Saturday, April 02, 2016

ஐஸ்வர்யா அஃபிசியல் VS ஐஸ்பர்சனல் - தனுஷ் அதிர்ச்சி

1 மிஸ்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

மேட்ச் பார்த்துட்டு இருக்கேன்

ஓ கிரிக்கெட்டா?

 நோ, நாளை சேலைக்கு எந்த ஜாக்கெட் போட்டா மேட்சா இருக்கும்னு


==============


2 டியர், நீ கோடியில் ஒருத்தி

 நிஜமாவா? அவ்ளோவ் அழகா? தாங்க்ஸ்


 234 தொகுதிகளில் உள்ள 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்களில் நீயும் ஒருத்தி

============

3 சார், நாளைக்கு 200 பேரை இண்ட்ட்டர்வ்யூ  எடுக்கனும்

அதெப்பிடி சார்? ஒரு ஆளுக்கு 10 நிமிசம்னாலும் 2000 நிமிசம் ( 33.33 மணி) ஆகும்

அவனவன் ஒரே நாள்ல 10,000 பேரை எடுக்கறான்


==============
டாக்டர்.சிக் ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா உடம்பு சிக்குன்னு ஆகிடுமா?


ஏம்மா.க்யூட் ஷாம்பூ போட்டு குளிச்சா க்யூட் புஷ்பா ஆகிட முடியுமா?


============


5 ஆசியாவிலேயே பெரிய ஷோ ரூம் எங்களுதுதான்
நம்பமாட்டோம்.அவ்ளோவ் பெருசுன்னா ஷோ ஹால் னு தானே சொல்லனும்?


============

6 குருவே! சிவராத்திரி அன்னைக்கு நைட் என்ன செய்யனும்?

எதுவும் செய்யக்கூடாதும்மா.சும்மா முழிச்சிட்டு இருந்தா போதும்

===========

7 ஜட்ஜ் = எதுக்காக கட்சியோட மகளிர் அணித்தலைவியை கர்ப்பம் ஆக்கினீங்க?
கைதி = மகளிர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டேன்

==========

8 சார்.சாப்பாடு எவ்ளவ்?
இங்கேயே சாப்ட்ட்டா 100 ரூ.பார்சல்னா 125 ரூபா
.அடேங்கப்பா ! டெய்லி 200 பார்சல் கட்டித்தர்றேன்.25*200*30= 1 1/2 லட்சம் மாச சம்பளம் தர்றீங்களா?


============


9 நீங்க ஏன் அம்மா வை எதிர்த்து எதுவும் சொல்றதில்ல?
வளர்ப்பு அப்டி.அம்மா,அப்பா,சொந்த சம்சாரம் யாரையும் எதிர்த்துப்பேச மாட்டேன்

==============


10 மேடம்.இன்ட்டர்வ்யூ வை எப்டி நடத்துனீங்க.10000 பேரை ஒரே நாள்ல?
அடிமைக்கு அடையாளம் வளைந்த முதுகு

==========

11 டியர்.நெற்றி முத்தம் ஓக்கே.லிப் கிஸ் வேணாம்
சாரி.எனக்கு எது எட்டுதோ அதுக்குதான் தரமுடியும்.நீ 6 1/2 அடி.நான் 6 அடி


==============

12 டாக்டர்.என் முகத்தின் வலது பாதி சிவப்பாவும் இடது பாதி மாநிறமாவும் இருக்கே ஏன்?
டிபி யை மாத்துங்க மிஸ்!
எப்போ பாரு பாதி முகத்தை மூடிக்கறீக


=============


13 டியர்.40 பவுன் ல ஒரு ஒட்டியாணம் வாங்கித்தர்றீங்களா?
நீ வேனா கோவிச்சுட்டு ி உன் அம்மா வீட்டுக்குப்போய்டு.அப்பா வாங்கித்தந்த பின் வா

=============

14 ஹலோ.டியர்.எங்கே இருக்கீங்க?
கோவளம் பீச்ல
ம்ம்.நல்லா சாப்ட்டு உடம்பை நல்லா பாத்துக்குங்க.
ம்ம்.பாத்துக்கிட்டுதான் இருக்கேன்


===========


15 ஜிஞ்சிதா = குருவே! சிவராத்ரிக்கு விடிய விடிய விழிச்சிருக்கனுமாமே ?
கில்மானந்தா =, நாம எந்த ராத்ரிலதான் தூங்குNOம்?


===============


16 நாங்கள் ஆட்சிக்குவந்தால் சிவராத்திரி எனும் ஆணாதிக்கப்பண்டிகையை பார்வதிராத்ரி, பார்வதிமேனன்ராத்ரி, பார்வதிஓமணக்குட்டன் ராத்ரி என மாற்றுவோம்

==========

17 24 டீசர் நல்லாருந்ததுங்க
யோவ், ஒவ்வொண்ணா சொல்லு. எதெது பார்த்தே? வரிசையா சொல்லு

===========

18 தலைவரே! மோசம் போய்ட்டோம்

என்னாச்சு?

நாம கூட்டணிப்பேரம் நடத்துனதை லைவ் ரிலே காட்டிட்டு இருக்காங்க டிவில

----------------


19 மிஸ்! உங்க ஆஃபீஸ் டைம் என்ன?
காலை 10 டூ மாலை 5
அப்போ ஏன் இன்னும் ஐஸ்வர்யா அஃபிசியல்னு ஹேண்டில்? ஐஸ்பர்சனல்னு மாத்திடுங்க


==============

20 டியர், உனக்கு PHபண்ணலாம்னு ஃபோனை எடுத்தா அதுல பேலன்ஸ் இல்லை


அது இருக்கட்டும், என் பாக்கெட்ல பர்சே இல்லை. எப்போ எடுத்தே?கள்ளி, குடுத்துடு


==============

ஹலோ நான் பேய் பேசறேன் - சினிமா விமர்சனம்


நான் சின்னப்பையனா இருக்கும்போதெல்லாம் பேய்ப்படம்னா திகிலா இருக்கும், பயந்துட்டே பார்ப்பாங்க ஜனங்க. இப்போ கோலிவுட் அந்த ட்ரெண்டை உடைச்சு பேய்ப்படம்னா காமெடி , சிரிச்சுட்டே ரசிக்கலாம் கற மாதிரி கொண்டு வந்துட்டாங்க

 சுந்தர் சி டைரக்சனா இருந்தாலும்  சரி தயாரிப்பா இருந்தாலும் சரி மினிமம் கேரண்டி வசூலும் , ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட்டும் உண்டு. இது எப்டின்னா அறிவாலயம் போய்ட்டா துண்டு துக்கடா டப்பா கட்சிக்கு கூட சீட் உண்டு எலக்சன்ல .கலைஞர் உங்களை அழைக்கிறார், பாவிகளை அவர் ரட்சிப்பார் என்பது போல ‘ சரி படத்தைப்பார்ப்போம்


இந்த மாதிரி பேய்பப்டம், காமெடிப்படம் பார்க்கும்போது மூளையை தனியா கழட்டி வெச்சுட்டு தான்  படம் பார்க்கனும்,. பெரிய  இவரு மாதிரி  படம் பார்க்கக்கூடாது. லாஜிக் பார்க்கப்படாது


ஹீரோ ஒரு சாதா ஃப்ராடு, சின்ன சின்ன மோசடிப்பேர்வழி.ஹீரோயினை கரெக்ட் பண்ண ஒரு சேட்டு கம்பெனியில் வேலை  செய்யும் அவரைப்பார்க்கப்போறார்.க்ளிக் ஆகிடுது.ஆனா ஃபிகரோட அண்ணன் ஒரு கண்டிசன் போடறார். சாவுக்குத்து ஆட்டம் நல்லா ஆடுனாத்தான் பொண்ணு தருவேன்கறார். 

 யாரையாவது சாகடிக்கனும்னு கண்டிஷன் போட்டாலே தமிழன் டக்னு மர்டர் பண்ணிட்டு வந்துடுவான். இதெல்லாம் ஒரு ஜூஜுபி கண்டிசன். 

ஹீரோ  ஆடிக்காட்டிடறார்.

 இப்போ ஓக்கே ஆகிடுது ஃபிகரு’ இது முத்ல்  அரைமணி நேர  முன்னோட்டக்கதை




 ஹீரோ ஆட்டையைப்போட்ட செல்ஃபோன்ல  ஒரு பேய்  குடி  இருக்கு. சொன்னா  யாரும் நம்பல. ஹீரோயினோட அண்ணன்& கோ வை  தன் ரூமில் தங்க வைக்கறார்.

அவங்க உண்மைனு நம்பறாங்க. 

 பேயோட  ஃபிளாஸ்பேக் என்ன?  அது ஒரு பேங்க் ஸ்டாஃபை லவ் பண்ணி இருக்குது. ஆனா எதிர்பாராத ஒரு சாலை விபத்துல மர் கயா. அதனோட ஆசை என்னான்னா தன் காதலன் கூட ஒரு நாளாவது குடும்பம் நடத்தனும். ஆஹா இதுவல்லவோ ஆசை

ஆனா இப்போ காதலனுக்கு வேற ஃபிகர்  கூட மேரேஜ் ஆகி இருக்கு.  எப்டி கில்மா பண்ண? இதுதான் க்ளைமாக்ஸ் டர்னிங் பாய்ண்ட்


ஹீரோவா வைபவ் ரெட்டி. அசால்ட்டா பண்ணிட்டுப்போகும் கேரக்டர் . நல்லா பண்ணி  இருக்கார். குட் 

 ஹீரோயினா  ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல கிளாமர்  லுக். லோ ஹிப்னாடிசம் தெரிஞ்ச  மிடில் க்ளாஸ்  ஃபிகர்  நடிக்க வாய்ப்பு, பின் பாதியில் பேயாக மாறுகையில்  அப்ளாஸ் 


பேயாக  ஓவியா. கிளாமர்  காட்ட வழி இல்லை. ஆனா உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக  பேய்  வெள்ளை சேலை இல்லாம  பிங்க் கலர் சேலை பச்சை கலர் பஃப் கை வெச்ச எம்ப்ராயடரி ஜாக்கெட் போட்டுட்டு வருது. நல்ல முன்னேற்றம்.பேயைப்பார்த்து ஒரு பயலுக்கும் பயம் வர்லை , செம கிளுகிளுப்பு . கேமரா மேன் வேற  ஓவியாவுக்கு ஒன் சைடா நின்னு கேமரா ஆங்கிள் வெச்சது பிளஸ்


காமெடிக்கு கருணா. அவர் தான் அந்த பேய்க்காதலன்


 பேய்  ஓட்டும் சாமியாராக அதகள காமெடி  சிங்கம் புலி. அவர் மச்சினியுடன் அடிக்கும்  லூட்டி  செம 

 ஃபேமியோட படம் பார்க்கலாம். ரத்தம்  கோரம் இல்லை வல்கர் இல்ல.

விடிவி கணேஷ் ஹீரோயினோட அண்ணனா வந்து அவர் பங்குக்கு காமெடி பண்றார்



தியேட்டரிக்கல் ட்விட்டர்  அப்டேட்ஸ்

திருப்பூர் வளர்மதி ஸ்டாப் - சக்தி சினிமாஸ் -,ஹலோ நான் பேய் பேசறேன் =8 30 PM ஷோ


2 B,C சென்ட்டர் ஆடியன்சின் ஆரவாரமான கை தட்டலுடன் லோ கிளாஸ் காமெடி வசனங்களுடன்


3  சில்லாட்டி டும்மா சாவுக்குத்துசெம டப்பாங்குத்து சாங்


கிரேசி மோஹன் =ஹை க்ளாஸ் ,சுந்தர் சி = பி ,ராமநாராயணன் =சி ": காமெடியிலும் என்ன சார் லோகிளாஸ் ஹைகிளாஸ் 😩😩"


5 இன்னொரு சினிமா இனி பார்த்தா டார்லிங் நெ.1,திட்டும் : Darling 2????"

நச் டயலாக்ஸ்

1 மிஸ்! உங்களை உஷார் பண்ணலாம்னுதான் ஆபீஸ் வந்தேன்.பணம் பார்த்ததும் மனசு மாறி பணத்தை உஷார் பண்ணிட்டேன்

கேர்ள்ஸ் கிட்டே லவ் சொல்றது பீர் பாட்டில் ஓப்பன் பண்றமாதிரி.பொங்கும் நாம சைட் டிஷ் போட்டு அமுக்கனும்


அய்யய்யோ.போன் வந்துடுச்சு

வந்தா எடு.
யோவ்.போன் ல பேய் வரும
போன் ல எப்டிய்யா பேய் வரும்?,

நீ ஒரு அப்பனுக்கு பிறந்த பேயா இருந்தா இப்போ என் கண் முன் வா


இவ்ளோ லைட் எரியும்போது எதுக்கு மாப்பி கைல லைட்?

பேய் இருக்கும் வீட்ல திடீர்னு லைட் (கரண்ட்) போய்ட்டா யூஸ்.ஆகுஙில்ல?


டாக்டர்.வீடு வரைக்கும்.வர முடியுமா?
ஏன்?யாருக்காவது.வயித்தால போகுதா?
ஒரு பேய் உங்களை கூட்டிட்டு வரச்சொல்ச்சு


இப்போ பாட்டு பாடப்போறீங்களா?
பிளாஸ்பேக்கா சொன்னா 40,நிமிசம் ஆகும்.பாட்டா சொன்னா 4,நிமிசம்.எது வசதி?


நீ படிச்ச பேய் தானே?ஒரு ஆம்பளையை இப்டிப்போட்டு அடிக்கலாமா?

சிங்கம்புலி = நான் சாதா சாமியார் இல்ல.சந்திரமுகியையே சந்து ல வெச்சு அடிச்சவன்.சாமி.கேம் சாமி


10 ஹிந்தி பேயை ஓட்ட ஹிந்தி சாமியாரை ரெடி பண்ணிட்டேன்.எப்பூடி




சி.பி கமெண்ட் - ஹலோ நான் பேய் பேசறேன்.= 120 நிமிசம் நான் ஸ்டாப் காமெடி பேய்ப்படம் பி & சி ஹிட்.விகடன்.=41,ரேட்டிங் -2.75 / 5


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( யூகம்) =41

குமுதம் ரேட்டிங்க் = ஓக்கே



வசூல் = போட்ட முதலீட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதிக்கும், பி , சி செண்ட்டரில் செம ஹிட் அடிக்கும், ஏ செண்ட்டரில் மீடியமா போகும்

Tirupur no 1 theatre 🎦 sri sakthi cinemas


நான் ரதி யைப்பார்த்தேன்- அய்யய்யோ பாத்துட்டேன் பாத்துட்டேன்

1  தமிழக மக்கள் முன்னிலையில் இப்போ ரெண்டே ஆப்சன் தான்
1 மோசமான ஆட்சி
2 மிக மோசமான ஆட்சி
எதைத்தேர்ந்தெடுக்கப்போறாங்க?


==============

2 வெவ்வேற சினிமாப்பாடல் வரிகளின் சரணத்தை சேர்த்து ஒரு புது கவிதை ஆக்கிடறாங்க இப்பவெல்லாம்



=============




3 அழுக்கான இடத்தை சுத்தம் பண்ண சுத்தமான தண்ணீர் தான் வேணும்

அசுத்தமான தண்ணீரால் முடியாது GANGAA JAL (HINDI)

========

4 காதலிக்கு பியார்ஸ் சோப் பரிசளித்தால் மேட்சுக்கு மேட்ச். ப்யாரி ப்யார்ஸ்


===========

5 தன் மகனுக்கு 40 + ஆகி இருந்தாலும் ஒரு அம்மா குழந்தைப்பருவ ஃபோட்டோவைத்தான் மிகவிரும்புவார், அதுக்கு இப்போதைய தோற்றம் பிடிக்கலைனு அர்த்தமா?


============

6 வெத்தலை போட்ட பொண்ணு தூ-ன்னு துப்புனாக்கூட நெட் தமிழன் பதர்றதில்லை, செல்லம் உனக்கு பிளட் கேன்சரா? ரத்த ரத்தமா வருது?னு பிளேட்டை திருப்பறான்



===============



7 டிஎல்லில் தினமும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் உறவுக்கிடையே, 2 நாள் சண்டை வரலேனா அவர்கள் இருவரும் டி எம் ல பிசி என அறிக @ மியாவ்




=================



8 தான் சார்ந்துள்ள கட்சித்தலைவரோ, தலைவியோ மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் வாதி என தெரிந்தும் அவரை ஆதரிப்பவரும் ஜன நாயக விரோதியே!




===============



9 ஐ மிஸ் யூ எ லாட்-னு வாசகம் வெச்ச ஒரு ஃபோட்டோவை வெச்சே நெட் தமிழன் 300 பெண் ட்வீட்டர்களுக்கு அட்டர் டைம் ல டி எம் அனுப்பறான்




===============



10 உடன்பிறப்பே! குழப்பம் எதற்கு? முரசொலி திமுக சொத்து , முரசு கேப்டன் சொத்து, எப்படி இரண்டும் ஒலிக்குறிப்பில் ஒத்துப்போகிறது?அதேபோல்தான்கூட்டணி




============



11 கூன் போட்டா மாதிரி நடந்தவங்க, கால்ல விழுந்து கும்பிட்டவங்க,பம்மிக்கிட்டே உள்ளே போனவங்க எல்லாரும் செலக்டட்




=============



12 நல்ல நாள்லயே 24 ,மணி நேரமும் பச்சப்புள்ள சிவா கடலை போடுவாப்டி, நாளைக்கு சிவராத்ரி வேற, என்ன ஆகப்போகுதோ?




===============



13 ஒரு நல்ல படைப்பாளியின் ஓய்வு என்பது அடுத்தவர்கள் படைப்பை வாசிப்பது,தன் படைப்புகள் பற்றிய விமர்சனங்களை அசைபோடுவது என இயங்கிக்கொண்டே இருக்கும்




================



14 தனக்குபழக்கமானதோழி ,உடன்பணிபுரியும் பெண் என யாராய் இருந்தாலும், தவறு அவர்கள் மீது இருந்தாலும் யாரிடமும் அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டான் ஆண்




============




15 ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆணுக்காக தியாகம் செய்யும் பெண்கள் உண்டு, ஆனால் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்ணுக்காக தியாகம் செய்பவன் ஆண்




=============




16 ஒரு நடிகரின் வயதான தோற்றத்தை கிண்டல் செய்பவர்களின் அப்பா, தாத்தா வுக்கு உள்ள தோற்றத்தை பிறர் கிண்டல் செய்தால் பொறுப்பார்களா?




===============



17 ஒரு ஆணின் கம்பீரம் தன்னை உள்ளது உள்ளபடி காட்டிக்கொள்வதில்
ஒரு பெண்ணின் அழகு தன்னை இரு மடங்கு அழகாக்கும் ஒப்பனையில்




==============




18 ஃபிகர்ட்ட தாங்க்ஸ் சொல்லும்போது கால் ஸ்லிப் ஆகாம பார்த்துக்கனும், ஸ்லிப் ஆகிட்டா தங்க்ஸ் ஆகிடும், தங்கச்சி முறை ஆகிடும்




===============




19 நான் ரதி யைப்பார்த்தேன் என்பதன் சுருக் சொல் SAWரதி



============

20 இங்கு சகாய விலையில் அனைத்தும் கிடைக்கும் என்பதற்கு பேரம் பேசக்கூடாது ,ஒரே விலை.நேர்மையான விலை என்று அர்த்தம் கொள்ளலாம்

============




Friday, April 01, 2016

டேய், நீ எவ்ளோ லோன் வாங்கினே?

1  டுட்டர்ல நாம இல்லனா யாராவது தேடறாங்களா


மிஸ்! நாமதான் காடாறு நிமிசம், நாடாறு நிமிசம்னு ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல மாறி மாறி இருக்கமே?

===========

2 ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு

1001 படங்களுக்கு இசை அமைச்ச ராசாவா?1000 கோடிக்கு மேல் சுருட்டுன ராசாவா? எந்தக்கதை? தெளிவா சொல்லுங்க


============

என் பொண்ணுக்கு பையன்னாலே அலர்ஜி டாக்டர்


அதுக்காக life"boy" சோப் கூட போட மாட்டேன்னா எப்டி?



===========

4 ஹலோ.டியர்.இன்னைக்கு என்ன டிரஸ் ?சேலை?சுடி?


சொல்லமாட்டேன்
அப்போ எதுவுமே போடலைனு கற்பனை பண்ணிக்குவேன்.பரவால்லியா?


==========

5 தலைவரே! தீக்குளிப்பேன்னு சொன்னீங்களே?,யாருக்காக வெய்ட்டிங்?


மகளிர் அணித்தலைவி வரட்டும்.சேர்ந்து குளிக்கலாம்னு


============

6 மேடம்.உங்க கணவரை கட்சியில் சேர்ப்பீங்களா?


யா.விரைவில் சுந்தர் சி சுந்தர் சி எம் ஆவார்



===========


7 நமக்கு நாமே நடைப்பயணத்தால மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது
என்ன மாற்றம் தலைவரே?
ஸ்டாலின் இப்போ இளைச்சு ஸ்டா”லீன்” ஆகிட்டாரில்ல?

================

8 தலைவரே! போலீஸ் வந்திருக்கு


?
தீக்குளிப்பேன்னு தற்கொலை மிரட்டல் விடுத்ததுக்கு சட்டப்படி 6 மாசம் நக்மா இல்லாத ஊர்ல ஜெயில்ல போட்ருவாங்களாம்


===========


9 7 பேர் உயிர் காப்பாற்ற ஒரு உயிர் போனால் பரவாயில்லை என யுத்த சாஸ்திரம் கூறுவதால் தியாகச்சுடர் திருமூர்த்தி இப்போது தீக்குளிப்பார்

=========

10 தலைவரே! நம்ம கூட்டணியோட பலம் என்ன?


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.அது முடிந்த பின்னும் ஒரு பேச்சிருக்கும்.
கடமை ?.
நோ.குஷ்பூ ,நக்மா



============

11 மேடம்.அந்த கட்சியை விட்டு ஏன் விலகினீங்க?


அது வந்து.. ஆங்.கொள்கை பிடிக்கலை.
ஓ.இப்போ நீங்க இருக்கும் கட்சி யார் கூட கூட்டணி?
ஹிஹி


===============

12 தலைவரே! எந்த வயசு வரை ஒருவர் இளைஞர்?


18 டூ 30
அப்போ இளைஞர்.அணித்தலைவர்?
60 டூ 80


==============


13 டேய், நீ எவ்ளோ லோன் வாங்கினே?
1000 ரூபாங்க
உனக்கு 6 மாசம் ஜெயில், சார், நீங்க?
5000 கோடி
ப்ளீஸ் சார், 10% ஆவது கட்டுங்க



================


14 தலைவரே! வயல்ல நாத்து நட்டுட்டு இருக்கும் பொண்ணை எதுக்கு கட்டிப்பிடிச்சீங்க?
விவசாயிகளை அரவணைப்போம்னு சொன்னமில்ல?சொன்னதைத்தான் செய்வோம்



==============


15 தலைவரே! நலத்திட்டங்கள் அறிவிப்பதில் நீங்க தான் நெ 1, எப்படி?
90% கமிஷன் அடிச்ட்டு மிச்சம் மீதியை பிச்சை போட்ருவேன்



============



16 தலைவரே! உங்க மனைவிக்கு விஷம் வெச்சு கொலை பண்ணும் தைரியம் எப்டி வந்தது?
சசி தரூர் = மோடியை வாழ்த்தி அப்பப்ப ஒரு கவிதை சொல்லிடுவேன்



==============

17 டியர், நீ சுமாராதான் இருக்கே.


வாட்?



நீ தானே சொன்னே -மனசுக்குள்ளே ஒளிச்சி வைக்கிறதை காட்டிலும் உளறி கொட்டி விடுங்கள்-னு



=============


18 டியர், உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருந்தேன், அது இப்போ போய்டுச்சு
ஏன்?
சொப்பன சுந்தரியை நான் தான் வெச்சிருந்தேன்னு சொன்னீங்களே?



==========


19 தலைவரே! உங்க வீட்டு வாசல்ல ஏகப்பட்ட ஓட்ஸ் பாக்கெட் இருக்கே? டயட்டா?
ஓட்டுப்போடுங்கன்னேன். ஓட்ஸ் போட்டுட்டாங்க போல



==============


20 ஜட்ஜ் = நகைக்கடைல திருடும்போது எப்டி மாட்னே?
கைதி = கால வரையற்ற ஸ்ட்ரைக்னு சொல்லி 4 நாள்ல ஓப்பன் பண்ணிட்டாங்க அய்யா



============

Thursday, March 31, 2016

கலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்?

நமக்குநாமே் பயணம் மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது :- கனிமொழி # ஆமா.ஸ்டாலின் இளைச்சு ட்ரிம்மா ஆகிட்டார்.முகத்தில் பொலிவு.கொழுப்புச்சத்து அழிவு


==========

2 அரசியல் தலைவர்களை இழிவாக விமர்சித்தால் சிறைத்தண்டனை என்ற தகவல் தவறானது: ராஜேஷ் லக்கானி # அப்போ எவ்ளோவ் கேவலமா திட்டனுமோ திட்டிக்கலாமா?ஐ ஜாலி


===========

3 எங்களுக்கு தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன்
- திமுக # ஆளுங்கட்சியோட தேர்தல் வாக்குறுதி தான் வில்லன்?


=============

4 கூட்டணி முடிவை கருணாநிதி அறிவிப்பார்: மு.க.ஸ்டாலின் # முதல்ல கேப்டன் அறிவிப்பார்.பின் கலைஞர் அதை வழி மொழிவார்னு ஓப்பனா சொல்லுங்க.


===========

5 மக்கள் பிரச்சனையை தீர்க்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்: அன்புமணி # மக்களோட பிரச்னையே பிரச்னை தீரவே மாட்டேங்குதுனுதான்


==========

6 ராஜிவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் தீக்குளிப்பேன் - ஈவிகேஎஸ் # 7 உயிர் 1 உயிர் எது அதிகம்? எது நல்லது?கேட்டுடப்போறாங்க


==========


13 7 தமிழர் விடுதலைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?- கலைஞர் # அதானே.உள்ளே இருக்க வேண்டியவக பலர் வெளில் இருக்காங்க இல்ல?

==============

14 பாஜக சார்பில் போட்டியிட நடிகை காயத்ரி ரகுராம் விருப்ப மனு தாக்கல் # பிரச்சார மேடைல நான் ஆளான தாமரை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரா?


===============

15 வங்கிக்கடனை திருப்பிச்செலுத்தாதவர்கள் தப்பிக்க முடியாது:ஜேட்லிஎச்சரிக்கை # அதாவது 5000 டூ 10,000 ரூ வாங்குன லோ கிளாஸ் ஆட்கள் தப்ப முடியாது


=============

16 ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்தார் ஜெயலலிதா# எந்தக்கேள்வி கேட்டாலும் அம்மா வாழ்க!ன்னா செலக்டட்?


==========

17 வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி.. வைகோ # அதாவது வெற்றி பெறப்போகும் கட்சியை நோக்கி மடையைத்திருப்பி விடப்போறீங்க?


==============

18 யூகங்களை எழுப்பி கூட்டணியைக் கலைத்துவிடாதீர்கள்- ஸ்டாலின் # ஆமா, கேப்டன் ஒரு மாதிரி, திடீர்னு கிளம்பிப்போய்டுவாரு, நட்டம் நமக்குத்தான்


============

19 தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்தால் திமுக சில இடங்களில் டெபாஸிட் பெறலாமே தவிர ஆட்சி எல்லாம் அமைக்க முடியாது
-அழகிரி # சாரி ரொம்ப ஓவர்


===========

20 கார்த்தியிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதை நிரூபித்தால் ரூ.1க்கு விற்க ரெடி: ப.சிதம்பரம் # கலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி போல


===========