Saturday, April 09, 2016

உப்புமா அடிக்கடி சாப்ட்டா ஆஸ்துமா வரும்??!!!!

1  டாக்டர்.என் கணவர் ரொம்ப கூச்ச சுபாவியா இருக்கார்.சொந்த வீட்லயே சாப்பாடு போடுனு கேட்கக்கூட தயக்கப்படறார்


சாப்பாட்டுக்கே தயக்கமா?சுத்தம்


============

2 டியர். கடவுள் எப்பவும் என் கூட இருக்கட்டும்னு வாழ்த்துங்க


அய்யோ நான் மாட்டேன்.அப்போ நாம எப்போ லவ் பண்ண ?



============


3 உங்க பேங்க்ல லோன் வேணும்


இதுக்கு முன்னால ஏதாவது லோன் வாங்கி இருக்கீங்களா?
இந்த பேங்க்குக்குப்பின்னால இருக்கும் பேங்க்கில் வாங்கி இருக்கேன்



=============


4 தலைவரே! மகளிர் மாநாட்ல உங்களுக்கு சாதகமாதான் முடிவு அறிவிப்பாங்கனு எப்டி நினைச்ங்க?
எல்லாரும் மஞ்சள் கலர் ஜாக்கெட் போட்டிருந்தாங்க


==============



5 ஜட்ஜ் = அந்தப்பொண்ணை ரேப் பண்ணுனியா?
கைதி = ரேப் பண்ணனும்னு அப்டி செய்யலைங்க, எனக்கு குழந்தை-ன்னா பிடிக்கும், மன்னிச்சு விட்ருங்க


==============


6 சார், உங்க FB ஹேண்டில் ல 30K னு போட்டிருக்கே? அது 30,000 ஃபாலோயர்ஸ்னு அர்த்தமா?
இல்லை, பேங்க்ல 30,000 லோன் வாங்கி இருக்கேன், குறியீடு


==============


7 சார், உங்க தலை முடி மெரூன் கலர்ல இருக்கே? கலரிங்க் ஹேரா?


நரை முடியை மறைக்க மருதாணி தேய்ச்சு குளிக்கச்சொன்னார் டாக்டர், இப்போ தாடியும் நரை

=============


8 மிஸ்! வீட்டில் இருக்கும் சில விஷயங்களை பகிர்ந்துக்க முடியலைன்னு வருத்தப்பட்டீங்களே? சொல்லுங்க

ஷேர் பண்ணுவீங்களா?

 யா

 4 மாசமா வீட்டு வாடகை கட்டலை, கட்றியா?


=================

9 சார், சுற்றுப்புற சூழல் சுத்தமா வெச்சுக்க மாட்டார்னு அந்தாள் முகத்தைப்பார்த்தாலே தெரியுது

 எப்டி?

 10 வருசமா ஹேர் கட், தாடி ஷேவிங்கே பண்னலை


=================


10 தலைவரே! உங்க முகத்துல மரு , மச்சம் ஏதாவது இருக்கா?

இல்லை, மருத்துவர் என்பதன் சுருக் தான் மரு, DOCTOR என்பதை DR னு போடற மாதிரி

ஓஹோ, அப்போ மர் தானே கரெக்ட்?


==================


11 மிஸ்! இந்த அல்வா வை வீட்ல செஞ்சதுன்னு சொன்னீங்க, ஆனா ஹோட்டல் பேரு கவர்ல இருக்கே?


 ஐ மீன் WHEAT ல செஞ்சது , ஹோட்டல்ல வாங்குனது


==================

12  மிஸ் ! உங்க வீட்ல அல்வா செஞ்சீங்களா? வாசம் தூக்குது

அதானே ? மூக்கு வேர்த்திடுமே?

இல்ல, நாக்கு வேர்த்துடுச்சு,


=================


13 டாக்டர்,ஆரஞ்சு பழம் சாப்ட்டா முகத்தில் ஷைனிங்  கூடுமாமே? நிஜமா?

 ஒரே டைம் ல ஆறு அஞ்சு பழம் எல்லாம் சாப்ட்டா தொண்டை கட்டிக்கும்


==============


14  எதுனா நல்ல நாவல் இருந்தா சொல்லுங்க , நல்ல நாவலை எப்படி அடையாளம் கண்டு பிடிக்க ?

கருநீலக்கலர்ல பெருசா இருப்பதெல்லாமே நல்ல நாவல் பழம் தான்


==================


15 வீட்டுல துளசி வெச்சா நோய் நொடி எதுவும் வராது

அது சரிதான், துளசி யை வெச்சிருந்தா அவங்கம்மா ராதா சும்மா விடுவாங்களா?


================

16  தலைவரே!உங்க அனுபவத்துக்கும், வயசுக்கும் போயும் போயும் ஒரு நடிகரை ஏன் எதிர்பார்க்கறீங்க?

காரியம் ஆகும் வரை காலைப்பிடி,ஆனதும் கழுத்தைப்பிடி,இதுவே கழகத்தின் தாரகமந்திரம்


===================



17  டாக்டர்! உடம்பில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கும், இரவில் கலர் கலரா கனவு வருவதற்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ?

அஸ்கா சுகர்னா கனவு ஒயிட்& பிளாக்ல, பிரவுன்  சுகர்னா கலர்ல கனவு வரும்


===============


18 டாக்டர்! என் வீட்ல இருந்து டெய்லி 4 கிமீ ஜாகிங்க் போனா ஒரு மாசத்துல  என்ன ஆகும்?

உங்க வீட்டை விட்டு 124 கிமீ ( 31*4=124) தள்ளி வந்திருப்பீங்க, வீட்ல தேடிட்டு இருப்பாங்க


==============

19   டாக்டர்! உப்புமா  அடிக்கடி சாப்ட்டா ஆஸ்துமா வரும்னு ஒரு பொய்யை என் சம்சாரம் கிட்டே சொல்ல முடியுமா?

 ஏன்?

 வாராவாரம் உப்புமா தான் சமைக்கறா


==============


20 ஜட்ஜ் = 7000 கோடி கடனையே இன்னும் கட்டலை, திருப்பதிக்கு  1000 கோடி ரூபா காணிக்கை தரப்போறீங்களாமே? ஏது பணம்?

ஏதாவது பேங்க்ல தான் லோன் வாங்கனும் இனி, சிக்குவாங்க


=================

அய்யா திருமா, உங்களுக்கு வெச்சுட்டாங்க குருமா

இந்தியாவில் இருந்து தப்பி ஓடவில்லை; நான் தலைமறைவாகவும் இல்லை: விஜய் மல்லையா # சரி.லேன்ட் லைன் போன்ல இருந்து மோடிக்கு கால் பண்ணுங்க

============

2 கடனை திருப்பிகேட்ட பெண்ணை கற்பழித்ததாக இந்தி நகைச்சுவை நடிகர் கைது # நன்றிக்கடன் ?அடப்பாவி


=============

3 மநகூட்டணியில் இனி விஜயகாந்திற்கு இடமில்லை - திருமாவளவன் /# டிக்கெட்டே எடுக்காம ஸ்டெப்ல தொத்திட்டுப்போறவர் டிரைவருக்கு இடம் இல்லைன்னாராம்


===========

4 செயல்பட அனுமதித்திருந்தால் விகாந்த் நல்ல எ க தலைவராக இருந்திருப்பார்:கலைஞர்# மே மாசத்துக்கு இன்னும் டைம் இருக்கே.இந்த நம்பிக்கைதான் வாழ்க்கை


===========


5 ஒத்த கருத்துள்ள கட்சிகள் வந்து பேசலாம் பிரேமலதா அழைப்பை பரிசீலிபோம்:தமிழிசை "தண்ணி"க்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல


=========

6 விஜயகாந்த் முடிவால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை- மகிழ்ச்சியே: பேரா. சுப.வீ # உதடு சிரிக்குது.கண் கலங்குது ஏன் சார்?

===========

7 4 சதவிகித ஓட்டு வங்கி கூட தேமுதிகவுக்கு கிடையாது: சி.ஆர்.சரஸ்வதி தாக்கு # 12% ல இருந்து 15% ஆக உயர வாய்ப்பு இருக்கு


=============

8 மல்லையாவின் பாக்கியை வங்கிகள் திரும்பப் பெறும்: ஜேட்லி ் # உள்ளூர்ல இருக்கறப்ப 143 சொல்லாதவன் பிகர் பாரீன் போனதும் மெயில் பண்ணுவானா?்

============

9 பாஜக விற்க்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது- தமிழிசை # தாமரைப்பூ கொண்டை தான் போடனும்னு மேலிட உத்தரவா?

===========

10 ஸ்டாலின் இருக்கும் வரை விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார்-- அழகிரி! .# உங்களை.உள்ளே விட மாட்டாங்கனு சொல்லுங்க


=============

11 கூட்டணிக்கு அழைத்த கருணாநிதிக்கு நன்றி.. பிரேமலதா # நன்றி எல்லாம் நல்லாதான் சொல்றீங்க.ஆனா தலைவரை இப்டி அவமானப்படுத்தீட்டீங்களே

============

12 தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு:-ADMK மூவரின் தூக்குதண்டனை ஆயுளாக குறைப்பு # நன்னடத்தைக்காக அடுத்தவருசம் விடுதலையா? போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும்



============


13 விஜயகாந்த் முடிவால் திமுக - காங் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை- குஷ்பு # ஒரு் பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் உண்மை ஆகிடுமா?


================


14 திமுக என்றாலே தி ல்லு மு ல்லு; க ட்சி
அனைத்திலும் தில்லுமுல்லுதான் அதிமுக-பிரேமலதா #இதுதான் தேமுதிக வின் தில்லு



=============

15 போலீஸாரால் தாக்கப்பட்ட விவசாயியின் தவணையை செலுத்த முன் வந்த விஷால் # விஷால மான மனசு

============

16 தனித்து போட்டியிடும் முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருப்பாரா?: அன்புமணி கேள்வி # 4% வெச்சிருக்கும் நீங்களே உறுதியா இருக்கும்போது 12% உறுதியா இருக்க மாட்டாரா?

===============


17 தமிழக சட்டசபைதேர்தலில் புதியதிருப்பம்:விஜயகாந்த் அணியில் மக்கள்நலகூட்டணி சேரவாய்ப்பு # அய்யா திருமா, உங்களுக்கு வெச்சுட்டாங்க குருமா

=============

18 காங்கிரஸ்பற்றிவிமர்சனம்:நடிகர்செந்திலுக்கெல்லாம்பதில்சொல்ல முடியுமா?குஷ்புகாட்டம் # கவுண்டமணி வந்து கேட்டாதான் சொல்வீங்களோ?


================


19 தனித்துபோட்டி:விஜயகாந்த் மனதைமாற்றிய பிரேமலதா நம்பிக்கை நட்சத்திரமாகமாறினார் # மனைவி அமைவதெல்லாம் கேப்டன் செய்த தவம்


==============

20 கூட்டணிக்கு வருவதும் வராததும் தேமுதிகவின் உரிமை - ஸ்டாலின் #கடைசி நேரம் வரை வந்தாலும் சேர்த்துக்க தயாரா இருப்பதே திமுக வின் கடமை


===================

Friday, April 08, 2016

LOVE GAMES - சினிமா விமர்சனம் ( ஹிந்தி) கில்மா க்ரைம் த்ரில்லர் 18+

சிவனும் சக்தியும் ஒண்ணாசேர்ந்தா மாஸ்டா-ன்னு பாடுன மாதிரி மகேஷ்பட்டும்,விக்ரம் பட்டும் ஒண்ணா சேர்ந்தா கில்மாடான்னு தாராளமா சொல்லலாம். இவங்க படங்கள் எல்லாவற்றிலும்  கொலை, கிளாமர்  கில்மா  நிச்சயம் இருக்கும். உலகப்புகழ்(!!??) பெற்ற மல்லிகா ஷெராவத்-ன் மர்டர் ஹிந்திப்படம் எடுத்தவங்களாச்சே ( இது ஹாலிவுட் படமான அன் ஃபெயித் ஃபுல் ஒயிஃப் படத்தின் தழுவல்- படம் பூரா  யாராவது  யாரையாவது தழுவிட்டே  இருப்பாக)



இந்தப்படத்தோட கதையும்  விவகாரமானதுதான்.ஹீரோ செல்வராகவன் படங்கள் ல வர்ற ஹீரோ போல் ஒரு சைக்கோ. அதாவது டென்சன் ஆனா  தன் கையை தானே மணிக்கட்டில் கட் பண்ணிக்குவார். இவரோட சம்சாரம் விநோதமான கேரக்டர். லைஃப்ல எதுனா த்ரில்லிங்கா பண்ணிட்டே இருக்கனும். அதுக்கு தன் புருசனை பகடைக்காயா  யூஸ் பண்ணிக்குது.

சம்சாரம் லவ் கேம்ஸ் ஆட ஆசைப்படுது.அதாவது  ஒரு பார்ட்டி நடக்கும் இடத்துக்குப்போக வேண்டியது. அந்த கூட்டத்தில் சந்தோசமா இருக்கும் தம்பதியை தேர்வு செய்ய வேண்டியது.ஹீரோ அந்த ஜோடில இருக்கும் லேடியை, ஹீரோயின் அந்த ஜோடில இருக்கும் ஆணை கரெக்ட் பண்ணனும். இன்னும் விளக்கமா சொல்லனும்னா எக்சேஞ்ச் ஆஃபர் மாதிரி , ஆனா சம்பந்தப்பட்ட ஜோடிக்கு மேட்டர் தெரியக்கூடாது.

 இந்த கேவலமான  கேம்ல  ஹீரோ ஜெயிச்சுடறார். அந்த லேடியை கரெக்ட் பண்ணி  மியாவ்  முடிச்சடறார். ஹீரோயினும் தான் ஆனா அவர் ஃபர்ஸ்ட் , இவர் செகண்ட்


அடுத்தது தான் வில்லங்கம். அடுத்ததா ஒரு  ஜோடியை செலக்ட் பண்றாங்க


அதுல புருசன் கிரிமினல் லாயர் . சம்சாரம் டாக்டர்.அந்த லாயர்  புருசன் ஒருசந்தேகப்பேர்வழி. சம்சாரம் கூட அடிக்கடி சண்டை. லவ் கேம்ல அடுத்த டார்கெட்  இவங்க தான்.


இதுல  ஹீரோயின் ஜெயிச்சுடுது. அந்த கிரிமினல் லாயரை மியாவ் முடிச்சுடுது. ( ட்விட்டர் ல அபிஷேக் மியாவ், மியாவ் பாய்ஸ் பெயர்க்காரணம் இப்போ புரிஞ்சிருகுமே எல்லோருக்கும் )( இந்த மியாவ்க்கு ஒரு விளக்கம். கன்னிப்பருவத்திலே படத்துல ஆண்மை இழந்த  ராஜேஷ் சம்சாரத்தை (வடிவுக்கரசி)கே பாக்யராஜ்  ஏக்கமா பார்க்கும்போது பிஜிஎம்மா மியாவ் வரும். அப்போ இருந்து மியாவ் = ஹிஹி)


ஹீரோ அந்த லேடி டாக்டரை நிஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சடறார். இது  சம்சாரத்துக்குப்பிடிக்கலை.அவங்களை எப்படியாவது  பிரிக்கனும்னு கிரிமினல் வேலை எல்லாம் செய்யுது.

ஒரு கட்டத்தில்  ஹீரோயினும் அந்த லேடி டாக்டரும் ஒண்ணு சேர்ந்து என் புருசனை  நீ கொன்னுடு , உன் புருசனை நான் கொன்னுடறேன்னு ஒப்பந்தம் போடுறாங்க.

 இது எப்டி இருக்குன்னா கேப்டன் ஆள் சந்திரகுமாரை  திமுக விலைக்கு வாங்குனதும்  கேப்டன் கட்சி பொருளாளர்  அழகிரியும் கனிமொழியும் எங்க கட்சில இணையப்போறாங்கன்னு சொல்ற மாதிரி.


 இந்த கொலைல கிரிமினல் லாயர் செத்துடறார். ஆனா  ஹீரோ சாகலை. லேடி டாக்டரை  கொலை செஞ்சுட்டதா நாடகம் ஆடி தன் மனைவியை எப்படி  ஏமாத்தறார் என்பதே மிச்ச மீதிக்கதை.




ஹீரோ க்கு நல்ல வாய்ப்பு. 4  ஃபிகரோட  கில்மா சீன்.ஹீரோயின் தகர டப்பா  ஃபேஸ். ஃபைனான்சியர் பொண்ணா இருக்கும்.


அந்த லேடி டாக்டர்  நல்ல ஃபிகர் . அதுதான் மெயின். அதை வெச்சுதான்  கதை சதை எல்லாம் நகருது. வில்லனா வரும் லாயர்  வேஸ்ட்

ஒளிப்பதிவு டாப். இந்த மாதிரி கில்மாப்படத்துக்கு கேமரா தானே  முக்கியம்?இசை  ஓக்கே ரகம். எடிட்டிங்க்  பக்கா 


 சபாஷ் மீனா 


1   லேடீஸ்  கேரக்டர்ஸ் எல்லோரும்  நல்ல ஃபிகர்சே   ஹீரோயின் தவிர 

2   பார்ட்டிகளில் நடக்கும்  கொடுமைகளை  துகில்  உரித்தது

3  காமெடி  டிராக்  சோகப்பாடல்  எதுவும் வைக்காதது


4  லேடி  டாக்டர்  பிணம்  போல்  நடிப்பது எப்படி என டெக்னிக்கல் விளக்கம் தரும் காட்சி  , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட்


லாஜிக் மிஸ்டேக்ஸ்


Tara Alisha Berry has done an important role in Love Games. (YouTube)

1 கிரிமினல் லாயர்  லேடி டாக்டரை சித்ரவதை பண்றார்.  அதை ஹீரோவிடம்  முறையிடறார். லாயர்  ஹீரோயின் கிட்டே கசமுசா பண்றப்போ எடுத்த  வீடியோ க்ளிப்பிங் கை வசம் இருக்கும்போது அதை வெச்சு  அவரை  மிரட்டலையே ஏன்?

2 போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட ( தாக நம்பப்பட்ட)லேடி டாக்டர்  மார்ச்சுவரியில்  ஐஸ் பெட்டியில்  ஒரு இரவு முழுக்க எப்படி தாக்குப்பிடித்தார்?

3 சந்தேகப்பிராணியான  கிரிமினல் லாயர்  ஓப்பனிங்  சீனில் தன் மனைவியை பார்ட்டி நடக்கும் இடத்தில் ஹீரோ கூட விட்டுட்டு கிளம்புவது ஏன்?






நச் டயலாக்ஸ் 


வாழ்க்கைல எது ஈசியா உன் கைக்கு கிடைக்குதோ அது மேல் உனக்கு சுவராஸ்யம் இருக்காது , குறிப்பா காதல்ல #LOVE GAMES( HINDI)


எனக்கு இது பிடிக்கும்னு உனக்கு எப்டி தெரியும்?
 பிடிச்சவங்களுக்கு எது பிடிக்கும்னு தெரிஞ்சு வெச்சுகறது எனக்குப்பிடிச்ச விஷயம் #LOVE GAMES( HINDI)


3  தனியா இருக்கியா? போர் அடிக்கலை?

 தனியா இருந்தா போர் அடிக்கும்னு யார் உனக்கு சொன்னது?#LOVE GAMES( HINDI)


4  இப்டி பைத்தியகாரத்தனமா நடந்துக்காத

காதலிக்காத ஒரு நபர் காதலிக்கறவங்களைப்பார்த்து இது பைத்தியக்காரத்தனம்னு எப்டி சொல்லலாம்?அது ஒரு பைத்தியகாரத்தனம் இல்லையா?#LOVE GAMES( HINDI)


5   காதல்ல கிடைச்ச ஏமாற்ற வலி வலிக்காம இருக்க கை மணிக்கட்டில் காயம் பண்ணிக்கறது சைக்கோத்தனம்தான்,ஆனா வலியை மறக்க வேற வழி தெரியல#LOVE GAMES( HINDI)


சி.பி கமெண்ட் -LOVE GAMES (HINDI) -  எ ஸ்டோரி ஆஃப் எக்சேஞ்ச் ஆஃபர் ஆஃப் எ கப்பிள்-கில்மா க்ரைம் த்ரில்லர்- ரேட்டிங் = 1.75 / 5 கண்ணியமான கில்மாப்படம்

 திருவனந்தபுரம் ரம்யா தியேட்டர்ல ரம்யமான இந்தப்படத்தை 70 MM A/C டிடிஎஸ்  ஆரோ 3 டி ல பார்த்தேன்

Love Games is an upcoming Indian urban-thriller film directed by Vikram Bhatt and produced by Mukesh Bhatt and Mahesh Bhatt. The cast of the film includes Patralekha, Gaurav Arora and Tara Alisha Berry. It will be released on 8 April 2016. Wikipedia 
Release dateApril 8, 2016 (India)

திமுக வின் கடைசி அஸ்திரம்

1  இன்னும் 10 வாரத்தில் தமிழகத்தை பிடித்த எல்லா கிரகணங்களும் விலகி விடும்!"-ராம்தாஸ் #,அரசியல்வாதிகள் எல்லாரும் பாரீன் போய்டுவாங்களா?



===========



2 ஜெ. சிறை தண்டனையை கண்மூடித்தனமாக ரத்து செய்தார் நீதிபதி குமாரசாமி- கர்நாடகா வக்கீல் தவே # கை மேல் பலன் கிடைச்சிருக்கும்





============




3 ரூ16.32 கோடி சொத்து குவிப்பு என்பது வருமானத்துக்கு அதிகமாக 76.7% - கர்நாடகா வக்கீல் தவே"# மாட்னது மல்லிகாஷெராவத் அளவு.மாட்டாதது நமீதா அளவு




=============




4 செக் மோசடி வழக்கு: மகளுடன் ஏப்ரல் 13-ம் தேதி ஆஜராக இயக்குனர் சேரனுக்கு கோர்ட் உத்தரவு # அதுவரை டெய்லி ஸ்டேஷன்ல போய் “ஆட்டோகிராஃப்”போடனுமா?




===========



5 சிறை செல்வோமே தவிர ஒரு பைசா கூட அபராதம் செலுத்த மாட்டோம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உறுதி # சட்டத்தை நல்லாவே மதிப்பவர் போல, ரவி சர்க்கார்




============



6 அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் போதையில் தடுமாறிய நாகல்குழி கிராம தலைமையாசிரியர் # போதை என்னும் புதை குழியில் விழுந்த பின் எதுக்கு HM பதவி?




==============



7 திமுக விளம்பரங்கள் மக்களிடம் எடுபடாது: நடிகர் செந்தில் நம்பிக்கை # அப்போ கவுண்டமணி திமுக வில் இருந்தா மேட்சிங்கா இருக்குமில்ல?




============




8 அடுத்த வாரம் கூட்டணி அறிவிப்பு: தனித்து போட்டியிட மாட்டோம் -GKவாசன் # ஏன் பாஸ்? தனியா நடு ஜாமத்தில் சுடுகாட்டுக்குத்தானே போக பயம்?




=============



9 ஊழலை எதிர்க்கும் விஜயகாந்துக்கு மக்கள் நல கூட்டணி தான் இயல்பான தேர்வு - வைகோ # பணம் தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதே கேப்டனின் இயல்பு




===============



10 இறந்துவிட்டதாக தகவல் பதிவு: விக்கிபீடியா மீது பாஜக பெண் எம்.பி. அஞ்சு பாலா புகார் # வெரிகுட், எதற்கும் அஞ்சாத பாலா




=============



11 மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி # பிரதமரைப்பார்க்கனும்னார்.அவர் ஃபாரீன்ல இருக்கார்னதும் கிளம்பிட்டார்னு சமாளிங்க




===========



12 அதிமுக இரண்டாக உடையப் போகிறது.-பிரேமலதா #ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகளை பெற அது ஒரு தந்திரமாகவும் இருக்கலாம்




===============



13 தேமுதிக தனியாக நிற்கும் - விஜய்காந்த் # இது இறுதியான முடிவாக எனக்குத்தோணலை, பேரம் படிய ஒரு மிரட்டலாகவும் இருக்கலாம்




===============



14 தேமுதிக தனித்துப்போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு: கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி # இனிமே தான் மக்களுக்கு குழப்பமே ஆரம்பம்




==================



15 திமுக,அதிமுக இரண்டுமே தில்லுமுல்லு கட்சிகள் - பிரேமலதா # ஏம்மா, இதை அப்பவே சொல்லி இருந்தா அவங்கவங்க அவங்கவங்க வேலையைப்பார்த்திருப்பங்கைல்ல





===============




16 விஜயகாந்த்தின் முடிவு நம்பகத்தன்மை இல்லாதது -அன்புமணி # ஆமா, அரசியலில் அவருக்கு முடிவு இல்லை, இது ஒரு ஆரம்பம் தான்




=================




17 மகளிர் தின பொதுக்கூட்டத்திற்கு தள்ளாடியபடி வந்த விஜயகாந்த் - செய்தி # தள்ளாடினாரோ இல்லையோ, அவர் அறிவிப்பில் பலர் ஆடிப்போய்ட்டாங்க




===============




18 தே.மு.தி.க. தனித்து போட்டி; விஜயகாந்த் திட்டவட்ட அறிவிப்பு # திமுக ,அதிமுக இரண்டையும் திட்டிட்டே விட்ட அறிவிப்பு



============




19 ஜெ.,க்கு எதிரான மேல்முறையீடு சொத்து குவிப்பு வழக்கு மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு -செய்தி # திமுக வின் கடைசி அஸ்திரம்



=============

20 மல்லையாவை தப்ப விட்டதாக காங். புகார்,ஐ.மு. அரசே கடன் வழங்கியதாக ஜெட்லி குற்றச்சாட்டு # லோன் குடுத்தது, வசூலிக்காம தப்ப விட்டது 2ம் தப்பு


==================