இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் ஆகின்றன
1. கட்டா குஸ்தி 2
2 நாகபந்தம்
3 ஆல்பா
4 டார்க்
5 இருமுனை
6 புத்தம்புது நேரம்
7 Minions & Monsters
கட்டா குஸ்தி 2. தமிழ். காமெடி ஆக்சன் டிராமா
பிளாஸ்ட் ,மா இண்ட்டே பங்காரம் (எங்கள் தங்கம்) படங்கள் 2026 ல் மெகா ஹிட் ஹீரோயின் ஓரியண்டட் பிலிம்ஸ் இவங்களுக்கு ஒரு அக்கா இருக்கா.அவள் தான் கட்டா குஸ்தி (2022).சத்தம் இல்லாமல் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆன படம்.ஐஸ்வர்யா லட்சுமி. ஆக்சன் ஹீரோயின் ஆவார் என யாரும் கனவிலும் நினைக்கவில்லை.
இப்போது அதன் 2ம் பாகம்.விஷ்ணு விஷாலின் சொந்தப்படம்..
நாயகன் ,நாயகி இருவரும் தம்பதி.ஒரு மகளும் உண்டு.நாயகி ஸ்போர்ட்ஸ் விமன் ஆக இருக்க நாயகன் ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆக வீட்டில் இருந்து சமையலை,குழந்தையை கவனித்துக்கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஈகோ கிளாஸ் ஏற்படுகிறது.யுத்தக்களத்தில் கணவன் ,மனைவி இருவரும் மோத நேரிடுகிறது.இதற்குப்பின் நிகழும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
விஷ்ணு விஷால் ,ஐஸ்வர்யா லட்சுமி,ரம்யா கிருஷ்ணன் ,யோகிபாபு ,கருணஷ் ,காளி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ட்ரெய்லரைப்பார்த்தால் முதல் பாகம் போலவே இதிலும் காமெடி ,ஆக்சன் இரண்டும் களை கட்டி இருப்பதை உணர முடிகிறது
ரசித்த வசனங்கள்
1 ஒரு பொண்ணுக்குப்புருசனா இருக்கறதே ரொம்பக்கஷ்டம்,அதுவும் ஸ்போர்ட்ஸ் ல இருக்கற பொண்ணைக்கட்டிக்கிட்டு எப்படிதான் சமாளிக்கறீஙகளோ?
2 பொதுவாப்பொண்டாட்டியைக்காரணமே இல்லாம கை நீட்டி அடிக்கறது தப்புன்னு நினைக்கறவன் நான்,என்னைக்கை நீட்ட வெச்சுடாத (இந்த டயலாக் முடிஞ்சதும் கட் பண்ணி அடுத்த சீன்ல ஹீரோ தன் சம்சாரத்தோட உள்பாவாடையைத்துவைத்து அலசி காயப்போட்டுட்டு இருப்பாரு.
3 தேவைப்பட்டா என் குடும்பத்தை மட்டுமல்ல,உங்க குடும்பத்தையும் சேர்த்தே பார்த்துக்குவேன்.
2. நாக பந்தம் - த சீக்ரெட் ட்ரெஷர். தெலுங்கு/தமிழ். ஆக்சன் அட்வென்ச்சர் திரில்லர்
கேரளா வின் தலைநகர் திருவனந்த புரம் பத்மநாப கோயிலில் திறக்கப்படாத சுரங்க அறைக்கதவுகள் உள்ளன்.அங்கே தங்கப்புதையல் கிடப்பதாகப்பேச்சு உண்டு.
இந்தக்கற்பனைக்கதையில் உலகை ஆளக்கூடிய சக்தியைத்தரும் பிரம்மக்கமலம். எனும் தங்கத்தாமரை. சில நாகங்களின் பாதுகாவலில் இருக்கிறது.வில்லன் அதைக்கைப்பற்ற முயல நாயகன் அதைத்தடுப்பது தான் கதை.
ட்ரெய்லரைப்பார்த்தால் பிரம்மாண்டம் தெறிக்கிறது.மாயாஜால மந்திரக்கதை போலத்தோன்றுகிறது.
இது ஒரு பான் இண்டியா மூவி.
இதில். ஐஸ்வர்யா மேனன்,அனசூயா பரத்வாஜ்,விராட் கர்ணா ,நபா நடேஷா ,மகேஷ் மஞ்சுரேக்கர்,ஜெகபதி பாபு,மூர்த்தி சர்மா ,கருடா ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம் அபிஷேக் நம்
இசை. ஜூனைத் குமார் & அபி
ரசித்த வசனங்கள்
1 என்ன மதிப்பிருந்தாலும் ஒரு தங்கத்தாமரைக்காக தனியா ஒரு ஷோ நடத்துவாங்களா?
அது தங்கத்தாமரை இல்லை.பிரம்மக்கமலம்
,2 இந்தத்தங்கப்புதையலை வைத்து ஒரு ஊரை ஆளலாம்.ஆனா பிரம்மக்கமலம் கையில் இருந்தா அந்த பிரபஞசத்தையே ஆளலாம்.
3 இந்த நரவேட்டை பற்றி சரித்திரமே ரத்தத்தால் எழுதிக்கொள்ள வேண்டும்
3. ஆல்பா ஹிந்தி/தமிழ். ஆக்சன் திரில்லர்
ஆலியாபட் அதிரடி நாயகியாய் நடிக்க அனில்கபூர்,பாபிதியோல்,ஷர்வாரி ஆகியோர் முக்கியகதாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஹிரித்திக் ரோஷன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
ஆதித்யா சோப்ரா தயாரிக்க,உதய் சோப்ரா கதை எழுத ஷிவ் ராவல் இயக்கி இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது
ஸ்பை யுனிவர்சின் ஏழாம் பாகம் இது.இந்தியாவின் முதல் முழு நீளப்பெண் அதிரடித்திரைப்படம் இது.சித்தப்பாவின் சட்ட விரோதத்திட்டத்தை அழிக்க முற்படும் ஒரு கொலையாளியின் கதை இது.
ரசித்த வசனங்கள்
1 ஆல்பான்னா என்ன அர்த்தம்?
இந்தியாவின் அடுத்த தலைமுறை ரகசியப்படை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ரகசிய ப்ரோக்ராம்
2 ஆல்பான்னா எல்லோரையம்
விட சிறந்த ,கூர்மையான ,வலிமையான என்று அர்த்தம்
4. டார்க் தமிழ். சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர்
கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி ,அஞ்சனா நெத் ரன் நாயகன்,நாயகி ஆக நடிக்க அமரர் கே பாக்யராஜ் ,விடிவி கணேஷ்,நட்டி என்கிற நடராஜ், சிபி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சாம் சி எஸ் இசை
ட்ரெய்லர் அருமையாக ,திகிலூட்டும்படி இருக்கிறது.
ரசித்த வசனங்கள்
1 மூன்று வருடங்களுக்கு முன் ஒருத்தன் ரெண்டு பேரைக்கொலை பண்ணிட்டு அவனும் நெருப்பு வெச்சுக்கிட்டு செத்துப்போய்ட்டான்.
2 மூவாயிரம் ரூபாய் நீங்க தர்ற்தா இருந்தா மூணு பேய் என்ன?முப்பது பேய்களைக்கூட பக்கத்தில் வெச்சுட்டுத்தூங்குவேன்.
5. இருமுனை. தமிழ். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்
இது லோ பட்ஜெட்டில் எடுக்கப்படிருக்கும் க்ரைம் திரில்லர் மூவி.இதில். கிரி,சஜினி பாண்டே,எம் பாசில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இயக்கம் கிரி.
இயக்குநரே நாயகனாக நடித்திருக்கிறார் போலத்தெரிகிறது.
6. புத்தம்புது நேரம். தமிழ். மெலோ டிராமா
பி சந்திரகுமார் இயக்கத்தில் கே சதீஷ், ஸ்ரீ சுபா ,டாக்டர் ப்ரத்வாஜ் மதுசூதனன் ஆகியோர் நடித்திருக்கும் படம்.
7 Minions & Monsters. ஆங்கிலம் /தமிழ். அனிமேஷன் காமெடி டிராமா
1/7/2026 முதல் ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 3/7 /2026 முதல் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது.
85 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் முதல் நாளிலேயே 16 மில்லியன் டாலர் சம்பாதித்து விட்டது.
பியர்ரே காபின் இயக்கிய இந்தப்படத்தின் ரன்னிங் டைம் 90 நிமிடங்கள்
.jpg)