Thursday, September 08, 2011

பிரபுதேவா எனக்கு சகலை முறையா? சிம்பு காட்டம்

Santa Cruz
1.காதல்காரன், காய்ச்சல்காரன் இருவருக்கும் இதழ்கள் இனித்த நிலையிலும், விழிகள் பனித்த நிலையிலும் இருக்கும்

--------------------------

2. ஒவ்வொரு தனி மனிதனும் தினமும் குறைந்த பட்சம் 4 பொய்கள் வீதம் வருடம் 1460 பொய்கள் சொல்கிறான், மேக்சிமம் சொல்ற பொய் “ ஐ ஆம் ஃபைன்”

-------------------------

3. வலிகளைப்பரிசாகத்தருவதில் உனக்கு நிகர் யாருமில்லை.தந்தது நீ என்பதால் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு நிகர் யாருமில்லை

-----------------------------

4.  ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததால் முதல்வர் தலையிட முடியாது: ஜெ. விளக்கம் # பரிந்துரை செய்யலாமே?மனம் இருந்தால் மார்க்கமுண்டு

--------------------------

5.எல்லோருடைய வாழ்விலும் 2 காதல்கள் உண்டு 1. சொல்லாத காதல் 2. சொல்லி நிறைவேறாத காதல்

----------------------------


Neuquén
6. உன் மனதில் நான் இல்லை என்பது தெரிந்த பின்பும் உன் மீதான என் அன்பு குறைந்த பாடில்லை

---------------------------

7. தினசரி 4 காட்சிகள் போட்டா அது சினிமா தியேட்டர், தினசரி 4 கட்சிகள் மாறுனா அது ராம்தாஸ் வழிகாட்டல்

-----------------------------

8. அன்பு மட்டுமே எனக்கிருக்கும் ஒரே சொத்து, சந்தேகங்கள் மட்டுமே உன் மனதில் படிந்திருக்கும்  ஒரே வித்து

-------------------------------

9. என் எல்லா சோகங்களுக்கும் நீ ஆறுதல் சொல்வாய்!ஆறுதலே யாரும் சொல்ல முடியாதபடி நீயே என்னை பிரிந்து கொல்வாய்!

-----------------------

10. நீ எனக்கு துரோகம் செய்வாய் என நான் நினைத்ததில்லை,என் கண்ணீர் உன்னை காயப்படுத்திவிடுமோ என்றுதான் என் கண்களைக்கூட நனைத்ததில்லை

--------------------



11. "திமுகவின் தோல்விக்கு பெண்கள் தான் காரணம்''- ஸ்டாலின் #  அ தி.மு.க.,வின் வெற்றிக்கு கலைஞர்,ஆ ராசா போன்ற  ஆண்கள் தான் காரணம்  - ஜெ

-------------------------

12. என் காதலுக்கு நீயே விளிம்பாக இருக்கிறாய், என் காயங்களுக்கு களிம்பாக ஏன் மறுக்கிறாய்?

-----------------------


13. உன் சமீபம் என்னை மென்மை ஆக்குகிறது, உன் அன்பு என்னை மேன்மை ஆக்குகிறது

----------------------------


14. இதே பிரச்சனை சசிகலா குடும்பத்தில் யாருக்காவது வந்தால் இதே போல் அதிகாரம் இல்லை என சொல்வாரா? ஜெ?

-------------------


15. காதலை முதலில் சொல்வது பெரும்பாலும் ஆண்களே!காதலில் கடைசி வரை கொல்வது பெரும்பாலும் பெண்களே!

---------------------------



16. சிம்பு என் நண்பன் இல்லை-ஜீவா  #  பிரபுதேவா என் சகலை அல்ல - சிம்பு @ இமேஜினேஷன்

-----------------------------

17. மூன்றெழுத்தில் நம் மூச்சு இருக்கும் ,அது கடமை,மூன்று உயிர்கள் காப்பாற்ற கோருவோம், அது நம் உரிமை

----------------------------


18. ஒரு உயிர் பிறந்ததும் உதிர்க்கும் முதல் வார்த்தை அம்மா,இந்த மூன்று உயிர்கள் பிழைத்தால் பல ஆயிரம் உயிர்கள் உச்சரிக்குமே அம்மா உன் பெருமையை

-----------------------------

19. நீ இடம் மாறுகிறாய் , தடம் மாறுகிறாய், ஆனால் என் இதயம் மட்டும் மாறவே இல்லை

----------------

20. ஒரு தோல்விக்குப்பின் 1000 காரணங்கள் இருக்கும், ஆனால் ஒரு வெற்றிக்குமுன் 1000 தோல்விகள் இருக்கும்

---------------



21. அமைவதுதான் வாழ்க்கை என்று எண்ணாமல், அமைத்துக்கொள்வதுதான் வாழ்க்கை என எண்ணுங்கள் # லவ் மேரேஜ்

-------------------


22. தவறான 100 நபர்களை நேசிப்பதால் இழப்பு ஏதும் இல்லை,ஆனால் சரியான நபர் ஒருவரை வெறுப்பது வாழ்க்கை முழுதும் உன் இதயத்தை தொந்தரவு செய்யும்

-----------------------


23.  பாடலின் நாயகி பாட்டுடைத்தலைவி ஆகும்போது ட்வீட்டின் நாயகி ட்வீட்டுடைத்தலைவி ஆகமாட்டாளா?

---------------------------

24. எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்வில் அர்த்தமே இல்லை. என் வாழ்வின் எதிர்பார்ப்பு உன் அன்பு, என் வாழ்வின் அர்த்தம் நீ

--------------------


25. உன்னை நீயே எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டாய்! யாராவது ஒருவரால் அன்பு காட்டப்பட்டு ஆகர்சிக்கப்படும்வரை

----------------