Monday, February 03, 2025

THE STORYTELLER(2022)-ஹிந்தி -சினிமா விமர்சனம் (மெலோ டிராமா)@டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டார்

 


THE  STORYTELLER  ( 2022 ) - ஹிந்தி - சினிமா  விம்ர்சனம் ( மெலோ  டிராமா ) @ டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார் 

சத்யஜித்ரே  எழுதிய “GOLPO BOLO  TARINI KHUNO  என்னும் சிறுகதையைத்தழுவி எடுக்கப்பட்ட   படம்  இது . கி ராஜநாராயணன் , பவா செல்லத்துரை , , எஸ் ராமகிருஷ்ணன் , சீமான்  போன்ற சிறந்த  கதை சொல்லியான ஒருவரைப்பற்றிய கதை இது . ஆக்சன் மசாலாப்பிரியர்கள் , தெலுங்கு  கமர்ஷியல்  பிலிம் ரசிகர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும் . பெண்கள் , மற்றும் பொறுமைசாலிகள் பார்க்கலாம். இது ஒரு  எ செண்ட்டர் +  பால்கனி ஆடியன்சுக்கான படம்  இது  தமிழ் டப்பிங்க்கில் இல்லை . டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார்  ல   ஹிந்தியில் ஆங்கில சப் டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர் அலெர்ட்


வில்லன்  ஒரு  கோடீஸ்வரன் கம் தொழில் அதிபர் .படுக்கை விரிப்புகள் , பெட்ஷீட் உட்பட பல துணி வியாபரம் பெரிய அளவில் செய்து வருபவர் .60 வயது நிரம்பியவர் . இவர் இளைஞனாக இருந்தபோது  சரஸ்வதி என்ற  பெண்ணை ஒருதலையாகக்காதலித்தார் . ஆனால் அது கை கூடவில்லை .அவள் நினைவாக திருமணமே செய்யாமல் இருந்தவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி . தன்  முன்னாள் காதலியான சரஸ்வதியை  பல வருடங்கள் கழித்து சந்திக்கிறார் . ஒரு விபத்தில் தன் கணவனைப்பறி கொடுத்த அவள் இப்பொது தனியாகத்தான் இருக்கிறாள் , குழந்தை இல்லை . ஆனால்  மெயின்   கதை  வில்லன் + வில்லனின் காதலியைப்பற்றியது அல்ல 


 நாயகன்  ஒரு கதை சொல்லி . பெங்காலியான அவர்  பேப்பரில் ஒரு விளம்பரம்  பார்க்கிறார் . அஹமதாபாத்தில்  ஒரு கோடீஸ்வரன் வீட்டில் கதை சொல்லி தேவை என்பதைப்படித்து அவர் அங்கே கிளம்புகிறார் . அந்தக்கோடீஸ்வரர்  ஸ்கூல் நடத்துகிறார் . அந்த ஸ்கூல் மாணவர்களுக்குக்கதை சொல்லத்தான் ஒரு ஆள் தேவை போல என நினைக்கிறார் .


  ஆனால்  நிஜமோ  வேறு . வில்லனான அந்தக்கோடீஸ்வரனுக்கு இரவில்  தூக்கம் வருவதில்லை . அவரைத்தூங்க வைக்கத்தான்  நாயகன் வரவைக்கப்பட்டு இருக்கிறார் . அதாவது   தினசரி   இரவில் வில்லனுக்கு  நாயகன் கதை சொல்லித்தூங்க வைக்க வேண்டும். அதற்கு நயகனுக்கு சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்  


 வில்லனுக்குக்கதை சொல்ல நாயகன் அங்கே  இருக்கும் லைப்ரரிக்குப்போய்  பிரபல எழுத்தாளர்களின்  புத்தகங்களை   எடுத்து   வந்து  ரெப்ரன்சுக்கு  வைத்துக்கொள்கிறார் . அந்த   லைப்ரரியில்  இன்சார்ஜ்  ஆக இருக்குன்  பெண்  நாயகனுக்கு அறிமுகம் ஆகிறார் . அவர்  மூலம் வில்லனைப்பற்றிய திடுக்கிடும் உண்மை தெரிய  வருகிறது . தூக்கம்  வர்லை . கதை சொல்லனும் என்பதெல்லாம் டுபாக்கூர்  வேலை . வில்லனின் உண்மையான  நோக்கம்  என்ன? இதற்குப்பின்   நிகழ்ந்தது  என்ன?  என்பது மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  பரேஷ்  ராவல்  அமைதியான  அண்டர்ப்ளே  ஆக்டிங் . வில்லனுடனான  உரையாடல்கள் , லைப்ரரியன் யஉடனான  விவாதங்கள் , பூனையுடன்  கொஞ்சுவது  என  கவனிக்க  வைக்கும் நடிப்பு 


வில்லன்  ஆக   அதில்  ஹுசைன்  பிரமாதப்படுத்தி இருக்கிறார் . கொடூரமான  பாவனைகள் இல்லை . சண்டை  போடவில்லை . ஆனால் மிரட்டலான நடிப்பு .


  வில்லனின்  காதலி ஆக ரேவதி  கெஸ்ட்   ரோலில் வருகிறார் . இளமையாக  இருந்தபோது கண்ணியமாக கவர் பண்ணி நடித்தவர் இதில்  ஸ்லீவ்லெஸ்சில் வருவது ஆச்சர்யம் 


  நாயகனின்  தோழி   ஆக  லைப்ரரியன்  ஆக தனிஷ்ஷா  சாட்டர்ஜி  இளமைத்துடிப்புடன்  நடித்திருக்கிறார் 


  நாயகன் , வில்லன் ,  வில்லனின்  காதலி ,  நாயகனின்  தோழி  என  நான்கே நான்கு  முக்கியக்கேரக்டர்களைக்கொண்டு   சுவராஸ்யமான  திரைக்கதை  அமைத்திருக்கிறார்   கிரீத்  குரானா .இயக்கி இருப்பவர்   ஆனந்த் நாராயணன்  மகாதேவன் 


 அல்பொன்சி  ராயின் ஒளிப்பதிவு அபாரம் . பல இடங்களில் கேமரா கோணங்கள் லாங்க் ஷாட் ஸ்  கண்களைக்கவர்கிறது . கவுரவ்  கோபால்  எடிட்டிங்கில்  படம் 112  நிமிடங்கள்  ஓடுகிறது . ஹிர்ஜு  ராயின் இசையில் இரு பாடல்கள் சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை 


சபாஷ்  டைரக்டர் 


1  முதல்  30  நிமிட திரைக்கதை  மிக மெதுவாக நகர்ந்தாலும்  வில்லனைப்பற்றிய   ஒரு  ட்விஸ்ட்  வெளிப்பட்டதும்  விறு விறுப்பாக கதை நகர்கிறது 


2  நாயகன் + நாயகனின் தோழி  , வில்லன் + வில்லனின் காதலி   என  இரு வெவ்வேறு  காதல்  கதைகள் தான் படம் என இயக்குனர்  நம்மை திசை  திருப்பி  வேறு கதையை வழங்கியது அருமை 


3    பூனை  மீனைக்கடிக்கும்  சத்தத்தைக்காட்டி  கட் பண்ணி  அடுத்த  ஷாட்டில்  ஆடியன்சின்  கிளாப்ஸ்  சவுண்டை  அதனுடன்  மேட்ச்  செய்த  விதம்  அபாரம் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1   கோஸ்ட் ரைட்டர் வைத்துக்கொண்டு  கதை எழுதுவது  பலரும்  செய்வதுதான் . இப்போது  கூட பல  இளம்  எழுத்தாளர்கள்  தங்கள்  சம்சாரம்  பெயரில்   கதை  எழுதுவது , பக்கத்து வீட்டு ஆண்ட்டி பெயரில் கதை எழுதுவது நடப்பதுதான் . அது ஒரு பெரிய  குற்றம் இல்லை 


2   பல  எழுத்தாளர்களின்  புத்தகங்கள்  படித்த  வாசிப்பு அனுபவம்  உள்ள  வில்லன்  நாயகன் கூறும் கதைகள் எல்லாம் லைப்ரரியில்  தாகூரின்  புக்சை  எடுத்து  வந்து பட்டி டிங்கரிங்  பண்ணிக்கதை  சொல்கிறார்  என்பதைக்கண்டறியாமல்  ஏமாறுவது  நம்ப முடியவில்லை 


3     வில்லனின்  காதலி  இப்பொது  தனிமையில்  இருக்கிறார்.  வில்லன்  கோடீஸ்வரன் . செல்வம் இருக்கு ,  புகழ்  இருக்கு . ஆனால்  அவரை  ஏற்றுக்கொள்ளாமல்  தவிர்ப்பது  நம்பும்படி இல்லை . 


 ரசித்த  வசனங்கள் 


1  ரைட்டர்சுக்கு  இன்னும்  டிமாண்ட்  இருக்கு 


2   ஸ்க்ரிப்ட்  ரைட்டர்ஸ்  தேவை  விளம்பரம்  இன்னமும் பல பேப்பர்களில் வந்துட்டே  தான் இருக்கு


3   கொஞ்சம்  தள்ளி நில்லுங்க   , கூட்டணும் 


 இது என்  வீடு , நான்   எங்கே  வேணாலும்  நிப்பேன் 


 அப்பொ  நான்  வீட்டுக்குப்போய்ட்டு நாளை  வேலைக்கு வர்றேன் 


4   நாயே  இங்கே  இல்லை . எதுக்கு  நாய்கள்  ஜாக்கிரதை  போர்டு ?


 உங்களை  மாதிரி  ஆட்களை  விரட்டத்தான் 


    நீயே  ஒரு  நாய்  மாதிரி  தான்  இருக்கே


5   இத்தனை  புத்தகங்கள்  என்  செல்பில்   இருந்தாலும்  படிக்க  நேரம்  இல்லை . சும்மா  வாங்கி   வெச்சி

ருக்கேன் 


6    என் கிட்டே  இல்லாத  செல்வமே  இல்லை . தூக்கத்தைத்தவிர 


7  இறப்பதைத்தள்ளிப்போட நல்ல தூக்கம் தேவை 


8    பெங்காலிகள்  வீட்டில்  ஒவ்வொரு  வீட்டிலும் ஒரு ரைட்டர்  இருப்பார்   போலயே ?


9   உன்  கதையைக்கேட்டால்  கும்பகர்ணனுக்குக்கூடத்தூக்கம் வராது 


10    அவருடைய   கதைகளில் என் காதலைக்காண்கிறென்


11    உங்க  கணவர்  இங்கே  ஒர்க் பண்றாரா? 


 நான் சிங்கிளா? என்பதைப்பூடகமா கேட்கறீங்க போல 


  ச்சே  ச்சே  உங்க  மோதிர விரலில்   கல்யாண  மோதிரம்  இருப்பதைப்பார்த்துக்கேட்டேன் 


12    இந்த   உலகம்  யோசித்துக்கொண்டு  இருப்பவர்களுக்கானது அல்ல . ஆக்சனில்  இறங்குபவர்களூக்கு 


13     இந்த   உலகம்  சந்தோஷமாக இருப்பவர்களுக்கானது 


14    நானும்  , பாண்டும்.... 


 ஜேம்ஸ்பாண்டா?


 ச்சே  ச்சே  ருக்சின்  பாண்ட் 


15    தாகூர் , சரத் சந்திரர் , தேவதாஸ்   இவங்க  எல்லாருமே  பெங்காலி ரைட்டர்ஸ்  தான் , பெங்காளிகள் பல நல்ல ரைட்டர்கள் 


12       அவனோட  ஜாப்பே  செக்யூரிட்டி ஜாப் தான் . அதுல ஜாப் செக்யூரிட்டி இருக்கா?ன்னு கேட்டா  எப்படி ? 


13    ஆங்கிலேயர்கள்  இந்தியாவுக்கு  நல்லதும்  செயுது  இருக்காங்க  போல 


 நாட்டைக்கொள்ளை  தான்  அடிச்சிருக்காங்க 


14  ஒரு  நல்ல கதைக்கு அடையாளம்  அதன் க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட் இருக்கனும் 


15  சரஸ்வதிக்கும் , லட்சுமிக்கும் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை 


அடல்ட் கண்ட்டெண்ட்  வார்னிங் - யு


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   பொறுமைசாலிகள் , பெண்கள்  என  அனைவரும்  பார்க்கலாம் . ரேட்டிங்  3/ 5

0 comments: