Wednesday, February 14, 2024

THREE OF US (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


69 வது  ஃபிலிம் ஃபேர்     ஃபெஸ்டிவலில்  கலந்து  கொண்டு  எட்டு  பிரிவுகளில் போட்டி இட்டு  சிறந்த  நடிகை , சிறந்த  ஒளிப்பதிவு  என  இரு  விருதுகளை வென்ற  படம். இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்   24/11/2022 ல்  திரையிடப்பட்டாலும்  தியேட்டர்களில் ரிலீஸ்  ஆனது    3/11/2023ல்  தான். 

தமிழ்  சினிமாவின்  முதல்  ஸ்கூல்  ரீயூனியன்  கான்செப்ட்டில்  வந்த  படம் 1988ல் ரிலீஸ்  ஆன  பறவைகள்  பலவிதம் .2005 ல்  ரிலீஸ்  ஆன ஒரு  கல்லூரியின்  கதை  காலேஜ்  ரியூனியன் சப்ஜெக்ட் . 2018ல் ரிலீஸ்  ஆன 96  கிளாசிக்  மூவி  ஆஃப்  ரீ யூனியன்  சப்ஜெக்ட் 


இந்தப்படத்தின்  நாயகி  ஷெஃபாலி  ஷா  டெல்லி  க்ரைம் - நிர்பயா வழக்கு   (ஹிந்தி) என்ற  வெப்சீரிசில் கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தியவர். போலீஸ்  கமிஷனராக  அவர்  காட்டிய  கம்பீரம்  கண் முன்  நிற்கிறது. அந்த  கேரக்டரில்  இருந்து  முற்றிலும்  மாறுபட்ட  காமெடியான  மாமியார்  ரோலில்  டார்லிங்க் (  ஹிந்தி ) கில் கலக்கினார். இந்தப்படத்தில்  அதிகம்  வசனம்  பேசாமல்  கண்களாலேயே  கதை  சொல்லும்   பாத்திரம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  டிமன்ஷியா  என்ற  ஞாபக  மறதி  நோயால்  பாதிக்கப்பட்டவர் .  திருமணம்  ஆகி  25  வருடங்கள்  ஆன பின்  திடீர்  என  இவருக்கு  இந்த  நோய்  தாக்கி  இருக்கிறது. இந்த  நோயால்  பாதிக்கப்பட்டால்  மூளை  நரம்புகள் பலவீனம்  அடைந்து  ஞாபக  சக்தியை  கொஞ்சம்  கொஞ்சமாக  இழக்க  நேரிடும். அதனால்   நாயகி  தன்  பழைய  நினைவுகளை  மீட்டெடுக்க  தான்  ஸ்கூலில்  படித்த  தருணங்களை  நினைவுகூர  பல  ஆயிரம்  கிமீ  தூரம்  தள்ளி  இருக்கும்  ஊருக்கு  செல்ல  முடிவு  எடுக்கிறாள் ., கூடவே  அவள்  கணவனும்  வருகிறான்


 தான்  படித்த   ஸ்கூல் ,  தான்  சிறுமியாக  இருந்தபோது உலவிய  இடங்கள் , சந்தித்த  மனிதர்கள்  ஆகியோருடன்  தன் மகிழ்ச்சியை  வெளிப்படுதுகிறாள் . அப்போது  தான்  ஸ்கூலில்  படித்தபோது பழக்கம்  ஆன  க்ளாஸ்மேட்  ஆன  நாயகனையும்  சந்திக்கிறாள் 


 நாயகி  நாயகனை  ச்ந்தித்த  பின்  அவரது  முகத்தில்  சந்தோஷம்  தாண்டவம்  ஆடுவதை  அவள்  கணவன்  கவனிக்கிறார். அதே  போல்  நாயகியின்  க்ளாஸ்மேட்  ஆன  நாயகனின்  மனைவியும்  சில  மாற்றங்களை  உணர்கிறாள் 


இந்த  நான்கு  பேர்  வாழ்க்கையிலும்  பிறகு  நிகழ்ந்த  சம்பவங்கள்தான் மீதி  திரைக்கதை 


 ஆக்சுவலாக  இதற்கு  ஃபோர்  ஆஃப்  அஸ்  என  டைட்டில் வைத்திருந்தால்  இன்னும்  பொருத்தமாக  இருந்திருக்கும்


நாயகி  ஆக ஷெஃபாலி  ஷா  அற்புதமாக  நடித்திருக்கிறார். அவரது பளிங்குக்கண்களே  ஒரு  கவிதை  பாடி விட்டு  செல்கின்றன. அவரது  உடல் மொழி  அட்டகாசம். ஒரு  சின்ன  அசைவு  கூட  ஓவர்  ஆக்ட்டிங்காக  இல்லை .


 நாயகன்  ஆக , நாயகியின்  க்ளாஸ் மேட்  ஆக   ஜெய்தீப்  அண்டர்ப்ளே  ஆக்டிங்கின்  மகத்துவத்தை  உணர்த்துகிறார். நாயகியின்  ஆர்ப்பாட்டமான  முக  பாவங்களுக்கு  ஈடு  கொடுத்து  அமைதியாக  நடித்து   தன்  இருப்பை உணர்த்துகிறார்


நாயகியின்  கணவனாக  ஸ்வானந்த்  கிர்கிரே அருமையான  நடிப்பு, இவர்  ஒரு  இயக்குநர் , ப்ளே  பேக்  சிங்கர் பாடல்  ஆசிரியர் , திரைக்கதை  ஆசிரியர்,  வசனகர்த்தாவும்  கூட இவரது  பன்முகத்தன்மையையும்  ஓரமாக  மூட்டை  கட்டி  வைத்து  விட்டு  எளிமையான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


நாயகியின்  க்ளாஸ்  மேட்  ஆன  நாயகனின்  ,மனைவியாக காதம்பரி  கடம்  ஒரு  உற்சாக  மின்னலாக  நடித்திருக்கிறார். இவருக்கு  அதிக    காட்சிகள்  இல்லாதது  ஒரு  குறை 


99  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  அளவு  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார் சம்யுக்தா  காஜா . அவினாஷ்  ஆனும்  என்பவர்  பிரமாதமாக  ஒளிப்பதிவு செய்து  விருதை  தட்டிக்கொண்டு  சென்று  விட்டார். காட்சிகள்  எல்லாம்  ஓவியம் 


அலோகானந்தா  தாஸ்குப்தா  தான்  இசை .  பின்னணி  இசையில்  மிக  மெலோடியாக    மென்மையாக  மீட்டி  இருக்கிறார். பல  இடங்களில்  மவுனம், நிசப்தம் தான்  இசை  மொழி 


அவினாஷ்  அருண்  என்பவர்  தான்  திரைக்கதை , இக்கம் . அருமையான  மெலோ  டிராமா . திரைக்கதையில்  இருவரும் , வசனம்  எழுத  வேறு  இருவரும்   உதவி  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனும் , நாயகியும்  பல  வருடங்களுக்குப்பின்  சந்திக்கும்போது  நாயகியின்  கணவர்  நாசூக்காக  கிளம்புவதும்  அவர்களை  தனிமையில்  விடுவதும்  அருமை 


2  சந்திப்புக்குப்பின்  நாயகியின்  கணவனுக்கு  ஏற்படும்  குற்ற  உணர்ச்சி , தாழ்வு  மனப்பன்மை  யை  உடல்  மொழியால்  உணர்த்துவது  அருமை . நான்  உன்னை  சந்தோஷமா  வைக்கலையோ  என  மருகுவது  அபாரம் 


3    96  படத்தில்  நாயகனும் , நாயகியும்  உடல்  ரீதியாக  இணைவார்களா?  என்ற  எதிர்பார்ப்பை  ப்டம்  நெடுக  விதைத்திருந்தார்  இயக்குநர். ஆனால்  இதில்  மிக  கண்ணியமாக  காட்சிகளை  நகர்த்தி  இருப்பது    சிறப்பு 


4    ஃபிளாஸ்பேக்  காட்சிகளே  வைக்காமல்  யூகமாகவே  இவ்ர்கள்  நட்பு  இப்படித்தான்  இருந்திருக்கும்  என  உணர்த்துவது  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  பிரச்சனைகளை  நான்   ஹேண்டில்  பண்றேனா? இல்லை , பிரச்சனைகள்  என்னை  ஹேண்டில்  பண்ணுதா? என்பதே  சில  சமயங்கள்  தெரியறதில்லை 


2  இந்த  ஊரை  விட்டுட்டு  யாராலும்  வேற  இடம்  போக  முடியாது 

ஆனா , நான்  போய்ட்டேனே?

 அதான்  திரும்ப  வந்துட்டியே?


3  எனக்கு  இந்த  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  ஒர்க்  பிடிக்கலை ,  எப்போ வேணா  நீங்க இறக்கலாம்னு  பொய்  சொல்லி, பயமுறுத்தியே  ஆள்  சேர்த்த  வேண்டி  இருக்கு ‘


4    தம்பதிகளுக்கு  டைவர்ஸ்  வாங்கித்தரும்  கோர்ட்  செக்சனில்  நான்  ஒர்க் பண்றேன்


 அப்போ  யார்  யார்  சேர்ந்து  வாழலாம்? யார்  யார்  பிரியலாம் ? என்பதை  நீ  தான்  தீர்மானிப்பே?


 நோ நோ  அதை  அவங்கதான்  தீர்மானிப்பாங்க 


5  நாளை  என்ற  நாள்  வரனும்னா  இன்று  போய்க்கழியனும் 


6  உன்னுடைய  எந்தக்கவிதையைப்படிச்சாலும்  உன்னுடையதுதான்  என  அடையாளம்  கண்டு கொள்வேன்.  உன்    அறியாமை அந்தக்கவிதையில்  ஒளிந்திருக்கும் 


7    பதினெட்டு  வருசமா   உங்க  கூட  குடும்பம்  நடத்தறேன், என்னைப்பற்றி  ஒரு  வரி  கூட  எழுதுனது    இல்லை , 25  வருடங்கள்  முன் உங்க  கூடப்படிச்ச  பொண்ணை  ஒரு  நிமிசம்  பார்த்ததும்  ஒரு முழுக்கவிதையே  எழுதிட்டீங்க ? 


8  உங்களை  இம்ப்ரெஸ்  பண்றதுக்காகத்தான்  டீ  போடப்போறார், பொதுவா  அவர்  கிச்சன்  ரூம்  பக்கம் தலைவெச்சே  படுக்க  மாட்டார் 


9  ஹிந்தில  19  என்ற  எண்ணைப்பார்க்கும்போது  ஒருவரோடு  ஒருவர்  பிணக்கு  கொண்டு  முறுக்கிக்கொண்டு  விலகி  நிற்பதைப்போலத்தோன்றும்


10  நீ  என்  கூட  வாழ்ந்த  இத்தனை  வருட  வாழ்க்கைல  என்னைக்காவது  ஒரு  நாளாவது  சந்தோஷமா  இருந்ததுண்டா?

ஏன்  கேட்கறீங்க ? 

சும்மா  தான்  பதில்  சொல்லு

புரியுது , நான்  இப்போ  என்  கிளாஸ்மேட்டோடு  சந்தோஷமா  இருந்தது  உங்களை  அப்செட்  பண்ண  வெச்சிருக்கு 


11   நாம்  இருவரும்   கடைசியா  சந்தோஷமா  இருந்த  தருணம்  எப்போ?னு  நீங்க  கேட்டீங்களே? அதையே  நான்  மாற்றிக்கேட்கறேன். நாம்  இருவரும்  சோகமாக  இருந்த  தருணம்  எப்போ ?


12  யாரும்  ரொட்டீன்  லைஃபை  நினைவு  வெச்சுட்டு  இருக்க  மாட்டாங்க 


13  நம்  இருவருக்குமிடையேயான  உறவில்    எந்த  ஆச்சரியமும்  இல்லை . உறவு  நடந்தது  அவ்ளோதான் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது ஒரு  ஃபீல்  குட்  மூவி . ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்சோ , பரபரப்பான , விறுவிறுப்பான  காட்சிகளோ  இருக்காது . மகேதிரன் , பாலும்கேந்திரா  ரசிகர்கள்  பார்க்கலாம், ரஜினி , விஜய் , சிரஞ்சீவி  ரசிகர்கள்  தவிர்க்கவும் .  ரேட்டிங்  3 / 5 


டிஸ்கி -  இந்தப்படம்  தியேட்டரில்  ரிலீஸ்  ஆகி சில  மாதங்களும், ஓடிடியில்  ரிலீஸ்  ஆகி  ஒரு  மாதமும் ஆகின்றன. ஆனால்  இதுவரை  தமிழில்  எந்த  ஒரு  விமர்சகரும்  விமர்சிக்காதது  ஏன்? என  தெரியவில்லை . தமிழில்  வெளி  வரும்  முதல் (எழுத்து ) விமர்சனம்  இதுதான்  என  பெருமையாகச்சொல்லலாமா?  தமிழில்  யாருமே  இதை  இன்னும்  கண்டுகொள்ளவில்லையே  ? என  வருத்தப்படலாமா? தெரியவில்லை 


Three of Us
Theatrical Release Poster
Directed byAvinash Arun
Written by
  • Avinash Arun
  • Omkar Achyut Barve
  • Arpita Chatterjee
Dialogues byVarun Grover
Shoaib Zulfi Nazeer
Produced by
  • Sanjay Routray
  • Sarita Patil
  • Dikssha Jyote Routray
  • Bunny Vas
Starring
CinematographyAvinash Arun
Edited bySanyukta Kaza
Music byAlokananda Dasgupta
Production
companies
Distributed byKarmic Films
Release dates
  • 24 November 2022 (IFFI)
  • 3 November 2023 (India)
Running time
99 minutes[1]
CountryIndia
LanguageHindi

Tuesday, February 13, 2024

PINDAM (2023) - தெலுங்கு - பிண்டம் -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

 


 தெலுங்கானாவில்  உள்ள  நால்கொண்டா  என்னும்  ஊரில்  1930  ல்  நிகழ்ந்த உண்மை  சம்பவம்  இது .  தியேட்டரில்  15/12/2023ல் ரிலீஸ்  ஆனபோது  கலவையான  விமர்சனங்களைப்பெற்ற  இப்படம்  ஆஹா  தமிழ்  ஓடிடி  யில்   2/2///2024 ல்  ரிலீஸ்  ஆகி  இப்போது 9/2/2024  முதல்  அமெசான் பிரைம்ல  யும்  கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கிலும்  உண்டு 

ஸ்பாய்லர்  அலெர்ட்

அன்னம்மா  என்னும்  பெண்  பேய்  ஓட்டுபவர்  ஆக  இருக்கிறார். அவரைப்பேட்டி  காண  வரும்  நபர்  அவர்  வாழ்க்கையில்  சந்தித்த  கஷ்டமான  கேஸ்  டீட்டெய்ல்ஸ்  கேட்கிறார். அவரும்  சொல்கிறார். அந்தகதைதான்  படத்தின்  கதை 

  நாயகன் ,  தன்   மனைவி ,  இரு  பெண்  குழந்தைகள் , அம்மா  உடன்  வசித்து  வருகிறார். ஊரில்  ஒரு  புது  பங்களா  விலைக்கு  வாங்கி  அங்கே    குடி  போகிறார். அங்கே  அமானுஷ்ய  சம்பவங்கள்  நடக்கின்றன. வீட்டை  விற்று  விடலாம்  என  முடிவு  எடுக்கும்போது  வீட்டைக்காலி  செய்தாலோ , விற்று  விலகினாலோ விபரீதங்கள்  ஏற்படும்  என  அன்னம்மா  எச்சரிக்கிறார். நாயகன்    அவர்  வாக்கை  மீற  நினைக்கும்போது  நாயகனின்  அம்மா  மர்மமான  முறையில்  இறக்கிறார்.இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


டெம்ப்ளேட்  ஆன  பேய்க்கதை  ஃபார்முலாதான். ஊருக்கு  ஒதுக்குப்புறமான  இடத்தில்  ஒரு  பங்களா  இருக்கும், அங்கே  புதிதாகக்குடி  வருபவர்கள்  அமானுஷ்ய  அனுபவங்களை  சந்திப்பார்கள் , பேய்க்கு  ஒரு  ஃபிளாஸ்பேக்  இருக்கும், பேயின்  ஆசையை  நிறைவேற்ற  முயற்சிக்கும், யாரையாவது  பழி  வாங்கும், சுபம்.


 இந்த  ஃபார்முலாதான்  காலம்  காலமாக  பேய்ப்படங்களில் திரைக்கதையாக  அடித்துத்துவைத்துக்காயப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் 



 நாயகன்  ஆக  ஸ்ரீகாந்த்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். விக்கிபீடியாவில்   ஸ்ரீராம்  என  காட்டுகிறது , தெலுங்குப்பட  உலகுக்கு மட்டும்  அந்தப்பெய்ர்  போல் . 56   வயதானவர்  போலவே  தெரியவில்லை . இளமையாக  இருக்கிறார். குட்  பாடி  மெயின்ண்டனன்ஸ்.படம்  முழுக்க  அடக்கி  வாசித்து  இருக்கிறார்


நாயகி  ஆக  குஷி ரவி  நடித்திருக்கிறார். பாந்தமான  , குடும்பப்பாங்கான  தோற்றம். பேய் ஓட்டும்  அன்னம்மாவாக  ஈஸ்வ்ரிராவ் நல்ல  உய்ரம்  என்பதால்  க்ம்பீரமாகத்தெரிகிறார். இவர்  அணி ந்து  வரும்  ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டும்  ஃபுல்  கவர்  பேக்  நெக்  மாடலும்  அழகு 


சிறுமிகளாக  வரும்  பேபி  சைத்ரா , பேபி  லைஷா  இருவரும்  கச்சிதமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள்

கிருஷ்ணா  சுராஜ் சுராம்பள்ளி  தான்  இசை. பின்ன்ணி  இசை  மிரட்டல்  ஸ்ரிஸ் பிர்சாத்  எடிட்டிங்கில்  149  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . இன்னும்  20  நிமிடங்கள்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம், ரொம்பவே  ஸ்லோவாகப்படம்  நகர்கிறது 


கவி  சித்தார்தா, டோபி ஒஸ்பொர்னே  ஆகிய  இருவரும்  கதை  எழுத  திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர்  சாய்கிரண்  டைடா.



சபாஷ்  டைரக்டர்

1  வாய்  பேச  முடியாத  குழந்தையும் , அம்மாவும்  சைகை  பாசையில்  பேசிக்கொள்ளும்  அனைத்துக்காட்சிகளும், கவிதை  , ரசிக்க  வைத்தது 


2  குழந்தை  இரவு  நேரத்தில்  கிணற்றில்  தண்ணீர்  சேந்தும்போது  நாயகன்  அதிர்ச்சியாகப்பார்ப்பதும்  பின்னால்  மாடியில்  அதே  குழந்தை  குடும்பத்துடன்  காட்சி  அளிப்பதும்  ஜெர்க்  அடிக்கும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1  ஈசான்  மூலை  இருக்கும்  வீட்டில்  குடி  இருந்தா  பையன் பிறப்பான்னு  ஒரு ஐதீகம் 


2  பிறப்பு  என்பது  ஆரம்பம்  மட்டும்  அல்ல , இறப்பு என்பது முடிவு  அல்ல 


3  க்டவுளோட  அன்புக்கு  நிகர்  ஆனது  ஒரு  தாயின்  அன்பு  மட்டும்  தான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாய்  புதிய  ஆட்களையோ , திருடனையோ  பார்த்தால்  குரைக்கும், ஆடு  மாதிரி  முட்ட  வருமா?  ஓப்பனிங்  சீன்லயே  கார்  கதவை  முட்டுது ( கிராஃபிக்ஸ்  நாய்) - இது  நாய்  மாதிரி  இல்லை , வேறு  ஏதோ   ஜந்து  என  சமாளிப்பு  டயலாக்  வேற


2  நாயகன் இரவில்   இருட்டில்  நடக்கும்போது  அரிக்கேன்  விளக்கைப்பிடித்துச்செல்கிறார். அதை  அவர்  முகத்துக்கு நேராக லைட்டிங்  படும்படி  ஏன்   பிடித்திருக்கிறார்? கைகளைத்தொங்கப்போட்டபடி  தானே  செல்வார்கள் ?


3  புதிதாகக்குடி  வந்த  வீட்டில்  நாயகன், நாயகி  இருவரும்  தனி  ஒரு  ரூம்,  குழந்தைகள்  இருவரும்  தனி  ஒரு  ரூமில்  இருக்கிறார்கள் . பொறுப்பான  பெற்றோர்  இப்படித்தான்  தனியா  விடுவாங்களா?  ஃபாரீனில்  தான்  அப்படி  தனித்தனி ரூம்,  இந்தியாவில் ஒரே  ரூமில்  தானே  இருப்பார்கள் ?


4  பேய்  பயம் , கனவு  என ஏதோ  ஒரு  காரணத்துக்காக  குழந்தை  பயந்து  கத்திய  பின்பும்  ஒரே  ரூமில்  படுக்காமல்  தனித்தனி  ரூமில்  படுக்கிறார்கள்

5  நாயகன்  ஒரு  தனியார்  ரைஸ் மில்லில்  அக்கவுண்ட்டண்ட்  ஆக  இருக்கிறான், அவன்  குடி  இருக்கும்  வீடு  பெரிய  பங்களாவாக  இருக்கிறது . ஒரு  அர்சு  ஊழியர்  தான்  அவ்ளோ  பெரிய பங்களா   வாங்க  முடியும் 


6  நாயகி  ஆறு  மாத  கர்ப்பமாக   இருக்கிறார். அபார்ஷன்  பண்ணி  விடலாமா  என  கேட்கிறார். 3  மாதங்கள்  தாண்டினாலே  அது  ரிஸ்க்  ஆச்சே? அடுத்த  காட்சியிலேயே  நிறை  மாசமா  இருக்கீங்கனு  ஒரு  டயலாக்  வேற 


7   நாயகன்  கிணற்றில்  தவறி  விழுந்து  இரவு பூரா  உயிரைக்கையில்  பிடித்துக்கொண்டு  இருக்கிறான். விடிந்ததும்  அங்கே  வரும்  நாயகி  டக்னு  நாயகனைக்காப்பாற்ற  முயற்சிக்காமல்  நாயகனைக்கேள்வி  கேட்டுக்கொண்டிருக்கிறாள் . எல்லா  ஊர்லயும், எல்லா  பொண்டாட்டிங்களும்  ஒரே  மாதிரி  தான் இருக்காங்க 

8  நாயகன்  இரவில்  ஒரு ரூமில்  மாட்டிக்கொள்கிறான். உடனே  நாயகியோ , அம்மாவோ அக்கம்  பக்கம்  ஓடிப்போய்  உதவி  கேட்காமல்  இரவு  முழுக்க  அவனை  தனியே  இருக்க  விட்டு  அடுத்த  நாள்  காலையில்  போலீஸ்  ஸ்டேசன்  போறாங்க 


9  மர்மம்  ஆன  முறையில்  வீட்டில்  இறந்து  கிடக்கும்  தன்  அம்மா  வை  போஸ்ட் மார்ட்டம்  செய்ய  முயற்சிக்கவே  இல்லையே?  என்ன  காரணம்?>னு  தெரிஞ்சுக்க  ஆர்வம்  இல்லையா? 


10  நாயகன், நாயகி  , குழந்தைகள்  இருவர்  அனைவரும்  பாட்டி    இறந்ததால்  சுடுகாட்டில்  இருக்கும்;போது  அன்னம்மா  நாயகன்  வீட்டுக்குள்  இருப்பது  எப்படி ?  சாவி  ஏது ? 


11  பேய்  ஓட்டும்  அன்னம்மாவிடம்  நாயகி என்  குழந்தைகளுக்கு  ஏதாவது  ஆகிடுமோன்னு  தான்  பயம்மா  இருக்கு  எனும்போது  அன்னம்மா  டோண்ட்  ஒர்ரி,  குழந்தைகளுக்கு  எதுவும்  ஆகாது  என்பவர்  அடுத்த  காட்சியிலேயே  உன்  இரண்டாவது  குழந்தையை  ஜாக்கிரதையாப்பார்த்துக்கோ  என்கிறார். அது  ஏன் ? 

12  பேய்  ஓட்டும்  அன்னம்மா  நாயகனிடம்  தன்  அசிஸ்டெண்ட்ஸ்  இருவரை  அறிமுகப்படுத்தும்போது  இவனுக்க்  16  மொழிகள் தெரியும்  என்கிறார் அவ்ளோ நாலெட்ஜ்  உள்ளவர்  ஏன்  அசிஸ்டெண்ட்டா  3000  ரூபா  சம்பளத்துக்கு  அன்னம்மாவிடம்  வேலை  செய்யனும் ?   ட்யூஷன்  சொல்லிக்க்டுத்தே  சம்பாதிக்கலாமே? 


13   ஃபிளாஸ்பேக்கில்  வரும்  கர்ப்பிணிப்பெண்  கொலைக்காட்சி  கர்ண  கொடூரம். அப்பாவே  சொந்த  மகள்களைக்கொல்வது  எல்லாம்  ஓவர். காட்சிப்படுத்திய  விதமும்  பயங்கரம்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  ஏ  படம் ., 18+  காட்சிகள்  இல்லை , ஆனால்  ஃபிளாஸ்பேக்கில் ஒரு  கொடூரமான  கொலைக்காட்சி  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பேய்ப்பட  விரும்பிகள்  பார்க்கலாம்.lஸ்லோவாகத்தான்  திரைக்கதை  நகரும். உண்மை  சம்பவம்  என்பதால்  ஆர்வமாகப்பார்த்தேன். ரேட்டிங்  2 / 5 


Pindam
Theatrical release poster
Directed bySaikiran Daida
Written bySaikiran Daida
Story byKavi Siddhartha
Toby Osborne
Produced byKalaahi Media
Yeshwanth Daggumati
Prabu Raja
StarringSriram
Kushee Ravi
CinematographySathish Manoharan
Edited bySirish Prasad
Music byKrishna Saurabh Surampalli
Production
company
Kalaahi Media
Release date
  • 15 December 2023
Running time
02hrs:39mins
CountryIndia
LanguageTelugu

Monday, February 12, 2024

தாழம்பூ (1965) -தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் கமர்ஷியல் மசாலா ) @ யூ ட்யூப்

 


 தீபாவளி  ரிலீஸ்  ஆக  வெளியான  இப்படம்  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்தை  எப்படி  கம்ர்ஷியல்  ஆக   மசாலா  கலந்து  சொல்ல  வேண்டும்  என்று  அந்தக்காலத்தில்  பாடம்  நடத்தியது  போல  இருந்தது . போர்  அடிக்காமல்  காதல், டூயட் , காமெடி  , செண்ட்டிமெண்ட்  காட்சிகளூடன்  பொழுது  போக்குப்படமாக  அமைந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  பெரிய  பணக்காரரின்  மகள் .  அப்பா  ஒரு  எஸ்டேட்  ஓனர் . அவருக்கு  ஒரு  தம்பி  உண்டு . நாயகியின்  அப்பாவின்  எஸ்டேட்டில்  தான்  நாயகனின்  அண்ணன்  மேனேஜராக  வேலை  செய்கிறான்/ நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  வேலை  கிடைக்கிறது . அதற்கு  டெபாசிட்  கட்ட  பெரும்  தொகை  தேவைப்படுகிறது . தன்  ஓனரிடம்  கடனாகக்கேட்கிறான்  நாயகனின்  அண்ணன்.


  இன்னொரு  வேலைக்காரனும் அதே  போல் தன்  மகள்  திருமணத்துக்குப்பணம் கேட்கிறான். பணம்  எடுக்க  ஓனர்  முயற்சிக்கையில்  அவரிடம்  இருக்கும்  ஏராளமான  பணத்தை  அந்த  வேலைக்காரன்  பார்த்து  விடுகிறான். அந்த  சமயம்  கடன்  வாங்க  அங்கே  வரும் நாயகனின்  அண்ணன்  தன்  ஓனர்  கொலை  செய்யப்பட்டுக்கிடப்பதைக்கண்டு  அதிர்ச்சி  அடைகிறான். போலீசிடம்  மாட்டி  கொலை  செய்ததாக  பழி  சுமத்தபட்டு   தூக்கு  தண்டனை  பெறுகிறான்


 நாயகன்  தன்  அண்ணனை  கொலைப்பழியில்  இருந்து  காப்பாற்ற  அண்ணன்  வேலை  செய்த  அதே  கம்பெனியில்  தோட்டக்காரனாக  வேலை  செய்து   நாயகியை  சைடு  டிராக்கில்  லவ்  பண்ணி மெயின் டிராக்கில் கொலைகாரனை  எப்படிக்கண்டு பிடித்தார்  என்பதே  மீதிக்கதை 


நாயகன்  ஆக  எம்  ஜி ஆர். சுறுசுறுப்பான  நடிப்பு . பாட்டு  , ஃபைட் , டூயட்  என  வழக்கமான  அவர்  அம்சங்கள்  படம்  நெடுக  உண்டு .  அவரின்  அண்ணனாக  அசோகன் . சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் . சில  இடங்களில்  நெகிழ்ச்சியான  நடிப்பு 


  நாயகியின்  சித்தப்பாவாக  நடிக வேள்  எம்  ஆர்  ராதா  கலக்கி  இருக்கிறார்,   எஸ்டேட்  மேனேஜர்  ஆக   எம் என்  நம்பியார்  வில்லத்தனமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் 


 காமெடி டிராக்கில்  நாகேஷ்  மனொரமா  அசத்தல் 

 நாயகி  ஆக  கே  ஆர்  விஜயா  துள்ளல்  ஆன  நடிப்பு 


டி  ராதா  கிருஷ்ணனின்  எடிட்டிங்கில்  144  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது  கே  வி   மகாதேவன்  இசையில்  ஐந்து  பாடல்கள்    அவற்றில்  மூன்று  ஹிட் 

சுப்பாராவ்  தான்  ஒளிப்பதிவு . சிறப்பு .


கதை  கே  பி  கொட்டாரக்கர . திரைக்கதை  ஜி  பாலசுப்ரமணியம் . இயகம் என்  எஸ்  ராமதாஸ் 



சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  தன்  அண்ணியை  தன்  அம்மாவாக நினைக்கிறார். ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலையால்  காதலியின்  எதிரே  அண்ணியுடன்  தொடர்பு  இருப்பது  போல்  சித்தரிக்கப்படுகிறார். இந்த  செண்ட்டிமெண்ட்  சீன்  நன்றாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது

2  எம்  ஆர்  ராதா  வுக்கு  போர்சன்  குறைவுதான், ஆனால்  எம் ஜி  ஆர்  உடனான  காம்போ  காட்சிகளில்   அனாயசமாக  நடித்து  தூக்கி  சாப்பிட்டு  இருக்கிறார்

3  நாகேஷின்  காமெடி  டிராக்  அசத்தல் 

4   எம் என்  நம்பியார்  , அசோகன் , எம்  ஆர்  ராதா  என  மூன்று  வில்லன்களை  கச்சிதமாக  அந்தந்த  பாத்திரங்களில்  மிளிர  வைத்தது 

5     கே  ஆர்  விஜ்யாவுக்கான  காஸ்ட்யூம்  டிசைன்  அருமை 

6  படத்தின்  டைட்டிலுக்கும் , க்ளைமாக்ச்ஸ்  ட்விஸ்ட்டுக்கும்   முடிச்சுப்போட்ட  விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வட்ட  வட்ட பாத்தி  கட்டி , வண்ண  வண்ண  சேலை  கட்டி  (  ஹீரோயின்  ஓப்பனிங் சாங்க் ) 


2  தாழம்பூவின்  நறுமணத்தில்    நல்ல தரம்  இருக்கும் தரம்  இருக்கும் ( ஹீரோ  விழாப்பாட்டு ) 


3  எரிக்கரை  ஓரத்திலே  எட்டு  வேலி  நிலம்  இருக்கும்  (  டூயட்) 

4  தூவானம்  இது  தூவானம்  இது  தூவானம்  சொட்டு  சொட்டா  உதிருது ( ஹீரோயின் சாங் ) 


5  பங்குனி  மாதத்தில்  ஒரு  இரவு  (  டூயட்)

6  எங்கே  போய்  விடும்  காலம் ? அது  என்னையும்  வாழ வைக்கும் (  ஹீரோ  தத்துவப்பாடல்) 

  ரசித்த  வசனங்கள் 


1   பெரிய  மனுஷங்களை ரொம்ப  நெருங்கவும்  கூடாது , ரொம்ப  விலகி  இருக்கவும்  கூடாது 


2   நம்ம  வருமானம்  மத்தவங்களுக்கு  தெரிஞ்சுடக்கூடாது  என்பதற்காகவே  அதிக  வேலையாட்கள்  வெச்சுக்கறதில்லை 

  3  எனக்கு  இங்க்லிஷ்  தெரியாதுதான்  , ஆனா  இங்க்லீஷ்  தெரிஞ்சவன்  என்  கிட்டே  இங்க்லீஷ் ல  பேசிடாதபடி  சமாளிக்கத்தெரியும் 


4  உன்  கோழியா  அது ?


 சொந்தக்கோழியைப்பிடிக்கறதுல  என்ன  உற்சாகம் இருக்கும்? ஊரான்  வீட்டுக்கோழின்னாத்தான்  ஒரு  இது 


 நீ  இன்னும்  திருந்தவே  இல்ல 


 காக்கா  பிடிச்சாதான்  தப்பு , கோழி  பிடிச்சா...   என்ன  தப்பு ?


5  இடம்  மாறுனா  மனம்  மாறும்னு  சொல்வாங்க 


4   வில்லன் = உனக்கு  என்ன  இங்கே  வேலை ?


 எனக்கு  என்ன  வேலை ?  வேலை  தேடித்தாங்க  வந்தேன் 


நான்சென்ஸ்


   என்  பேரு  நான்சென்ஸ்  இல்லைங்கை . கோபாலு 


5  முட்டாள்  தனத்தை  எப்படி  மூடி  வைக்க  முடியாதோ  அதே  மாதிரி  புத்திசாலித்தனத்தையும்  ரொம்ப  நாள்  மறைச்சு  வைக்க  முடியாது 


6   வில்லன் = வெரிகுட்  , யோக்கியனா  இருக்கியே? பேசாம  என்  கூடவே  இருந்துடு 


 காமெடியன் = நான்  தான்  யோக்கியன்  ஆச்சே? எப்படி  உங்க  கூட  இருக்கறது ?


பரவால்லியே? தமாசாக்கூடப்பேசறியே? சரி  ,  வேலை  போட்டுத்தர்றேன். கடைசி  வரை  என்  கூடவே  இருந்துடு 


கடைசி  வரைன்னா  உங்க  கடைசி  வரையா? என்  கடைசி  வரையா?


7   அடுத்தவங்களைக்கெடுத்து  நான்  வாழ  மாட்டேன்

8  என்ன  விசித்திரமான  உலகம் ?  திருடன்  கூட  தான்  திருடுன  பணத்தை  சொந்தம்னு  சொல்றான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனின்  அண்ணன்  தன்  தம்பி  வேலை  செய்யும்  இடத்தில்  ரூ  5000  டெபாசிட்  கட்டச்சொல்கிறார்கள்  என  தன்  முதலாளியிடம் சொல்லும்போது  எஸ்டேட்  ஓனரான  முதலாளி  வெள்ளிக்கிழமை  இரவு வா , தர்றேன்  கறார், அப்பவே  தந்தா  என்ன? 


2  படம்  எடுக்கப்ப்ட்ட  ஆண்டான  1965 ல்  ஒரு பவுன்  தங்கத்தின்  விலை  ரூ 63. கிட்டத்தட்ட  90  பவுன்  தங்க  விலை  என்னவோ  அதைத்தான்  முதலாளியிடம்  கடனாகக்கேட்கிறார் நாயகனின்  அண்ணன். யார்  தருவார்கள்  அவ்ளோ  பணம்? 

3  நாயகன்  கோல்டு  மெடலிஸ்ட். காலேஜில்  டிகிரி  முடித்த  போது  அவர்  மெடல்  வாங்கும்  ஃபோட்டோ  முன்னணி  பத்திரிக்கைகளில்  வ்ந்து  இருக்கு . அப்படி  இருக்கும்போது  எந்த  மாறு  வேடமும்  போடாமல்  அதே  முகத்துடன்  தோட்டக்காரனாக  வேலை  செய்வது  எப்படி ? 


4    வில்லனின்  அடியாள்  நாயகியின்  வீட்டில்  வேலை  செய்த  ஆளின்  மகளை  அடிக்கடி  வழி  மறீத்து  உண்மையை  சொல்.    உன்  அப்பா  எங்கே  எனக்கேட்டுக்கொண்டே  இருக்கிறார் , அதுக்கு  பதிலா  அவளை  ஃபாலோ  பண்ணினாலே  கண்டு  பிடிச்சுடலாமே?


5  நாயகி  தன்  சித்தப்பாவை  படத்தின்  முதல்  பாதியில்  அப்பா  அப்பா  என  அழைக்கிறார். பிற்பாதியில்  சித்தப்பா  என  அழைக்கிறார்


6  நாயகனின்  அண்ணன்  ஒரு  தூக்கு  தண்டனைக்கைதி . ஜெயிலில்  இருந்து  தப்பி  நேரா  வீட்டுக்கு  வந்து  மனைவியைப்பார்க்கிறார். வீட்டுக்கு  போலீஸ்  காவல்  இருக்காதா?தூக்கு  தண்டனைக்கைதி தப்பினால்  வேறு  ஒரு  இடத்துக்கு  மனைவியை  வரச்சொல்லி  சந்திப்பதுதானே  பாதுகாப்பு ?


7  நாயகிக்கு  நாயகன் தான்  தன்  அப்பாவைக்கொலை  செய்ததாகக்கைது  செய்யப்பட்டவனின்  தம்பி  என்பது  தெரியும்.  அப்படி  இருக்கும்போது  தன்  அண்ணன்  அடிக்கடி  தன் அண்ணியைப்பார்க்க  வீட்டுக்கு  வருவதாக  காதலியிடம்  ஏன்  சொல்லவில்லை ?


8  ஜெயிலில்  இருந்து  தப்பிய  தூக்கு  தண்டனைக்கைதி  சம்மர் வெக்கேசனுக்குப்போவது  போல்  அடிக்கடி தன்  வீட்டுக்குப்போஉ  மனைவியை  கர்ப்பம்  ஆக்கி  விடுகிறார்.  போலீஸ்  விசாரிக்கும்போது  தன்  தம்பி  மீது பழி  விழும்  அல்லது தன்  மனைவியை நடத்தை  கெட்டவள்  என  ஊர்  பேசும்  என்பது  தெரியாதா?


9 க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன் அந்த  வேலைக்காரனும் , மகளும்  வீட்டை விட்டுக்கிளம்பும்போது  புது  இடம்  ஷிஃப்ட்  ஆகறோம்  என  சொல்லிக்கிளம்புகிறார்கள் , ஆனால்  வீட்டைப்பூட்டவே  இல்லை , பெப்பரப்பே  என  திறந்து  வைத்தே  செல்கிறார்கள் 


10  க்ளைமாக்சில்    மெயின் வில்லன்   இன்னொரு  வில்லனைக்கொலை  செய்வதை  நாயகன் நேரில்   பார்த்து  விடுகிறான், உடனே  வில்லன்  நாயகனை  கயிறால்  கட்டிப்போட்டு விட்டு  மட்டும் செல்கிறான்.  சாட்சியை  யாராவது  உயிரோடு  விடுவார்களா?  (  வில்லன்  கொன்ற  இன்னொரு வில்லனைக்கொன்றது  நாயகன்  தான்  என  பழி  சுமத்த  ஐடியாவாம்,  சகிக்கவில்லை ) 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம்  ஜி  ஆர்  ரசிகர்கள்  மட்டுமின்றி    மசாலா  பட  ரசிகர்களும் பார்க்கலாம், டைம் பாஸ் ஃபிலிம். ரேட்டிங்  .  2.5 / 5 


Thazhampoo
Theatrical release poster
Directed byN. S. Ramadass
Screenplay byG. Balasubramaniam
Story byK. P. Kottarakkara
StarringM. G. Ramachandran
K. R. Vijaya
CinematographyW. R. Subba Rao
Edited byG. Radhakrishnan
Music byK. V. Mahadevan
Production
company
Sri Balamurugan Films
Release date
  • 23 October 1965
Running time
143 minutes
CountryIndia
LanguageTamil

Thursday, February 08, 2024

12TH FAIL - 12 வது ஃபெயில் - ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( பயோ கிராஃபிக்கல் டிராமா ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்

 


 20  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கபப்ட்டு  66  கோடி  ரூபாய்  வசூல்  செய்த  மாபெரும்  வெற்றிப்படம் இது . 69 வது  ஃபிலிம்  ஃபேர்  விருது  விழா  நிகழ்வில் சிறந்த  படம், சிறந்த  இயக்குநர்  உட்பட  12  பிரிவுகளில்  நாமினேட்  ஆன  படம் . ஐ பி எஸ்  ஆஃபீசர்  ஆன  மனோஜ்  குமார்  சர்மா பற்றிய உண்மை  வரலாற்று நிகழ்வு  ஆக  நான்  ஃபிக்சம்  நாவல்  ஆக 2019ல்  அனுராக்  பதக்  எழுதியதைத்தழுவி  எடுக்கப்பட்ட  படம்  இது  திரைக்கதை  எழுதி  இயக்கியவர்  விது  வினோத்  சோப்ரா 


சினிமா  உலகில்  டைட்டில்  வைப்பதில்  கூட  செண்ட்டிமெண்ட்  பார்ப்பார்கள். திரைக்கதை  மன்னன் கே  பாக்யராஜ்  படங்களான  ஒரு  கை  ஓசை , சுவர்  இல்லாத  சித்திரங்கள்  , விஜய்காந்த்  நடித்த  ஊமை விழிகள் , ரஜினி  நடித்த  புவனா  ஒரு  கேள்விக்குறி  போன்ற  படங்கள்  எல்லாம்  ரிலீஸ்  ஆவதற்கு  முன்  டைட்டில்  நெகடிவாக  இருக்கே? என்ற  தயக்கம்  பலருக்கும்  இருந்தது , ஆனால்  அந்த  செண்ட்டிமெண்ட்சை எல்லாம்  உடைத்து  படங்கள்  வெற்றி  பெற்றன. அதே  போல்  தான்  இதுவும்  டைட்டிலில்  ஃபெயில்  என  இருந்தாலும்  மெகா  வெற்றி  பெற்ற  படம் 


த்மிழில்  ரிலீஸ்  ஆன  வசூல்  ராஜா  எம்பி பிஎஸ் -ன்  ஒரிஜினல்  வெர்சன்  ஆன  முன்னாபாய் எம் பி பிஎஸ் ,  நண்பன்  படத்தின் ஒரிஜினல்  வெர்சன்  ஆன   த்ரீ  இடியட்ஸ்   ஆகிய  படங்களை  தயாரித்து  திரைக்கதை  எழுதிய  விது  வினோத்  சோப்ராவின்  படைப்பு  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாய\கனின்  அப்பா  ஒரு  அரசு  ஊழியர். நேர்மையான  குணம் உடைய  அவர்  ஆஃபீசில்  வஞ்சிக்கப்படுகிறார், ஊழலுக்கு  துணை  போக  மறுத்ததால்  பொய்யான  குற்றச்சாட்டை  வைத்து  அவரை  சஸ்பெண்ட்  செய்கிறார்கள் . அவர்  கோர்ட்டில்  கேஸ்  போட்டு  நியாயத்துக்காகப்போராடிக்கொண்டிருக்கிறார்


நாயகன்  இருக்கும்  ஊர்  கொள்ளையர்களுக்குப்புகழ்  பெற்ற  சம்பல்  பள்ளத்தாக்குப்பகுதி. அங்கே  ஸ்கூலி ல் படிக்கும்  மாணவர்களுக்கு  ஆசிரியர்களே  தேர்வில்  காப்பி  அடிக்க  உதவி  செய்கிறார்கள் . நாயகன்  ஸ்கூல்  எக்சாம்  எழுதிக்கொண்டிருக்கும்போது செக்கிங்  ஆஃபிசர்ஸ்  வரும்போது  நாயகன்  உள்ளிட்ட  மாணவர்கள்  காப்பி  அடிப்பதைபார்த்து  ரிப்போர்ட்  அடித்து  அனைவரையும்  ஃபெயில்  ஆக்கி  விடுகிறார்


ஒரு  அதிகாரி  நாயகனுக்கு  அறிவுரையும்  கூறுகிறார். காப்பி  அடிகக்கூடாது . நேர்மையாக  படித்து  பாஸ்   செய்ய  வேண்டும்  என்கிறார்.  அவரைப்போலவே  நேர்மையான  அதிகாரி  ஆக  ஆகவேண்டும்  என்  உறுதி எடுத்த  நாயகன்  தன்  பொருளாதார  சிக்கல்களுக்கு  நடுவில்  போராடி  எப்படி  வெற்றி  பெற்றான்  என்பது  தான்  மீதி  திரைக்கதை 


 ஒன்  லைன்  ஆகக்கேட்கும்போது டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  இருந்தாலும்  திரைக்கதை  ,மேஜிக்கா ல்  சுவராஸ்யமான  படம்  ஆக்கி  இருக்கிறார்கள் . இதில்  ந்ட்பு , காதல்  எல்லாம்  உண்டு 


நாயகன்  ஆக   விக்ராந்த்  மான்சோ பிரமாதமாக நடித்திருக்கிறார். பல  இடங்களில்  பல வேலை  பார்த்துக்கொண்டே  படிக்கும்  இடம்  ஆகட்டும் , இண்ட்டர்வ்யூ  அட்டெண்ட்  பண்ணும்  காட்சி  ஆகட்டும், காதலியிடம்  உருகும்போது  ஆகட்டும்  நடிப்பின்  பல  பரி,மாணங்களை  வெளிப்படுத்தூகிறார்



நாயகி  ஆக  மேதா  சங்கர்  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  உள்ளார் . நாயகனை  உத்வேகபப்டுத்தும்  காட்சிகளில்  மிளிர்கிறது  அவர்  நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  வரும் கீதா  அகர்வால் , நண்பன்  ஆக  வரும்  ஆனந்த்  ஜோஷி ,  மற்றவர்களின்  வெற்றிக்கு  உதவுபவராக  வரும் அன்ஷூமான்  ஆகியோர்  நடிப்பும்  அருமை 


சாந்தனு  மோயித்ராதான்  இசை . பாடல்கள் , பின்னணி  இசை  இரண்டும்  சிறப்பு . ரண்டராஜன்  ராமபத்ரன்  ஒளிப்பதிவில்  கலக்கி  இருக்கிறார். நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்கள்  கொள்ளை  அழகு . 146  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்கள் 

திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  விது  வினோத்  சோப்ரா


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  இண்ட்டர்வ்யூ  ஆட்ட்டெண்ட்  பண்ணும்  காட்சி  படத்தின்  ஹை  லைட்  சீன். பிரமாதமாக  அமைந்திருக்கிறது 


2  ப்டம்  பார்க்கும்  ஒவ்வொருவருக்கும்  நாயகன்  எப்ப்டியாவது  ஜெயித்து  விட  வேண்டும்  என்ற  எண்ணத்தை  உருவாக்கும் விதத்தில்  திரைக்கதை  அமைத்த  விதம்  அட்டகாசம் 


3  படத்தில்  வரும்  பெரும்பாலான  கேரக்டர்கள்  டிசைன்  செய்த  விதம், அவர்கள்  நடிப்பு  கச்சிதம் 

4   டெரரிசம்  டூரிசம்  சொல்  குழப்பத்தால்  நாயகன்  தேர்வில்  தோல்வி  அடையும்  காட்சி  நன்றாக  இருந்தது 


ரசித்த  வசனங்கள் 


1  நியாயமானவங்க  பதவில  இருந்தா  நேர்மைக்கு  மதிப்பு  இருக்கும் 


2   குறுக்கு  வழில  வர்ற  பணத்தை  செலவு  பண்றதுல  தனி  சந்தோஷம் இருக்கு 


3   என்னோட  விருப்பத்தை  அப்பா  கிட்டே  சொல்ல  தைரியம்  வர்லை


 அம்மா  கிட்டே  சொல்லி  இருக்கலாமே?


 அம்மா  இருந்திருந்தா  சொல்லி  இருப்பேன், இல்லையே? 


4 அம்மா  செத்தது  கூடத்தெரியாம  நான்  போராடிட்டு  இருந்திருக்கேன்


5  வெளில  இருக்கும்  இருட்டுக்குப்பயப்படாதவன் உள்ளே  இருக்கும்  இருட்டு  பழகிடும்


6 ரொம்பப்பெரிய  பொய்யை  நீ  ஈசியா  சொல்றே , பேசாம  நீ  டிவி ரிப்போர்ட்டரா  சேர்ந்துடு


7  இந்த  உலகத்தில்  இருக்கும்  எல்லாப்பொண்ணுங்களும்  ஒரே  மாதிரி  தான் .  ரெண்டு  நிமிசத்தில்  நம்மை  விட்டுட்டுப்போய்டுவாங்க 


8  நான்  ஐ லவ்  யூ  சொன்னா  இந்த  உலகத்தையே  திருப்பிப்போடுவேன்னு  அன்னைக்கு  சொன்னியே   போ  உலகத்தைத்திருப்பிப்போடு


9  இது  உன்னோட  போராட்டம்  இல்லை , நம்மோட  போராட்டம் , நம்மள்ல  ஒருத்தன்  ஜெயிச்சுட்டா  நாம  எல்லாரும்  ஜெயிச்ச  மாதிரி 


10  எட்டு  நிமிசம்  20  செகண்ட்ஸ்ல  உன்னை  சாப்பிடச்சொன்னாங்க, ஏன்னா  அப்போதான்  டைம்  மெயிண்ட்டெய்ன்  பண்ண  முடியுமாம்


11  என்  வாழ்க்கைல  முதல்  முறையா  ஒரு  போலீஸ்காரன்  தான்  வாங்குன  லஞ்சத்தை  திருப்பித்தர்றான்


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியைத்தேடி  அவள்  வீட்டுக்குப்போகும்போது  நாயகி  ஃபோனில்  பேசும்போது  நாயகனை  நோஸ்கட்  கொடுத்து  அனுப்பி  வ்டுகிறா ள். அந்தக்காட்சியில்  நாயகியின்  குரல்  மட்டுமே  ஒலிக்கிறத்  . நாயகியை  விஷூவலாகக்காட்டி  இருக்க  வேண்டும் 


2  நாயகி  நாயகனை  முதலில்  அவமானப்படுத்தி  அனுப்பி  விட்டு பின்  ஒரு  நாளில்  அதற்கு  சாரி  கேட்பது  ஏற்றுக்கொள்ளும்படி  இல்லை . திடீர்  என  என்  வீட்டுக்கு  வந்ததால்  அப்படி  செய்து  விட்டேன் என  சொல்வதும்  நம்பும்படி  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அனைத்து  மாணவர்களும்,  பெற்றோர்களும்  தவற  விடாமல்  பார்க்க  வேண்டிய  சிறந்த  படம் . நாவல்கள் , சிறுகதைகள்  படிப்பதை   விட  வெற்றி  பெற்றவர்களின்  சுய சரிதை  நூல்களை நாம்  அதிகம்  படிக்க  வேண்டும், ஆனால்  லைப்ர்ரியில்  அவை  புத்தம்புதிய  புத்தகங்களாக  கேட்பார்  இன்றி  ரேக்கில்  கிடக்கின்றன. ரேட்டிங்  3. 5 / 5  

12th Fail
Theatrical release poster
Directed byVidhu Vinod Chopra
Written byVidhu Vinod Chopra
Jaskunwar Kohli
Based on12th Fail
by Anurag Pathak
Produced byVidhu Vinod Chopra
Yogesh Ishwar
Starring
Narrated byAnant V Joshi
CinematographyRandarajan Ramabadran
Edited byJaskunwar Kohli
Vidhu Vinod Chopra
Music byShantanu Moitra
Production
company
Distributed byZee Studios
Release date
  • 27 October 2023
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹20 crore[2]
Box officeest. ₹69.64 crore[3]

Wednesday, February 07, 2024

ANIMAL (2023)- ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் ட்ராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 100  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  1000  கோடி  வசூலை  அள்ளிக்குவித்த  படம்.. 201  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  குடும்பத்துடன்  பார்க்கத்தகுதி  அற்ற  படம் .


போற  பாதை  எப்படி  இருந்தாலும்  போய்ச்சேரும்  இடம்  சரியானதாக  இருக்க  வேண்டும்  என  பெரியவர்கள்  சொல்வார்கள் . இந்தப்படத்தின்  கதைக்கரு  என்னவோ  அதீதமாக  அப்பா  மேல்  பாசம்  வைத்திருக்கும்  மகனின்  கதை  தான். ஆனால்  அட்டென்சன்  சீக்கிங்க்காகவோ , அல்லது  யாரும்  சொல்லாத  கோணத்தில்  சொல்கிறேன்  என்பதற்காகவோ இயக்குநர்   கொஞ்சம்  கேவலமான  சிந்தனையுடன்  படம்  எடுத்திருக்கிறார். இப்படி  எல்லாம்  ஒரு  கேரக்டர்  டிசைன்  இருக்கும்  என  நீங்கள்  கற்பனை  கூட  செய்து  பார்த்திராத  மட்ட  ரகமான  ஆள்  பற்றிய  கதை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  மிகப்பெரிய  கோடீஸ்வரன்  கம்  தொழில்  அதிபர் .  தன்    மகன்  மிகவும்  முரட்டு  சுபாவம்  உள்ளவன்  என்று  தெரிந்து  அப்பா  மகனை  கொஞ்சம்  கடுமையாகவே  வளர்க்கிறார். நாயகன்   அப்பா  மேல்  அதீத  அன்பு  வைத்திருக்கிறான். ஒரு  கட்டத்தில்  தன் அப்பாவைக்கொல்ல  யாரோ  முயல்கிறார்கள்  என்பதை  கண்டறிந்த  பின்  அந்த  சதிகாரர்கள்  யார்? என்பதை  கண்டுபிடிக்க  என்ன  எல்லாம்  செய்கிறான் ? அப்பா  மகன்  பாசம்  என்ன  ஆனது  என்பதை  எல்லாம்   இழுத்து ,  நீட்டி  முழக்கி  சொல்லி  இருக்கிறார்கள் 


 இந்த  மெயின்  கதையை  மட்டும்  சொன்னால்  சுவராஸ்யமாக  இருக்காது  என்பதற்காக  நாயகனின்  இரு  காதல்  கதைகளையும்  சேர்த்து  சொல்லி  இருக்கிறார்கள் . நாயகன்  முதலில்  காதலித்து  மணம்  செய்து கொண்ட  பெண்ணுடன்  வாழ்வது  ஒரு  கதை 



  நாயகனுக்கு  ஒரு  விபத்தில்  அடிபட்டு  ஹார்ட்  சர்ஜரி  செய்த  போது   நாயகனின்  இதய  மாற்று  அறுவை  சிகிச்சைக்கு  இதய  தானம்  கொடுத்தவனின்  மனைவி  இப்போது  நாயகனை    நெருங்கி  வர  முதல்  சம்சாரத்தை  அம்போ  என  விட்டு  விட்டு  நாயகன்  இரண்டாவது  சம்சாரம்  பின்  செல்வதும்  இரு  சம்சார  சாகரங்களுக்கு  இடையே  அவன்  வாழ்க்கை  என்ன  ஆனது  என்பதையும்  சொல்வது  எக்ஸ்ட்ரா  திரைகக்தை 


  நாயகன்  ஆக  ரன்பீர்  கபூர்  அட்டகாசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்,    முரட்டுத்தனத்தின்  எல்லையை  காட்ட  வேண்டிய  இடத்தில்  எல்லாம்  சி  செண்ட்டர்  ரசிகர்களின்  கை  தட்டலை  அள்ளிக்கொள்கிறார்


நாயகனின்  அப்பாவாக  அனில்  கபூர்  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார். பல  இடங்களில்  இவரது  நடிப்பு  அபாரம் 


நாயகி  ஆக  நாயகனின்  காதல்  மனைவியாக  ராஷ்மிகா    மந்தனா  75 %  கிளாமருடன்  25 %  நடிப்புடன்  தன்  பங்கை  கச்சிதமாக  நிறைவேற்றி  இருக்கிறார்


நாயகி  நெம்பர்  2  ஆக  இரண்டாவது  மனைவியாக  த்ரிப்தி டிமிரி  நடித்திருக்கிறார். கலக்கல்  நடிப்பு , அசத்தல்  கிளாமர் 


இவர்கள்  போக  நட்சத்திரப்பட்டாளமே  படம்  நெடுக  உண்டு 


இசை  அமைத்திருப்பவர்  ஏ ஆர்  ரஹ்மான்  என  டைட்டில்  சொன்னாலும்  இசை  அமைப்பாளர்கள்  பட்டியலே  10  பேர்  இருப்பார்கள்  போல . பிஜிஎம்  அதகளம் 


சந்தீப்  ரெட்டி  தான்  கதை .திரைக்கதை , இயக்கம்,  சவுரவ்  குப்தா  தான்  வசனம்  




சபாஷ்  டைரக்டர்


1   விஜய்  நடித்த  வாரிசு  படமே  ஆல்ரெடி  வந்த  சில  தெலுங்குப்படங்களின்  பட்டி  டிங்கரிங்  வெர்சன்  தான்.  அந்த  வாரிசு  கதையையே  பட்டி  டிங்கரிங்  பண்ணிய  சாமார்த்தியம் 


2  அர்ஜூன்  ரெட்டி  படத்தில்  வரும் முரட்டுத்தனமான  கேரக்டர்  டிசைனை  உல்டா  செய்தது 


3   ஆல்ஃபா  மேல் , பீட்டா  ஃபீமேல்  என  என்னென்னெமோ  சொல்லி  ஆணாதிக்கத்தை  ஓவர்  டோசாக  கொடுத்து  பெண்களைக்கடுப்பேற்றியது


  ரசித்த  வசனங்கள் 


1  சரித்திரம்  நமக்குக்கத்துக்குடுத்தது  ஒண்ணுதான் , எப்போ  வேணா  யார்  வேணா  யாரை  வேணா  தாக்கலாம் 


2  இங்கே  இத்தனை  பேர்  இருக்கும்போது  என்னை  மட்டும்  அவ  ஏன்  அண்ணா  அப்படினு கூப்பிடனும் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கடந்த  20  வருடங்களாக  எந்த  வித  போக்குவரத்தும்  இல்லாத  பங்காளிகள்  நாயகனுக்கு  ஒரு  பிரச்சனை  என்றதும், அவர்  அழைக்கிறார்  என்பதற்காக  ஒன்று  கூடி  திரண்டு  வர  தயாராக  இருப்பது  டிராமா  பார்ப்பது  போல்  உள்ளது


2  நாயகனின்  அப்பா  போல்  உருவத்தோற்றம்  கொண்ட  ஆளை  அழைத்து  வரும்  நாயகன்  இந்த  க்ளோனிங்  ஆள்  மேட்டர்  யாருக்கும்  தெரியக்கூடாது  என  25  பேர்கள்  கொண்ட  கூட்டத்திடம் சொல்கிறான்.  இதை  தனிமையில்  அப்பாவிடம்  மட்டுமே  சொல்லி  இருக்க  வெண்டும் 


3  க்ளோனிங்காக  நடிக்க  சம்மதிக்கும்  ஆளுக்கு  தன்  உயிருக்கு  ஆபத்து  என்பது  தெரியாதா?  எப்படி  ஒத்துக்கொள்கிறார்? அதற்கான  டீலிங்க்  என்ன? டீட்டெய்லிங்க்  இல்லை 


4    தங்கள்  ஃபோன்  ஒட்டுக்கேட்கப்படும்  என்பது  தெரிந்தும்  மடச்சாம்பிராணி  வில்லன்கள்  கொலைக்கான  திட்டம்  பற்றிப்பேசும்போது  பரஸ்பரம்  தங்கள்  பெயர்  சொல்லி  அழைத்துக்கொள்வார்களா? 



5  கையில்  கோடாலியுடன் 100  அடியாட்கள்  எதிர்க்க  நாயகன்  தனி  ஒரு  ஆளாக  அத்தனை  பேரையும்  துவம்சம்  செய்வது  காதில்  பூக்கூடை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+  காட்சிகள் , வசனங்கள் , திரைக்கதை  அமைப்பு , கேரக்டர்  டிசைன்  எல்லாவற்றிலும்  18+  போதாததற்கு  ஓவர்  வன்முறை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியல்  ஆக்சன்  மசாலா  என்ற  பெயரில்  ஒரு  மட்டரகமான  , கேவலமான , குப்பைப்படம். இதெல்லாம்  மெகா  ஹிட்  ஆகி  இருக்கே? என   வருந்தத்தான்  வேண்டி  இருக்கிறது. ரேட்டிங்    1 / 5 


Animal
Theatrical release poster
Directed bySandeep Reddy Vanga
Screenplay bySandeep Reddy Vanga
Pranay Reddy Vanga
Suresh Bandaru
Story bySandeep Reddy Vanga
Dialogues bySaurabh Gupta
Produced byBhushan Kumar
Krishan Kumar
Murad Khetani
Pranay Reddy Vanga
Starring
CinematographyAmit Roy
Edited bySandeep Reddy Vanga
Music bySongs:
Pritam
JAM8
Vishal Mishra
Jaani
Manan Bhardwaj
Shreyas Puranik
Ashim Kemson
Harshavardhan Rameshwar
A. R. Rahman
Ajay–Atul
Bhupinder Babbal
Background Score:
Harshavardhan Rameshwar
Production
companies
Distributed byAA Films
Sri Venkateswara Creations
AP International
E4 Entertainment
KVN Productions
Release date
  • 1 December 2023
Running time
201 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget100 crore[2][3]
Box officeest. ₹917.82 crore[4]

Tuesday, February 06, 2024

A RANJITH CINEMA (2023)- எ ரஞ்சித் சினிமா - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 டைட்டிலைப்பார்த்ததும்  இது  பா  ரஞ்சித் சினிமாட்டிக்  யுனிவர்ஸ்  படமா இருக்குமோ? என்ற  பயம்  வேண்டாம், ஜாதிக்கும், இந்தப்படத்துக்கும்  சம்பந்தமே  இல்லை . இது ஒரு  த்ரில்லர்  மூவி 

2008ல்   ஆடம் சாண்ட்லியர்  நடிப்பில்  வெளியான பெட்  டைம்  ஸ்டோரீஸ்  படத்தின்  கதையைப்போலவே  இப்படத்தின்  கதையும்  அமைந்திருக்கும். நம்  ஊர்  ஆட்களுக்குப்புரிவது  போல்  சொல்ல  வேண்டும்  எனில்  விண்ணைத்தாண்டி  வருவாயா?  படத்தின்  திரைக்கதையின்  சாயலில்  இப்படத்தின் கதை  இருக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  சினிமா  டைரக்டர். தன்  வாழ்வில்  நிகழ்ந்த  சில  சம்பவங்களை  வைத்து  ஒரு  கதை  ரெடி  செய்கிறான்.  அக்கதை  சரியாக, முழுமையாக  பூர்த்தி  அடையவில்லை . அதனால்  தயாரிப்பாளர்  கதையை  ஃபினிஷ்  பண்ணி  சொல்லப்பா  என்றதும், நாயகன்  கற்பனையாக  சில  சம்பவங்களை  சேர்த்துக்கோர்வையாக  கதை  சொல்கிறான், ஆனால்  அவன்  கற்பனையாகச்சொன்ன  சம்பவங்கள்  நிஜ  வாழ்வில்  நடக்கின்றன. இந்தக்குழப்பங்களுக்கு  விடை  காண்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகியின்  அப்பா  ஒரு  வக்கீல். நாயகன்  நாயகியை  பஸ்  ஸ்டாப்பில்  வைத்து  முதன்  முதலாகப்பார்க்கிறான். நாயகன்  டி வி  க்காக  பிராங்க்  ஷோ  நடத்துபவன். போலீஸ்  ஆஃபீசர்  கெட்டப்பில்  நாயகியிடம்  தகறாரு  செய்யும்  ஆட்களை  விரட்டுகிறான். அதன்  மூலம்  நாயகி உடன்  அறிமுகம்  ஆகி  நட்பாகி  அது  காதல்  ஆகிறது. ஆனால்  நாயகியின் அப்பாவுக்கு  அவர்கள்  காதல்  பிடிக்கவில்லை 


  வில்லன் வசதியான  பணக்காரப்பெண்ணைக்காதலித்து  மணம்  புரிந்தவன், ஆனால்  மாமானாருக்கும், வில்லனுக்கும்  ஒத்துப்போவதில்லை. ஒரு  முக்கியமான  ஆஃபீஸ்  மீட்டிங்க்குப்போக  வேண்டிய  வில்லனை  நாயகனின்  பிராங்க்  ஷோவால்  தடை  பட  வில்லனுக்கு  மாமனாரிடம்  கெட்ட  பேர் . அதற்குப்பழி  வாங்க  வில்லன்  துடிக்கிறான்


 இப்போது  நாயகனுக்கு இரண்டு  வில்லன்களை  எதிர்  நோக்கும்  கட்டாயம்  ஏற்படுகிறது. நாயகியின் அப்பா ,  நாயகனின்  பிராங்க்  ஷோவால்  பாதிக்கப்பட்ட  வில்லன் . இவர்கள்  இருவரும்  நாயகனின்  வாழ்க்கையில்  செய்த  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஆசீஃப்  அலி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவருக்கு  ஜோடியாக   நமீதா  பிரமோத்  அழகாக  நடித்திருக்கிறார்.அவரது  புன்னகையான  முகம்  மட்டுமே  மொத்தக்கதையையும்  தாங்கி  நிற்கிறது. இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  பிரமாதம்


  நாயகன் - நாயகி  இருவரின்  கேரக்டர்களையும்  திரையில்  பிரதிபலிக்கும்  காதல்  ஜோடி  ஆக  ஆன்சன்   பால்  மற்றும்   ஹன்னா  ரெஜி  கோஷி  நடித்திருக்கிறார்  ஹன்னா  நம்ம  ஊர்  பிரியா  ஆனந்த்  சாயலில்  இருக்கிறார்.ஆனால்  நாயகன் - நாயகி  உடன்  ஒப்பிடும்போது  இவர்கள்  இருவரும்  அதிக  அளவில்  ஒன்றிய  நடிப்பை  வழங்க  முடியவில்லை 


நாயகியின்  அப்பாவாக  ரஞ்சித் பணிக்கர்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார், நாயகனின்  அம்மாவாக  சபீதா  ஆனந்த்  நடித்திருக்கிறார்


  வில்லனாக  சைஜூ  க்ரூப் , அவரது  பணக்கார  மனைவியாக  ஜ்வல்  மரியா  நடித்திருக்கிறார். அவரது  முகத்தில்  நடிப்பு  சரியாக  வரவில்லை , வசீகரமான  தோற்றமும்  இல்லை .


மிதுன்  அசோகனின்  இசையில்  பாடல்  ஒன்று  ஹிட் , பிஜிஎம்மில்  மிரட்டி  இருக்கிறார்,மனோஜின்  எடிட்டிங்கில்  இரண்டைரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது. கடைசி  50  நிமிடங்கள்  பர பர  என    பறக்கிறது


ஒளிப்பதிவு  இருவர் - சுனோக்  வேலாயுதம் , குஞ்சுண்ணி  நாயகியை  அழகாகக்காட்டி  இருப்பதில்  வெற்றி 


நிஷாந்த்  ஷாட்டு  தான்  திரைக்கதை  எழுகி  இயக்கி  இருக்கிறார். மலையாள  சினிமாவுக்கு  இது  ஒரு  புதுமையான  திரைக்கதை  அமைப்பு 


 சபாஷ்  டைரக்டர்


1  விண்ணைத்தாண்டி  வருவாயா  படத்தின் கதைக்கருதான், ஆனால்  யாரும்  அப்படி  சொல்லி  விட  முடியாதபடி  திரைக்கதை  அமைத்த  சாமார்த்தியம். அழகிய  தமிழ்மகன், நூறாவது  நாள் , புலி வருது   போன்ற  படங்களின்  ரெஃப்ரன்ஸ்  ஆங்காங்கே  இருக்கும். ரசிக்கும்படி  அவற்றை  கனெக்ட்  செய்த  விதம் 


2  நாயகனின்  ஸ்க்ரிப்ட்டில்  உள்ள  சம்பவங்களும், நிஜத்தில்  நடக்கும்  சம்பவங்களும்  ஒன்று  தான்  பெரும்பாலும், ஆனால்  அதைக்குழப்பாமல்  காட்சிப்படுத்திய  சாமார்த்தியம் 


3   வில்லன்  வரும்  காட்சிகளில்  எல்லாம்  வரும்  தீம்  மியூசிக்  அடிபொலி 


4  முதல்  பாதி  ஸ்லோவாகப்போனாலும் பின்  பாதி  செம  விறு  விறுப்பு 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  கண்ணின்  கருவிழியாலே  என்னை  இழுக்கின்றாயே


  ரசித்த  வசனங்கள் 


1  நாம  நம்ம  வாழ்க்கைல  எடுக்கற  முக்கியமான  முடிவுகள்  தான்  நம்  வெற்றிக்கும், தோல்விக்கும்  காரணமா  அமையும் 


2  நான்  ஒரு  சினிமா  டைரக்டர்


 ஓஹோ, எந்தப்படத்துக்கு ?


 ம் ம்  அது  வந்து , இனிமே  எடுக்கப்போற  ஒரு  படத்துக்கு , ஹிஹி 


3  நாம  தூங்கும்போது  நம்  ஆழ்மனசு  90%  வேலை  செஞ்சுட்டு  இருக்கும், விழிச்சுட்டு  இருக்கும்போது  10%  தான்  வேலை  செய்யும் 


4  சில  விஷயங்கள்  நம்  வாழ்க்கைல  நடக்கும்போது  இது  ஏற்கனவே  நம்  வாழ்வில் நடந்தது  போல  தோணும், இதுக்குத்தேஜாவு  என்று  பெயர் , இ எஸ்  பி பவர்  என்பதும்  இதுதான் , தேஜாவு  ஒரு  ஃபிரெஞ்ச்  சொல்


5    நாம  செய்யற  சின்ன  விஷயம்  மற்றவர்கள்  வாழ்க்கைல  ஏதோ  ஒரு மாற்றத்தை  ஏற்படுத்தும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மாநாடு  , மார்க்  ஆண்ட்டனி  மாதிரி  டைம் லூப்  படங்களில்  ஒரே  மாதிரியான  காட்சி  ரிப்பீட்  மோடில்  வந்து  கொண்டே  இருக்கும், அதே  போல்  இப்படத்திலும்  ரிப்பீட்  சீன்கள்  உண்டு, சில  இடங்களில்  சலிப்பை  ஏற்படுத்துகிறது . காட்சிகள்  ஒன்று  தான், ஆனால்  கேரக்டர் கள்  தான்  வேறு  வேறு 


2  நாயகன்  போலீஸ்  ஸ்டேஷன்  போகும்போது   ஏசிபி  இடம்  தன்  வீடியோ  கேமராவில்  நாயகியைப்படம்  பிடித்த  க்ளிப்புடனிருப்பதைக்காட்டுகிறான், வேலில  போற  ஓணானை  வேட்டில  விட்ட  கதையா  இருக்கு 


3   நாயகிக்கு  விபத்து  நடந்ததும்  அவரை  ஹாஸ்பிடல்  அழைத்துச்செல்லும்  நாயகன்  தன்  கூட  இருக்கும்  பெண்  மூலமாக  நாயகியின்  அப்பாவுக்குத்தகவல்  சொல்லி  இருக்கலாமே? நாயகியின்  ஃபோனை  எடுத்து நாயகியின்  அப்பாவுக்கு  இவர்  ஏன்  ஃபோன்  பண்ண  வேண்டும் ? ஏற்கனவே  இருவருக்கும்  தகறாரு  இருக்கே?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  த்ரில்லர்  மூவி  பார்க்க  விரும்புபவர்கள்  பார்க்கலாம், ரேட்டிங்  2.75 / 5 


A Ranjith Cinema
Theatrical release poster
Directed byNishanth Sattu
Written byNishanth Sattu
Produced by
  • Nishad Peechi
  • Babu Joseph Ambatt
Starring
Cinematography
  • Sunoj Velayudhan
  • Kunjunni S. Kumar
Edited byManoj
Music byMidhun Asokan
Production
company
Luminous Film Factory
Distributed byJupiter Pictures Release
Release date
  • 8 December 2023
CountryIndia
LanguageMalayalam