1.தனது இறுதி ஊர்வலத்தில் கூட வாழ்க! கோஷம் போடப்படுவதை விரும்புவனே அக்மார்க் அரசியல்வாதி
-------------------------------------
2. வாழ்க்கையில் ரிஸ்க் எடு, ஜெயித்தால் தலைவன் ஆவாய், தோற்றால் வழி நடத்தப்படுவாய்!
---------------------------
3. எப்பவும் என்னைத்தான் நினைச்சுட்டு இருக்கீங்க என்பதற்கு ஆதாரம் இருக்கா?
நினைக்கலைங்கறதுக்கு உன் கிட்டே ஆதாரம் இருக்கா? # காதல் கடலை
--------------------------------
4. காதலிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்களா?
ச்சே! ச்சே! காதலியால் கைவிடப்படும் அபலை ஆண்கள் மட்டும் பைத்தியக்காரர்கள்!
------------------------------
5. சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராதாமே? நிஜமா?
சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படுவதும், உணரப்படுவதும்தான் காதல்.
-----------------------------
6. தன்னிடம் கெஞ்சும் ஆண்களை சில பெண்களுக்கு பிடிக்கும் ,தன்னிடம் கொஞ்சும் பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்
-------------------------------
7. மழலைகளை கொஞ்சி மகிழாத உள்ளங்களைக்கூட மன்னித்து விடலாம்,அவர்களை கடுமையாக கண்டிக்கும், தண்டிக்கும் ஆட்களை மன்னிக்கவே முடிவதில்லை
------------------------------------
8. தினமும் மனைவிக்கு பூ வாங்கிச்செல்பவன் அன்புக்கணவன், கூந்தலில் சூடி விடுபவன் அன்புள்ளம் கொண்ட கணவன்.
---------------------------
9. என் இதயம் ஒரு வழிப்பாதை போல! உள்ளே நுழைய மட்டுமே உனக்கு அனுமதி! நீ என் வாழ்வில் எதிர்பாராமல் கிடைத்த வெகுமதி..
----------------------------------
10. அவள் ஒரு அமைதி விரும்பி. சத்தம் வராத முத்தம் மட்டுமே அவளுக்குப்பிடிக்கும், ஆனால் நான் ஒரு ஆர்ப்பாட்டவாதி # SOUND OF LOVE
---------------------------
Cutest Girl


11. குழந்தைகளை எந்த வயதில் இருந்து அடிக்கலாம்? என விவாதிப்பது எப்போதிலிருந்து குழந்தைகளை எதிர்மறை எண்ணம்கொண்டவர்கள் ஆக்கலாம்? எனகேட்பது போல
------------------------------------
12. பெண் குழந்தை பிறந்த வீட்டில் மஹா லட்சுமி குடி இருப்பாள்,எந்தக்குழந்தை பிறந்தாலும் சந்தோஷ லட்சுமி விருந்துக்கு வருவாள்
-------------------------------
13. மழை வரும்போது மண்ணின் வாசம் கிளம்புவது மாதிரி மழலை அருகே வரும்போது பால் வாசம் தளும்புகிறது
-------------------------------
14. மனைவியுடனான சந்தோஷ தருணங்களில் விதவைத்தாயின் துக்கங்கள் நெஞ்சை நெருடும்.
-----------------------------
15. குக்கர் - நீ ஏன் இவ்ளவ் கறுப்பு? வட சட்டி - இப்பவே நீ விசில் அடிச்சு கூப்பிடறே! சிவ்வப்பா இருந்துட்டா.? # சமையல் அறை சரசங்கள்
-------------------
16. நல்லவர்களோ, கெட்டவர்களோ பெரும்பாலானவர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்
------------------
17.என் ஆயுள் உள்ளவரை உன் காதல், அல்லது உன் காதல் உள்ளவரை என் ஆயுள் இரண்டில் ஒன்று போதுமடி எனக்கு!!
---------------------------------------
18. தொட முடியாத தூரத்தில் வானம், பிடிக்க முடியாத தரத்தில் காற்று, மறக்க முடியாத ஈரத்தில் உன் கண்கள்
---------------------------------------
19. உலகின் மென்மையான வன்முறை உன் செல்ல அடியாக இருக்கும்,உலகின் சிறந்த பாதுகாப்பான இடம் எனக்கு உன் மடியாக இருக்கும்
--------------------------------
20. நான் விரும்பாததை யார் சொன்னாலும் செய்வதில்லை, நான் விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் விடுவதில்லை # தாந்தோனி தர்மா
----------------------------------

21.மணமான ஆண்களின் மூளை கணினி போல.. சுயமாக சிந்திப்பதில்லை
-------------------------------
22. நான் ஆர்த்தோடக்ஸ் ஃபேமிலி - நடிகை சோனா # மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது இந்த பெட்ஷீட்டை போர்த்திக்கொள்ளவும்,நாங்க வீக்ஃபேமிலி
-----------------------------------
23. அன்பு காட்டுறவங்களிடம் ஜாலியா இருந்தேன்! - ஸ்ரேயா # வேலியா உங்கம்மா பக்கத்துல இல்லையா? மேடம்?
--------------------------------
24. கணவனும், மனைவியும் சினிமாவில் இருந்தால் பிரச்னைதான்! - நந்தா #ஒண்ணா சினிமாவுக்கு போனாலே பிரச்சனைகள் ஓராயிரம் வருது, நடிச்சா வராதா?
-------------------------------
25. நானும், மகத்தும் நல்ல நண்பர்கள், மகத் என் காதலர் அல்ல, சிம்புவுக்கு சிறு வயதில் இருந்தே அவர் நண்பர் - டாப்ஸி # குழப்பாதீங்க!
--------------------------
Río Negro