Saturday, April 22, 2023

கல்யாண சமையல் சாதம் (2013) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் , யூ ட்யூப் , ஜியோ சினிமாஸ்


  குறும்படங்கள்  பல  எடுத்து  ஃபிலிம்  இன்ஸ்ட்டிடியூட்டில்  பல  விருதுகள்  பெற்ற  இயக்குநர்  ஆர் எஸ்  பிரசன்னா இயக்கிய  முதல்  படம்  இது . ரிலீஸ்  ஆன  போது  மீடியாக்களின்  பாராட்டைப்பெற்ற  இப்படம்  ஹிந்தியில் ரீமேக்  செய்யப்பட்டு தமிழை  விட  அதிக  வெற்றி  பெற்றது . ஆயுஷ்மான்  குரானா - பூமி பட்னாகர்  நடிப்பில் 2017 ஆம்  ஆண்டு சுப் மங்கள்  சாவ்தான்  என்ற  பெயரில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படத்தையும்  இதே  பிரசன்னா தான் இயக்கினார் . அச்சமுண்டு  அச்சமுண்டு  படத்தை  இயக்கிய  அருண்  குமார்தான்  இந்தப்படத்தின்  தயாரிப்பு . 2018 ஆம்  ஆண்டில்  இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  இந்த  இந்திப்படம்  சிறந்த  வசனத்துக்கான விருதைப்பெற்றது   நடிகர்  பிரசன்னா  சினேகா  உடனான  திருமணத்துக்குப்பின்  வெளியான  முதல்  படம்  இது . இசை  அமைப்பாளர்  அரோரா  இதில் அறிமுகம்,  இயக்குநர்  பிரசன்னா , நடிகர்  பிரசன்னா  இருவரும்  வேறு  வேறு 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  வீட்ல  பொண்ணு  பார்க்கறாங்க , பெண்  பார்க்கும்  வைபவத்தில்  வீட்டுக்குப்போய்  லெட்டர்  போடறோம் என  மாப்பிள்ளை  முறுக்கை, ஜிலேபியை  மாப்ளையோட  பெற்றோர்  காட்ட  மாப்ளையான  நாயகன்  அங்கேயே  தேங்காயைப்போட்டு  உடைச்சுடறார். பொண்ணை  எனக்கு  ரொம்பப்பிடிச்சிருக்கு  என்கிறார்


அப்புறம்  என்ன? மேரேஜ் ஃபிக்ஸ்  ஆகுது . மேரேஜ்ஜூக்கு இன்னும்  ஆறு  மாசம்  தான் இருக்கு 


பொண்ணு  வீட்ல  பெற்றோர்  இல்லாத  தருணம்  நாயகன்  நாயகி  வீட்டுக்கு  வந்து அவரிடம்  அத்து  மீற  முயற்சிக்கிறார், ஆனா  முடியல.


 தனக்கு  உடல்  ரீதியா  ஏதோ  பிரச்சனை  இருக்குனு  நாயகன்  பயந்துக்கறார். சேலம்  சித்த  வைத்தியர் ,  டாக்டர் , பூஜை  புனஸ்காரம்  என  பிறகு  நடக்கும்  காமெடி கலாட்டாக்கள்  தான்  கதை 


ரொம்ப  சாதாரணமான  ஒரு ஒன் லைன், ஆனால்  தமிழ்  சினிமாவில்  இதற்கு  முன்  யாரும்  சொல்லத்தயங்கிய  பல  விஷயங்களை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்  இயக்குநர் 

கன்னட  இயக்குனர்  ஆன  காசிநாத்  இதற்கு  முன் இயக்கிய  முதல்  இரவே  வா  வா  என்ற  அடல்ட்  காமெடி  மூவியில்  இந்த  கதைக்கரு  அப்பட்டமாக  சொல்லப்பட்டிருக்கும், இந்தப்படத்தில்  பூடகமாக  , ஜனரஞ்சகமாக , நாசூக்காக  சொல்லப்பட்டிருக்கிறது 


நாயகனாக  பிரசன்ன   சார்மிங்  ரோல். அலட்டலே  இல்லாத  புன்னகை  முகம்.  ஃபைவ்  ஸ்டார்  மாதிரி  ரொமாண்டிக்  ஹீரோ  கதாபாத்திரத்திலும்  ஜொலிப்பவர் . வில்லன்  ரோலிலும்  அசால்ட்டாக  கை  தட்டல்  பெறுபவர் . இது  போன்ற  காமெடி  ரோலிலும்  பொருந்துவது  அபூர்வம்


 நாயகியாக  லேகா  வாஷிங்டன். வித  வித மான  காஸ்ட்யூம்ஸில்  இவர்  அழகு . அழும்  காட்சியில்  மட்டும்  எம் ஜி ஆர்  மாதிரி  முகத்தை  மூடிக்கொள்கிறார், மற்றபடி  குட் 


நாயகனின்  மாமனார்  ஆக  டெல்லி  கணேஷ்  கச்சிதம் , கிரெசி  மோகன்  கெஸ்ட்  ரோல் 


2  மணி  நேரத்தில்  கச்சிதமாக  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் 


 6  பாடல்கள் . அறிமுக  இசை  அமைப்பாளர்  போலவே  தெரியவில்லை . பிஜிஎம்  மிலும்  முத்திரை  பதித்து  இருக்கிறார்


 ஒளிப்பதிவு  கண்ணுக்கு  இதம் . நாயகியை  விட  நாயகனுக்குத்தான்  அதிக  க்ளோசப்  ஷாட்கள்  , அது  ஏனோ ?



சபாஷ்  டைரக்டர்


1  செக்  பவுன்ஸ்  ஆனதால்  கல்யாண  மண்டபம்  கேன்சல்  ஆன  விசயத்தை  நாயகனிடம்  சொல்லி   குல தெய்வ  கோயிலில்  கல்யாணத்தை  வைத்துக்கொள்ளலாம்  என  நாயகி  சொல்ல  அதற்கு  எதுவுமே  பேசாமல்  காரை  எடுக்கும்  நாயகன்  தன்  பெற்றொருடன்   நாயகி  வீட்டுக்கு  வந்து  நடத்தும்  டிராமா  அழகான  ட்விஸ்ட் 

2   மாமனார் -  மாப்பிள்ளை  இருவரும்  ஹோட்டலில்  ச்ந்திக்கும்  இண்டர்வல்  பிளாக்  காட்சி  காமெடி  கலக்கல்  


3 ஓப்பனிங்  சீன்ல  இருந்து  முதல்  30  நிமிடங்கள்  ஒளிப்பதிவாள்ர்  , எடிட்டர்  துணையுடன் இயக்குநர்  கையாண்ட  புதிய  யுக்தி  படமாக்கம் 


4   சின்ன  சின்ன  வார்த்தை  ஜாலங்கள்  கிரேசி  மோகன்  பாணி  வசனங்கள்  அருமை 


5  முழுப்படமும்  ஹம்  ஆப் கே  ஹேங்  கோன்  ஹிந்திப்படம்  போல  கல்யாண  கலாட்டக்களை  உள்ளடக்கியது  அருமை 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பல்லுப்போன  ராஜாவுக்கு  கரும்பு  தின்ன  ஆசை

2 காதல்  மறந்தாயடா

3 நவீன  கல்யாணம் 

4 மெல்லச்சிரித்த 

5  கல்யாணம்  2 . ஓ



  ரசித்த  வசனங்கள் 


1தமிழ்  நாட்டில்  பொட்டிக்கடைக்கு  அடுத்ததா  ,மூலைக்கு  மூலை நகைக்கடைகள் , ஜூவெல்லரிஸ்  வந்ததுக்குக்காரணம்  தாய்க்குலங்கள் தான் 

2   டேய் ,  கையை   வெச்சுட்டு  சும்மா  இருடா ,  அம்மா , அப்பா  இல்லைன்னா  எதை  வேணும்னா  தொடலாம்னு  நினைப்பா?


 மிஸ், ஆக்சுவலி  இதை  அவனுங்களுக்காகத்தானே  சோன்னீங்க? வாலு  பசங்க 


 ஏன்? உங்களை  சொல்லிக்காட்றதா  தோணுதோ ? 


3  உங்க்ளுக்கு  நல்ல  சென்ஸ்  ஆஃப்  ஹ்யூமர் , கிரேசி  மோகினினு  சொல்லலாம் 


4  திடீர்னு  ஓப்பனா  பொண்ணு  பிடிச்சிருக்குனு  சொல்றியே நம்ம  கிட்டே  இப்போ நெகோஷியேஷன்  பவரே  போச்சு 


 நாம  என்ன  பிஸ்னெஸ்  டீலா  பண்றோம்?


5 இந்தக்காலத்துல  மாப்பிள்ளை  பார்க்கறதுக்கு  முன்னேயே  மண்டபம்  புக்  பண்ணனும்


6 சமையல்காரரை  புக்  பண்ணலாம்னு  வந்தா  அவர்  தந்த  காஃபில  ஈ


சார், ஃபிக்ஸ்  பண்ணிடலாமா??


  நான்  வீட்டுக்குப்போய்  ஈ மெயில்  பண்றேன்


7   வீட்ல  யாரும்  இல்லை ,மெதுவாப்பேசு


  யாருமே  இல்லாத  வீட்ல  எதுக்கு  ரகசியமாப்பேசனும் ?


8  தப்பு  பண்ணினா  சாமி  கண்ணைக்குத்தும்கறது  நிஜம் தான்

‘ \

 சரி  கண்ணை  மட்டும்  குத்த  வேண்டியதுதானே? எதுக்கு .... ? 


9  பிரச்சனையை  தைரியமா  ஒத்துக்கறதுதான்  முதல்  மருந்து 


10   சின்ன  விஷயத்தை  நீ  பெருசு  பண்றே


 அப்படி  பண்ண  முடியல, அதான்  பிரச்சனை  டாக்டர்


11    உங்களுக்கு  வந்திருக்கற  பிரச்சனை பெருசா  ஒண்ணும் இல்லை , ஸ்ட்ரெஸ்  இண்ட்யூஸ்டு  எரக்டைல் டிஸ் ஃபங்க்‌ஷன்


 தமிழில்?


 வேணாம், இப்டியே  இருந்துட்டுப்போகட்டும் 


12  பைக் ஸ்டார்ட்  ஆகறதுல  பிராப்ளம்னா  சோக்  போடனும், லைஃப்ல  பிராப்ளம்னா  ஜோக்  போடனும், அதாவது  மனம்  விட்டு  சிரிக்கனும்


13   மாப்பிள்ளை  ஆகிட்டா  எல்லார்  கூடவும்  பேசலாம்  யார்   பக்கத்துல  வேணா  உக்காரலாம், ஆனா  கட்டிக்கப்போற  பொண்ணை  மட்டும்  கண்ல  காட்ட  மாட்டாங்க 


14 ஆசைப்பட்டது  ஃபாரீன்  மாப்ளை , ஆனா  கிடைச்சது  லோக்கல்  மாப்ளை , பாவம் பொண்ணு  என்ன செய்வா?


 சிம்பிள் , வெக்கெஷனுக்கு  வருசம்  ஒரு  தடவை  ஃபாரீன்  போவா


15 ஐ  லாஸ்ட்  மை  பால்ஸ் , ஐ  மீன்  , பீரோல வெச்சிருந்த  ஸ்ட்ரெஸ் ரிலீஃப்  பால்ஸ்  ஒண்ணையும்  காணோம் 


16  மாப்ளை , இப்போ  த  பால்  ஈஸ்  இன்  யுவர்  கோர்ட்


17  அரண்டவன்  கண்ணுக்கு  இருண்டதெல்லாம்  பேய்  என்பது  போல   என்னை  சுத்தி  ஒரே  டாபிக்  தான்  கன்  முன்னாடி  ஓடிக்கிட்டு  இருக்கு 


18  ஏண்டி  அழறே?


 எனக்கு  அழறதுக்குக்கூட  ஃப்ரீடம்  இல்லையா? 


19  நீ  தான்  என்னை  அவன்  கிட்டே  இருந்து  காப்பாத்தனும்


 என்ன  செஞ்சான்  அந்த  மடையன்?

 எதுவுமே  செய்யல, அதான்  பிரச்சனை 


20  ஒரு  பொண்ணோட புருசனா  ஆவது  ரொம்ப  சுலபம் , ஆனா  ஒரு  பொண்ணுக்கு  ஃபிரண்டா  ஆகறதுதான்  ரொம்ப  கஷ்டம்   


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நிச்சயிக்கப்பட்ட  மணப்பெண்ணை  வீட்டில்  தனியாக  விட்டு  விட்டு  2  நாட்கள்  பெற்றோர்  செல்வதெல்லாம்  ஓவர் . அட்லீஸ்ட்  துணைக்கு  உறவுக்காரப்பெண்ணை  விட்டு  விட்டுக்கூடவா  செல்ல  மாட்டார்கள் ?


2   இந்த  இண்ட்டர் நெட்  யுகத்தில்  நாயகன்  தன்  பிரச்சனைக்கான  தீர்வு  உளவியல்  சார்ந்ததே  என்பதை  உணராமல்  இருப்பது 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வேண்டுமே  என்பதற்காக  வலிய திணிக்கப்பட்ட  அந்த  காட்சி  காமெடிக்குதான்  என்றாலும்  ஒட்டவில்லை   


4  படம்  போட்ட  முதல்  30  நிமிடங்களில்  கதை  என்ன?  இனி  என்ன  ஆகும்,? க்ளைமாக்ஸ்  என்னவாக  இருக்கும்  என்பது  கம்ப்ளீட்டாக  தெரிந்து  விடுகிறது . வில்லன்  இல்லை , ட்விஸ்ட்  இல்லை , எனவே  மீதி  ஒன்றரை  மணி  நேரம்  ஆடியன்சை  ஹோல்டு  பண்ண வைப்பது  மிக  சிரமம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  இது  யூ / ஏ  படம். காட்சி  ரீதியாக  கண்ணியமாகவும், வசன  ரீதியாக  பூடகமான  டபுள்  மீனிங்குகளும் உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கலகலப்பான  படம் , ஏ  செண்ட்டர்  ஆடியன்ஸ்  ரசிப்பார்கள் . இது  ஆண்களை  மட்டம்  தட்டும்  படம்  என்பதால் பெண்கள்  விரும்பிப்பார்க்கக்கூடும்   ரேட்டிங்  2. 5 / 5 



கல்யாண சமையல் சாதம்.jpg
சுவரொட்டி
இயக்கம்ஆர்.எஸ்.பிரசன்னா
எழுதியவர்ஆர்.எஸ்.பிரசன்னா
உற்பத்திஅருண் வைத்தியநாதன்
ஆனந்த் கோவிந்தன்
நடித்துள்ளார்பிரசன்னா
லேகா வாஷிங்டன்
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்
திருத்தியவர்சத்யராஜ் நடராஜன்
இசைஅரோரா
தயாரிப்பு
நிறுவனம்
எவரெஸ்ட் பொழுதுபோக்கு
மூலம் விநியோகிக்கப்பட்டதுஅபி டிசிஎஸ் ஸ்டுடியோஸ்
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
ஆர்பிபி பிலிம் பேக்டரி
வெளிவரும் தேதி
7 டிசம்பர் 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Friday, April 21, 2023

MAHESHUM MARUTIYUM (2023 )-மலையாளம் - சினிமா விமர்சனம்( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


1985 ல்  ராஜசேகர்  இயக்கத்தில்  ரஜினி -அம்பிகா  நடிப்பில்  வெளி  வந்த  படிக்காதவன்  படத்தில்  நாயகன்  தான்  ஓட்டும்  டாக்சியை  ஒரு  உயிருள்ள பொருளாகக்கருதி  அதனுடன்  அடிக்கடி  உரையாடுவான். கார்  மக்கர்  பண்ணும்போது  லட்சுமி , ஸ்டார்ட்  ஆகிடு  என  சொல்லும்  காட்சி  செம  ஃபேமஸ்.  1999 ல்  செல்வா  இயக்கத்தில் ஆர்  பார்த்திபன், மீனா, ரம்பா  நடிப்பில்  வெளி  வந்த  உன்னருகே  நான்  இருந்தால்  படத்தில் நாயகன்  ஒரு  காரை  தன்  சொத்தாகக்கருதி  அதை  பாதுகாப்பாக  வைத்திருப்பான். 2014 ல்  நாளைய  இயக்குநர்  புகழ்  அருண்  குமார்  இயக்கத்தில்  வெளியான  பண்ணையாரும்  , பத்மினியும்  படத்தில் கார்  ஒரு  முக்கிய கதாபாத்திரமாகவே  வந்தது . அந்தப்படம்  ரிலீஸ்  ஆகும்  முன்  டைட்டிலைப்பார்த்து  பத்மினி  என்பது  பண்ணையாரின்  ஆசை நாயகியோ  என  யூகித்தவர்  உண்டு . 


 மேலே  குறிப்பிட்ட மூன்று படங்களைப்போல  நாயகன்  ஒரு  காரை  தன்  உயிராகக்கருதும்  காட்சி அமைப்புகள்  கொண்ட  ஒரு  ஃபீல்  குட்  மெலோ  டிராமா  மூவியாக  இந்தப்படம்  அமைந்திருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1983 ஆம்  ஆண்டு  மாருதி  கம்பெனி  முதன்  முதலாக  மாருதி 800  எனும்  பிராண்டை வெளிக்கொணர்ந்தது மறைந்த  பாரதப்பிரதமர்  அமரர்  இந்திரா  காந்தி  அதை  வைத்திருந்தார்  பின்  ரூ  50,000  ரூபாய்க்கு  நாயகனின்  தந்தை  அந்தக்காரை  வாங்கினார். அந்த  ஊரில் அந்தக்கார்  மிக  பரவலாக  பேசப்பட்டது 


நாயகன்  சிறுவனாக  இருந்தபோது  நேசித்த  இரு  உயிர்கள்  1   இந்த  மாருதி 800   2  பள்ளித்தோழி  நாயகி 


பள்ளித்தோழி படிப்பைப்பாதியில்  விட்டுவிட்டு  டெல்லி  போய்  விட்டார். 


15  வ்ருடங்களுக்குப்பின்  நாயகி  தன்  சொந்த  ஊருக்குத்திரும்புகிறாள். நாயகனை  ச்ந்திக்கிறாள் . இருவருக்கும்  ஒருவர்  மீது ஒருவருக்கு  அன்பு  இருந்தும்  பரஸ்பரம்  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை 


 நாயகனின் நல்லது , கெட்டதுகளில்  அந்த  மாருதி  கார்  ஒரு  முக்கிய  அம்சமாக  விளங்கி  வருகிறது . ஒரு  கட்டத்தில்  மாருதி  கார்  நிறுவன்மே  நல்ல  விலை  கொடுத்து  அந்தக்காரை  வாங்க  முன்  வரும்போது   பொருளாதார நெருக்கடியில்  இருந்தும்  நாயகன் அதை  விற்க  மறுத்து  விடுகிறான் 


 இதில்  நாயகிக்கு  கோபம், பிராக்டிக்கலாக  நீ  இல்லை  உன்னுடன்  என்  எதிர்கால  வாழ்வு  எப்படி  இருக்குமோ  என  பயமாக  இருக்கிறது  என்கிறாள் 


 நாயகன்  காரை  விற்க  முடிவெடுத்தானா? நாயகியுடன்  இணைந்தானா? என்பது  க்ளைமாக்ஸ் ,  க்ளைமாக்ஸில்  இந்த  இரு  விஷயங்கள்  போக  எதிர்பாராத  ஒரு  திருப்பம்  இருக்கிறது 


மலையாளப்படங்களுக்கே  உரித்தான  ஸ்லோனெஸ்  இதிலும்  உண்டு  , 2  மணி  நேரம்  ஓடும்  படத்தில் முதல்  30  நிமிடங்கள்  ரொம்ப  ஸ்லோ. 


நாயகன்  ஆக ஆசீஃப்  அலி  கனகச்சிதமாக  நடித்திருக்கிறார். நம்ம  ஊரில்  சினேகா  போல  கேர்ளாவில்  இவரது  புன்னகைக்கு  என  ரசிகைகள்  பட்டாளம் உண்டு. அந்தக்கால  மோகன் , சுரேஷ்  போல  மென்மையான  முகச்சாயலில்  கோல்  அடிப்பவர் 


நாயகி  ஆக  மம்தா  மோகன்  தாஸ் .  இவரது  கேரக்டர்  டிசைனில்  சில  குழப்பங்கள் இருக்கின்றன . ஆனால்  இயக்குநர்  சொல்லிக்கொடுத்தபடி  கச்சிதமாகவே  நடித்திருக்கிறார்


நாயகனின்   அப்பா பாப்பேட்டன்  ஆக  மணியன்  பிள்ளை  ராஜூ  அருமையான  குணச்சித்திர  நடிப்பு .நாயகனின்  அம்மாவாக  திவ்யா  எம்  நாயர்  உருக்கமான  நடிப்பு


ஃபெய்ஸ்  சித்திக்  கின்  ஒளிப்பதிவில்  பல  காட்சிகள்  உயிரோட்டமான  கிராமத்தை  படம்  பிடித்திருக்கிறது லாங்க்  ஷாட்களில்  ஓடைகள்  , தோப்புகள்  ,   அழகு 


கேடர் பாடலுக்கான  இசை , பின்னணி  இசை  இரண்டிலும்  மெலோடியை  நம்பி  இருக்கிறார். ஜித்  ஜோசியின்  எடிட்டிங்கில்  இரண்டு  மணி  நேரத்தில்  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்கள் 


உண்மை சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சேது 


2023  மார்ச்  10  ல்   தியெட்டர்களில்  ரிலீஸ் ஆகி  பாசிட்டிவ்  விமர்சனங்களை  மீடியாக்களிலும், ரசிகர்களிடமும்  பெற்ற  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைமில்  ரிலீஸ் ஆகி உள்ளது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்கு  பெண்  பார்க்கப்போகும்  வைபவத்துல உடன்  வரும்  நண்பர்கள்  லட்டை  சியர்ஸ்  சொல்லி  சாப்பிட  அது  உதிர்ந்து  பூந்தி  ஆகும் தருணம், இவங்க  சரக்கு  பார்ட்டிகள்  என்று  தெரிய  வரும்  தருணம் 


2 நாயகனின்  அப்பா  திருவனந்தபுரம் காரில்  போக  முடிவெடுக்கும்போது  நாயகனின்  அம்மா க்ளைமெட்  சரி  இல்லை , ரயிலில்  போங்க  என்றதும்  காரை  விட்டு  இறங்கி  ரயிலில்  போக  முடிவெடுத்து  பின்  அதே  ரயில்  விபத்தில்  மாட்டி  உயிர்  இழந்ததும்  நாயகன்  மனதில்  அந்த  கார்  ராசியான  கார் , அதை  தவிர்த்தால் , ஒதுக்கினால்நட்டம் நமக்குத்தான்  என்ற  எண்ணம்   ஆழ்  மனதில்  ஊன்ற  காரணமாகும்  சம்பவமாக  அமைந்தது  அருமை 


3   நாயகனின்  காரைத்திருடியவன்  பின்  மனம்  மாறி  காரை  விட்டு  விட்டு  செல்லும்போது  4  லிட்டர்  பெட்ரோல்  போட்டிருக்கேன்  என  குறிப்பு   எழுதி  விட்டு  சென்ற  காட்சி  காமெடி 


4   நாயகனிடம்  காரை  வாடகைக்கு  எடுத்துச்சென்ற  நபர்  போலீஸ்  கேசில்  மாட்ட  காரில்  இருந்த  ஒரு  கேஸ்  காரணம்  என்ற  சூழலும், நாயகனும்  போலீசில்  மாட்டுவது  செம  காமெடி 


5   எதிர்பாராத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 

ரசித்த  வசனங்கள் 


1  படிக்கற பையன்  எங்கே  இருந்தாலும்  நல்லா  படிப்பான்  அது  பிரைவேட்டோ   கவர்ம்ண்ட்டோ ,,கான்வெண்ட்டோ,


2  ஒரு  நல்ல  மெக்கானிக்  வண்டியைப்பிரிச்சுப்பார்க்காம  மோட்டார்  ஓடும்  சத்தத்தை  வெச்சே  அதுல  என்ன  ஃபால்ட்னு கண்டு பிடிப்பான்


3  இவன்  டேலண்ட்க்கு  எங்கேயோ  இருக்க  வேண்டிய  ஆள் , நான்  விடுவனா? என  கிட்டே  இழுத்துக்கிட்டேன்


 முதலாளி, நம்மை  மீறி  ஒருத்தன்  மேலே  போக  நாம  விட்டுடுவோமா? 


4  நிலையான  வருமானம்    செட்  ஆனபின்  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  இருக்கேன்\

\

 அப்போ  இந்த  ஜென்மத்தில்  உனக்கு  கல்யாணம்  ஆகாது  


5  நீ  வெச்சிருக்கும்  கார்  சாதாரண  கார்  இல்லை , முன்னாள்  பிரதமர்  அமரர்  இந்திராகாந்தி  வெச்சிருந்த  கார்,  அது  ஒரு  சரித்திர  சம்பவம்,  எக்காரணம்  கொண்டும்  அதை வித்துடாதே


  சரித்திரம்னா  லைப்ரரில  கொண்டு  போய்  வைக்கவா? 


6   ஒரு  பெண்ணுக்கு  ஆணிடம்  என்ன  தேவை  1  பர்சனாலிட்டி 2  ஓரளவு  நகைச்சுவை  உணர்வு   3  பாதுகாப்பு  4   காதல்  5  அக்கறை


7  உயிர்  இல்லாத  ஒரு  காரையே  இவ்வளவு  சினெகமா பாதுகாப்பா  பார்த்துக்கற  நீ  உயிர்  உள்ள  ஒரு  பெண்ணை  எப்படி பார்த்துக்குவே? 

8  உன் வாழ்க்கைல  எனக்கு  ரெண்டாவது  இடம், அது  எனக்கு  வேண்டாம்


9  பிராக்டிக்கலாக  சிந்திக்காத  உன்னை  என்  வாழ்க்கைத்துணையா  ஏத்துக்கறதை  மறுபரிசீலனை  செய்யலாம்னு  இருக்கேன் 


10  நல்லது  நடக்குது  எனில்  எந்த  விஷயத்திலும்  விட்டுக்கொடுத்துப்போவதில்  தவறில்லை . எல்லா  காம்ப்ர்மைஸ்க்கும்  ஒரு விலை  உண்டு 


11  அன்றாடத்தேவைகளுக்கே  வழி இல்லாத  ஒருவனுக்கு  சாதனை , சரித்திரம் இதெல்லாம்  ஆடம்பரம் தான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


1  கார்  மெக்கானிக்  ஆன  நாயகன்  மற்றவர்கள்  காரை  பக்காவாக  ரெடி  செய்பவன். எக்ஸ்பர்ட். ஆனால்  தான்  பெண்  பார்க்கப்போகும்  வைபவத்தில்  கார்  ரிப்பேர்  ஆகிறது . அவரோட  காரை  கண்டிஷன்ல  வெச்சுக்க  மாட்டாரா? சும்மா  காமெடி  டிராக்கிற்காக  அப்டி  ஒரு  சீன். இருந்தாலும்  நெருடுது  


2  பெண்கள்  வசதியான  நபரை  விரும்புவார்கள்  என  இயக்குநர்  சொல்ல  வந்த  கருத்து  கூட  ஓக்கே  தான், ஆனால்  நாயகன்  வைத்திருக்கும்  கார்  பிடிக்கவில்லை , நல்ல  வச்தியான  கார் இருந்தால்  ஓக்கே  என  ஒரு  பெண்  நாயகனை நிராகரிப்பது  ஓவர் 


3   மெக்கானிக்கான  நாயகனைப்பார்க்க  2  பேர்  மெக்கானிக்  ஷாப்க்கு  வர்றாங்க, அப்போ  ஒரு  ஆள்  வேலை  செய்து  கொண்டு  இருக்க “ ஓனர்  எங்கே? என  கேட்க   “ என்  தலைக்கு  மேலே  என  சொல்லும்போது  கேமரா  க்ளோசப்  ஷாட்ல  இருந்து  லாங்  ஷாட்க்கு  மாறுது     நாயகன்  மேலெ  இருக்கார், ஆனால்  உள்ளே  வரும்  நபர்கள்  கண்ணுக்கு  தெரியும்  கோணத்தில்தான்  இருக்கார்’’


4நாயகனின்  அப்பா  50,000  ரூபாய்க்கு  வாங்கிய  காருக்கான  ஃபைனான்ஸ்  லோன்  வட்டியுடன் 4  லட்சம்  ரூபாய் என  நோட்டீஸ்  வருது, நாயகன்  திகைக்கிறார் அப்போதான்  முதல்  முறை  நோட்டீஸ்  வருதா? பல  முறை  அதாவது  1  லட்சம் , 2  லட்சம்  என  தொகை  வரும்போதெல்லாம்  அனுப்பி  இருப்பார்களே? எதுக்கு  நாயகன்  ஜெர்க் ஆகறார்?


5   பள்ளித்தோழனான  நாயகனை 15  வருடங்கள்  கழித்து  கோர்ட்  வாசலில்  சந்திக்கும்நாயகி  உன்  ஃபோன்  நெம்பர்    உன்  நண்பன்  கிட்டே  இருந்து  ஆல்ரெடி  வாங்கிட்டேன், அப்புறமா  ஃபோன்  பண்றேன்  என்கிறார். யாராவது  ஃபோன்  நெம்பர்  கிடைத்ததும்  ஃபோன்  பண்ணி  நலம்  விசாரிக்காமல்  திடீர்  என  நேரில்  கேப்  விட்டு  சந்திப்பார்களா? 


6  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  ஆளுக்கு  நாயகன்  தன்  காரை  வாடகைக்கு  விடுவது  எப்படி ? அப்படியே  காரோடு  ஆள்  எஸ்  ஆனால்   என்ன  பண்ணுவார்? 


7  லோன்  ட்யூ  கட்டாத  வண்டியை  ஃபைனான்ஸ் பார்ட்டி  சீஷிங்  ஏஜெண்ட்டை  வைத்து  சீஸ்  பண்ணலாம், கோர்ட் ஆர்டர்  தேவை  இல்லை . ஆனால்  இதுல  கோர்ட்  ஆர்டர்  இருக்கா?னு  எதிர்த்துக்கேட்கறாங்க 


8   தொடர்ந்து  3  ட்யூ  கட்டலைன்னாலே  வண்டியை  சீஸ்  பண்ணிடுவாங்க. ஆனால்  50,000  ரூபாய் மதிப்புள்ள  கார்  லோன்  4  லட்சம்  வட்டியோடு  ஆகும்  வரை  வேடிக்கை  பார்த்துட்டு  இருக்காங்க 


9  சீசிங்  ஏஜ்ண்ட்  வண்டியை  சீஸ்  பண்ணாமல்  இருக்க  இரண்டு  நாட்கள்  டைம்  தர்றாங்க . ஆனா  நாயகன்  அடுத்த  நாள்  காலை 10 மணி  வரை  டைம்  கேட்கறார். அதாவது  அவங்க  48  மணி  நேரம்  டைம்  தர்றாங்க , இவரு   24  மணி  நேரம்  டைம்  கேட்கறாரு


10   சீசர்  ஏஜெண்ட்  காரை  சீஸ்  பண்ண  வரும்போது  பார்ட்  பார்ட்  ஆக  கழட்டி  வைக்கப்பட்ட  உதிரி  பாகங்களைக்காட்டி  ஏமாற்றும்  ஹீரோ  அடுத்த  நாளே  கார்  ஷெட்டின்  வாசலில்  தன்  காரை  நிறுத்தி  வைத்திருக்கிறார். சீசர்  எஜெண்ட்  அதை  பார்காமல்  இருப்பாரா?


11   நாயகி  நாயகனுக்கு  வ்ட்டி  இல்லாக்கடனாக  3  லட்சம்  ரூபாய்  ஆறு  மாத  கால  அவகாச  கடனாக  தருகிறார். ஆனால்  நாயகனின்  காரை  விற்க  ஒரு  பார்ட்டியை  அழைத்து  வரும்போது  நாயகன்  மறுக்க  என்  காசை  எப்படி  திருப்பித்தருவே? என  வில்லி  போல  கேட்கிறார். அதான்  ஆறு  மாசம்  டைம்  இருக்கே? 


12    ஒரு  காட்சியில் நாயகனின்  கார்  செண்ட்டிமெண்ட்டைப்புகழ்ந்து  காரையே  இப்படிப்பார்ப்பவன்  காரிகையை  எப்படிப்பார்த்துக்குவே? என  சிலாகிக்கும்  நாயகி  இன்னொரு  காட்சியில்  வாழ்க்கை  முக்கியமா?? உயிர்  இல்லாத  கார்  முக்கியமா? என  கேட்பது  நாயகியின் கேரக்டர்  டிசைனில்  ஒரு  சறுக்கல் 


13  அந்த  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அதிர்ச்சியைத்தந்தாலும்  அந்த  எக்சிக்யூஷனில்  ஒரு  செயற்கைத்தன்மை  இழையோடுகிறது 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  ரெகுலராக  ரசித்துப்பார்ப்பவர்கள் , பொறுமைசாலிகள்  காண  வேண்டிய  ஃபீல்  குட்  மெலோ டிராமா . ரேட்டிங் 2. 75 / 5 




Maheshum Marutiyum
Maheshum-Marutiyum.jpg
Directed bySethu
Written bySethu
Produced byManiyanpilla Raju
Starring
CinematographyFaiz Siddik
Edited byJith Joshie
Music byKedar
Production
companies
  • Maniyan Pillai Raju Productions
  • VSL Film House
Distributed byGoodwill Entertainments
Release date
  • March 10, 2023
CountryIndia
LanguageMalayalam

Thursday, April 20, 2023

EVERYTHING EVERY WHERE ALL AT ONCE (2022)-அமெரிக்கன் மூவி -சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன், பிளாக் காமெடி ஆக்சன் த்ரில்லர் ) @சோனி லைவ்


ஆஸ்கார்  அவார்டு  வின்னிங்  ஃபிலிம்  என்றாலே  தனி  கெத்து தான். அது  போக  ஏகப்பட்ட  அவார்டுகளை  அள்ளிக்குவித்த  படம்  , சிறந்த  சயின்ஸ்  ஃபிக்சன்  படம், சிறந்த  ஆக்சன்  சீக்வன்ஸ். சிறந்த நடிகை  என  அவார்டு   பட்டியல்  மட்டும்  எ 4  ஷீட்டில்  2  பக்கங்கள்  வரும் . ஜாக்கி சான்  படங்களில் இணைந்து  நடித்தவர் தான் நாயகி. ஆக்சன்  காட்சிகள்  எல்லாம்  அள்ளும் . மொத்தம்  7  ஆஸ்கார்  அவார்டுகளை  அள்ளிய  படம். கமர்ஷியலாகவும்  செமயா  இருக்கும்


இந்தப்படத்தின்  கதை  புரிய  கொஞ்சம் சிரமமா  இருக்கும். எம் ஜி ஆர்  நடித்த  நீரும்  நெருப்பும்  படத்தில் நாயகன்  டூயல் ரோல். ஒருவருக்கு  ஏற்படும்  வலி , சந்தோஷம்  எல்லாம்  இன்னொருவருக்கும்   உண்டாகும். அது  போல  நாயகி  மல்ட்டி  யுனிவர்சில் அவரைப்போலவே  இருக்கும்  பலருடன்  கனெக்ட்  ஆகி  இருப்பார் . அதாவது  மல்ட்டி  யுனிவர்சில்  இருக்கும்  தீய  சக்தியை  போராடி  அழிக்க  அவர் எடுக்கும்  முயற்சிகள்  தான்  கதை . 12 பி  படத்தில்  நாயகன் 12 பி  என்னும்  பஸ்சை  பிடித்தால்  ஒரு  ட்ராக்ல  கதை  போகும், பஸ்சை  மிஸ்  பண்ணினா  இன்னொரு  டிராக்  கதை  என  மாறுபட்ட  இரு  கதைகள்  மாறி  மாறி  வரும்,  அது  போலவும்  இப்படத்தின்  திரைக்கதை  இருக்கும் 

    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி டீன்  ஏஜ்  வயசுலயே  அம்மா, அப்பா  வை  எதிர்த்து  காதலனுடன்  ஓடிப்போய்  திருமணம் செய்து  கொண்டவர்.நாயகி  ஒரு  லண்டரி கடையை  நடத்தி  வருகிறார். பெரிய  அளவில்  வருமானம் இல்லை . நம்ம  ஊரில்  எப்படி  போலிசைப்பார்த்தால்  பயப்படுவோமோ  அதே  மாதிரி  அங்கே  எல்லாம்  இன்கம்டாக்ஸ்  ஆஃபீசரைக்கண்டால்  அனைவருக்கும்  பயம், எல்லோரும்  கம்ப்பெல்சரி  டாக்ஸ்  கட்டி  இருக்க  வேண்டும் 


ஓடாத  இவர்களின் லாண்டரிக்கடைக்கு  டாக்ஸ்  கட்டுவது  தொடர்பாக  இன்கம்டாக்ஸ்  ஆஃபீசர்  நாயகியை  ஆஃபீசுக்கு  வரவைத்து  விசாரணை  நிகழ்த்துகிறார் 


அப்போது  ஒரு  திடீர்  திருப்பம் அவரது  கணவர்  நாயகியிடம்  சொல்கிறார். நான்  உன்  கணவன்  இல்லை , வேற  ஒரு  யுனிவர்ஸ்ளா  இருந்து வந்திருக்கேன்  என்கிறார். நாயகிக்கும்  படம்  பார்க்கும் நமக்கும்  ஒன்றும்  புரியவில்லை . இதற்குப்பின்  நிகழும்  அமளி  துமளி  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகியாக மிஷே  லியோ  . கலக்கலான  நடிப்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகட்டும், பிளாக்  ஹ்யூமர்  ஆகட்டும், முக  பாவனைகள்  காட்டுவதிலாகட்டும் பெண்  சிவாஜி  அல்லது  பெண்  கமல்  என  சொல்லலாம், 1992  ல்  ரிலீஸ் ஆன  ஜாக்கி  சானின்  சூப்பர்  காப்ஸ் , டுமாரோ  நெவர்  டைஸ்  படத்தில்  நடித்தவர் 


நாயகியின்  மகளாக  ஸ்டெஃப்னி  ஷூ   அதகளமான  ஆக்டிங்.ஆளவந்தான் ல  கடவுள்  பாதி  மிருகம்  பாதி  கலந்து  செய்த  கலவை  நான்  என  நந்து  கேரக்டர்  சொல்வது  போல  பாசிட்டிவ்  ஷேட்  நெகடிவ்  ஷேட்   இரண்டும்  கலந்த  ஒரு  கேரக்டர்  டிசைன் , சும்மா  புகுந்து  விளையாடி  இருக்கிறார் 

நாயகியின்  கணவனாக ஹீ  ஹை  க்வான்  அசத்தல்  ஆக்சன்  சீக்வன்ஸ்  நடிப்பு , இவர்  முன்னாள்  ஆக்சன்  கொரியோகிராஃபர் . இவர்  பல  படங்களில்  சின்ன  சின்ன  வேடங்களில்  நடித்திருந்தாலும்  இதில்  தான்  முக்கியமான  ரோல். ஜாக்கிசான்க்கு  சித்தப்பா  பையன்  போல  இருக்கிறார்  முக  சாயலில் 

9 பேர்  கொண்ட  குழு  விஎஃப் எக்ஸ்  டீம்  ஒர்க்  பண்ணி  இருக்கு. இதுல  முக்கிய  விஷயம் இவர்கள்  யாருமே  தொழில்  முறை  விஎஃப் எக்ஸ் ஆட்கள்  இல்லை  ஆன்  லைன்  கோர்சில்  படித்தவர்கள் தான். ஆனால்  குவாலிட்டி  பட்டாசாக  வந்திருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  ( டேனியல்  நெ1  + டேனியல்  நெ 2 ) 


1  ஒரு  படத்துக்கு  எடிட்டிங்  எவ்வளவு  முக்கியம்  என்பதை  உணர்த்தும்  படம்  இது எடிட்டர்  பால்  ரோஜர்ஸ்  இந்தப்பட  எடிட்டிங்கிற்காக  பல  விருதுகளை வென்றவர் 


2    25  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்ட  படம்  85  மில்லியன்  டாலர்களை  வசூலித்து  7  ஆஸ்கார்  அவர்ர்டுகள்  உட்பட  பல  விருதுகளை  வென்றது  ஒரு  சிறப்பம் சம். ஆஸ்கார்  அவார்டு  பெற்ற  பின்  ரீ ரிலீசில் 45  மில்லியன்  டாலர்கள்  ஆக  மொத்தம்  131  மில்லியன்  டாலர்  வசூல் 

3  இப்படத்துக்கு  திரைக்கதை எழுதி அதை  காட்சி  வடிவாகக்கொண்டு  வருவது  சாதாரண  விஷயம்  அல்ல, ஃபெண்டாஸ்டிக் ஒர்க்  டன்  பை  டைரக்டர்ஸ் 


  ரசித்த  வசனங்கள் 

1  என்னைவிட  வயசுல  பெரியவங்க  கூட  வெளில  போறப்ப  அவங்க  கிட்டெ  இருக்கும்  நல்ல  குணங்களை  நான்  ஃபாலோ  பண்ணுவேன்


2  அவ  ஹான்ஸ்ட்டான  மிஸ்டேக்ஸ்  மட்டும்  தான்  பண்ணுவா 


3  ஒவ்வொரு  நிராகரிப்பும் , ஒவ்வொரு  அவமானமும்  நம்மை  நம்  தரத்தை  மெருகேற்ற  உதவும் 


4   எதுவும்  முக்கியம் இல்லைனு  முடிவு  பண்ணிட்டா  வலி , அவமானம்  எதுவும்  இருக்காது 


5  முடியப்போற  வாழ்க்கை முடியாம  இழுத்துக்கிட்டு  இருந்தா  ஏதோ  சாதிக்க  வேண்டியது  பாக்கி  இருக்குனு  அர்த்தம் 


6   ஜூடோ  என்பது  ஒரு  தற்காப்புக்கலை . சண்டை  போடுவதற்காக  உருவாக்கப்பட்டது  அல்ல , உன்னை கப்பாற்றிக்கொள்ள  உருவாக்கப்பட்டது 


7  இந்த  உலகத்துல  எல்லாரும்  ஒரு  வட்டத்துல தான்  ஓடிக்கிட்டு  இருக்கோம், அதுல  நல்லதும்  இருக்கும், கெட்டதும்  இருக்கும் 

8  நம்ம  வாழ்க்கைல  ஒரு  சந்தோஷம்  போனா  இன்னொரு  சநதோஷம்  நிச்சயம்  வரும்


9  என்னதான் ஒருவருக்கு  ம்னசு  உடைஞ்சு  போய்  இருந்தாலும்  முயற்சி  செஞ்சா  நிம்மதியா  வாழ  முடியும் 


10   நான்  யாருக்கும்  உதவாத  யூஸ்லெஸ்  ஃபெலோ  ஆகிட்டேன்


 தனியா  இருந்தா  யாருக்கும்  பிரயோஜனம்  இல்லாதவளாத்தான்  இருப்பே


11   பொறுமையோடு  இருக்கறவங்களுக்கு  நல்லது  நடக்கும் 


12  எல்லாருக்கும்  எல்லாமும் எப்பவும்  கிடைக்காது , அப்படிக்கிடைச்சிட்டா  அதுல  எந்த  வித  ஆனந்தமும்  இருக்காது 





 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


படம்  முழுசா புரிஞ்சாதானே  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  கண்டு  பிடிக்க  முடியும், புரிஞ்சதே  அரை குறைதான், இதுல  எங்கே  மைனசை கண்டு  பிடிக்க?? 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் /- /இது / /18+ / ///மூவி /



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  / /ஆக்/சன்  பிரியர்கள்  அனைவரும்  தவறாமல்  காண  வேண்டிய  படம்  ரேட்டிங்  3 / 5 



Everything Everywhere All at Once
Everything Everywhere All at Once.jpg
Theatrical release poster
Directed byDaniel Kwan
Daniel Scheinert
Written by
  • Daniel Kwan
  • Daniel Scheinert
Produced by
Starring
CinematographyLarkin Seiple
Edited byPaul Rogers
Music bySon Lux
Production
companies
Distributed byA24
Release dates
  • March 11, 2022 (SXSW)
  • March 25, 2022 (United States)
Running time
139 minutes[1]
CountryUnited States
Languages
  • English
  • Mandarin
  • Cantonese
Budget$14.3–25 million[2][3]
Box office$139.1 million[4][5]

Wednesday, April 19, 2023

AAAHH BELINDA - OH BELINDA ( 2023) -துருக்கி - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


  தமிழ்  சினிமா வில் சைக்கோ  கேரக்டர்  ஏற்று  நடிப்பதில்  விற்பன்னர்கள்  மூவர். புரியாத  புதிர்  ரகுவரன் , கல்கி  பிரகாஷ் ராஜ் , நெஞ்சம் மறப்பதில்லை   எஸ் ஜே  சூர்யா .  இவை  போக  தான்  ஏற்று  நடிக்கும்  வேடங்களில்  அந்த  கேரக்டராகவே  மாறி  விடுபவர்கள்  பட்டியல்  பார்த்தால்  கமல் , விக்ரம்.  இது  போல  ஒரு  சினிமா  நடிகை  அந்த  கேரக்டராகவே  மாறினால்  என்ன  ஆகும் என்பதுதான்  இந்தப்படத்தின்  கதை 


1986ல்  ரிலீஸ்  ஆன  ஃபேண்ட்டசி  காமெடி  துருக்கிப்படமான  ஆ  பெளிண்டா  படம்  தான்  இப்போது    ஓ பெளிண்டா  என  ரீமேக்  ஆகி  உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  சினிமா நடிகை . ஒரு  குளியல்  சோப்  விளம்பரத்துக்கான  ஷூட்டிங்கில்  கலந்து  கொண்டிருக்கிறார். அப்போது  அவர்   தலைக்கு குளிக்கும்போது  ஷாம்பூ  போட்டுக்கொண்டே  தேய்த்துக்குளிக்க  வேண்டும் ,இதுதான்  ஷாட், ஆனால்  டேக்  ஓக்கே  ஆகவில்லை , மீண்டும்  மீண்டும்  ரீ  டேக்  வாங்கிக்கொண்டே  இருக்கிறார். ஒரு  கட்டத்தில்  கடுப்பான    நாயகி  ஒரு  சாதாரண  சீனை  எத்தனை  டேக்  எடுப்பீங்க?  என  கத்தி  விடுகிறார். அப்போது  இயக்குநர்  நீங்க  இன்னும்  நடிகையாகத்தான்  இருக்கீங்க . அந்த  கேரக்டரா  மாறலை.  நீங்க  முழுக்க  முழுக்க  அந்த  கேரக்டரா  மாறுனாத்தான் நடிப்பில் ஜீவன்  வரும்  என்கிறார்


இப்போதுதான்  ஒரு  அதிர்ச்சியான  சம்பவம்  நடக்கிறது. நாயகி  அந்த  கேரக்டராக  மாறி  விட்டதாக  உணர்கிறார். அவரை  நடிகையாக  யாருக்கும்  தெரியவில்லை .அந்த  சோப்  விளம்பரப்படத்தில்  கணவனாக  நடித்தவன்  தான்  நிஜமாகவே  கணவனாக  இருக்கிறான் . அவர்களுக்கு  இரண்டு  குழந்தைகள்  வேற.  நாயகி  அதிர்ச்சி  அடைகிறாள்: 

 நாயகிக்கு  ஒரு  காதலன்  உண்டு /. அவனைப்போய்ப்ப்பார்க்கலாம்  என  டாக்சியில்  போகிறாள் , அங்கே  அடுத்த  அதிர்ச்சி , காதலன்  வேறு  ஒரு  பெண்ணுடன்  இருக்கிறான், நாயகியை  யார்  என்றே  தெரியவில்லை 


மீண்டும்  நாயகி  அதே  டாக்சியில்  ஏறி  தன்  அப்பார்ட்மெண்ட்  செல்கிறாள் . ஆனால்  அங்கே  வேறு  யாரோ  இருக்கிறார்கள் . இப்போது  நாயகியிடம்  டாக்சி  டிரைவருக்கு  கொடுக்கக்கூட  கைவசம்  பணம்  இல்லை 


வேறு  வழி  இல்லாமல்  தன்  கணவனாக  நடித்தவனின்  வீட்டுக்கே  வந்து  தங்குகிறாள் . இதற்குப்பின்  நாயகி  நிலைமை  என்ன  ஆனது ?  என்பதுதான்  மீதி  திரைக்கதை

நாயகியாக  பிரபல  நடிகையாக  நடித்த  நெஸ்லிஹன் அட்டாகுல்  நடிப்பு  மிரட்டல்  ரகம் , ஆரம்பத்தில்  கெத்தான  நடிகையாக  பந்தா  காட்டும்போதும்  சரி , தன்னை  யாருக்கும்  அடையாளம்  தெரியவில்லையே  என  திகைக்கும்போதும்  சரி , ஒரு  கட்டத்தில்  சைக்கோ  மாதிரி  நடந்துகொள்ளும்போதும்  சரி  பாராட்டத்தக்க  விதத்தில்  நடித்திருக்கிறார்


நாயகியின் கணவனாக  படத்தில்  நடித்தவர்  நிஜ் வாழ்விலும்  கணவன்  ஆவதும் குழந்தைகளை  சமாளிப்பது , மனைவியுடன்  சண்டை  போடுவது  என  சராசரி  குடும்பஸ்தன்  அவஸ்தைகளை  உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாயகியின்  காதலனாக  வரும்  நடிகர்  கிட்டத்தட்ட  வில்லன்  மாதிரி  ரோல். ஆனால்  அதிக  ஸ்கோப்  இல்லாத  கேரக்டர் 


இயக்கம்  டெனிஸ்..  விறுவிறுப்பாக  படத்தை  போர்  அடிக்காமல்  கொண்டு  செல்வதில்  வெற்றி  பெற்றிருக்கிறார். க்ளைமாக்சில்  ட்விஸ்ட்டை  எதிர்பார்த்து  ஏமாறுகிறோம்.  பார்க்கத்தக்க  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்சில்  கிடைக்கிறது 



சபாஷ்  டைரக்டர்

1   நடிக்க  சான்ஸ்  கேட்கும்  நாயகி  டைரக்டர்  முன்  பல  வித  முக  பாவனைகளைக்காட்டி  உருக்கமாக  நடிப்பது  சபாஷ்  போட  வைக்கும்  காட்சி , தமிழில்   ராமன்  எத்தனை  ராமனடி  படத்தில்  சிவாஜி  நடிக்கும்  காட்சி  நினைவு  வருகிறது 


2  நாயகியின்  இரு  குழந்தைகளில்  அந்தப்பெண்  குழந்தை  மட்டும்  நாயகி  மேல்  சந்தேகப்பட்டு  உளவு  பார்க்கும்  காட்சிகள்  ரசமானவை  


3  ஒரு  நடிகை  நடிக்க  எத்தனையோ  சவாலான  சீன்கள்  இருக்கும்போது  கிளாமருக்காக  நாயகி  தலைக்கு  ஷாம்பூ  போட்டுக்குளிப்பதையே  15  தடவை  ரீ  டேக்  எடுக்கிறேன்  எனும்  போர்வையில்  மார்க்கெட்டிங்  கை  பலப்படுத்திய  லாவகம் 

  ரசித்த  வசனங்கள் 

1   மேடம், நீங்க  செல்லப்பிராணியா  நாய்  வளர்த்தறது  எல்லாம்  ஓக்கே, ஆனா  அது  அடிக்கடி  சத்தம்  ஓவரா  போட்டா  எங்க  தூக்கம்  கெடுது  , பார்த்துக்குங்க ..


 நிச்சயம்  கவனிக்கறோம், அதே  மாதிரி  உங்க  வீட்டு  பெட்ரூம்ல  இருந்தும்  நைட்  டைம்ல  சவுண்ட்  வருது , அதை  கரெக்ட்  பண்ணிடுங்க . தானிக்கு  தீனி


2  நீ  என்  கிட்டே  நாணயமா  இருக்கனும்னு  நான்  எதிர்பார்க்கலை , அதே  சமயம்  என்  கிட்டே  பொய்  சொல்றே  அல்லது  எதையாவது  மறைக்கறேன்னா  என்னால  தாங்கிக்க  முடியாது  


3  என்னை  அடையாளம்  தெரியுதா? நான்  தான்  உன்  புருசன்


 வாட்?


 அதாவது  ஒரு  படத்துல  உனக்கு  புருசனா  நடிச்சிருக்கேன், நினைவிருக்கா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


இதில்  உள்ள  லாஜிக்  மிஸ்டேக்கை  பட்டியல்  இட்டால்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  உட்பட  பல  விஷய்ங்களும்  ரிவியல்  ஆகி  விடும்  என்பதால் தவிர்க்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஒரே  ஒரு இடத்தில்  18+  காட்சி  ஒன்று  வருகிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  முழுக்க  பரபரப்பு , விறுவிறுப்பு , ஆனால்  பின்  பாதியில்  ஸ்லோ  ஆகி க்ளைமாக்சில்  சப்  என  முடிகிறது . சுமார்  ரகம்  ரேட்டிங்  2 / 5 


Aaahh Belinda
AaahBelinda.jpeg
Film poster
Directed byAtıf Yılmaz
Written byBarış Pirhasan
Produced byCengiz Ergun
StarringMüjde Ar
Yılmaz Zafer [tr]
Macit Koper
Güzin Özipek
CinematographyOrhan Oğuz
Edited byOdak Film
Music byOnno Tunç
Release date
1986
Running time
100 minutes
CountryTurkey
LanguageTurkish