவை சமாதானப்படுத்த முயல்கிறார் என்பது தெரிந்தது.
“கோசல மன்னன் பிருஹத்பாலனை அவன் கொன்றது பற்றி சற்று முன்பு கூட ஒரு சூதன்
அற்புதமான பாடல் ஒன்றைப் பாடினான்.”
“ஆனால் நான் கற்றுத்தராத ஒன்று அவனை பலி கொண்டு விட்டதே கிருஷ்ணதுவைபாயனரே.”
“அவன் விதி அது” என்றார் வியாசர். “ஜென்மங்கள்தோறும் அது அவனைத் தொடர்கிறது.
இப்பிறவியில் உன் கருவில் அவனிருந்தபோதே அது அவனை அடைந்துவிட்டது.”


என் மனம் பகீரிட்டது. “தாத்தா, அப்படியானால் என் குழந்தைக்கு அடுத்த
பிறவியிலும் இதே விதியின் மிச்சம்தானா உள்ளது?” என்றேன்.


“இருக்கக்கூடும்; யாரறிவார்…?”


பதறிய குரலில், “தாத்தா, தன் விதியை அவன் அறிந்து கொள்ளவில்லையே. என்
குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே” என்றேன்.
“இது என்ன பேச்சு குழந்தை? நமது மகனாக அவன் விதி முடிந்தது. இனி நம் கடன் அவன்
நினைவை நம் மனதிலும் வம்சத்திலும் நட்டு வைப்பது மட்டுமே…”
“அது உங்கள் வேலை. என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லை. அதை
எண்ணினால் இனி நான் ஒருநாள்கூட நிம்மதியாக உயிர்வாழ முடியாது. தாத்தா நீங்கள்
முக்காலமும் உணர்ந்தவர். எனக்குக் கருணை காட்டுங்கள். உங்கள் பாதங்களைப்
பற்றிக்கொண்டு கேட்கிறேன். எனக்கு உதவுங்கள்….”
“குழந்தை, நீ உணர்ந்துதான் பேசுகிறாயா?”
“நன்றாக உணர்ந்துதான். என் குழந்தைக்கு அவன் விதியை அவன் வெல்லும் முறையை நான்
கற்பித்தாக வேண்டும். அடுத்த பிறவியிலாவது அவனுக்கு மீட்பு வேண்டும்.”
“மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லையை நீ தாண்ட முயல்கிறாய் குழந்தை. அது
சாத்தியமேயில்லை.”
நான் பாய்ந்து எழுந்தேன். “இனி உங்களிடம் கேட்க எனக்கு எதுவும் இல்லை, இப்போதே
நீங்கள் உதவ வேண்டும். இல்லையேல் இப்போதே இங்கேயே கங்கையில் குதித்து
உயிர்விடுவேன். இனி எனக்கு எதுவும் மிச்சமில்லை…”
“குழந்தை….” என்று கூறியபடி வியாசர் ஓடிவந்து என்னைப் பிடித்தார். “நில்லு.
சொல்கிறேன்…” என் தோளை அவர் கரம் இறுகப் பற்றியது. “என்ன காரியமம்மா
செய்கிறாய்? முதிய வயதில் இதுவரை நான் கண்டதெல்லாம் போதாதா? இரு, ஒரு வழி
சொல்கிறேன்.”
அப்போதும் சிந்தனை தேங்கிய முகத்துடன் அண்ணா அங்கேயே அமர்ந்திருந்தார்.
“தண்டகாரண்யத்தில் ஒரு ரிஷியை நான் பார்த்தேன். அவர் இப்போது இங்கு கங்கைக்
கரையில் எங்கோ இருக்கிறார். அவரால் பிறவிகளின் சுவரைத் தாண்டிப் பார்க்க
முடியும் என்கிறார்கள். அவரை அழைத்து வருகிறேன். உனக்காக.. ஒரு போதும் ஒரு ரிஷி
செய்யக் கூடாத காரியம் இது. என் மூதாதையரின் சாபம் என் மீது விழும்..
பரவாயில்லை.”
”எனக்கு வேறு வழியில்லை தாத்தா. என்னை மன்னித்து விடுங்கள். என் குழந்தையிடம்
நான் பேசியாக வேண்டும். என்ன நேர்ந்தாலும் சரி. என் குழந்தை வெளியேறும் வழி
தெரியாது பிறவிகள் தோறும்… தாத்தா தயவு செய்யுங்கள், தயவு செய்யுங்கள்…”
அவர் காலில் விழுந்தேன். என்னைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். என் கண்ணீர்
அவர் தாடியை நனைத்தது.
*4*
பர்ணசாலைக்குள் எட்டிப் பார்த்த தாதி என்னிடம் “உபசக்ரவர்த்தி தங்களை
அழைக்கிறார்” என்றாள். எழுந்து வெளியே வந்தேன். பின் மதியம் ஆகிவிட்டிருந்தது.
ஆனால் வெயில் வராமல் காலை போலவே இருந்தது. வானம் முழுக்க மேகங்கள். மஞ்சன
மரத்தடியில் அவர் நின்றிருந்தார். அவரை அணுக அணுக என் மனம் எரிச்சலடைந்தது.
ஆனால் உடலில் ஒரு கிளர்ச்சி இருந்தது. அது இம்சைக்கான ஆர்வம். அவரைக் குத்திப்
புண்படுத்தி, அவர் சுருண்டு திரும்புவதைக் கண்டு குற்றவுணர்வு கொள்ளும்போதுதான்
அது தணியும். அவர் கண்களை உற்றுப் பார்த்தபடி “என்ன?” என்றேன்.
“பொழுது சாய்ந்துவிட்டது. அபிமன்யுவிற்கு இன்னும் நீர்க்கடன் செலுத்தவில்லையே
என்று அண்ணா கேட்டார்” என்றார்.
“அரவானுக்கு நீர்க்கடன் முடிந்துவிட்டதா?” என்றேன். அவருடைய சுருண்ட மயிர்கள்
ஈரமாகத் தொங்கி ஆடின. காதோரம் சில நரை மயிர்கள். மீசை கன்னத்தில்
ஒட்டியிருந்தது. கண்களுக்குக் கீழே கருவளையங்கள். பார்வையில் எப்போதுமிருக்கும்
சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தின் ஒளி அறவே இல்லை. இனி அது ஒருபோதும் திரும்பாது
போலும்.
“ஆம்” என்றார்.
அவருடைய பலவீனமான இடத்தில் நான் போட்ட அடி அது. அவர் நெற்றியில் நரம்பு
அசைந்தது. கண்கள் சுருங்கி இம்சை தெரிந்தது. என் மனம் உள்ளூர கும்மாளமிட்டது.
மேலும் மேலும் என்று தாவியது.
“சுருதர்மாவிற்கும் முடிந்துவிட்டதா?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.
அவர் கண்கள் சீற்றம் கொண்டன.
“அபிமன்யு மட்டும்தான் மீதி” என்றார்.
நான் தலையசைத்தேன்.
“ஏன் தாமதம்?” என்றார்.
“சற்று பிந்தட்டும்.”
“எங்கோ ரதமனுப்பியிருப்பதாகக் கூறினார்கள்.”
“ஆம்.”
“எதற்கு?”
“ஒன்றுமில்லை” என்றேன். இவரிடம் நான் கூற முடியாது. அபிமன்யு என் அந்தரஙகத்தின்
ஆழம். அதை ஒருபோதும் இவருடன் பகிர முடியாது. அதை எவரிடமும் பகிர முடியாது.
அவனிடம்கூடப் பகிர்ந்ததில்லை. அவன் பிறந்து விழுந்தபோது அவனைப் பார்த்தவர்கள்
தந்தையைப்போல என்று கூறியபோது என் மனம் எரிந்தது. அவன் வளர வளர அவனில் கூடி
வந்த குறும்பும், வில் திறனும், துணிச்சலும் அவரையே ஞாபகப்படுத்தின. அவை
என்னைக் கோபம் கொள்ளச் செய்தன. பாதி நாள் அவனை துவாரகைக்கு அனுப்பியதே
அதனால்தான். மீதிநாள் அவர் ஊரில் இருந்ததுமில்லை. ஆனால் அவனில் நான்
ரசித்ததெல்லாம் அவற்றைத்தானோ?
“ஏன் என்று கூறு” என்றார் கோபத்துடன். “இன்று நீர்க்கடன் வேண்டாம் என்று
எண்ணுகிறாயா? யாரைக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறாய்?”
நான் அவர் கண்களைப் பார்த்தேன். “அபிமன்யு என் மகன். அவனுக்கு எப்படிச் செய்ய
வேண்டும் என நான் அறிவேன்.”
அவர் கோபம் முகத்தில் நெளிந்தது. உரத்த குரலில், “அவன் என் மகன் இல்லையா?
எனக்கு மட்டும் துயரமில்லையா?” என்றார்.
“துயரமா…. எதற்கு?” என்றேன் வியப்புடன். உள்ளூர என் இம்சிக்கும் இச்சை
கூர்மையடைந்தது. மனம் மிகுந்த நிதானத்துடன் சொற்களைத் தேர்வு செய்தது.
“நீங்கள்தான் பழிவாங்கிவிட்டீர்களே? பொழுது சாய்வதற்குள் ஜயத்ரதன் தலையைக்
கொய்து, அதைக் காற்றில் பறக்கவைத்து, அவன் தந்தை கரங்களில் விழ வைத்து, அவர்
உயிரையும் பறித்து… சூதர்கள் பரவசமாகப் பாடும் கதை அல்லவா அது? வம்சகாதையில்
ஒரு பொன்னேடல்லவா? அப்புறம் எதற்குத் துக்கம்?”
“நீ என்னை ஏளனம் செய்கிறாய். உனக்கு மட்டும் பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது என்று
கற்பனை செய்து கொள்கிறாய். உன்னை முக்கியமானவளாகப் பிறரிடம் காட்டிக்கொள்ள இந்த
துக்க வேடத்தை மிகைப்படுத்திக்கொள்கிறாய்…”
நான் அவர் கண்களை மீண்டும் உற்றுப் பார்த்தேன். “நேற்றிரவும்
எங்கிருந்தீர்கள்?”
அவர் தடுமாறி, முகம் வெளிறி, “ஏன்?” என்றார்.
“இல்லை, தாத்தா தேடினார்” என்றேன்.
“அவரைப் பார்த்தேனே.”
“ஓகோ” என்றேன். பிறகு பார்வையை விலக்காமலே நின்றேன்.
“நான் வருகிறேன்” என்று அவர் நடந்தார். என் உடல் தளர்ந்தது. சன்னதம் விளகிய
குறிசொல்லி போல சக்தியனைத்தும் ஒழுகி மறைய, தள்ளாடினேன். தண்ணீர் குடிக்க
வேண்டும் போலிருந்தது. ஆனால் மீண்டும் என் பர்ணசாலைக்குப் போகத் தோன்றவில்லை.
இடுங்கின அறைகளில் துயரம் தேங்கிக் கிடக்கிறது. திறந்த வெளிகளில் மனம் சற்று
சுதந்திரம் கொள்வது போலப் பட்டது. சோலை வழியாக நடந்தேன். மீண்டும் அதே பாறையை
அடைந்தேன். அங்கு அண்ணா அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவரை அங்கு உள்ளூர
எதிர்பார்த்ததனால்தான் வந்திருக்கிறேன் என்று அறிந்தேன். என்னால் அவரைத்
தவிர்க்க இயல்வில்லை. அவர் இல்லாமல் என் மனமே இல்லை போலும். அவரது தலையணியின்
மீதிருந்த மயிற்பீலிக் கண் என்னைப் பார்த்தது. மனம் சற்று அமைதியடைந்தது.
மயிற்பீலியை எங்கு கண்டாலும் மனம் சற்ரு அமைதிகொள்கிறது. துணையை உணர்கிறது.
அபிமன்யு குழந்தையாக இருந்தபோது ஒரு முறை அவன் கொண்டையில் மயிற்பீலியை
அணிவித்தேன். அதைப் பார்த்ததும் அவர் முகம்தான் எப்படிச் சிவந்து பழுத்தது.
தொண்டை புடைக்க உறுமியப்டி அதைப் பிய்த்து வீசினார். “கொஞ்சிக் குலாவி
குழந்தையை அலியாகவா ஆக்குகிறாய்? பீலியும் மலரும்…” என்று கத்தினார்.
ஆங்காரமும் ஏமாற்றமுமாக, “பீலி சூடியவர்களெல்லாம் அலிகள் என்கிறீர்களா?”
என்றேன். கையை ஓங்கியபடி வந்தார். “நல்லது. கை எதற்கு, காண்டீவத்தையே எடுங்கள்.
அதுதான் புருஷ லட்சணம்” என்றேன். கதவை ஓங்கி உதைத்தபடி அந்தப்புரத்தை விட்டு
வெளியேறினார். வெளியே புரவிமீது சம்மட்டி விழும் ஒலி கேட்டது. அது கனைத்துக்
கூவியபடி கல்தளத்தில் தடதடத்து ஓடியது.
அண்ணா, “ரிஷி வந்துவிட்டாரா?” என்றார்.
“இன்னும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து பொறுமை போகிறது.”
“வருவார்.”
“பின்மதியம் ஆகிவிட்டது. நீர்க்கடன் எப்போது முடிவது?” என்றேன். களைப்புடன்
கண்களை விரல்களால் அழுத்துக் கொண்டேன்.
“பார்த்தன் என்ன சொன்னான்?”
திடுக்கிட்டேன். எப்படி அறிந்தார் அவர் முகம் பதுமை போலிருந்தது. பிறகு அமைதி
ஏற்பட்டது. “நேரமாகிறது என்கிறார்” என்றேன்.
“பாவம்” என்றார்.
“ஏன்? அவர்தான் போரில் வென்று சவ்யசாஜி ஆகிவிட்டாரே. இனி அஸ்வமேதம்,
திக்விஜயம். வரலாற்றில் உங்களுக்கும் அவருக்கும் சிம்மாசனமல்லவா போட்டு
வைக்கப்பட்டுள்ளது!”
”உன் துயரம் கசப்பாக மாறிவிட்டிருக்கிறது சுபத்திரை. உலகமே உனக்கு எதிரியாகப்
படுகிறது. நீ என்னதான் எண்ணுகிறாய்? இன்று இங்கு ஒவ்வொருவரும் என்ன
எண்ணுகிறார்கள் என்று நீ அறிவாயா? இந்தக் கணம் காலதேவன் வந்து போர்
துவங்குவதற்கு முன்பிருந்த தருணத்தைத் திரும்ப அளிப்பதாகச் சொன்னானென்றால்
அத்தனை பேரும் தங்கள் எதிரிகளை ஆரத் தழுவிக் கண்ணீர் உகுப்பார்கள். இந்தப் போர்
ஒரு மாயச் சுழி. ஒவ்வொரு கணமும் இதன் மாயசக்தி எல்லோரையும் கவர்ந்திழுத்துக்
கொண்டிருந்தது. விதி அத்தனை பேர் மனங்களிலும் ஆவேசங்களையும் ஆங்காரங்களையும்
நிரப்பியது. இன்று… வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை.
எனக்கும் தெரியவில்லை…”
நான் பெருமூச்சுவிட்டேன். அண்ணா மனம் கலங்கியபோதுதான் அவரை அப்படிப் பார்க்க
நான் விரும்பவில்லை என்று அறிந்தேன். அவர் வெல்ல முடியாத வீரயோகியாகவே என்
மனதில் இருந்தார். அண்ணாவின் முகம் மீண்டும் நிதானம் கொண்டது. “நீ
உணவருந்தினாயா?” என்றார்.
”இல்லை”
“ஏன் இப்படி உன்னை வதைத்துக் கொள்கிறாய்?”
“என்னால் எதிர்பார்ப்பின் பதற்றத்தைத் தாங்க முடியவில்லை அண்ணா.”
“சுபத்திரை, நீ செய்யப் போவது என்ன என்று அறிவாயா?”
“எனக்கு வேறு வழியில்லை” என்றேன் உறுதியாக.
“நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள
அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது சுபத்திரை. அதில் ஒரு சிறு துளியைக்கூட
மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம்
கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட
நியதியின் விளையாட்டுதான் என்று.”
“வேதாந்த விசாரம் கேட்க எனக்கு இப்போது மனம் கூடவில்லை அண்ணா….”
அண்ணா சிரித்தபடி, ”ஆம். பாரதவர்ஷத்தில் இப்போது மலிவாகப் போய்விட்டிருப்பது
அதுதான்” என்றார்.
அவரைப் புண்படுத்திவிட்டோமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. “அண்ணா, என் மனதைத்
தயவு செய்து புரிந்து கொள்ளேன். நான் என் குழந்தைக்கு… அவன் தன் விதியை
அறியாமல் போகக்கூடாது அண்ணா.. அதற்காக எனக்கு எந்த சாபம் வந்தாலும் சரி…”
“சரி வா. கங்கையோரமாகப் போவோம். யாராவது நம்மைத் தேடக்கூடும்.”
காட்டுக்குள் குளிர் இருந்தது. மரங்கள் மழைக்காலத்திற்குரிய புத்துணர்ச்சியுடன்
காற்றில் குலுங்கின. தளதளக்கும் ஒளியும் சிறு மணியோசைகளும் கங்கை
வந்துவிட்டதைக் கூறின. படித்துறைகளில் புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர்.
தர்ப்பைப் புல்லும் பிண்டங்களும் சிதறிக் கிடந்தன. அமாத்யர் ஸௌனகர் எழுந்து
வந்து அண்ணாவை வணங்கினார். “இப்போதுதான் முடிந்தது” என்றார்.
“சரி” என்று அண்ணா தலையசைத்தார். மெதுவாக நடந்தோம். எங்கும் அமங்கலமான மௌனமும்
நிதானமும். கங்கை மீதிருந்து குளிர் பரவிக்கொண்டிருந்தது.
பர்ணசாலைகளுக்குச் செல்லும் வழியில் திடீரென்று அடிபட்ட விலங்கின் ஊளைபோல ஓர்
அழுகைக் குரல் எழுந்தது. தாதிகள் தொடர, தலைவிரிகோலமாக திரௌபதி ஓடிவந்தாள்.
அவளைத் தாதிகள் பிடித்தனர். கங்கையை நோக்கிக் கைநீட்டியபடி அலறினாள். மரவுரி
விலகிக் கிடந்தது. சர்ப்பம் போன்ற உடல் தழல் போன்ற ’உடல் விஷம்’ துப்பும்.
சுடும். இப்படித்தான் கௌரவ சபையில் சென்று நின்றாள். தலைமயிரை அவிழ்த்துப்
போட்டு சபதம் எடுத்தாள். இப்போது தலையை முடிந்துகொள்ள வேண்டியதுதானே?
இப்போதுகூட ஏன் இப்படி எண்ணுகிறேன்? அவள் என்ன செய்வாள்! அண்ணா சொன்னதுபோல
அவளும் இப்போது மனமுடைந்து ஏங்கக்கூடும். எல்லாம் எவ்வளவு எளிமையாகத்
தொடங்கிவிடுகிறது! ஐந்து குழந்தைகள். பிரிதிவிந்தியன், சுதசேனன், சுருதகர்மா,
சதானீகன், சுதேசனன். ஐந்து தளிர் முகங்கள். ஐந்து பொன்னிறத் தோள்கள். அவள்
வயிற்றில் ஊழித்தீயல்லவா எரியும். அதை எண்ணியபோதே என் மனம் பதைத்தது.
சுருதகர்மாவின் முகம் மட்டும் அவ்வளவு தெளிவாக மனதில் எழுந்தது. அவன் அவருடைய
குழந்தை என்று சொல்வார்கள். அவனை மார்போடணைத்து அவன் முகத்தை உற்று உற்றுப்
பார்ப்பேன். அபிமன்யுவின் அருகே நிறுத்தி ஒப்பிட்டுப் பார்ப்பேன். பயிற்சிப்
போர்களின் அபிமன்யு அவனை அனாயாசமாகத் தோற்கடிக்கும்போது மனதில் களிப்பு
நிறையும். அபிமன்யுவிற்கு அவன்மீது எப்போதும் குறிதான். “சித்தி, அபிமன்யு
என்னை அடிக்கிறான். சித்தி, அபிமன்யுவைப் பாருங்கள்….” என்று சதா ஓடிவருவான்.
மழலைக் குரல்கள் எங்கிருக்கிறீர்கள் என் குழந்தைகளே? வானில் எங்காவது
விளையாடுகிறீர்களா? சண்டை போடுகிறீர்களா? மண்ணில் நீங்கள் வாழ்ந்த நாட்களில்
தான் உங்கள்மீது என்னென்ன கோபதாபங்கள், போட்டி பொறாமைகள் எங்களுக்கு. நான்
ஒருபோதும் பார்த்திராத அரவான். அவன் மீது எத்தனை கோபம் எனக்கு? என்
கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்படியே படித்துறையில் அமர்ந்துவிட்டேன்.
அண்ணா பெருமூச்சுடன் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார். கங்கை மீது இரு சிறு
ஓடங்கள் மிகுந்த துயரத்துடன் நகர்ந்து சென்றன.
*5*
ரிஷி வந்துவிட்டார் என்று செய்தி வந்தது. எழுந்து விரைந்தோடினேன். கால்
புழுதியில் பதிந்து வேகம் கூடவில்லை. என் உடல் கனத்தது. அஷ்டகலசப் படிக்கட்டில்
ரிஷி அமர்ந்திருந்தார். அவர் எதிரே நின்றிருந்த ஸ்தானிகர் என்னைப் பார்த்ததும்
வணங்கி விலகினார். என் மனம் சுருங்கியது. இனம் புரியாத ஓர் அச்சம் மனதைக்
கவ்வியது. கரிய குள்ளமான உருவம். தாடியும் தலைமயிறும் சடைகளாகத் தொங்கின.
சிவந்த கண்கள், உடம்பெங்கும் நீரு. ஒரு கண் கலங்கி சதைப்புரளலாக அசைந்தது.
வெளியே தெரிந்த பற்கள் கறுப்பாக இருந்தன. அவருக்கு சாஷ்டாங்க வணக்கம் செய்தேன்.
அவர் என் தலையைத் தொட்டு ஆசியளித்தார். அவர் கரஙக்ளை என் கண்கள் அணுகுவதைத்
தடுக்க முடியவில்லை. பழுதடைந்த நகங்கள் விகாரமாக இருந்தன.
“உன் கோரிக்கையை கிருஷ்ணதுவைபாயனர் சொன்னா. அவர் மகாவியாசர். அவருக்காகவே
இதற்கு ஒப்புக்கொண்டேன். இது சாதாரண விஷயமல்ல. தெய்வங்களின் அதிகாரத்திற்கு
அறைவிடும் செயல் இது” என்றார் ரிஷி.
“குருநாதரே, என் மீது கருணை காட்டுங்கள். என் குழந்தை…” என்று கைகூப்பினேன்.
கண்ணீர் வழிந்தது.
“அழுவதெல்லாம் எனக்குப் பிடிக்காது. விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.
ஒரே ஒரு முறைதான். அதற்குள் கூறவேண்டியதைக் கூறிவிட வேண்டும். பிறகு என்னிடம்
எதையும் கோரக்கூடாது.”
“போதும், போதும்”
அண்ணா வந்து சற்றுத் தள்ளி அமர்ந்தார். ரிஷி கண்மூடி தியானத்திலாழ்ந்தார்.
பரிதவிப்புடன் அமர்ந்திருந்தேன். நீண்ட பெருமூச்சுடன் அவர் கண்களைத் திறந்தா.
“உன் குழந்தைக்கு நீர்க்கடன் அளித்தாகிவிட்டதே அம்மா. அவன் இப்போது
ஃபுவர்லோகத்தில் இல்லையே…”
“குருநாதரே….” என்று வீறிட்டேன். “இல்லை. நீர்க்கடன் இதுவரை
அளிக்கப்படவில்லை….” மறுகணம் எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. என்னைத்
தோற்கடிக்க அவர் அதைச் செய்திருக்கக்கூடும். என் உடம்பு பதறியது.
“இரு” என்றபடி ரிஷி மீண்டும் கண்களை மூடினார். நான் தவிப்புடன் அண்ணாவைப்
பார்த்தேன். அவர் கங்கைக் கரையோரம் மலர்ந்து கிடந்த தாமரைகளையும் குவளைகளையும்
பார்த்தபடி சிலைபோல அமர்ந்திருந்தார்.
ரிஷி கண்களைத் திறந்தார். “உன் குழந்தை கருபீடம் ஏறிவிட்டான்” என்றார்.
“எங்கே? எந்த வயிற்றில்?” என்று கை கூப்பியபடி பதறினேன்.
“அது தெரியாது. மனிதனா மிருகமா பறவையா புழுவா என்று கூடக் கூற முடியாது.”
“குருநாதரே, இப்போது என்ன செய்வது?”
“இன்னும் நேரமிருக்கிறது. ஆத்மா முதல் உயிரணுவாகிய பார்த்திவப் பரமாணுவை ஏற்று
அதனுடன் இணைவதுவரை வாய்ப்பிருக்கிறது. இணைந்துவிட்டால் இப்பிறவியுடனான அதன்
தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும். பார்ப்போம்.” ரிஷி நீரில் இறங்கி ஒரு தாமரை
மலரைப் பறித்தார். அதை எடுத்து வந்து தியானித்து என்னிடம் காட்டினார்.
“இதோ பார்.”
தாமரைப்பூவின் மகரந்தப் பீடத்தில் இரு சிறு வெண் புழுக்கள் நெளிந்தன மெல்லிய
நுனி துடிக்க அவை நீந்தி நகர்ந்தன.
“இது என் மாயக்காட்சி. உன் மகன் இருக்கும் கரு இந்த மலர். இதிலொன்று உன் மகன்.
நீ அவனிடம் பேசு. ஆனால் இந்த தாமரை கூம்பிவிட்டால் பிறகு எதுவும் செய்ய
முடியாது.”
“இதில் என் குழந்தை யார் குருநாதரே?”
“இதோ இந்தச் சிறு வெண்புழு. அவர்கள் இரட்டையர்கள்.”
என் மனம் மலர்ந்தது. பரவசத்தால் பதற்றம் பரவியது. மனதில் எண்ணங்களே எழவில்லை.
கைகள் பதைக்க அந்தப் புழுவைப் பார்த்தேன். அதன் துடிப்பு. அது அபிமன்யு சிறு
குழந்தையாக பட்டுத் தொட்டிலில் கைகால் உதைத்து நெளிவது போலிருந்தது. பேச்சே
எழவில்லை. மனம் மட்டும் கூவியது. அபிமன்யு! இதோ உன் அம்மா. என்னை
மறந்துவிட்டாயா என் செல்வமே. என்னை ஞாபகமிருக்கிறதா உனக்கு?
”பேசு பேசு” என்றார் ரிஷி.
“அபிமன்யு” என்றேன் தொண்டை அடைக்க.
அந்தச் சிறு புழு அசைவற்று நின்றது. பிறகு அதன் தலை என்னை நோக்கி உயர்ந்தது.
சிவந்த புள்ளிகள்போல அதன் கண்களைக் கண்டேன். என்னைப் பார்க்கிறானா? என்னை அவன்
ஞாபகம் வைத்திருக்கிறானா? என் மனம் களிப்பில் விம்மியது.
“பேசு பேசு” என்று ரிஷி அதட்டினார்.
திடீரென்று அந்த மற்ற புழுவைப் பார்த்தேன். “குருநாதரே இது யார்? அவனுடைய
இரட்டைச் சகோதரன் யார்?”
“அது எதற்கு உனக்கு? நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு.”
“இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார்?”
ரிஷி அலுப்புடன், “அவன் பெயர் பிருகத்பாலன். கோசல மன்னனாக இருந்தவன்” என்றார்.
என் மனம் திகிலில் உறைந்தது. “கோசல மன்னனா? என் மகனால் போர்க்களத்தில்
கொல்லப்பட்டவனா?”
“ஆம். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும்
தொடர்கிறது. அதன் காரணத்தை யாரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல
வேண்டியதைச் சொல்லிவிடு.”
என் தொண்டை கரகரத்தது. அடுத்தபிறவியில் என்ன நிகழப்போகிறது? “அபிமன்யு! அது
கோசல மன்னன் பிருகத்பாலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன்
எதிரி. மகனே, கவனமாக இரு…”
ரிஷி கோபமாக “என்ன பேசுகிறாய் நீ?” என்று கத்தினார்.
நான் களைப்புடன் மூச்சிரைத்தேன். திடீரென்று பத்ம வியூகம் பற்றி இன்னமும்
கூறவில்லை என்று உணர்ந்தேன். “அபிமன்யு, இதோ பார். பத்ம வியூகம்தான் உன்
விதியின் புதிர். அதிலிருந்து வெளியேறும் வழியைக் கூறுகிறேன்…..” என்மீது
யாரோ குனிந்து பார்ப்பது போல நிழல் விழுந்தது. திருக்கிட்டு அண்ணாந்தேன்.
யாருமில்லை. வானம் கன்னங்கரேலென்று இருந்தது. பதற்றத்துடன் மலரைப் பார்த்தேன்.
அது கூம்பி விட்டிருந்தது. “குருநாதரே” என்று கூவியபடி அதைப் பிரிக்க
முயன்றேன்.
“பிரயோசனமில்லை பெண்ணே. அவன் போய்விட்டான்” என்றார் ரிஷி.
“குருநாதரே” என்று கதறியழுதபடி அவர் காலில் விழுந்தேன். “எனக்குக் கருணை
காட்டுங்கள். என் குழந்தையிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்கிறேன்…”
ரிஷி எழுந்து விட்டார். அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். அவர் உதறிவிட்டு
நடந்தார். அப்படியே படிகளில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்துக் கதறிக்
கதறி அழுதேன்.
தோள்களில் கரம் பட்டது. அண்ணாவின் கரம் அது என்று தெரிந்தது. அதை நான்
விரும்பினேன் என்று அறிந்தேன். “அண்ணா! அபிமன்யு, என் குழந்தை…”
“வா போகலாம். மழை வரப்போகிறது.”
“என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே. தன் விதியின் புதிரை
சுமந்தபடி அவன் போகிறானே. நான் பாவி பாவி….”
அண்ணா என்னைத் தூக்கி எழுப்பினார். “வா. அழுது என்ன பயன்?”
“என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே…”
”யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே
நுழைந்தாய்?”
நான் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். பிறகு “அண்ணா” என்றேன்.
“வா. மழை வருகிறது.”
இலைகள் மீது ஓலமிட்டபடி மழை நெருங்கி வந்தது. ஆவேசமான விரல்கள் பூமியைத்
தட்டின. பிறகு நீர்த்தாரைகள் பொழிய ஆரம்பித்தன.
“அண்ணா, என் குழந்தையின் விதி என்ன? அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்?”
மழையில் அண்ணாவின் குரல் மங்கலாகக் கேட்டது. “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம்
மட்டும் இன்று தெரிந்தது.”
“எப்படி?” என்றேன் அவரைத் தொடர்ந்து ஓடியபடி. அண்ணா பதில் பேசாமல் நடந்தார்.
ஒரு மின்னல் வானையும் மண்ணையும் ஒளியால் நிரப்பியது. பின் அனைத்தும் சேர்ந்து
நடுங்க இடியோசைகள் வெடித்து அதிர்ந்தன. அதன் எதிரொலியை வெகுநேரம் என்னுள்
கேட்டேன். என் உடலைக் கரைத்து விடுவதுபோல மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையின்
அடர்ந்த திரைக்குள் அண்ணா சென்று மறைந்தார்.



*(முற்றும்)*


*காலச்சுவடு (இதழ் எண் 18), 1997*


thanx - s ramakrishnan , jeyamokan ,thamilthoguppukal

ராஜீவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளன் தன்னிலை விளக்க கடிதம்

http://www.newsreporter.in/wp-content/uploads/2011/08/perarivalan.jpg 
பேரறிவாளன், ராஜிவ் கொலைக் குற்றவாளி
"அனைவருமே எதிர்த்து நின்றாலும்

சரியானவை சரியானவையே!

அனைவருமே ஆதரித்து நின்றாலும்

பிழையானவை பிழையானவையே'' 

உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்த சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.




அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என கருத்தூட்டி வளர்த்த தாயின் தவப்புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ்காந்தி கொலை வழக்கின் தூக்குத்தண்டனைக் கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.



20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போல் சாதாரண மனிதனாக வீதிகளில் அலைந்துகொண்டிருந்த மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக்கூட அல்ல, ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.



உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ்காந்தியை மட்டுமல்ல எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதி பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்திரிக்க ஆதிக்க சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள்கொடி உறவாம் ஈழத்தழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.



மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்து 2005ம் ஆண்டு ஓய்வுபெற்ற நடுவண் புலனாய்வுத்துறையின் துணைக்காவல் கண்காணிப்பாளர் (ஞிஷிறி/சிஙிமி) கே. ரகோத்தமன்.



ராஜிவ்கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு 'தடா' சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993ம் ஆண்டு நடந்த அபயா கொலையினை 'தற்கொலை'  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.




20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்துவருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிலும் சரி இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டுவரப்பட்ட தடா எனும் கொடூர சட்டத்தை துணைகொண்டு ஒரு பெருங்கதை என்போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ்காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவிற்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு 'மாமூல்' தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதியென அறிவித்து 'தடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.




சாதாரண பெட்டிக்கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான 'ஐ' வோல்ட் பேட்டரி செல் இரண்டு வாங்கி தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில் அரண்மனைக் கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்துகிடக்கிறேன்.



எனது வழக்கில் மூடிமறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு இதுவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழியில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிகத் தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.




உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர் எனது குற்றமற்ற தன்மையை புரிந்துகொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.



எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ்காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல, அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ்காந்தியின் உயிர்ப்பலிக்கு ஈடாக அக்குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனிதநேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.




அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளை திருப்புங்கள். "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்" என்ற முன்னோர் வாக்கு உண்மையெனில் என் தரப்பு உண்மைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில் அப்போது எனது விடுதலைக்காக உங்கள் வலிமையான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக்குமுறலை உலகம் புரிந்துகொண்டது என வரலாறு குறிக்கட்டும். நீதி வெல்லட்டும். 


நன்றி - த சண்டே இந்தியன்


http://www.news24online.com/images/NewsImage/Rajiv-Gandhi-291x21817456.jpg

சி.பி .செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ்

`1.யுவர் ஆனர்..,ஜாமீன்ல வெளில வந்து நான் என் பக்தர்களுக்கு உபதேசம் பண்ணலாமா?!

பண்ணிக்கோ! ஆனா, தூர தேசம் மட்டும் போய்டாதே...,

..................................................................

2. போலீஸ் வளையத்தை விட்டு சாமியார் தப்பிச்சுட்டாராமே?!

ஆமா! அக்னி வளையத்துக்குள்ள போய் உக்காந்துக்கிட்டார்.

................................................................

3. மனைவிக்குப் போய் பயப்படுறிங்களே!?

அவ அடிச்சா ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்..., வாங்குறது யாரு?!

............................................................................

4. அந்த நடிகை பேட்டில குழப்பறாங்களே?!

எப்படி?

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னெ என்ன பண்ணுனீங்கன்னு கேட்டதுக்கு “மாடலிங்க்”னு சொன்னாங்க. மாடலிங்குக்கு முன்னேன்னு கேட்டதுக்கு சினிமான்னாங்க.

...............................................................................

5. உனக்கும் அந்த ஆந்த்ரா ஃபிகருக்கும் எப்படி லவ் உண்டாச்சு?

நான் பேசறது அவளுக்கு புரியலை. அவ பேசறது  எனக்கு புரியலை. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும்ங்குறதுக்காக லவ் பண்ணோம்.

............................................................................



Apple Iphone Ku competition.
Banana Iphone :P


6. ஃபோட்டோகிராபர் பொண்ணை ஒரு தலையா காதலிக்குறேன்.

சீக்கிரமா உன் லவ்வை எக்ஸ்போஸ் பண்ணு.

..............................................................................

7. உங்க படத்தோட கிளைமேக்ஸுல ஹீர்ரோ, ஹீரோயின், வில்லன் எல்லாரும் இறந்துடுற மதிரி காட்டுறிங்களே ஏன்?

அப்பதான் எவனுக்கும் சம்பளம் தரத் தேவையில்லை.


....................................................................

8. புரடியூசர் சார்.., எனக்கு ஒரு படம் டைரக்ட் பண்ண சான்ஸ் குடுங்க. கொன்னு  எடுத்துடுறேன்.

படம் எடுத்து கொன்னுடுவிங்களோ!?

............................................................................

9.சைக்குளோன், லைலா(லைலா புயல்) மீண்டும் வருகிறதாம்...,
 அதனால் எல்லா ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிடுங்க. மிண்டோ ஃபிரெஷ் சாப்பிடுங்க. ஏன்னா லைலாவை பண்ணா இம்ப்ரெஸ், மஜ்னு சாப்பிட்டாரு மிண்டோ ஃபிரெஷ்.

.................................................................................

10.  ஒரே ஃபிகருக்கே எல்லா பணத்தையும் செலவு பண்ணி ஏமாந்து விடாதே -நியூ  நித்தி ஆனந்தா.

.........................................................................



11. நான் ஏன் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னேன் தெரியுமா? இங்கிலீஷ்ல ரொம்ப சின்ன வார்த்தை.

I ஸ்வீட்டான வார்த்தை லவ். அனபான ஆள். நீ(U) அதனாலதான்.  I love you னு சொன்னேன்.

............................................................................

12.எவ்வளவு பெரிய சூப்பர் ஃபிகரா இருந்தாலும் எலுமிச்சைப்பழம் மாதிரி கலரா இருந்தாலும், ஐஸ்வர்யா ராய், தமன்னா சாயல்ல இருந்தாலும் அந்த ஃபிகரோட நிழல் கருப்பாதான் இருக்கும்.

........................................................................

13. வாழ்க்கை அழகானதா? சவாலானதா?

அழகான சவால்.

........................................................................

14. டியர்  என்னை லவ் பண்றீங்க. ஆனா, மேரேஜ் பண்ணிக்க மாட்டீங்கறிங்களே ஏன்?

உன் மீது “மையல்”ன்னா ஓ.க்கே. சமையல்ன்னா நாட் ஓக்கே.

......................................................

15.100, 50, 150, 200, 250, 300 இந்த நம்பர்ல  எந்த நம்பர் உங்களுக்கு பிடிச்சிருக்கோ அந்த அமௌண்டுக்கு என் நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க.

................................................................................





16.  சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள். சுரிதாரை சுற்றினால நொந்து போவீர்கள்- ஊரை மட்டும் சுற்றுவோர் சங்கம்.


................................................................





17. மாட்டுக்கு புல் வை.

ஓக்கே டாடி. ரூ.500/ குடுங்க


எதுக்குடா?


மாட்டுக்கு ஒரு ஃபுல் வெச்சுட்டு கன்னுக்குட்டிக்கு ஒரு குவார்ட்டர் வைக்கத்தான்.

.......................................................................

18. எப்படி உனக்கு மட்டும் அமாவசைல நிலா தெரியுது?

”தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்”.

...............................................................................

19. நொடிக்கு நொடி தடுமாற்றாம்தான். இருந்தாலும் ஒரு மாற்றமாகத்தான் இருக்குது என் வாழ்வு. உன் மீது நான் கொண்ட காதலால்.

....................................................................................

20. கற்பனைகள் எப்போது கடவுள் ஆனதோ மனிதன் அப்போதிலிருந்தே முட்டாள் ஆகிவிட்டான். 




---------------------





டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சு ஜோக் எழுதுனாலும் மொக்கை, படு கேவலம்னு சொல்றாங்க. அதனால சிரித்து மகிழ சிரந்த ஜோக்குகள்னு டைட்டில் வெச்சா நிறைய பேருக்கு வேலை.  டைட்டில்ல நாமளே கேவலமான ஜோக்ஸ்னு சொல்லிட்டா ஒரு பய இந்த ப்ப்பதிவை குறை சொல்ல முடியாது கி கி  - பை  விளக்கம் கொடுத்தே வீணாப்போனோர் சங்கம் ( யார் அந்த வீணா? ஹி ஹி )



ஜெயமோகனும், நானும் சினிமாவில் - எஸ் .ராமகிருஷ்ணன் பேட்டி @ த சண்டே இந்தியன்

http://reviews.in.88db.com/images/Rajini-Ramakrishnan-events/S-Ramakrishnan-Felicitated.jpgசமகால தமிழ் எழுத்துலகின் முக்கியமான பெயர் எஸ். ராமகிருஷ்ணன். பத்திரிகை, சினிமா, இணையம் என பன்முக ஊடகங்களில் தனித்த  ஆளுமையுடன்செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயல் விருதுக்காக கனடா, அமெரிக்கா நாடுகளுக்குச் சென்றுவந்த அவரிடம் எழுத்துகள், பயணம், வாசிப்பு பற்றி தசஇ பேசியதிலிருந்து....



சிறுபத்திரிகை எழுத்தாளராக செயல்படத் தொடங்கியவர் நீங்கள். இப்போது தமிழகம் அறிந்த பிரபல எழுத்தாளுமைகளில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?



முதலில் நான் புகழ் என்று சொல்லமாட்டேன். மாறாக என்னுடைய வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. வாசிக்கும் தளம் விரிவடைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். சிறுபத்திரிகை தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்போது இலக்கியம் சார்ந்த அல்லது தீவிர அக்கறை சார்ந்த ஒரு குறிப்பிட்ட பகுதியினர்தான் என்னை வாசித்தார்கள். அதுதான் என் ஆரம்பமும்கூட. அந்த வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். ஓர் எழுத்தாளன் என்று சொல்லக்கூடியவனின் வேலை நான் நினைப்பது என்னவென்றால், தன்னுடைய சமகாலத்தின் பல்வேறு தரப்புகளோடு சேர்ந்து இயங்கி வேலை செய்கிறவன். எழுத்தின் வழியாகவே அவன் பல்வேறுதரப்பு மக்களைச் சென¢று சேரவேண்டும்.



 இலக்கியம் சார்ந்த கூர்ந்த ரசனை உள்ளவர்களோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையோட பல்வேறு அம்சங்களோடு சேர்ந்தவர்களுடனும் உறவாடவும் அவர்களுடைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளவும் இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துவதும் எழுத்தாளனின் வேலைதான். நான் முக்கியமான நினைக்கிற ஆளுமைகள் அப்படித்தான் எனக்கு முன்பு செயல்பட்டிருக்கிறார்கள். இலக்கியமே அவ்வளவு பெருவாரியான மக்களைச் சென்றடையுமா? சென்றடைவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா? நம் சூழலில் அது குறைவாக இருப்பதால், ஊடகங்களின் மூலமாக அடையமுடியுமா என்று நினைக்கிறேன். அதன்மூலம் புகழ்பெறுவதற்கான முயற்சி இல்லை. என் எழுத்தும் அந்த எழுத்துக்குக் கிடைக்கக்கூடிய கவனிப்பும் தொடர்ந்த வாசிப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த வாசிப்பின் வழியாகத்தான் இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.




இணையதளம் வழியாக உலகப்படங்கள் மற்றும் முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகங்களைச் செய்துவருகிறீர்கள்...



எப்போதுமே நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கிராமத்திலிருந்து உருவான காலகட்டத்தில்... சாதாரண அரசுப்பள்ளியில் படித்த ஒருவன் மேலே வரவேண்டும் என்று நினைக்கிறபோது, அவனுக்கு இருக்கிற முக்கியமான தடைகளாக இருந்தது அவனை வழிநடத்தக்கூடிய புத்தகங்கள், அவனது ரசனையை மேம்படுத்தக்கூடிய அம்சங்கள், இன்னும் சொல்லப்போனால் அடிப்படையான தகவல்கள் எங்குமே கிடைக்காது. காப்ரியேல் கார்ஸியா மார்க்ஸ் எழுதிய நூற்றாண்டுகால தனிமை நூலுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்று ஒரு செய்தி படித்தேன். இந்தப் புத்தகத்தைத் தேடத் தொடங்குகிறேன். மல்லாங்கிணறு என்ற சிறு கிராமத்திலிருந்து இந்தப் புத்தகத்தைத் தேடத்தொடங்கும்போது... அதை வாங்குவதற்கான சூழலும் இருக்கிறது. எங்கே கிடைக்கும் என்று தெரியாது. எங்கே விற்கும், யாரிடம் கேட்கலாம், யாரு இதை படித்திருக்கிறார்கள்? அல்லது இந்தப் புத்தகத்தைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?



 இந்த ஒரு புத்தகத்தைத் தேடி இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். டெல்லி போயிருக்கிறேன். மும்பை போயிருக்கிறேன். திருவனந்தபுரம் போயிருக்கிறேன். டெல்லியில் ஒரு புத்தகக்கடையில் இந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்டபோது, நீங்கள் காத்திருக்கவேண்டும். டெல்லியில் இருந்தால் 15 நாட்களுக்குள் வாங்கித்தரமுடியும் என்று சொன்னார்கள். இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற புத்தகத்தை வாங்கவேண்டும் என்று நினைத்தால் அதற்காக காத்திருக்கவேண்டிய சூழல் இருந்தது. அதன் விலை 400 ரூபாய் இருக்கும். ஆனால் 1000 ரூபாய் செலவழித்து வாங்கவேண்டியுள்ளது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் புத்தகம் வேண்டும் என்று கேட்டால் ஐந்தாவது நாள் அது வீட்டுக்கு வந்துவிடுகிறது.



ஆனால் இன்னமும் ஒரு பிரச்னை இருக்கிறது. என்ன புத்தகம் படிக்கவேண்டும்? அதை ஏன் படிக்கவேண்டும்? அந்தப் புத்தகம் என¢ன என்று தெரியவில்லை. எப்போதெல்லாம் புத்தக்கடை போகிறோமோ அப்போதெல்லாம் ஒரு திகைப்பு ஏற்படுகிறது. இங்குள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களில் எது முக்கியமான புத்தகம்? ஏன் படிக்கவேண்டும்? அது எப்போது வந்தது? மேலைநாடுகளில் அந்தப் புத்தகங்களை சிபாரிசு செய்யக்கூடிய பத்திரிகைகளோ படைப்பாளிகளோ அல்லது விமர்சனங்களோ இருக்கின்றன. எவ்வளவு பெரிய புகழ்பெற்ற புத்தகம் தமிழ்நாட்டில் வந்தாலும் அது கல்லைத் தூக்கி தண¢ணியில் போட்ட மாதிரி வெளியில் தெரியாமலே போய்விடுகிறது. நான் தொடர்ந்த 50 எழுத்தாளர்களைப் பற்றி கதாவிலாசம் என்று எழுதியிருக்கிறேன். 25 எழுத்தாளுமைகளைப் பற்றி வாசக பருவம் என்று எழுதியிருக்கிறேன். இன்று எழுத ஆரம்பித்திருக்கிற எழுத்தாளர்கள் வரைக்கும் 50 பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.



இவ்வளவு பேரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா என்றால், நம்முடைய சூழலில் ஒரு சிறந்த எழுத்தை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது. புதிய வாசகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். என்னுடைய முன்னோடிகள் இதை செய்துகொண்டே இருந்திருக்கிறார்கள். சுந்தராமசாமி முக்கியமான எழுத்தாளர்களை சிபாரிசு செய்திருக்கிறார். மொழிபெயர்த்திருக்கிறார். புதுமைப்பித்தன் அவ்வளவு முக்கியமான சிறுகதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். இப்படியான பணிகளைச் செய்வதற்கு எழுத்தாளுமைகள் பிற நாடுகளில் இருக்கிறார்கள். சாதாரண ஒரு இலக்கிய வாசகனின¢ ரசனையை மேம்படுத்துவதற்கான தளம் நம்மூரில் குறைவாக இருக்கிறது. என் எழுத்துலகம் தாண்டி நான் பார்த்த, ரசித்த, பயணங்களில் கிடைத்த கலை அம்சங்களை பகிர்ந்துகொள்கிறவனாகத்தான் நான் இருக்கிறேன்.




புத்தகங்களில் உலகிலேயே வசிப்பவர் நீங்கள். வாசிப்பு ஒருவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்பதை உங்கள் சிறுவயது அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொள்ள முடியுமா?


பொதுவாக வாசிப்பு என்பது என்னைக் கேட்டால், வெறுமனே பொழுதுபோக்கிற்காகவும் ரசனையின் அம்சம் என்று நினைக்கமாட்டேன். நம்மை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி என் உடல்நலத்திற்காக அடிப்படை உணவை எடுத்துக்கொள்கிறேனோ, எப்படி என் சுகாதாரத்திற்கு என்னை ஒவ்வொரு நாளும் தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கிறேனோ, இதுபோல என் சிந்தனையை மன ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் வாசிக்கவேண்டியிருக்கிறது. இப்படி வாசிக்கத் தவறுகிற நேரங்களில் நான் என்னாகிறேன் என்றால், உணவில்லாதபோது ஏற்படுகிற ஒரு பட்டினியைப் போலத்தான் உணர்கிறேன். படிப்பதன்வழியாக என்ன நடக்கிறது என்றால், என்னுடைய அகம் தூய்மையடைகிறது. சிந்தனையை விரிவுபடுத்துகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனக்கு வெளியில் இருக்கக்கூடிய உலகத்தைப் பார்ப்பதற்கான ஒரு கண்ணாகத்தான் வாசிப்பைப் பயன்படுத்துகிறேன். இன்னொரு மனிதனை எப்படி புரிந்துகொள்வது? என்னைப்போல இருக்கக்கூடிய ஜனக்கூட்டத்தின் வாழ்க்கைமுறையை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் எனக்கு புத்தகங்கள்தான் வழிகாட்டவேண்டும்.




என் வாழ்க்கை முழுவதும் நான் புத்தகங்களின் தோழனாகத்தான் இருக்கிறேன். ஏனென்றால் புத்தகங்களின் தோழமை எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. உலகத்தின் மிக முக்கியமான விஷயங்கள் அத்தனையையும் தேடிப்பார்ப்பதற்கு முன்பு, அதை புத்தகங்களின் வழியாகத்தான் அறிகிறேன். இன்றைக்கும்கூட என்னால் பார்க்கவேமுடியாத சாத்தியமற்ற அத்தனையையும் புத்தகங்களின்வழியாகத்தான் அறிந்திருக்கிறேன். எனக்கு நிலவைப் பற்றி அத்தனை ஆயிரம் வரிகள் தெரியும். ஒருநாளும் அந்த அனுபவத்தை நான் பெற்றது கிடையாது. நிலவைப் பார்க்கிறபோது அதை என்னால் விஞ்ஞானப் பார்வையோடு பார்க்கமுடிகிறது. 

அண்டவெளிகள் பற்றி, கடலாய்வுகள் பற்றி, நாம் அறியாத பல விஷயங்கள் பற்றி டால்ஸ்டாய், தாஸ்தாவொஸ்கி போன்ற எழுத்தாளர்கள் கண்டுபிடித்து சொன்னதால், உலகத்தை இவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லாம் தாண்டி இந்தப் பண்பாட்டையும் மரபையும் தொன்மைகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால் வேறு என்ன வழி இருக்கிறது? தமிழகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்காக சமகாலத்தில் ஒருவன் பயணம் செய்தால் தெரிந்துகொள்ளமுடியுமா?




 அவனுக்கு இருக்கிற ஒரே ஒரு வாய்ப்பு புத்தகங்கள் மட்டும்தான். வரலாற்றை பண்பாட்டை பண்பாட்டின் நுட்பங்களை இங்கு வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளை படிக்கவேண்டும் என்றால் ஒரே ஒரு வழி புத்தகங்கள்தான். புத்தகங்கள் என் சிறு வயதிலிருந்து வழிநடத்திக்கொண்டே இருந்திருக்கின்றன. நிறைய நேரங்களில் புத்தகங்களை நான் அச்சிடப்பட்ட காகிதங்கள் என்று மட்டும் நினைக்கவில்லை. அது ஓர் உலகம். எப்படி ஒரு ஊருக்குள் நுழைந்து அந்த மனிதர்களைப் பற்றி அந்த ஊரைப் பற்றி அறிந்துகொள்கிறோமோ அப்படித்தான் புத்தகமும் ஒரு ஊராக இருக்கிறது. இன¢னும் சொல்லப்போனால் அது ஒரு நிலவியல். அதற்குள் நான் போகிறேன். அது எழுத்தாளன் உருவாக்கிய உலகம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.




ஒரு பயணியாக தமிழகம் இன்று அடைந்திருக்கும் மாற்றம் குறித்து உங்களுக்குச் சொல்ல இருக்கிறதா?



நிறைய இருக்கின்றன. ஒரு பயணியாக தமிழகத்தில் சுமார் 25 ஆண்டுகளாக பயணம் செய்துகொண்டே இருக்கிறேன். இந்தியா முழுவதும் பயணம் செய்கிறேன். என்னை பிரமிக்கவைக்கிற விஷயம் இந்த சாலைகளின் வளர்ச்சிதான். உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று இருக்குமென்றால், அது சாலைகள்தான். சாலைகள்தான் உலகத்தை ஒன்றுசேர்த்துக்கொண்ட இருக்கின்றன. உள்ளங்கையில் இருக்கிற ரேகைகளைப் போல அவ்வளவு ஆயிரம் சாலைகள் ஒன்றுசேர்ந்து ஒன்றுசேர்ந்து எல்லா ஊர்களையும் இணைத்துவைத்திருக்கிறது. அமெரிக்காவில் நிற்கும்போது நினைத்தேன். என¢னுடைய ஊரையும் அமெரிக்காவையும் பல்வேறு சாலைகள்தான் ஒன்றுசேர்த்திருக்கின்றன. அந்த சாலைகள் ஒன்றுபோல இருக்கின்றன. பழைய சாலைகள் போய் புதிய சாலைகள் வருகின்றன. அந்த சாலைகளின் பாடலை, அதன் கதையை, அதன் நினைவுகளை கேட்டுக்கொண்டே இருக்கிறவன் என்ற முறையில் சாலைகள் மேம்படுவதைப் பார்க்கிறேன். முதன¢முறையாக என் வாழ்க்கையில் இவ்வளவு அகலமான விஸ்தாரமான சாலைகள்... சாலைப் பயணத்தில் அதனை எளிதாக்கக்கூடிய வசதிகள் உருவாகியிருக்கின்றன.




இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்திற்குள் சாலைகளை மேம்படுத்துவது ஒரு சவால். ஆனால் இந்த சாலைகளின் வளர்ச்சி மெல்ல கிராமங்களிலிருந்து மனிதர்களை துண்டித்துக்கொண்டே இருக்கிறது. அது ஒரு மோசமான உதாரணம் என்று  நினைக்கிறேன். ஒருமுறை டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக ஏறி சென்னையிலிருந்து ஒருமுறை எங்கள் ஊருக்குப் போனேன். அப்போது அவ்வளவு கிராமங்களைப் பார்த்தேன். பெரிய சாலைகளில் பயணிக்கும்போது ஓர் ஆட்டை, ஒரு மனிதனை, வேறு எந்த விஷயத்தையும் நான் பார்த்ததில்லை. இந்தப் பயணம் ஒரு மனிதனை கிட்டத்தட்ட துண்டித்துவிட்டது. அதேநேரத்தில் சாலைகள் மேம்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு கூட்டத்தில் பேசினேன். இந்த சாலைகளின் வரவுக்குப் பிறகு மனிதர்களின் மனங்களில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. வழிகாட்டுவதற்கான இன¢னொரு மனிதன் தேவையில்லை. வழிகாட்டி மனிதர்கள் தேவையற்றவர்கள் என்று நினைக்கிறார்கள்.




ரயிலில் போகும்போதோ பஸ்ஸில் போகும்போதோ கிராமங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சிறு கிராமங்கள் வரும். அடிவாரத்தோடு அவை சேர்ந்திருக்கிற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இப்போது எதுவுமே இல்லை. இவ்வளவு சாலைகளை மேம்படுத்திய ஒரு சமூகம் அடிப்படை வசதிகளுக்கு எதுவுமே செய்யவில்லை. கழிப்பறை இல்லை. முறையான உணவகங்கள் இல்லை. நிறைய நேரங்களில் காரை இயக்குவதற்கான பெட்ரோல் பங்க்குள்கூட கிடையாது. இந்த வசதிகளை செய்திருக்கக்கூடிய மேற்கத்திய உலகம் அதில் ரொம்ப கவனமாக இருக்கிறார்கள். 15 அல்லது 20 கி.மீட்டர் இடைவெளியில் ஒரு வளாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அங்கே உணவகம், புத்தகக்கடை, பெட்ரோல் பங்க், உடை மாற்றுவதற்கான இடம், கழிப்பறை என எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். நாம் இந்தப் பயண வழிகளைப் பயன்படுத்தியிருக்கிறோமே தவிர அடிப்படை வசதிகளைச் செய்யவில்லை. இன¢னொன்று பயண விபத்துகளுக்கான மருத்துவமனைகளே எங்கும் கிடையாது. இங்கிருந்து கன்னியாகுமரிவரை நெடுஞ்சாலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்... ஒரு விபத்து நடந்தால் அருகிலுள்ள நகரத்திலிருந்துதான் வரவேண்டும். ஒரு மொபைல் யூனிட் இல்லை. ஆனால் அப்படியொரு யூனிட் இருக்கிறது என்கிறார்கள். என் சாலைப்பயணத்தில் நான் பார்த்ததே இல்லை.
சாலைகளின் வருகையால் பயணம் அதிகரித்திருக்க வேண்டும். குறைந்திருக்கிறது. ஒரு விழாவோ, குடும்ப நலனோ அதற்காக பயணிக்கிறார்களே தவிர, பொதுவான பயணத்தின்மீதான அக்கறை படிப்படியாக குறைந்துவருகிறது. சலைகள் மேம்பட்டு பயண மனநிலை குறைவது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றையுமே வீட்டிலிருந்தே பார்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.


இணையத்தில் பார்த்தால்போதும். வீட்டில் சீரியல்களில் பார்த்தால்போதும். புகழ்பெற்ற எதையும் சந்திப்பதில்லை. அப்படியே சென¢றாலும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு வரலாற்றுப்பூர்வமான இடத்தையோ, காட்சியகத்தையோ பார்க்கிறபோது அதை புரிந்துகொள்ள முயற்சி செய்வதே இல்லை. எந்த ஊருக்குப் போகும்போதும் அதன் வரலாற்றை, கலை மேன்மையை தெரிந்துகொள்வதே இ¢ல்லை. பயணம் பற்றி முன்பு அச்சம் இருந்தது. அறியாத மனிதர்கள் இருப்பார்கள். நாம் ஊரிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடுவோம். பொருளாதாரத் தடைகள் இருந்தன. அவை எதுவுமே இன்று இல்லை. ஆனால் அதற்கு மாறாக பயணத்தை ஒரு வணிக நோக்கமாக மாற்றிவிட்டோம். சுற்றுலாத் தளம் என்பது முன்பு மாதிரி ஓய்வெடுக்கிற இடம் கிடையாது. அது ஒரு வணிக சந்தை. அன்றாட வாழ்க்கையைவிட ஒரு மோசமான நிலைக்கு உங்களைத் தள்ளிவிடுகிறது. விடுமுறை நாளில் ஊட்டிக்குப் போய் பாருங்கள். அதுபோல ஒரு சந்தையை நீங்கள் பார்த்தே இருக்கமாட்டீர்கள்.



மாமல்லபுரத்தில் போய் இறங்கி, அந்த ஊரைத் தெரிந்துகொள்ள ஓர் எளிய கையேடு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் இருக்காது. அர்ச்சனன் தபசு சிற்பத்தை அத்தனை பேர் பு£ர்த்துச் செல்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிப் பேச அங்கே ஒரு ஆள் உங்களுக்குக் கிடைக்கமாட்டார். டச் ஸ்கிரீன் வைக்கலாம். வீடியோ கெய்டு வைக்கலாம். ஆடியோ கெய்டு வைக்கலாம். எதுவுமே செய்யமாட்டார்கள்.

உங்களின் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் பற்றி கூறுங்கள்?
என¢னுடைய ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் இரண்டு விதமானவர்கள். ஒன்று எழுத்தாளர்கள். இன்னொன்று சாமானிய மனிதர்கள். இரண்டு பேருக்குமே வாழ்க்கையில் நான் முக்கியமான இடத்தைத்தான் கொடுக்கிறேன். சிறுவயதிலிருந்து எழுத்தாளர்கள் என்னை உருவாக்கி இருக்கிறார்கள். நான் தமிழில் வாசித்த எழுத்தாளர்கள் மட்டும் இல்லை. எனக்கு ரொம்பவும் விருப்பமானது ரஷ்ய இலக்கியங்கள். எப்போதுமே என்னை ரஷ்ய இலக்கியத்தின் பிரதிநிதியாகத்தான் கருதுகிறேன். அவர்கள் என்னை உருவாக்கியதில் முக்கியமானவர்கள். டால்ஸ்டாய், தாஸ்தாவொஸ்கி, ஆன்டன் செகாவ், துர்கனேவ், கார்க்கி, கோஹைல், புஷ்கின் இவர்கள்தான் என் ஆதர்சங்கள். அவர்களுடைய படைப்புகளில் ஆழ்ந்துதான் அப்புறம் தமிழ் படிக்கவந்தேன். இன்றைக்கும் எனக்குப் பிடித்த ஆளுமைகள் என்றால் டால்ஸ்டாயும் தாஸ்வொஸ்கியும்தான் என்று சொல்வேன். அதேபோல சமகாலத்தில் இருந்த அல்லது தமிழ் இலக்கிய ஆளுமைகளாக எடுத்துக்கொண்டால் புதுமைப்பித்தனையும் அழகிரிசாமியையும் வண்ணநிலவனையும் நாகராஜனையும் நகுலனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவர்கள் எல்லோருமே என்னை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்த ஆளுமைகள். இலக்கியத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள இவர்கள் உதவிசெய்ததுபோல, வாழ்க்கையின் அடிப்படைகளை புரிந்துகொள்ள, வாழ்¢க்கையை எப்படி நடத்திச்செல்ல வேண்டும் என்று வழிகாட்டியவர்கள் என்று இரண்டு,  மூன்று பேரை நான் முக்கியமாக கருதுகிறேன். ஒருவர் எஸ்.ஏ. பெருமாள் என்கிற மதுரையில் வசிக்கக்கூட முக்கிய இடதுசாரித் தோழர். அவர்தான் என் பள்ளிநாட்களிலிருந்து நெறிப்படுத்தி, என்ன படிக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பது தொடங்கி என்னுடைய இலக்கியம், வாழ்க்கை இரண்டையும் ஒழுங்குபடுத்திக்கொண்டே இருந்தார். ஒரு தீவிரமான இலக்கிய வாசகரும் பொதுவுடைமைவாதியுமான அவர் என்மேல் பெரிய அளவுக்கு ஆளுமையைச் செலுத்தியிருக்கிறார்.
இதேபோல இன்னொருவர் தேவதச்சன். கல்லூரி நாட்களிலிருந்து அவரிடம் ஒரு மாணவனாக இன்றுவரை நிறைய கற்றுக்கொண்டே வருகிறேன். என்னை அவர் வழிப்படுத்தியிருக்கிறார். அவருடைய சிந்தனைகளின் தொடர்ச்சி எனக்குள் இருக்கிறது. இலக்கியத்தை மட்டுமல்ல வாழ்க்கையைப் புரிந்துகொள்ள அவருடைய தொடர்பு நிறைய உதவி செய்திருக்கிறது. என் குடும்பத்திலிருந்து அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், புத்தகங்களை வாங்கவும் படிக்கவும் முக்கிய கவனம் பெறவும் உதவி செய்திருக்கிறார். இன்றுவரையில் அவருடைய அக்கறை என் எழுத்து சார்ந்த விஷயங்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கியமாக இருக்கிறது.

இயல் விருது வாங்க கனடாவுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் சென¢று வந்துள்ளீர்கள். அங்குள்ள அரசியல், வாழ்க்கைச் சூழல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?




இயல் விருது வாங்குவதற்காக சென்ற என் பயணத்தில் இரண்டு மாறுபட்ட உலகங்களைச் சந்தித்தேன். ஒன்று கனடா போல ஒரு தேசம். அந்நாட்டைப் பற்றி முன்பு படித்து தெரிந்திருக்கிறேன். இலக்கியம் படித்திருக்கிறேன். தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கே போன பிறகுதான் கனடிய வாழ்க்கை, கனடிய மக்கள்... குறிப்பாக தமிழ் மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஒரு தேசத்தில் அனைத்தையும் தண்ணீர் தீர்மானிப்பதை கனடாவில்தான் பார்த்தேன். உலகத்தில் அதுதான் தண்ணீர்தேசம். எங்கே பார்த்தாலும் அருவிகள், ஏரிகள். தண்ணீர்தான் அந்த வாழ்க்கையை தீர்மானிப்பதால், இயல்பாகவே அந்த தண்ணீரின் குணங்கள் மக்களிடம் இருக்கின்றன. அவர்கள் சாந்தமாகவும், ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதில் எளிதானவர்களாகவும், பொதுவாகவே அடக்கமாக, ஆழமான மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை தண்ணீர் குறித்து என்னிடமிருந்த எண்ணங்களை கனடா புரட்டிப்போட்டுவிட்டது. மிகவும் பிரம்மாண்டமான ஏரிகள், ஏரி சார்ந்த வாழ்க்கை, இயற்கையோடு இணைந்து வாழ்வதில் மக்கள் காட்டக்கூடிய அக்கறை... கனடாவைப்போல உலகத்தில் நான் பார்த்தது கிடையாது. அச்சமில்லாத வாழ்க்கையை முதன்முறையாக கனடாவில்தான் பார்த்தேன். இங்குதான் எந்த இரவிலும் எந்த வீதியிலும் அச்சமில்லாமல் செல்லலாம். கனடியர்களிடம் அடிப்படை அன்பு இருக்கிறது. மூன்றரை லட்சத்திற்கு மேலே தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுடன் அவர்களுக்கு இருக்கிற உறவு அவ்வளவு இணக்கமாக இருக்கிறது. உலகமே ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அக்கறை காட்டாதபோது கனடாதான் அவர்களை வரவேற்று, புகலிடம் கொடுத்து, இந்த நாட்டின் கௌரவமிக்க பிரஜைகளாக நடத்துகிறார்கள். அவர்கள் யாருக்கும் எந்த பேதமும் காட்டுவதில்லை. கல்வி, மருத்துவ வசதி என எல்லாமே கிடைக்கிறது. அங்கு வாழக்கூடிய தமிழ் மக்கள் ஒரு புகலிடத்தில் வசித்தாலும், அவர்களின் உணர்வுகளில், அன்றாடப் பணிகளில் ஈழமும் ஈழம் பற்றிய நினைவுகளும்தான் இருக்கின்றன. இன்றைக்கும் அவர்கள் நடந்துபோய்க்கொண்டிருந்தால்கூட ஈழம் பற்றிய நினைவுகளில்தான் இருக்கிறார்கள். யாரும் யாரைச் சந்திக்கிறபோதும் ஊரைப்பற்றித்தான் பேசுகிறார்கள். ஊரிலிருந்து வந்திருக்கக்கூடிய மனிதனைத்தான் வரவேற்கிறார்கள். ஊரினுடைய மொழியினுடைய அடையாளங்களை எல்லாம் பிரதானப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில்கூட அவ்வளவு நல்ல தமிழ் பேசமாட்டார்கள். அங்கே நல்ல தமிழ் பேசப்படுகிறது. தமிழின் இலக்கியமும் கலாசார அடையாளங்களும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. அவர்களை ஊர் வெளியில் ஒன¢றிணைத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கடினமான பொருளாதாரச் சூழலில் வாழ்ந்தபோதும், தான் சம்பாதித்த பணத்தை மொழி, இலக்கியம், கலாசாரம் சார்ந்த விஷயங்களுக்கு செலவு செய்கிறார்கள்.

அதற்கு நேரெதிரான அமெரிக்க வாழ்க்கையையும் பார்த்தேன். தமிழர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 1950களிலேயே தமிழர்கள் தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு பொறியியல் படித்து அமெரிக்காவில் போய் வாழத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் பெருவாரியான தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல நகரங்களில் ஒரு பகுதியே தமிழர்களால் நிறைந்திருக்கிறது. பெரிய பல்கலைக்கழகங்களில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் கனட தமிழர்களிடம் பார்த்த எந்த குணத்தையும் பார்க்கமுடியவில்லை. தன்னுடைய இனத்தையோ மொழியையோ இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து எந்த ஈடுபாடும் காட்டாத மனிதர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா பற்றியும்கூட வெறொரு பார்வை எனக்குக் கிடைத்தது. ஒரு பெரிய தொழில்நகரம், பிரம்மாண்ட கட்டடங்கள், வானுயர்ந்த தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அமெரிக்கா ஒரு தொழில்மயமான நகரம் என்றுதான் படித்துத் தெரிந்திருக்கிறோம். எனக்கு வேறுவகையான அனுபவம் கிடைத்தது.

அது பெரும் காடு. எப்படி தண்ணீரில் ஐஸ் கட்டிகள் மிதந்துகொண்டிருக்கிறதோ... அப்படி நகரங்கள் காட்டில் மிதந்துகொண்டிருக்கின்றன. எல்லா நகரங்களின் புறநகர் சாலைகளிலும் ஒரு மானைப் பார்க்கலாம். அந்த நகரத்தின் பத்தாவது மைலில் காடு தொடங்கிவிடுகிறது. காட்டோடு இணைந்த வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். காட்டிற்குள் குடியிருப்புகள் இருக்கின்றன. சாலைகள் இருந்தால்கூட அது அடர்ந்த காடுதான். இயற்கையை அவர்கள் பார்க்கிறவிதமும் நாம் பார்க்கிற விதமும் மாறுபட்டது. துண்டிக்காமல் அப்படியே இயற்கையோ இணைந்து  வாழ்கிறார்கள். ஒரு பக்கம் நகரத்தை உருவாக்கிக்கொண்டால்கூட மறுபக்கம் அப்படியே காடாக இருக்கிறது.  அதனாலேயே அங்கே ஒரு சமநிலை அற்ற தன்மை இருக்கிறது. அமெரிக்க மக்களுடைய பொதுவான மனப்போக்கு என்பது அவர்களுடைய வேலைசார்ந்து, பண்பாட்டு வெறுமை சார்ந்துதான் இருக்கிறது. தனித்துவமான ஒரு பண்பாட்டுத் சூழல் இல்லை. அது கூட்டுக்கலவையால் ஆனது. ஏதாவதொரு உணவகத்தில் போய் அமெரிக்க உணவு என்று கேட்டால், அங்கே மெக்சிகன் இருக்கும், ஆசிய உணவுகள் இருக்கும், பல்வேறு கூட்டு உணவுகளின் பகுதிதான் இருக்கும். அவர்கள் ஒரு கூட்டு மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள். அமெரிக்கா போய் வந்தபிறகுதான் தெரிந்தது. பொருளாதாரம் என்பது வெறுமனே முதலாளித்துவம் சார்ந்ததாக இல்லை. அது தனிமனிதனுடைய ஆளுமையைத் தீர்மானிக்கக்கூடியதில் முதலாளித்துவம் முக்கியத்துவம் வகிக்கிறது. அது தனிமனிதனை அவனுடைய சொந்த உலகம் தாண்டி வெளியே பார்க்காதே என்று உருவாக்கி வைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஒரு தமிழ் எழுத்தாளர்கூட அங்கே உருவாகவில்லை. அதே அமெரிக்காவுக்குப் போன ஜப்பானியர்களில் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். சீன எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். யூதர்கள் வந்துவிட்டார்கள். பல்வேறு இனக்குழுக்களிடமிருந்து எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். படைப்பு மனநிலை சார்ந்து அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையை சார்ந்து இன்னும் கவனப்படுத்தப்படவே இல்லை.




தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?



இன்றைக்கு எழுத்துச் சூழல் எழுத்தாளன் உருவாவதற்கும் புதிய எழுத்தாளன் தன்னுடைய படைப்புகளை வெளியிடுவதற்கும் முந்தைய காலகட்டங்களைவிட இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. அதேநேரத்தில் இளம் எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால், இந்த ஊடகங்களைத்தாண்டி ஓர் அசலான கதையை வாழ்க்கையை எழுதவேண்டியிருக்கிறது. முந்தைய எழுத்தாளர்களைவிட புதிய மொழியிலும், கதை சொல்லும் முறையிலும் வேறுபட வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால் நம்முடைய மரபு தேவையா இல்லையா என்பதிலும் சவால் இருக்கிறது. இளம் எழுத்தாளர்கள் பல்வேறு தளங்களிலும் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நம்பிக்கைதரக்கூடிய பல எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டிற்குள் இருப்பது கிடையாது. இன்றைக்கு தமிழ் எழுத்தாளன் என்று சொன்னால், எந்த தேசத்தில் வசிக்கிறீர்கள் என்றுதான் கேட்பேன்.

தமிழ் எழுத்தாளன் என்பவன் உலகத்தில் எல்லா தேசங்களிலும் வசிக்கிறவனாக இருக்கிறான். எங்கிருந்து வேண்டுமானாலும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பு வந்துவிடமுடியும். மலேசியாவில் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கிறார்கள். நியூசிலாந்தில் ஆஸ்திரேலியாவில் கனடாவில் எல்லா இடங்களிலும் நுட்பமாகவும் தேர்ச்சியாகவும் எழுதக்கூடிய படைப்பாளிகள் வந்துள்ளார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுத்து உருவாகியிருக்கிறது. அவர்களும் பிரதானமான தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதிதான். நிறைய நம்பிக்கைதரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு நாலைந்து பேரை சொல்வதாக இருந்தால்... பஹிமா ஜஹான், அனார் கவிதைகளைப் படிக்கிறேன். தமிழில் சந்திரா, எஸ். செந்தில்குமார் சிறுகதைகள் பிடித்திருக்கின¢றன. லெஷ்மி சரவணக்குமார் ஒரு நல்ல நாவல் எழுதியிருக்கிறார். மலேசியாவிலிருந்து பாலமுருகன் எழுதுகிறார். சிங்கப்பூரிலிருந்து லதா எழுதுகிறார். சு.தமிழ்ச்செல்வி எழுதும் நாவல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. நிலாக்கள் தூர தூரமாக என்றொரு நாவல் நன்றாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மொழிபெயர்த்துறையில் குப்புசாமி போன்றவர்கள் நோபல் பரிசு பெற்ற புத்தகங்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான சூழலாக ஒரு பக்கம் இருந்தாலும் கவலைதரக்கூடிய அம்சமாக இருப்பது என்னவென்றால் புதிய நாவலாசிரியர்கள் என்று தமிழில் யாருமே வரவில்லை. இந்த பத்தாண்டுகளில் வெளிவந்த இளம் தலைமுறை நாவலாசிரியர் என்று ஜோ.டி.குரூஸ்தான் தெரிகிறார். கோணங்கி, ஜெயமோகன், நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்து எழுதிவருகிறோம். இன்று அப்படி யாரும் தொடர்ச்சியாக எழுதுவதில்லை. ஜே. பி. சாணக்யாவை நல்ல சிறுகதை எழுத்தாளராக நினைத்திருந்தேன். அவரால் ஒரு நல்ல நாவலை எழுதியிருக்கமுடியும். ஆனால் அவர் தொடர்ந்து எழுதவில்லை. ஊடகங்கள் எல்லா வடிவங்களுக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை இலக்கியத்துக்குக் கொடுப்பதேயில்லை. ஒரு புகழ்பெற்ற படைப்பு தமிழில் வெளியாகியிருக்கிறது என்று எந்த தொலைக்காட்சியிலும் சொல்லிக் கேட்கவில்லை.




நீங்கள் எழுதிய நாவல்களில் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான நாவல் எது?



என்னுடைய மற்ற நாவல்களை எல்லாம் எழுதிவிடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுதமுடியாது என்ற நினைக்கிற நாவல் உபபாண்டவம். ஏனென்றால், அந்த நாவலை எழுதிய மனநிலை... ஒரு பெரிய இதிகாசத்தை எடுத்து அதில் பணியாற்றக்கூடிய ஈடுபாடு என்பது ஒருமுறைதான் சாத்தியமாகும். ஒரு நான்காண்டு காலம் அந்த நாவலை எழுதுவதற்காக செலவு செய்திருக்கிறேன். மீண்டும் ஒரு நான்காண்டு காலம் செலவுசெய்தால்கூட அந்த மனநிலை கிடைக்குமா என்றால் கிடைக்காது. திரும்ப அந்த புத்தகத்தை எடுத்துப்பார்க்கும்போதுகூட எனக்கு அந்தப் புத்தகம்சார்ந்த என்னுடைய அந்த எழுத்தும் அதிலிருந்து வெளிப்பட்டிருக்கக்கூடிய விஷயங்களும் வேறு புத்தகங்களில் வேறுவகையான உலகங்களை நான் எழுதும்போது இருப்பதிலிருந்து மாறுபட்டிருப்பதை நான் உணர்கிறேன். உபபாண்டவம் போன்ற ஒரு நாவல்தான் தமிழில் மகாபாரதத்தின்மீதான ஒரு புனைவு. இராமாயணம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. மகாபாரதம் பற்றி புனைவே கிடையாது. வெங்கட்ராம் எழுதிய நித்யகன்னி ஒரு கிளைக்கதை. அதைவிட்டால் பி.எஸ்.ராமய்யாவின் தேரோட்டி மகன். வேறு நவீன படைப்புகளை மகாபாரதம் பாதிக்கவேயில்லை. இந்தியாவில் பல நவீன படைப்புகளை அது பாதித்திருக்கிறது. தமிழில் மட்டும்தான் அது இல்லை. ஏன் இந்த விலகல் என¢று புரியவேயில்லை. ஒன்றிரண்டுபேர்கூட மகாபாரதம்சார்ந்து இயங்கவில்லை. ஜெயமோகன் பத்மவியூகம் போன்று ஒரு கதை எழுதியிருக்கிறார். வேறு யார் மகாபாரதம் சார்ந்த எழுதியிருக்கிறார்கள் என்றால் குறைவுதான். அந்தவகையில் இப்பவும் விருப்பமான நான் எழுதிய சவாலான எழுத்தாக உபபாண்டவன்தான் இருக்கிறது. அதற்கான ஒரு பெரிய அங்கீகாரத்தையும் அது அடைந்திருக்கிறது. இப்போது அது ஏழாவது பதிப்பு வந்திருக்கிறது.




முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் உயிர்ப்புள்ள உரையாடல்கள் அதிகம். இப்போதைய எழுத்துகளில் அது இல்லாமல் வெறுமனே விவரிப்பாகவே கதைகள் இருக்கின்றன. காரணம் என்ன?



உரையாடல்கள் ஒரு கதைக்கு ஏன் தேவைப்படுகின்றன? அல்லது ஒரு உரையாடலை ஏன் எழுதுகிறோம் என்றால் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும், இரண்டு பேர் பேசிக்கொள்வதன்வழியாக சிந்தனையைப் பகிர்ந்துகொள்வதற்கும்தான் உரையாடல் தேவைப்படுகிறது. உரையாடல் என்பது பெரும்பாலும் நாடகம் சார்ந்த ஒரு விஷயம். நாடகம்தான் காட்சிப்படுத்தப்படும்போது எல்லா காட்சிகளையும் பேசினால்தான் புரியவைக்கமுடியும். நிஜவாழ்க்கையில் உரையாடல் என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கிற சந்தர்ப்பம்தான். எந்த உரையாடலும் முழுமையானதல்ல. ஒருவன் ஒரு உரையாடலை தொடங்குவதற்கு முன்பு எதிராளி கலகம் செய்தால் உரையாடல் முடிந்துவிடுகிறது. நவீன வாழ்க்கையில் உரையாடல் குறைந்துவருவதுதான் மாற்றமாக இருக்கிறது.



ஒரு காலகட்டத்தில் உரையாடுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் உரையாடாமல் இருந்து ஒரு சமூகம், இன்றைக்கும் அதற்கான சந்தர்ப்பம் இருந்தும் உரையாட மறுக்கிற சமூகமாக மாறியிருக்கிறது. பொது இடங்களில் பேசுவதைத்தவிர, யாரும் தனிப்பட்ட முறையில் பேசுவதில்லை. நான்கைந்து பேர் சேர்ந்து பேசிக்கொள்வதில்லை. திண்ணைகள் இல்லை. வீடுகளில்கூட யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. ஓர் அலுவலகத்தில் 50 பேர் வேலைபார்க்கிறார்கள். அந்த ஐம்பது பேரும் ஐம்பது இயந்திரங்களைப்போல இருக்கிறார்கள். உரையாடல் இன்மை என்பதன் தேவை ஏன¢ இருக்கிறது என்றால், எப்போதெல்லாம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் மனம் செயல்பட தொடங்குகிறது. மனதை ஆராய ஆரம்பிக்கிறீர்கள். மனதின் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறீர்கள். ஒருவர் மௌனமாக இருப்பது என்பது வேறு. சும்மா இருப்பது என்பது வேறு. மௌனமாக இருக்கிறோமே தவிர, சும்மா இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனதில் பேசுவதைவிட ஆழமான தேடல் உள்ளே போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய நாவல்களில் அதன் கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றால்... அவர்கள் தங்களுடைய மனச்சிக்கல்களால் உருவானவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை புறவயமாக மட்டுமல்ல. அகவயமாகவும் புரிந்துகொள்ள நினைக்கிறார்கள். உரையாடல்களே அதிகம் இல்லாத நாவல்களை எழுதும் வகையைச் சார்ந்தவன் நான். ஏன் அப்படி எழுதுகிறேன்... உரையாடலை எழுதும்போது நாடகத்தனம் வந்துவிடுகிறது என¢று நினைக்கிறேன். பழைய நாவல்கள் ஏன் பெரிதாக இருந்தன? உரையாடல்கள் எழுதும்போது நாவல் விரிந்துகொண்டே இருக்கும். நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தால் 200 பக்கம் எழுதிவிடலாம். இன்று அப்படி தேவையில்லை. இப்போது 200 பக்கத்தைக் குறைக்கவேண்டியிருக்கிறது. என் நாவல்களிலும் உரையாடல்கள் உண்டு. 400 பக்க நாவலில் 50 பக்கம் உரையாடல் இருக்கும்.
நான் உரையாடலைக் குறைக்கக் காரணம், இந்த உரையாடலற்ற மனிதனைத்தான் நவீன மனிதன் என்று கருதுகிறேன்.




தமிழ் சினிமாவில் இயங்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்?



கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதன் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்று துறைகள்சார்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கிறேன். பொதுவாக இன்னும் கூடுதலாக இயங்கும் காலகட்டத்திற்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்டேன். ஆவணப்படங்கள், குறும்படங்கள் தயாரிப்பில் சேர்ந்து இயங்கினேன். முறையான ஒரு கேளிக்கைத் திரைப்படத்திற்குள் போய் வேலை செய்யும்போது, எனக்கு இருந்த முதல் தயக்கம் அந்தப் படங்களுக்கு எழுத்தாளனுடைய வேலை என்ன? எழுத்தாளர்கள் என்ன பங்களிக்கமுடியும்? என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் மெதுவாக அதற்குள் போகத் தொடங்கிய பிறகு எனக்குத் தெரிந்தது... அங்கே ஒரு எழுத்தாளனின் தேவை என்பது இலக்கியவாதியின் தேவை என்பது இல்லை. ஒரு திரைக்கதையாசிரியனின் தேவை.



தனிப்பட்டு ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பவர் இல்லை. அப்படி யாரையாவது சொல்லமுடியுமா? என்றால் நான் செல்வராஜ் அவர்களைத்தான் சொல்வேன். அவர்தான் ஓரளவுக்கு திரைக்கதை ஆசிரியர் என்ற பணியை முழுமையாகச் செய்தவர். 25, 30 முக்கியமான படங்களுக்கு எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் திரைக்கதை ஆசிரியராக இருந்திருக்கிறார். அதில் 25 படங்கள் சிறந்த படங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இவர்தான் திரைக்கதை ஆசிரியர். இவரைப்போல விரல் விட்டு எண்ணக்கூடிய திரைக்கதையாசிரியர்கள்தான் தமிழில் இருக்கிறார்கள். திரைக்கதையை எழுதுவதற்கு திரைக்கலையைப் பயின்று திரைமொழி தெரிந்த திரைக்கதை ஆசிரியர்கள் இல்லாததால், அந்தப் பணியை இலக்கியவாதிகளும் வேறு சிலரும் செய்யவேண்டியிருக்கிறது. அப்படி திரைக்கதை ஆசிரியராக ஓர் எழுத்தாளன் தன்னை மாற்றிக்கொள்ளமுடியுமா என்றால் முடியும். அது எளிது. ஏற்கெனவே எழுத்தாளர்கள் வாழ்க்கையை கவனிக்கவும், கதாபாத்திரங்களை உருவாக்கவும், மனதை சார்ந்து இயங்கவும் தெரியும் என்பதால் திரைக்கலையை மட்டும் அவர்கள் படித்துவிட்டால், அவர்களால் ஒரு திரைக்கதை ஆசிரியராக இருக்கமுடியும்.

எனக்கு இரு உதாரணங்கள் தோன்றினார்கள். ஒருவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் திரைப்பட நுட்பங்களைத் தெரிந்துகொண்டதால் எப்படி செய்கிறார்? இன்னொருவர் பத்மராஜன். இவர்கள் இருவரும் முக்கியமான படைப்பாளுமைகளாக இருந்தால்கூட அவர்கள் திரைப்படத்திற்குள் நுழைந்து ஒரு வேலையைச் செய்யத்தொடங்கி ஒரு புதிய திரைமொழியை உருவாக்கினார்கள். அப்படி ஏன¢ நம்மால் முடியாது? அப்படி சாத்தியப்படுத்துவதற்கான சூழல் தமிழில் இருந்ததா என்றால் இல்லை. மலையாளத்தில் இருந்தது. இல்லை என்பதால் விட்டுவிடாமல், முயன்றுபார்க்கலாமே என்று தோன்றியது. நான் பங்கேற்கி படங்கள் எல்லாம் சாதனைகள் என்று சொல்லமாட்டேன். மாறாக அத்தனையுமே என்னாலான பங்களிப்புக்கான இடங்கள். இதை உருவாக்குவதன் வழியாக நான் விரும்புகிற ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். முழுமையாக இ¢ல்லை என்றாலும் ஒரு பயணமாக அதை நடத்தமுடியும்


. இயக்குநர்களும் சேர்ந்துவந்தால் அதை முழுமையாகச் செய்யமுடியும். சிலரிடம் பணியாற்றும்போது முழு சுதந்தரத்தை உணர்ந்திருக்கிறேன். அது அந்த இயக்குநரால் அளிக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையை எழுத்தாளன் எழுதுவதற்கும் அது திரையில் வருவதற்கும் இடையில் அது நிறைய மாற்றங்களைச் சந்திக்கிறது. தனித்துச் செயல்பட்ட எழுத்தாளன் கூட்டுமுயற்சியில் செயல்படும்போது அவன் மனம் சிரமப்படுகிறது. சினிமா என்பது 100 பேர் சேர்ந்து செய்கிற வேலை. அதனால் உங்கள் எழுத்து மாற்றங்களைச் சந்திக்கும். டப்பிங்கில் உங்கள் வசனம் மாறிப்போகலாம். படப்பிடிப்பில் மாறலாம். இந்த ஏமாற்றங்களுக்கு இடையில்தான் நீங்கள் பணியாற்றவேண்டும். இத்தனை சமரசங்களோடு ஒன்றைச் செய்யவேண்டுமா? என்று கேட்டால் அது தனிப்பட்ட விருப்பம். திரைசார்ந்து சிறுவயதிலிருந்து ஒரு விருப்பம் இருந்து வந்திருக்கிறது. சினிமா பார்க்கிற ஆளாகத்தான் நான் இருந்திருக்கிறேன். அதனால் எனக்கு அதில் ஈடுபடவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எல்லோரும் அப்படி ஈடுபடவேண்டுமா என்று கேட்டால் அது அவர்களுடைய விருப்பம் என்றுதான் சொல்வேன்.



நீங்கள், ஜெயமோகன் போன்றோர் தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகும் இயக்குநர்களின் கதைக்குத்தான் நீங்கள் வேலை செய்யும் நிலைமை உள்ளது. உங்களது கதைகள் சினிமாவாக உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன?



முக்கியமாக அவர்கள் எங்களை ஒரு பணிக்காகத்தானே அழைக்கிறார்கள். என¢னை ஓர் இயக்குநர் அழைக்கும்போதே, நீங்கள் ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்கள். அதை நான் படமாக்குகிறேன் என்று சொல்வதில்லை. நான் ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறேன். அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் என்னோடு சேர்ந்து பணியாற்றமுடியுமா என்று கேட்கிறார். முதலிலேயே ஒரு வரையறை வந்துவிடுகிறது. நாம் அவர்களுடைய ஒரு பணியைப் பகிர்ந்துகொள்ளப்போகிறோம். எனக்கு விருப்பம் இருந்தால் பகிர்ந்துகொள்ளலாம். இல்லையென்றால் மறுத்துவிடலாம். நான் ஒரு எழுத்தாளன். என் கதைகள் இருக்கின்றன என்று அந்த இயக்குநருக்குத் தெரியும். என் படைப்புகளில் ஒன்றை படமாக்க விரும்பினால்கூட அது எளிதில்லை என்று தெரியும். அதற்கு பொருளாதாரப் பின்புலம் வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும். நடிகர்கள் நடிக்க சம்மதிக்க வேண்டும்.

இன்று தமிழில் நல்ல நாவல்கள் இருக்கின்றன. என்னுடைய நாவல்கள், ஜெயமோகனின் நாவல்கள் மட்டும் சொல்லமாட்டேன். படமாக்கப்பட வேண்டிய நாவல்கள் என்று 50 நாவல்கள் இருக்கின்றன. அவை படமாகாமல் போவதற்குக் காரணம் அந்தச் சவாலை யார் ஏற்றுக்கொள்வது? ஒரு நாவல் படமாக்கப்பட்டு வெற்றியடையும்போது அதைத் தொடர்ந்து பல நாவல்கள் படமாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த முன்மாதிரி நடக்கவில்லை. நடந்தால் அந்த நாவலுடன் நின்றுபோய்விடும். இலக்கிய நாவல்களை விட்டுவிடுங்கள். பாப்புலர் பிக்ஷன்கூட இன்னும் படமாக்கப்படவில்லை. இங்கே திரைப்படத்துக்குத் தேவை ஒரு பிரதி. ஹாலிவுட்டில்கூட இலக்கியம் படமாக்கப்படவில்லை. பாக்னர், ஹெமிங்வேயின் முக்கியமான படைப்புகள் படமாக வரவில்லை. நோபல் பரிசு வாங்கிய கதைகளை உலகில் எங்கேயும் படமாக்கிவிடவில்லை. ஒரு நாடோ ஓர் இயக்கமோ சேர்ந்து நல்ல படங்களைத் தந்திருக்கிறார்கள். குந்தர்கிராஸின் டின்ட்ரம் படமாக வந்திருக்கிறது. அது நாவல் தந்த எழுச்சியைவிட அதிகமாக இருந்தது. இங்கே அந்தச் சூழல் இல்லை. கதை என்பது உருவாக்கப்படுகிறது. காரணம் வணிகம் சார்ந்து இயங்குகிறது. ஆனால் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் புதிய கதைக்களனைக் கொண்ட தொழில்முறை நடிகர்கள் அல்லாத படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. நிறைய சிறிய படங்கள் வந்துள்ளன. எதார்த்தமான நிஜ சூழலில் படமெடுக்க நினைக்கிற ஓர் இயக்குநர் எதார்த்தமான கதையை மட்டுமே கையில் எடுப்பதில்லை. இந்த முன¢முயற்சிகளை எடுப்பதற்கு அந்தப் பண்பாடும் தயாராக இருக்கவேண்டும். இத்தனை படங்கள் ஓடுகின்றன. ஆனால் இந்தியாவிலேயே உலகப்படங்கள் போடக்கூடிய ஒரு திரையரங்கம் இருக்கிறதா?




திரைப்படம் ஒன்றை இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளதா?


திரைப்படத்துறையின் அதன் அடிப்படைகளைத்தான் நான் முதலில் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அதன் திரைக்கதையாசிரியனாக உருவாக்கிக்கொள்வதற்கான பயிற்சி. இப்போது என்னால் ஒரு திரைக்கதையை எழுதமுடியும். அதன் பல்வேறு சாத்தியங்களை என்னால் உருவாக்கிக்காட்டமுடியும். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள். முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவம் அதைத் தந்திருக்கிறது. நான் ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது பொருளாதாரம் சார்ந்த ஒரு கூட்டுழைப்பைச் சேர்ந்தது. இந்தக் கலையை ஆழ்ந்து கற்றுக்கொள்வதன் அடுத்த நிலையாக கருதுவது.


.. நான் விரும்புகிற கதையை, விரும்புகிற வாழ்க்கையை திரையில் சொல்வதுதான். ஏனெனில் ஒரு நாவலை எழுதுவதுபோலத்தான் திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நாவலை எழுதுவதற்காக திட்டமிடுகிறேன். திருத்தம் செய்கிறேன. மிக பொறுமையாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் வேலையை முடித்துவிட்டு கடைசியாகத்தான் அதைச் சொல்கிறேன். நாவல் வெளியாகிற நேரங்களில்தான் இப்படியொரு நாவலை நான் எழுதினேன் என்று தெரியவரும். அப்படித்தான் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க விரும்புகிறேன். அது நாளையே உருவாகுமா? அல்லது நாளாகுமா என்று தெரியாது. நிச்சயம் நான் விரும்புகிற ஒரு திரைப்படத்தை உருவாக்குவேன். 





நன்றி - த சண்டே இந்தியன்

ரெசிடென்ட் ஈவில் = சம்சாரம்

True Story ...!
1.தமிழகத்தில் சிகரெட்டிற்கு முதலிடம், பீடிக்கு அடுத்த இடம்  # அப்போக்கூட தமிழன் வெள்ளையனுக்குத்தான் அடிமையா இருக்கான் பாருங்க


--------------------


2. 2014 க்குள் ஐ.மு., கூட்டணி அரசு கவிழும்-அத்வானி # சொல்லிட்டாருய்யா ஜோசியரு,மனசுக்குள்ளே சுப்ரமணியம் சுவாமின்னு நினப்பு



--------


3. வாழ்க்கையின் சுவாரஸ்யம்,நம் எதிர் வீட்டில் குடி இருக்கும் ஃபிகரை  பொறுத்தே தீர்மானம் ஆகிறது!!





--------------


4. கன்யாகுமரியில் குடி இருக்கும் ஆண்கள் கொஞ்சம் கிளுகிளுப்பாக உணர்வார்கள்  # கன்னி, குமரி



---------------------



5. மழை வந்தாலும் சரி, வரா விட்டாலும் சரி பெண்கள் கல்லூரி வாசலில் ஜொள்ளாறு ஓடிக்கொண்டே இருப்பதால்  மண் வளம் காக்கப்படுகிறது



--------------------


6. அஸ்கா என்றால் இனிப்பு, அனுஷ்கா என்றால் கிளுகிளுப்பு # தித்திப்பு



--------------


7. ரெசிடென்ட் ஈவில் = சம்சாரம்



-------------------



8,ஜட்ஜ் - உங்க படத்தோட கதை அவருதுன்னு சொல்றாரே?


டைரக்டர் - இந்தாங்க சிடி, பாருங்க, படத்துல கதை இருந்தா என்னை செருப்பை கழட்டி அடிங்க



-------------------------


9. டியர், நம்ம காதல் ரொம்ப  ஆழமானதுதானே?



ம்க்கும்,இதை மட்டும் கேளு, ஆனா கிட்டே விட்ராதே!



---------------------------


10. குடிப்பழக்கம் இல்லாதவன் அலா”ரம்” வெச்சுக்க மாட்டான்




---------------------





11. பூ வைப்பவர் பூவையர் என்றால், அந்தப்பூவையரை திட்டுபவரை பூவையர் வையர்னு சொல்லலாமா?




--------------------------


12. காந்தியோட பிறந்த நாள் காந்தி ஜெயந்தின்னா ஜெயந்திக்கு பிறந்த நாள்னா அது ஜெயந்திஜெயந்தியா?  # பொழுது போகாத பொம்மு




--------------


13. டீச்சர் - ஹோம் ஒர்க் பண்ணிட்டியா?



லொள் ஸ்டூடண்ட் - ச்சீய், அதெல்லாம் மேரேஜ்க்குப்பிறகுதான்



-----------------------


14. சகி = மனைவி # சகி = சகித்துக்கொள் # ஒரு சொல் இரு பொருள்



------------------


15. கதவை  சாத்திட்டு உன்னை அடிச்சது உன் சம்சாரமா இருந்தா உயிர் போற வலியா இருந்தாலும் வெளில சொல்ல முடியாது # கந்தரகோல் பாண்டியன்



--------------------



முள்ளு சீதா (Graviola அல்லது Soursop)

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than C...
16. வேதனையோட போனவனுக்கு வெறும் தண்ணி,வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு ஸ்பெஷல் டீ # எக்சாம் ஹாலில் மாணவன், சூப்பர்வைசர்




-------------------


17. உன்னால் முடிந்ததை சிறப்பா செஞ்சா அது திறமை,  மற்றவர்களால் செய்ய முடியாததை நீ செய்தால்  அது தன்னம்பிக்கை  # கா தத்ஸ்




-----------------


18. வெல்டிங்க் பட்டரைல வேலை செய்யறவன் பத்த வைச்சா , பில்டிங்க் ல வேலை செய்யற சித்தாள் குத்த வெச்சா குத்தம் சொல்ல முடியாது




---------------------


19. டியர் டாடி, நோ மணி, நோ ஃபன் - பை யுவர் சன் # டியர் சன், சோ சேடு, வெரி பேடு - பை யுவர் டாட்   #  SMS





--------------



20. மியூசிக் டீச்சர்  மிருதுளா - உனக்குப்பிடிச்ச இசை க்கருவி எது?



லொள் மாணவன் - லஞ்ச் பெல்



----------------------


PM is the highest authority
மங்குனிக்கு புரிஞ்சா சரி!



21. ரோஸின்னு பேர் வெச்சிருக்கும் ஃபிகர் எல்லாம் ரோஸ் கலர்ல இருக்கும்னு எதிர்பார்க்கக்கூடாது




--------------------


22 உங்க சம்சாரத்தின் மீது நீங்க செம கோபமா இருக்கும்போது  நீங்க செய்ய வேண்டிய ஒரே காரியம் அவ சேலையை துவைத்து வைப்பதே !




--------



23. நான் உனக்கு காதல் கவிதை தந்தேன், அதைக்கூட  வார இதழுக்கு அனுப்பி காசு பார்த்து விட்டாய் !






-----


24. மதுரை ஆதீனத்தின் அடுத்த சன்னிதானமாக நித்தி ஐ நியமனம் செய்தது சட்டப்படி சரியல்ல- இந்து சமய அறநிலையத் துறை # செட்டப்படி சரிதான்- பதிலடி



---------------


25. சார், நேத்து ரிலீஸ் ஆன உங்க படம் பார்த்தேன்!


அடடே, இன்னும் ஓடுதா? சபாஷ்! ஊத்திக்கிச்சுன்னு சொன்னாங்க



-----------------------




Saturday, September 29, 2012

REBEL - சினிமா விமர்சனம்

http://www.apherald.com/ImageStore/images/Movies/Movies_Reviews/Rebel-Movie-Review647x450.jpgரிபல்னா இன்னா மீனிங்க்னா நிறுவப்பட்ட அரசாங்கம் , அல்லது ஆட்சியாளருக்கு எதிராக போர் தொடுக்கும்  தனி மனிதனின் செய்கைகள்.கிட்டத்தட்ட கூடங்குளம் அணு உலைக்கு எதிரா போராடும் ஒவ்வொரு தனி மனிதனும் ரிபல் தான். படத்தோட கதையை பார்ப்போம். 


ஹீரோ ஸ்டீபன் ராபர்ட்னு ஒரு ஆளை தேடி வர்றார். அவன் ஒரு தாதா கம் கொலைக்குற்றவாளி கம் ரவுடி .ஆனா ஆளை கண்டு பிடிக்கவே முடியல. அவன் ஃபோட்டோ கூட யார் கிட்டேயும் இல்லை. எல்லாரும் மணி பர்ஸ்ல வெச்சுட்டு சுத்த அவன் என்ன  ஐஸ்வர்யாராயா? 


ஹீரோ எதுக்காக அந்த கேப்மாரியைத்தேடறார்ங்கறது சஸ்பென்ஸ். அப்போதான் அவருக்கு ஒரு தகவல் கிடைக்குது. அதாவது இன்னொரு கேப்மாரி கம் தாதாவுக்கு அந்த கேப்மாரி நெம்பர் ஒன்னை பற்றி தெரியும்.இது எப்படின்னா 2 ஜி ஊழல்ல ஆ ராசா அடிச்ச பணம் எவ்வளவு என்பது கலைஞர்க்கு மட்டும் தான் கரெக்டா தெரியும்கற மாதிரி.. 


அந்த தாதா நெம்பர் 2வுக்கு ஒரு மகள். அவ பாங்காங்க்ல இருக்கா .ஏன்னா படம் மெகா பட்ஜெட். லோ பட்ஜெட்னா அவ எங்காவது குப்பத்துல குப்பை பொறுக்கிட்டு இருந்திருப்பா.ஹீரோ பாங்காங்க் போறாரு. நேரா போய் உங்கப்பா கிட்டே எப்படியாவது நெம்பர் ஒன் கேப்மாரி ஃபோட்டோவை மட்டும் வாங்கிக்குடுன்னா குடுத்திருப்பா. ஆனா கதை 2 ரீல்லயே முடிஞ்டுமே?

 அதனால அவளை லவ் பண்ற மாதிரி நடிக்கறார்.அந்த கேனமும் ஹீரோவை லவ்வுது. இந்த காமெடி மொக்கை லவ் ஸ்டோரி 5 ரீல் ஓடுது. அப்புறம் அந்த ஃபோட்டோவை ஹீரோவுக்கு ஹீரோயின் எடுத்து தந்துடறா .


http://3.bp.blogspot.com/-0EJTbPMljEE/UENq5rF0LwI/AAAAAAAAClg/fuJ-jODglgI/s1600/Tamanna+Stills+in+Rebel.JPG



 இப்போ ஃபிளாஸ்பேக். சண்டைக்கோழி படத்துல வர்ற மாதிரி ஹீரோவோட அப்பாவும் ஒரு படா தாதா. ஆனா தன் மகன் தன்னை மாதிரி ஆகிடக்கூடாதுன்னு நினைக்கறவர்.அவருக்கு லோக்கல் தாதா கூட ஒரு பகை.அதுல அவனை இவர் அவமானப்படுத்த  அவன் இவரை ஸ்டீபன் ராபர்ட் எனும் தாதா மூலமா கொன்னுடறான்.

சுருக்கமா சொல்லனும்னா 1980ல வந்த 2000 படங்களோட கதைதான் . அப்பா ,அம்மாவை கொன்னவங்களை பையன் தேடி பழிக்கு பழி வாங்கறது.


 இயக்குநர் ராகவா லாரென்ஸ்ஸை ஒரு வகைல பாராட்டனும், ஏன்னா தான் ஹீரோவா நடிக்கற படம்னா காஞ்சனா ,முனி மாதிரி நல்ல காமெடி எண்டர்டெயிண்மெண்ட்டா எடுக்கறது, அடுத்தவன் ஹீரோன்னா எவனோ எக்கேடோ கெட்டு நாசமாப்போறான், நமக்கு சம்பளம் வந்தா சரின்னு குப்பைப்படத்தை எடுத்து கடனைக்கட்டறது.




ஹீரோ பிரபாஸ் ஆள் செம பர்சனாலிட்டி. தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகும் தெலுங்கு முகம். அவருக்கு டான்ஸ், ஃபைட், பஞ்ச் டயலாக்ஸ் எல்லாமே நல்லா வருது, காமெடில கூட சமாளிக்கறாரு. ஆனா இவருக்கு என் தனிப்பட்ட அட்வைஸ் என்னான்னா  சிரஞ்சீவி நடிச்ச படங்களை 10 டி விடியாவது போட்டுப்பார்த்து.  கதையை கொஞ்சமாச்சும் புதுமையா இல்லாட்டி பரவாயில்லை, அரதப்பழசா இல்லாம செலக்ட் பண்ணனும்கறதுதான். 



ஹீரோயின் தமனா.எலுமிச்சைல 3 வகை இருக்கும் ஊறுகாய்க்குன்னு போடுவாங்க, ரொம்ப சின்னதா இருக்கும், ஜூஸ் பிழியறதுக்குன்னு இரு வகை இருக்கும். இது கொஞ்சம் பெரிசா இருக்கும், லெமன் சாதம் கழறுதுக்குன்னு ஒரு வகை இருக்கும். இது நல்லா தளதளன்னு செம மஞ்சளா இருக்கும். தமனா  3 வது வகை..



 சில பேரு தமனாவைப்பற்றி என்ன குறை சொல்றாங்கன்னா  அவருக்கு உதடு அமைப்பு சரி இல்லை , முக லட்சணம் சரி இல்லைன்னு. ஆனா அவங்க தன்னை கண்ணாடில பார்க்கவே மாட்டாங்க.. என்னை பொறுத்தவரை நான் இயக்குநர் விக்ரமன் டைப். எதையும் பாசிட்டிவா பார்க்கனும். எந்த ஒரு டொக்கு ஃபிகர்ட்டயும் நாம்  ரசிக்கும் ஒரு அம்சம் கண்டிப்பா இருக்கும், அதை ரசிக்கறதை விட்டுட்டு அது சரி இல்லை இது சரி இல்லைன்னு நொட்டு சொல்லிட்டு இருக்கக்கூடாது..


படத்துல இடைவேளை வரை இவர் ராஜ்யம் தான். டான்ஸ் டீச்சரா வர்றார்.


 இன்னொரு ஹீரோயின் தீக்‌ஷா சேத். இவர் உதட்டழகி.வரைஞ்சு வெச்ச மாதிரி ஒரே அளவு உள்ள மேல் கீழ் உதடுகள். ஆனா இவரை சரியா யூஸ் பண்ணிக்கலை. கோவை சரளா கூட  இவரும் , பிரமானந்தம் கூட ஹீரோவும் போடும் காமெடிக்கூத்துகள் மொக்கைதான் என்றாலும் சிரிக்க வைக்குது. 



கஜினி பட வில்லன், கிருஷ்ணம் ராஜூ,தீக்‌ஷா தேத்னு நட்சத்திரங்கள் ஏகப்பட்ட பேர்  கூட்டத்துல கோவிந்தா போட்டுட்டு வர்றாங்க. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD4CHirZEimDf98vJiwKhXgWtVtr3ocxfLgIu9zQvxz2lF7D5PiDKil-gYehm2GjX6WsHc-8MKuCF7blse0zLgz3QpguxIwkEbs0gEoTOrgpN3Z3ngZ9r-_pH2PYPJteJJrCFS-ZR5K08/s1600/Deeksha+short+&+bikni.jpg




 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. போக்கிரி  வடிவேல் கெட்டப் மேக்கப்பில் கோவைசரளா + பிரம்மானந்தம் காமெடி, டான்ஸ் பிராக்டீஸ் காட்சிகள்



2.  ஹிப் ஹோப் எனப்படும் ஒரு வி வி சி மூவ்மெண்ட் காமெடி ( வி வி சி = விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி 



3. ஹீரோ ஃபிளாஸ்பேக்கில் தனது லவ்வரை  பாட்டு டீச்சர்  என வயதான கெட்டப்பில் கூட்டி வருவதும் தீபாசேத்துடன் நடக்கும் காமெடிகளும்


4. சங்கீதம் தெரியாத ஹீரோவை அவர் அப்பா  டெஸ்ட் வைக்க ஏற்பாடு செஞ்ச ஆளுக்கும் சங்கீதத்தின் அரிச்சுவடி கூட தெரியாது. அந்த லட்சணத்துல 2 பேருக்கும்  பாட்டுப்போட்டி வேற. அந்த காமெடி நல்லாருக்கு.



5. பாடல்களில் டம் டம் டக்கா டக்கா , எக்சலண்ட் நீ ஃபிகரு 2ம் செம ஃபாஸ்ட் பாட்டு. ஹிட் ஆகிடும் ( ஆல்ரெடி அங்கே ஹிட்)


 http://www.mirchiphotos.com/wp-content/uploads/2011/05/tamanna-hot-navel-stills-photos-06.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிரம்மானந்தம் - நீ ஆறு அடில ஹீரோ  மாதிரி இருந்து என்ன யூஸ்? நான் ஜஸ்ட் 5 அடிதான் இருக்கேன். நான் அடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா?



2. பிரம்மானந்தம் - இப்போ நல்லா நேரம்.. இவ கிட்டே ஐ லவ் யூ சொல்லு

 ஹீரோ - இந்த மூஞ்சி கிட்டேயா? 



ஹீரோயின் - யோவ்!! 



3. XQSமீ மேடம், கொஞ்சம் நீச்சல் குளத்தை விட்டு வெளீல வாங்க, இவர் உங்க கூட பேசனுமாம்.. 


 நான் குளிச்சுட்டு இருக்கேன்


 பரவாயில்லை, வெயிட் பண்றோம் ஹி ஹி 



4. என்னப்பா? சங்கீதம் கத்துக்கிட்டு இருக்கியா? 


 எஸ் டாடி, பாத்ரூம்ல குளிக்கும்போது கூட பாடிட்டுதான் குளிக்கறேன்



5. இந்த லேடிக்கு  கூந்தல் முடி மட்டும் நரைச்சு ஒயிட்டா இருக்கு, ஆனா பாடி செம டைட்டா ஃபிட்டா இருக்கே?


 யோவ்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVkdIUE_IvOCOrD7AurC4l816mI6JAtxO7W4dAnd2xz_nmsKiH0y6b4AAsEwvh05d_yOfNqnCwTql3jqpQjj0SRkkMfGcafNMG3A3Hs900ByHmGi8iCSPU8JV5fUAtMdSNNleb8dRC6Hs/s1600/Deeksha_Seth_Hot_Saree5_5.jpg


 இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் சில கேள்விகள்



1. நல்ல வேளை மைக்கேல் ஜாக்சன் உயிரோட இல்லை, இல்லைன்னா தமனாவை மைக்கேல் ஜாக்சன் கெட்டப்க்கு ஆட விட்டதுக்கு. ஹி  ஹி ஹி . அதுலயும் காதலன் பட முக்காலா முக்காபுல பிரபுதேவா பாட்டு நடன ஸ்டைல் உல்டா. 



2. தாதாவோட ஆளுங்க அவ்வளவு வெய்யிலிலும் டார்க் ப்ளூ  அண்ட் ப்ளூ கோட் சூட் சிவப்புக்கலர் டை போட்டு வர்றது செம கூத்து


3. கோவை சரளாவுக்கு ஸ்விம் சூட் படு கேவலம். அதுல பேக் ஓப்பன் முதுகு வேற .. 


4. ஹீரோ ஹீரோயின் கிட்டே என் ஆள் எப்படி இருப்பா தெரியுமா?  அவ கண் எப்படி இருக்கும் தெரியுமா? உதடு எப்படி இருக்கும் தெரியுமா? என பார்ட் பார்ட்டாக ஹீரோ வர்ணித்து அவரை ஒரு கண்னாடியின் முன் நிற்க வைப்பது ஸாரி, நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்தாச்சு..


5. காருக்கு பாம் வெச்சு அதை வெடிக்க வைக்கும் ஹீரோ 3 அடி பக்கத்துலயே ஸ்லோ மோஷன்ல நடந்து வர்றார். அதெல்லாம் அவர் மேல தெறிக்காதா? பாதுகாப்பான தூரம் ஓடிப்போய் அப்புறமா அந்த ஸ்லோமோஷன் பந்தாவை வெச்சுக்க மாட்டாரா? 



6. தன் அப்பாவுக்கு தெரியாம அவர் செல் ஃபோன்ல இருந்து  ஒரு இமேஜை தன் செல் ஃபோனுக்கு அனுப்பும் ஹீரோயின் அப்படியே ஃபோனை அவர் கிட்டே கொடுக்கறார். செண்ட் ஐட்டத்துல போய் அதை எரேஸ் பண்ண வேணாமா? 


 http://reviews.in.88db.com/images/deeksha-hot/deeksha-seth-hot-stills-pics-images-gallery-19.JPG



7. இந்த காலத்துல வேலைக்கு ஆள் சிக்குவதே கஷ்டம் இந்த லட்சணத்துல வில்லன் சம்பந்தமே இல்லாம தன்னிடம் வேலை செய்யும் 4 பேரை ஓப்பனிங்க் சீன்ல கொலை பண்றார். அவர் கொடூரமானவர்னு காட்டவா?


8. வில்லன் ஒரு சீன்ல நெஞ்சுல சுடறார். உடனே டிரைவர் வாய்ல ரத்தம் கக்கி சாகறார். செய் வினையா? 


9. கன்யாஸ்த்ரீ ( மதர் சுப்பீரியர்) கூட லிப்ஸ்டிக் போட்டு காட்டனுமா? 


10. தன் மகனுக்கு ஃபைட் எல்லாம் தெரியாது என நம்பும் தாதா அப்பா ஒரு இக்க்டட்டான சூழலில்  65 பேரை அடிச்சுப்போடும் மகனைப்பார்த்து பிரம்மிப்பது பாட்ஷா உல்டா.. ( உள்ளே போ டயலாக் உட்பட அடிக்கனுமா? )


11. வில்லன்  5 அடி வாளை ஓங்கறார், ஹீரோ அதை இறுக்கிப்பிடிச்சு என்னமோ வாழைத்தார் பிடுங்குவது போல பிடுங்கறார், அவர் கைல இருந்து 2 படி ரத்தம் கொட்டுது. ஆனா உள்ளங்கைல ஒரு துளி காயம் ஆகலை. 


12. கஜினி வில்லன் எதுக்கு சம்பந்தமே இல்லாம க்ளைமாக்ஸ்ல ஹீரோ கிட்டே வந்து நான் தான் உங்கப்பாவை  ஆள் வெச்சு கொன்னேன், இப்போ உன்னால என்ன பண்ண முடியும்?னு கேட்டுட்டு எதுக்கு தற்கொலை பண்றார்? அதுக்கு அங்கே வராமயே இருந்திருக்கலாமே? 

12. ஹீரோ ஹீரோயினைப்பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியா? அப்டினு டீஸ் பண்றாரு, உடனே ஹீரோயினுக்கு லவ் வருமா? நிஜவாழ்வுல செருப்படிதான் கிடைக்கும்.. 


http://www.andhrabulletin.com/admin/images/tamanna%20hot%20pics%20(10).jpg



சிபி கமெண்ட் - முதல் பாதி காமெடி ஆட்டம் பாட்டம். பின் பாதி தலை வலி அடிதடி வெட்டுகுத்து.. ஆந்திராவுக்கு ஓக்கே , நமக்கு நாட் ஓக்கே.. இந்த தலைவலியை ஈரோடு அண்ணா வில் பார்த்தேன், அண்ணா நாமம் வாழ்க !


டிஸ்கி -

தாண்டவம் - சினிமா விமர்சனம் |