Showing posts with label B.P.180 (2025) - பி பி 180 - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label B.P.180 (2025) - பி பி 180 - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, December 10, 2025

B.P.180 (2025) - பி பி 180 - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

             

               

28/11/2025 முதல் திரை அரஙகுகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இன்னமும் ஓடிடி யில் வெளியாகவில்லை.ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்த டேனியல் பாலாஜி மெயின் வில்லனாக நடித்த கடைசிப்படம் இது

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு டாக்டர்.ஜி ஹெச்சில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் பணியில் இருக்கும் நேர்மையானவர்.வில்லன் ஒரு எம் எல் ஏ விடம் அடியாளாக இருக்கும் ரவுடி.


எம் எல் ஏ வின் மகள் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைய தன் மகளை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம்,அதற்கு உதவு என எம் எல் ஏ தனது  அடியாளிடம் கேட்டுக்கொள்கிறார்.

வில்லன் நாயகியை போனில் மிரட்ட நாயகி பணியவில்லை.போஸ்ட் மார்ட்டம் செய்வது என் கடமை என சொல்லி செய்து விடுகிறார்.

இதனால் கடுப்பான வில்லன் நாயகியைப்பழி வாங்கத்துடிக்கிறான்.நாயகியும் வில்லனிடம் சவால் விடுகிறார்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகி ஆக தன்யா ரவிச்சந்திரன் .தைரியமான கேரக்டராக வரும் அவர் சில இடஙகளில் ஓவர் டோஸ் தெனாவெட்டாக நடந்து கொள்வது ஏனோ?


வில்லன் ஆக வரும் டேனியல் பாலாஜி வழக்கம் போல் ஓவர் ஆக்டிஙக் என்றாலும் ரசிக்க முடிகிறது.டாய் டாய் என்று அவர் கத்திக்கொண்டே இருப்பது சில இடஙகளில் எரிச்சல்


எம் எல் ஏ. ஆக கே பாக்யராஜ்  அருமையான குணச்சித்திர நடிப்பு.ஆனால் நாயகி வில்லன் மோதல் வந்த பின் அவரைக்காணவில்லை.


முன்னாள் எம் எல் ஏ ஆக அருள் தாஸ் கச்சிதம்.கமிஷனர். ஆக வரும் தமிழ நடிப்பில் போலீஸ் கம்பீரம் அருமை.


ஒளிப்பதிவு ராமலிஙகம்.பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சவாலான பணி தான்.

இசை ஜிப்ரான்.ஒரு குத்தாட்டப்பாட்டு இருக்கு.பின்னணி இசை கச்சிதம்.சில இடஙகளில் காது வலிக்கும் அளவு இரைச்சல்.

திரைக்கதை ,இயக்கம் ஜேபி.இவர் மிஷ்கினின் உதவியாளர்.ஓப்பனிஙக் சீன்களில் கேமரா கால்களை மட்டும் காட்டுவதிலிருந்தே அது தெரிகிறது.

எடிட்டிஙக் பரவாயில்லை ரகம்.133 நிமிடஙகள் ஓடுகிறது

சபாஷ்  டைரக்டர்

1  அதிக செலவில்லாமல் ஒரு ஹாஸ்பிடலில் 75% ஷூட்டிங்கை முடித்தது

2 நாயகிக்கு ஜோடி ,டூயட். வைக்காதது

  ரசித்த  வசனங்கள் 


1 அதிகாரம் எப்பவும் நம்மைத்துரத்திட்டுதான் இருக்கும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 படம் போட்டு 37 வது நிமிடத்தில் தான் மெயின் கதை ஆரம்பிக்கிறது

2 வில்லனின் பராக்கிரமத்தைக்காட்ட தேவை இல்லாமல் ஓப்பனிஙகில் அவருக்கு 2 சண்டைக்காட்சிகள்

3 ஒரு எம் எல் ஏ போலீசுக்கு போன் பண்ணாமல் ரவுடிக்கு போன் போட்டு உதவி கேட்பது ஏன்?

4 போலீஸ் கமிசனரையே ஒரு ரவுடி மிரட்ட முடியுமா?

5. வில்லன் நாயகியை மிரட்டிய போன் டேப் விஷயத்தை வைத்தே வில்லனைக்கைது செய்யலாமே?எதுக்கு வில்லனை விடறாஙக?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தெலுங்குப்பட ரசிகர்களைத்திருப்திப்படுத்த தெலுங்கில் தான் படம் எடுக்கனும்.எதுக்கு தமிழில் எடுத்தார்களோ?

விகடன் மார்க் யூகம் 40

குமுதம் ரேங்க்கிங்க். ஓக்கே

ரேட்டிங்க் 2.5 / 5