Monday, November 24, 2025

மாஸ்க்(2025)-தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்)

             


               ஆண் ட்ரியாவின் சொந்தப்படம் இது.அதுவும் தனது சொத்துக்களை அடமானம் வைத்து எடுத்த படம் என்பதாலோ என்னவோ இயக்குனர் உயிரைக்கொடுத்து உழைத்து இருக்கிறார்.திரைக்கதையை நம்பும் படஙகள் தோற்காது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக உணர்த்திய படம் இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு அரசியல்வாதி.தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு 440 கோடி  ரூபாய் பணத்தைப்பட்டுவாடா செய்ய வில்லியை அணுகுகிறான்.எந்த சந்தேகமும் இல்லாமல்  வாக்காளர்களுக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது வில்லிக்குகொடுக்கப்பட்ட டாஸ்க்


வில்லி ஒரு சமூக சேவகி என்ற போர்வையில்  உலா வரும்  ரெட் லைட் ஏரியா ஓனர்.ஏகப்பட்ட அடியாட்களை வைத்து தொழில் நடத்தி வருபவர்.வில்லனுக்கும் ,வில்லிக்கும் எந்த பந்தமும் கிடையாது.


நாயகன் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜென்சி நடத்துபவர்.திருட்டு பயலே படத்தின் ஹீரோ போல மற்றவர்களின் கில்மா வேலையைப்படம் பிடித்து அதன் மூலம் வருமானம் பார்ப்பவர்.அவரே அவரைப்பற்றிக்கூறும் பஞ்ச் இது .நான் கெட்டவன் தான் ஆனா எச்சை இல்லை. 


நாயகி என்னவாக வருகிறார்? நாயகனுடன் எப்படிப்பழக்கம் என்பது சஸ்பென்ஸ்.


வில்லி ஓனரா இருக்கும் ஒரு ஷாப்பிங்க் மாலில் சில கொள்ளையர்கள் புகுந்து அந்த 440 கோடி ரூபாயை கொள்ளை அடித்து விடுகிறார்கள்.வில்லி நாயகனிடம் அந்தக்கொள்ளை கும்பலைக்கண்டு பிடிக்க டாஸ்க் கொடுக்கிறாள்


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆகக்கவின் கச்சிதம்.ஓவர் ஆக்டிஙக் இல்லாமல் அளவாக நடித்திருக்கிறார்.


நாயகி ஆக வரும் ருஹானி  சர்மா கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத நடிப்பு.1980 கால கட்டப்படங்களைப்பார்த்து வெட்கப்படுவது எப்படி? நளினமாக நடந்து கொள்வது எப்படி?என்பதைக்கற்றுக்கொண்டால் நலம்.


வில்லி ஆக ஆண்ட் ரியா .சில இடஙகளில் ஓக்கே ரக நடிப்பு ,பல இடஙகளில் ஓவர் ஆக்டிங. வில்லியாக சிம்ரன் நடித்ததை டெக்கில் பார்த்து பயிறசி செய்திருப்பார் போல.


வில்லன் ஆக  வரும் பவன் சுமார் ரக நடிப்பு.வீரம் அஜித் கெட்டப் எதுக்கு இவருக்கு ?


நாயகனின் மாமனாராக வரும் சார்லி க்ளைமாக்சில் அப்ளாஸ் அள்ளுகிறார்.


ஜார்ஜ் மரியம் குணச்சித்திர நடிப்பு கச்சிதம்.

நாயகியின் கணவனாக வரும்  அச்யுத்குமார் அசத்தி விட்டார்.

நாயகனின் மனைவியைக்கடைசி வரை காட்டாமலேயே கதையை முடித்தது நல்ல ஐடியா.


பேட்டரி என்னும் கேரக்டரில் நடித்தவர் அருமை.கெஸ்ட் ரோலில் வரும் ரெடின் கிங்க்ஸ்லீ ஓக்கே ரகம்


இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவர் தந்திருக்கிறார்.


ஜி வி பிரகாஷ குமார் தான் இசை.நான்கு பாடல்களில் 2 தேறுகின்றன.பின்னணி இசை கச்சிதம்.


ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை.ஆனால் நாயகி ,வில்லி இருவரையுமே அழகாகக்காட்ட முடியவில்லை.

ஆர் ராமரின் எடிட்டிஙகில் முதல் பாதி நல்ல வேகம்.முதல் 10 நிமிடஙகளில் அந்த பாஸ்ட் கட்டிஙகை தவிர்த்திருக்கலாம்.


127 நிமிடஙகள் படம் ஓடுகிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  விகர்ணன் அசோக்.


இயக்குநர் வெற்றி மாறனும் ஒரு தயாரிப்பாளர்



சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் நாயகியிடம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது ஒரு மகளும் உண்டு என்ற அதிர்ச்சிச்செய்தியை சொன்னதும் ஓ எனக்கதறி அழும் நாயகி அதற்குப்பின் தரும் பூமாரஙக் அட்டாக் காமெடிக்கலக்கல்.

2 ஹெல்மெட் இருக்கா? என நாயகி பூடகமாகக்கேட்க நாயகன் ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் போகும் போது ஷட்டரை மூடும் வாட்ச்மேனிடம் ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி எனக்கெஞ்சும் சீன் செம.

3 ஹை ஜாக்கர்சிடம் நாயகன் ஒரு மணி நேரம் பர்மிசன் கேட்கும் சீன்


4 நாயகன் ,நாயகி ,ஆடியன்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஜெர்க் கொடுக்கும் இண்ட்டர்வெல் ட்விஸ்ட்,அதைத்தூக்கி சாப்பிடும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்



  ரசித்த  வசனங்கள் 


1 ஏண்டா காசு காசுன்னு அலையறே?


காசு எனக்குத்தேவை இல்லை.இந்த உலகத்துக்குத்தேவை


2 ஒரு வேலை செய்யறோம்னா காசு வேணும்,குறைந்த பட்சம் மரியாதை வேணும்,அதுக்குப்பேர் தான் வேலை


3 உன்னை அழ வைப்பதற்கோ ,காயப்படுத்துவதற்கோ உண்டான உரிமையை நீ யாருக்கும் கொடுத்துடாத,அதை நீயே பத்திரமா வெச்சுக்கோ

4 காசு காசுன்னு வாழ்க்கை பூரா  ஓடிட்டு இருக்கோம்,ஆனா இவ்ளோ காசை மொத்தமாப்பார்த்தா திக்னு இருக்கு

5 அவளே ஒரு தோல் வியாபாரி.அவளை வெச்சு எண்ட்டர்டெய்ன் வேணா பண்ணலாம்,எலக்சன் எப்படி?

6 என்ன மச்சி? FEEL பண்றியா?

இல்லையே?

உன் முகத்துக்கு அது செட் ஆகாது

7 அவஙக எல்லாரையும் வெச்சு செய்யறோம்


நோ.நம்மை செஞ்சாதான் திருப்பி செய்யனும்


8  ஒருத்தருடைய பலவீனம் என்னைக்கு இருந்தாலும் இன்னொருத்தருக்கு பலம்.

9 எது எப்போ யாரைக்காப்பாத்தும்னு நமக்குத்தெரியாது.

10 மேடம்.அவனால உங்களை எதுவும் பண்ணமுடியாதுன்னு அவனுக்கே தெரியாது

11 கோபமா இருக்கறவங்களைக்கூட  நம்பலாநம்பலாம்,ஆனா இந்த மாதிரி பாவமா இருக்கறவங்களை நம்பக்கூடாது

12 என்னபண்றே நீ?

சும்மாதான் இருக்கேன்


சும்மா இருக்கறதுக்கு முன் என்ன பண்ணினே?

அப்பவும் சும்மாதான் இருந்தேன்

13 அக்கா,அடிக்கடி உங்களை நல்லவங்ககளாப்பார்த்து போர் அடிக்குது.

14  நாம யாருக்கு உண்மையா ,விசுவாசமா இருக்கோமோ அவஙக அதுக்குத்தகுதியானவங்க தானா? யோசி

15 அடுத்த நிமிசம் என்ன நடக்கும்னு தெரியாத வேலை.வேற எங்கே கிடைக்கும்? இந்த திரில்?

16 மிடில் கிளாஸ் மைண்ட் செட்.எப்போ என்ன செய்வான்னு யூகிக்க முடியாது

17 காமன் மேன்  இல்லாம அரசாங்கமும் இல்லை,அதிகாரமும் இல்லை

18 நீங்க புத்திசாலின்னு எனக்குத்தெரியும்,அதனாலதான் நான் முட்டாளாவே  நடிச்சுட்டு இருந்தேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லி ஆக நடித்த ஆண்ட் ரியாவுக்கு ஓவர் மேக்கப்.சில இடஙகளில் ஓவர் ஆக்டிஙக்.தயாரிப்பாளர் தான் வில்லி என்பதால் இயக்குநர் கரெக்ட் பண்ணவில்லை போல.

2  க்ளைமாக்ஸ்க்கு முன் ஜார்ஜ் அழுது கொண்டே பேசும் டயலாக் புரியவில்லை

3 கொள்ளை அடிக்க மாஸ்க் வேண்டும் என்பவர்கள் ரெடிமேடாகக்கிடைப்பதை வாங்கிக்கொள்வதுதான் சேப்டி.ஆர்டர் கொடுத்து செய்தால்  ட்ராக் பண்ணி விடுவார்கள் என்பது தெரியாதா?

4 பொதுவா பெண்களிடம் ரகசியம் தங்காது.பணத்தைக்கொள்ளை அடித்தவன் தன் மனைவியிடம் எல்லா ரகசியஙகளையும் எதற்காக உளறுகிறான்.

5 வில்லனின் ஆள் நாயகனுக்கு போன் பண்ணும்போது நாயகன் கட் பண்ணுகிறான்.அடுத்த நொடியே  10 நிமிடம் பேசும் வாய்ஸ் மெசேஜ் வருது.எப்படி?

6 க்ளைமாக்சில் பேட்டரி கையில் உள்ள துப்பாக்கியை தட்டி விட்டு நாயகன் ஓட  அப்போது பேட்டரி மீண்டும் துப்பாக்கியை எடுத்து சுட முயற்சிக்கலை?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விறுவிறுப்பாகச்செல்லும் நல்ல க்ரைம் திரில்லர்.ட்விஸ்ட்களும் அருமை.விகடன் மார்க் யூகம் 44 .குமுதம் ரேங்க்கிங்க் குட்.ரேட்டிங்க் 3 /5


Mask
Theatrical release poster
Directed byVikarnan Ashok
Written byVikarnan Ashok
Produced byVetrimaaran (presenter)
Andrea Jeremiah
SP Chokkalingam
Vipin Agnihotri
Starring
CinematographyR. D. Rajasekhar
Edited byR. Ramar
Music byG. V. Prakash Kumar
Production
companies
Grass Root Film Company (presents)
Black Madras Films
The Show Must Go On
Release date
  • 21 November 2025
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageTamil