Showing posts with label THE TEACHER (2022) மலையாளம் - திரை விமர்சனம். Show all posts
Showing posts with label THE TEACHER (2022) மலையாளம் - திரை விமர்சனம். Show all posts

Wednesday, January 11, 2023

THE TEACHER (2022) மலையாளம் - திரை விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


spoiler alert
 நாயகி ஒரு தனியார்  பள்ளியில்   ஸ்போர்ட்ஸ்  டீச்சர்., அவரது  கணவர்  பிரைவேட்  கம்பெனில  பணி  செய்பவர். திருமணம்  ஆகி  4  வருடங்கள்  ஆகியும்  இவர்களுக்கு  குழந்தை  பாக்கியம்  இல்லை ,இப்படிப்பட்ட  ஒரு  தருணத்தில் ஸ்போர்ட்ஸ்   விழாவுக்குச்சென்ற  இடத்தில்  நான்கு    மாணவர்களால்  நாயகி மயக்கம்  அடைய  வைத்து  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்படுகிறாள் .இதனால்  கர்ப்பமும்  ஆகிறாள் 


கணவனுக்கு  நாயகி  நடந்த  விஷயத்தைச்சொல்லவில்லை .நாயகி  கர்ப்பம்  ஆனது  தெரிந்து  கணவன்  மிகவும்  மகிழ்ச்சி  அடைகிறான் ஆனால்  நாயகி  மிகவும்  மனநிலை  பாதிக்கப்பட்டு  சோகமாக  இருக்கிறாள் 

 ஒரு  கட்டத்தில்      கணவனுக்கு  விஷயம்  தெரிகிறது . யாரோ  ஆக்கிய  கர்ப்பத்துக்கு  என்னை  பலிகடா  ஆக்கப்பார்க்கிறாயா?  என கணவன்  அவளை  அடித்து  விடுகிறான் 


போலீசில்  புகார்  கொடுக்கலாம்  என  நாயகி  வற்புறுத்தியும்  கணவன்  கேட்கவில்லை , ஆஃபீசில்  தன்னுடன்  பணி  புரியும்  தன்  நண்பனிடம்  இந்த  விஷயத்தை  சொல்லி  விடுகிறான். அப்படிச்சொன்னது  நாயகிக்குப்பிடிக்கவில்லை 


இதற்குப்பின்  நாயகி  என்ன  முடிவு  எடுத்தாள் ?  அந்த  நான்கு  மாணவர்கள்  யார்? என்பதை  எப்படிக்கண்டுபிடிக்கிறாள் ? நான்கு  பேரைக்கொல்லாமல்  , காயப்படுத்தாமல்  வித்தியாசமான  சிந்தனையில்  அவர்களை  எப்படிப்பழி  வாங்கினாள்  என்பதுதான்  திரைக்கதை 


நாயகியாக  அமாலா  பால், படம்  முழுவதும்  மன நிலை  பாதிக்கப்ட்டு   மிகவும்  டிப்ரஷன்  ஆன  முகத்துடனேயே  வருகிறார்.  கணவன்  தன்னைப்புரிந்து  கொள்ளாதது  கண்டு  மனம்  வேதனைப்படும்போது   உருக்கமான  நடிப்பு . கணவனின்  நண்பன்  வீட்டுக்கு  வந்து  ஆறுதல்  சொல்லி  தோள்  மேல்  கை  வைக்கையில்  கையை  எடுடா . வெளீல  போடா  என  ஆக்ரோஷமாகப்பொங்கும் போது  எரிமலை  நடிப்பு 


கணவனாக  ஹாக்கிம் ஷாஜகான்  கச்சிதமான  நடிப்பு . பயந்த  சுபாவம்  உள்ளவராக , மனைவியிடம்  மன்னிப்புக்கேட்பவராக , அம்மாவிடம்  இந்த  வயதிலும்  அடி  வாங்குபவராக  பல  மாறுபட்ட  முகங்களைக்காட்ட  வேண்டிய  சூழல் . உணர்ந்து  நடித்திருக்கிறார்


போராட்டப்பெண்மணியாக , கம்யூனிஸ்ட்டாக   கல்யாணியாக  வரும்  மஞ்சு  பிள்ளை  மாறுபட்ட  கேரக்டர்  டிசைன்  ., அவரது  கேரக்டர்  டிசைன்   கே  ஆர்  கவுரியம்மாள் , முன்னாள்  நக்சலைட்  அஜிதா  இருவ்ரின்  கலப்பாக  இருக்கிறது.   புகை  பிடிக்கும்  கேரக்டராக  ஏன்    காட்ட  வேண்டும்  என  தெரியவில்லை , புரட்சிகரமான   பெண்  எனக்காட்ட  புகை  பிடிப்பவராக , மது  அருந்துபவராகக்காட்ட  வேண்டுமா ? என்ன ? 


நாயகிக்கு  உதவுபவராக  செம்பவன்  வினோத்    கலக்கி  இருக்கிறார். இவருக்கு  தரப்பட்ட  ரோல்  ஒரு  கெஸ்ட்  ரோல்  தான், ஆனால்  பெஸ்ட்  ரோல் 


இயக்கம்  விவேக் . நாயகி   நான்கு  பேரில்  ஒரு  மாணவனை  முதலில்  அடையாளம்  கண்டு  பிடிக்க   எடுக்கும்  முயற்சிகள் , கையாளும்  யுக்திகள்  அட  போட  வைக்கின்றன. 


நான்கு  மாணவர்களில்  இரண்டு  பெர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்கள் . கல்யாண  வீட்டில்  டீச்சரைக்கண்டு  சமாளிப்பது  செம . நாயகி  என்ன  தைரியத்தில்  குற்றவாளிகளில்  ஒருவனை  லாட்ஜில்  தனிமையில்  சந்திக்கிறார்  என்ற  கேள்விக்கு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  விடை  இருக்கிறது 


எடிட்டர்  மனோஜ்  கனகச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்து  இருக்கிறார்.டான்  வின்செண்ட்டின் இசை  , பின்னணி  இசை  கச்சிதம் .  அனுவின்  ஒளிப்பதிவு  நல்ல  தரம் 


பெண்களும்  பார்க்க  வேண்டிய  ரிவஞ்ச்  த்ரில்லர்  மூவி  இது . நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1  நாளுக்கு  நாள்  ஸ்மார்ட்  ஆகிட்டே  போறீங்க 


 என்  பொண்டாட்டி  அழகுக்கு  ஈடு  கொடுக்கனும் இல்ல? 


2  ஒருவரின்  உரிமை  பறிக்கப்படும்போது  அவரால  மூச்சு  கூட  விட  முடியாது , அந்த  நிலைல தான்  அவர் போராடவே   தொடங்குவார்


3  குடும்பம்கறது  பார்லிமெண்ட்  மாதிரி  அதுல  ஆம்பளைங்கதான்  பிரைம் மினிஸ்டர்  மாதிரி  இருக்கனும், நாம  கிழிக்கும்  கோட்டை  அவங்க  தாண்டக்கூடாது 


4  நாம  கோபமா  இருக்கும்போது  செய்யும் தவறுகளை நாம  உணரும்போது  அது  காலம்  கடந்த  ஞானமாக  இருக்கும்


5 ஒரு  மனிதனை  உள்ளுக்குள்ளேயே  வெச்சு  அரிக்கும்  விஷயம்  எது  தெரியுமா?  குற்ற  உணர்ச்சி 


6   பொண்ணுங்க  ஷார்ட்ஸ்  போடறது  தப்பு  இல்லை , அதுல  தப்புக்கண்டு  பிடிக்கும்   எண்ணம்  தான்  தப்பு 


7 நீ சின்னப்பையன், உனக்கு தப்பான  பாதையைக்காட்ட  நிறையப்பேர்  இருப்பாங்க , நீதான்  ஜாக்கிரதையா  இருக்கனும் 


8   எனக்கு  மேரேஜ்  ஆகி  12  வருசம்  ஆகுது , இதுவரை  என்  புருசன்  தான்  செஞ்ச  எந்த  தப்புக்கும்  என்  கிட்டே  மன்னிப்புக்கேட்டதே  இல்லை 


9 ஒருத்தரோட நிழல்ல  வாழ்றதை விட  தனியா வாழ்வதே  மேல் 


10   எனக்கு  ஒரு பிரச்சனைனு  வர்றப்ப  நீ  கூட  நிக்கலை. அப்புறம்  நீ  என்ன  துணை ? வாழ்க்கைத்துணை ?


11   சில  முடிவுகள்  நம்ம  பயத்தை  இல்லாம  ஆக்கும் ,  நம்பிக்கையை  வளர்க்கும் ,  எல்லாரும்  அதை ஒத்துக்கனும்னு  அவசியம்  இல்லை , ஆனா அந்த  முடிவுதான்  நம்மை  நம்ம  சொந்தக்கால்ல  நிக்க  வைக்கும் 


12   போலீஸ்  லத்திக்கு  மட்டும்  குழந்தை  கொடுக்கும்  சக்தி  இருந்தா  எனக்கு  இந்நேரம்  ஆயிரக்கணக்கான  குழந்தைகள்  பிறந்திருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1    தான்   கர்ப்பம்  ஆனது  தன்  கணவனால்  அல்ல  என்பதை  உணர்ந்த  நாயகி  அந்த  விஷயம்  கணவனுக்குத்தெரியாம  இருக்க  நினைப்பதாக  இருந்தால்   கர்ப்பம் ஆன  மெடிக்கல்  ரிப்போர்ட்டை  வீட்டிலேயே  வைப்பது  ஏன்? 


2  கணவனுக்குத்தெரியக்கூடாதுனு  நினைக்கும்  நாயகி தன்  ஃபேமிலி  டாக்டரிடம்  எதற்காக  செக்கப்  செய்து  கொள்கிறாள் ? புது  டாக்டரிடம், வேற  ஏரியா  டாக்டரிடம்  செக்கப்  செய்து  கொள்வதுதானே  சேஃப்டி ?


3  ஸ்கூலில்  உள்ள  க்ளாஸ்  ரூம்களை கதவு  டைப்பது  பியூன்  வேலை,  டீச்சர்  ஆன  நாயகி  அந்த  வேலையை  ஏன்  செய்கிறார்?


4  பாலியல் வன் கொடுமைக்கு  ஆளான  நாயகி 24 மணி நேரத்துக்குள் மெடிக்கல்  டெஸ்ட்  செய்திருந்தால்தான்  குற்றவாளி  பற்றி  துப்புக்கிடைக்கும்  என்பது  தெரிந்தும்  அதை  செய்யவில்லை. 4 பேரால்  வன்கொடுமைக்கு ஆளானதால்  கர்ப்பம்  ஆக  வாய்ப்பு  உண்டு  என  தெரிந்தும்  3மாதங்களாக  அஜாக்கிரதையாக  இருப்பது  ஏன் ?  


5   போலீசில்  புகார்  கொடுக்க வேண்டும்  என  முடிவு  எடுக்கும் நாயகி  மகளிர்  காவல்  நிலையத்துக்கு  ஏன்  போகவில்லை ?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சராசரியான  ஒரு  ரிவஞ்ச்  த்ரில்லர்  தான் , ஆனால்  திரைக்கதையும் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்   புதுசா  இருக்கு  . ரேட்டிங்  2.75  / 5