Saturday, January 14, 2023

MILI (2022) ஹிந்தி - திரை விமர்சனம் ( சர்வைவல் த்ரில்லர்)@நெட் ஃபிளிகஸ்


நாயகி   நர்சிங்கில்  பிஎஸ் சி  கிராஜூவேட்  முடித்த  நர்ஸ். அப்பாவுடன்  வசிக்கிறாள். அப்பாவும் மகளும் நல்ல நண்பர்கள் போல பழகுகிறார்கள் , அக்கம் பக்கம் வீடுகளில்  ஒரு நர்சா ஒரு மனுஷியா  பல உதவிகள் செய்யற நாயகிக்கு அப்பாக்கு தெரியாம காதல், காதலன்  உண்டு . 

காதலன்  கூட  பைக்ல  ஒரு  உலா  போகும்போது  போலீசில்  மாட்டும் அவர்கள்  ஒரு  வாக்குவாதம்  ஏற்பட  போலீஸ்  ஆஃபீசருடன் ஒரு  பிணக்கு  உருவாகிறது

நாயகி  ஃபாரீன் போய் வேலை செய்ய ஒரு ட்ரெய்னிங் செண்ட்டரில் படிக்கிறார். க்ளாஸ் முடித்து விட்டு  மாலை  கே எஃப் சி எனும் கோழிப்பண்டக சாலையில்  பார்ட் டைம் சேல்ஸ் கேர்ளா வேலை பார்க்கிறார்


அந்த கடை ஓனர் ஒரு மார்க்கமான ஆள் . ஒரு நாள் வேலைக்குப்போன பெண்  திரும்ப வர்லை . அப்பா போலீஸ்ல புகார் தருகிறார் போலீஸ்க்கு காதலன் மேலும், கடை ஓனர் மேலும் டவுட் , ஆடியன்சான  நமக்கு  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  மேல  டவுட்

அந்தப்பொண்ணுக்கு என்ன ஆனது? எப்படி அந்த சிக்கலை எதிர்  கொண்டார்? ? உயிரோட மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதை திரையில் காண்க


நாயகியாக  ஸ்ரீதேவியின்  மகளான  ஜான்வி  கபூர்  அபாரமாக  நடித்துள்ளார். குளிரில்  உறைந்த  நிலையில்  அவர்  சந்திக்கும்  நெருக்கடிகள்  பரிதாபம்  ஏற்படுத்துகிறது

நாயகியின்  காதலனாக  சன்னி  கவுசல்  கச்சிதமான  நடிப்பு.  காதலியை  தான்  தான்  கடத்தி வைத்திருப்பதாக  போலீஸ்  சந்தேகப்படும்போது  துடிப்புடன்  நடித்திருகிறார்

நாயகியின்  அப்பாவாக   மனோஜ்  உருக்கமான  நடிப்பு  ஜாக்கி  ஷெராஃப்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார்

2019ம் ஆண்டு  மலையாளத்தில் அன்னா  பென்  நடிப்பில்  வெளியான   ஹெலன்    படத்தின்  அஃபிசியல்  ரீமேக்  தான்  இது அந்தப்படத்தை  இயக்கிய  அதே  இயக்குநர்  மது குட்டி  சேவியர் தான்   இந்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார்

சுனில்  கார்த்திகேயனின்  ஒளிப்பதிவில்  ஐஸ்  ரூம்  காட்சிகள்  அபாரம் . மோனிஷா  ஆர்  பல்டாவா வின்  எடிட்டிங்கில் கச்சிதமாக  2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 

 படத்தின்  முக்கிய  பிளஸ்  ஏர் ஆர்  ரஹ்மானின்  இசை ., 

சபாஷ் இயக்குநர்

1  இது ஒரு  உண்மை சம்பவம் , திரை சுவராஸ்யத்துக்காக எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் கொஞ்சம்


2   நாயகியை கண்ணியமா , எந்த அளவு அழகா காட்ட முடியுமோ அந்த அளவு  அழகா காட்டி இருப்பது


3  பெரிய ஹீரோ வின் கால்ஷீட்டோ , பிரமாண்டமான லொக்கேஷனோ , செட்டிங்கோ ஒரு திறமையான திரைக்கதை ஆசிரியருக்கு தேவை இல்லை என்பதை ச்மார்த்தியமாக நிரூபித்த விதம் 


4   கோடை கால மழையாய் , மழைக்கால அதிசய வெய்யிலாய் டென்சனை ஏற்றும் திகிலான திரைக்கதையில் ரிலாக்சாக ரசிக்க வைக்கும் ரம்மியமான காதல் காட்சிகள்  அழகு 

5  கதைப்படி நாயகி தனக்குத்தானே சிகிச்சை அளித்துக்கொள்ளும் காட்சிகள் கதைக்கு முக்கியம் என்பதாள் அவரை நர்சாக கேரக்டர் வடிவமைத்த சாமார்த்தியம்  ( நிஜக்கதையில் நாயகி நர்ஸ் அல்ல) 

லாஜிக் மிஸ்டேக்ஸ் 


1  அவ்ளோ பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல  சிசிடிவி கேமரா இல்லாம இருக்குமா? போலீஸ்  முதல்ல அதை செக் பண்ணாம விட்டது ஏன்? 

2    செக்யூரிட்டியிடம் நாயகியின்  ஃபோட்டோவைக்காட்டி போலீஸ் ஆரம்பத்திலேயே  விசாரிக்காதது ஏன்? 


3  நாயகியின் காணாமப்போன சம்பவத்துக்கு அவள் காதலன் தான் காரணம் எனில் அவன் எப்படி  ஸ்பாட்ல இருப்பான்? அவன் மேல எதுக்கு டவுட் வருது?


4  ராட்சச ஃபேனை இயங்க வைக்காமல் செய்ய ஆரம்பத்துலேயே நாயகி முயற்சி செஞ்சிருக்கலாம். சும்மா அட்டையை வெச்சு மூடுனாலோ மறைச்சாலோ காத்துக்கு அது தள்ளப்பட்டு விடும் என்பதை நாயகி யூகிக்காதது ஏன்? 


 சி.பி கமெண்ட் =  மிகக்குறைந்த நடிகர்கள் ., மிகக்குறைவான பட்ஜெட்டில் எப்படி ஒரு ஏ செண்ட்டர் ஃபிலிம் எடுப்பது மிக மிக கடினம்., அந்த கடினமான பணியை சர்வசாதாரணமாக  செய்த   இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் , தயாரிப்பாளர் போனிகபூர் இருவருக்கும் பூங்கொத்துகள் . பணிக்குச்செல்லும் பெண்கள் அனைவரும் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் 

உண்மையில்  நிகழ்ந்த  சம்பவம்  தான்  இது . சர்வைவல்  த்ரில்லரான  இந்தப்படம்  பெண்களுக்குப்பிடிக்கும்.  நெட்  ஃபிளிகஸ்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது . ரேட்டிங்  2.5 / 5 



Mili
Mili 2022 poster.jpg
Theatrical release poster
Directed byMathukutty Xavier
Screenplay byRitesh Shah
Based onHelen
by 
Produced byBoney Kapoor
StarringJanhvi Kapoor
Sunny Kaushal
Manoj Pahwa
CinematographySunil Karthikeyan
Edited byMonisha R. Baldawa
Music byA. R. Rahman
Production
companies
Bayview Projects
Zee Studios
Distributed byZee Studios[1]
Release date
  • 4 November 2022
Running time
127 minutes[2]
CountryIndia
LanguageHindi



HIT: The Second Case (2022) ‧(தெலுங்கு ) சினிமா விமர்சனம்(க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


ஹிட்  த  ஃபர்ஸ்ட்  கேஸ்  படத்தின்  முதல்  பாகம்  2020ல்;  ரிலீஸ் ஆகி  ஹிட் ஆகியது. பின்  ஹிந்தியில் ரீமேக்  ஆகியது. காணாமல்  போன  19  வயதுப்பெண்ணைக்கண்டுபிடிக்கும்  கேஸ்  அது. இப்போ  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  இந்தப்படம்  வேறு  கதை. முதல்  பாகம்  பார்க்காதவர்களுக்கும்  கதை  புரியும்., இரண்டும்  வேறு  வேறு  கதை

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்., மிகுந்த  புத்திக்கூர்மை  கொண்டவர், க்ரைம்  ஸ்பாட்டுக்குப்போனாலே  இவன் தான்  குற்றவாளி  என  உடனடியாக  கண்டுபிடித்து  விடுபவர்.இவர்  எப்படி  கேசை  அனாயசமாக  டீல்  செய்கிறார்  என  காண்பிப்பதற்காக  ஒரு  பத்து  நிமிட  தனிக்கதை  அல்லது சம்பவம்  காட்டப்படுகிறது. ஆக்சன் மசாலா  படங்களில்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  ஹீரோவுக்கு  ஓப்பனிங்  ஃபைட்  சீன்  வைப்பது  போல  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  நாயகனின்  அறிவைக்காட்ட  ஒரு  கேசை  துப்பு  துலக்குவதை  ஓப்பனிங்கில்  காட்டுவது  வ்ழக்கம்


ஒரு  இளம்பெண்  கொலை செய்யபட்டு  வீட்டின்  ஹாலில்  கிடத்தி  வைக்கப்பட்டு  இருக்கிறார். அவர்  தலை , 2 கைகள் , 2  கால்கள்  எல்லாம்  தனியாக  துண்டிக்கப்பட்டு  இருக்கின்றன்


 போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  வந்தால்  ஒரு  அதிர்ச்சி  செய்தி . தலை  ஒரு பெண்ணுடையது  கைகள்    வேறு  ஒரு  பெண்ணுடையது. கால்கள்  வேறு  பெண்ணுடையது. 


 பெண்ணின்  கழுத்தில்  கொலையாளியின் பல்  தடம்  பதிந்திருக்கிறது. அவன்  ஷூ  சைஸ் 9.  பெண்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படவில்லை 


மேற்கூறிய  தகவலை  வைத்து நாயகன்  கேசை  டீல்  செய்து அதே  போல்  சிங்கப்பல் , மற்றும்  கால்  ஷூ சைஸ் 9  உள்ள  ஒரு  ஆளை  சந்தேகப்பட்டு  பிடிக்கிறான். குற்றம்  நடந்த  டைமில்  தான்  வேறு  பெண்ணுடன்  வேறு  ஒரு  ஊரில்  இருந்தேன்  என  சொல்லும்  அவன்  எந்த  ஊர்? அந்தப்பெண்  யார் என்பதை  சொல்ல  மறுக்கிறான். கோர்ட்டிலும்  சொல்லவில்லை . அது  என்  பர்சனல்  விஷயம்  என்கிறான்


 நாயகனின்  மேலிடம்  இந்தக்கேசை  விரைந்து  முடிக்க  நினைக்கிறது . குற்றவாளியை  என்கவுண்ட்டரில்  போட்டு  விட  ஆயத்தம்  ஆகிறது. கடைசி  கட்டத்தில் நாயகனின்  தலையீட்டால்  என்கவுண்ட்டர்  நடக்கவில்லை . ஆனால்  லாக்கப்பில்  குற்றம்  சாட்டப்பட்ட  நபர்  தற்கொலை  செய்து  கொள்கிறான்


 அப்போ  உண்மையான  கொலையாளி  யார் ? அவன்  ஏன்  சீரியல்  கில்லர்  போல  குறிப்பிட்ட  சில  பெண்களைக்கொல்கிறான்? என்பதை  நாயகன்  களம்  இறங்கிக்கண்டு பிடிப்பதே  மீதி  திரைக்கதை   


நாயகனாக அதிவி சேஷ்.சாக்லெட் பாய்  மாதவன் , சுரேஷ் , மோகன்  பொன்ற  தோற்றம்.,  கச்சிதமான  நடிப்பு, ஆக்சன்  காட்சிகளில் சேசிங்  சீன்களில்  நல்ல  சுறுசுறுப்பு


நாயகியாக  மீனாட்சி  சவுத்ரி , அதிக  வேலை  இல்லை . வந்தவரை  ஓக்கே 


முதல்  பாகத்தை  விட  இந்தப்பட  கதை  அதிக  விறுவிறுப்பு . இயக்கி  இருப்பவர்  சைலேஷ் கொலானு . 2  மணி  நேரத்திக்  ட்ரிம்  செய்த  எடிட்டிங்  குட் , இசை  சுமார்  ரகம்  தான் , ஒளிப்பதிவு  கச்சிதம் 


பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  அமேசான்  பிரைம் ல  கிடைக்கிறது ரேட்டிங்  2.5 / 5 

Thursday, January 12, 2023

INI UTHARAM (2022) மலையாளம் - புதிய பதில் - திரை விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ ஜீ 5


நாயகி  ஒரு  டாக்டர்.  அவர்  ஒரு  காட்டுப்பகுதில  இருக்கும்  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்போய் சர்க்கிள்  இன்ஸ்பெக்டரைப்பார்க்க  வேண்டும்  என்று சொல்கிறார். என்ன  விஷயம் ? என்  கிட்டேயே  சொல்லுங்க  என  சப்  இன்ஸ்பெக்டர்  கேட்கும்போது  நான்  ஒரு  கொலை  செய்து  விட்டேன் , டெட் பாடியை  ஒரு  இடத்துல  புதைத்து இருக்கிறேன்  என்கிறார்.

அப்போது  நாயகி  ஒரு  மாத்திரையை போட்டுக்கொள்வதை  போலீஸ்  கவனிக்கிறது. அது  மன  நலம்  பாதிக்கப்பட்டவர்கள்  சாப்பிடுவது  என்பதால்  நாயகி  சொல்வதை  அவர்கள்  சீரியசாக  எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது  ஸ்டேஷனுக்கு  மீடியாக்கள்  வந்து  விடுகின்றன.


 நாயகி  மீடியாவிடம்  இதே  விஷயத்தை  சொல்லி  பின்  போலீஸ்  நான்  சொல்வதை   கண்டு  கொள்ளவே  இல்லை  என  புகார்  சொல்ல  இந்த  விஷயம்  பரபரப்பாகி  மாநிலம்  முழுக்க  பதட்டம்  தொற்றிக்கொள்கிறது 


இந்தக்கேசை விசாரிக்க  எஸ்  பி  வருகிறார். டெட்  பாடி  புதைக்கப்பட்ட  இடத்துக்கு  போலீஸ் , மீடியா  , பொது மக்கள்  எல்லோரும்  செல்கின்றனர். நாயகி  அடையாளம்  காட்டிய  இடத்தில்  தோண்டும்போது  இரண்டு  டெட்  பாடிகள்  கிடைக்கின்றன. ஒன்று  அந்த  ஊர்  பாதிரியார், இன்னொரு  ஆள்  யார்  என  தெரியவில்லை . ஆனால்  நாயகி  குறிப்பிட்ட  அவரது  பாய்  ஃபிரண்டின்  பிணம்  கிடைக்கவில்லை 


அப்போது  தான்  நாயகி  இன்னொரு  குண்டைத்தூக்கிப்போடுகிறார்.  இந்தக்கொலைகள் பற்றி  எனக்கு  எதுவும்  தெரியாது . இன்ஸ்பெக்டர்  தான்  மூல காரணம், அவரை  விசாரித்தால்  தெரியும்  என்கிறார். 


மக்கள்  கொதித்து  எழுகிறார்கள் . எஸ்  பி  அவர்களை  சமாதானப்படுத்துகிறார். போலீஸ்  இலாகாவின்  பெயர்  கெடாமல்  இந்தக்கேசை  முடித்து  வைக்க  மேலிட  உத்தரவு  வருகிறது 


 இந்த  இரண்டு  கொலைகளை  அந்த இன்ஸ்பெக்டர்  ஏன்    செய்தார்? நாயகி  ஏன்  அப்படி  ஒரு  டிராமா  நடத்தினார்? நாயகியின்  பாய்  ஃபிரண்ட்  என்ன  ஆனார்  என்பதை  மீதி  திரைக்கதை  விளக்குகிறது   


நாயகியாக அபர்ணா  பால முரளி . மகேஷிண்டே  பிரதிகாரம் எனும்  மலையாளப்படத்தின்  மூலம்  கேரளாவில்  அறிமுகம்  ஆகி  சூரரைப்போற்று  படம்  மூலம்  தமிழுக்கு  அறிமுகம் ஆனவர். மொத்தப்படத்தையும்  ஒற்றை ஆளாகத்தன்  தோளில்  தாங்கி  இருக்கிறார்.அவரது  கேரக்டர்  கடைசி  வரை  சஸ்பென்சாகவே  கொண்டு  செல்லப்பட்டது  சிறப்பு 


எஸ் பி  ஆக  ஹரீஷ்  உத்தமன்.  ,  மேலிட  உத்தரவுகளுக்கும்   பணிந்து  தன்  மனம்  சொல்வதற்கும்  உகந்து  அவர்  எடுக்கும்  நடவடிக்கைகள்  அருமை . அவர்  பேசும்  சில  வசனங்கள்  கை  தட்டல்  பெற  வைக்கின்றன

நாயகியின்  காதலனாக  வரும்  சித்தார்த்  மேனனுக்கு  அதிக  வாய்ப்பில்லை, குறைவான  காட்சிகளே  வருகிறார் என்றாலும்  நிறைவான  நடிப்பு 

ஒரு   மர்டர்  மிஸ்ட்ரி  படத்துக்கான  ஒளிப்பதிவு  எப்படி   இருக்க  வேண்டும்  என்பதை ஒளிப்பதிவாளர் ரவிச்சந்திரன்  உணர்ந்து  பதிவு  செய்து  இருக்கிறார்.ஜிதின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்து  இருக்கிறார், ரஞ்சித்  உண்ணி  விறுவிறுப்பான  திரைக்கதை  அமைத்திருக்கிறார். ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காத  வண்ணம் சுதீஷ்  ராமச்சந்திரன்  இயக்கி  இருக்கிறார்


 அனைவரும்  பார்க்கத்தகுந்த  இந்த  த்ரில்லர்  படம்  ஜீ ஃபைவ்  ஓ டி டி  தளத்தில்;  காணக்கிடைக்கிரது 


ரசித்த  வசனங்கள் 


1  இங்கே  யாரும்  தப்பு  செய்யனும்னு  ஆசைப்பட  மாட்டாங்க , ஆனா  தப்பு  செஞ்சுட்டா  அதுல  இருந்து  தப்பிக்கனும்னு  கண்டிப்பா  ஆசைப்படுவாங்க 


2  உண்மைகள்  இங்கே  கோர்ட்டில்  உதவாது , சட்டத்துக்கு  சாட்சிகள்  தான்  வேண்டும் 


என்னதான்  சாட்சிகள்  முக்கியமாக  இருந்தாலும்  அவற்றை  எல்லாம்  உண்மை   சில  சமயங்களில்  ஓவர்  டேக்  செய்து விடும் 


3  பொதுவா  ஒரு  பிரச்சனைனு  வந்தா  அழுது  புலம்புவதுதான்  பெண்ணின்  வழக்கம், ஆனா ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  தான்  குற்றவாளினு  தெரிஞ்சும்  பயப்படாம  சாமார்த்தியமா  காய்  நகர்த்தி   அவரை  மாட்ட  விட்டியே  அந்த  தைரியம்  தான்  எனக்கு  பிடிச்சிருக்கு 

4   இந்த  உலகம்  அநியாயம்  செய்பவர்களால்  நிரம்பி  வழிகிறது , உன்னை  மாதிரி  நியாயம்  பேசறவங்களுக்கு  இங்கே  உகந்த  இடம்  இல்லை , அதனால  உன்னை  விடுவிக்கப்போறேன்


5  ஒரு  காலத்துல  நான்  தப்புக்கு  உடந்தையா  இருந்தது  உணமைதான், ஆனா  என்  மனசாட்சியே  என்னைக்கொன்னுடும்  போல  இருக்கு 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1  கொலை  செய்த்து  ஒரு  சாமான்யன்  என்றால்  விபரம்  தெரியாது , ஆனா  கொலையாளி  அனுபவம்  மிக்க  போலீஸ்  ஆஃபீசர் . டெட்  பாடியை  புதைக்கும்போது அந்த  ஆளின்  செல் ஃபோனை  அங்கேயே  விட்டா  லாஸ்ட்  ஸ்விட்ச்  ஆஃப்  லொக்கேஷன்  காட்டிக்கொடுக்காதா? புத்திசாலித்தனமாக  டெட்  பாடியை  மட்டும்  புதைத்து  விட்டு  செல்  ஃபோனை  சில  தூரம்  தள்ளி  ஏதாவது   கிணற்றில்  வீசிவிடுவதுதானே  பாதுகாப்பு ? 


2  முக்கியமான  கொலையை[ப்பார்த்த  சாட்சியை  கொலை  செய்வது  ஓக்கே , ஆனா  அவன்  எடுத்த  வீடியோ  ஆதாரத்தைகொலையாளி  கவனிக்கலை . ஆனா  அதுக்குப்பின்  ஸ்பாட்டுக்கு  வந்த  நாயகி  கவனிக்கிறா, அது  எப்படி ?  போலீஸ்  கண்ணுக்கு  மாட்டாதது  அவருக்கு  மாட்டும் ? 


3 மினிஸ்டர்  தான்  கொலை  செய்யச்சொன்னது.  லாரி  டிரைவர்  15  வருடங்கள் கழித்து  மனசாட்சி  உறுத்துது  , சரண்டர்  ஆகிறேன்  என  சொல்லும்போது  தன்  உயிருக்கு  ஆபத்து  என்பதை  உணர  மாட்டாரா? 


4  வெறும்  அம்புகளை  எல்லாம்  தண்டிக்க  வைத்த  நாயகி இதுக்கெல்லாம்  மூல  காரணமாக  இருந்த  மினிஸ்டரை  எதுவும்  செய்யவில்லையே?


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மர்டர் மிஸ்டரி  த்ரில்லர்  ரசிகர்களுக்குப்பிடிக்கும் . அபர்ணா  பாலமுரளிக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Ini Utharam
Ini Utharam (2022 film) poster.jpg
Theatrical Poster
Directed bySudheesh Ramachandran
Written byRanjith Unni
Produced by
  • Arun
  • Varun
StarringAparna Balamurali
Harish Uthaman
Kalabhavan Shajohn
Chandhunadh
CinematographyRavichandran
Edited byJithin D. K.
Music byHesham Abdul Wahab
Production
company
A&V Entertainments
Release date
7 October 2022
CountryIndia
LanguageMalayalam

Wednesday, January 11, 2023

THE TEACHER (2022) மலையாளம் - திரை விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


spoiler alert
 நாயகி ஒரு தனியார்  பள்ளியில்   ஸ்போர்ட்ஸ்  டீச்சர்., அவரது  கணவர்  பிரைவேட்  கம்பெனில  பணி  செய்பவர். திருமணம்  ஆகி  4  வருடங்கள்  ஆகியும்  இவர்களுக்கு  குழந்தை  பாக்கியம்  இல்லை ,இப்படிப்பட்ட  ஒரு  தருணத்தில் ஸ்போர்ட்ஸ்   விழாவுக்குச்சென்ற  இடத்தில்  நான்கு    மாணவர்களால்  நாயகி மயக்கம்  அடைய  வைத்து  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்படுகிறாள் .இதனால்  கர்ப்பமும்  ஆகிறாள் 


கணவனுக்கு  நாயகி  நடந்த  விஷயத்தைச்சொல்லவில்லை .நாயகி  கர்ப்பம்  ஆனது  தெரிந்து  கணவன்  மிகவும்  மகிழ்ச்சி  அடைகிறான் ஆனால்  நாயகி  மிகவும்  மனநிலை  பாதிக்கப்பட்டு  சோகமாக  இருக்கிறாள் 

 ஒரு  கட்டத்தில்      கணவனுக்கு  விஷயம்  தெரிகிறது . யாரோ  ஆக்கிய  கர்ப்பத்துக்கு  என்னை  பலிகடா  ஆக்கப்பார்க்கிறாயா?  என கணவன்  அவளை  அடித்து  விடுகிறான் 


போலீசில்  புகார்  கொடுக்கலாம்  என  நாயகி  வற்புறுத்தியும்  கணவன்  கேட்கவில்லை , ஆஃபீசில்  தன்னுடன்  பணி  புரியும்  தன்  நண்பனிடம்  இந்த  விஷயத்தை  சொல்லி  விடுகிறான். அப்படிச்சொன்னது  நாயகிக்குப்பிடிக்கவில்லை 


இதற்குப்பின்  நாயகி  என்ன  முடிவு  எடுத்தாள் ?  அந்த  நான்கு  மாணவர்கள்  யார்? என்பதை  எப்படிக்கண்டுபிடிக்கிறாள் ? நான்கு  பேரைக்கொல்லாமல்  , காயப்படுத்தாமல்  வித்தியாசமான  சிந்தனையில்  அவர்களை  எப்படிப்பழி  வாங்கினாள்  என்பதுதான்  திரைக்கதை 


நாயகியாக  அமாலா  பால், படம்  முழுவதும்  மன நிலை  பாதிக்கப்ட்டு   மிகவும்  டிப்ரஷன்  ஆன  முகத்துடனேயே  வருகிறார்.  கணவன்  தன்னைப்புரிந்து  கொள்ளாதது  கண்டு  மனம்  வேதனைப்படும்போது   உருக்கமான  நடிப்பு . கணவனின்  நண்பன்  வீட்டுக்கு  வந்து  ஆறுதல்  சொல்லி  தோள்  மேல்  கை  வைக்கையில்  கையை  எடுடா . வெளீல  போடா  என  ஆக்ரோஷமாகப்பொங்கும் போது  எரிமலை  நடிப்பு 


கணவனாக  ஹாக்கிம் ஷாஜகான்  கச்சிதமான  நடிப்பு . பயந்த  சுபாவம்  உள்ளவராக , மனைவியிடம்  மன்னிப்புக்கேட்பவராக , அம்மாவிடம்  இந்த  வயதிலும்  அடி  வாங்குபவராக  பல  மாறுபட்ட  முகங்களைக்காட்ட  வேண்டிய  சூழல் . உணர்ந்து  நடித்திருக்கிறார்


போராட்டப்பெண்மணியாக , கம்யூனிஸ்ட்டாக   கல்யாணியாக  வரும்  மஞ்சு  பிள்ளை  மாறுபட்ட  கேரக்டர்  டிசைன்  ., அவரது  கேரக்டர்  டிசைன்   கே  ஆர்  கவுரியம்மாள் , முன்னாள்  நக்சலைட்  அஜிதா  இருவ்ரின்  கலப்பாக  இருக்கிறது.   புகை  பிடிக்கும்  கேரக்டராக  ஏன்    காட்ட  வேண்டும்  என  தெரியவில்லை , புரட்சிகரமான   பெண்  எனக்காட்ட  புகை  பிடிப்பவராக , மது  அருந்துபவராகக்காட்ட  வேண்டுமா ? என்ன ? 


நாயகிக்கு  உதவுபவராக  செம்பவன்  வினோத்    கலக்கி  இருக்கிறார். இவருக்கு  தரப்பட்ட  ரோல்  ஒரு  கெஸ்ட்  ரோல்  தான், ஆனால்  பெஸ்ட்  ரோல் 


இயக்கம்  விவேக் . நாயகி   நான்கு  பேரில்  ஒரு  மாணவனை  முதலில்  அடையாளம்  கண்டு  பிடிக்க   எடுக்கும்  முயற்சிகள் , கையாளும்  யுக்திகள்  அட  போட  வைக்கின்றன. 


நான்கு  மாணவர்களில்  இரண்டு  பெர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்கள் . கல்யாண  வீட்டில்  டீச்சரைக்கண்டு  சமாளிப்பது  செம . நாயகி  என்ன  தைரியத்தில்  குற்றவாளிகளில்  ஒருவனை  லாட்ஜில்  தனிமையில்  சந்திக்கிறார்  என்ற  கேள்விக்கு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  விடை  இருக்கிறது 


எடிட்டர்  மனோஜ்  கனகச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்து  இருக்கிறார்.டான்  வின்செண்ட்டின் இசை  , பின்னணி  இசை  கச்சிதம் .  அனுவின்  ஒளிப்பதிவு  நல்ல  தரம் 


பெண்களும்  பார்க்க  வேண்டிய  ரிவஞ்ச்  த்ரில்லர்  மூவி  இது . நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1  நாளுக்கு  நாள்  ஸ்மார்ட்  ஆகிட்டே  போறீங்க 


 என்  பொண்டாட்டி  அழகுக்கு  ஈடு  கொடுக்கனும் இல்ல? 


2  ஒருவரின்  உரிமை  பறிக்கப்படும்போது  அவரால  மூச்சு  கூட  விட  முடியாது , அந்த  நிலைல தான்  அவர் போராடவே   தொடங்குவார்


3  குடும்பம்கறது  பார்லிமெண்ட்  மாதிரி  அதுல  ஆம்பளைங்கதான்  பிரைம் மினிஸ்டர்  மாதிரி  இருக்கனும், நாம  கிழிக்கும்  கோட்டை  அவங்க  தாண்டக்கூடாது 


4  நாம  கோபமா  இருக்கும்போது  செய்யும் தவறுகளை நாம  உணரும்போது  அது  காலம்  கடந்த  ஞானமாக  இருக்கும்


5 ஒரு  மனிதனை  உள்ளுக்குள்ளேயே  வெச்சு  அரிக்கும்  விஷயம்  எது  தெரியுமா?  குற்ற  உணர்ச்சி 


6   பொண்ணுங்க  ஷார்ட்ஸ்  போடறது  தப்பு  இல்லை , அதுல  தப்புக்கண்டு  பிடிக்கும்   எண்ணம்  தான்  தப்பு 


7 நீ சின்னப்பையன், உனக்கு தப்பான  பாதையைக்காட்ட  நிறையப்பேர்  இருப்பாங்க , நீதான்  ஜாக்கிரதையா  இருக்கனும் 


8   எனக்கு  மேரேஜ்  ஆகி  12  வருசம்  ஆகுது , இதுவரை  என்  புருசன்  தான்  செஞ்ச  எந்த  தப்புக்கும்  என்  கிட்டே  மன்னிப்புக்கேட்டதே  இல்லை 


9 ஒருத்தரோட நிழல்ல  வாழ்றதை விட  தனியா வாழ்வதே  மேல் 


10   எனக்கு  ஒரு பிரச்சனைனு  வர்றப்ப  நீ  கூட  நிக்கலை. அப்புறம்  நீ  என்ன  துணை ? வாழ்க்கைத்துணை ?


11   சில  முடிவுகள்  நம்ம  பயத்தை  இல்லாம  ஆக்கும் ,  நம்பிக்கையை  வளர்க்கும் ,  எல்லாரும்  அதை ஒத்துக்கனும்னு  அவசியம்  இல்லை , ஆனா அந்த  முடிவுதான்  நம்மை  நம்ம  சொந்தக்கால்ல  நிக்க  வைக்கும் 


12   போலீஸ்  லத்திக்கு  மட்டும்  குழந்தை  கொடுக்கும்  சக்தி  இருந்தா  எனக்கு  இந்நேரம்  ஆயிரக்கணக்கான  குழந்தைகள்  பிறந்திருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1    தான்   கர்ப்பம்  ஆனது  தன்  கணவனால்  அல்ல  என்பதை  உணர்ந்த  நாயகி  அந்த  விஷயம்  கணவனுக்குத்தெரியாம  இருக்க  நினைப்பதாக  இருந்தால்   கர்ப்பம் ஆன  மெடிக்கல்  ரிப்போர்ட்டை  வீட்டிலேயே  வைப்பது  ஏன்? 


2  கணவனுக்குத்தெரியக்கூடாதுனு  நினைக்கும்  நாயகி தன்  ஃபேமிலி  டாக்டரிடம்  எதற்காக  செக்கப்  செய்து  கொள்கிறாள் ? புது  டாக்டரிடம், வேற  ஏரியா  டாக்டரிடம்  செக்கப்  செய்து  கொள்வதுதானே  சேஃப்டி ?


3  ஸ்கூலில்  உள்ள  க்ளாஸ்  ரூம்களை கதவு  டைப்பது  பியூன்  வேலை,  டீச்சர்  ஆன  நாயகி  அந்த  வேலையை  ஏன்  செய்கிறார்?


4  பாலியல் வன் கொடுமைக்கு  ஆளான  நாயகி 24 மணி நேரத்துக்குள் மெடிக்கல்  டெஸ்ட்  செய்திருந்தால்தான்  குற்றவாளி  பற்றி  துப்புக்கிடைக்கும்  என்பது  தெரிந்தும்  அதை  செய்யவில்லை. 4 பேரால்  வன்கொடுமைக்கு ஆளானதால்  கர்ப்பம்  ஆக  வாய்ப்பு  உண்டு  என  தெரிந்தும்  3மாதங்களாக  அஜாக்கிரதையாக  இருப்பது  ஏன் ?  


5   போலீசில்  புகார்  கொடுக்க வேண்டும்  என  முடிவு  எடுக்கும் நாயகி  மகளிர்  காவல்  நிலையத்துக்கு  ஏன்  போகவில்லை ?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சராசரியான  ஒரு  ரிவஞ்ச்  த்ரில்லர்  தான் , ஆனால்  திரைக்கதையும் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்   புதுசா  இருக்கு  . ரேட்டிங்  2.75  / 5   

Tuesday, January 10, 2023

தடயம் (2022) தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ ஷார்ட் ஃபிளிக்ஸ் ஓ டி டி


 நாயகன்  அல்லது  கதையின்  முக்கியக்கதாபாத்திரம்  பத்திரிக்கைத்துறையில்  பணியாற்றுபவராக  அமைந்த  கதை  அம்சம்  கொண்ட  படங்களில்  தமிழ்  சினிமா  வில்  மெகா  ஹிட்  ஆன  படங்கள்  ஆர். அர்விந்த்ராஜ்  இயக்கிய ஊமை  விழிகள் (1986) , மணிவண்ணன்  இயக்கிய  பாலைவன  ரோஜாக்கள் ( 1986) , நேதாஜி  இயக்கிய  சொல்வதெல்லாம்  உண்மை (1987) , கே வி  ஆனந்த்  இயக்கிய  கோ 

1997 ல்  ராம்கி - விஜயசாந்தி  நடித்த  நடித்த  தடயம்  படத்துக்கும்  ,  2000  செப்டம்பரில்  சன்  டி வியில்  வந்த  தடயம்  டி வி  சீரியலுக்கும் ,  2018ல்  ஆனந்த  விகடனில்  தமயந்தி  எழுதிய  சிறுகதையை  படமாக  எடுத்த  தடயம்   மூவிக்கும் இப்போ  நாம  பார்க்கப்போகும்  தடயம்  வெப்சீரிசுக்கும்  சம்பந்தம்  இல்லை , நான்கும்  வேறு  வேறு

Spoiler alert

யாழ்  எனும்  ஒரு  பத்திரிக்கை  ஆஃபீசில் நாயகன் , நாயகனின்  தோழர்கள்  இருவர் , நாயகி , நாயகியின்  தோழிகள்  இருவர்  என  3  செட்  ஜோடிகள்  வேலை  செய்கிறார்கள் . நாயகன்  ஒரு  க்ரைம்  ஸ்டோரி  ரைட்டர் . கற்பனையான  கதைகளை  எழுதாமல்  நிஜமாக  நடந்த  க்ரைம்  ஸ்டோரிகளை  அந்த  ஸ்பாட்டுக்குப்போய்  விசாரித்து  எழுதுபவன்




கொரோனா  இந்தியாவில்  நுழைந்த  2020  மார்ச்  மாதத்தில்  கதை  ஆரம்பிக்கிறது . அந்த  டைமில்   சுடுகாட்டில்  பிணங்கள்  எரிக்கப்படுவதும்  ஆள்  மாறாட்டம்  மாதிரி  பிண  மாறாட்டம்  நட்ந்ததும்  பல  செய்திகளில்  படித்திருக்கிறோம், அது  போல  15  பிணங்களை  எரிக்க  வேண்டிய  இடத்தில்  எக்ஸ்ட்ராவாக  கொரோனா  பேஷண்ட்  அல்லாத  ஒரு  டெட்  பாடி  யாரோ  மாற்றி வைத்து  விடுகிறார்கள் .  அது  எரிக்கப்பட்டு  விடுகிறது . இந்த  லேடி  டெட்  பாடி  யாருடையது ? யார்  கொலை  செய்தது? என்பதை  நாயகன்  துப்பு  துலக்கி  எப்படி  கண்டு  பிடிக்கிறார்  என்பதுதான்  கதை 


 மொத்தம்  எட்டு  எப்பிசோடுகள்  கொண்ட  கதையில்  ஒவ்வொரு  எபிசோடும்  20  நிமிடங்கள்  டூ  25  நிமிடங்கள்: , ஆக  மொத்தம்  3  மணி நேரம் . இதில்  6,7,8  ஆகிய  3  எபிசோடுகள்  தான்  மெயின்  க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  நடக்கிறது . ஆரம்பத்தில்  வரும்  ஐந்து  எபிசோடுகளும்  ரொமாண்டிக்  காமெடி  மெலோ டிராமா  மாதிரி  கொண்டு  போய்  அனைத்துப்பாத்திரங்களை  அறிமுகப்படுத்துவது  , அவர்களுக்கு  இடையே  நிகழும்  ஜாலி  கான்வெர்சேஷன்  என கொண்டு  போய்  இருக்கிறார்கள் 


 நாயகன்  விக்ரம்  ஆக  ஹரி  பாஸ்கர்  நன்றாக  செய்திருக்கிறார்.அவர்  போக  சுஜிதா , சுவாதி, அர்ஜூன்  என  அனைவருமே  கொடுத்த  பாத்திரத்தை  கரெக்டாக  உள்வாங்கி  நடித்திருக்கிறார்கள் .   எபிராஜ்  சந்தானம்  போல  கவுண்ட்டர்  காமெடி  செய்யும்  நபராக  வந்து  கலகலப்பு  ஊட்டுகிறார்


iஇசை  சூர்யா  சீனி  பிஜிஎம்  மில்  கச்சிதம்.  இயக்கம்   மோனிஷா ராஜன். நாயகனான  ஹரி  பாஸ்கர்  தான்  தயாரிப்பு . எடிட்டிங்  முகமத்

 

ஷார்ட் ஃபிளிக்ஸ்  எனும்  ஓடி  டி  தளத்தில்  ரூ  30  கட்டி  பார்க்கலாம்

  

ரசித்த  வசனங்கள்


1  பொதுவா  நம்ம  எல்லார்கிட்டேயும்  ஒரு  கெட்ட  பழக்கம்  இருக்கு, எதுக்கெடுத்தாலும்  நேரத்தின்  மீது  குறை  சொல்வோம். கெட்ட  நேரம், அதான்  ஒர்க்  ஆவுட்  ஆகலை  அப்டினு


2 உனக்கு  செம  தைரியம்டா


 ஆமாம், சின்ன  வயசுல  ஜெகன்  மோகினி  படத்தை  தனியா உக்காந்து  பார்த்தவன்


 அதை  நீ  ஏன்  தனியா  உக்காந்து  பார்த்தேன்னு  எனக்குத்தெரியும்



3  உன்னோட  முதல்  க்ரைம்  கேஸ்  எப்படி  இருக்கு ?


  என்னமோ  ஃபர்ஸ்ட்  நைட்  எக்ஸ்பீரியன்ஸ்  எப்படி  இருக்குனு  கேட்கற  மாதிரி  கேட்கறே?


4  ஒருத்தர்  போடற  டிரஸை  வெச்சு  ஒருத்தரை  ஜட்ஜ் பண்றவன்   பைத்தியகாரனாதான்  இருப்பான்


5   இன்ஃபர்மேஷன்  சரியோ  தப்போ  கண்ட்டெண்ட்ஸ்  இண்ட்ரஸ்ட்டிங்கா  இருந்தாப்போதும்  ஒரு  பத்திரிக்கைக்கு


6   சில  நேரங்களில்  நெருக்கமான  உறவுகள்  கொஞ்சம்  சிக்கலான  விளைவுகளைத்தான்  தரும் 


7  உங்க  ஆர்ட்டிக்கிள்ஸ்  எல்லாமே  கூகுள்ள  இருந்துதான்  எடுத்திருக்கு, ஒண்ணு  கூட  சொந்தமா  ட்ரை  பண்ண  மாட்டீங்களா? 


8  இந்த  ஏழரையைபார்க்கறதுக்கா   எழுநூறு  ரூபா  டி சர்ட்டை  வேஸ்ட்  பண்ணுனேன்?


9  சும்மா  இருக்கானேன்னு  அவன்  கூட  சேர்ந்து  சுத்துனேன்னு  வை  நீ  ஜெயிலுக்குத்தான்  போவே, ஏன்னா அவன்  முகம்  அப்படி 


10   இவ்ன்  என்னடா  ஹை வே  ல  நிக்கற  ஐயிட்டம்  மாதிரி  காசு  எங்கே  காசு  எங்கே?னு  அதுலயே  குறியா  இருக்கான்?


11   இவன்  வந்ததுமே  மீட்டிங்கை  முடிப்பார்னு  தெரிஞ்சிருந்தா  முதல்லியே  இவனை  வரச்சொல்லி  இருக்கலாமே?


12  அப்பப்ப  கெட்டவனாவும்  வாழ்ந்துடனும், ஏன்னா  நல்லவனா  ரொம்ப  நாள்  நடிக்க  முடியாதுல்ல? 


13  ஒரு  தப்பு  செஞ்சாலும்  அதை  சரியா  செய்யனும்னு  சொல்வாங்க, அப்படி  சரியா  செஞ்சாலும்  தப்பு  தப்பு  தான் 


14   இந்த  உண்மையை  மாதிரி  வலி  தரும்  விஷயம்  வேற  இல்லை . அதை  எங்கே  ஒளிச்சு  வெச்சாலும்  ஓடி  வந்துடும்


சபாஷ்  டைரக்டர்


1  க்ரைம்  சீன்  எப்படி  நடந்திருக்கும்  என்ற  கற்பனை  டெமோ  வில்  நாயகன், தோழன் , காமெடியன்  மூவரின்  பங்களிப்பும்  கச்சிதம், செம  காமெடி  போர்சன் 


2   மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  டேட்டிங்  ஆப்  மூலம்  நாயகனின்  தோழன்  சந்திக்கும்  கேர்ள்  ஃபிரண்ட்  மேட்டர்  ஐடியா  செம காமெடி 


3   நாயகனுக்கு  ஜோடி  நாயகி  இல்லை . நாயகியின்  தோழி. அதே  போல  நாயகிக்கு  ஜோடி  நாயகனின்  ந்ண்பன் . இது  மாதிரி  புதுமையான  ஐடியா  வரவேற்கத்தக்கதே!

லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  நாயகி  புதிதாக  சேர்ந்திருக்கும் ஆள். ஒரு  பெண்  ஒரு  பொய்  சொல்லி  நாளை  ஆஃபீஸ்  வரும்போது  பட்டுப்புடவை  கட்டிட்டு  வா, எல்லாரும்  அப்படித்தான்  வருவாங்க  என்றதும்  ஏமாந்து  அடுத்த  நாள்  அப்படியே  வர்றாரே? வேற  யார்  கிட்டேயாவது  கிராஸ்  செக்  பண்ணிக்க  மாட்டாரா?


2   வீட்டு  சாவியை  ஒரு  பெண்  வேணா  தன்  ஹேண்ட்  பேக்கில்  வைத்திருக்கலாம், ஆனால்  ஒரு  ஆண்  தன்  பேண்ட்  பாக்கெட்டில்  அல்லது  வீட்டில்  செப்பல்  விடும்  ஸ்டேண்ட்  அருகே  இப்படித்தான்  வைப்பார்கள்,  ஆஃபீஸ்   டேபிள்  டிராயர்ல  வீட்டு  சாவியை  வைப்பாரா? நாயகி  டக்னு  அந்த  சாவியை அபேஸ்  பண்ணி  வீட்டுக்கு  வந்து செக்  பண்ண்  வசதியாக


3   என்  கேபின் ல  நீ  என்ன  பண்றே? என  நாயகியை  சந்தேகமாகக்கேட்கும்  வில்லன்  சந்தேகப்பட்டு  செக்  பண்ணாதது  ஏன்?  அட்லீஸ்ட்  வீட்டு  சாவி  இருக்கா? எனவாவது  பார்க்கவில்லையே? 


4  காணாமல்  போன  பூஜாவின்  அம்மா  அவள்  ஒரு  பத்திரிக்கை  ஆஃபீசில் ஒர்க் பண்றவனோட  ஓடிப்போய்ட்டா  என்பதை  நம்புபவர்கள் அந்த  ஆஃபீசுக்கு  வ்ந்து  விசாரிக்காமல்  அசால்ட்டாக  இருப்பது  ஏன் ? 

ஷார்ட்

5  க்ளைமாக்ஸ்  எபிசோடில்  உண்மைகளை போலீசில்  சொல்லி  ஆதாரங்களை  ஒப்படைத்திருந்தால்   மேட்டர்  ஓவர். எதற்கு  தேவை  இல்லாத     ஃபைட்   எல்லாம்?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எல்லாருமே  புதுமுகங்களாக  இருந்தாலும் , லோ  பட்ஜெட்டில்  தயாரான  படமாக  இருந்தாலும்  பார்த்து  ரசிக்கும்  விதத்தில்  தான்  வெப்  சீரிஸ்  உள்ளது  . ரேட்டிங்  2. 75 / 5 

Monday, January 09, 2023

ARIYIPPU (2022)மலையாளம் - DECLARATION -திரை விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


எழுத்தாளர்  பாலகுமாரன்  தான் எழுதிய  இனிது  இனிது  காதல்  இனிது  கட்டுரைத்தொகுப்பில்  குறிப்பிட்ட  ஒரு  விஷயம்  மிகவும்  பிரபலம்  ஆனது, காதல்  என்பது  மதித்தல்  பரஸ்பரம்  எந்த  வித  எதிர்பார்ப்புகளும்  இன்றி. மேலும்  காதல்  என்பது  நம்பிக்கை .தான்  நேசிக்கும்  ஒருவர்  மீது  வைக்கும்  நம்பிக்கை தான்  காதல் . அந்த  நம்பிக்கை  தகர்ந்து  போகும்போது  தம்பதியின்  மனநிலை  என்ன  ஆகும்? என்பதை  விவரிப்பதே  இந்தப்படத்தின்  கதை

ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகன் ,நாயகி  இருவரும்  திருமணம்  ஆன  தம்பதி. கேரளாவில்  இருந்து  நொய்டா  வந்து  ஒரு  கம்பெனியில்  பணி  செய்கிறார்கள்.  ஃபாரீனில்  ஏதாவது  கம்பெனியில்  பணி  செய்ய  வேண்டும்  என்பதே  அவர்கள்  விருப்பம்,நொய்டாவில்  பணி  செய்தால்  ஃபாரீன்  போவது  சுலபம்  என்பதால்  அவர்கள்  நொய்டாவில்  உள்ள  கிளவுஸ்  தயாரிக்கும்  கம்பெனியில்  பணி  புரிகிறார்கள் 


அந்த  கம்பெனியில்  உள்ளே  செல் ஃபோன்  அனுமதி  இல்லை . இருந்தாலும்   தன்  மனைவி  பணி  செய்வதை  வீடியோ  எடுத்து  வைத்துக்கொள்கிறான்  நாயகன்,  ஃபாரீன்  போக  இருக்கும்  கம்பெனியில்  தன்  மனைவியின்  பணி  சாதுர்யம்  பற்றி  பறை  சாற்ற  அதை ஒரு  வீடியோ  ஆதாரமாக  வைத்துக்கொள்வதே  அவன்  திட்டம் 


ஆனால்  அவன்  செல் ஃபோனுக்கு  ஒரு  வீடியோ  க்ளிப்  வருகிறது. அது  கம்பெனியில்  உள்ள  அனைவர்  செல்லுக்கும்  பரவுகிறது . அதில் நாயகன்  வீடியோ எடுத்த  நாயகியின்  க்ளிப்பிங்கோடு  கூடுதலாக  எடிட்  செய்யப்பட்ட  ஒரு  தவறான  வீடியோ க்ளிப்பும்  சேர்ந்து  இருக்கிறது 


நாயகன்  அதை  போலீசில்  புகார்  செய்யலாம்  என  சொல்லும்போது  நாயகி  வேண்டாம்  என  மறுக்கிறாள். நான்  தப்பு  செய்யலை  என  உங்களுக்கும்  எனக்கும்  தெரியும்,  பின் எதற்காக  யாரிடம்  நிரூபிக்க  புகார்  அளிக்க  வேண்டும் ?  தேவை  இல்லாத  பிரச்சனை, என்கிறாள் 


 ஆனால்  நாயகன்  கேட்கவில்லை . போலீசில் புகார்  அளிக்கிறான். இதற்குப்பின் நடக்கும்  எதிர்பாராத  சம்பவங்களே  திரைக்கதை 


நாயகனாக குஞ்சாக்கா  போபன், ஒரு சராசரி  ஆணின்  மனதை  பிரதிபலிக்கும்  கேரக்டர். வீடியோ  க்ளிப்பில்  உள்ள  பெண்  தன்  மனைவிதானா? என  சந்தேகம்  கொண்டு  அதை  ஜூம்  செய்து  பெண்ணின்  கண்களை  உற்று  நோக்குவது  அப்ராமான  நடிப்பு, கோபித்துச்செல்லும்  மனைவியை  சமாதானப்படுத்த  அவர்  பின்னாலயே  போய்  கெஞ்சும்போது ஒரு  இயல்பான  கணவனைக்கண்  முன்  நிறுத்துகிறார். வீடியோ  கிளிப்பில்  உள்ள  ஆணின்  கையில்  உள்ள  பிரேஸ்லெட்டை  அடையாளம்  வைத்து  ஆளைக்கண்டுபிடிக்க  அவர்  எடுக்கும்  முயற்சிகள்  சபாஷ்  போட  வைக்கிறது 


 நாயகியாக திவ்யா  பிரபா . அவரது  கண்களே  முக்கால்  சதவீத  பங்களிப்பை  செய்து  விடுகிறது. போதாததற்கு  அவரது  அபாரமான  உடல்மொழி தனித்து  நிற்கிறது 


கதைக்களம்  கிளவுஸ்  தயாரிக்கும்  கம்பெனி  என்பதால் நாம்  பார்க்காத  சில  சுவராஸ்யமான  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன, கதை  நடக்கும்  கால கட்டம்  கொரோனா  வைரஸ்  வந்த  புதிதான  2020  ஏப்ரல்  மாதம். அதனால்  அனைவரும்  மாஸ்க்  அணிந்தே  வருகிறார்கள் . க்ளிப்பிங்கில்  உள்ள  பெண்  யார்? என  அடையாளம்  அறியாமல்  போக  அந்த  மாஸ்க்கும்  ஒரு  காரணம்  என்பதை  கச்சிதமாக  திரைக்கதையில்  இணைத்திருக்கிறார்கள் 


கம்பெனி  மேனேஜர்  செய்யும்  மோசடிகள் , கம்பெனி  ஓனரின்  தம்பி  செய்யும்  சில  தவறுக்ள் , போலீஸ்காரர்களின்  அராஜகம் , கார்ப்பரேட் கம்பெனியின்  சுயநலம்  என  திரைக்கதை  பல  விஷயங்களைப்பேசினாலும்  தம்பதிக்க்குள்  ஏற்படும்  பிணக்கு , சந்தேகம்  கொள்வதுதான்  திரைக்கதையின்  முதுகெலும்பு 

2011ல்  ரிலீஸ்  ஆன  ஈரானியப்படமான  எ  செப்பரேஷன்   +  2016ல் ரிலீஸ்  ஆன த  சேல்ஸ்மேன்  என்ற  ஈரானியப்படம்  இந்த  இரண்டு  படங்களின்  தாக்கத்தில்தான்  இந்த  மலையாளப்படத்தின்  திரைக்கதை  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  இரண்டு  ஈரானியப்படங்களின்  இயக்குநரும் ஒருவரே! அஷ்கர்  பர்கதி 


சனு  வர்கீஷின்  ஒளிப்பதிவு  உயிரோட்டமாக  காட்சிகளை  நம்  கண்  முன்  நிறுத்துகிறது .சுஷின் ஷ்யாம்  இசை  பல  இடங்களில்  அடக்கி  வாசித்து  இருக்கிறது


 ஒன்றே  முக்கால்  மணி  நேரப்படத்தை  கச்சிதமாக  எடிட்  செய்து  இயக்கி  இருப்பவர்  மகேஷ்  நாராயணன், காட்சிகள்  மிக  மெதுவாகத்தான்  நகர்கிறது  என்பதால்  பொறுமை  தேவை .


டூயட் , காமெடி  டிராக்  எல்லாம்  இல்லாமல்  ஒரு  உயிரோட்டமான  படம் 



ரசித்த  வசனங்கள்


1   தவறே  செய்யாத நமக்கு  ஏன்  குற்ற  உணர்வு ?




லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவாக  ஒரு  வேன்  டிரைவர்  வேனில்  சரக்கு  லோடிங்    அப்லோடிங்  டவுன்லோடிங்  செய்ய  மாட்டார், செய்ய  வேண்டிய  அவசியம்  இல்லை .  அவராப்பார்த்து  செஞ்சா  ஓக்கே ,  நாம  செய்யும்படி  அவரைக்கட்டாயப்படுத்த  முடியாது , கம்யூனிஸ்ட்  ஆட்சி  நடக்கும்  கேரளாவில்  நாயகன்  ஒரு  டிரைவரிடம்  சரக்கை  இறக்க  ஏற்ற  உதவும்படி  அதிகாரம்   செய்யும்  காட்சி  அதைத்தொடர்ந்து  நடக்கும்  ரகளை  நம்பும்படி  இல்லை 


2  க்ளவுஸ்  உற்பத்தி  செய்யும்  கம்பெனியில்  தொழிலாளர்கள்  நகம்  நீளமாக  வளர்த்தக்கூடாது ,  மோதிரம்  அணியக்கூடாது, இந்த  விதி  வலியுறுத்தப்பட்டும்  நாயகி  மோதிரத்தைக்கழட்ட  முடியவில்லை  என  கூறுவது  ஏற்கும்படி  இல்லை 


3  கம்பெனில செல்ஃபோன்  கொண்டு  போக  அனுமதி  இல்லை.,  சில  காரணங்களுக்காக  விதியை மீறி  செல் ஃபோன்  கொண்டு போகும்  நாயகி  அதை  சைலண்ட்  மோடில்  வைக்க  மாட்டாரா? திடீர்  என  கால்  வந்தால்  ரிங்  டோன்  காட்டிக்குடுக்கும்  என  தெரியாதா? 


4    கம்பெனியில்  நடந்த  ஒரு  சீட்டிங்கை    செல் ஃபோனில்  நாயகியை  படமாக்கச்சொல்லும்  அந்த  லேடி  அந்த  க்ளிப்பிங்கை  தன்  செல்  ஃபோனுக்கு  ஏன்  அனுப்பச்சொல்லவில்லை ? நாயகி ஃபோனிலேயே  இருப்பதை  விட  அவர்  ஃபோனிலும்  இருந்தால்  கூடுதல்  பாதுகாப்பு  ஆயிற்றே?


5  நாயகியின்  தோழி  நாயகியின்  அருகே  படுத்துத்தூங்கிக்கொண்டு  இருக்கும்போது  நாயகன்  கூடலுக்கு  முற்படுவது  அபத்தம் , குழந்தை  தூங்கிட்டு இருந்தாலே  தயங்குவதுதான்  யதார்த்தம், நாயகி  வெளில  ஹாலுக்குப்போகலாம்  என  அழைத்தும்  நாயகன்  அதை  கேட்காதது  ஏனோ? 


6  வைரல்  ஆன  வீடியோ  க்ளிப்பிங்கில்  பிரேஸ்லெட்  காட்டப்பட்ட  பின்பும்  சம்பந்தப்பட்ட  நபர்  அந்த  பிரேஸ்லெட்டை  கழட்டாமல்  அணிந்திருப்பது  ஏனோ? 


7   வீடியோ  க்ளிப்பிங்கில்  இருந்த  பெண்   கொலை  செய்யப்பட்டாளா? என்ற  நாயகியின்  கேள்விக்கு  பதிலே  கிடைக்கவில்லை . முழுமையான  க்ளைமாக்ஸாக  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஈரானியப்படங்கள்  போல  மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை , பெண்களுக்குப்பிடிக்கும் , ரேட்டிங்  3 / 5 ,  தி

யேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்  முன்பே  பல  விருதுகளைக்குவித்த  படம் 

Ariyippu
Ariyippu film poster.jpg
Release poster
Directed byMahesh Narayanan
Written byMahesh Narayanan
Produced by
Starring
CinematographySanu Varghese
Edited by
Music bySushin Shyam
Production
companies
  • Shebin Backer Productions
  • Kunchacko Boban Productions
  • Moving Narratives
Release dates
Running time
107 minutes
CountryIndia
LanguagesMalayalam
Hindi

Sunday, January 08, 2023

BUTTERFLY (2022) தெலுங்கு - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 நாயகியின்  அக்கா  ஒரு  கிரிமினல்  லாயர், அக்காவின்  கணவரும்  லாயர் தான். இருவருக்கும்  மனத்தாங்கல்  ஏற்பட்டு  பிரிந்து  வாழ்கிறார்கள் . தம்பதிக்கு  இரண்டு  குழந்தைகள் . குழந்தைகள் நாயகியின் அக்காவுடன் தான்  இருக்கிறார்கள். நாயகியின்  அக்கா  ஒரு  லாயர்  என்பதால்  தொழில்  முறையி  சில  எதிரிகள்  அவ்வப்போது  அவரை  மிரட்டுகிறார்கள் 

இப்படி  இருக்கும்போது  நாயகியின் அக்காவுக்கு  ஜட்ஜாக  பிரமோஷன் கிடைக்க  இருக்கிறது, அது  சம்பந்தமான  அஃபிசியல்  மீட்டிங்கிற்காக  டெல்லி  போகிறார்.நாயகி தான்  இப்போது  குழந்தைகளைப்பார்த்துக்கொள்ள  வேண்டும்


காலையில்  ஸ்கூலுக்குப்போகும்போது  குழந்தைகள்  மிஸ்  ஆகி  விடுகிறார்கள். அபார்ட்மெண்ட்டில்  தான்  இருந்தார்கள். போலீசில்  புகார்  கொடுக்கலாம்  என்றால்  போலீஸ்  அசால்ட்டாக  24  மணி  நேரம்  கழித்துத்தான்  புகாரைப்பதிவு  செய்ய  முடியும்  என  சொல்லி  விடுகிறார்கள்


நாயகி  தன்  பாய்  ஃபிரண்டுடன்  சேர்ந்து  பல  இடங்களில்  தேடுகிறார், ஆனால்  கிடைக்க வில்லை. அப்போது    ஒரு  ஃபோன்  கால்  வருகிறது . குறிப்பிட்ட  இடத்துக்கு  ரூ  5  லட்சம்  கொண்டு  வந்து  கொடுக்க  வேண்டும் என  மிரட்டுகிறது  அந்தக்குரல் .


பணம்  கொடுத்த  பின்னும்  குழந்தைகள்  வர வில்லை . அப்போதுதான்  அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவன் தான்  இந்த  சூழ்நிலையைப்பயன்படுத்தி  கேம்  ஆடுகிறான்  என்பது  தெரிய  வருகிறது 


 இப்போது  அடுத்த  ஃபோன்  கால்  வருகிறது

.  ரூ  15  லட்சம்  கேட்கிறது. இதற்குப்பின்  நாயகி  எடுத்த  முடிவு  என்ன ?  அந்த  நிஜமான  கிட்நாப்பர்  யார்?  என்பதை  எப்படிக்கண்டு  பிடிக்கிறார்கள்    என்பது  மீதி  திரைக்கதை 


நாயகியின்  அக்காவாக  பூமிகா. சில  காட்சிகள்  தான்  என்றாலும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். 


நாயகியாக அனுபமா  பரமேஸ்வரன்  படத்தின்  முதுகெலும்பு. படம்  பூரா  தானும்  பதட்டமாக  இருந்து  பார்க்கும்  நம்மையும்  பதட்டத்தில் ஆழ்த்துகிறார். 


ஆனால் போலீசுக்கு  ஏன்  முதலிலேயே  போகவில்லை ? அக்காவுக்கு  தகவல்  தெரிவித்திருந்தால்  அவர்  ஏதாவது எளிய  வழி  காட்டி இருப்பாரே? என்ற  கேள்விகளுக்கு  பதில்  இல்லை 


காந்தா  சதீஷ்  மேலும்  பாபு  என்பவர்கள்  தான்  திரைக்கதை  , இயக்கம்  எல்லாம். க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டிலும் , கூடவே  இருந்துதான்  ஒருவர்  குழி  பறிக்கிறார்  என்பதும்  எதிர்பாராதவை.

சமீர்  ரெட்டியின்  ஒளிப்பதிவு  கச்சிதம்.அர்விஸ் அண்ட்  ஜிடியன்  கட்டா  இருவரும்தான்  இசை.  பாடல்கள்  சுமார்தான். பிஜிஎம்  ஓக்கே  ரகம் . மது  சிண்ட்டாலாவின்  எடிட்டிங்கில்  ரெண்டேகால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது


 குடும்பத்துடன்  பார்க்கத்தக்க இந்தப்படம்  டிஸ்னி  ஹாட்  ஸ்டார்  பிளஸ்  ஓடிடி  தளத்தில்  தமிழ்  டப்பிங்குடன்  கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1 பெண்களுக்கு அம்மாவின்  கருவறையிலும் ,  சமாதிலயும்  மட்டும் தான்  பாதுகாப்பு இருக்கு 


2   எல்லா வேலைகளையும் நாம  பிடிச்சுதான்  செய்யறமா  என்ன? சில  நேரங்களில்  நம்ம தேவைக்காக  பிடிக்காத  வேலைகளையும்  செய்ய நேரிடும்


3 பணத்துக்கு  முன்னாடி  பாவம் ,புண்ணியம்  பார்க்கக்கூடாது


4  பொதுவா கிட்நாப் நடந்து  பிளாக்மெயிலர் பணம்  கேட்கும்போது  நம்ம  கிட்டே  இருந்து  எவ்வளவு  பணம் கறக்க  முடியுமோ  அதை  கறந்துட்டு  கடத்தியவர்களைக்கொன்னுடுவாங்க. ஏன்னா  கடத்தியவனைப்பார்த்த  சாட்சியை  உயிரோட  விடமாட்டாங்க . அதனால  எப்பவும்  இந்த  மாதிரி  கடத்தல்  கேஸ்ல  போலீஸ்  ல  புகார்  கொடுப்பதுதான்  நல்லது 


5  இரண்டு  பெண்கள்  ஆண்  துணையே  இல்லாமல்  இந்த  ஸ்டேஜ்க்கு  முன்னேறி இருக்காங்கனனா   அவங்க  எத்தனை  வாசல்  ஏறி  இருப்பாங்களோ ?> யாருக்குத்தெரியும்?அப்படினு  அபாண்டமாப்பேசும்  ஆட்கள்  உண்டு 


6  செண்ட்டிமெண்ட்டல்  முட்டாள்கள்   இருக்கறவரை   அவங்க  பாசம்  தான்  நம்மை  மாதிரி  கிட்நாப்பர்களுக்கு  ஆதாரம் 


7  நாங்க மிருக  பரம்பரை . பசிக்கும்போதுதான்  வேட்டை  ஆடுவோம்,  மூட்  வரும்போதுதான்  சுகத்துக்கு  ஆள்  தேடுவோம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகியின்  அக்காவுக்கும், அக்கா  கணவருக்கும்தான்  ,மனத்தாங்கல். குழந்தைகள்  மீது  அவர்  பாசமாகத்தான்  இருக்கிறார். குழந்தை  கடத்தல்  மேட்டரை  அக்கா  கணவரிடம்  சொன்னால்  அவர்  பணம்  தருவார். அவரிடம்  அதை  மறைத்து  பணத்தேவை  மட்டும்   தெரிவிப்பது  ஏன்?


2  நாயகியின்  காதலன்  பெரிய  பணக்காரன். அவன்  பணம்  ஏற்பாடு  செய்ய  முயற்சியே  எடுக்கவில்லை. பெற்றோர்  முன்  தலை  குனிந்து  நிற்பது  போல்  காட்டி  பின்  ட்விஸ்ட் என்ற  பெயரில்  திடீர்  என  பணத்துடன்  வீட்டை  விட்டு  வெளியேறுவது  நாடகத்தனம் 


3  டெல்லி  சென்ற  அக்கா  அங்கே  உடல்  நிலை  பாதிப்படைந்து  ஹாஸ்பிடலில்  இருந்தாலும்  சுய  நினைவுடன்  தான்  இருக்கிறார். ஆனால்  ஒரு  முறை  கூட  தன்  தங்கையிடமோ, குழந்தைகளிடமோ  ஃபோன்  பேச  முயலவில்லை 


4   பதினைந்து  லட்சம்  கடனுக்கு கந்து  வட்டியே  150  நாட்களுக்கு 10%  தான். ஆனால்  வங்கி  3  நாட்கள்  லீவ்  என்பதால்  3  நாட்கள்  ரொட்டேஷனுக்கு  வங்கி  அதிகாரியே  நாயகியிடம்  10%  வட்டி  கேட்பது  எப்படி ?  அதுக்கு  கந்து  வட்டியே  தேவலை  என  நாயகி  அவர்களை  ஒதுக்காதது  ஏன் ? 


5 சிக்கலான  சூழலில்  நாயகி  இருக்கும்போது  அவர்  செய்யும்  காரியங்கள்  எல்லாம்  நமக்கு  அவர் மீது  பரிதாபம்  ஏற்படுத்தும்  வகையில்  இருக்கனும், ஆனால்  நமக்கு  எரிச்சல்  தான்  வருது . இவர்  என்  இப்படிப்பண்றார்? இப்படிப்பண்ணி  இருக்கலாமே? என  யோசிக்க  வைக்கிறது 


6   குறிப்பாக  ஒரு  ஆள்  ஒரு  நைட்  சுகத்துக்கு  15  லட்சம்  என  விலை  பேசும்போது  ஒரு  சோகப்பாட்டு  போட்டு  விட்டு நாயகி  அந்தப்பணத்துக்காக  விலை  போய்  விடுவாரோ  என்ற  பதட்டத்தை  எற்படுத்த  பாடல்  வரிகளில்  சிலவற்றை  சேர்த்து  விட்டிருப்பது  கடுப்பாக  இருக்கிறது 


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல்  பாதி  கொஞ்சம்  இழுவை . பின்  பாதியில்  வரும்  ட்விஸ்ட்டும், க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்  தான்  படத்தைக்காப்பாற்றும் ., ரேட்டிங்   2.25 / 5 

Saturday, January 07, 2023

THE MARRIAGE APP (2022)-MATRIMILLAS ( ஸ்பானிஷ்) ) - திரை விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


 நவீன  விஞ்ஞான  உலகில்  இணைய  செயலிகள்  எனப்படும்  ஆப்  கள்  பலவிதமான  நன்மைகளையும்  தருகின்றன, சில  தீமைகளும்  கிடைக்கின்றன. முதலில்  நல்ல  விஷயம் என்ன? என  பார்ப்போம் 

நடைப்பயிற்சி  உலகம்  முழுவதும்  பரவிக்கிடக்கும் எளிய  உடற்பயிற்சி . இது  கட்டணம்  செலுத்தாமல்  இலவசமாக  செய்யும்  அருமையான  உடற்பயிற்சி. இதை  நாம்  நம்  மனம்  ;போன  போக்கில்  செய்யும்போது சில  நாட்கள்  சோம்பல்  காரணமாக நமக்கு  நாமே  லீவ்  கொடுத்துக்கொள்வோம், ஆனால்  வாக்கிங்  ஆப்  பை  டவுன்  லோடு  செய்து  கொண்டால் அதன்  மூலம் நாம்  எத்தனை  கிமீ  நடக்கிறோம், எத்தனை  ஸ்டெப்ஸ்? எத்தனை  கலோரிகளை  எரிக்கிறோம்,  ரூட்  மேப்  எல்லாம்  அப்டேட்  ஆகி  விடும், அதை  சமூக  வலைத்தளங்களில்  பகிரும்போது  நமக்கு  ஒரு  ஊக்குவிப்பு  கிடைக்கும், அதைப்பார்த்து பலர்  அதை  ஃபாலோ  பண்ணும்  வாய்ப்பும் உண்டு .  ஒரு  நாள்  வாக்கிங்  போகவில்லை  என்றாலும்  நம்  உள்  மனம்  இன்று  அப்டேட்  போட  முடியாது , எல்லாரும்  கேள்வி  கேட்பார்களே? என்பதற்காகவாவது வாக்கிங்  போவோம்


கூகுள்  ஃபிட்  , மீ  ஃபிட் , ஸ்டார்வா  போன்ற  பல  வாக்கிங்  ஆப்கள் ப்ளேஸ்டோரில்  கிடைக்கின்றன.  ப்ளூ  டூத் , ஜிபிஎஸ்  ஆன்    பண்ணி  விட்டு  இந்த  ஆப்பை  டவுன்  லோடு  பண்ணி  ஓப்பன்  பண்ணி  நடந்தால்  நெட்  ஒர்க்  கவரேஜ்  இல்லாத  ஏரியாக்களில்  வாக்கிங்  போனாலும்  அது  அப்டேட்  ஆகிவவிடும்.\

ஸ்பாய்லர்  அலெர்ட்


இப்போ  படத்தோட  கதைக்கு  வருவோம். நாயகன் , நாயகி  இருவரும்  தம்பதிகள் , அவர்களுக்கு  ஒரு  மகன், ஒரு  மகள் .  வாழ்க்கை  நல்லா  போய்க்கொண்டு  இருந்தாலும்  நாயகிக்கு  ஏதோ  ஒரு  மனக்குறை .


ஒரு பார்ட்டியில்  தன்  தங்கையைப்பார்த்து  பேசிக்கொண்டு  இருக்கும்போது அவள்  இந்த  மேரேஜ்  ஆப்  பற்றி  சொல்கிறாள். ஈக்குலிபிரியம்  என்ற  அமைப்பு  குறிப்பிட்ட  அளவு  கட்டணம்  வாங்கிக்கொண்டு தம்பதிகள்  இருவர்  கையிலும்  ஒரு  வாட்ச்  அல்லது  பிரேஸ்லெட்  போல  ஒரு  கருவியைப்பொருத்தி  விடுவார்கள் . தம்பதிகள்  பரஸ்பரம்  ஒருவருக்கு  ஒருவர்  உதவும்போது  அவர்கள்  கணக்கில்  பாயிண்ட்ஸ்  ஏறும். இதனால்  பாயிண்ட்ஸ்  பெறுவதற்காக  போட்டி  போட்டுக்கொண்டு  ஒருவருக்கொருவர்  அன்பாக  , ஒத்தாசையாக  இருப்பார்கள் 


இருவரும்  அந்த  அமைப்புக்குச்சென்று  அதில்  பணம்  கட்டி  சேர்கின்றனர் அதற்குப்பின் அவர்கள்  வாழ்க்கை  அமைப்பே  மாறுகிறது . போட்டி  போட்டுக்கொண்டு  ஒருவருக்கொருவர்  அன்பு  மழை  பொழிகிறார்கள் . ஒரு  கட்டத்தில்  இருவரும்  குறுக்கு வழிகளில்  பாயிண்ட்ஸ்  ஏற்ற  முயல்கின்றனர் 


 நாயகி  தன்  தோழியை  பார்ட்டிக்கு  வர  வைத்து  கணவனுடன்  பேச  வைத்து  நாயகிக்கு  நாயகன்  உண்மையாக  இல்லை  என  மைனஸ்  பாயிண்ட்டை  அவனுக்கு  பெற்றுத்தருகிறாள் 


நாயகன்  தன்  தோழன்  ஒருவனின்  உதவியோடு  நாயகியை  துப்பாக்கி முனையில்  மிரட்டி  கொள்ளை  அடிக்க  வைத்து  அந்தப்பொருட்களை  மீட்பது  போல  டிராமா  போட்டு   பாயிண்ட்ஸ்  ஏற்றிக்கொள்கிறான்


 இருவருக்கும்  இந்த  மோசடிகள்  தெரிய  வரும்போது  பிரிவு  வ்ருகிறது. இதற்குப்பின்  தம்பதிகள்  சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


ஒரு  சாதாரண  எளிமையான  கதைகக்ரு  தான் , ஆனால் அதை மிக  அழகாக  திரைக்கதை  ஆக்கி  கே  பாக்யராஜ்  திரைக்கதை  அமைக்கும்  பாணியில்  எடுத்த  விதம்  நன்றாக  இருக்கிறது 


நாயகனாக , நாயகியாக  லுசானா  லோபிலாட்டோ  மற்றும்  ஜ்வான்  மினிஜின்  இருவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் . இருவரின்  வாரிசுகளும்  கொள்லை  அழகு , சுட்டித்தனமான  நடிப்பு 


கேப்ரியலின்  கச்சிதமான  திரைக்கதைக்கு  உயிர்  ஊட்டி  இயக்கி  இருப்பவர் செபாஸ்டியன்  டி கரோ.  101  நிமிடங்கள்  ஓடும்  அளவு  நீட்டாக  எடிட்  செய்து  இருப்பவர்  ஜூவான்  மேனுவ்ல்.  இசை பீட்ரோ ஒனாட்டோ . ப்டம்  முழுக்க  அர்ஜெண்ட்டைனாவில்  படம்  ஆக்கப்பட்டிருக்கிறது 


  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்சில்  ஆங்கில  சப்  டைட்டில்  உடன்  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  


1   படத்தோட  ஓப்பனிங்  சீன்ல  இருந்தே  நேரடியா  கதைக்குள்  செல்வது 


2   மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  அந்த  சுட்டிப்பெண்  எடுக்கும்  வீடியோக்கள்  சோசியல்  மீடியாவில்  வைரல்   ஆவதும் . ஸ்கூல்  நிர்வாகம்  நாயகன், நாயகியை  அழைத்து  புகார்  சொல்லும்போது  அந்த  வீடியோவைப்பார்த்து  இவர்கள்  பூரிப்பதும்  கிளாசிக் 


3   க்ளைமாக்சில்  சொல்ல வரும்  சோசியல்  மெசேஜ் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவாக  லேடீசுக்கு  பொசசிவ்னெஸ்  அதிகம்., அப்படி  இருக்கும்போது  நாயகி  தன்  கணவன்  வேறு  ஒரு பெண்ணுடன்  ஜாலியாக  சிரித்துப்பேசுவதை க் கண்டு  கொள்ளவில்லை  என்றதும்  நாயகனுக்கு  ஏன்  சந்தேகம்  வரவில்லை ?


2   நாயகனும், நாயகியும்  ரொமாண்டிக்காக  பேசுவது ,  முத்தம்  இடுவது  எல்லாவற்றையும்  மகள்  வீடியோ  எடுக்கிறாள்  நேரடியாக  அவர்கள்  பார்க்கும்  கோணத்தில்  தான்  எடுக்கிறாள், ஆனால்  அவர்கள்  அதைக்கண்டு  கொள்ளவில்லை . ஃபோனை  வாங்கி  செக்  பண்ணி  இருக்கலாமே?  ஒவ்வொரு  டைமும்  வீடியோ  பண்றியா?  என  உதட்டளவில்  கேப்பதோடு  சரி 


3   குடும்பம், தாம்பத்யம்  எல்லாம்  நல்லா  போய்க்கிட்டு  இருக்கும்போது  ஏதோ  வெறுமையை  உணர்கிறேன்னு  பொத்தாம்  பொதுவா  நாயகி சொல்றாரே  தவிர  என்ன  பிரச்சனை என்பதை  சொல்லவே  இல்லை 


4  அடிக்கடி  நாயகன், நாயகி  இருவரும்  லாங்க்  ட்ரிப்  போய் நைட்  வெளில ஸ்டே  பண்றாங்க . வீட்டில்  குழந்தைகளை  யார்  பார்த்துக்கறாங்க? பணியாட்களும் இல்லை ,   பெரியவர்கள்  யாரும்  வீட்டில்  இல்லை 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெரிய  அளவில்  திருப்பங்களோ , விறுவிறுப்போ  இல்லாத  சாதாரணமான  காமெடி   மெலோ  டிராமா, ஸ்லோவாதான்  போகும்  .  ரேட்டிங்  2. 5 / 5  

Friday, January 06, 2023

DHOKHA ROUND D CORNER (2022) ஹிந்தி - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 Spoiler alert



நாயகன், நாயகி  இருவரும்  மணமான  தம்பதியினர்.வீட்டில்  பணிப்பெண்  முன்  இருவரும்  சண்டை  இட்டுக்கொள்கிறார்கள். நாயகி  நாயகனிடம்  விவாகரத்து  கேட்கிறாள். நாயகன்  சரியாக  பதில்  சொல்லவில்லை . ஆஃபீஸ்க்குக்கிளம்பி  போய் விடுகிறான். அங்கே டி வி ல  ஒரு  பிரேக்கிங்  நியூஸ்  ஓடிக்கொண்டு  இருக்கிறது. ஒரு  தீவிரவாதி  ஒரு  அபார்ட்மெண்ட்டுக்குள்  புகுந்து  ஒரு  பெண்ணை  பிணையக்கைதியாகப்பிடித்து  வைத்துக்கொண்டு  மிரட்டுகிறான்., இவன்  மரண  தண்டனை  பெற்று  சிறையில் அடைக்கப்பட்டு  பின் தப்பியவன், 13  பள்ளிக்குழந்தைகளைக்கொன்றதாக  இவன்  மீது  வழக்கு 


இந்த  செய்தி  கேட்டதும்  நாயகனுக்கு  அதிர்ச்சி  , தீவிரவாதி  மிரட்டிக்கொண்டிருப்பது  நாயகியைத்தான். உடனே  நாயகன்  விரைந்து  வீட்டுக்குப்போகிறான், அங்கே  போலீஸ்  ஆஃபீசரிடம் “ என்  மனைவியை  காப்பாற்ற  வேண்டும்  என்னை  உள்ளே  விடுங்கள்  என்கிறான்.போலீஸ்  ஆஃபீசர்   விடவில்லை. அப்போது  நாயகன் ஒரு  அதிர்ச்சி  தகவலை சொல்கிறான். நாயகி    குறிப்பிட்ட  நேரத்தில்  மனநலனுக்கான  மாத்திரை  சாப்பிட வேண்டும், அப்படி  சாப்பிட  வில்லை  எனில்  அவள்  ஸ்பிலிட்  பர்சனாலிட்டி  மூலம்  வேறு  ஒரு  ஆளாக  மாறி  விடுவாள்:, அவளால்  தீவிரவாதிக்கு  ஆபத்து  என்கிறான்


இங்கே  உள்ளே  வீட்டில்  நாயகி  தீவிர  வாதியிடம்  ஒரு  கதை  சொல்கிறாள். நாயகனுக்கும் , சைக்யாட்ரிஸ்ட்  லேடி  டாக்டருக்கும்  தொடர்பு  இருந்தது  தனக்குத்தெரிய  வந்ததால்  தன்னை  பைத்தியம்  என  பட்டம்  கட்டி  தன்  சொத்துக்களை  எல்லாம்  அபேஸ்  பண்ண    இருவரும்  திட்டம்  இடுகிறார்கள் டைவர்ஸ்  கொடுத்து  விட்டால்  என்  சொத்துக்கள்  என்   கணவனுக்குக்கிடைக்காது  என்பதால்  தர  மறுக்கிறார்.  என்னை  நீயே  எங்காவது  கொண்டு  போய்  விடு  என்கிறாள் 


இதற்குப்பின் இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 


நாயகனாக  மாதவன். சாக்லெட்  பாய்  ஆகவே  பார்த்த  நமக்கு  இவரை  நெக்டிவ்  ரோலில்  பார்க்க  முதலில்  என்னவோ  போல்  இருந்தாலும்  திரைக்கதையின் கட்டமைப்பு  நம்மை  பிறகு  அதற்குப்பழக்கி  விடுகிறது 


நாயகியாக  குசாலி  குமார் .  மாத்திரை  சாப்பிட்டால்  ஒரு  மாதிரி  அதன்  வீரியம்  குறைந்த  பின்  வேறு  மாதிரி  நடந்துகொள்ளும்  கேரக்டர் . இவர்  நல்லவரா? கெட்டவரா? என  நாயகன்   பட  டயலாக்  போல  நாம்  யோசிக்க  வேண்டியதாக  இருக்கிறது 


தீவிரவாதியாக  அபர்சக்தி  குராணா. எந்த  தப்புமே  செய்யாமல்  போலீசால்  தீவிரவாதி  என  ஃப்ரேம்  செய்யப்பட்டு  பின்  அதிலிருந்து  தப்பிக்க  அவர்  செய்யும்  செயல்கள்    பரிதாபத்தை  ஏற்படுத்துகிறது 


போலீஸ்  ஆஃபீசராக  தர்சன்  குமார். கச்சிதமான  வில்லன்  நடிப்பு , மிரட்டி  இருக்கிறார், சைக்யாட்ரிஸ்ட்  லேடி  டாக்டராக  வாசுகி  கொடுத்த  பாத்திரத்தை  கச்சிதமாக  செய்திருக்கிறார்


  ஒரு  கொலை  நடப்பதும்  அதை  யார்  செய்தார்கள்  என்பதும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  வைத்ததோடு  நாம்  எதிர்பாராத  நான்கு  முனை  குழப்பங்களுக்கு  தீர்வு  சொல்லும்போது  இயக்குநரைப்பாராட்டத்தோன்றுகிறது 


அமித்ராயின்  ஒளிப்பதிவு  கச்சிதம்   அமர்  தான்  இசை , பிஜிஎம்  மில்  பேர்  சொல்கிறார்  2  மணி  நேரப்படத்தை  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  எடிட்  செய்திருக்கிறார்  தர்மேந்திர சர்மா


பார்க்கத்தகுந்த  த்ரில்லர்  கதையான  இப்படம் நெட் ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 



ரசித்த  வசனங்கள்


1  இந்த  உலகத்தில்  உள்ள  எந்த  ஒரு  ஆணுக்கும்  தெரியாத  விஷயம்  என்ன  தெரியுமா? ஒரு  பெண்ணின்  தேவை  என்ன? எனும்  விஷயம் தான் 


2 மரண  தண்டனைக்கைதியிடம்  உன்  கடைசி  ஆசை  என்ன?னு  கேட்டா  இன்னும்  நான்  வாழனும்னு தான்  சொல்வான்



லாஜிக்  மிஸ்டேக்ஸ்



1   நாயகி  குடிக்கும்  காபியில்  2  மாத்திரைகளை  மட்டும்  தான்  போடுகிறார். அது  கரைய  டைமே  இல்லை . அப்போ  நாயகி  காபி  குடித்து  முடித்ததும்  அதில்  மாத்திரை  இருப்பதை  பார்த்திருப்பாரே?


2   தீவிரவாதி   மிரட்டும் துப்பாக்கியில்  புல்லட்  இல்லை  என்று  சொன்னதும்  டக்னு  போலீஸ்  அவனை  சுட்டிருக்க  வேண்டாமா? அவன்  கண்னாடியை உடைத்து   ஒரு  பீசை  எடுத்து  கீழே  விழுந்து  கிடக்கும்  நாயகியை  எழ  வைத்து  கழுத்தில்  கண்ணாடியை     வைத்து  மிரட்டும்  வரை  ஏன்  வேடிக்கை  பார்த்துக்கொண்டு  இருக்கிறது ?


3  பணயக்கைதியான  நாயகி  வி ஐ பி கிடையாது . பின்  ஏன்  போலீஸ் , மேலிடம்  அனைத்தும்  தயங்குகின்றன ?


4  கோடிக்கணக்கான  சொத்துக்கு  நாயகி  அதிபதி. நாயகியைக்கூட்டிட்டுப்போக  தயார்  ஆகும்  தீவிரவாதி  நாயகனிடம்  பிசாத்து  பணம்  50  லட்சம்  ரூபாய்  கேட்பது  எதற்கு? நாயகியிடமே  பணம்  பெறலாமே?

5  தீவிரவாதி  ஜன்னல்  வழியா  16  தடவை   எட்டிப்பார்த்தப்ப  சுடாத  போலீஸ்  வீட்டை  விட்டு  வெளியே  வந்தப்ப  சுடாத  போலீஸ்  மீண்டும்  அவன்  உள்ளே  போய்  ஜன்னலை  சாத்திய  பின் 75  போலீசும்    ஜன்னல்  கதவு  நோக்கி துப்பாக்கியைக்குறி  பார்த்து  வேஸ்ட்டா  எதுக்கு  போஸ்  கொடுக்கறாங்க ?

6 க்ளைமாக்சில்  நாயகனும்  வில்லனும்  துப்பாக்கியைப்பிடுங்குவதில்  தள்ளுமுள்ளு  நடக்கும்போது  டக்னு  நாயகி  வெளியே  ஓடி  இருக்கலாம், ஏன்  வேடிக்கை  பார்த்துட்டு  நிக்குது? நாயகன், வில்லன்  யார்  எக்கேடு  கெட்டா  நாயகிக்கு  கவலை  இல்லை ., வேற  ஆள்  இருக்கு . ஆனா  ஏன்  அங்கேயே  நின்னு  பார்த்துட்டே  இருக்கு ?


7   போலீஸ்  வேனில்  தீவிரவாதியை  ஏற்றி  போலீஸ்  கான்ஸ்டபிள்கள்  பாதுகாப்புக்கு  கூட  ஏறும்போது  போலீஸ்  ஆஃபீசர்  நீங்க  எல்லாரும்  முன்னால  ஏறுங்க , நான்  மட்டும்  அவன்  கூட இருக்கேன்னு  ஒரு  பிளான்  போடறாரு. விசாரணை  நடக்கும்போது  அவர்  ஏன்  அப்ப்டி  செய்தார்?னு கேட்பாங்களே? என்ன  சொல்லி  சமாளிப்பார்?



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் = நம்பவே  முடியாத  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  சுவராஸ்யமான  த்ரில்ல்ர்  கதைதான்  , பார்க்கலாம், ரேட்டிங் 2.5 / 5