Friday, November 03, 2023

ARE YOU OK BABY? (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( லீகல் டிராமா) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

 


 சொல்வதெல்லாம்  உண்மை  நிகழ்ச்சியில் வந்த  ஒரு  நிகழ்ச்சியையே  படம்  ஆக்கலாம்  என  முடிவெடுத்து  எடுத்த  படம்  போல, ஆனால்  சுவராஸ்யமாக  இருக்கிறது . லட்சுமி  ராமகிருஷ்ணனின் இயக்கத்தில்  உருவான  இப்படம்  வசூல்  ரீதியாக  பிரமாத  வெற்றியைக்குவிக்க வில்லை  என்றாலும்  விமர்சன  ரீதியாக  பலரது  பாராட்டுக்களையு,ம்  வென்றது . டி வி  சீரியல்  பார்க்கும்  பெண்கள் , குடும்பப்பெண்கள்  அனைவருக்கும்  இந்தக்கதை  பிடிக்கும்         



  ஸ்பாய்லர்  அலெர்ட்


திருமணம் ஆகாமல் லிவ்விங்  டுகெதராக  வாழும் ஒரு  இளம்  ஜோடி . பொண்ணு  எதிர்பாராத  விதமா  கர்ப்பம்  ஆகுது . கலைக்க  முடியலை . பையன்  கலைச்சே  ஆகனும்கறான். அப்போதான்  ஒரு  நர்ஸ்  ஒரு  ஐடியா  சொல்லுது . நீயே  சிரமத்தில்  இருக்கே . குழந்தையைப்பெத்துக்குடுத்துடு , பார்த்துக்க  ஆள்  இருக்காங்க  உனக்குப்பணமும்  கிடைக்கும்  என  ஐடியா  கொடுக்குது


 குழந்தை  பிறந்ததும்  குழந்தை  இல்லாத  வசதியான  ஒரு  தம்பதி  அதை  தத்து  எடுத்துக்கறாங்க . குழந்தையின்  அம்மாவுக்கும், மீடியேட்டர்  ஆன  நர்சுக்கும் கணிசமான  தொகை  கொடுத்து   பத்திரத்தில்  கையெழுத்து  எல்லாம்  வாங்கிக்கறாங்க . 


 ஒரு  அஞ்சு  வருசம்  போகுது . திடீர்னு  அந்தப்பெண்ணுக்கு  தன்  குழந்தையைப்பார்க்க  ஆசை . கேஸ்  போடுது . சைல்டு  டிராஃபிக்  கேஸ்   தத்து  எடுத்த  பெற்றோர்  மீது   பாயுது ., இதற்குபின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 தத்து  எடுக்கும்  பெற்றோராக  சமுத்திரக்கனி - அபிராமி  உணர்ச்சிப்பூர்வமாக  நடித்துள்ளனர் ,  பக்கம்  பக்கமாக  வசனம்  பேசும் சமுத்திரக்கனி  இதில் அடக்கி  வாசித்து  இருக்கிறார் , அதுவே  ஆறுதல் , அபிராமியின்  உணர்ச்சி மிக்க  நடிப்பு  அருமை 


குழந்தையின்  அம்மாவாக  முல்லை  அரசி  கவனிக்க  வைக்கும்  நடிப்பு 

இயக்குநர்  ஆன  லட்சுமி  ராமகிருஷ்ணன்  அதே  ரோலில்  வருகிறார்.  அந்தக்கால  எம்  ஜி ஆர்  மாதிரி  கூலிங்  கிளாஸ்  போட்டுவது  தவிர  பெரிய  மைனஸ்  எதுவும்  இல்லை 


113  நிமிடங்கள்  ஓடும்படி  ஒரு  குயிக்  வாட்ச்  மூவி  ஆக்வே  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர்   பிரேம்  குமார் .


இளையராஜாவின்  இசையில் ஒரே  ஒரு  பாட்டு  சோகமயமாக இதயத்தை  வருடுகிறது ., அவரது  பின்னணி  இசையைப்பற்றி  புதிதாக  பாராட்ட  என்ன  இருக்கிறது ? கனகச்சிதம் 


கிருஷ்ண  சேகரின் ஒளிப்பதிவு   பர்ஃபெக்ட்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  லட்சுமி  ராமகிருஷ்ணன்




சபாஷ்  டைரக்டர்  (லட்சுமி  ராமகிருஷ்ணன்) 


 1 சீரியஸாகப்போகும்  திரைக்கதையில்  ரிலாக்ஸ்  ஆக  ரோபோ  சங்கர்  காமெடி  டிராக்  வருகிறது .  மிக  யதார்த்தமான  காமெடி . யோகி  பாபு , புரோட்டா  சூரிகளின்  மொக்கை  ஜோக்குகளைப்பார்த்துப்பார்த்துக்கடுப்பான  நமக்கு  “ அன்னைக்குக்காலைல  ஆறு  மணி  இருக்கும் , கோழி கொக்கரக்கோனு  கூவுச்சு “ புகழ்  ரோபோசஙகர்  காமெடி  அருமை 


2   கடைசி  20  நிமிடங்களில்  வரும்  கோர்ட்  ரூம்  காட்சிகள்  சினிமாத்தனம்  இல்லாமல்  இருக்கிறது 

சாங்க்ஸ்


1  அன்னை  தந்தை  ஆக்குவது  யார்? பிள்ளை  அன்றோ ?


  ரசித்த  வசனங்கள் 

1  பிராய்லர்  கோழி  மாதிரி  இருந்துட்டு  என்னை எதிர்த்துப்பேசறியா? போடா 


 சார் , அப்போ  நான்  நாட்டுக்கோழி  தானே? 


2ஜெயில்  வாழ்க்கை  ரொம்ப  சிரமமா  இருக்குமே?


 அய்யோ , ராஜ  வாழ்க்கை  மேடம். பெட்  காஃபில  இருந்து  பெட்டை  விரிக்கிற  வரை  நம்ம  பசங்க  பார்த்துக்குவாங்க 


3  மேடம், ஒரு  சிக்கலான  கேஸ்


 கள்ளக்காதலா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  குழந்தையின்  அம்மாவாக  வரும்  முல்லை  அரசி  கேரக்டர்  அடிக்கடி அதீத  பசியால்  சாப்பிடற  மாதிரி  காட்சி  எடுத்தது  ஓக்கே, ஆனா  அதை  நாசூக்காக  எடுத்திருக்கலாம், பரிதாபம்  வரும்படி காட்ட  வேண்டிய  காட்சி  அது , ஆனால்  வெறுப்பு  வருவது  போல  காட்சி  அமைந்து  விட்டது


2  தத்து     எடுத்த  குழந்தையை  திருப்பிக்குடுத்துடுங்க  என  கேட்கும்போது  சமுத்திரக்கனி  ஏன்  பம்ம  வேண்டும், நாங்க  செலவு  பண்ணுன  காசு  ரெண்டரை  லட்சம், அதை  முதல்ல  திருப்பிக்கொடுங்க  என  செக்  வைக்கலாமே? 


3  கோர்ட்ல  ஆர்க்யூ  பண்றப்ப  வக்கீல்  சொல்லும் பாயிண்ட்  கரெக்ட்  தான். இந்தக்குழந்தையை  ஷோபா  வளர்த்த  எந்த  தகுதியும் இல்லை ., ஏற்கனவே  அஞ்சு  தடவை  அபார்சன்  பண்ணின  மாதிரி  தான்  இப்பவும்  ஆகி  இருக்கும்  என்பது  சரிதான். அது  எப்படி  தனி  மனித  தாக்குதல்  ஆகும்?  அந்தப்ப்பொண்ணு  மேரேஜ்  பண்ணிக்கலை ,  லிவ்விங்  டுகெதரா  தான்  வாழ்ந்தது , அதை  சொல்லிக்காட்டினா  தான்  தனி  மனித  தாக்குதல் ., குழந்தையை  வளர்த்த  பொருளாதார  ரீதியா  தகுதி இல்லை   என்பது  எப்படி  தனி  மனித  தாக்குதல்  ஆகும் ? 


4  தன் தரப்பு  நியாயத்தை  விளக்கும்போது  ஷோபா  காண்டம்  போடச்சொன்னா  எனக்குப்பிடிக்காதுனு  சொல்வான்  என்னை கட்டாயப்படுத்துவான்  என்கிறார். ஏன் ? குழந்தைப்பிறப்பை  தடுக்க  காண்டம்  மட்டும்  தான்  இருக்கிறதா? பெண்ணுக்கு    எதுவும்  இல்லையா? காப்பர்  டி  இருக்கே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  யூ  தான் , வசனத்தில்  யூ / ஏ  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  லீகல்  டிராமா , போர்  அடிக்காமல்  செல்கிறது . பார்க்கலாம் ., ரேட்டிங்  2.75 / 5 


Are You Ok Baby?
Release poster
Directed byLakshmy Ramakrishnan
Written byLakshmy Ramakrishnan
Produced byRamakrishnan Gopalakrishnan
Starring
CinematographyKrishna Sekhar
Edited byCS Prem Kumar
Music byIlaiyaraaja
Production
company
Monkey Creative Labs
Release date
  • 22 September 2023
Running time
113
CountryIndia
LanguageTamil

0 comments: