Saturday, May 09, 2026

CRIME 101 (2026) -ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்) @அமேசான் பிரைம்







2020 ஆம் ஆண்டு டான் வின்ஸ்லோ எழுதிய க்ரைம் 101 என்ற நாவலைத்தழுவி எழுதப்பட்ட திரைக்கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள்.நம்ம ஊரில் நேஷனல் ஹை வே என் ஹெச் 47 எனக்குறிப்பிடப்படுவது போல அங்கே 101 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிறது.அங்கே நடக்கும் க்ரைம் தான் கதை.

                                 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு ஸ்மார்ட் ஆன திருடன்.கத்தியின்றி,ரத்தமின்றி,வன்முறையின்றித்திருடுவதுதான் இவன் கொள்கை.யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் துப்பாக்கியைக்காட்டி மிரட்டியே  சாமார்த்தியமாகத்திருடுபவன்.இவனது திருட்டுக்கள் அனைத்தும் ஒரே பேட்டர்னில் அடங்கி விடும்.101 என்ற ஏரியாவில் தான் திருடுவான்.காரணம் போலீஸ் வருவதற்குள் சுலபமாகத்தப்பி விடலாம்.தொடர்ந்து நகைக்கடைகளாக டார்கெட் செய்து திருடுபவன்


வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர்.கடந்த 5 வருடங்களில் 271 திருட்டுக்கள் நடந்திருக்கின்றன.அவற்றில் வன்முறை இல்லாமல் குறிப்பிட்ட திருட்டுகள் நடந்ததைக்கவனிக்கிறார்.டிபார்ட்மெண்ட்டில் வேறு யாரும் அதை கவனிக்கவில்லை.விரைவில் திருடனைப்பிடிக்க ஸ்கெட்ச் போடுகிறேன் என்கிறார்.


நாயகி ஒரு இன்சூரன்ஸ் ஆபீசில் பணி புரிகிறார்.மிகத்திறமையாகப்பணி ஆற்றியும் தனக்கு இன்னமும் பிரமோஷன் கிடைக்க வில்லையே என்ற குறை உண்டு.


நாயகன் நாயகியை சில நாட்கள் பாலோ செய்கிறான். ஒரு கட்டத்தில் உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது.நான் கேட்கும் தகவலைக்கொடுத்தால் உனக்கு கேட்ட பணம் தருகிறேன் என்கிறான்.


ஆனால் நாயகிக்கு அதில் உடன்பாடில்லை.மறுத்து விடுகிறாள்.நீ மனசு மாறினால் என்னைத்தொடர்பு கொள் என்று நாயகியிடம் சொல்லி விட்டு செல்கிறான்.


நாயகிக்கு ஆபீசில் பிரமோஷன் கிடைக்கவில்லை.அவள் 8 வருடங்களாக இதே கம்பெனியில் வேலை செய்தும் பிரமோஷன் கிடைக்காத விரக்தியில் பாஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள்.ஆனாலும் பலன் இல்லை.


நாயகி நாயகனுக்கு உதவத்தீர்மானிக்கிறாள்.கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புள்ள வைரம் கை மாறப்போகிறது.அந்தத்தகவலை நாயகி  சொல்கிறாள்.நாயகன் அந்த வைரத்தைக்கொள்ளை அடிக்க களத்தில் இறங்குகிறான்.


வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் அந்த வைரத்தைக்கொண்டு போகும் ஆளாகக்களம் இறங்கி நாயகனைப்பிடிக்க முயற்சிக்கிறார்.

இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.


நாயகன் ஆக க்ரிஷ் ஹெம்ஸ் வொர்த் அலட்டிக்கொள்ளாத நடிப்பு .ஸ்டைலிஷாக வருகிறார்.இவரது ஆடை வடிவமைப்பு அருமை.ஜேம்ஸ்பாண்ட் மாதிரி கம்பீரம்.

வில்லன் ஆக டிடெக்டிவ் போலீஸ் ஆபீசர்  ஆக மார்க் ருபல்லோ அருமையான  நடிப்பு.

நாயகனின் காதலி ஆக மோனிகா பர்போரா அற்புதமான அழகுடன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.ஆனால் அவருக்கான போர்சன் குறைவு தான்.

நாயகி ஆக ,இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆக  ஹல்லெ மரியா பெரி நடித்துள்ளார். நாயகனுடன் கூட்டு சேர தயஙகுவது,பாஸ் உடன் வாக்குவாதம் என பல முக பாவனைகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார்.


சைக்கோ பைக் வீரர் ஆக  பார்ரி கியோகான் ஆக்ரோஷமான நடிப்பு

ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.சேசிங் காட்சிகளில் கேமரா விளையாடி இருக்கிறது.

எடிட்டிங் ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பார்ட் லேட்டன்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன்,நாயகி,வில்லன் ,ஒரு சைக்கோ,நாயகனின் காதலி  மொத்தம். ஐந்து  கேரக்டர்கள் டிசைனையும் அருமையாக வடிவமைத்த விதம்

2 Thor பட நாயகன் ,Hulk பட நாயகன் ,Sword Fish பட நாயகி  என பிரபலஙகளை முக்கியக்கேரக்டர்களில் நடிக்க வைத்த ஐடியா

3 நாயகன் ,வில்லன் ,நாயகி மூவரின் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் இணைத்த விதம் நம்பகத்தன்மையுடன் காட்டிய விதம்.

4 தமிழ்ப்படம் போல 140 நிமிடங்கள் ஓடும் படம் என்பதால் சாவகாசமாய் கதை சொன்ன விதம் அருமை.

5 வில்லன் ,நாயகி இருவரும் யோகா கிளாஸ் போவதும் ,மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிப்பேசுவதும் அருமை.

  ரசித்த  வசனங்கள் 

1 பணத்துலயே குறியா இருக்காரு?அதான் பணக்காரரா இருக்காரு.

2 ஸ்மூதி பிடிக்காதா?

அந்த வார்த்தையே பிடிக்காது

3 கோதாவில் இறங்கி ட்டா உயிராவது ?மயிராவது?

4 சந்தோஷத்தைக்காசு கொடுத்து வாங்க முடியாது.

யாரோ தப்பா சொல்லிக்கொடுத்திருக்காங்க

5 லைப்ல எவ்ளோ சம்பாதிச்சாலும் போதாது.

6  யோகா கத்துக்கறியா?யாரையாவது கரெக்ட் பண்ணவா?உடம்பை Fit ஆக வைத்துக்கொள்ளவா?

7 சின்ன வயசுல இருந்தே பிரச்சனைல வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் பர்பெக்சனா இருப்பாங்க.



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன் ,வில்லன் இருவரும் ஒரே காரில் பயணம் பண்ணும் காட்சி ஏற்கனவே டாஸ்க் என்னும் வெப் சீரிசில் (HBO) வந்தது தான்.பல காட்சிகள் இதிலிருந்து உருவி இருக்கிறார்கள்.

2 நாயகியை 53 வயதானவர் என்று மட்டம் தட்டும் காட்சி தேவையே இல்லை .சீனியர் ஆபீசரை அதுவும் ஒரு லேடியை சீண்டுவது ஆபத்து. என்பது. தெரியாது.ப்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மெதுவாகச்செல்லும் கிளாசிக் க்ரைம் திரில்லர் மூவி.ரசிக்கலாம் . ரேட்டிங் 3/5 


Crime 101
Theatrical release poster
Directed byBart Layton
Screenplay byBart Layton
Based onCrime 101
by Don Winslow
Produced by
Starring
CinematographyErik Wilson
Edited by
  • Jacob Secher Schulsinger
  • Julian Hart
Music byBlanck Mass
Production
companies
Distributed by
Release dates
  • January 28, 2026 (London)
  • February 13, 2026 (United States)
Running time
140 minutes[2]
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish
Budget$90 million[3]
Box office$72.5 million[4][5]