Tuesday, January 16, 2024

SWATHI MUTTHINA MALE HANIYE ( 2023) - கன்னடம் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்


நடிகை  திவ்யா  ஸ்பந்தனா  என்னும் ரம்யாவின்  சொந்தப்படம்  இது . ஆனால்  அவர்  இதில் நடிக்கவில்லை . இது  ஒரு  ஃபீல்  குட்  மூவி , தியேட்டர்களில்   ரிலீஸ்  ஆனபோது  அன்பே   சிவம் படம்  போல  பெரிதாக  வெற்றி  பெற  வில்லை , ஆனால்  ஓ டி டி  ரிலீசுக்குப்பின்  பலரும்  கொண்டாடி  வருகிறார்கள் . டீன்  ஏஜ் நபர்களுக்குப்படம் பிடிப்பது  சிரமம், ஸ்லோ  மூவி , ஆனால்  குட்  மூவி 

 இது  தொடங்கும்போது  திவ்யா  ஸ்பந்தனா  வின் கம்  பேக்  படமாக  இருக்கும்  என்று  பேசப்பட்டது . படத்தின்  டைட்டிலுக்கு  கோர்ட்டில் கேஸ்  நடந்தது . இயக்குநர்  ராஜேந்திர  சிங்க்  பாபு 1990  ல்  இயக்கிய   BANNAADA  GEJJE    படத்தில்  வரும்  ஆரம்ப  வரிகளைக்கொண்டு  இருப்பதாகவும்  அதே  டைட்டிலில்  தான்  ஒரு  படம்  எடுக்க  இருப்பதாகவும்  கேஸ்  போட்டார் , ஆனால்  தீர்ப்பு  திவ்யா  ஸ்பந்தனாவுக்கு  சாதகம்  ஆக  வந்தது , ஆனால்  என்ன  காரணத்தினாலோ  அவரால்  நாயகி  ஆக நடிக்க முடியாமல்  போனது . ரேடியோ  ஜாக்கி  ஆக  இருந்த  ஸ்ரீ    நாயகி  ஆக  நடித்தார்   


நடிகரும், இயக்குநரும், எழுத்தாளரும்  ஆன   ராஜ்  பி  செட்டி  நாயகனாக  நடித்து  படத்தை  இயக்கி  இருக்கிறார். இவரது  படங்களில்  பெஸ்ட் இதுதான்  என  கன்னடப்பட  உலக  மீடியாக்களால்  கொண்டாடப்பட்டார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு   மெடிக்கல்  கவுன்சிலர் ,  கேன்சர்   பேஷண்ட்ஸ்  இருக்கும் ஹாஸ்பிடலில்  அவர்  நோயாளிகளுக்கு  ஆலோசனை  வழங்குபவர்  ஆக  இருக்கிறார். 


 நாயகி  வசதியானவர் , கணவர்  எப்போதும்    அவர்  வேலையில்  பிசியாகவெ  இருப்பார் , இருவருக்கு  இடையே  அன்னியோன்யம்  எதுவும்  இல்லை .  தினசரி  சமைத்து  வைத்து  விட்டு  வேலைக்கு  செல்வதே  நாயகியின்  அன்றாட  வாழ்க்கை ஆக  இருந்தது 


நாயகி  தன்  கணவன்  இன்னொரு  பெண்ணுடன்  கள்ளக்காதலில்  இருப்பதை  உணர்ந்து  அதிர்கிறார். ஆனால்   கணவனைக்கேள்வி  எதுவும்  கேட்கவில்லை 


 நாயகி  ஹாஸ்பிடலில்  இருக்கும்  ஒரு  பேஷண்ட்டை  விரும்புகிறார்.  அவர்  விரைவில்  இறக்க  இருப்பவர் . இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை

 நாயகி  ஆக ஸ்ரீ  ரவிக்குமார்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். மொத்தபடத்தையும்  அவர்  தான்  தாங்கி  செல்கிறார். அவரது  நிர்மலமான  முகம், எளிமை ,  கண்ணிய  உடை  பெரிய  பிளஸ் .  படம்  முழுக்க  அவர்  அமைதியகவே   வருவது  அழகு ,  ஆர்ப்பாட்டம் , கோபம் , அழுகை  எதுவும்  காட்டாத  நாயகியைக்காண  வியப்பாக  இருக்கிறது


  நாயகன்  அக  , பேஷண்ட்   அனிகேத் ஆக    ராஜ்  பி  செட்டி நடித்திருக்கிறார். குட்  ஆக்டிங் , அனிகேத்  என்றால்  வீடு  இல்லாதவன்  என்று  பொருள். 


நாயகியின்  அம்மாவாக ரேகா  குட்லக்கி  கலக்கி  இருக்கிறார். சில  காட்சிகளே  வந்தாலும்  அருமையான  நடிப்பு .


இந்தப்படத்தில்  மவுனமான  தருணங்களே  பெரும்பாலும்  பின்னணி  இசையாக   இருக்கிறது மிதுன்  முக்ந்தாவின்  இசை  சிறப்பு 


 ஒளிப்பதிவு , எடிட்டிங்  இரண்டும்  ஒருவரே . பிரவீன்  ஸ்ரீயன். ஃபிரேம்  வைத்தது  போல  சில  ஷாட்கள்  கலக்கலாக  இருக்கின்றன 100  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப் ஆக  கட்  செய்து  இருக்கிறார். பசவண்ணாவின்  வசனம்  தத்துவங்களை  அள்ளித்தெளிக்கிறது 


கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜ் ;பி  செட்டி 



சபாஷ்  டைரக்டர்

1  கதையில்  சில  இடங்களில்  கள்ளக்காதல்  ச்ந்திப்புகள்  நடக்கின்றன. ஆனால்  ஒரு  காட்சி  கூட  நேரடியாக இல்லை , கண்ணியமாக , பூடகமாகத்தான்  காட்சிகள்  படமாக்கப்பட்டிருக்கின்றன


2  நாயகியும் அவர்  அம்மாவும்  சந்தித்து  தனிமையில்  பேசும்  அந்த  இடம்  உலகப்படத்துக்கு  நிகரான  காட்சி 


3   நாயகி  தன்  மேலிட  டாக்டரை  சந்திக்கும்போது  அவர்  கேட்கும்  சந்தேக  கேள்விகளுக்கு  தில்லாக  பதில்  அளிக்கும்  காட்சிகள்  நேர்மையான  பெண்  எதுக்கும் பயப்படாதவளாக  இருப்பாள்  என்பதை  பறை  சாற்றுகிறது 



  ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  சில  விஷயங்கள்  ஏன் நடக்குது? எதுக்காக  நடக்குது? யாருக்கும்  தெரியாது .தெரிஞ்சுக்காமயே நாம  அதைக்கடந்து  போக  வேண்டி இருக்கு 


2  நோயாளிகள்ன்  வலி , அழுகை , துக்கம் , மரணம்  இவை  எல்லாம்  ஆரம்பத்துல  என்னை  ரொம்ப   பாதிச்சுது , ஆனா  இப்போ  பழகிடுச்சு 


3 நம்  அன்புக்கு  பாத்திரம்  ஆனவர்கள்  தடம்  மாறினால், நமக்கு  துரோகம்  இழைத்தால்  எந்த  ரீ  ஆக்சனும்  காட்டாமல்  இருப்பதும்  ஒரு  மெச்சூரிட்டி தான் 


4  விளையாட்டுத்தனத்தை  மூட்டை  கட்டி  வெச்சுட்டு  கொஞ்சம்  சீரியசா  பேச  முடியுமா?


 சாகப்போகும்  பேஷண்ட்  கிட்டே  சீரியசா  பேசச்சொல்றீங்களே? நீங்க  நிஜமாவே  கவுன்சிலர்  தானா?


5  எத்தனையோ  பூச்செடி  இருக்கும்போது  ஏன்  நந்தியா  வட்டைப்பூ  செடியை  செலக்ட்   பண்ணுனீங்க?


 ஏன்னா  ரோஜா, தாமரை  மாதிரி  மலர்கள்  ஆண்டவனுக்கு ப்படைக்கப்படுது. மற்ற  மலர்கள்  பெண்கள்  கூந்தலில்  சூடிக்கொள்கிறார்கள்< ஆனால்  நந்தியா  வட்டைப்பூக்களை  யாரும்  உபயோகிப்பதே இல்லை , கண்டு  கொள்வதும்  இல்லை, ஆனாலும்  தினமும்  ஏராளமான  மலர்களை அச்செடி  அளித்துக்கொண்டு  தான்  இருக்கிறது .அங்கீகாரம்  கிடைக்கவில்லை  என்றாலும்  நாமும்  அதே  போல்  நம்  கடமையை  செய்து  கொண்டே  இருக்க  வேண்டும் 


6   ஏன்  என்  கிட்டே  பேச  மாட்டேங்கறீங்க?


 நாளை  சாகப்போற  ஆள்  கிட்டே  பேச  என்ன  இருக்கு ?


 நாளை  சாகப்போறேன்  என்ற  ஒரு  காரணமே  போதுமே? பேசலாமே?


7  அம்மா , ஐ  லைக்  ஹிம்


 லைக்  மீன்ஸ்  , இன்  வாட் வே?


  ஏம்மா? அப்படிக்கேட்கறிங்க? நான்  ஒருத்தனை விரும்பறது  தப்பா?

 ஒரு கல்யாணம்  ஆன  பொண்ணு  தன்  அம்மா  கிட்டே  வேற  ஒருத்தனை  விருபுவதா  சொல்வது  தப்பு , ஆனா  ஒரு  பெண்னா  யோசிக்கும்போது  தப்பில்லைன்னு  தோணுது பெண்கள்  அவங்க  வாழ்க்கை  முழுவதும்  பாத்திரம்  கழுவுவது , சமைப்பது   என  முழு  வாழ்க்கையும்  வேலை  செஞ்சே  முடிஞ்சிடுது . அன்பு , காதல்  தவிர  அவங்களூக்கு  எல்லாம்  கிடைக்குது 


8  பெண்கள்  நாம்  நாமா  வாயைத்திறந்து  கணவன் கிட்டே  அன்பு  தேவைனு  கேட்பதும்  இல்லை , அவங்க  அன்பைத்தருவதும்  இல்லை 


9  வாழ்க்கை  முழுவதும்  ஐ  மீன்  சமாதிக்குப்போகும் வரை  நாம்  அன்பைத்தேடிக்கொண்டு  தான்  இருக்கிறோம்


10  நான்  ரொம்ப  வலிமையானவன்னு  நினைச்சுட்டு  இருந்தேன் , ஆனா  ஒரே  ஒர்  இரவு வந்த  வலி  அதை  பொய்  ஆக்கிடுச்சு 


11  ஒவ்வொரு  பேஷண்ட்டும் வலியால  துடிக்கும்போதும், யாராவது  இறக்கும்போதும்  எனக்கு  என்  அம்மா  நினைவு  வந்துடும்,, அம்மா  நோய்வாய்ப்பட்டு  இருந்தப்போ  என்னால  காப்பாத்த  முடியலை . 


12  இறப்பின்  விளிம்பில்  இருக்கும்  ஆளைக்காப்பாற்ற  நாம்  பெரிய  ஆட்கள்  இல்லை , சாமான்யர்கள் .நம்மலால  முடிந்தது  எல்லாம்  சந்தோஷமா  அவங்களை   அனுப்பி  வைப்பதுதான்


13   எவ்ளோ செடி இருக்கும்போது எதுக்காக இந்த செடிய எனக்கு கொடுத்தீங்க?"

"ஏன்னா இந்த செடியிலதான் டெய்லியும் நிறைய பூ பூக்கும்..."
"ஆமா எங்க வீட்டிலேயும் டெய்லி நிறைய பூ பூக்குற ஒரு செடி இருக்கு.. ஆனா பூ பூத்து.. பூக்களா கொட்டி.. மறுநாள் அந்த இடமே குப்பையா ஆகிடும்..."
"உங்க இடத்தை குப்பையாக்க அந்த பூக்கள், பூக்குறது இல்ல'ங்க.. அந்த பூக்கள், தங்களுடைய வாழ்க்கைய சந்தோஷமா சிரிச்சு கொண்டாடுறதுக்காக பூக்குது.. அதை ரசிச்சி பார்க்குறதும், கீழே விழுந்த உடனே குப்பையா நினைக்கிறதும் நம்மளோட மனசுலதான் இருக்கு.. அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படிங்கிறதப்பத்தி எதையும் யோசிக்காம, நாம நம்ம வாழ்க்கையை சந்தோஷமா, இந்த பூக்கள் மாதிரி பூத்துகிட்டே இருக்கணும் அப்படிங்கறதுக்காகதான் இந்த செடிய உங்களுக்கு கொடுத்தேன்.. நான் அப்படித்தான் வாழ நினைக்கிறேன்.."



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகி  தன்  கணவன் , நண்பர்கள்  இருவர்  உடன்  ஒரு  பார்ட்டியில்  இருக்கிறார். பார்ட்டின்னா  இவங்க  நால்வர்  மட்டுமே, அப்போ  நாயகிக்கு  ஒரு  கால்  வருது . அது  பர்சனல்  கால்  அல்ல, அஃபிஷியல்  கால். பேஷண்ட்  பற்றிய  அப்டேட். 2  நிமிடத்தில்  கால்  பேசி  முடிச்சுடறார். அந்த  ஃபோன்  காலை  அங்கேயே  உட்கார்ந்து  பேசி  இருக்கலாமே? எதுக்கு  ஒரு [பர்லாங்  தூரம் நட்ந்து  வந்து  தனிமையில்  பேசனும் ?  


2  கணவனின்  கள்ளக்காதலி    நைட்  டைமில்  குட்  நைட்  என  மெசேஜ்  அனுப்புகிறாள்.கணவ்ன்  அப்போது  தன்  மனைவியுடன்  பெட்ரூமில்  இருக்கிறார்.  அன்  டைமில்  இப்டி  மெசேஜ்  அனுப்பாதே  என க. கா  விடம்  எச்சரித்து  இருக்க  மாட்டாரா?


3  கணவ்ன்  - நாயகி  இருவரும்  தம்பதியாக  இருந்தபோதிலும்  அவர்களுக்கு  நடுவே நெருக்கம் இல்லை . இரவில்  கூடல்  இல்லை .கணவனுக்கு கள்ளக்காதல்  இருக்கிறது . இப்படிப்பட்ட நிலையில்  அடுத்த  நாள்  காலை  கள்ளக்காதலியுடன்  அவுட்டிங்  போக  அட்வான்ஸ்  அரேஞ்ச்மெண்ட்ஸ்  ஆக  கணவன்   காண்டம்  பாக்கெட்  வாங்கி  நாயகி  கண்  முன்  டிராயரில்  வைக்கிறான். எந்த  மாங்கா  மடையனாவது  இப்படி  அப்பட்டமா  மாட்டிக்குவானா?  அதென்ன  கிடைக்காத  சீமைச்சர்க்கரையா? போறப்ப  மெடிக்கல்  ஷாப்ல  வாங்கிக்கக்கூடாதா?


4  நாயகி ,கணவன்  இருவரும்  பெரிய  பங்களாவில்  வசிக்கின்றனர் , கார்  இருக்கு . இருவரும்  நல்ல  சம்பாதிக்கும்  பணியில். ஆனால்  தின்சரி  நாயகி  தானே  வீடு .,  வாசல் , எல்லாம்  கூட்டி  சுத்தம்  செய்வது  போல்  காட்சி . டிது  எதற்காக? நாயகி  மேல்  அனுதாபம்  வரவா? சமையல்  செய்ய ., வீடு  கூட்டிப்பெருக்க , பாத்திரங்கள்  துலக்க  என  எதற்குமே  பணியாள்  இல்லை .( இந்தக்காலத்தில்  மிடில்  கிளாஸ்  ஃபேமிலிலயே  எல்லாத்துக்கும்  தனித்தனி  ஆட்கள்  வைத்துக்கொள்கிறார்கள் .)


5  நாயகி  ட்யூட்டில  இருக்கும்போது  மனசு  சரி  இல்லாம  ஆஃப்  டே  லீவ்  போட்டுட்டு  காரை  எடுத்துட்டு  வீட்டுக்கு  வர்றா. அங்கே  வீட்டு  வாசலில்  ஒரு லேடீஸ்  செப்பல்  இருக்கு , வீடு உள்  பக்கமா  தாழ்  போட்டிருக்கு . காமன்சென்ஸ்  உள்ள  எந்த  ஆணாவது  கள்ளக்காதலியை  தன்  வீட்டுக்கு    அழைத்து  வருவானா? அப்படியே  வர  வைத்தாலும்  லேடீஸ்  செப்பலை  அப்படித்தான்  பெப்பரப்பேனு  வெளில  விட்டுட்டு  இருப்பாங்களா? 


6  நாயகி  மாலை  வீட்டுக்கு  வரும்போது  பெட்ரூமில்  பெட்ஷீட்ஸ்  எல்லாம்  கசங்கி  அலங்கோலமாக  இருக்கு கணவன்  அதைக்கூட  க்ளீன்  பண்ண  மாட்டானா? அட்லீஸ்ட்  கள்ளக்காதலியாவது  அதை  சரி  செய்ய  மாட்டாளா? 


7  புதிதாக  அட்மிட்  ஆன  பேஷண்ட்  தாடி  வெச்சுட்டு  பிச்சைக்காரன்  மாதிரி  இருக்கான். நாயகிக்கு  அவனைப்பார்த்த  இரண்டாவது  முறையே  காதல்  வருவது  நம்பும்படி  இல்லை . கணவ்ன்  அதுக்கு,ம்  மேல  தாடி , குடுமி  வெச்சுக்கிட்டு பைத்தியக்காரன்  மாதிரி இருக்கான். இரு  நாயகர்களில்  ஒருவரையாவது  கொஞ்சம்  டீசண்ட்  ஆக , ஹேண்ட்சம்  ஆகக்காட்டி   இருக்க்கலாம். 


8  நாயகி  அந்த  புது  பேஷண்ட்  எழுதிய  கடிதத்தை  கசக்கி  எறிகிறாள். பின்  மனம்  மாறி  அதை  பத்திரப்படுத்துகிறாள் . என்ன தான் அயர்ன்  பண்ணி  ரெடி  பண்ணினாலும்  கசக்கிய  காகிதம்  மீண்டும்  புதுத்தாள்  மாதிரி  வராதே?  நாயகி  அதை  ஃப்ரேம்  பண்ணி  அவனுக்கே  பரிசாகக்கொடுக்கும்போது  கசங்கிய  காகிதம் எப்படி  நீட்டா  ஆச்சுனு  நீட்  எக்சாம்ல  ஃபெயில்  ஆன  ஆளுக்குக்கூடத்தோணுமே? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆர்ட்  ஃபிலிம்  போல  ஸ்லோவாக  நகரும்  ஃபீல்  குட்  மூவி , பெண்களுக்கும், 50+  நபர்களுக்கும் பிடிக்கும்., ரேட்டிங் 3 / 5 


Swathi Mutthina Male Haniye
Directed byRaj B. Shetty
Written byRaj B. Shetty
Screenplay byRaj B. Shetty
Story byRaj B. Shetty
Produced byRamya
Ravi Rai Kalasa
Vachan Shetty
StarringRaj B. Shetty
Siri Ravikumar
CinematographyPraveen Shriyan
Edited byPraveen Shriyan
Music byMidhun Mukundan
Production
companies
Lighter Buddha Films
AppleBox Studios
Distributed byKRG Studios
Release date
  • 24 November 2023
Running time
101 minutes
CountryIndia
LanguageKannada

Monday, January 15, 2024

curry & cyanide: the jolly joseph case (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா டாகுமெண்ட்ரி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


கேரளா - கோழிக்கோடு  மாவட்டம்  - கூடத்தாய்  கிராமம்  ஜோலி  ஜோசப்   என்பவர்  தனது கணவர்  மாமனார் , மாமியார்  உட்பட  ஆறு  பேரைக்கொலை  செய்த  விஷயம்  பல  வருடங்களுக்குப்பின்  தான்  போலீசால்  கண்டுபிடிக்கப்பட்டது . அந்த  உண்மை  சம்பவம்  பற்றிய  கிரைம்  டாக்குமெண்டிரி  டிராமா  தான்  இந்தப்படம். 


கேரளா  போலீஸ்  வரலாற்றிலேயே  முதன்  முறையாக  ஆறு  சடலங்கள்  ஒரே  நேரத்தில்  தோண்டி  எடுக்கப்பட்டது இதுவே  முதல்  முறை 


ஸ்பாய்லர்  அலெர்ட்

1995-1996  காலகட்டத்தில் ஜோலி  ஜோசஃப்  என்ற  பெண்ணுக்கும்  ரோய்  தாமஸ்  என்பவருக்கும்  கடிதம்  மூலமாகப்பழக்கம்  ஏற்படுகிறது . இருவரும்  உறவினர்கள்  தான். நட்பு  பின்னர்  காதலாக  மாறுகிறது. இதில் ஜோலி  ஜோசஃப்   குடும்பம்  சாதாரண  விவசாயக்குடும்பம். அதிக  வசதி  இல்லை . ஆனால்  ரோய்  தாமஸ்  குடும்பம்  பாரம்பரியம்  மிக்க  குடும்பம், சொந்த  வீடு , நிலம்  என  சொத்துக்கள்  உண்டு 


ரோய்  தாமஸ்க்கு  ஒரு  சகோதரியும்  , ஒரு  சகோதரனும்  உண்டு . இவரின்  அம்மா, அப்பா  இருவருமே  நன்கு  படித்து  அரசுப்பணியில்  இருந்து  ரிட்டையர்  ஆனவர்கள் . அந்த  ஊரில்  இவர்க்ள்  குடும்பத்துக்கு நல்ல  மரியாதை  உண்டு 

1997 ல்  திருமணம்  நடக்கிறது . இதில்  ரோய்  தாம்சின்  அம்மா, அப்பாவிற்குப்பெரிய  அளவில்  விருப்பம் இல்லை . 


ஜோலி  ஜோசஃப் காலேஜ்  முதல்  வருசம் கூட  முடிக்காதவர் , ஆனால்  அனைவரிடமும்  தான்  எம் காம்  முடித்த  போஸ்ட்  கிராஜூவேட்  என  பொய்  சொல்லி  பில்டப்  கொடுத்திருக்கிறார்


நல்லாப்படிச்சிருக்கே, பேசாம  வேலைக்குப்போலாம்  இல்ல? கவுரமா  இருக்கும்  என  மாமியார்  சொல்லி  இருக்கிறார். ஆனால்  ஜோலி  ஜோசஃப்க்கு  அதில்  இஷ்டம்  இல்லை 


1999 ல்  பிரமோத் (ரெமோ) என்ற  ஆண்  குழந்தை , 2008 ல்  ரெனோல்டு (ஒச்சு) என்ற  ஆண்  குழந்தை  இந்த  தம்பதிக்குப்பிறந்தன


2002ல்  ஜோலி  ஜோசஃபின்  மாமியார்  அன்னம்மா  வலிப்பு  வந்து  மரணம் . மாமியார்  தொடர்ந்து  வேலைக்குப்போக  வற்புறுத்தியதால்  ஜோலி  ஜோசஃப்  விஷம்  வைத்து  கொன்று  விடுகிறார் .  18  வருடங்கள்  கழித்து  2020ல்  தான்  அது  கொலை  என  தெரிய  வந்தது 


என்  ஐ  டி  யில்  கெஸ்ட் லெக்சரர்  ஆக  வேலை  கிடைத்ததாக  ஜோலி  ஜோசஃப்  சொல்லி  இருக்கிறார். சம்பளம்  ரூ 40,000   எனவும்  சொல்லி  இருக்கிறார்.


 ஆனால்  உண்மை  அல்ல . தினமும்  காலை  ரெடி  ஆகி  வெளியே  போவது . மாலை  வீடு  திரும்புவது  என  டகால்டி  வேலை  செய்திருக்கிறார்


2005ல் ஜோலிசோடஃபின் கணவரின்  தங்கைக்கு  திருமணம்  ஆகி  வெளி  நாடு  சென்று  விட்டார்


ஜோலி  ஜோசஃபின்  சொந்தக்காரப்பையன்  மேத்யூ  என்பவன்  நகைக்கடையில்  வேலை  பார்ப்பவன்  , அவனுக்கும்  ஜோலி  ஜோசfக்க்ம்  பழக்கம்  ஏற்பட்டது , அவன்  ஏன்  அடிக்கடி  நம் வீட்டுக்கு  வருகிறான்? என  தம்பதிக்குள்  அடிக்கடி  சண்டை 

2008  ல்  மாமனார்  மறைவு, ஹார்ட்  அட்டாக்  என்று  சொல்லப்பட்டது . ஆனால்  மருமகளின்  நடவடிக்கை  சரி  இல்லை  என  அவளைக்கேள்வி  கேடடதால்  தன்  இமேஜைக்காப்பாற்றிக்கொள்ள  போட்டுத்தள்ளி  விட்டதாகக்கூறப்படுகிறது 


பிறகு  கணவர்  குடிப்பழக்கத்துக்கு  அடிமை  ஆகி  விட்டார்  சரியாக  தொழிலில்  கவனம்  செலுத்தவில்லை  என  ஜோலி  ஜோசஃப்  தரப்பில்  கூறப்படுகிறது 

2011 ல்  கணவர்  மரணம். சாப்பாட்டில்  விஷம்  கலக்கப்பட்டு  கொலை .ஆனால் தொழிலில்  ஏற்பட்ட  நட்டம் காரணமாக  பலரிடம்  கடன்  வாங்கி  இருந்ததால்   ச்யனைடு  சாப்பிட்டு  தற்கொலை  செய்து  கொண்டார்  என  சொல்லப்பட்டது


சயனைடு  சாப்பிடதால்  மரணம்  என்றாலே அது  முதலில்  கொலை  என்ற  கோணத்தில்  தான்  பார்க்கப்பட  வேண்டும் , ஆனால்  போலீஸ்  அந்த  கோணத்தில்  ஏன்  ஆராயவில்லை  என்பது  தெரியவில்லை 


சயனைடு  அவ்வளவு  எளிதில்  கிடைக்காது . லைசென்ஸ்  வாங்க  வேண்டும், தங்க  நகை  செய்பவர்கள்  மெட்டலைக்கிளீன்  செய்ய  சயனைடு  யூஸ்  செய்வார்கள் . நகைக்கடையில்  வேலை  செய்த     மேத்யூ  அதை  ரெடி  செய்து  இருக்கலாம்


 ஜோலி   ஜோசஃபின்  கணவர்  இறந்த  போது  போஸ்ட் மார்ட்டம்  பண்ண  வேண்டும்  என்பதில் உறுதியாக  இருந்தவர்  மேத்யூ வின்  அப்பா . அவர்  அடிக்கடி  சொந்தக்காரர்  என்ற  முறையில்  ஜோலி  ஜோசஃப்  வீட்டுக்கு  வந்து  போய்க்கொண்டு  இருந்தார் 


2011 ல் மேத்யூ வின்  அப்பா அதாவது  ஜோலி ஜோசஃபின்  தாய் மாமா  இறந்தார் 


சாஜூ  சச் ரியா  என்பவரை  இரண்டாம்  கல்யாணம்  செய்து  கொள்ள  நினைத்தார் அவருக்கு  ஆல்ரெடி  இரண்டு  குழந்தைகள் 

2014 ல்  2  வயதே  ஆன  சாஜூவின்  குழந்தை  கொல்லப்பட்டார் 

2016 ல்  கடைசிக்கொலையாக  சாஜூ  சச் ரியா   வின்  மனைவி  கொல்லப்பட்டார். குழ்ந்தை  இறந்து  போனதால்   மன  அழுத்தத்தில் இருந்த  அவரை  ஜோலி  ஜோசஃப்  என்  மாமனார் சாப்பிட்ட மஸ்ரூம்  டேப்லெட்  சாப்பிட்டால்  மெண்ட்டல் டிப்ரஷன்  குறையும்  எனக்கூறி  சில  டேப்லெட்ஸ்  தருகிறார்.


2017ல்  திட்டமிட்டபடி சாஜூ  சச் ரியா   வை ஜோலி  ஜோசஃப்   இரண்டாவது  மணம்  செய்து  கொண்டார் 


2018ல்  தன்  கணவருக்கு , மாமனார் , மாமியாருக்கு  சொந்தமான  வீட்டை  ஆட்டையைப்போட  நடவடிக்கை  எடுக்கிறார்  ஜோலி  ஜோசஃப். போலியான  ஆவணங்களை  தயார்  செய்கிறார்


 ஜோலி  ஜோசப்பின்  முதல்  கணவர்  ராய்  தாமசின்  சகோதரி  தான்  போலீசில்  புகார்  கொடுத்து  அனைத்து  உண்மைகளையும்  வெளிக்கொணர்ந்தார் 


இப்படம்  முழுக்க  முழுக்க  சகோதரியின்  பார்வையில்  சொல்லப்படுகிறது .


  கேஸ்  இன்னும்  நடந்து  கொண்டிருக்கிறது . குற்றவாளி  ஆன  ஜோலி  தாமஸ்  மற்றும்  சயனைடு  சப்ளை  செய்த  மேத்யூ , அவர்  நண்பர்  மூவரும்  கைது  செய்யப்பட்டு  சிறையில்  இருக்கிறார்கள் 


ஸ்ருதி  சுகுமாறன் , ப்ரவீன்  பிரபாகர்  இருவரும்  எடிட்  செய்து  இருக்கிறார்கள் . கச்சிதமாக  90  நிமிடங்களில்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கிறார்கள் . வழ வழா  கொள  கொளா  காட்சிகள்  ஏதும்  இல்லை 

ஷாலினி உஷா  தேவி  தான்  திரைக்கதை  அமைத்திருக்கிறார்


கிறிஸ்டோ  டோமி  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர் (கிறிஸ்டோ  டோமி ) 


1   நிஜ  சம்பவங்களின்  க்ளிப்பிங்க்ஸ் , சம்பந்தப்பட்ட  இடம், ஃபோட்டோக்கள்  சரியாக  , முறைப்படி  வரிசையாகக்காட்டி , சித்தரிப்புக்காட்சிகளை  கச்சிதமாக  அட்டாச்  செய்த  விதம்  குட் 


2  போலீஸ்  தரப்பு  வாக்கு  மூலம், பத்திரிக்கையாளர்  கருத்து , பக்கத்து  வீட்டுக்காரர்  பேட்டி ,   ஜோலி  ஜோசஃபின்  முதல்  க்ணவரின்  சகோதரி     வாக்குமூலம்  எல்லாவற்றையும்  சுவராஸ்யமாக  தொகுத்த  விதம் குட் 


ரசித்த  வசனங்கள் 


1  இரண்டு  கொலைகளுக்கு  மேல்  செய்பவர்களை  சீரியல்  கில்லர்கள்  என்று  சொல்வார்கள் 


2  சீரியல்  கில்லர்கள்  செய்யும்  கொலைகளில்  ஒரு  சிக்னேச்சர் , அல்லது  ஒரே  மாதிரி  பேட்டர்ன்  இருப்பதைப்பார்க்க  முடியும் 


3   இரண்டு  கொலைகளுக்கு  இடையே ஆன  கால  வித்தியாசம்  அதிகம்  ஆக  இருந்ததால் குற்றவாளி  மீது  எங்களுக்கு  சந்தேக,ம்  வரவில்லை 


4  எவ்வள்வு  பெரிய  குற்றவாளியா  இருந்தாலும்  , எத்தனை  திறமையா  செயல்பட்டு  இருந்தாலும்  ஏதோ ஒரு  சறுக்கலில் அவன்  மாட்டிக்குவான்


5  இறந்தவங்களுக்காக  குரல்  கொடுக்க  யாராவது  இருக்கனும் 


6  எனக்கு  ஒரு  கிரிமினல் குணம்  இருக்கு , ஆனா  எனக்கு  எதையும்  மறைக்கத்தெரியாது


7  எல்லா  பாவங்களையும்  ஏசு  மன்னிக்கும்போது  நான்  செய்த  இந்த  த்வறுகளையும்  மன்னிக்க  மாட்டாரா? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் , சில  சந்தேகங்கள் 


1 ஜோலி  ஜோசஃப்  சயனைடு  வாங்க  மட்டும்  நகைக்கடையில்  வேலை  செய்த  சொந்தக்காரப்பையனான  மேத்யூவை  உபயோகித்துக்கொண்டாரா? அல்லது  அவன்  கள்ளக்காதலனாகவும் இருந்தானா?   ஏன்  இந்த  சந்தேகம்  எனில் சகோதரியின்  வாக்கு  மூலத்தில்  ராய்  தாமஸ் க்கு  மேத்யூ -  ஜோலி  ஜோசஃப்  பழக்கத்தில்  டவுட்  இருந்தது  என்கிறார். ஜோலி  ஜோசஃப்  பார்வையில்  என்ன  நடந்தது ? என்ற  தெளிவான  விளக்கம்  இல்லை 


2   முதல்  கணவரின்  கசின்  பிரதரைத்தான் இரண்டாம்  திருமணம்  செய்ய  திட்டம்  போடுகிறார்  ஜோலி  ஜோசஃப். அதற்குத்தடையாக  இருக்கும்  முதல்  கணவரின்  கசின்  பிரதரின்  மனைவியை  மட்டும்  கொன்றால்  போதுமே?  குழந்தையை  ஏன்  கொல்ல  வேண்டும் ?  மனைவிக்கு  வைத்த  விஷ  உணவை  தவறுதகலாக  மனைவி  சாப்பிட்டு  விட்டாரா? 


3  ஒவ்வொரு மரணமும்  நடந்ததும்  ஹாஸ்பிடல்  போய்  இருக்கிறார்கள் . டாக்டருக்கு  சந்தேகம் வரவில்லையா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  பரபரப்பான   க்ரைம் டிராமா. அவசியம்  பார்க்கலாம் ,  ரேட்டிங்  3 / 5 


Curry & Cyanide: The Jolly Joseph Case
Poster of Curry and Cyanide
Directed byChristo Tomy
Screenplay byShalini Ushadevi
Produced byIndia Today Originals
Edited bySruthy Sukumaran
Praveen Prabhakar
Release date
  • 22 December 2023 (India)
CountryIndia
LanguageMalayalam

Friday, January 12, 2024

ரங்கோலி (2023) _ தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா ) @ அமேசான் பிரைம்


கேளடி  கண்மணி  பட  புகழ்  இயக்குநர்  வசந்த் திடம்  அசிஸ்டெண்ட்  டைரக்டர்  ஆக  இருந்த வாலி  மோகன்  தாஸ்  அறிமுக  இயக்குநர்  ஆக களம்  காணும்  படம்  இது . தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளில்  ஒரே  சமயத்தில்  உருவான  படம். இதன்  ஷூட்டிங்  கேரளா  வில்  நடந்தது.தயாரிப்பாளர்   அழகப்பன்   அவர்களின்  பேரன்   மாநகரம், தெய்வத்திருமகள்  ஆகிய  படங்களில்  குழந்தை  நட்சத்திரமாக  நடித்து  முதன்  முதலாக  நாயகன்  ஆக  நடித்த  படம்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின்  அப்பா  ஒரு  சலவைத்தொழிலாளி.  அம்மா , அக்கா  என  அழகிய  குடும்பம். அக்காவுக்கு  படிப்பு  ஏறவில்லை . வேலைக்குப்போகிறார். நாயகன்  பள்ளியில்  11 வது  படிக்கிறான். ஸ்கூலில்  சக  மாணவர்களுடன்  ஒரு  தகறாரு


  தனது  மகனை  அரசுப்பள்ளியில்  படிக்க  வைப்பதை  விட  தனியார்  பள்ளியில்  ஆங்கில மீடியத்தில்  படிக்க  வைத்தால்  கவுரவம்  என  அப்பா  நினைக்கிறார். அதன்படியே  மகனை  அதிக  டொனேஷன்  வாங்கும்  தனியார் பள்ளியில்  சேர்க்கிறார்

ஆரம்பத்தில்  நாயகனால் சரியாகப்படிக்க  முடியவில்லை. இங்க்லீஷ்  மீடியம்  செட்  ஆகவில்லை 


நாயகி  அதே  ஸ்கூலில்  அதே  க்ளாசில்  சக  மாணவி. இருவரும்  விரும்புகிறார்கள் . நாயகியை  ஒரு  தலையாகக்காதலிக்கும்  இன்னொரு  தறுதலை  இவர்கள்  காதலை  சகிக்க  முடியாமல்  பாத்ரூமில் கிசு  கிசு   எழுதுகிறான். அதை  எழுதியது  நாயகன்  தான்  என  நாயகியும், மற்றவர்களூம்  நினைக்க  இருவருக்கும்  பிரிவு  ஏற்படுகிறது


 இதற்குப்பின்  நாயகனின்  படிப்பு , காதல்  இரண்டும்  வெற்றி  பெற்றதா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக ஹமாரேஷ்  பெயர் தான்  வாயில்  நுழைய  முடியாததாக  இருக்கிறது , ஆனால்  நடிப்பு  நம்  மனதில்  புகுந்து  விடுகிறது . கச்சிதமான  நடிப்பு 


 நாயகி  ஆக  பிரார்த்தனா  சந்தீப். வட்ட  வடிவம்  ஆன  சின்ன  முகம். ஸ்கூல்  யூனிஃபார்மில்  பார்க்கும்போது  சுமாராகத்தான்  இருக்கிறார். ஆனால்  சேலையில்  அழகாக  இருக்கிறார்.  சக  மாணவிகள் , தோழிகள்  நாயகியை  விட  அழகாகத்தெரிவது போல்  இருப்பது  பிரமையா? நிஜமா? தெரியவில்லை 


 நாயகனின்  அப்பாவாக  ஆடுகளம்  முருகதாஸ்  அட்டகாசமாக  நடித்திருக்கிறார். அம்மாவாக  சாய்  ஸ்ரீ பிரபாகரன்  யதார்த்த  நடிப்பு . அம்மா , அப்பா  இருவருக்குமான  பாண்டிங் , கெமிஸ்ட்ரி , இரண்டும் அ ருமை . அக்காவாக  நடித்த  அக்சயா  ஹரிஹரன்  வெரிகுட்  ஆக்டிங் 


 தமிழ்  வாத்தியாராக  வரும்  அமித்  பார்கவ்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு  


கே  எஸ்  சுந்தர  மூர்த்தியின்  இசையில்  10  பாடல்கள் , 3  ஹிட்  ஆகி  உள்ளன .ஆர்  சத்திய  நாராயணன்  எடிட்டிங்கில்  டைம்  ட்யூரேஷன்  128  நிமிடங்கள்  மட்டும்  வரும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்

 ஐ  மருத  நாயகம்  ஒளிப்பதிவு . இளமைக்கொண்டாட்டம்  ஆக  படம்  பிடித்து  இருக்கிறார் 


திரைக்கதை  எழுதி இயக்கி  இருக்கும் வாலி  மோகன்  தாஸ்   படத்தில்  நான்கு  பாடல்களையும்  எழுதி  இருக்கிறார்




சபாஷ்  டைரக்டர் (வாலி  மோகன்  தாஸ் ) 


1  நாயகனின்  அப்பா  தன்  மனைவியிடம்  ஏற்பட்ட  வாக்குவாதத்தின்போது  சமாதானப்படுத்த  , வாயை  அடைக்க  அவள்  கன்னத்தில்  முததமிட்டு விட்டு  ஓடும்  காட்சி கவிதை 

2  நாயகனின்  அப்பாவுக்கும் , அவர்க்கு  வட்டிக்கு  பணம்  கொடுத்த  நபருக்கும்  அவ்வப்போது நிகழும்  உரையாடல்கள்  டச்சிங்


3  பள்ளிக்காட்சிகள்  டீன்  ஏஜ்  தரப்பிற்குப்பிடிக்கும்  விதமாகவும், ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  பெண்களுக்குப்பிடிக்கும்படியாகவும்  மேனேஜ்  பண்ணி  கொண்டு  போய்  இருப்பது  சிறப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  என்னை  ஓட  விட்டாங்கனு  சொன்னியே? திரும்பி  நின்னு  அடிக்கனும்


2  உழைக்கிறவனுக்கு  இந்தத்திமிர்  கூட இல்லைன்னா  எப்டி ?


3  கொஞ்சமா  கோபப்படுடா, எனக்கே  பொறாமையா  இருக்கு 


4  நீங்க  படிச்சவரு , அதனால  எல்லாத்தையும்  அழகாப்பார்க்கறீங்க

 அதுக்கு  படிக்கனும்னு  அவசியம்  இல்லை , புரிதல்  இருந்தாப்போதும் 


5  கடல்ல  திரியும்  மீன்  அவன், அவனைப்போய் கிணற்றில்  போட்டுட்டு...



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அரசுப்பள்ளியில்  படிப்பதை  விட  தனியார்  பள்ளியில்  டொனேசன்  கொடுத்துப்படிப்பதுதான்  ஸ்டேட்டஸ் என்னும்  தவறான  எண்ணத்தை  விதைக்கும்  கதைப்போக்கு  பெரிய  மைனஸ்


2  ஓப்பனிங்  சீன்ல  இருந்தே  நாயகன்  தாடியுடன்  தான்  இருக்கிறார். ஆனால்  ஒரு  பாடலில்  தாடி  வளர்க்கத்தோணுதே  என்ற  வரி  வருவது  மிஸ்மேட்சிங்


3  ஐ  ல யூ  பார்வது  என  யாரோ எழுதி  வைத்ததை நாயகன்  தான்  எழுதினான்  என  ஆளாளுக்கு  சொல்றாங்க , ஒரு  தடவை  எழுதிக்காட்டச்சொன்னால்  மேட்டர்  ஓவர்

4  க்ளாஸ்  ரூமில்  நான்கு  மாணவர்கள்  நாயகனைப்பிடித்து  அடிக்கிறார்கள் . அப்போது  உள்ளே  வந்த  டீச்சர்  நாயகனைப்பார்த்து  மறுபடி  தகறாரா? எனக்கேட்கிறார். அடித்தவர்களைக்கண்டு  கொள்ளவே  இல்லை .படம்  முழுக்கவேஎப்போது  ரகளை  நடந்தாலும்  நாயகன்  மட்டுமே  டார்கெட் செய்யப்படுவது  செயற்கை .  அனுதாபம்  உண்டாக்க  வலியத்திணித்த  காட்சிகள் 


5  க்ளைமாக்ஸ்  சீனும் , அதற்கு  முன்பான  சில காட்சிகளும்  மனதில்  ஒட்டவில்லை . திருப்தியாக  இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  படம்  போகிறது. ஆனாலும்  ஏனோ  முழு  திருப்தியைத்தரவில்லை . ரேட்டிங்  2.25 / 5 


ரங்கோலி
இயக்கம்வாலி மோகன் தாஸ்
எழுதியவர்வாலி மோகன் தாஸ்
உற்பத்திகே. பாபு ரெட்டி
ஜி. சதீஷ் குமார்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஐ.மருதநாயகம்
திருத்தியவர்ஆர்.சத்தியநாராயணன்
இசைசுந்தரமூர்த்தி கே.எஸ்
தயாரிப்பு
நிறுவனம்
கோபுரம் ஸ்டுடியோஸ்
வெளிவரும் தேதி
  • 1 செப்டம்பர் 2023
விவரங்கள் தேவை ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, January 11, 2024

MANGALAVAARAM (2023) - தெலுங்கு - செவ்வாய்க்கிழமை - தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர்) @ டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்


 15 கோடி  ரூபாய்  செலவில்  எடுக்கப்பட்டு தெலுங்கில்  வெற்றி  பெற்ற  இப்படம்  கன்னடம், மலையாளம், தமிழ்  , ஹிந்தி  ஆகிய  மொழிகளில்  டப்  செய்யப்பட்டு  வெளியானது.2023  நவம்பர்  17  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்   ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  சின்ன  வயதில்  இருந்தே  பாட்டியிடம்  தான்  வளர்ந்து  வருகிறாள். அந்தப்பாட்டியும் இறந்து  விட  நாயகி  தனிமையில்  தான்  இருக்கிறாள் . அவள்  கல்லூரியில்  படிக்கும்போது  ஒரு    லெக்சரர்  ஆசை  வார்த்தை  கூறி  நாயகியை  மயக்கி  அனுபவித்து  விடுகிறார். பின்  அவளை  அம்போ  என  விட்டு  விட்டு  ட்ரான்ஸ்ஃபர்  வாங்கிப்போய்  விடுகிறார்


அவனை  மறக்க  முடியாமல்  நாயகி  தவிக்கிறார்.  வில்லி  மிகப்பெரும்  பணக்காரி . அவள்  கள்ளக்காதலனுடன்  நெருக்கமாக  இருப்பதை  நாயகி  பார்த்து  விடுகிறாள்.  இதனால்  நாயகியைக்கொலை  செய்ய  வில்லி  திட்டம்  போடுகிறாள் 


அந்த  ஊரில்  வாரா  வாரம்  திங்கட்கிழமை இரவு  கிராமத்தில்  சுவரில்  ஒரு  கள்ளக்காதல்  ஜோடி  பற்றி  கிசு  கிசு  எழுதப்படுகிறது. அடுத்த  நாள்  அந்த  கள்ளக்காதல்  ஜோடி  தற்கொலை  செய்து  கொள்கிறது . இது போல்  இரண்டு  வாரங்கள்  நடக்க  போலீஸ்  களத்தில்  இறங்குகிறது . அந்த  இரண்டு  ஜோடிகள்  தற்கொலை செய்ய  வில்லை ., கொலை  தான்  செய்யப்பட்டிருக்கிறார்கள்  என்பதை  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்  சொல்கிறது 


 நாயகி, வில்லி   இருவருக்கும்  கிராமத்தில்  நடக்கும்  கொலைகளுக்கும்  என்ன  சம்பந்தம்  ? என்பது தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக பாயல்  ராஜ்பத்  என்ற  நடிகை  கச்சிதமாக  நடித்திருக்கிறார். இந்திய  சினிமாவில்  நிம்போமேனியாக்  அல்லது   ஹைப்பர்  செக்சுவல்  டிஸ்  ஆர்டர்  உள்ள  பெண்  ரோலை  இதுவரை யாரும்  செய்ததாகத்தெரியவில்லை . துணிச்சல் தான் 


வில்லி  ஆக  திவ்யா  பிள்ளை  கலக்கி  இருக்கிறார். ஆனால்  அவருக்கான  போர்சன்  குறைவு ; அழகிய  லவ்லி  வில்லி 

கேசை  துப்பறியும்  போலீஸ்  ஆஃபீசராக நந்திதா  ஸ்வேதா. அவராக  எதையும்  கண்டுபிடித்த  மாதிரி  தெரியவில்லை . சும்மா  வந்து  போகிறார் 


டாக்டர்  ஆக  ரவீந்திர  விஜய்  குணச்சித்திர  நடிப்பு  குட்  நாயகியை ஏமாற்றும்  காலேஜ்  லெக்சரர் ஆக அஜ்மல்  அமீர்  நடித்திருக்கிறார்


பி  அஜனீஷ் , லோக்நாத்  இசையில்  பாடல்கள் , பின்னணி இசை  அனைத்தும்

காந்தாரா  பாணியிலேயே  வேண்டும்  என்றே  அமைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவு  தாசரதி  சிவேந்திரன் இரவுக்காட்சிகளில்  சைன்  செய்கிறார்


 கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி தயாரித்து  இருப்பவர்  அஜய்  பூபதி 




சபாஷ்  டைரக்டர் (அஜய்  பூபதி ) 


1  ஒரு  சாதாரணக்கள்ளக்காதல்  கதையை காந்தாரா  பாணியில்  சொன்ன  சாமார்த்தியம்


2 நாயகியின்  கேரக்டர்  டிசைன்  ஒரு  மார்க்கமாக  இருந்தாலும்  காட்சி  அமைப்பில்  கண்ணியமாக  அவரை  சித்தரித்த  விதம்  குட் 


3  படத்தில்  வரும் ஒரு  சஸ்பென்ஸ்  கேரக்டருக்கு  காந்தாரா  பாணியில்  மாஸ்க்  அணிவித்து   எதிர்பார்ப்பை  ஏற்றிய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  நீ  கண்ல  மை  வெச்சுக்கிட்டா  வானத்துல  கருமேகங்கள் சூழந்த  மாதிரி  அழகா  இருக்கும்


2  பெண்ணாப்பிறந்த  எல்லாருமே  இந்த  வலியை  அனுபவிச்சுதான்  ஆகனும். கடவுள்  கொடுத்த  இந்த  வலி  வரமா? சாபமா? தெரியல


3  உன்  கண்களுக்கு  டெய்லி  ஒரு  குவாட்டர்  ஊத்தறியா? இவ்ளோ  போதை  தருது ?


4  இதெல்லாம்  கல்யாணத்துக்கு  அப்புறம்   வெச்சுக்கக்கூடாதா?


 படிக்காம  பரீட்சை  எழுதப்போக  முடியுமா?


5  சுவற்றில்  அடுத்து  உங்க  பேரு  வரும்னு  நினைக்கறேன், ஏன்னா ஊர்ல உங்களை விடப்பெரிய  மைனர்  யாரும்  இல்லை 


6   ஷைலு , நீ  ஷேக்ஸ்பியர்  ரொமாண்டிக்  நாவல்ல வர்ற  லவ் போர்சன்  மாதிரி , தினமும்  படிச்சா  போர்  அடிச்சிடும், அப்பப்ப  படிக்கனும், இண்ட்ரஸ்ட்டா  இருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சுவரில்  எழுதி  வைத்த  ஆள்  இவன்  தான்  என  சிலரும், போலீசும்  அடிக்கடி  சந்தேகப்பட்டுக்கொண்டே  இருக்கிறார்கள் . ஒரு  முறை  அவனை  சுவரில்  எல்லோர் கண்  முன்னும்  எழுதச்சொல்லி  விட்டால் மேட்டர் ஓவர் , உண்மை  தெரிந்து  விடுமே? 


2  கொலை  நடப்பது  ஒரு  சின்ன  கிராமம். சுவரில்  கிசு  கிசு  எழுதுபவன்  தான்  கொலை  காரன்  எனில் ஊர்  மக்கள்  எல்லோரையும்  வரிசையாக  நிற்க  வைத்து  எழுதச்சொல்லி  விட்டால்  கையெழுத்து  காட்டிக்கொடுக்குமே? 

3   கல்லூரியில்  இருக்கும்  ஆங்கில  லெக்சரர்  தன்  திருமணத்திற்கு  யாரையும்  அழைக்காதது  ஏன் ?  மேரேஜ்  முடிந்த  சூட்டோடு  மனைவியுடன்  தன்  முன்னாள்  காதலி முன்  ஏன்  வருகிறான் ? லூசா? 


4  காரில்  தன்  புது  மனைவியை  உட்கார  வைத்து  விட்டு  அவள்  கண்  முன்னே  கள்ளக்காதலியிடம்  பேசிட்டு  இருக்காரே? டவுட்  வராதா? 


5  குடிசை  வீட்டுக்கு  தீ வைத்து  தன்  அப்பாவின்  டெட்  பாடியோடு  எரிக்க  நினைக்கும்  சிறுவன்  குடிசைக்குள்ளே  இருந்து  கொண்டு  மண்ணெண்னெய்  ஊற்றி  பற்ற  வைக்கிறான். தானும்  மாட்டிக்குவோம்னு  தெரியாதா?  குடிசைக்கு  வெளியே  வந்துதானே  எரிக்கனும் ?


6  அப்பா  செஞ்ச  தப்புக்காக  ஊர்ல  யார்  முகத்துலயும் முழிக்க  முடியலைனு  ஒரு  டயலாக்  வருது . ஆக்சுவலா  அது  நாயகி , நாயகியின்  க்ளாஸ் மேட் , அவன்  அப்பா  இந்த  மூன்று  பேருக்கு  மட்டும்  தானே  தெரியும் ? ஊர்  மக்களுக்கு  எப்படித்தெரியும் ? 


7  வில்லி  கள்ளக்காதலனுடன்   நெருக்கமாக  இருப்பதை  நாயகி பார்த்து  விடுவதால்  நாயகியைக்கொலை  செய்ய  வேண்டும்  எனில்  காதும்  காதும்  வைத்த  மாதிரி  வில்லியே  செய்திருக்கலாம்   , பேக்கு  மாதிரி  தன்  அடியாட்கள்  நான்கு பேரை  வரவைத்க்து  மேட்டரை  சொல்கிறாள். இப்போது  அவர்களுக்கும்தானே  வில்லியின்  ரகசிய  விஷயம்  தெரிந்து  விட்டது ?


8  நாயகியைக்கிணற்றில்  போட்டாலே  அவள்  மூழ்கி  இறந்து  விடுவாள் , ஆனால்  கொலை  செய்து  ஏன்  கிணற்றில்  போட  வேண்டும் ? போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  தெரிந்து விடுமே? 

9  ஒருவரை  மண்ணெண்ணெய்  ஊற்றி  தீ  வைத்துக்கொலை  செய்யும்  ஆள்  அருகில்  இருக்கக்கூடாது , ஏன்  எனில்  தீப்பற்றி  எரியும் போது  அவரையும்  அறியாமல்  அருகில் இருப்பவரைக்கட்டிப்பிடிப்பார். அது  ஆபத்து. இது  தெரியாமல்  க்ளைமாக்ஸில்  வில்லியை  சீமெண்ணெய்/ பெட்ரோல்  ஊற்றிக்கொளுத்துகிறார்  ஒருவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - மைனர்கள்  இப்படத்தைப்பார்க்கத்தேவை  இல்லை . காட்சிகள் கண்ணியமாக  இருந்தாலும்  கண்ட்டெண்ட்  வைஸ்  18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  தெலுங்கில்  ஹிட்  ஆன  படம்  என்ற  அளவில்  பார்க்கலாம். மற்றபடி பிரமாதமான  கதை  என்றெல்லாம்  சொல்லி  விட  முடியாது . ரேட்டிங் 2.5 / 5 


Tuesday
DirectionAjay Bhupathi
ProducerSwati - Suresh Verma
castPayal Rajput ,
Nandita Swetha ,
Ajay Ghosh ,
Divya Pillai
PhotographyDasharathi Shivendra
compositionMadhav Kumar Gullapally
MusicB. Ajanish Loknath
Construction
companies
A Creative Works,
Mudramedia Works
Release Date
17 November 2023 [1]
The length of the movie
145 minutes
the countryIndia
languageTelugu

Wednesday, January 10, 2024

THE ARCHIES (2023) -ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( மியூசிக்கல் ரொமாண்டிக் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


 1985ல் ஸ்ரீதர்  இயக்கத்தில்  மோகன் - ஜெயஸ்ரீ நடிப்பில்  வெளியான  தென்றலே  என்னைத்தொடு பாடல்களுக்காகவே  ஓடிய  முக்கியமான  ரொமாண்டிக்  சப்ஜெக்ட் படம்.1987ல் பிரேமலோகா என்ற  கன்னடப்படம் ரிலீஸ்  ஆனது. அதன்  தமிழ்  டப்பிங்க்  வெர்சன்  பருவராகம்., படத்தில்  எட்டு  பாடல்கள். எல்லாம்  ஹிட். பாடல்கள் ,ரொமான்ஸ்க்காகவே  ஓடிய  படம்  இது . இதே  ஃபார்முலாவில்  டீன்  ஏஜ்  ரசிகர்களைக்குறி  வைத்து  பாடல்கள் , டான்ஸ் , கதாநாயகிகளின் இளமை  இவற்றை  முதலீடாகக்கொண்டு 40  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  நெட்  ஃபிளிக்சில்  நேரடியாக  ரிலீஸ்  ஆன  படம்  இது 


ஸ்ரீதேவியின்  மகளான  குஷி கபூர் , ஷாரூக்கானின்  மகளான  சுஹானா  கான்  இருவரும்  நாயகிகளாக  நடித்த  படம் .  பாய்ஸ்  படத்தில்  இடம்  பெற்ற  பாடல்  காட்சிகள் , ரொமான்ஸ்    காட்சிகள்  இயக்குநர்க்கு  ஒரு  இன்ஸ்பிரேஷனாக  இருந்திருக்கக்கூடும்


கதை  என்று  பார்க்கப்போனால்  விஜய்  சேதுபதி , நயன் தாரா , சமந்தா  நடிப்பில்  வெளியான  காத்து  வாக்குல  ரெண்டு  காதல் படக்கதை  தான். ஒரே  நாயகன் ஒரே  சமயத்தில்  இரு  நாயகிகளை  மனதாரக்காதலிக்கும்  கதை. ஆனால்   இப்படிக்கதை  சொன்னால்  விமர்சனம்  வரும்  என   நில  ஆக்ரமிப்பு , பசுமைத்தோட்டம்  பாதுகாப்பு  என  ஜல்லி  அடித்து  சமாளித்திருக்கிறார்கள்     


ஸ்பாய்லர்  அலெர்ட்


1960ல்  கதை  நடக்கிறது . ரிவர்டேல்   என்ற்  இடத்தில் உள்ள  க்ரீன் பார்க்  தான்  கதைக்களம். இங்கே  ஒரு  பெரும்பணக்காரர்  அந்த  பார்க்கை  ஆக்ரமித்து  ஒரு  ஹோட்டல்  கட்ட  திட்டம்  இடுகிறார். அங்கே  வசிக்கும்   ஸ்டூடண்ட்ஸ்  அதை  தடுக்க  திட்டம்  இடுகிறார்கள் . யார்  வெற்றி  பெற்றார்கள் என்பது  மீதி   திரைக்கதை 


 இது  போக  இன்னொரு  கதையும் உண்டு . நாயகன்  இரு  வேறு  பெண்களை  ஒரே  சமயத்தில்  காதலிக்கிறான். யாரையும்  ஏமாற்றும்  எண்ணம்  இல்லை . ஆரம்பத்தில்  தன்னை  மட்டுமே  காதலிப்பதாக  நினைக்கும் இரு  நாயகிகளுக்கும்  ஒரு  கட்டத்தில்  உண்மை  தெரிய  வர  என்ன  முடிவு  எடுத்தார்கள்  என்பது  தான்  க்ளை மாக்ஸ் 


நாயகன்  ஆக  அகஸ்தியா  நந்தா  துள்ளலான  இளமையுடன்  நடித்திருக்கிறார். சித்தார்த்தின்  முக  சாயலில்  இருக்கிறார்.


நாயகிகள்  ஆக  குஷி கபூர் , சுஹானா கான்  இருவரும்  சம  அளவில்  நடித்திருக்கிறார்கள் . ஸ்ரீதேவியின்  முகத்தோடு  , நடிப்போடு ஒப்பீடு  செய்யாமல்  பார்த்தால்  ஜஸ்ட்  பாஸ்  லிஸ்ட்டில்  வருவார் 


படத்தின்  மிகப்பெரிய  பலம்  ஆர்ட்  டைரக்சன் , இசை ,  டான்ஸ்  கொரியோகிராஃபி 


10  நிமிடங்களுக்கு  ஒரு  முறை  ஒரு  பாடல்  வருகிறது . டான்ஸ் ,  லவ்  களேபரம் தான்


144  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்கள் பாடலக்ளுக்கான  இசையை  நால்வரும் , பின்னணி  இசையை  இருவரும் செய்திருக்கிறார்கள் . ஒளிப்பதிவு  நிகோஸ்  ஆண்ட்டிரிக்சகிஸ்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


 அனைவரின்  ஆடை  வடிவமைப்பு , ஹேர்  ஸ்டைலஸ்  எல்லாவற்றையும்  1960  கால கட்டம்  போல  காட்டி  இருப்பது  சிரமமான  பணி 


ஆர்ச்சி  காமிக்ஸ்ல  வர்ற   கேரக்டர்சை  தழுவி  ஐவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  ஜோயா  அக்தர். இவருடைய  மற்ற  படைப்புகளோடு  ஒப்பிடுகையில்  இது  ஒரு  சராசரிப்படம்  தான் 


சபாஷ்  டைரக்டர்  (ஜோயா  அக்தர். ) 


1  காட்சிகளில்  ரிச்னெஸ்  கண்கூடாகத்தெரிகிறது. ஒவ்வொரு  காட்சியையும்  நட்சத்திரப்பட்டாளத்துடன்  பிரம்மாண்டமாக  காட்டி  இருக்கிறார்


2   இரு  ஸ்டார்களின்  மகள்களையும்  நாயகிகளாக  புக்  செய்திருந்தாலும் ஒரு  சீன்  கூட  கூடக்குறைய  இல்லாமல்  சம  அளவு  பகிர்ந்தளித்த  சாமார்த்தியம் 


3  படம்  முழுக்க  எண்ட்டர்டெய்ன்மெண்ட்  செய்யும்  பாடல் , இசை , நடனம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பாட்டில்  மூடியைத்திறந்தவன் அதை   அவ்ளவ்  சீக்கிரம்  கீழே  வைக்க  மாட்டான் 


2 ஒரு  கலையைப்பறிக்க  உனக்கு  உள்ளே  தேடனும், வெளியே  அல்ல 


3 நாம  மாறலைன்னா  எதுவுமே  மாறாது 


4  ஆண்கள்  நாய்  வால்  மாதிரி , குணத்தை  மாற்றவே  முடியாது 


5  உன்க்கு  யாரையாவது  பார்த்தா  ஜாலியா  தோணுதுன்னா  உன்  காமன் சென்ஸ்  உன்னை  விட்டுப்போகுதுனு  அர்த்தம் 


6   சில  நேரங்கள்  நமக்கு  ரொம்பவே  ஸ்பெஷலாக  இருக்கும்


7   நான்  பெரிய  தத்துவாதினு  நினைக்கிறயா?


 இல்லை , முட்டாள்னு  நினைக்கிறேன்


8   பிராமிஸ்  பண்றதே  அதை  மீறத்தான் 


9  டேய் ,  ஃபோட்டோ  எடுக்காதே  , அப்றம் நான்  உன்  கூட  தான்  வந்திருக்கேன்னு  எல்லாருக்கும்  தெரிஞ்சிடும்


 ஏன்? உன்  கூட  தானே  வந்திருக்கேன் ? தெர்ஞ்சா  என்ன? 


நம்ம  காதலை  உலகம்  பூரா  டமாரம்  அடிக்க  எனக்கு  விருப்பம்  இல்லை 


10   என்னைப்புகழ்ந்துட்டா  மட்டும்  என்  அன்பு  உனக்கு  கிடைச்சிடாது , ஆனா  நீ  புகழ்ந்துட்டே  இரு, ஏன்னா  அது  எனக்கு  பிடிச்சிருக்கு 


11  ஒரு  பிஸ்னெஸ்னு  வந்துட்டா  ஃபீலிங்க்ஸ்க்கு  அதிக  முக்கியத்துவம்  தரக்கூடாது 


12  பிராஃபிட்டைபற்றி  மட்டுமே  எப்பவும்  சிந்திச்சுட்டு   இருக்கக்கூடாது 


13   எல்லாருமே  ஒரே  பெண்ணை  கால ம்  பூரா  எப்படி  லவ்  பண்ணிட்டு  இருக்காங்கனு  எனக்கு  ஆச்சரியமா  இருக்கு ?


14  யாராவது  நமக்கு  ஐ  லவ்  யூ  சொன்னா  அதை  எப்படி  ஏத்துக்காம இருக்க முடியும் ?  


15   நீங்க  மத்தவங்களுக்கு  எப்படித்தெரியறீங்க? என்பது  முக்கியம்  இல்லை . நீங்க  அதை  எப்படி  ஃபீல்  பண்றீங்க  என்பதுதான் முக்கியம்


16   ஆயிரம்  முறை  தோற்றாலும்  1001  வது  முறையும்  முயற்சிக்கனும்,  போரடனும் , அப்போதான்  ஜெயிக்க  முடியும் 


17  ஒரு  கலையை  உருவாக்கனும்னா  நமக்குள்ளே  தேடனும்


18  சிலது  ஜெயிக்கனும்னா  சிலது  தோக்கனும்


19   ஆயிரம்  பேருடன்  போட்டி  இட்டாலும்  நீ  ஆயிரத்தில் ஒருவனா  இருக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  இரு  நாயகிகளையும்  காதலிப்பது  நாயகிகளுக்கு  முக்கால்  வாசி  படம்  வரை  தெரியவில்லை  என்பதை  நம்ப  முடியவில்லை . மூவருமே  ஒரே  இடத்தில்  படிப்பு .  பார்ட்டி . செலிபிரேசன், டான்ஸ்  எல்லாம்  பண்றாங்க. எப்படி  தெரியாமல்  இருக்கும் ?


2  நாயகன் - நாயகி  காதலில்  அழுத்தம்  இல்லை . அதனால்  ஆடியன்ஸ்  மனசில் யாருடன்  சேரப்போகிறார்  என்ற  சஸ்பென்ஸ் , எதிர்பார்ப்பு  எதுவும்   இல்லை 


3   எல்லோருமே  பணக்காரர்களாக  இருக்கிறார்கள் . அதனால்  எப்படியும்  பணக்காரன்  ஆன  வில்லனை  ஈசியா  ஜெயிச்சுடுவாங்க  என்பது  முன்  கூட்டியே  தெரிகிறது 


4  வாக்கெடுப்பு  நடத்திய  சீட்களை பீரோவின்  மேலே  மறைத்து  வைக்கும்  வில்லன்  அதன்  மேல்  ஒரு  வெயிட்  வைக்க  மாட்டானா? ஃபேன்  போட்டால்  பறக்கும்  என்பதை  யூகிக்க  மாட்டானா?

5 படத்தில்  மெயின்  கதை  எது ? கிளைக்கதை  எது? என்பதை  பிரித்துப்பார்க்க  முடியவில்லை , இரண்டுமே  ஏனோதானோ  என  அழுத்தம்  இல்லாமல்  சொல்லப்பட்டிருக்கிறது

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இரு  காட்சிகளில்  லிப் லாக்  சீன்  உண்டு . மற்றபடி  யூ  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டீன்  ஏஜ்  ரசிகர்கள்  கொண்டாட்டமாகப்பார்ப்பார்கள் , மற்றவர்கள்  ஒன்  ஸ்டெப்  பேக் . ரேட்டிங் 

2 / 5 


The Archies
Official release poster
Directed byZoya Akhtar
Written by
Based onCharacters
by Archie Comics
Produced by
Starring
CinematographyNikos Andritsakis
Music bySongs:
Shankar–Ehsaan–Loy
Ankur Tewari
The Islanders
Aditi "Dot" Saigal
Background score:
Shankar–Ehsaan–Loy
Jim Satya
Production
companies
Archie Comic Publications
Graphic India
Tiger Baby Films
Distributed byNetflix
Release dates
  • 22 November 2023 (Goa)
  • 7 December 2023
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹40 crore (US$5.0 million)[2]