Tuesday, October 11, 2011

குண்டக்க மண்டக்க கமெண்ட்டக்க ஜோக்ஸ்

1.சாதாரண பலம் கொண்ட நம்மை அசுர பலம் கொண்டவராக மாற்றுவதால் நாம் நம் எதிரிகளை பாராட்ட வேண்டும்!


-------------------------------------

2. பலராலும் அறியப்படாத திறமைசாலிகளை தூக்கி விட குனிபவனே உலகின் சிறந்த , உயர்ந்த மனிதன்

---------------------------

3. பூஜை அறை இல்லாத மிடில் கிளாஸ் வீடுகளில்  சாமி படம் போட்ட காலண்டர் மாட்டப்பட்ட ஹாலே பூஜை அறையாக பாவிக்கப்படுகிறது

-----------------------------------------

4. உன்னிடம் எனக்குப்பிடிக்காதது என்னை கண்டு கொள்ளாத அலட்சியம், என்னிடம் உனக்குப்பிடிக்காதது உன்னை விட்டு விடாத ,விட்டுத்தராத என் லட்சியம்

---------------------------------

5. ஈகோ பார்ப்பதுதான் தம்பதிகளுக்குள் தோன்றும் பெரிய பிரச்சனை, விட்டுக்கொடுத்தல்தான் அதற்கான ஒரே தீர்வு

-------------------------------------

6.  அவமானங்களை இரைத்து என்னை காட்சிப்பொருள் ஆக்குகிறாய் நீ! அன்பு ஆபரணங்களால் இழைத்து உன்னை என் காதல் சாட்சிப்பொருள் ஆக்குகிறேன் நான்

-------------------------------------

7. உன் அழகில் வீழ்பவர்கள் பட்டியல் நீளவேண்டும் என்ற பேராசை உனக்கு. உன் அன்பால் வாழ்பவர் பட்டியலில் நான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஓராசை எனக்கு

--------------------------------------------

8. உங்க ஃபர்ஸ்ட் நைட் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருந்ததாமே? 

ஆமா, அவ ரொம்ப கூச்ச சுபாவி, தொடாம, மேல படாம என்ன வேணா செஞ்சுக்குங்கன்னுட்டா!

--------------------------------------------

9. ரூ.200 கோடி நிலத்தை அபகரிக்க அதிமுக அரசு முயற்சி- கருணாநிதி -- சரி விடுங்க, 5 வருஷம் உங்களுக்கு, 5 வருஷம் அம்மாவுக்கு

----------------------------------

10. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றியுள்ளேன்-ஜெ # அப்போ வந்த வேலை முடிஞ்சது, ரிசைனிங்க்?

----------------------------------



11. வடிவேலு சேர்ந்ததால் திமுக அழிந்தது-சிங்கமுத்து # சிம்ரனுக்கு திருமணம் ஆனதால்தான் தமனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது - தீபக்

-----------------------------------

12.  இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன்..  

அப்டியா உக்காருங்க.

. தாங்க்ஸ்.. கம்ப்பெனில இருக்கற டாப் 10 ஃபிகர்ஸை கூப்பிடுங்க, பார்க்கலாம்!

-----------------------------------------

13. டியர்.. எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கு.. 

ஓஹோ, அப்போ பல பெண்களை பார்த்துட்டு கடைசியாத்தான் இங்கே வந்தியா?

-------------------------------------

14.  தலைவரே! நீங்க ஒரு பொய்யர்தானே? 

ஆமா... அதுக்கென்ன? 

பொய் வழக்கு போடறாங்கன்னு ஏன் குதிக்கறீங்க?

---------------------------------

15. தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் ஜெ- நடிகர் தியாகு # தொண்டனுக்கு கொடுப்பேன், குண்டருக்கோ, குடிகாரருக்கோ தர மாட்டேன் - ஜெ

----------------------------


16. எந்த நடிகர் வந்தாலும் ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது :EVKS # காங்கிரஸ் கட்சி என்ன நயன் தாராவா?

-------------------------------

17. நில மோசடி வழக்கு எதிர்க்கட்சி ஆளுங்க மேல மட்டும் தான் பாயுதாமே? 

ச்சே, ச்சே, அப்படி இல்லை, ஆளுங்கட்சி ஆளுங்க மேல பாயாது, அவ்ளவ் தான்

---------------------------------------

18. டாக்டர், பேஷண்ட்டோட கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு? 

எங்கே இருக்கு?ன்னு கேளுங்க.. ஏர்கண்டிஷன்ல

------------------------------

19. அவர் ரொம்ப அப்பாவி,


எப்படி சொல்றே?

வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நம்புபவர்...

-----------------------------------------

20. சென்சஸ் ஆஃபீசர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்டி சொல்றே? 

வீட்ல எத்தனை லேடீஸ் இருக்காங்க? நான் அளவெடுக்கனும்கறாரே?

------------------------------------