Wednesday, October 19, 2022

RORSCHACH (2022) ( மலையாளம்) -சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர்)

 


RORSCHACH (2022)  ( மலையாளம்) -சினிமா விமர்சனம்

 

டைட்டிலுக்கு  என்ன  அர்த்தம்?னு  கூகுள்  சர்ச்  பண்ணிப்பார்க்காம  இந்தப்படத்தைப்பார்த்தாதான்  சஸ்பென்ஸ்  மெயிண்ட்டெயின்  ஆகும்,

மம்முட்டியின்  சொந்தப்படமான  இது  மிஸ்ட்ரி  த்ரில்லரா? சைக்கலாஜிக்கல்  த்ரில்லரா? ரிவஞ்ச்  த்ரில்லரா? என்பதே  கடைசி  வரை  சஸ்பென்சாகவே  இருக்கும்  என்பதுதான்  இதன்  பிளஸ்  பாயிண்ட்

 

ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோ  போலீஸ் ஸ்டேஷன்  போய்  தன்  மனைவி  காணாம  போனதா  புகார்  தருகிறார்.

கார்ல  போய்க்கிட்டு  இருக்கும்போது   ஒரு  ராங்  டர்ன்  போய்ட்டேன்  , அதனால  பாதை  மாறி  ஒரு  மரத்து  மேல  இடிச்ட்டேன். மயக்கம்  தெளிஞ்சு  பார்த்தா   மனைவியைக்காணோம், அவ  நிறை மாச  கர்ப்பிணினு  சொல்றார்

 

போலீஸ்  உடனே  அவரைக்கூட்டிட்டு  ஸ்பாட்க்குப்போறாங்க

 

ஆனா  அதுக்குப்பின்  நடக்கும்  பல சம்பவங்கள்  முதல்ல  சொன்ன  கதைக்கும்  இப்போ  நடக்கும்  கதைக்கும்  சம்பந்தமே  இல்லாதது  போலத்தோன்றும்

 

முன்  பாதி  முழுக்க  ஸ்லோவாதான்  திரைக்கதை  நகரும்,  ஆனா  பின்  பாதில  எல்லாத்துக்கும்  விடை  கிடைக்கும்

 

 ஹீரோவா  மம்முட்டி. செமயான  நடிப்பு.   ஓப்பனிங்  சீன்ல  எந்த  வித  ஹீரோ  பில்டப்பும்  இல்லாம  ரொம்ப  சாதாரணமா  அறிமுகம்  ஆகி  முழுபடத்தையும்  தாங்கி  நிற்கிறார்

 

பிந்து  பணிக்கர்  முதல்  பாதியில்  அமைதியா  வந்து  பின்  பாதியில்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீனில்  தெறிக்க  விடுகிறார். மம்முட்டிக்கு  இணையான  நடிப்பு

 

போலீஸ்  கான்ஸ்டபிளாக  ஜெகதீஷ்  நல்ல  நடிப்பு , ஒரு  விசாரணையில்  ஒரு  வயதான  லேடியிடம்  விசாரணை  பண்ணும்போது அவர்  எப்படி  இறந்தார்?  என்பதற்கு  ஒரு க்ளூ  கிடைச்சிருக்கு. உண்மையை  சொல்லிடுங்க  என்றதும்  அந்த  லேடி  ஒரு  ஜூஸ்  குடுத்து  குடிங்க  என்று  சொல்லிட்டு  அவர்  குடிச்சதும்  நான்  தான்  காபில  விஷம்  வெச்சுக்கொன்னேன்  என்றதும் கை  நடுங்க  தான்  குடிச்ச  டம்ளரை வைக்கும்  சீன்  அடிபொலி சீன்

 

சவுண்ட்  டிசைனிங்  பற்றி  சொல்லியே  ஆக  வேண்டும்,  பிரமாதம்  , பிஜிஎம்  மிரட்டி  இருக்காங்க .ஒளிப்பதிவு  லொக்கேஷன்  செலக்சன்  எல்லாம்  குட் . அதே  போல்  எடிட்டிங் ., நான்  லீனியர்  கட்  ஆக  ஆங்காங்கே  நிகழ்காலம்  இறந்த  காலம்  என  போய்  போய் வருகிறது. அது திரைக்கதைக்கு பிளஸ்  தான்

 

படம்  முழுக்க  ஆங்காங்கே  வரும்  ஆங்கிலப்பாடல்  படமே 

 ஆங்கிலப்படமோ என  எண்ண  வைக்கிறது

 

மம்முட்டி  ரசிகர்கள்  மட்டுமல்ல  த்ரில்லர்  ரசிகர்கள்  

அனைவரும்  காண  வேண்டிய  படம்

 

சென்னையில்  வெளியாகி  இருக்கும் தியேட்டர்களில்  ஆங்கில  சப்  டைட்டிலுடன்  ஓடுகிறது

நிசாம்  பஷீர்  தான்  இயக்கம்.  ஒரு  மெகா  ஸ்டாரை  வைத்து  எப்படி  ஒரு  த்ரில்லர்  மூவி  தருவது  என்ற   பதட்டமே  இல்லாமல்  கச்சிதமாக  இயக்கி  இருக்கிறார்.திரைக்கதை , வசனம்     சமீர்  அப்துல்.  பஞ்ச்  டயலாக்  எல்லாம்  இல்லாமல்  கதைக்கு  என்ன  தேவையோ  அதை  மட்டும்  இயல்பாக  தந்திருக்கிறார்

 

மிதுன்  முகுந்தன்  இசை   த்ரில்லர்  படத்தை  தூக்கி  நிறுத்துகிறது , பிஜிஎம்  பல  இடங்களில்  மிரட்டல்

 

நிமிஷ் ரவியின்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளிர்ச்சி . பல லொக்கேஷன்களில்  ஏரியல்  வ்யூ       கச்சிதம்

கிரன்  தாஸ் எடிட்டிங்கில்  நான் லீனியர்  கட்  ஆக  பல  இடங்களில்  சாமார்த்தியம்  காட்டுகிறது

 

16  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்பட,ம்  முதல்  நாளில் கேரளாவில்  மட்டும்  5  கோடி  வசூல்  செய்துள்ளது

 

 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  முதல்  பாதி  ஸ்லோவா போகும்,  பின்  பாதி  ஓரளவு  ஸ்பீடாப்போகும், பொறுமையாப்பார்க்கனும்., ரேட்டிங் 2.75 / 5 

Monday, October 17, 2022

ORU THEKKA N THALLU CASE (2022) ஒரு தெக்கன் தள்ளு கேஸ் - சினிமா விமர்சனம் @ நெட் ஃபிளிக்ஸ்

 இரு  நபர்களுக்கு  இடையே  ஏற்படும்  ஈகோ  கிளாஸ் என்ன  எல்லாம்  பண்ணும் என்ற  ஒரே  ஒரு வ்ரி  முடிச்சை  அடிப்படையா  வெச்சு  எடுக்கப்பட்ட   இரு  மலையாளப்படங்கள்  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆனது. 2019ல்  ரிலீஸ்  ஆன  டிரைவிங்  லைசென்சில்  சுராஜ்  வெஞ்சாரமூடு , பிரித்விராஜ்  இருவரும்  பின்னிப்பெடல்  எடுத்திருந்தார்கள் , 2020ல் ரிலீஸ்  ஆன  அய்யப்பனும்  , கோஷியும்  படத்தில்  பிருத்விராஜூம், பிஜீ  மேனனும்   அடி பொலி  ஆக்சனில்  இறங்கி  இருந்தார்கள். இரு  படங்களுக்கும்  திரைக்கதை  ஒருவரே! சச்சி. 


மலையாள சிறுகதை  எழுத்தாளரான  ஜி  ஆர்  இந்து  கோபன்  எழுதிய  அம்மினிப்பிள்ள  வெட்டு  கேஸ்  எனும் சிறுகதையை  தழுவி  எடுக்கப்ப்ட்ட  இந்தப்படமும்  கேரளாவில்  செம  ஹிட்.   செப்டம்பர்  மாதம் 7ம் தேதி  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்  இப்போ  நெட்   ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆகி இருக்கு .  படம்  முழுக்க  பிளாக்  ஹ்யூமர்  காமெடி  கொடி  கட்டிப்பறக்குது 


ஹீரோ  ஒரு  கடற்கரையோர  கிராமத்தில்    லைட்  ஹவுஸ்  பராமரிப்புப்ப்ணியில்  இருப்பவர். அவருக்கு  ஒரு  மனைவி   அவங்க  வீட்டுக்குப்பக்கத்தில்  குடி  இருக்கும்  பெண்ணை   வில்லன் லவ்   ப்ண்றான், அந்தப்பெண்ணும் தான் 


 இருவரும்  ஹீரோ  வீட்டுக்கு  அருகே  ஒரு நாள்  இரவு  தனிமையில்  சந்திக்கும்போது  ஹீரோ  பார்த்துடறார். கலாட்டா  பண்றார். வில்லன்  அங்கே  இருந்து  ஓடிடறான்


வில்லனோட  ஃபிரண்ட்ஸ்  5  பேரு  ஆல்ரெடி  ஹீரோவால்  பாதிக்கப்பட்டவர்கள் .


வில்லனுக்கு  கல்யாண  ஏற்பாடுகள்  நடக்குது. அதை  ஹீரோதான்  முன்  நின்று  நடத்தி  வைக்க  இருக்கார். நிச்சயதார்த்தத்துல  வில்லன்  ஹீரோவை  அவமானப்படுத்தறார்


 ஒரு நாள்  கிராமத்துக்கு  வ்ந்த  ராஜ  நாகம்  பாம்பை  வில்லன் பிடிக்கப்போறதா  பில்டப்  கொடுத்துட்டு இருக்கும்போது  ஹீரோ  இதெல்லாம்   ஜூஜுபி  மேட்டருனு  வெறும்  கையாலயே  பாம்பைப்பிடிச்சு  அடிச்சுக்கொன்னுடறார். இதுல  இந்த  களேபரத்துல  வில்லன்  துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு  ஓடிடறான்


இதனால  மிகுந்த  அவமானத்துக்கு  ஆளான்   வில்லன்  ஹீரோவைப்பழி  வாங்கத்துடிக்கிறான். முகமூடி போட்டு  வில்லன்  தன்  நண்பர்களோடு  சேர்ந்து  ஹீரோ  மப்புல  இருக்கும்போது  அடிச்சுப்போட்டுடறாங்க


 போலீஸ்   வந்து  விசாரிக்கும்போது  ஹீரோ அடிச்சவங்களை  அடையாளம்  தெரிலனு  பொய்  சொல்லிடறார்.            தன்  ல்கையால  தானே  அவங்களைப்பழி  வாங்கனும்னு  நினைக்கறார்.  இதுக்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  படம் ‘

 ஹீரோவா  பிஜூ மேனன்  அசால்ட்  பண்ணி  இருக்கார் ., அவரது  ஆஜானுபாவகமான தோற்றம்   அவர்  அஞ்சு  பேரை  அட்டர்  டைம்ல  அடிச்சாலும் நம்பற  மாதிரி  இருக்கு . ராஜ நாகத்தைப்பிடிக்கும்  காட்சியில்  அசத்துகிறார்.  மனைவியுடனான  ரொமான்ஸ்  காட்சியிலும்  ஜொலிக்கிறார்


 ஹீரோவின் மனைவியாக பத்மப்பிரியா. க்ணவனைக்காதலுடன்  பார்க்கும்போதும்  சரி  ஊர்  மக்கள்  முன்னிலையில்  பெருமையாகப்பார்க்கும்போதும்  சரி கண்களாலேயே  ந்டிக்கிறார். ஹாஸ்பிடலில்  அவர்  பதட்டப்படும்  காட்சி  அருமை 


 வில்லனாக ரோஷன்  மேத்யூ கச்சிதமான  நடிப்பு . இவருக்கு  ஜோடியாக  நிமிஷா  சஞ்சயன்  . வழக்கமாக  எல்லாப்படங்களிலும்  உம்மணாம்மூஞ்சி  கேரக்டராகவே  இவருக்கு  அமையும், இதில்  சிரிச்ச  முகமா  இருக்கார்.  காதலனுடன்  நெருக்கம்  காட்டி  நடித்திருக்கிறார். முத்தக்காட்சியும்  இருக்கு 


  இவர்கள்  4  பேர்  போக  சின்னச்சின்ன  கேரக்டர்கள்  கூட மனதுல  தங்கிடறாங்க . ஃபரஸ்ட்  அஃபீசராக  வருபவர்  ஒவ்வொரு  முறை  ஊருக்கு  வ்ரும்போதும்   முள்ளம்பன்றி  , பாம்பு  என  எதையாவது  கொண்டு  வந்து  கலாட்டா  பண்ணுவது  கலக்கல்  காமெடி 


   வில்லனின்  நண்பர்களில்  ஒருவன்  போலீஸ்.  என் மேல  கை  வெச்சிடுவானா? என  மளிகைக்கடையில்  உதார்  விடும்  போலீஸ்  நண்பன்  கடைல   ஹீரோவைப்பார்த்ததும் பம்முவது  செம  காமெடி 


ஒரு  பழி வாங்கும்  கதை  மாதிரி  போகும்  திரைக்கதைல  வன்முறை  எல்லாம்  இல்லாம  காமெடியாகக்கொண்டுபோய் இருப்பது  பாராட்ட  வைக்குது 


காமெடி கலாட்டாவா  போகும்  திரைக்கதையில்  ஹீரோ  ஹீரோயின்  மனஸ்தாபம், ஹீரோயின்  அம்மா  வீட்டுக்குப்போவது  ,அவரை  சமாதானப்படுத்த  ஹீரோ  படாத  பாடு  படுவது என  ஏற்படும்  செண்ட்டிமெண்ட்  சீன்கள்  எதுக்கு? என  நாம்  யோசிக்கும்போது  அதற்கான  காரணத்தை  ட்விஸ்ட்  ஆக  கொண்டு  போனது  இயக்குநரின்  சாமார்த்தியம் 


டைரக்சன்  ஸ்ரீஜித். கச்சிதமான   க்ரிஸ்ப்  ஆன  திரைக்க்தை  அமைத்திருக்கிறார். ராஜேஷ்  பின்னாடன் . மது  நீல்கண்டன்  ஒளிப்பதிவில்  கிராமத்துக்குளுமை  கண்ணுக்கு  இதம் . கன  கச்சிதமான  எடிட்டிங்  மனோஜ்  கன்னோத் 


ரசித்த  வசனங்கள்


1  பொம்பளைங்க  பிரச்சனைக்கு  தீர்வே  கிடையாது


2  இன்ஸ்பெக்சனுக்கு  வடக்கே  இருந்து  ஒரு  ஆஃபீசர்  வர்றாரு, அவருக்கு  வாய்க்கு  ருசியா  சமைச்சுப்போடு 

அப்போ  நீங்க  சாப்ட்டுட்டு  இருக்கறது  வாய்க்கு   ருசியா  இல்லையோ ?


3  நடு  ராத்திரிலதான்  அவளைப்போய்க்கூப்பிடனுமா? வருவாளா?


 அடுத்தவன்  சம்சாரம்தான்  வர  மாட்டா, உன்  சம்சாரம்தானே? வ்ருவா




First look poster
Directed bySreejith N
Screenplay byRajesh Pinnadan
Story byG. R. Indugopan
Based onAmmini Pilla Vettu Case
Produced by
  • Mukesh R Mehta
  • Sunil AK
  • C V Sarathi
Starring
CinematographyMadhu Neelakandan
Edited byManoj Kannoth
Music byJustin Varghese
Production
companies
E4 Entertainment
New Surya Films
Release date
  • 8 September 2022
Running time
153 Minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹4 crore

வெந்து தணிந்தது காடு (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( கேங்ஸ்டர் மசாலா) @ அமேசான் பிரைம்


  சூப்பர்  ஹிட்  படமோ , சுமார்  ரகப்படமோ , டப்பாப்படமோ  கவுதம் வாசுதேவ்  மேனன்  இயக்கத்தில்  ரிலீஸ்  ஆகும்  ஒரு படத்தில்  காதல்  காட்சிகள்  மட்டும் கவிநயத்துடன்  இருக்கும்.,  மிக  தைரியமாக  நாம் தியேட்டரில்  பார்க்கலாம்  ( விதி விலக்கு  நடு நிசி  நாய்கள் ) /  விரல்  வித்தை  நடிகர்  என  கிண்டல்  செய்யப்படும்  சிம்பு  ரொம்ப  டீசண்ட்டாக  நடித்த  படங்கள்  கோவில் , தொட்டி  ஜெயா , விண்ணைத்தாண்டி  வருவாயா. ,மாநாடு  இதில்  மூணாவதா  சொன்ன  படம்  பிரமாதமான  வெற்றிப்படம்,  இவர்கள்  இருவரும்  இணையும்  படம்  என்பதாலும் ரைட்டர்  ஜெயமோகன்  கதை  வசனம்  என்பதாலும்  இதற்கு   எதிர்பார்ப்பு  எக்கச்சக்கமாய்  எகிறிய்து .   எப்படி  ரிசல்ட்னு  பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ ஒரு  கிராமத்துல   முள்  காட்டுல  முள் வெட்டிக்கிட்டு  இருக்காரு, சாரி  விறகு  வெட்டிட்டு  இருக்காரு .அவரு  குடும்பம்  ரொம்ப  ஏழ்மையானது. திடீர்னு  அவ்ர்  வெட்டிப்போட்ட  விறகு  தீ  விபத்துக்கு ஆளாகுது / விட்டாப்போதும்னு  ஓடி வந்துடறாரு . 


தீ  விபத்துக்கு  ஹீரோதான்  காரணம், நஷ்ட  ஈடு  தரனும்னு  தகராறு  பண்ணிட்டுப்போறாரு  ஓனரு . எந்தப்பிர்ச்சனை  வந்தாலும்  இருந்து  அதை  ஃபேஸ்  ப்ண்ணனும்கற  அடிப்படை  அறிவு கூட  இல்லாம  ஹீரோ  ஊரை  விட்டு  ஓடிப்போலாம்னு  முடிவு  பண்றாரு


அவரா  அப்படி  முடிவெடுத்தா  ஹீரோயிசத்துக்கு அவமானம்னு  ஹீரோவோட  அம்மா  அவரை  வ்ற்புறுத்தற  மாதிரி  காட்டிடறாங்க 


  அந்த  ஊர்க்காரர்  ஒருவர்  மும்பைல  புரோட்டோக்கடைல  வேலை  செய்யறவ்ர்   அங்கே  போ உனக்கு  வேலை போட்டுத்தரச்சொல்றேன்னு  ரெக்கமண்ட்  பண்றார்


ஹீரோ  மும்பை  போறார். அந்த  புரோட்டோக்கடைல  வேலைக்கு  சேர்றார். அங்காடித்தெரு  படம்  மாதிரி  ஒரு  தரமான  கதையைத்தான்  ஜெயமோகன்  எழுதிட்டாரோனு  ஆச்சரியமா  யோசிக்கும்போது  சிகப்பு  ரோஜாக்கள்  ஹீரோ - ஹீரோயின் லவ் போர்சன்  பார்த்து  பட்டி டிங்கரிங்  ப்ண்ணி  ஜவுளிக்கடைல  ஹீரோயின்  சேல்ஸ் விமனா  இருக்கா. அங்கே  ஹீரோ  டிரஸ்  எடுக்கப்போறாருனு  லவ்  போர்சனை  இண்ட்ர்ஸ்ட்டாதான்  எடுத்திருக்காங்க 


இதுல  ஒரு  புரட்சி  வேற  ஹீரோவுக்கு  21  வயசு  ஹீரோயினுக்கு  25  வயசு (  க வுதம்  மேனனின்  பெரும்பாலான  படங்களில்  ஹீரோ   அடுத்தவன்  சம்சாரத்தைத்தான் லவ்  பண்ணுவாரு  அல்லது  சீனிய்ர்    ஹீரோயினை  லவ்வுவாரு )


மெயின்  கதைக்கு  வருவோம். புரோட்டோக்க்டைங்கறது  பார்ட்  டைம்  ஜாப்  தான்  மெயின்  ஜாப்  ஆள் கடத்தல் , அடிதடி , வெட்டு , குத்து , கொலை . இரண்டு  கேங்க்ஸ்டர்  மோதல்


மேலிடம்  இரு  கேங்க்ஸ்டர் லீடரையும்  கூப்பிட்டு  சமாதானமா  போகச்சொல்றாங்க .  ஹீரோக்கு  பிரமோஷன்  கிடைக்குது . ஒரு  கேங்க்ஸ்டர்க்கு  இவர்தான்  பாடிகார்டு 


பாடிகார்டா  இருந்த  இ வர்  எப்படி  தாதா  ஆனார்  என்பதுதான்  கதை .


  ஹீரோவா  சிம்பு  . டயட்ல  இளைச்சு  ஆளே  மாறி  இருக்கார் .   ஓப்பனிங்  சீன்ல  இருந்து  முதல்  ஒரு  மணி  நேரம்  வரை  அவரு  இளமையான  தோற்றம்  அருமை . ஒரு  மாதிரி  சாய்ச்ச  மாதிரி  நடபப்து  மேனரிசமா  ஸ்டைலா  தெர்ல  ஆனா  நல்லாலை .நாயகியுடனான  ரொமாண்டிக்  போர்சனில்  கலக்கறார். தாதா  ஆனபின்  பெரிய  அளவில்  அவர்  நடிப்பு  கவரலை . கார்ணம்  யதார்த்தம்  மிஸ்சிங்


ஹீரோயினா சித்தி  இட்னானி ... இவரை  ச்ருக்கமா  சித்தி...னு  கூப்பிடுவாங்களா? புதுமுகம்  மாதிரியே  தெரியலை. பிரமாதமான  நடிப்பு   கண்ணியமான அழகு 


அம்மாவாக  ராதிகா  வழக்கமான  டெம்ப்ளேட்  அம்மா  ரோல் .  முக்கியமான  ட்விஸ்ட்  ரோலில்  அப்புக்குட்டி ., ஓக்கே  ரகம் . 


 ஒரு  மாறுபட்ட  கேரக்டரில்   நீரஜ்  மாதவ். நல்லா  பண்ணி  இருக்கார் 


உயரம்  குறைவான  வில்லன்  ரோலில்   வருபவர்  செம  மிரட்டல். ஃபைட்  சீக்வன்ஸ்லயும்  நல்லாப்பண்ணி  இருக்கார் 


இசை  பெரிய  பலம் .,  2  பாட்டு  செம  ஹிட்டு .  தாமரை  எழுதிய  மல்லிப்பூ  வெச்சு  வெச்சு  வாடுதே  செம  ஹிட்  மெலோடி  அதுக்கான  பிக்சரைசேஷனை  இன்னும்  பிர்மாதப்படுத்தி  இருக்கலாம் , சிம்புவின்  குரலில்  வரும்  காலத்துக்கும்  நீ  வேண்டும்  நல்ல  பாட்டு 


ஹீரோ - ஹீரோயின்  லவ்  போர்சன்  அருமை . அதே  போல நீரஜ் மாதவ்  லவ்  போர்சனும்  இன்னும்  விரிவாகக்காட்டி  இருக்கலாம்


வில்லனின்  இடத்தில்  ஹீரோயினை  கடத்தி  வைத்து  வில்லன்  மேல்  தவறான  எண்ணத்தை  ஹீரோவுக்கு  ஏற்படுத்தி  தூண்டும்  இடம்  நல்ல ட்விஸ்ட்


 அதே  போல்  நீரஜ்  மாதவின்  காதலியை  முதலாளி  பலவந்தப்ப்டுத்த  முயல  அப்போ  நிகழும்  கொலையும்  பர்ஃபெக்ட் 


ஒளிப்பதிவு  , எடிட்டிங்  , பிஜிஎம்  எல்லாம்  நல்ல  உழைப்பு  . வசனம்  ஓக்கே  ரகம்  ஆனால்  இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம்


  ரசித்த  வசனங்கள்


1  இருட்டா   இருந்தாலும்  வெட்டுன  ஸ்டைல்லயே  தமிழன்னு  தெரியுது 


2 படுக்கைல  பாம்பை  வெச்சுக்கிட்டே  மேல பாயைப்போட்டு  படுப்பதும்  ஒரு விதத்துல  ஜாக்கிரதையா  இருக்க  வைக்குது  . த்ரில்தான்


3 யாரையாவது  சாமியாக்கும்பிடனும்னா  ஜட்ஜைத்தான்  கும்பிடனும்.  ஒரு  சாதா  சிவில்  கேசையே  30  வருசம்  இழுக்கறாங்க . அவங்களாலதான் நமக்குப்பொழைபு  ஓடுது 


4  நீ  ரெண்டு  மூணு  த்டவை  கடைக்கு வந்தா  நான்  மயங்கிட்வேன்னு  நினைச்சியா?


  அதான்  நான்  மய்ங்கிட்டேன்  இல்ல?


5  ரகசியமான  பகை  இன்னும்  ஆபத்தானது


6   எவன்  முன்னாலயும் என்னால  அவமானப்பட  முடியாது , அதனால  இந்த  வேலை  எனக்கு  செட் ஆகாது 


7  பணம்  இல்லைன்னா  தரைல  கிடக்குற  சாக்கு  மாதிரிதானே  மதிக்கறாங்க ? கைல  ஆயுதம்  இருந்தாவேணா  பயம்  கலந்த  மரியாதை  கிடைக்குது 


லாஜிக் மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்ல  ஹீரோகிட்டே  10,000  ரூபா  பணம்  குடுத்து  புது  டிரஸ்  , சூட்கேஸ்  எல்லாம் வாங்கிக்கோ  என  ஒருவர்  சொல்றார். ஹீரோவும்  வாங்கிடறார். ஆனா  ஹீரோயின்  ஜவுளிக்கடைக்கு  ஹீரோ  போகனுமே  என்பதற்காக  என்  கிட்டே  ரெண்டு  ஜட்டிதான்  இருக்கு  என  ஒரு  வசனம். ஏன் அந்த  10,000  ரூபா  பணத்துல  அப்ப  எடுக்கலையா? 


2   ஹீரோ  சிம்பு  சட்டைல  பின்னால  17  முள்  குத்தி  இருக்கு , சட்டையைக்கழட்டுனா  யதார்த்தத்துல  பாதி  கீழே  விழனும்.    9  முள்  தான்  இருக்கனும் ஆனா  சர்ட்  கழட்டுனதும்  அது  டபுள்  ஆகி  37  முள்  இருக்கு 


3  மல்லிப்பூ  வெச்சு  வெச்சு  வாடுதே  பாடல்    காட்சிக்கான  லீடு  சீனில்  அந்த   அடியாளின்  சம்சாரம்  பக்கத்துல  ஆள்  யாரும் இல்லையே?>னு  கேட்க  அவனும்  இல்லைனு பொய்  சொல்றான் , உடனே  அந்த  லேடி  பாடுது  . அது  வீடியோ  கால் . அவளுக்கு  தெரியலையா?  . பாட்டு  முடியும்  டைமில்  ஆள்  சத்தம்  கேட்குதே?னு  ஒரு  சமாளிப்பு  வசனம்  வேற .. வீடியோ    காலில்  தெளிவா  ஆட்கள் தெரியுமே? 


4  நாம நிஜமா  நேசிக்கும்  ஒரு  பெண்ணை எவனாவது    பாலியல்  வன்முறைக்கு  ஆளாக்குனா  நம்  கண்  முன்னால  சம்பவம்  நட்ந்தா  நாம  உடனே பொட்டுனு அவன்  ம்ண்டைல  போடுவோம், ஆனா  இதுல    நீரஜ்  10  நிமிசம்  யோசிக்கறாரு /...பொறுத்துபொறுத்துப்பார்த்து  அந்த   காதலியே  தாக்குதல்  நடத்துது . ரொம்ப  செயற்கையான  சீன் 


5   க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்னே  வில்லன்  தேடிட்டு  இருந்த  ஹீரோ  வில்லன் கிட்டே  மாட்றார். வில்லன்  கைல துப்பாக்கி. டக்னு  சுடாம    2  பக்கம்  டயலாக்  பேசிட்டு  இருக்காரு , ஹீரோ  சுடறாரு. வில்லன்  மாட்டிக்கறான்



 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பலரும்  சமூக  வலைத்தளங்களில்  கழுவி  ஊத்தியது  போல  இது  டப்பாப்படம்   எல்லாம்  இல்லை , பார்க்கலாம்  ரகம்தான் .  எதிர்பார்க்கும்  விகடன்  மார்க் 41   ரேட்டிங்  2. 75 / 5  


Vendhu Thanindhathu Kaadu Part I: The Kindling
Vendhu Thanindhathu Kaadu.jpg
Theatrical release poster
Directed byGautham Vasudev Menon
Screenplay byGautham Vasudev Menon
Story byB. Jeyamohan
Produced byIshari K. Ganesh
StarringSilambarasan
Siddhi Idnani
CinematographySiddhartha Nuni
Edited byAnthony
Music byA. R. Rahman
Production
company
Distributed byRed Giant Movies
Release date
  • 15 September 2022
CountryIndia
LanguageTamil
Budget₹30 crore[1]
Box officeest. ₹60 crore[2]



Saturday, October 15, 2022

நாடோடி மன்னன் (1958) - சினிமா விமர்சனம் @ அமேசான் பிரைம்



படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் பேசிய ஹீரோக்கள் பலர் உண்டு ஆனா பட வெளியீட்டுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பஞ்ச் டயலாக் பேசி புகழ் பெற்றவர் இன்று வரை ஒருவர்தான்/ பல கஷ்ட நஷ்டங்களுக்குப்பின் தன் கையிருப்புகள் எல்லாம் சொந்தப்பட தயாரிப்பில் கரைந்த பின் எம் ஜி ஆர் பேசிய சரித்திரப்புகழ் பெற்ற அந்த டயலாக் இந்தப்படம் ஓடினால் நான் மன்னன் ஓடா விட்டால் நான் நாடோடி




எம்ஜியார் தான் டைரக்சன் என்றதும் கிண்டல் பண்ணிய கூட்டம் எல்லாம் சிதறி ஓடும் அளவுக்கு இந்தப்படத்தின் வெற்றி பிரம்மாண்டமாய் இருந்தது இவரது வெற்றி சாதனையை பல வருடங்களுக்குப்பின் இவரே தான் முறியடிக்க வேண்டியதாய் இருந்தது , அதுதான் உலகம் சுற்றும் வாலிபன்




மிஸ்டர் எம் ஜி ஆர் என ஷூட்டிங் ஸ்பாட்டில் உரிமையாய்க்கூப்பிடும் சந்திரபாபு காமெடி டிராக்குக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தினம் ரூ ஒரு லட்சம் சம்பளம் கேட்டும் ஒத்துக்கொண்டவர் . படப்பிடிப்பில் தாமதம் செய்து சிரமம் கொடுத்ததும் பின்னாளில் சந்திரபாபுவின் சொந்தப்படமான மாடி வீட்டு ஏழை ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் டபாய்த்து பழி வாங்கியதாக வரலாறு உண்டு




கோழி முட்டையை சாப்பிட்டு வாயில் கோழிக்குஞ்சை எடுக்கும் சந்திரபாபு காமெடி பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது




ஷூட்டிங் நடக்கும்போது தனக்குத்திருப்தி ஏற்படும் வரை டேக் டேக் என எடுத்துக்கொண்டே இருப்பாராம் எம்ஜியார். அது பிடிக்காமல் நாயகி பானுமதி அவரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவரை எதிர்த்துப்பேசியும் கிண்டல் பண்ணியும் வந்திருக்கிறார். பாதிப்படம் முடிஞ்சிடுச்சு . கவலையே படலையே எம்ஜியார். பானுமதி சாவது போல் ஒரு சீன் எடுத்து விட்டு நாயகியையே மாற்றினார். சொல்லப்போனால் இன்றைய டி வி சீரியல்களில் இந்தக்காட்சியில் இவருக்குப்பதில் இனி இவ்ர் என சொல்லும் வழக்கத்துக்கு முன்னோடியே எம் ஜியார் தான் . சரோஜாதேவி பின் பாதி நாயகி ஆனார்




சினிமா வில் வில்லனைக்கண்டு மிரளும் நாயகிகள் உண்டு . பயப்படுதல் அல்லது அருவெறுப்பாய் பார்த்தல் இதுதான் தமிழ் சினி மா வில்லன் நாயகி இருவருக்குமான பாண்டிங் , இதை உடைத்தவர் பானுமதி ., படத்திலேயே வில்லன் நம்பியாரை கேஷூவலாக கலாய்த்திருப்பார்




ஸ்பாய்லர் அலர்ட்




ஹீரோ ஒரு புரட்சிகர இளைஞன். மன்னராட்சி ஒழிக மக்களாட்சி வாழ்க என்பதுதான் இவரது கோஷம் . இவர் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு போராடி வருகிறார். அப்படி ஒரு முறை அரண்மனை வாயிலில் போராடும்போது சிறையில் அவரைத்தள்ளுகின்றனர் காவலாளிகள் . அதே சிறையில் அருகிலேயே நாயகி .. அவரும் ஹிரோவைப்போல ஒரு புரட்சிக்காரிதான் . இருவருக்கும் பழக்கம் உருவாகுது




நாட்டின் மன்னனுக்கு ஏதோ மருந்து கொடுத்து அவரை மயக்கத்தில் ஆழ்த்தி பட்டாபிஷேகத்துக்கு வர விடாமல் தடுத்து ஆட்சியைக்கைப்பற்றத்திட்டம் போடுகிறான் வில்லன்




மன்னனின் முகமும் ஹீரோவின் முகமும் ஒரே சாயலில். இருவருக்கும் ரத்த சம்பந்தம் எதுவும் இல்லை . மன்னர் மயக்கத்தில் இருப்பதால் ஒரே ஒரு நாள் மன்னன் கெட்டபில் நடிக்க ஹீரோ மந்திரியால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்




நாட்டின் மன்னனாக ஈசியா ஹீரோ ஆள்,மாறாட்டம் பண்ணி நடிச்சுடறாரு. ஆனா மன்னரின் மனைவியான மகாராணியிடம் தான் அவரது கணவன் இல்லை எனவும் சொல்ல முடியவில்லை . கணவனாக நடந்து கொள்ளவும் முடியவில்லை




இந்த இக்கட்டான சூழலில் மனன்ரை கன்னித்தீவுக்குக்கடத்திச்சென்று விடுகின்றனர் . இளவரசி ரத்னாவையும் யாரோ கடத்தி அங்கே கொண்டு போய் சிறை வைத்து இருக்கிறார்.




இறுதியில் ஹீரோ அவர்களை எப்படி மீட்டார் என்பதே கதை




மன்னன் மார்த்தாண்டன் மற்றும் புரட்சி வீரன் வீராங்கன் என ஹீரோவா டபுள் ரோல் கலக்கலில் எம் ஜி ஆர் . நாடோடி எம்ஜியாராக தாடியுடன் வரும்போது எளிமையாக இருக்கார் . மன்னனாக வரும்போது அவர் செய்யும் ஒரு வித ஸ்டைல் அப்போது செம ஃபேமஸ் . அப்போதிருந்தே வசனங்கள் பேசும்போது அரசியல் கலந்து பேச ஆரம்பிச்சிருக்காரு




ஹீரோயினா மதனா வாக பானுமதி . எள்ளல் செய்யும் அழகே தனி . ஹீரோ வில்லன் இருவரையுமே இவர் நக்கல் செய்வது கலக்கல் ரகம் . ஆளுமை மிக்க நடிப்பு




இன்னொரு ஹீரோயினா ரத்னாவா சரோஜா தேவி , கடைசி ஒரு மணி நேரம் வந்தாலும் நல்ல வாய்ப்பு




காமெடிக்கு சந்திரபாபு . இவர் குதித்து குதித்து இங்கும் அங்கும் ஓடுவது பிரமாதம், ஜாக்கிசானின் சுறு சுறுப்புக்கும் பிரபுதேவாவின் நடன அசைவுக்கும் இவரே ,முன்னோடி




ராஜ குருவாக பி எஸ் வீரப்பா , இவரது குரலுக்கே பல ர்சிகர்கள் அப்போது இருந்தார்கள்




ராணி மனோகரியாக எம் என் ராஜம் . பிங்களனாக வில்லனாக எ,ம் என் நம்பியார் கலக்கலான நடிப்பு எம் ஜியாருடன் போரிடும் வாள் சண்டையில் அரங்கம் அதிர்ந்தது




எம் ஜி சக்கிர்பாணி ஒரு ரோலில் வருவார். எம் ஜியார் முகச்சாயல் அப்படியே இருந்தும் அவரால் எம் ஜி ஆர் போல் புகழ் பெற முடியாதது ஏனோ தெரிய்ல




வசனம் கண்ணதாசன் . எம் ஜி ஆரின் அரசியல் வாழ்வைக்குறி வைத்தே எழுதப்பட்டது




இசை எஸ் எம் சுப்பையா நாயுடு , என் எஸ் பாலகிருஷ்ணன் , ஆத்மானந்தன் என மூணு பேர்




18 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ ஒரு கோடியே 10 ல்ட்சம் வசூல் செய்து சரித்திர சாதனை புரிந்தது . மதுரை வீரன் வசூலை முந்திய படம்




இந்தப்படம் பார்ஷியலி கலர்டு ., அதாவது பாதிப்படம் ஒயிட் அண்ட் பிளாக் . கன்னித்தீவு போர்சனில் வரும் கடைசி ஒரு மணி நேரம் கலர்




1958ல் ரிலீஸான இந்த்ப்படத்தை இப்போப்பார்த்தாலும் மூணே கால் மணி நேரத்தில் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் போகும்




டைரக்டராக ஆடியன்சின் பல்ஸ் தெரிந்து காட்சிகளை ஜனரஞ்சகமாக அமைத்திருப்பார் எம் ஜி ஆர்




ரசித்த வசனங்கள்




1 என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு , ஆனால் நம்பிக்கெட்டவர்கள் யாருமே இல்லை




2 நீங்கள் மாட மாளிகையில் இருந்து மக்களைப்பார்க்கிறீர்கள் , நான் மக்களுடன்  இருந்து மாளிகையைக்கவனிக்கிறேன்




3 நீங்கள் போடும் புரட்சித்திட்டத்தால் பணக்காரர்களே நாட்டில் இருக்க மாட்டார்கள் அப்படித்தானே?




இல்லை ஏழைகள் தான் இருக்க மாட்டார்கள்




4 சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்




5 என்னை நம்புகிறயா?

நான் மட்டுமல்ல, இனி இந்த நாடே உங்களை நம்பித்தான் ஆக வேண்டும் ( உள்குத்து வசனம்)




6 ஆண்டியின் மடம் ஆனாலும் அழகிகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை ( நித்யானந்தா ரெஃப்ரன்ஸ்)




செம ஹிட்டு பாட்டு லிஸ்ட்




1 தூங்காதே தம்பி தூங்காதே ( ஹீரோ ஓப்பனிங் சாங் )




2 தடுக்காதே என்னைத்தடுக்காதே ( சந்திரபாபு ஓப்பனிங் சாங் )




3 கண்ணில் வந்து மின்னல் போல காணுதே ( பானுமதி டூயட்)




4 சும்மா கிடந்த நிலத்தை கொத்தி




5 உழைப்பதிலா உழைப்பைப்பெறுவதிலா பெறுவதிலா இன்பம் ?




6 ,மானைத்தேடி மச்சான் வரப்போறான் ( சரோஜா தேவி டூயட்)




7 பாடுபட்டா தன்னாலே பலன் இருக்குது கை மேலே




8 கண்ணோடு கண்ணு கலந்தாச்சு ( க்ரூப் சாங் கன்னித்தீவு )




சபாஷ் டைரக்டர்




1 நான் ஆட்சிக்கு வ்ந்தால்; மக்கள் கஷ்டங்களை உணர்ந்து நடப்பேன் என்பது மாதிரி மறைமுகமான பிரச்சாரத்தை ஜனரஞ்சகமாகத்தந்த விதம்




2 சந்திரபாபுக்கு கதைக்குத்தேவைப்படாவிட்டாலும் அதிக முக்கியத்துவம் தந்து காட்சிகள் கொடுத்தது




3 பானுமதியின் கேரக்டர் டிசைன்




4 தான் வளர்த்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொள்ளும் கேரக்டர் மூலம் பெரியாரை நக்கல் பண்ணிய பாங்கு




5 பானுமதியை நீக்க முடிவு செய்ததும் சாமார்த்தியமாக அவர் சீரியசாக மரணப்படுக்கையில் இருப்பது போல் காட்சியை ஷூட் பண்ணிட்டு அவரை அனுப்பியது

6   வில்லனுடனான  வாள்  சண்டையில்  புன்னகை  மாறா,மல்  ஹீரோ  ஃபைட்  போடுவது ,  போரிடும்போது  ஹீரோ  ரிவர்சில்  ஸ்டெப்  வைத்தாலும்  மேடான  பகுதிக்குதான்  செல்வார் , அதாவது பின்  வாங்கினாலும்  உயர்ந்த  இடத்தை  நோக்கியே  செல்வார்  என  குறியீடு 




லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்


‘1 விஷ்ம் கலந்த பழச்சாறை ம்ன்னர் புரட்சி வீரனுக்குத்தரும்போது அதன் டேஸ்ட் சரி இல்லை என அவர் குடிக்க மறுக்கிறார். மன்னர் குடிக்கும்போதும் டேஸ்ட்டில் மாற்றம் கண்டதும் டவுட் வர வேணாமா? கஷ்டப்பட்டு ஏன் குடிக்கனும்?> டெஸ்ட் பண்ணி இருக்கலாமே?




2 எம் ஜி சக்கிர பாணி கூட எம் ஜி யார் சாயலில் தான் இருக்கார் அவரை ஆ ள் மா றாட்டத்துக்கு பயன்படுத்தாதது ஏன் ?




சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அமேசான் பிரைம், யூ ட்யூப் ரெண்டுலயும் கிடைக்குது , பார்க்காதவங்க ஜா லியா ரசிக்கலாம் ரேட்டிங் 3.25 / 5


நாடோடி மன்னன்
இயக்கம்ம. கோ. இராமச்சந்திரன்
தயாரிப்பும. கோ. இராமச்சந்திரன்
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
என். எஸ். பாலகிருஷ்ணன்
ஆத்மானந்தன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
சக்கரபாணி
சந்திரபாபு
பி. எஸ். வீரப்பா
பானுமதி
ஜி. சகுந்தலா
பி. சரோஜாதேவி
எம். என். ராஜம்
வெளியீடுஆகத்து 221958
ஓட்டம்.
நீளம்19830 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 18 இலட்சம்[1]
மொத்த வருவாய்ரூ.1.06 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).