Saturday, August 06, 2011

கலைஞரின் சொத்துமதிப்பை வெளியிட்ட ஆங்கிலப்பத்திரிக்கை - அரண்டு போன பிரதமர்,மிரண்டு போன திமுக

ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?


பிரதமரை மிரளவைத்த ஃபெர்னாண்டஸ் பத்திரிகை!
 
குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 


'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.


அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. 

வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!


1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.


9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.


10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.


11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.


12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.


13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.


14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.


15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.



16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.


17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.


18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.


19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.


20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.


21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.


22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.


23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.


24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.


25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.


26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.


27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.


28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.


29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை


30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை


31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.


32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.


33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.


34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.


35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்


36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.


37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.


38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.


39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.


40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.


41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.


42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.


43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.


44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.


45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.


46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.


47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.



48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.


49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.


50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.


51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.


52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.


53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.


54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.


55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.


59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.


60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.


61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.


62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.


63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை


64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.


65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.


66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.


68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.


69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.




- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.


''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது.


பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

நன்றி - ஜூ வி
டிஸ்கி 1 -

டூ -ஊடலாடும் காதல் உள்ளங்கள் - சினிமா விமர்சனம்

 டிஸ்கி 2 - போட்டோ போட்டி - மொக்கை காமெடி லூட்டி - சினிமா விமர்சனம்

 

 

Friday, August 05, 2011

போட்டோ போட்டி - மொக்கை காமெடி லூட்டி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpRZ4BbPEfQEY-2-n_th-KLWSu9ZKRXIegqIMjuamDH8bElGTANT-XptSqc7Uuj5aGUf941OQHUIBoXZpM4is_alH85PoeXgKw6uCybAT8SF3NBX_r_SF3RD8LzZ09ta4e0PfY-1-9mmxO/s1600/potta_potti_50_50_movie_patta_patti.jpg 

லகான் அப்டினு ஒரு சூப்பர் ஹிட் படம் ஹிந்தில வந்து இத்தனை வருஷம் ஆகியும்  ஒரு ஆள் அதை உல்டா பண்ணக்காணோமேன்னு பலர் ஆச்சரியமா நினைச்சுட்டிருந்தாங்க.. யாமிருக்க பயமேன் அப்டினு ஒரு குரூப் கிளம்பி அந்த லகானை அப்டியே கோடம்பாக்க ஃபார்முலாவுல காமெடி, மொக்கை, காதல்  எல்லாம் சேர்த்து பஞ்சாமிர்தம் ஆக்கி ஒரு வழி பண்ணீட்டாங்க..

ஒரு கிராமத்துல 70 மார்க் ஃபிகர், அதுக்கு 2 முட்டாள் முறைமாமனுங்க.2 பேரும் ஸ்டாலின், அழகிரி மாதிரி அடிச்சுக்கறாங்க. உடனே பஞ்சாயத்து கூடி கிரிக்கெட் போட்டி வைச்சு யார் ஜெயிக்கறாங்களோ? அவங்களுக்கு பொண்ணு அப்டினு கேவலமா ஒரு தீர்ப்பு சொல்லுது.. உடனே 11 பேர் மாப்ளையா?ன்னு கேட்கக்கூடாது, கேப்டனுக்குத்தான் பொண்ணு .சைக்கிள் கேப்ல கிரிக்கெட் கோச்சர் சடகோபன் ரமேஷ் ஃபிகரை எப்படி கல்யாணம் பண்ணி 2 மாமன் மார்களுக்கும் அல்வா குடுக்கறார்ங்கறது தான் கதை..

தமிழ்படம் , மகா நடிகன் , கோல் மால் , புதையல் பட வரிசைல  மொக்கை காமெடி பட பட்டியல்ல இதையும் சேர்க்கலாம், அங்கங்கே ஆக்‌ஷன் ஹீரோக்களை , தமிழ் சினிமா க்ளிஷேக்களை நக்கல் அடிச்ச விதம் ஓக்கே.. 

சடகோபன் ரமேஷ் முதல் படம் என்ற அளவில் பாஸ் மார்க் நடிப்பு.. அடுத்த படம் எப்படியோ.. அவர் ரிலேட்டட் சப்ஜெக்ட் என்பதால் தப்பிச்சிடறார்.. 

ஹீரோயின் ஹரிணி ( பாய்ஸ் பட ஹரிணி அல்ல) ஒற்றை நாடி தேகம்.. ஒப்பனை தேவை இல்லாத அழகு முகம் , கண்ணியம் மிக்க தோற்றம் , நடித்த வரை ஓக்கே.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiid_CyUPWlvIj5c7RPOvAcdhVdoh9MmLjQO9o89sl7WUaL1b4SMxfFoLbRZHjSKg3edonByj5kRDfTnlosIITb1Ft2sAihpLJCOadsy0hngxeYv4ZXfI7UdXDLtFw5BWbG8HPyY9Gv5yzC/s1600/patta-patti-actress-harini-stills-pics-photos-03.jpg

வசன பவுலிங்கில் காமெடி சிக்ஸர் அடித்த இடங்கள்

1. இதோ இவனுங்க தான் உருப்படியான ஊரை உருப்படி இல்லாம ஆக்குனதுல முக்கிய பங்கு வகித்தவர்கள்......( ஆர் பார்த்திபன் குரலில் கதை சொல்லும் ஓப்பனிங்க்.. )

2.  இப்போ வெண்ணைனு திட்டுனது என்னையா? எங்கண்ணனையா?

உங்கண்ணனைத்தான், ஏன்?

நல்ல வெளை, எங்கண்ணனை திட்டினே. என்னைத்திட்டி இருந்தா நடப்பதே வேற.. 

3.  இவனுங்க யார் தெரியுமா? இவனுங்க 2 பேருக்கும் படிப்பு வர்லைங்கறதுக்காக ஊர் ஸ்கூலையே இழுத்து மூடுனாங்க..

4. என்னங்க? யாரோ என்னை காய் அடிக்கறாங்க.. 
என்னடி சொல்றே?


அடச்சே! திரு விழா கூட்டத்துக்கு வந்தவங்க யாரோ என் மீது காயை வீசி அடிக்கறாங்க.. 

5.  நீயும் தானே என் மகன் கூடப்போனே? அவனை அடியில் இருந்து காப்பாத்தி இருக்கலாம் அல்ல?

என்னையும் தானே உக்கார வெச்சு கும்முனாங்க?

6.  இன்னைக்கு வெள்ளிக்கிழமை, நான் யாரையும் அடிக்க மாட்டேன்னு தெரிஞ்சு என்னை கோர்த்து விடறியா?

7. ரேக்ளா ரேஸ் வைப்போமா? ஜெயிக்கறவனுக்கு பொண்ணு.. 

டேய் நாயே, எனக்கு வண்டி ஓட்டவே தெரியாதுடா.. 

8. அண்ணே! ஒரு ஐடியா..உங்க மாமா பொண்ணை கடத்திட்டு வந்து முடிச்சிடுங்கண்ணே!

அடப்பாவி, கொலை பண்ண சொல்றியா?

அய்யோ ரேப் பண்ணிடுங்கண்ணே!

நான் மாட்டேன்


சரி நான்.......

டேய்,,,,,,

நான் ஒரு ஐடியா சொல்றேன்னு சொல்ல வந்தேன்.. 

9.  ஹீரோயின்  - ச்சே.. இவன் எல்லாம் காரோட்றான் பாரு, காத்தை இப்படி கிளப்பிட்டு போறானே.. டேய்.. பொடியா.. நீ ஏண்டா சிரிக்கறே?

நீ ரோஸ் கலர் ஜட்டி தானே போட்டிருந்தே?  ( காட்சி அமைப்பில் கண்ணியம், வசனத்தில் மட்டும் கொஞ்சம் ஜில் நயம்)

10. என்னப்பா என்னை தம்பின்னு கூப்பிடறே?நான் மைனர்ப்பா.. 

நான் மேஜர், தாராளமா அப்படி கூப்பிடலாமே?

நீ எப்போ மேஜர் ஆனே?

எனக்கு 18 வயசு ஆன போது.. 




http://www.filmics.com/gallery/d/31840-1/Patta-Patti-50-5012.jpg

11.  முதல்ல எல்லாரும் வார்ம் அப் பண்ணிக்கலாம்.. 

என்னது? ஓமமா? நான் என்ன அய்யரா?

12.  நீ பேயா? பெண்ணா?

பொண்ணு தான்.. 

எங்கே பாவாடையை தூக்கு?

யோவ்!!!

கால் இருக்கான்னு பார்த்துக்கறேன்மா.. 

13. சரி, நான் இந்த ஊரை விட்டு போகனும், அதுக்கு ஒரு வழி சொல்லு.. 

அதோ, அந்த ஆத்துல குதி, அடுத்த ஸ்டாப் மதுரை தாண்டி.. நீச்சல் தெரியும் தானே?

14. BALL.. எங்கே சொல்லு பார்ப்போம்?

பால்..

உஷ் அப்பா, முடியல,, உங்களுக்கு கிரிக்கெட் சொல்லித்தர்றதுக்குள்ள எனக்கு பால் வந்துடும் போல இருக்கு. 

15.  பஞ்சாயத்து நடக்கறப்ப கொட்டாவி விடாதீங்க.. 

அடப்பாவி, ஏண்டா?

அதுக்கு தனியா ஒரு  பஞ்சாயத்து கூட்டிடப்போறாங்க.. 

 16. கிரிக்கெட்ல ஒரு டவுட்டு, பாலை போட்ட பிறகு பேட்டை தூக்கி அடிக்கனுமா? பேட்டை தூக்கிய பிறகு பாலை போடனுமா?

கோழி முதல்ல வந்ததா? முட்டை முதல்ல வந்ததா?ன்னு கேக்கற மாதிரியே இருக்கே?

17. மாஸ்டர். எங்களுக்கெல்லாம் கிரிக்கெட் சொல்லித்தர்றீங்களே, நீங்க இது வரை பேட் கைல பிடிச்சு  நாங்க பார்த்ததே இல்லையே?

18.  புரிஞ்சுதா?

 ஒண்ணுமே கேட்கலையே?

நான் தான் எதுவுமே சொல்லலையே?இப்படித்தான் சும்மா படம் காட்டனும்.ஆப்போசிட் டீம் ஆளுங்க நாம ஏதோ பிளான் போடறோம்னு ஏமாந்துடுவாங்க.. 



19. எங்கண்ணன் நின்னா கோபுரம், நடந்தா தேரு....

படுத்தா பன்னியா?

20. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நான் எதுக்கு இருக்கேன்?

அதையே தான் நானும் கேட்கறேன், நீ எதுக்கு இருக்கே?





 21. ஓக்கேப்பா, பேட்டிங்க் தெரிஞ்சவங்க, பவுலிங்க் தெரிஞ்சவங்க, ஃபீல்டிங்க் தெரிஞ்சவங்க எல்லாரும் தனி தனி கியூல நில்லுங்க.. 

இதுல எதுவுமே தெரியாதவங்க?

ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ? சரி , அவங்க தனி கியூல நில்லுங்க.. 

அடப்பாவிகளா? பாதிப்பேரு அந்த கியூல!!!!

22.. என்னடா , கிழவிங்க எல்லாம் மேட்ச் ஆடும் செலக்‌ஷன்க்கு வந்திருக்காங்க? சரி, சமாளீப்போம், அதோ அந்த மலையை தொட்டுட்டு இங்கே ஓடி வாங்க..  ஆல் கிழவீஸ் ஓடுங்க.. 

இன்னைக்கு ஊர்ல எத்தனை எழவு விழப்போகுதோ?

23. மலையை வாங்கறது இருக்கட்டும், உங்களோட வந்த பொண்ணுங்க 3 பேருக்கும் உடம்பை மறைக்க துணியை வாங்கி குடுங்க முதல்ல.. 

24. ஆப்பிள் ரூ 25,000 

அடேங்கப்பா. எங்க ஊர்ல வெறும் 15 ரூபா தான்

டேய், நான் சொன்னது ஆப்பிள் ஃபோனை.. 

25. மங்கம்மா சொல்லறா.. 

வழக்கமா ஜக்கம்மா தானே சொல்லுவா?

அவ லீவ்ல இருக்கா. 

ஓ. சரி..மங்கம்மா எப்படி? நல்ல ஃபிகரா?

26. உங்களுக்கு நேரம் சரி இல்லை, ஆயுள் ரேகை கம்மியா இருக்கு.. 

சும்மா கதை விடாதீங்க.. நேத்துத்தானே ஒரு ஃபிகரை முடிச்சேன்?

அதுதான் நீங்க தொட்ட கடைசி ஃபிகரு. போதுமா?

27. பட்டாம்பூச்சி, குருவி, தவளை இதுல தான் கடவுள் இருக்காரு.. மலையை அழிச்சுட்டா மழை வராது

28. அடப்பாவி, கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டே கிரிக்கெட்ல பேட்டிங்க்கா?பகல்லயே உனக்கு பசு மாடு தெரியாது,ராத்திரில எருமையா தெரியப்போகுது?

29. நீ ஏன் பால் அடிச்சுட்டு ஓடலை?

நான் ஓடினா அவங்க ரன் அவுட் பண்ணிடுவாங்க.. ஃபோர், சிக்சர் மட்டும் அடிப்போம்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT5VDmvnXCUQxsGD8wLV_IiKC6wRlVVFq-19-wRDscR006TpNeZDIFkOoj5Zm95K4HhTsKq-kNTIBEigSNZslFA-9bJ-KnG_WJuBHEJ6Qk0jWxVQbASWPCSRZnRYuYZYZXM794_SdwI4g/s400/patta+patti+50-50+tamil+movie+stills+012.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. நம்மை யோசிக்கவே விடாமல் மள மள என காட்சிகளை நகர்த்தும் பாங்கு.. எடிட்டிங்க், வசனம் பக்கா. 

2. கிராமத்துக்கதையை மண் வாசம் மாறாமல் தந்ததும் ஆங்காங்கே கிராமத்து மூடப்பழக்கவழக்கங்களை நக்கல் அடித்ததும்.. மண் வளம் ,இயற்கை, மலை வலம் பற்றி பிரச்சார நெடி இல்லாமல் சொன்னது.. 

3. ஹீரோயினை கண்ணியமாக காட்டியது, காதலையும்....

4. படத்தில் 90% புது முகங்களையே பயன் படுத்தியது.. 

5. ஃபாரீன் ஃபிகர்கள் 3 பேரினை ஒரு பாட்டில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியது.. 




இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. கதைப்படி மயில்சாமி டுபாக்கூர் கிரிக்கெட் கோச்சர், ஆனால் அவர் பயிற்சி அளிக்கும் அல்லது அளித்ததாய்  நடிக்கும் டீம் எப்படி கிரிக்கெட் ஆட பிரமாதமாக கற்றுக்கொண்டது?

2. என்னதான் ஒருவர் பணக்காரர் என்றாலும் ஒரு ஊரில் உள்ள மலையே ஒருவருக்கு சொந்தமாக இருக்க முடியுமா?ஃபாரீன்காரர்கள் அவரிடம் வந்து நல்ல தமிழில் பேரம் பேசுகிறார்கள்!!!!!!

3. ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் இன்னும் விலா வாரியாக காட்டி இருக்க வேண்டாமா?அவர்களுக்குள் காதல் வருவதையே துல்லியமாக காட்டவில்லையே?

4. வில்லன் தன் அப்பாவை கவுண்டமணி  ரேஞ்சுக்கு டேய் போட்டு பேசுவது, மிரட்டுவது ஓவர் என்றால் வில்லனின் அம்மா ஹீரோவுக்கு உதவி செய்வது படு செயற்கை. 

5.  லகான் படத்தில் க்ளைமாக்ஸ் மேட்சின் லாஸ்ட் 5 நிமிஷம் செம பரபரப்பாக இருக்கும்.. அது இதில் மிஸ்ஸிங்க்.. மேட்ச் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்..

ஜாலியான படம் பார்க்க விரும்புபவர்கள்,மொக்கை காமெடிகளை ரசிப்பவர்கள், கிரிக்கெட் பிரியர்கள் ரசிக்கலாம்.. 




ஏ செண்ட்டர்களில் 30 நாட்கள் , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் , சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஜாலிவாலாக்களுக்கு மட்டும்

ஈரோடு ஆனூர்-ல் இந்த படம் பார்த்தேன்

டிஸ்கி -

டூ -ஊடலாடும் காதல் உள்ளங்கள் - சினிமா விமர்சனம்

டூ -ஊடலாடும் காதல் உள்ளங்கள் - சினிமா விமர்சனம்

http://picasamusic.com/musicimg/Doo.jpg

காதல் கதை தான் படமாக்கப்போறோம்னு தெர்ஞ்சதும் ஒரு இயக்குநர் பண்ண வேண்டிய மொத வேலை என்ன தெரியுமா? சூப்பர் ஹிட் பாட்டுக்களை ரெடி பண்ணி கம்போஸ் பண்ண வைக்கறதோ, அழகழகான லொக்கேஷன்களை செலக்ட் பண்ண ஒளிப்பதிவாளரை  கூட்டிட்டு ரவுண்ட் அடிக்கறதோ அல்ல.மொத வேலையா பக்கா ஃபிகரை புது முகமா ரெடி பண்ணறதுதான் ( நடிக்கறதுக்குத்தான்).இதயத்தை திருடாதே கிரிஜா ,விரும்புகிறேன் சிநேகா ,ஃபைவ் ஸ்டார் கனிகா, மதராசப்பட்டினம் எமி ஜாக்‌ஷன் என ஒரு லிஸ்ட்டே சொல்லலாம்.ஆனா இந்தப்படத்தோட  இயக்குநர் 80 மார்க் வாங்கற அளவு  சூப்பர் ஃபிகர் ரெடி பண்ண முடியாட்டி பரவாயில்லை, அட்லீஸ்ட் 60 மார்க் வாங்கி ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஃபிகர்னு சொல்ற அளவுக்காவது மீடியம் ஃபிகரை அறிமுகப்படுத்தி இருக்க வேண்டாம்?அதை விட்டுட்டு லேடி அப்பாஸ் மாதிரி கொழுக் மொழுக் கன்னம் மட்டுமே பார்க்கும் அளவு உள்ள ஒரு 45 மார்க் ஃபிகரை அறிமுகப்படுத்தி தன்னோட முதல் சறுக்கலை ஹீரோயின் செலக்‌ஷன்ல தொடங்கறார்..

படத்தோட கதை என்ன? காதலர்களுக்குள் ஏற்படற கருத்து வேற்றுமைகள், ஊடல்கள், சின்ன சின்ன சண்டைகள் ,தற்காலிகப்பிரிவுகள் நிரந்தரம் அல்ல,காதல் தான் நிரந்தரம்கற கவிதையான ஒன் லைன் தான்.. ஆனா திரைக்கதையா அவர் கொண்டு போன விதம் தான்......

ஹீரோன்னா அவர் தாடியோட தான் இருக்கனும்னு பருத்தி வீரன் ஹிட்டிலிருந்து நம்ம ஆளுங்க கத்துக்கிட்டாங்க போல.. பாவம் அவர் ரொம்ப சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்..

புதுமுகம்  நட்சத்திரா கல்கி ஹீரோயின் மாதிரி கொஞ்ச சாயல் ,மதுபாலா மாதிரி கொஞ்சம் சாயல் வந்தாலும் தேறாது..  காதலிக்கும் காட்சிகளில் கூட சிடு சிடுன்னு இருக்கு பொண்ணு (சம்பளமே கொடுக்கலை போல)

2வது ஹீரோயினாக வரும் சங்கீதாபட்  முக வசீகரத்துலயும் சரி, அங்க அளவுகள்,ஆடை அலங்காரத்துலயும் சரி.. மெயின் ஹீரோயினை விட 20 மார்க் கூடுதலா வாங்கி முன்னணில இருக்கார்.இதனால என்ன ஆபத்துன்னா ஆடியன்ஸ் ஹீரோ ஹீரோயின் உடன் சேராட்டி பரவால்லை இந்த பொண்ணு கூட சேர்ந்தா சரின்னு சொல்ற அளவு ஆகிடுச்சு..

அதே மாதிரி காமெடியன் ஜெகனுக்கு ஜோடியா ஒரு ஃபிகரு மற்ற எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுடுது..

எதுக்கெடுத்தாலும் திடுக்னு ஜெர்க் ஆகற அம்மா கேரக்டர்ல ஊர்வசி ஓக்கே .

45 மார்க் மதிப்பிடப்பட்ட ஹீரோயின் நட்சத்திரா


மயில் இறகில் மய்யல் மசி தொட்டு எழுதப்பட்ட காதல் வசனங்கள்

1. எந்த அம்மா தன் பையனுக்கு பொருத்தமான  மனைவி வேணும்னு தேடறாங்க?தனக்கு ஒரு நல்ல மருமக வேணும்னு தானே பார்க்கறாங்க?

2.  குட்மார்னிங்க் சார். 

....................................

ஒண்ணுமே சொல்லாமே போறாரே? பெரிய ஆஃபீசர் போல?

அட, நீ வேற அவர் லேட் பிக்கப், எதுவும் அவருக்கு 5 நிமிஷம் லேட்டாத்தான் புரியும்.. 

3. வாழ்க்கைல ஏதாவது ஒரு விஷயத்தை நேசிக்க கத்துக்கோ,நிறைய டைம் மிச்சம் ஆகும்.

ஓக்கே டாடி, நான் வாட்ச் கடைக்காரனையே கட்டிக்கறேன்.

4. உன் காதலன் தப்பு பண்ணுனா நீ ஒதுங்க கூடாது, அவனை திருத்தனும்,அதுல தான் காதலே இருக்கு.. 

5. காதல்ங்கறது எனக்கு நெல்லிக்காய் மாதிரி , புளிச்சிடுச்சு, ஏற்கனவே உன்னை மாதிரியே 7 பசங்க ஐ லவ் யூ சொல்லீட்டாங்க.

6.  என் ஆள்  I DONT LOVE U  , I HATE U  அப்டின்னு மெசேஜ் அனுப்பி இருக்காடா.. 

அட விளங்காதவனே..  a- 1  b - 2   c- 3  இப்படி நெம்பர் போட்டு மேட்ச் பண்ணி பாரு.. அவ அவளோட செல் நெம்பரையும், லேண்ட் லைன் நெம்பரையும் கொடுத்திருக்கா. ( அடடா.. இந்த மேட்டர் நமக்குத்த்தெரியாம பல ஃபிகர்ங்களை கோட்டை விட்டுட்டமே!!)

7.  ஏய்.. உங்கப்பா ஹெட்மாஸ்டரா இருந்தார் தானே? இப்போ என்னவா இருக்கார்?

ம், போஸ்ட் மாஸ்டரா இருக்கார். என்னடா கேள்வி இது..?இப்பவும் HM தான்.

8. அம்மா, வெளில இப்போதான் சாப்பிட்டுட்டு இருக்கேன், எனக்காக எதுவும் நீ செய்ய வேணாம், 2 பிரியாணி மட்டும் வாங்கி வெச்சுடு.. 

9. ஹலோ.. ம் ம் சொல்லு பிரியா.. நான் வீட்ல தான் இருக்கேன்.. சொல்லு,.. 

அண்ணே, ஒரு தம் குடுங்க. 

அடப்பாவி, கடைல இருக்கோம்னு காட்டிக்கொடுத்திட்டியே.. ஃபிகர் கூட ஃபோன்ல பேசிட்டு இருக்கறது தெரில?

10. அடப்பாவி.. நைட் பூரா பேசிட்டே இருக்கப்போறியா? இவன் வெச்சாலும் அவ வைக்க மாட்டா போல?அவளுக்கு அவுட் கோயிங்க் ஃபிரீ போல. ஃபேனை போட்டுக்கிட்டு பேசிட்டே இருக்காளே?

65  மார்க் மதிப்பிடப்பட்ட செகண்ட் ஹீரோயின் சங்கீதாபட்
11. ஆசை படத்துல அஜித் சுவலட்சுமிக்கு வாங்கித்தர்ற மாதிரி ஒரு நாய்க்குட்டி வாங்கிக்குடுடா.. 

அதுக்கு சுவ லட்சுமி ஒத்துக்கணுமேடா?

அதை நான் பேசிக்கிறேன்.. 
நீ பேசிக்குவே , அவங்க ஓக்கே சொல்லனுமே?


12.  டியர், உனக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா?


லேப்டாப்?

அய்யய்யோ!!!!!

செல்ஃபோன்?

நாய்க்குட்டி

 அய்யய்யே..
13. கிஃப்ட் தர்றது மரியாதை. அதை வாங்கிக்கறது  பெருமை

14. போடாங்க்.. லவ்வருக்கு நாய்க்குட்டி வாங்கித்தர்றானாம்.. அது பிடிக்கலைன்னா ரசூல் பூக்குட்டியை ( ஒளிப்பதிவாளர்) வாங்கித்தர்வியா?

15. நாய்க்குட்டி பழைய ஃபேஷண்டா ( FASHION).நீ சிங்கக்குட்டி குடு அவ வயித்துல.. என்னைக்கும் அவ உன்னை மறக்க மாட்டா.. 


16. உங்க தங்கையை எங்கேயோ பார்த்திருக்கேனே?

வண்டலூர் ஜூல பார்த்திருப்பீங்க?

17. லைஃப்ல விட்டுக்குடுக்கத்தெரியாதா? அப்போ நீ நீயாத்தான் இருப்பே!உன் லைஃப்ல நான் இருக்க மாட்டேன்

18. லவ்வரோட பிறந்த நாளுக்காக காத்துட்டு இருக்கறது ஓக்கே, ஆனா வாழ்த்துக்காக காத்துட்டு இருக்கறது கொடுமை.. அர்த்தமே இல்ல..

19. நீ, நான் , நம்ம காதல் இந்த மூணும் மட்டுமே உள்ள தனிமையான இடத்துக்கு போலாம்

20. என் காதலிக்கு நாய்க்குட்டி கிஃப்டா கொடுத்தேன், அது பிடிக்கலன்னுட்டா. 

அட நாயே. நாயை பிடிக்கலைன்னு தான் உன்னை செலக்ட் பண்ணுனாளோ என்னவோ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbMtnD69kQMbW6rcBY0z6QL5AcFDEK_nMi1S6EILkXlHNeBGfE6EAACiF8Pq4qkHexBxC7WALvXNVm4pVws96aj4X2SNaFwuFO0UA9ufzeCPcppjjEfIVA2BJy7AZjQ7jzyvWou6X3Vyg/s1600/konjam-veyyil-konjam-mazhai-heroyin-hot-stills+%252810%2529.jpg

21. நண்பர்களிடம், பள்ளிப்பருவத்தோழர்களிடம் இருந்தபோது நம்மிடையே இருந்த ஜாலி காதலியுடன் இருக்கும்போது வருவதில்லை

22. எந்தப்பிரச்சனையும் ரோட்ல நடக்கறவரை அதனோட தீவிரம் நமக்கு தெரியாது,நம்ம வீட்டுப்படியேறி வந்தாதான் புரியும் 

23. அம்பானி வீட்டுக்கு மருமகளாப்போனாக்கூட அந்த பொண்ணு தன் கணவன் அம்பானி யை விட ஒரு ரூபா அதிகமா சம்பாதிக்கனும்னு தான் எதிர்பார்ப்பா

24. பசங்க பொண்ணுங்க கிட்டே  அழகை எதிர்பார்க்கறாங்க, பொண்ணுங்க பசங்க கிட்டே சேஃப்டியை எதிர்பார்க்கறாங்க

25. அவன் ரொம்ப நல்லவன், என் பிராப்ளமே அதுதான் டாடி.. 

26.  நீ என்னை பழி வாங்கனும்னு முடிவு பண்ணிட்டே!

நீ என்ன என் எதிரியா?

27. என்னை கண்ட்ரோல் பண்ணற எதுவுமே எனக்கு வேணாம்.. அது காதலா இருந்தாலும் சரி.. 

28. காதல் என்றால் என்ன? என்பதை காதலை இழந்தவன் மட்டுமே சொல்ல முடியும்

29. பொண்ணுங்களுக்காக வெயிட் பண்றது எவ்ளவ் கொடுமை தெரியுமா?

புதுசா வயலின் வாசிக்க கத்துக்கிட்டவன் ரூம் மேட்  ஆன மாதிரி.. 

30. தம் அடிக்க வேணாம்னு கவர்மெண்ட் பிரச்சாரம் பண்ணறதுக்குப்பதிலா காதலிங்கனு சொல்லிடலாம்,காதலிங்க அந்த வேலையை கரெக்ட்டா பண்ணிடறாளுங்க.. 

31. உன் வாட்ச் ஓடலையே, ஏன் ரிப்பேர் பண்ணக்கொடுக்கலை?

என் காதலி முதல் முதலா ஐ லவ் யூ சொன்ன தருணம் அது, என் மனசுல நிறுத்தி வைக்க முடியலை, அதான் வாட்சை நிறுத்தி வெச்சிருக்கேன்..

32. ஐ நான் கூட அதே போல் வாட்சை நிறுத்தி வெச்சிருக்கேன்.. 

ஏன் ? பேட்டரி போட வக்கில்லையா?

ம்க்கும் நானாவது பரவால்ல, நீ வாட்ச் வாங்கவே வக்கில்லாம இருக்கியே?

33. என் லவ்வை என் ஃபிரண்ட் கிட்டே தான் முதல்ல சொன்னேன்.. 

அவன் என்ன கோயில் பூசாரியா?

34. தனது தங்கையோ, அம்மாவோ அப்படி இல்லாத போதும், தனது காதலியை மட்டும் 100%  நல்லவளாக ஒரு ஆண் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

35. கண்டக்டர் சார், 2 வசந்த் குடுங்க. 

என்னது? 

 சாரி, 2 தேனாம்பேட்டை குடுங்க.. 

36. இந்த கிரீட்டிங்க் கார்டு ஓக்கே வா?

பேசாம உன் ரேஷன் கார்டை கொண்டு போய் குடு.. ஃபேமிலி கேர்ள்க்கு அதுதான் வேணும். 

37.உனக்குப்பிடிச்ச காதல் சப்ஜெக்ட் தமிழ் படங்கள் சொல்லு பார்க்கலாம்..

கல்லூரி, சேது,இதயத்தை திருடாதே

அடப்பாவி, எப்பாமே ஹீரோயின் சாகற படமா சொல்றியே?

38. இந்த பார்ட்டி எதுக்குடா? உன் காதல் சக்சஸா?

இல்லடா மச்சான், பக்கத்து வீட்ல ஒருத்தன் ஓவரா சீன் போட்டுட்டு இருந்தான், அவன் லவ் ஊத்திக்குச்சு. அதை கொண்டாட பார்ட்டி.

39. டியர், நம்ம காதல்ல எப்பவும் நீங்க உங்க சந்தோஷத்தைத்தான் பார்க்கறீங்க!

விட்டுத்தள்ளுடி, காதலே ஒரு சந்தோஷம் தானே?

40. உன் காதலை காதலி கிட்டே சொல்லிட்டியா?

சாரிடா  மாப்ளே. மப்புல உன் ஒயிஃப்க்கு ஃபோனை போட்டு உளறிட்டேன்.


http://searchandhra.com/english/wp-content/uploads/2011/07/Natchathira-Hot-Photo-Gallery-9.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க் சீன் காமெடி டிராக்ல ஜெகனை சிம்பு மாதிரி மிமிக்ரி காமெடி பண்ண வெச்சு சிம்பு காலை வாரியது.. ( பாவம் அவர் மீது இவருக்கு என்ன கடுப்போ? நமக்கு பார்க்க செம சிரிப்பு )

2. இயக்குநர் வஸந்த்-இன் தீவிர ரசிகரோ என்னவோ பாடல் காட்சிகளுக்கான ஓப்பனிங்க் லீடு, ஆர்ட் டைரக்‌ஷன் , நடன அமைப்பு என  எல்லாமே அவரது சாயலை அழகியலோடு அள்ளித்தெளித்திருப்பது..

3. படம் முழுக்கவே காதல் காட்சிகளாகடும் கதாநாயகிகள் உலாவாகட்டும் கண்ணியமாக , குடும்ப உறவுகளோடு அமர்ந்து பார்க்கும்படி படம் ஆக்கியது..

4. கதையுடன் ஒட்டிய காமெடி டிராக் மற்றும் வசனங்கள்..

5. ஃபைட் போட்ட ரவுடிகளோடு ஹீரோ சமாதானம் ஆகி டீக்கடையில் அமர்ந்து டீ சாபிடும் அளவு நண்பர்கள் ஆவது எம் ஜி ஆர் கால டெக்னிக் என்றாலும் ரசிக்கும்படி எடுத்தது

6. பாடல் காட்சியில் ஜப்பான் குமாரின் ரசிக்க வைக்கும் அலட்டல்கள்
\

http://www.cinemaexpress.com/Images/article/2011/6/12/nakshitra.jpg
 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. காதலர்கள் இருவரும் சீன் பை சீன் சண்டை போடுவது நம்பும்படி இல்லை.

2 சீன் காதலுடன் இருப்பது போல் காட்டி 3 சீன் ஊடல் என காட்டி இருந்தால் நம்பும்படி இருந்திருக்கும்..

2. படம் பார்க்கும் ஆடியன்ஸூக்கு லவ் ஃபீலே வரவில்லை. அதாவது ஜோடிகள் ஒன்று சேர வேண்டும் என்ற பரிதவிப்பு வரனுமே அது வர்லை..

3. இடைவேளை ட்விஸ்ட்டுக்காக வைக்கப்பட்ட காதலர்கள் பிரிவுக்காட்சியில் ஏதோ கள்ளக்கடத்தல் கோஷ்டிகள்  சட்டவிரோத பார்சலை , பணத்தை எக்ஸேஞ்ச் பண்ணிக்கொள்வது போல காதலர்கள் தங்கள் அவரவர் தந்த பரிசுப்பொருள்களை மாற்றிக்கொள்வது ரொம்பவே செயற்கை

4. இடைவேளைக்குப்பிறகு வரும் 2வது ஹீரோயினை காதலி போல் காட்டி தடால் என பல்டி அடித்து தோழி ஆக்குவது..

5. ஹீரோயின் பிரிவுக்குப்பின் பஸ்ல வர்றாங்க, பக்கத்தில் 2 வது ஹீரோயின் ,முதல் ஹீரோயினின் ஃபோனை வாங்கி 2 வது ஹீரோயின் ஹீரோவுக்கு ஃபோன் பண்றார்.. அப்போ ஹீரோ அட நெம்பர் புதுசா இருக்கே? என்கிறார்.. ஆனா ரிங்க் டோன் மட்டும்காகதலிக்கு செட் பண்ணி வெச்ச அதே ரிங்க் டோன்.. இப்போ 2 வது ஹீரோயின் இறங்கிப்போயிடறாரு..இப்போ ஹீரோ ஃபோன் பண்றாரு. நெம்பரை பார்த்துட்டு முதல் ஹீரோயின் 2 வது ஹீரோயினை கூப்பிடறாரு..உங்களூக்குத்தான் ஃபோன் என சொல்றாரு.. இது மாகா பெரிய லாஜிக் மிஸ்டேக்

இந்தப்படம் எல்லா செண்ட்டர்லயும் 10 நாட்கள் தான் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்  - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

 சி. பி கமெண்ட் - சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போட்டுக்கும் லவ்வர்ஸ் மட்டும் பார்க்கலாம் . ( இதை படிச்சுட்டு இந்த படத்துக்கு போலாமா? வேணாமா?ன்னு காதலர்களுக்குள்  சண்டை வேண்டாம்.. ஹி ஹி )

ஈரோடு அபிராமில இந்த படம் பார்த்தேன்.


 டிஸ்கி - போட்டோ போட்டி - மொக்கை காமெடி லூட்டி - சினிமா விமர்சனம்