Skip to content

Monday, February 15, 2016

சார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ் எடுக்கறீங்க?

1  டாக்டர், பால் ல மிளகு போட்டுக்குடிச்சா நல்லதுன்னீங்க, ஆனா காரம் ஜாஸ்தியா இருக்கு?


மிளகு சுவையிலும் காக்கும், உடல் நலத்தையும் காக்கும்

=============


தலைவரே! நம்ம கட்சியின் பிரச்சார பீரங்கியா சினிமா ஹீரோவை ஃபிக்ஸ் பண்ணி இருக்கீங்களாமே?


 ஆமா, ஒரு கரெக்சன், பிரச்சார  ”துப்பாக்கி” யா

================


3  உலகிலேயே எப்போதும் சந்தோஷமா இருக்கும் ஒரேஉயிரினம் ராஜாளி பறவை தானா? எப்படி?


 ரா”ஜாலி”, பேர்லயே ஜாலி இருக்கே?ஜாலியாதானே எப்பவும் இருக்கும் ?


=================


4  சார், போன தேர்தல்ல அந்தக்கட்சியை ஆதரிச்ட்டு இந்தத்தேர்தல்ல  இந்தக்கட்சியை ஆதரிக்கறீங்களே? ஏன் ?

 மாற்றம் , முன்னேற்றம் ஃபார்முலாவை ஃபாலோ


==================


5  ஒரு பொண்ண நாம குறுகுறுனு பாக்கும் போது அந்த பொண்ணோட மைன்ட் வாய்ஸ் என்னவா இருக்கும் 

“குறுகுறு”ம்புக்காரன் அப்டினுதான்


=================


6 நான்தான் சோம்பேறினு பார்த்தா ஆபீஸ்ல எல்லாரும் என்னை மாதிரிதான் 

மிஸ்! உங்க ஆஃபீஸ்ல எத்தனை பேரு?


 நான், என் தங்கச்சி, எங்க அம்மா 3 பேரு


====================


7  வளர்மதி ன்னு பேரு வெச்சா டெய்லி வளர்ந்துட்டே இருக்குமா?

ஆமா .6 அடி வளர்ந்தது ம் வளராதே மதி னு பேரை மாத்திடனும்


==============

8 மிஸ் !  எனக்கு நீங்க பெட்டர் ஆஃப் ஆக இருக்க சம்மதமா?

சார், ஆஃப் எனக்கு பத்தாது, பெட்டர் ஃபுல்னா ஓக்கே!


=================

9 மாப்ளைக்கு பிரதமர் ரேஞ்சுக்கு சொத்து இருக்குன்னு சொன்னாங்கன்னு பொண்ணு குடுத்தேன்


 ஃபாரீன் டூரா போறாங்களா?

 வெறும் 4700 ரூபா தான் இருக்காம்


====================


10  டியர், முத்தம் தரும்போது எதுக்கு செல்ஃபி எடுத்துக்கலாம்கறீங்க?

 சப்போஸ் நீ அல்வா தர நினைச்சா கோர்ட்ல ஆதாரத்தைக்காட்டலாமில்ல?


=================

11 டைரக்டர் = மேடம், இந்த சீன்ல கோபப்படாம வில்லன் கிட்டே பொறுமை காட்டனும்


 சாரி சார், அது தெரியாது  எனக்கு, வேணும்னா கிளாமர் காட்டிடவா?


================

12  ரயில்ல  ஹீரோயின் லோயர் பர்த்ல தூங்கிட்டு இருக்காரு, ஹீரோ அப்பர் பர்த்ல இருக்காரு


  நியூஸ்ல ஹீரோயின் கீழே, ஹீரோ மேல படுத்திருந்தாருனு போடவா?

=================


13  சார், உங்க படம் ஓடும் தியேட்டர்ல மட்டும் சீட் எதும் இல்லையே?நின்னுட்டே பார்க்கறாங்க?


உக்காரவே முடியலனு ஒரு பய கமெண்ட் அடிச்சிடக்கூடாதுனுதான்


======================


14  மிஸ்! நீங்க வரைஞ்சிருக்கற ஆயில்பெயிண்ட்டிங்க்ல ஏகப்பட்ட முடி கொட்டிக்கிடக்கே?

ஆங், அது ஹேர் ஆயில் பெயிண்ட்டிங்க்



===========================


15  வாழை இலைல சாதம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது

 டாக்டர், அப்போ வாழை இலையையே சாப்ட்டா?


==================


16 மீராவோட  ட்வீட் ஆனந்த விகடன் ல வந்தா கண்ணன் கிட்டே  எப்டி இன்ஃபார்ம் பண்ணும்?


 வலை பாயுதே  கண்ணா  என் ட்வீட் வலை பாயுதே



==================


17  மிஸ்!நீங்க  பியூட்டி பார்லர் வெச்சிருக்கீங்களா?

ஆமா, ஏன்?

உங்க ஃபேஸ்க்கு மட்டுமில்லை, உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும் அழகுபடுத்தப்படும்னு AD!


==================


18 தலைவரே! நீங்க பண்றது ரொம்ப அநியாயம்.

ஏன்?

 தகவல் அறியும் உரிமை சட்டப்படி சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா?னு கேட்டா எப்டி?


===================


19  சார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ் எடுக்கறீங்க?


 போலீஸ் ஸ்டேசன் போனேன், ஒரு பயலும் நான் போலீஸ்னு நம்பலை


===================


20  சேலை கட்டின பெண்ணோட இடையில் ஏன் காதலன் கை வைக்கறான்?

வெற்றிடத்தை நிரப்பத்தான்


====================

Sunday, February 14, 2016

ஜில் ஜங் ஜக் - திரை விமர்சனம்

கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான்.


போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான். இதற்காக நாஞ்சில் சிவாஜி (ஜில்-சித்தார்த்), ஜங்கு லிங்கம் (ஜங் - அவினாஷ் ரகுதேவன்), ஜாகுவார் ஜகன் (ஜக் - சனந்த் ரெட்டி) என மூன்று புதிய இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஜில், ஜங், ஜக்கின் பயணம் வெற்றிகரமாக முடிந்ததா என்பதுதான் கதை.



போதைப்பொருளை ஒளித்துவைக் கும் ஐடியாவில் தெறிக்க ஆரம்பிக்கிறது அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தியின் ரசாயன மூளை. சூதாட்ட விடுதியில் ‘போக்கர்’ மாபியாவாக இருக்கும் அப்பா நாசருடன் கூட்டணி அமைத்து, ஆர்.ஜே. பாலாஜியை போண்டியாக்கும் சித்தார்த் தின் அறிமுகம், எதிர்பார்ப்பைக் கூட்டு கிறது. சினிமா படப்பிடிப்பில் சிக்கி, கார் நொறுங்குவது வரையிலான முதல் பாதித் திரைக்கதையில் சிக்கலோ விக்கலோ இல்லை. ஏகப்பட்ட திருப்பங்களும் பின் னணிக் கதைகளும் கொண்ட இரண்டாம் பாதியில்தான் தடுமாறுகிறது.


தீரஜ் வைத்தியின் அணுகுமுறை கிட் டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களையும் கேலிச்சித்திரங்களாக மாற்றுகிறது. பேசிப் பேசியே கவரும் சித்தார்த் (பல சமயங்களில் சித்தார்த் பேசுவதை புரிந்துகொள்ள கோனார் நோட்ஸ் தேவைப்படலாம்), சனத், அவினாஷ் ரகுதேவனும் படத்துக்கு பலம். அதே நேரம், தெய்வா, அவனுடைய காரிய தரிசி, அந்த டிரைவர், ஃபார்மஸிஸ்ட், ரோலக்ஸ் ராவுத்தர் என்று மற்ற பல கதாபாத்திரங்களும் தனித்துத் தெரிகிறார்கள். இத்தனை பேருக்குமே திரைக்கதையில் போதிய இடமிருக்கிறது! ஒரே ஒரு காட்சியில் வந்து போகும் நாசர், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது பாத்திரங்களும் நினைவில் தங்குகின்றன.


ஆப்பிரிக்க ‘சினிமா’வைப் பற்றிய காட்சியும், ‘கதாகாலட்சேப’ பாணியில் ஒருவர் பேசுவதும் திரையரங்கில் ஆரவாரத்தை ஏற்படுத்துகிறது. கதைக் களம் 2020-ல் அமைந்ததற்கான பெரிய காரணம் எதையும் காண முடியவில்லை.


வழக்கமான சித்தார்த் துணிச்சல்படி, நாயகனைச் சுற்றியே பெரும்பாலான காட்சிகள் நகராமல்... கதையின் போக்கில் நாயகன் இணைந்துகொள்ளும் படம்தான் இதுவும். கதைக்குத் தேவையில்லை யெனில் நாயகியைக்கூடத் தியாகம் செய்யும் துணிச்சல் இயக்குநருக்கும் இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் பெண்கள், பாலியல் தொடர்பான வசனங்களுக்குக் குறைவு இல்லை.


ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணா, கலை இயக்குநர் சிவஷங்கர் ஆகிய இருவரும் கொண்டாட்டமான பங்களிப் பைச் செய்திருக்கிறார்கள். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் புது வண்ணம்.


கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்கை வைத்திருக்கும் காரை, யார் வேண்டு மானாலும் வந்து எடுத்துக்கொண்டு போகும் விதத்திலா நிறுத்திவிட்டுப் போவார்கள்? இதுபோன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் சம்பவங்கள் திரும்பத் திரும்ப வருவதுபோன்ற தோற்றம் ஏற்படுமளவு திரைக்கதை ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்கிறது.


ஒவ்வொரு பாத்திரத்தின் அடையாளத் தையும் ‘ஜில்’லென்று செதுக்கியும், பிற்பாதியை விறுவிறுப்பாக நகர்த்து வதில் ‘ஜங்’ ஆகி இயக்குநர் தடுமாறு கிறார். ஆனாலும், ‘ஜக்’ ஆகாமல் காப்பாற்றிவிட்டார்.


நன்றி - த இந்து

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

1  இனி எக்காலத்திலும் எந்தக் காரணத்துக்காகவும் திமுக, அதிமுகவோடு கூட்டணி கிடையாது-வை.கோ # அப்டியே  டாக்டர் ராம்தாசைப்பார்க்கற மாதிரியே இருக்கு

=============

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்- ஸ்டாலின் # அழகிரி அண்ணே ,இந்த கவுன்ட்டர் உங்களுக்குத்தான்னு நினைக்கேன்

==========

3 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கண் அயராமல் உழையுங்கள்: ஜெ.# ஸ்டடி லீவ்ல விடிய விடிய விழிச்சிருந்து படிச்சவன் எக்சாம் ஹால்ல தூங்கிட்டானாம்


==========

4 ஜெ. அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என விருது வழங்கலாம்.. ராமதாஸ் கிண்டல்! # ஆமா.பாமக ,தேமுதிக ன்னு யாரையும் மதிக்காம துரத்தி விட்டுடுச்சே


=============

5 DMK,ADMKகட்சிகள் தனியாக போட்டியிட தயங்குகின்றன : அன்புமணி ராமதாஸ்..# லாஸ்ட் ரேங்க் வாங்கற மாணவன் எக்சாம் ஹால்ல டென்சனே இல்லாமதான் இருப்பான்


==========


6 அதிமுக கூட்டணியில் தான் தற்போதும் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது: சரத்குமார்
# நீங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க.உங்க கட்சிதான் கலைஞ்சிடுச்சே?

=============

7 தமிழக மக்கள்  மாற்றத்தை விரும்புகிறார்கள் - வை கோ # இப்டி ஒவ்வொரு டைமும் மாத்தி மாத்தி  வாக்கு குத்தி  ஏமாற்றம் தான்


===============

8 கோவைக்கு வரும் மோடியை வரவேற்கிறார் ரஜினி - செய்தி #,அடுத்ததா எங்க இளைய தளபதி யும் வரவேற்பார்

==============


9 சல்மான் உடனான உறவு பற்றி விவரிக்க தேவையில்லை - கத்ரீனா # டைப் அடிக்க முடியலைன்னா வாட்சப் ல அனுப்புங்க


=============


10 தமிழகத்தின் நிதி பற்றாக்குறைக்கு ஜெ பொறுப்பேற்க வேண்டும்-விஜயகாந்த் # பற்றாக்குறைக்குக்காரணம் கருணா”நிதி” தான் அப்டினு அடிச்சு விடுவாரே 


===============

11 சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதி நாகப்பன் திடீர் விலகல்  # அய்யா , மிரட்றாங்க அய்யா , அம்மா மிரட்றாங்க அம்மா


================


12 தூத்துக்குடி யில் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி விருப்பமனு # அதுவும் ஒரு துறைமுகம் (உள்ள) தொகுதி தானே? வெற்றி முகம் உண்டுனு நினச்சாரோ?


==================


13   மோடியிடம் இருக்கும் ரொக்கப் பணம் ரூ.4700 மட்டுமே.பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சொத்து விவரம்  # அய்யோ பாவம் , ரொம்ப ஏழை போல, ஃபாரீன் போக காசு?


==============


14  ஆட்சி முடியப் போகிற நேரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவது ஏமாற்று வேலை-கருணாநிதி  தான்  எத்தனை பேர் தான்  மாற்றி மாற்றி  ஏமாற்றுவார் இந்த நாட்டிலே


==================

15  பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்-ராமதாஸ் # இன்னும் 20 வருசம் ஆனாலும் தமிழகம் வளர்ச்சியே பெறாதா?


===============


16 மக்கள் நலக் கூட்டணியினர் தெருக்களில் மட்டுமே பேச முடியும்: தமிழிசை சவுந்தரராஜன்  # எல்லோருடைய முகவரியிலும் தெரு உண்டே மேடம்,அது கேவலமா?


==================


17 அவ்வையார் விருதுக்கு  5/2/16-க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்டஆட்சியர் அறிவிப்பு # விருதை கைல வாங்கிட்டு அவ்வை யார்?னு கேட்கப்போறாங்க


================


18 234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் தகவல் # உத்தேசமா  2+3+4 = 9 தொகுதில  ஜெயிப்பீங்களா?


==================



19 மிசா' சிறை தண்டனை மூலம் மிகப் பெரிய அரசியல் பாடம் கற்றேன்: ஸ்டாலின் # அந்த தண்டனை க்குக்காரணமான காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சது ஏனோ?


=================


20  புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்றனர் ஆட்சியினர்-கலைஞர்#  மக்கள் எப்பவும் வாசமா இருக்கனும்னு நல்ல எண்ணம்தான்னு சால்ஜாப் சொல்வாங்களோ?


=======================



அலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை அடிக்குது

மோடி-கோவை வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: பொன்.ராதா #  ஏன்? ஊட்டி  அல்லது கொடைக்கானல் வழியா வர்றாரா?அங்கே தான் ஹேர்பின் பெண்ட் ஜாஸ்தி



==============




நல்ல கல்விதான் நல்லவர்களாக வாழவைக்கும்-ஜயேந்திரர்# படிச்சா நல்லவனாகிட்டா என்ன பண்றதுனுதான் அரசியல்வாதிங்க படிக்காம கைநாட்டா இருக்காங்களா?



===============




பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது: அருண்ஜேட்லி # தேர்தல் அருகில் வந்தால் சலுகை, இல்லைன்னா அழுகை தான்




=================

4  என் வீடு மீதான தாக்குதலை கலைஞர் கண்டித்தது நெகிச்சியளிக்கிறது: பழ.கருப்பையா # அய்யோ ராமா எல்லாம் எலக்சன் டைம் டிராமா




===============



எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி அளித்தது: ஜெ # ஒரு தப்பை தொடர விடுவதும் தப்பு தான், அதைக்கண்டுக்காம விட்டதும் தப்புதான்





=================




6  ஜெ ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு-ஸ்டாலின்  # 2 ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு சம்மன், கலைஞர் டி வி 200  கோடி வழக்கில் தயாளுஅம்மாள்க்கு சம்மன் இதை சொல்றாரா?




================



7  மத்திய அமைச்சர பதவி மீது ஆசை இல்ல-அன்புமணி ராமதாஸ் #  அய்யா கவனம் பூரா இப்போ முதல்வர்  சீட்ல , இப்போ இல்லாட்டி எப்போ?ன்னு களம் இறங்கிட்டார்




================




8  தற்போதைக்கு திருமணத்தில் விருப்பமில்லை: த்ரிஷா # இன்னும் 20 வருசம் தாட்டிட்டா மொத்தமா அறுபதாம் கல்யாணமா பண்ணிடலாம்




===============




9  ஒரே மேடையில் 14 திருமணங்கள்.10ம் தேதி சென்னையில் ஜெ. நடத்தி வைக்கிறார் # பிப்ரவரி 14 காதலர் தினம் வருது, அப்போ நடத்துனா மேட்சுக்கு மேட்ச் 




===============




10 கூகுளுக்கு போட்டியாக புதிய வசதிகளுடன் வெளிவருகிறது ’யாகூ மெயில்-செய்தி # அப்போ தெறி யில்  யாஹூ யாஹூ பண்ணிப்பார்த்தேன்னு பாட்டு  வருமா?




====================




11  பழ.கருப்பையாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்காதது ஏன்?:-ஸ்டாலின்# அவரைத்தான் கட்சியை விட்டு நீக்கியாச்சே?இனி எதுக்கு பாதுகாப்பு?ம்பாரோ?ஜெ





==================




12 உலகிலேயே முதன்முறையாக டிரைவர் இல்லாமல் ஓடும் பஸ்: நெதர்லாந்தில் அறிமுகம்-செய்தி # லைசன்ஸ் இருக்கா?னு கேட்டு மாமூல் யார் கிட்டே கேட்பாங்க?




=================




13 லட்டு விலை உயராது -திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு # சைசை மட்டும் சின்னது பண்ணிடுவீங்க, அதானே உங்க டெக்னிக்கு? 




=================




14  ரூ.20 கோடி வரி செலுத்தி அக்‌ஷய்குமாரைமுந்தினார் சல்மான் # எல்லா ஹீரோக்களையும் ஏதோ வழக்கில் உள்ளே தள்ளினா இன் கம் டாக்ஸ் கட்டிடுவாங்க போலயே?




================




15  கூட்டணிக்காக பா.ஜனதா யாரையும் கெஞ்சி நிற்காது-பொன்.ராதாகிருஷ்ணன் # ரைட்டு , கேப்டன்  ஓக்கே சொல்லலை போல , அப்போ பிஜேபி , தேமுதிக கூட்டணி இல்ல




==================




16 பொதுமக்களிடம் திமுக.வின் சாதனைகளை எடுத்துக்கூறினால் வெற்றி நிச்சயம்-கனிமொழி # அலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை அடிக்குது




================



17  ஆன்லைன் மூலம் துப்பாக்கி விற்க பேஸ்புக் தடை. -செய்தி # அப்போ கத்தி , தெறி இதெல்லாம் விற்கலாமா?




=================




18 கட்சி பொதுக்குழு கூடி வரும் 7-ம் தேதி கூட்டணி குறித்து முடிவு செய்யும் -- சமக தலைவர் சரத். # ஏழாந்தேதிக்கு ஏழரையைக்கூட்டறீங்க?




==================


19 "மோடி ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்  உதவி' -அமித் ஷா # பேருக்கு 1 கோடி யை ஏழைகளுக்கும் மீதி 99,000 கோடியை தொழில் அதிபர்களுக்கும்?

==================



சென்னை மாநகராட்சி பெயர் மாற்றம்: 'பெருநகர சென்னை மாநகராட்சி'யாக  -ஜெ # நாங்க ஆட்சிக்கு வந்தா  சென்னையையே மாத்திக்காட்டுவோம்னீங்களே இதானா?

20  

Saturday, February 13, 2016

“கெத்து காட்றீங்க ப்ரோ”

1  கேப்டன் நடிச்ச சபரி பட த்துல ஹீரோயின் இன்ட்ரோ சீன் ல ஒரு ரசிகன் அடிச்ச கமென்ட்


சபரியிலே தெரியுது பார் மகரஜோதி


==============

2 இளங்கலைப்பட்டம் னா யூத் படிப்பு
முதுகலைப்பட்டம்்னா வயசானவங்க படிப்புன்னு நான் சின்னப்பையனா இருக்கும்போது நினைச்சு படிக்காம விட்டுட்டேன்

=============

3 புனிதா வுடன் நீ மளிகைக்கடைக்குப்போனாலும் ,சினிமாக்குப்போனாலும் அது புனிதப்பயணமே!

==============

4 உன் சம்பளம் என்ன என்று உன் சொந்த சம்சாரத்திடம் சொல்லி விடு.எப்படியும் விசாரித்து தெரிந்து கொள்வாள்.ஆனால் இன்சென்ட்டிவ் பற்றி சொல்லாதே.

===============

5 மேக்கப் போடாத பொண்ணோட ஒரிஜினல் முகத்தைப்பார்க்க ஆசைப்பட்டால் பெண் பார்க்கும் படலத்தை திடுதிப் என ராத்திரியில் வைத்துக்கொள்.

==============

6 காதலி உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் அடிக்கடி் டூ விட்டால் இது டூ மச் என்று சொல்லிவிடு

==============


7 பெண்களைப்புகழும் எல்லாக்கவிதைகளுமே

வஞ்சிப்புகழ்ச்சி அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி யில் இயற்றப்பட்டவையே!



============

8 எல்லோர் கண்களுக்கும் எருமையாய் தெரியும் நீ
என் கண்களுக்கு மட்டும் COT எருமையாய் தெரிகிறாய் நீ

===========

9 உனக்கு உள்ளே இருக்கும் திறமையை யார் முதல்ல அடையாளம் கண்டு பிடிச்சு பாராட்றாங்களோ அவங்களை மறக்காதே !


============

10 அன்பு வைத்தவருக்காக.விலை மதிக்க முடியாத தியாகத்தை செய்ய நேர்ந்தால் அதை அவரிடம் தெரியப்படுத்தத்தேவை இல்லை.அதுவும் இன்னொரு தியாகம்


============

11 சொந்த ஊருக்கு வருவதில் ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவிக்க ஒரு முறை தூர தேசம் சென்று வர வேண்டும்

============


12 பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்ட தி.மு.க. வி‌ல் ஜனநாயகம் இருக்கிறதா? அடுத்த தலைவராக யார் வரமுடியும்?"

ஸ்டாலின்
உதயநிதி
நயன் தாரா


=========


13 சந்திரா ன்னு பேர் வெச்ச பொண்ணுங்க எல்லாம் சந்திரிகா சோப் போட்டுதான் குளிப்பாங்கன்னு சொல்லிட முடியாது # கேள்வி அறிவு


=========


14 நிச்சயதார்த்தம் தான் உன் திருமண வாழ்க்கையில் நுழையும் முன் உனக்கு் தரப்படும் எச்சரிக்கைக்கான இறுதிச்சுற்று


===========


15 ஒரு லட்சிய வீரன் ,தனித்திறமை கொண்டவன் "ஊரோடு ஒத்து வாழ்"ந்து கொண்டிருக்க மாட்டான்.


===============


16 தினம் தினம் ஏதாவது புதிதாய் சாதிக்க நினைப்போம்
சாதி பற்றி ய வீண் பெருமைகளை தவிர்ப்போம் # தாலி கட்டிய பொஞ்சாதி பெருமை விதிவிலக்கு


==================


17 திண்டுக்கல் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது பூட்டு எனில் நீங்கள் அப்பாவி
ரீட்டா எனில் அடப்பாவி!
ஐ லியோனி எனில் பட்டி மன்ற ரசிகர்


==================


18  உதயநிதி  ஸ்டாலின்  நடிச்ச  படம் ஓடும் தியேட்டரில் ஆபரேட்டரிடம்  போய் சொல்லலாம்  “கெத்து காட்றீங்க ப்ரோ”


=================


19    அதிகாலை 5 மணிக்கு எழுந்தால் நல்லது  என்பதையே  எல்லோரும் டைம் லைன் வரும் நேரமான காலை 8 மணிக்குத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது


====================


20   பனியால் உன் உடல் பாதிக்கப்படக்கூடாது எனில் அதிகாலைப்பனியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு பனிக்கும், குளிருக்கும் உடலைப்பழக்கப்படுத்து