Wednesday, July 16, 2025

ஓஹோ எந்தன் பேபி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

         




                

 இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய பைவ்  ஸ்டார் படத்தில்  கனிகாவின் முதல் கணவனாக  வரும் நடிகர் கிருஷ்ணா  தான்  அறிமுக இயக்குனர்  ஆன கிருஷ்ணகுமார்  ராம் குமார் . நடிகர்   விஷ்ணு விஷாலின் தம்பி ஆன ருத்ரா  இயக்குனர் ஏ ஆர்  முருகதாஸ்  இடம்  உதவி  இயக்குனர் ஆகப்   பல  படங்களில்  பணி புரிந்தவர் .இந்தப் படத்தில்  நாயகன் ஆக   நடித்து இருக்கிறார் . மராத்திய    நடிகை ஆன மிதிலா  பால்கர் தான்  இந்தப்படத்தில் அறிமுக நாயகி .11/7/2025   முதல்   திரை   அரங்குகளில்  வெளியான இந்தப் படம்  பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்று வருகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  சினி  இண்டஸ்ட்ரியில்  அஸிஸ் டெண்ட்  டைரக்டர் ஆகப்பணிபுரிபவர் . புது இயக்குனர் அவதாரம் எடுக்க தன்னிடம் உள்ள இரு கதைகளை ஒரு ஹீரோவிடம் சொல்லப்போகிறார் . அவரது   இரு கதைகளும்       ஹீரோவுக்குப் பிடிக்கவில்லை . வேறு  காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்கிறார் 


 நாயகனின் வாழ்க்கையில்  3 காதல்கள்   நடந்து  இருந்தன ,. முதல் காதல்  தன்னை விட சீனியர் ஆன பக்கத்து வீட்டுப்பெண்  உடனான   காதல் . அவளுக்கு  இன்னொரு காதலன் உண்டு . நாயகனை  ஸ்பேர் ஆக  வைத்து இருக்கிறாள் . ஒரு கட்டத்தில் நாயகனைக்கழட்டி விட்டு விடுகிறாள் .. இது   நாயகனின் பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவம் 


 காலேஜ்  படிக்கும்போது   நாயகன்  ஒரு பெண்ணை லவ்வுகிறான் . அது ஒரு ஒன்  சைடு லவ் . அதுவும் புட்டுக்கொள்கிறது 


 3வதாக  நாயகன் - நாயகி காதல்  கதை . 

நாயகனோட அம்மா,அப்பா  இருவரும்  எப்பப்பாரு சண்டை போட்டுக்கொ ண்டே இருப்பதால்  அவர்களைப்போலல்லாமல் ஒரு லவ் ,மேரேஜ்  செய்து கொள்ள வேண்டும் என்பது நாயகனின் ஆசை . நாயகியின் அப்பா சின்ன வயதிலேயே இறந்திருந்தாலும்  நாயகியின் அம்மா, அப்பா இருவருக்குமான லவ் இனிமையானது இந்த  நாயகன் - நாயகி   இருவருக்குமான காதல்  அழகாக  மலர்கிறது . ஒரு கட் டத்தில்  பிரேக்கப்பும் ஆகிறது.இதற்குப்பின் இவர்கள்  காதல்  என்ன ஆனது   என்பது மீதி திரைக்கதை   


நாயகன் ஆக ருத்ரா  கச்சிதமாக நடித்து இருக்கிறார் . தனுஷ்  போல , சிவகார்த்திகேயன்  போல , சித்தார்த் போல  இவரும்  ஸ்கூல்  ஸ்டூடன்ட் , காலேஜ் ஸ்டூடன்ட் ,  இளைஞன்  என 3 கெட் டப்களில் வருகிறார் .நல்ல   நடிப்பு .நல்ல எதிர் காலம் உண்டு 


 நாயகி ஆக மிதிலா  பாலகர்  பால்கோவா மாதிரி  இருக்கிறார் . நடிப்பும் நன்றாக வருகிறது . கிளாமர்  உடைகளுடன் வலம் வருகிறார் .இவரது  ஹேர் ஸ் டைல் , டிரஸ்ஸிங்க் சென்ஸ்  அருமை 


நாயகனின்  ஸ்கூல்  லவ்வர் ஆக திவ்யா திவ்யமாக இருக்கிறார் .அடக்கம், பவ்யம்  என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போல 


கதை  கேட்கும்  ஹீரோவாக  விஷ்ணு  விஷால் வருகிறார் . தேவைக்கும் அதிகமாகவே அவரது கேரக்ட்டர்  டெவலப் செய்யப்பட்டு இருக்கிறது . அவரது  பி ஏ  ஆக ரெடின்  கிங்க்ஸ்லி  வழக்கம் போல ஓவர் ஆக்டிங்க் .ஓவர் சவுண்ட் 


 நாயகனின்   சித்தப்பா ஆக  கருணாகரன்  கச்சிதமான   குணச்சித்திர  நடிப்பு 


 நாயகனின்       அம்மா,அப்பா   ஆக  விஜயசாரதி , கஸ்தூரி  நடித்து இருக்கிறார்கள் , அதிக வாய்ப்பு இல்லை 


இயக்குனர்  மிஷ்கின்  அவராகவே  வருகிறார் . ஷூட்டிங்க்  ஸ்பாட்டில்  அவரது   நடவடிக்கைகள்,    நடிப்பு  கை  தட்டலை  அள்ளுகிறது 



  ஜென்  மார்ட்டின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  ஹிட் . பின்னணி இசை அருமை ஒளிப்பதிவு   கலக்கல் ரகம் . எடிட்டிங்க்  கனகச்சிதம் .இரண்டே  கால் மணி நேரம் படம் ஓடுகிறது .முதல்  பாதி  செம ஜாலி , நல்ல ஸ்பீடு ., பின் பாதி கொஞ்ச்ம ஸ்லோ 

சபாஷ்  டைரக்டர்


1  ஸ்கூல்  லவ்  போர்ஸனில்  துள்ளுவதோ  இளமை  பட   பாணியில் ஓவர் கிளாமர் புகுத்தியது 



2   நாயகியின்  நடிப்பு அழகு , இளமை 


3  இயக்குனர்   மிஷ்கின் போர்சன் 


4 மனதைக்கவரும் தத்துவ வசனங்கள் 


  ரசித்த  வசனங்கள் 

1   காதலைப்    புரிந்து கொள்ள சிலருக்கு ஒரே ஒரு காதல் கதை இருந்தாலே ( அமைந்தால் ) போதும் , சிலருக்குப் பல   காதல் கதைகள்  இருந்தாலும் போதாது , புரியாது 


2   எந்த ஹீரோவும்  டயட்  விஷயத்தில் சொல்வதைக்கேட்பதில்லை ,அப்புறம் வயிறு  வந்திடுச்சு ,ம யிறு  வந்திடுச்சு என புலம்புவது 


3 ரசனையே  இல்லாதவன் தான் ஒயிட் டிசைன்ல ஸ்ட்ரைப்ஸ்  சர்ட்  போடுவான் 


4 பொண்ணுங்க லவ் பண்ணிய  பசங்களைக்கழட்டி விடுவதுதான் இப்போ ட்ரெண்ட் 


5  இவன் என்ன  கதை ரெடி பண்ணுவதில் அட்லியை விட வேகமா இருக்கான் ? 


6  நம்ம  மனசுக்குப்பிடிச்ச விஷயத்தை ,நம்ம  மனசுக்குப்பிடிச்ச நபரிடம் ,நம்ம  மனசுக்குப்பிடிச்ச  டைம்ல   சொல்வதை விட வேற எப்போ சொல்வது ? 




7   எனக்காக  யார் ரெஸ்பான்ஸ்பிலிட்டி  எடுத்துக்கொண்டாலும் எனக்கு ஓகே தான் , ஆல்ரெடி  ஐ காட்  மோர்  ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ் 


8  தண்ணீர் மோருக்கே வழி இல்லையாம், தயிருக்கு   ஸீட்  எழுதினாளாம் சிறுக்கி 


9 இவ்ளோ அழகான பொண்ணை ஒருவன் விட்டுட்டுப்போயிட் டானா? நம்ப முடியலையே? 


இதுதான்  உன் பிக்கப்  லைனா?



10  உன் பிரேக்கப்பை விட கதை சொன்ன விதம் அருமை 


11  நான்  லவ் பண்ற  பொண்ணு எப்படி இருக்கணும்னு நினைச்சனோ அப்படியே இருக்கா 


12 ஒரு  குழப்பமான விஷயத்தை அனைவருக்கும் புரியும்படி சொல்வது ஒரு இயக்குநரோட வலிமை 


13   சண்டை  போடும் பொண்ணு வேண்டாம் என நினைச்சேன் , ஆனா உன் கூட இருந்தா தினமும் சண்டை மட்டும் தான் போடுவேன் 


14   இது   இடைவேளை  இல்லை .க்ளைமாக்ஸ் 


15  பி  ரெடி 


 என்னது ?காலைலயே  பீர்   ரெடியா? 


16   காதலில்  விழுவது   என்பது சரண்டர் ஆவது 



17 உண்மையான காதலுக்கு தியாகம் செய்யணும் , யூ  யூ லூசர் 


18 உண்மை க்கதை  ஆடியன்ஸ்  மனசுக்கு நெருக்கமாக ரிலேட் ஆகும் 

19 நடிக்கும்போது  தப்பு பண்ணினா   ஒன மோர்   டேக்  இருக்கு , வாழ்க்கைல தப்பு பண்ணினா ?


20 நம்ம  பசங்க  ஒரு இடத்துல  தப்பு பண்ணிட் டா  வாழ்க்கை பூரா  அங்கே   தலை வெச்சுப்  படுக்க மாட்டாங்க 


21 கோபம்  ஒரு உணர்வு அல்ல , அது ஒரு நோய் , அதைப் புரிஞ்ச்சுக்க எனக்கு இத்தனை வருசம் ஆச்சு 


22  எந்த ஒரு விஷயம் உனக்கு சந்தோசம்  தருதோ  அதுதான் உனக்கு கஷ்டத்தையும் தரும் 


23  எந்த ஒரு விஷயமும் ஒரு எக்ஸ்ட்ரீம்  லெவலுக்கு மேல் போனா மனது  ஏத்துக்காது 


24  காதலில் மட்டும் நம்பிக்கையை விட்றாத 


25  உன் வாழ்க்கைல இல்லாத ஒரு பெண்ணுக்காக  நீ செய்த தியாகம் இருக்கே ,... 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகிக்கு  வேறு ஒருவருடன்  மேரேஜ்  பிக்ஸ் ஆகி இருக்கு என  காட்டி இருக்கலாம் . வேறு ஒரு ஆளுடன்  பல வருடங்கள்  வாழ்க்கையே நடத்தி விடடாள்  எனும்போது  நாயகனுடன்  நாயகி சேர்வாரா? என்ற எண்ணம் எப்படி ஆடியன்ஸுக்கு வரும் ? 


2  நாயகன்  - நாயகி பிரேக்கப் ஆகும் தருணம் செயற்கை 


3  நாயகியின் மாமா  நாயகியின் குடும்பத்தை டாமினேட் செய்கிறார் என்பது நம்ப முடியவில்லை 


4   நாயகனின்  அம்மா,அப்பா   இருவரும்  அடிக்கடி   அடித்துக்கொள்வது மனதில் ஒட்டவில்லை 


5  விஷ்ணு விஷாலபோர்சன்  தேவை இல்லாத நீளம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+    5  லிப்  லாக் சீன்  இருக்கு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு ஜாலியான கமர்ஷியலான  காதல் கதை . ரசிக்கலாம் , ரேட்டிங்க்   3 / 5   விகடன் மார்க் யூகம் 42 

Tuesday, July 15, 2025

SOOTHRAVAKYAM(2025) - பார்முலா - மலையாளம் - சினிமா விமர்சனம் ( (மிஸ்ட்ரி த்ரில்லர் ))

           

           11/7/2025   அன்று   திரை  அரங்குகளில்  ரிலீஸ் ஆன இந்தப்படம் கமர்ஷியலாக மீடியம் ஹிட் அடித்துள்ளது  என்றாலும்  தமிழ் ஆடியன்ஸுக்கு  பொறுமையை  சோதிக்கும் படமாகவே இருக்கும் என கணிக்கிறேன்    


ஸ்பாய்லர்  அலெர்ட்


 வில்லன்  ஒரு முரடன் .சொந்தத்  தங்கையையே  முரட்டுத்தனமாக அடிப்பவன் .அவனது  சுபாவம் தெரிந்தும்   அவனது  தங்கை  ஸ்கூலில்  சக  மாணவனுடன்  நெருக்கமாகப்  பழகுகிறாள்  . அது பிடிக்காத  வில்லன்  சகட்டுமேனிக்குத்தங்கையை அடித்து விடுகிறான் . வில்லனின்  அம்மா, அப்பா  வயதானவர்கள்   என்பதால்  அவனைக்கண்டிக்க முடியாமல் இருக்கிறார்கள் அந்த ஊரில்  நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் ஆக இருக்கிறார் .



 மாணவர்களுக்கு  போலீஸ் ஸ்டேஷனிலேயே  மாடியில் டியூசன் எல்லாம் எடுக்கிறார் . அவருக்கு வில்லனின் விவகாரம் தெரிய வர அவனை ஸ்டேசன் வரவழைத்து அடித்து மிரட்டி  அனுப்புகிறார் . அதற்குப்பின்  வில்லனின் தங்கைக்கு பர்த்டே வருகிறது .  அன்று   வில்லனின்  தங்கையை  அவளது   பாய் பிரெண்ட்  வாழ்த்தி  கேக்  வெட்டி   ஊட்டுகிறான் .அப்போது அங்கே   வந்த   வில்லன்  இருவரையும்  கண்டபடி தாக்கி விடுகிறான் 



இதனால் செம   கடுப்பான  அந்த பாய் பிரண்ட்  வில்லனை  பழி வாங்கத்துடிக்கிறான் . வனத்தில் மிருகங்களைப்பிடிக்கப்பயன்படுத்தும் பொறி ஒன்றை வைத்து வில்லனைக்காயப்படுத்தத் திட்டம்  போடுகிறான் .. ஆனால்   விபரீதமாக   வில்லன்  கிணற்றில்  விழுந்து  விடுகிறான் 

 இதற்குப்பின்   நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 

வில்லனுக்கு   ஒரு காதலி உண்டு . அவளது  வங்கிக்கணக்கில்  3 கோடி ரூபாய்  பணம்  வரவு வைக்கப்[பட்டு இருக்கிறது .அந்த ப்ணம்  அனுப்பிய   பெண் காணவில்லை 


 இந்த இரண்டு கேஸையும்   நாயகன் எப்படி டீல் செய்கிறார் என்பது  தான் பின் பாதித்திரைக்கதை 


நாயகன் ஆக ஷைன்  டாம் சாக்கோ  நடித்திருக்கிறார் .முதல் பாதியில்  அவர் போலீஸ்  ஆபீசர்  வேலையைக்கவனிக்காமல் ட்யூசன் எடுப்பது எல்லாம் ஓவரோ  ஓவர் . அதற்கு  அரசாங்கம் அனுமதி அளிக்குமா?  அனுமதித்தாலும் அவருக்கு நேரம் இருக்குமா? 


வில்லன் ஆக  தீபக்  பரம்போல்  கச்சிதமான   நடிப்பு .அவரது காதலியாக வரும்  வின்சி  ஆலோசியஸ்  நடிப்பு ஓகே ரகம் ,  ஆனால் அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை 



படத்தில்  இரு க்ரைம்கள்  நடந்தாலும்  இரண்டும்  ஆடியன்ஸுக்கு பெரிய கனெக்ட் டைக்கொடுக்கவில்லை .


வில்லனின்   காதலிக்கு  ஒரு டீன்  ஏஜ் பெண்  3 கோடி கடன் கொடுப்பது எல்லாம் காதில் பூச்சுற்றல் 


வில்லன்  ஓங்கி ஒரே  ஒரு அறை  தான்  கொடுக்கிறான் .அதிலேயே ஆள் அவுட்  ஆவதும் நம்பும்படி இல்லை 


இந்த  படத்தில்   பாடல்கள்   பொறுமையை  சோதிக்கின்றன .பின்னணி இசை   பரவாயில்லை 


திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர்  யூஜியன் ஜோஸ் சிரம்மேல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கேரளாவில்  மலையாள  ஆடியன்ஸ்  கை  தட் டி ரசித்துப்பார்த்தார்கள் . ஆனால்  எனக்குப்பிடிக்கவில்லை . ரேட்டிங்க் 2 / 5 

Monday, July 14, 2025

த ஹண்ட்: த ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்- வெப் தொடர்- THE HUNT:THE RAJIV GANDHI ASSASSINATION CASE - WEB SERIES - (2025) -ஹிந்தி / தமிழ் - விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )@சோனி லைவ்

               


         4/7/2025  முதல் சோனி லைவ்  ஓ டி டி  யில்   வெளியான இந்த  வெப் தொடர் மொத்தம்  7 எபிசோடுகள் கொண்டவை . . ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் டு  50 நிமிடங்கள் ஆக மொத்தம் அஞ்சே  முக்கால் மணி நேரம்  ஒதுக்கினால் ஒரே  சிட்டிங்கில் பார்த்து விடலாம் 


அநிருத்யா மித்ரா எழுதிய 90 டேஸ் ,த ட் ரூ  ஸ்டோரி  - ஆப்  த ஹண்ட்  பார்  ராஜீவ்  காந்தி அசாசினேஷன்  என்ற  புத்தகத்தைத் தழுவி எழுதப்பட் ட திரைக்கதை . ஹைதராபாத் ப்ளூஸ் (1998) ,ஹைதராபாத் ப்ளூஸ் 2 (2004) மாடர்ன்  லவ் ஹைதராபாத்  வெப் செரிஸ் @ அமேசான் ப்ரைம் (2022) ,பாதாள்  லோக்  பாகம் 2  @ அமேசான் ப்ரைம் ( 2025)  ஆகிய   புகழ் பெற்ற  படைப்புகளை  வழங்கிய இயக்குனர் நாகேஷ்  குக்குனூர்  இயக்கிய வெப் சீரிஸ் இது 


ஹிந்தியில்  வெளியான  இந்தத்தொடர்  தமிழ்   டப்பிங்கில் கிடைக்கிறது .அனைவரும் பார்க்கும் தரத்த்தில் எடுக்கப்பட்ட யு   படம்  தான் (  வெப் சீரிஸ் தான் )   


சோனி லைவில்  இதுவரை வெளியான வெப் ஸீரிஸில்  அதிகம் பேரால்பார்க்கப்பட்டது என்ற  பெருமையைப்பெற்றது இது .இந்தத்தொடர்   முழுக்க  முழுக்க அரசாங்கத்தரப்பு , சி பி ஐ  கண்ணோட்டத்தில்  சொல்லப்பட்டுள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

முன்னாள்   பிரதமர்  ராஜிவ்  காந்தி 1991 ல் தேர்தல் பிரச்சாரத்துக்காக  ஸ்ரீ  பெரும்புதூர்  கூட் டத்தில்   கலந்து கொள்ள வந்தபோது  விடுதலைப்புலி  அமைப்பு  சிவராசன் தலைமையில்  மனித    வெடிகுண்டாக  செயல்பட் ட தாணு , முருகன் , நளினி  , சுபா , வெடிகுண்டு  தயாரித்துக்கொடுத்த   பேரறிவாளன்   ஆகியோர்  எப்படி   சி பி ஐ இடம் சிக்கினார்கள்   என்பதை   விபரமாக சொல்லும் கதை இது 


ஜூனியர்  விகடன் , நக்கீரன் , குமுதம் ரிப்போர்டடர்  ஆகிய   இதழ்களிலும் ,தினசரிகளில்  நாம் படித்த விஷயங்கள் தான் என்றாலும்  அப்போது  தெரியாத  பல விஷயங்களை  ஒரு தொகுப்பாக இந்த வெப் சிரிஸில்  காண முடிகிறது 

சபாஷ்  டைரக்டர்


1 போட்டோ கிராபர்  ஹரிபாபுவின் கேமரா  எந்த விதமான  சேதமும் இல்லாமல் போலீஸ் கையில் கிடைத்த  விதம் கேஸ்க்கு மிகப்பெரிய பலம் .அதன் மூலம் தான்  குற்றவாளிகளை  ஆரம்பக்கட்டத்தில் அடையாளம் காண முடிந்தது .அந்த  சீன்கள்  எடுக்கப்படட விதம்  அருமை 


2   ராஜீவ்   காந்தியின்  பின்னால் நின்று பாதுகாப்புப்பணியில்  ஈடுபட்ட  சப் இன்ஸ்பெக்ட்டர்  அனுசூயா  மிக முக்கியமான சாட் சி . அவர் தாணுவைத்தடுத்திருக்கிறார் .முடிந்தவரை போராடி இருக்கிறார் .படுகாயம்  அடைந்த நிலையிலும் அவரது சாட் சி  கேஸ்க்கு பக்க பலம் .அவர்  சம்பந்தப்பட் ட  காட் சிகளின் படமாக்கம் தரம் 


3   எல் டி டி  ஈ   அமைப்பைக்கன்ட்ரொல்  செய்வது   பிளாக் டைகர்  என்ற   அமைப்பு என்ற   விஷயத்தைக்கண்டறியும் தருணம் அருமை 


4  போட்டொ  ஜர்னலிஸ்ட் ஆன  ரவி சங்கர் ,  பகவான் சிங்க்  ஆகியோர்  ஒவ்வொருவர் ஆக மாட்டுவது  த்ரில்லிங்க் 



5 முருகனுக்குப்பல பெயர்கள் உண்டு . தாஸ்  என்ற   பெயரில் நடமாடினான் . நளினியும் அவனும்  அண்ணன் - தங்கை என்று சொல்லியே   வீடு   எடுத்துத்தங்கினான் .அனால்   நிஜத்தில் அவர்கள் காதலர்கள்   என்ற   விஷயங்களைக்கண்டறியும் தருணங்கள்  \


6   சயனைடு  சாப்பிடுவது  மரணிப்பது    விடுதலைப்புலிகளிடம் உள்ள   சவாலான விஷயம் .அதைத் தடுக்க சிபிஐ  டீம்   மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் அருமை சயனைடு  சாப்பிட் ட  முதல் 30 நொடிகளில் 3 விதமான முதல் உதவிகளை செய்ய வேண்டும் , அடுத்த   30 நிமிடங்களில்   ஹாஸ்பி டல்   போகணும்  போன்ற   பிராஸஸ் களை விளக்கும் சீன்  அருமை 


7  போட்டோ கிராபர்  ஹரிபாபுவின் லவ்வர் நர்ஸ்   சுந்தரி  போலிஸிடம் மாட் டும் சீன் ,ஹரிபாபுவின்  அம்மாவிடம்    பணம் புழங்குவதைக்கண்டு  சந்தேகப்படுவது , அதைத்தொடர்ந்து வரும் சீன்கள் 


8  முருகன் , நளினி   ஜோடியை பஸ்  ஸ்டேண்டில் பொறி   வைத்

துப்பிடிக்கும் சீன்  மாஸ் சீன் 


9 முருகனை   விசாரிக்கும்போது  சைக்கலாஜிக்கல் அப்ரோச்  ஆக நலினியை  வைத்து மிரட்டும் சீன்   பதை பதைக்க வைக்கும் சீன்  


10  ராஜீவ் காந்தி அசாசினேஷன்நடத்தும் முன்  வி பி சிங்கை   வைத்து  ஒத்திகை பார்க்கும் சீன்  பயங்கரம் 


11 ஆயுத   வியாபாரி  பிடிப டும் சீன்  ,அவன் தப்பும் சீன்   பரபரப்பு 


12    சிவராசன்    பெங்களூரில்  தங்கும் வீட்டில்  மிருதுளா  ஆஸ்துமா   பிராப்ளத்தில்   மாட்டுவதும்  அதைத்தொடர்ந்து வரும் சீன்களும் 


13ஆதிரா  - கனகசபாபதி   ஹோட் டல்   ரூமில்  மாட்டும்  சீன்  


14  மேலிட  ஆர்டர்   வராமல் சிவராசன்    பெங்களூரில்  தங்கும் வீட்டில்    நான்கு நாட்கள்  போலீஸ்  டேரா  போட்டிருக்கும் சீன்  


15   சிவராசன்  பெட்ரொல்  டேங்கர்   லாரியில்   தப்பிக்கும் சீன் செம 


16 போலீஸ்  ஆபீசர் ஆக  வரும் பகவாதிப்பெருமாள்   என்கிற பக்ஸ்    நடிப்பும்  , மற்ற  அனைவர் நடிப்பும் செம 


ரசித்த  வசனங்கள் 

1  சஞ்சய்   காந்தி ,  இந்திரா காந்தி , ராஜிவ்  காந்தி   , என வரிசையா  பலி , காந்தி  குடும்பம் பாவம் 


2   சார் , இந்த பில்டிங்க்  ராசி   இல்லாத  இடம் 


 நாங்க  செய்ய வந்த வேலைக்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தமே இல்லை 


3 த டிபிகல்ட் ஈஸ்   பாசிபிள் . த இம்ப்பாஸிபிள்  வில்   டேக்   ஏ லாங்க்   டைம் 


4  பொதுவா  போலீஸ்   பெண்களை  அதிகம் சந்தேகப்பட மாட்டாங்க .அதனால்  பாம்  பிளாஸ்ட்க்கு லேடியை  செலக்ட் பண்ணி இருக்கலாம் 


5  பொய்  சொல்லும் வாய்க்கு போஜனம் மட்டுமில்லை , தண்ணீர்   கூட கிடைக்காது . உண்மைகளை சொன்னா தண்ணீர் கிடைக்கும் 


6  மனசுல   சந்தோஷம்   இல்லைன்னா   நாக்கில்   ருசி   தெரியாது 


7   உங்க   கண்ணுக்கு  அவங்க  தீவிரவாதி , அவங்க கண்ணுக்குஅவங்க  போராளி 


8 ஒரு   கதைல   இருக்கும் உண்மைகளைக்கண்டுபிடிக்க பல  வருடங்கள் ஆகும் 



9   நாம்   என்ன   செய்ய வேண்டும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும் 


10 கொலையை  பங்க்சன்   என   சொல்லாத 


11 ஒருத்தனைத் தோளில் ஏற்றினால்  அவன்   தலையில் ஏறிக்குவான் 


12   ஒயிப்  ஆல்வேஸ்  நோ  டிஸ்ட்ரே க்சன் , ஒன்லி   சப் போர்ட் 


13   காரியம்   நல்லபடியா முடிஞ்சா  திருப்பதி போய் மொட்டை  போட்டுக்கறதா   வேண்டுதல் 


செஞ்சது கொலை ..


ஒன மேன் 'ஸ்  ஹீரோ  அனதர் மேன் "ஸ்  டெரரிஸ்ட்


14  குற்றவாளி  இந்த பஸ்ல  வர்றானா?என இந்த வழியாப்போகும் எல்லா பஸ்ஸிலும் செக் பண்ணனும் 


லாட்டரி  .டிக்கெட்  வாங்கறவன்  ஒவ்வொரு டிக்கெட்டுக்கும்  பிரைஸ் கிடைச்சிருக்கா?என செக் செய்வது போல ? 


15   நீ   சோல்ஜர் தான் ,போராளி இல்லை 


16    தியாகிகளை  எந்தக்காலத்திலும்  மறக்க   முடியாது , ஆகாயத்தில் நட்ஷத்திரமாக ஒளி வீசுவார்கள் .நாளை   என்னை நீ  ஆகாயத்தில் பார்ப்பாய் 



17  பக்கத்து நாட்டு ஆளுங்களுக்குக்கண்ணீர் விட்டுட்டு நம்ம நாட்டு ஆளை க்கொல்வீங்களா? 


18  ரெண்டு   நிமிஷம்   டீ  சாப்பிட்டுட்டு வாங்க , இவன்  உடம்பு   அவ்ளோ   தான்  தாங்கும் 


19    நான்   உண்மைகளை சொன்னா எனக்கு என்ன கிடைக்கும் ?


 எவ்ளோ  பேசறியோ  அவ்ளோ   கிடை க்கும் 


20  இந்தக்கேஸ்   ஒரு புதையலைத்தேடுவது போல இருக்கு 


21  உண்மைகளைக்கண்டு பிடிக்க வந்து  காம்ப்ளிக்கேட்டட்  பொலிடிக்கல் பிரஷர் ல மாட்டிக்கிட் டோ ம் .எல்லா நாடுகளிலும் இது நடக்கும் 


22  விதியையும் , அதிர்ஷ்டத்தையும்  இன்வெஸ்டிகேஷன்ல  முடிச்சுப்போட நினைக்க வேண்டாம் 


23  படத்தில்  காட்டுவதை   விட நிஜத்தில்  பயங்கரமா   இருக்கு 


24  சிவராஜன்   வீட்டுக்கு முன்னாடி  எல்லாரும் ரஜினி படம்  முதல் நாள் முதல் ஷோ பார்க்கற  மாதிரி  கூடி இருக்காங்க 


25  சார்   காலைல இருந்து வெயிட்டிங்க் 


 ம், வெயிட்டிங்க் ஆர்டர் தான் வந்திருக்கு 


 எப்போ அட் டாக்கிங்க் ஆர்டர் வரும் ? 


26   அலோபதி   மெடிஸன்ல எக்ஸ்பயரி ஆனாலும் 14   நாட்கள்   யூஸ் பண்ணலாம் 


27   சிவராஜ் அண்ட்  கோ  தற்கொலை செய்து  கொண்டு   இறந்தது   நம் டீம் க்குக்கிடைத்த  தோல்வி தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1   விடுதலைப்புலிகள்   தரப்பில்  செய்த மிகப்பெரிய தவறு போட்டோ கிராபர்  ஹரிபாபுவின் கேமரா போலீஸ்   கையில்  சிக்கியது ,, நளினி யி ன் அம்மா நளினியைக்காட்டிக்கொடுத்தது 


2   போலீஸ்   தரப்பில்  தவறு ..லஞ்ச்ம   வாங்கிக்கொண்டு   சிவராசன்  லாரியில் தப்பிக்க உதவியது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  சரித்திரப்பதிவு .அனைவரும் பார்க்க வேண்டிய வெப் சீ ரிஸ் . ஒரு சீன்    கூட போர் அடிக்கவில்லை . ரேட்டிங்க்  3.5 / 5 


The Hunt: The Rajiv Gandhi Assassination Case
Genre
  • Crime
  • Drama
Based onNinety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins
by Anirudhya Mitra
Story byRohit G. Banawlikar
Nagesh Kukunoor
Sriram Rajan
Directed byNagesh Kukunoor
Starring
Music byTapas Relia
Country of originIndia
Original languagesHindi,Tamil
No. of seasons1
No. of episodes7
Production
Executive producerMoiz Tarwadi
ProducersNagesh Kukunoor
Sameer Nair
CinematographySangram Giri
EditorFarooq Hundekar
Running timeApplause Entertainment
Kukunoor Movies
Original release
NetworkSonyLIV
Release4 July 2025

Saturday, July 12, 2025

DHEERAN - தீரன் (2025) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா )

                          

ஹெச்  வினோத் இயக்கத்தில் , கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று (2017) படத்தின் கதைக்கும் இந்தக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இது ஒரு லோ பட்ஜெட் படம் .பெரிய  நடிகர்கள்  யாரும் இல்லை . 4/7/2025  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  பி , சி  சென்ட்டர்களில்  நன்றாக ஓடுகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்



வில்லன்  ஒரு பெரிய கேங்க்ஸ்டர் . அவனிடம்  வேலை பார்த்த  சரவணன்  என்பவன்  வில்லனிடம் இருந்து பிரிந்து  தனியாகத்தொழில்  தொடங்கி வேறு ஒரு ஏரியாவில் பெரிய தாதா ஆகி விட்டான் .அவனுக்கு வில்லனின் பலவீனங்கள் , ரகசியங்கள்   எல்லாம் தெரியும் , அதனால் வில்லன் அவனைப்போட்டுத்தள்ள நினைக்கிறான் . 



வில்லன்  தன்னிடம் வேலை பார்க்கும்  நாயகனிடம்  இந்தப்பொறுப்பை ஒப்படைக்கிறான் .நீ  சரவணன்  இருக்கும் ஏரியாவுக்குப்போய் அவனிடம் வேலைக்கு சேர்ந்து  சமயம் கிடைக்கும்போது அவனைப்போட்டுத்தள்ளி விடு என்கிறான் 


 நாயகன் வில்லன்  சொன்னபடி  சரவணன்  இருக்கும் ஏரியாவில் போய் அங்கே  வேலைக்கு சேர்கிறான் .இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை 


மேலே  நான்   சொன்ன   மெயின் கதை  40 நிமிடங்கள்   தான் .மீதி  ஒன்றே  கால் மணி நேரம்  நாயகன் - நாயகி காதல் கதை இடைச்செருகலாய் உண்டு 


நாயகன் ஆக  ராஜேஷ்  மாதவன் .மரணமாஸ்  என்ற  மலையாளக்காமெடிப்படத்தின்   வில்லன் தான்  இவர் . ஆள்  பார்க்க  ஒல்லியாக  சாதாரணமாக இருக்கிறார் , ஆனால்  நடிப்பு , காமெடி , டயலாக் டெலிவரி நன்கு வருகிறது


  வில்லன் ஆக வினீத்    அதிக  வேலை இல்லை . மனோஜ் கே ஜெயன் நடிப்பு அருமை . நாயகி ஆக  அஸ்வதி மனோகரன்  இளமைத்துடிப்புடன் நடித்து இருக்கிறார் 


சும்மா  டைம் பாஸ்க்கு  தான் உன்னைக்காதலிக்கிறேன் .கல்யாணம் எல்லாம்   வேண்டாம் என  இவர் சொல்லும்போது தியேட் டரில் விஸில் பறக்கிறது 


முஜீப்  மஜித்  தான் இசை .இரண்டு  பாடல்கள் பரவாயில்லை  ரகம் . பின்னணி  இசை ஓகே  ரகம் ,ஒளிப்பதிவு  தரம் . நாயகிக்கான லைட்டிங்க் அருமை , எடிட்டிங்க்  நான் லீனியர்   கட்டில்  அமைத்த திரைக்கதையை  ட்ரிம் செய்த விதம் அருமை . 130 நிமிடங்கள் டியூரேசன் . திரைக்கதை  இயக்கம்  தேவதத்  ஷாஜி 

சபாஷ்  டைரக்டர்


1  கதையை  நேரடியாக சொல்லி இருந்தால்  சுமாராகத்தான் இருந் திருக்கும் .நான்  லீனியர்  கட்டில்  மாறி மாறி  சொன்ன விதம் அருமை 


2  நாயகன் - நாயகி  ரொமாண்டிக்  போர்சன்  அழகு  கவிதை .அதில்   நாயகியின் நடிப்பு கலக்கல் ரகம் 


3 கல்யாண வீட்டு சீக்வன்ஸ் , இழவு வீட்டு சீக்வன்ஸ்   கையாண்ட விதம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  டிரைவர்  வேலை கேட்டுத்தான் வந்தான் , ஆனா டிரைவிங்க் தெரியாதாம் 


2  இந்த உலகத்தில் எல்லாத்துக்கும்,எல்லாருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு 


3 வெல்டிங்க்  தொழில்  தெரிந்தவர்கள்  உலகில்   எங்கு  வேண்டுமானாலும்  வசிக்கலாம், பிழைத்துக்கொள்ளலாம் 


4 யார்க்கெல்லம்  வயித்தால  போகலையோ  அவங்களுக்கு  இந்த விஷ உணவில் பங்கு இருக்கு 


 இதை எல்லாம் நோட்  பண்றதா போலீஸ் வேலை ? 


5  இந்த ஊரு க்கு   போலீஸ்  ரெண்டே  விஷயத்துக்குத்தான் வரும் 1 பாஸ்போர்ட்  வெரிஃபிகேஷன்  2 சரவணன்  கையால்   சாக 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி பாபிசிம்ஹா  நடித்த  ஜிகிர்தண்டா  படத்தின் சாயல் லைட் டா இருக்கு 


2   பல வருடங்களாக  சரவணனிடம்  வேலை பார்த்த ஆள்  வேலைக்கு சேர்ந்த  ஒரே வாரத்தில் நாயகனுடன் இணைந்து வில்லனைப்போட உதவி செய்யக்காரணமே இல்லை . 


3  இது போல  கேங்க்ஸ் டரை , தாதாவை  தூங்கும்போது  கொலை செய்வதுதான் பாதுகாப்பு .சண்டைக்காட் சி  வைப்பதற்காக  பகலில்  கொலை  செய்ய   முயற்சிப்பது போலக்காட்டுகிறார்கள் 


4  நாயகனை  அனுப்பியது யார்  என நாயகனிடம்  விசாரித்து  விபரம் வாங்காமல் வில்லன் செய்வது நம்ப முடியவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - லோ பட்ஜெட்  காமெடி  படம்  பார்க்க விரும்புப வர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 

Friday, July 11, 2025

அஃகேனம் (2025) தமிழ் - -சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் )

                       


  

அஃகேனம்  என்ற   சொல்லுக்கு ஆயுத எழுத்து என்று  பொருள் . ஆல்ரெடி ஆயுத எழுத்து   என்ற  டைட்டிலில்  இயக்குனர் மணிரத்னம் ஒரு டப்பாப்படம் கொடுத்திருக்கார் என்றாலும்  இந்தப்படம்  லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் நல்ல படம் . இந்தப்படத்தைப்பரிந்துரைத்த  முக நூல் நண்பர்   வெங்கட்  பிரசாத்  அவர்களுக்கு நன்றி 


 ஊமை  விழிகள் மூலம் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே  தனக்கு நடிப்பு வராது என்பதை நிரூபித்த  அருண்   பாண்டியன் இணைந்த கைகள்  மெகா  ஹிட்டுக்குப்பின்  ஆக்சன் ஹீரோ ஆனார் . நடிப்பு வராவிடடாலும்  அவரது உயரம் , ஜிம்  பாடி  அவருக்கு உதவியது .இது அருண்   பாண்டியன் -ன்  சொந்தப்படம் . அவரது மகள் கீர்த்தி பாண்டியன்  ஆக்சன்  ஹீரோயின் ஆக  அவதாரம் எடுத்திருக்கிறார் . அப்பாவின் பிளஸ்  பாயிண்ட் ஆன  உயரம் , ஜைஜாண்டிக்  பாடி  மகளுக்கும் உண்டு , ஆனால் அப்பாவின் மைனஸ்  ஆன நடிப்பு  வராமை  இவருக்கு இல்லை . நல்ல நடிப்புத்திறன் , அழகு  ஒருங்கே  அமையப்பெற்றிருக்கிறார் . நல்ல   எதிர்காலம் உண்டு 


4/7/2025   அ ன்று  திரை   அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  நேர்மறை  விமர்சனங்களைப்பெற்று வருகிறது . அதிக விளம்பரங்களில்லாமையால் பலருக்கு இந்தப்படம் போய்ச்சேரவில்லை 


2019ல்  மலையாளத்தில் ரிலீஸ் ஆன  ஹெலன்  என்ற  சர்வைவல்  த்ரில்லர்  படத்தின் அபிஷியல் தமிழ் ரீமேக் ஆ ன  அன்பிற்கினியாள் (2021)  படத்தின்  இயக்குனர் ஆன  கே  உதய் தான்  இந்தப்படத்தின்  இயக்குனர் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு டாக்சி  டிரைவர் .சொந்தமாக  டாக்சி   வைத்திருக்கிறார் . திருமணம் ஆனவர் .கணவனை விட்டுப்பிரிந்து வாழ்கிறார் .இவருக்கு  ஒரு மகள் உண்டு ,அம்மா உண்டு .தினமும் மகளை தன டாக்சியில் தான் ஸ்கூலில் டிராப் செய்கிறார் . பொது  இடத்தில்   ஒரு பெண்ணிடம்   சில்மிஷம்  செய்த இருவரை போலீசில்  பிடித்துக்கொடுக்கிறார் . அவர்கள்   வில்லனின்   ஆட்கள் . அரசியல் செல்வாக்கால் தப்பி விடுகின்றனர் .ஆனால்  நாயகி மீது வில்லன் ஒரு கண் வைத்திருக்கிறான் .சமயம்   கிடைக்கும்போது   நாயகியை  பழி வாங்க வில்லன் நினைக்கிறான் 


  வில்லன்  ஒரு ஐ டி    கம்பெனி நடத்தி வருகிறான் .அதில்  இளம்பெண்களை இண்ட ர்வ்யூ செய்து ஆள் எடுக்கிறேன் பேர்வழி என  தவறான  தொழிலுக்கு  பயன்படுத்துகிறான் 



நாயகன் தன மகள் மீது அளவற்ற பாசம்   வைத்திருக்கிறான் . ஒரு ஐ டி கம் பெனி இண்ட ர்வ்யூ க்கு   வந்த   நாயகனின் மகள்  அங்கே   எதுவோ   தப்பாகப்பட  அப்பாவுக்கு போன் செய்கிறார் அப்பா  ஆன  நாயகன்  சம்பவம் நடக்கும்   இடத்துக்கு   வருகிறார் 


 நாயகன் ,  நாயகி ,   வில்லன்   மூவருக்கும்  ஒரு கட்டத்தில்  ஒரு கிராஸ்   உருவாகிறது .அதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை 

 நாயகி   ஆக   கீர்த்தி பாண்டியன் அருமையான நடிப்பு .ரெகுலர்  கஸ்டமர்  ஒருவரை  காதலிக்கலாமா?என மனம்  தவிக்கையில்  பிரமாதமாக நடித்திருக்கிறார் . ஆக்சன்  நாயகி ஆக  அதகளம்  செய்கிறார் .


 நாயகியின் அம்மாவாக   சீதா .அதிக   வாய்ப்பில்லை 


நாயகன் ஆக   அருண் பாண்டியன் . இத்தனை வருடங்கள் ஆகியும்   அவருக்கு இன்னமும்  நடிப்பு வரவில்லை என்பது வருத்தமான விஷயம் தான் . ஆனால்    மகளுக்காக  இவரை மன்னிக்கலாம் 


வில்லன் ஆக   நடித்த  அந்த வீணாப்போன ஆள்   யார் என்று தெரியவில்லை . எடுபடவில்லை . மற்ற   அனைவரும்   அவரவர்   பங்களிப்பை சரி யாக செய்து இருக்கிறார்கள் 


பரத்  வீரராகவன்   இசையில் இரு பாடல்கள்   பரவாயில்லை   ரகம்,  பின்னணி இசை  அருமை .விக்னேஷ்  கோவிந்தராஜனின் ஒளிப்பதிவு அருமை . தேவத்யனின் எடிட்டிங்கில்  127  நிமிடங்கள்   படம்   ஓடுகிறது . முதல் பாதி  செம ஸ்பீடு . பின் பாதி  அருண் பாண்டியன்  போர்சன்  பொறுமையை  சோதிக்கிறது .திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர் கே  உதய் 

சபாஷ்  டைரக்டர்


1  கீர்த்தி பாண்டியன்   உடல் மொழி , நடிப்பு  டயலாக் டெலிவரி , முக பாவனைகள்   அனைத்தும் அருமை .அவரது ஆடை   வடிவமைப்பில் கண்ணியம்,  கம்பீரம் 


2  நாயகியின்  காதலன்  வடிவில்   வரும் ஒரு டிவிஸ்ட்  அருமை 


3  முதல் பாதி  செம விறு விறுப்பு 


  ரசித்த  வசனங்கள் 

1  உன் கோபத்தை   வெளியில் காட்டிக்காத . எதிரிக்கு அது சாதகம் ஆகிடும் 


2  இந்தியா    மேப்   எவ்ளோ  பெருசா இருக்கு ?தமிழகம்  போர்சன்   வரும்போது  ஷார்ப் ஆகிடும் மேப் . அது மாதிரி தமிழகத்தில் எல்லாரும் ஷார்ப் 


3  பிடித்த   வாழ்க்கை தான் வாழனு ம்னு  எல்லாரும்   முடிவு பண்ணிட் டா   பாதி    ஓ எம் ஆர்  காலியாகத்தான் இருக்கும் 


4 பொதுவா ஒரு தப்பு நடந்தா நாம எல்லாரும் அதைத்தட் டிக்கேட்பதை விட கடந்துபோகத்தான் விரும்புவோம் 


5  நமக்குப்பிடிக்காத  விஷயம்   எது?னு  நமக்குத்தெரியாம இருக்கலாம் ஆனா   பிடிச்ச   விஷயத்தை தெரிஞ்சுக்காம இருப்பது இல்லை 


6   நம்ம   தொழிலில்   நாம  என்ன   பண்றோம்னு  நம்ம   நிழலுக்குக்கூட   தெரியக்கூடாது 


7  எதையுமே  பிராக்டிகலா  பார்க்கற நீ ஸ்லிப்  ஆகிடாத 


8  படம் ஆரம்பிக்கும்போது  சுட ஆரம்பிச்சாங்க , எண்டு  கார்டு  போடும் வரை சு ட்டுட் டே  இருக்காங்க .பாவம் ஆடியன்ஸ் 


9   உன் பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கி வைத்திருப்பாயே? 


 துப்பாக்கி வைத்திருப்பதே    பாதுகாப்பு இல்லை   இப்ப எல்லாம் 


 10   உன்  கிட் டே  இப்போ   கோபம் மட்டும் தான் இருக்கு . அது   எல்லா நேரமும்   கை  கொடுக்காது 


11   சந்தோஷமா   வாழ   பணம் தான் முக்கியம்னு இந்த உலகம் சொல்லும், ஆனா பணத்துக்கும்,சந்தோஷத்துக்கும்  சம்பந்தம் இல்லை 


12 செய்யற   தொழில்  தான்  தெய்வம்னு சொல்லுவாங்க, ஆனா  தெய்வம்  ( சிலை ) செய்வதையே   தொழிலா   வைத்திருக்கோம்  


13   பெண்களைக்கொலை செய்வதை நான் வெறு க்கிறே ன் , ஏன்னா  என் பிஸ்னெஸ்  சே  பெண்களை  வைத்துத்தான் 


14   அவசரத்தில்   எடுக்கும் முடிவு  எப்போதும்   சரியா  இருக்காது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகி   தன டாக்சியில்  கிடைத்த   துப்பாக்கியை  தவறுதலாக  ஒரு கிளை  வில்லனிடம்  காட்டுவது , அப்போது  நடக்கும்  சம்பவங்கள்  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை 


2   நாயகியின்  முதல் பாதி கதை போர்சன் ,  நாயகனின்   பின் பாதி கதை போர்சன்  இரண்டையும்  இணைக்க இயக்குனர் ரொம்பவே சிரமப்படுகிறார் 


3    சாதாரண  டாக்சி  டிரைவர் ஆன  நாயகி   துப்பாக் கியை  போலீஸ்   போல  அசால்ட்  ஆக  உபயோகிப்பது  எப்படி ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல்  பாதி  அருமையான க்ரைம் த்ரில்லர் . பின் பாதி   எடுபடவில்லை . விகடன் மார்க் யூகம் 41 , ரேட்டிங்க்  2.75 / 5 


Akkenam
Theatrical release poster
Directed byUday K
Written byUday K
Produced byArun Pandian
Starring
CinematographyVignesh Govindarajan
Edited byDevathyan
Music byBarath Veeraraghavan
Production
company
A & P Groups
Release date
  • 4 July 2025
CountryIndia
LanguageTamil

Wednesday, July 09, 2025

பறந்து போ (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா )

                          

இயக்குனர்  ராம்  படைத்த முதல் படமான  கற்றது தமிழ் (2007) வெளியான போது  ஒரு பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியது . ஈரானிய பட பாணியில் திரைக்கதை , ஒளிப்பதிவு இருந்தது .6 வருடங்கள் கழித்து அவரது இரண்டாவது படம் தங்க மீன்கள் (2013) சிறந்த  தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதைப்பெற்றது . 3வது படமான  தரமணி (2017) சிறந்த  வசனத்துக்கான ஆனந்த விகடன் விருதைப்பெற்றது .4வது படமான  பேரன்பு (2019) சிறந்த  படத்துக்கான ஆனந்த விகடன் விருதைப்பெற்றது .5வது  படமான   7 கடல் 7 மலை  சர்வதேச திரைபபட விழாவில் திரை இடப்பட்டது .சில பொருளாதார சிக்கல்களால் அது திரை அரங்குகளில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை



 .இவர்  இயக்கிய   அனைத்துப்படங்களும்  சீரியஸான  கதைக்களங்கள் .. ஆனால்   அவரது பாணியில் இருந்து விலகி  ஒரு காமெடி  டிராமாவைப்படைத்திருக்கிறார் . குழந்தைகளுடன் பெற்றவர்கள் அனைவரும் ரசித்துப்பார்க்கும் இந்தப்படம் 4/7/2025 அன்று  ரிலீஸ் ஆகி  செம ஹிட் ஆகி இருக்கிறது . இவர் இயக்கிய படங்களில்  வசூல்  ரீதியாக  பிரம்மாண்ட வெற்றியைப்பெற்ற முதல் படம் இதுதான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  இந்து ,  நாயகி  கிறிஸ்ட்டியன் , இருவரும் மதம் மாறித்திருமணம்  செய்து கொண்டதால் நாயகி வீட்டில் செம எதிர்ப்பு . . 8 வயதில் ஒரு மகன் . பொருளாதாரத்தேவைகளுக்காக  நாயகி  ஒரு இடத்தில் பணி , நாயகன் வேறு ஒரு இடத்தில் பணி . வாரம்  ஒரு நாள்   தான்   அனைவரும் சேர்ந்து இருப்பார்கள் . இவர்களது மகன் வீட்டில் தனிமையில் தான் இருப்பான் . இது அவனுக்குப்பிடிக்கவில்லை 


 அவன் தன அப்பாவிடம் ஒரு ரோடு  ட்ரிப்  போகலாம் என அடம் பிடிக்கிறான் . அப்படிப்போகும்போது  நாயகனின்  ஸ்கூல்  மேட்   கம்  முன்னாள் க்ரஷ்  சை  எதிர்பாராத விதமாக சந்திக்கிறான் . அவர்கள் குடும்பத்தில்  எல்லோரும் நன்றாகப் பழகுகிறார்கள் . அடுத்து  மகனின்  ஸ்கூல்  மேட்   கம்  இன்னாள் க்ரஷ்  சை  திட் டம் இட்டு   சந்திக்கிறார்கள் .அவர்கள்   வீட்டில்  ஒரு நாள்   தங்குகிறார்கள் . இந்த இரண்டு நாட்களும் மகனும், அப்பாவும் அடிக்கும் லூட்டிகள் தான் கதை 


நாயகன்   ஆக  மிர்ச்சி சிவா  மாறுபட் ட  வேடம் .பொறுப்பான அப்பா  வழக்கமான காமெடி ஒன்  லைனர்கள்  என   நன்கு  நடித்திருக்கிறார்  


நாயகி   ஆக கேரளத்துப்பைங்கிளி கிரேஸ் ஆன்ட்டணி . செமயான ஹேர்ஸ்டைல் , கண்ணியமான ஆடை வடிவமைப்பு . அற்புதமான குணச்சித்திர நடிப்பு  என  கலக்குகிறார் .இவர் மலையாளத்தில் ஒரு காமெடி நடிகை 


நாயகனின்  ஸ்கூல் மேட்  ஆக  அங்காடித்தெரு  அஞ்சலி  செம க்யூட் . அஞ்சலியின்  கணவன் ஆக அஜு வர்கீஸ்   கச்சிதம் , நாயகனின் மகனாக மிதுள் ரியான் சுட்டித்தனமான நடிப்பு 


 நாயகனின் அப்பாவாக பாலாஜி சக்திவேல் கலகலப்பான நடிப்பு , நாயகனின் அம்மாவாக ஸ்ரீஜா ரவி ஓக்கே ரகம் 


டெக்ஸ்  டைல்  எக்ஸ்போ  வில்   நாயகியிடம் பணி யாளாக வேலை பார்க்கும் அந்தப்பெண் நடிப்பு அருமை 


சந்தோஷ் தயாநிதியின்  இசையில்  3 முழுப்பாடல்கலள் ம் அவை போக  குட்டி குட் டி பாடல்கள்  ஏகப்பட் டவை  . கொஞ்ச்ம ட்ரிம் பண்ணி இருக்கலாம்., ஓவர் டோஸ் . ஒளிப்பதிவு ஏகாம்பரம் .கனகச்சிதம் . திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர் ராம் . வி எஸ்   மதியின் எடிட்டிங்கில்  படம்  140 நிமிடங்கள்   ஓடுகின்றது 

சபாஷ்  டைரக்டர்


1   மாறுபட் ட  கதைக்களம் , சுவராஸ்யமான ரசிக்க வைக்கும் திரைக்கதை , நடித்தவர்கள் அனைவரின் நடிப்பும் 


2   ஸ்கூல் கிரஷ்  அஞ்சசலியின் போர்சன்   அருமை . வீடியோ காலில்  நாயகியும் , அஞ்சலியும் பேசிக்கொள்வது .  5வது  படிக்கும்போது  , அஞ்சலி கேட்டிருந்த  சூரியகாந்திப்பூவை நாயகன்  இப்போது  தருவது , அதை   அஞ்சலியின் கணவன் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்வது எல்லாம் கவிதையான காட்சிகள் 


3  நாயகி கடையில்   வைத்திருந்த கல்லாப்பெட்டி  காணாமல்  போவது , பணிப் பெண்  மேல்  சந்தேகப்படுவது , அதைத்தொடர்ந்து வரும் வசனங்கள், காட் சிகள் அருமை 


4  படத்தில்   வரும்   அனைத்துக்கேரக்டர்களையும்   பாஸிட்டிவ் மோடில்  இயக்குனர்  விக்ரமன்   பாணியில்   அமைத்தது அருமை  ( இது  நடைமுறையில்  சாத்தியம் இல்லை எனினும்  ரசிக்க வைக்கிறது ) 


5    நாயகனின்  மகனின்  க்ரஷ்  வீட்டில்  சிறுமியின்   அப்பாவுடன் போட்டி நடனம்  ஆடுவதும்  மகனிடம் மொக்கை வாங்குவதும்  நல்ல சீன்  


6  நாயகனின்   மகன்  மலையில்   , மரத்தில்      சுலபமாக ஏறி விடுபவன் எனக்கு இறங்கத்தெரியாதுப்பா என்பது  கலக்கல் காமெடி


  ரசித்த  வசனங்கள் 

1    எதுக்குடா   என் முகத்துல தண்ணீர்  அடிச்சு எழுப்புனே ?


நைட்  அப்பா என்னை அடிச்சீங்க , காலையில் மகன் உங்களை அடிக்கிறேன் , இது தான் சன் ரைஸ் 



2   சார் , உங்க பையன்  டீச்சர்  எடுக்கும் கிளாஸ்   போர்னு என் கிட்டேயே   சொல்றான் 


 அப்படியா சொன்னான் ? 


 என்ன ? கிண்டலா? 


3   டேய் . வாடா வந்து பல் தேய் 


 நான் உன்னை மாதிரி   இல்லைப்பா, எழுந்ததுமே  தேய்ச்சுட்டேன் 


4  என் வாழ்க்கைல நான்  இது மாதிரி  பார்த்தது இல்லை 


 அப்படியா? உன் வயசு என்ன?


 8 


5    சின்ன வயசுல இருந்து  இதுதான் உன் பிரச்சனை .நான் எது  சொன்னாலும் உனக்குப்புரிய மாட் டேங்குது 


சின்ன வயசுல இருந்து  இதுதான் உங்க  பிரச்சனை, எனக்குப்புரியற  மாதிரி  சொல்லமாடடேன்கிறீ ங்க 


6   சார்  , உங்க   பேர்   என்ன ?


எம்ப்பரர் 


 அம்ப்பயர்? 


7  நான்கு   சுவர் நடுவே படுத்திருப்பதை விட வெட்ட வெளியில் படுத்திருப்பது பாதுகாப்புதான் 


8 என் வாழ்க்கைல நான் பார்க்கும் முதல் சன் ரைஸ் இதுதான் 


 எனக்கும் தான் 


 உங்கப்பா   உன்னை  வெளில   கூட்டிப்போனதில்லையா? 


 இல்லை ,  நான் எங்கப்பாவை வெளில கூட்டிப்போனதில்லை


9 எங்கே  போறே? 


 வெளில போகும்போது எங்கே  போறே?   எனக்கேக்கக்கூடாது 


ஓக்கே  வேர் ஆர் யு  கோயிங்க் ?


 சாமி கும்பிட 


10 அப்பா  , நீ   மட்டும்   உன்  க்ரஷ்க்கு  சூரியகாந்திப்பூ  தரும்போது   நான் என்  க்ரஷ்க்கு  சூரியகாந்திப்பூ தரக்கூடாதா? 


11  என்னது ?ஸ்கேரி கேட்டா? அப்படின்னா? 


 பயஙதாங்கோ ளி 


12   யுவர் க்ரஸ்   வெரி   ஷாக் ? 


வெரி    க்யூட் 


13  கோகுல்  , கீழே   இறங்கி வாடா 


 புருஷனை  பேர்   சொல்லிக்கூப்பிடலாமா/ 


 டேய் ,கோகுல்  , கீழே   இறங்கி வாடா 


14   இந்த ரோடு   எங்கே   [போகுது ?


வீட்டுக்கு 


 யார் வீட்டுக்கு ?



 யாரோட வீடோ அவங்க வீட்டுக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   குழந்தைகளுடன்  பார்க்க வேண்டிய படம் தான் , ஆ னால்  அடம்  பிடித்துக்காரியம் சாதிக்கும் பையனின் கதை . இதைப்பார்த்தால்  அவர்களும்  அ டம் பிடிக்க  மாட் டார்களா? 


2  மகன்  மரத்தில்  ஏறுவது , மலையில் ஏறுவது  சில ரிப்பீட்கள்  தவிர்த்து இருக்கலாம் 


3  பாடல்கள்   ஓவரோ  ஓவர் , குறைத்து இருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குழந்தைகளுடன்  காண வேண்டிய  குதூகலமான பீல் குட் மூவி .காமெடிக்குக்காமெடி . விகடன்  மார்க் யுயுகம் 46 . ரேட்டிங்க்  3/5 



Tuesday, July 08, 2025

3BHK (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி மெலோ டிராமா )

             



  எட்டு  தோட்டாக்கள் (2017)  என்ற  பிரமாதமான  த்ரில்லர்  படம் இயக்கிய  அறிமுக  இயக்குனர் ஸ்ரீ கணேஷ்  அடுத்து  குருதி ஆட் டம் (2022) என்ற  சுமார்  ரகப் படம் தந்த பின்  இப்போது இந்த குடும்பப்பாங்கான  நல்ல படத்தைத்தந்திருக்கிறார் .பாலுமகேந்திராவின்  வீடு (1988) , சிவாஜி நடித்த   வாழ்க்கை (1984)  ஆகிய  படங்களின்  சாயலில்  வந்துள்ள  இந்தப் படம்  ரசிகர்கள் இடையே  நல்ல   வரவேற்பைப்பெற்று இருக்கிறது            


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி இருவரும்  தம்பதியர் . இவர்களுக்கு  ஒரு மகன் , ஒரு மகள்   உண்டு . வாடகை  வீட்டில் குடி இருக்கும் மிடில் கிளாஸ் பேமிலி .நாயகன்  ஒரு தனியார்  கம்பெனியில் கிளார்க் ஆகப்பணி புரிகிறார் .மகள்  ஸ்கூல்  பர்ஸ்ட்  மாணவி , ஆனால் மகன்   மக்கு மாணவன் 


வாடகை  வீட்டு  ஓனரின்  தொல்லைகளால்  ஒரு சொந்த வீடு  வாங்க நினைக்கிறார்கள் . சேமிக்கிறார்கள் . ஆனால்  வாரிசுகளின்  படிப்புச்செலவு , மரு த்துவ செலவு  என  தடைகள்   வந்த வண்ணம்  இருக்கின்றன .மகன், மகள்  இருவருக்கும்   நல்ல  இடத்தில்  சம்பந்தம்    அமையும்போது  திருமணம்   செய்து  வைக்கிறார்கள் . ஆனால் சொந்த  வீடு கனவு  கனவாகவே  இருக்கிறது . அது  நிறைவேறியதா?என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  சரத் குமார்   செமயான  நடிப்பு . நட் புக்காக ,ஐயா  ஆகிய  படங்களுக்குப்பின் மனதில் நிற்கும் குணச்சித்திர நடிப்பு . நாயகி ஆக   தேவயானி .இவருக்கு   நடிக்க   அதிக   வாய்ப்பு இல்லை . வந்த வரை ஓகே ரகம் 


 நாயகனின்   ,மகன் ஆக  சித்தார்த்  கலக்கி ருக்கிறார் .45  வயதான   இவர் 12 வது   படிக்கும்   மாணவன் ஆக  ஸ்மார்ட்   ஆக வரும் சீன்கள் செம .தமிழ்   சினிமா உலகிலேயே  இந்த மாதிரி   இளமை ததும்ப  நடிக்க   தனுஷ் , சிவகார்த்திகேயன்  ஆகிய  இருவரால் மட்டும் தான் முடியும் என்ற  நினைப்பைத்தகர்த்து இருக்கிறார் 


 நாயகனின்  மகள்  ஆக  மீதா   ரகுநாத்  சுட்டித்தனமான   நடிப்பால்  கவர்கிறார் .இவரது  கண்கள் ,உதடுகள் பிளஸ் , ஆனால்   பின் பாதியில்   இவர் நடிப்பு எடுபட வில்லை 


நாயகனின்   ஸ்கூல்  மேட் ஆக   வரும்  சைத்தா   இளமைத்துள்ளல் .


விவேக்   பிரசன்னா , யோகிபாபு   ஆகியோர்   கெஸ்ட்  ரோலில்  வருகிறார்கள் 

அர்விந்த்  சச்சிதானந்தம் எழுதிய  3BHK   வீடு  என்ற   சிறுகதையைத்தழுவி  கதை  எழுதி இருக்கிறார்கள் .இதே   சாயலில்  சில வருடங்களுக்கு முன்  கரூர்    எம் பி  ஜோதிமணி  ஒரு குறு நாவல் எழுதி  இருக்கிறார் 


அம்ரித்  ராம்நாத் இசையில்   சின்ன சின்னதாக 9 பாடல்கள் . 3 நன்றாக இருந்தன . பின்னணி   இசை   கச்சிதம் ஒளிப்பதிவு அருமை . தினேஷ்  பி கிருஷ்ணன் , சச்சிதானந்தம்  ஆகிய இருவரும் தான் ஒளிப்பதிவு கணேஷ்  சிவாவின் எடிட்டிங்கில்  இரண்டே கால் மணி  நேரம் படம் ஓடுகிறது . பின் பாதி ரொம்ப  நீளம் 

திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர் ஸ்ரீ கணேஷ் 

சபாஷ்  டைரக்டர்


1  படத்தில்  ஒரு  சீனில்  கூட   யாரும்  சரக்கு ,  தம்  அடிக்கவில்லை . கடந்த  16 வருடங்களில் இப்படி ஒரு படம் வரவில்லை . வெல்டன் 


2  நம்மை விட வசதியான  இடத்தில்  சம்பந்தம்   வைப் பது தவறு என்பதை அழுத்தமாகப்பதிவு செய்த விதம் 


3   சரத் குமாரின்   அனுபவம் மிக்க  அருமையான நடிப்பு , சித்தார்த்தின்    யூத்  கெட்டப் , மீதா   ரகுநாத் சைத்தா   ஆகிய     நால்வர்    பங்களிப்பும் அருமை 


4  ஆடை வடிவமைப்பு .,ஒப்பனை ,ஒளிப்பதிவு  , பின்னணி இசை  போன்றவை தரம் 


5  மிடில்  கிளாஸ்  பேமிலியின்  வாழ்க்கைத்தரம்  வெளிப்பட் ட விதம்  நன்கு கனெக் ட்   ஆகும் 


6   சித்தார்த்-சைத்தா   இருவரின்   ஜவுளிக்கடை  எதிர்பாராத  சந்திப்பு , அதைத்தொடர்ந்து  வரும்  வாக் சீன்   செம 


  ரசித்த  வசனங்கள் 


1   நம்ம கிட்டே  பணம்  இருக்கா? இல்லையா?  என்பதை  நம்ம அக்கவுண்ட்டைப் பார்க்கத்தேவை இல்லாம நம்ம பாடி லேங்க்வேஜ் பார்த்தே கண்டு பிடிச்சுடுவாங்க 


2  என்னால  முடிந்த வரை முயற்சி பன்றேன் ,  நான்  தோற்றால் என்ன? என் மகன் ஜெயிப்பான் 


3   எனக்கு நடந்தது , உனக்கு நடந்திட க்கூடாது , நீ நல்லாருக்கனும் 


4  வீடு  வாங்கியே  ஆகணும்கறது கோபத்தில் ; எடுத்த முடிவு அல்ல  ,  சொந்த வீடு என்பது மரியாதை 



5  உங்க ளிடம்  எஞ்ஜினியர்  டிகிரி இருக்கு , ஆனா நீங்க  எஞ்ஜினியர்   இல்லை 


6  கிடைச்ச  வேலைக்கே  போயிடறேன்னு சொல்லாத , வாழ்க்கை அப்படியே போயிடும் 


7 எந்தத்தோல்வியைப்பார்த்தும்  எங்க அப்பா ஓடியது கிடையாது ,அடுத்து என்ன ? என்பதைப்பார்க்கப்போயிடுவார் 


8 இந்த மாதிரி  ஆச்சரியங்களை  எல்லாம் எனக்குக்கொடுக்காதீங்க . அந்த ஆச்சரியம்  அதிர்ச்சியா இருக்கு 


9 காலம்  மாறிப்போச்சு , லோன் வாங்காம  வீடு  வாங்க  முடியாது 


10   சில விஷயங்கள்  கிடைக்கும்போது  அதை மிஸ்  பண்ணக்கூடாது 


11  சொந்தமா வீடு   வாங்கலைன்னா வாழ முடியாதா? என்ன? 


வீட்டு புரோக்கர் நான் எப்படி வாழற து ?


12    என்னப்பா?  மாத்திமாத்தி   தியாகம்   பண்றீங்க ? அப்படியே   சூரிய வம்சம்  படம் பார்த்த மாதிரி   இருக்குப்பா 


13  கோபப்படுவது தீர்வு   அல்ல 


14 இந்தியாவில்  இத்த்னை கோடிப்பேர்  இருக்காங்க . எவனைப்பார்த்தாலும் ஹார்டு ஒர்க் பண்றே ன் கறான் . ஆனா  ஹார்டு  ஒர்க்  பண்ணினா  மட்டும் முன்னே றிட  முடியாது .இது    கசக்கும்  உண்மை 


15   நீங்க   ஒரு  சராசரி   என்பதை ஒத்துக்குங்க , வாழ்க்கை ரொம்ப  ஈசியாப்போகும் 


16   கொஞ்சம்   அட்ஜஸ்   பண்ணிக்கோ , எதிர்காலம் நல்லாருக்கும் 


 அதை மட்டும் சொல்லாதீங்க , சின்ன வயசில் இருந்து இதைக்கே ட்டுட்டு இருக்கேன் , அந்த  ஒளிமயமான எதிர்காலம்  எப்போ வரும்னு தான் தெரியலை 


17   எதிர்காலம்  நல்லாருக்கும்னு நம்பிதான்  வாழ்ந்துட்டு இருக்கோம் , ஆனா நிகழ் காலத்தில் நாம் வாழ்வதே இல்லை 


18  ஐ டி   க்கு  எதிர்காலம்  இருக்கு , ஆனா ஐ டி  கை  எனக்கு தான் எதிர்காலம் இல்லை 


19 பணத்துக்கும், நிம்மதிக்கு எந்த கனேக்சனும் இல்லை 


20  உன் மனசு சொல்வதைக்ககேட்டு முடிவு  செய் 


 என் மனசு சொல்வதைக் கேட்டு நான் எடுத்த முதல் முடிவு   உன்  காதல் தான் 


21  சொந்த வீடு வாங்குனதும் இந்த ஊரையே ஜெயிச்சுட் ட மாதிரி இருக்குது  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரு ஐ டி  இளைஞன் பிரமோஷன்  கிடைக்கவில்லை எனில்   வேறு ஒரு ஐ டி   கம்பெனி க்குத்தான் போவான்.அவன்  மறுபடி .   லேபர்    வேலைக்குப்போவது சினிமாத்தனம் 


2 மீதா   ரகுநாத்  திருமண   வாழ்க்கை   சரியாக   அமையவில்லை   என்பது  வசனமாக மட்டும்  வருகிறது .விஷுவலாகக்காட்டி  இருக்க வேண்டும் 


3    பின் பாதி   திரைக் கதை    ரொம்பவே   இழுவை  , பல   சீன்களில் நாடகத்தனங்கள் 


4  நாயகன்   தன வாரிசுகளை  அரசுப்பள்ளியில் படிக்க வைத்திருக்கலாமே? 


5   பைவ்  ஸ் டார் பட பாடல் ஆன திரு   திருடா  பாட்டு தீம் இசை  சுடப்பட்டு  இருக்கிறது 


6  சித்தார்த்  பேங்க்கில்   ஹவுஸிங்க்  லோன்  அப்ரூவ்  ஆனதை  அப்பாவிடம்  சொல்லி விடுகிறார் . ஆனால்  அப்பாவுக்கு தெரியாது   என  அக்காவிடம்  சொல்லுகிறார் 


7 ஒரு   சீனில்  நாயகன்  இடது   கையால்   முறுக்கை  எடுத்து  சாப்பிடுகிறார் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன்   பார்க்க வைக்கும்  நல்ல படம் . பொறுமை தேவை . விகடன் மார்க் யூகம் 42. ரேட்டிங்க்  2.75 / 5 


3BHK
Theatrical release poster
Directed bySri Ganesh
Screenplay bySri Ganesh
Based on3BHK Veedu
by Aravindh Sachidanandam
Produced byArun Viswa
Starring
Cinematography
  • Dinesh B. Krishnan
  • Jithin Stanislaus
Edited byGanesh Siva
Music byAmrit Ramnath
Production
company
Shanthi Talkies
Release date
  • 4 July 2025
Running time
141 minutes[1]
CountryIndia
LanguageTamil