Showing posts with label 8 தோட்டாக்கள் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்). Show all posts
Showing posts with label 8 தோட்டாக்கள் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்). Show all posts

Friday, July 24, 2020

8 தோட்டாக்கள் (2017)- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

8 Thottakal Tamil Movie | Review | Vetri | Aparna Balamurali | Nassar | M S  Bhaskar | Thamizh Padam - YouTube

   மோஸ்ட்  அண்டர்  ரேட்டட்  மூவி ஆஃப் த  இயர்  எது?னு  கேட்டா  யோசிக்காம  இதை  சொல்லலாம். தியேட்டரில்  ரிலீஸ் ஆகும்போது  பார்க்கலை , இப்போதான்  பார்த்தேன் , அட்டகாசமான  திரைக்கதை , எம் எஸ்  பாஸ்கரின்  லைஃப்  டைம் அச்சீவ்மெண்ட்  மூவி , பேங்க்  ராபரி  த்ரில்லரில்  பெஸ்ட்  ஸ்க்ரீன்ப்ளே  என இதன்  பெருமைகளை  அடுக்கிட்டே போகலாம்

ஒரு பேங்க்கை  கொள்ளை  அடிக்க  ஒரு குரூப்  திட்டம் போடுது   அந்தக்கொள்ளை  முயற்சில  எதிர்பாராத  விதமா  ஒரு கொலையும் நடந்துடுது. கொள்ளை  முடிந்தபின்  அவங்களுக்குள்ளே  ஏற்படும்  பங்கு  பிரிப்பு தகறாரில் 2  பேர்  அவுட் , மீதி  இருக்கும் தலைவன்  பிடிபட்டானா?  என்பது  ஒரு கதை

ஒரு போலீஸ்  ஆஃபீசர், அவர் கிட்டே  கொடுக்கப்பட்ட  ரிவால்வர்  திருடு  போய்டுது. அவர்  ரொம்ப  நேர்மையான ஆள் என்பதால்  ஸ்டேசன்ல நடக்கும்  மாமூல்  பிரிப்புகளில் லஞ்ச லாவண்யங்களில்  பங்கு  வாங்காதவர், பங்கெடுக்காதவர். அதனால்  இன்ஸ்பெக்டர்  உட்பட  யாருக்கும் அவரைப்பிடிக்காது . இந்த  கன் காணாமப்போன  மேட்டர்ல மத்தவங்களுக்கு  ஒரு குஷி , ஆள்  மாட்டிக்கிட்டார்  அப்டினு . சிபிஐ  ஆஃபீசர்  இந்த  கேசை  விசாரிக்க   வர்றார்

 மேலே  சொன்ன இந்த  2 கதைகளும் எப்படி கனெக்ட் ஆகுது  என்பதை  நீங்க  கற்பனையே பண்ணிப்பார்க்க  முடியாத  அளவுக்கு  பிரமாதமா  திரைக்கதை  அமைச்சு  செம  த்ரில்லர்  மூவியா  பிரசண்ட்  பண்ணி  இருக்காங்க

பொதுவா  லேடீஸ்க்கு இந்த  மாதிரி  க்ரைம்  த்ரில்லர்  மூவிகள்  பிடிக்காதுனு   ஒரு  பேச்சு  உண்டு , ஆனா இந்தப்படத்தில்  பெண்களைக்கவரும்  அருமையான  செண்ட்டிமெண்ட்  சீன்களும்  இருக்கு . பொதுவா  த்ரில்லர்  மூவிகளில்  செண்ட்டிமெண்ட்  சீன் வைத்தால்  அது  படத்தின்  வேகத்துக்கு  ஸ்பீடு பிரேக்கரா  அமையும்  என்பது  என் தனிப்பட்ட  கருத்து , ஆனா விதிவிலக்கு  ஆச்சரியமா இந்தப்படத்தில்   படம் ஸ்பீடு குறையல

ஹீரோவா போலீஸ்  ஆஃபீசரா  வெற்றி  அப்டினு ஒரு புது முகம். ஆள்  நல்ல பர்சனாலிட்டியா இருந்தாலும்  நடிப்பு  பிரமாதம்னு  சொல்லிட  முடியாது , ஆனா சமாளிச்சிருக்கார்  ஒரு போலீஸ்  ஆஃபீசருக்கான  கம்பீரம் , கெத்து  மிஸ்ச்சிங்

வில்லனா எம் எஸ்  பாஸ்கர் பின்னிப்பெடல்  எடுக்கும்  நடிப்பு , இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச் அமைத்த  விதம்  அதை  அவர் எக்ஸ்க்யூட்  பண்ணிய விதம்  பிரமிக்க வைக்குது ஹீரோவை விட அதிக  காட்சிகளில்  வர்றார்.

 நாயகியா அபர்ணா பலமுரளி. பொதுவா  பெண்களின்  அழகே நெற்றியில்  வைக்கும் குங்குமம்  தான், ஆனா குங்குமம்  வைக்காமலேயே அழகா இருக்கும் இந்திய நடிகைகள் பட்டியல் எடுத்தால்  கஜோல், நந்திதாதாஸ் ,அன்னாபென், போன்ற  சில நடிகைகளுக்கு மட்டுமே  அந்த  தகுதி  உண்டு. அதில்  லேட்டஸ்ட்  வரவு  அபர்ணா

 அழகிய  முகம், ஆர்ப்பாட்டம்  இல்லாத அடக்கமான  எளிமையான அழகு . நல்லா பண்ணி  இருக்கார்  இவரது ஆடை  வடிவமைப்பும், உடல் மொழியும் அபாரம்

ஒளிப்பதிவு , எடிட்டிங் கனகச்சிதம், ஆனா பிஜிஎம்  உ=இன்னும் கலக்கி இருக்கலாம்


8 Thottakkal' will be the turning point for Aparna in Tamil…!
சபாஷ்  டைரக்டர்

1        ப்டத்தின் டைட்டிலிலேயே  தான்  எந்தெந்தபப்டங்களில்  இருந்து  இன்ஸ்பயர்  ஆகி இப்படத்தின்  திரைக்கதையை  அமைத்தேன்  என்பதை  ஓப்பனாக  சொல்லி  க்ரெடிட்  கொடுத்தது  அட்லீகள், முருகதாஸ்களுக்கு நல்ல பாடம்
2        ஹீரோ – வில்லன்  ஹோட்டல்  கான்வோ  சீனில்  சிங்கிள்  லெங்க்தி  ஷாட் பிரமாதமா  ஒளிப்பதிவு  பண்ணியது  , இதற்கு முன்  5 நிமிட  சிங்கிள்  ஷாட்  புதையல் படத்தில்  அர்விந்த்சாமியின்  பாடல் காட்சியிலும், குணா  வில்  கமல் அந்த  ரூமை  சுற்றி வரும்  காட்சியிலும்  பார்த்தது.
3        துப்பாக்கி  காணாமல்  போனதும் நடக்கும்  விசாரணைகள்  தேடல்கள்  டீட்டெய்லிங்  அருமை , இதற்குமுன் 6 மெழுகுவர்த்திகள்  படத்தில்  தான் இவ்ளோ  டீட்டெய்லிங்  பார்த்த நினைவு
4        எம் எஸ்  பஸ்கருக்கான  ஃபிளாஸ்பேக்  காட்சிகள் , அவரது  குடும்பப்பின்னணி  உருக்கங்கள்  ஒரு துளி  கூட  போர் அடிக்காத  விதத்தில்  காட்சி அமைக்கப்பட்ட  விதம்
5   போலீஸ்  என்கொயரியில்  ஹீரோ   ஒன்று சொல்வதும்  ஆனால்  நடந்தது  வேறாகவும்  காட்டப்படும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்

6 மிஷ்கின் உடைய  உதவியாளராக  பணி ஆற்றி இருந்தாலும்  அவரிடம் உள்ல பிளஸ்களை  மட்டுமே  எடுத்து  தன் பிளஸ்களை  சேர்த்து  திரைக்கதை அமைத்த விதம்

 நச்  வசனங்கள்

1
 தான்  உண்டு , தன்  வேலையுண்டுனு இருக்கறவங்க கிட்டேதான்  இந்த  வம்பிழுக்கற வேலை  எல்லாம் நடக்கும்

2  நல்லவனா  இருந்தா  கோயில்   வாசலில் விபூதி  வேணா விற்கலாம், போலீஸ்  வேலைக்கு  சரிப்பட்டு  வராது

3  கொள்ளை  அடிப்பதில்  முதல்  விதி  அடிச்ச  பணத்தை உடனே  செலவு  பண்ணக்கூடாது  காரணம்  2 போலீஸ்  நோட் பண்ணும், ஆடம்பர செலவு  காட்டிக்குடுத்துடும் , சீரியல்  நெம்பர்  நோட்  பண்ணி  இருந்தா  மாட்டிக்குவோம்

மனுசன்  வார்த்தையா வேணா  இனி நான் நல்லவன் என  சொல்லிக்கலாம், ஆனா காயமும் வலியும் தான் ஒருவனை மாற்றும், திருத்தும்

உனக்கு  உதவி பண்ணூம்போது நான் நல்லவ , இப்போ நான்  கெட்டவ.. அப்டித்தானே?

 யார்றா  இவ , புருசன் பேரைச்சொன்னாலும்  அழறா , கள்ளக்காதலன்  பேர் சொன்னாலும் அழறா
விலைவாசி  தான் ஏறிக்கிட்டே இருக்கு , சம்பளம்  அப்படியே தான் இருக்கு

 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1        எனக்கு  கரிநாக்கு , நான் சொல்வது  அப்படியே  பலிக்கும் , நீங்க  வேணா  பாருங்க , காணாமப்போன உங்க  துப்பாக்கி  இன்னும் 2 நாட்களில்  உங்க  வீடு தேடி வரும் அப்டினு வில்லன் ஹீரோ கிட்டே  சொல்வது  போல்  ஒரு வசனம்  வருது. ஆக்சுவலா  கரிநாக்கு  என்பது  சாபம் விட்டா பலிக்கும் அல்லது  கெடுதல்  சொன்னா நடக்கும் என்பதுதான்  ஐதீகம், நம்பிக்கை , நல்ல விஷயம்  சொன்னா  நடக்கும் என்பதல்ல
2         வங்கிக்கொள்ளையில்  எதிர்பாராத விதமா  துப்பாக்கி  வெடிக்குது.  அந்த  சத்தம்  கேட்டு   பேங்க்  அக்கம்  பக்கம்  யாரும்  வர்லை , ஒரு பரப்ரப்பு ஏற்படலை
 பொதுவா  வங்கிக்கொள்ளைல  புது  நோட்டை  அவாய்டு பண்ணுவாங்க , பழைய  நோட் மட்டும்  எடுப்பாங்க , ஏன்னா  சீரியல்  நெம்பர்  காட்டிக்கொடுத்துடும்

3        வங்கிக்கொள்ளை  பணத்தில்  பங்கு தலைவன் 50% , துணை  தலைவன் 40%  எடுபுடி 10%  இதான் டீல், ஆனா  முழுப்பணத்தையும்  எடுபுடி  வீட்டில்  வைப்பது  எப்படி?
5        கமல்  நடிச்ச விக்ரம்  படத்துல  நாயகி அம்பிகா  நெற்றில  குண்டு  பட்டதும் கமல்  சுடப்பட்ட இடத்தை  அண்ணாந்து  பார்ப்பார் . அதே  கோணத்தில் சுடப்படும்  ஆளை  கண்ட  ஹீரோ  மற்றும் சிபிஐ  ஆஃபீசர்கள்  எந்த  இடத்தில்  இருந்து  ஷூட்  பண்ணாங்க?  என்பதை  பார்க்கவே இல்லை


  சி.பி   ஃபைனல்  கமெண்ட் =  நீங்க  இதுவரை  எத்தனையோ த்ரில்லர்  மூவி  பார்த்திருக்கலாம் , இது  மிக  மாறுபட்ட  படைப்பு , டோண்ட்  மிஸ் இட் . ரேட்டிங்  4 / 5
6           
8 தோட்டாக்கள் நடிகை அபர்ணா கேலரி | Gethu Cinema Tamil