Showing posts with label THE TRANSPORTER - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்தான பயணம் (2015) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label THE TRANSPORTER - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்தான பயணம் (2015) - சினிமா விமர்சனம். Show all posts

Monday, September 14, 2015

THE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்தான பயணம் (2015) - சினிமா விமர்சனம்

நடிகர் : எட் ஸ்க்ரெய்ன்
நடிகை :லோன் சாபனால்
இயக்குனர் :கேம்லி டெலாமர்
இசை :அலெக்ஸாண்டர் அஸாரியா
ஓளிப்பதிவு :கிறிஸ்டோப் கொலாட்
ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்ட தி டிரான்ஸ்போர்ட்டர் படத்தின் நான்காம் பாகமான ’தி டிரான்ஸ்போர்ட்டர்-ஒரு ஆபத்தான பயணம்’ விறுவிறுப்பு நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

காமிலி டெல்லம்ரெ இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை பில் கொலாஜ், ஆடம் கூப்பர் மற்றும் லுக் பெச்சன் எழுதியுள்ளனர். முதல் மூன்று பாகங்களிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஜேசன் ஸ்டாதம் இதில் நடிக்கவில்லை. எட் ஸ்க்ரைன் கதாநாயகனாக நடித்துள்ளார்.   

சிறப்பு செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த பிரான்க் மார்டின் (எட் ஸ்க்ரைன்), தற்போது அனைத்து ஆபத்துகளிலும் இருந்து விலகி அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார். பிரான்க்கின் தந்தை அவரை சந்திக்க வரும்பொழுது, 4 இளம்பெண்களால் கடத்தப்படுகிறார். 

அக்கும்பலை வழிநடத்தும் ஆன்னா எனும் பெண், தன்னை விபச்சாரத்தில் தள்ளிய நபரை கொலை செய்ய பிரான்க்கின் உதவியை பெற, அவரது தந்தையை கடத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். 

தனது தந்தையை காப்பாற்ற பிரான்க் ஆன்னாவின் கோரிக்கையை நிறைவேற்றினாரா? மிகப்பெரிய கிரிமினல் கும்பலுக்கு தலைவனாக இருக்கும் வில்லனை இவர் தனி நபராக வீழ்த்தினாரா? என்பதை இயக்குனர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். 

டிரான்ஸ்போர்ட்டர் தொடரில், அனைவருக்கும் பிடித்தமான ஜேசன் ஸ்டாதமின் கதாப்பாத்திரத்தில் அவரக்கு பதிலாக எட் ஸ்க்ரைனை நடிக்கவைத்திருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முந்தைய டிரான்ஸ்போர்ட்டர் படங்களுக்கு இணையான அழுத்தமான கதைக்களம் இல்லாததும், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு திரைக்கதை காட்சியமைக்கப்படாததும் படத்திற்கு பெரிய இழப்பு. 

படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும், விறுவிறுப்பான கார் சேசிங் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. படத்தின் தொய்வை இத்தகைய வேகமான ஸ்டன்ட் காட்சிகள் ஓரளவிற்கு குறைக்கின்றன. 

மொத்தத்தில் தி டிரான்ஸ்போர்ட்டர் ஆபத்தான பயணம்தான்.

நன்றி = மாலைமலர்