Saturday, November 27, 2010

கனிமொழி Vs கவுண்டமணி - சினிமா விமர்சனம்

அட

கவுண்டமணி - அய்யா ,ராசா,புது டைரக்டரு,இந்தப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்புல படத்தோட டைட்டில் பற்றி என்ன ராசா பேட்டி குடுத்தீஙக?ஞாபகமிருக்கா?

டைரக்டர் - அண்ணே,அது வந்து....கனி மொழி என்று டைட்டில் வைத்த்துக்கு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை,படத்தின் கதைக்கு அந்த டைட்டில் தேவைப்படுகிறதுன்னு பேட்டி குடுத்திருந்தேண்ணே...

கவுண்டமணி - மேலே மெலே....


டைரக்டர் - அப்புறம் .. ம் ம் இந்தப்படத்தை பார்த்தா இந்த டைட்டிலை விட பொருத்தமான வேற டைட்டில் இந்த படத்துக்கு வைக்கவே முடியாதுன்னு பேட்டி குடுத்திருந்தேன்...ஏண்ணே?பொருத்தமா இல்லையா?

கவுண்டமணி -  வருத்தமா இருக்கு.அந்தம்மா பேரை இப்படி எல்லாம் கெடுக்கறியேன்னு...இந்த டைட்டில் வைக்க அனுமதி வாங்க ஒரு மாசம் செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைஞ்ச நேரத்துக்கு நல்ல கதையை
ரெடி பண்ணி  இருக்கலாம்..

டைரக்டர் - ஏண்ணே,படத்தோட கதைக்கு என்ன குறைச்சல்?

கவுண்டமணி - ஹீரோ ஹீரோயினை ஒரு தலையா காதலிக்கறான்,கடைசி வரை காதலை அவ கிட்டே சொல்லவே இல்லை,கிளைமாக்ஸ்ல வேற ஒருத்தன் ஹீரோயினை தட்டிட்டு (கல்யாணம் பண்ணிட்டு ) போயிடறான்..இதுல என்ன புதுமை இருக்கு?இந்த மாதிரி ஓராயிரம் படம் பார்த்தாச்சு...

அட

டைரக்டர் - சரி,அதை விடுங்கண்ணே...ஹீரோவும்,ஹீரோயினும் சந்திக்கற முத சீன்ல 2 பேருமே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வந்து கலக்கி இருப்பாங்களே,அதைப்பத்தி ஆடியன்ஸ் என்ன பேசிக்கறாங்க?

 கவுண்டமணி -  ஏதோ மஞ்ச மாக்கான் படத்துக்கு வந்துட்டமோன்னு பேசிக்கிட்டாங்க...

டைரக்டர் - சரி..ஹீரோயின் எப்படிண்ணே?

கவுண்டமணி - அது சும்மா சொல்லக்கூடாது..நல்ல ஃபிரிட்ஜ்ல வெச்ச லெமனா,18 வயசு தமனா மாதிரி தளதளன்னு தான் இருக்கு..ஆனா படத்தோட கதை,திரைக்கதை உனக்கு எமனா அமைஞ்சிடுச்சே?

டைரக்டர் - காமனா (COMMON) படத்தை பத்தி என்ன தாண்ணே சொல்ல வர்றீங்க?

கவுண்டமணி - படத்துக்கு தலை வலின்னு டைட்டில் வெச்சு இருக்கலாம்.

சி பி - அண்ணே,ஒரு நிமிஷம்....

கவுண்டமணி - வந்துட்டாண்டா வீங்குன வாயன்....டேய்.. இப்போ எதுக்கு வந்திருக்கே?படத்துல நீ கேட்ட நல்ல வசனத்தை பற்றி சொல்றக்காக்கும்?பரங்கிமலை ஜோதில பிட்டு படம் பாக்கற நாய் நீ இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா..?நீ தலையே சீவ மாட்டியா?

சி பி - அண்ணே,பட விமர்சனம் இனிமே எழுதுனா உன் தலையை சீவிடுவோம்னு ஆளாளுக்கு மிரட்டறாங்க..அவங்க வந்து சீவட்டும்னு நான் சீவாம இருக்கேன்.

கவுண்டமணி - அட விளங்காதவனே.. அவங்க அரிவாளோட வருவாங்க,சீப்போட வருவாங்கன்னு நினைச்சியா?சரி சரி சொல்லித்தொலை...
அட

ரசிக்க முடியாத படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்-

1.யோவ்,தியேட்டர்ல எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணுங்கய்யா.. சின்னஞ்சிறுசுக  ஏதோ சில்மிஷம் பண்ணுவாங்க..ஈங்க பாட்டுக்கு எல்லா லைட்டையும் போட்டு வெச்சா?


2.காலேஜ்க்கு படிக்கத்தானே வர்றே?எங்கே புக்,பேனா,நோட் எல்லாம்?

 எல்லாம் டெஸ்க்குல வெச்சுட்டு போயிடுவேன் சார்...

அடப்பாவி,அப்புறம் எதை படிப்பே?   நான் எங்கே சார் படிக்கறேன்?


3. முதல்ல இந்த மாதிரி அட்வைஸ் பண்ற லெக்சரரை டைவர்ஸ் பண்ணனும்.

4  நமக்குள்ள  இருக்கற டேலண்ட்டை அடிக்கடி யூஸ் பண்ணனும்,பெரிய வாய்ப்பு கிடைக்கறப்ப பார்த்துக்கலாம்னு வெயிட் பண்ணக்கூடாது..

5. டேய். உனக்கு எல்லா வேலையும் செஞ்சு செஞ்சு என் காலெல்லாம் தேஞ்சு போச்சு.

அம்மா.பேசாம எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி  வெச்சுடு. உனக்கு ரெஸ்ட் எனக்கு பெஸ்ட்.


6. கமபைன் ஸ்டடி பண்றேன்னு வெளில போறவனை நம்பிடலாம்,ஆனா தனியா படிக்கறேன்னு கதவை தாழ் போட்டுட்டு படிக்கறவனை நம்ப முடியாது..

7.  டேய் மாப்ளே.. இவளா உன் ஆளு?சூப்பரா இருக்கா.. இவளை மட்டும் நீ கல்யாணம் பண்ணிட்டே என் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாதுடா..

நல்ல ஃபிரண்டுடா...

8. என் பந்தை எவனும் தொடக்கூடாதுடா,தொட்டா அவன் ஃபெயில் ஆகிடுவான்..

அடப்பாவி..எப்படி எல்லாம் மிரட்டறான்..நீயே தனியா வலிபால் விளையாடு..

9.எது கத்துக்கறதா இருந்தாலும் இன்ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம்.

10.  சார் எனக்கு பட சான்ஸ் வேணும்.

எனக்கு தெரிஞ்ச புது டைரக்டர் ஒருத்தர் இருக்காரு,போறியா?

சார்... மணிரத்னம்,ஷங்கர் இப்படி இருந்தா சொல்லுங்க...

11.  மாமா ,உங்களுக்கு லவ் பிடிக்காதா.. ஏன்? லவ் ஃபெயிலரா?

இல்ல,லவ் பண்ணுனவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..அதான்..

12. போலீஸ் மாதிரியே கேள்வி கேக்கறியே அது ஏன்?

திருடன் மாதிரியே பதில் சொல்றியே அது ஏன்?

13.  காதலியின் ஃபோட்டோவை தொட்டுப்பார்க்க முயலும் நண்பனிடம் ஹீரோ-   டேய்.. அவ என் ஆளு கை வைக்காதே..



அடப்பாவி.. வெறும் ஃபோட்டோடா..

கூப்பிட்டுப்பாரு,திரும்பிப்பார்ப்பா..

14. நான் உன் ஃபோன் நெம்பரை சத்தம் போட்டு  அவ முன்னால சொல்றேன்,அவ உனக்கு கால் பண்ணுனா  அவ உன்னை லவ் பண்றான்னு அர்த்தம்.

சப்போஸ் அவளுக்கு நீ சொன்ந்து கேக்கலைன்னா?

காது கேகாதவனு கழட்டி விட்டுடு..

15.  என்னடா ஸ்வெட் ட்ரீம்ஸ் (SWEAT DREAMS) னு மெசேஜ் அனுப்பி இருக்கே..ஸ்வீட் ட்ரீம்ஸ்டா (SWEET DREAMS)

அடடா இத்த்னை நாளா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடதான் எல்லாருக்கும் அனுப்பினேனா?

அதான் எவளும் உனக்கு செட் ஆகலை


16.  இங்கே வெச்சிருந்த பாட்டில்ல இருந்த மீதி சரக்கு எங்கே?


விடுடா,சிந்தி இருக்கும்

  எங்கே,சிந்துன இடத்தை காமி..      என் வாய்ல...


17. உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி என் கூட இருக்கறதா ஏண்டா சொன்னே?

மாட்டுனா எல்லாரும் மாட்டனும்னுதான்

18. அம்மா ஒரு 200 ரூபா குடு.

எதுக்கு?

உன் பர்ஸ்ல 500 ரூபா  நோட்டுதான் இருந்துச்சு அதான்   200 குடு,500 எடு.

19. அப்பா இந்த இங்கிலீஷ் படத்துல கிஸ் சீனே வர்ல?

5 வயசுப்பையன் கேக்குற கேள்வியைப்பாரு.. எல்லா இங்கிலீஷ் படத்துலயும் கிஸ் சீன் வரும்னு யார் சொன்னது உனக்கு?

கவுண்டமணி - அப்பாடா,முடிச்சுட்டான்,நாயே நீ ஓடிப்போயிடு,தம்பி நீ நில்லு,நீ இதுக்கு முன்னால ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல வேலை செஞ்சியா?

டைரக்டர் - ஆமாண்ணே,எப்படி கண்டு பிடிச்சீங்க?

கவுண்டமணி - படத்துல பர்ச்சேஸ் பண்ற சீன் ஏகப்பட்டது வருதே..

1. ஹீரோ செல்ஃபோன் வாங்கும் சீன் 20 நிமிஷம்

2. ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டிராவல் பேக் வாங்கும் சீன் 5 நிமிஷம்

3.ஹீரோவின் அண்ணன் பைக் வாங்கும் சீன் 3 நிமிஷம்

4.ஹீரோயின் கிஃப்ட் வாங்கும் சீன் 7 நிமிஷம்

எதுக்கு இப்படி சாவடிக்கறே?

டைரக்டர் - அண்ணே ,படத்துல சம்பவங்கள் வேணும்னே...ரசிக்கற மாதிரி சீன்ஸ் நான் சொல்றேன்

1.ஹீரோயின் எங்கே இருந்து எந்த ரூட்ல வருவானு ஹீரோவுக்கு மேப் போட்டு விவரிக்கும் சீன்.

2. ஏரியா விட்டு ஏரியா போய் அந்த ஏரியா ஆளுங்க கிட்டே அடி வாங்கும் சீன்

3.யோகா கிளாஸ்க்கு முதன் முதலா போற ஹீரோ ஜீன்ஸ்,டி சர்ட் ,கூலிங்க் கிளாஸ் சகிதம் போற சீன்

4.உள்ளங்கை மாடலில் ஒரு சோபாவை அலங்கரித்து வைத்திருந்த  சீன்

கவுண்டமணி - தம்பி நீ ஹிட்ஸ் ஆன படங்கள் நிறைய பாரு.அதுல 60 சீன்ஸ் ரசிக்கற மாதிரி இருக்கும்.நீ பண்ணுன கூத்துக்களை நான் வரிசைப்படுத்தறேன் பாரு.

1.ஹீரோயின் காலடில ஹீரோ விளையாடும் வாலிபால் போய் விழுது,தை ஹீரோயின் எடுத்து தர்றா உடனே ஒரு டூயட்

2.நடக்காததை எல்லாம் நடந்ததாக கற்பனை பண்ணிக்கொள்ளும் ஹீரோ (இப்போதான் மந்திரப்புன்னகை,குடைக்குள் மழை வந்தது)

3.க்ளை மாக்ஸ்ல ஹீரோயின் டபுள் ஆக்ட்னு ஒரு ட்விஸ்ட் தந்து பேக் அடிச்சு அது ஹீரோவின் கற்பனைனு ஜகா வாங்குனது..

4. ......

டைரக்டர் - அண்ணே,நிறுத்துங்க...படம் ஓடுமா ஓடாதா?அதை மட்டும் சொல்லுங்க..

கவுண்டமணி - ஏ செண்ட்டர்ல 7 நாள்   பி செண்ட்டர்ல 5 நால்,  சி செண்ட்டர்ல 3 நாள் ஓடும்

டைரக்டர் -  பத்திரிக்கை விமர்சனம்?

கவுண்டமணி - ஆனந்த் விகடன்-34 மார்க்

குமுதம் - சுமார்

நாடகம் மாதிரி படம் எடுக்கறவங்களுக்கெல்லாம் இந்தப்படத்தோட ரிசல்ட் ஒரு பாடமா இருக்கட்டும்.