Skip to content

Sunday, March 06, 2016

144 டூ 251? அல்லது 420?

மாற்றுத்திறனாளிகள பாதுகாப்பதில் தமிழகம் தான் சிறந்த மாநிலம் -OPS # முதுகெலும்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவி தந்தது அம்மாதானே?


=============




2 கருணாநிதி எனக்கு அப்பா மாதிரி.. தப்பா பேசாதீங்க: சீறும் குஷ்பு #,அப்பா கட்சியை விட்டு ஏன் விலகுனீங்கனு மக்கள் கேட்கறாங்க மேடம்



============



3 ரவுடித்தனம் என்பது என்னவென்றே திமுக.வுக்கு தெரியாது -ஸ்டாலின் # அண்ணன் அழகிரி கிட்டே கேட்டா சொல்லித்தருவாரே?



============



4 திமுகவை பிரேமலதா விமர்சித்தாலும் தேமுதிக கூட்டணிக்கு வரும்: கனிமொழி -

# அப்போ பிரேமலதா திமுக வுக்கு மாமியாரா?நீங்க ஜோசியரா?


============

5 திமுகவும்,அதிமுகவும் ஒன்று தான்.-நல்லுகண்ணு.# திமுக வில் பெரிய குடும்பம் ஊழலுக்கு துணை போக காத்திருக்கு.அதிமுக வில் தோழி சசிகலா மட்டும்

============

6 நித்யானந்தா 4 மடங்களில் மடாதிபதியாக செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை !# ரஞ்சிதா வுக்கு இடை கால தடை உண்டா?


===============

7 திராவிடக் கட்சிகளுடன் சேர மாட்டார் விஜயகாந்த் - டிராபிக் ராமசாமி திடீர் தகவல் # இவருக்கு ஏதோ சிக்னல் கிடைச்சிருக்கு போல

============

8 60 நாட்களில் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய யாஹூ முடிவு.. .WHO WHO?


=============

9 எல்லா தரப்பும் ஜெ அரசுக்கு எதிராக போராடிக்கொண்டுள்ளது: கருணாநிதி காட்டம் #,அழகிரி தரப்புமா?தலைவரே


============

10 அதிமுக ஆட்சிக்கு வந்தா தான் ஒட்டுமொத்த பிரச்சனையையும் தீர்க்க முடியும் - ஜெ #  சசிகலா பிரச்சனையையே உங்களால இன்னும் தீர்க்க முடியல


================


11 பிஜேபி,  காங்கிரஸ், அதிமுக, திமுக ,மதிமுக என  அனைத்து கட்சியிலும்  இருந்துள்ளேன் -பழ.கருப்பையா # பல ஊருக்குப்போன பரந்தாமன் மாதிரி பெருமை வேற


===============

12  மாநிலங்களவை.,மத்திய அமைச்சர் பதவிகளை திமுக எனக்கு இலவசமாக வழங்க வில்லை.
-அன்புமணி ராமதாஸ் # ஓவர் ரேட் வாங்கிட்டாங்களோ?


==============


13  234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான்- நத்தம் விஸ்வநாதன் # இருக்கலாம், ஆனா ஒவ்வொரு தொகுதியிலயும் வெற்றியைத்தீர்மானிக்கும் ராஜ்யம் அவர்



============

14  ரூ. 251-க்கு ஸ்மார்ட் ஃபோன்: தொடங்கிய சில நொடிகளில் முடங்கியது முன்பதிவு # 144  டூ 251?  அல்லது 420?


==================


15 இந்தியாவில் தயாரிப்போம்' திட்ட வாரம் ரூ.15 லட்சம் கோடிக்கு முதலீட்டு உறுதி # மோடியின்  முக்கியமான வெற்றி இது, கோடிகளில் முதலீடு


================

16  2011 தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது - ஜெ # நல்லாட்சி தருவோம்னு ஒரு வாக்கு கொடுத்திருந்தீங்களே?அது? 


===================


17 :'நமக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில்வாழக் கூடாது'- அருண் ஜெட்லி # அதனாலதான் டீச்சர் கேள்விகேட்கும்போது தெரிஞ்சாக்கூட தெரியலைனு சொல்வோம்


===============


18 வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம்... 'நோ!' * ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அரசு பதிலடி # அப்டிப்போடு அருவாளை,இனி நீ ஸ்ட்ரைக் பண்ணுவே?


===============


19 ஏப் 14 முதல் விவசாயிகள் நாட்டில், எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு,, ஆன்லைன் மூலம் விற்கக் கூடிய திட்டம்- மோடி # சபாஷ்,கோடி புண்ணியம்


===============


20  800 ஆண்டுகளுக்கு முந்தையது: விராலிமலையில் அருணகிரிநாதர் தங்கிய குகை கண்டுபிடிப்பு  # புதுக்கோட்டை காதலர்களுக்கு இனி வேட்டை தான்


====================

Saturday, March 05, 2016

தலைவரே! மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே?

1  கேப்டன் = கடவுளே! தேர்தல்ல யார் கூட கூட்டணி வைக்கட்டும்?

போன தேர்தல்ல ஆண்டவனுடன் கூட்டணின்னு சொல்லி என்னையே ஏமாத்துனியே?


===============

2 தலைவரே! மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே?

யோவ், நல்லா படி. ரகசிய ஏற்பாடு அது. ரகசியா ஏற்பாடுன்னு கூப்பாடு போடாத


===============


டாக்டர்.கைக்குத்தல் அரிசி நன்மையா? தீமையா?


கை சின்னத்தால நாட்டுக்கு தீமை.ஆனா கைக்குத்தல் அரிசி நன்மை


=========

4 டியர்! குறும்புகளை குத்தகைக்கு எடுத்தவனின் மொத்த உருவம் நீன்னு சொல்றாங்களே நிஜமா?

குறும்புப்பட டிவிடியை லீசுக்கு எடுத்து வாடகைக்கு விடறேன்


=============

5 சார்!நீங்க எப்பவும் பொண்ணுங்களைத்திட்டிட்டே இருக்கீங்களே ஏன்?


 எல்லாரையும் திட்டமாட்டேனே? சொந்த சம்சாரம், மாமியார், அவங்கவீட்டுசொந்தம் இப்டி


===========

6  டியர், என்  மூக்குத்திக்கு என் மூக்கு அழகா? என் மூக்குக்கு இந்த மூக்குத்தி அழகா?

 அதெல்லாம் தெரில. 2 பவுன் தேறும் போல, அவசரம்னா அடமானம்


=================


7 சார்! எதுக்காக இயக்குநர் சேரன் படத்துல நடிக்கனும்னு நினைக்கறீங்க?


 அவர் மட்டும் சோழர் படத்தில் நடிக்கறாரே?


===============


8 காலேஜ்ல இருந்து வர  ஏம்மா லேட்?

 சைக்கிள் டெஸ்ட்ம்மா

சைக்கிள் டெஸ்ட்னா சைக்கிள் ஓட்டச்சொல்வாங்களா? உனக்கு ஸ்கூட்டியே ஒழுங்கா ஓட்டத்தெரியாதே?

==================

9 மம்மி, ஜாகிங்க் பேண்ட்டை கிரவுண்ட்லயே வெச்ட்டு வந்துட்டேன்

நல்லவேளை, கொலுசை கழட்டலையே?

 அதை அந்த பேண்டுக்குள்ளே வெச்ட்டேன்


===================


10 பொண்ணு பார்க்க வந்த மாப்ளை கிட்டே  251 ரூபா வசூல் பண்றாங்களே எதுக்கு?


ஸ்மார்ட்டா இல்லை பொண்ணுன்னாராம்,ஸ்மார்ட் ஃபோன் சார்ஜ் வசூல்டு


=================


11 என் பைக்கை பொண்டாட்டியைப்பார்த்துக்கற மாதிரி பார்த்துக்குவேன்

ஓஹோ, அப்போ ஸ்கூட்டியை  மச்சினியைப்பார்த்துக்கற மாதிரி பார்த்துக்குவியா?


==================


12 டாக்டர்!டெய்லி  7 பேரீட்சைப்பழம், ஒரு செவ்வாழை  சாப்பிட்டா  என்ன ஆகும்?

இது கூடத்தெரியலையா செவ்வாழ?மாசம் 210 பேரீட்சை,30 பழம் செலவாகும்


==================


13 பொருளாதார ஸ்திரத்தன்மை/வளர்ச்சிக்கு அதிகம் துணை புரிவது சேமிப்பா, பணப் புழக்கமா?

ஏழைகளின் சேமிப்பு , பணக்காரர்களின் பணப்புழக்கம்


==================


14 சார், உங்க பட  டீசர் பார்த்தேன். அப்டியே ஒரு இச் கொடுத்தேன்

அடடா! மிஸ்! டீசர்க்கு (இ)ச் கொடுத்தா அது டீச்சர் ஆகிடுமே?



================


15  திருடனுக்கு தேள் கொட்டினால் அது திருடனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.


ஏன்? கொட்டின தேளுக்குத்தெரியுமே?

================

16 நான் குடிக்க மாட்டேன்னு எல்லோருக்கும் தெரியுமே"

ஆனா பொய் சொல்வீங்கன்னு யாருக்கும் தெரியாதே தலைவரே!


================

17 குருவே! யானைக்கு ஏன் மதம் பிடிக்குது?

6 அறிவு மனுசனுக்கே மதம்/மதவெறி பிடிக்கும்போது 5,அறிவு ஜீவனுக்கு மதம் பிடிக்காதா?


==============

18 அப்பா.ரவுடித்தனம்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன்.எப்பூடி?
வெரிகுட்.தலைவன் ஆவதற்கான முதல் தகுதி மக்களை பொய் சொல்லி நம்ப.வைப்பது

==================

19 மேடம்.எதனால DMKவை விட்டு வெளில போனீங்க?

பிடிக்கலை.

இப்போ திமுகவுக்கு ஆதரவா வாக்கு எப்டி கேப்பீங்க?

நரம்பில்லா நாக்கு.எப்டி வேணாலும் பேசும்

===========

20 தலைவரே! உங்களை ஊழல் வாதி ன்னு ஒரு கோர்ட்ல கூட நிரூபிக்க முடியலையே ஏன்?
நான் தான் அரசியல்வாதினு நிரூபிச்சடறேனே?

===============




இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் அனுப்பியது

ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டின் தலைவராக திகழ்வேன்- மோடி # நீங்க தான் கட்சித்தலைவரா? அப்போ அமித்ஷா பிரதமரா?சொல்லவே இல்ல?


=============



2 அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு: மத்திய அரசு. #,குடுக்க்கறதே கம்மி.வட்டி. அதையும் குறைச்ட்டா யாரு சேமிப்பா?




=============



3 செல்போன் மூலம் தி.மு.க.வில் புதுமையான ‘மிஸ்டு கால்’ பிரசாரம்; கருணாநிதி தொடங்கிவைத்தார் #,அழகிரி மிஸ்டு கால் விட்டாரா?




===========



4 தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: நடிகை நக்மா அறிவிப்பு # குஷ்பூ உங்க மேல செம கடுப்பா இருக்காங்களாம்




=============



5 முடிந்தால் கடலூரில் என்னை எதிர்த்துநின்று ஜெ ஜெயிக்கட்டும்-சீமான். # சரித்திரத்தின் பக்கங்களை பார்த்துட்டு சவால் விடனும்




================




6  இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் போர் விமானங்கள் உருவாக்கப்படும் - பாதுகாப்புத் துறை அமைச்சர் #  டாப்ல வெள்ளைக்கொடி வெச்சிடுங்க



==============

7  காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை # நக்மா, குஷ்பூ-ன்னு ஆல்ரெடி கொலு படுத்திட்டு தானே இருக்கீங்க?


================


முகநூல் பயன்படுத்தும் பழக்கம் இல்லை: மு.க.அழகிரி # அட்லீஸ்ட் மு.க நூல்  நெஞ்சுக்கு நீதியாவது படித்து பயன் பெறவும்


================


9  இலக்கிய, கலை நிகழ்ச்சிகள் சுமுகமான சமூகத்தை உருவாக்கும்: ஆளுநர் ரோசய்யா # மானாட மயிலாட, ஜோடி நெ 1  நிகழ்ச்சி எல்லாம் அதனாலதான் ஹிட் ஆச்சா?



==============

10  காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை # கல்யாணம் பண்ணா  ஆயுள் பூரா தண்டனைன்னு நினைச்சிருப்பானோ?


=================



11  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்:- இளங்கோவன் # அவர் வருவாரா? சரிந்து போன எங்கள் வாக்கு வங்கியை சரி செய்ய அவர் வருவாரா?


================


12 தேமுதிகவினர் பேரவைக்கு வர அதிமுகவே காரணம்: அமைச்சர் கோகுலஇந்திரா # ஓஹோ,  அப்போ வாக்களித்த மக்கள் காரணம் இல்லையா?



===================

13  சட்டப் பேரவை நடவடிக்கையில் திமுக இனி பங்கேற்காது-கலைஞர் # அப்போ எம் எல் ஏ க்கள் சம்பளம் வேணாம்னு சொல்லிடுவவாங்களா?


=================

14  திமு.க வுக்காக நான் கூடுதலாக உழைத்துள்ளேன், கேள்வி கேட்க உரிமை உள்ளது -அழகிரி  # இடைத்தேர்தல்களில் கள்ள ஓட்டு போட பாடுபட்டதை சொல்றாரோ?



==================



15 இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் அனுப்பியது-செய்தி # ஆஞ்ச நேயா ! நைசா அஜித்குமாரை அனுப்பிடுவியா?


==============


16  ஜனாதிபதிதேர்தலில்போட்டியிடும் ஹிலாரிகிளிண்டன் ஒரு லெஸ்பியன் - கிளிண்டனின் முன்னாள் காதலி சாலிபெர்டியூ # மிஸ் சாலி, சாலிட் எவிடென்ஸ் இருக்கா?



================

17  அதிமுக. சார்பில் ஜெ பிறந்தநாள் விழா  24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது # 5 நாளும் டெய்லி பிறந்தாரா? ஒரு நாள் கொண்டாடுனா போதாதா?


================

18  பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு # அமெரிக்காக்காரன் முந்திக்கப்போறான்


==================

19  22–ந்தேதி முதல் மார்ச் 1–ந்தேதி வரை தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறுகிறது விஜயகாந்த் அறிவிப்பு. # ஹெல்மெட் போட்டுட்டு போவாங்களோ?

===============

20  தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது  # சம்பளத்தை கட் பண்ணா ஆட்டோமேடிக்கா ஸ்ட்ரைக் வாபஸ் தான்


===============

Friday, March 04, 2016

பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

சசி இயக்கத்தில் வெளியாகும் ஆறாவது தமிழ்ப் படம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் நான்காவது படம்படத்தின் ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்பு ஆகிய இந்தக் காரணங்களே 'பிச்சைக்காரன்' படத்தை பார்க்கத் தூண்டின.


சசியின் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதால் இந்த கூட்டணி எப்படி இருக்கும்? என்ற யோசனையுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.


கதை: அம்மாவுக்காக தன் சுயத்தை மறைத்து 48 நாட்கள் வித்தியாசமான வேண்டுதலில் ஈடுபடுகிறார் விஜய் ஆண்டனி. ஆனால், அப்போது சிக்கல்கள்,தொந்தரவுகள், துன்பங்கள், தடைகளை சந்திக்கிறார். அவற்றை எப்படி தகர்க்கிறார்? வேண்டுதல் நிறைவேறியதா? அம்மா என்ன ஆனார்? என்பது மீதிக் கதை.



கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், உண்மைக் கதையை படமாக்கிய விதத்தில் இயக்குநர் சசி கவனம் ஈர்க்கிறார்.


வழக்கம்போல விஜய் ஆண்டனி என்ற ஒற்றை நபரை நோக்கியே கதை நகர்கிறது. கதையின் முதல் புள்ளியாக, மையப் புள்ளியாக, ஏன் கடைசிப் புள்ளியாக கூட விஜய் ஆண்டனியேதான் இருக்கிறார்.


சசி என்பதாலோ என்னவோ விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்கும் டெம்ப்ளேட் கதை இதில் கொஞ்சம் மாறுபடுகிறது. ஆனால், நடிப்பில் அந்த டெம்ப்ளேட்டை விஜய் ஆண்டனி பிடிவாதமாக பின்பற்றுவதுதான படத்தின் அழுத்தத்தை குறைக்கிறது.


அழுகையிலும், இழப்பிலும் விஜய் ஆண்டனி அதிகம் நடிக்காவிட்டாலும், முறைப்பாக வில்லன்களை எதிர்கொள்ளும்போது பாஸ்மார்க் வாங்குகிறார். ஆனால், அதே முறைப்புடன் தோள்களை நிமிர்த்தி மிடுக்குடன் படம் முழுக்க வலம் வருவது ஏன்? இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு விஜய் ஆண்டனி உடல் மொழியிலும், முக பாவனைகளிலும் கவனம் செலுத்தலாமே...



சான்டா டைட்டஸுக்கு படத்தில் அதிக வேலை இல்லையென்றாலும், கதாநாயகிக்குரிய பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார். முத்துராமன், தீபா ராமானுஜம், பக்ஸ் என்ற பகவதிபாபு ஆகியோர் பொருத்தமான தேர்வு.


பிரசன்ன குமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் எளிய உலகை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. வீரசெந்தில் ராஜு இன்னும் சில இடங்களில் கறாராக கத்தரி போட்டிருக்கலாம்.


விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பிச்சைக்காரன் தீம் இசையும், நூறு சாமிகள் பாடலும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் விடுகதையா இந்த வாழ்க்கை பாடலை அப்படியே உல்டா செய்தது ஏன்? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.


பேப்பர் போடுறவன் பேப்பர்காரன். பால் போடுறவன் பால்காரன். அப்போ பிச்சைபோடுறவன் தானே பிச்சைக்காரன் என்று ஃபார்வட் செய்யப்பட்ட மெசேஜை வசனமாக வைத்திருக்கிறார் சசி. என்ன சார் ஆச்சு உங்களுக்கு?



''எல்லோருக்கும் நிரந்தர எதிரி பசி. அதைக் கொஞ்சம் நேரம் நண்பன் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன்.''



''அவங்கபோடுற ஒரு ரூபாய்க்காக நமக்கு ரெண்டு கண்ணும் இருக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க.''


''பிச்சைக்காக ஏந்துற கை, அடிக்க ஓங்காது.''


''பிச்சைக்காரனா இருந்ததுக்காக வருத்தப்படலை. ஆனா, பணக்காரனா இருக்குறது அருவருப்பா இருக்கு''



''அவங்க கோயிலுக்குள்ள பிச்சை எடுக்கிறாங்க. நாம கோயிலுக்கு வெளியே பிச்சை எடுக்கிறோம்'' போன்ற வசனங்கள் கூடுதல் பலம் அளிக்கின்றன.


பிச்சைக்காரர்கள் வாழ்வை காட்சிப்படுத்தும்போது, அவர்கள் மேல் பரிதாபத்தை வரவழைக்காமல் நகைச்சுவையை தெளிக்க விட்டதில் சசியின் மனித நேயமும், புத்திசாலித்தனமும் தெரிகிறது.


ஆனால், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி சூழலை நெருக்கடி மிகுந்ததாக மாற்றி இருந்தால் படத்தின் தன்மை மாறியிருக்கும். ஆனால், பிளாஷ்பேக் என்ற பெயரில் மான்டேஜ் ஷாட்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்தி நம்மை டேமேஜ் செய்து பேண்டேஜ் போட வைக்கிறார் சசி. அதை மட்டும் கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.



பொதுவாக சசியின் படங்களில் கதாபாத்திரங்கள் உயிரோட்டமான உணர்வை பிரதிபலிக்கும். கதாபாத்திரத்தின் மென்மை பார்வையாளர்களுக்கும் கடத்தப்படும். ஆனால், பிச்சைக்காரனில் அந்த பெஞ்ச்மார்க் மிஸ் ஆகிறது. நாயக பிம்பத்தைத் தவிர்த்து உடன் இருக்கும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஸ்கோர் செய்வதையும் குறிப்பிட வேண்டும்.


பக்ஸ் எப்படி விஜய் ஆண்டனி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார், சொன்ன நேரத்துக்கு எந்த இடம் என்று சொல்லாமலேயே எப்படி வருகிறார், அந்த சாமியாரின் பின்புலம் என்ன என்று கேள்விகளின் பட்டியல் நீள்கிறதே தவிர, அதற்குப் பதில் இல்லை.


இந்த குறைகளையெல்லாம் தாண்டி அலுக்காமல், போரடிக்காமல் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலோ, நல்ல கதைக்களம் இருந்தால் மட்டும் போதும் என்றாலோ, பொழுதுபோக்குப் படமாக பார்க்க விரும்பினாலோ நீங்கள் 'பிச்சைக்காரன்' படத்தை பிரியத்துடன் பார்க்கலாம்.

thanx - the hindu

Pichaikaran.jpg
Poster
Directed bySasi
Produced byFathima Vijay Antony
Written bySasi
Screenplay bySasi
Story bySasi
StarringVijay Antony
Satna Titus
Music byVijay Antony
CinematographyPrasanna Kumar
Edited byVeera Senthil Raj
Production
company
Vijay Antony Film Corporation
Distributed byKR films and Skylark Entertainment
CountryIndia
Language
Tamil
run time = 130 minutes



The film's soundtrack album and background score were composed by Vijay Antony. The soundtrack album consist of seven tracks.The album was released on 07 Jan 2016. Behindwoods rated the album 2.25 out of 5 and noted that "Overall a pretty decent album but it does have a couple of thumping numbers!".[6] One of the songs created controversy due to lyrics which hurted the doctors.[7]
No.SongSingersComposerLength (m:ss)
1NenjorathilSupriya JoshiVijay Antony4:16
2Glamour SongVelmuruganVijay Antony4:10
3Nooru SamigalVijay AntonyVijay Antony2:45
4Unakkaga VaruvenJanaki IyerVijay Antony3:40
5Oru Vellai SotrukkagaYazin NizarVijay Antony3:32
6NenjorathilDeepak DodderaVijay Antony4:14
7Pichaikkaran(Theme)AnanthuVijay Antony1:13