Friday, May 12, 2023

நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் - கல்கி இதழ் 12/5/2023

 


வாக்கிங்  போகின்ற நபர்களை பலர்  கிண்டல்  செய்வதை  நான்  பார்த்திருக்கிறேன். என்னப்பா? சுகரா? டாக்டர்  நடக்கச்சொன்னாரா? அடப்பாவமே!  என்பார்கள் . நடை  என்பது   உடல்  ஆரோக்கியத்திற்கு மிக  முக்கியமான  , எளிமையான , செலவில்லாத  பயிற்சி. ஜிம்முக்குப்போகத்தேவை  இல்லை .வீட்டின்  மொட்டை  மாடியிலோ ,பார்க்கிலோ, பீச்சிலோ  எங்கு  வேண்டுமானாலும்  நடக்கலாம்.உடலின்  மெட்டபாலிசம்  மேம்பட  நடைப்பயிற்சி  மிக  மிக  அவசியம்


எவ்வளவு  தூரம்  நடக்க  வேண்டும்?


பொதுவாக டாக்டர்  அட்வைஸ்  சராசரியாக  தினசரி  நான்கு  கிலோ மீட்டர்  நடப்பது  நல்லது. வெளி நாடுகளில்  இப்போது தினமும் 10,000  ஸ்டெப்ஸ்  என  கணக்கு  பார்த்து  நடக்க  சொல்கிறார்கள்., அதாவது  எட்டு  கிமீ. . இன்று  தான்  புதியதாக  ந்டை  பயிற்சிஆரம்பிக்கிறீர்கள்  எனில்  எடுத்த  உடனே  அதிக  தூரம்  நடக்க  வேண்டாம், முதலில்  2  கிமீ  தூர்ம்  என  இலக்கு  வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம்  கொஞ்சமாக  அதை அதிகப்படுத்துக்கொள்ளலாம்


வாக்கிங்  ஆப்  எதற்கு?


 சமூக  வலைத்தளங்களில்  தினசரி வாக்கிங்  அப்டேட்டை  பதிவு  செய்வதால்  நமக்கு ஒரு  தன்னம்பிக்கை  கிடைக்கும், ஓபி  அடிக்க  முடியாது. அடடா, இன்று  அப்டேட்  செய்யாவிட்டால்  எல்லோரும்  கேட்பார்களே  என்ற  நிலைக்காகவாவது  நடப்போம்.  ப்ளே  ஸ்டோர் ல போய்  கூகுள்  ஃபிட் ,  மீ  ஃபிட் ,  என  டைப்  செய்தால்  ஏராளமான  வாக்கிங்  ஆப் கள்  வரும், அதில்  ஏதாவது  ஒன்றை த்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,  ப்ளூ  டூத், ஜிபிஎஸ் , நெட்  இம்மூன்றையும்  ஆன்  பண்ணிக்கொள்ள  வேண்டும்



எப்படி  நடக்க  வேண்டும் ?


கை , கால்களை  நன்கு  வீசி அகலக்கால்  வைத்து  நடக்க  வேண்டும் , நடை  வேகம்  10  நிமிடங்களுக்கு  1  கிமீ  தூரம்  கடப்பது  போல்  இருந்தால்  நல்லது . ஆரம்ப நிலையில்  15  நிமிடம்  ஆகும். போகப்போக , பழகப்பழக  அந்த  15  நிமிடங்கள்  என்பது  `14 , 13  என  குறைந்து  கொண்டே  வ்ரும் . 10  நிமிடங்களில்  ஒரு  கிமீ  தூரம்  நடக்கும்போது  வியர்வை  நன்றாக  வெளி  வரும் . பேசிக்கொண்டே  நடக்கக்கூடாது , சிலர்  நண்ப்ர்களிட்ம் அரட்டை  அடித்துக்கொண்டோ , செல் ஃபோனில்  பேசிக்கொண்டோ  நடப்பார்கள் . இது  தவிர்க்கப்பட  வேண்டும் 


என்னென்ன நன்மைகள் ?


  உடல்  எடை  குறையும், வெயிட் லாஸ்  பிராசஸ் ல  நடைப்பயிற்சி  முக்கியப்பங்கு  வகிக்கிறது. அதிக  ரத்த  அழுத்தம்  உள்ளவர்கள்  ஹை  பிள்ட்  பிரஷர்  உள்ளவர்கள் , சுகர்  இருப்பவர்கள்  நிச்சயம்  தின்சரி  நடக்க  வேண்டும்,  எந்த  வித  நோய்க்குறைப்பாடுகள்  இல்லாதவர்களும  ஆரோக்யம்  மேம்பட  தினசரி  நடக்க  வேண்டும்


வாக்மேனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே  நடக்கலாம், அல்லது  அலை  பேசியில்  ஏதாவது  ப்ட்டிமன்ற  நிகழ்வுகள் ,பெரியவர்கள்  உரைகள் , பேட்டிகள் இதை  ஒலி வடிவில்  கேட்டுக்கொண்டே  நடக்கலாம்,  ஒளி  வடிவில்  பார்த்துக்கொண்டேநடக்கக்கூடாது 


எப்போது  நடக்கலாம்?


  பெரும்பாலும்  காலை  எழுந்து  காலைக்கடன்களை  முடித்து  விட்டு  வெறும்  வயிற்றில்  நடப்பதே  நல்லது .ட்ரெட்  மில்லில்  நடப்பதை  விட  ஓப்பன்  பிளேசில்  மரங்கள்  அடர்ந்த  பகுதியில்  நடப்பதே  நலல்து . மலை  பிரதெசங்களில்  வாழ்பவர்கள்   ஹில்ஸ்  வாக்  போவது  சுத்தமான  காற்றை  சுவாசிக்க  உகந்தது . காலையில்  நேரம்  அமையாதவர்கள்  மாலையில்  நடக்கலாம் . இரவு  உணவு  முடித்து  விட்டு உடனே  நடக்கக்கூடாது . மதிய  வேளை  உச்சி  வெய்யிலில்  நடப்பதைத்தவிர்க்க  வேண்டும் 


வெறும்  காலில்  நடக்கலாமா?


 நம்  வீட்டு  தோட்டம், அல்லது  வீட்டின்  மொட்டை  மாடி  எனில்  முள்  இல்லாத  சுத்தமான  இடமாக  இருந்தால்  வெறும்  காலில்  நடந்தால்  நல்லது . அப்படி  இல்லாமல்  வெளியே நடப்பது  எனில்  வாக்கிங்  ஷூ  போட்டுக்கொண்டு  நடப்பது  நல்லது .  ஸ்போர்ட்ஸ்  கடைகளில்  வாக்கிங்  ஷூ 500  ரூபாய்  முதல் 600  ரூபாய்  விலையில்  கிடைக்கும். டைட்டான  உடைகள்  அணியாமல்  தளர்வான  உடைகள்  அணிந்து  வாக்கிங்  போவது  நல்லது  




IN YOUR DREAMS ( துருக்கி ) - ROYANDA GORURSUN (2023) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) அமேசான் பிரைம்

 


   ஃபாரீன்  படங்கள்  என்றாலே கிளாமரான  காட்சி  அமைப்புகள்  கொண்டதாகத்தான்  இருக்கும்  என்ற  எண்ணத்தைத்தவிடு பொடியாக்கி  தமிழ்ப்படங்கள் போலவே  அம்மா, அப்பா  செண்ட்டிமெண்ட்ஸ் ,  காதலி , மனைவி  பாசப்பிணைப்பு  காட்சிகள்  கொண்ட கண்ணியமான  படம்  இது . ஆச்சரியப்படத்தக்க  அளவில்  இதில்  தமிழ்ப்படங்களான  12 பி  , இது  நம்ம ஆளு , முந்தானை  முடிச்சு  போன்ற  படங்களின்  ரெஃப்ரன்சும்  இருக்கிறது  . 2023ஆம்  ஆண்டு  வெளியான  எரா ஓரா (ERA ORA)  STILL TIME   என்ற  படத்தின்  சாயலும்  இருக்கிறது. இரு  படங்களுக்கும்  மூலக்கதை  ஏதோ  ஒரு  நாவலாக இருக்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்கு  இன்னும்  திருமணம்  ஆகவில்லை .எப்படியாவது  ஒரு  நல்ல ஆண்  துணையைக்கண்டறிந்து  விட  வேண்டும்  என்ற  முனைப்பில்  இருக்கிறார். நாயகன்  ஒரு  தொழில்  அதிபர், தான்  உண்டு  தன்  வேலை  உண்டு  என்  இருப்பவர் . நாயகன் , நாயகி  இருவரும்  சந்தித்துக்கொள்கிறார்கள் 


 அடுத்த  நாள்  காலை  எழும்போது  இருவருக்கும்  அதிர்ச்சி . இருவரும்  ஒரே  அறையில்  ஒரே படுக்கையில்  இருக்கிறார்கள் . இருவருக்கும்  திருமணம்   ஆகி  இரண்டு  வருடங்கள்  ஆனதாகத்தெரிகிறது . இருவருக்கும்  எதுவும்  நினைவில்லை . அவரவர்  பெற்றோருக்கு  ஃபோன்  பண்ணி  தங்களுக்கு  திருமணம்  ஆனதை  உறுதி  செய்கின்றனர் 


அடுத்த  நாள்  இரவு இருவரும்  தூங்கி  எழுந்திருக்கும்போது  நாயகி  நிறை  மாத  கர்ப்பிணியாக  இருக்கிறார். இருவருக்கும்  ஒன்றும்  புரியவில்லை 


படம்  பார்க்கும்  ஆடியன்சுக்கும்  புரியவில்லை ., இது  டைம்  ட்ராவல்  கதையா?  ஃபேண்ட்டசி  கதையா?  என  குழப்பமாக  இருக்கிறது . பிறகு  திரைக்கதை  மெல்ல  மெல்ல  சூடு  பிடித்து  அனைத்து  சந்தேகங்களுக்கும்  விடை  அளிக்கிறது


 நாயகியாக  நடித்த  பர்க்கு  ஆஜ்பெர்க் (BURCU OZBERC)   நம்ம  ஊர் ஹன்சிகா மாதிரி  முகச்சாயலிலும் கொழுக்  மொழுக்  உடல்  அமைப்பிலும்  அழகாக  இருக்கிறார். இந்திய  வம்சாவளி  பெண்  போலவே  இருப்பது  சிறப்பு, இவரது  நடிப்பு  அழகு . இருவரும் கணவன்  மனைவியா? நம்ப  முடியலை  என  சொல்லி  இந்த  உண்மை  தெரியும்  வரை  நமக்கு  தனித்தனி  படுக்கை  தான்  என  படுக்கையைப்பிரிக்கும்  காட்சி  அந்த்  முகத்தில்  தெரியும்  பதட்டம்  அக்மார்க்  தமிழ்ப்பெண்  தோற்றாள் 


நாயகனாக  நடித்த  முரட் போஸ் (MURAT BOZ)  நம்ம  ஊர்  பரத்  மாதிரி  முக  சாயலுடன்  அருமையாக  நடித்திருக்கிறார். அப்பாவுடனான  அந்த  செண்ட்டிமெண்ட்  காட்சியிலும்  மாமனார்  - மாமியார்  உடன்  பழகும்  பாந்தத்திலும்   கே  பாக்யராஜ்  சாயல்  தெரிகிறது 


நாயகியின்  அம்மா , அப்பா , நாயகனின்  அப்பா மூவரும்  மிக  யதார்த்தமாக  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


90  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  அளவு   ஷார்ப்  ஆக  கட்  செய்திருக்கிறார்  எடிட்ட்ர் .  ஒளிப்பதிவு , பின்னணி  இசை   ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  தரம் 


   சபாஷ்  டைரக்டர்


1  அப்பாவுடன்  ஏன்  பேசுவதில்லை  என்  நாயகி  நாயகனிடம்  கேடும்போது  அம்மாவின்  இறுதிச்சடங்குக்கூட  வர  முடியாமல்  ஆஃபீஸ்  வேலையில்  பிசியாக  இருந்ததால்  அப்பா  என்னை  வெறுத்துட்டார்  என  ஃபிளாஸ்பேக்  சொல்லும்  காட்சி 


2 என்  மனைவிக்கு  என் அம்மா  தந்த  பரிசு  இது , இப்போ  அவள்  மறைவுக்குப்பின்  உனக்கு  என  மாமனார்  மருமகளிடம்  தங்க  செயினை  பரிசாகத்தரும்  காட்சி 


3  குழந்தையாக  வரும்  நபர்  கொள்ளை  அழகு  அவள் கேட்கும்  பொம்மை  வாங்கி  வரும்  நாயகனைக்கண்டு  குதித்து  ஓடி  வருவது  காணக்கண்  கோடி  வேண்டும் 


  ரசித்த  வசனங்கள் 

1 உனக்கு ஒரு  விஷயம்  சரியாத்தெரியலைன்ன்னா  அதையே  திருப்பித்திருப்பிக்கேட்டுட்டு  இருக்கக்கூடாது 


2   உனக்கும், உன்  சம்சாரத்துக்கும்  நேத்து  சண்டையா? நேத்து  உனக்கு  கால்  பண்ணி  இருக்கா? ஆனா  நாட்  ரீச்சபிள்னு  வந்தததாமே?


 நாட்  ரீச்சபிள்னு  வந்தா  ரீசசபிள்  அக  இருக்க  பிரியம்  இல்லைனு  அர்த்தம், இதை  அவ  கிட்டே  சொல்லிடு 


3  என்னோட  ஆசை  எல்லாம்  ஒண்ணுதான். மேரேஜே  ஆகாம  ரொம்ப  நாளா  இருக்கும்  நான் ஒரு  நாள்  தூக்கத்தில்  எழுந்து  விழிக்கும்போது  எனக்கான  துணை  என்  அருகில்  இருக்கனும்

4   காலத்தின்  கைகளில்  உன்  பிரச்சனைகளை  ஒப்படைத்து விடு , எல்லாம்  காலம்  பார்த்துக்கும்


5  ஏம்மா,மின்னல்,இந்தப்பொம்பளைங்க  எல்லாம்  ஏன்  எப்போப்பாரு  அரவை  மிஷின்  மாதிரி  லொட  லொடனு  பேசிக்கிட்டே  இருக்கீங்க ?


6  ஒரே  மாதிரியான  கனவு  இரு  வேறு  நபர்களுக்கு  ஒரே  நாளில்  ஒரே  சமயத்தில் வருவதற்குஅறிவியல்பூர்வமான   காரணங்கள்  எதுவும் இதுவரை  கண்டுபிடிக்கப்பட்டதில்லை 


7  என்  அம்மா  இறக்கும்  முன்னே பெரிய  ஆள் ஆகி  சாதிச்சுக்காட்டனும்னு  நினைச்சேன், ஆனால்  இந்த  உலகில்  பலருக்கும்  அந்த  பாக்கியம்  கிட்டாமயே  போய்டுது 


8  நான்  இதுவரைக்கும் தொடாத  ஒரு  பொண்ணு  என்னால  கர்ப்பம்  ஆனா  என்பது  விசித்திரமா   இருக்கு 


 நல்ல  வேளை , நீ  தொட்டிருந்தா  வீசு  பூரா  குழந்தைகள்  காப்பகமா  ஆகி  இருக்கும் 


9  உன்  வாழ்க்கையை  மாற்றி  அமைக்கனும்னு  தீர்மானிச்சா  யாருக்காகவும், எதுக்காகவும்  காத்திருக்காதே , உடனே  செயல்படுத்து


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  இப்படம்  அமேசான்  பிரைமில்  காணக்கிடைக்கிறது . ஆங்கில  சப் டைட்டில்  உண்டு   ரேட்டிங்  2.75 / 5 

Thursday, May 11, 2023

FEDELTA (2022) - இத்தாலி -DEVOTION-A STORY OF LOVE AND DESIRE - வெப் சீரிஸ் விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா ) @ நெட்ஃபிளிக்ஸ்


மொத்தம்  ஆறு  எபிசோடுகள் , ஒவ்வொரு  எபிசோடும்  40  நிமிடங்கள்  முதல்  45  நிமிடங்கள்  வரை . ஆக  மொத்தம்  நாலரை  மணி  நேரம்  ஆகும் இந்த  பாகம்  1 ல்  வரும்  ஆறு  எபிசோட்கள்  பார்க்க . த  அஃஃபேர்  , சீன்ஸ்  ஃப்ரம்  எ  மேரேஜ்  ஆகிய  இரு  படைப்புகளும்  என்ன  கதைக்களமோ   , என்ன  காட்சி  அமைப்புகளோ  ஏறக்குறைய  அதே  தான்  இந்த  வெப்  சீரிசும் . நெட்  ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது        


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  ரைட்டர் . உள்ளூரில்  இருக்கும்  ஒரு  யுனிவர்சிட்டில  மாணவர்களுக்கு  நாவல்  எழுதுவது  மற்றும்  எழுத்து  பற்றிய  வகுப்பு  எடுப்பவர் , இவருக்கு  ஒரு  மனைவி  உண்டு . மனைவி  ஒரு  ரியல் எஸ்டேட்  புரோக்கர் ,. இருவருக்கும்  மணம்  ஆகி  5  வருடங்கள்  ஆகின்றன. இருவரும்  ஒருவரை  ஒருவர்  நேசிக்கும் கருத்தொருமித்த  தம்பதியினர் 


நாயகி  20  வயது  ஆன  மாணவி . நாயகன்  வகுப்பு  எடுக்கும்  யுனிவர்சிட்டியில்  நாவல்  எழுத  பயிற்சி  எடுப்பவர் . மற்ற  மாணவ , மாணவிகளை  விட  நாயகியிடம்  எழுத்துத்திறமை  அதிகம்  இருப்பதாக  நாயகன்  உணர்கிறார்


ஒரு  நாள்  யுனிவர்சிட்டியில்  நாயகிக்கு  ப்ரீத்திங்  ட்ரபிள்  வருகிறது , அப்போது  நாயகன்  அவளை  ஆசுவாசப்படுத்தி   சரி  செய்கிறார். இந்த  சம்பவம்  பாத்ரூமில்  கை  கழுவும்போது  நிகழ்கிறது . யுனிவர்சிட்டியில்  இருக்கும்  வேறு  ஒருவர்  அந்த  சம்பவத்தைப்பார்த்து  விடுகிறார்


 நாயகன்  வீடு  திரும்பியதும்  அந்த  சம்பவத்தை  ஒளிவு  மறைவு  இல்லாமல்  தன்  மனைவியிடம்  சொல்லி  விடுகிறார்


 மனைவிக்கு  உடலில்  ஒரு  பிரச்சனை  உண்டு . பிசியோ தெரபி  சிகிச்சை  எடுத்துக்கொள்பவர்.  நாயகனின்  மனைவிக்கு  பிசியோதரபி  சிகிச்சை  செய்யும்  நபர்  மீது   ஒரு   சாஃப்ட்  கார்னர்  இருக்கிறது . இது  பற்றி  நாயகனிடம்  சொல்ல  வருபவர்  பின்  ஏனோ  சொல்லாமல்  தவிர்க்கிறார்

கணவன் , மனைவி  இருவரும்  அவரவர்  பாதையில் தலா  ஒரு  அஃபெக்சன்  வைத்திருப்பதால்  பிரச்சனை  எப்படி  எல்லாம்  வருகிறது ? எப்படி  அதை  சரி  செய்கிறார்கள்  என்பது  மீதி திரைக்கதை 

நாயகன்  ஆக  ரைட்டர்  ஆக  வருபவர்   கண்ணாடி  அணிந்ததால்  முதிர்ச்சியான  நபர்  ஆக காட்டிவிடலாம்  என  நினைத்தால்  அந்த  நினைப்பில்  மண்,  இவரே  காலேஜ்  ஸ்டூடண்ட்  போலத்தான்  இருக்கிறார் 


 இவரது  மனைவியாக  வருபவர்  இவருக்கு  அக்கா  மாதிரி  வயதில்  மூத்தவராக  இருக்கிறார்

 நாயகியாக  வரும்  மாணவி  அப்சரஸ்  போல  அழகு , கதைப்படி  20  வயது  மாணவி  என  சொல்லப்பட்டாலும்  16  வயது  பாலகியாகவே  தோற்றம்  அளிக்கிறார். ஆனால்  இவர்  பேசும்  வசனங்கள்  எல்லாம்  அகத்தியன்  இயக்கிய  படங்களில்  வரும்  நாயகி  போல  அவ்வளவு  மெச்சூரிட்டி 


  மனைவிக்கு மசாஜ்  செய்பவர்  சாரி பிசியோதெரபி  செய்பவருக்கு  அதிகம்  வேலை  இல்லை . வரும்  காட்சிகள்  90%  ல்  அவர் மசாஜ்  மட்டும்  தான்  செய்கிறார்


 ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்  போன்ற  தொழில்  நுட்பங்கள்  கச்சிதம் 



சபாஷ்  டைரக்டர்


1   ஒரு  மணி  நேரத்தில்  முடிக்க  வேண்டிய  சாதாரண  கதையை  என்னமோ  காவியக்காதல்  கதை  மாதிரி  6  எபிசோடுகள்  ஜவ்வு  இழுப்பாக  ஆனால்  சுவராஸ்யமாக  இழுத்த  விதம் 


2   நாயகன் , மனைவி  கேரக்டர்  செலக்சன்களில்  சொதப்பினாலும்  நாயகி  தேர்வில்  முதல்  வகுப்பில்  பாஸ்  ஆனது 


3  மனைவி - பிசியோதெரஃபிஸ்ட்  சம்பந்தப்பட்ட  காட்சிகளை  ஐந்து  வெவ்வேறு  காட்சிகளில்  ஒரே சம்பவத்தை  மாற்றி  மாற்றி  காண்பித்த  புத்திசாலித்தனம் 


4  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லா விட்டாலும்  நாயகியின்  அம்மா  தற்கொலை  செய்து  கொள்ளும்  காட்சி ,  நாயகனின்  மாமியார்  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகும்  காட்சி  ஆகிய  எக்கஸ்ட்ரா  ஃபிட்டிங்குகளை  சாமார்த்தியமாக  இணைத்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 



1   ஒரு  ஆர்ட்டிஸ்ட்டை , ஒரு  கலைஞனை  கல்யாணம்  பண்ணிக்கறது  ரிஸ்க்கியான  இன்வெஸ்ட்மெண்ட் \


2  என்ன  சொல்ல  நினைச்சேனோ  அதை  கரெக்டா  சொல்லிட்டேன் 


 என்ன  சொல்லனும்னு  நீ முதல்லயே  முடிவு  பண்ணி  வெச்சுட்டியோ ? 


3  உன்னுடைய  உறவை  உன்னுடனான  உறவை  எப்படி  முடிச்சுக்கறது?னு  எனக்கு  இன்னும்  ஒரு  ஐடியா  வர்லை 


4  எதையும்  மறைக்காதே. உன்  கிட்டே  உன்  துணை  எப்படி  நடந்துக்கனும்னு  நீ  நினைக்கிறாயோ  அதே  போல்  நீயும்  உன்  துணையிடம்  நடந்துக்கனும்


5   எதை  வெச்சுக்கலாம் ? எதை  தூக்கிப்போடலாம்னு  ஒர்க்  அவுட்  பண்ணிட்டு  இருக்கேன் 


6   ஒரு  பெண்  தனக்கு  என்ன  வேணும்னு  நினைக்கிறாளோ அதை  அடைய  தேவையானதை  செய்தே  தீருவாள் 


7    நாம  ரெண்டு  பேரும்  நடனம்  ஆடலாமா?


 எதுக்கு  ஊரெல்லாம்  சுத்தி  என்  பேரு  முத்தினு  உலகத்துக்கே  நம்ம  உறவு  வெளில  தெரியவா? 


8    ஒவ்வொரு  திருமணமுமே நெருக்கடியானதுதான் 


9 ஈர்ப்பு  என்பது  தற்காலிகமானது   எ;ல்லா  உறவுகளும்  ஒரு நாள்  அதன்  முடிவை  சந்தித்தே  ஆக  வேண்டும் 


10   நீ  காத்திருக்கலாம், ஆனால்  பிஸ்னெஸ்  உனக்காகக்காத்திருக்காது \\


11   எதிர்பாராத  தோல்வி  நேரும்போது  நாம்  எப்படி  நம்  பாதையை  மாற்றிக்கொள்கிறோம்  என்பதில்  தான்  நம்  வெற்றி  அடங்கி  இருக்கிறது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    அவ்வளவு  பெரிய யுனிவர்சிட்டியில்  நாயகனும்  நாயகியும்  அடிக்கடி  சேர்ந்து  ஜோடியாக  சுற்றுவது  அதை  யாரும்  கண்டு  கொள்ளாமல்  இருப்பது  நம்பும்படி  இல்லை 


2   கேட்  அடைக்கப்பட்ட  பார்க்கில்  நைட்  டைமில்  கேட்  ஏறிக்குதிக்கும்  நாயகன்  நாயகி  இருவரில்  நாயகன்  மட்டும்  போலீசிடம்   மாட்டிக்கொள்வது 


3    காலேஜில்  பணிபுரியும்  நாயகன்  ஐ  டி  கார்டு  இல்லாமல்  போலீசிடம்  மாட்டும்  காட்சி  நம்பகத்தன்மை  இல்லை 


4  நாயகனின்  மனைவி  தன்  அப்பாவுக்கு  ஒரு  அஃபேர்  இருந்திருக்கு  என்ற  உண்மையை  பெரிய   ஜேம்ஸ்பாண்ட்  போல  கண்டு  பிடிப்பது . மெயின்  கதைக்கும்  இதுக்கும்  என்ன  சம்பந்தம்  என  சொல்லாமலேயே  இழுத்தது 


5    நாயகனின்  மனைவி  தன்  கணவனைப்பழி  வாங்க  இரு  வேறு  ஆண்களுடன்  அஃபேர்ல  ஈடுபடுகிறாரா?  அல்லது  நிஜமான  காதலா? என்பதை  தெளிவாக  சொல்ல வில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இது  ஒரு  16+ காட்சிகள்  கொண்ட  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காலம்  காலமாக  நாம் கண்டு  வரும்  கள்ளக்காதல்  கதைதான்  , வழக்கமாக  ஜோடியில்  யாரோ ஒருவர்  தப்பு  பண்ணுவாங்க, பெண்களுக்கு  சம  உரிமை  வேண்டும்  என்பதால்  இதில்  இருவரும்  தப்பு  பண்றாங்க  அவ்ளோ  தான் , ரேட்டிங் 2 / 5  

Wednesday, May 10, 2023

ENTHADA SAJI (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் , ஃபேண்ட்டசி காமெடி டிராமா) @ அமேசான் பிரைம்

 


இந்தப்படம்,  பார்க்கும்  முன்  படத்தைப்பற்றிய  மக்கள்  கருத்துக்கள்  36  பக்கமா  படிச்சேன், அதுல பெரும்பாலான  கமெண்ட்ஸ்  இப்படித்தான்  இருந்தன, ஜெயசூர்யா, குஞ்சாக்கா  போபன்  போன்ற  அனுபவம்  மிக்க  நடிகர்கள் எப்படி  ஒரு  சாதாரண  கதையில்  நடிக்க  ஒத்துக்கறாங்க . ? வாவ்  ஃபேக்டர்ஸ்  ஒன்று கூட இல்லை , வசனம்  எழுத  வசனகர்த்தா  ரொம்ப  சிரமப்படலை , பைபிள்ல  இருந்தே  எடுத்து  அடிச்சு  விட்டிருக்காரு .கிறிஸ்துவ  மதத்தில்  அபார  நம்பிக்கை  கொண்டவர்கள்  மட்டுமே  ரசிக்கக்கூடிய  படமாக  இருக்கும்


சில கமெண்ட்ஸ்  மட்டும்  இந்த  டைப்பில் --  இது ஒரு  ஃபீல்  குட்  மூவி . ஸ்லோ  மெலோ டிராமா, ரொம்ப  எதிர்பார்த்துப்போக  வேண்டாம்

    ஸ்பாய்லர்  அலெர்ட்


கேரளா - இடுக்கி  மாவட்டம்- தொடுபுழா  - இல்லிக்கல்  கிராமம் தான்  கதை  நிகழும் களம் . நாயகி  அந்த  ஊரில்  வசிக்கிறார். இவருக்கு  திருமணம்  ஆகாமல்  தள்ளிப்போய்க்கொண்டே  இருக்கிறது . அந்த ஊரில் டாக் ஆஃப்  த  டவுன் அல்லது டாக் ஆஃப்  த  வில்லேஜ்  இந்த  விஷயம்  தான் . நாயகிக்கு  ஏன்  மேரேஜ்  அமையலை ? எப்போ நடக்கும் ?


 யாராவது  நலம்  விசாரிக்க  வந்தாக்கூட  இந்த  லேட்  மேரேஜ்  பற்றித்தான்  துக்கம்  விசாரிக்கறாங்க . இதனால  செம காண்ட்  ஆன  நாயகி  ஒரு  நாள்  சர்ச்சுக்குப்போய்  ஏசுவிடம்  முறையிட  2008 ல்  சிம்பு  தேவன்  இயக்கத்தில்  வெளியான  அறை  எண்  305 ல்  கடவுள்  படத்தில்  வருவது  போல  இறைவன்  ஆன  ஏசு  மனித  ரூபத்தில்  நாயகி  முன்  தோன்றி  பேசுகிறார்


 இதனால்  மிக  ஆச்சரியம்  அடைந்த  நாயகி  ஏசுவிடம்   பிரமிப்புடன்  பேசுவதும்  நாயகிக்கு  மட்டும்  ஏசு  தரிசனம்  தருவதும்  அடிக்கடி  நாயகி  தனிமையில்  இருக்கும்போதெல்லாம்  ஏசு  எழுந்தருளுவதும்  நடக்கிறது 


நாயகி  தான்  விரும்பும்  நபர்  பற்றி  ஏசுவிடம்  சொல்கிறார். திருமணம்  விரைவில்  நிகழும்  என  ஏசு  ஆசீர்வதிக்கிறார். இப்போதுதான்  ஒரு  திருப்பம், ஏசுவின்  சிலையை  யாரோ ஒரு  திருடன்  அது  ஐம்பொன்  சிலை  என்பதை  அறிந்து  திருடிச்சென்று  விடுகிறான். அதை  யார்  திருடியது  ? என்பதை  நாயகி  கண்டுபிடித்தாரா? அவரது  திருமணம்  நிகழ்ந்ததா? என்பதை  தைரியம்  இருப்பவர்கள்  கண்டு  மகிழுங்கள் 


  நாயகியாக   நிவேதா  தாமஸ்  உற்சாக  குவியல்  ஆக  வருகிறார். 50  ரூபாய்  வாங்கிக்கொண்டு  5  லட்ச  ரூபாய்க்கு  நடிக்கும்  ஜோதிகாவுக்கே  சவால்  விடும்படி  5  ரூபாய்  வாங்கிக்கொண்டு  5  கோடி  ரூபாய்க்கான  நடிப்பை  வாரி  வழங்கி  இருக்கிறார் 


ஏசுவின்  மனித   அவதாரம்  ஆக  குஞ்சாக்கா போபன்  கச்சிதமாக  வந்து  போகிறார்.  நிஜம்  தான்  நடிக்க  அதிக  வாய்ப்பில்லை , அதனால்  சும்மா  செட்  பிராப்பர்ட்டி  போல்  வந்து  போகிறார் 


நாயகியின்  வருங்காலக்கணவன்  ஆக  ஜெயசூர்யா  எப்படி  இருந்த  நான்  இப்படி  ஆகிட்டேன்  விவேக்  காமெடி போல  ஆகி  விட்டார்  


2  மணி  நேரம்தான்  படம் ஓடுகிறது , ஆனால்  நான்கு  மணி  நேரம்  ஓடியது  போல  ஒரு  டயர்ட்னெஸ்


 காட்ஃபி சேவியர்  பாபு)   தான்  இயக்கம், கதை , திரைக்கதை  எல்லாம் .  சுமார்  ஆன  இப்படம்  அமேசான்  பிரைம்ல  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  ( காட்ஃபி சேவியர்  பாபு)


1 இந்தப்படத்துல  கதை  இருக்குனு  நம்ப  வெச்சு  தயாரிப்பாளரை  ரெடி  பண்ணுனது  அபாரம் 


2    அரை  மணி  நேரத்தில்  முடிக்க  வேண்டிய  குறும்படத்தை  ஜவ்வு  இழுப்பாக  2  மணி  நேரம்  இழுத்தடித்த  லாவகம் 



  ரசித்த  வசனங்கள் 


1  மிஸ், இன்னைக்கு  சர்ச்சுக்கு  வந்து  எக்ல்ஸ்ட்ரா  அரை  மணி  நேரம் இருங்க \\

 அய்யோ , நாட்  பாசிபிள் 


 நான்  ஒரு  பாட்டு  பாடப்போறேன் 


 அதுக்குத்தான்  முடியாதுன்னேன், மீ எஸ்கேப் 


2   கடவுளே  நேரில்  வந்தாக்கூட  இந்தப்பொண்ணுங்க  கடவுள்  போட்டிருக்கும்  டிரசைப்பார்த்து  இது  எங்கே  எடுத்ததுது?னு  ஜவுளிக்கடை  டீட்டெய்ல்சை  விசாரிப்பாங்க 


3  கடவுளே!  இது  தங்கமா?


 ஆமா 

 916  கோல்டா?


4   கடவுளே!  எத்தனை  வருசமா  இந்த  சர்ச்ல  இருக்கீங்க ?

 100  வருசமா

\  ட்ரான்ஸ்ஃபர்  எல்லாம்  இல்லையா?  ஒரே  சர்ச் ல  எப்படி  இவ்ளோ  வருசம்?


5  எப்பவுமே  ஆண்கள்  தான்  தங்கள்  காதலை  பெண்ணிடம்  வெளிப்படுத்துகிறார்கள் , அதுதான்  உலக  வழக்கம், இப்போ  கொஞ்சம்  நிலைமை  மாறி  பெண்களும்  காதலை  அங்கங்கே  வெளிப்படுத்துகிறார்கள் 


6   அந்தப்பொண்ணு  கடவுள்  கிட்டே  தன்  மேரேஜை  நிறுத்துனு  ஏன்  வேண்டிக்கறா?


  அவளுக்கு  ஃபாரீன்  மாப்ளை  ஃபிக்ஸ்  ஆகி  இருக்கு ஆனா  அவளுக்கு  ஆல்ரெடி  அஞ்சு லவ்வர்ஸ்  இருக்கு  , அதுல  ஒருத்தன்  ஃபாரீன், அவன்  கூட  மேரேஜ்  ஆகனும்   இந்த  மேரேஜ்  நிக்கனும்னு   வேண்டிக்கறா 


\\ எண்டே  கர்ததாவே!


7  ஒரு  மைல்  தூரம்  என்னுடன்   ஓடி  வா  என  யாராவது  உன்னைக்கட்டாயப்படுத்தினால்  நீ அவர்கள்  கூட  2  மைல்  தூரம்  ஓடு 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   இந்தப்படத்திலும் லாஜிக்மிஸ்டேக்ஸ்  இருக்கு , ஆனா  அதை  எல்லாம்  கண்டு  பிடிக்க  தூங்காமல்  படத்தை  முழுசாப்பார்க்கனும்.. 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  படத்தில்  கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம், இந்த  லட்சணத்துல  அடல்ட்  கண்ட்டெண்ட்  ஏது ? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அரசியல்  கூட்டங்களுக்கு  வரும்  தொண்டர்களுக்கு  1000  ரூபாய்  பணமும், 3  வேளை  சாப்பாடும்  கொடுப்பாங்க . அந்த  மாதிரி  யாராவது  கொடுத்தா  வேணா  படம்  பார்க்கலாம் .  நல்லா  தூக்கம்  வருது   ரேட்டிங் 1.5 / 5 



Enthada Saji
Enthada Saji poster.jpg
Theatrical release poster
Directed byGodfy Xavier Babu
Story byGodfy Xavier Babu
Produced byListin Stephen
Starring
Production
company
Magic Frames
Release date
  • 8 April 2023
CountryIndia
LanguageMalayalam

Tuesday, May 09, 2023

AUGUST 16 , 1947 ( 2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @அமேசான் பிரைம்

 


    இந்தப்படம் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆனபோது  போஸ்டர்  டிசைன்  பார்த்து  பயந்து  படம்  பார்க்கல, ஏதோ  சுதந்திரப்போராட்டப்போர்  பற்றிய  சப்ஜெக்ட்னு  விட்டுட்டேன், அது  போக  டைட்டிலிலேயே  ஜிஎஸ்டி(AUGUST)  இருந்தது . டிக்கெட்  போக  எக்ஸ்ட்ரா  சார்ஜ்  வசூலிப்பாங்களோ?னு  ஸ்கிப் பண்ணிட்டேன், இப்போ  பார்த்தா  அது லவ்  சப்ஜெக்ட் , அடடா, மிஸ்  பண்ணீட்டமேனு  ஃபீலிங்கோட தான்  படம்  பார்த்தேன்

 ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழ்  நாட்டில்  செங்காடு  என்ற  ஒரு கிராமம், மக்கள்  படிப்பறிவு  இல்லாமல்  ஆங்கிலேயர்களுக்கு   அடிமைப்பட்டு  வாழ்ந்து  வந்த  கால  கட்டம்,  வில்லனான   ஆங்கிலேய  துரை அந்த  ஊரில்  எந்தப்பெண்ணைக்கண்டாலும்  விடாத  பெண்  பித்தன்.இவனிடமிருந்து  பெண்ணைக்காப்பாற்ற  இரண்டே  வழிகள்  1  பூமி தானம்  என்ற  பெயரில்  பெற்ற  பெண்ணையே  மண்ணில்  உயிரோடு  புதைத்து  கொல்வது  2  ஆண்  போல்  வேடமிட்டு  உலாவரச்செய்வது. இதனால்  ஒரு  பெண்  அந்த  ஊரில்  வயதுக்கு  வந்தாலே  பெற்றோர்  மனம்  நடுங்கித்தான்  வாழ்ந்தார்கள் 


 நாயகி தேவதை  போன்ற  அழகி .ஜமீன்  வாரிசு . அட்டு  ஃபிகரையே  விட்டு  வைக்காத   வில்லன்  லட்டு  ஃபிகரைக்கண்டால்  விடுவானா? ஜமீன்  வாரிசு  என்றும்  பாராமல்  நாயகியை  தன்  வீட்டுக்கு  அனுப்பச்சொல்கிறான். 24  மணி  நேரம் அவகாசம்  தருகிறான். ஆனால்  நாயகியின்  அப்பா  தன்  மகளை  கொலை  செய்ய  முடிவு  செய்கிறார்


நாயகன்  நாயகியை  சின்ன  வயதில்  இருந்தே  ஒரு  தலையாய்  காதலித்து  தறுதலையாய்  சுற்றிக்கொண்டு  இருப்பவன் ஜமீன் தாரர்  உட்பட  அனைவரும்  வில்லனிடம்  பம்மிக்கொண்டிருக்க  நாயகி  மீது  கால்  வைத்த  வில்லனை  பாகுபலியில்  வருவது  போல  ஒரே  போடாக  போட்டுத்தள்ளி  விடுகிறான்


 இடைவேளைக்கு  முன்பே  வில்லனை  ஒழித்து  விட்டால்  இனி  கதையில்  என்ன  சுவராஸ்யம்  இருந்து  விடப்போகிறது  என்று  நினைத்தால்  அதற்குப்பின்  தான்  இரு  ட்விஸ்ட் . 1  இந்தியாவிற்கு  சுதந்திரம்  கிடைத்து  விடுகிறது, ஆனால்  தகவல்  தொழில்  நுட்பம்  வளராத  அந்த  ஊருக்கு  மட்டும்  விஷயம்  பரவவில்லை 2  வில்லனின்  அப்பா  தன்  மகனைக்கொன்றவனைப்பழி  வாங்கத்துடித்துக்கொண்டு  இருக்கிறார்

 இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  சுவராஸ்யங்களே    மீதி  படம் 


 நாயகனாக  கவுதம்  கார்த்திக். இதுவரை  பிட்டுப்படங்கள் , சி  செண்ட்டர்  ரசிகர்களுக்கான  டப்பாப்படங்களில்  மட்டுமே  நடித்து  தன்  பெயரையும் , அப்பா  கார்த்திக் , தாத்தா  முத்து ராமன்  பெயரையும்  கெடுத்து  வந்த  கவுதம்  கார்த்திக்  கண்ணியமான  ரோலில்  நடித்த  இரண்டே  படங்கள்  1  பத்து தல  2  AUGUST  16  , 1947


நாயகியிடம்  காதலை  வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே  உருகிக்காதலிக்கும்  அந்தக்கால  இதயம்  முரளி  ரோல்  இவருக்கு , கச்சிதமாக  செய்திருக்கிறார். வில்லனிடம்  ஆவேசம்  காட்டும்போது  ஆக்சன்  ஹீரோ  ஆகிறார்


கிராமிய  சிற்பம்  மாதிரி  நாயகியாக   ரேவதி  ஷர்மா , இவரது  முக  அழகுடன்  ஆடை  வடிவமைப்பும்  சேர்ந்து  கண்ணியமான  தோற்றத்தைத்தந்து  விடுகிறது. சிரித்த  முகத்தில்  ஸ்கோர் செய்பவர்  அழுகைக்காட்சிகளில்  அந்த  அளவு  எடுபடவில்லை 


வில்லனாக , வில்லனின்  அப்பாவாக  நடித்த  இருவருமே  வெறுப்பு  வர  வைப்பது  போல  கச்சிதமாக  நடித்திருந்தார்கள் 


போஸ்  வெங்கட் ,  நீலிமா  ராணி  இருவரும்  கெஸ்ட்  ரோல்  செய்திருக்கிறார்கள் 


 முதல்  10  நிமிடம்  படம்  ஸ்லோவாகப்போனாலும்  கதைக்குள்  சுலபமாக  நம்மை  இழுத்துக்கொண்ட  பின்  சுவராஸ்யம்தான்


ஷான் ரோல்டன் இசையில்  3  பாடல்கள்   கலக்கலான  கொண்டாட்டப்பாடல்களாக  செம  ஹிட்  அடித்திருப்பது  சிறப்பு, பின்னணி  இசை  பாடலுக்கு  அமைந்த  இசை  அளவு  செம  ஹிட்  ஆகவில்லை 


எஸ்  கே  செல்வகுமாரின்  ஒளிப்பதிவு  கிராம  மக்களின் யதார்த்த  முகங்களைப்பதிவு  செய்ததிலும்  நாயகியின்  அழகை  உள்வாங்கிய  விதத்திலும்  கவனம்  பெறுகிறது  

ஆர்  சுதர்சனின்  எடிட்டிங்கில்  144  நிமிடங்கள்  ட்யூரேசன்  வருமாறு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார், கதை  , திரைக்கதை , இயக்கம்  என  என் எஸ்  பொன்குமார்  கச்சிதமாகப்பணியாற்றி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்  ( என் எஸ்  பொன்குமார் )



1  நாட்டுக்கு  சுதந்திரம்  கிடைத்த  விஷயத்தை  சொல்லிவிடக்கூடாது , ஊர்  மக்களுக்கு  தெரிந்து  விடக்கூடாது  என  ஒரு  நபரை  வில்லன்   நாக்கை  வெட்டி  அனுப்புவது  கொடூரமாக  இருந்தாலும்  அந்த  நபர்  ஊர்  மக்களிடம்  விடுதலை  கிடைத்த  விஷயத்தை  சொல்ல  முற்படும்  காட்சி  காமெடியாக  படம்  பிடித்த  விதம் 


2  வில்லன்  நாயகியின்  கழுத்தில்  கால்  வைத்து  அழுத்தும்போது  நாயகன்  எண்ட்ரி  கொடுத்து காலை  ஒரே  வெட்டாக  வெட்டும்  காட்சி  பாகுபலியை  நினைவு  படுத்தினாலும்  தியேட்டரில்  கைதட்டலை  அள்ளி  இருக்கக்கூடிய  காட்சி 


3   நாயகியின்  பெயரை , உருவத்தை  நாயகன்  தன்  நெஞ்சில்  பச்சை  குத்தி  இருப்பதை  நாயகி  உணரும் காட்சி   பவுனு  பவுனு  தான்  பட  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  நல்ல  செண்ட்டிமெண்ட்  சீன் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1    எங்களை  விட்ட  கோட்டிக்காரப்பயலே  ( ஹீரோ  வஞ்சப்புகழ்ச்சி  கோஷ்டிப்பாடல் )


2  நினைச்சா  இனிக்கற, நிலவா  மினுக்கற  மாயக்காரி (  டூயட்  மெலோடி ) 

3  கொட்டுங்கடா  ( கும்மாளப்பாட்டு )


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த  உலகத்துலயே  மிகப்பெரிய பயந்தாங்கோழிகள்  இந்தியர்கள் தான், அந்த  பயத்தோடயே  உங்க  உயிர்  பிரியனும் \\


2 நான்  ஊரை  விட்டுப்போகும்போதும்  மக்கள்  பயத்தோடதான்  இருக்கனும், நான்  ராஜா  மாதிரி  போகனும் \\


3  திடீர்னு  இந்தியர்களுக்கு  தைரியம்  வந்துடுச்சா| ? தைரியம்  வந்த மாதிரி  நடிக்கறாங்களா? 100  வருசம்  ஆனாலும்  ஆங்கில  மொழி  பேசறவங்களைக்கண்டாலே இந்தியர்கள்  அலறனும் 


4   அவன்  ஒரு  பிச்சைக்காரன் , சுடக்  கூடாது அதானே?

 இல்லை  அவன்  ஒரு  இந்தியன், நீங்க  அவனை  சுட  முடியாது  


5  குத்த  தைர்யம்  இல்லாதவன் கிட்டே  கத்தியைக்கொடுத்த  மாதிரி  சுதந்திரத்தின்  அருமை  தெரியாத  உங்களுக்கு  சுதந்திரம்  கிடைச்சா  என்ன  பண்ணப்போறீங்க ? 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  பெரிய  ஆங்கிலேய துரை ,  மெய்க்காபாளன்  அல்லது  காவல்ர்  யாரும்  அவனுக்கு  பாதுகாப்புக்கு  இருக்க  மாட்டாங்களா? நாயகன்  அவ்வளவு  ஈசியா  வில்லனின்  பங்களாவுக்குள்  காவலை  மீறி  வர  முடியுமா? 


2  வில்லனைக்கொன்ற  நாயகன்  முதலில்  வில்லனை  அவன்  வீட்டிலேயே  ஒளித்து  வைக்கிறான், பின்  வேறு  இடத்துக்கு  மாற்றும்போது  டெட்  பாடியை  நல்லா  கவர்  பண்ணி  கொண்டு  போகாம  பெப்பரப்பேனு  அப்படியா  கொண்டு  போய்  மாட்டிக்குவாங்க , அதுக்கு  டெட் பாடி  குடோன்லயே  இருந்திருக்கலாம் 


3  நாயகன்  தன்  காதலை  நாயகியிடம்  வெளிப்படுத்தலை  , அது  ஓக்கே  ஆனா  நாயகி  தானாக  முன்  வந்து  காதலிக்கும்போது  நாயகன்  ஓவர்  தியாகி  ஆக  தன்னைக்காட்டிக்கொள்வது  செயற்கை 


4  க்ளைமாக்ஸ்  காட்சி  ஊர்  மக்கள்  ஒன்று  திரண்டு  வீரர்களை மடக்குவது  சினிமாத்தனம் + செயற்கை 


5  வில்லனின்   காலை  நாயகன்  வெட்டுனதும்  அதிகப்படியான  ரத்த  இழப்பால்  உடனடியாக  மயக்கம்  தான்  வரனும் , ஆனால்  வில்லன்  நாயகன்  கூட  ஒத்தைக்காலுடன்  ஃபைட்  போடுவது  எல்லாம்  செம  காமெடி 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-   வெட்டும்  காட்சி  மட்டும்  தான். யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுவராஸ்யமான  பின்னணியில்  ஒரு  காதல்  கதை , தாராளமாகப்பார்க்கலாம்,. நாயகியின்  அழகு  + செம  ஹிட்  பாட்டு 3 க்காகவே  பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 


August 16 1947
Official poster of 16 1947.jpg
Directed byN. S. Ponkumar
Written byN. S. Ponkumar
Produced by
Starring
CinematographySelvakumar S. K.
Edited byR. Sudharsan
Music bySean Roldan
Production
companies
A. R. Murugadoss Productions
Purple Bull Entertainment
God Bless Entertainment
Release date
  • 7 April 2023
Running time
144 minutes
CountryIndia
LanguageTamil
Box officeest.₹1 crore[1]

Monday, May 08, 2023

THE TAILOR (2023) - துருக்கி - TERZI - வெப் சீரிஸ் விமர்சனம் ( மிஸ்ட்ரி த்ரில்லர் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

    


இஸ்தான்ஃபுல்லில்  நிகழ்ந்த  ஒரு  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாககொண்டு  எழுதப்பட்ட  திரைக்கதை  இது . 3  பாகங்களாக  எடுக்க  திட்டம்  இடப்பட்டிருக்கிறது , இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  முதல்  பாகத்தில்  மொத்தம்  7  எபிசோடுகள் . ஒவ்வொரு  எபிசோடும்  45  நிமிடங்கள் , ஆக  மொத்தம்  ஐந்தே  கால்  மணி  நேரம் 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பிரபலமான  டெய்லர் . ஈரோட்டில்  எப்படி  எலிகெண்ட்  டெய்லர் 1990 களில்  செம  ஃபேமஸோ  அது  போல  . டெய்லர்  என்றால்  கோடீஸ்வரர்  ரேஞ்சில்  வாழ்பவர். மெஷர்மெண்ட்   டேப்  வைத்து  அளக்க  வேண்டியதில்லை , சும்மா  கண்ணு  பார்த்தா  கை  அளவுகளைக்குறிக்கும்  அளவு  செம  டேலண்ட் . நாயகனின்  அப்பா  ஸ்வாதி  முத்யம் ( சிப்பிக்குள்  முத்து )  கமல்  போல  மன வளர்ச்சி  குன்றியவர். தாரே  ஜமீன்  பர்  ஹிந்திப்  பட  நாயகனின்  மகன்  போல   குறைபாடு  உள்ளவர் . அவரைப்பார்த்துக்கொள்ள பணி  ஆள்  நியமிக்க  இருக்கிறார்  நாயகன் 


வில்லன் பெரிய  தொழில்  அதிபர் ,  நாயகனின்  பால்ய கால  நண்பன். இவருக்கு  திருமணம்  நிச்சயம்  ஆகி  இருக்கிறது , மணப்பெண்  அழகி , ஆனால்  ஏழை . வில்லனின்  சைக்கோத்தனம்  நாயகிக்குப்பிடிக்கவில்லை . திருமணத்தில்  விருப்பம்  இல்லை 


 மணப்பெண்ணான  நாயகிக்கு  மணப்பெண் அலங்கார  உடை   ரெடி  செய்ய  நாயகன்  வரவழைக்கப்படுகிறார். வில்லனின்  குடும்ப  வழக்கப்படி  மணப்பெண்ணின்  முகத்தை  அந்நிய  ஆண்கள்  திருமண  நாள்  வரை  பார்க்கக்கூடாது  என்பதால்  மகாபாரதத்தில்  வரும் காந்தாரி போல  விழிகளை  கறுபுத்துணியால்  கட்டிக்கொண்டு  நாயகியைத்தொட்டுப்பார்த்தே நாயகன்  அளவு  எடுத்து  ஆடையை வடிவமைக்கிறான். நாயகன்  நாயகியை  நேரில்  பார்த்ததில்லை , ஆனால்  நாயகிக்கு  நாயகன்  முகம்  தெரியும் \


 வில்லனின்  பிடியில்  இருந்து  தப்பி  நாயகி  நாயகனின்  இருப்பிடத்துக்கு  வருகிறாள். நாயகனின்  அப்பாவை  கவனித்துக்கொள்ளும்  நர்ஸ்  வேலைக்கு  வந்திருக்கிறாள். தேர்வாகியும்  விடுகிறாள்


 அங்கே  நாயகியைக்காணாமல்  வில்லனின்  வீடு  அலோலகல்லோலப்படுகிறது . நாயகியைத்தேடி  ஆட்கள்  கிளம்புகின்றனர்  . வில்லனின்  மணப்பெண்  தான்  நம்மிடம்  இருக்கும்  நர்ஸ்  என்பது  நாயகனுக்குத்தெரியாது . நாம்  ஊரெல்லாம்  தேடும்  வருங்கால  மனைவி  நெருங்கிய  நண்பன்  வீட்டில்  தான்  இருக்கிறாள்  என்பது  வில்லனுக்குத்தெரியாது 


 இதற்குப்பின்  நிகழும்  சுவராஸ்யமான  சம்பவங்களே  திரைக்கதை


நாயகன்  ஆக ககாலே  உலுசே   ஆத்மார்த்தமான  அடக்கமான  நடிப்பு ,  அவரது  ஆடை  வடிவமைப்பு  அசத்துகிறது , பெண்கள்  புடை  சூழ  தொழில் நடந்தாலும்  கண்ணியம்  காட்டும்  லாவகம்  அழகு .நண்பனுக்கு  துரோகம்  செய்து  விட்டோம்  என்ற  குற்ற  உணர்வு ,  நாயகியை  வில்லனிடம்  இருந்து  காப்பாற்ற  வேண்டும்  எனற  துடிப்பு  அனைத்தும்  அருமை 


நாயகியாக  சிஃபானர்  கல்   குழந்தைத்தனமான   முகம் , இளவரசிக்கு  உண்டான  கம்பீரம்  எல்லாம்  கலந்த   சுவராஸ்யக்கலவை . நாயகனின்  அப்பாவை  கவனித்துக்கொள்ளும்  இடங்கள்  எல்லாம்  தாய்மையின்  பிரதிபலிப்பு , நாயகனுடன்  கொள்ளும்  காதலில்  நாசூக்கு  எல்லாம்  கவிதை 


வில்லனாக  சாலி  பேடம்கி. லூஸ்தனமான  கேரக்டர் , இவரது  கேரக்டர்  டிசைன்  சரி  இல்லாததால்  இவர்  மேல்  நாயகிக்கு  மட்டும்  தான்  பயம், வேறு  யாருக்கும்  பயம்  இல்லை . படம்  பார்க்கும்  ஆடியன்சுக்கும்  பயம்  இல்லை . அதுதான்  கேரக்டர்  ஸ்கெட்ச்சில்  ஒரு  சறுக்கல் 


நாயகனின்  அப்பாவாக  ஆல்கன்  சிம்சேக்  நல்ல  நடிப்பு , குழந்தையாக  வாழ்ந்திருக்கிறார்


 ஓப்பனிங்  சீனில்  வரும்  ஃபேஷன்  ஷோ  ஏற்பாடுகளில்  ஆர்ட்  டைரக்சன் , ஒளிப்பதிவு  இரண்டும்  அள்ளுகிறது 


இயக்கம்  செம்  கார்கி .  2மணி  நேரத்தில்  சொல்லி  விடக்கூடிய  கதையை  ஜவ்  மிட்டாய்  மாதிரி  இழ்த்து  விட்டார் 

நாயகன் - நாயகி  முத்தக்காட்சிகள்  இரு  இடங்களில்  உண்டு , அவர்களுக்கிடையே  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை , டீசண்ட்  வாட்ச்தான் 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  பிரேஸ்லெட்  விழுவதில்  மாட்டிக்கொள்வதில்  சிண்ட்ரெல்லா  ரெஃப்ரென்ஸ்  இருந்தாலும்  ரசிக்கத்தக்க  காட்சி 

2  நாயகன்  கண்கள்  கட்டப்பட்டு  இருக்கு ,, நாயகிக்கு  நாயகன்  தெரியும், நாயகனுக்கு  நாயகி  முகம்  தெரியாது . இது  இலக்கியத்தில்  பிரபலமான  கேரக்டரை  நினைவு படுத்தினாலும் சுவரா0்ஸ்யமான  திருப்பம் 


3   க்ளைமாக்சில் நாயகன் - வில்லன்  சோலோ  ஃபைட்  வைக்க  வாய்ப்பிருந்தும்  அதைத்தவிர்த்து  நாயகனை  அகிம்சை  வழியில்  நடத்தியது 


4  நாயகனின்  அப்பா - நாயகி  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  கவிதை 


  ரசித்த  வசனங்கள் 


1   பெற்றோருக்கு  தர்மசங்கடத்தைக்கொடுக்கும்  எந்தக்குழந்தையையும்  யாரும்  விரும்ப  மாட்டாங்க 


2  குதிரைகள்  அழகானவை , ஆனால்  அவை  அடுத்து  என்ன  செய்யும்னு  யாராலும்  யூகிக்க  முடியாது 


 யூ ஆர்  ராங். குதிரைகள்  ஏன்  அழகானவைன்னா  அவை  அடுத்து  என்ன  செய்யும்னு  யாராலும்  யூகிக்க  முடியாது   என்பதால் தான் 


பெண்களும்  அப்படித்தான் 


3  விசித்திரமான  ஒன்றை  அணுக  அலாதியான  அமைதி  தேவை 


4  எப்போதும் நல்லதையே  செய்யனும்க்றீங்க , ஆனா  எது  நல்லது ? எது   கெட்டது?னு  எப்படி  கண்டுபிடிக்கறது?


உன்  மனசைக்கேள் . அது  சொல்லும்


5  ஒரு  நேர்மையான  மனிதன்  எந்த  சூழ்நிலையிலும்  பொய்  சொல்ல  மாட்டான்


6  எல்லார்  உடைய  வாழ்க்கைலயும்  நல்லது  நடக்கும், ஆனா  அதுக்காக  நாம்  காத்திருக்கனும் 

7  பொய்  சொன்ன  வாய்க்கு  போஜனம்  கிடைக்காது  என்பது  ஒரு  வித  மூஅ  நம்பிக்கையே


8 எதிர்பாராத  தருணங்களில்  வாழ்க்கை  நமக்கு  சில  ஆச்சரியங்களைக்கொடுக்கும்


9  ஒரு  அழகான  பெண்ணின்  அருகில்  இருக்கும் ஆணால்  அவள்  கண்களைப்பார்த்துகொண்டு  சும்மா  இருக்க  முடியுமா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அப்பா  மேலே  மாடியில்  இருக்கிறார், வில்லன்  ஆன  மாப்பிள்ளை  கீழே  இருக்கிறார், நாயகியிடம்  இருந்து  ஃபோன்  வருது , வில்லனுக்குத்தெரியாமல்  பேசனும்னா  மடச்சாம்பிராணி  கூட  மேலே  இருந்து  கீழே  வந்து  பேச  மாட்டான், ஆனா  இவரு  பேசி  மாட்றாரு


2   நாயகியை  அந்நிய  ஆண்கள்  பார்க்கக்குடாதுன்னா  நாயகியின்  அளவு  மாதிரி  உடையைத்தந்து  அதில்  இருந்து  ஆடை  வடிவமைக்கலாமே? இப்படியா  மணப்பெண்னை  தடவ  விடுவார்கள்?

3  இவ்வளவு  மஞ்சள்  மாக்கான்  வில்லனை  சமீபத்தில்  பார்த்ததில்லை 


4  நாயகன் - நாயகி - வில்லன்  இந்த  முக்கோண  மோதலை  மட்டும்  சொன்னால்  2  மணி  நேரத்தில்  முடிக்கலாம், ஏகபட்ட  ஃபிளாஸ்பேக்  சீன்கள்  வைத்து  இழுத்து  விட்டார்கள் 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகன் - நாயகி க்குக்கூட  அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சிகள்  இல்லை , ஆனால்  நெட்  ஃபிளிக்ஸ்  தயாரிப்பு  என்பதால்  கம்பெனியின்  கவுரவத்தை  காப்பாற்ற, கட்டிக்காக்க  ஓப்பனிங்  சீனில்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாத  ஒரு  ஓப்பனிங்  சீன்  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரொமாண்டிக்  த்ரில்லர்  பார்க்க  விரும்பும்  ரசிகர்கள் , நாயகியின்  அழகைக்காண  விரும்பும்  ரசிகர்கள்  பார்க்கலாம் ,. ரேட்டிங்  2.5 / 5 




The Tailor
TheTailorSeriespostermainimg5991.jpg
Also known asTerzi
Genre
Written by
  • Rana Mamatlıoğlu
  • Bekir Baran Sıtkı
Directed byCem Karci
Starring
Music byFırat Yükselir
Country of originTurkey
Original languageTurkish
No. of seasons3 (planned)
No. of episodes7[2]
Production
ProducerOnur Guvenatam
Production companyOGM Pictures
Release
Original networkNetflix
Original release2 May 2023

Sunday, May 07, 2023

PRANAYA VILASAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ ஜீ 5


    பிரணய விலாசம்  என்றால்  காதல்  முகவரி  என  அர்த்தம் . பரத்  நடித்த  காதல் , அஜித்  நடித்த  முகவரி  இரண்டு  படங்களையும்  இணைத்தால்  இந்த  டைட்டில்  வருகிறதே? கதையும்  அப்படியோ  என  நினைக்க  வேண்டாம் .,இது  வேறு  மாதிரியான  கதை . மிகக்குறைந்த  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இப்படம்  முதல்  10  நாட்களில்  2  கோடி  வசூலைக்கொடுத்து  இருக்கிறது .2023  ஃபிப்ரவரி 24  ம்  தேதி  திரை அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது 3/5/ 2023  முதல்  ஜீ  5  ஓ டி  டி  யில்  காணக்கிடைக்கிறது 


ஒரு  ஆணின்  பல  காதல்களைச்சொன்ன  படங்களான சேரனின்   ஆட்டோகிராஃப் ( தமிழ் )மலர்  டீச்சர்  சாய் பல்லவியின்  பிரேமம் ( மலையாளம்)  ஆகிய படங்கள்  பிரம்மாண்ட  வெற்றி  பெற்றதும்,   திருமணம்  ஆன  ஒரு  பெண்ணின் ஒரே  ஒரு  முந்தின  காதலைச்சொன்ன  சொல்லாமலே  சசி  இயக்கிய  பூ படம்  தோல்வி  அடைந்ததும்  வரலாறு. இந்தப்படம்  தரமான  படமாக  இருந்தாலும்  வசூல்  ரீதியாக  பிரமாத  வெற்றி  பெறாததற்கு  ஆணாதிக்க மனப்பான்மை   ஒரு  காரணமாக  இருக்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு  பாடகன், இசையில்  ஆர்வம்  உள்ளவன், பட்டதாரி ஆனால்  அப்பாவின்  கட்டுப்பாட்டால்  அவனால்  அவன்  மனசுக்குப்பிடித்த  சப்ஜெக்டில்  படிக்க  முடியவில்லை .  இவனுக்கு  தோல்வி  அடைந்த  ஒரு  காதல்  உண்டு , இப்போது  புதிதாக  ஒரு  பெண்ணைக்காதலிக்கிறான்


நாயகனின்  அப்பா  ஒரு    அரசாங்க  அதிகாரி , கிராம  அதிகாரி. அவர்  பல  வருடங்களுக்குப்பின் காலேஜ்  ரீ யூனியன்  சந்திப்பில்  முன்னாள்  காதலியை  சந்திக்கிறார். 96  படத்தில்   வருவது  போல  இருவரும்  சந்தித்து  தங்கள்  முன்  தின  காதல்  பற்றி  கருத்துக்களை  பகிர்கிறார்கள் 


 நாயகனின்    அம்மா, திடீர்  என  இறந்து  விடுகிறார். அவரது  டைரி  அப்போதுதான்  காணக்கிடைக்கிறது . அவ்ரது  வாழ்க்கையிலும்  ஒரு  முதல்  காதல்  இருக்கிறது  என்பதை  உணர்ந்து  ஆரம்பத்தில்  அப்பா , மக்ன்  இருவரும்  அதிர்ச்சி    அடைந்தாலும்   காதலனைத்தேடி  இருவரும்  பயணப்படுகின்றனர் 


 இறுதியில்  அவர்கள்  சந்திப்பு நிக்ழ்ந்ததா? என்ன  நடந்தது  ? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அர்ஜூன்  அசோகன்  பாந்தமாக  , அமைதியாக  நடித்திருக்கிறார், அப்பாவுடனான  முரண்கள்  இருந்தாலும்  அம்மாவின்  மறைவுக்குப்பின்  இருவரும்  ஒன்று  சேர்ந்து  பயணிப்பது  அருமை 


நாயகனின்  அப்பாவாக  மனோஜ்  கே யூ  முரண்பாடான  கேரக்டரில்  நடித்திருக்கிறார்.  என்  மனைவி  டைப்பிகல்  ஒயிஃப்  என  அலட்சியமாகக்கூறுவதும்  தன்  முந்தைய  காதலை  நியாயப்படுத்துவதும்  தன்  மனைவியின்  முதல்  காதல்  பற்றி  தெரிய  வந்ததும்  அதிர்ச்சி  ஆவதும்   சிறப்பான  நடிப்பு  


நாயகனின்  அம்மாவாக ஸ்ரீதன்யா  பாவமான  முகமே  பாதி  நடிப்பை  வழங்கி  விடுகிறது . இவரது  இளமைத்தோற்றத்தில்  அதாவது  ஃபிளாஸ்பெக் கில்; அனஸ்வரா  ராஜன்  இளமை  பொங்கும்  ஊற்றாக  கதைக்கு  ஜீவன்  சேர்த்து  இருக்கிறார் 


மியா  ஜார்ஜ் , மம்தா  பைஜூ , சபீதா  ஜார்ஜ்  என  அனைத்துப்பெண்  கேரக்டர்களும்  அவரவர்  பாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கின்றனர்   


முதல்  பாதி  திரைக்கதை க்கும் பின்  பாதி   திரைக்கதை  அமைப்புக்கும்  ஏகப்பட்ட  வித்தியாசம் , நாம்  யூகிக்க  முடியாத  பாதையில்  திரைக்கதை  பயணிப்பது  சிறப்பு 


ஷினோஜின்  ஒளிப்பதிவு  3  வெவ்வேறு  கால  கட்டங்களில்  கதை பயணிப்பதற்கு  ஏற்ப  கலர்  டோன்  மாறுவது  அழகு . பினு  நெப்போலியன்  எடிட்டிங்கில்  இரண்டே  கால்   மணி  நேரப்படமாக  தந்திருக்கிறார்


ஷான்  ரஹ்மான்  இசையில்  பாடல்கள்  மெலோடி  தரம் . பின்னணி  இசை  சிறப்பு 


  


சபாஷ்  டைரக்டர் ( நிகில்  முரளி )


1  முதல்  காதல்  என்பது  எல்லோர்  வாழ்விலும்  உண்டு , அவர்களால்  மறக்க  முடியாத  அங்கமாக  மாறி  விடும்  எனும்  கருத்தை  பதிவு  செய்த  விதம்  அருமை 


2  நாயகியின்  இரண்டாவது  காதலி  தன்  பெற்றோரிடம்  அவர்கள்  திருமணத்துக்கு  முன்  யாரையாவது  காதலித்து  இருக்கிறார்களா? என  கேள்வி  கேட்கும்போது  இருவரும்  இல்லை  என  பதில்  சொன்னாலும்  அன்றைய  இரவு  இருவருக்கும்  உறக்கம்  இல்லாத  இரவாக  அமைவதும் , முதல்  காதலை  உணர்வதும்  அருமையான  குறியீடு 


3   எப்போதும்  சீரியல் , சமையல்  என  இருக்கும்  நாயகனின்  அம்மாவிற்கான  ஃபிளாஸ்பேக்  காதலில்  கவிதைத்தனம் 


4  க்ளைமாக்சில்  தன்  அப்பாவிற்குத்தெரியாமல்  அம்மாவின்  காதல்  டைரியை  மகன்  அம்மாவின்  காதலனிடம்  ஒப்படைக்கும்  காட்சி 



ரசித்த  வசனங்கள் 


1  நான்  அவ  கூட  எந்த  தொடர்பும்  வெச்சுக்கலை , அவ  மெசேஜூக்கு  ரிப்ளை  பண்ணுனேன், என்  ரிப்ளைக்கு  அவ  மெசேஜ்  செஞ்சா  அவ்ளோ  தான்


2  இந்தப்பொண்ணுங்க  கிட்டே  எதையும்  வெளிப்படையா  பேச  முடியலை , பேசவும்  கூடாது 

3    இது  காலேஜ்  ரீ யூனியனா? அங்க்கிள்ஸ்  ரீ யூனியனா?


4 சரக்கடிக்க  காரண  காரியம்  தேவை  இல்லை 

5  ஒயிஃப்க்குத்தெரியாம  எக்ஸ் கேர்ள்  ஃபிரண்ட்ஸ்  கூட  காண்டாக்ட்ல  இருப்பது  தப்பா ? 


இதுக்குப்பேருதான்  எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  லைஃப் . பச்சையாச்சொல்லனும்னா  கள்ளக்காதல் 


6   டியர் , நைட்  டைம்ல  நீ  செம  அழகு 


 அடேய் , அப்போ  பகல்ல??


 அப்பவும்  தான் , ஆனா  நைட்ல  எக்ஸ்ட்ரா 


7  காதலித்த  பின் நீ  அவனைப்பற்றி  முழுசா  தெரிஞ்சுக்கிட்டே.  முழுசா  தெரிஞ்சுக்கிட்ட  பின்  நான்  அவனைக்காதலிக்கிறேன், ரெண்டுக்கும்  வித்தியாசம்  இருக்கு 


8   தெர்  ஈஸ்  நத்திங்  மோர்  தன்  ஃபர்ஸ்ட்  லவ்   (  முதல்  காதலை  விட  சிறந்தது  வேறெதுவும்  இல்லை ) 


9   நாம  நினைச்சச்  மாதிரிதான்  ஒவ்வொருவர்  கேரக்டரும்  இருக்கும்னு  சொல்லிட  முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  அம்மாவின்  ஃபிளாஸ்பேக்  லவ் ஸ்டோரியில்  காதலன்  குறிப்பிட்ட  நேரத்துக்கு  குறிபிட்ட  இடத்துக்கு  வர  முடியாததால்  ஓடிப்போக  முடியாமல்  போவது , காதலன்  போலீஸ்  கேசில்  மாட்டுவது  எல்லாம்  ஆல்ரெடி 1998ல் கேஎஸ்  அதியமான்  இயக்கத்தில்  ஆர்  பார்த்திபன் - பிரகாஷ் ராஜ் - தேவயானி  நடிப்பில்  வெளிவந்த  சொர்ணமுகி  யில்  வந்தாச்சு 

2  நாயகனின்  அப்பா  தன்  முன்னாள் கேர்ள் ஃபிரண்டுடன், நாயகன்  இன்னாள்  கேர்ள்  ஃபிர்ண்டுடன்  தனி  தனி  ஜோடி  சேர்த்து  ஒரே  தியெட்டருக்கு  வருகிறார்கள் . நாயகன்  வந்தது  ஓக்கே , அனால்  நாயகனின்  அப்பா  அவர்  குடி  இருக்கும்  வீட்டுக்கு  அருகில்  இருக்கும்  தியேட்டருக்கு  வருவது  ரிஸ்க்  ஆச்சே?  தெரிந்தவர்கள்  பார்க்க  மாட்டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்களைக்கவரும்  படம் , பெண்ணின்  உணர்வுகளுக்கு  மதிப்பளிக்கும்  திரைக்கதை   அமைத்து இயக்கி  இருக்கிறார்  நிகில்  முரளி  முழுப்படமும்  ஸ்லோவாகத்தான்  போகும், பொறுமையுடன்  பார்க்க  வேண்டும் , ரேட்டிங் 2. 75 / 5 




Pranaya Vilasam.jpg
Theatrical release poster
Directed byNikhil Muraly
Written byJyothish M
Sunu AV
Produced by
  • Siby Chavara
  • Renjith Nair
Starring
CinematographyShinoz
Edited byBinu Nepolean
Music byShaan Rahman
Production
company
Green Room Productions
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageMalayalam