Showing posts with label நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் - கல்கி இதழ் 12/5/2023. Show all posts
Showing posts with label நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் - கல்கி இதழ் 12/5/2023. Show all posts

Friday, May 12, 2023

நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் - கல்கி இதழ் 12/5/2023

 


வாக்கிங்  போகின்ற நபர்களை பலர்  கிண்டல்  செய்வதை  நான்  பார்த்திருக்கிறேன். என்னப்பா? சுகரா? டாக்டர்  நடக்கச்சொன்னாரா? அடப்பாவமே!  என்பார்கள் . நடை  என்பது   உடல்  ஆரோக்கியத்திற்கு மிக  முக்கியமான  , எளிமையான , செலவில்லாத  பயிற்சி. ஜிம்முக்குப்போகத்தேவை  இல்லை .வீட்டின்  மொட்டை  மாடியிலோ ,பார்க்கிலோ, பீச்சிலோ  எங்கு  வேண்டுமானாலும்  நடக்கலாம்.உடலின்  மெட்டபாலிசம்  மேம்பட  நடைப்பயிற்சி  மிக  மிக  அவசியம்


எவ்வளவு  தூரம்  நடக்க  வேண்டும்?


பொதுவாக டாக்டர்  அட்வைஸ்  சராசரியாக  தினசரி  நான்கு  கிலோ மீட்டர்  நடப்பது  நல்லது. வெளி நாடுகளில்  இப்போது தினமும் 10,000  ஸ்டெப்ஸ்  என  கணக்கு  பார்த்து  நடக்க  சொல்கிறார்கள்., அதாவது  எட்டு  கிமீ. . இன்று  தான்  புதியதாக  ந்டை  பயிற்சிஆரம்பிக்கிறீர்கள்  எனில்  எடுத்த  உடனே  அதிக  தூரம்  நடக்க  வேண்டாம், முதலில்  2  கிமீ  தூர்ம்  என  இலக்கு  வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம்  கொஞ்சமாக  அதை அதிகப்படுத்துக்கொள்ளலாம்


வாக்கிங்  ஆப்  எதற்கு?


 சமூக  வலைத்தளங்களில்  தினசரி வாக்கிங்  அப்டேட்டை  பதிவு  செய்வதால்  நமக்கு ஒரு  தன்னம்பிக்கை  கிடைக்கும், ஓபி  அடிக்க  முடியாது. அடடா, இன்று  அப்டேட்  செய்யாவிட்டால்  எல்லோரும்  கேட்பார்களே  என்ற  நிலைக்காகவாவது  நடப்போம்.  ப்ளே  ஸ்டோர் ல போய்  கூகுள்  ஃபிட் ,  மீ  ஃபிட் ,  என  டைப்  செய்தால்  ஏராளமான  வாக்கிங்  ஆப் கள்  வரும், அதில்  ஏதாவது  ஒன்றை த்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,  ப்ளூ  டூத், ஜிபிஎஸ் , நெட்  இம்மூன்றையும்  ஆன்  பண்ணிக்கொள்ள  வேண்டும்



எப்படி  நடக்க  வேண்டும் ?


கை , கால்களை  நன்கு  வீசி அகலக்கால்  வைத்து  நடக்க  வேண்டும் , நடை  வேகம்  10  நிமிடங்களுக்கு  1  கிமீ  தூரம்  கடப்பது  போல்  இருந்தால்  நல்லது . ஆரம்ப நிலையில்  15  நிமிடம்  ஆகும். போகப்போக , பழகப்பழக  அந்த  15  நிமிடங்கள்  என்பது  `14 , 13  என  குறைந்து  கொண்டே  வ்ரும் . 10  நிமிடங்களில்  ஒரு  கிமீ  தூரம்  நடக்கும்போது  வியர்வை  நன்றாக  வெளி  வரும் . பேசிக்கொண்டே  நடக்கக்கூடாது , சிலர்  நண்ப்ர்களிட்ம் அரட்டை  அடித்துக்கொண்டோ , செல் ஃபோனில்  பேசிக்கொண்டோ  நடப்பார்கள் . இது  தவிர்க்கப்பட  வேண்டும் 


என்னென்ன நன்மைகள் ?


  உடல்  எடை  குறையும், வெயிட் லாஸ்  பிராசஸ் ல  நடைப்பயிற்சி  முக்கியப்பங்கு  வகிக்கிறது. அதிக  ரத்த  அழுத்தம்  உள்ளவர்கள்  ஹை  பிள்ட்  பிரஷர்  உள்ளவர்கள் , சுகர்  இருப்பவர்கள்  நிச்சயம்  தின்சரி  நடக்க  வேண்டும்,  எந்த  வித  நோய்க்குறைப்பாடுகள்  இல்லாதவர்களும  ஆரோக்யம்  மேம்பட  தினசரி  நடக்க  வேண்டும்


வாக்மேனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே  நடக்கலாம், அல்லது  அலை  பேசியில்  ஏதாவது  ப்ட்டிமன்ற  நிகழ்வுகள் ,பெரியவர்கள்  உரைகள் , பேட்டிகள் இதை  ஒலி வடிவில்  கேட்டுக்கொண்டே  நடக்கலாம்,  ஒளி  வடிவில்  பார்த்துக்கொண்டேநடக்கக்கூடாது 


எப்போது  நடக்கலாம்?


  பெரும்பாலும்  காலை  எழுந்து  காலைக்கடன்களை  முடித்து  விட்டு  வெறும்  வயிற்றில்  நடப்பதே  நல்லது .ட்ரெட்  மில்லில்  நடப்பதை  விட  ஓப்பன்  பிளேசில்  மரங்கள்  அடர்ந்த  பகுதியில்  நடப்பதே  நலல்து . மலை  பிரதெசங்களில்  வாழ்பவர்கள்   ஹில்ஸ்  வாக்  போவது  சுத்தமான  காற்றை  சுவாசிக்க  உகந்தது . காலையில்  நேரம்  அமையாதவர்கள்  மாலையில்  நடக்கலாம் . இரவு  உணவு  முடித்து  விட்டு உடனே  நடக்கக்கூடாது . மதிய  வேளை  உச்சி  வெய்யிலில்  நடப்பதைத்தவிர்க்க  வேண்டும் 


வெறும்  காலில்  நடக்கலாமா?


 நம்  வீட்டு  தோட்டம், அல்லது  வீட்டின்  மொட்டை  மாடி  எனில்  முள்  இல்லாத  சுத்தமான  இடமாக  இருந்தால்  வெறும்  காலில்  நடந்தால்  நல்லது . அப்படி  இல்லாமல்  வெளியே நடப்பது  எனில்  வாக்கிங்  ஷூ  போட்டுக்கொண்டு  நடப்பது  நல்லது .  ஸ்போர்ட்ஸ்  கடைகளில்  வாக்கிங்  ஷூ 500  ரூபாய்  முதல் 600  ரூபாய்  விலையில்  கிடைக்கும். டைட்டான  உடைகள்  அணியாமல்  தளர்வான  உடைகள்  அணிந்து  வாக்கிங்  போவது  நல்லது