Saturday, April 23, 2016

வீணா போய்டுவானா? வீணா கூடவே போய்டுவானோ?

1  தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தால் உடுமலை போன்ற ஆணவக் கொலைகள் இருக்காதா?,எப்டி?



பண்றதே நாம தானே?


=============


2 எங்கள்.கட்சி வெற்றி பெறா விடில் ஜாதிக்கொலைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறோம்


============

3 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஜய் மல்லைய்யா வைப்பிடித்து அவரிடம் இருந்து 7000 கோடி ரூபாயை கைப்பற்றி விடுவோம் என உறுதி அளிக்கிறோம்,அதில் யார் யாருக்கு எத்தனை % என்பது பின்னர் அறிவிக்கப்படும்

===============

4 இந்த ஆட்சியில் கொலை ,கொள்ளை அதிகரித்து விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளி ஆட்கள் யாரும் இந்த நாட்டைக்கொள்ளை அடிக்க விட மாட்டோம்


==============

5 பாரம்பரியப்பெருமை கொண்டது நம் கட்சி. நான் , எனக்குப்பின் என் மகன் , அவருக்குப்பின் என் பேரன்  என இப்போதே பட்டியல் தயார்.. வேறு எந்தக்கட்சியாவது இப்படி அறிவிக்க முடியுமா?


==============


6   மிஸ், இந்த ரயில்ல இப்போ லோயர் பர்த் தான் இருக்கு ஓக்கேவா?

சாரி சார். நான் உயர் ஜாதிப்பெண், அப்பர் பர்த் தான் வேணும்


==============


7 சார், உங்க பையன் இண்டர்நெட்டே கதின்னு  இருந்து வீணா போய்டுவான்னு கவலைப்படறீங்களா?

 இல்ல, வீணா கூடவே போய்டுவானோனு கவலை


=================

மிஸ்! நான் தான் ஐஸ் க்ரீம்.நீ தான் செர்ரிப்பழம்.வந்து என் மடி மேல உட்காரு



யோவ் பின்னால பாரு ஐஸ் வண்டிக்காரர்.அவர் தான் எங்கப்பா.ம்க்கும்


=============

9 ஜட்ஜ் = குதிரையோட காலை உடைத்தாயா?



கைதி =,ஆமாங்க.ஹார்ஸ்னு எழுதாம ஒரு கால் கட் பண்ணி ஹர்ஸ் னு எழுதிட்டேன்



=============

10 டொக் டொக்



யா.கம் இன்
பேங்க்ல வாங்குன 7000 கோடி லோன் எப்போ கட்டுவீங்க?
ப்ளீஸ்.! லீவ் மீ அ"லோன்"


===============


11 மேடம்.உங்க ஹேன்டில் க்கு முன்னால லேடி ன்னு சேர்த்துக்கிட்டீங்களே? எதுக்கு?



வேணும்னா நீயும் உன் பேருக்கு முன் ஆம்பள ன்னு சேர்த்துக்கோ.


==============


12 வள்ளுவர் வாக்குப்படிதான் கட் அடிச்ட்டு சினிமாக்குப்போனியா?எப்டி?



தோன்றின் புகழோடு தோன்றுக ன்னாரு ,புகழ் த பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர்



===============

13 1லட்சம் ரூபா லோன் வேணும்.



2,லட்சம் ரூபாய்க்கு பத்திரம் செக்யூரிட்டி தரனும்.
விஜய் மல்லைய்யாட்ட 14,000 கோடிக்கு செக்யூரிட்டி வாங்குனீங்களா?


===============

14 சார்.நம்ம படத்துல 7 பாட்டு 7 பைட்டு



வாவ்! ஈரேழு 14 லோகத்திலும் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை



============

15 ஜட்ஜ் =,IDBI ல வாங்கின 900 கோடி ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க?



விஜய் மல்லைய்யா =009 கோடி கூட தர முடியாதுங்க.அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம்



=================

16 கொடிநாள் அன்னைக்கு நீ என்ன செஞ்சே?


லதா,அன்னக்கொடி,பூங்கொடி,மலர்க்கொடி,கூட எல்லாம் கடலை போட்டேன் டீச்சர்



==================



17 இனிமே நான் ட்விட்டர் பக்கம் வர மாட்டேன்


ஏன் தலைவரே? சந்திப்பிழையைத்தான் மேடைல சரி செய்ய முடியல, சந்துப்பிழையை யாவது சரி செய்யலாம்னா?



===========

18 நான் முதல் முதலில் பேச தயங்கிய பெண் நீ தான்.


நிஜமாவா? இதுவரை பொண்ணுங்க கிட்டே பேசுனதே இல்லையா?

நோ நோ பேசி இருக்கேன், மொக்கை ஃபிகரா இருக்கியே அதான் யோசிச்சேன்


================

19 உலக அதிசயங்களில் ஒன்றாக,

நீ இல்லை என்பது தான் வியப்பூட்டுகிறது,
யோவ், எதுக்கு? ஊர்ல இருக்கறவன் எல்லாம் வந்து வேடிக்கை பார்ப்பான், ஓகேவா?

===================


20 மிஸ்! இனிமே நீங்க எழுதவே மாட்டேன்னு சொன்னீங்க? உங்க படைப்பு ஃபேஸ்புக்ல வந்திருக்கு?

அது டைப் பண்ணது


=======================

நம்பி வாங்க,லோன் வாங்கிட்டு போங்க

1  திமுக என்பது ஐஸ்க்ரீம் விஜயகாந்த் அதில் இருக்கும் செர்ரீ பழம் - துரைமுருகன்  # ஐஸ்க்ரீம் கெடுதல் தொண்டை கட்டிக்கும், செர்ரீபழம் நல்லது

===============

2 தேமுதிக தலைமையை மக்கள் நலக்கூட்டணி ஏற்காது - வைகோ #எல்லாருக்கும் ராஜா ஆக ஆசை,ஆனா எழுதி வெச்சிருப்பது என்னவோ சிப்பாய் வேசம் தான்

===============


3 இந்தியாவில் மகிழ்ச்சி குறைந்துக்கொண்டே வருகிறது.. ஐநா ஆய்வில் அதிர்ச்சி தகவல்# ஓஹோ, இதனாலதான் இந்தியப்பிரதமரே  அடிக்கடி ஃபாரீன் போய்டறாரா?

==============


இந்தியாவில் அதிக ஊழல் செய்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்- பொருளாதார ஆய்வு மையம் # இந்த விருதை கலைஞர் , ஜெ இருவரும் சேர்ந்து பெற்றுக்கொள்வார்கள்


================



5  தேமுதிகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர தொடர்ந்து பேச்சுவார்த்தை -முரளிதர்ராவ்# ராவா முடிங்க சீக்கிரம்,விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி



=============




 எங்க கூட்டணி விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது இனி தேமுதிக வந்தாலும் தலைமை ஏற்க முடியாது - வைகோ # வி”மானம்” போய்டுச்சா? அடடா!!




==============




7 இந்தியா வந்தால் எனக்கு நியாயம் கிடைக்காது - விஜய் மல்லய்யா # நம்பி வாங்க , இன்னும் 12 பேங்க் இருக்கு, எதுனா லோன் கிடைக்கும்




=========



8 அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது- கி.வீரமணி

வீட்டு மக்கள் என பொருள் கொள்க


===========

9 இளங்கோவன் தலைவர் ஆனதால்
காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது - குஷ்பு # நக்மா குஷ்பூ நமீதா ன்னு கட்சி கலர்புல் ஆகிடுச்சு


============

10 5 முனை போட்டியால் பாமகவுக்கு சாதகம்; சொல்கிறார் அன்புமணி !# ஆமா.எப்டியும் பாமக க்கு 5 சீட் ஜெயிப்பு உறுதி


=============

11 விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி # 10 பைசா கூட வாங்க முடியாது - விஜய் மல்லைய்யா மைண்ட் வாய்ஸ்


==============

12 கார்த்திக்கின் நா.ம.கட்சி ரெண்டா உடைந்தது - செய்தி # இனி கார்த்”திக்” கட்சின்னு சொல்ல முடியாது .கார்த்”தின்” கட்சி தான்



================




13 ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்தால் 4.5 லட்சம் திரும்ப கிடைக்குமாம் தபால் நிலைய மேலாளர் மீது வழக்கு # கணக்கே தெரியாதவரா இருக்காரே? அவர் பேரு குமாரசாமியா?




================

14 குதிரை காலை ஒடித்த வழக்கில் எம்.எல்.ஏ. கைது # அது பொய்க்கால் குதிரைனு வாதாடி தப்பிக்காம பார்த்துக்கோங்க



===========




15 பாமகவுக்கு 82% இளைஞர்கள் ஆதரவு!- அன்புமணி ! # மீதி 18% பேர் 18 + படம் பார்க்கறவங்களா?சும்மா எதுனா அடிச்சு விடக்கூடாது டாக்டர் அய்யா



=============



16 ஜெயலலிதாவிற்கு நானும் ஒரு பிள்ளை தான் - மதுரை ஆதீனம்

# தத்துப்பிள்ளைகள் எல்லாமே சவலைப்பிள்ளைகளாப்போனதன் மர்மம் என்ன?

===========


17 திமுக வின் தேர்தல் அறிக்கை மூக்கின் மீது விரல் வைப்பதாக இருக்கும் - கலைஞர் # பெண்கள் வாக்கைக்கவர இலவச மூக்குத்தி பரிசுத்திட்டம் உண்டோ என்னவோ?


==============



18 கோவா சட்டசபையில் தூங்கிய சுயேச்சை எம் எல் ஏ - செய்தி # தொட்டில் பழக்கம் சட்டசபை வரைக்கும்.ஒண்ணா தூங்கறது, இல்லை, செல்லில் பிட்டுப்படம் பார்க்கறது


=================


19 திமுக கூட்டணியில் சில தொகுதி கள் வேண்டும் என கார்த்திக் வெளிப்படையாக பேசியதால் அவருடனான சந்திப்பை ஸ்டாலின் தவிர்த்தார்- செய்தி # 1 குடுத்தா அதுவே அதிகம்


===================


20 அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை சொல்லி மக்களை ஏமாற்ற திட்டம்-கலைஞர் #தலைவரே! மக்களை ஏமாற்ற எல்லாருக்கும் உரிமை உண்டு, நீங்க மட்டும் தான் ஏமாற்றனுமா?


===================

Friday, April 22, 2016

வெற்றிவேல் -சினிமா விமர்சனம்


ஹீரோ , ஹீரோ தம்பி 2 பேரும் தலா தனித்தனியா ஒவ்வொரு பொண்ணை லவ்வறாங்க. தம்பியோட லவ்வரை கடத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முயற்சிக்கும்போது ஆள் மாறாட்டத்தில் வேற  பொண்ணைக்கடத்திடறாங்க. 


ஆள் மாறாட்டமா கடத்தப்பட்ட பொண்ணோட அப்பா அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கறார். பிரச்சனை பெருசாகுது.தன்னால வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு தான் தான் வாழ்வளிக்கனும்னு ஹீரோ பாதிக்கப்பட்ட பொண்ணோட கழுத்தில்  தாலி கட்டிடறாரு. இடைவேளை


 இதுக்குப்பின் ஹீரோ காதலிச்ச பொண்ணோட நிலைமை என்ன? தம்பியோட லவ்வர் கதை என்னாச்சு என்பதை வெண் திரையில் காண்க 


ஹீரோவா எம் சசிகுமார். ஓப்பனிங் சாங்கில் சூரியன் சுட்டெரிக்க இண்ட்ரோ தர்றார், டான்ஸ் ஆடறார். நட்பு , துரோகம் வசனம் எல்லாம் பேசாம காலந்தள்றார். காதலிப்பதும்  உருகுவதும் எடுபடலை. அவர் அந்த ஆள் மாறாட்டப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் காட்சி நல்லாருக்கு.




 ஹீரோயினா  மியா ஜார்ஜ். கேரளத்துப்பைங்கிளி, பேச்சிலும், கூந்தலிலும் மலையாள வாசம்  இவரது அழகான முகம் மனசில் தங்குது. வாய்ப்பு அதிகம் இல்லை


ஹீரோவுக்கு மனைவியா வர்றவர் பேரு தெரியலை.  ( ரேணுகா?)  நல்ல ரவுண்ட் ஃபேஸ், இவருக்கு சோக நடிப்பு தான் வரும் காட்சி எல்லாம்.

 ஹீரோ தம்பி காதலியா வர்றவரும் நல்ல ஃபிகர் தான்


 பிரபு , இளவரசு  என கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள் நடிப்பு கனகச்சிதம் 

 பாடல்கள்  இசை ஒளிப்பதிவு எல்லாம்


ஹீரோவோட தம்பியா வர்றவர், அவர் காதலியா வர்றவர் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு





சபாஷ்  டைரக்டர்


1  தம்பி ராமய்யா மிக்சர் பார்ட்டி என்பதும் அவர் தன் சம்சாரத்தை எதுவுமே செய்வதில்லை என்பதை வைத்து புனையப்படும் காமெடி டிராக் கலக்கல். நீ வீட்டுக்குப்போய் சும்மா தானே இருக்கப்போறே? என்ற டயலாக்கை ஆளாளுக்கு சொல்வது கலாய்ப்பது


2   சமுத்திரக்கனி அண்ட் கோ செய்யும் கலாட்டாக்கள் கல கலப்பு


3   ஹீரோ மேரேஜுக்குப்பின்னும் மனைவியை தொடாமல் இருப்பதும் அத்ற்கு அவர் சொல்லும் காரணமும், இமேஜை தூக்கி நிறுத்துது

4   பிரபு  இளவரசு இருவரும் இறுக்கமான  சூழலில் பேசும் வசனங்கள் நல்ல டைரக்சன்




 லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 காதலிச்ச பொண்ணை திருவிழாக்கூட்டத்தில்  தூக்கனும், இந்த ப்ராஜக்ட்ல பொண்ணோட  ஃபோட்டோ இல்லை என்பதும் குத்து மதிப்பாக கடத்தலில் இறங்குவதும் அபத்தம்.ஃபோன் ல ஃபோட்டோ வெச்சிருந்தேன். அது எரேஸ் ஆகிடுச்சு என்பதெல்லாம் டுபாக்கூர்

2  கடத்தப்பட்ட பெண் நீ லவ்வும் பெண் தானா? என பார்ட்டியிடம் கன்ஃபர்ம் பண்ணாம கார்ல  கூட்டிட்டுப்போவது  ஓவர்


3  ஒரு பொண்ணைக்கடத்த ஆள் அரவம் இல்லாத இடம் தான் சரி. ஸ்பாட் செலக்சனே தப்பு. ஊர் திருவிழாக்கூட்டம்  ரொம்ப ரிஸ்க்

4  நாலு பேர் முன்னால் அவமானப்பட்ட அந்த ஆள் மாறாட்டப்பொண்ணோட அப்பா தன் பொண்ணு வந்ததும் என்ன நடந்தது? என கேட்காமயே தற்கொலை செய்துகொள்வது ஏன்? என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என திடகாத்ரமாய்  நம்புபவர் ஏன் பெண்ணிடம் எதுவும் கேட்கவில்லை?


5  ஊர் மக்கள்  ஹீரோவை அடிக்கும்போது ஹீரோ வாயைத்திறந்து நடந்த உண்மையை சொல்லவே இல்லையே ஏன்?


6  காதலி கடத்தும் படலம் நாடோடிகள் ரீமிக்ஸ் ஆக இருப்பதும் அதே பட பாட்டான சம்போ சிவ சம்போ பாட்டு பிஜிஎம்மை யூஸ் பண்ணியதும்  தவறான தேர்ந்தெடுப்பு

7   பிரபு தன் தங்கை ஒரு துரோகி என்பதை உணரும் காட்சி எல்லாம் படு நாடகத்தனம். அந்தக்கால டிராமா





தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்
வெற்றி வேல் =141 நிமிடங்கள் @ திருவனந்த புரம் தன்யா 11 15 AM

2 அடியே !உனைப்பாத்திட பாத்திட நான் குறைஞ்சேனே வே




நச் டயலாக்ஸ்


1 காதல் ,கல்யாணம் இதெல்லாம் இல்லாம இருந்தாதான் வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும் #,வெ வே

2 யாராவது உன்னைக்குப்புறப்படுக்க வெச்சி அயர்ன் பண்ணுனாங்களா?

நீங்கதானே விறைப்பா.வரச்சொன்னீங்க? வே

3 இவரு தான் ஒத்தாசை

உங்களுக்கு ஒத்தாசையா இருக்காரு சரி.என்ன பேரு?
அவரு பேரே ஒத்தாசைதான் வே

4 ஹலோ, உங்க கிட்டே 1 சொல்லனும்

சொல்லுங்க
மொபைல்ல சொல்லற மேட்டர் இல்லை, முகத்தைப்பார்த்து சொல்லனும் # வெ வே


5 விரல்ல புண் வந்தா வலிக்கத்தான் செய்யும், அதுக்காக விரலை வெட்டிட முடியுமா? #வெ வே


6   இங்கே ஜாதி ரொம்ப முக்கியம். எந்த மத ஆளும் மதம் மாறலாம், ஆனா எந்த ஜாதிக்காரனும் ஜாதி மாற முடியாது @ வெ வே



7  

 அடிக்க ஆள் அனுப்பறதை அரிவாளை தூக்கறதைவிட்டுடு. இல்லை தூக்கறது நீயா  இருந்தாலும் அறுக்கறது நானா தான் இருப்பேன்


8   காதலிக்கும் நாம 2 பேருமே பரஸ்பரம் நம்ம காதலை சொல்ல முடியாத சூழல் அமைஞ்சது - இயற்கை கொடுத்த  வரமாவும் இருக்கலாம் # வெ வே


9  பகைமை பாராட்டும்  இரு சொந்தங்கள் தங்கள் பகையை மறந்து சேர அச்சாரமாய் எதிரி கையால்   உப்பு வாங்கி பானையில் வைப்பது நம் சம்பிரதாயம் # வெ வே


 சி.பி கமெண்ட் -  வெற்றி வேல் - எம் சசிகுமார் நடிப்பில் கிராமத்துக்காதல் கதை , ஃபேமிலி மெலோ டிராமா, பி, & சி செண்ட்டர் ஆடியன்சுக்காக. விகடன் மார்க் =40 , ரேட்டிங் = 2.5 / 5


 குமுதம் = ஓக்கே 

சிம்பு தேவன் vs அட்லி

1  கொய்யாப்பழம் என ஒன்று இந்த உலகில் இல்லை, எல்லாபழங்களும் மரத்தில் / செடியில்/ கொடியில் இருந்து கொய்த பழங்களே!


===============



2 ஒரு கரணை ( 10 செமீ நீளம் உள்ள துண்டு ) கரும்பை கடித்து சாப்பிட்டால் அது  உங்கள் 32 பற்களையும் வாட்டர் வாஷ் செய்ததற்கு சமம்,




==============




நம் பேச்சில் அன்பும்,பாசமும் இருந்தால் எதிரிகளை கூட நண்பர்கள் ஆக்கிடலாம் ;))னு சொல்ற ஐடி பேரு திமிரான தமிழச்சி, அன்பான தமிழச்சினு மாத்திக்கலாம்




==============



4 அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு . ரேஷன் கடைல விஷத்தை கொடுத்தாக்கூட அளவு கொஞ்சம் கம்மியாதான் இருக்கும் போல




==============




5 ஒரு வார இதழுக்கு சிறுகதை அனுப்பினேன். நல்லா இல்லை என்ற பின் குறிப்போட திருப்;பி அனுப்பினாங்க.படிக்க படிக்க பிடிக்கும் படிச்சுப்பாருங்கன்னு திருப்பி அனுப்பிட்டேன்




===========



6  உங்க முதுகில் குத்தினது துரோகியாத்தான் இருக்கனும்னு அவசியம் இல்ல.காதலி கூட செல்லமா குத்தி இருக்கலாம் # புறமுதுகில் குத்திய பூந்தளிர்



===========



7 இளைஞர்கள்.வார்த்தைகளில் கண்ணியம் ,கருத்தில் பெண்ணியம் ,உடையில் தமிழ் மண்ணியம்.இந்த கிழ போல்ட்டுங்க தான் சகிக்க முடியாத அளவு லூட்டி அடிக்குது




==========




8 செல்போனில் பேட்டரி தீர்ந்து போன போது சிறிது பார்வை ஜன்னல் பக்கம் வீசப்படும்




========




9 கடலை போடுவது உனக்கு உற்சாகத்தையும் உன்னை வேடிக்கை பார்ப்பவருக்கு கடுப்பையும் ஒருங்கே தர வல்லது




==========



10 அம்மாக்கள் எப்போதும் சின்ன வெங்காயத்தை நறுக்கித்தான் வெங்காய தோசை சுடுவாங்க.பொண்டாட்டிங்க பெரிய வெங்காயம்.ஏன்னா அது அரிவது ஈசி




=========



11 வாழ்க்கையில் யாரையும் கறிவேப்பிலையாய் ஒதுக்கிவிடாதீர்!,உணவில் கறிவேப்பிலையை தினம் சேர்ப்பீர்.அது கூந்தலுக்கு நல்லது




=============



12 உணவு உண்ண உகந்த நேரம்


காலை 8 டூ 9

மதியம் 1 டூ 2
இரவு 8 டூ 9
தூங்க இரவு 10 டூ அதிகாலை 5 / 11 டூ 6


=============

13 கிரவுண்டுக்கு வராமல் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலேயே வாக்கிங் போய்விடும் ஹை க்ளாஸ் பிகர்களை மென்மையாக கண்(ண)டிக்கிறேன்


============

14 கூந்தல் சுருட்டையா அடர்த்தியா வளரனும்னு அமாவாசை அன்னைக்கு கூந்தல் நுனி ல கொஞ்சம் வெட்டி விட்ருவேன்.



ஓஹோ.கர்லிங் ஹேர் கட் அழகி?


============

15 காலை உணவு தவிர்த்து விட்டால் ஒல்லி ஆகலாம் என நினைப்பது தவறு.அல்சர் தான் வரும்


============

16 சிம்பு தேவன் = நீங்க நிஜமா விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா?




அட்லி = அது இருக்கட்டும். நீங்க வடிவேலுவை வெச்சே செம ஹிட் கொடுத்த ஆளு.ஆனா......


==============

17 பிழைப்புத்தேடி வெளியூர் போகும் பேச்சிலர் பசங்க எல்லாம் 16 வயசுலயே சமையல் கத்துக்கறாங்க, பொண்ணுங்க 23  வயசு ஆனாலும் இன்னும் அம்மா முந்தானையையே பிடிச்ட்டு இருக்காங்க


=================


18  நெட் தமிழன் தன்னை விட 6 வயசு சீனியர் அக்கா கிட்டே  லவ் ப்ரபோஸ் பண்ணிட்டு இருக்கான்.நல்ல வேளை, அக்கா ஐ ல வ் யூ சொல்லலை



=============

19  சாதம் மீந்து போனா தண்ணீர் ஊற்றி பின் தாளிச்சு அதை பொடி சாதம் ஆக்குவதும், இட்லி மீந்து போனா அதை உதிர்த்து இட்லி உப்புமா ஆக்கி சுவை கூட்டுவதும் அம்மாக்கள் கை வந்த கலை


====================

20  
ஒடுக்கப்பட்ட இனத்திற்கு இருக்கும்  வலியை விடக்கொடுமையானது அன்புக்கு உரியவரால் ஒதுக்கப்பட்ட  தருணத்தில் உண்டாகும் வலி

===================