Saturday, April 04, 2015

.சிட்டுக்குருவி லேகியம் சாப்ட்டா டக்னு குழந்தை பிறக்குமா?

டியர்.எப்பவும் குழந்தையை இடுப்புல சுமந்துட்டெ இருக்கே.



சோ வாட்?




எனக்கும் இடை ஒதுக்கீடு செஞ்சா தேவலை.அடக்க முடியல ஆவலை

==================


2 கேப்டன்.எதிர்த்து நிற்பது பங்களாதேஷ்.ஜெயிச்சுடுமா உங்க டீம்?


ஹா ஹா.சிங்கிளா ஜெயிப்பேன்


=================

3 டாக்டர்.ஆபரேஷனுக்கு முன் என் கவிதையை நீங்க் படிக்கனும்.
ஏன்?



நீங்க மட்டும் என்னை சாகடிக்கலாம்
நான் உங்களை பழி வாங்கக்கூடாதா?

=================

4 அத்தான்.என்னை லட்சுமியா மதிக்கனும்னா 25 பவுன் நகை போடுங்க.



ஓஹோ.அவங்க பொண்ணு ஐஸ்வர்யாவா மதிக்கனும்னா 50 பவுன் போடனுமா?========

======================

5 ஏய் மிஸ்டர்!,என் கிட்டே ஆபாசமா பேசுறியா? என் மாமா அசிஸ்டெண்ட் கமிஷனர்.தெரியுமா?


முதல்ல தெரியாது.வாட்சப் பாத்து தெரிஞ்சுக்கிட்டேன் மிஸ்==

=================


6 எதுக்காக ரயில்வே ஸ்டேஷன் வந்து 18,000 பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கறீங்க?


1 4 2015 முதல் 10 ரூபாயாம்.இப்போ 5 ரூபாதான்.செமலாபம் பார்க்க=================



7 பங் தேஷ் = இதுக்கு முன்னே உலகக்கோப்பை ல.2 டைம் அடிச்சிருக்கோம்



இந்தியா =,நாங்க எம்ஜிஆர் மாதிரி.3 வது டைம் தான் திருப்பி அடிப்போம்


===============

8 300 அடிச்சதுல எதுனா குறியீடு இருக்கா?


யா.எதிரிக்கு நாமம் தான்=

=============

9 மேடம்.வெள்ளை சேலை அணிந்து குளிக்க மறுத்தது ஏன்?



டாப்சி = விதவை தான் வெள்ளை சேலை.வெள்ளாவியில் வெளுத்த மிதவை நான் எதுக்கு வெள்ளை?=


================


10 டாப்ஸி =,வெள்ளை சேலை அணிந்து குளிக்கும் ஸீனில் நடிக்க மாட்டேன்


=
மேடம்.நடிக்க வேணாம்.சும்மா நில்லுங்க போதும்


================

11 மேடம்.இந்த சீன்ல சேலை கட்டி குளிக்கனும்


நடிகை= லாஜிக்கே இல்லியே.எதுக்கு சேலை?குளிக்கும்போது?==


====================

12 டாப்ஸி.= குளிக்கற ஸீன் ஷூட்டிங் பார்க்க 10 லட்சம் பேர் வந்திருக்காங்க?


மேடம்.ஒரு ஆளுக்கு வேடிக்கை பார்க்க 100 ரூபா சார்ஜ்..எப்டி வசூல்?

=====================

13 தமிழ் மிஸ் தாரிணி = ஒரே சொல்லில் 3 ழ வர்ற மாதிரி சொல் பார்ப்போம்


லொள் மாணவன் = 3 முழம் டீச்சர்

=================

14 தமிழ்ப்பட review பண்ற நேரம் போக வேற என்ன வேலை பார்க்கறீங்க?


இங்க்லீஷ் படம் பிரெஞ்ச் படம் கில்மாப்படம் பார்ப்பேனுங்


================

15 இண்ட்டர்வ்யூவில் -
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லனும்.ஓக்கே?



பேசாம பதிலை நீங்க சொல்லிடுங்க.கேள்வியை நான் கெஸ் பண்றேன்


==================

16 டாக்டர்.ஐ ஹாஸ்பிடல்ல லேடி நர்சே இல்லையே ஏன்?


பார்வை சரியாய்தெரியலைனு சாக்கு சொல்லி அவனவன் தடவிட்டுப்போய்டறான்

================

19 டாக்டர்.சிட்டுக்குருவி லேகியம் சாப்ட்டா என் சம்சாரத்துக்கு குழந்தை பிறக்குமா?



சிட்டுக்குருவியோட சம்சாரத்துக்கு வேணா பிறக்கும்


=================

20 டாக்டர்.தங்கத்துகள் சோப் போட்டுக்குளிச்சா துரதிர்ஷ்டம் நீங்குமா?


எந்த சோப்பா இருந்தாலும் அழுக்குதான் நீங்கும்

=====================

Friday, April 03, 2015

காலேஜ் சேர்மேன் க்கும் ஷோபாவுக்கும் என்ன தொடர்பு?

1  டியர். ஏன்இப்படி உனக்கு என்மேல கிறுக்கு?



ஏன்னா பேசிக்கலாவே நான் கிறுக்கு தான்.ஹிஹி



=============


2 டியர்.லவ் பண்ணும்போது ரூல்ஸ் போட்டா எனக்குப்பிடிக்காது.



சரி.110 ரூபா க்கு அன்லிமிட்டெட் மீல்ஸ் போட்டா பிடிக்குமா?



====================

3 டாக்டர்.சிகரெட் ரெகுலரா.16 வயசுல இருந்து டெய்லி ஒரு பாக்கெட் அடிக்கறேன்.இது கெடுதலா?


நல்லதுதான்.கல்யாண செலவே ஆகாது
==============


4 மிஸ்!  மத்தவங்களை இம்பெரெஸ்  பண்ணனும்னு  மெனக்கெட  மாட்டேன்

 ஓ!  வாவ்!  என்னை  இம்பெரெஸ்  பண்ணீட்டீங்க


===============

5  டாக்டர்! தம்  அடிச்ச பின்   பாக்கு  போட்டுக்கிட்டா வாசம்  போய்டுமா?


அது தற்காலிகமாதான்  போகும்.ஆனா ஆண்மை  நிரந்தரமா  போய்டும்


====================

6  டாக்டர்!  டெய்லி   சீதா  பழம் சாப்ட்டா  என்ன  ஆகும்?


 ஆர்  பார்த்திபனுக்கு  ஏகப்பட்ட  செலவு ஆகும். ஆனா  இப்போ  பிரச்னை இல்லை



======================

7   dr.டெய்லி குளத்துல மீன் பிடிச்சு சாப்ட்டா மீனம்மாவை இம்ப்ரெஸ் பண்ணமுடியுமா?



விட்டா டெய்லி ஆத்துலகண்ணடிச்சா கண்ணம்மாவை இம்ப்ரெஸ்?னு கேட்பே்


===============

8 பேங்க்ல கேஷ் கவுன்ட்டர்ல இருக்கும்போது அடிக்கடி ஏன் வெளில போறீங்க?



சார்.நீங்கதானே கவுன்ட்டர்ல் இருக்கும்போது FB யூஸ் பண்ணக்கூடாதுன்னீங்க?



======================

9 டவுன் பஸ்ல ஏறுனதும் ஏன் பொண்ணுங்களுக்கு நடுவால போய் நின்னுக்கிட்டே?


நான் ஒரு நடுநிலைவாதிங்க.ஹிஹி



==================


10  அசிஸ்டெண்ட் கமிஷனரா இருந்துட்டு கான்ஸ்டபிள்ட்டே கடலை போட்டிருக்கியே ?



இன்ஸ்பெக்டர்கிட்டே கடலை போடலாம்னு பார்த்தாகமிசனர் முந்திக்கிட்டாரு



========================

11 டியர்.சுக்கு இடுப்பழகின்னு வர்ணிச்சீங்களே?அப்டின்னா?






=வெய்யில்ல காய்ஞ்சு போன இஞ்சி இடுப்பழகி.ஹிஹீ



=================

12 பரணி நட்சத்திரத்தில் பிறந்த பொண்ணு தரணி ஆள்வா.



சும்மா அடிச்சு.விடாதீங்க.உலகத்தில் 8% பேரு பரணி நட்சத்திரம்தான்.அப்போ எத்தனை பேரு ராணி?


====================


13 லேடிpc = டைட்டா டிரஸ் போடவா?லூசா போடவா?



அசிஸ்ட்டென்ட் கமிசனர் =,எப்டியோ போடு.ஆனா வாட்சப்ல போட்டுடாதே


================


14 யுவர் ஆனர்.ஏசி சார் என் கிட்டே ஆபாசமா பேசுனாரு.இதோ ஆதாரம்.



ஏம்மா.நீ உத்தம பத்தினின்னா போனை கட் பண்ணி இருக்கலாமே?1மணி நேரம் கடலை போட்டுட்டு


=================

15 ஜட்ஜ்= உன்னை ட்ரான்ஸ்பர் பண்றோம்.




ஏஸி = நன்றி யுவர் ஆனர்.புது ஊரு புது ஸ்டேஸன்.புது பொண்ணு.கலக்கறே சந்த்ரு


===============



16 மாப்ளை அஸிஸ்ட்டெண்ட் கமிஷனரா இருக்காரு



அய்யய்யோ.பொம்பளப்பொறுக்கிக்கு எல்லாம் பொண்ணு தரமுடியாதுங்க


==================


17 போலீஸ் ஸ்டேஷனுக்கு லாரில கட்டில் மெத்தை வந்து இறங்குதே?



அஸிஸ்டெண்ட் கமிஷனர் லேடி பிசி யோட நைட் ட்யூட்டி பார்க்கவாம்


======================

18 டாக்டர்.ஒரே பாட்டுல ஸ்லிம் ஆகி அழகாக வழி இருக்கா?



60 கிமீ வேகத்துல சென்னை டூ திருப்பூர் ஓடுனா முடியும் சார்


=========================


19 இந்த காலேஜ்க்கு நீங்க தான் சேர்மேனா?நம்ப முடியல.



ஏன்?



எப்பவும் சோபாலதான் உக்காந்திருக்கீங்க.சில சமயம் ஷோபா கூட உக்காந்திருக்கீங்க



====================


20 மாஸ் ஹீரோ யாரு?



மேட்ச் ல யார் டாஸ் விண் பண்றாங்களோ அவங்க டீம் தான்


==================


=

இது என்ன மாயம் - அமலா பால் பண்ணையார் இயக்குநர் விஜய் சிறப்புப் பேட்டி

சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகி என இரண்டு தேசிய விருதுகளை வென்றிருக்கிறது கடந்த ஆண்டு வெளியான ‘சைவம்’. அந்தப் படத்தின் இயக்குநர் விஜய் தற்போது விக்ரம் பிரபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கிறார்.
ஏற்கெனவே வரலாற்றுக் களத்தில் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் காதலை ஆழமாக வார்த்த இவர், தற்போது நிகழ்காலத்தின் காதலைக் கையில் எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து ’ தமிழுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி இது...
இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழலில் வசூல், விருது இரண்டையும் மனதில் வைத்துப் படத்தை இயக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
இயக்குநராக, எழுத்தாளராக ஒரு படத்தை உருவாக்கத் தொடங்கும்போது எனது முதல் எதிர்பார்ப்பு, அது வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான். இரண்டாவது அந்தப் படத்தின் தரம் பற்றி ரசிகர்களும் விமர்சகர்களும் தரும் அங்கீகாரம். சைவம் திரைப்படத்தைப் பொறுத்தவரை எந்தவிதச் சமரசமும் இல்லாமல் ஒரு ப்யூர் சினிமா பண்ண வேண்டும் என்று நானும் ஜி.வி. பிரகாஷ், நீரவ்ஷா, நாசர் உள்ளிட்ட எனது டீமும் ஆத்மார்த்தமாக உழைத்ததால்தான் சைவம் உருவானது. நா. முத்துக்குமாருக்கும் பாடகி உத்ராவுக்கும் கிடைத்த விருதுகளை எங்கள் எல்லாருக்கும் கிடைத்ததாகவே உணர்கிறோம்.
சைவம் படத்தை மேனகா காந்தி பார்க்க விரும்பினார் என்ற செய்தி காதுக்கு வந்தது. அது உண்மைதானா?
ஆமாம்! நான் இதுவரை இயக்கிய எந்தப் படத்துக்கும் கிடைக்காத சிறந்த விமர்சனங்கள் இந்தப் படத்துக்குக் கிடைத்தன. உங்கள் படத்தைப் பார்த்துவிட்டு இனி அசைவம் உண்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டோம் என்று நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் எனது இன்பாக்ஸை நிறைத்தன. எங்கள் மனசுக்கு மட்டும் நெருக்கமான படமாக அது தேங்கிவிடவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு பாக்யராஜ் சார் அதன் திரைக்கதை அம்சங்களை மனம் விட்டுப் பாராட்டினார்.
பாரதிராஜா சாரோ “என்னப்பா இப்படியொரு வாழ்வியலை எடுத்துவைத்துவிட்டாய். பல இடங்களில் கண் கலங்கி அழுதுவிட்டேன்” என்று கூறி நெகிழவைத்தார். புளூகிராஸ் அமைப்பின் நிறுவனர் சின்னி கிருஷ்ணா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அமலா நாகார்ஜுனுக்குச் சொல்ல, அவரும் படத்தைப் பார்த்துவிட்டு மேனகா காந்திக்குத் தெரிவிக்க, அவர் படத்தை மிகவும் ஆவலோடு பார்த்துவிட்டு, இந்தப் படத்தைப் பற்றி நரேந்திர மோடிக்குத் தன் கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார்.
இது என்ன மாயம் என்ற தலைப்பே காதல் சொல்கிறதே?
எனது ஒவ்வொரு படமும் ஒரு ஜானரில் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கதைகளை முடிவு செய்து இயக்கியிருக்கிறேன். மதராசப்பட்டினம் ஒரு பீரியட் லவ் ஸ்டோரி. அதில் காதலின் உணர்ச்சிகளை ஒரு எல்லைக்கு அப்பால் எடுத்துச் செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை எனக்கு இருந்தது.
இந்தப் படம் அந்த எல்லைகளை உடைத்துக்கொண்டு காதல் பிரவாகமாக வந்திருக்கிறது. ஒரு முழுமையான அழகான லவ் ஸ்டோரி இது. வயது வித்தியாசங்களைக் கடந்து அனைவரது இதயத்தையும் கவரும் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது.
இந்தக் காதல் கதையில் எதைப் புதிதாக எதிர்பார்க்கலாம்?
காதல் என்ற உணர்ச்சி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழைப் போலவே அதுவும் மூத்த உணர்ச்சிதான். ஆனால் காதல் முகிழ்க்கும் அந்தத் தருணம்தான் மிக அழகானது. அது எப்போது முகிழ்க்கும் எந்தச் சூழ்நிலையில் முகிழ்க்கும் என்பதைக் காதல் தேவதையால்கூடக் கணிக்க முடியாது. அதுதான் இந்தக் கதையின் காதல் பயணத்தைத் தொடங்கிவைக்கிறது.
படத்தில் இரண்டு காலகட்டங்கள் இருக்கின்றன. ஒன்று கல்லூரி வாழ்க்கை; மற்றொன்று நிகழ்கால வாழ்க்கை. நாம் நம்மால் வெளிப்படுத்த முடியாத காதலை அதன் நெருப்பு அணைந்துவிடாமல் மனசுக்குள் அடைகாத்து வைத்திருப்போம். அப்படி அடைபட்டுக் கிடந்த காதலை நிகழ்கால வாழ்க்கை விடுதலை செய்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இது விடுதலையா இல்லை இன்னொரு சிறையா என்பதுதான் இந்தப் படம்.
காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இதுவரை விக்ரம் பிரபுவுக்குச் சரியான வாய்ப்பு அமையவில்லை. அந்த மாயத்தை இந்தப் படம் செய்திருக்கிறதா?
விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்தாலும் அதில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இதில் ஒரு முழுமையான ரொமாண்டிக் ஹீரோவாக அருண் என்ற கதாபாத்திரத்தில் பின்னியிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்குக் கொஞ்சம் குறையாமல் கீர்த்தி சுரேஷ் மாயா என்ற கேரக்டரில் மாயம் செய்திருக்கிறார். முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ்.
விஜய், ஜி.வி. பிரகாஷ், நா. முத்துக்குமார், நீரவ்ஷா, ஆன்டணி. இந்தக் கூட்டணியைத் தொடர்ந்து இயக்குவது எது?
நட்பும் புரிதலும்தான். எங்கள் கூட்டணிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கொஞ்சம்கூடக் குறையாததால் எங்கள் பொறுப்பும் படத்துக்குப் படம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
உங்களது ஒவ்வொரு படத்திலும் ஜி.வி.பி.யும் சைந்தவியும் இணைந்து பாடி ஒரு பிராண்டட் மெலடி பாடலைத் தந்துவிடுகிறார்கள். இந்தப் படத்தில் அந்த வரிசைப் பாடல் இருக்கிறதா?
என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ஒரு முழு நீள ரொமாண்டிக் படத்துக்கான இசையை ரசிகர்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்குக் கொடுத்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுமே வெற்றிபெறும். அதில் நீங்கள் குறிப்பிடும் அந்தப் பாடல் ‘இரவாக நீ.. நிலவாக நான்’ என்று தொடங்குகிறது. ஜி.வி.பி-சைந்தவி இருவரும் இணைந்து பாடி  உள்ளனர்



நன்றி  - த  இந்து

கிருமி - மாறுபட்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் -இயக்குநர் பேட்டி

‘கிருமி’ படத்தில் கதிர், ரேஷ்மி மேனன்
‘கிருமி’ படத்தில் கதிர், ரேஷ்மி மேனன்
குறும்படங்கள் மூலம் சினிமா இயக்குநராகும் இளைஞர்கள் வரிசையில் மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார். ‘கிருமி’ படத்தை இயக்கிவரும் இயக்குநர் அனுசரண். அவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குறும்பட அனுபவங்களைக் கொண்டு ‘கிருமி’ படத்தை இயக்கிவருகிறார் அனுசரண்.
இப்படத்தின் டீசர் யூடியூபில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனுசரணை சந்தித்தோம்.
அனுசரண்
உதவி இயக்குநராக பணியாற்றாமல் சினிமா இயக்க எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் படித்தேன், 4 வருடங்கள் பணியாற்றினேன். அங்கிருந்த போது நிறைய இசை வீடியோக் களையும் 2 குறும்படங்களையும் எடுத்துள்ளேன்.
நான் எடுத்த குறும்படங் களுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை திரைப் பட விழாக்களில் திரையிட்டார் கள். அந்த குறும்படங்கள் மூலம்தான் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன்.
சரியான அனுபவம் இல்லாமல் ஒரு படத்தை இயக்குவது கஷ் டமாக இல்லையா?
இப்படத்தை ஆரம்பிக்கும் போது எனக்கு சவாலாகத்தான் இருந்தது. இங்கு எப்படி பணி யாற்றுவார்கள் என்று தெரி யாததால் சிறிது குழப்பமாக இருந்தது. மேலும் உதவி இயக்குநர்கள் எப்படி உதவுவார் கள் என்றும் தெரியாமல் இருந் தது. என்னுடைய குறும்படத் துக்கு நானே ஒளிப்பதிவு செய் துள்ளேன். இப்போது ‘கிருமி’ படத்துக்கு நானே எடிட்டிங் செய் திருக்கிறேன். எனக்கு ஒளிப்பதி வும், எடிட்டிங்கும் தெரியும் என் பதால் நடிகர்களிடம் இருந்து என்ன வாங்கவேண்டும், படத் துக்கு என்னவெல்லாம் தேவை என்பதில் தெளிவாக இருந்தேன்.
படப்பிடிப்பில் என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், அது எதற்காக நடக்கிறது என்பதை கவனித்தேன். படப்பிடிப்பு தொடங்கி முதல் 2 நாட்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அதற்கு பிறகு படத்தை இயக்குவது சுலபமாகிவிட்டது. நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாததால் ‘கிருமி’ படத்தில் எந்த ஒரு இயக்குநரின் சாயலும் இருக்காது.
‘கிருமி’ படத்தின் கதைக்களம் என்ன?
இது போலீஸ் சார்ந்த ஒரு த்ரில்லர் படம். தினமும் பார்க்கிற விஷயத்தைத்தான் படமாக பண்ணியிருக்கிறேன். என்னுடைய அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு போலீஸுடன், போலீஸ் நண் பர்கள் குழுவினர் வரு வார்கள். போலீஸைவிட அவர்கள்தான் மிதப்பாக இருப் பார்கள்.
அவர்கள் தன்னைத் தானே போலீஸாக நினைத்துக் கொள்வார்கள். அது எனக்கு புதுமையாக இருந்தது. இவர் களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அது எந்தளவுக்கு போகும், அவர்களுக்கு போலீஸார் எந்த அளவுக்கு துணைக்கு வருவார்கள் என்று யோசித்தேன். அதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.
இந்தப் படம் தமிழ் சினிமா வுக்கு எந்த விதத்தில் புதுமை யானதாக இருக்கும்?
தமிழ் சினிமாவில் எதார்த்த மான படங்கள் குறைவு. எனது படம் அந்தக் குறையைப் போக் கும். எதார்த்தமான படமாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சி யில் என்ன நடக்கும் என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண் டக்கூடிய வகையில் இதன் திரைக் கதையை அமைத்திருக்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளர் ஜெய ராமன், ரஜினியிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர். அந்த வகை யில் ரஜினியைச் சந்தித்து பேசியிருக்கிறீர்களா?
இன்னும் இல்லை. அவரது வீட்டுக்கு சென்று அவருடைய கையால் இப்படத்தின் பாடல் களை வெளியிட ஆசைப்படு கிறோம். அது கூடிய விரைவில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நல்ல படங்கள் வந்தால் அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் ரஜினிகாந்த் போனில் பேசி வாழ்த்து சொல்வார் என்று கேள் விப்பட்டிருக்கிறேன். அந்த வகை யில் எனது படமும் அவருக்கு கண்டிப்பாக பிடிக்கும். அவரது வாழ்த்துகளுக்காக காத் திருக்கிறேன்.



நன்றி  - த்   இந்து

கொம்பனைக்கழுவி ஊற்றிய ட்வீட்டர் வம்பர்கள்

படம்: ட்விட்டர் பதிவுகள்
படம்: ட்விட்டர் பதிவுகள்
சில பல அமர்க்கள அரங்கேற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது கார்த்தி நடித்த கொம்பன். முதல் நாள் முதல் காட்சி பார்த்த கையோடும், தியேட்டரில் இருந்தபடியும் கொம்பன் பற்றிய குறும்பதிவு பார்வைகளை ட்விட்டரில் தெறித்து வருகிறார்கள் ரசிகர்கள். அத்தகைய கொம்பன்தெறிப்புகளின் சாம்பில்கள் இங்கே ட்வீட்டாம்லேட்டில்...
நடிகர் விவேக் ‏@Actor_Vivek - கொம்பன் பார்த்தேன். ஒரு மாமனார் மருமகன் உறவை உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சாதியும் இழிவுபடுத்தப்படவில்லை.
ஷாந்தனு பாக்யராஜ் ‏@imKBRshanthnu - தவறான நோக்கத்தோடு படத்தின் வெளியீட்டை சிலர் தடுத்தனர். கொம்பன் அடைந்திருக்கும் வெற்றி, தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.
சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - நான் மறுபடி மறுபடி கொம்பன் வெளியீட்டைத் தடுக்கக்கூடாது எனச் சொல்வதன் காரணம்... நாளைக்கு மெட்ராஸ் போன்ற படங்களையும் இதே பாணியில் தடுப்பார்கள். :-(
கோபிகாஷேக் ‏@kobikashok - இவங்க சொல்ற மாதிரி சாதிக் கலவரம் வராது என்பது படம் பார்த்தவங்களுக்கு தான் தெரியும். #கொம்பன் ஓர் அருமையான படம்.
கொம்பன் மோக்கியா ‏@Mokiyanew - @gvprakash ப்ரோ கொம்பன் பாடல் & பின்னணி இசை சூப்பர். ஒரே வருத்தம் என்னனா? க்ளைமேக்ஸ்ல மங்காத்தா மியூசிக் போட்டுடீங்களே ப்ரோ..
பாரதி ‏@BharathiBigB - ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதான்யா பதற்றமான சூழல் இருந்துச்சி. இப்ப ஒரு சத்தமும் இல்ல #கொம்பன்
முத்து ‏@ViscomMuthu - கொம்பன் படத்துல ஜெயில் கைதிகளுக்கு அதிகபட்ச Punishment டா ஜில்லா படத்த போட்டு காட்றாங்க.
களபிரர் ‏@ponnumanis - கொம்பன் ஓரளவு வசூல் பண்ணினா, அதில கொஞ்சம் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கொடுக்குறது தான் தொழில் தர்மம்.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - ஆக எல்லாருமா சேர்ந்து ஒரு புள்ளப்பூச்சியை அடிச்சிருக்கீங்க... அதுல உங்களுக்கு வெங்கலக் கிண்ணம் வேற வேணுமாக்கும்! #கொம்பன்
தனிக்காட்டு ராஜா ‏@Er_Thameem - உஸ்ஸ்ஸ்! இந்த கொம்பன் படத்துக்கான அரசியல் எங்கூர்ல ஆரம்பமாகுது போல... ஐநூறுக்கும் மேல போலீஸ் குவிப்பு... நல்லா வருவீங்கயா.
clash of clans ‏@thunder - என்னடா கொம்பன் படத்துக்கு இவ்ளோ எதிர்ப்பு வருதேன்னு பாத்தா : )ஓப்பனிங் சீன்ல ஜில்லா படம் + இளையதளபதி என்டராமே?? #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எதற்காக இந்த படத்திற்கு தடை கேட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!
கார்க்கிபவா ‏@iamkarki - கார்த்தி கைல இருக்கிற பச்ச கயித்த தவிர பெருசா ஒண்ணும் சேதாரத்த காணோமே.... கட் பண்ணிட்டானுங்கன்னு முட்டு கொடுப்போம் #கொம்பன்
kandasamy ‏@kandasamykk - எத்தனை முறை லென்ஸ் வைத்து பார்த்தாலும் ஜாதிச்சண்டையை தூண்டிவிடும்படியான ஒரு காட்சி கூட நமக்கு தெரியவில்லை #Komban
suguna.diwakar@facebook - "முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!"
"ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி"
"என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்"
- இவையெல்லாம் #கொம்பன் படம் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள தத்துவ முத்துகள்.
அதாரு Naveen ‏@mechnaveen1206 - கைதிகளே ஜெயிலில் இருக்கோம்னு சோகத்துல இருப்பானுங்க... அதுல அவைங்கள கூப்டு உக்கார வச்சு ஜில்லா படம் ஓட்டுறானுங்க... உஸ்ஸ் பாவம் யா #கொம்பன்
மதிஇளம்பரிதி.பெ.கொ.ப ‏@ortoncena007 - #கொம்பன் பழைய சோத்தை அழகான தட்டுல வெச்சு பரிமாறி இருக்குறாங்க!!
வாழவந்தார் ‏@Iam_SuMu - ஓஹோ! கொம்பன் படம் எப்படினு சொல்றதை வச்சி சாதி கண்டுப்பிடிக்குறாங்கடோய்!!
Qüëéñ Sāmãñthá ‏@sarath_krrish - கொம்பன் = குட்டிபுலி 2 | நண்பேண்டா = அழகுராஜா 2 | #சகாப்தம் ஏப்புடி???

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 2/4/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 1 நண்பேன்டா

2 கொம்பன்

3,சகாப்தம்
4 FAST. FURIOUS 7 # 2 4 2015


1 நண்பேன்டா


உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, 


தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் ‘நண்பேன்டா’ ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது தடவையாக இப்படத்தில் என்னுடன் நயன்தாரா இணைந்துள்ளார். நான் அவருடைய தீவிர ரசிகன். இப்படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் மோதல், காதல் என இரண்டும் கலந்து இருக்கும். இருவரும் சேர்ந்து ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளோம். 



எனது படங்களில் சந்தானம் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், இப்படத்தில் சந்தானத்துக்கு அதிகமான காட்சிகள் இருக்காது. பெரும்பாலான காட்சிகளில் நான் தனியாகத்தான் நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு பிறகு நான் நடிக்கும் படத்தில் சந்தானம் இல்லை. இதனால் எனக்கும் சந்தானத்துக்கும் மோதல் என்று வதந்தி பரவி உள்ளது. இருவரும் எப்போதும்போல் நண்பர்களாகவே பழகி வருகிறோம். 



நான் தொடர்ந்து காமெடி படங்களில் நடிப்பதற்கான காரணம், எனக்கு காமெடி படங்கள்தான் நன்றாக வருகிறது. அதனால், ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல், அரசியல் படங்களிலும் நடிக்கமாட்டேன். நான் நடித்த படங்கள் 2 வருடங்கள் கழித்து வெளியானலும், என்னுடைய பேனரில் வருடத்தில் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. 




இவ்வாறு அவர் கூறினார்.







2 கொம்பன்


கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'கொம்பன்' படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும், படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. சென்சாரில் இப்படத்துக்கு என்ன சான்றிதழ் என்று கேட்ட போது, "'கொம்பன்' படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இப்போதைக்கு இது மட்டுமே கூற முடியும்" என்று கூறினார்கள்.
இந்நிலையில், படத்துக்கு தடைக்கேட்டு தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அம்மனுவில் கூறியிருப்பது, " சுதந்திர போராட்ட தியாகி, வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவர பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
தனது சமுதாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைசட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரை திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கதேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது. (ஆதாரம் 7-.11.-1936, தி ஹிந்து)
'கொம்பன்’ பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
படத்தின் தலைப்பே (ஆப்பநாட்டு மறவன்) ’கொம்பன்’ என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.
கடந்த 6 மாதங்களில் தென்மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


3,சகாப்தம்


விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ரா ஜயப்பா நடிக்கின்றனர். மற்றும் ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோல் ஒன்றில் வருகிறாராம். புதுமுக இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் இதனை இயக்கியுள்ளார்.
இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலகினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இதற்கிடையில், சகாப்தம் படத்தின் டிரைலரை யூடியுபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டி விட்டதாம். விஜயகாந்தின் மகன் ஹீரோவாக நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

4 FAST. FURIOUS 7


கடந்த 14 வருடங்களாக அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் 7-வது பாகம் ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்தப் படம் இந்தியாவில் வெளியாகிறது. இந்தச் செய்தியை யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வின் டீசல், மறைந்த பால் வாக்கர், 'ராக்' ஜான்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், 7-ஆம் பாகத்தில், 'டிரான்ஸ்போர்டர்' நாயகன் ஜேஸன் ஸ்டாதம் இணைந்துள்ளார். இந்திய நடிகர் அலி ஃபாசல் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
'ப்ரயன் ஓ கானர்' என்ற பாத்திரத்தில் நடித்த பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஸா', 'கான்ஜூரிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வான் இந்த பாகத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் குறித்து பேசிய வான், "ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கும்போது படப்பிடிப்பு தளங்கள் பிரம்மாண்டமாக இருக்கும், படத்தை எடுக்க நிறைய நேரமும், முயற்சியும், கலைஞர்களும் தேவைப்படுவார்கள். ஆனால் இந்தப் படம் கண்டிப்பாகப் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என நினைக்கிறேன். நான் இயக்கியதிலேயே கடினமான படம் இது, ஆனால் பெருமைக்குரிய படமும் இதுவே" என்றார்.


நன்றி  - த  இந்து  தினமணி  மாலை மலர்