திரை அரங்குகளில் வெளியாகும்போது மக்களால் அதிகம் கொண்டாடப்படாத படங்கள் ஓடிடி ரிலீசில் கண்டுகொள்ளப்பட்டு பாராட்டுப்பெறுவதுண்டு.2/1/2026 அன்று வெளியான இந்தப்படம் இப்போது 6/3/2026 முதல் சன் நெக்ஸ்ட் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப்பெற்று வருகிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ஐ டி கம்பெனியில் நல்ல சம்பளம் வாங்கும் ஊழியன்.பெண்களிடம் எப்படிப்பேசுவது?பழகுவது?என்பது தெரியாத கூச்ச சுபாவி.இந்த சுபாவத்தால் இவருக்கு ஆல்ரெடி இரண்டு லவ் பெயிலயரும் உண்டு.
நாயகனின் நண்பன் அதே கம்பெனியில் நாயகனுடன் பணியாற்றும் ஊழியன்.நாயகனை சரி பண்ண அவன் ஒரு பார்லருக்கு அழைத்துப்போய் அங்கே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறான்.
அவள் தான் நாயகி.நாயகி திருமணம் ஆனவள்.கணவனால் தவறான தொழிலுக்குத்தள்ளப்பட்டு அங்கிருந்து தப்பி இந்த பார்லரில் வேலை செய்பவள்.
நாயகன் நாயகியிடம் என்னுடன் ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வேண்டும்,ஜாலியாகப்பேசி என் கூச்ச சுபாவத்தைப்போக்க வேண்டும் என்று கேட்கிறான்.நாயகியும் அதற்கு சம்மதித்து ஒரு மணி நேரத்துக்கு 5000 ரூபாய் சார்ஜ்.ஒரு முழு நாள் ஊர் சுற்ற ரூ 1,20,000 ஆகும் என்கிறாள் .நாயகனும் சம்மதிக்கிறான்.
இருவரும் ஊர் சுற்றுகிறார்கள்.நாயகியின் கணவன் தன்னிடமிருந்து தப்பிப்போன நாயகியைதேடி வருகிறான்.தன்னுடைய துப்பாக்கியை நாயகி திருடி விட்டாள் என ஒரு போலீஸ் ஆபீசர் நாயகியைத்தேடி அலைகிறார்.
இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் ,சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
வித்தியாசமான இந்தக்கதையை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் பிரவீன் கே மணி.
நாயகனாக சரவண விக்ரம் கச்சிதமாக நடித்திருக்கிறார்.டி வி சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ஆக நடித்தவர் தான் இவர்.நாயகியுடனான காம்பினேசன் காட்சிகளில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.முக பாவனைகளும்,வசன உச்சரிப்பும்,உடல் மொழியும் கச்சிதம்.
நாயகியாக நடித்திருப்பவர் தமிழுக்கு அறிமுக நாயகி ஹஸ்லி.இவர் சில மலையாளப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர்.கண்களும் ,முக பாவனைகளும் இவருக்கு பிளஸ்.
வில்லன் ஆக நடித்திருப்பவர் ராஜேஷ் பாலச்சந்திரன்.க்ளைமேக்சில் நாயகியைக்கண்டதும் அவரைக்கொல்லத்துடிப்பது,அதுவரை எல்லோரிடமும் நக்கல்,நையாண்டி கலந்து உரையாடுவது என வில்லத்தனத்தில் வெரைட்டி காட்டி இருக்கிறார்.
முக்கியமான இந்த மூன்று கேரக்டர்கள்(நாயகன்,நாயகி,வில்லன்)போக சின்னச்சின்ன ரோல்களில் வரும் லாட்ஜ் மேனேஜர்,நாயகியின் தோழி,நாயகனின் நண்பன் என அனைத்துக்கேரக்டர்களையும் சுவராஸ்யப்படுத்தியது அருமை.
ஒளிப்பதிவு லோகேஷ் இளங்கோவன். நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ்,சேசிங் சீன்களில் முத்திரை பதித்திருக்கிறார்.
இசை ஜோன்ஸ் ரூபர்ட்.பாடல்கள் சுமார் ரகம்,பின்னணி இசை ஓக்கே ரகம்.
சபாஷ் டைரக்டர்
1 நாயகியின் கேரக்டர் டிசைன் ஒரு மார்க்கமாக இருந்தாலும் படம் முழுக்க அவரை கண்ணியமாகவே காட்டி இருப்பது அருமை
2 படம் முழுக்க பிளாக் காமெடி வைத்தால் போர் அடித்து விடும் என ஒரு காட்சி பிளாக் ஹியூமர் டயலாக்ஸ் எனில் அடுத்த சீன் சேசிங் சீன்,அடுத்து நாயகன்-நாயகி உரையாடல் சீன் என ஜனரஞசகமாக சீன்கள் வடிவமைத்த விதம் அருமை.
3 வசனஙகள் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன.இயக்குநர் எழுத்தாளர் பாலகுமாரனின் ரசிகர்+ வாசகர் என்பது பல இடங்களில் தெரிகிறது
ரசித்த வசனங்கள்
1 பொண்ணுங்களுக்கு மட்டும் ஆண்டவன் ஸ்பெசல் டேலண்ட் கொடுத்திருக்கான்.ஈசியா மூவ் ஆன் ஆகிடறாங்க
2 ரிலேசன்ஷிப்ல இருந்தப்போக்கூட இப்படிக்கட்டிப்பிடிச்சதில்லை.பிரேக்கப் ஆனபின் கட்டிப்பிடிக்கறா.
3 பசங்க ளுக்குப்பொண்ணுங்களைப்பிடிக்கக்காரணமே தேவை இல்லை,ஜஸ்ட் க்ராஸ் பண்ணிப்போனாப்போதும்.ஆனா பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட காரணங்கள் வேணும்
4 சப்போஸ் நான் செத்துப்போய்ட்டா என்னடா செய்வே?
கொன்னே போட்ருவேன்.
5 அடுத்தவங்களைத்தொந்தரவு செய்யாம அவனவன் வாழ்க்கையை வாழ்ந்தா சரி
6. புக்ஸ் பிடிக்குமா உனக்கு?
எஸ்,ஆனா படிக்கத்தான் பிடிக்காது.
7 போலீசா?ஐ டி கார்டைக்காட்டாம பான் கார்டைக்காட்டிட்டுப்போறான்?
8 உலகத்துல நம்மைப்பத்தி யோசிக்கவும் ஒரு ஆள் இருக்கு என்ற Feel இருக்கு பார்,அதான் லவ்.
9 யார் இல்லாதப்ப நம்ம தனிமையை உணர முடியுதோ அவஙக தான் நம்ம லவ் இன்ட்ரஸ்ட்
10 எனக்கு ஒரு ஸ்பெசல் டேலண்ட் இருக்கு.நான் யாரையாவது காதலிச்சா அவளுக்கு உடனே மேரேஜ் Fix ஆகிடும்.
11 இயற்கையும்,பொண்ணும் ஒண்ணு.யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் துப்பாக்கியுடன் சுற்றுகிறான்,கண்டபடி சுடுகிறான்.போலீஸ் வரவே இல்லை.
2 துப்பாக்கியைப்பறிகொடுத்த ஒரு போலீஸ் ஆபீசர் நாயகியிடம் அதைப்பெறும்போது எந்த ரீ ஆக்சனும் காட்டாமல் இருப்பது ஏனோ?
3 இது காதல் கதையா?க்ரைம் கதையா? காமெடி கதையா?என்ற குழப்பம் ஆங்காங்கே தென்படுகிறது.
4 க்ளைமாக்ஸ் சீனில் நாயகி திடீர் என சிரிப்பது,நாயகன் பயந்து ஓடுவது,டக் என அந்த இடத்தில் படத்தை முடிப்பது சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரிவது சிரமம்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+ ஒரு இதழ் முத்தக்காட்சி உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசன ரொமாண்டிக் க்ரைம் பிளாக் காமெடிப்படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5
