Tuesday, February 04, 2025

EMILIA PEREZ(2024)-ஆங்கிலம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)@ அமேசான் பிரைம்


 EMILIA PEREZ (2024) - லத்தீன் அமெரிக்கன் ஸ்பானிஷ் மூவி - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( மியூசிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் , நெட் ஃபிளிக்ஸ் 


பல  திரைப்பட விழாக்களில் கலந்து  கொண்டு  பல விருதுகளைப்பெற்ற படம் இது .புதிய  முகம் (1993) , FACE OFF(1997)  இரு முகன் (2016) , அவ்வை சண்முகி (1996) , MRS  DOUBTFIRE (1993)  ஆகிய  படங்களீன்  டி வி டி யை பட்டி டிங்கரிங்க் மன்னன் அட்லீயிடம் கொடுத்து ஒரு படம் ரெடி பண்ணுங்க  என்றால் அவர் எப்படி ஒரு உல்டா படம் எடுப்பாரோ அப்படி ஒரு படமாக இது வந்திருக்கிறது . இப்படி பல படங்களின் கலவையான ஒரு கதைக்கு எப்படி உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்று வியப்பாகவும் இருக்கிறது .


 க்ரைம்  டிராமாவான இப்படம் பருவ ராகம் (1987)  படம், போல  மியூசிக்கல் டிராமாவாக அந்த வடிவத்தில் எடுத்திருப்பது இன்னொரு வியப்பு . ஒவ்வொரு சிச்சுவேஷனும்  பாடல் , டான்சால்  டெக்ரேட் செய்யப்பட்டிருப்பது  ஒரு புதுமையான அம்சம் தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


 விதி (1984) படத்தில் வரும்  டைகர் தயானிதி போல நாயகி ஒரு கிரிமினல் லாயர் . ஓப்பனிங்க் சீனிலேயே  ஒரு கேசில்  அவள் ஜெயிக்கிறாள் . சொந்த சம்சாரத்தைப்போட்டுத்தள்ளி விட்டு அது தற்கொலை என டிராமா ஆடும் புருசனின் கேஸ் அது . பணத்துக்காக தன் மனசாட்சியைக்கழட்டி ஓரம் வைத்து விட்டு அந்தக்கேசை  நடத்தி  அவனுக்கு சாதகமாக முடித்துக்கொடுக்கிறாள் நாயகி 


 மெயின்  கதைக்கும் மேலே சொன்ன   கிளைக்கதைக்கும்  சம்பந்தம் இல்லை . 


வில்லன் ஒரு பெரிய தாதா . அவன் நாயகியைக் கடத்தி வந்து ஒரு டீல் பேசுகிறான் . வில்லனுக்கு இந்த பரப்ரப்பு வாழ்க்கை  போர் அடித்து விட்டது . பொம்மலாட்டம், திட்டம் 2 ,  டாமினிக் அண்ட்  த லேடீஸ்  பர்ஸ் ஆகிய படங்களில் வரும்  நாயகி போல  பெண்  ஆக  மாற  ஆசைப்படுகிறான்  .  அவனுக்குப் பல எதிரிகள் இருப்பதால்  அவனைக்கொல்லத்துடிக்கிறார்கள் . அவர்களிடமிருந்தும் தப்ப வேண்டும் 


 அதனால் வில்லன் இறந்ததாக ஒரு டிராமா  போட்டு விட்டு  பெண்  ஆக மாறி புதிய வாழ்க்கை தொடங்க நாயகி உதவ வேண்டும்  என  உதவி கோருகிறான் . இதற்கு சம்பளமாக  பெரிய தொகை பேசப்படுகிறது 


 வில்லனுக்கு   ஒரு மனைவி , இரு குழந்தைகள்  உண்டு . வில்லன் இறந்ததாக டிராமா  ஆடி விட்டு  வில்லன் பெண்  ஆக  மாறி   தன் மனைவியிடமே  வந்து  நான்  உன் கணவனின்  சகோதரி  என்னுடனே    நீ இருக்கலாம்  என்கிறான். குழந்தைகள்  வில்லனை  ஆண்ட்டி ஆண்ட்டி  என சுற்றிச்சுற்றி வருகின்றன . அவ்வை  சண்முகி  படத்தில்  வருவது  போல   அப்பா - மகன்  செண்ட்டிமெண்ட்    சீன்கள்  அரங்கேறுகிறது 


 வில்லனின்  மனைவி  வேறு ஒருவனைக்கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள் . ஆனால் வில்லனுக்கு  இது பிடிக்கவில்லை 


 இதற்குப்பின்   நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி திரைக்கதை .


   நாயகி  ஆக  ஜோ  சல்தானா  பிரமாதமாக நடித்திருக்கிறார். நடனம் , பாடல்  என  அவர்  உடல் மொழியில் இளமைத்துடிப்பு 


வில்லன்  பெண்  ஆக  உருமாறிய பின்  வரும்  பெண்  கேரக்டரில்  கர்லா  சோஃபியா கஸ்கன் நடித்திருக்கிறார். இவர்  நிஜமாகவே  ஆண் ஆக இருந்து பெண்  ஆக  மாறியவர் . அதே  போல்  சிறந்த  நடிகைக்கான  விருது பெறும்  முதல்  திருனங்கையும் இவ்ர் தான் 


 வில்லனின்  மனைவி ஆக செலீனா  கோமீஸ்  அழகான பொம்மை பொல் வந்து போகிறார் 


 வில்லன்  பெண்  ஆக  மாறிய  பின்   அவரது  லவ்வர் ஆக வரும் பெண் ஆக   அட்ரியனா  பஸ்  சிறப்பாக நடித்திருக்கிறார் 


2018ல் எழுதபப்ட்ட  ஒரு  நாவலில் இருந்து  திரைககதை எழுதி இயக்கியவர்   ஜாக்கிஸ்  ஆடியண்ட் 


132  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது


சபாஷ் டைரக்டர்


1 பெண் ஆக மாறிய பின் வில்லன். தன் மனைவியிடம் உன் கணவனுக்கு நீ துரோகம் செய்தது உண்டா? என போட்டு வாங்கும் காட்சி ஆண்களின் சந்தேக புத்தியைப்பறை சாற்றும் சீன்


2. நாயகி நடனம் ஆடிக்கொண்டே பிரச்சனைகளை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த விதம்


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 வில்லனின் குழந்தைகள் இருவரும். பெண் ஆக மாறிய பின் அப்பாவின் வாசம் ஆண்ட்டியிடம் இருக்கு என உணர்கின்றனர்.ஆனால் வில்லனின் மனைவிக்கு இது தன் கணவன் தான் எனத்தெரியாதது ஏனோ?


2 வில்லன் பெண் ஆக மாறிய பின் இன்னொரு பெண்ணைக்காதலியாக ஏற்பது எப்படி?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+


சி பி எஸ் பைனல் கமெண்ட் - மாறுபட்ட  பழைய படங்களின் தொகுப்பைக்காண விரும்புபவர் பார்க்கலாம். .ரேட்டிங். 2.25 /5

0 comments: