Tuesday, March 05, 2024

எனக்கு எண்ட் டே கிடையாது -- தமிழ் - சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

   


 35  நாட்களில்  எடுக்கப்பட்ட  ஒரு  படம்  இந்த  அளவு  தரமாக  அமைந்தது ஆச்சரியமே.   படத்தின்  இயக்குநரே  நாயகனாக நடித்திருப்பது  ஹை  லைட். லொக்கேஷன்  ஒரே  ஒரு  பங்களா. அதில்   ஐந்து  பேரை  வைத்து  மொத்தப்படத்தையும்  லோ  பட்ஜெட்டில்  எடுத்தது  சிறப்பு 


6/10/2023   அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்  இப்போது 1/3/2024  முதல்  அமேசான்  பிரைம்  ஓடி டி  யில்  காணக்கிடைக்கிற்து .


ஸ்பாய்லர்  அலெர்ட்

. நாயகி  ஒரு  தொழில்  அதிபரின்   மனைவி, வியாபாரத்தில்  ஏற்பட்ட  நட்டம்  காரணமாக  பெரிய  பொருளாதார  இழப்பு , அதை  சரி  செய்ய  நாயகி  ஒரு  எம் எல்  ஏ  வின்  உதவியை  நாடுகிறாள். பெரிய தொகையை  கடனாகக்கேட்கிறாள் . இது  சம்பந்தமாக  அடிக்கடி   எம் எல்  ஏ  வை  சந்திக்க நேர்கிறது . ஆனால்  நாயகியின்  கணவர்  இதை  தப்பாக  நினைக்கிறார், இருவருக்கும்  ஏற்பட்ட  வாக்குவாதம், தள்ளு  முள்ளு  நடந்ததில்  நாயகி  தன்  கணவரைத்தாக்கி  விடுகிறாள்  . கணவர்  சீரியஸ்  கண்டிஷனில்  வீட்டில்  மயக்க  நிலையில்  இருக்கிறார்

நாயகன்  ஒரு  டாக்சி  டிரைவர்

நாயகி  நாயகனின்  டாக்சி  யில்  பயணம்  செய்து  தன்  வீட்டுக்கு  வருகிறாள். நாயகனையும்  உள்ளே  அழைக்கிறாள் . உள்ளே  வந்த பின்  தான்  நாயகனுக்கு  வீட்டில்  ஒரு  டெட்  பாடி  இருப்பது  தெரிய  வருகிறது . திடீர்    என  நாயகியும்  பேச்சு மூச்சு  இல்லாமல்  கிடக்கிறார்.


 அப்போது  வீட்டுக்கு  ஒரு  திருடன்  வருகிறான். பணம், நகை  எல்லாம்  கொள்ளை  அடித்து  வீட்டை  விட்டு  வெளியே  போக முடியாமல்  மாட்டிக்கொள்கிறான்


 அப்போது  நாயகிக்குப்பணம்  தருவதாகச்சொன்ன  எம் எல்  ஏ  வருகிறார். அவரும்  வீட்டில்  மாட்டிக்கொள்கிறார்


 இப்போது  வீட்டில்  இரு  பிணங்கள்  ( நாயகி &  நாயகியின்  கணவர் )   உயிருடன்  மூவர்.. இதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  நடித்து படத்தை  இயக்கி  இருக்கிறார்  விக்ரம்  ரமேஷ் நல்ல முகவெட்டு. ஆஜானுபாவகமான  தோற்றம் . நடிப்பும்  ஓக்கே  ரகம்.  இவர்  ஒரு  ரவுண்ட்  வர வாய்ப்பு  உண்டு 


 நாயகி  ஆக ஸ்வயம்  சித்தா   நடுவுல  கொஞ்சம்  பக்கத்தைக்காணோம் புகழ்  காயத்ரி  முகச்சாயலில்  இருக்கிறார். முதல்  அரை  மணி நேரம்  தான்  இவருக்கு  வாய்ப்பு . அதற்குப்பின்  மகளிர்  மட்டும் நாகேஷ்  போல்  படம்  முழுக்க  டெட்பாடியாகத்தான்  வருகிறார், முக  அழகு , கிளாமர்  இரண்டும் ஓக்கே 


திருடனாக  வரும்  கார்த்திக்  வெங்கட்  ராமன் , கணவன்  ஆக  வரும் ,முரளி  சீனிவாசன் ,  எம் எல் ஏ  வாக  வரும்   சிவக்குமார்  ராஜூ , , போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வரும்  சக்திவேல் வெங்கட்  ராமன்  நால்வருமே  கச்சிதமாக்  நடித்திருக்கிறார்கள் 


கலாச்சரண்  தான்  இசை , பின்னணி  இசையில்  டெம்ப்போ  ஏற்றுகிறார். தளபதி  ரத்தினம்  தான்  ஒளிப்பதிவு  ஒரே  பங்களாவை  2  மணி  நேரம்  மாறுபட்ட  கோணங்களில்  காட்ட  வேண்டிய  நிர்ப்பந்தம், சமாளித்து  இருக்கிறார். முகன்  வேல்  தான்  எடிட்டிங். 104  நிமிடங்களில்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  விக்ரம்  ரமேஷ் 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்  காட்சியிலேயே  எதிர்பார்ப்பைத்தூண்டி  முதல்  30  நிமிடங்கள்  கதைக்குள்  இழுத்துச்சென்ற  விதம் 


2  பின்  பாதி  திரைக்கதையை  காமெடியாகக்கொண்டு  சென்றது .. மிஸ்ட்ரி  த்ரில்ல்ர்    என  பிரமோ  செய்தாலும்  இது  காமெடி  க்ரைம்  ட்ராமா  என்பதே  சரி 


3  தேவையற்ற  காட்சிகள்  இல்லாமல்  குயிக்  வாட்ச்  ஆக  ஒன்றே  முக்கால்  மணி  நேரத்தில்  படத்தை  முடித்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  ஊர்  சுற்றுவது  எனக்கு  ரொம்பப்பிடிக்கும், இப்போ  கேப்  டிரைவ்ர்  ஆகிட்டேன். ஊர்  சுற்றுபவர்களை  வண்டில  ஏத்திக்கிட்டு நான்  இப்போ  ஊர்  சுத்தறேன் 


2     உங்க பேர்  என்ன?


 சேகர்  மேடம்


 உங்கப்பா பேரு  மேடமா?


 சும்மா  கலாய்க்காதீங்க


  ஜஸ்ட்  கிட்டிங்


 ரெண்டும்  ஒண்னுதான்


3  மேடம் , விஸ்கி , ரம், ஒயின்  தெரியும், அதென்ன  ஷகீலா?


 அது  ஷகீலா இல்லை , டகீலா


4  இந்தாளு  உன்  பேச்சைக்கேட்க  மாட்டேங்கறான்

  என்  பேச்சை  நானே  கேட்க  மாட்டேன் , இந்தாளு  எப்படி கேட்பான் ? 


5  கத்தியால  என்னைக்குத்தத்தெரியுது  இல்ல ? அதை  எடுக்கத்தெரியாதா?


6  நீ  ஒரு  திருடனா?


  அய்யோ , இல்லீங்கண்ணா , காஃபி  ஷாப்  ஓனர். பார்ட்  டைமா தான்  திருடன்


  உன் லைஃப்  டைமே  காலி ஆகப்போகுது, உன்  பார்ட்  டைம்  வேலையால


7 க்தவுக்கு  பாஸ்வோர்டு  போட்டு  லாக்  பண்ணவங்க  சிசிடிவி  கேமரா  ஃபுட்டேஜ்  இருக்கும்  சிஸ்டத்துக்கு  லாக்  போடலை


 டேய், கதவுக்கு  லாக்  போட்டதாலதான்  சிஸ்டத்துக்கு  லாக்  போடலை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பாஸ்வோர்டு  தப்பாப்போட்டதால்  செக்யூரிட்டி  சிஸ்ட,ம்  லாக்  ஆகிடுச்சு, அடுத்த  நான்கு மணி  நேரம்   கழிச்சுதான்  பாஸ்வோர்டு  போட்டு  க்தவைத்திறக்க முடியும், ஓக்கே.. கதவை  உடைச்சாலோ , ஜன்னல்  கதவை  உடைச்சாலோ  அலாரம்  அடிக்கும், அதுவும்  ஓக்கே, மாடிப்படி  வழியாக  மொட்டை  மாடி  போய்  அங்கே  இருந்து  பைப்  வழியாக  இறங்கி  இருக்கலாமே?


2  திருடன்  தான்  தேடி  வந்த  பணம், நகை  எல்லாம்  கிடைத்த  பின்  எஸ்  ஆகப்பார்ப்பானா?  ரூமில்  வேறு  யாரோ  இருக்கிறார்களே? என  தேடி  ஃபைட்  போட்டு  டைம்  வேஸ்ட்  பண்ணிட்டு  இருப்பானா? பணம்  கிடைச்சதும்  சிட்டாகப்பறந்து  இருக்கலாமே?


3  நாயகன் , திருடன் , எம் எல்  ஏ  மூவருமே  சிசிடிவி  ஃபுட்டேஜை  அழிக்கறாங்க, ஓக்கே , ஆனா  சரக்கு  அடிச்சு  அவங்க  கை  ரேகைகளை  டம்ளர்ல, பாட்டில்ல  விட்டுட்டு  போறாங்களே? 


4  கால்  தொடையில்  கத்திக்குத்து  வாங்கிய  எம் எல்  ஏ  தூங்கப்போவதாக  சொல்கிறார். பெயின்  கில்லர்  போட்டாலே  தூக்கம்  வராது . காயத்துக்கு  சிகிச்சையும்  எடுத்துக்காம, பெய்ன்  கில்லரும்  போட்டுக்காம  எப்படித்தூங்க  முடியும் ? 


5 நாயகன் , திருடன் , எம் எல்  ஏ  மூவருமே   ஒருவருக்கு  ஒருவர்  அறிமுகம்  ஆகாதவர்கள் , ஆனால்  நீண்ட  நாள்  நண்பர்கள்  போல  ஒருவரை ஒருவர்  காப்பாற்றத்துடிப்பது  ஏன் ? அவ்ளோ  நல்லவங்களா? அவனவன்  தப்பிக்கத்தானே  பார்ப்பான் ? 


6   நான்கு  டெட்  பாடிக்ள்  இருக்கும்  வீட்டுக்கு  வரும்  போலீஸ்  அந்த வீட்டை  அக்கு  வேறு  ஆணி  வேறாக  சல்லடை  போட்டு  தேடி  இருக்க  மாட்டார்களா? அவ்ளோ  பணத்தை  நாயகன்  அங்கே  மறைத்து  வைத்து  பின்  எடுக்க முடியுமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சின்னப்படம்  தான்  என்பதால்  த்ரில்லர்  ரசிகர்கள்  தாராளமாக இதைப்பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5 


Enaku Endey Kidaiyaathu
Theatrical release poster
Directed byVikram Ramesh
Written byVikram Ramesh
Produced byKarthik Venkatraman
Starring
  • Vikram Ramesh 
  • Karthik Venkatraman
  • Swayam Siddha 
CinematographyThalapathy Rathinam
Edited byMuganvel
Music byKalacharan
Production
company
Hungry Wolf Entertainments
Distributed byAction Reaction Jenish
Release date
  • 6 October 2023
CountryIndia
LanguageTamil

Monday, March 04, 2024

MANJUMMEL BOYS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சர்வைவல் த்ரில்லர் )

 


 22/2/2024   அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி   10  நாட்களிலேயே  75  கோடி  வசூலை  அள்ளிய  படம்  இது . மலையாள  சினிமா வின்  ஆல்  டைம்  பிளாக்  பஸ்டர்  ஹிட்  ஆன  புலி  முருகன்  படத்தின்  வசூல்  சாதனையை  விரைவில்  முறியடிக்கும்  என  பேசிக்கொள்கிறார்கள் . ஹீரோ  வேல்யூ  இல்லாமல் , திரைக்கதை   மற்றும்  டெக்னிக்கல்  அம்சங்களின்  உதவியோடு  ஆடியன்சுக்கு  கனெக்ட்  ஆகும்  விதத்தில்  படம்  எடுத்தால்  வெற்றி  உறுதி  என்பதை  மீண்டும்  ஒரு  முறை  அழுத்தமாகப்பதிவு  செய்திருக்கும்  படம் 


இந்தப்படத்தைப்பார்க்கும்  பெற்றோர்கள்  தங்கள்  வாரிசுகளை  நண்பர்களுடன்  டூர்  போகவே  அனுமதிக்க மாட்டார்கள்  என்பதால்  இது  ஒரு  வகையில்  விழிப்புணர்வுப்பதிவாகவும்  அமைகிறது .கொடைக்கானல்  குகையை  குணா  குகை  என்று  பெயர்  ஏற்படக்காரணமாக  இருந்த  குணா  படம்  ஃபிளாப், ஆனால்  அந்த  குணா  குகையை  மையமாக வைத்து  எடுக்கப்பட்ட  மலையாளப்படம்  மெகா  ஹிட் .  கமல்  மைண்ட்  வாய்ஸ்  என்னவாக  இருக்கும் ?   என்று  க்ற்பனையைத்தட்டி  எழுப்புகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நண்பர்கள்  கூட்டம்  ஆட்டம் , பாட்டம் , ரக்ளை  என்று  ஜாலியாக  ஒரு   திரும்ண  நிக்ழ்ச்சியில்  கலந்து  கொள்கிறார்கள் . அந்த  நிகழ்ச்சி  முடிந்ததும்  கொடைக்கானல்  டூர்  போக  பிளான்  போடுகிறார்கள் . ஒரு  ஜீப்பில்  நண்பர்கள்  10  பேர்  கொண்ட  குழு  கிளம்புகிறது 


 பழநி  மலையில்  சாமி  தரிசனம்  முடித்து  விட்டு  கொடைக்கானல்  போகும்போது  அங்கே  குணா  குகை  பார்க்கப்போகிறார்கள் .   இந்த  எல்லையை  மீறி  யாரும்  உள்ளே  போகக்கூடாது  என்ற  எச்சரிக்கையை  மீறி  ஆபத்தான  பகுதிக்குச்செல்லும்போது  ஒரு  ஆள்  மட்டும்  கால்  ஸ்லிப்  ஆகி  குழிக்குள்  அதல  பாதாளத்தில்  விழுந்து  விடுகிறான்


போலீஸ்  ,  ஃபாரஸ்ட்  ஆஃபீசர்ஸ்  எல்லோரும்  கை  விரித்து  விடுகிறார்கள் . அந்த  நண்பனை  எப்படிக்காப்பாற்றினார்கள்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகியோ , காதல்  காட்சிகளோ  இல்லாமல்  ஒரு  பிரம்மாண்ட  வெற்றிப்படத்தைக்கொடுக்க  முடியும் என்று  நிரூபித்த  இயக்குநருக்கு  ஒரு  சபாஷ் 


நண்பனை  மீட்கும்  நாயகன்  ஆக  சவுபின்  சாஹிர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  ஆபத்தில்  சிக்கிய   நண்பன்  ஆக  ஸ்ரீநாத்  பாஷி  அனுதாபத்தை  அள்ளிக்கொள்ளும்  பாத்திரத்தில்  பரிமளிக்கிறார். ,   கைதி புகழ்  மரியம்  ஜார்ஜ்  ஒரு  குணச்சித்திர  ரோலில்  வருகிறார்.  ராம்ஸ்  ஒரு  முக்கிய  ரோலில்  வருகிறார்.  நமக்குத்தெரிந்த  முகங்கள்  இந்த  நான்கு  பேர்  மட்டும்  தான் 


டெக்னிக்கள்  டீம்  மிரட்டி  இருக்கிறது . இசை   சிசின்  ஷியாம்  படம்  முழுக்க ஒரு  பதட்டத்திலேயே  அடியன்சை  வைத்திருக்க பின்னணி  இசை  பெரிதும்  உதவுகிறது . ஒளிப்பதிவாளர்  ஷைஜூ  காலிட்  கலக்கி  இருக்கிறார். குகைக்குள்  அவர்  வைக்கும்  காமரா  கோணங்கள்  பரவ்சத்தின்  உச்சியில்  நம்மை  நிறுத்துகின்றன. . விவேக்  ஹர்சன்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நெரம்  7  நிமிடங்கள்  ஓடுகின்றன 


 முதல்  30  நிமிடங்கள்  மலையாளபப்டங்களுக்கே  உரித்தான்  ஸ்லோவான  காட்சிகள் , நண்பர்கள்  அறிமுகப்படலம், 31  வது  நிமிடத்தில்  தான்  கதை  ஆரம்பம்  ஆகிறது .  31வது  நிமிடத்தில்  இருந்து  அடுத்த  90  நிமிடங்கள்  பரபரப்பான  காட்சிகள் 


எது  ஒரிஜினல்  குகை ? எது  செட்டிங்  என்பதை  கண்டுபிடிக்க முடியாமல்  திணறும்  அளவுக்கு  ரசிகர்களை  கட்டிப்போட்டு  இருக்கிறார்  ஆர்ட்  டைரக்டர் .


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சிதம்பரம்  எஸ்  பொதுவாள்


சபாஷ்  டைரக்டர்


1   நண்பர்கள்  குழு  சின்ன  வயதில்  சிறுவர்களாக  இருக்கும்போது   ஆபத்தில்  சிக்கிய  போது  காப்பாற்றப்படுவதை  நான்  லீனியர்  கட்டில்  டென்சன்  ஆன  திரைக்கதையில்  ஊடாலே  ஆங்காங்கே  ;புகுத்தி  இருப்பது  நல்ல  உத்தி 


2    தமிழர்களே  அதிகம்  பார்க்காத  குணா  படத்தின் பாடலை  ஒரு  மலையாளப்படத்தில்  டைமிங்காக  எப்படி  சேர்க்க  வெண்டும்  என்ற வித்தையை  இயக்குநர்  இறக்கி  இருக்கும்  விதம்  அபாரம் 


3    தன்  மகனைக்காப்பாற்றிய    நண்பனை  ஆரம்பத்தில்  திட்டிய  அம்மா  டி  வி  நியூஸில் , பேப்பர்  கட்டிங்க்  நியூசில்  ஃபோட்டோ  பார்த்து  கிளைமாக்சில்  நன்றி  தெரிவிக்கும்  காட்சி  நல்ல  எமோஷனல்  சீக்வன்ஸ் 


4  நண்பன்  ஒருவன்  பள்ளத்தில்  விழுந்து  விட்டான்  என்றதும்  திக் பிரமை  அடைந்து  பித்துப்பிடித்தவன்  போல்  ஆகும்  ஒருவன்   மீட்புப்படலத்தின்  போது  கயிறு  ஒரு  பாறை  இடுக்கில்  சிக்கிக்கொள்ளும்போது  அங்கே  வந்து  பள்ளத்தைப்பார்ப்பவனைப்பார்த்து  தற்கொலை  செய்யவோ  அல்லது  குதிக்கவோ  போகிறான்  என  எல்லோரும்  பயத்துடன்  பார்க்க  “ லூஸ்  அடிக்குடா”  என்று  ஐடியா  கொடுத்து  காப்பாற்றும்  காட்சி  தியேட்டரில் ஆரவாரக்கூச்சலை  எழுப்பிய  அட்டகாசமான காட்சி 


5 க்ளைமாக்சில்  நண்பர்கள்  குழு  கயிறை  இழுத்துக்காப்பாற்றும்  காட்சியை  நம்பகத்தன்மையை  அதிகப்படுத்த  ஓப்பனிங்  சீனில்  கயிறு  இழுக்கும்  போட்டியில் அவர்கள்  கலந்து  கொள்வதாகக்காட்டி  இருப்பது  நல்ல  டெக்னிக்


  ரசித்த  வசனங்கள் 


1   காசு  கொடுத்தா  என்ன  வேணா  செய்ய்  இந்த  ஊர்ல  ஆள் இருக்காங்க, ஆனா  மனுச  உயிர்  முக்கியம்  இல்லையா? 


2  உண்டியல்ல  போட்ட  காசு  மாதிரி  அவன்  குழில  விழுந்திருக்கான்


3   அவனை  ஏன்  சார்  பயமுறுத்தறீங்க ? குழில  விழுந்தவனைக்காப்பாற்றுவது  உங்களைப்பொறுத்தவரை  வேலை ,ஆனா அவனுக்கு  அப்படி இல்லை


4   சாவைப்பார்த்துட்டுத்திரும்பி  வந்திருக்கும்  நீ கடவுள்     மாதிரி , சாமி.. கும்பிட்டுக்குங்க  எல்லாரும் 


5  போலீஸ்  பணம்  பிடுங்க தான்  பார்ப்பாங்க

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  குணா  குகைக்குள்  ஒருவன்  விழுந்து  விட்டான் என்ற  தகவல்  கிடைத்ததும்மீட்புப்படையினர்  130  மீட்டர்  நீளம்  உள்ள  கயிறூ  தான்  கொண்டு  வருகிறார்கள் .  ஆனால்  டி வி  செய்தியில்  900  அடி  ஆழம்  உள்ள  குழியில்  விழுந்த  ஆள்  என  தகவல்  சொல்கிறார்கள் 


2  ஆக்சிஜன்  மாஸ்க்  இல்லாமல் , பயிற்சி  பெறாத  சாமான்யன்  குழிக்குள்  இறங்குவது  ரிஸ்க் . நண்பனுக்காக  என  செண்ட்டிமெண்ட்  ஆக  சீன்  வைத்தாலும்  பிராக்டிக்கலாக  ஓவர்  ரிஸ்க்  அது 


3  மழைத்தண்ணிர்  குழியில்  விழாமல்  தடுக்கிறோம்  என  நண்பர்கள்  பாதையில்  படுப்பதும் , பின்  மழைத்தண்ணீர்  குழியில்  விழுந்ததால்  ஆக்சிஜன்  லெவல்    போதுமான  அளவில் இருக்கும்  எனவும்  முரண் பட்ட  இரு  வேறு  தகவலகள்   குழப்புகின்றன 


4   ஆபத்தில்  இருந்து  மீண்ட  நண்பனை  எல்லாரும்  கொண்டாடுகிறார்கள் , ஆனால்  காப்பாற்றிய  நண்பனுக்கு  போதுமான  பாராட்டு  கிடைக்கவில்லை . அதை  சரியாகக்காட்சிப்படுத்த  வில்லை . ஒரு  வேளை  காப்பாற்றப்பட்ட  நபர்ன்  அம்மா  நாயகனுக்கு  நன்றி  சொல்லும்  காட்சி  வீரியமாக  இருக்க வேண்டும்  என்று  நினைத்திருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரலாவில்  மட்டும்  இல்லாமல் இந்தியா  முழுக்க  குறிப்பாக  தென்  மாநிலங்களில்  மக்கள்  கொண்டாடித்தீர்க்கும்  படம்  இது , டோண்ட்  மிஸ்  இட் . இது  ஓடிடி  யில்  பார்ப்பதை  விட  தியேட்டரில்  மக்களின்  ஆரவாரங்களுக்கு  இடையே  பார்ப்பது  நல்லது . ரேட்டிங்  3 / 5   


Manjummel Boys
Theatrical release poster
Directed byChidambaram S Poduval
Written byChidambaram S Poduval
Produced bySoubin Shahir
Babu Shahir
Shawn Antony
StarringSoubin Shahir
Sreenath Bhasi
Balu Varghese
Ganapathi S. Poduval
Lal Jr.
Deepak Parambol
Abhiram Radhakrishnan
Arun Kurian
Khalid Rahman
Chandu Salimkumar
Vishnu Reghu
CinematographyShyju Khalid
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
company
Parava Films
Distributed bySree Gokulam Movies through Dream Big Films
Release date
  • 22 February 2024
CountryIndia
LanguageMalayalam
Box office75crore[1]

Sunday, March 03, 2024

BLUE STAR (2024) -ப்ளூ ஸ்டார் - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


விமர்சன  ரீதியாகவும், வசூல்  ரீதியாகவும்  பலரின்  பாராட்டுதல்களைப்பெற்ற  இப்படம்  25/1/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


அசோக்  செல்வனுக்கு  போர்த்தொழில் , நித்தம்  ஒரு  வானம் ,சபா நாயகன்  என  தொடர்ந்து  வெற்றிப்படங்களாகவே  அமைந்து  வருவது  திருமணம்  ஆன  ராசியால்  கூட இருக்கலாம். சாந்தனு  கே  பாக்யராஜ்க்கு  நீண்ட  இடைவெளிக்குப்பின்  பெயர்  சொல்லும்  விதமாய்  ஒரு  படம் . 


 தனது  படங்களில்  ஜாதி  ரீதியிலான  கருத்துக்களை  முன்  வைக்கும்  இயக்குநர்  பா  ரஞ்சித்தின்  சொந்தப்படம்  இது . எஸ்  ஜெயக்குமார்  என்ற  இயக்குநரின்  வெற்றிப்படம்  இது கிரிக்கெட் விளையாட்டின்  மீது  ஆர்வம்  உள்ளவர்கள்  மிகவும்  ரசித்துப்பார்க்கும்  படமாக  அமைந்தாலும்  கிரிக்கெட்டே  தெரியாதவர்களும்   பார்த்து  ரசிக்கும்  ஜனரஞ்சகமான  ஸ்போர்ட்ஸ்  டிராமா  தான்  இது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழ்  நாட்டில்  திமுக , அதிமுக  என  இரு  பெரும்  கட்சிகள்  எதிரும்  புதிருமாய்  பல  ஆண்டுகளாக  மாறி  மாறி  ஆட்சி  அமைத்து  வருகின்றன.சமீபத்தில்  அதிமுக  பாஜக  உடன்  கூட்டணி  அமைத்து   தேர்தலை  சந்தித்தது. ஒரு  கட்டத்தில்  5 %  வாக்கு  வங்கி  உள்ள  பாஜக 37 %  வாக்கு  வங்கி  உள்ள  அதிமுக  வை  மிகவும்  மட்டமாக  நடத்த  அதிமுக  தன்  கூட்டணியை  முறித்துக்கொண்டது . இ[போது   திமுக, அதிமுக  என  இரு  கட்சிகளுமே  பாஜக  வை  தீவிரமாக எதிர்க்கின்றன . இது  தான்  படத்தின் மையக்கரு 


ப்ளூ  ஸ்டார் , ஆல்ஃபா  என  இரு  வெவ்வேறு  கிரிக்கெட்  டீம்  அந்த  ஊரில்  மிகப்பிரபலம்.  இரு  அணிகளுக்கும்  அடிக்கடி  மோதல். ஒரு  முறை   ஆல்ஃபா  டீம்  வெளியூர்  அணி  ஒன்றின்  உதவியுடன் ப்ளூ  ஸ்டார் அணியைத்தோற்கடிக்கிறது .பணத்துக்காகத்தான்  அந்த  வெளியூர்  அணி  ஆல்ஃபா  அணியுடன்  கூட்டணி  வைத்தது  என்றாலும்  ஒரு  கட்டத்தில்  ஆல்ஃபா  அணியை  வெளியூர்  அணி  மட்டம்  தட்டுகிறது . இதனால்  வெகுண்டு  எழுந்த  ஆல்ஃபா  அணி  ப்ளூ  ஸ்டார்  அணியுடன்  கூட்டணி  அமைத்து  வெளியூர்  அணியை  எப்படி  வெற்றி  கொள்கிறது  என்பதுதான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  அசோக்  செல்வன், மீசை  இல்லாத  தமிழ்  சினிமா  ஹீரோக்களில் இவரும்  இடம்  பிடிக்கிறார். அவரது  முகத்தில்  கோபம்  நன்கு  வருகிறது . முந்தைய  படங்களில்  எல்லாம்  ஏ  செண்ட்டர்  ஆடியன்சுக்கான சாஃப்ட்  ஹீரோ  ஆக  மோகன்  போல, சுரேஷ்  போல  பெண்களைக்கவர்ந்த  அவர்  இப்போது பி  செண்ட்டர்  ஆடியன்சைக்குறி  வைக்கிறார். 


 இன்னொரு  நாயகன்  ஆக சாந்தனு  கே  பாக்யராஜ் கேரக்டரை  உணர்ந்து  நடித்து  இருக்கிறார். நாயகனுக்காக  மோதிரத்தைக்கழற்றித்தரும்  காட்சியில்  கை  தட்டலை  அள்ளுகிறார். 


நாயகி  ஆக  கீர்த்தி  பாண்டியன்  அழகான முக  அமைப்பு , வித்தியாசமான  டயலாக்  டெலிவரி  என  அசத்துகிறார். பகவதி  பெருமாள்  கோச்சர்  ஆக  நன்கு  நடித்து  இருக்கிறார். நாயகனின்  அப்பாவாக  இளங்கோ  குமாரவேல்  அமைதியாக  வந்து    போகிறார். 


கோவிந்த்  வசந்தா  வின் இசையில்  ஐந்து  பாடல்கள் . மூன்று  ஹிட் ஆர்  கே  செல்வாவின்  எடிட்டிங்கில் இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது . பின்னணி  இசை  பல இடங்களில்  கலக்கல்  ரகம் 


தமிழ்  ஏ  அழகனின்  ஒளிப்பதிவில்  நாயகர்கள் , நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்களில்  அவர்களை ஆழகாகக்காண்பிக்கிறார். 


தமிழ்பிரபாவின்  உதவியுடன்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  எஸ்  ஜெயக்குமார் 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  கேரக்டர்  டிசைன்  அருமை . வழக்கமாக  லைலாக்கள் , ஜெனிலியாக்கள்  மாதிரி  லூஸ்  நாயகிகளையே  பார்த்து  இது  மாதிரி  மெச்சூர்டு  பர்சனைப்பார்க்க்க  அவ்ளோ இதமாக  இருக்கிறது 

2  க்ளைமாக்சில்  புது  பிளேயர்  புல்லட் பாபுவுக்கான  பில்ட ப்  பிரமாதம் .டான்சிங் ரோஸ்க்கு  நிகர். அம்ப்பயர்  அவுட்  கொடுக்காத போதும்  ஜெண்ட்டில் மேனாக  நடந்து  கொண்டு  தானாக  வெளியேறுவது  சச்சின்  பாணி 

3  நாயைக்க்ல்லால்  அடிப்பதற்கும், தேன்  கூட்டின் மேல்  கல்  அடிப்பதற்கும்  உள்ள வித்தியாசத்தை  விளக்கும்  இடத்தில்  வசனகர்த்தா  சிக்சர்  அடிக்கிறார்


  ரசித்த  வசனங்கள் 

1  மோதிப்பார்க்கும்வரை  அவனவனுக்கு  அவனவன்  தான்  வெயிட்டு 


2  ஸ்போர்ட்ஸ்னு ஒண்ணு  இருந்தாதான்  டிசிப்ளின்  இருக்கும் 


3   யார்  கிட்டே  தோத்தோம்னு  பார்க்கக்கூடாது , ஏன்  தோத்தோம்னு பார்க்கனும், அதை  எபப்டி  சரி  பண்றதுன்னு  பார்க்கனும்


4  நம்மை  எல்லாம்  மதிக்கவே  மாட்டாங்க 


 திறமையைக்காட்டினா  மதிக்கப்போறாங்க 


5  நம்மை  ஏதாவது  ஒண்ணு அழ  வைக்குதுன்னா  அதுக்கு  நாம  உண்மையா  இருக்கனும்னு  அர்த்தம்


6 முத  தடவையே  ஜெயிச்சுட்டா  அதனோட  அருமை  தெரியாது 


7  என்ன  விவேகானந்தர்  மாதிரி  பேசறே?


 நல்லவங்க  எல்லாரும்  ஒரே  மாதிரிதான்  நினைப்பாங்க , பேசுவாங்க 


8  நம்ம  எதிரி  இவன்  தான்னு  முடிவானபின்  அவனை  விட  பலமா  நாம்  உழைக்கனும் 

9  வெறுப்பு  அழிவுக்குதான்  அழைத்துச்செல்லும், நிதானம்  நிறைய  சொல்லித்த்ரும் 

10  சேராம  இருக்க 1000  காரணங்கள்  இருக்கலாம், ஆனா  சேர்ந்து  விளையாட  ஒரே  காரணம்  போதும்,அது  என்ன?னு  நீங்களே  யோசிங்க

11  உனக்குன்னு  ஒரு  நேரம்  வரும்  காத்திரு, விட்ராத

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நீங்க  ரெண்டு  பேரும் சேரனும்  என  பக்ஸ்  வீர  வசனம்  பேசும்போது  அந்த  இடத்தில்  நாலஞ்சு  பேர்  தூக்கக்கலக்கத்தில் இருப்பதாகக்காட்டியதைத்தவிர்த்திருக்கலாம்

2  இரு  நாயகர்களும்  எலியும்,  பூனையுமாக  அடித்துக்கொண்டு  இருந்தபோது  இருந்த  வீரியம்  இருவரும்  இணையும்போது  கூஸ்பம்ப்  மொமெண்ட்  ஆக  காட்டி  இருக்க  வேண்டும்,  ரொம்ப  சாதா  சீனாக  இருந்தது 

3  நாயகியின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  பிரமாதம்,  அவரது நடிப்பும்  அட்டகாசம், ஆனால்  சில காட்சிகளில்  லைட்டா  ஓவர்  ஆக்டிங் 

4 ஃபைனல்  மேட்ச்  நடக்கும்போது கிரவுண்டில்  வந்து  பக்ஸ்  எதிரணி  டீமின்  பலம்  என்ன? பலவீனம்  என்ன?  என  பாடம்  ந்டத்திக்கொண்டு  இருக்கிறார். இது  இரண்டு  நாட்கள்  முன்னமே  செய்தால்  என்ன? அப்போதுதான்  எதிர்  டீம்  எது ? என  தெரிந்ததா? 

5   ஜென்மப்பகைவர்களாக  இருந்த  ப்ளூ ஸ்டார்  டீம், ஆல்ஃபா  டீம்  இரண்டும்  இணையும்போது  டீம்  பேரு  புதுபேர்  வைக்கனும், அல்லது  இரு  டீம்  பேரின்  பாதிப்பெயர்கள்  மெர்ஜ்  ஆகி  இருக்கனும், இரண்டும்  இல்லாமல்  ப்ளூ  ஸ்டார்  பேர்  வைக்க  எப்படி  ஆல்ஃபா  டீம்  ஒத்துக்கொண்டது ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இயக்குநர்  ரஞ்சித்  தயாரித்த  படங்களிலேயே  ஜாதி  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  அதிகம்  இல்லாமல்   ஜனரஞ்சகமான  சினிமாவாக  அமைந்த  படம்  இது . ரேட்டிங்  3 / 5 


Blue Star
Theatrical release poster
Directed byS. Jayakumar
Written byS. Jayakumar
Thamizh Prabha
Produced byPa. Ranjith
R. Ganesh Murthy
G. Soundarya
StarringAshok Selvan
Shanthanu Bhagyaraj
Keerthi Pandian
CinematographyThamizh A. Azhagan
Edited bySelva R. K.
Music byGovind Vasantha
Production
companies
Neelam Productions
Lemon Leaf Creation Pvt Ltd
Distributed bySakthi Film Factory
Release date
25 January 2024
CountryIndia
LanguageTamil

Saturday, March 02, 2024

BRAMAYUGAM (2024) - மலையாளம் - பிரம்ம யுகம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( டார்க் ஃபேண்ட்டசி ஹாரர் த்ரில்லர் )

 


   28  கோடி  ரூபாய்   பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு    முதல்  11  நாட்களீல் 50  கோடி  வசூல்  செய்த  படம். இது  ஒயிட் அண்ட்  பிளாக்  படம்  தான்  என்றாலும்  விமர்சகர்களால்  வானளாவ  பாராட்டப்பட்டது . நடிப்பு , சவுண்ட்  டிசைனிங் , ஒளிப்பதிவு ,  பின்னணி  இசை , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல் அம்சங்களில்  டிஸ்டிங்க்‌ஷன்  வாங்கிய  படம்   15/2/2024  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆனது 


ஐந்தே  கேரக்டர்களை  வைத்து  எடுக்கப்பட்ட  படம் இது . 2019ல்  ரிலீஸ்  ஆன  த லைட் ஹவுஸ்  என்ற  ஹாலிவுட்  படத்தின்  அட்லி  ஒர்க்  தான் இது . சீன்  பை  சீன் அட்டக்காப்பி  அடிக்காமல்  அந்தக்கதை, திரைக்கதையின்  தாக்கத்தில்  உருவான  படம் இது . ஒரிஜினல்  வெர்சனை  விட  இந்தப்படம்  தரத்தில்  நல்ல  தரமான  படமாக  வந்திருப்பதாக  பலரும்  கூறுகின்றனர். நான்  லைட்  ஹவுஸ்  படத்தைப்பார்க்கவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


   கதை  நடக்கும்  கால கட்டம்  17 ஆம்  நூற்றாண்டு . கதை  நிகழும்  இடம்  ஒரு  வனப்பகுதி.   நாயகன் பாட்டுப்பாடும்  பாணர்  குலத்தைச்சேர்ந்தவன் , கானகத்தில்  வரும்போது  வழி  தவறி  ஒரு  பாழடைந்த   வீட்டில்  தஞ்சம்  அடைகிறான்.   அந்த  வீட்டில்  வில்லனும், அவனது  சமையற்காரனும்  வசித்து  வருகிண்றனர்


  வில்லன்   உயர்ந்த  குடியைச்சேர்ந்தவன் .   சமையற்காரன்  அவருக்குக்கீழே  இருப்பவன் . நாயகன்  இருவருக்கும்  இடைப்பட்ட   சாதி . சாதி  வித்தியாசத்தை  வைத்து  ஆட்களை  நடத்தும்  பாணி, பழக்கம்  இக்கதையில்  சொல்லப்படுவதால்  இந்த விளக்கம்


 பா  ரஞ்சித்  படங்களில்  தான்  இந்த  மாதிரி  வில்லன் உயர்ந்த  ஜாதி , நாயகன்  தாழ்ந்த  சாதி  என்று  கதைப்போக்கு  சொல்லப்படும் 


 நாயகனின்  பாடல்  பாடும்  திறமை  கண்டு  வில்லன்  அவனது  வீட்டில்  தங்கிக்கொள்ள  அனுமதிக்கிறான் 


 சில  நாட்களில்  நாயகனுக்கு  அந்த  வீட்டில்  சில  மர்மங்கள்  இருப்பது  தெரிய  வருகிறது . வீட்டின்  பின்  புறத்தில்  சில  சவக்குழிகள்  வெட்டப்பட்டு  மூடப்பட்டிருப்பதைப்பார்க்கிறான். அடுத்த  பலி  தான்  தான்  என்பதை  உணர்கிறான்


 அந்த  வீட்டில் இருந்து  தப்பிக்க  முயற்சிக்கிறான், ஆனால்  முடியவில்லை.சமையல்காரன்  மற்றும்  நாயகன்  இருவரும்  சேர்ந்து  வில்லனை  ஒழிக்க  திட்டம் போடுகின்றனர், இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக   அர்ஜூன்  அசோகன்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  அவரது  உடல் மொழி , சிகை  அலங்காரம்  எல்லாம்  அந்தக்கால  ஆசாமி  போலவே  இருப்பது  சிறப்பு 


 வில்லன்  ஆக  மெகா  ஸ்டார்  மம்முட்டி . சாத்தான்  மாதிரி  கேரக்டர் . சமையற்காரன்  அவரை  எசமான்  என்று  அழைக்கும்போதெல்லாம்  அவர்  முகத்தில்  தவழும் புன்னகை  அருமை .  நாயகனுடன்  பேசும்  சில  தருணங்களில்  காட்டும்  பல்வேறு  உணர்ச்சிகள்  நவரச  நடிப்பு


சமையற்காரனாக  சித்தார்த் பரதன்  கச்சிதமான  நடிப்பு . ஒரு  கட்டத்தில்  இவர்  வில்லன்  ஆகி  விடுவாரோ  என்று  திரைக்கதை  நகர்வது  குட் 


  யட்சி  ஆக  மோகினி  மாதிரி  ஒரு  கேரக்டரில்   அமல்டா  லிஸ்  அழகாக  வந்து  போகிறார். இவருக்கு  அதிக   வேலை இல்லை .   ஒரே  ஒரு  காட்சியில்  மணிகண்டன்  ஆச்சாரி  நடித்துள்ளார்.


  மேலே  சொன்ன  இருவருக்கும்  அதிக  வேலை  இல்லை, அதிக  காட்சிகள் இல்லை  என்பதால்  நாயகன் , வில்லன், சமையற்காரன் என்று  மூவரைச்சுற்றியே  கதை  நகர்ந்தாலும்  படம்  போர்  அடிக்கவில்லை . ஒரு  ஹாரர்  த்ரில்லருக்கு  உரிய  சஸ்பென்ஸ்  உடன்  கதை  நகர்கிறது 


டெக்னிக்கல்  ஃபீம்க்கு  ஒரு சபாஷ் போட்டே  ஆகவேண்டும் 


  பின்னணி  இசையில்  திகில் ஊட்டி  இருக்கிறார்   கிறிஸ்டோ  சேவியர். ஒயிட்  அண்ட்  பிளாக்கில்  ஒளிப்பதிவு  செய்து  அந்தக்கால  கட்டத்தைக்கண்  முன் கொண்டு  வருகிறார்  ஒளிப்பதிவாளர்   ஷென்னத்  ஜலாலின்     ஷபீக் முகமது   அலி  கட்ஸ்-ன்  எடிட்டிங்கில்   படம்  ரெண்டே  கால்  மணி நேரம்  ஓடுகிறது 


படத்தில்  மூன்று  பாடல்கள்.  ஸ்பீடு  பிரேக்கர்கள் ஆனாலும்  ரசிக்க  வைக்கிறது 


 திரைகக்தை  எழுதி  இயக்கி இருக்கிறார்     ராகுல்  சதசிவம் 




சபாஷ்  டைரக்டர்  (  ராகுல்  சதசிவம் ) 


1   மம்முட்டியின்  கெட்டப் மற்றும்  அவரது  உடல்  மொழி   அட்டகாசம் 


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  யட்சியின்  கேரக்டர்  டிசைன்  ஒரு   ரிலாக்ஸ்


3    படத்தின்  பின்  பாதி  முழுக்க  மழை  வந்து  கொண்டே  இருப்பது  போல காட்சி  அமைத்திருப்பது  ஒரு  பிளஸ் 


4  ஆர்ட்  டைரக்டர்  சோதி  சங்கரின்  அபாரமான உழைப்பு 



  ரசித்த  வசனங்கள்   (  பிரபல  எழுத்தாளர்  ஐ டி  ராமகிருஷ்ணன் ) 


1    காலத்தைப்போல  முடிவில்லாம  ஓடும்  ஆறு  எதுவும் இல்லை 


2   உதவி  செய்யறேன்னு  ஒருத்தர்  சொல்றப்ப  அதை மறுப்பது  அவரை  அவமானப்படுத்துவது  போல 


3  வந்த  விருந்தாளி  அரசனா  இருந்தாலும்  ஆண்டியா  இருந்தாலும் வரவேற்கனும் 


4   நாம  ஜெயிக்க  யோகம்  மட்டும்  போதாது , புத்தியும்  வேணும் 


5   விதைக்காம  அறுவடை  செய்ய  முடியாது , இது இயற்கையின்  நியதி 


6  காலத்தை  விட  உயர்ந்தது , விலைமதிப்பில்லாதது  வேற  எதுவும் இல்லை 


7  அதிகாரத்தைக்கையில்  வெச்சிருக்கறவங்க  அடுத்தவங்க  சுதந்திரத்தை  கட்டிப்போட  உரிமை  இல்லாதவங்க 


8  சாத்தானுக்கு  ஒரே  ஒரு  லட்சியம்  தான் . யாருக்கும் அதிகாரத்தை  விட்டுக்கொடுக்காம தாமே வாழனும்  என்பதுதான். அதுக்கு  நாம  விடக்கூடாது 


9  நீ  ரெண்டு  தடவை  விதியோட  விளையாட  விரும்பறியா?


 எனக்கு  ஒரு  வாய்ப்புத்தாங்களேன் ?


 அப்போ   அதை  விதினு  சொல்ல  முடியாது 


10  மரணம் , ஒரு  அரிய  வரம், அதுக்குப்பின்  யாருக்கும் ஒண்ணுமில்லை அதுதான் நிரந்தரமான  முடிவு 


11  உங்களுடைய  உண்மையான  சுய  ரூபத்தை  நான்  பார்க்கனும்\\

அதுக்கு  இன்னும் சமயம்  வர்லை , எல்லாம்  முன் கூட்டியே  தீர்மானிக்கபட்டதுதான். யாராலும்  அதைத்திருத்தி  எழுதிட  முடியாது 


12  சாத்தான்  என்ன  சொன்னாலும்  நம்பாதே , அது  பொய்  மட்டும் தான்  சொல்லும், நம்ம மனசைப்போட்டு  குழப்பும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அந்த  வீட்டை  விட்டு  தப்பிக்க  நினைக்கும்போது  இரவிலோ , அதிகாலையிலோ  தப்பாமல்  பட்டப்பகலில்  தப்ப  ,முனைந்து  மாட்டிக்கொள்கிறான் 


2  வில்லனின்  இடுப்பு  வேட்டி  மடிப்பில்  மறைத்து  வைத்திருக்கும்  சாவியை  அடைய   பகலில்  வில்லன் கண்  அசரும்போது  முயற்சித்து   மாட்டுகிறான். வில்லன்  குளிக்கும்போது  முயற்சித்து  இருக்கலாம் 


3  வில்லனைப்பற்றிய  ரகசியங்கள்  எல்லாமும்  சமையற்காரனுக்குத்தெரியும்  என்ற  ரகசியம்  வில்லனுக்கு  ஏன் தெரியவில்லை ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  படங்களை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம்,  பொது  ரசிகர்களுக்கு  படம்  போர்  அடிக்கலாம். ரேட்டிங்  3 / 5 


Bramayugam
Theatrical release poster
Directed byRahul Sadasivan
Screenplay by
Story byRahul Sadasivan
Produced by
Starring
CinematographyShehnad Jalal
Edited byShafique Mohammed Ali
Music byChristo Xavier
Production
companies
Distributed by
  • Aan Mega Media (Kerala)
  • Sithara Entertainments (AP&TS)
  • AP International (Rest of India)
  • Truth Global Films (Overseas)
Release date
  • 15 February 2024
Running time
139 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹27.73 crore[1]
Box office₹50 crore[2]

Friday, March 01, 2024

லால் சலாம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம்


ஐஸ்வர்யா  ரஜினி  இயக்கிய  முதல்  படமான  3  (2012) கமர்ஷியலாக  அட்டர்  ஃபிளாப்  ஆனாலும்  விமர்சன  ரீதியாக  பாராட்டுப்பெற்றது. தன்  கணவரையே (தனுஷ் )  நாயகனாக   நடிக்க  வைத்து  நெருக்கமான  காதல்  காட்சிகளை  ஸ்ருதி  கமலை  வைத்து  இயக்கி  தேவை  இல்லாமல்  தன்  தலையில்  தானே  மண்ணை  அள்ளிப்போட்டுக்கொண்டார் . க்ரைம்  த்ரில்லராக  இவர்  இயக்கிய  வை  ராஜா  வை (2015) சுமாராகப்போனது . சினிமா  வீரன்  ( 2017)  என்ற  டாக்குமெண்ட்ரி  ஃபிலிமை  இயக்கினார். 7  வருட  இடைவெளிக்குப்பின் ரஜினியை  கெஸ்ட் ரோலில்  நடிக்க  வைத்து  பிரமோஷனில்  ரஜினி  படம்  மாதிரியே  பில்டப்  கொடுத்தும்  பெரிய  ஓப்பனிங்  கிடைக்கவில்லை 90 பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  23  கோடி  மட்டுமே  வசூலித்த  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  கிராமத்தில்  முஸ்லீம்கள் , இந்துக்கள்  ஒற்றுமையாக  வாழ்கின்றனர். ஆனால்  அந்த  ஊரில்  இருக்கும்  ஒரு  சாதிக்கட்சித்தலைவருக்கு  அது  பிடிக்கவில்லை . கிரிக்கெட்  போட்டி மூலம்  ஊர்  மக்களை  இரண்டாகப்பிரிக்க  திட்டம்  இடுகிறார்,


  மும்பையில்  பெரிய  டானாகவும் , டெக்ஸ்டைல்  அதிபராகவும்  இருக்கும்  நாயகன்  ஒரு  முஸ்லீம்  , அவரது  மகன்  தமிழக கிரிக்கெட்  டீம்க்காக  விளையாடுவதில்  ஆர்வம்  உள்ளவன்


நாயகனின்  நண்பன்  ஒரு  இந்து  , அவரது  மகனுக்கும்  முஸ்லீம்  ஆன  நாயகனின்  மகனுக்கும்  கிரிக்கெட்  போட்டியில்  நடந்த  தகறாரில்  பிரச்சனை  ஏற்படுகிறது . இதில்  நாயகனின்  மகனின்  வலது  கையை  வெட்டி  விடுகிறான்  நண்பனின்  மகன்,  இதனால்  இந்து  முஸ்லீம்  பிரச்சனை  ஏற்படுகிறது. ஊரில்  தேர்த்திருவிழா  நடைபெற  இருக்கும்    சூழ்நிலையில்  நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான்  என்பதே  மீதி  திரைக்கதை 



கெஸ்ட்  ரோல்  என்று  சொல்லப்ப்ட்டாலும்  படம் முழுக்கவே  பயணிக்கும்  நாயகன்  ரோலில்  ரஜினி கலக்கி  இருக்கிறார். தன்  மகன்  கை  வெட்டப்பட்ட சேதி  அறிந்து  கலங்கும்  காட்சி  அருமை . ஒவர்  பேசும்  மத  நல்லிணக்க  வசனங்கள்  கவனிக்க  வைக்கின்றன


நாயகனின்  மகனாக  விக்ராந்த்  கச்சிதமான  நடிப்பு . கிரிக்கெட்டின்  மேல்  உயிராக  இருக்கும்போதும்  தன்  லட்சியம்  நிறைவேறத்  தடையாக  இருக்கும் தன்  ஊனத்தின்  மீது  சுய இரக்கம்  தோன்றி  தற்கொலைக்கு  முயலும்போதும்  கலங்க  வைக்கும்  நடிப்பு 


 நாயகனின் நண்பனின்  மகனாக  விஷ்ணு  விஷால்  கோபக்கார  முரட்டு  இளைஞராக  கவனிக்க  வைக்கிறார். இவருக்குத்தான்  படத்தில்  அதிக  பங்களிப்பு , பாத்திரத்தை  உணர்ந்து  செய்து  இருக்கிறார்


ரஜினிக்கு  ஜோடியாக  நிரோஷா , விஷ்ணு  விஷாலின்  அம்மாவாக  ஜீவிதா  என  பாத்திரத்தேர்வு  இயக்குநரின்  வித்தியாசமான  ரசனையை  உணர்த்துகிறது. ஊர்ப்பெரிய  மனிதராக  வரும்  தம்பி  ராமய்யாவின்  நடிப்பும்  குட் 


இசை  ஏ  ஆர்  ரஹ்மான். மார்க்கெட்டிங்க்கு  உதவிய  அளவு  ரிசல்ட்டில்  உதவவில்லை . மூன்று  பாடல்கள்  பாஸ்மார்க்  வாங்குகின்றன.  


கதை , திரைக்கதை , ஒளிப்பதிவு  ஆகிய  பணிகளை  செய்திருக்கிறார்  விஷ்ணு  ரங்கசாமி .பிரவீன்  பாஸ்கர்  எடிட்டிங்கில்  படம் 150  நிமிடங்கள்  ஓடுகிறது.கிரிக்கெட்  மேட்ச்  , ஊர்  திருவிழா , இந்து  முஸ்லீம்  பிரச்சனை  என  மாறி  மாறி  கதைக்களம்  இயங்குவதால்  லேசான  குழப்பம், இன்னும்  தெளிவாக திரைக்கதை  அமைத்து  இருக்கலாம் 


திரைக்கதை  உதவி  மற்றும்  இயக்கம் என  இரு  பணிகளை  செய்து  இருக்கிறார்  ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்


சபாஷ்  டைரக்டர்


1  மத  நல்லிணக்கத்தை  வலியுறுத்தும்  கதைக்கரு  மற்றும்  க்ளைமாக்ஸ்  காட்சி 


2  ஒரு  கை  வெட்டுப்பட்ட  முஸ்லீம் நபரின் இடது  கையால்  தேரின்  வடம் பிடிக்க  முயலும்போது  முதல்  முதலாக  வடம் பிடிக்கும்போது  இடது  கையால்  பிடிக்கக்கூடாது  என  கூட்டத்தில்  ஒருவர்  சொல்ல  ஒரு  இந்து  தன்  வலது  கையால்  முஸ்லீம்  நபரின் இடது  கையை  அரவணைத்து  வடம்  பிடிக்கும் காட்சி டச்சிங்   சீன்


3  எலியும் , பூனையுமாக  இருந்த  இரு  கேரக்டர்கள்  க்ளைமாக்சில்  என்ன  ஆவார்கள்  என்ற  எதிர்பார்ப்பை  ஏற்படுத்திய  விதம் 

  சாங்க்ஸ்


1  தேர்த்திருவிழா

2   ஏ  புள்ள

3   திமிறி  எழுடா

4  ஜலாலி


  ரசித்த  வசனங்கள் 

1  100  ரூபா  பொருளை  300  ரூபாய்க்கு  விற்பவன்  கொள்ளைக்காரன். 200 ரூபாய்க்கு   விற்பவன்  மோசமானவன் , 150  ரூபாய்க்கு  விற்பவன் வியாபாரி . நான்  125  ரூபாய்க்கு  விற்கறேன். நியாயமான  வியாபாரம்


2  பையன்  சம்பாதிச்சா  வீட்டுக்குப்பெருமை , பையன்  சாதிச்சா  நாட்டுக்கே  பெருமை


3  பதவிக்கும் , பொறுப்புக்கும்  ஆசைப்படறவங்க  கோபப்படக்கூடாது


4   வாழ்க்கைல  தப்பு  பண்ணாத  மனுசனே  கிடையாது 


5 பிரச்சனையைக்கண்டு  அழக்கூடாது , அதை  எப்படி  சரி  செய்வது  என்று  தான்  பார்க்கனும் 


6  வாழ்க்கையை  எப்படித்தொடங்கறோம்  என்பது  முக்கியம்  இல்லை , எப்படி  முடிக்கறோம்  என்பதுதான்  முக்கியம் 


7  நடந்ததையே  நினைச்சுட்டு  நடக்கப்போறதை  கோட்டை  விட்டுடாத


8 பேசுவதைக்கேட்க  காதுகள்  தயாரா  இருக்கும்போது  பேசும்  வாய்க்கு  கண்  இருக்கனும், நாலு  பேர்  என்ன  பேசறாங்கனு  கேட்கும்  காதுகள்  இருக்கனும், சொல்லும்  வார்த்தைகளில்  பொறுப்பு  இருக்கனும், உணர்ச்சியைத்தூண்டுவது  போல  பேசக்கூடாது. ஒரு  சொல்  வெல்லும், ஒரு  சொல்  கொல்லும் 

9  நெல்  விளையும்ஞுதான்  தண்ணீர்  பாய்ச்சறோம், முளைச்சது  களைனு  தெரிஞ்சா நாம  தான்  அதை  பிடுங்கி  எறியனும்

10  வாழ்க்கைல  நாம  நம்ம  மேல  வைக்கற  நம்பிக்கையை  விட நம்  மேல  மத்தவங்க  வைக்கும்  நம்பிக்கை  தான்  பெருசு 

11  என்ன  இழப்பு  ஏற்பட்டது  என்பதை  விட  அது  எப்படி  ஏற்பட்டது  என்பதுதான் முக்கியம்

12 சொந்தக்காலில்  நிற்பவன்  எப்பவும்  சொல்பேச்சு  கேட்க  மாட்டான் 

13  போட்டிக்கு  வர்றவனை  ஜெயிக்கலாம், பொறாமைப்படுபவனை  எப்படி  ஜெயிக்க? 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அம்மா  - மகன்  செண்ட்டிமெண்ட்  காட்சி  என  நினைத்து  இயக்குநர்  உருவாக்கிய  விஷ்ணு  விஷாலை  அவரது  அம்மா  செத்துப்போடா  என  திட்டி  அடித்து  விரட்டும்  காட்சி  மிகவும்  இரிட்டேடிங்  ஆக  இருந்தது . எப்படா  அந்த  சீன்  முடியும்  என  எண்ண  வைத்தது . ஒருவேளை  டி வி  சீரியல்  பார்க்கும்  பெண்கள்  ரசிக்கலாம், பொது  ரசிகர்களை  கடுப்பேற்றும்  காட்சி 


2  இந்த  மாதிரி  ஆக்சன்  படங்களில் இண்ட்டர்வல்  ப்ளாக்  சீன்  தெறிக்க  விட்டிருக்க  வேண்டாமா?   மேலே  சொன்ன சோகமான  சீனை  முடித்து  விட்டு  ரஜினி  கடவுள்  வழிபாடு  செய்வதாக  காட்டி  இடைவேளை  விடுகிறார்கள் . உப்பு  சப்பில்லாத  காட்சி 


3  தனது  மகன்  கிரிக்கெட்  ரஞ்சி  கோப்பை  விளையாடத்தேர்ந்தெடுக்கபப்ட்டான்  என்ற  செய்தியைக்கேள்விப்பட்டதும்  ரஜினி   குதூகலம்  அடைவதை  எவ்வளவோ  நல்ல   காட்சி  மூலம்  வெளிப்படுத்தி  இருக்கலாம் .ஆனால்  டைனிங்  டேபிளில்  அமர்ந்திருக்கும்  அவர்  தட்டில்  உணவுப்பொருட்களை  எல்லாம்  தூக்கி  வீசி  வீணாக்குவது  போல்  காட்சி  எதற்கு ? அன்ன  லட்சுமி யை  அவமானப்படுத்தியது  ஒரு பக்கம் .,  ஐந்து  ஏழைகளுக்கு  உணவாக  அதை  அளித்திருக்கலாம்  என்பது  ஒரு  பக்கம் 


4  தமிழக  அணியில்  விளையாட  தேர்ந்தெடுக்கப்பட்ட  வீரர்  உள்ளூர்  சாதா  மேட்சில்  அதற்குப்பின்  விளையாடுவாரா? லாஜிக்கே  இல்லையே? இதில்  காமெடி  என்னான்னா  படத்தின்  மெயின்  பிரச்சனையே  அந்த  மேட்சில் தான்  நிகழ்கிறது   


5  க்ளைமாக்சில் காந்தாரா  பாணியில்  ஒரு  கேரக்டரை  வலுக்கட்டாயமாகப்புகுத்தி  உள்ளனர்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரஜினி  ரசிகர்களுக்கு  ஏமாற்றமான  படம்  தான் , ஆனால்  விஷ்ணு விஷால் , விக்ராந்த்  ரசிகர்களுக்கு  நம்பிக்கை  ஊட்டும்  படம். பொது  ரசிகர்கள்  டி வி யில்  போட்டால்  பார்க்கலாம்  ரேட்டிங் 2.25 / 5 


நன்றி - அனிச்சம் மின்னிதழ் 1/3/2024

Lal Salaam
Theatrical release poster
Directed byAishwarya Rajinikanth
Screenplay byVishnu Rangasamy
Aishwarya Rajinikanth
Story byVishnu Rangasamy
Produced bySubaskaran Allirajah
Starring
CinematographyVishnu Rangasamy
Edited byB. Pravin Baaskar
Music byA. R. Rahman
Production
company
Distributed byRed Giant Movies
Release date
  • 9 February 2024
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budgetest. 80–90 crores[2]
Box officeest. 23 crores[3]

Thursday, February 29, 2024

MEA CULPA (2024) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( இல்-லீகல் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


15/2/2024  அன்று  நியூயார்க் - பாரீஸ்  தியேட்டரில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்சில்  23/2/2024 ல்  ரிலீஸ்  ஆனது . பட  பிரமோஷனில்  இது லீகல்  த்ரில்லர்    எனவும் ,  க்ரைம்  த்ரில்லர்  எனவும்  சொல்லப்பட்டிருந்தாலும் , மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  ஒரு  இல்லீகல்  அஃபர்  பற்றி  விலாவாரியாக  சொன்னதால்  நான்  இல்லீகல்  த்ரில்லர்  என்று  குறிப்பிடுகிறேன் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகி  ஒரு  வக்கீல் . . நாயகியின்  கணவன்  ஒரு  காஃபி  ஷாப்பில்  தன்  ஸ்கூல்  மேட்  ஆன   கேர்ள்  ஃபிரண்டுடன்  இருப்பதை  நாயகி  நேரில்  பார்த்து  விட்டதால்  அவர்கள்  இருவருக்குமிடையே  மண  வாழ்க்கையில்  ஒரு  விரிசல்  விழுகிறது . நாயகியின்   கணவனின்  அம்மாவுக்கு  அந்தப்பெண்  ஏற்கனவே  பழக்கம் 


  நாயகனின்  கணவன்  ஒரு  மயக்குனன். அதாவது அனஷ்தீஷியலாஜிஸ்ட்.  ட்யூட்டி  டைமில் அளவுக்கு  அதிகமாக  போதைப்பொருள்  எடுத்துக்கொண்டதால் அவனுக்கு  வேலை  போய்  விடுகிறது . வேலை  போன  விஷயத்தை  தன்  அம்மாவிடம்  கூட  சொல்லாமல்  மறைத்து  விடுகிறான்.   எனக்கு  வேலை  போன  விஷயத்தை  யாரிடமும்  சொல்ல  வெண்டாம்,.  இமேஜ்  போய்  விடும்,   என   மனைவியிடம்  சொல்லி  விடுகிறான்.   சுருக்கமாகச்சொல்லப்போனால்  நாயகியின்  கணவன்  இப்போது  ஒரு  வெட்டாஃபீஸ் .


  வீட்டுக்கான  வாடகை , மளிகைப்பொருட்கள் , கணவனின்  அம்மாவுக்கான  மருத்துவச்செலவு  உட்பட  அனைத்து  செலவுகளும்  நாயகி  தான்  பார்த்துக்கொள்கிறாள் . இந்த  நிலவரம்  கடந்த  9  மாதங்களாகத்தொடர்கிறது 


நாயகி  கையில்  ஒரு  க்ரைம் கேஸ்  வருகிறது . தன்  கேர்ள்  ஃபிரண்டைக்கொலை  செய்ததாக  ஒரு  ஆர்ட்டிஸ்ட்  மீது    வழக்குத்தொடுத்து  இருக்கிறான்  நாயகியின்  கணவனின்  தம்பி . அந்தக்கேசில்  நாயகி  ஆர்டிஸ்ட்க்கு  சாதகமாக  வாதிட  இருக்கிறாள் . நாயகியின்  கணவனின்  தம்பிக்கு  இது  பிடிக்கவில்லை . இந்தக்கேசில்  என்  அண்ணி  வாதிடக்கூடாது  என  பிரஷர்  போடுகிறான் 


 இதை  மீ9றி  நாயகி  அந்த  ஆர்ட்டிஸ்ட்டிடம்  அடிக்கடி சந்திப்பு  வைத்துக்கொள்கிறாள் .அந்த  ஆர்ட்டிஸ்ட்  சைக்கோ  கில்லரா? அப்பாவியா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  வக்கீல்  ஆக  கெல்லி  ரோலண்ட்  சிறப்பாக  நடித்திருக்கிறார். அவரது  முக  வெட்டு  அல்லது முக  அமைப்பு  தனிப்பட்ட  முறையில் எனக்குப்பிடிக்கவில்லை , ஆனால்  நடிப்பு  குட் 


 ஆர்ட்டிஸ்ட்  ஆக  ட்ரிவேன்ட்   ரோடெஸ்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட  ப்ளேபாய்  ரொல் . கிட்டத்தட்ட  படத்தின்  நாயகனே  இவர்  தான் 


 நாயகியின்  கணவனுக்கு  சின  ரோல். அதிக  வேலை  இல்லை , இப்போதெல்லாம்  நிஜ  வாழ்க்கையிலும்  சரி , சினிமாவிலும்  சரி   புருசனுக்கு  அதிக  வேல்யூ  இருப்பதில்லை 


120   நிமிடங்கள்   படம்  ஓடுகிறது . கடைசி  20  நிமிடங்கள்  பரப்ரப்பு . ஒளிப்பதிவு  பல இடங்களில்  வியக்க  வைக்கிறது . நாசர்  நடித்த  அவதாரம்  படத்தில்  வருவது  போல  நாயகன்  - நாயகி  இருவரும்  உடலில்  பெயிண்ட்டிங்க்சை  ஊற்றி சரசம்  கொள்ளும்  காட்சி  கவிதை , இசை , பின்னணி  இசை குட் 


டைலர்  பெர்ரி  தான்  திரைக்கதை  , இயக்கம் . இளைஞர்களைக்குறி  வைத்து  திரைக்கதை  அமைத்திருக்கிறார்  



சபாஷ்  டைரக்டர்


1    முதல்  காட்சியில்  இருந்தே  நேரடியாக  கதைக்கு  உள்ளே  போன  விதம் 


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  , அதைக்கொண்டு  போன  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   ஒருவர்  பேசுவதை  வைத்து   எந்த  முடிவும்  எடுப்பவள்  நான்  இல்லை 


2   தர்மசங்கடமான  விஷயங்கள்  , தேவை  இல்லாத  விஷயங்கள்  என  நீ  நினைக்கும்  எல்லா  விஷயங்களையும் ஒரு  வக்கீலிடம்  சொல்லியே  ஆக  வேண்டும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஆர்ட்டிஸ்ட்  கொலைகரானா?   நல்லவனா? என்பது  கன்ஃபர்ம்  ஆகாத  நிலையில்  வக்கீல்  ஆன  நாயகி  என்ன  தைரியத்தில்  அவனது  வீடு  தேடி  தனிமையில்  செல்கிறாள் ? 


2    நாயகியின்  கணவன்  தன்  பள்ளித்தோழியுடன்  இல்லீகல்  ரிலேசன்ஷிப்பில்  இருக்கிறான் . அதை  நாயகி  பொறுத்துக்கொண்டு  வாழ்கிறாள், ஆனால்  ஒரு  கட்டத்தில்  நாயகி  தப்பு  செய்யும்போது கணவன்  ஏன்  தாம்  தூம்  என  குதிக்கிறான் ?  தானிக்கு  தீனி  சரியாப்போச்சு  என  விடுவதுதானே?  அதே  போல நாயகியும்  ஓவராக  கில்ட்டி  ஃபீலிங்கில்  புலம்புவது  ஏன் ? புருசனும்  யோக்கியம்  இல்லை , நாமும்  அப்படி  இல்லை  என  விடுவதுதானே? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  18 +  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இயக்குநர்  இதை  க்ரைம்  த்ரில்லர்  என்ற  போர்வையில்  எரோட்டிக்  த்ரில்லராகத்தான்  தந்திருக்கிறார் . ஆண்கள்  ரசிப்பார்கள் , ரேட்டிங்  2.25 / 5 


Mea Culpa
Release poster
Directed byTyler Perry
Written byTyler Perry
Produced by
Starring
CinematographyCory Burmester
Edited byLarry Sexton
Music by
  • Amanda Delores
  • Patricia Jones
Production
company
Distributed byNetflix
Release date
  • February 23, 2024
Running time
120 minutes[1]
CountryUnited States
LanguageEnglish