Tuesday, October 18, 2011

காதல் கடலைகள் போட்டிடும் நேரம்.......இதழோரம்......(ஜோக்ஸ்)


1.வேட்பாளர் ஆயுள் கைதியா ஜெயில்ல இருக்கார்.எப்படி ஜெயிச்சார்.? 

வெளில வந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார்னு ஒரு நம்பிக்கைதான்

------------------------------

2. டீச்சர், என் பையனுக்கு மெம்மரி பவர் கம்மி, என்ன மேல் படிப்பு படிக்க வைக்கலாம்?..

எதுவும் வேணாம், அவன் நிதி அமைச்சர் ஆனாலும் ஆகிடுவான்

--------------------------------

3. தலைவரே! மணல் கொள்ளைல உங்க பேரும் அடிபடுதே? 

கொள்ளை அடிச்சது உண்மை தான், போயும் போயும் மணலையா? நெவர்

------------------------------

4.  ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமா இருக்கே?எப்டி?

சும்மாவா? 2 பேருக்கும் ஜாதகப்பொருத்தம் 10 பொருந்தி இருக்கே?

------------------------------

5. தலைவரே! செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு போய்ட்டாங்கன்னீங்களே? 
 மறுபடி நகைத்திருட்டு நடந்திருக்கே?

ஆந்திரா போரடிச்சிருக்கும்,6 மாசம் இங்கே

--------------------------------




6. ஸாரி மிஸ்டர், எனக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. 

வாவ்! எனக்கும்தான் மிஸ்.நம்ம 2 பேருக்கும் எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?

-----------------------------------

7.  எங்களுக்குத்தான் ஓட்டு போடனும்னு மக்கள்ட்ட வீடு வீடா போய் சத்தியம் வாங்குனீங்களா? 

நோ நோ பொய். வாட் எ சத்திய சோதனை?

--------------------------------------

8. சிம்பு ரசிகரை லவ் பண்ணுனது தப்பா போச்சா ஏண்டி? 

லவ் பண்ணும்போது நான் தான் ”ஒஸ்தி”ன்னார், மேரேஜ்க்குப்பிறகு லைஃபே நாஸ்திங்கறார்

-----------------------------------

9.கோடம்பாக்கத்தின் கொலம்பஸ் பட்டம் விஜய்க்கு எப்படி கிடைச்சுது?

வேல் ஒரு ஆயுதம்னு கண்டு பிடிச்சாரே? # வேலாயுதம் ராக்ஸ்

-------------------------------

10. போதிதர்மன் யார்னே தெரியாதுன்னு தலைவர் சொன்னாராமே?

ம்க்கும், அவருக்கு மகாபாரதத்துல வர்ற தருமனையே தெரியாது

--------------------------------

 



11. சிம்புவும், பிரபுதேவாவும் இணைந்து ஒரு படம் பண்றாங்களாமே?

ஆமா, டைட்டில் -  சட்டி சுட்டதடா, கை விட்டதடா..

---------------------------------

12. உள்ளாட்சித்தேர்தல்ல யாராவது பணம் கொடுத்தா உடனே போலீஸ்க்கு தகவல் கொடுங்க..

ஏன்? அவங்களுக்கு அங்கே வந்து தர மாட்டாங்களா?

-------------------------

13. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வித்தியாசமில்லை - விஜயகாந்த் # சிம்புவுக்கும், பிரபு தேவாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை - 9 தாரா

----------------------------------

14. ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. இதற்குப்பிறகும் எங்களை ஜெயிலில் அடைத்தால் நாங்கள் ஆளுங்கட்சிக்குத்தாவுவதை தவிர வேறு வழி இல்லை என எச்சரிக்கிறோம்

--------------------------------

15. இந்த ஃபிகருதான் என்னோட நாளைய இயக்குநர்...

புரியலையே?

என் வருங்கால மனைவிடா.

--------------------------------


nice shift photography


16. தலைவரே! நீங்க எத்தனையோ பெண்களை ஏமாத்தி இருக்கீங்க.. இப்போ உங்க மேல போட்டிருக்கற நம்பிக்கைதுரோக வழக்கு எந்த பெண் தொடுத்த வழக்கு?

------------------------------

17. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவர் இருப்பாரு..

சும்மா கதை விடாதே.. அவருக்குத்தான் வேலையே கிடையாதே?

------------------------------

18. தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

நிரந்தர வருங்கால முதல்வரே!ன்னு கட் அவுட் வெச்சாங்களாம்

-------------------------------

19. என் காதலர்ட்ட வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டேன்..

அடடா.. என்னாச்சு? வேறென்ன? லிப் கிஸ் தான்

----------------------------

20. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் மந்தநிலை!-  நிற்பவை எல்லாம் மந்தியாக இருந்தால்!!!!!!!!

-----------------------------