Sunday, February 28, 2016

வெட்டிப்பயணம்

1  "தமிழகத்தையே மாற்றுவோம்".. நாளை 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறது நாம் தமிழர்- சீமான் # அடேங்கப்பா!! கட்சில 234 பேர் இருக்காங்களா?

============


நடந்தாலே சார்ஜ் ஏறும் ஸ்மார்ட் போன்கள்  மார்க்கெட்டில் #  அஜித் ரசிகர்கள் , வை கோ கட்சிக்காரர்கள், வாக்கிங் கிளப் ஆட்களுக்கு சவுகர்யம்


===========

எல்.கே.ஜிக்கு கட்டணம் ரூ.42,680 என அரசு அறிவிப்பு # நாங்க எல்லாம் டிகிரி முடிக்கவே 25,000 தான் 3 வருச ஃபீசே! ஏபிசிடி சொல்லித்தர இவ்ளோவா?


============


மனைவியை காப்பாற்றமுடியாத மோடியால் நாட்டை காப்பாற்ற முடியுமா?-நக்மா # ஆனானப்பட்ட புத்தரே சம்சாரத்தை விட்டுட்டுப்போன பின் தானே புகழ் பெற்றார்?


=============


ஜெ வும், சசிகலாவும் மகாமக விழாவிற்கு செல்லாமல் தவிர்ப்பதே மக்களுக்கு செய்யும் பேருதவி-EVKS  # அப்புறம் பாவத்தை எப்படி கழுவ?

================


மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம் உறுதுணையாக இருக்கும் -் கருணாநிதி #,நெட் ரிசல்ட்.இந்த தேர்தலிலும் நமக்கு நாமமே

==============

7 எம்.பி.க்களின் சம்பளம் 2 மடங்காக உயர்த்த பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை #,பிட்டுப்படம் பார்க்கறதுக்கு எதுக்கு இன் க்ரீமென்ட்?

==============

8 காங். இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும்: இளங்கோவன் அழைப்பு # கேப்டன் + குஷ்பூ + கலைஞர் !!


===========


9 நடிகை டாப்சியின் கையை பிடித்து இழுத்த சேலம் ரசிகை... போலீஸ் தடியடியால் சிதறிய ரசிகர்கள் # ரசிகைதானா? பேக் ஐ டி யா இருக்கப்போவுது

==========

10 திமுக, காங்கிரஸ் இணைந்து போட்டி்.காங் 24 சீட் - குலாம் நபி ஆசாத்# வள்ளுவர் கூடாநட்பு க்கு எத்தனை குறள் எழுதுனாரோ கலைஞர் 24,எழுதிட்டார்

=============

11 மதுவிலக்கைஎப்படிசெயல்படுத்துவோம் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது: ஸ்டாலின் திட்டப்படி செயல்படுத்துவோம்னு ஓப்பனா சொல்ல முடியுமா?

===========

12 காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை: மு.க. ஸ்டாலின்:# கேப்டன் அது பற்றி முடிவு எடுப்பார்.அவர் சொல்படி?


=============

13 திமுக - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு :குலாம் நபி ஆஸாத் அறிவிப்பு #  முறைப்படி கலைஞர் தானே இதை முதல்ல அறிவிச்சிருக்கனும்?


================



14 அம்மா குடிநீர்' திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்- ஜெ # எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல்ல தண்ணி காட்டப்போறாங்க?


===============

15  ஆன்லைன் ஏலம்: ரயில்வேக்கு 3 ஆயிரம் கோடி வருமானம் #  அடேங்கப்பா, இவ்ளோவ்  லாபத்துல கம்பெனி ஓடியும் எதுக்கு ரயில்  கட்டணம் உயர்த்தனும்?


=================


16  கோர்ட்டிடம்  பல முறை குட்டு வாங்கியும்  ஜெ திருந்தவில்லை- ஸ்டாலின்  # GOODடுன்னு  தப்பா நினைச்ட்டாரோ?


==================


17  சமூக வலைதளங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு # ஓட்டுப்போடுன்னு ஒரு ட்வீட் போட்டா ஒரு ஆயிரமா? சபாஷ்



================

18  ஸ்டாலின்-ன் மக்களை சந்திக்கும் பணி  வெற்றிப் பயணம்!- திண்டுக்கல் லியோனி -  எனக்கென்னமோ வெட்டிப்பயணம்னு தோணுது


===================


19 இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்-செய்தி # கடக ராசி இல்லா குழந்தைகள் வளர ஆவண செய்யனும்


===============


20 ஜெ., நல்லதே செய்வார்!- செங்கோட்டையன் -எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,  # அதாவது தேர்தல் கிட்டே வந்தா மட்டும்?


====================

தலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா? எப்டி?

1  டீக்கடை மாஸ்டருக்கு உடம்பு சரி இல்லையாம்

 அதுக்கென்ன இப்போ?

 லைட் டீ மட்டும் தான் போட்டுத்தருவாராம், ஸ்ட்ராங்க் டீ முடியாதாம்


=================

2  மேடம்,  என்ன இது? குனிஞ்சு உக்காருன்னு  படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?

 நிமிர்ந்து நில்-னு ஆல்ரெடி வெச்ட்டாங்களே?


=============

3 டியர்! உங்க சொந்த ஊர் எது?

HOSURE

அங்கே என்னைக்கூட்டிட்டுப்போவீங்களா?

OH,SURE



==============

4  ஜட்ஜ் = எதுக்காக தலைவரை மேடைல இருந்து தள்ளி விட்டீங்க?

கைதி=  என்னை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுன்னாரு


===============

5 கல்யாணியை என்னால மறக்கவே முடியலை

 விடு கழுதையை,வேற ஃபிகரா இல்ல?


 கல்யாணி  பீர் பற்றி சொல்றேன், கிடைக்கவே மாட்டேங்குது

===============


6  ஊட்டிலயா இருக்கே? பயங்கரமா குளிர் அடிக்குமே எப்டி சமாளிப்பே?


என்ன பண்ண? பொண்டாட்டி அடிச்சாலும், குளிர்அடிச்சாலும் திருப்பி அடிக்கவாமுடியும்?


============




7 இந்த 4 மாத்திரையையும் சுடு தண்ணில சாப்பிடுங்க,

 டாக்டர், எனக்கு வந்திருப்பது ஒற்றைத்தலைவலிதானே?  ஒரு மாத்திரை  சாப்பிட்டா போதாதா?

==============

8  தலைவர் எதுக்காக வீட்டுக்கு வீடு ஒரு ட்யூப்லைட் தர்றாரு?

 சுத்த ட்யூப் லைட்டுடா நீ. அவர் எல்லாருக்கும் பல்பு தர்றாரு


===============


9 போன தை யிலேயே எனக்கு மேரேஜ் ஆகிஇருக்கவேண்டியது, மிஸ் ஆகிடுச்சு,

 போனதையே  நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்காத,ஒரு பொண்ணு மிசஸ் ஆகி”டும் டும்”


==============

10  மேடம், ரயில்ல உங்க பக்கம் குழந்தையை படுக்க வைக்காம  எதிர் சீட்ல ஏன் படுக்க வெச்ட்டீங்க?

DRதான் குழந்தையை இப்போதைக்கு தள்ளிப்போடுங்கன்னாரு


================

11  நாங்க ஜெயிச்சா சினிமா தியேட்டர் ஷோ டைம் எல்லாம் மாத்துவோம்

 எதுக்கு தலைவரே?

 ஆட்சி மாறியது, ஆனா காட்சி மாறலைன்னு சொல்லிடக்கூடாதில்ல?


=================

12  உங்களுக்கு  தண்ணில கண்டம்  இ!ருக்கு தலைவரே!

 அய்யய்யோ, அப்போ சரக்கு அடிக்க முடியாதா?

=================


13  ஜட்ஜ் = இந்த வழக்கை சிங்கப்பூர்க்கு மாத்தனுமா? ஏன்?

கைதி= நான் எப்போதான் சிங்கப்பூர் பார்க்கறது?


================

14   என் சம்சாரம் பயங்கரக்கோபக்காரி

 எப்டி சொல்றே?

 குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக்கழட்டிடுவா


=================

15  டிராஃபிக் போலீஸ் = ஆர் சி புக் எங்கே?

 சாரி சார், புக் வாங்கற பழக்கம் எல்லாம் இல்லை, லைப்ரரி போய்டுவேன்


================



16 நாங்கள்  ஆட்சிக்கு வந்தால்  ஆண்களைக்கவர  மலிவு விடை மதுக்கடை , பெண்களைக்கவர மலிவு விலை நகைக்கடை திறப்போம்


=================


17 டியர், என் தங்கச்சியை  டெடி பியர் பொம்மைன்னு வர்ணிச்சீங்களாமே?

அது வந்து.. ம்ம். நாம பேசிட்டு இருக்கும்போது சிவபூஜைல கரடி போல் வந்துடறாளே?

===============

18  தலைவரே! நீங்க தான் எங்க தெய்வம்

 எப்டி?

 கஞ்சிக்கே வழி இல்லாம இருந்தாலும் கட்டிங்க்கு வழி பண்ணித்தர்றீங்களே?



=================

19  குருவே! வாழ்க்கை பற்றி உங்க கருத்து என்ன?

 அம்பிகா -சிவாஜி நடிச்ச சோகப்படம்னாலும் அதுல சில்க் கிக் பாட்டு 1 இருக்கு


=================

20 தலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா? எப்டி?


 அக்டோபர் 31  ஆரம்பம் ரிலீஸ், அடுத்த ஜனவரி 10  வீரம் ரிலீஸ்.இடைப்பட்ட கேப் 72 நாள் தானே?


=================

Saturday, February 27, 2016

டாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோயின் ஆகிடலாமா?

சார்.உங்க ஹோட்டல்ல வீட்டுச்சாப்பாடு மாதிரியே இருக்கும்னீங்க?


ஆமா.ருசி எப்படி?
அதை விடுங்க.பரிமாறுவதற்கு லேடீஸ்.யாரும் கிடையாதா



============

2 திருவள்ளுவரே! நீங்க ஏன் அவளதிகாரம் எழுதலை?


வாசுகி விடலை



==========

3 டியர்.பிப்ரவரி 14 சன்டே.என்ன பண்ணலாம்?


1ம்.பண்ண முடியாது.வீட்ல அனுப்ப மாட்டாங்க


===========


4 டியர்!ஆண்கள்  எல்லாம் பொய் சொல்லவே  படைக்கப்பட்டவர்கள்என்பது உண்மையா?

 ஆமா, பெண்களை வர்ணித்துக்கவிதை எழுதும்போது கவிதைக்குப்பொய் அழகுதானே?


==============


5  டியர்,பிப்ரவரி 14  ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டு பீச் வந்துடு


லூசு, சண்டே. நம்ப மாட்டாங்க,அம்மாவும் கூடவே வருவாங்க



==============


6 எப்போப்பார்த்தாலும் என் இடையில் கிள்ளறீங்களே?என்னை கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா?


சரி, கரிசலாங்க”கன்னி”க்கீரைன்னு நினைச்சுக்கறேன்


==================



டாக்டர். இதுவரை எனக்கு வந்த கனவுகள் எதிலுமே நான் முடிவே பார்த்தது இல்ல .ஏன்?
தியேட்டர்லயே க்ளைமாக்ஸ் வர்ற டைம் ல கிளம்பிடுவீங்க்ளோ?




============



8 சார்.நீங்க சொல்ற ஜோக் எந்த கோணத்தில் பாத்தாலும் சிரிப்பு வரல"



கும்பகோணம் ,அரக்கோணம் இந்த ஊர்ல படிச்சுப்பாருங்க


=========


9 பூ மாலை போடாம பொண்ணோட கழுத்துல மாப்ளை ஏன் வடை மாலை போடாறாரு?


பொண்ணோட பேரு ஹனு மலர்.அனுமார் பக்தையாம்


===========

10 டாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோயின் ஆகிடலாமா?


ஏம்மா.விட்டா பச்ச சேலை கட்னா பச்சப்புள்ள ஆகிடலாமா?னு கேட்பே போல



============


11 நான் என்ன எழுதுனாலும் எல்லாரும் பாராட்றாங்க.அப்போ நான் பெரிய எழுத்தாளினி தானே?


காலை வணக்கம் னாக்கூட கவிதை பிரமாதம் மிஸ் ங்கற உலகம் இது


=============


12 மிஸ்! இந்த ஃபோட்டோ  எப்போ எடுத்தது?

கராத்தே'ல  ப்ளாக் பெல்ட் வாங்கினப்போ


ஓஹோ, மான் கராத்தே வா?


====================

13  மாப்ளை, என் பொண்ணுக்கு கராத்தேன்னா இஷ்டம், அட்லீஸ்ட் குங்க்ஃபூ தெரிஞ்ச மாப்ளை தான் வேணுமாம்

 எனக்கு குஷ்பூவை வேணா நல்லா தெரியும், ஓக்கேவா?


================

14 தலைவரே! மீண்டும் கூடா நட்பா?

அரசியலில் நிரந்தர கூடா நட்பு என்பதும் இல்லை, நிரந்தர கூடா பகையும் இல்லை


==============


15  சார், நம்ம படத்துல  ஏழரை இருக்குன்னு நியூஸ் வந்திருக்கே?


யோவ், கொன்றுவேன், ஏழு ஃபைட் சீனும் , ஒரு அரைகுறை ஃபைட் சீனும் இருக்கு


===============


16 திருமணம் ஆகாத ஆண்களுக்கு வாடகைக்கு வீடு தரமறுப்பதன் காரணம் என்ன?

இருக்க இடம் கொடுத்தா  படுக்க இடம் தேடுவானே?அதான்


=================

17 டியர், உடம்பு சரி இல்லை, யாராவது செய்வினை செஞ்சிருப்பாங்களோ?

 இல்லை, நான் தான் உப்புமா செஞ்சேன்

===============


18  மிஸ்!காதலர் தினத்தன்னைக்கு  பச்சை கலர் சுடி  போட்டுட்டு வந்தா  ஐ லவ் யூ சொல்லலாமா? உங்களுக்கு?

 பச்சை பச்சையா திட்டிடுவேன், பரவாயில்லையா?


===============

19 சிவப்பு கலர்  டிரஸ் போட்டா ஆள் உண்டு, பச்சை போட்டா ஆள் இல்லை


ஓஹோ, அப்போ  சிவப்பு ஜாக்கெட், பச்சைப்பாவாடை போட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்?


===============


20 டியர்! நாளைக்குதானே லவ்வர்ஸ் டே, இன்னைக்கு ஏன் பார்க் போலாம்கறீங்க?

ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இ ன்றே செய்! முந்திக்கலாம்னுதான்


==================

உங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா?

1  ஹீரோ  எப்போ பாரு லெமன் ரைஸ், கோக்கனட் ரைஸ் -னு சாப்ட்டுட்டே இருக்காரே?

 ரைசிங்க் ஸ்டார்-னு பேர் எடுக்கனுமாம்

================


2 பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் யார்? ஆணா? பெண்ணா?

கை தேர்ந்தவர்  ஆண், வாய்  தேர்ந்தவர் பெண்


==============

3  ராத்திரி 10 மணிக்கு கடைக்குப்போறே, பி கேர் ஃபுல்

 சரக்கு வாங்கத்தானே போறேன், பீர் கேர் ஃபுல்

=============

4 டியர்! ஒரு ஃபிரெஞ்ச் கிஸ் குடு

 சாரி, நான் தமிழ் டீச்சர், அது எல்லை தாண்டிய பயங்கர வாதம்


==============

5  குருவே! குழந்தை வரம் வேண்டும்


 பெண்ணே! நம் ஆசிரமத்தில்  சேர்ந்து விடு, பின் பார். வாரா வாரம் ஆரவாரம் தான்

=============


6 உங்களுக்கு சனி திசை 6  வருசமா நடக்குது

 அடேங்கப்பா, சனி பகவான் அஜித்ரசிகரா? நடந்துட்டே இருக்காரே?


=============


7   ஜட்ஜ் = அப்ரூவரா மாறிட்டா தண்டனையைக்குறைப்பேன்

கைதி = யுவர் ஆனர், இதுவும் ஒரு வகைல லஞ்சம் தானே?


===============


8 டீச்சர்! இரட்டைப்படை  என்பது ஒற்றைப்படை தானே?


 என்னடா உளர்றே?

 இரட்டைப்படை = 7 எழுத்து , அப்போ  அது ஒற்றைப்படை தானே?


==============


9 ஜட்ஜ் = லிஃப்டில் போகும்போது சக லேடி ஸ்டாஃப் கிட்டே சில்மிஷம் செஞ்சீங்களா?


கைதி = சாரி யுவர் ஆனர், அவ எங்க ஆஃபீஸ்னு தெரியாது


===========

10  தலைவரோட பையன் ஆடல் கலையில் வல்லுநராம்

 அடடே, அப்போ தலைவர்?

 கையாடல் கலையில் விற்பன்னர்


==============

11  கபாலி, ஒரு மூட்டை  மாங்காய் கொண்டு வந்து இருக்கியே எதுக்கு?

புரியலீங்களா? மாந்தோப்பில் திருடுனதுக்கான “மா”மூல்”


===============

12  பொண்ணுங்க கிட்டே உன் வீரத்தைக்காட்டாதே!


 மிஸ்!என் கிட்டே இருக்கும் வீரம் டிவிடி அஜித் படம், தாராளமா பார்க்கலாமே? டீசண்ட்டாத்தானே இருக்கும்?

==============

13   ஹிப்னாடிசம் சொல்லித்தரும் லேடி டீச்சர் டெய்லி  லோ ஹிப் சேலைல வருதே?

 ஒரு வெளை “லொ ஹிப்”னாடிசமோ  என்னவோ?


================

14   தலைவரே! குற்றப்பத்திரிக்கை ல என்ன தேடறீங்க?


கன்னித்தீவு  சிந்து பாத் கதை , ராசிபலன்,  கார்ட்டூன் , கேள்வி பதில்.. இப்டி



===================

15  பொண்ணு பார்த்துட்டு வந்தியே  பொண்ணு  எப்ப்டி?

 அவ லட்சணமா இருக்கா!

 சரியா , குழப்பாம சொல்லு. லட்சணமாவா? அவலட்சணமாவா?


===============

16   மேடைல  குட்டிக்கதை சொல்லிட்டு இருந்த  தலைவர்  டாக்டர் பட்டம் கிடைச்சபின் ஆளே மாறிட்டார்

 எப்டி?

 ஒரு ஊர்ல ஒரு நர்ஸ் இருந்ததுனு கத 

==============


17   தலைவரே! நம்ம கட்சியோட லட்சியம் என்ன?

 லட்சியமா? அப்டின்னா என்ன?


==============


18  30 நாள் விடாம தம் அடிச்சு செயின் ஸ்மோக்கர்னு கின்னஸ் ல இடம் பிடிக்கனுமாம்

அடப்பாவி! சகாப்”தம்” படைக்கப்போறேன்னானே, இதானா?


===============

19 
ஃபிரிட்ஜுக்குள்ளே இருந்து டிவிடி எடுத்து  தர்றீங்க? செல்ஃப்ல தானே வெச்சிருப்போம்?

 நீங்க தானே “ஜில்”லா டிவிடி வேணும்னீங்க?


================


20 உங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா?

 டீ போட்டு அவ பக்கத்துல டம்ளரை வெச்ட்டு வந்துடுவேன், கூப்பிட மாட்டேன், கோவிச்சுக்குவா


====================

Friday, February 26, 2016

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்


கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற 2 ஆஃபீசர்கள் அடுத்தடுத்து கொல்லப்படறாங்க, சாதா கொலை இல்லை , கொடூரக்கொலை. சாதாவுக்கும் கொடூரத்துக்கும் என்ன வித்தியாசம்? மற்ற அரசியல்வாதிகள் ஊழல் பண்ணினா அது சாதா ஊழல், ஆனா தானைத்தலைவரும், புரட்சித்தலைவியும்  ஊழல் பண்ணினா  அது மெகா ஊழல், சீரியல் ஊழல். மாற்றி மாற்றி 2 பேரும் ஆட்சிக்கு வந்து  முறை வெச்சு ஊழல் பண்ணுவாங்க இல்லையா? அது போல் ஒரே மாதிரி இந்த 2 கொலையும் ரண கொடூரமா நிகழ்த்தப்படுது



 இந்த கேசை  டீல் பண்ண  நம்ம ஹீரோவை நியமிக்க ட்ரை பண்றாங்க, ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், ஆனா அவர் ஒரு போலீஸ் என்கவுண்ட்டர்ல ஒரு ரவுடியை போட்டுத்தள்ள முயற்சிச்சதில் பெரிய இடத்துப்பகையை சம்பாதிச்சு அதன் மூலம் தன் மனைவி, மகளை ஒரே சமயத்தில்  இழந்தவர். அந்த சோகம் தாங்காம எப்போப்பாரு சரக்கு அடிச்ட்டே இருக்காரு.

 அவரைக்கன்வின்ஸ் பண்ணி  கேசை  எடுத்துக்க வைக்கும்போது  இடைவேளை வந்துடுது. ஆக மொத்தத்துல முதல் 1 மணி நேரம்  1 மே இல்லாம படத்தை  ஓட்டிட்டாங்க.

 ஆனா  ஒரு நல்ல  சைக்கோ க்ரைம் த்ரில்லருக்கான முஸ்தீபுகள்  இருப்பதால  தமிழன் ஆர்வமாப்பார்க்கறான்.

 முன் பாதியில்  இருந்தா  எல்லா  மைனசையும்  பின் பாதி  த்ரில்லர் சரி செஞ்சுடுது , பிரமாதமான திரைக்கதை



ஹீரோவா அருள் நிதி.  அவர்  சோகமா கிளப்ல சரக்கு அடிப்பது, வீட்டில் சரக்கு அடிப்பது  என பாதிப்படத்துக்கு டாக்டர் ராம்தாசே செம கடுப்பு ஆகும் அளவு  குடிச்ட்டே இருக்கார். முடியல, ஆனா போலிஸ் ஆஃபீசரா கம்பீரம் காட்டுவது, துப்பு துலகுவது எல்லாம் கிளாசிக்

 ரோபோ சங்கர்  காமெடி  போலீஸ் . சார்லி சிரிப்புப்போலீஸ் / 2 பேரும் ஆரம்பக்கட்ட்டங்களில்  இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்க்காம துக்க வீட்டில் மொக்கை ஜோக் சொல்லி கடுப்படிக்கறாங்க கேப்டனின்  தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க , ரமணா டைப் புள்ளி விபர டயலாக் எல்லாம் ரோபோ சங்கர் நல்லாவே பண்றார், ஆனா அது எடுபடலை.


ஹீரோயினா  2 பேரு . போலீஸ் ஆஃபீசரோட மனைவி கேர்க்டர். ஐஸ்வர்யா ராஜேஷ். டிவி ப்ரோக்ராமர்  லேடி.  ஐஸ்வர்யா தத்தா  2 மே பாஸ் மார்க் ஃபிகருங்க தான்.இருவருக்கும்  போதிய வாய்ப்புகள் இல்லை..


ஸ்டைலான எடிட்டிங், அழகான ஒளிப்பதிவு  செமயான  பிஜிஎம் என த்ரில்லர் படங்களுக்கே உரித்தான் பிளஸ்கள் படம் நெடுக


வில்லனை ஆரம்பத்தில்  இருந்தே  காட்டி ஆனால் முகத்தை மட்டும் கடைசி வரை காட்டாமல் சாமார்த்தியமாக  கேமரா கோணங்கள் அமைத்த ஐடியாவுக்கு  ஒரு ஷொட்டு




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ரோபோ சங்கர் =,ஒரு ஏசி எனக்கே மீசை இல்லை.உனக்கு ஏன் மீசை?


சார்லி =விடுங்க.அவருக்கு வளருது.வெச்சிருக்காரு #,ஆ சி

2 நான் சாதாரண.டிரைவர்னு நினைச்சு பேசிட்டிருக்கீங்க.


பின்னே ஸ்க்ரூ ட்ரைவரா? #,ஆ சி




3 பார்க்கற எல்லாத்தையும் அநியாயம்னு சொல்லக்கூடாது.கிட்டே போய் பார்த்தாதான் அதோட நியாயம் தெரியும் #,ஆ சி






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்




ஆராதனா வராததால் அஞ்சனா உடன் ஆறாது சினம்


2 சீரியல் கில்லர் ஸ்டோரி ,சைக்கோ த்ரில்லர் டைப் கதைகளில் சென்ட்டிமென்ட் சீன் களை.வலிய திணிக்கக்கூடாது # ஆ சி





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 மலையாளத்தில் வந்த மெமரீஸ் படத்தின்  அதிகாரப்பூர்வமான  ரீமேக் என்பதால் கவுரவமாக டைட்டிலில் கதை - ஜீத்து ஜோசப் என உரிய அங்கீகாரம் தந்தது


2 ஓப்பனிங்கில்  வரும் 2  கொலைக்காட்சிகள், அதற்கான பின்னணி இசை  செம கலக்கல்


3  ஒரிஜினல் கதையை சிதைக்காம  நேர்மையா  திரைக்கதை அமைத்த விதம்







இயக்குநரிடம்  சில கேள்விகள்



1 கொலை நடந்த இடத்தில் எந்த விதமான துப்பு துலக்கிலும் ஈடுபடாமல் ரோபோசங்கர் , சார்லி மொக்கை போட்டுக்கொண்டிருப்பது எதுக்கு ? சீரியசான  கதையில் சம்பந்தமில்லாம மொக்கை ஜோக் எதுக்கு?

2  ஹீரோ வந்துதான்  எல்லாமே கண்டுபிடிக்கனும் என எழுதப்படாத விதி இருந்தாலும் அதுக்குன்னு மற்ற போலீஸ் எல்லாம் ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டேன்னா எப்படி? பாஸ்?


3 கொலை செய்யப்பட்டவனை சிலுவையில் அறைவது போல் மரத்தில் மாட்டி வைத்ததை வைத்து  சீரியல் கில்லர் ஒரு கிறிஸ்டியன் என கண்டு பிடிப்பது பெரிய பிரமாதமான யூகம் போல் பில்டப் தருவது  ஓவர்

4  கொலைகாரனுக்கு கொலை செய்யப்பட்ட ஆட்களோட மனைவிகள் மேல் இருக்கும் கோபம் தான் என்பதை  ஹீரோ எப்படி கண்டு பிடிச்சார் என்பதற்கு விளக்கமே இல்லையே?

5   ஹையர் ஆஃபீசரான ராதாரவி சார்லியை அழைத்து ஒரு வேலை சொல்லும்போது அவர் ஓபிஎஸ் மாதிரி எதுக்கு பம்மிக்கிட்டே குனியனும்> விறைப்பா நின்னு சல்யூட் அடிக்கறதுதானே போலீஸ் அடையாளம்? அவரும் அதிமுக வில் சேர்ந்துட்டாரா?

6 காலேஜ் கிளாஸ்  ரூம்ல கோ எட்  என இருந்தும்  பொண்ணுங்க 5 பேர்  செல் ஃபோன்ல பிட்படம் பார்ப்பது நம்ப முடியலை ,அதுவும்  முதல் பெஞ்ச்ல உட்கார்ந்துட்டு..? எப்டின்னா நாங்க எல்லாம் பிட் புக் படம் பார்க்கும்போது  லாஸ்ட் பெஞ்ச்  போவோம்.பொண்ணுங்க எப்படி  தைரியம் வந்தது ?


7  அந்த 5 லேடீசும்  ஒருவரை மாட்ட வைப்பதற்காக அவரது சொல் ஃபோனில் இருந்து  மேடம்க்கு ஆபாச எஸ் எம் எஸ்  அனுப்பியது  ஓக்கே, ஆனா அதை செண்ட் ஐட்டம்ல போய் எரேஸ் பண்ணவே இல்லையே?

8 காலேஜ்ல 3 வருசம் க்ளோசாப்பழகுன அந்த 5 பேரும் தங்கள் செல்ஃபோனை அட்ரசை பரஸ்பரம் ஷேர் பண்ணிக்காமயா இருப்பாங்க? போலீஸ்  விசாரிக்கும்போது  அவங்க செல் ஃபோன் நெம்பர்  வாங்கி வைக்கலைனு அசால்ட்டா சொல்றாங்க, போலீசும் அது பற்றி  கேட்கவே இல்லையே?

9 ட்யூட்டில மீண்டும்  ஜாயின் பண்ணின  ஹீரோ விசாரணை நடக்கும்போதே  நடு ரோட்டில் பட்டப்பகலில் சரக்கு அடிப்பது எதுக்கு ?

10  கிட்டத்தட்ட மேரேஜ் ஆகி 10 வருசமா  மாசமா இல்லாத காலேஜ் லேடி லெக்சரர் தன் கணவர் விபத்தில் இறப்பதற்கு  3 மாதம் முன்பு எப்படி மாசம் ஆனார்னு  போலீஸ் சந்தேகப்படவே இல்லையே? ( பிடிச்சமில்ல பாயிண்ட்டை, தினத்தந்தி மாலை மலர்  க்கு நன்றி )


11  பல கொலைகளை செய்த அனுபவம் மிக்க கொலையாளி  ஹீரோவை லாங்க் ஷாட்டில் கத்தியால் தாக்க முயற்சிக்கும்போது கத்தியின் கைப்பிடியைப்பிடித்து  கத்தியை   ஹீரோவை  நோக்கி வீசறாரே? முறைப்படி கத்தியின்  கூர்மையான பகுதியை பிடிச்சுத்தானே  வீசனும்?

12  கொலைகள் நடந்த 3  ஊர்களுக்கும் இடையே ஆன தூரம் 150  கிமீ தான் என்பதை வைத்து துல்லியமாக அடுத்த ஊரை எபடி கண்டுபிடிக்கறார்  ஹீரோ? 150  கிமீ ரேடியசில் எத்தனையோ  ஊர் இருக்குமே?

13  குறிப்பிட்ட அந்த 5 பெண்களை பழி வாங்க கொலையாளி அந்தந்த பெண்னின் கணவனை கொலை செய்தால் துன்புறுவர் என நினைப்பது லாஜிக் இல்லை. ரேப் & மர்டர் என்றால் கூட ஓக்கே






சி  பி  கமெண்ட் =ஆறாது சினம் - முன் பாதி சுமார், பின் பாதி பிரமாதமான சைக்கோ லவ் த்ரில்லர், ஏ சென்ட்டர் ஹிட் , விகடன் மார்க் - 42 , ரேட்டிங்க் 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே







 ரேட்டிங் = 3/5 


a



Director: Arivazhagan
Producer: N. Ramasamy
Writer: Arivazhagan
Story: Jeethu Joseph
Starring: Arulnithi, Aishwarya Rajesh, Aishwarya Dutta, Anupama Kumar
Music: D.Imman
Cinematography: Aravind Singh
Editor: Rajesh Kannan S.
Production company: Sri Thenandal Films
Release date: 26th February 2016
Language: Tamil

ஈரோடு அன்னபூரணியில்  படம் பார்த்தேன்