Friday, November 03, 2023

ARE YOU OK BABY? (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( லீகல் டிராமா) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

 


 சொல்வதெல்லாம்  உண்மை  நிகழ்ச்சியில் வந்த  ஒரு  நிகழ்ச்சியையே  படம்  ஆக்கலாம்  என  முடிவெடுத்து  எடுத்த  படம்  போல, ஆனால்  சுவராஸ்யமாக  இருக்கிறது . லட்சுமி  ராமகிருஷ்ணனின் இயக்கத்தில்  உருவான  இப்படம்  வசூல்  ரீதியாக  பிரமாத  வெற்றியைக்குவிக்க வில்லை  என்றாலும்  விமர்சன  ரீதியாக  பலரது  பாராட்டுக்களையு,ம்  வென்றது . டி வி  சீரியல்  பார்க்கும்  பெண்கள் , குடும்பப்பெண்கள்  அனைவருக்கும்  இந்தக்கதை  பிடிக்கும்         



  ஸ்பாய்லர்  அலெர்ட்


திருமணம் ஆகாமல் லிவ்விங்  டுகெதராக  வாழும் ஒரு  இளம்  ஜோடி . பொண்ணு  எதிர்பாராத  விதமா  கர்ப்பம்  ஆகுது . கலைக்க  முடியலை . பையன்  கலைச்சே  ஆகனும்கறான். அப்போதான்  ஒரு  நர்ஸ்  ஒரு  ஐடியா  சொல்லுது . நீயே  சிரமத்தில்  இருக்கே . குழந்தையைப்பெத்துக்குடுத்துடு , பார்த்துக்க  ஆள்  இருக்காங்க  உனக்குப்பணமும்  கிடைக்கும்  என  ஐடியா  கொடுக்குது


 குழந்தை  பிறந்ததும்  குழந்தை  இல்லாத  வசதியான  ஒரு  தம்பதி  அதை  தத்து  எடுத்துக்கறாங்க . குழந்தையின்  அம்மாவுக்கும், மீடியேட்டர்  ஆன  நர்சுக்கும் கணிசமான  தொகை  கொடுத்து   பத்திரத்தில்  கையெழுத்து  எல்லாம்  வாங்கிக்கறாங்க . 


 ஒரு  அஞ்சு  வருசம்  போகுது . திடீர்னு  அந்தப்பெண்ணுக்கு  தன்  குழந்தையைப்பார்க்க  ஆசை . கேஸ்  போடுது . சைல்டு  டிராஃபிக்  கேஸ்   தத்து  எடுத்த  பெற்றோர்  மீது   பாயுது ., இதற்குபின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 தத்து  எடுக்கும்  பெற்றோராக  சமுத்திரக்கனி - அபிராமி  உணர்ச்சிப்பூர்வமாக  நடித்துள்ளனர் ,  பக்கம்  பக்கமாக  வசனம்  பேசும் சமுத்திரக்கனி  இதில் அடக்கி  வாசித்து  இருக்கிறார் , அதுவே  ஆறுதல் , அபிராமியின்  உணர்ச்சி மிக்க  நடிப்பு  அருமை 


குழந்தையின்  அம்மாவாக  முல்லை  அரசி  கவனிக்க  வைக்கும்  நடிப்பு 

இயக்குநர்  ஆன  லட்சுமி  ராமகிருஷ்ணன்  அதே  ரோலில்  வருகிறார்.  அந்தக்கால  எம்  ஜி ஆர்  மாதிரி  கூலிங்  கிளாஸ்  போட்டுவது  தவிர  பெரிய  மைனஸ்  எதுவும்  இல்லை 


113  நிமிடங்கள்  ஓடும்படி  ஒரு  குயிக்  வாட்ச்  மூவி  ஆக்வே  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர்   பிரேம்  குமார் .


இளையராஜாவின்  இசையில் ஒரே  ஒரு  பாட்டு  சோகமயமாக இதயத்தை  வருடுகிறது ., அவரது  பின்னணி  இசையைப்பற்றி  புதிதாக  பாராட்ட  என்ன  இருக்கிறது ? கனகச்சிதம் 


கிருஷ்ண  சேகரின் ஒளிப்பதிவு   பர்ஃபெக்ட்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  லட்சுமி  ராமகிருஷ்ணன்




சபாஷ்  டைரக்டர்  (லட்சுமி  ராமகிருஷ்ணன்) 


 1 சீரியஸாகப்போகும்  திரைக்கதையில்  ரிலாக்ஸ்  ஆக  ரோபோ  சங்கர்  காமெடி  டிராக்  வருகிறது .  மிக  யதார்த்தமான  காமெடி . யோகி  பாபு , புரோட்டா  சூரிகளின்  மொக்கை  ஜோக்குகளைப்பார்த்துப்பார்த்துக்கடுப்பான  நமக்கு  “ அன்னைக்குக்காலைல  ஆறு  மணி  இருக்கும் , கோழி கொக்கரக்கோனு  கூவுச்சு “ புகழ்  ரோபோசஙகர்  காமெடி  அருமை 


2   கடைசி  20  நிமிடங்களில்  வரும்  கோர்ட்  ரூம்  காட்சிகள்  சினிமாத்தனம்  இல்லாமல்  இருக்கிறது 

சாங்க்ஸ்


1  அன்னை  தந்தை  ஆக்குவது  யார்? பிள்ளை  அன்றோ ?


  ரசித்த  வசனங்கள் 

1  பிராய்லர்  கோழி  மாதிரி  இருந்துட்டு  என்னை எதிர்த்துப்பேசறியா? போடா 


 சார் , அப்போ  நான்  நாட்டுக்கோழி  தானே? 


2ஜெயில்  வாழ்க்கை  ரொம்ப  சிரமமா  இருக்குமே?


 அய்யோ , ராஜ  வாழ்க்கை  மேடம். பெட்  காஃபில  இருந்து  பெட்டை  விரிக்கிற  வரை  நம்ம  பசங்க  பார்த்துக்குவாங்க 


3  மேடம், ஒரு  சிக்கலான  கேஸ்


 கள்ளக்காதலா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  குழந்தையின்  அம்மாவாக  வரும்  முல்லை  அரசி  கேரக்டர்  அடிக்கடி அதீத  பசியால்  சாப்பிடற  மாதிரி  காட்சி  எடுத்தது  ஓக்கே, ஆனா  அதை  நாசூக்காக  எடுத்திருக்கலாம், பரிதாபம்  வரும்படி காட்ட  வேண்டிய  காட்சி  அது , ஆனால்  வெறுப்பு  வருவது  போல  காட்சி  அமைந்து  விட்டது


2  தத்து     எடுத்த  குழந்தையை  திருப்பிக்குடுத்துடுங்க  என  கேட்கும்போது  சமுத்திரக்கனி  ஏன்  பம்ம  வேண்டும், நாங்க  செலவு  பண்ணுன  காசு  ரெண்டரை  லட்சம், அதை  முதல்ல  திருப்பிக்கொடுங்க  என  செக்  வைக்கலாமே? 


3  கோர்ட்ல  ஆர்க்யூ  பண்றப்ப  வக்கீல்  சொல்லும் பாயிண்ட்  கரெக்ட்  தான். இந்தக்குழந்தையை  ஷோபா  வளர்த்த  எந்த  தகுதியும் இல்லை ., ஏற்கனவே  அஞ்சு  தடவை  அபார்சன்  பண்ணின  மாதிரி  தான்  இப்பவும்  ஆகி  இருக்கும்  என்பது  சரிதான். அது  எப்படி  தனி  மனித  தாக்குதல்  ஆகும்?  அந்தப்ப்பொண்ணு  மேரேஜ்  பண்ணிக்கலை ,  லிவ்விங்  டுகெதரா  தான்  வாழ்ந்தது , அதை  சொல்லிக்காட்டினா  தான்  தனி  மனித  தாக்குதல் ., குழந்தையை  வளர்த்த  பொருளாதார  ரீதியா  தகுதி இல்லை   என்பது  எப்படி  தனி  மனித  தாக்குதல்  ஆகும் ? 


4  தன் தரப்பு  நியாயத்தை  விளக்கும்போது  ஷோபா  காண்டம்  போடச்சொன்னா  எனக்குப்பிடிக்காதுனு  சொல்வான்  என்னை கட்டாயப்படுத்துவான்  என்கிறார். ஏன் ? குழந்தைப்பிறப்பை  தடுக்க  காண்டம்  மட்டும்  தான்  இருக்கிறதா? பெண்ணுக்கு    எதுவும்  இல்லையா? காப்பர்  டி  இருக்கே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  யூ  தான் , வசனத்தில்  யூ / ஏ  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  லீகல்  டிராமா , போர்  அடிக்காமல்  செல்கிறது . பார்க்கலாம் ., ரேட்டிங்  2.75 / 5 


Are You Ok Baby?
Release poster
Directed byLakshmy Ramakrishnan
Written byLakshmy Ramakrishnan
Produced byRamakrishnan Gopalakrishnan
Starring
CinematographyKrishna Sekhar
Edited byCS Prem Kumar
Music byIlaiyaraaja
Production
company
Monkey Creative Labs
Release date
  • 22 September 2023
Running time
113
CountryIndia
LanguageTamil

Thursday, November 02, 2023

RED WINE(2013) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

     


     படத்தின்  டைட்டிலுக்கும்  கதைக்கும்  என்ன  சம்பந்தம்  ? என்பதை  படம் பார்த்த  சரக்கு  சங்கரலிங்கங்கள்  யாராவது  சொன்னால்  தான்  தெரியும். மோகன் லால் , ஃபகத்  ஃபாசில் , ஆசீஃப்  அலி போன்ற  முக்கிய  நாயகர்கள்  இருந்தாலும் மோகன் லால் , ஃபக்த்  காம்பினெஷன்  ஷாட்ஸ்  எதுவும்  இல்லாதது  ஒரு  குறையே!. இது  த்ரில்லர்  மூவி  என  பிரமோட்  செய்யப்பட்டாலும் மெதுவாகச்செல்லும்  திரைக்கதை  தான் . லாஜ் ஜோஸிடம்  உதவியாளராகப்பணியாற்றிய  சலாப்  பாப்பு  இயக்கி  உள்ளார்.  இந்தப்பட,ம்  இதே  டைட்டிலில் தெலுங்கில்   டப் செய்யப்பட்டது . ராகுல்  காந்தியின்  சொந்தத்தொகுதியான  வய்யநாடு  மற்றும்  கோழிக்கோட் ப்குதிகளில்  ஷூட்டிங்  நடந்த  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரூ  கட்சியில்  தீவிரமாக  இயங்கி  வருபவர், ஆனால்  அனைத்துக்கட்சி  ஆட்களிடமும்  நட்பு  பாராட்டுபவர். பார்ட்  டைம்  ஆக  சோசியல்  சர்வீசும்  செய்து  வ்ருகிறார். . இது  போக  நாடக   நடிகரும்  கூட ., இவருக்கு  எதிரிகள்  என  யாரும் இல்லை . இவர்  ஃபேஸ்  புக்கில்  காம்ரேடு  என புனை  பெயரில்   இயங்கி  வரும்  ஒரு  பெண்  ஐடி  யிடம்  கண்ணியமான  சேட்டிங்  செய்து  வருகிறார் அது  போக  ஒரு  முஸ்லீம்  பெண்ணை  காதலித்து  வருகிறார்


நாயகன் ஒரு  சாதா  லாட்ஜில்  ரூம்  எடுத்துத்தங்கி  இருந்த போது  கொலை  செய்யபப்டுகிறார். போலீஸ்  ஆஃபீசர்  அந்தக்கொலையை  துப்பு  துலக்குகிறார்


 நாயகனின்  கூடவே  இருந்த  நண்பன் , நாயகனின்  காதலி , சேட்டிங்  செய்த  பெண்  ஐடி , கட்சி  ஆள் , சோஷியல்  சர்விஈஸ்  செய்ததால்  பாதிப்புக்கு  ஆளான  நபர்  இவர்களில்  யார்  கொலையாளி  என்பதுதான்    க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


 நாயகன்  ஆக  ஃபகத்  ஃபாசில்  எந்த  வித  ஆர்ப்பாட்டமான பில்டப்  இல்லாமல்  எதார்த்தமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். எல்லோரிடமும்  சிரித்த  முகமாகப்பழகும்  இவரை  யார்  கொலை  செய்திருக்க  முடியும்  என்ற  கேள்வி  எழுவதுதான்  இவரது கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த   வெற்றி 

போலிஸ்  ஆஃபீசர்  ஆக  மோகன் லால் .வழக்கம்  போல  கம்பீரமான  நடிப்பு 

ஆசீஃப்  அலி  கர்ப்பம்  ஆன  காதல்  மனைவியை  அருகில்  இருந்து  பார்த்துக்கொள்ள  முடியவில்லையே  என  கலங்கும்  இடத்தில்  செம  நடிப்பு 


நாயகனின்  நெருங்கிய  நண்பனாக  சைஜூ  க்ரூப்  கச்சிதம்   இவரது  மனைவியாக  வரும்  அனுஸ்ரீ  நாயகனுக்கும்,  இவருக்கும்  காலேஜ்  மேட்  என்பதில்  ஒரு  ட்விஸ்ட்    எதிர்பார்த்தேன். 


நாயகனின்  ஃபேஸ்  புக்  ஃபிரண்டாகவும், ஆர்  டி  ஓ  ஆஃபீசர்  ஆகவும்  வரும்  மேக்னா ராஜ் கேரக்டர்  டிசைனில்  இன்னும்  எதிர்பார்த்தேன் . நாடக  நடிகையான  மீராநந்தன்  கச்சிதமான  நடிப்பு .


 சுராஜ்  வெஞ்சார,மூட்  கெஸ்ட்  ரோல் 


146  நிமிடங்கள்  ஒடும்படி  எடிட்டர்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் , ஃபிளாஸ்பேக்  என  மாறி  மாறி  வருவ்து  கொஞ்சம்  குழப்பமான  திரைக்கதையாக  தோன்றுகிறது


பிஜிபால்  இசை  , பின்னணி  இசை  கச்சிதம் , மனோஜ்  பிள்ளையின்  ஒளிப்பதிவு  தெளிவு 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  கொலை  ஆன  செய்தியை  சுவரொட்டி  மூலமாக  ஆடியன்சுக்கு  ஓப்பன்  பண்ணும்  ஷாட்  சூப்பர் . ஒரு  முறை  கூட  டெட்  பாடியைக்காட்டாத  ஐடியா  செம . 


2  பொதுவாக  பெண்ணால்  தான்  குற்றங்கள் நடக்கும்  என்பதால்  அர் டி  ஓ ஆஃபீசர்  கம்  ஃபேஸ் புக்  தோழி  அல்லது  நாடக  நடிகை , அல்லது  காதலி  இவர்கள்  மூவரில்  ஒருவர்  தான்  கொலையாளி  என்பது  போல  காட்சிகள்  நகர்வது  குட் 


3  வங்கித்துறையில்  நடக்கும்  தில்லுமுல்லுகளை  அம்பலப்படுத்திய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   நாம  இப்போ  ரீ  சார்ஜ்  பண்ணிக்கலாமா?


 சரக்கு  அடிக்கக்கூப்பிடறியா? ரைட்டு 


2  ஒரு  ஆளுக்கு  எப்பவும்  இரண்டு  முகம், இரண்டு  மனசு  இருக்கும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பேங்க்  மேனேஜரை  கஸ்டடியில்  எடுத்து  விசாரிப்பதாக போலீஸ்  ஆஃபீசர்  சொன்னதும்  ஒரு  கலெக்சன் எக்ஸ்க்யூட்டிவ்  வாரண்ட்  இருக்கா?னு  கேட்கறார். உடனே  பளார்  என  அடிக்கிறார்  அவனை .. இருக்குதுன்னு  சொல்லனும்  அல்லது  இல்லைனு  சொல்லனும், ஹீரோ வேல்யூ  காட்ட  காரணமே  இல்லாமல்  எதுக்கு  அடிக்கனும் ? 


2  ஒரு  கொலையை  செய்தால்  லோன்  க்ளியரன்ஸ்  பண்ணிடறோம்  என  பேங்க்  மேனேஜர்  சொல்வது  ஓக்கே , ஆனால்  கொலையாளி அதற்கு  உடன்படாத  போது  கொலை  செய்வதற்கு  முன்பே   லோன் க்ளியரன்ஸ்  சர்ட்டிஃபிகேட்  கொடுப்பது  ஏன்? அதை  வைத்துக்கொண்டு  அவன்  கொலையே  செய்யவில்லை  என்றாலும்  லோன்  க்ளியர்  பண்ணி  விட்டதாய்த்தானே  அர்த்தம் ? பிடி  பேங்க்  கையில்  இருக்காதே? 


3  கொலை  செய்வதற்கு  முன்  லோன்  க்ளியரன்ஸ்  சர்ட்டிஃபிகேட்டின்  ஜெராக்ஸ்  காபியை  தர்றோம், கொலை  வேலை  முடிந்த  பின்  ஒரிஜினலைத்தர்றோம்  என்கிறார்கள். இது  ரிஸ்க்  ஆச்சே? அவன்  கொலையே  செய்யாமல்  லோன்  க்ளியர்  பண்ணிட்டேன் . ஜெராக்ஸ்  காபி  இது . ஒரிஜினல்  மிஸ்  ஆகிடுச்சு  என  கோர்ட்டில்  வாதிடலாமே? 


4  பேங்க்கில்  லோன்  கிளியர்  பண்ண  அக்கவுண்ட்டில்  பணம்  போட  வேண்டும்,  லோன் க்ளியரன்ஸ்  சர்ட்டிஃபிகேட்  கொலை  செய்யும்  முன்  தந்தது . தேதி  முந்தையது , செட்டில்மெண்ட்  பணம்  இட்டது  கொலை  நடந்த  பின் . பிந்தைய  தேதி . இதை  வைத்து  ஈசியாக  போலீசிடம்  மாட்டிக்கொள்வோம்  என்பதை  பேங்க்  மேனேஜர்  ஏன்  யூகிக்க வில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மிக மெதுவாக   நகரும்  திரைகக்தை , ஃபைட்  சீன்ஸ் , சேசிங்  சீன்  இல்லை ., இதெல்லாம்  ஓக்கே  எனில்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 


Red Wine
Theatrical release poster
Directed bySalam Bappu
Screenplay byMammen K. Rajan
Produced byA. S. Gireesh Lal
Starring
CinematographyManoj Pillai
Edited byRanjan Abraham
Music byBijibal
Production
company
Gowri Meenakshi Movies
Distributed by
  • Reelax Eveents
  • Tricolor Entertainments
Release date
  • 21 March 2013[1]
Running time
146 minutes
CountryIndia
LanguageMalayalam

Wednesday, November 01, 2023

கேன்சர் ( புற்று நோய்) வராமல் தற்காத்துக்கொள்ள என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் ?

 முன்  அறிவிப்பு  இன்றி  வரக்கூடிய  கொடூரமான  வியாதி  என்பது  புற்று  நோய்  ஆகும் . அப்படிப்பட்ட  புற்று  நோய்  வராமல்  நம்மைக்காத்துக்கொள்ள  என்னென்ன  உணவுகள்  எடுத்துக்கொள்ளலாம் ?


 1   சிட்ரஸ்  பழங்களான  எலுமிச்சை , ஆரஞ்சு 

2  பூண்டு 

3  தக்காளி  ( இதில்  உள்ள  லைக்கோட்டின் ) 

4  காலி ஃபிளவர் ,ப்ரோக்கோலி

5  கீரைகள் 

6  க்ரீன்  டீ 

7  நட்ஸ்   வகைகள் , விதைகள் 

8   பயிறு  வகைகள் , பருப்பு  வகைகள் ( சுண்டல் , பாசிப்பயிறு ம் கொள்ளு ) 

9  தானியங்கள் , சிறு தானியங்கள்  ( கோதுமை , குதிரைவாலி, வாகை, திணை , சாமை )

10  மஞ்சள் 


11  பெர்ரி  வகைகள் ( பிளாக்  பெர்ரி , திராட்சை )

12  மீன்கள் 


  இதில்  சைவ  உணவுக்காரர்களூக்கு  11  வகையான  உணவு  அசைவக்காரர்களூக்கு  ஒரு  உணவு  ஆக  மொத்தம் 12  வகையான  உணவுகள் 


இவைபோக  முட்டைக்கோஸ் , கருப்புத்திராட்சை  விதைகள் ,   சர்க்கரை  வள்ளிகிழங்கு  , செம்பருத்திப்பூ  இவற்றுக்கும் புற்று  நோயை  எதிர்த்துப்போராடும்  ஆற்றல்  உண்டு  என  சித்த  வைத்தியர்கள்  சொல்கிறார்கள் 

பரம்பொருள் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர்) @ ஆஹா தமிழ் , அமேசான் பிரைம்

   


       நாயகன்  எதிர்மறைக்கதாபாத்திரத்தில்  நடிப்பதை  ரசிகர்கள்  விரும்புகின்றனர்.எம் ஜி ஆர் காலத்தில்  எல்லாம்  நாயகன்  என்பவன்  நல்லது மட்டுமே  செய்பவனாக  சித்தரிக்கப்பட்டான். அஜித்  நடித்த  மங்காத்தா, விஜய்  நடித்த  ப்ரியமுடன், நட்டி  நடித்த  சதுரங்க வேட்டை , சத்யராஜ்  நடித்த  அமைதிப்படை  எல்லாம்  உதாரணங்கள் 

 போர்  தொழில்  படத்தின்  பிரம்மாண்ட  வெற்றிக்குப்பின்  சரத் குமார்க்கு  அடுத்த  இன்னிங்க்ஸ்  ஆரம்பம்  ஆகி  விட்டது  என்று  சொல்லலாம்.  டபுள்  ஹீரோ  சப்ஜெக்ட்களில்  தொடர்ந்து  நடிக்க  ஒப்பந்தம்  ஆகி  வருகிறார். போர்  தொழில்  அளவுக்கு  பிரம்மாண்ட  வெற்றி  இல்லை  என்றாலும்  பரம்பொருள்  ஒரு  வெற்றிப்படமே 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


சிலை  கடத்தல்களில்  ஈடுபடும்  ஒரு  ஆளிடம்  நாயகன்  எட்டு  வருடங்களாகப்பணி  புரிகிறார். ஆனால்  நாயகன்  பணி  வேறு. திடீர்  என  ஓனர்  ஒரு  விபத்தில்  இறக்க   ஓனர்  யார்  யாரிடம்  எல்லாம்  சிலைகளைக்கொடுத்து  வைத்திருந்தாரோ  அவர்களுக்கெல்லாம்,  நல்ல  லாபம்


நாயகனின்  தங்கைக்கு  ஒரு  மெடிக்கல்  பிராப்ளம். ஆபரேஷனுக்கு  ஏகப்பட்ட  பணம்  தேவையாக  இருக்கிறது . அதனால்  நாயகன்  வில்லன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  வீட்டில்  திருடும்போது  மாட்டிக்கொள்கிறான். வில்லன்  நாயகனை  வைத்து  ஆதாயம்  தேட  நினைக்கிறான். அதன்படி  சிலைகள்  பற்றிய  விபரங்களை  கேட்டறிந்து  அதன்  மூலம்  லாபம்  சம்பாதிக்க  வில்லன்  நினைக்கிறான்


1000  வருடங்கள்  பழமை  மிக்க  100  கோடி  மதிப்புள்ள  ஒரு  சோழர்  கால  சிலை  கிடைக்கிறது . அதை  20  கோடி  ரூபாய்க்கு  விற்க  நாயகன் , வில்லன்  இருவரும்  முனைகிறார்கள்.ஒரு  கட்டத்தில்  எதிர்பாராதவிதமாக  சிலை  உடைந்து  விடுகிறது .  அதே  போல  போலியான  சிலையை  நாயகியின்  உதவி  கொண்டு  ரெடி  செய்கிறார்கள் 


 அந்த  சிலையை  விற்க  முடிந்ததா? க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ன  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக அமிதாஸ் பிரதான்  நடித்திருக்கிறார்,  பக்கத்து  வீட்டுப்பையன் போல  தோற்றம். நாயகியிடம்  பம்மும்போது  ரசிக்க  வைக்கிறார். வில்லன்  ஆபத்தான  கட்டத்தில்  மாட்டும்போதெல்லாம்  உயிரைக்காப்பாற்றும்  ஆக்சன்களில்  ஈடுபடுகிறார். க்ளைமாக்ஸில்  இவருடைய  கேரக்டர்  டிசைனில்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கிறது


 வில்லன்  ஆக  சரத்  குமார், நாயகி  வில்லனைப்பற்றி  நாயகனிடம்  எச்சரிக்கும்போது  அனைவருக்கும்  ஒரு  எதிர்பார்ப்பு  வருகிறது . படம்  முழுக்க  வில்லத்தனமான  ஆக்டிங்கில்  கலக்கி  இருக்கிறார். நாயகனை   விட  வில்லனின்  நடிப்பில்  தான்  கம்பீரம்  அதிகம், இவரது  கேரக்டர்  டிசைனிலும்  ஒரு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இருக்கிறது 


நாயகி  ஆக  கஷ்மீரா  பர்தேசி  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்த  வரை  ரசிக்க  வைக்கிறார். இவருக்கு  ரொமாண்டிக்  போர்சன்  இன்னும்  அதிகம்  வைத்திருக்கலாம்


குணச்சித்திர  கதாபாத்திரங்களில்  பவா  செல்லத்துரை ,  பாலாஜி  சக்திவேல்  இருவரும்  கவனிக்க  வைக்கிறார்கள் 


யுவன்  சங்கர்  ராஜா  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம்,  பிஜிஎம்  பக்கா . நாகூரான்  ராமச்சந்திரா  எடிட்டிங்கில்  இரண்டேகால்  மணி  நேரம்  டியூரேஷன்  வருமாறு  கட்  பண்ணி  இருக்கிறார்கள் 

பாண்டி  குமாரின்  ஒளிப்பதிவில்  நைட்   ஸீக்வன்ஸ்  காட்சிகள்  அதிகம், பாராட்ட  வைக்கும்  பணி 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  அறிமுக  இயக்குநர்  சி  அர்விந்த்ராஜ்



சபாஷ்  டைரக்டர்  (சி  அர்விந்த்ராஜ்)


1  தமிழ்  சினிமாவின்  வழக்கமான  லூஸ்தனமான  நாயகி  ஆக  இல்லாமல்  நாயகியை  கண்ணியமாக  , புத்திசாலியாக  காட்டிய  விதம் 


2  வில்லனின்  ஓப்பனிங்  சீன்  மற்றும்  படம்  நெடுக  அவரது  பங்களிப்பு ‘


3 சிலை  கடத்தல்  பற்றிய  டீட்டெய்லிங் 


4  க்ளைமாக்சில்  எதிர்பாராத  அந்த  இரண்டு  ட்விஸ்ட்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1  திருடறதே  தப்பு, அதுலயும்  போலீஸ்  காரன்  வீட்லயே  திருட  நினைச்சே  பாரு 

2  போலீசும்  , பாம்பும்  ஒண்ணு , தொடக்கூடாது , தொட்டா  அரைகுறையா  விட்டுட்டுப்போகக்கூடாது 

3  ஏமாறுவதை  விட  எமாற்றுவதுதான்  பெரிய  பாவம், அதை  விடப்பெரிய  பாவம்  தான்  எப்படி  ஏமாந்தோம்னே  தெரியாமல்  ஏமாறுவது 

4  நீங்க  கொடுக்கற  பணம்  என்  கஷ்டத்துக்கு  வேணா  உதவலாம், ஆனா  என்  மனசை  சாந்தப்படுத்தாது 

5  போலீஸ் காரன்  கடன்  வாங்கினா  திருப்பித்தர  மாட்டான்னு  அவனவன்  தெறிச்சு  ஓடறான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பழங்கால  சிலை  உடைந்தால்  கடத்தல்  க்ரூப்  அப்படியே  விட்டுட்டுப்போவாங்களா? அது  ஒண்ணும்  சுக்குநூறாக  உடைய  வில்லையே?  பாட்டம்; தானே  உடைபட்டிருக்கு? ஒட்டி  ரெடி  பண்ணி  வந்த  விலைக்கு  தள்ளலாம்னு  ட்ரை  பண்ணவே  இல்லையே?


2   கடத்தல்  க்ரூப்பிடம்  பேரம்  பேச  வரும்  வில்லன்  முறுக்கு  மீசை  , போலீஸ்  சம்மர்  கட்டிங்குடன்  வருகிறார்.  ஆளைப்பார்த்தாலே  போலீஸ்  என  தெரியுது . மாறு வேடத்தில்  வரலாம்  என்  ஏன  முயற்சிக்கவில்லை ?


3  வில்லனின்  மனைவி  என்ன  காரணத்துக்காக  டைவர்ஸ்  கேட்கிறார்  என்பதை  தெளிவாக  சொல்லவே  இல்லை . மெயின்  கதைக்கு  அது  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ஒரு  காட்சியில்  விளக்கி  இருக்கலாம் 


4  வில்லனின்  முன்னாள்  மனைவி , நாயகி  இருவரும்  அக்கா  , தங்கைகள்  அவர்கள்  இருவருக்கும்  காம்பினேஷன்  ஷாட்ஸ்  எல்லாம்  வைத்து  சுவராஸ்யமான  காட்சி  எதுவும்  சேர்க்காமல்  மிஸ்  செய்து  விட்டார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விறுவிறுப்பான  ஒரு  த்ரில்லர்  படம் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காகவும் , சரத்  குமாரின் நடிப்புக்காகவும்  பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ் ,  நவம்பர் 1 , 2023 


Paramporul
Theatrical release poster
Directed byC. Aravind Raj
Written byC. Aravind Raj
Produced byManoj
Girish
Starring
CinematographyS. Pandikumar
Edited byNagooran Ramachandran
Music byYuvan Shankar Raja
Production
company
Kavi Creations
Distributed bySakthi Film Factory
(Tamil Nadu)
Release date
  • 1 September 2023
CountryIndia
LanguageTamil

Tuesday, October 31, 2023

திவ்யா டெலிகிராம் சேனல் மோசடி -ரூ42 லட்சம் இழந்த ஐ டி ஊழியர்

  இப்போது  அதிகம்  சம்பாதிப்பது  ஐ டி  ஊழியர்கள்தான் ஆனால்  அப்படி  சம்பாதித்த  பணத்தை  பேராசையால்  இழந்த அனுபவங்களும்  உண்டு . ஒரு  ஐ டி  ஊழியர்  வாட்சப்க்கு  ஒரு  தகவல்  வருகிறது . நீங்கள்  சில  விளம்பரங்களைப்பார்ப்பதன்  மூலம்  எக்ஸ்ட்ரா  வருமானம்  பார்க்கலாம். அதைப்பார்க்கும்  அளவுக்கு  உங்கள் அக்க்வுண்ட்டில்  பணம்  கிரெடிட்  ஆகும்  என்ற  தகவல்  வருகிறது 


 அவரும்   அந்த  நபரின்  வழிகாட்டுதல்  படி  ஒரு டெலிகிரா,ம்  சேனலில்  ஃபாலோயராக  சேர்கிறார். சில  யூ  ட்யூப்  வீடியோக்களை  முதலில்  அனுப்பி  அதற்கு  லைக்ஸ்  போடச்சொல்லி இருக்கிறார்கள் ., அந்த  டெலிகிராம்  க்ரூப்பில்  ஆல்ரெடி  சிலர்  உறிப்பினர்களாக  இருக்கிறார்கள் ., பிறகு  அவரிடம்  நீங்கள்  ஷேர்  மார்க்கெட்டில்   நாங்கள்  சொல்லும் ஷேரில்  பணம்  போட்டால்  நல்ல  வருமானம்  கிடைக்கும்  என்று  கேன்வாஸ் பண்ணி  அவரை  பிரெய்ன் வாஷ்  பண்ணி சம்மதிக்க  வைத்திருக்கிறார்கள் 


 மார்ச்  மாதம்  24 ம்  தேதி  2023  ல்  இருந்து  இந்த  வேலை  நடக்கிறது . அவரும்  தன்  மனைவி  அக்கவுண்ட்  மூலம்  42  லட்சம்  ரூபாய்  ட்ரான்ஸ்ஃபர்  செய்து  இருக்கிறார்.பிறகு  அவர்கள்  சொன்ன  தகவல்  உங்கள்  42 லட்ச  ரூபாய்  பணம்  இப்போது  69  லட்சம்  ஆகப்பெருகி  விட்டது  .  டெலிகிராம்  க்ரூப்பில்  இருந்த  மற்ற  சிலரும்  அதை  ஆமோதித்து  இருக்கிறார்கள் ஆமாம், உங்கள் பணம்  பெருகி  விட்டது , நாங்களும்  பார்த்தோம்  என  தெரிவித்து  இருக்கின்றனர் . உடனே அந்தப்பணத்தை   எடுக்க  முயன்றிருக்கிறார். ஆனால்  அப்படி  வெளியே  எடுக்க  வேண்டும்  எனில்  இன்னும்  கொஞ்சம்  பணம்  கட்ட  வேண்டும்  என்றிருக்கிறார்கள் . அவர்  இப்போது  போலீசில்  புகார்  கொடுத்திருக்கிறார் . விசாரணை  போய்க்கொண்டு  இருக்கிறது


 எனவே  யாரும்  இது  போல  ஆசை  வார்த்தை  சொன்னால்  நம்பி  ஏமாறாதீர்கள் 


கட்டுரை எழுதிய  நாள்  1/6/2023 

Monday, October 30, 2023

ராக்கெட் மாதிரி உயரும் ரயில்வே பங்கு - ஒரு பார்வை

ரயில்வே  துறையில்  IRCTC , IRFC      என  மோனோபோலி  ஸ்டாக்குகள்  இருந்தாலும்  RVNL    ஏனும் ரயில்வே விகாஸ்  நிகாம்  லிமிட்டெட்  எனும் ஷேர்  மிக  வேகமாக  உயரும்  பங்காக  மாறி  உள்ளது 



 2022 ஆம்  வருடம்  மே மாதம்  4  ம் தேதி  அன்று  ரூ 32  இருந்த  பங்கின்  விலை  ஒரே ஆண்டில் 322%  கூடி  இன்று  அதாவது மே 5  2023  அன்று  ரூ 141.85  ஆக  உள்ளது 


இது  முதலீட்டாளர்களுக்கு  மிகப்பெரிய  ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும்  அளித்துள்ளது . இது  ஒரு  மல்ட்டி பெக்கர் ஸ்டாக்  ஆக  மாறி  உள்ளது .


காரணங்கள்

1    2021-2022   கால கட்டத்தில் 18  பிராஜெக்ட்களை வெற்றிகரமாக  முடித்துள்ளது  

2   கை வசம் 73  பிராஜெக்ட்கள்  முடிக்க  வேண்டிய  நிலையில்  இருக்கின்றது 


3    2020 - 2021  கால  கட்டத்தில்  102  பிராஜெக்ட்களை  வெற்றிகரமாக  முடித்துள்ளது  

4   ரூ 58000 கோடி  க்கான  ஆர்டர்  ரஷ்யா  கம்பெனியுடன்  சேர்ந்து  முடிக்க  உள்ளது 

5  வந்தே  பாரத்  ரயில்வே  திட்டத்தில்  ஆர் வி என் எல் -ன்  பங்கும்  இருக்கிறது 

4  ஹெச் ஆர் டி ஐ   எனும்  தனியார்   நிறுவனம்  கடந்த  வாரத்தில்  7  லட்சம்  ஆர்விஎன் எல் பங்குகளை  வாங்கி  உள்ளனர் 


 கடந்த  கால  வரலாறு 

 2019 ம்  ஆண்டில்  மார்க்கெட்டில்  லிஸ்ட்  ஆகும்போது  20  ரூபாய்க்கு  இருந்த  பங்கு  கோவிட்  காலத்தில் 11  ரூபாய்க்கு  இறங்கியது . 2021  ஜனவரியில் தான்  இதன்  பங்கு 25  ரூபாயாக  உயர்ந்தது  பின் 2022  செப்டம்பரில்  46  ரூ  ஆக  உயர்ந்தது


பங்கு  லிஸ்ட்  ஆகும்போது  இந்தப்பங்கை  நீங்கள்  வாங்கி  இருந்தால்  இப்போது  422%  உயர்வு  ஆகும் . 


இப்போது வாங்கினாலும்  ரூ 150 டூ  ரூ 175  வரை  உயர  வாய்ப்புள்ளது ., இறங்கினால்  ரூ 100  வரை  இறங்கலாம், எனவே  ரிஸ்க்  புரிந்து  முதலீடு  செய்யவும் 


 நான்  செபியில்  பதிவு  பெற்ற  நபர்  கிடையாது . இந்தப்பங்கை  வாங்குங்கள்  வாங்க  வேண்டாம்  என  சொல்லவில்லை , இது  எஜூக்கேஷன்  பர்ப்பஸ்  கட்டுரை  மட்டுமே 


இதன்  புக்  வேல்யூ 11  ரூபாய் . ஒரு  பிராஜெக்ட்டில் 200 கோடி  ரூபாய்  லாபம்  பெறுகின்றனர் . ஷேர் ஹோல்டிங்க்  பேட்டர்ன் ல  பார்த்தாலும்  அரசாங்கத்திடம் 91%  உள்ளது ,. பொது  மக்களிடம் 9 % தான்  உள்ளது . இது  மிகவும்  பாதுகாப்பானது 


கட்டுரை  எழுதிய  நாள் - 5/4/2023  

SHANTHOSHAM (2023) - சந்தோஷம் - (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   


புது  வசந்தம்  இயக்கிய  விக்ரமன்  பட  ஃபார்முலா  படி  எதிர்மறை  கதாபாத்திரங்களே  இல்லாத  ,அனைவரும்  நல்லவர்களாக  உலா  வரும்  கதை , அக்கா, தங்கை  பாசம்  தான்  ஒன்  லைன் . மாமூல்  மசாலா  டப்பாப்படங்களை  ரசிப்பவர்கள்  ஒன்  ஸ்டெப்  பேக் 


        ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  +2  படிக்கும்  மாணவி. அம்மா, அப்பா, பாட்டியுடன்  வசித்து  வருகிறார். நாயகிக்கு  17  வயதாக  இருக்கும்போது  ஒரு  தங்கைப்பாப்பா  பிறக்கிறாள் . வயது  வித்தியாசம்  அதிகமாக  இருந்தாலும்  அக்கா , தங்கை  ஆக  இல்லாமல்  மகளைப்போல்  தன்  தங்கையை  கவனித்துகொள்கிறார்


தங்கைக்கு  எட்டு  வயது  ஆகும்பொது  நாயகிக்கு 25  வயது . திருமணம்  பற்றிப்பேச்சு  எடுத்தால்  நாயகி எனக்கு  இப்போ  என்ன  அவசரம்  என  தட்டிக்கழிக்கிறார்


 தன்  தங்கையின்  மீது  அதீத  அக்கறை  எடுத்து  கண்டிஷனுடன்  வளர்ப்பதால்  தங்கை  ஸ்கூல்  ஃபர்ஸ்ட்  மார்க்கில்  பாஸ்  ஆகிறாள் , ஆனால்  தங்கைக்கு  ஒரு  குறை . தனக்கு  என  ஒரு  சுதந்திரம்  இல்லை .  எல்லாவற்றையும்  தன்  அக்கா  தான்  தீர்மானிக்கிறார்


 இப்பொதுதான்  தங்கைக்கு  ஒரு  ஐடியா  வருகிறது . நாயகியை  அதாவது  அக்காவை  ஒரு  ஆள்  சுற்றிச்சுற்றி  வருகிறான், அவன்  காதலுக்கு  நாம்  உதவி  செய்தால்  அக்காவின்  மனசு  டைவர்ட்  ஆகும். நம்மைக்கண்டுக்க  மாட்டா.  அவ  ரூட்  மாறிவிடும், நாம்  சுதந்திரமாக  இருக்கலாம்  என  திட்டம்  இடுகிறாள்


அதன்படியே   செய்கிராள் . நாயகி  காதலில்  விழுகிறாள் . தன்  தங்கையைக்கண்டு  கொள்வதில்லை . ஆனால்  தங்கை இப்போது  5வது  ரேங்க்  தான்


 நிழலின்  அருமை  வெய்யிலில் தான்  தெரியும்  என்பது  போல  அக்காவின்  முக்கியத்துவம்  தங்கைக்கு  இப்போதுதான்  ட்தெரிய  வருகிறது . அதனால்  பழையபடி  அக்காவை  தன்  பக்கம்  இழுக்க  அவள்  காதல்  பிரேக்கப்  ஆக  வேண்டும்  என  நினைக்கிறாள் , இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக   கேரளத்து  கிளியோபாட்ரா  அனு  சிதாரா. +2  படிக்கும்  மாணவியாக  25  வயதான  இவரை  எப்படி  பார்ப்பது  என்ற  கவலை  வேண்டாம் ., குமரிக்கோட்டம்  படத்தில்  எம் ஜி ஆர்  ரையே  நாம்  காலேஜ்  ஸ்டூடண்ட்  ஆக  ஏற்றுக்கொண்டோம்


ஆடை  வடிவமைப்பில் சிகை  அலங்காரத்தில்  எப்போதும்  கவனம்  செலுத்தும்  நாயகி  இதிலும்  பக்காவாக  இருக்கிறார். நடிப்பிலும்  குறை  வைக்க வில்லை 


தங்கை  ஆக லட்சுமி  மிகச்சிறப்பாக  நடித்திருக்கிறார். பேபி  ஷாலினி  மாதிரி  ஓவர்  ஸ்மார்ட்  ஆக  ஓவர்  ஆக்டிங்  எல்லாம்  பண்ணாமல்  யதார்த்தமாக  நடித்திருக்கிறார்


 அப்பாவாக கலாபவன்  சாஜன்  அருமையான  நடிப்பு , குறிப்பாக  க்ளைமாக்சில் பெண்ணைப்பெற்றவர்கள்  பற்றிப்பேசும்  டயலாக்கில்  கண்  கலங்க  வைக்கிறார் . அம்மாவாக , பாட்டியாக  நடித்தவர்கள் நடிப்பும்  அருமை 


 நாயகிக்கு   ஜோடியாக   அமித்  சக்கலக்கல்  நடித்திருக்கிறார் , இருவருக்கும்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை  என்றாலும்  அது  பெரிய  குறையாகத்தெரியவில்லை ,ஏன்  எனில்  இத்  லவ்  ஸ்டோரியோ , தம்பதி  கதையோ  இல்லை , அக்கா  -தங்கை  கதை


பி எஸ்  ஹெய்ஹரி  இசையில்  பாடல்கள்  இதம், பின்னணி  இசை  கச்சிதம். கார்த்தியின்  ஒளிப்பதிவில்  பகல்  வெளிச்சக்காட்சிகளே  அதிகம், தெளிவான  படப்பிடிப்பு  ஜான்  குட்டியின்  எடிட்டிங்கில்  2  ,மணி  நேரம்  படம்  ஒடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  அஜித்  வி  தாமஸ் 




சபாஷ்  டைரக்டர்  (அஜித்  வி  தாமஸ் )


1  நாயகியின்  குடும்பத்தினர்  அனைவரும்  பர்ச்சேஸ்  செய்ய  ஜவுளிக்கடைக்குப்போகும் காட்சியில்  எல்லோரும்  கலர் , டிசைன்  பார்த்து  செலக்ட்  செய்ய  அப்பா  மட்டும்  விலை  அட்டையைப்பார்த்துப்பார்த்து  செலக்ட்  , ரிஜெக்ட்  செய்யும்  காட்சி  யதார்த்தம்  + காமெடி 

2  சிறுமியான  நாயகியின்  தங்கை  நாயகனுடன்  டான்ஸ்  ஆடும்போது  முயற்சித்த  ஒரு  டான்ஸ்  ஸ்டெப்பை  தன்  குடும்பத்தார்  முன்  ஆடிக்காட்ட  அதே  ஸ்டெப்பை  எல்லாரும்  ட்ரை  பண்ணுவதும் ,  ஆடுவதும்  க்யூட்  மொமெண்ட்ஸ் 


3  நாயகனின்  தங்கை  தன்  காதலனை  நாயகனின்  குடும்பத்தில்  அறிமுகப்படுத்தும்போது  அவன்  ஓவராகப்பம்முவதும், அமைதிப்படை அமாவாசை  போல  அடக்கி  வாசிப்பதும்  காமெடி  கலக்கல் 


  ரசித்த  வசனங்கள் 


1  இவ  யாரையும்  லவ்  பண்ணவும்  மாட்டா, மத்தவங்க  லவ்  பண்ணவும்  விட  மாட்டா

2  அப்பா , தொப்பையைக்குறைங்க , அப்பா  மாசமா  இருக்காருபோல, எப்போ  டெலிவரினு  ஃபிரண்ட்ஸ்  கிண்டல்  பண்றாங்க 


3  ஒரு  சின்னக்குழந்தையைக்கூட  கவரத்தெரியாத  நீ  எப்படி  அவ  அக்காவை  கரெக்ட்  பண்ணப்போறே? 


4  இந்த  ரைட்டர் கொஞ்சம்  ஓவர்  ரேட்டட்னு  எனக்குத்தோணுது , நீங்க  என்ன  நினைக்கறீங்க ?


அவரைப்பிடிக்கனும்னா வாசகன்  கொஞ்சம்  புத்திசாலியா  இருக்கனும்


5  என் பொண்ணு  ஒரு  பையனை  லவ்   பண்றது  எனக்குப்பிரச்சனை  இல்லை , ஆனா  அதை  நம்ம  கிட்டே  ஷேர்  பண்ணலையே?  நான்  இவளை  லவ்  பண்ணப்ப  உங்க கிட்டே தானே  முதல்ல  சொன்னேன், அம்மா?


 ஆமா, நான்  கூட  இவ  வேணாம்னு  சொன்னேன், நீ  கேட்கலை 


 டாப்பிக்  இப்போ  அதில்லை 


6  பெண்களோட  வாழ்க்கை  ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேசன் போல . அவங்க  பிறப்பது  , வளர்வது  ஒருஇடத்தில். திருமணத்துக்குப்பின்  அவங்களை  வேரொடு பிடுங்கி  வேறு  இடத்தில்  நட்டு  வளரச்செய்யறாங்க . அது  வளர்ந்து  பூத்து  , காய்த்து  கனி  கொடுக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகியின்  தங்கையிடம்  ஐஸ்க்ரீம்  தரும்  ஆள்  அவர்களால்  அது  மறுக்கபப்டவே  நான்கு  கோன்  ஐஸ் சையும்  கீழே  போட்டு  வீணாக்குகிறார்.உணவுப்பொருட்களை  வீண் ஆக்காமல்  அங்கே  போகும்  ஏழைக்குழந்தைகளுக்கு  தருவது  போல்  காட்சி  அமைத்திருக்கலாம்


2  பப்ளிக்  லைப்ரரிக்குப்போகும்போது  ர்ல்லோரும்  செல்  ஃபோனை  சைலண்ட்  மோடில் வைத்திருப்பார்கள் , ஆனால்  நாயகனுக்கு  லைப்ரரில  இருக்கும்போது  கால்  வருது , அவரும்  அசால்ட்டா  அட்டெண்ட்  பண்ணி  பேசிட்டு  இருக்கார்  


3  நாயகன்  நாயகியிடம்  லைப்ரரில  பேசிட்டு  இருக்கும்போது  அங்கே  அமர்ந்திருக்கும்  பப்ளிக்  யாரும்  கண்டு கொள்ளவே  இல்லை , சைலன்ஸ்  ப்ளீஸ்னு  சொல்லி  இருக்க  வேண்டாமா? 

4  நாயகி  தன்  தங்கையின்  டைரியை ரெகுலராகப்படிப்பது  போலவும், வாட்சிங்  மோட்லயே  இருப்பதாகவும்  ஓப்பனிங் ல  காட்றாங்க. அபப்டி  இருக்கும்போது  தன்  தங்கை  நாயகனுடன்    ஃபோனில்  அடிக்கடி பேசுவது , தன்னைப்பற்றிய  டீட்டெய்ல்ஸ்  தந்து  தன்னைகக்ரெக்ட்  பண்ண  நாயகனுக்கு  உதவியது  தன் தங்கை  தான்  என்பதை  ஏன்  கண்டு  பிடிக்க  முடியவில்லை ? 


5  திருமணத்துக்குப்பின்  நாயகன்  நாயகியிடம்  உன்னை  கரெக்ட்  பண்ண  உதவியது  உன்  தங்கை  தான்  என்ற  உண்மையை  சொல்லவே  இல்லையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்கள் , ஃபேமிலி  ஆடியன்ஸ்க்குப்பிடித்தமான  படம் . ரேட்டிங் 2.75 / 5 


Santhosham
Theatrical release poster
Directed byAjith V Thomas
Produced byIsha Pattali
Ajith V Thomas
Starring
CinematographyKarthik A[1]
Edited byJohn Kutty[1]
Music byP S Jayhari[1]
Production
company
Mise-En-Scene Entertainment
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageMalayalam

Sunday, October 29, 2023

POLICE STORY LOCKDOWN (2013) - சைனீஷ் - சினிமா விமர்சனம் ( எ ஜாக்கிசான் ஃபிலிம்) ( ஆக்சன் டிராமா) @ அமேசான் பிரைம்

   


  ஜாக்கி சான்  படங்களில்  என்னைக்கவர்ந்த  முக்கியமான  படம்  ஆர்மர்  ஆஃப்  காட். அதில்  தான்  அதிக  ரிஸ்க்  காட்சிகள்  இருந்தன. அதே  போல மிராக்கிள்ஸ்   படத்தில்  ஃபைட்ஸ்  எல்லாம்  செம்யா  இருக்கும்   ,ப்ரூஸ்லியை  விட  ஜாக்கிசானுக்கு  அதிக  ரசிகர்கள்  இருக்கக்காரணம்   அவரது  ரீ  ஆக்சன்  தான். ப்ரூஸ்லி  எதிரிகளிடம்  அடி  வாங்க மாட்டார், ஆனால்  ஜாக்கிசான்  ஓவராக  அடி  வாங்குவார். அதற்கான   ரீ  ஆக்சனை  நன்றாகக்காட்டுவார். அசால்ட்டாக  அவர்  ஜம்ப்  செய்யும்  காட்சிகள்  எல்லாம்  அப்ளாஸ்  அள்ளும்


35  மில்லியன்  டாலர்  செலவில்  உருவான இப்படம்  95  மில்லியன்  டாலர்  வசூலை  பாக்ஸ்  ஆஃபீசில்  குவித்துள்ளது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனின்  தங்கை  ஒரு  பொறம்போக்கைக்காதலிக்கிறாள் .கர்ப்பம்  ஆகிறாள் . அண்ணனிடம்  சொல்ல  பயம் . மனம்  விரக்தி  அடைந்து  தற்கொலை  செய்ய  முடிவெடுக்கிறாள் . ஒரு  மெடிக்கல் ஷாப்  போய்  தூக்க  மாத்திரைகள்  வாங்கி  சாகலாம்  என  நினைக்கிறாள் . அவள்  போன  அதே  மெடிக்கல்  ஷாப்பில் தன்  அம்மாவுக்கான  மருந்துகளைத்திருட  ஒருவன்  வருகிறான். சந்தர்ப்ப  வசத்தால்  அவன்  மாட்டிக்கொள்வதால்  தப்பிக்க  சும்மா  மிரட்ட  வில்லனின்  தங்கையை  கத்தி  முனையில்  பிடித்து  அனைவரையும்  மிரட்டுகிறான். இதுதான்  சாக்கு  என  வில்லனின்  தங்கை  தன்  கழுத்தை  அதே  கத்தியால்  அறுத்துக்கொண்டு  சாகிறாள் 


 இந்த  விஷயம்  எல்லாம்  வில்லனுக்குத்தெரியாது . ஏதோ  பிரச்சனை.. மெடிக்கல்  ஷாப்பில்  தன்  தங்கை  மரணம். என்று  மட்டும்  தெரியும் . அந்த  சம்பவத்தின்  போது  அங்கே  இருந்தவர்களை ஒரெ  இடத்தில்  கொண்டு  வந்து  தங்கையின்  சாவுக்குக்காரணம்  ஆனவர்களை  பழி  வாங்க  நினைக்கிறான், 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . அவருக்கு  ஒரு  மகள் , அவள்  ஒரு  பொறுக்கியைக்காதலிக்கிறாள் ( அழகான  பெண்கள்  நல்லவனைக்காதலிப்பதில்லை , பொறுக்கி   குடிகாரன், கஞ்சா  கேஸ்  , ரவுடி  இதுதான்  அவங்க  சாய்ஸ்) . அந்த  பொறுக்கியை  அப்பாவுக்கு  அறிமுகப்படுத்த  ஒரு  நைட் கிளப்புக்கு  குறிப்பிட்ட  நேரத்துக்கு  வரச்சொல்கிறாள்


நாயகன்  வருகிறான் . வில்லன்  அவர்களை  எல்லாம்  பிணையக்கைதிகளாக  வைத்துக்கொண்டு  ஒரு  டிமாண்ட்  வைக்கிறான். இவர்களை  எல்லாம்  நாயகன்  எப்படிக்காப்பாற்றுகிறான்  என்பதே  மீதி  திரைகக்தை 


 விஜய்  நடித்த  பீஸ்ட்  படத்தின்  கதை  நினைவுக்கு  வரலாம் . அதே  போல  முழுக்க  முழுக்க  ஒரு  நைட்  கிளப்பில் நடக்கும்  கதை 


 ஜாக்கிசான்   ஹேர்  கட்டிங்  வித்தியாசமாய்  இருந்தது . ஆக்சன்  காட்சிகள்  அடி பொலி  என  சொல்லும்  அளவு  இல்லை  என்றாலும்  ஓக்கே  ரகம்  தான். வயோதிகம்  காரணமாக  அடக்கி  வாசிக்கிறார் 


 வில்லன்  நல்லவன் என்  திரைக்கதை அமைத்தாலே  டேஞ்சர்  தான். நாயகன்  ஜெயிக்க  வேண்டுமா?  வில்லன்  தப்பிக்க  வேண்டுமா? என்ற  குழப்பம்  ஆடியன்சுக்கு  வந்து  விடும் ( உதா - எந்திரன் பாகம் 2 )



சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  தன்  மகளுடன்  பேசும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள் . நாயகன்  தன்  மனைவியைக்காப்பாற்ற  முடியாமல்  போகும்போது  மகள்  கோபித்துக்கொள்வது  , பின்  புரிந்து  கொள்வது 


2  வில்லனின்  தங்கைக்கு  யாரால்  என்ன  ஆபத்து  ஏற்பட்டது? என்பதை  க்ளைமாக்சில்  விவரிக்கும்  விதம்.,.


3 வில்லனின்  தங்கைக்கு  என்ன  நடந்தது  என்பதை  ஒரே  வரியில்  டயலாக்காக  வைக்காமல்  காட்சியாக  ஜவ்வாக  இழுத்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த  க்ளப்  எப்படி  இருக்கு ?

 ஜெயில்  மாதிரி 


 அதுவும்  சரி  தான் , உள்ளே  வந்துட்டா  வெளில  போக  முடியாது 


2  [போலீஸ்காரங்க  லேட்டா  வர்றதை மட்டும்  இன்னும்  எத்தனை  வருடங்கள்  ஆனாலும்  மாற்ற  முடியாது 


3  என்ன? தனியா  வந்து  மாட்டிக்கிட்டியா?


 நீயும் தான்  தனியா  வந்திருக்கே


4 ஹார்ட்  அட்டாக்  வந்தவனை  எப்படிக்காப்பாத்தறதுனு  எனக்குத்தெரியும் , நெஞ்சுலயே  ஓங்கி  மிதிச்சா  சரி  ஆகிடும்


 அய்யய்யோ  விடுங்க . நான்  சும்மா  நடிச்சேன் 

5  தான்  வாழ  அடுத்தவங்களை  அழிக்கக்கூடாதுனு  சொல்வாங்க , ஆனா  ஆடுத்தவங்க அழிவுல  தான்  என்  வாழ்க்கையே  ஆரம்பிச்சுது 



6  வில்லனான  உன்  மனசு  திடீர்னு  ஏன்  இளகிய  மனம்  கொண்டதா  ஆச்சு ?


 சில  விஷயங்கள்  ஏன்  நடக்குதுனு  யாராலும்  சொல்ல  முடியாது 


7  வாழ்க்கை  ஒரு  காக்ட்டெயில்  மாதிரி   அதை ச் சந்தோஷமா  டேஸ்ட் பண்ணனும்


8  பெண்கள்  தற்கொலை  செய்து கொள்ளக்காரணமே ஆண்கள்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  மகள்  நாயகனைக்கடுப்பேற்றவே ஒரு  மாடர்ன்  லுக்  விக்  வைத்து  மேக்கப்  எல்லாம்  போட்டிருக்கிறாள் , வில்லன்  க்ரூப்  பணயக்கைதியாக  மகளைப்பிடித்து  வைத்திருக்கும்போது  மகள்  பாத்ரூம் போக  அனுமதி  கேட்டு  போகிறாள் , அங்கே  கண்ணாடி  முன்  தன்  விக்கைக்கழற்றி  சுய  ரூபத்துக்கு  மாறுகிறாள் . அப்போது  வில்லனின்  ஆள்  உள்ளே  வந்து  கிளம்பலையா? என  கேட்டதும்  கிளம்புகிறாள். மகளின்  ஹேர்  ஸ்டைல்  , கலர்  எல்லாம்  மாறியதை  அவன் ஏன்  கவனிக்கவில்லை ? 


2   வில்லன்  தன்  ஃபிளாஸ்பேக்  கதையை  ரெண்டு  லைன்ல  சொன்னாப்போதாதா? தேவையே  இல்லாம  வில்லன்  போட்ட  ஃபைட்  சீன்களை  எல்லாம்  திணிச்சு  இழுத்து  இது  ஆக்சன்  படம்னு  காட்டிக்கனுமா? 


3  நாயகன்  ஒரு  இடத்தில்  எந்த  உயிர்  போவதையும்  நான் விரும்ப  மாட்டேன்னு  சொல்றாரு, ஆனா  வில்லன்  தன்  அடியாளுடன்  ஃபைட்  போடச்சொன்னதும்  அவனை ஜெயிக்கற  அளவுக்கு  அடிச்சாப்போதாதா? கொல்லும்  அளவு  போகனுமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-ஜாக்கிசான் , ரஜினி  படங்கள்  பெரும்பாலும்  ஃபேமிலியுடன்  பார்க்கும்  தரத்தில்  தான்  இருக்கும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாக்கிசான்  ரசிகர்கள்  மட்டுமே  பார்க்கலாம், மற்றவர்களை  பெரிய  அளவில்  கவராது . ஆவரேஜ்  வாட்ச்  . ரேட்டிங் 2.5 / 5 



Police Story 2013
Film poster
Traditional Chinese警察故事2013
Simplified Chinese警察故事2013
Hanyu PinyinJǐng Chá Gù Shì Èr Líng Yī Sān
JyutpingGing2 Caat3 Gu3 Si6 Ji6 Ling4 Jat1 Saam1
Directed bySheng Ding
Screenplay by
  • Sheng Ding
  • Yahui Wei
  • Yang Xu
  • Alex Jia
Story by
  • Chao Lv
  • Shuying Chen
  • Ying Gao
  • Huijuan Gao
  • Jianai He
Produced byJerry Ye
StarringJackie Chan
Liu Ye
Jing Tian
CinematographyYu Ding
Edited by
  • Sheng Ding
  • Ismael Gomez III
Music byZai Lao
Production
companies
Distributed byJackie & JJ International (Worldwide)
Emperor Motion Pictures (Hong Kong)
Release dates
  • 24 December 2013 (China)
  • 16 January 2014 (Hong Kong[1])
Running time
108 minutes
CountriesChina
Hong Kong
LanguageMandarin
BudgetUS$35 million
Box officeUS$94.2 million[2]

100 வருடங்கள் ஆயுள் நீடிக்க நாம் செய்ய வேண்டியவை- உடல் ஆரோக்கியம்- கட்டுரை


 பெரியவர்கள் ஆசீர்வாதம்  செய்யும்போது  100  வருடங்கள்  வரை  தீர்க்காயுசா  வாழனும்  என  வாழ்த்துவார்கள், ஆனால்  ஒரு  இந்தியனின்  சராசரி  ஆயுட்காலம் 63  என  சொல்லப்படுகிறது. அந்தக்காலத்துல்  ,மருத்துவ  வசதிகள் , விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள்  இந்த  அளவு  இல்லாதபோதே  நம்  முன்னோர்கள்  80  வயது  டூ  95  வயது  வரை  வாழ்ந்தார்கள் . ஆனால்  இந்த  காலகட்டத்தில்  75தாண்டுவதே  அபூர்வம்  ஆகிவிட்டது . 100  வருடங்கள் வாழும்  ஆசை  எல்லோருக்கும் இருக்கும், ஆனால்  அதற்கான  வழிமுறைகளை கடைப்பிடிப்போர்  கொஞ்சம் பேர் தான் . அந்த  வழி முறைகள்  என்ன?


நம்  உடம்பில்  உள்ள  முக்கியமான  6  உறுப்புக்ளை  பராமரித்தால்  போது, ஒவ்வொரு  உறுப்புக்கும்  நான்கு  விஷயங்கள் , ஆக  மொத்தம்  24  பாயிண்ட்கள் கவனிக்க  வேண்டும் 


1  மூளை   2  இதயம்  3 கல்லீரல்  4 எலும்பு & மூட்டு  5  செரிமாண  மண்டலம் ( ஜீரண  உறுப்புகள்  6  சிறு நீரகம் 


1  தினசரி  ஏழு  மணி நேரம்  டூ  எட்டு  மணி  நேரத்தூக்கம்

2 தினசரி   அரை  மணி  நேரமாவது  ஏதாவது  புதிய  விஷயங்களைப்படிக்க  வேண்டும் 

3  தினசரி  கால்  மணி  நேரமாவது  தியானம்  செய்ய  வேண்டும் . 

4  முடிந்தவரை   தினசரி  கொஞ்ச  நேரமாவது  சிரிக்க  வேண்டும், சிரித்த  முகத்துடன்  இருக்க  வேண்டும் 

=================================

5   வீட்டில்  சமைத்த  உணவுகளை மட்டுமே  சாப்பிட  வேண்டும், ஹோட்டல் , நடை பாதைக்கடைகளில் சாப்பிடுவதை  முடிந்த  வரை  தவிர்க்க  வேண்டும் 


6   தினசரி  45  நிமிடங்கள்  உடல் பயிற்சி  செய்ய  வேண்டும். ஜிம் முக்குப்போகனும்  என்ற  அவசியம்  இல்லை . நடைப்பயிற்சி , நீச்சல்  பயிற்சி , ஸ்கிப்பிங் , ஜாகிங்  எது  வேண்டுமானால்  இருக்கலாம்

7  மனழுத்தம் , ஸ்ட்ரெஸ் , டென்ஷன்  போன்றவற்றைக்குறைத்துக்கொள்தல் . அல்லது  எப்போதும்  மனதை  ரிலாக்சாக  வைத்துக்கொள்தல்


8   புகையிலை , சிகரெட் , மூக்குப்பொடி  போன்ற  கெட்ட  பழக்கங்கள்  இல்லாமல் இருத்தல் 

===========================

9   குடிப்பழக்கம்  இல்லாமல்  இருத்தல் 

10   மாவு  உணவுகள் , கார்போஹைட்ரேட்  உணவுகளை, கொழுப்புகள்  அதிகம்  உள்ள  உணவுகளை   எடுத்துக்கொள்வதை  குறைத்துக்கொள்தல் 


11   டாக்டர்  அட்வைஸ் இல்லாமல்  மெடிக்கல்  ஷாப்பில்  நீங்களாகவே  போய்  தலைவலி , காய்ச்சல்  என  எதற்கெடுத்தாலும்  மருந்து  மாத்திரை  எடுத்துக்கொள்வதை  தவிர்த்தல்


12  மூன்று  மாதங்களுக்கு  ஒரு  முறை  கல்லீரலை  சுத்தம்  செய்ய  கரிசலாங்கண்ணிக்கீரை  யை  உணவில்  சேர்த்துக்கொள்ள  வேண்டும் .. கல்லீரலை  பலபப்டுத்த  கை கால்களை  வீசி  நடைப்பயிற்சி  அடிக்கடி  மேற்கொள்தல் 


===================



13   கால்சியம் சத்து  உள்ள  பொருட்களை  உணவில்  எடுத்துக்கொள்தல் . உதாரணம்  பால் , தயிர் , மோர் , ராகி ( கேழ்வரகு)

14    முருங்கை  கீரை , முருங்கை  காய்   உணவில்  சேர்த்தல் 


15  நெய்யை  வாரம் 3  நாட்களாவது  உணவில்  சேர்த்தல் 

16  புரோட்டீன்  சத்து  உள்ளபொருட்களை  உணவில்  சேர்த்தல். நீங்கள்  80  கிலோ  எடை  உள்ளவராக  இருந்தால்  தினசரி  50  கிராம்  அளவாவது  புரதச்சத்து  தேவை . அதற்கு  பட்டாணி , சுண்டல் , பயிறு  வகைகள்  சாப்பிட  வேண்டும். இட்லி , தோசை  , சாப்பாடு  என  மாவுச்சத்து  பொருட்களையே  தொடர்ந்து  சாப்பிட்டால்  சரி  வராது . 


=====================


17  முழு  தானிய  உணவுகளை  எடுத்துக்கொள்தல் . ரிஃபைண்டு  பொருடகளை  தவிர்த்தல் மைதா, பட்டை  தீட்டப்பட்ட  அரிசி , அஸ்கா சர்க்கரை (  வெள்ளை  சர்க்கரை )) தவிர்த்தல்  நல்லது . தானியங்கள் ( ராகி , கம்பு , சோளம் ), சிறுதானியங்க:ள்( வரகு , சாமை , திணை , குதிரைவாலி )   பழகிக்கொள்ளவேண்டும் 

18 பேக்கரி  ஐயிட்டங்களான  வெள்ளை  சர்க்கரை + மைதா பொருட்களை  தவிர்த்தல் 

19  நார்ச்சத்து  மிக்க காய்கறிகள்  எடுத்துக்கொள்தல் . பெரும்பாலும்  அனைத்துக்காய்கறிகளிலும்  ஃபைமர்  எனும் நார்ச்சத்து  உள்ளது . சீசனுக்கு  ஏற்ற  அல்லது  சீசன்  டைமில்  கிடைக்கும்  பழங்களை  சாப்பிடுதல் . ஜூசாக  பழசாறாக  குடிக்காமல்  பழமாகவே  சாப்பிடுதல்  நல்லது 


20   ஃபிரைடு  அயிட்டங்களை  தவிர்த்தல் 


==============

21  இரத்த  அழுத்தத்தை  கட்டுப்பாட்டில்  வைத்தல் 120 / 80

22  இரத்த  சர்க்கரையை  கட்டுப்பாட்டில் வைத்தல். சாப்பிடும்  முன்  ரத்த  சர்க்கரை  அளவு  70 - 110  . சாப்பிட்ட  பின் 90-150.   பிபி  , சுகர்  உள்ளவர்கள் மூன்று  மாதங்களுக்கு  ஒரு  முறை  மெடிக்கல்  செக்கப்  செய்து  கொள்வது  நல்லது . மாத்திரைகளை  சரியாக  சாப்பிட்டு  கட்டுப்பாட்டில் வைக்க  வேண்டும் 

23  டாக்டர்  அட்வைஸ் இல்லாமல் பெயின்  கில்லர்ஸ் எனப்படும்  வலி  மாத்திரைகளை  மெடிக்கல்  ஷாப்பில் வாங்கி  சாப்பிடுவதை  தவிர்த்தல் 

24  சாராயம் , கள்ளச்சாராயம், சீமை  சரக்கு  போன்ற  ஆல்ஹஹால்  தவிர்த்தல் . தின்சரி  தேவையான  அளவு  தண்ணீர்  குடித்தல் 

Saturday, October 28, 2023

PAIN HUSTLERS (2023) - சினிமா விமர்சனம் ( ,மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


  ஈவன்  ஹக்ஸ்  எழுதிய  நான் -ஃபிக்சன்  நாவல் ஆன  த  ஹார்டு  சேல்   கதைக்கருவை  தழுவி  எடுக்கப்பட்ட  படம்  இது . மருத்துவ  உலகில் நடக்கும்  மோசடிகள் , மருந்துக்கம்பெனிகளின்  தில்லுமுல்லுகள் , கமிஷனுக்கு  ஆசைப்பட்டு  டாக்டர்கள்  செய்யும்  தவறுகள்  பற்றிப்பேசுகிறது . டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  இல்லாமல்  ஒரு  பயோகிராஃபி  தொனியில்  திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கிறது   

      ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  சிங்கிள்  மதர். தன்  அம்மா, ஒரு மகளுடன்  வசித்து  வருகிறார். நைட்  கிளப்களில்  ஸ்ட்ரப்டீஸ்  டான்ஸ்  ஆடுவது  அவரது  பணி . ஒரு கவுரவமான  வேலை  செய்யலாம்  என  முடிவெடுத்து ஒரு  மருந்துக்கம்பெனியில்  மார்க்கெட்டிங்  எக்ஸ்க்யூட்டிவ்  வேலைக்கு  அப்ளை  செய்கிறார்


அதிர்ஷ்டவசமாக அங்கே  அவருக்கு  வேலை  கிடைக்கிறது ., ஆனால்  கம்பெனி  மேனேஜர்  நாயகியின்  ரெஸ்யூம், பயோ  டேட்டாவில்  சில  மாறுதல்களை  செய்கிறார். நாயகி  பள்ளிப்படிப்பு  தான்  முடித்திருக்கிறார், ஆனால் டிப்ளமோ  படித்தது  போல , அனுபவம்  உள்ளவர்  போல  பொய்யான  தகவல்களை  பதிவேற்றி  எப்படியோ  கம்ப்பெனி  எம் டி  யிடம் சொல்லி  பணியில்  அமர்த்தி  விடுகிறார்


நாயகி  வேலைக்கு  சேர்ந்திருக்கும்  மெடிக்கல்  கம்பெனி  லாஸ்ல  போய்க்கிட்டு  இருக்கு . மூழ்கிக்கொண்டிருக்கும்  கப்பலில்  பிரயாணம்  செய்ய  வந்திருக்கும்  பயணி  போல  உணர்கிறார். 


வாய்  உள்ள  பிள்ளை  பிழைக்கும்  என்பது  போல  நாயகி  தன்  கம்பெனி தயாரிக்கும்  பெயின்  கில்லர்  மெடிசனை  டாக்டர்களிடம்  மார்க்கெட்டிங்  செய்து  ஆர்ட்ர்  பிடிக்கிறார். அவரது  தொடர் உழைப்பால்  கம்பெனி  செம  சேல்ஸ்  டார்கெட்  அச்சீவ்  செய்கிறது. நாயகிக்கு  பிரமோஷன் , சம்பள  உயர்வு , இன்செண்ட்டிவ்  என  ஒரு  அள்ளு  அள்ளுகிறார்


நாயகிக்கு  அது  போலி  மருந்து  என்பது  தெரியாது . கேன்சர்  நோயாளிகளுக்கு  ஏற்படும்  வலியைக்குறைக்கும்  மருந்து  அது . சேல்ஸ்  நன்கு  முன்னேறவே  அது  எல்லா  வலிகளுக்குமான  பொது  நிவாரணி  என்ற  பொய்யான  தகவலைப்பரப்பி  டாக்டர்களை  பேஷண்ட்களுக்குப்பரிந்துரைக்க  கம்பெனி  கட்டாயப்படுத்துகிறது . இதில்  நாயகிக்கு  உடன்பாடில்லை 


ஒரு  கட்டத்தில்  அப்ரூவர்  ஆக  மாறி  போலீசிடம்  உண்மைகளை  எல்லாம்  சொல்கிறார். கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . இதற்குப்பின்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  எமிலி பிளண்ட்   கச்சிதமாக  நடித்திருக்கிறார். மொத்தப்படத்தையும்  அவர்  தான்  தோளில்  சுமக்கிறார். அவ்ரது  யதார்த்தமான  நடிப்பு  படத்துக்கு  பக்க  பலம்


ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்   போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  நன்றாக  இருக்கின்றன


திரைக்கதை  அனுமதித்தும்  விரசமான  காட்சிகள்  வைக்காமல்  கண்ணியமான  நெறியாள்கை  பாராட்ட  வைக்கிறது 



சபாஷ்  டைரக்டர் ( டேவிட்  யாட்ஸ்)


1  டாக்டர்களை  , அவர்களின்  சுயநலத்தை  தோலுரிக்கும்  காட்சிகள்  அமர்க்களம்,  அவர்களிடம்  இருந்து  எதிர்ப்பு  வரும்  என்பது  தெரிந்தும்  போல்டான  காட்சிகளை  அமைத்த  விதம்  அருமை 


2  மெயின்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லாத  விஷயங்கள்  ஆன  நாயகி  ஏன்  டைவர்ஸ்  பெற்றார்?  நாயகனுடன்  என்ன  உறவு ? கம்பெனி  ஓனரை , டாக்டர்களை  அவர்  அட்ஜஸ்  செய்தாரா? இல்லையா?  என்பதை  விளக்காமல்  மேலோட்டமாக  காட்சிகளை அடுக்கிய  விதம்


  ரசித்த  வசனங்கள் 


1  நாம  ரெண்டு  பேரு  மட்டும்  இருந்தா  அதுக்குப்பெரு  ஈவெண்ட்  இல்லை , டேட்டிங்


2  உங்க  உயிருக்கே  ஆபத்து  என்பது  போல  நீங்க  வேலை  செய்யனும்


3  அதிகமா   வரி  கட்டுவதும்  ஒரு  ஸ்டேட்டஸ் சிம்பல்  தான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அம்மா  கம்பெனி  ஓனருடன்  நெருக்கமாக  இருப்பது , பணத்துக்காக  நீ  யார்   கூட  வேண்டுமானாலும்  இருப்பாய்  என  மகளே (நாயகி)  அம்மாவைக்குற்றம்  சுமத்துவது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


2  கம்ப்பெனியில்  செல்வாக்குக்கிடைத்த  பின்  நாயகி  எதற்காக  தன்  அம்மா  என்பதை  மறைத்து  அம்மாவை  கம்பெனியில்  ஸ்டாஃப்  ஆக  சேர்த்து  விட  வேண்டும் ? உண்மை  சொல்லியே  சேர்க்கலாமே? 


3  நாயகியின்  அம்மா  தன்  கம்பெனியில்  பணியில்  இருக்கிறார்  என்ற  உண்மை  தெரிந்த  [பின்  முதலாளி  ஏன்  நாயகியின்  அம்மாவை  பணி  நீக்கம்  செய்ய  முனைகிறார். அவர்  ஆல்ரெடி  அவருடன்  இல்லீகல்  ரிலேசன்ஷிப்பில்  இருந்தும்  டிஸ்மிஸ்  செய்ய  நினைப்பது  ஏன்? என்பதற்கு  விளக்கம்  இல்லை 


4 போலி  மருந்துக்கு  லைசென்ஸ்  எப்படிக்கிடைத்தது ?  அதுவும்  பண  பலத்தால்  பெற்றார்களா? என்பது காட்டப்படவில்லை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வசன  ரீதியான  18+  க்ள்  உண்டு . காட்சி  ரீதியாக  சைவம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    மெலோ  டிராமா , பயோகிராஃபி  மூவி  ரசிகர்கள்  பார்க்கலாம், ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை . தமிழ்  டப்பிங்கில்  நெட்  ஃபிளிக்சில்  கிடைக்கிறது / ரேட்டிங்  2.5 / 5