Thursday, February 25, 2016

ஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் அதிர்ச்சி

1  விஜயதரணி ஒரு போராளி - சோனியா காந்தி # ஏம்மா, பிடிச்சு உள்ளே போட்டுடப்போறாங்க, எங்க ஊர்ல போராளின்னாலே ஜெயில்தான்


=============

வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும்-கட்சியினர் வலியுறுத்தல் # பின் தேதி இட்ட காசோலையா தந்துடனும், ஜெயிச்சா செக் பாஸ் ஆகும்


==============


அதிமுகவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம்' - இல கணேசன் # இரட்டை இலை கணேசன் ஆகிடுவாரோ?


=============


இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் - அமெரிக்கா # சுத்தம் , ரொம்ப லேட் பிக்கப்யா  நீங்க


==============

5   தமிழக அரசு மீது மக்களுக்கும், எங்களுக்கும் திருப்தியில்லை- இல கணேசன் # மாத்தி மாத்தி பேசாதீங்க. நீங்க "இரட்டை  இலை "  கணே”SUN"


===============


6  பாமக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு # ஏ”மாற்றம்” , பின்னேற்றம்


=================


அவசரமாக பதவி ஏற்பவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பதில் சொல்ல வேண்டும்-கருணாநிதி # ஆட்சி மாற்றத்துக்கு இன்னும்  5 வருசம் இருக்கு தலைவா!


================

சட்டப்பேரவைக்கு செல்லதயங்கும்விஜயகாந்துக்குஅரசியல் நடத்ததகுதியில்லை-சுப.உதயகுமார் # அப்டிப்பார்த்தா கலைஞர், ஜெ 2 பேருமே தயங்கி இருக்காங்களே?

=============


9  தேனியில் சிறிய மலைக்குன்றைக் காணவில்லை: பதிலளிக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு # யாருய்யா அந்த மலை முழுங்கி மகாதேவன்?


======================


10  அ.தி.மு.க., பேனர்கள் வைக்க ஒரே நாளில் விண்ணப்பம்; அனுமதி # தனக்கு தனக்குன்னா டினுக்கு டினுக்குங்குமாம்


========================
  தேமுதிகவின் காஞ்சிபுரம் மாநாடு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும்- விஜயகாந்த் # சரவணன் மீனாட்சி மாற்றம் கூட ஏற்படாது.

11

===============

12   பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டு அவரது மனைவி மனு :#,எல்லா ஊர்லயும் பொண்டாட்டிங்க புருச.னை செக் பண்ணிட்டேதான் இருப்பாங்க போல


===========

13 கோஷ்டி பூசல் வேண்டாம்: ஒற்றுமையுடன் தேர்தலை சந்தியுங்கள்;- ராகுல் இல்லாத அரசியல் கட்சியும் ,சண்டை போடாத சக்களத்திகளும் உலகில் இல்லை


==============

14 என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார்-கேஜரிவால்
- என் வெற்றிக்குப்பின்னாலும் என் மனைவிதான் ஆனா.விலகி -மோடி

==============


15 அதிமுக அரசின் ஸ்டிக்கர் சாலைகள் 3 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்காது:-விஜயகாந்த் குற்றச்சாட்டு # எலக்சன் முடியும் வரை தாக்குப்பிடிக்கும்


================


16  எந்தப் பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார்.-கலைஞர் # ஸ்டாலினுக்கு சி எம் பதவி உண்டா? இல்லையா?


=============

17  இனி ரயில் டிக்கெட்டுடன் உணவு, போர்வை, தலையணையும் ரிசர்வ் செய்யலாம்!  # ஒரு டம்ளர் பால், ஒரு முழம் மல்லிகைப்பூ தான் பாக்கி


==============

18   ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் திமுகதான்: ஸ்டாலின்  #  சி எம்மா  ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவரா அழகிரி , யோசிச்சுப்பார்க்கவே நல்லாருக்கு 


=============

19  மதுரை, பழனி கோவில்களுக்கு சசிகலா திடீர்  விஜயம் # வேலை செய்யறவன் ஆஃபீஸ் போவான், பாவம் செஞ்சவன் கோயில் போவான்


===============


20  செல்பீக்காக சாகும் மக்களை கொண்ட டாப் 10 நாடுகள், இந்தியா ஆன் டாப்..! # சுத்தம், ஒரு செல்ஃப் தூ  பை  கேப்டன் ரசிகன்


===================

Wednesday, February 24, 2016

முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூட டெபாசிட் கூட கிடைக்காது சாரி

1  வரும் தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனித்து போட்டியிட பயப்படுகிறது: அன்புமணி ராமதாஸ்..# இத்தனை வருசமா நாம எப்டி பயந்து இருந்தோம்?


=============


2 விஜய்யிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்: ஜீவா!# பட டைட்டில் "போக்கிரி" "ராஜா"ல 1விஜய் படம் ஒரு அஜித் படம் ,ஒரு ரஜினி படம்.அடடே!

============

3 தேர்தலுக்கு பிறகு பாமக இருப்பது கடினம்- க.அன்பழகன் # ரேஸ்ல 2வதா வர்றவர்  3 வதா வர்றவரை நக்கல் அடிச்சதை 1வதா வந்தவர்  நக்கலா  பார்த்தாராம்


===============

தமிழக காவல்துறையினர் திறமையற்றவர்கள்: உயர்நீதிமன்றம் கண்டனம் # இல்லீங்களே, மாமூல் எல்லாம் நல்லாதானே வசூல் பண்றாங்க?

===========


ஊழல் விஷயத்தில் சமரசம் கிடையாது- ராகுல் காந்தி -# வாக்களிக்கும்  பொதுஜனங்களை சாம்பார்னு நினைச்ட்டார் போல


===============


6  பா.ம.க வளர்ச்சியை பொறுக்க முடியாமல் 
மாநாட்டுக்கு தடை விதிக்க முயல்வதா?-ராம்தாஸ் # தடைவிதிக்க முயற்சி உடையார் இகழ்ச்சி அடைவார்


============================


7  துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம்: ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விசாரணை கமிஷன்- கருணாநிதி  # இன்னைக்கு பறிச்ச கிலாக்காயை விடுங்க, நேத்தைய பலாக்காய்?


==================


அதிமுக, திமுகவினர் நிகழ்ச்சிகளால் விழிபிதுங்கிய டிராபிக்சென்னை மக்கள் அவதி # தமிழ் நாட்டு ஜாதகத்துல ராகுவும் , சனீஸ்வரனும் பிடிச்சா 5 வருசம்


==============

ஸ்டாலின் ராஜதந்திரியல்ல; முட்டாள் என்றும் சொல்லமாட்டேன்-வைகோ # மதிமுக  மதிகெட்ட முட்டாள்கள் கட்சினு நான்சொல்லமாட்டேன்னு அவர்சொல்லச்சொன்னார்


=============

10 மு.க.ஸ்டாலினை வீடு தேடி போய் சந்தித்த 'வாழும் கலை' ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் -திடீர் சந்திப்பு # உதய சூரியனை “ரவி” சந்தித்ததில் ஆச்சரியம் இல்லையே?


==================

11 பிப்20மாநாடு-காஞ்சி குலுங்கட்டும்,காலம் கனியட்டும்,ஆட்சி மாறட்டும்-விஜயகாந்த்  # இப்பவே  கண்ணைக்கட்”டும்”,கூட்டணி தெறிக்கட்”டும்” 


=============


12 மக்களுக்கு நன்மை செய்வோர் ஆட்சிக்கு வர வேண்டும் -பரூக் அப்துல்லா  # அப்புறம் எதுக்கு சம்பந்தம் இல்லாம கலைஞரை, வை கோவை எல்லாம் சந்திச்சீங்க?


================


13 234 தொகுதிகளிலும் இ.ஜ.க தனித்துப் போட்டி-பாரிவேந்தர் # முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூட  டெபாசிட் கூட கிடைக்காது சாரி


===============

14  அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது : ஜெயலலிதா # பிளாஸ்டிக் மாதிரி? அதான் பிளா”ஸ்டிக்கர்” யூஸ் பண்றாங்களா? கட்சி ஆளுங்க?


================

15  காங்கிரசால் மட்டுமே காங்.,-யை தோற்கடிக்க முடியும் : ராகுல் # அதாவது கோஷ்டிசண்டை போட்டு நீங்களே தோத்துக்குவீங்க? பிஜேபி தேவை இல்லை?


==================


16  காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., நிபந்தனை
25 சீட்; ஆட்சியில் பங்கு கிடையாது என பேரம் # ஸ்டாலின், அழகிரிக்கே ஆட்சியில் பங்கு இல்லையாம்



===============

17 மஹாரஷ்டிரா CM பட்நாவிஸ் மனைவிக்கு சாமியார் நெக்லஸ் கொடுத்ததால் சர்ச்சை #  சி எம் சார், நாட்டை அப்புறம் பார்க்கலாம், முதல்ல வீட்டைப்பாருங்க


============

18 பாமக,- தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சு: -இல.கணேசன் # நீங்க பேசறீங்க சரி, அவங்க எதுனா பேசுனாங்களா?அட்லீஸ்ட்  உங்க பேச்சை கவனிச்சாங்களா?


----------------


19 பா.ஜ. தலைமையில் வலுவான கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன் # ஜிம்  பாடி பில்டர்ஸுடன் கூட்டணியா?


=================


20 திமுகவுடன் கூட்டணி : இளங்கோவன் எதிர்பார்ப்பு # “கை” யை சுட்டுக்காம இருந்தா சரி

================


150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா? கலைஞர் அதிர்ச்சி, வை கோ சவால்

1  நிலக்கரிச் சுரங்க முறைகேடு: எச்.சி.குப்தா உள்பட 6 பேருக்கு சம்மன் # நம்பினவங்க முகத்தில் கரி பூசிட்டாங்களா?



==============



2 அதிகாரத்திற்காக கொள்கைகளை பலியிட்டு விட்டார்" - கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு.# எப்டியாவது பணம் சம்பாதிக்கனும் என்பதுதானே தலைவர் கொள்கை?




===========



3 தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 5.ரூ வரை உயர்த்துகின்றன "பால்" னு இவ்ளோவ் ஏத்துனா எப்டி? 1 ரூபா.2,ரூபா ஏத்துனா தெரியாது




===========




4 'வேட்பாளர்களை நானே தேர்வு செய்வேன்': ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கருணாநிதி 'செக் # வாக்குகளையாவது எங்களைப்போட விடுவீங்களா?கள்ள ஓட்டு?




==============



5  பா.ஜ.,வுக்கு விஜயகாந்த் 10 கேள்வி: பதில் தந்தால் கூட்டணி என நிபந்தனை -செய்தி # தா”மரை” கழண்ட மாதிரி கடுப்பு ஆகி இருக்குமே?





=============




6  ஆங்கில படம் இயக்குகிறார் கமல் - செய்தி # இவரு  தமிழ்ப்படம் இயக்குனாலே புரியாது, இதுல ஆங்கிலப்படம்? விளங்கிடும்




================



சட்டப்பேரவையை ஆளுநரால் தன்னிச்சையாக கூட்ட முடியாது- உச்ச நீதிமன்றம் # கூட்ட, பெருக்க தனி ஆளுங்க இருப்பாங்கள்ல?





=============




8  சத்தீஸ்கரில்  நீதிபதி வீட்டுத் தோட்டத்துக்குள் புகுந்து செடிகளைத் தின்ற ஆடு கைது: # லாக்கப்ல வெச்சு விசாரணை எல்லாம் பண்ணுவாங்களா?




=============



9  சூரிய மின்தகடு முறைகேடு: ஆதாரங்களை அளித்தார் சரிதா நாயர்-செய்தி # “சன்” மார்க்க நெறிகளை முதல்வர் மீறிட்டாராமே?




=============




10 மோடி அரசு ஏழைகள், மாணவர்களுக்கு எதிரானது: ராகுல் குற்றச்சாட்டு # மோடியும் ராகுல் போலவே குடிசைல புகுந்து கூழ் குடிச்சாரா?




===========




11 பாமக ஜாதிக் கட்சி அல்ல, சமூக நீதிக் கட்சி: அன்புமணி ராமதாஸ் # அதாவது வன்னியர் சமூக நீதிக்கட்சி?




============




12  "சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் -செய்தி # ஜெயிச்சாதானே  பதவிச்சண்டை வந்து பிரிய?எப்டியும் தோற்கப்போறோம்





=============




13 தனித்துப் போட்டியிட்டால் கூட 12% வாக்குகளை ச.ம.க பெறும்-சரத்குமார்# ஹலோ, தேமுதிக வுக்கே இப்போ 12% கிடையாது, உங்களுக்கு எல்லாம் 0.1% தான்




===============


14 தேர்தல் நிதியை கட்டு; இல்லையேல் மூட்டைய கட்டு!: தி.மு.க., தலைமை கறார் #  கலைஞர் கருணா”நிதி”யை சந்திக்கையில் நிதி இல்லாம போனா எப்டி?

===============


15 மது விலக்கு நடைப்பயணத்தில் மயங்கி விழுந்தார் குமரி அனந்தன் #  தண்ணி  அடிச்சு எழுப்பி விட்டிருப்பாங்களே?


==============

16 காங்கிரஸ்-திமுக கூட்டணிக்காகப் பேசவில்லை: ஃபரூக் அப்துல்லா # மரியாதை நிமித்தமான  தேர்தல் கால சிறப்பு சந்திப்பு?


===============

17 ஸ்ரீவில்லிப்புத்தூர் -9-ம் வகுப்பு மாணவிக்குபாலியல்தொல்லை: 16 வயது இளைஞர் கைது # சிறார்  என்பதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி அனுப்பிடாதீர்



===========


18 மதிமுகவினர் உலகில் 150 நாடுகளில் உள்ளனர் - வைகோ #,தமிழ் நாட்ல 150 பேர் இருப்பாங்களா? அதான் கணக்கு.பாரீன் ல இருப்பதெல்லாம் போங்காட்டம்


============


19 கேரளாவில் பா.ஜனதாவால் கால் ஊன்றவே முடியாது: ராகுல்காந்தி கடும் தாக்கு
# கை ஊன்றி சமாளிச்சுடுவாங்க



============


20 அ.தி.மு.க. சார்பில் போட்டியிட மனு: 2 போலீஸ் உதவி கமிஷனர்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள் # அரசனை(அரியணை) நம்பி புருசனை (பணி) கை விட்ட கதை


===========

Tuesday, February 23, 2016

பிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்!!!!

1  சைட் எஞ்சினியரான உன்னை ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க?



பிறன் மனை நோக்கா பேராண்மை வேணும்னு சைட்டுக்கே போகாம இருந்தேன்


============

2 நேத்து உங்களை ஒரு பொண்ணு கூட பீச்ல பாத்தேனே?



இருக்காதே?
என் கண் என்னை ஏமாத்தாது.
ஓஹோ.அப்போ உன் மூக்கு வாய் எல்லாம் ஏமாத்துமா?



===========

3 அத்தை பொண்ணு னு சொல்றே.ஆனா தூரத்து சொந்தம்கறியே.குழப்பமா இருக்கு?



அதாவது.400 கிமீ தூரத்தில் இருக்கும் சொந்த அத்தை பொண்ணு



============


4 துபாய் மாப்ளைக்கு பொண்ணு குடுத்தது தப்பா போச்சா ஏன்?



து"பாய்" மாப்ளை.வீட்ல கட்டில் மெத்தை எதும் இல்லை.பாய் தான்



============


5 காதலர் தினம் சன்டே அன்னைக்கு.நாங்க ஆட்சிக்கு வந்தால் காதலர்கள் கட் அடிக்க வசதியாக ஒர்க்கிங் டே வில் காதலர் தினம் வரும்படி செய்வோம்

==============

6 சார், சினி ஃபீல்டுல நீங்க யாரை பெருசா மதிக்கறீங்க?

 நமீதா,  ஹன்சிகா, மாளவிகா

=============


டாக்டர்."வல்லாரைக்கீரை" சாப்பிட்டா ஞாபக சக்தி பெருகுமாமே நிஜமா?


அடடா.அப்டியா?படிச்சேன் எப்பவோ.மறந்திடுச்சு

==========

8 பாக்கறவங்கள்ளாம் நான் இளைச்சு போயிட்டேன்னு சொல்றாங்க 😳"



மேடம்.அப்போ அவங்க உங்களை வளைச்சுப்போடறதுக்காக சும்மா அடிச்சு விடறாங்கனு அர்த்தம்


============

9 டியர்.நான் முன்பை விட இளைச்சுட்டேனா?ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.



லாங்க் ஷாட் ல பார்த்தா இளைச்ச மாதிரிதான் தோணுது



===========

10 டாக்டர்.உடம்பு இளைக்கனும்.



இளைய சமுதாயம் எல்லாம் ஏன் இப்டி இளைச்ச சமுதாயமா ஆகத்துடிக்கறீங்ளோ?




=============


11 டாக்டர்.ட்டெய்லி உணவில் கொள்ளு சேர்த்துக்கிட்டா உடம்பு இளைக்குமா?



ம்ம்.ஆனா கொள்ளு மட்டும் சாப்பிடனும்.புல் கட்டு கட்டக்கூடாது



==========


12 டாக்டர்.நீங்க சொன்னபடி வாரம் ஒரு நாள் பத்தினியா இருந்தேன்.உடம்பு இளைக்கலையே?



அய்யோ ஊர்மிளா.பட்டினியா பத்தியமா இரு ன்னேன்



============


13 ஸப்பா எல்லார்க்கும் ரிப்ளே பண்ணிடேன் 😜😂😂😂💃💃💃


மேடம், என்ன கேள்விக்கு  ரிப்ளை பண்ணீங்க?

எக்சாம்ல ஒருகேள்விக்கும் ஏன் ரிப்ளை பண்ணலை?னு கேட்டாங்

=================


14 மிஸ்.ஸ்மைலிங் பியூட்டி.உங்களுக்கு ஒரு கூரியர் கவர் வந்திருக்கு


ம்ம் குடு.
ஒரு வாட்டி சிரிச்சு காட்னாத்தான் நம்புவேன்.ஐடி ப்ரூப் மஸ்ட்

=============

15 சார்.உங்க.2 பொண்ணுங்களுக்கு பாரியூர்கா ,சத்தியமங்கலம்கா ன்னு பேர் வெச்சிருக்கீங்களே?


முத பொண்ணுக்கு கோபி கா ன்னு வெச்சுட்டேனே


=============


16 டியர்.மேரேஜ்க்குப்பின் கொஞ்சம் உப்பிட்டேன்.குண்டானதால் மறந்துட மாட்டீங்களே?
ச்சே ச்சே உப்பிட்டவரை உள்ளளவும் நினப்பேன்.


============


17 டீச்சர்.சின்ட்ரல்லா வுக்கு சி வருமா?எஸ்.வருமா?
சின்னப்பொண்ணுன்னா CINDRELLAA
குற்றவாளி ன்னா SIN DRELLAA


=============

18 டியர்.முதல் இரவுக்கு கட்டஞ்சாயா ( வர டீ)கொண்டு வர்றியே ஏன்?
பால் விலை லிட்டருக்கு 5 ரூபா ஏறிடுச்சாம்


================


19 டாக்டர்.ஒரே மாசத்துல 10 கிலோ உடம்பு இளைக்க என்ன செய்யனும்?
டெய்லி.4 கிமீ உடல் களைக்க ஜாகிங் போகனும்


===========

20 சாப்பாடு டோக்கன் குடுங்க.
அப்பளம் ,வடை தீர்ந்திடுச்.அட்ஜஸ் இட்.
ஓக்கே.சாப்பாடு எவ்ளோவ்? 75ரூபா.
5 ரூபா கம்மியா இருக்கு.அட்ஜஸ் இட்

==============