Thursday, April 07, 2016

உங்க படத்துக்கு ஏன் அன்வர் னு டைட்டில் வெச்சிருக்கீங்க?

1  டியர், நான் கோபமா இருந்தா டக்னு சமரசம் பண்ணிடறீங்களே? எப்டி?


சாம்பார், பொரியல் எல்லாம் வைக்கறேன், இந்த ரசம் மட்டும் நீயா வைக்கப்போறே?


=============

டாக்டர்.என் புருசன் உடல் ஆரோக்யத்தில் அக்கறை இல்லாம அசால்ட்டா இருக்கார்.


உப்பு கெடுதல்.அதான் அ"சால்ட்"டா இருக்கார்.உப்பு சேர்த்திக்கறதில்லை


============

3 சார்.மிஸ் அன்பு எங்கே?அர்ஜென்ட்டா பார்க்கனும்.


யோவ்.நீ யாரு? அ ன்பு யாரு?
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் னு போஸ்டர் பார்த்தேன்



============


4 எல்லாரும் FULL ஸ்லீவ் சர்ட்தான் போடனும். இந்த ஆஃபீஸ் ரூல்சை மீறி HALF ஸ்லீவ் சர்ட் போட்டதால் 250 ரூபா FINE.


ஸார்.நேத்து ரிசப்சனிஸ்ட் ரீட்டா ஸ்லீவ்லெஸ் ஜாக்.கெட் போட்டுட்டு வந்துது.அப்போ 1000RS ஃபைனா?


================


5 நான் கெட்டவன்னு நிரூபிச்சுட்டா ட்விட்டரை விட்டு போய்டறேன்
சார், எங்கே போவீங்க?
வேறெங்கே? ஃபேஸ்புக் தான்


=============



6 ஜட்ஜ் = எதுக்காக விஜய் மல்லையாவை விமானம் ஏறி தப்பிக்க விட்டீங்க?
அரசாங்கத்தோட மானம் கப்பல் ஏறாம இருக்கனும்னுதான்


===================


7 நீங்க வாங்குன 3000 கோடி லோனை எப்போ கட்டுவீங்க?
கட்டக்கிளம்பினேன்.நான் பேங்க் பக்கம் தான் போறேன், கட்டிடறேனு மல்லையா வாங்கிட்டு போனாரு


============


8 டாக்டர், மனசு சரி இல்லாட்டி சுவத்தில
4 முட்டு நறுக்குன்னு முட்டுனா சரி ஆகிடுமா?
மனசு சரி ஆகுதோ இல்லையோ மண்டை உடைஞ்சி ரிப்பேர் ஆகிடும்


===============



9 தலைவரே! 500 கோடி கொடுக்க அவங்க ரெடியா இருந்தும் போகலையே? நீங்க அவ்ளோ நல்லவரா?
அங்கே போகாம இருக்க இவங்க 600 கோடி தர்றேன்னாங்க



================



10 தலைவரே! பழம் நழுவிப்பால்ல விழும்னீங்க?
எனக்கென்ன போச்சு? பழத்துக்கு பால் ஊத்திடுவாங்க மக்கள்



===============


11 சொந்தப்பையனை நம்பாம துரத்தி அடிச்சோம், இப்போ யார் யாரோ நம்மை துரத்தி அடிக்கறாங்க
தலைவரே!பையன் கூட ஒரு கூட்டணி போட்ருவோம்


===============


12 தலைவரே!பெரிய பிஸ்னெஸ் ”மேக்னெட்”டா இருந்தவங்களை இப்போ உங்களுக்கு சுத்தமாப்பிடிக்கலையா? அது ஏன்?
தெரில.”காந்தம்”னாலே கடுப்பாகுது


==================


13 டாடி, எனக்கு எப்போப்பா கல்யாணம்?
இப்போ என்னம்மா அவசரம்?
ம்ஹூம், நீ Cindrella @Sirumi123ம்மா, வளரனும் இன்னும்
20 வயசு ஆகுதில்ல



=================




14 தலைவரே! அவர் முடிவைச்சொல்லீட்டார். இப்போ நாம என்ன செய்ய?
விடியட்டும், மப்பு தெளியட்டும்



=================


15 தலைவரே! பிரஸ் ரிப்போர்ட்டரை ஏன் அடிக்கப்போறீங்க?
தலைவர் கட்சி ஆஃபீஸ் ”விஜயம்”னு போட்டு எதை மறக்கனும்னு நினைச்சனோ அதை நினைவுபடுத்தறார்


=================


16 தலைவரே! பழம் பாலில் விழும்னீங்க.கை நழுவிப்போய்டுச்சே?

உடன் பிறப்பே! "கை" நழுவிப்போகலை.நம்முடன் தான் இருக்கு # சமாளிபிகேசன் சாணக்யத்்தனம்


=========


17 ஹனிமூனுக்கு மாப்ளை வர்லைன்ட்டாரா?

ஆமா.யார் கூடவும் கூட்டணி இல்லை.தனிமூன் கொண்டாடிக்கறேன்ட்டார்

=========

18 டியர்.காந்தக்கண்கள் னு.வர்ணிப்பீங்களே.இப்போ ஏன் வர்ணிக்கலை?

காந்தம் னாலே பயமா இருக்கு
கழட்டி விட்டுட்டு தனியா போய்ட்டா?


===============

19 தலைவரே! இயற்பியல் விதியே மீறிட்டாரு அவரு

எப்படி?
இரும்பு இதயம் படைத்த உங்க கிட்டயே காந்தம் ஒட்டலையே?


============


20 உங்க படத்துக்கு ஏன் அன்வர் னு டைட்டில் வெச்சிருக்கீங்க?அதே பேர்ல படம் வந்தாச்சே?

அப்டியா?சரி.ஹசீனா பானு னு மாத்திட்டா போச்சு.2ம் 1 தானே?

================

யார் காமெடி பண்ணாலும் இது மொக்கை காமெடின்னு ஒரு பொண்ணு சொன்னா என்ன செய்யனும்?

1 தனக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலே அவர் நல்ல நிர்வாகி என அறியப்படுவார்


=============

2  யார் காமெடி பண்ணாலும் இது மொக்கை காமெடின்னு ஒரு பொண்ணு சொன்னா உடனே நீங்க தான் கொஞ்சம்  நல்ல காமெடி பண்ணிக்காட்டுங்களேன்னு சொல்லிடனும்


===============


3 7000 கோடி ரூபாய் மோசடி செய்த விஜய் மல்லைய்யாவைத்தப்பிக்க விட்டது  மோடி அரசு என்பது உண்மை எனில் அது மோசடி அரசு


==============


அலாரம் ஆப் பண்ணிட்டு தூங்குற தூக்கம் சொர்க்கம்



மிஸ்!,அப்போ நைட்.10 க்கு அலாரம் வெச்ட்டு 9க்கு தூங்கி 10 க்கு எழுந்து மீண்டும் தூங்கிடவும்


==============


5 100 ஆண்டுகள் நலமாய் வாழும் கலை பற்றி ய வகுப்புக்கு 1000 ஆண்டுகள் தூய்மையாய் வாழ்ந்த நதியை அழிப்பது முறையோ?


=============


கர்நாடகா கோர்ட்டில் இரட்டை இலை யைப்போட்டுத்தாக்கிட்டு இருக்காங்க.களி கன்பர்ம்


=========

7 கலைஞர் வீட்டில் பாயாசம் வைக்கச்சொல்லி இருப்பாரில்ல?


============

8 இயற்கைக்கடவுளை மதிக்காதவர், அரசாங்கம் விதித்த அபராதத்தை கட்டாதவர் எப்படி பொது மக்களுக்கு வாழும் கலை பற்றி போதிக்க முடியும்? #ஸ்ரீஸ்ரீ


===============

9 இந்தியாவுக்கு சீனா பிரச்சனை

தமிழ் ட்வீட்டர்களுக்கு ஹ”சீனா” பிரச்சனை # சிரிச்சு திரிச்சு வந்தா சீனா தானா டோய்



===========


10 ட்விட்டர் கிசுகிசு- ஹசீனாபானு ஃபேக் ஐடி என தெரியாதபோது  சேட்டு ஹசீனா என டாட்டு வேற குத்திக்கிட்டாராம் நெஞ்சுல, இனி என்ன பண்ணப்போறாரோ?


==============


11  உன் பேரம் படியவில்லை எனில்  கூட்டாளியை விட்டு விலகுவதாக முதலில் மிரட்டு # அரசியல் சதுரங்க வேட்டை


=================

12 புதிய ஆளை நம்பி உன் பாரம்பரியப்பெருமையைக்கெடுத்துக்கொள்ளாதே


===========


13 கேப்டன் நாளை காலை = நேத்து ஏதோ மப்பில் உளறிட்டேன், குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க ஆங்


================


14  சாணக்கியர்களும் சில சமயம் சறுக்குவதுண்டு
சாமான்யர்கள் அவருக்கு தண்ணி காட்டுவதுண்டு 


================

15 தேமுதிக  தனியாக நின்றால் அதிமுக வை விட திமுக விற்கே அதிக பாதிப்பு, மக்கள் நலக்கூட்டணி+ தமாக +தேமுதிக சேர்ந்தால் 2ம் இடம் பெறக்கூடும்


================

16 கர்நாடகாவில் ஜெ வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தேமுதிக + ம நகூ + தமாக கூட்டணி அமைந்தால் கேப்டன் சி எம் ஆகவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது


================

17 உன் முடிவு அதிக முக்கியத்துவம் பெற வேண்டும் எனில் உன் முடிவை முடிந்தவரை அறிவிப்பதை ஒத்திப்போடு


===============

18  நீ ஜெயிக்காவிட்டாலும் எதிரியை ஜெயிக்க விடாமல் செய்வதும் உனக்கு ஒரு வெற்றியே!


=================

19  2011 லும் சரி, 2016 லும் சரி  கேப்டன் எடுக்கும்   அரசியல் முடிவு ஜெ வுக்கே சாதகமாக அமைவதை கவனித்தீரா? # பணம்


=================


20 உன்னால் தெளிவான ஒரு முடிவு எடுக்க முடியவில்லை எனில் பொறுப்பை உன் மனைவி கையில் கொடு, நாளை பிரச்சனை எனில் மனைவி மீது பழியைப்போடலாம்


====================

Wednesday, April 06, 2016

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்னு கலைஞரே கேட்கலை, டாக்டர் ராம்தாஸ் ஏன் கேட்டாரு?

1  நஞ்சு கலந்த பாலில் பழம் விழக்கூடாது: கருணாநிதி கருத்துக்கு வைகோ பதில் # விழுந்தால் அது இரு தரப்புக்கும் வீழ்ச்சி

===============

மகளிருக்கு அதிக நன்மைகளை செய்தது திமுக- மு.க இருந்தா பொண்டாட்டியை டார்ச்சர் பண்ணிட்டே இருப்பான்.டாஸ்மாக் திறந்தா சரக்கடிச்ட்டு ஹால்ட் ஆகிடுவான் கடைலயே, பொண்ணுங்க நிம்மதியா வீட்ல இருப்பாங்க


============
3 விஜயகாந்த் தலைமையில் புதிய அணி உருவாகிறது # கலைஞர் - சட்டி சுட்டதடா கை விட்டதடா


============


4 கூட்டணி பேரம் பேசவில்லை - விஜயகாந்த் # அதானே? பே”ரம்” அவருக்கு பிடிக்காதே?


===============


5 காங்கிரஸ் ஏழைகளுக்கு

எதிராக செயல்படுகிறது - நடிகைரோஜா # கேப்டன் நடிச்ச ஏழை ஜாதி படத்தை கொள்கை விளக்கப்படமா போடறாங்களாம், இப்போ திருப்தியா?



===============


6 நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! - செய்தி # வடக்குப்பட்டி ராமசாமிக்குக்குடுத்த 7000 கோடி ரூபாய் கடன் ஊ ஊ ஊ


===============


7 வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யமுனை நதியை மாசுபடுத்தியதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் # பழையபடி க்ளீன்பண்ணித்தரச்சொல்லுங்க


=============



8 விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என நான் கூறவில்லை: ஊடகத்தில் வந்த செய்தி பொய்-பிரகாஷ் ஜவடேகர் # இப்போ வந்த செய்தி உண்மைனு எப்படி நம்பறது?




==============



9 திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது: வைகோ ஆவேசம் # எதிர்பார்த்த சில்லரை ,சில் அறை கிடைத்தாலும் போகமாட்டீங்களா?




==============




10 அம்மா ஆட்சியின் சாதனைகளை எழுத அரசு சுவர்கள் பத்தாது - நத்தம் விஸ்வநாதன்.. # சுவரில்லாத விசித்திரங்கள் ஃபேஸ்புக் WALL ல போய் எழுதலாமில்ல?




================




11பழம்  விழுந்தாலும் பாலில், காலில் எங்களுக்கு கவலையில்லை - தமிழிசை சவுந்தராஜன்.# எட்டி எட்டி முயற்சித்த நரி கிடைக்கலைன்னதும் ச்சீ ச்சீ பழம் புளிக்கும்னுச்சாம்



============


12 விஜய் மல்லையா கடந்த வாரமே வெளிநாடு சென்றுவிட்டார்! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் # அனுப்பி வெச்சதே இவங்க தான் போல


===============

13 ஒரு மாடுக்கிட்ட முதல்வர் யாருனு கேட்டா அது அம்மா னு சொல்லும்-ராமராஜன் # எப்போ விடியும்னு மனுஷன் கிட்டே கேட்டா உதய சூரியன் வந்ததும்பான்


============

14 தனித்துப்போட்டியா ? எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ஒருவாரத்தில் தெரியும்- விஜய்காந்த் # 7 நாளில் யாருக்கு ஏழரை?ன்னு தெரிஞ்சிடுமா?

=============

15 லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு: பிழைப்பு தேடி கேரளம் வந்த இளைஞருக்கு அதிர்ஷ்டம்! # இனி ஆளாளுக்கு கேரளாவுக்கு பஸ் ஏறுவாங்களா?


=============


16 உடல்பருமன் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும்' -செய்தி # மேட்னி தூக்கம் கிட்னி தாக்கம்

============

17 ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ள வசதி # சீட் ஒதுக்கும்போதே லேடீஸ்க்கு தனி கம்பார்ட்மெண்ட்டா ஒதுக்கிடலாமே?


==============

18 சென்னை தி.மு.க., கோட்டையாக வேண்டும்- ஸ்டாலின் # சி எம் சீட்டைப்பிடிச்சாலும் ஜெ இந்த சென்னை விஷயத்தில் கோட்டை விட்ருவார் என்றே நினைக்கிறேன்

===============

19 தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதை, யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆனந்தராஜ் # 2 பையன் இருந்தும்கலைஞரேஅப்டிகேட்கலை


==============


20 தஞ்சையில் கடனை வசூலிக்க கூலிப்படை அராஜகம்: விவசாயியை அடித்து இழுத்து சென்றனர்-செய்தி # கோடிக்கணக்கில் சுருட்னவன் ஃபாரீன் போய்டறான்

===============

KING LIAR - சினிமா விமர்சனம் ( மலையாளம்) காமெடி

ஹீரோ ஒரு டுபாக்கூர் பார்ட்டி , அரிச்சந்திரனுக்கு எதிர் வீடு. இன்னும் தெளிவாப்புரியவைக்கனும்னா அவர் ஒரு கலைஞர் மாதிரி.சாராயத்தை தமிழகத்துக்குக்கொண்டு வந்ததே  தான் தான் என்பதை மறைத்து , 5 முறை ஆட்சிக்கு வந்தப்பவும் 5 தடவையும் சாராய சாம்ராஜ்யத்தை தான் தான் விரிவுபடுத்தினோம் என்பதை மறைத்து மீண்டும் ஆட்சிக்கு ( ஒரு வேளை) வந்தா மது விலக்கு கொண்டு வர்றோம்னு அடிச்சு விடறார் பார்த்தீங்களா? அந்த மாதிரி வெறும் வாய்லயே வடை சுடும் மொள்ள மாரிதான்  ஹீரோ.

தனக்கு யாரையும் தெரியாதுன்னாலும் எல்லாரையும்  தெரிஞ்ச மாதிரி காட்டிக்குவார்.அரசியல் , சினிமா விஐபி கள் கூட ஒண்ணா இருப்பது  போல் ஃபோட்டோ, செல்பி எடுத்து வெச்சு ஊரை ஏமாத்திட்டு இருக்கார்.இவருக்கு ஒரு பள்ளிப்பருவ   காதலி.


காதலிக்கு இவர் தான் தன் ஸ்கூல் மேட் என தெரியாது.அதை வெளிப்படுத்தாமயே ரூட் போட்டுட்டு இருக்கார்.


 இன்னொரு  ஹீரோ இவர் சசிதரூர் மாதிரி  பெரிய பிஸ்னெஸ் மேக்னட். இவரோட சம்சாரம் சுனந்தா மாதிரி டப் பார்ட்டி . கம்பெனி , சொத்து எல்லாம் சம்சாரம் பேர்லதான் இருக்கு. ஒரு பார்ட்டி நடக்குது. அங்கே ஹீரோ இன்னொரு பொண்ணு கூட  லிப் கிஸ் கொடுத்துட்டு இருப்பதை சம்சாரம் பார்த்துடுது. ஐஸ்வர்யா தனுஷ் மாதிரி  பெருந்தன்மையான கேரக்டர் இல்ல அந்த சம்சாரம் , செம கடுப்பாகி பிரிஞ்சிடறாங்க.


தன் சம்சாரம் கண் எதிரே  பார்த்ததை கண்ணால் கண்டது பொய் என நம்ப வைக்கனும், அதுக்கு சரியான ஆள் இல்லாததை இருக்குன்னு நம்ப வைக்கும் பொய்க்காரன் ஹீரோ தான் சரியான ஆள் என ஹீரோ நெ 2 நினைக்கறார்


2 பேரும் சேர்ந்து எப்படி திட்டம் போட்டு ஜெயிக்கறாங்க என்பதுதான் திரைக்கதை 


 கதை நல்ல கருதான் ஆனா திரைக்கதை அமைக்கும்போது  பின் பாதியில் நம்பகத்தன்மையான காட்சிகள் வைக்காம லாஜிக்  சொதப்பல்களோட படம் நகருது. ஆனா ஹீரோவோட 2 கண்ட்ரீஸ் என மெகா ஹிட் கொடுத்த பிளஸ் இந்த படத்தின்  வெற்றிக்கு,  ஓப்பனிங் கிற்கு உதவும். படம் தப்பிச்சிடும்.


 ஹீரோவா திலீப்.இவரது பாடி லேங்குவேஜ் , கலகலப்பான பேச்சு ,டயலாக் டெலிவரி எல்லாம்  சபாஷ் ரகம்.இவரோட டிரஸிங்க் சென்சும் குட் . ஹீரோயினோட கெமிஸ்ட்ரி தான் ஒர்க் அவுட் ஆகல, ரொம்ப சந்தோசம் ( ஆஹா என ஒரு உயர்ந்த  உள்ளம்)



ஹீரோயினா   மடோனா செபாஸ்டின் .இவரோட மூக்கு இவருக்கு ஒரு மைனஸ் . ரொம்ப பெருசா இருக்கு.  நோஸ்கட் கொடுக்கறதுக்காகச்சொல்லலை. ஒரு அக்கறைல சொல்றேன்.  ஆனா நடிப்பு ஓக்கே , க்ளைமேக்ஸ் ல நல்லா நடிச்சிருக்கார்.ஆனா இயக்குநர் இவரை ( திரையில்) சரியா யூஸ் பண்ணிக்கலை

 இன்னொரு ஹீரோயினா ஆஷா .இவரது மன்னன் விஜயசாந்தி டைப் தெனாவெட்டான லுக், ஆக்டிங் எல்லாம் குட் .


இன்னொரு  ஹீரோவா படத்தோட டைரக்டர் லால். இவரது கெட்டப்  சகிக்கலை. தலையோட 4 பக்க பார்டல்ர்லயும்  மொட்டை அடிச்சு  நடுவில்  முடி, கண்றாவி. ஆனா தொழில் அதிபர்கள் எவ்வளோவ் கேவலமா இருந்தாலும்  பொண்ணுங்க, நடிகைங்க  அந்த லூசுங்களை காதலிக்க  ரெடியாதானே இருக்காங்க?

பாடல்கள்  சுமார் ரகம். முதல் பாடலில்   உதடு ஒரு மாதிரி அசையுது. பாட்டு ஒரு டைப்பா வருது. குறிப்பா  ஹீரோயின் உதடு

திரைக்கதை வசனம் எல்லாம் அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. திலீப் ரசிகர்கள் மட்டும் ரசிக்கலாம் ( வேறு வழி இல்லை. தன் அபிமான ஹீரோ என்ன குப்பை கொடுத்தாலும் ரசிகர்கள் அதை ஏத்துக்கிட்டுதானே ஆகனும்?)


படம் 2 மணி நேரம் 38 நிமிசம்  ஓடுது. ரொம்ப நீளம், பின் பாதி நாடகம் பார்ப்பது  போல்  இருக்கு.ஆனா  ஃபேமிலி எண்ட்டர்டெய்னர் தான்


சபாஷ்  இயக்குநர் 



1  ஹீரோ  ஹீரோயினுக்கு  கை கொடுக்கும்போது நைசா அவர் மோதிரத்தை  உருவுவதும்  பின் சாரி சொல்லி அதே மோதிரத்தை அணிய வைப்பதும் நிச்சயதார்த்த மோதிரம் போல் அதை நினைப்பதும் அப்போ காமெடியன்  இருவரை கலாய்ப்பதும் நல்ல காமெடி சீன்

2  ஹீரோவுக்கான ஃபிளாஸ்பேக் காட்சியில்  எக்சாம் பேப்பர்ஸ் வைக்கப்பட்ட ரூமின் கீ களவாடும் காட்சியில்  காந்தம் கட்டப்பட்ட குச்சியால்  இரும்பு சாவிக்கொத்தை லபக்கும் சீன்


3 மேஜிக் பார்ட்டி  ஒருவர்  கலர் கலரா கண் இமைக்கும் நேரத்தில்  டிரஸ் கலரை மாற்றிக்காட்டும் ஃபார்முலாவை க்ளைமாக்சில்  ஃபேஷன் ஷோவில்  லேடி போட்டிருக்கும் கலர் டிரசை மாற்றி சொல்லி ஹீரோயின் நெ 2 வை குழப்புவதும்  அதன் மூலம்  அவர் பார்த்தது உண்மைக்காட்சி அல்ல ஹாலுசினெசன் எனப்படும் கற்பனை மனக்குழப்பம் என நிறுவுவதும் 


4 ஃபேஷன்  ஷோ வில்  இரு தரப்பு லேடிகளும் கிளமாக்ஸ் குவிஸ்  கேள்விக்கு  பதில் அளிக்கும் விதம் ஒரே சமயத்தில்  இரு தரப்பு ஹீரோயின்கள் மனதிலும் மாற்றம் வரும் காட்சி 



 லாஜிக் சொதப்பல்ஸ்



1 ஓப்பனிங்  சீன் சாங் ல  ஏரியில் படகில் செல்லும் நபர்  பிட்  நோட்டீசை கத்தை கத்தையாக தண்ணீரில் அள்ளி விடும் சீன் எதுக்கு? சுற்றுப்புற சூழலை மாசு படுத்தும்  சீனை எப்படி இயற்கை எழில் கொஞ்சும் கேரளா சென்சார் போர்டு அனுமதித்தது? அந்த நனைந்த நோட்டீஸால்  யாருக்கு என்ன பயன்?


2  கலர்  பிளைண்ட்னெஸ் ( நிற  தர வேறுபாடு காண முடியா குறைபாடு) ஒரு கம்பெனி எம்டி  தன் பி ஏ விடம்  நீ போட்டிருக்கற ஆரஞ்சு கலர் சுடி அழகுன்னு சொல்லி மாட்டிக்கறார். இது கேனத்தனமா இருக்கார் . உன் சுடி  சூப்பர்னு சொன்னாலே போதுமே , எதுக்கு கலர் சொல்லி மாட்டனும்?


3 மஹாத்மா காந்தி  ராகுல் காந்தியோட மகன் அல்லவா? என கேனத்தனமான டயலாக் வருது. காமெடிக்கு என்றாலும் அதில் மினிமம் லாஜிக்காவது வேண்டாமா? 


4 ஹீரோ  1  ஹீரோ நெ 2 வோட சம்சாரத்தை கார்ல  கூட்டிட்டு ஃபார்ம் ஹவுஸ் போறார். அப்போ ஃபோன்ல  தன் நண்பனிடம் நான் ஃபார்ம்  ஹவுஸ் போறேன் நீ என் ஆளைக்கூட்டிட்டு  அங்கே வந்துடாதே என சொல்றார். டிராஃபிக் சவுண்ட்ல அது சரியா  கேட்காம  நண்பர் அதே ஃபார்ம்   ஹவுஸ்க்கு அங்கே வந்துடறார். லொக்கேஷனை  சொன்னாங்காட்டிதானே இப்டி தப்பு நடக்குது. ஒண்ணா மெசேஜ் பண்ணி இருக்கலாம். அல்லது லொகேசன் சொல்லாம  வெயிட் -னு சொல்லி  இருக்கலாம்


5  ஹீரோ நெ1  ஹீரோயின் நெ2  சரக்கு அடிச்சு மப்பில்  இருக்கும்போது அவரை கைத்தாங்கலா கூட்டிட்டுப்போவதை  ஹீரோயின் நெ 1 பார்த்துடுது. ஹீரோயின் நெ 2 க்கு மப்பு தெளிஞ்சபின் இந்த சீனை விளக்கி இப்போ என் ஆள் பார்வைல நாம 2 பேரும் தப்பு பண்ணவங்க , ஆனா நாம பண்ணலை இதே போல் தான்  நீங்க  உங்க கணவரை  வேற  ஒரு பொண்ணு கூட  தப்பா பார்த்ததும் என விளக்கி இருக்கலாமே அதை ஏன் செய்யலை?

6  அவ்ளோவ் பெரிய கம்பெனி எம் டி  எதுக்கு தன் கீழ் வேலை செய்யும் சாதா ஆள்  வீட்டுக்கு  வர்றார். ஃபோன் பண்ணி வா அப்டின்னா வந்துட்டுப்போறார்


7 ஹீரோ கம்பெனி இன்சார்ஜ் ஆனதும் 2 ஐடியாவால கம்பெனியை முன்னேற்றிடறார், 1 கம்பெனி ஒர்க்கிங் டைம் ஸ்டார்ட் ஆக 1 நிமிசம் முன் சங்கு ஊதுதல்  பின்  மாலை ஒரு நிமிசம் லேட்டா 
சங்கு ஊதுதல் இதன் மூலம் தினம் 2நிமிசம்  டோட்டல்  லேபர்ஸ் 5000 பேர்  அப்போ தினம் எவ்ளோ  ஒர்கிங் டைம்  மிச்சம் என கால்குலேசன் போடுவது கேனத்தனமானது. 8 மணி  நேர  ட்யூட்டியில் எத்தனையோ    நிமிசங்கள் வெட்டி அரட்டையால  வேஸ்ட் ஆகுது


8  டூத் பேஸ்ட் ட்யூப்    வாய் அகல விட்டத்தை அதிகம் பண்ணிட்டா அதிக பேஸ்ட்  வெளி வரும் , கன்ஸ்யூமர்க்கு சீக்கிரம் பேஸ்ட் தீரும் அதன் மூலம் சேல்ஸ்  அதிகம் ஆகும்  என சொல்வதும் ஏற்றுக்கொள்ள   முடியாததே. கன்ஸ்யூமர்  அந்த அளவு முட்டாளா?


9   க்ளைமாக்சில் ஆந்த ஃபேஷன்  ஷோ ஃபைனல்  கேள்வி அடங்கிய ஃபைலை ஹீரோ  மாற்றும் சீன் நம்பும்படி இல்லை

10  முன் பின் அறிமுகம் ஆகா மாடலிங்க் கேர்ள்  ஹீரோவின்  திட்ட்டத்துக்கு எப்டி ஒத்துக்கிட்டார் என திரைக்கதையில்  சொல்லப்படவே இல்லை 

11   உடலை வெளிச்சம் போட்டுக்காட்டும் எஃப் டி வி ஃபேஷன் பரேடு மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு தன் ஆத்மார்த்த காதலியை ஃபேசன் ஷோ மாடலிங்காக  ஹீரோ அனுமதிப்பது , ஹீரோ நெ 2  தன் கண் எதிரே காதலியின் தோளில் கை போடுவது  கிஸ் அடிப்பது இதை எல்லாம் சகிப்பதும் சகிக்கலை


 நச்  டயலாக்ஸ் 



1 இது தான் அவர் சிக்னேச்சரா? இந்தியா பாகிஸ்தான் எல்லை ல வரும் கம்பி வேலி டிசைன் மாதிரி இருக்கு?


2 இட் ஈஸ் மை பிளஷர்

 என்னது பிரசரா? காரை ஹாஸ்பிடலுக்கு விடவா?

3  பொதுவா பொண்ணுங்க நம்ம கிட்டே ஃபோன்ல பேசும்போது தோழிகள் முன்  ஸ்பீக்கர் ஃபோன் ஆன் பண்ணி நம்மை கலாய்ப்பாளூக, நாம தான் ஜாக்கிரதையா  இருக்கனும்

4  செத்துப்போன இவரோட மாமா சீரியசா இருக்கார் 

 வாட்?

 சாரி  சீரியசா இருந்த இவர் மாமா செத்துப்போய்ட்டார்



5   என் பேரு  புஷ்ப குமார், என்னை நீங்க குமார்னு  கூப்பிடலாம்

 இல்லை புஷ்பு னு கூப்பிடறேன் அதான் கிக் ( நல்ல வேளை , க்யூட் புஷ்பான்னு கூப்பிடலை)

6  இதோ பாரு  கம்பெனியோட பிராஃபிட் லைன்  கிராஃப்

 இவ்ளோவ் தானே இந்த கிராஃப்ல ஒரு கோடு இழுத்தா போதாது’?

 மடையா> லாபத்தை கூட்டனும்’  கோட்டை அல்ல 




7   என் ஆளோட லக்கி நெ 2. இப்போ என்ன பண்ணலாம்?

 இரு, எனக்கு நெ 2 பாத்ரூம் வருது , போய்ட்டு வந்துடறேன்


8 ஜெயிக்கறமா தோற்கறமா என்பது  முக்கியம் இல்லை. ஜெயிக்கறோம் என்ற தன்னம்பிக்கையை மனசில் நாம விதைச்சுக்கனும் அதுதான் வெற்றிக்கு அடிப்படை


 சி பி கமெண்ட் -  கிங்க் லையர்  கலகலப்பான ஃபேமிலி எண்ட்டர்டெய்னர் . மூளையை கழட்டி வெச்ட்டு ரசிக்கலாம்.  சூப்பர்  ஹிட் ஆகலைன்னாலும் சராசரி  ஹிட் தான்


ரேட்டிங் = 2.75 / 5


ஆட்டிங்கல்  நியூ ட்ரீம்ஸ்  தியேட்டரில் பார்த்தேன் . கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வித்தியாசமான  முகப்பு .இங்கே டிக்கெட் ரேட் செம காமெடி

 90 ரூபா டிக்கெட் பெஞ்ச் டிக்கெட்  100 ரூபா பால்கனி  டிக்கெட். அந்த 10 ரூபால என்ன வருது? 75    , 100 என்றாவது வைத்திருக்கலாம்




விமன்ஸ் நைட்

1  ஆபீஸ் மீட்டிங் ல ஒரு ஹையர் (லேடி)ஆபீசர் I AGREE WITH U ன்னுச்சு.நான் டக்னு I BSc MATHS WITH OUT Uன்ட்டேன்.யார்கிட்டே



==========



2 FB ல ஒரு பாரீன் லேடி 500 ரூபா PAY பண்ணா டெய்லி 1 ஜோக் சொல்றேன்னுச்சு.ஏம்மா 5,ரூபா குடுத்தா வீட்டுக்கே வந்து ஜோக் சொல்வேன்ட்டேன்



===========



3 நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.ஆனால் வாய் தான் பாரத ரத்னா வரை கேட்கிறது




============




4 எல்லா லேடீசும் கோட் சூட் போட்டிருக்காங்க.புல் கவரேஜ்.பரிபூரண சைவப்படம் போல HAS FALLEN



=========



5 நமக்குப்பிடிக்காத ஒரு செயலை நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் திரும்பத்திரும்ப செய்தால் நமக்கு அவரை பிடிக்காமல் போய் விடுகிறது.அத்தருணத்தில்



=========



6 இந்த செயலை இன்ன காரணத்துக்காக செய்யாதே என எச்சரித்தால் எனக்குப்பிடிச்சிருக்கு நான் செய்யறேன் என அடம் பிடிக்கும் அதிபுத்திசாலி தான் பெண்




============




7 விமன்ஸ் டே.வாழ்த்தை காலை 6 டூ மாலை 6 சொன்ன நெட் தமிழன் இனி டி எம் ல விமன்ஸ் நைட் வாழ்த்து சொல்வான் என யூகிக்கிறேன்




=============



8 சாதாரணமானவள்


திருமணத்துக்குப்பின்

சதா ரணமானவள்




=========

9 உனக்குத்தெரியாது என்று எதையும் ஒதுக்கி விடாதே! உலகை எட்டிப்பார், தெரியும்



=============



10 சூரிய கிரஹணமும் உன் கண்களும் ஒன்று தான், வெறும் கண்களால் பார்த்தால் ஆபத்து, நீண்ட நாட்களுக்கு பாதிப்பு




=============



11 அன்பு கொண்டவர்க்கு அடிமையாய் இருந்தால் காதல் சாம்ராஜ்யத்தில் நாமே சக்ரவர்த்தி




==============



12 ஆண்கள் BJP மாதிரி, எந்த ஃபிகர் வந்தாலும் ஐ லவ் யூ சொல்லிடுவாங்க, பொண்ணுங்க தேமுதிக மாதிரி, முரண்டு பண்ணி முடிவே சொல்லாம இழுத்தடிப்பாங்க




=============



13 ஜிம்முக்கே போகாம ரம்யாவோட உடம்பு ட்ரம் மாதிரி உப்பிட்டா அவரை ட்”ரம்யா”ன்னு சொல்லலாமா?




============




14 "ஆண்”ட்ராய்டு ஃபோன்களில் சார்ஜ் அதிக நேரம் நிற்பதில்லை




===============




15 ஒரு பணக்காரன் ஒரு தப்பு செய்தால் அவனுக்குக்கொடுக்கப்படும் தண்டனை அபராதத்தொகை செலுத்துவதாக இருக்கக்கூடாது, ஈசியா கட்டிடு வான்,


================

16 தேவை இல்லாத ஆணிகளைப்புடுங்கிட்டுஇருப்பது ஒரு தாவணியா இருந்தா நீ ஆணியே புடுங்க வேணாம்னு ஆஃபீஸ்ல ஒரு பய சொல்லமாட்டான்


===============


17 எல்லா பங்களா வாசல்ல நாய்கள் ஜாக்கிரதை போர்டு மாதிரி ஹை கிளாஸ் பொண்ணுங்க பயோல நோ டி எம்னு போர்டு மாட்டிடறாங்க. என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா


===============


18 7000 கோடி ஏமாற்றிய விஜய் மல்லையா அசால்ட்டா வெளி நாடு தப்பிப்போகும் வரை இந்த மோடி அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கு

===============

19 நெட் தமிழன் புத்திசாலி,எந்த பொண்ணுட்ட டிஎம்ல அதிகமா கடல போடுவிங்க, சொல்லுங்க, யோக்கியர்கள் கணக்கெடுப்பு,னு ஃபிகர் லிஸ்ட் எடுக்கறான்,


============

20 நான் சின்னப்பையனா இருக்கும்போது ட்விட்டர் வரும் லேடீஸ் பயோல அவங்க வீட்டு அட்ரஸ், ஃபோன் நெம்பர் எல்லாம் போட்டிருப்பங்களா?னு தேடிப்பார்ப்பேன்


===================

Tuesday, April 05, 2016

விஜய் மல்லைய்யாவுக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை?

1  ஜட்ஜ் = 10 வருசத்துக்கு முன் 200  கோடி திருடுனியா?

கைதி = ஆமாங்க எஜமான்

ஜட்ஜ் = உனக்கு 200 கோடி அபராதம்

நன்றிங்க, வட்டி மிச்சம்

==============

2 மிஸ்டர்! லவ் லெட்டர்னே, இதுல எதுவுமே எழுதலையே?

ஏதாவது எழுதுன லெட்டர்னா போலீஸ் கிட்டே புகார் தருவீங்க, இப்போ என்ன செய்வீங்க?


=================


3 டியர், பழம் நழுவி பால்ல விழும்னு நினைச்சேன்

 என்னாச்சு?

 பாழுங்கிணத்துல விழுந்திடுச்சு, வடை போச்சே

 குழப்பாதீங்க, பழம் தானே போச்சு?


==================


4 சார், திரட்டி ஃபங்க்சன்ல எள் தர்லை.

எதுக்கு தரனும்?

பெண் வயக்சுக்கு வரும்போது எள்ளுருண்டை கொடுப்பாங்கன்னாங்களே?
யோவ், அது அந்தப்பொண்ணுக்கு

=================

5 இனி ஃபேஸ்புக் வர மாட்டேன், ஒரு பையனை லவ் பண்றேன்

 மிஸ்! எப்படியும் அவன் வேற யார் கூடயாவது கடலை போடறானா?னு கண்காணிக்க வருவீங்க இல்ல?


================


6 மன்னா! இது கோவலனின் செல் ஃபோன் தான்

கண்ணகி, ஏதாவது ஆதாரம் இருக்கா?

 அதுல டூயல் சிம் இருக்கும் பாருங்க, அவருக்கு எல்லாமே டபுள் தான்

================

7 ஜட்ஜ் = எப்படி திடீர்னு ஃபாரீன் போனீங்க?

விஜய் மல்லைய்யா = 7000 கோடி அடிக்கனும்னு முடிவு பண்ணப்பவே ஃபிளைட் புக் பண்ணிட்டனுங்க


================

8 தலைவரே! எப்போ ஃபாரீன் போறீங்க?

இப்போத்தானே 200 கோடி அடிச்சிருக்கேன், இன்னும் அடிக்கவேண்டியது 6800 கோடி இருக்கு,விஜய் மல்லைய்யாவை முந்தனும்


=================

9 டாக்டர்! நாளைக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா?

 ஆமா, நாளை சண்டே, நர்ஸ்ங்க எல்லாம் லீவ், எந்த பயமும் இல்லாம நிம்மதியா அனுப்பலாம்


================

10 சார்! உங்க பொண்ணு என்னை விரும்புது, கட்டி வைங்க.

 விரும்புதா? ஏதாவது ஆதாரம் இருக்கா?

 ஃபேஸ்புக்ல நான் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் லைக்குது

=================


11 பழம் நழுவி பால்ல விழும்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள...

என்னாச்சு தலைவரே?

சைடு டிஷ் நழுவி சரக்குல விழுந்திடுச்சு


==================


12 வரலாறு மிஸ் வனஜா= புராணக்கதை ஏதாவது சொல் பார்ப்போம்

லொள் மாணவன் = சுய புராணக்கதை வேணா சொல்ட்டா? டீச்சர், வெட்கப்படாம கேளுங்க


================

13 பைத்தியம் மாதிரி லூசுத்தனமா மெண்டல் மாதிரி இருக்கேன்

 குட் மிஸ்! உங்களை மாதிரி இயல்பா இருக்கும் பொண்ணுங்களை பிடிக்கும்


===============

14 மேனேஜர் சார், வழக்கமா லோனுக்கான வட்டி 0.8% தானே, திடீர்னு 2% வசூல் பண்றீங்க?

7000 கோடி நட்டத்தை இப்டித்தான் வசூல் பண்ணி சரி செய்வோம்


================

15 டியர், முதல் இரவில் வந்து என்ன வேடிக்கை? வெய்ட்டிங்க்?

பழம் நழுவி பால்ல விழட்டும்னு பார்த்துட்டு இருக்கேன்

நாசமாப்போச்சு, சரியான சோம்பேறி

=================


16 டியர், உங்களூக்கு புல்லாங்குழல் வாசிக்கத்தெரியும்மா?

ம்ஹூம், குமுதம் , விகடன் , சினிமித்ரன், திரைச்சித்ரா வேணா டெய்லி வாசிப்பேன்


==============

17 டியர், நான் எப்போ வெளில கிளம்பினாலும் என் கையை இறுக்கமாப்பிடிச்சுக்கறீங்களே?என்னைப்பிரிய முடியலையா?

நீ போய்ட்டா செலவுக்கு பணம் யார் தருவா?


===============


18 சொத்துக்குவிப்பு வழக்குக்கு சாட்சியா ஒரு பசு மாட்டை ஏன் கோர்ட் க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?
66 கோடி சொத்து சேர்த்தது யார்?னா அம்மாங்கும்


===============

19 ஜட்ஜ் = விஜய் மல்லையாவை பார்த்தீங்களா?

மோடி = இதை ஏன் என் கிட்டே கேட்கறீங்க?

நீங்களும் வெளி நாட்ல இருக்கீங்க, அவரும் அங்கே தானே இருக்கார்?

================

20 உங்களுக்கு உமா வைத் தெரியுமா?

 தெரியும், விஜய் ரசிகை, தெறிஉமா


=============