Monday, March 28, 2016

பாகற்காய் குழம்பு

1  பொண்ணுங்க FB ல பாகற்காய் குழம்பு குண்டாவை போட்டோ எடுத்து அப்டேட்டினா நெட் தமிழன் வாவ்.வாட் எ ஸ்வீட் குழம்பு?னு குழம்பறான்.அது கசக்கும்டா

=============

2 வீட்டுக்குவரும் அத்தை பொண்ணுங்களை கதவுக்குப்பின்னால வெச்சு கிஸ் அடிச்சுடுவேன்




ஓ, வெளி உலகமே தெரியாத கதவின் பின் பகுதி கவிதைக்கு அர்த்தம்


===========


3 டீச்சரோட முகத்தைப்பார்க்காமயே இது இந்த டீச்சர் தான் என கணித்தவன் கேடி


============



4 தமிழக அரசியல்வாதிகளில் சிறந்த பேச்சாளர்கள் ( வாழும்)



1 கலைஞர்

3 தமிழருவி மணியன்



2 வை.கோ
4 அன்புமணி

6 சீமான்



5 ஸ்டாலின்

7 தா .பாண்டியன்




==============


5 பேப்பரைப்பார்த்து படிப்பதில் சிறந்த அரசியல்வாதி - ஜெ

எதையுமே பார்க்காம குத்து மதிப்பா பேசுவதில் - கேப்டன்



==============

6 ஜாதிக்கட்சி என்ற மைனசை தள்ளி விட்டுப்பார்த்தால் அன்புமணி எதிர்காலத்தில் நல்ல அரசியல்வாதியாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது


=============

7 விடுதலைப்புலிகளுக்கு , தீவிரவாதத்துக்கு எதிரானவர் என்பதைக்காட்டிக்கொள்ள சற்றும் தயங்காத ஜெ இப்போது பம்முவது அவரது தேர்தல் கால பின்னடைவே

==============

8 ஆனந்தவிகடனில் வந்த கட்டுரைக்குப்பரிகாரமா சுட்டி விகடன் புக்ல அட்டைல ஆத்விக் அஜித் ஃபோட்டோ போட்டு ஒரு கட்டுரையும் எழுதிடுவாங்கனு நினைக்கேன்


============

9 எப்படியோ பாமக வின் விளம்பரங்கள் தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு, இது அன்புமணிக்கு கிடைத்த முதல் வெற்றி


===========



10 சாய்ந்து தூங்க உன் மடி தேவை , தோள் தேவைனு ஏகப்பட்ட காதல் கவிதை வருது, எனக்கு இன்னா டவுட்னா தூங்கறதுன்னா வீட்லயே தூங்கலாமெ? எதுக்கு லவ்?




===========



11 கேப்டன்ட்ட பேச்சு வார்த்தை வெச்சா எப்டியும் பிரேமலதாகிட்டே கருத்து கேட்பாரு.அதுக்கு டைரக்டா பிரேமலதாட்டயே கூட்டணி பேச்சுவார்த்தை வைக்கலாம்



=============




12 நித்ய கல்யாணி யை கல்யாணம் பண்ணிட்டா டெய்லி ஒரு டைம் தாலி கட்டனுமா?




=============



13 எழுச்சி கலைஞர்


புரட்சிக்கலைஞர்

என பட்டப்பேரிலேயே கலைஞர் இருப்பதைக்கண்டாயா உடன் பிறப்பே?கேப்டன் கறுப்பு.பிரேமலதா சிவப்பு.கறுப்பும் சிவப்பும் சேர்ந்ததுதானே திமுக

============

14 பொண்ணுங்க ஏதாவது ட்வீட்டிட்டா போதும் நெட் தமிழன் பாய்ஞ்சு போய் கட்டிப்பிடிச்சு பாராட்டிடுவான் போல அவ்வளவு ஆர்வமா இருக்கான் கலா ரசிகன்

===========
15 கேரளா.திருவனந்த புரம் மாவட்டத்தில் மன்னன்தல னு ஒரு ஊர் இருக்கு #,ரஜினி அஜித் ரெப்ரென்ஸ்



============



16 சூர்யாவின் 24 வசூலில் 100 கோடி எட்டுமா? என சிலர் கேட்கிறார்கள். அந்த அளவு கமர்ஷியல் சக்சஸ் சிங்கம் 3 க்கு வேணா வாய்ப்பு இருக்கு



=============



17 தமிழ்சினிமா ரசிகர்கள்

சூப்பர்ஹிட் ஆக்காமல் தவறவிட்ட முக்கியமான படங்கள்
1 அன்பே சிவம் ( கமல்) 2 பூ ( சசி)
3 யாவரும் நலம் ( விக்ரம் குமார்)

==================

18 நல்ல படமென்பதே போதும் கொண்டாட வேண்டிய அவசியம் எதற்கு


காமராஜரைக்கொண்டாடினால்தான் கலைஞர் கள் திண்டாடுவார்கள்


===============


19 சம்சாரம் செய்யும் கூட்டு ,பொரியல் இன்னைக்காவது நமக்குப்பிடிச்சா மாதிரி இருக்கனும் என நினைப்பதுதான் கூட்டு பிரார்த்தனை

=============

20 சாதாத்தமிழன் வாக்கிங் போனா போனமா வந்தமான்னு இருப்பான்.ஜப்பான் தமிழன் சிட்னி தமிழன் நெட் தமிழன் ஆதாரத்தை சப்மிட்.எதுக்கு?ன்னு தெரியல


================

நாம் மீட்பர் கட்சி

1  யாரையும் தப்ப விட மாட்டோம்: அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசத்திற்கு ஜெட்லி பதில் # எல்லார்ட்டயும் காம்ப்பன்சேசன் வாங்கிடுவீங்க?

============


இரட்டை வேடம் போடும் பா.ஜ. அரசு: ராகுல் குற்றச்சாட்டு # சினிமால, அரசியல்ல இரட்டை வேடத்துக்குதான் மவுசு



==============



3 DMK,ADMK விடமிருந்து தமிழகத்தை மீட்பதுதான் முதல் வேலை - சீமான் # நாம் தமிழர் கட்சி னு பேர் வெச்சதுக்கு நாம் மீட்பர் னு வெச்சிருக்கலாம்



==============



4 அமைச்சர்கள் யாரையும்

கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார் மோடி- ராகுல் # மந்திரிக்குக்கூடத்தெரியாமல் செயல்படுவரே ராஜதந்திரி




===============



5 பிரச்னைக்குரிய கைக்கடிகாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு-சித்தராமய்யா பணிந்தார் # வாட்ச் திஸ் யுவர் ஆனர் அப்டின்னாரா? வாட்சை குடுக்கும்போது




===============



6 தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இழுபறி ஏன்?

விஜயகாந்த் நிபந்தனை; ஸ்டாலின் முரண்டு # 35% வாக்கு வங்கி கிட்டே 12% வாக்கு வங்கி அதிகாரமா?ன்னுதான்



==============



7 80 சதவீதம் புதுமுகம் அ.தி.மு.க., திட்டம் # நம்ம ஜனங்க என்னைக்கு வேட்பாளரைப்பார்த்து குத்துனாங்க? சின்னத்தைப்பார்த்துத்தானே?



==============



8 'குனிந்தது போதும், நிமிர்ந்திடு தலைவா''.. தனிக் கட்சி தொடங்க ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் அழைப்பு # ரைட்டு அடுத்த.நாஞ்சில் சம்பத் இவர் தானா?ஆஹாங்




==============



9 மூழ்கும் கப்பலில் இருப்பவர்கள் அபயகுரல் எழுப்புவதுபோல் உள்ளது: பொன் ராதா # அய்யா காப்பாத்துங்க.அம்மா காப்பாத்துங்க.ரெண்டே கேட்டகிரி



==============




10 விஜயகாந்த் முடிவால் திருப்பம்:அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா?

மேக்கர் மட்டுமில்ல.க்யூன் மேக்கரும் கேப்டன் தான் போல.


==============

11 தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேரமாட்டார்: மக்கள் நல கூட்டணி தலைவர்கள் #,4 பந்தியே முடிஞ்சிடுச்சு.இப்போ போய் மண்டபம் எந்த ஏரியா?ன்னானாம்


==============


12 பல கோடி ஊழல். சரத்குமார் மீது நடவடிக்கை தேவை. நடிகர் சங்கம் புகார் # நடிகர் சங்கத்தலைவரா இருந்தே இவ்ளோவ் ஊழல்னா அரசியல் தலைவரா ஜெயிச்ட்டா?


===============

13 பலவீனத்தை உணர்ந்த கட்சிகளே கூட்டணி அமைக்கும் - சீமான் # அது அப்டி இல்லீங்க, கூடி வாழ்ந்தால் ஜெயிச்ச பின் “ கோடி” நன்மை. இப்டி


=================



14 கலைஞர் ஏ1

ஜெ ஏ 2 - வை.கோ # தமிழன் ஏ1 ஏ2 வால் மாறி மாறி ஏமாற்றப்பட்ட ஏ3?



==============


15 தேர்தல் நேரத்தில் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க நினைப்பது அரசியல் நாடகம்- ஸ்டாலின் # நாம மட்டும் தான் நாடகம் போடனும்னு அடம்பிடிச்சா எப்டி?



=============

16 இரட்டை மெழுகுவர்த்தி சின்னம்: சீமான் அறிமுகம் # கட்சிப்பாடல்- நான் உள்ளுக்குள்ளே சக்ரவர்த்தி, ஆனா உண்மையில மெழுகுவர்த்தி?


================


17 தனித்து போட்டியிடும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை -ஜி.கே.வாசன் # சபாஷ்! இந்த உண்மையை ஒத்துக்கிட்டு அரசியல் ஜி கே உணர்ந்த முதல் தமிழர்


===============


18 உலக அளவில் ஊழல் வாதிகள் பட்டியலில் ஆ ராசா வுக்கு இரண்டாமிடம் - டைம்ஸ் நாளிதழ் # மறந்தாப்ல இதை கழக சாதனையாப்போட்றாதீங்க, மாட்டிக்குவீக



================


19 ஒ.பி.எஸ் தலைமையில் 10 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை # ரஜினி- ஸ்ரீதேவி நடிச்ச நான் அடிமை இல்லை சன் டி வி ல போடறாங்களாமே? பார்ப்போமா?ன்னா


============


20 கலைஞர், ஸ்டாலின் படங்களுடன் 45 ஆயிரம் மாணவர்களுக்கு டிக்ஸனரி # தன்னை முன்னிலைப்படுத்துவதில் ஆர்வம் உள்ளதால் திமுக,அதிமுகவுக்குப்பின்னடைவே


===============

Sunday, March 27, 2016

கடலை மாவு தோசை செய்வது எப்படி?

1  தலைவரே! அடிப்படைக்கொள்கை ஒத்துப்போச்சுன்னீங்களே? என்ன அது?

நாங்களும் கமிசன் அடிப்போம்,அவங்களும் கமிசன் அடிப்பாங்க. 50:50


=============


2 கடலை மாவு தோசை செய்வது எப்படி?

மிஸ்! சிம்ப்பிள், மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றும்போது யார் கிட்டயாவது கடலை போட்டா போதும்


===================

3  தலைவரே! எவ்ளோவ்  ஓட்டு வாங்குவீங்க?

 அவரை விட ஒரு ஓட்டாவது அதிகமா வாங்குவேன்


 அவரு  ஒரு ஓட்டுக்கூட வாங்கலைன்னா? நீங்க 1 ?

=================


4 தலைவரே! வாரிசுகளைக்கொண்டாடுவது தப்பா? சரியா?

சுத்தி வளைச்சு நீ எங்கே வர்றே?ன்னு தெரியுது, நான் இருக்கும் வரை நான் தான் தலைவன்


================

5 தலைவரே! உங்களுக்கு ராசி இல்லாத நெம்பர் 2 னு எப்படி சொல்றீங்க?

கலைஞர் டிவி 200 கோடி ஊழல் வழக்கு ( 2+0+0=2)
2ஜி ஊழல் வழக்கு
இரட்டை இலை


================


6 தலைவரே! ஹமாம் சோப் போட்டுத்தான் டெய்லி குளிக்கறேன்னு மேடைல அடிக்கடி எதுக்கு சொல்றீங்க?

 அப்பவாவது என் நேர்மை ல நம்பிக்கை வரட்டும்னு தான்


==============


7 நல்லாத்தான் தூங்கினேன். ஆனாலும் எழுந்தரிக்கும்பொழுது, அடிச்சிப்போட்டது மாதிரி உடல்அசதி

அப்போ உங்க சம்சாரம் தான் அடிச்சு எழுப்பி விட்ருக்கும்

===============

8 எக்சாம்ல 8 அரியர் வெச்சிருக்கியே. எப்டி பாஸ் ஆவே?

 சிம்ப்பிள் ஆல் க்ளியர் ஷாம்பு போட்டு குளிச்சா ஆல் ( வில்) க்ளியர்


===============


9 மிஸ்! உங்க கடை விழிப்பார்வை  ஏன் என் பக்கம் வர மாட்டேங்குது?

 வந்தா ஷாப்பிங்க்  மால் விழிப்பார்வை ஆகி செலவு வைப்பேன் பரவால்லியா?


==============


10 தலைவரே! அந்தக்கட்சி கூட கூட்டணி வைக்க ஏன் துடிக்கறீங்க?

12 % ஆல்கஹால் இருந்தா தான் பீர்க்கு மரியாதை, 12% வாக்கு வங்கி இருப்பதால் கட்சிக்கு மரியாதை


==================

11  மன்னா! ஆட்சி புரிந்த 58 மாசமும் சும்மா இருந்துட்டு இப்போ ஏன் நலத்திட்டங்கள் அறிவிக்கறீங்க?

லாஸ்ட் பால்ல சிக்சர் அடிச்சு ஜெயிச்சா தான் கிக்

=====================


12  மிஸ்! உங்களுக்கு வரப்போற மாப்ளை I"RT"T ல படிச்சு ஷேர் மார்க்கெட்ல ஒர்க் பண்றவரா இருகனுமா? ஏன்?


 அப்போதான் என்  FB போஸ்ட்டை ஷேர் ,ட்வீட் RT


==================

13  மிஸ்! ஏசு கிறிஸ்.துவை விட நீங்க செம பேமஸ்

எப்டி?
அவருக்கே 12 பாலோயர்ஸ் தான்.உங்களுக்கு ஃபேஸ்புக்ல 12,000 + பாலோயர்ஸ் 

================


14 தலைவரே! கால்நடைத்துறை அமைச்சரை ஏன் நீக்கீட்டீங்க?
கார்ல போறாரு என் எதிர்லயே!கால்நடையா போனாத்தானே கட்சிக்கு மரியாதை?


================

15 சார்.ஆண்டவருடன் தான் கூட்டணி ன்னீங்களே? இவர் கூட சேர்ந்துட்டீங்க?
ஆமா.அவரும் தமிழகத்தை பல முறை ஆண்டவர் தானே? ஆங்


=============


16 நெட் தமிழன் ரஜினி முருகன் போல் டீக்கடை மலாய் ல வெச்சா கடைக்கு என்ன பேரு வைப்பான்?
தனி ஒருத்தி BUNகடை

=============


17 மிஸ்! தீபிகா! கொஞ்சம் தள்ளியே இருங்க.ஜாக்ரதை.
ஏன்?
மாப்ளை பயர் சர்வீஸ் ஒர்க்கர்."தீ"பிகான்னா பாய்ஞ்சு வந்து அணைச்சிடப்போறார்

==============

18 அம்மா தாயே! 100 ரூபா இருந்தா தர்மம் பண்ணுங்க.
எதுக்கு?
பிச்சைக்காரன் படம் போகனும்

=============


19 ஸ்கூட்டர்,காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்குறப்ப,
அத்தனை சக்கரம் இருக்குற
இல்ல?
ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட


மயிலுக்கு எதுக்கு சவுரி?
கோடீஸ்வரனுக்கு எதுக்கு டவுரி?

===============

20 தலைவரே! ஊழல்வாதிகளுக்கு உங்க கட்சில சீட் இல்லையா? ஏன்?

ஒரு உறை ல ஒரு வாள் தான்யா இருக்கனும்.


============

ROCKY HANDSOME ( HINDI) - சினிமா விமர்சனம்

கொரியன் மூவி The Man From Nowhere (2010),  யின்  அதிகார பூர்வமான ரீ மேக் தான் இது

ஹீரோ ஒரு ஸ்பெஷல் போலீஸ் ஆஃபீசர். அவர்  ட்யூட்டில இருக்கும்போது சத்ரியன் ( மாடர்ன் வெர்சன் தெறி) பட நாயகிக்கு ஆனது போல் எதிரிகளால் செயற்கையான விபத்து ஏற்ப்டுது. தன் கண் முன்னே தன் மனைவி கொலை செய்யப்பட்டதைப்பார்த்து பொறுக்க முடியாம வேலையை விட்டுட்டு  தனியா இருக்கார்


அவருக்கு ஒரே ஆதரவு   பக்கத்து  வீட்டில் இருக்கும் பாப்பா 1 . அதுக்கு அம்மா ஒரு போதை மருந்து அடிமை.


 அந்த பாப்பாவோட்  அம்மா தான் வேலை செய்யும் நைட் க்ளப்ல இருந்து  போதை மருந்து பாக்கெட்டை லவட்டிட்டு வந்துடுது.

 போதை மருந்து கும்பல் அந்த  போதை மருந்தை பெறுவதற்காக அந்த பாப்பாவை கடத்திடறாங்க. குழந்தைகளின் உடல்  உறுப்புகளை  விற்கும் கும்பலும்  கூட அவங்க.


 ஹீரோ அவங்க கிட்டே இருந்து  எப்படி அந்த பாப்பாவைக்காப்பாத்தறார் ? என்பதே மிச்ச மீதி திரைக்கதை/


ஆல்ரெடி இதே டைப்பில் பல பாலிவுட் படங்கள் வந்தும் ஏன் இந்தக்கதையை தண்டமா காசு கொடுத்து  ரீமேக்குனாங்களோ தெரியல 


ஹீரோ கம் கோ புரொடியுசரா ஜான் ஆப்ரஹாம். அவரோட  ஜிம் பாடி அட்டகாசம்/  ஓப்பனிங் சீன்களில் அந்த பாப்பாவுடனான காட்சிகள்   செண்ட்டிமெண்ட் டச். லேடீஸைக்கவர.  அந்த  பாப்பா நடிப்பும் சூப்பர் 

ஸ்டண்ட்  காட்சிகள்  எல்லாம் ஸ்டண்ட் மாஸ்டரால் ஒரிஜினலில்  இருந்தது போலவே  தர அட்டகசமாய் உழைச்சிருக்காங்க . ஆக்சன் சீக்வன்சில் பிஜிஎம், ஹீரோ பில்டப்  , ஸ்டண்ட்  மாஸ்டர்   மூவரும்  சேர்ந்து  அதகளம்  பண்ணி  இருக்காங்க 

ஹீரோயினுக்கு  வேலை இல்லை ஸ்ருதி கமல்  வரும்  10  நிமிடக்காட்சி ல 5 நிமிசம்  பாட்டு  ஓடிடுது.  இன்னும் வாய்ப்பு  கொடுத்திருக்கலாம்






நச் டயலாக்ஸ்

அங்க்கிள்.உங்களுக்கு ஹேன்ட்சம் னு நிக்நேம் வெச்ச மாதிரி எனக்கு டஸ்ட் பின் (குப்பைத்தொட்டி)னு நிக் நேம் வெச்சிருக்காங்க HANDSOME



2 குழந்தைப்பருவத்தில் தெரியாமல் தப்பு செய்பவர்கள் வளர வளர தப்பு செய்வதை சரியாக கற்றுக்கொள்கிறார்கள் HANDSOME




3 நான் உன்னை வெறுக்க முடியாது.அப்டி வெறுத்துட்டா இந்த உலகத்தில் யாரையுமே விரும்ப முடியாது HANDSOME




4 போலீஸ் ஆபீஸர்கள் கைகள் எப்போதும் கண்ணுக்குத்தெரியாத அரசியல் கயிறால் கட்டப்பட்டிருக்கும் HANDSOME




5 இத்தனை பேர் போயும் அவனை ஏன் வீழ்த்த முடியலை?

அவன்.செயல்படும் வேகத்தில் மின்சாரம் போன்றவன்.புத்திக்கூர்மையில் சம்சாரம் போன்றவன் H


6 எல்லோரையும் காப்பாற்ற நினைக்கும் போர் வீரன் அரசன் ஆகும் தகுதி படைத்தவன். HANDSOME


7 நீ மரணத்தருவாயில் இருக்கே.என் கிட்டே குமாரசாமி கணக்கெல்லாம் சொல்லிட்டிருக்கே HANDAOME

8 முட்டாள்தனமான தவறை நான் ஒரு தடவை தான் மன்னிப்பேன் HANDSOME


9 நாளைய கனவுகளுடன் எப்போதும் இருப்பவன் இன்றைய வெற்றியை இழப்பவன்.இன்றைய வெற்றியை நினைப்பவன்.நாளைய கனவை துறப்பவன் HANDSDME



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 ஓப்பனிங் ஃபிளாஸ்பேக் சீனில் ஹீரோ நெஞ்சு , சோல்டர் , வயிறுன்னு 3 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ஞ்சும் உயிரோடவே இருக்கார் எப்டி?ன்னு தெரியல


2 தன் உடம்பில் இருந்து தானே புல்லட்டை நீக்கும் காட்சிகள் எல்லாம் ஃபர்ஸ்ட் பிளட் , ராம்போ உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சு பாஸ் , வேற வேற


3 ஸ்ருதி கமல் இறக்கும் காட்சி சரி வர காட்சிப்படுத்தப்படவில்லை. இன்னும் டெப்தா எடுத்திருந்திருக்கனும்

4 இப்போ சமீப காலமா பல படங்கள் ல இது போல் சீன் வருது. வில்லன் க்ரூப் கார்ல யாரையாவது கடத்திட்டுப்போகும்போது கார் /வேன் பின்னாலயே ஹீரோ 2 பர்லாங்க் ஓடி வருவார் எதுக்கு? எமோசனைக்குறைங்க பாஸ்

  சி.பி கமெண்ட் - ROCKY HANDSOME (hindi) - மாபியா கேங்க்ஸ்டர் ஆக்சன் கதை.ஸ்டண்ட் சீன் அதகளம்..BGM அல்டிமேட். பெண்கள் தவிர்க்கவும் .ரேட்டிங் =2.75 / 5

பச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா? வில்லாதி வில்லனா?

1  ட்வீட் எதுவும் தோணலைன்னா பொண்ணுங்க சும்மா இருக்கறதில்லை, எதுனா சினிமா பாட்டு லைன் 2 எடுத்து விட்றாங்க, உடனே நெட் தமிழன் பிரமாதம் மிஸ்!  அப்டிங்கறான்


===============

2 பலவீனமான நிலையில்  நீ இருக்கும்போது கூட்டாளி விதிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொள், அது உன்னை பலமாக்கும்.பின் தேவைப்பட்டால் கூட்டாளியை விலக்கு


================

3 உன் ஆதரவு உறுதியாகத்தேவை என ஒருவர் நினைக்கும்போது அதிகபட்சம் உன்னால் என்னென்ன அவர்கள் மூலம் பெற முடியுமோ அதை எல்லாம் பெற்றுக்கொள்


===============

4  நீ யாரோ  நான் யாரோ-ன்னு சொல்ற பொண்ணு உடனே விலகிடாது, 10 வருசம் ஆனாலும் செல்லச்சண்டை போட்டுட்டுதான் இருக்கும்


============


5  நெட் தமிழனின் அகராதியில்  சொந்த டிபி வைக்காத, டி எம் ல தன் கிட்டே சாதகமாப்பேசாத பொண்ணுங்க எல்லாமே ஃபேக் ஐ டி தான்


==============


6  உன் வெற்றியின் ரகசியத்தைபெருமையாக எல்லோரிடமும் பரப்பிக்கொண்டிராதே! இதுவும் வெற்றியின் ரகசியமே!


=============

7  ஆஃபீசில்/கம்பெனியில் உன் தொழில் ரகசியத்தை யாரிடமும் பகிராதே! நீ லீவ் போட்டால் பாதிப்பு இருக்கனும்


==============

என்னையே block..or mute பன்னுறவங்க பன்னலாம்..."

சாரி மிஸ்! வேணும்னா டிஎம் வேணா பண்ணுவான் நெட் தமிழன்


=============


9 அன்பே! நீ போடும் ஜாக்கெட்டும் ,பங்கு வர்த்தகப்புள்ளியும் 1,எப்போதும் ஏற்ற இறக்கமாவே இருக்கே?


==============

10 ஆபீசில் /கம்பெனியில் நீ மிகச்சிறந்தவனாக இருக்கத்தேவை இல்லை.அங்கே இருப்பவர்களை விட திறமைசாலியாக இருந்தால் போதும்


===============


11 பனி மலர் கிட்டே உங்க EYES நல்லாருக்குன்னு ICE வெச்சுப்பேசனும்னு அவசியம் இல்லை


=============


12 1000 அட்டு பிகர்கள் உன் கண்களிலிருந்து தப்பிக்கலாம்.ஆனால் எந்த லட் டு பிகரையும் பார்க்காமல் விட்டு விடாதே!


==============


13 மருதாணி வைத்த பிகர்கள்
மெஹந்தி வைத்த பிகர்கள்
நெயில் பாலீஷ் விரல் பிகர்கள்
இயற்"கை" பிகர்கள் என 4 வ"கை"ப்படும்


=============

14 என் எல்லாப்படைப்புகளும் மொக்கைதான்.இது தெரியாம சில கொலம்பஸ்ங்க "சார்.இது மொக்கை.அது சொத்தை,இது என் அத்தை"ங்கறாங்க


==============

15 நெட் தமிழன் குப்பம்மாவை குப்ஸ்ங்கறான்.சரி பரவால்ல.பார்வதி ஓமனக்குட்டனை பப்ஸ்ங்கறான்.அய்யோ ஊர்மிளா


================

16 ஒண்ணுந்தெரியாத பாப்பா சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலை எடுப்பது நிரோஷாவின் புருசர் ராம்கியா?ன்னு கேட்டுச்சாம்


==============

17 வித்தாரகள்ளி விண்ணைத்தாண்டி வருவாயா பார்க்கப்போனாளாம்.வழில வித்யா ராமன் கேசட் கவரோட கிடந்துச்சாம்.# கிராமத்து சொலவடை


=============

18 ஆட்டோமேடிக்கா அப்டேட் ஆகும் ஆட்டோ ட்வீட்டை பேஸ்புக்கில் நீ ஷேர் செய்தால் அது தான் ஷேர் ஆட்டோ ட்வீட்


=================

19 தமிழ் நாட்டுப்பொண்ணுங்களுக்கு நம்ம வண்டவாளம் தெரிஞ்சிருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு நெட் தமிழன்் பாரீன் பொண்ணுங்களுக்கு நூல் விட்டு இருக்காங்க

================

20 பச்சபுள்ள சிவா வோட கேரக்டர் தெரிஞ்சுதான் அப்பவே அவங்க அம்மா அப்பா சி"வா"ன்னு பேர் வெச்சிருக்காங்க.டிஎம் வா.சேட்டுக்கு வா

============