Sunday, February 09, 2025

THANARA (2024) - WHO ARE YOU - மலையாளம் - சினிமா விமர்சனம் ( கள்ளக்காதல் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

           

     கிரேசி மோகன் , எஸ்  வி சேகர்  போன்றவர்கள்  இயக்கிய நகைச்சுவை  நாடகங்கள்  பார்த்து  ரசித்தவர்கள் , காதலா காதலா,  நாம் இருவர் நமக்கு இருவர் , உதவிக்கு வரலாமா? போன்ற ஆள் மாறாட்டக்கதை உள்ள படங்களை  ரசித்தவர்கள் மட்டும்  இப்படத்தை ரசிக்க முடியும் . இதில்  பெரிய  கதை எல்லாம்  கிடையாது . ஒரே  ஒரு பங்களா . அதில் 3  செட் ஜோடிகள் .படம்  முழுக்க ஒரே லொக்கேஷன் .கண்ணியமான  நகைச்சுவை ,விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம் . நான்  இதை மிகவும் ரசித்தேன் .சிலர் இது எல்லாம்  ஒரு கதையா ? என அங்கலாய்த்தனர்          

23/8/24  அன்று   திரை அரங்குகளில்  வெளியான   இப்படம்  இப்போது அமேசான்  பிரைம்   ஓடி டி  யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  ஒரு மிடில் கிளாஸ்  திருடன் .மனைவி நிறை மாத கர்ப்பிணி .ஹாஸ்பிடல்  செலவுக்கு  சில லட்சங்கள்  பணம்  தேவைப்படுவதால்  அதைத்திருட  ஆளும்  கட்சி எம் எல் ஏ  வின்   கெஸ்ட்  ஹவுசில்  திருட முடிவு   செய்கிறான் . ஆபீசுக்குப் போகும்போது  சொல்லிட்டுப்போவது போல " நான்  திருடப்போய்ட்டு வர்றேன்"   என  சம்சாரத்திடம்   சொல்லிட்டுக்கிளம்புகிறான் .சம்சாரமும் பார்த்து பத்திரமா திருடிட்டு வாங்க என அனுப்புகிறாள் 


வில்லன் ஒரு எம் எல்  ஏ . ஜொள்  பார்ட்டி . 8  லட்ச ரூபாய்  சம்பளம் பேசி  ஒரே  ஒரு இரவு மட்டும்  ட்யூட்டி பார்க்க பிரபலமான  பாடகி  கம் டான்சர்  ஆன ஒரு பிரபலப்பெண்ணை   தன  கெஸ்ட்   ஹவுஸுக்கு அழைத்து   வருகிறான் 


திருட   வந்த   நாயகன்  டியூட்டியை முடித்து விட்டுக்கிளம்புகையில்  வில்லன்  அங்கே  வந்து  விடுகிறான் . நாயகன் மாட்டிக்கொள்கிறான் . அந்த சமயத்தில் காலிங்க் பெல் அடிக்கிறது . வில்லனின் மனைவி தான்  வந்திருக்கிறாள் . நிலைமையை சமாளிக்க வில்லன் நாயகனிடம்  நீ  இந்தப்பெண்ணின் கணவனாக நடி  என வேண்டிக்கேட்டுக்கொள்கிறான் 


வில்லனின்  மனைவிக்கு  இவர்கள் மீது சந்தேகம் . அவர்களைக்குறுக்கு  விசாரணை செய்கிறாள் . அந்த சமயத்தில்  வில்லனின் மனைவியின்  கள்ளக்காதலன்  போன்  செய்கிறான் .  கெஸ்ட்  ஹவுஸுக்கு    வருவதாக சொல்கிறான் .வில்லனின்  செட்டப்  கள்ளக்காதலியின் கணவன்  தான் வில்லனின் மனைவியின்  கள்ளக்காதலன்


இருக்கிற களேபரங்கள்  பத்தாது என   நாயகனின்  மனைவி   நாயகனைப்பார்க்க அங்கே  வருகிறாள் . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 

நாயகன் ஆக விஷ்ணு உன்னி கிருஷ்ணன்  கலக்கலாக நடித்திருக்கிறார் . இப்படி ஒரு அப்பாவியா? என வியக்க வைக்கிறார் . அவரது   உடல்மொழி , திருட்டு முழி எல்லாம்   ஆர் பாண்டிய ராஜனை நினைவுபடுத்துகிறது 


வில்லன் ஆக ஷைன் டாம் சாக்கோ பிரமாதம் .பேரு தான்  வில்லன் .பண்றது பூராக்காமெடி தான் .அவரது செட்டப்  கள்ளக்காதலி ஆக தீப்தி  சதி  கிளாமராக   வந்து  போகிறார் 


நாயகனின்   மனைவி ஆக , வில்லனின்  மனைவி ஆக ,  வரும்  சாந்தினி   ஸ்னேகா   பாபு   இருவருமே  பாத்திரத்தை உணர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள் . வில்லனின்  மனைவியின்  கள்ளக்காதலன் ஆக   வரும் அஜூ  வர்கீஸ்  போலீஸ்  ஆபீசர் ஆக  வந்தாலும்  காமெடியில்  பின்னி   விடடார் 


திரைக்கதை யை  ரபி  எழுத  ஹரிதாஸ் இயக்கி இருக்கிறார் .விஷ்ணு   நாராயணன் தான் ஒளிப்பதிவு . ஒரே பங்களாவில் தான் முழுப்படமும் என்பதால் சவாலான வேலை . சாஜனின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது .கோபி சுந்தரின்  இசையில்  ஒரு கிளப் டான்ஸ்  பாட்டு   ஹிட் . பி ஜிஎம்  ஓகே ரகம் 

சபாஷ்  டைரக்டர்


1  கோடிக்கணக்கில்  பீரோவில்   பணம்   இருக்க   நாயகன்  தனக்கு தேவையான  பணத்தை மட்டும்   எடுத்துக்கொள்வது .திருட   வந்த  பங்களாவில்  என்னென்னெ  இருக்கு என   மனைவிக்கு போன் போட்டு லைவ் ரிலே  சொல்வது செமக் காமெடி 


2   தன்  செட்டப்பின்  கணவன்  ஆக  நடிக்கச்சொல்லி   வில்லன் கேட்டுக்கொண்டதும்  இதுதான் சாக்கு என  நாயகன் அந்தப்பெண்ணைத்தொடுவது ,கிள்ளுவது என முன்னேற கண்டிக்கும்   வில்லனிடம்  அப்போதாங்க தத்ரூபமாக இருக்கும் என சமாளிப்பது 


3  ஆனந்த  விகடனில்  மதன்  ஜோக்சில்  வரும் சிரிப்புத்திருடன்  சிங்கார வேலு  போர்சனில்  இருந்து   உருவி  பொருத்தமாக    திரைக்கதையில்  புகுத்திய  விதம் 


4  கேட்பதற்கு  விரசமாக தோன்றும்  கதையில்  ஒரு  சீனில்  கூட முகம் சுளிக்க வைக்காமல் கண்ணியமான காமெடி தந்த விதம்


  ரசித்த  வசனங்கள் 


1 அங்க்கிளும் , ஆண்ட்டியும்   பிரெஞ்ச்  கிஸ்   தந்துட்டு இருக்காங்க 



 இந்த வாண்டுகளுக்கு  எப்படி  இதெல்லாம் தெரியுது ?


 ஸ்கூலில்   சொல்லித்தர்றாங்க 


 இதை எல்லாமா? சொல்லித்தரனும் ? 


2   இங்கே   நெட்   ஒர்க்  இ ல்லை


 ஐ ஜாலி , நீ  , நான் இருவர் மட்டும் தான் 


3  அத்தான் .நானும்   நீங்க திருட போன வீட்டுக்கு வரவா?  என்னென்ன  திருடலாம்னு செலக்ட்  பண்ண ? 


4  எனக்கு பயமா  இருக்குங்க 


ஒத்தையா  இருந்தாதான் பயபபடனும் , நாம ரெண்டு பேரும்     ஜோடியாதானே  இருக்கோம்?  என்ன பயம் ?


5  ரிஸ்க்   எடுக்க வேண்டாம் .புருஷன்  பக்கத்தில் தான் இருக்கான் 


 எனக்கு ரிஸ்க் எடுப்பது   ரொம்பப்பிடிக்கும் 


6  டியர் , நான்  அவ்ளோ  குண்டாவா  இருக்கேன் ? என்னைக்கட்டிப்பிடிக்க  உங்க 2 கைகளை அவ்ளோ  விசாலமா ஓப்பன் பண்ணிட்டு வர்றீங்க ? 


பரந்த மனசு, விசாலமான மனசு இருக்கறவங்க தான் குண்டா இருப்பாங்களாம் 


7   இது   வீடா?   லாட்ஜா?  அவன் பொண்டாட்டியை இவன் வெச்சிருக்கான், இவன் பொண்டாட்டியை அவன் வெச்சிருக்கான்


8  ஒன்னும்   பயபபடாதீங்க  , அவன் ஒன்னும் நம்மை மோசமான போஸில் பார்க்கலையே? 


9  இந்தா  சாக்லெட் 


 இதுக்கெல்லாம் நான் மயங்க மாடடேன் 


 இது மயக்க சாக்லேட் இல்லை , சாதா சாக்லேட்


10   பெண் என்பவள்   விற்பனைப்பொருள் அல்ல. வியாபார ரீதியில்   பெண்ணை   உபயோகிக்கக்கூடாது 


11  டேய் , எதுக்காக என் ஆளை க்கட்டிப்பிடிக்கறே?


 நீங்கதானே  நல்ல  தம்பதியா நடிங்கன்னீ ங்க ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பொதுவாக  திருமணம் ஆன பெண்கள்   அவரவர்   புருஷனை  வேலைக்காரனாக , எடுபுடியாக நடத்துவது சகஜம் தான் . ஆனால்  ஒரு எம் எல்  ஏ   வை   அவரது காதலி  அவ்ளோ  எடுபுடியாகவா  லக்கேஜ்   எல்லாம் தூக்க  வைப்பாள் ? 


2   ஒரு போலீஸ்  ஆபீசர்   தன கள்ளக்காதலியைப்பார்க்க   தனியாக செல்வாரா? கான்ஸடபிள்கள்  கூட செல்வாரா?   அவங்க  மேலிடத்தில் போட்டுக்கொடுக்க மாடடார்களா ?




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 கண்ட் டென்ட்  மேலோட்டமாகப்பார்க்கும்போது  ஒரு மார்க்கமாக இருந்தாலும் கவலையை மறந்து சிரிக்க  கேரண்டி  உள்ள  படம் .ரேட்டிங்  3 / 5 

Saturday, February 08, 2025

விடா முயற்சி(2025)- தமிழ்- சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்)

 


விடா முயற்சி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) 

ரொமாண்டிக் காமெடி  டிராமாவாக வெளிவந்த  முன் தினம்  பார்த்தேனே (2010)  தான்  இயக்குனர் மகிழ் திருமேனியின்  முதல் படம்  என்றாலும் அருண்  விஜய் நடிப்பில்  வெளிவந்த தடையறத்தாக்க (2012)  தான்  அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டிய  ஆக்சன் த்ரில்லர் .ஆர்யா  நடிப்பில்  வெளியான மீகாமன் (2014)  ஒரு மாறுபட் ட  ஆக்சன் த்ரில்லர்  என்றாலும்  மிகப்பெரிய  வெற்றி  பெறாத படம் . மீண்டும் அருண்  விஜய் நடிப்பில்  வெளிவந்த   தடம் (2019)   அருமையான  க்ரைம்  த்ரில்லர் ஆக  வந்தது .டூயல்  ரோலில்  வித்தியாயமான முயற்சி  அது   உதய நிதி நடிப்பில்  வெளிவந்த   கலகத்தலைவன் (2022)  ஒரு ஆக்சன்  த்ரில்லர் 


நல்ல  திறமை உள்ள  ஒரு இயக்குனர்  எதற்காக பழைய  ஹாலிவுட்  படமான  பிரேக் டவுன் (1997)  க்ரைம்  த்ரில்லர்  படத்தை  அபிஷியலாக  ரீமேக்க  வேண்டும் ? என்பது   தெரியவில்லை  ஒரிஜினல்  வெர்சன்  90 நிமிடங்கள்  இது 150  நிமிடங்கள் தமிழுக்குத்தக்கபடி  எக்ஸ்ட்ரா வாக  ஓர் மணிநேரம்  திரைக்கதையை  இழுத்து  இருக்கிறார்கள்  சுவராஸ்யமாக  இருந்ததா   என்பதைப்பார்ப்போம் 


வில்லி   சின்னவயசுல  இருந்தே  மன நலம் பாதிக்கப்பட் ட   சைக்கோ  அடுத்தவங்களைத்துன்பப்படுத்தி அதில் இன்பம் காண்பவர்  இவரைத்திருத்தவும் முடியாது , மாற்றவும் முடியாது , குணப்படுத்தவும் முடியாது  என டாகடர்கள்   கை விரித்து   விடுகின்றனர் . பெற்றோரும்  கண்டுக்கறதில்லை .இதனால்  மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்புக்காக ஏங்குகிறார் .அப்போது தான்  வில்லன்  அறிமுகம் ஆகிறான் .வில்லி  மீது  அன்பு வைக்கிறான்  . இருவரும்  மனமொத்த காதல் தம்பதியாக   வாழ்கின்றனர் 


நாயகன் , நாயகி  இருவரும்  12   வருடங்களுக்கு முன்  காதல் திருமணம்   செய்து  கொண்டவர்கள் . ஆனால்  இப்போது  நாயகிக்கு  நாயகன் மீது   இஷ்டம் இல்லை . பிரிய  முடிவு எடுக்கிறார் .பிரிவுக்கு முன்  தன பெற்றோர்  வீட்டுக்குபோய்  கொஞ்ச காலம்   ஓய்வெடுக்க   நினைக்கிறார் . நானே  உன்னை   டிராப் பண்றேன் . அது   நம் கடைசி   ரோடு  டிரிப் ஆக  இருக்கட்டும்  என்கிறார்   நாயகன் 


 பயணத்தின் போது   ஒற்றுமையுடன் இருக்கும்   வில்லன் - வில்லி , ஒற்றமை இல்லாத   நாயகன் - நாயகி  அறிமுகம் உண்டாகிறது . இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி  திரைக்கதை .


நாயகன்   ஆக அல்ட்டிமேட் ஸ்டார்   அஜித்   குமார்  கச்சிதமாக   நடித்திருக்கிறார் . ஒரு மாஸ்  ஹீரோ பில்டப்  இல்லாமல்  சாமானிய   நபராக   நடிக்க  ஒத்துக்கொள்வதே  அபூர்வம் .தன மனைவி மீது   அன்பு வைத்திருக்கும் நல்ல கணவனாக  பாந்தமான   நடிப்பு . வழியில்   மனைவி  மிஸ்  ஆனதும்   பரிதவிப்பது ,பின் ஆக்சனில்   இறங்கவதெல்லாம்  கனகச்சிதம் 


நாயகி ஆக   த்ரிஷா . அதிக  வாய்ப்பில்லை .இவரது கேரக்டர்   டிசைனில்  தெளிவில்லை .


வில்லி ஆக ரெஜினா  கசண்ட் ரா  மிரட்டலான  நடிப்பு  . ஆனால்   அவரது பிளாஷ்பேக்  ஓப்பன் ஆகும் இடம் சரி இல்லாததால் ரசிகர்கள் மனதில் பதியவில்லை . வில்லன் நெம்பர்  ஒன்  ஆக  அர்ஜுனும்  ஆரம்பத்தில்  அசத் தி   போகப்போக  டம்மி  ஆகி விடுகிறார் .. வில்லன் நெம்பர்  2  ஆக  பிக் பாஸ்  புகழ்  ஆரவ் , பரவாயில்லை ரக நடிப்பு 


 இசை   அனிரூத்  பிரமாதமான  பிஜி எம்  போட்டிருக்கிறார் . அஜித்  வரும் காட் சிகளெல்லாம்   பிஜிஎம்  தெறிக்கிறது . ஆனால்   பாடல்கள்  சுமார்   ரகம் தான் .3  பாடல்களுமே   சராசரி   தரம் தான் .ஓம் பிரகாஷின்  ஒளிப்பதிவு  ஹாலிவுட்  தரம் 


 


ஸ்ரீகாந்த்தின்  எடிட்டிங்கில்  படம்  150 நிமிடங்கள்   ஓடுகிறது .முதல்  பாதி  வேகம் . பின் பாதி  ஸ் லோ . இயக்கி  இருப்பவர்  மகிழ்  திருமேனி 


சபாஷ்  டைரக்டர் 


1   ஒரிஜினல்  ஹிந்தி   வெர்சன் ஆன   பிங்க்கில்  இல்லாத   மாஸ்  சீக்வன்ஸை  நேர் கொண்ட  பார்வையில்  சேர்த்த மாதிரியோ ,  லியோ வில்  நாயகன்  500 பேரை  அசால்ட்  ஆக  அடிப்பது போலவோ  இ ல்லாமல்   ரியலிஸ்ட்டிக்  ஹீரோவாகக்காட்டிய விதம்   அருமை 


2   வில்லி க்குக்கொடுத்த  முக்கியத்துவம் ,   வில்லியின் நடிப்பு 


3    லொக்கேஷன் , பிஜிஎம் 


4  அன்பில்லாத , பிரிய முடிவு எடுத்த   மனைவியின் மீது  ஒரு கணவன்  பரிபூரண   அன்பு  செலுத்த  முடியும்  எனக்காட்டிய   விதம் 


5      வில்லி   நாயகனிடம்  , நாயகியிடம்   மாற்றி   மாற்றி   ஆடும்   மைண்ட்  கேம்  உத்திகள் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  நாயகன்   மீது   எதனால்  கசப்பு  கொள்கிறார் ?  என்பது விளக்கமாக சொல்லப்படவில்லை .இந்தக்கதைக்கு அது ரொம்ப முக்கியம் 


2  நாயகி   காணாமல்   போனதும்  நாயகனுக்கு ஏற்படும்  பரிதவி ப்பு   ஆடியன்ஸுக்கு  ஏற்படவில்லை 


3  வில்லன் அர்ஜுன்   சொல்வதை எல்லாம்  போலீஸ்  கேட்பது    அபத்தம் 


4  வில்லன்  ஆரவ்  நாயகனை   சுட   வாய்ப்ப்பிருந்தும்  சுடாமல்   அருகில் இருக்கும் போலீஸ் ஆபீசரை சுடுவது 


5  நாயகியின்  புதுக்காதலன்   யார்  என்பதில்   ஒரு டிவிஸ்ட்   வைத்திருக்கலாம்   .அது மிஸ்சிங் 


ரசித்த   வசனங்கள் 


1   அவர்   என்னைப்பார்க்கும்போது   அவர்  ஆயுசுக்கும்   என்னை மறக்கக் கூடாது 


ஏழு   ஜென்மத் து க்கும் மறக்க   மாட் டார் . போதுமா? 


2   உங்களுக்கு   மேரேஜ்  ஆகிடுச்சா  ? 


ஆகி   இருக்கும்  , உங்களை   மாதிரி    ஒரு பெண் கிடைச்சிருந்தா 


3  நாம எல்லோருமே  மாறிக்கிட் டே  இருக்கோம் . இப்போ  நேசமா   இருக்கும்   இந்த   ஜோடி  இன்னும் 15 வருடங்கள்  கழித்து    இதே   போல்   இருப்பாங்களா?னு சொல்ல முடியாது 


4  ஆரோக்கியமா  , சந்தோஷமா  , மன நிம்மதியுடன்  வாழ  கத்துக்குங்க 


5  எந்த  ஆணாலும்  தாங்கிக்கொள்ள முடியாத வலி அவன்   மனைவி  இன்னொரு  காதல்  வைத்திருப்பது . அது அவன் மனதை அப்படியே குத்திக்காயப்படுத்திடும் 


6  காயம்  பட்ட   ஆம்பளை  எந்த எக்ஸ்ட்ரீம் க்கும் போவான் 


அடல்ட்   கண்ட் டென்ட்   வார்னிங்  - U/A 


சிபிஎஸ்  பைனல்   கமெண்ட் - மங்காத்தா , பில்லா   லெவலுக்கு இல்லை .ஆனால்  ஏ சென் ட் டர்   ஆடியன்ஸைக்கவரக்கூடிய  ஒரு  ஆக்சன்  த்ரில்லர் தான் .விகடன் மார்க்   யூகம் -42 . குமுதம்  ரேங்க்கிங்க் - ஓகே .மை   ரேட்டிங்  2.75 /5

Tuesday, February 04, 2025

EMILIA PEREZ(2024)-ஆங்கிலம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)@ அமேசான் பிரைம்


 EMILIA PEREZ (2024) - லத்தீன் அமெரிக்கன் ஸ்பானிஷ் மூவி - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( மியூசிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் , நெட் ஃபிளிக்ஸ் 


பல  திரைப்பட விழாக்களில் கலந்து  கொண்டு  பல விருதுகளைப்பெற்ற படம் இது .புதிய  முகம் (1993) , FACE OFF(1997)  இரு முகன் (2016) , அவ்வை சண்முகி (1996) , MRS  DOUBTFIRE (1993)  ஆகிய  படங்களீன்  டி வி டி யை பட்டி டிங்கரிங்க் மன்னன் அட்லீயிடம் கொடுத்து ஒரு படம் ரெடி பண்ணுங்க  என்றால் அவர் எப்படி ஒரு உல்டா படம் எடுப்பாரோ அப்படி ஒரு படமாக இது வந்திருக்கிறது . இப்படி பல படங்களின் கலவையான ஒரு கதைக்கு எப்படி உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்று வியப்பாகவும் இருக்கிறது .


 க்ரைம்  டிராமாவான இப்படம் பருவ ராகம் (1987)  படம், போல  மியூசிக்கல் டிராமாவாக அந்த வடிவத்தில் எடுத்திருப்பது இன்னொரு வியப்பு . ஒவ்வொரு சிச்சுவேஷனும்  பாடல் , டான்சால்  டெக்ரேட் செய்யப்பட்டிருப்பது  ஒரு புதுமையான அம்சம் தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


 விதி (1984) படத்தில் வரும்  டைகர் தயானிதி போல நாயகி ஒரு கிரிமினல் லாயர் . ஓப்பனிங்க் சீனிலேயே  ஒரு கேசில்  அவள் ஜெயிக்கிறாள் . சொந்த சம்சாரத்தைப்போட்டுத்தள்ளி விட்டு அது தற்கொலை என டிராமா ஆடும் புருசனின் கேஸ் அது . பணத்துக்காக தன் மனசாட்சியைக்கழட்டி ஓரம் வைத்து விட்டு அந்தக்கேசை  நடத்தி  அவனுக்கு சாதகமாக முடித்துக்கொடுக்கிறாள் நாயகி 


 மெயின்  கதைக்கும் மேலே சொன்ன   கிளைக்கதைக்கும்  சம்பந்தம் இல்லை . 


வில்லன் ஒரு பெரிய தாதா . அவன் நாயகியைக் கடத்தி வந்து ஒரு டீல் பேசுகிறான் . வில்லனுக்கு இந்த பரப்ரப்பு வாழ்க்கை  போர் அடித்து விட்டது . பொம்மலாட்டம், திட்டம் 2 ,  டாமினிக் அண்ட்  த லேடீஸ்  பர்ஸ் ஆகிய படங்களில் வரும்  நாயகி போல  பெண்  ஆக  மாற  ஆசைப்படுகிறான்  .  அவனுக்குப் பல எதிரிகள் இருப்பதால்  அவனைக்கொல்லத்துடிக்கிறார்கள் . அவர்களிடமிருந்தும் தப்ப வேண்டும் 


 அதனால் வில்லன் இறந்ததாக ஒரு டிராமா  போட்டு விட்டு  பெண்  ஆக மாறி புதிய வாழ்க்கை தொடங்க நாயகி உதவ வேண்டும்  என  உதவி கோருகிறான் . இதற்கு சம்பளமாக  பெரிய தொகை பேசப்படுகிறது 


 வில்லனுக்கு   ஒரு மனைவி , இரு குழந்தைகள்  உண்டு . வில்லன் இறந்ததாக டிராமா  ஆடி விட்டு  வில்லன் பெண்  ஆக  மாறி   தன் மனைவியிடமே  வந்து  நான்  உன் கணவனின்  சகோதரி  என்னுடனே    நீ இருக்கலாம்  என்கிறான். குழந்தைகள்  வில்லனை  ஆண்ட்டி ஆண்ட்டி  என சுற்றிச்சுற்றி வருகின்றன . அவ்வை  சண்முகி  படத்தில்  வருவது  போல   அப்பா - மகன்  செண்ட்டிமெண்ட்    சீன்கள்  அரங்கேறுகிறது 


 வில்லனின்  மனைவி  வேறு ஒருவனைக்கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள் . ஆனால் வில்லனுக்கு  இது பிடிக்கவில்லை 


 இதற்குப்பின்   நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி திரைக்கதை .


   நாயகி  ஆக  ஜோ  சல்தானா  பிரமாதமாக நடித்திருக்கிறார். நடனம் , பாடல்  என  அவர்  உடல் மொழியில் இளமைத்துடிப்பு 


வில்லன்  பெண்  ஆக  உருமாறிய பின்  வரும்  பெண்  கேரக்டரில்  கர்லா  சோஃபியா கஸ்கன் நடித்திருக்கிறார். இவர்  நிஜமாகவே  ஆண் ஆக இருந்து பெண்  ஆக  மாறியவர் . அதே  போல்  சிறந்த  நடிகைக்கான  விருது பெறும்  முதல்  திருனங்கையும் இவ்ர் தான் 


 வில்லனின்  மனைவி ஆக செலீனா  கோமீஸ்  அழகான பொம்மை பொல் வந்து போகிறார் 


 வில்லன்  பெண்  ஆக  மாறிய  பின்   அவரது  லவ்வர் ஆக வரும் பெண் ஆக   அட்ரியனா  பஸ்  சிறப்பாக நடித்திருக்கிறார் 


2018ல் எழுதபப்ட்ட  ஒரு  நாவலில் இருந்து  திரைககதை எழுதி இயக்கியவர்   ஜாக்கிஸ்  ஆடியண்ட் 


132  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது


சபாஷ் டைரக்டர்


1 பெண் ஆக மாறிய பின் வில்லன். தன் மனைவியிடம் உன் கணவனுக்கு நீ துரோகம் செய்தது உண்டா? என போட்டு வாங்கும் காட்சி ஆண்களின் சந்தேக புத்தியைப்பறை சாற்றும் சீன்


2. நாயகி நடனம் ஆடிக்கொண்டே பிரச்சனைகளை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த விதம்


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 வில்லனின் குழந்தைகள் இருவரும். பெண் ஆக மாறிய பின் அப்பாவின் வாசம் ஆண்ட்டியிடம் இருக்கு என உணர்கின்றனர்.ஆனால் வில்லனின் மனைவிக்கு இது தன் கணவன் தான் எனத்தெரியாதது ஏனோ?


2 வில்லன் பெண் ஆக மாறிய பின் இன்னொரு பெண்ணைக்காதலியாக ஏற்பது எப்படி?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+


சி பி எஸ் பைனல் கமெண்ட் - மாறுபட்ட  பழைய படங்களின் தொகுப்பைக்காண விரும்புபவர் பார்க்கலாம். .ரேட்டிங். 2.25 /5

Monday, February 03, 2025

THE STORYTELLER(2022)-ஹிந்தி -சினிமா விமர்சனம் (மெலோ டிராமா)@டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டார்

 


THE  STORYTELLER  ( 2022 ) - ஹிந்தி - சினிமா  விம்ர்சனம் ( மெலோ  டிராமா ) @ டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார் 

சத்யஜித்ரே  எழுதிய “GOLPO BOLO  TARINI KHUNO  என்னும் சிறுகதையைத்தழுவி எடுக்கப்பட்ட   படம்  இது . கி ராஜநாராயணன் , பவா செல்லத்துரை , , எஸ் ராமகிருஷ்ணன் , சீமான்  போன்ற சிறந்த  கதை சொல்லியான ஒருவரைப்பற்றிய கதை இது . ஆக்சன் மசாலாப்பிரியர்கள் , தெலுங்கு  கமர்ஷியல்  பிலிம் ரசிகர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும் . பெண்கள் , மற்றும் பொறுமைசாலிகள் பார்க்கலாம். இது ஒரு  எ செண்ட்டர் +  பால்கனி ஆடியன்சுக்கான படம்  இது  தமிழ் டப்பிங்க்கில் இல்லை . டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார்  ல   ஹிந்தியில் ஆங்கில சப் டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர் அலெர்ட்


வில்லன்  ஒரு  கோடீஸ்வரன் கம் தொழில் அதிபர் .படுக்கை விரிப்புகள் , பெட்ஷீட் உட்பட பல துணி வியாபரம் பெரிய அளவில் செய்து வருபவர் .60 வயது நிரம்பியவர் . இவர் இளைஞனாக இருந்தபோது  சரஸ்வதி என்ற  பெண்ணை ஒருதலையாகக்காதலித்தார் . ஆனால் அது கை கூடவில்லை .அவள் நினைவாக திருமணமே செய்யாமல் இருந்தவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி . தன்  முன்னாள் காதலியான சரஸ்வதியை  பல வருடங்கள் கழித்து சந்திக்கிறார் . ஒரு விபத்தில் தன் கணவனைப்பறி கொடுத்த அவள் இப்பொது தனியாகத்தான் இருக்கிறாள் , குழந்தை இல்லை . ஆனால்  மெயின்   கதை  வில்லன் + வில்லனின் காதலியைப்பற்றியது அல்ல 


 நாயகன்  ஒரு கதை சொல்லி . பெங்காலியான அவர்  பேப்பரில் ஒரு விளம்பரம்  பார்க்கிறார் . அஹமதாபாத்தில்  ஒரு கோடீஸ்வரன் வீட்டில் கதை சொல்லி தேவை என்பதைப்படித்து அவர் அங்கே கிளம்புகிறார் . அந்தக்கோடீஸ்வரர்  ஸ்கூல் நடத்துகிறார் . அந்த ஸ்கூல் மாணவர்களுக்குக்கதை சொல்லத்தான் ஒரு ஆள் தேவை போல என நினைக்கிறார் .


  ஆனால்  நிஜமோ  வேறு . வில்லனான அந்தக்கோடீஸ்வரனுக்கு இரவில்  தூக்கம் வருவதில்லை . அவரைத்தூங்க வைக்கத்தான்  நாயகன் வரவைக்கப்பட்டு இருக்கிறார் . அதாவது   தினசரி   இரவில் வில்லனுக்கு  நாயகன் கதை சொல்லித்தூங்க வைக்க வேண்டும். அதற்கு நயகனுக்கு சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்  


 வில்லனுக்குக்கதை சொல்ல நாயகன் அங்கே  இருக்கும் லைப்ரரிக்குப்போய்  பிரபல எழுத்தாளர்களின்  புத்தகங்களை   எடுத்து   வந்து  ரெப்ரன்சுக்கு  வைத்துக்கொள்கிறார் . அந்த   லைப்ரரியில்  இன்சார்ஜ்  ஆக இருக்குன்  பெண்  நாயகனுக்கு அறிமுகம் ஆகிறார் . அவர்  மூலம் வில்லனைப்பற்றிய திடுக்கிடும் உண்மை தெரிய  வருகிறது . தூக்கம்  வர்லை . கதை சொல்லனும் என்பதெல்லாம் டுபாக்கூர்  வேலை . வில்லனின் உண்மையான  நோக்கம்  என்ன? இதற்குப்பின்   நிகழ்ந்தது  என்ன?  என்பது மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  பரேஷ்  ராவல்  அமைதியான  அண்டர்ப்ளே  ஆக்டிங் . வில்லனுடனான  உரையாடல்கள் , லைப்ரரியன் யஉடனான  விவாதங்கள் , பூனையுடன்  கொஞ்சுவது  என  கவனிக்க  வைக்கும் நடிப்பு 


வில்லன்  ஆக   அதில்  ஹுசைன்  பிரமாதப்படுத்தி இருக்கிறார் . கொடூரமான  பாவனைகள் இல்லை . சண்டை  போடவில்லை . ஆனால் மிரட்டலான நடிப்பு .


  வில்லனின்  காதலி ஆக ரேவதி  கெஸ்ட்   ரோலில் வருகிறார் . இளமையாக  இருந்தபோது கண்ணியமாக கவர் பண்ணி நடித்தவர் இதில்  ஸ்லீவ்லெஸ்சில் வருவது ஆச்சர்யம் 


  நாயகனின்  தோழி   ஆக  லைப்ரரியன்  ஆக தனிஷ்ஷா  சாட்டர்ஜி  இளமைத்துடிப்புடன்  நடித்திருக்கிறார் 


  நாயகன் , வில்லன் ,  வில்லனின்  காதலி ,  நாயகனின்  தோழி  என  நான்கே நான்கு  முக்கியக்கேரக்டர்களைக்கொண்டு   சுவராஸ்யமான  திரைக்கதை  அமைத்திருக்கிறார்   கிரீத்  குரானா .இயக்கி இருப்பவர்   ஆனந்த் நாராயணன்  மகாதேவன் 


 அல்பொன்சி  ராயின் ஒளிப்பதிவு அபாரம் . பல இடங்களில் கேமரா கோணங்கள் லாங்க் ஷாட் ஸ்  கண்களைக்கவர்கிறது . கவுரவ்  கோபால்  எடிட்டிங்கில்  படம் 112  நிமிடங்கள்  ஓடுகிறது . ஹிர்ஜு  ராயின் இசையில் இரு பாடல்கள் சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை 


சபாஷ்  டைரக்டர் 


1  முதல்  30  நிமிட திரைக்கதை  மிக மெதுவாக நகர்ந்தாலும்  வில்லனைப்பற்றிய   ஒரு  ட்விஸ்ட்  வெளிப்பட்டதும்  விறு விறுப்பாக கதை நகர்கிறது 


2  நாயகன் + நாயகனின் தோழி  , வில்லன் + வில்லனின் காதலி   என  இரு வெவ்வேறு  காதல்  கதைகள் தான் படம் என இயக்குனர்  நம்மை திசை  திருப்பி  வேறு கதையை வழங்கியது அருமை 


3    பூனை  மீனைக்கடிக்கும்  சத்தத்தைக்காட்டி  கட் பண்ணி  அடுத்த  ஷாட்டில்  ஆடியன்சின்  கிளாப்ஸ்  சவுண்டை  அதனுடன்  மேட்ச்  செய்த  விதம்  அபாரம் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1   கோஸ்ட் ரைட்டர் வைத்துக்கொண்டு  கதை எழுதுவது  பலரும்  செய்வதுதான் . இப்போது  கூட பல  இளம்  எழுத்தாளர்கள்  தங்கள்  சம்சாரம்  பெயரில்   கதை  எழுதுவது , பக்கத்து வீட்டு ஆண்ட்டி பெயரில் கதை எழுதுவது நடப்பதுதான் . அது ஒரு பெரிய  குற்றம் இல்லை 


2   பல  எழுத்தாளர்களின்  புத்தகங்கள்  படித்த  வாசிப்பு அனுபவம்  உள்ள  வில்லன்  நாயகன் கூறும் கதைகள் எல்லாம் லைப்ரரியில்  தாகூரின்  புக்சை  எடுத்து  வந்து பட்டி டிங்கரிங்  பண்ணிக்கதை  சொல்கிறார்  என்பதைக்கண்டறியாமல்  ஏமாறுவது  நம்ப முடியவில்லை 


3     வில்லனின்  காதலி  இப்பொது  தனிமையில்  இருக்கிறார்.  வில்லன்  கோடீஸ்வரன் . செல்வம் இருக்கு ,  புகழ்  இருக்கு . ஆனால்  அவரை  ஏற்றுக்கொள்ளாமல்  தவிர்ப்பது  நம்பும்படி இல்லை . 


 ரசித்த  வசனங்கள் 


1  ரைட்டர்சுக்கு  இன்னும்  டிமாண்ட்  இருக்கு 


2   ஸ்க்ரிப்ட்  ரைட்டர்ஸ்  தேவை  விளம்பரம்  இன்னமும் பல பேப்பர்களில் வந்துட்டே  தான் இருக்கு


3   கொஞ்சம்  தள்ளி நில்லுங்க   , கூட்டணும் 


 இது என்  வீடு , நான்   எங்கே  வேணாலும்  நிப்பேன் 


 அப்பொ  நான்  வீட்டுக்குப்போய்ட்டு நாளை  வேலைக்கு வர்றேன் 


4   நாயே  இங்கே  இல்லை . எதுக்கு  நாய்கள்  ஜாக்கிரதை  போர்டு ?


 உங்களை  மாதிரி  ஆட்களை  விரட்டத்தான் 


    நீயே  ஒரு  நாய்  மாதிரி  தான்  இருக்கே


5   இத்தனை  புத்தகங்கள்  என்  செல்பில்   இருந்தாலும்  படிக்க  நேரம்  இல்லை . சும்மா  வாங்கி   வெச்சி

ருக்கேன் 


6    என் கிட்டே  இல்லாத  செல்வமே  இல்லை . தூக்கத்தைத்தவிர 


7  இறப்பதைத்தள்ளிப்போட நல்ல தூக்கம் தேவை 


8    பெங்காலிகள்  வீட்டில்  ஒவ்வொரு  வீட்டிலும் ஒரு ரைட்டர்  இருப்பார்   போலயே ?


9   உன்  கதையைக்கேட்டால்  கும்பகர்ணனுக்குக்கூடத்தூக்கம் வராது 


10    அவருடைய   கதைகளில் என் காதலைக்காண்கிறென்


11    உங்க  கணவர்  இங்கே  ஒர்க் பண்றாரா? 


 நான் சிங்கிளா? என்பதைப்பூடகமா கேட்கறீங்க போல 


  ச்சே  ச்சே  உங்க  மோதிர விரலில்   கல்யாண  மோதிரம்  இருப்பதைப்பார்த்துக்கேட்டேன் 


12    இந்த   உலகம்  யோசித்துக்கொண்டு  இருப்பவர்களுக்கானது அல்ல . ஆக்சனில்  இறங்குபவர்களூக்கு 


13     இந்த   உலகம்  சந்தோஷமாக இருப்பவர்களுக்கானது 


14    நானும்  , பாண்டும்.... 


 ஜேம்ஸ்பாண்டா?


 ச்சே  ச்சே  ருக்சின்  பாண்ட் 


15    தாகூர் , சரத் சந்திரர் , தேவதாஸ்   இவங்க  எல்லாருமே  பெங்காலி ரைட்டர்ஸ்  தான் , பெங்காளிகள் பல நல்ல ரைட்டர்கள் 


12       அவனோட  ஜாப்பே  செக்யூரிட்டி ஜாப் தான் . அதுல ஜாப் செக்யூரிட்டி இருக்கா?ன்னு கேட்டா  எப்படி ? 


13    ஆங்கிலேயர்கள்  இந்தியாவுக்கு  நல்லதும்  செயுது  இருக்காங்க  போல 


 நாட்டைக்கொள்ளை  தான்  அடிச்சிருக்காங்க 


14  ஒரு  நல்ல கதைக்கு அடையாளம்  அதன் க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட் இருக்கனும் 


15  சரஸ்வதிக்கும் , லட்சுமிக்கும் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை 


அடல்ட் கண்ட்டெண்ட்  வார்னிங் - யு


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   பொறுமைசாலிகள் , பெண்கள்  என  அனைவரும்  பார்க்கலாம் . ரேட்டிங்  3/ 5

Saturday, February 01, 2025

குடும்பஸ்தன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

                     


       குடும்பஸ்தன் (2025) - தமிழ்  - சினிமா விமர்சனம் ( காமெடி  டிராமா ) 


தமிழ் சினிமாவில்  விசு  , வி சேகர்  காலத்துக்குப்பின் குடும்பப் படம் இயக்க ஆட்களே இல்லையோ என ஏங்கி இருந்த வேளையில்  அறிமுக  இயக்குனர் ராஜேஷ்வர்  காளி சாமி நம்பிக்கை நட்சத்திரமாக வந்திருக்கிறார் . ரஜினி ,கமல், அஜித் , விஜய்  உட்பட  அனைத்து  முன்னணி  நாயகர்களும்  ஆக்சன் மசாலா பக்கம்  இருப்பதால்  காமெடிப்படங்கள் , குடும்பப்படங்கள் வருவது அரிதாகி விட்ட்து 


பீட்ஸா 2 வில்லா படத்தில்  உதவி இயக்குனராக  அறிமுகம் ஆன கே மணிகண்டன் இந்தியா  பாகிஸ்தான் (2015)  இல்  ஆரம்பித்து சில நேரங்களில்  சில மனிதர்கள்  (2022)  வரை  12  படங்களில்  பல ரோல்களில் நடித்தாலும்  நாயகன் ஆக நடித்த  குட்  நைட் (2023) , லவ்வர் (2024 )  ஆகிய  இரு படங்களும்  செம  ஹிட் . 3 வதாக  ஹாட் ரிக்  வெற்றியைத்தொட்டு விட் டார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு மிடில்  கிளாஸ்  மாதவன் .காதலித்துக்கல்யாணம் செய்து கொண்ட மனைவி , அம்மா , அப்பா  என  கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார் . மனைவி  ஐ ஏ எஸ்  எக்ஸாம்க்குப்படிக்கிறார் . .அந்த செலவு இருக்கு அப்பாவுக்கு வீட் டைப்புதுப்பிக்க வேண்டும்,  அம்மா வுக்கு ஆன்மீக  டூர்  போக வேண்டும் .கல்யாணம் கட்டிக்கொடுத்த   அக்காவின் குழந்தைக்கு  சீர் செய்ய வேண்டும் . இப்படி ஏகப்பட் ட   கமிட்மெண்ட்ஸ்  இருக்கும் நாயகனுக்கு திடீர்  என ஆபீசில்  வேலை  போய் விடுகிறது .  வீட்டில்   சொல்லாமல் அதை மறைக்கிறான் . சம்பளம்  தரணுமே?  கடன்  வாங்கி சமாளிக்கிறான் . இருக்கிற  பிரச்சனைகள் போதாது என வில்லனாக அக்காவின் கணவர் .இவற்றை  எல்லாம் எப்படி   நாயகன்  சமாளிக்கிறார்  என்பது  சிரிக்க சிரிக்க   சொல்லி இருக்கிறார்  இயக்குனர் 

நாயகன்   ஆக  மணிகண்டன்   அபாரமாக  நடித்திருக்கிறார் . மிடில் கிளாஸ்  ஆளின்  பிரச்சனைகளை  யதார்த்தமாகப்பிரதிபலிக்கிறார்  . மனைவி  ஆக  புதுமுகம் சானவே  மோகனா புதுமுகம்  என்றே  சொல்லமுடியாதபடி  செமையாக நடித்திருக்கிறார் . நாயகன் அம்மாவாக குடச்சநாடு  கனகம் , , அப்பா  ஆக ஆர் சுந்தரராஜ ன்   ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் .வில்லனாக அக்காவின் கணவர்  ஆக  குரு  சோமசுந்தரத்தின் நடிப்பு  மிரட் டல்  ரகம் . கலக்கி இருக்கிறார் .இவர்கள்  போக  நாயகன் நண்பர்கள் ஆக நக்கலைட்ஸ்  பிரசன்னா  பாலச்சந்திரன் , ஜென்சன் , திவாகர்  கூட் டணி   ரகளையான  நடிப்பை  வழங்கி இருக்கிறார்கள் 


 வைஸாக்கின் இசையில்   இரு பாடல்கள்   சுமார் ரகம்  தான் , பின்னணி   இசை பரவாயில்லை . கண்ணா  பாலுவின்  எடிட்டிங்கில்  படம்  155  நிமிடங்கள்   ஓடுகிறது . ஒரு சீன்  கூடபோரடிக்கவில்லை . சுஜித்  சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு அருமை 

காமடியனாக  நடித்த  நக்கலைட்ஸ்  பிரசன்னா  பாலச்சந்திரன் தான் வசனம் , திரைக்கதை  உதவி எல்லாமே ., அறிமுக  இயக்குனர் ராஜேஷ்வர்  காளி சாமி   திரைக்கதை அமைத்து   இயக்கி இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1    சத்யா  படத்தில் கமலுக்கு  வில்லனாக வந்த கிட்டியைப்போல சிரித்து சிரித்தே  கடுப்பு ஏற்றும்  வில்லனாக குரு  சோமசுந்தரத்தின் கேரக்டர்   டிசைன் , நடிப்பு அருமை 


2            படத்தில்  நடிப்பவர்கள்      டென்ஷன்  ஆக   இருக்கிறார்கள் , ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு சிரிப்பு வருகிறது   இந்த மாதிரி காமெடி டிராக் அமைப்பது   சிரமம் , இயக்குனர்  அசால்ட்  ஆக அதை செய்திருக்கிறார் 


3  படம்   முழுக்க  கொங்கு  மண்டல வட்டார   வழக்கு  பாஷை களை  கட்டுகிறது . அதைப்பேசும்  ஆட்கள்  இயல்பான  ஆட்களாக கண்  முன் நடமாடுவது அருமை 


4   யார்ரா  நீ?  வேற   யாராவது  இருந்திருந்தா வெலவெலத்துப்போயிருப்பான் , நீ அசத்தறே . எல்லாப்பிரச்சனைகளையும்  சால்வ் பண்றே . என   நாயகன் தன்னைத்தானே  பாராட்டிக்கொள்ளும்  சீன்   கலக்கல் 

5   ஆபீசில்  மேனேஜர் ஆக   நாயகனின் நண்பன் நடிக்க , வில்லன் அங்கே  வர , அத பின்  நடக்கும் காமெடி  கலாட்டாக்கள்  அபாரம் 


6   நாயகன் சந்திக்கும் எல்லாப்பிரச்சனைகளும்  படம் பார்க்கும் அனைவருமே தங்கள்  வாழ்க்கையுடன்  கனெக்ட்  பண்ணிக்கொள்ள  முடிவது   பெரிய  பிளஸ்  

7   ஆர் சுந்தர்ராஜன் - கனகம்  செகண்ட் மேரேஜ்  பழைய பாட்டுக்காமெடிக்கு  தியே ட் டரில் ஆரவாரமான கை  தட் டல் 

  ரசித்த  வசனங்கள் 


1  சாதி  மாறிக்கல்யாணம் பண்ணி  வைப்பது  என்பது  வீதில  போற  ஆசாரியை  வீட்டுக்குக்குக்  கூப்பிட்டு   ஆப்பு வெச்சுக்கற மாதிரி 


2  மேடம்  இங்கே  கட்டிப்பிடிச்சுக்கலாமா? 


பொதுவா  யாரும்  இந்த மாதிரி  கேட்ட்தில்லை .....


3   வீட்டுக்கு வந்து உன்னை விசேசத்துக்குக் கூப்பிடலை என்பது உன் பிரச்சனை , ஆனா என்னைக் 

கூப்பிடவே  இல்லை 


4  டியர் ,  யூ லுக்  காஷியஸ் 


 ஐயோ  ராமா , அது கார்ஜியஸ் 


5  ஏம்ப்பா , சர்வர் ..எஸ் .. சி  அப்டினு போட்டிருக்கே ? அப்படின்னா? 


சிவனாண்டி  கேட்டரிங்க் 


ஓ . நான் கூட வெளிப்படையாவே போட்டுட் டீங்களோ? என நினைச்சேன் 


6   மருதமலைக்குப் போகச்சொன்னா இமயமலை போக பிளான் போட்டுட்டு இருக்கே 

7    உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் 


 இப்போ எதுக்கு சம்பந்தம்  இல்லாம என்னை ஆசீர்வாதம் பண்றே ?


8   உண்மை பேசுனா  கேட் டவன் தான் அதை ஞாபகம் வெச்சுக்கணும் , ஆனா பொய் பேசுனா பேசுன நான் தான் அதை ஞாபகம் வெச்சுக்கணும் 


9  எங்க  அண்ணன்  அந்த மாதிரி  எல்லாம்  பண்ண  மாட் டான்,ஏண்ணே ,அப்படி பண்ணியா?


 ஆமா, பண்ணேன் 


10  மரிக்கொழுந்து  மருந்து  குடிச்சுட் டா   


அவ குடிச்சா குடிச்சுட்டுபோறா , நீ போய் வேலையைப்பாரு 


11   உடம்பு எப்படி வெயிட் போட்டுச்சு ? டெய்லி யோகா  பண்றியா?> 


ம் 

 எத்தனை தடவை ?


   டெய்லி  5 தடவை பண்ண அது என்ன தொழுகையா? 

12  வேலை   எல்லாம் எப்படிப்போகுது மாப்பிளை ?


 வேலை  எதுவும் போகலையே ?


வேலை   எல்லாம் எப்படிப்போகுது  என  யதார்த்தமாத்தானே  கேட்டேன் 


13     என்ன ?மாப்பிளை   மாதிரி  டிரஸ்  பண்ணி  இருக்கே? 


 என் மாமியாருக்கு பர்த் டே   சார் 

14    20 வருசமா  கிளி ஜோஸ்யக்காரனா   நடிச்சு   செட் ஆகிட் டே ன் , திடீர்   என கேரக்ட்ரை   மாத்தினா? நான் என்ன சிவாஜி கணேசனா?  


15   அவனவன்     பிரச்சனைகளை  அவனவனே  பார்த்த்துக்கற மாதிரி இருந்தா சொந்த பந்தம், சாதி சனம் எதுக்கு  ?


16  உலகத்துல ரெண்டே  விதமான ஆட்கள்  தான் 1 கடன் வாங்குபவன் 2 கடன் கொடுப்பவன் 


17  பிச்சை  போடறவன்    பெருந்தன்மையாதான் போடுவான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1     நண்பனை அறைந்தார்  என்பதற்காக  கம்பெனியின்  எம் டி யையே நாயகன்  பளார் என்று அறைவது  சினிமாத்தனம் .நிஜ வாழ்வில்  அப்படி நடக்க வாய்ப்பில்லை .மிடில் கிளாஸ் ஆள் முதலில்  தன  ஸே ஃபடியைத்தான் பார்ப்பான் ,     தன வேலையை  விடத்துணிய  மாடடான் 


2   நாயகனின்  அம்மாவாக வரும்  குடச்சநாடு  கனகம்  மனதில்  ஓட் டவில்லை . ஒருவேளை  டி வி சீரியல் பார்க்கும் பெண்களுக்குப்பிடிக்கலாம் 


3  வேலை போன  விஷயத்தை தன்  மனைவியிடம் மட்டுமாவது சொல்லி விடுகிறேன் என நண்பனிடம் கெஞ்சுவது எதுக்கு ? 


4  ஆபீசில்   ஆபீசரிடம்  அனுசரணையாக  நடந்து கொள்பவன்  வில்லன் . ஆனால்  ஹையர் ஆபீசரை கை நீட்டி அடித்து  வேலையைத்தொலைக்கிறான் நாயகன்  . இது  இடிக்குதே? பொதுவாக     நாயகனின்  கேரக்ட்டர்  டிசைன் தான்  ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி காமெடி கலக்கல் , பின் பாதி கொஞ்சம்  ஸ்லோ   குடும்பங்கள்  கொண்டாடும் வெற்றி  எனப்பேருக்குப் போஸ்ட்டர்ல  விளம்பரம்   பண்ணுவாங்க , நிஜமாகவே  இது  ஏ , பி, சி  என ஆல்  சென்ட்டர்   ஹிட் அடிக்கப்போகும்  ஒரு பேமிலி  எண்ட் டர் டெய்னர் .விகடன்   மார்க்  45 , ரேட்டிங்  3 / 5 

Friday, January 31, 2025

COFFEE WITH A KILLER (2025) - தெலுங்கு - சினிமா விமர்சனம்(காமெடி க்ரைம் த்ரில்லர் ) ஆஹா தமிழ் ஓ டி டி

       

       ஸ்டார்  வேல்யூ இல்லாத  படங்கள்  பெரும்பாலும்  திரைக்கதையையும் ,இயக்கத்தையும் நம்பிக்களம் இறங்குவதால் நம்பிப்பார்க்கலாம் .லோ  பட்ஜெட்டில்  ஒரே  ஒரு லொக்கேஷனில்  ஒரே ஒரு பகல் பொழுதில்  நடப்பதாக திரைக்கதை  அமைந்துள்ளதால் செலவு மிகமிகக்குறைவு .காமெடி இருக்கு . க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட்  இருக்கு . டைம் டியூரேஷன்  100  நிமிடங்கள்  தான் என்பதால் இதை ஒரு குயிக் வாட்ச்  ஆகவே பார்த்து விடலாம் . தமிழ்  டப்பிங்க் இல்லை . ஆங்கில சப் டைட்டில்  இல்லை . தெலுங்கு  தெரிந்தவர்கள்  வசனத்தை  ரசித்து சிரித்துப்பார்க்கலாம்.தெரியாதவர்கள் ஒரு குத்து மதிப்பாக  பார்க்கலாம். கதை புரியும்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


 வில்லன்  ஒரு புரொபஷனல்  கில்லர் . வாடகைக்கொலையாளி . அவனுக்கு ஒரு அசைன்மென்ட் தரப்படுகிறது . அது ஆள்  யார் என   வில்லனுக்குத்தெரியாது . ஹைதராபாத்தில்  உள்ள  ஒரு உயர் தர  காபி ஷாப்பில்  வில்லன்  வெய்ட்  பண்ணனும் .மாலை  சரியாக 6 மணிக்கு  அவன் யாரைக்கொலை செய்ய வேண்டும் என்ற  செய்தி  வரும் . இது தான்   அவனுக்குக்கொடுக்கப்பட் ட  டாஸ்க் .



அந்த   காபி ஷாப்பில் 1  ஒரு காதல்  ஜோடி  , 2   ஒரு திருமணம்  ஆன தம்பதி ,  3   சினிமா  டிஸ்கஷனுக்காக வந்திருக்கும் ஒரு குழு  , 4   ஒரு  ஜோஸ்யக்காரனும், ஆன்மீக பக்தரும் , , 5  ஒரு ஹேக்கர் டீம் ,  6  போலீஸ் ஆபீசர்   என ஆறு  டேபிளில்   ஆறு விதமான  வெவ்வேறு  தரப்பு ஆட்கள்  இருக்கிறார்கள் . இவர்களை  வைத்து அமைக்கப்படட திரைக்கதை தான் மீதி  சம்பவங்கள் 

ஸ்ரீனிவாஸ் ரெட்டி , சத்யம் ராஜேஷ் ,  டெம்ப்பர் வம்சி ,  ரவி பாபு  என  நடித்தவர்கள்   அனைவரும்  சரியான பங்களிப்பை  அளித்திருக்கிறார்கள் . படத்தில்  நாயகி , டூயட்   என எதுவும் இல்லை . இரு பெண்  கதாபாத்திரங்கள்  உண்டு . இருவரும்  நல்ல அழகு . அதிக   வாய்ப்பில்லை 


அனுஷ்  கோரக்  தான் ஒளிப்பதிவு . ஒரே   காபி  ஷாப்பில்   நடக்கும்    கதை  என்பதால்  சவாலான பணி . சிறப்பாக செய்திருக்கிறார் . பரத்  மது சூதனன் தான் இசை . பின்னணி   இசை   பரவாயில்லை .  ஆர் பி பட் நாயக் என்பவர் தான் திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கிறார் . நல்ல முயற்சி 


சபாஷ்  டைரக்டர்


1   க்ளைமாக்ஸ்    டிவிஸ்ட்   தான்  படத்தின் உயிர் நாடி . அருமையான   திருப்பம் . யூகிக்க முடியாதது 


2  சினிமா  டிஸ்கஷன்  க்ரூப்  காமெடி  ரசிக்கும்படி  இருந்தது . அந்த  க்ரூப்   வில்லனை காமெடியன்  ஆக புக்   பண்ணலாமா?   என விவாதிப்பது வெடிச்சிரிப்பு 


3  க்ளைமாக்சில்  கொலை  செய்யப்பட  இருக்கும்   ஆள் தான் தான்   வில்லனின்   இலக்கு என்பது தெரியாமல் இருப்பதும் அவருக்கே   தெரியாமல்  அவரே   அந்த சதியை  முறியடிக்கும்  விதமும்   அருமை




  ரசித்த  வசனங்கள் 


1   அவன்   என் ரசிகன் 


 ஓஹோ 


 அதெல்லாம்  இல்லைங்க .இந்த ஆள்  சைக்கிளை  வெளில  சொல்லாம கொள்ளாம பார்க் பண்ணிட்டு இங்கே வந்திருக்காரு 


 சைக்கிளா?  இவரு எவ்ளோ  பெரிய சினிமா வி ஐ பி ? 


2   டாம் அண்ட்    ஜெர்ரி   என ரெண்டு   காமெடி   கேரக்ட்டர்ஸ் , அந்த ரெண்டையும்  கம்பைன் பண்ணி  ஒரே  ஆளா   நீதான் பண்றே 


அடே ங்கப்பா 


3  இவர்  யார் ? 


 டைரக்ட்டர் 


 ஹய்யோ ,படத்தோட டைட்டிலே  இவர்  யார் ?   தான் 


4   ஸ்க்ரீன் ப்ளே  பத்தி சொல்லுங்க 


 ஸ்க்ரீன்  ல   யாரு ப்ளே  பண்ணினா   நமக்கு என்ன? 


5    நீங்க   லவ்வர்ஸா? 


 இல்லை , ஹேக்கர்ஸ் 


ஷங்கர்   மாதிரி ஹேக்கர்  என ஒரு பேரு போல 


 ஹலோ , அது பெரு இல்லை .என் ஜாப்பே  அதுதான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனுக்கான ஓப்பனிங்   சீனில்   வில்லனை மடக்கும் ஆள்  வில்லனை அசால்ட்  ஆக  சேரில்  உட்கார வைப்பதும்    வில்லனுக்கு  எதிரிலேயே  லோடட்  கன்  வைத்து  வில்லனுக்கு சான்ஸ்   கொடுப்பதும்   நம்ப முடியவில்லை / அட்லீஸ்ட்   வில்லனைக்கயிறால் கட்டிக்கூட போட முடியாதா? 


2   காதல்  ஜோடியின் காதலுக்கு  காதலியின் அப்பா   எதிர்ப்பு   தெரிவிப்பதும் .க்ளைமாக்சில்  வில்லன்   வேறு ஒரு ஆளைக்கொலை செய்ய முயற்சிக்கும்போது  காதலன் காதலியின் அப்பாவைக்காப்பாற்றுவதும் அதன் பின்  அவர் மனம் திருந்திப் பெண்  தர சம்மதிப்பதும்   டி வி சீரியல் பார்ப்பது போல இருந்தது 


3  ஜோஸ்யக்காரன்  காமெடி டிராக்   எடுபடவில்லை .போர் . இன்னும் அந்த சீனில் உழைத்திருக்கலாம் 


4  மாடர்ன்   பெண்  என்றால்  ஜீன்ஸ் பேண்ட் . டி சர்ட்  போட் ட மாதிரி  காட்டினாப்போதாதா?  தம் அடிப்பது , தண்ணி அடிப்பது போலக்காட்ட வேண்டுமா? மாதர்  சங்கங்கள்  இதுக்கெல்லாம் போராட மாட் டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான  த்ரில்லர்  பட  விரும்பிகள் , மொக்கைக்காமெடி ரசிகர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 

Thursday, January 30, 2025

MR HOUSE KEEPING (2025) -மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்க் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )

             

    சில குப்பைப்படங்களை  பிரம்மாண்டமான  விளம்பரங்கள் பார்த்து  ஏமாந்து பார்த்துடுவோம் . பல  டப்பாப்படங்களை பெரிய  ஹீரோ , பெரிய  டைரக்டர்  என்பதால் பார்த்துடுவோம்.டைட்டில் , போஸ்ட்டர் டிசைன்  நல்லாருக்கே  என ஏமாந்து  பார்த்த     சுமார்   படம் இது            


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும் ஒரே காலேஜில்  படிப்பவர்கள் .நாயகன்  தறுதலையாக  இருந்து  ஒருதலையாக நாயகியைக்காதலிக்கிறான் . ஆனால்     நாயகி  அவனை மனுசனாகக்கூட மதிக்கவில்லை . காலேஜ்  கடைசி   நாள் அன்று சவால்  விடுகிறான் . இன்னும்   நான்கு  வருடங்களில்  உன்னை விட அழகான ,  பெண்ணைக்காதலித்துக்கல்யாணம்  செய்து  காட்டுகிறேன் .ஏண்டா  இவனை  மிஸ்  செய்தோம்   என உன்னை வருத்தப்பட    வைக்கிறேன்  என்கிறான் . 


 ஆனால்   எதிர்பாராத விதமாக  நாயகியின்   வீட்டில்   வேலைக்காரன் ஆக  வேலை செய்ய வேண்டிய சூழல் . இதற்குப்பின் நிகழும்    காமெடி   சம்பவங்கள்  தான் மீதி திரைக்கதை      


 நாயகன்  ஆக   ஹரிபாஸ்கர் .இவர் யூ ட்யூப்  பிரபலமாம் .  கேள்விப்பட்டேன் . யோகராஜ்  என்பவர்   கே  பாக்யராஜ் மாதிரி  நடித்தது போல  இவர் கமல், ரஜினி , கே  பாக்யராஜ்   என   கலந்து கட்டி  நடித்திருக்கிறார் . . நாயகி ஆக  பிக் பாஸ்  புகழ்  லாஸ் லியா .அழகு . ஆனால்   டயட்டில்  இருந்து  மெலிந்து  மெருகில்லாமல்  சருகு  மாதிரி  காய்ந்து போய்  இருக்கிறார் . அப்பாவாக   வரும்  இளவரசு  நல்ல   குணச்சித்திர நடிப்பு . மற்றவர்கள்   நடிப்புப்பரவாயில்லை 


அறிமுக  இயக்குனர்  அருண் ரவிச்சந்திரன்  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார் ஓஷோ  வெங்கட்டின் இசையில்  பாடல்கள்  சுமார் ரகம் தான் .பிஜிஎம் சராசரி .குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவு  ஓகே  ரகம் . இரண்டே  கால்  மணி நேரம்  படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1    காலேஜ்  கெட்  டுகெதர்  பங்க்சனில் நாயகி  நாயகனை  திட்டம் போட்டு அவமானப்படுத்ததும் சீன்  கே   பாக்யராஜ் டச் 


2      நாயகன்  நாயகியுடன்  இணைந்து  செல்லும் பெண்பார்க்கும் படலத்தில்  மணப்பெண்ணின்   தம்பி டான்ஸ் ஆடும் காட் சி 


ரசித்த  வசனங்கள் 


1   ஒரு பொண்ணுக்கு ஒரு பையன் என்ன எல்லாம் செஞ்சா பிடிக்காதோ அதை மட்டும் தான் நீ  செஞ்சு  இருக்கே 


2   பொண்ணுங்க  வெளில   இருக்கற மாதிரி  தான்     அவ  பர்சனல்  லைஃப்லயும் இருப்பா என்ற உன் எண்ணத்தை மாத்திக்கோ 


3  காலேஜ்  படிக்கும்போது  பாய் கூட இல்லாம   ஹாஸ்ட்டல்ல படுத்திருப்பே , இப்போ  துபாய்ல வேலை செய்யறியா? 


4   என்ன?   இன்னைக்கு  ரொம்ப  அழகா  இருக்கீங்க ? புது டிரஸ்  போட்டிருக்கீங்க?  வயசுக்கு வந்துட்டீங்களா? 

5  உன் வாழ்க்கையின் கோல்  தான் என்ன? 


 கோலா ?   இந்த  மாதிரி  ஆட் களோட  வாழ்வதே  பெரிய  விஷயம் தான் 

6    பிளைட் ல   போலாம்களா? 


 எங்கே ? சுடுகாட்டுக்கா? 


7  டேய் , தூங்குடா 


 எல்லாரும்  ஒரு நாள்   தூங்கத்தானே போறோம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1     நாயகன்    புதுமுகம் .தனக்கு என சொந்தமாக  ஒரு பாணி  நடிப்பை உருவாக்கிக்கொள்ளக்கூடாதா? கமல் , ரஜினி , கே பாக்யராஜ்  மாதிரி  மாறி  மாறி  இமிடேட்  செய்கிறார். நமக்கு இரிடேட்ட் ஆக இருக்கு 


2   1990 களில்  வந்திருக்க  வேண்டிய படம் .ரொம்ப  அவுட் டேட்டடாக இருக்கு . இந்தக்காலப்பெண்கள்   தாலி கட்டிய புருஷனையே வேலைக்காரனாகத்தான் நடத்துகிறார்கள் . வேலைக்காரனாக இருக்கும் ஆளை லவ் பண்ணுவார்களா? 


3  தெரிந்தோ , தெரியாமலோ  கே  பாக்யராஜ்  இயக்கி நடித்த  டார்லிங்   டார்லிங்    டார்லிங்  (19823)  படத்தின்  திரைக்கதை  பல   இடங்களில்  கிளாஸ்  ஆகிறது 

4   நல்லவேளை , கேப்டன் , விஜயகாந்த்  உயிரோடு இல்லை . இருந்திருந்தால் நாயகனுக்கு  ஹானஸ்ட்  ராஜ்   என பெயர்  வைத்ததற்கு தலையில் மடார் என அடி  போட்டிருப்பார்  

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A  ,  டபுள் மீனிங்  டயலாக்ஸ்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தியேட்டரில்  பார்க்கும் அளவு  ஒர்த் இல்லை .டி வி ல போடும்போது  பார்க்கலாம் .விகடன்   மார்க் - 40 . ரேட்டிங்  2.25 / 5 

Wednesday, January 29, 2025

பாட்டில் ராதா (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சோஷியல் காமெடி டிராமா )

         

               

இது குடிகாரர்களைத்திருத்தும் படம் தானே?  குடிப்பழக்கம் இல்லாத நாம எதுக்காகப்பார்க்கணும்? என யாரும் நினைக்க வேண்டியதில்லை . அதே  போல  இயக்குனர் பா ரஞ்சித்  தயாரித்த  படமா? ஐயோ , ஆளை விடுங்க என அலறி ஓட வேண்டிய தேவையும் இல்லை .இது  ஜாதி  ரீதியிலான  படம் இல்லை . டாக்குமெண்டரி டிராமா வும் இல்லை .  ஜனரஞ்சசகமான  படம் தான் . எனவே  பயப்படாமல்  , தயக்கம் இல்லாமல் பார்க்கலாம் 


ஒரு கே  பாலச்சந்தரோ , பாரதிராஜாவோ  எடுத்திருக்க வேண்டிய படம் . காமெடி  கலந்து  அனைத்து மக்களும்   பார்க்கும்படி  சோசியல்  டிராமாவாக எடுத்திருக்கிறார் அறிமுக  இயக்குனர்  தினகரன்  சிவலிங்கம்    24.1/2025 அன்று  திரை அரங்குகளில் வெளியானாலும் 4/11/2023 அன்றே  தர்மஷாலா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட் ட படம்  இது . மத்திய அரசால் வரி விலக்கு கொடுத்து கவுரவிக்க வேண்டிய படம் இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  ஒரு குடிகாரன் . மனைவி , இரு குழந்தைகள் உண்டு . கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தாலும்  அதெல்லாம் சைடு தான் .அண்ணனுக்கு மெயின் ஜாப்  சரக்கு அடிப்பதுதான் . குடிகாரர்கள்  மறு வாழ்வு மையத்தில்  நாயகனை  அவனது மனைவி  அனுப்பி வைக்கிறார் .அங்கே நாயகன் படும்  அவஸ்தைகள்  காமெடியாக  முதல் பாதியில்   சொல்லி   இருக்கிறார்கள் . அங்கே  இருந்து  வெளி  வந்தபின்  நாயகன் திருந்தினாரா? குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு என மாறினாரா? என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக அச்சு அசல்  குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார் குரு  சோமசுந்தரம் .பிரமாதமான நடிப்பு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. குடிகாரனுக்குகை நடுங்கும் .அதை இயல்பாகக்காட்டி இருக்கிறார் , அவரது மனைவியாக சஞ்சனா   நடராஜன்  பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் நடிப்பு . 


லொள்ளு சபா  மாறன்  சீரியஸ் ஆன கதையில் ஆங்காங்கே  காமெடி ஒன்  லைனர்களை தட்டி விடுகிறார் . வழக்கமாக வில்லனாக வரும் ஜான் விஜய்  இதில் மாறுபட் ட வேடத்தில் கலக்கி இருக்கிறார் ,மற்ற   அனைவருமே  சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் 


 சீ ன் ரோல்டன்  இசையில் 5 பாடல்கள் .பரவாயில்லை ரகம் ,  பின்னணி இசையும் ஒக்கே  ரகம் .ரூபேஷ் ஷா வின் ஒளிப்பதிவு  அருமை .சங்கத்தமிழனின் எடிட்டிங்கில்  படம் 146 நிமிடங்கள்   ஓடுகிறது .முதல் பாதி  ஸ்பீடு , பின் பாதி  ரொம்ப ஸ்லோ


சபாஷ்  டைரக்டர்

1    குடி காரர்கள்  மறு  வாழ்வு மையத்தை   விலாவாரியாகக்கட்டி அதில் சுவராஸ்யமான சம்பவங்களை இணைத்த விதம் அருமை  


2  ஜெயிலில்  இருந்து   கைதிகள் தப்பிப்பது போல  குடி காரர்கள்  மறு  வாழ்வு மையத்தில்  இருந்து   நாயகன் உட்பட  3 பேர் தப்பிக்கும் சீன் விறுவிறுப்பு 


3   குடிகாரன்  மனைவி  என்பதால்   சமூகத்தில்  தான்  சந்திக்கும்  பிரச்சனைகளை  நாயகி எடுத்துச்சொல்லும்      சீன   அருமை 


4  நாயகன்   குடிகாரனாக இருந்தாலும்  தனது  குழந்தைகள்  மீது வைத்திருக்கும் பாசம் .அவர்களும் அப்பா அப்பா உருகுவது  ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகும் விதத்தில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  உன்பேர்   ராதாவா? அப்போ இவன் பேரு அம்பிகாவா? 


2  ஐசுக்குக்காசா?  அதுவும்  ஹிந்தில  கேட்கறே ?


3  சரி , நீ எதனால குடிகாரன் ஆனே ? 


 கஷ்டப்பட்டு   சம்பாதிக்கும் காசு எல்லாம் இப்படிக்குடிச்சுக்குடிச்சே  வீணாப்போகுதே  என்ற   கவலையில் ரெகுலராக்குடிக்க ஆரம்பித்தேன் 


4   ஊரில்  , உலகத்தில்  100க்கு 80 பே ரு குடிக்கறான் , அவங்க எல்லாரும் குடி நோயாளியா? 


5   குடிகாரனுங்க தான் நேர்மையானவங்க, வஞ்சகமே இல்லாதவங்க 


6    டெய்லி     விடிகாலைல   அஞ்சரை  மணிக்கு   எழுப்பி விடறீங்களே? நான் என்ன   பப்ளிக் எக்ஸ்சாம்க்கா படிக்கப்போறேன் ? 


7  நாம  சம்பாதித்து  நம்ம சொந்தக்காசில் குடிக்கறோம், இதைத்தடுக்க யாருக்கும் உரிமை இல்லை 


8   குடிச்சுட்டு   வீடடைக்கொளு த்தி விட்டுடட்டு   நாடு வீடு என டயலாக் பேசறி யா?


9   வெறி நாய   கார்ப்பரேஷனுக்குப்பிடிச்சுக்கொடுப்பது போல  என்னை இங்கே பிடிச்சுக்கொடுத்திருக்கே? 


10   கோக்   குடிபப்து   அவ்ளோ பெரிய தப்பா? 


 அது பெப்சி கோக் இல்லை . கொக்கைன், போதைப்பொருள்  கஞ்சா போல  பல மடங்கு போதை தருவது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


அனைவரும்   பார்க்க வேண்டிய  படம் .அதனால்  இதை நொட்டை   சொல்ல விருப்பம் இல்லை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கலகலப்பான  , மாறுபட் ட  முதல்  பாதி ,  கொஞ்சம்  மெதுவான , யூகிக்கக்கூடிய பின் பாதி .   விகடன் மார்க் 44. ரேட்டிங்  2.75 / 5 


Bottle Radha
Theatrical release poster
Directed byDhinakaran Sivalingam
Written byDhinakaran Sivalingam
Produced byPa. Ranjith
T. N. Arunbalaji
Starring
CinematographyRoopesh Shaji
Edited byE. Sangathamizhan
Music bySean Roldan
Production
companies
Distributed byGenerous Entertainments
Release dates
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageTamil

Tuesday, January 28, 2025

வல்லான் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

               



           படத்தில்  சொல்லப்பட் ட அதே  வரிசையில்  கதை சொன்னால் சுவராஸ்யம் குறைவாக இருக்கும் என்பதால்  , கொஞ்ச்ம குழப்பும் என்பதால்    , பிளாஷ்பேக் யுக்தி , நான் லீனியர்  கட் .லொட்டு லொசுக்கு  எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு  சாமான்யர்களுக்கும் எளிதாகப்புரிவது போல நேரடியாகக்கதை சொல்கிறேன் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 - நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் .அவருக்கு  திருமணம் செய்ய பெண் பார்க்கிறார்கள் . வருங்கால மனைவியுடன்  பேசும்போது  அவர் சொல்கிறார் ." நான்  ஒர்க் பண்ற கம்பெனில  என்னமோ  அக்கவுண்ட்ஸில் பிராடு நடக்குது .பைனான்சியல் க்ரைம் நடக்குது .. ஆனா .. எம் டி என் மேல முழு நம்பிக்கை வெச்சிருக்கார் , அதனால முழு விபரங்களை உங்களிடம் சொல்ல முடியாது என்கிறார் . இதை  சொல்லி  அடுத்த  நாள்   அவர் மிஸ்ஸிங்க் . தன  வருங்கால  மனைவி  காணாமல் போனதால் நாயகன் சோகமாக இருக்கிறார் .


சம்பவம் 2 - நகரில்  பிரபலமான  மத போதகரும் ,கோடீஸ்வரரும் ஆன ஒருவரின்  மருமகன்  கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் .முகம் சிதைக்கப்பட்டு இருக்கிறது . இவர் வேறு  யாருமல்ல ,சம்பவம் 1 ல் நாயகனின் வருங்கால மனைவியின் எம்  டி .இந்தக்கேஸை  விசாரிக்கும் பொறுப்பு நாயகனுக்கு வருகிறது .



 நாயகன்  இந்தக்கேஸை  எப்படி டீல் செய்தார்?  மர்மங்களை எல்லாம்  கண்டுப்பிடித்தது எப்படி என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  சுந்தர் சி  சோகமாக படம் முழுக்க தாடியுடன் வருகிறார் . அதைப்பார்க்கவே  கஷ்டமாக இருக்கிறது . இவர் பிளாஸ் பேக்கில்  க்ளீன் ஷே வ்   முகத்துடன் சிரிப்புடன்  இருப்பது ஆறுதல் . ஆனால் நடிப்புக்காக பெரிதும் மெனக்கெடவில்லை . ஒரு இயக்குனர் ஆக  இவர் ஷைன் செய்த அளவுக்கு  ஒரு ஆக்சன்  ஹீ ரோவாக  ஜொலிக்க முடியவில்லை 


 இவருக்கு  ஜோடியாக   தன்யா  ஹோப் வருகிறார் .பெரிய  ஹோப்  இல்லை .இன்னும் எனர்ஜெடிக்காக நடித்திருக்கலாம் 


நாயகனுக்கு உதவி செய்பவராக ஹீபர்  படேல்  நடித்திருக்கிறார் . படம்  முழுக்க  வருவதால்  இவர் தான் நாயகி .கொலை செய்யப்படும்   தொழில்  அதிபர் ஆக   கமல் காமராஜ்  வில்லத்தன  நடிப்பு மூலம் இன்னும் கலக்கி இருக்கலாம் .அவரது   மனைவியாக அபிராமி  வெங்கடாச்சலம்  நடிகை ஆஷா சரத்   போல  ஆஜானுபாகவமான உயரம் , தோற்றம்,ஆனால் மிளரவில்லை ...    இவரது அப்பாவாக ஜெயக்குமார் நடிப்பு கனகச்சிதம் 


ஒளிப்பதிவு  மணி பெருமாள் . இரு நாயகிகளை  இன்னும் அழகாக க்ளோ சப்பில் காட் டி இருக்கலாம் . திரில் லிங்க்  காட் சிகளை  உயிரோட் டமாகப் படம்  பிடித்துள்ளார் . இசை சந்தோஷ்  தயாநிதி .3 பாடல்கள்  சுமார் ரகம் , பின்னணி இசை  விறுவிறுப்பு .திணேஷ்   பொன்ராஜ் எடிட்டிங்கில்  படம் 122  நிமிடங்கள்   ஓடுகிறது


திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர் மணி செய்யோன்  

சபாஷ்  டைரக்டர்


1    கொலைகாரனின் தலைமுடியை வைத்து அவன் முகத்தை ஓவியமாக வரைவது எப்படி? என்ன பிராசஸ்/என்பதை தெளிவாக விளக்கிய டீட் டெய்லிங்    அருமை 


2   ஒரு க்ரைம்  திரில்லர்  கதையில்  சைக்கலாஜிக்கல்  சம்பந்தப்பட் ட  நுணுக்கமான  வசனங்கள்  அபாரம் 


3 மெயின் கதையுடன்  நாயகனின் பர்சனல்  கதையை  சாமார்த்தியமாகக்கோர்த்து விட் ட விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   ஒருத்தர்  நாம சொல்றதை எல்லாம் கேட்கணும்னா ஒன்னு  நாம அவனை பர்சனலா லாக் பண்ணனும்,அல்லது புரொபஷனலா லாக் பண்ணனும்


2  சாத்தான் கூட சேர்ந்தா சாத்தான் புத்திதான் வரும் 


3 மத சம்பந்தமான  ட்ரஸ்ட்களில்  பேங்க் அக்கவுண்ட் வரவு , செலவு  விவகாரம் , எவ்ளவ் பணம்  உள்ளே  வந்தது ? எவ்ளோ பணம்  வெளில போச்சு  இந்த விபரம் எல்லாம் சொல்லத்தேவை இல்லை 


4   புரொபஷனலா  ஹேண்டில்  பண்றவனை விட பர்சனலா ஹேண்டில்  பண்றவன்  இந்தக்கேஸை  சீக்கிரமா முடிப்பான் 


5 நடந்ததையே  நினைச்சுட்டு  இருக்காம அடுத்த ஸ்டெப்  என்ன? எனப்பார்ப்பதுதான் மென்ட்டல்  பிளாக்ல இருந்து தப்ப எளிய வழி 


6  எடுத்த முடிவு தப்புன்னு தெரிஞ்சும் அதை ஒத்துக்காதவங்க தான் அதிகம் 


7  எப்பவும் நிறைய பேசுவீங்க, எதனால சைலன்ட் ஆகிட்டீங்க ? 


அதான் ,நிறைய பேசிட் டனே , நீங்க பேசுங்க 


8  நாம  சொல்ற உண்மைக்கும், நமக்கு சொல்லப்படும் உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு 


9  வாய்ப்புக்காககாத்துக்கிட்டு இருக்கறவங்க எல்லாரையும், எல்லாத்தையும் நம்பிடுவாங்க 


10  எந்த  விஷயத்தை நாம செஞ்சதுக்கு அப்புறமா தப்புன்னு யோசிக்கறமோ அது மட்டும் தான் தப்பு .செய்யும் முன்பே யோசிக்கணும் 


11  எப்பவுமே  ஒருத்தருக்குப்பிடிக்க விஷயத்தை மாத்திக்க வைக்கறது ரொம்ப  கஷ்டம் 


12  ஒண்ணுக்குப்பக்கத்துல ஒண்ணு  வெச்சா 11 ஆகிடும், ஆனா ஜீரோக்குப்பக்கத்துல ஜீரோவை  வெச்சா 

  ரெண்டு ஜீரோ தான் ஆகும் 


ஜீரோ  மேல ஜீரோவை வெச்சா   அது எட்டு ஆகும்  0-0 = 8 


13   பாசிட்டிவ் , நெகட்டிவ்  இரண்டுக்கும் இடைப்பட் ட  ஸ்பெஷல்  நெம்பர் தான் ஜீரோ .ஜீரோவை ஒன்னும் இல்லாத வேல்யுவா ப்பார்க்கக்கூ டாது 


14  காக்கிச்சட்டை போட் டவங்களுக்கு பெரிய கொம்பு முளைச்சுட்டதா நினைப்பு 


15   ஒவ்வொரு மனுஷனுக்கு உள்ளேயும்  ஒரு கேரக்ட்டர் இருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


`1 நாயகன் - நாயகி  பெண்பார்க்கும் படலம் ,  பின் வரும் சந்திப்புகள்   எல்லாம் ஸ்க்ரிப்ட்டில்  அருமையாக இருந்தது , ஆனால் அதை திரையில் பார்க்கும்போது கவித்துவம்  மிஸ்ஸிங் , இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை 


2  படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு படத்தில் வரும்  கேரக் டர்களுடன் எமோஷனல் கனெக்ட் ஆகவில்லை 


3   பேங்க்   வாசலில்  ஒருவரை  உளவு  பார்ப்பது போல  ஒரு சீன , அடுத்த ஷாட்டில்  எங்கெங்கோ  லொக்கே ஷன்  போகிறது 


4   நாயகன்  பின் தலையில்  இரும்புக்கம்பியால் மடார் மடார் என தாக்குகிறார்கள் , நாயகனுக்கு ஒன்றுமே ஆகவில்லை .ரத்தம் கூட வரலை . அவர் என்ன  ரஜினியா?  சூப்பர்  மேனா?


5  உயர் அதிகாரியை  நாயகன்  பளார் என அறைவது  எல்லாம் சினிமாத்தனம் 


6    ஒரு பெண்ணை  தவறான  எண்ணத்தில்  வீட்டுக்கு அழைத்து வரும் வில்லனை  டைவர்ட் பண்ண  அந்தப்பெண் அவனுக்கு சரக்கு ஊற்றிக்கொடுத்து மட்டை ஆக்குவது எல்லாம் நடக்கவே நடக்காது . ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இருப்பவர்கள் ஆண்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்   நாவல் படிப்பது போல  விறுவிறுப்பாக இருக்கிறது . ஆர்ட்டிஸ்ட்  செலக்சன்ல இன்னமும் கவனம் வைத்திருந்தால்   செம ஹிட் ஆகக்கூடிய கதை தான் . ஆனாலும் மோசமில்லை, பார்க்கலாம் . விகடன்   மார்க் - 41 . ரேட்டிங்  2.75 /5 



Vallan
Theatrical release poster
Directed byVR Mani Seiyon
Written byVR Mani Seiyon
Produced by
  • VR Manikandaraman
  • V Gayathri
Starring
CinematographyMani Perumal
Edited byDinesh Ponraj
Music bySanthosh Dhayanidhi
Production
company
VR Della Film Factory
Release date
  • 24 January 2025
Running time
142 minutes
CountryIndia
LanguageTamil