Wednesday, May 24, 2023

MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் -பாகம் 1 ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்

 

நியூயார்க்  டைம்ஸ்  இதழில்  வாராவாரம் வாசகர்களின்  காதல்  கதைகள்  கட்டுரை  வடிவில்  இடம் பெற்றன. நம்ம  ஊரில்  தினமலர் வாரமலர் இது  உங்கள்  இடம் பகுதியில்  வாசகர்கள்  அவரவர்  அனுபவத்தை  அனுப்புவது  போல  அங்கே  அவரவர்  காதல்  அனுபவங்களை  கட்டுரை  வடிவில்  அனுப்பினாரக்ள். அது  வாசகர்கள்  மத்தியில்  பெருத்த  வரவேற்பைப்பெற்றது. மாடர்ன்  லவ்  என்ற  தலைப்பில்  அந்த  தொடர்  கட்டுரைகள்  இடம்  பெற்றன.


அமேசான்  [பிரைம்  அந்த  கட்டுரைகளை  ஆங்கிலத்தில்  குறும்படங்களாக எடுத்து ஹிட்  ஆக்கியது. பின்  இந்தியாவிலும் உள்ளே  வந்தது 

முன்னணி  இயக்குநர்களான  பாரதிராஜா , பாலாஜி  சக்திவேல் , ராஜூ  முருகன், கிருஷ்ண்குமார் ராஜ்குமார் ,  அக்சய்  சுந்தர் , தியாகராஜன்  குமாரராஜா  போன்ற  ஆறு  இயக்குநர்கள்  இயக்கத்தில்  ஆறு  தனித்தனிக்கதைகளாக  தலா  ஒரு  மணி  நேரம்  ஓடக்கூடிய  ஆந்தாலஜி  வெப்சீரிஸ்  இது 

 எற்கன்வே  மாடர்ன்  லவ்  மும்பை , மாடர்ன்  லவ்  ஹைதராபாத்  என  காதல்  கதைகள் வந்தது  போலவே  இப்போது  தமிழகக்கதைகள்  அணி  வகுத்து  நிற்கிறது ஆறு  கதைகளில்  பெரும்பாலான  ர்சிகர்கள்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்ற  ஆறாவது  கதையை  முதலில்  பார்ப்போம்




எபிசோடு 6  - நினைவோ  ஒரு  பறவை - தியாகராஜன்  குமாரராஜா


2011 ஆம்  ஆண்டு  தன்  முதல்  படமான  ஆரண்ய  காண்டம்   மூலம்  கமர்ஷியல்  ஹிட் , விமர்சன  ரீதியான  பாராட்டுக்கள் ஆகியவற்றை  ஒருங்கே  பெற்ற தியாகராஜன்  குமாரராஜா  தனது  அடுத்த  படமாக  சூப்பர்  டீல்கஸ்  சை  2019ல்  ரிலீஸ்  செய்தார் . இது  மெல்பர்ன்  திரைப்பட  விழாவில்  விருது  பெற்றது. இவரது  மாறுபட்ட  அணுகுமுறை  இளைஞர்களைக்கவர்வதாக  இருக்கிறது

spoiler ALERT 

நாயகன் - நாயகி  இருவரும்  கூடல்  முடிந்த  பின்  பிரேக்கப்  செய்து  கொள்கிறார்கள் . இனிமேல்  நாம்  இருவரும்  சந்தித்துக்கொள்ளவே  கூடாது  என்ற  ஜெண்டில்மேன்  அக்ரிமெண்ட்  உடன்  பிரிகிறார்கள் , என்ன  காரணத்துக்காகப்பிரிகிறார்கள்  என்பது  தெரியவில்லை 


 சில  நாட்கள்  கழித்து  நாயகன்  ஒரு  விபத்தில்  சிக்கி  கோமா  ஸ்டெஜ்க்குப்போய்ட்டான்  என  தகவல்  வருகிறது. டாக்டரின்  அட்வைஸ்படி  இனிமையான  நினைவுகளை  மீட்டெடுத்தால்  பழைய  நினைவுகள்  திரும்பலாம்  என்கிற படியால்  நாயகி  நாயகனை  சந்தித்து  பழைய  சின்ன  சின்ன  சம்பவங்களைக்கூறுகிறாள்


ஆனால்  பிரேக்கப்  ஆனதற்கான  காரணத்தை  மட்டும்  கூறவே  இல்லை . கோமா  ஸ்டேஜூக்குப்போயும்  உன்  நினைவு    எனக்கு  மறக்கவில்லை.  எனவே  நாம்  இணைந்தே  வாழ்வோம்  என  நாயகன்  கோரிக்கை  வைக்கிறான். அதற்கு  நாயகி  என்ன  பதில்  சொன்னாள்  என்பது  க்ளைமாக்ஸ்


 நாயகியாக வாமிகா  பிரமாதமாக  நடித்திருக்கிறார். சட்  சட்  என  மாறும்  முக  பாவனைகளில்  அவரது  க்ளைமாக்ஸ்  போர்சன்  ஃபெண்டாஸ்டிக்  ஆக்டிங்


 நாயகனாக புதுமுகம் பி பி  நடித்திருக்கிறார். வசனம்  பேசும்  முறை  அழகு , ஆனால்  இவரது முகம்  நம் மனதில்  பதிவதாக  இல்லை . அது  ஏனோ  தெரியவில்லை 


ஒளிப்பதிவு நீரவ் ஷா  கலக்கல்  ரகம் . ஒவ்வொரு  ஃபிரேமும்  கண்களில்  ஒத்திக்கொள்ளும்படி  இருக்கிறது 


இசை இளையராஜா.. பாடலும்  பிஜிஎம்மும்  கலக்கல்  ரகம் 


 இயக்குநரின்  டச்  படம்  முழுக்க  தெரிகிற்து  இரண்டே  கேரக்டர்களை  வைத்து  இவ்வளவு  சுவராஸ்யமாக  ஒரு  படம்  தர  முடியுமா? என  வியக்க  வைக்கிறார்



சபாஷ்  டைரக்டர் 


1  சிகரெட்  பாக்சில்  கேன்சர்  குச்சி  என்ற  வாசகம்  இருப்பது 


2  பட்டுக்கோட்டை பிரபாகர்  தா  , மறுபடி  தா  என்னும்  இரு  நாவல்களில்  கதைக்கான  வர்ணனை  இல்லாமல்  வெறும் உரையாடல்களை  மட்டுமே  வைத்து  எழுதி  இருப்பார். அது  செம  ஹிட்  அடித்தது . அதே  பாணியில்  நாயகன் - நாயகி  இருவரது  கான்வர்சேஷன்  மட்டுமே  வைத்து  திரைக்கதையை நகர்த்திய  விதம் 


ரசித்த  வசனங்கள் 


1  எதுக்காக  பசங்க  பொண்ணுங்களைக்கவர  எதுனா  செஞ்சுட்டே  இருக்காங்க ?

 எல்லாம்  மயில்  டெக்னிக் தான். தன்  பெண்  துணையைக்கவர  ஆண்  மயில்  தோகை  விரித்து  அழகு  காட்டுதே  அது  மாதிரி  எதுனா  செஞ்சு  தன்னை  வெளிக்காட்டிக்கறாங்க . இல்லைன்னா  கடைசி  வரை  முரட்டு சிங்கிள்சாவெ  இருக்க  வேண்டியதுதான் 


2    இவ்ளோ   பேசறியே? எனக்காக  நீ  இதுவரை  என்ன  பண்ணி  இருக்கே?


 உன்னைத்தவிர  வேற  யாரையும்  ( காதல் ) பண்ணாம  இருக்கேன் 


3   நம்ம  முத்ல்  கூடல்  எப்படி  இருந்தது ?


 பூ  மழை  பொழிந்தது  போல . உனக்கு  எப்படி  இருந்தது ?


 ஒரு  நல்ல  உச்சகட்டம்  என்பது  தற்காலிகமான  ஷார்ட்  டைம்  மெமரி லாஸ்  என  எங்கேயோ  படிச்சிருக்கேன், அதை  அனுபவத்தில்  உணர்ந்தேன்


4   என்  கிட்டே  நீ  ரெண்டு  கேள்விகள்  கேள் , அதுக்கு  பதில்  தெரியலைன்னா  நான்  என்  வீட்டுக்குப்போகாம  உன்  கூட  இங்கேயே இருந்துடறேன்


 கை  இருக்கும், ஆனா  விரல்கள்  இருக்காது  , கழுத்து  இருக்கும்  ஆனா   தலை  இருக்காது  அது  என்ன ?


 சட்டை 


 கரெக்ட், நம்  நாட்டின்  பிரதமர்  பெயர்  என்ன?


-------


 என்ன? இது  கூடத்தெரியலையா?


 இல்லை , தெரியும், ,  ஆனா  சொல்ல  மாட்டேன், ஏன்னா  உன்  கூட இருக்க  முடிவு  பண்ணிட்டேன் 


5  நான்  குண்டானா   என்னை விட்டுப்போய்டுவியா?


 நீ  ஆல்ரெடி  குண்டாதானே  இருக்கே?  



6   இப்போ  பெண்  குரலில்  பாடுனது யாரு ?


 நான் தான்


 பெண்  குரலில் பாடுனா  உன்  குரல்    சுருங்கிடும்’

 குரல்  மட்டும்  தானே?


7  இந்த   உலகத்துல  என்னைத்தவிர  எல்லாரும்  பெண்ணா  மாறீனாலும்  நான்  உன்னை  மட்டும்தான்  தேடி வருவேன்


8   யார்  நீ? என்னைப்பார்த்துட்டே  இருக்கே?


 அழகா  இருந்தே!

 அழகா  இருந்தா  பார்ப்பியா?


 ஆமா, நீயும் தான்  என்னைப்பார்த்துட்டே  இருந்தே!


 நீ  பொறுக்கி  மாதிரி  இருந்தே, அதான்  பார்த்தேன், எனக்கு  பொறுக்கிபையன்னா  பிடிக்கும் 


அப்றம்  ஏன்  வந்து  பேசல ?  

 ஒரு  பந்தா  தான்


9  நான்  ஒரு  ஆர்வக்கோளாறுன்னாவது  எனக்குத்தெரியும், ஆனா  உனக்கு  அது  கூடத்தெரியல 

‘ நம்ம  அப்பாவித்தனத்தை  தொலைக்காம  இருக்கும்  வரை தான்  நாம்  கலைஞர்கள் 


10   ஒரு  பொண்ணு  காதலில்  விழ  எவ்ளோ  டைம்  எடுக்கும்?


 அது  அவனோட  எண்ணங்களைப்பொறுத்து


11  நாம  ஏன்  பிரேக்கப்  பண்ணிக்கிட்டோம்னு  சொல்லு


 சொல்ல  மாட்டேன். குழந்தை  ஆசையாக்கேட்குதேனு  விஷத்தைக்கொடுக்க  முடியுமா?  இதுவும்   ஒரு  விஷம் தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1  நாயகி  படம்  முழுக்க  தம்  அல்லது  சரக்கு  அடிப்பது  மட்டும்  உறுத்துகிற்து/ மாடர்ன்  கேர்ள்  என்றால்   டீ டோட்டலர் ஆக  இருக்க  மாட்டார்களா? 


2   இவரது  முந்தைய  இரு  படங்களைப்போலவே  ஓப்பனிங்  சீன்   கூடல்  காட்சியாக  அமைத்தது , ப்டம்  முழுக்க  மெயின்  கேரக்டர்கள்  இரண்டும்   சரக்கு , தம்  அடிப்பது , கூடல்  பற்றியே  அதிகம்  பேசுவது 


3   வீட்டில்  நாயகன் , நாயகி  இருவர்  மட்டுமே  இருக்க  எதற்கு  இருவரும் போர்வையுடனே  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் ? லுங்கி , நைட்டி  என  கேசுவல்  ஆக  சுற்ற  விட்டிருக்கலாம்



அடல்ட்   கண்ட்டெண்ட்   வார்னிங்-  மொத்தமுள்ள  ஆறு  கதைகளில்  இதில்  மட்டும்  18+   காட்சி , வசனங்கள்  இருக்கின்றன 



சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்களுக்கு , யூத்களுக்கு  பிடிக்கும். ரேட்டிங்  3.75 / 5 

Tuesday, May 23, 2023

CSI SANATAN (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ ஆஹா , அமேசான் பிரைம்

 


 ஐஎம்டிபி ரேட்டிங் ல 9.6 /10   ரேட்டிங்  வாங்கி  இருந்தாலும்  இது  பாக்ஸ்  ஆஃபீசில்  ஃபிளாப்  படம் ,ஆந்திரா  ரசிக்ர்கள்  மாஸ்  மசாலா  படங்களை  ஓட  வைப்பதும், நல்ல  படங்களை  கண்டுக்காததும்  நமக்குத்தெரிந்ததே., அதனால்  நான்  எப்போதும்  கம்ர்சியல்  ஹிட்டா? என்பதை  வைத்து  படம்  பார்ப்பதில்லை . இது  பிரமாதம்  என  சொல்லக்கூடிய  அளவு  இல்லை  என்றாலும்  பார்க்கத்தக்க  படமே 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


அமைதிப்படை  அமாவாசை  மாதிரி  வில்லன்  தன்  ஜாதிக்காரரான  ஒரு  மினிஸ்டரை  அவரது  வீட்டுக்கே  போய்ப்பார்க்கிறான். ஒரு  மூட்டை  நிறைய  பணத்துடன்... பணம்  என்றால்  பிணமே  வாயைப்பிளக்கும்போது  அரசியல்வாதி  என்ன  செய்வார்? மக்களிடம்  சீட்டுப்பணம்  வசூலித்து  ஏமாற்றி  ப்ணம்  சம்பாதிக்கலாம்  என்பதே  வில்லனின்  திட்டம் 


அவனது  திட்டம் பிரமாதமாக  இருப்பதை  அறிந்த  மினிஸ்டர்  அவனை  தன்னுடன்  சேர்த்துக்கொண்டு  ஸ்லீப்பிங்  பார்ட்னராக  இருந்து  கொண்டு  ஒரு  ஃபைனான்ஸ்  கம்பெனி  எம் டி ஆக  வில்லனை  உருவாக்குகிறார்.அதுவரை   மினிஸ்டரின்  ஆசை  நாயகியாக  இருந்த  வில்லி  இப்போது  வில்லனின்  ஆசை  நாயகியாகவும் , ஃபைனான்ஸ்  கம்பெனியின்  ஒர்க்கிங்  பார்ட்னராகவும்  சேர்கிறார். 


10 வருடங்கள்  கழிகிறது. கம்பெனி  நல்லா  வ்ளர்கிறது , தமிழகம், ஆந்திரா , கர்நாடகா  என  கிளைகள்  தொடங்கப்பட்டு  செழித்து  வளர்கிறது.வில்லனுக்கு  வேறு  ஒரு  பெண்ணுடன்  திருமணம்  நடக்கிறது


 வில்லன்  பெண்கள்  விஷயத்தில்  கொஞ்சம்    வீக் . கம்பெனியில்  பணி  ஆற்றும்  பெண்களிடம்  எல்லை  மீறி  நெருங்க  நினைக்கிறான். இதனால் சில  பெண்கள்  அவனை  வெறுக்கிறார்கள் வில்லனின்  மனைவிக்கு  வில்லனைப்பற்றிய  பல  விபரங்கள்  அவர்கள்  திருமணம்  முடிந்து  ஐந்து  வருடங்களுக்குப்பின்  தெரிய  வருகிறது 


 வில்ல்னால்  பாதிக்கப்பட்டவர்கள்  பலர் , பணம்  கொடுத்து  ஏமாந்தவர்கள்  பலர் . இப்படிப்பட்ட  சூழ்நிலையில்  கம்பெனி  பார்ட்டி  ஒன்றி;ல்  கலந்து  கொண்ட  வில்லனை  யாரோ  துப்பாக்கியால்  சுட்டு  கொன்று  விடுகிறார்கள் 


இந்த  கேசை  துப்பு  துலக்க  நாயகன்  வருகிறான்.நாயகன்  வாழ்வில்  இரு  இழப்புகள்  1  அண்ணன்  தற்கொலை  செய்து  இறந்து  விட்டான்  2  காதலி  பிரேக்கப்  சொல்லி  பிரிந்து  விட்டாள் . எப்போப்பாரு  வேலை  வேலை  என  பணியில்  கன்செண்ட்ரேஷன்  ஆக  இருக்கிறாய்  என்னைக்கண்டு  கொள்ளவில்லை  என்பது  அவள்  குற்றச்சாட்டு 


வில்லனின்  கமெப்னியில்  நாயகியின்  ஒரு  ஸ்டாஃப். இப்போது  நாயகனின்  சந்தேக   வளையத்தில்   1  மினிஸ்ட்ர  2   வில்லி   3   வில்லனின்  மனைவி  4  நாயகி (  வில்லனால்  பாதிக்கப்பட்டவர் ) 5  மினிஸ்ட்ரின்  டிரைவர் 


இன்வெஸ்டிகேசன்  நடக்கிறது .   யார்  கொலையாளி  என  துப்பு  துலக்கும்போது  அதிர்ச்சிக்ரமாக  மினிஸ்டரின்  டிரைவர்  டெட்பாடி கம்பெனியில்  கிடைக்கிறது . இந்த  இரண்டு  கேஸ்களின்  நிலை  என்ன  ஆனது  என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  ஆதி   சாய் குமார்  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்  பல  இடங்களில்  சுமார்  ஆக்டிங்  என  நடித்திருக்கிறார். இந்த  க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  டைப்  படத்துக்கு  நாயகனின்  முன்னாள்  காதல் , பிரேக்கப்  இதெல்லாம்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  விஷயங்கள் 


வில்லன்  ஆக தாரக்  பொன்னப்பா  மிடுக்கான  நடிப்பு , ஓப்பனிங்  சீனில்  டிவி  க்கு  பேட்டி  கொடுக்கும்  கம்பீரம்  ஆக்ட்டும் , ஃபிளாஸ்பேக்  காட்சியில் மினிஸ்டர்  இடம்  பம்முவது  ஆகட்டும்  குள்ளநரித்தனமான  உடல்  மொழி  அருமை 


நாயகி  ஆக  மிஷா நாரங்  அதிக  வாய்பில்லை . டூயட் , சில  காட்சிகள்  மட்டும்,  வந்தவ்ரை  ஓக்கே  ரகம் 

\

 வில்லி  ஆக நந்தினி ராய் . குடி  போதையி  வில்லன்  தன்னை  திட்டியது  கண்டு  பொங்குவது  அருமை 


மினிஸ்டர்  ஆக  மதுசூதன்  ராவ்  ஆர்ப்பாட்டமான  நடிப்பு , இவர்  தான்  கொலையாளியாக  இருப்பார்  என  காட்சிகளை  நகர்த்தியவிதமும்  பிறகு  ட்விஸ்ட்  வைத்ததும்  சிறப்பு 

 2  மணி  நேரம்  10  நிமிடம்  ஓடும்  விதத்தில்  எடிட்டிங்  செய்திருக்கிறார்கள் . இதில்  தேவையற்ற  நாயகன்  நாயகி  காதல்  காட்சிகள் ,  ஓப்பனிங்  ஃபைட்  சீன் , கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  மினிஸ்டர்  மகளைக்காப்பாற்றும்  ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாவற்றையும்  கட்  பண்ணினால்  40  நிமிடங்கள்  மிச்சம்  ஆகும் . ஒன்றரை  மணி  நேரபடமாக  கிரிஸ்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கலாம் 


திரைக்கதை  அமைத்து  இயக்கி இருப்பவர்  சிவசங்கா  தேவ்.  விறுவிறுப்பாகக்காட்சிகள்  நகர்கின்றன. அமைதிப்படை  சாயல்  ,மட்டும்  ஃபிளாஸ்பேக்  காட்சியில்  வருவதை  தவிர்த்து  இருக்கலாம் 



சபாஷ்  டைரக்டர்

1  மந்திரி  மகள் கிட்நாப்  கேசில்  சிசிடி  வி  ஃபுட்டெஜ்  ஃபேக்  என  கண்டுபிடிக்கும்  காட்சி . மாலை  நான்கு  மணி  மதியம்  2  மணிக்கு  மனித  நிழல்  எப்படி தரையில்   விழும்,? கோணம்  மாறி  இருக்கு  என்பதை  அறிய வைக்கும்  காட்சி



  ரசித்த  வசனங்கள் 


1   மிடில்  கிளாஸ்  மக்களுக்கு  ஏமாறத்தான்  தெரியுமே  தவிர  ஏமாற்றத்தெரியாது 


2   இந்தியப்பொருலாதாரம்  முன்னேற  ஏழை , நடுத்தர  மக்களின்  பங்களிப்புதான்  முக்கியமானது 


3  உங்க  கம்பெனி  செயல்பாடுகள்  35%  மக்களுக்கு  அதிருப்தியை  ஏற்படுத்தி இருக்குனு  சொல்றாங்களே?


 பாசிட்டிவ்  சைடை  பாருங்க . 65%  மக்கள்  திருப்தி  அடைஞ்சிருக்காங்க 


4  சிபிஐ  அப்டின்னா  தெரியும் என் ஆர்  ஐ  அப்டினா  தெரியும், அதென்ன சிஎஸ் ஐ ?


 க்ரைம்  சீன்  இன்வெஸ்டிகேட்டர். 


5  அவரு  ஃபோனை  ட்ராக்  பண்ற்து  இல்லீகல்  சார்

  நீயே  ஒரு  இல்லீகல் , நீ  லீகல்  பற்றி  பேசறே? 

6  இந்த  உலகத்துல  க்ரைம்  ந்டக்க  நாலே  நாலு  காரணங்கள் தான்  1  பணம்  2  பெண்  3  பதவி , அதிகாரம்  4  பழிக்குப்பழி


7   கிரிமினல்  மனதில்  இருந்து  சீன்  ஆஃப்  க்ரைம்  பார்க்கும்போதுதான் கேசை  ஈசியா  சால்வ்  பண்ண  முடியும் 


  8    ஒரு  பொண்ணு  அவளோட்  அம்மா, அப்பா  வுக்கு  ச்மமா  அவளோட  வாழ்க்கைத்துணைக்கு  முக்கியத்துவம்  தருவா, ஆனா  அதே  முக்கியத்துவத்தை  அவனும் அவளுக்கு  தரனும், இல்லைன்னா  அவளுக்கு  சமாதானம்  ஆகாது 


9  பிராப்பர்ட்டி  இல்லாத  மக்கள்  நிறைய  பேர்  இருக்காங்க, ஆனா  பேராசை  இல்லாத  மக்கள்  யாருமே  இல்லை 


10  மக்களிடம்  இருந்து  நமக்கு  ப்ணம்  வரனும்னா  நாம  முதல்ல  மக்களுக்கு  ப்ணம்  தரனும், சின்ன  மீன்  பெரிய  மீன்  ஃபார்முலா


11  ஏழை  மக்களின்  பசியைபோக்கினாலே  நம்மை  தெய்வம்  மாதிரி  கொண்டாடுவாங்க , அவங்க  மொத்த  குடும்பத்தையும்  காப்பாத்துனா  நமக்குக்கோயிலே   கட்டுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் \


1  நாயகனோட  ஒர்க்  ஸ்மெக்ளர் / கிட்நாப்பர்  லொக்கேஷன்  கண்டுபிடிக்கறதோட  முடியுது . குற்றவாளியை  போலீஸ்  பார்த்துக்கும் . இவரு  அந்த  ஆள்  கூட  ஃபைட்  எல்லாம்  போட்டுட்டு  இருக்காரு 

2  நாயகன், வில்லன்  எல்லாரும்  மனுசங்கதான்/ எல்லாருக்கும்  மண்டை  ஓடு ஒண்ணுதான், ஆனா  நாயகன்  வில்லன்  மண்டைல  தன்  மண்டையால்  அடிக்கும்போது  வில்லனுக்கு  மட்டும்  ரத்தம்  வ்ருது 


3  கொலை செய்யப்பட்ட   ஃபைனான்ஸ்  கம்பெனி  ஓனரின்  பார்ட்னர்  த்ரும்  ஸ்டேட்மெண்ட்டில்  15  வருடங்களாக  நாங்கள்  பிஸ்னெஸ்  பார்ட்னர்ஸ்  என்கிறார். அவரது  மனைவி  எங்களுக்கு  மேரேஜ்  ஆகி  அஞ்சு  வ்ருசம்தான்  ஆகுது , ஆனா  பிஸ்னெஸ் ல  அவங்க  12  வருசமா  பார்ட்னர்  என்கிறார். க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்பு  இந்த  கம்பெனி  ஆரம்பிச்சு  10  வருசம்  ஆச்சு  என்  ரிப்போர்ட்  பண்றார்  போலீஸ்  ஆஃபீச்ர்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  ர்சிகர்கள்  பார்க்கலாம்,  படத்தில்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லாமல்  வரும்  2  ஃபைட்  1  டூயட்  சகிச்சுக்கனும்  ரேட்டிங்  2. 5 / 5 

Monday, May 22, 2023

JAWANUM MULLAPPOOVUM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர்) @அமேசான் பிரைம்

     


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  டீச்சர். இவரது  கணவர்  15  வருடங்கள்  மிலிட்ரியில் பணியாற்றி  இப்போது  ஊருக்கு  வந்து  செக்யூரிட்டி  வேலை  பார்ப்பவர்., இவர்களுக்கு 13  வயதில் ஒரு  மகள்  உண்டு .கணவருக்கு  முல்லைப்பூ  வாசம்  அலர்ஜி . திருமணத்தன்று  கூட  நாயகி கூந்தலில்  சூடி  இருந்த  முல்லைப்பூவால்  அலர்ஜி  ஏற்பட்டு  தொடர் தும்மல் போட்டவர் ,ஆனால்  நாயகிக்கு  முல்லைப்பூ  என்றால்  மிகவும்  இஷ்டம் . இது  குறித்து  இருவருக்கும்  அடிக்கடி  சண்டை  வரும் 


நாயகி  டீச்சராக  இருப்பதால் ஸ்பெஷல்  கிளாஸ் , கல்ச்சுரல்  புரோகிராம்  உட்பட  பல  விஷயங்களுக்காக  பலரும்  அடிக்கடி  நாயகிக்கு  ஃபோன்  செய்வார்கள் , வாட்சப்பில்  மெசேஜ்  அனுப்புவார்கள் . எப்போப்பாரு  ஃபோனும்  கையுமா  இருக்கிறாளே  என்று  கணவருக்கு  மனைவி  மீது  சந்தேகம்,  மனைவியின்  செல் ஃபோனை  எடுத்து  அடிக்கடி  செக்  செய்பவர்.


ஒரு  நாள் மகள்  பள்ளி  விழாவுக்காக  திருவனந்தபுரம்  செல்ல வேண்டிய  சூழல் , கணவனும்  , மகளும் ஊரில்  இல்லை ,வீட்டில்  நாயகி  தனியாக  இருக்கிறார்.. அப்போது  நாயகி  சிஸ்டம்ல  ஒர்க்  செய்து  கொண்டு  இருக்கும்போது தவறுதலாக  கை பட்டு  போர்ன்  வெப்சைட்க்கு  போய்  விடுகிறது. அதை  சரி  செய்வதற்குள்  சிஸ்டத்தில்  போலீஸ்  சைரனுடன்  மெசேஜ்  வருகிறது . சைபர்  கிரைம்  போலீசால்  உங்கள்  கம்ப்யூட்டர்  லாக் செய்யப்பட்டு  விட்டது . இதை  ரிலீஸ்  செய்ய  குறிப்பிட்ட  தொகையை  இந்த்  நெம்பருக்கு  இண்ட்டர்நேஷனல்  டெபிட்  கார்டு  மூலம்  ட்ரான்ஸ்ஃபர்  செய்ய  வேண்டும் 


நாயகிக்கு  என்ன  செய்வதென்றே தெரியவில்லை , பள்ளியில்  சைபர்  கிரைம் அவார்னெஸ்   புரோகிராம்  நடத்தும்  ஆளைத்தொடர்பு  கொண்டு  விபரத்தை  சொல்கிறார். கடும் மழை  பெய்து  இருக்கும்  சூழ்நிலையில்  வில்லன்  அங்கே  வருகிறான். சூழ்நிலையை  தனக்கு  சாதகமாக்க  நினைக்கிறான். அதே  ச்மயம்  கணவர்  வீட்டுக்குத்த்திரும்புகிறார். இதற்குப்பின்  என்ன  நடந்தது  என்பதுதான் திரைக்கதை 


நாயகி  ஜெயஸ்ரீ  டீச்சராக   சிவதா  நாயர்  மங்களகரமான  முகம், டீச்சருக்கான  மிடுக்கு , கண்ணியமான    உடை  என  கச்சிதமாக  நடித்திருக்கிறார்/ வில்லனிடம்  மாட்டிக்கொண்டு  பரிதவிக்கையில்  பயத்தை  நம்மில்  கடத்துகிறார்


சந்தேக  புத்திக்கணவராக  வருபவர்  நன்றாக  நம்மிடம் எரிச்சலை  சம்பாதிக்கிறார். வில்லனாக   வரும்  சைபர்  கிரைம் கோச்சிங்க்  கிளாஸ்  டீச்சர்  சரியான  வில்லத்தனம்  காட்டுகிறார்


மாத்தை  சுனில்  இசையில் இரண்டு  பாடல்கள்  ஹிட்  ஆகி  உள்ளன, பிஜிஎம் மில்  இன்னும்  மிரட்டி  இருக்கலாம். சனல்  அன்ருதன்  கச்சிதமாக  2  மணி  நேரம்  13  நிமிடங்கள்  ஓடுமாறு  ட்ரிம்  பண்ணி  எடிட்டிங்  செய்திருக்கிறார். இந்தகதைக்கு  ஒன்றரை  மணி  நேரமே  அதிகம், ஷியால்  சதீஷின்  ஒளிப்பதிவு  கச்சிதம் 


பெண்களுக்கான  சமூக  விழிப்புணர்வுக்கதையை  எழுதி  திரைக்கதை  அமைத்திருப்பவர்   சுரேஷ்  கிருஷ்ணன். இயக்கம்  ரகுமேனன். அமேசான்  பிரைம் ஓடி டி  யில்  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1  அரை  மணி  நேரக்குறும்படமாக  எடுக்க  மட்டுமே  கண்ட்டெண்ட்  உள்ள  கதையை  ரெண்டே  கால்  மணி  நேரம்  இழுத்தது 


2  டைட்டில் குத்து  மதிப்பாக  வைத்து  விட்டு  அதை  ரிலேட்  பண்ணிக்க  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  காட்சிகள்  வைத்தது


3  அடல்ட்  கண்டெண்ட்  உள்ள  கதையை  யூ படமாக  கண்ணியமாக  எடுத்தது 


ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  பெண்ணுக்கு  எப்போது  தோல்வி  ஏற்படுகிறது  தெரியுமா?  அவளது  துணை  அவளைப்புரிந்து  கொள்ளாமல்  சந்தேகப்படும்போது , அவள்  என்ன  செய்தாலும்  அதில்  குற்றம்  கண்டு பிடிக்கற  ஆள்  துணையா  வந்தால் ... 


2    நைட்  டைமில்  இவ்ளோ  சத்தமா  மிக்சி  அரைச்சா  பக்கத்து  வீட்டில் எப்படி  நாங்க  தூங்குவ்து ?


 சரி சரி   சைலன்சர்  வெச்ச  மிக்சி  வாங்கிக்கறோம்


3  நோ  என்பதற்கு  என்ன  அர்த்தம்  தெரியுமா?  நெக்ஸ்ட்  ஆப்புர்ச்சுனிட்டி 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சிஸ்டம்  அல்லது  ஃபோன்  ஹேங்  ஆனால் அதை  ஆஃப்    பண்ணி  ஆன்  பண்ணினா  போதும்  என்ற  நாலெட்ஜ்  சின்னபையனுக்குக்கூடத்தெரியும். டீச்சருக்கு  ஏன்  தெரியலை ? 


2   சக  டீச்சர்களில்  யாருக்காவது  ஃபோன் பண்ணி  ஐடியா  கேட்டிருக்கலாம், ஏன்  செய்யவில்லை ? 


3   வில்லன்  தன்  செல்  ஃபோனை  சார்ஜ்  போடறேன்  என  சொல்லி காமிராவை  ஆன்  பண்ணி  வைத்துட்டுப்போன  பின்  அதே  ரூமில்  நாயகி  டிரஸ்  மாற்றுவது  நம்ப  முடியலை . பெண்கள்  அவ்வளவு  உஷார்  இல்லாமயா  இருப்பாங்க ? 


4 வீட்டில்  வில்லனைத்தவிர  யாரும்  இல்லாத  சூழலில்  நாயகி  மழையில்  நனைந்ததால்  உடை  மாற்ற  வேண்டிய  சூழலில்  சுடிதார்  தானே  இட  வேண்டும் ? ஏன்  சேலை ?  (  திரும்பி  வரும்  கணவன்  கரெக்டா  அதை  சொல்லிக்காட்றான், இந்நேரத்துல  எதுக்கு  சேலை ?}


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நல்ல  விழிப்புணர்வுக்கதைதான்  ஆனா   ஜவ்வா  இழுத்துட்டாங்க  முடியல  ரேட்டிங் 2 / 5 


Jawanum Mullappoovum
Jawanum Mullapoovum.jpg
Theatrical release poster
Directed byRaghu Menon
Written bySuresh Krishnan
Screenplay bySuresh Krishnan
Produced by
  • Sameer Sait
  • Vinod Unnithan
Starring
CinematographyShyal Satheesh
Edited bySanal Anirudhan
Music by
Production
company
2 Creative Minds
Release date
  • 31 March 2023[2]
Running time
118 mts
CountryIndia
LanguageMalayalam

Friday, May 19, 2023

வெள்ளிக்கிழமை ராமசாமி , வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி -இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் மே 17 , மே 18 , மே 19

 1   தெய்வ  மச்சான்   @  ஜீ தமிழ்- மே  17 

2  செண்ட்டிமீட்டர் @ ஜீ தமிழ்-மே17 

3  கட் ஹல்  (  ஹிந்தி )  @ நெட் ஃபிளிக்ஸ்- மே17 

4  விரூபாக்‌ஷா @ நெட் ஃபிளிக்ஸ்- மே18

5 மாடர்ன் லவ் சென்னை @ அமேசான் பிரைம்  - மே18   

6   SISU (  ஆங்கிலம் ) -@ அமேசான் பிரைம்  - மே18  

7  மாருதி நகர்  போலீஸ்  ஸ்டேஷன்  @ ஆஹா தமிழ்  மே18 

8  இன்ஸ்பெக்டர்  அவினாஷ்  - ஜியோ சினிமாஸ்   மே18


10  DEAD PIXELS  ( ENGLISH) -  டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார்  மே18

11 QUANTUMANIA (( ENGLISH) -  டிஸ்னி பிளஸ்  ஹாட் ஸ்டார்  மே 18 

12  TAT (REGION OF REVENGE) - ஜீ  சினிமாஸ்

13   ASTERIX AND ORELIX (  the mddle kingdom) -ஆங்கிலம் - நெட் ஃபிளிக்ஸ்


==============


தியேட்டர்  ரிலீஸ்


மே 19


1  பிச்சைக்காரன் 2

2  யாதும்  ஊரே  யாவரும்  கேளிர் 

3  கருங்காப்பியம் 

4 X FAST 

விஜய் ஆண்ட்டனியின் பிச்சைக்காரன் பாகம் 2 படத்தின் கதை இதுதான்

 


2015 ஆம்  ஆண்டு  ஆர் பாண்டியராஜன்  நடிப்பில்  அன்பரசன்  இயக்கத்தில்  வெளியான  ஆய்வுக்கூடம்  என்னும்  படத்தின்  கதையை  பட்டி  டிங்க்ரிங்  பண்ணித்தான் பிச்சைக்காரன் பாகம் 2 படத்தின்  கதை  உருவாக்கப்பட்டது  என  படத்தயாரிப்பாளர்  ரூ 10 லட்சம்  நட்ட  ஈடு  கேட்டு கோர்ட்டில்  கேஸ்  போட்டிருக்கிறார், ஆனால் விஜய்  ஆண்ட்டனி  தரப்பு  அதை  மறுத்திருக்கிறது. நான்  ஆய்வுக்கூடம்  படம் பற்றியே  கேள்விப்பட்டதில்லை. பார்த்ததும்  இல்லை  என  விளக்கி இருக்கிறார். பட  வெளியீட்டுக்குப்பின்  வசூல்  நிலவரத்தைக்கோர்ட்டில்  தாக்கல்  செய்ய  வேண்டும் என்ற  நிபந்தனையுடன்  பட  வெளியீட்டுக்கு  கோர்ட்  அனுமதித்து  உள்ள்து


இப்போது  இரு  படங்களின்  கதை  என்ன? எனப்பார்ப்போம்


 முதலில்  ஆய்வுக்கூடம்  படக்கதை . நாயகன்  ஒரு  விஞ்ஞானி. மூளை  மாற்று   அறுவை   சிகிச்சையில்  ஆராய்ச்சியில்  இருக்கிறார், ஆனால்  அரசாங்கம்  மனித  மூளை  மாற்று  அறுவை   சிகிச்சைக்கு  அனுமதி  மறுத்து  விடுகிறது. பெரிய  பெரிய  விஞ்ஞானிகள்  இறக்கும்போது  இந்த  சமூகத்துக்கு  பெரிய  இழப்பு  ஏற்படுகிறது . அவர்களது  அறிவு  வீணாகிறது . மனநலம்  பாதிக்கப்பட்ட   ஒருவருக்கு  இறந்த  விஞ்ஞானியின் மூளையை  பொருத்தினால்  விஞ்ஞானியின்  அறிவு  மனநலன்  பாதிக்கப்பட்டவருக்கு  வந்து  விடும் . இதுதான்  நாயகனின்  எண்ணம். அரசாங்கம்  அனுமதி  அளிக்காததால்  திருட்டுத்தனமாக  இந்த  ஆராய்ச்சியை செய்ய  முடிவெடுக்கிறார்  நாயகன்

 ஒரு  நாள்  பாக்சிங்  வீரர்  ஒருவர்  நாயகனின்  காரை  இடித்து  விடுகிறார். மயங்கி  விழுந்த  பாக்சிங்  வீரரை  நாயகன்  தன் ஆய்வுக்கூடத்துக்கு  எடுத்து  வருகிறான், மனநலன்  பாதிக்கப்பட்ட  ஒருவரை  தன்  உதவியாள்ர்  மூலம் ஆய்வுக்கூடத்துக்கு  அழைத்து  வருகிறான்  நாயகன். இப்போது  பாக்சிங்  வீரர் , மனநலன்  பாதிக்கப்பட்டவர்  இருவரது  மூளையையும்  மாற்றி  ஆபரேசன்  செய்து  விடுகிறார். இப்போது  மனநலன்  பாதிக்கப்பட்டவருக்கு   பாக்சிங்   வீரரின்  குணநலனும்  பாக்சிங்  வீரருக்கு மன  நலன்  பாதிக்கப்பட்டவரின்  குணநலனும்  வருகிறது . இதற்குப்பின்  ஏற்படும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  மீதி  கதை 


பிச்சைக்காரன்  பாகம்  1  கதையின்  சீக்வல்  கதையாக  பாகம்  2  வெளி  வருகிறது / கோடீஸ்வரனான  நாயகன்  உருவ  அமைப்பில்  இன்னொரு  ஆள்  இருப்பதை  வில்லன்  க்ரூம்  கண்டறிகிறது .ஏகப்பட்ட  சொத்துக்களைக்கொண்ட  நாயகனின்  செல்வங்களைத்தன்  வசப்படுத்த  கோடீஸ்வரனைக்கொலை  செய்து  அவனின்  மூளையை சாமான்யனின்  தலையில்  மூளையை  வைத்து  ஆபரேசன்  செய்து  விடுகிறார்கள் . அவர்கள்  திட்டம்  நிறைவேறியதா? அல்லது  கோடீஸ்வரனின்  மூளை  கிடைக்கப்பெற்ற  சாமான்யன்  கோடீஸ்வரனின்  குணநலன்களையே  அடைந்து  வில்லன்  க்ரூப்பை  எபபடி  முறியடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை . யோகி  பாபு  பிச்சைக்காரனாக  வரும்  காமெடி  டிராக்  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்க் ஆக  சேர்க்கபப்ட்டுள்ளது 


பிச்சைக்காரன் 2 = 35% எம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ( 1965) + + 35 % ரஜினி யின் ராஜாதிராஜா (1989) - 30% ஆர் பாண்டியராஜன் -ன் ஆய்வுக்கூடம் ( 2015) டி வி சீரியல் பார்க்கும் பெண்களுக்குப்பிடிக்கும். எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 39 , ரேட்டிங் 2.25 / 5 யோகிபாபுவின் காமெடி டிராக் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை , முதல் பாகத்தில் அம்மா -மகன் செண்ட்டிமெண்ட் சீன்ஸ் வைத்தவர்கள் இதில் அண்ணன் - தங்கை செண்ட்டிமெண்ட் சீன்ஸ் . தியேட்டருக்கு கர்சீஃப் உடன் செல்லவும்





திருவின் குரல் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


த்ரில்லர் படங்களில்  தொடர்ந்து  நடிக்கும்  அருள்  நிதிக்கு  இது  ஒரு  சறுக்கல்  படம் . ஏப்ரல் 14  2023  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்சில் 12/5/2023  முதல்  காணக்கிடைக்கிறது , அறிமுக  இயக்குநர்  ஹரீஸ்   பிரபுவின்  முதல் படம்  இது . 42  நாட்களில்  எடுக்கப்பட்ட  லோ  பட்ஜெட்  படம்  இது . முழுக்க  முழுக்க  ஹாஸ்பிடலில்  படமாக்கப்பட்ட  முதல்  தமிழ்ப்படம்  ஸ்ரீதரின்  நெஞ்சில்  ஓர்  ஆலயம். அதைத்தொடர்ந்து  இதுதான் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனோட  அப்பா  ஒரு  விபத்தில்  சிக்கி  தலைல  அடிபட்டு  ஜிஹெச் ல  அட்மிட்  ஆகறார். அந்த  ஜி ஹெச் ல  பணி புரியும் கடை நிலை  ஊழிய்ர்கள்  நான்கு  பேரில்  ஒருவர்  கூட  நாயகனுக்கு  மோதல்  உண்டாகிறது . அந்த  நான்கு பேரும்  சமூக  விரோதிகள் , வில்லன்கள் , கொலை , கொள்ளை  போன்ற  எக்ஸ்ட்ரா  கரிகுலர்  ஆக்ட்டிவிட்டீசில்  ஈடுபடுபவர்கள் , நாயகன்  மேல்  காண்டாகி  நாயகனைப்பழி  வாங்க  நாயகனின்  அப்பாவுக்கு  விஷ  ஊசி  போட்டு  விடுகிறார்கள் . இது  போக  இவர்கள்  நான்கு  பேரும் செய்த  வேறு  ஒரு  கொலையை நாயகனின்  அக்கா  மகள்  பார்த்து  விடுகிறாள் . அவளை போட்டுத்தள்ள  வில்லன்கள்  திட்டம்  தீட்டுகிறார்கள் , இவர்களை  நாயகன்  எப்படி  முறியடித்தான்  என்பதே  கதை 


படம் போட்டு  முதல்  30  நிமிடங்கள்  கேரக்டர்கள்  அறிமுகம். ஓப்பனிங்  சாங் ,  ஒப்பனிங்  ஃபைட்  என  வேகமாக  நேரத்தை  இழுத்து  விடுகிறது . மீதி  ஒன்ற்ரை  மணி  நேரம்  தான்  படம் . ஏகப்பட்ட  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருப்பதால்  கதையுடன் ஒன்ற  முடியவில்லை , ஆனா  படம்  ஸ்பீடு 


நாயகனாக  அருள்  நிதி , வாய்  பேச முடியாத  செவி  கேளாத  மாற்றுத்திறனாளி  , ஆனால்  கோபக்காரன் (  அப்போதானே  நிறைய  ஃபைட்  சீன்  வைக்க  முடியும் ?


படத்தின்  கதைக்கும், நாயகனின்  கேரக்டர்  டிசைன்க்கும்  சம்பந்தம்  இல்லை .  பூ  விழி  வாசலிலே  படத்தில்  அந்த  பேபி  சுஜிதாவுக்கு  வாய்  பேச  முடியாது  என்றால்  திரைக்கதைக்கு  அந்த  விஷயம்  உதவியது ., இதில்  அப்படி  இல்லை


நாயகியாக  ஆத்மிகா  அதிக  வேலை இல்லை , ஒரு  டூயட்  உண்டு . அப்பாவாக  பாரதிராஜா  படம்  முழுக்க  படுத்த  படுக்கையாக  இருக்கிறார், ஆனால்  அவர்  நடிப்பு  அருமை 


வில்லன் அஷ்ரப்  நடிப்பும்  உடல்  மொழியும்  அபாரம் .  பொதுவாக  வில்லன்  என்றால்  கடோத்கஜன்  மாதிரி  இருக்க  வேண்டியதில்லை , ஒல்லி  கில்லி  ஆகவும்  இருக்கலாம்  என்பதை  நிரூபிக்கும்  தோற்றம் . இவர்  வரும்போது  போடும்  பிஜிஎம்  கூட  மிரட்டல்  ரகம்  


இசை  அமைப்பாளர்  சாம்  சி எஸ்  இன்  பின்னணி  இசை  மிரட்டல்  ரகம்,  வில்லன்கள்  வரும்போதெல்லாம்  ஒரு  பிஜிஎம்  போட்டு  அசத்துகிறார்

 2பாடல்களில்  ஒன்று  தேறுகிறது 


 ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  வழக்கமான  மசாலாப்படங்கள்  போல 


சபாஷ்  டைரக்டர்


1   ஒரே  ஒரு  ஹாஸ்பிடல்  செட்டிங்  போட்டு  மொத்தப்படத்தையும்    முடித்தது 


2 டயலாக்  ரைட்டருக்கு  வேலை  இருக்கக்கூடாது  என  நாயகன்  கேரக்டர்  டிசைனை  வாய்  பேச  முடியாதவராக  அமைத்தது 


3    கார்த்தி  நடித்த  நான்  மகான் அல்ல  கதை  போல  ரெடி  செய்தது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  இரவு  நேரம்  லேடீஸ் உடன்  காரில்  வருபவ்ர்கள்  யாரோ பைக்  ரிப்பேர்  என்று சொன்னதற்காக  இறங்கி  அருகே  போவார்களா? பகல்லயே  பசுமாட்டுக்கு  ஹெல்ப்  பண்ணாடவங்களா ராத்திரில  எருமை மாட்டுக்கு  ஹெல்ப் பண்ணபோறாங்க ? 

2  நாயகன்  நைட்  டைம்ல  நாயகியை  தனியா  ஜி ஹெச்க்கு   ஆட்டோல  அனுப்பறாரே?ஜிஹெச் ல  டிராப்  பண்ணிட்டு  அப்றமா  சைட்க்கு  போலாமே? ஃபோன்  செஞ்ச  ஆள் இங்கே   வந்தா  பரவால்லைனுதான்  சொல்றான், உடனே  வ்ந்தாகனும்னு  சொல்லலையே 


3  காரில்  வரும்  கறுப்புப்பணம்  பற்றிய  தகவல்முன்னுக்குப்பின்  முரணாக  உள்ளது . 3  கோடி ரூபாய்  என  இரு  இடங்களில்  ஒரு  கோடி  ரூபாய்  என  2   இடங்களில்  மாற்றிமாற்றி  சொல்கிறார்கள் 


4   ஒரு  தவறான  ஊசியை  பேஷண்ட்டுக்குப்போட  டாக்டர்  மனைவி  வீட்டுக்குப்போய் மிரட்டி  படிய  வைக்க  முயற்சிக்கறது  காதைச்சுற்றி மூக்கைத்தொடும்  வேலை ,  1000  ரூபா  கொடுத்து  நர்ஸ்  மூலமா  போடலாம், நான்கு  வில்லன்களில்  ஒருத்தன்  கம்பவுண்டர் ம் அவனே  கூட  ஊசி போடலாம் 


5   போலீசுக்கு  ஃபோன் செய்து  கர்ப்பிணிப்பெண்  எனக்கு  ஒரு ஆள்  மேல  டவுட்டா  இருக்கு  என  சில  தகவல்  சொல்ல  முயலும்போது  டிராஃபிக்கில்  இருக்கும்  போலீஸ்  ஆஃபீசர்  நீ  பேசறது எதுவும்  கேட்கலை  என்கிறார். திருப்பித்திருப்பி  சொன்னதையே  சொல்கிறார்  அந்தப்பெண்  , வாட்ச்சபில்  வாய்ஸ்  மெசேஜ்  அனுப்பி  இருக்கலாமே? 


6  படம்  முழுக்க  வில்லன்கள்  மேல்  நாயகன்  கரும்பால்  அடிப்பது  , பிளாஸ்டிக்  சேரால்  அடிப்பது  என்பதை  வாடிக்கையாக  வைத்திருக்கிறார். இரண்டிலும்  அடி  பிடிக்காது  என்பதுதான்  உண்மை . ஸ்டீல்  சேர்  அல்லது  மர  நாற்காலி  எனில்  அடி  பிடிக்கும். பிளாஸ்டிக்  சேர்  உடைஞ்சு  தான்  போகும், அதே  போல ஆல  மர  விழுது  கிளை  எனில்  அடி பிடிக்கும் ,  ஆலைக்கு  போகும்  கரும்பு  எல்லாம்  சின்னப்பசங்களை  அடிக்கக்கூட  உதவாது 

7 க்ளைமாக்ஸ் ல  ஒரு  வில்லன்  நாயகனை  கட்டையால  தாக்கி  மயக்கம்  அடைய  வெச்சுடறான். அதே  கட்டையால  நாயகன்  தலைல  3  அடி  போட்டா  வேலை  முடிஞ்சிருக்கும், அவன்  கிறுக்கன்  மாதிரி  அந்த  கட்டையைத்தூக்கி  எறிஞ்சுட்டு  பொருளை  எடுங்கடானு  மத்த  ஆள்  கிட்டே  சொல்ல  ஸ்லோமோஷன்ல  அவனுங்க  போய்  கத்தி  அரிவாள்  எல்லாம்  எடுத்துட்டு  வ்ர்றதுக்குள்ளே  நாயகன்  விழிச்சுடறான், வடை  போச்சா? 


8 வில்லன்கள்  செய்யும்  கொலையை  நாயகனின்  அக்கா  மகள்  பார்த்து  விடுகிறாள், ஆனால்  கடைசி  வரை  யாரிடமும்  அதை  அவர்  சொல்லாதது  என் ?>


9  கொலையைக்கண்ணால்  கண்ட  சாட்சியான  அக்கா  மகளை  வில்லன்கள்  விட்டு  வைப்பது  ஏன் ?

10  லிஃப்ட்  ஆபரேட்டரான  வில்லன்  இப்போ  போலீஸ்  வரும்  பாரு , நம்ம  இடத்துக்கு  அவன்  வரப்போறான்  பாரு 


11  நாயகனின்  அப்பாவுக்கு   இரங்கும்  க்ளுக்கோஸ்  பாட்டிலில் தான்  விஷ  ஊசி  போட  திட்டம், அதை  கம்பவுண்டரே  ஈசியா  போடலாமே? எதுக்கு  டாக்டரோட  ஒயிஃப்  வீட்டுக்குப்போய்  மிரட்டி  ஊசி  போட  வைக்கனும் ? இது  ரிஸ்க். திட்டம்  வெளி  ஆட்கள்  இருவருக்கு  தெரிந்து விடும் 


12   லிஃப்ட்டுக்குள்ளே  சிசிடிவி  கேமரா  இருக்குமே? வில்லன்கள்  எப்படி  தைரியமா  டெட் பாடி  டிஸ்போஸ்  பண்ண  லிஃப்டில்  எடுத்துட்டு  வர்றாங்க ?லிஃப்டில்  கொலையே  பண்றாங்க   


13  வில்லன்கள்  நாலு பேரும்  பகல்  ட்யூட்டியா  ஜிஹெச்ல  ஒர்க்  பண்றாங்க, நைட்  ட்யூட்டியா கொலை , கொள்ளை  போன்ற  குற்றச்செயல்களிலீடுபடறாங்க . எப்போத்தான்  தூங்குவாங்க ?


14  க்ளைமாக்சில்  வில்லன்கள்  நான்கு  பேரின்  மறைவிடம் நாயகனுக்கு  எப்படி  தெரிந்தது ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  18+ காட்சிகள்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மூளையைக்கழட்டி  ஓரமாக  வைத்து  விட்டு  கார்னர்  சீட்டில்  படம்  பார்த்தால்  பார்க்கலாம்,  போர்  அடிக்காமல்  போகிறது   ரேட்டிங் 2/ 5 


Thiruvin Kural
Thiruvin Kural.jpg
Theatrical release poster
Directed byHarish Prabhu
Written byHarish Prabhu
Produced bySubaskaran
Starring
CinematographySinto Poduthas
Edited byGanesh Siva
Music bySam C. S.
Production
company
Distributed byLyca Productions
Release date
  • 14 April 2023
Running time
119 minutes
CountryIndia
LanguageTamil

Thursday, May 18, 2023

THE MOTHER (2023) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  கில்லர் .அவருக்கு  இரு  மோசமான  நபர்களுடன்  தொடர்பு  இருக்கிறது. இப்போது  அவர்  நிறை  மாத  கர்ப்பிணியாக  இருக்கிறார். எஃப் பி  ஐ  யால்  விசாரிக்கப்படுகிறார். விசாரணை  நட்ந்து  கொண்டிருக்கும்போதே  நாயகி  தனக்கு  ஆபத்து  வரும்  என  கணிக்கிறார். தன்னைப்பற்றி  எந்த  உண்மையையும்  நாயகி  சொல்லி  விடக்கூடாது  என  வில்லன்  அவளைக்கொல்ல  வருகிறான்


நாயகி  தப்பி  பாதுகாப்பாக  தன்  குழந்தையை  பெற்றெடுக்கிறாள் தன்னுடன்  இருந்தால்  குழந்தைக்கு  ஆபத்து  என்பதை  உண்ர்ந்து  ஒரு  வள்ர்ப்புப்பெற்றோரிடம்  ஒப்படைக்க  முடிவு  செய்கிறார். அதன்படி நாயகிக்கு  வருடா  வருடம்  குழந்தை  பற்றிய  அப்டேட்  தந்து  விட  வேண்டும். குழந்தைக்கு  தன்  அம்மா  யார்  என்று  தெரியக்கூடாது, ஏதாவது  ஆபத்து  நேர்ந்தால்  தனக்கு  தகவல்  தெரிவிக்க  வேண்டும்.   இந்த  நிபந்தனைகளுடன்  குழ்ந்தை  ஒப்படைக்கப்படுகிறது

12  வருடங்கள்  எந்த  பிரச்சனைகளும்  இல்லாமல்  கடக்கிறது . 12வது  பிறந்த  நாள்  அன்று  நாயகியின்  மகள்  பார்க்கில்  விளையாடிக்கொண்டு இருக்கும்பொது  ஒரு  கார்  துப்பாக்கி  ஆட்களுடன்  வந்து  மகளை  கடத்த  முனைகிறது . நாயகி  அப்போதுதான்   மகளைப்பார்க்க  வந்திருக்கிறார்


 மக்ளை  அவர்களிடமிருந்து  காப்பாற்றி  தன்னுடன்  அழைத்து  செல்கிறாள். இதற்குப்பின்  வில்லன்  துரத்த  நாயகி  ஓட  என  ஒரே  ஓட்டம்  தான்  படம்  முழுக்க . 


மகளுக்கு  நாயகி  தான்  தன்  அம்மா  என்று  தெரிந்து  விடுகிறது ஆனால்  பாதுகாப்புக்காரணங்களுக்காக  நாயகி  தான்  தான்  அவள்  அம்மா  என்பதை  ஒத்துக்கொள்ளவில்லை 


இதற்குப்பின்  நிகழும்  பாசப்போராட்டங்கள் ,  ஆக்சன்  செசிங்குகள் தான்  மீதி  படம் 


 நாயகி ஆக  ஜெனிஃபர்  லோபஸ்   பிரமாதமாக  நடித்திருக்கிறார்.மகளை  முதன்  முதலாக  பார்க்கும்போது  ஏற்படும்  ஆனந்தம்  அழுகை  எல்லாவற்றையும்  செண்டிமெண்ட்  டச்சுடன்  வெளிப்படுத்தி  இருக்கிறார். ஆக்சன்  சேசிங்  காட்சிகளில்  ஆண்  பிள்ளை  போல  தூள்  கிளப்புகிறார்


மகளாக  வரும்  லூசி ஃபேஸ்  குழந்தைத்தனமான  பால்  வடியும்  முகத்துடன்  நம்  அனுதாபத்தை  அள்ளிக்கொள்கிறார். டீன் ஏஜ்  பெண்ணுக்கே  உரித்த  கோபம் . சொல் பேச்சுக்கேளாமை எல்லாவற்றையும்  கச்சிதமாக  வெளிப்படுத்துகிறார்


எஃப் பி ஐ  ஏஜெண்ட்  ஆக  ஓமரி  ஹார்டுவிக்  நாயகியுடன்  குழந்தையுடன்  நெருக்கமாக  , பாசமாக  இருப்பதில்  கவனம்  கவர்கிறார் 


பனி  படர்ந்த  பிர்தேசங்களில்  சேசிங்  காட்சிகள் ஒளிப்பதிவாளருக்கு  சவால்  விடும்  பணி .பின்னணி இசை  விறுவிறுப்பு. நிக்கி  கரோ தான்  இயக்கம். அம்மா  - மகள்  செண்ட்டிமெண்ட் , ஆக்சன்  என  கலந்து  கட்டி  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கிறார்


நெட்  ஃபிளிசில்  மே 12  2023   ரிலீஸ்    ஆகி  உள்ளது 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகி  12  வருடங்களுக்குப்பின்  முதன்  முதலாக  தன்  மக்ளை  அவள்  அறியாமல்  லாங்க்  ஷாட்டில்  பார்க்கும்  காட்சி , பிறகு  அவ்ளை  வீடியோ  எடுத்துக்கொண்டே  அவள்  விளையாடுவதை  ரசிக்கும்  காட்சி சரியான  செண்ட்டிமெண்ட்  சீன் 


2  பார்க்கில்  தன்  மக்ளைக்கடத்தக்காரில்  வ்ரும்  கும்பலை  கன்  பாய்ண்ட்டில்  சரமாரியாக  தாக்கும்  காட்சி  அடிபொலி


3  படம்  போட்ட  28  வது  நிமிடத்தில்  ஒரு  சேசிங்  சீன்  பைக , கார்  என  மாறி  மாறி  ஓடும்  நபரைத்துரத்தும்  காட்சி  4  நிமிடங்கள்  செம  ஸ்பீடு  ஆக்சன் கொரியோகிராஃபி 


  ரசித்த  வசனங்கள் 

1  நீங்க  அவனை ஃபாலோ  பண்ணலை , அவன்  தான்  உங்களை  ஃபாலோ  பண்றான் 

2  எனக்குக்குடும்பமும்  இல்லை , எதிர்காலமும்  இல்லை , அதனால  என்னைத்தேர்ந்தெடுத்தான்

3  என்  வேலைல  நான்  எப்பவும்  பெஸ்ட்டா  இருந்தேன்


4  வாழ்நாள்  பூரா  ஆர்டர்க்கு  கட்டுப்பட்டு  நடந்துட்டுதான்  இருந்தேன், ஏன்னா  எனக்கு கட்டுப்படுதல் , கீழ்ப்படிதல்  பிடிச்சிருந்தது 

5  இதுதான்  என்  கோட்டை \


  நீ  நல்லா   வாழ்ந்துட்டு  இருக்கலாம், ஆனா  தூங்கும்போது  கூட  உனக்கு  பாதுகாப்பு  தேவைப்படுது 


6  உன்  வாழ்க்கைல  நீ  சாப்பிட்ட  எல்லாத்துலயுமே  வயலன்ஸ்  இன்வால்வ்  ஆகி  இருக்கு 


7  என்  அம்மா  யாரு ?  என்  உண்மையான  குடும்பம்  எங்கே  இருக்கு ? இப்டி  நீ  கேட்ட  எல்லா  கேள்விகளுக்கும் ஒரே  பதில் தான் - நான்  இருக்கேன்


8  நீங்க  என்னை  பயமுறுத்தறீங்க


 உன்னைப்பார்க்கும்போதெல்லாம்  எனக்கு  பயமாத்தான்  இருக்கு 


9  உங்களுக்கு  எந்த  உணர்ச்சியுமே இல்லையே? 


 பிழைக்கறதுக்கு  இப்போ  என்  கிட்டே  இருக்கும்  ஒரே  வழி  உணர்ச்சி  இல்லாம  இருத்தலே

10  நீங்க  அவரை  லவ்  பண்றீங்களா?


 அதைக்கண்டு பிடிக்க  நேரமே  இல்லாம  போச்சு 


11அம்மா  ஓநாய்க்கு  அடிபட்டிருக்கு , குட்டிகளுக்கு  வேட்டை  ஆடத்தெரியாதே? எப்படி  சர்வைவல்  பண்ணும் ?


 அம்மா  இறந்துட்டா  தானாகவே  கத்துக்கும். எப்பவும்  நெருக்கடி  நிலைமை  வரும்போதுதான்  நம்ம்  திறமை  வெ:ளிப்படும் 


12  என்  அம்மாதான்னு  அவங்களால  ஒத்துக்கக்கூட  முடியலை 


 அவங்க  வாழ்ந்துட்டு  இருக்கறதே  உனக்காகத்தான், அவங்க  என்ன  பேசறாங்க?னு  கவனிக்காதே, என்ன  செய்யறாங்க?னு  கவனி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சில ஆட்களை  நீ  அடையாளம்  காட்டனும்னு  ஒரு  ஆள்  நாயகியைக்காரில்  கூட்டிட்டு 450  கிமீ  பக்கமா  தண்டமா  பெட்ரோல்  செலவு  பண்ணி  கூட்டிட்டுப்போறாரு  1998 -ன்னா  ஓக்கே , இப்போ 2023 , வாட்சப்ல  ஃபோட்டோ  அனுப்பி  அல்லது  வீடியோ காலில்  சிம்ப்பிளா  இதை  முடிச்சிடலாமே?


3  மகளின்  ஃபோட்டோ , வீடியோ  க்ளிப்  எல்லாமே  வில்லன்  கேங்க்  வெச்சிருக்காங்க , ஆனால்  மகளின்  உண்மையான  பேரை  ஹாஸ்[பிட்லிலோ  வெளீல  எங்கேயுமோ  சொல்லாம  இருக்கனும்னு  நாயகி  நினைப்பது  ஏன்? முழுக்க  நனைஞ்ச  பிறகு  முக்காடு  எதுக்கு  மொமெண்ட்


4  க்ளைமாக்ஸ்ல  நிராயுதபாணியா  வில்லன்  கிட்டே  மாட்டிக்கிட்ட  நாயகி  என்னைக்கொல்லு  என்கிறாள் , கிறுக்கு  வில்லன்  இப்போ  என்ன  அவசரம் >  மெதுவா கொன்னா  கிடக்குது  என  அசால்;ட்டாக இருந்து  சாகிறான் அய்யோ  ஹய்யோ 


5  நாயகி  பின்  பாதியில்  மகளுக்கு  கார்  டிரைவிங்  கத்துக்கொடுக்கும் காட்சிகள் ,  துப்பாக்கி  சுட  சொல்லித்தருதல்  காட்சிகள்  எல்லாம்  எடிட்  பண்ணி  இருக்கலாம் ஸ்பீடு  பிரேக்கர்ஸ் 




அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  16+  ப்டம் தான் , டீசண்ட்  வாட்ச்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன்  ரசிகர்களும்  பார்க்கலாம், அம்மா  மகள்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  இருப்பதால்  சித்தி  டைப்  சீரியல்  ரசிகர்களும்  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5 



The Mother
The Mother poster.jpg
Release poster
Directed byNiki Caro
Screenplay by
Story byMisha Green[1]
Produced by
Starring
CinematographyBen Seresin
Edited byDavid Coulson
Music byGermaine Franco[2]
Production
companies
Distributed byNetflix
Release date
  • May 12, 2023
Running time
117 minutes
CountryUnited States
LanguageEnglish