Showing posts with label நிறம் மாறாத பூக்கள் (1979)- சினிமா விமர்சனம் ( கிளாசிக்கல் ரொமாண்டிக் மூவி). Show all posts
Showing posts with label நிறம் மாறாத பூக்கள் (1979)- சினிமா விமர்சனம் ( கிளாசிக்கல் ரொமாண்டிக் மூவி). Show all posts

Monday, October 12, 2020

நிறம் மாறாத பூக்கள் (1979)- சினிமா விமர்சனம் ( கிளாசிக்கல் ரொமாண்டிக் மூவி)

 கே  பாக்யராஜ் இதுவரை எழுதிய கதைகளிலேயே  இரு தனித்தனி காதல் கதைகளை  கடைசியில் ஒரே நேர்கோட்டில்  இணைக்கும்  ராஜேஷ்  குமார்  பாணி  எழுத்தை  முதலும் கடைசியுமாக பயன்படுத்திய  உத்தி  இதில் தான்.படத்தின்  டைட்டில் எந்த அளவுக்கு கவித்துவமாக அமைந்ததோ அதை விட ஒரு படி மேலாக படத்தின் பாடல்கள் தெய்வீக இசை  கொண்டு  வேற லெவலில் கொண்டு போய் நிறுத்தியது இசை ஞானியின் இசை 



ஹீரோ  டிகிரி  முடிச்ச  ஆனா  வேலை  இல்லாத  வெட்டாஃபீஸ். ஹீரோயின்  மிகப்பெரிய  தொழில்  அதிபரின்  மகள் . டெலிஃபோன்  பூத்ல  ஹீரோ  ஃபோன் பண்றாரு, அப்போ  பூத்  கதவைத்தட்டும்  ஹீரோயின் ஹீரோ  கூட சண்டை  போடறாங்க , இப்படித்தான்  இவங்க  அறிமுகம் மோதலில்  ஆரம்பிக்குது . பெரும்பாலான  காதல்கள்  மோதலில்  தானே ஆரம்பிக்கின்றன?


ஹீரோ  தன் டைரில காதலுக்காக தான் ஏங்குவதாகவும்  ஆனா  தனக்கு  அந்த   கொடுப்பினை  இல்லை , அட்லீஸ்ட்  வரப்போற  மனைவி கூடவாவது  ஒரு காதல்  வாழ்க்கை  வாழனும்னு  எழுதி  வெச்சு கரெக்டா  அந்த  டெலிஃபோன்  பூத்ல  மிஸ் பண்ணிட்டுப்போறார்  


ஹீரோயின்  தன் கம்பெனிலயே  ஜெனரல்  மேனேஜர்  போஸ்ட்  போட்டுத்தர்றார். தன்  கூட சண்டை  போட்ட பெண்  தான்  தனக்கு  வேலை  தந்த  ஓனர்  என்பது  தெரியாமல்  ஹீரோ  அடிக்கும் ஜாலி லூட்டிகள்  20 நிமிடங்கள். அப்ற,ம்  லவ் பண்ணும்  இருவரும்  அடிக்கும்  ஜாலி கலாட்டாக்கள்  20   நிமிடம்னு  ஜாலியா  போகுது 


திரைக்கதை  உதவி  கே பாக்ய ராஜ்  ஆச்சே? கிளுகிளு  மேட்டர்  இல்லைன்னா எப்படி?  ஹீரோவுக்கு  பக் வீட் ஆண்ட்டி  அடிக்கடி  ஹீரோக்கு  பிட்  போடுது. நானே  தான்  என  அந்த  லேடி  அடிக்கும்  பெருமூச்சு  வசனம்  அந்தக்காலத்தில் செம ஹிட்டாம் ( தகவல்  உபயம் - கானாப்ரபா, இலங்கை)


ஹீரோயினோட  அப்பா  இவங்க  காதலுக்கு  முதல்ல  குறுக்கே நின்னாலும்  மகளின்  பிடிவாதத்தால்  காதலுக்கு  சம்மதம்  தெரிவிக்கிறார்


 என்னடா இது  கதை ல ட்விஸ்ட்டே  இல்லையே , வில்லனே   காணோமே  என  நினைக்கும்போது   எதிர்பாராத  ஒரு சம்பவம்  நடக்குது 


 ஹீரோயினோட அப்பாவோட  நண்பருக்கு  ஒரு மகன் . அவருக்கு  தன் மகளை  கட்டிக்கொடுப்பதா  ஆரம்ப காலத்தில்  வாக்குக்குடுத்திருக்காரு 


ஆனா  நண்பரின்  மகனுக்கு  ஒரு நிறைவேறிய  காதல்  தோல்வி . அதென்ன  நிறைவேறிய  காதல்  தோல்வி ?


அவரு  பொண்ணை  ஒரு தலையா  விரும்பறார், துரத்தி  துரத்தி  லவ்வறார். ஒரு கட்டத்துல  அவர்  லவ்வை   அவ  ஏத்துக்கறா.   ஒரு டைம்  குதிரை  ஏற்றம் சொல்லித்தரும்போது  நாயகி    பயப்படறா, ஆனா  இவரு   தைரியமா ,  அசால்ட்டா  இருக்க  குதிரை  திடீர்னு  பறக்குது . திடுக்கிட்ட  நாயகனுக்கு  பின்  உண்மை  தெரியுது. காதலிக்கு  ஆல்ரெடி  குதிரை  ஏற்றம்  தெரியும் . சும்மா  விளையாட்டு  காட்டுதுனு 


 இதே  மாதிரி  ஒரு சம்பவம்  ஏரியில்  குளிக்கும்போது  தனக்கு நீச்சல் தெரியாதுனு காதலி  சொல்ல  சும்மா  விளையாட்டுக்கு சொல்லுதுனு  தண்ணில  தூக்கிப்போட  விபரீதம். காதலி  ஏரியில் மூழ்கி  இறக்கிறார்


 காதலியை  நிரந்தரமாக  இழந்த  இந்த  நாயகன், காதலனை  தற்காலிகமா  இழந்த  அந்த  நாயகி   இருவருக்கும்  புது  காதல்  ஏற்பட்டதா? இல்லையா? என்பதுதான்  க்ளைமாக்ஸ்


சில  பழைய  படங்களைப்பார்க்கும்போது  இப்போ  பார்க்கும்போது  காமெடியா  இருக்கே, இது எப்படி  இந்த  அளவு  ஹிட் ஆச்சு? என தோன்றும்,  சில படங்களை  எப்போது  பார்த்தாலும்  ரசிக்கத்தோன்றும். இது  இரண்டாவது   வகை 


முதல்  கதையில் சுதாக்ர்  , ராதிகா  ஜோடி .  சிறப்பா  பண்ணி  இருந்தாங்க . குறிப்பா தன்  முதல்  படத்துல  கிராமியப்பெண்ணாக  வந்த  ராதிகா  இதில் சிட்டி  கேர்ளாக   மாடர்னா  அசத்தி இருந்தார்


இரண்டாவது  கதையில்  விஜயன் - ரதி  ஜோடி .  பசி , உதிரிப்பூக்கள்    மாதிரி  நெகடிவ்  ரோலிலேயே  பார்த்த  நமக்கு  இவரின்  அற்புதமான  ஹீரோ  ரோல்  செமயா   டச்  பண்ணுது. ரதியின்  மிகக்குறுகிய  கால   திரை  வடிவம் கண்ணுக்குள்  நிக்குது 


இசை  தான்  படத்தின்  இரண்டாவது  ஹீரோ . முதல்  ஹீரோ  திரைக்கதை .


சபாஷ்  டைரக்டர்


1    முதல்  பாதி  காதல்  கதையை  ஜனரஞ்சகமாக , கிளுகிளுப்பாக  கொண்டு சென்ற  இயக்குநர்   இரண்டாவது  காதல்  கதையை  ரொமாண்டிக்காக  மனதை  தொடும்  வகையில் சொன்னது  சிறப்பு . இரு கதைகளையும் இனைக்கும்  புள்ளி  அருமை  


2  பாடல்களுக்கான  சிச்சுவேஷன் , பாடல்களை  படமாக்கிய  விதம்  இவற்றில் எல்லாம்  பாரதிராஜாவின்  ஸ்பெஷல்  டச். குறிப்பாக  இலையாராஜாவின் பிஜிஎம்  தனி ஆவர்த்தனம் 


3    முதன்  முதலாக  காதல்  டூயட்  பாட  வந்தேனே


இரு பறவைகள்  மலை  முழுவதும்


ஆயிரம்  மலர்களே


  பாடலக்ள்  தான் படத்தின் உயிர் நாடி 

நச்  வசனங்கள்


1   வீடு  சின்னதா  இருக்கே? சிரமமா இல்லை?


  ஹவுஸ்  ஓனர் மட்டும் வாடகை   கேட்கலைன்னா  இந்த  வீடு எனக்கு சொர்க்கம் 


2  வெட்கப்படக்கூடாத  இடம் பெட்ரூம் மட்டும் இல்லை, டைனிங் ஹால் ரூம் கூடத்தான்


3  காதல்ங்கறது  டேக் ஆஃப்  ஆகற  ஃபிளைட்  மாதிரி  முதல்ல குதூகலமாத்தான் இருக்கும் 


4   எந்த  வார்த்தைக்கும் அடங்காத அவள் அழகு 


5   நான்  உன் கிட்டே ஒண்ணு சொன்னா  நீ கோபப்படுவே 


 அப்போ சொல்ல வேணாம்


 நீ முதல்ல கோபப்பட்டுடு, நான் சொல்றேன் 



6   இது காதல்  இல்லை , கருணை . தோத்துப்போன காதலை சந்தித்த  ஒரு இதயம் இன்னொரு தோல்வியைத்தாங்கக்கூடாது என்பதற்கான கருணை


7  உலகிலேயே  ரொம்பப்பொறுமை  தேவைப்படும் தொழில் தூண்டிலில் மீன் பிடித்தல் 


8  மவுனம்  கூட ஒரு  மொழி தான்ஆனா  சிலரால  தான் அதை புரிஞ்சுக்க முடியும்


9  ஒவ்வொரு காதல்  ஜோடிக்கும் அவங்க பெற்றோர் தான் முதல் எதிரினு ஒரு தியரி  இருக்கு , அதை  மாத்த  விரும்பறேன்


10  காதலுக்குக்கண்ணில்லை , கடவுளுக்கும் கண்ணில்லை, என் காதலில் அவன் விழி ஒளி இழந்தவனாய் ஆகிட்டான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1   கோடிக்கணக்கான  சொத்துக்கு  அதிபதி  ஆகப்போகும் கோடீஸ்வரியின்  மாப்பிள்ளை  ஆகும்  வாய்ப்பை  விட்டு விட்டு பிசாத்து  50 லட்ச ரூபாய்க்கு யாராவது  ஆசைப்பட்டு  அதை  எடுத்துட்டு  ஓடுவாங்களா?  நாயகிக்கு அது  கூடவா தெரியலை ?


2   நாயகி  நாயகனை  பின்னாளில்  சந்திக்கும்போது  அவன்  தோட்டத்தில் புல் வெட்டிட்டு இருக்கான். அதைப்பார்த்து  கூட நாயகிக்கு  சந்தேகம்  வர்லையா?


3  பொதுவா  கோடீஸ்வரர்கள்  இது போல  டபுள்  கேம் ஆடும்போது  காதலனை  தீர்த்துக்கட்டுவாங்க  அல்லது  வெளியூருக்கு  பேக் பண்ணி  அனுப்புவாங்க  . உள்ளூரிலேயே  அவனை உலவ  விட்டால் ஆபத்து  என  தெரியாதா?


4   விஜயன்  ரதி  தன் கண் முன்னால்  நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும்போது  பார்த்துக்கொண்டே  இருப்பது  உறுத்துது. அந்த  சீனை  வேற  மாதிரி  எடுத்திருக்கலாம். சீன் படி அவர்  ஒரு கொலைக்குற்றவாளி


5   க்ளைமாக்ஸ்  சீன்  உதிரிப்பூக்கள்  க்ளைமாக்சை  நினைவுபடுத்துது


சி.பி ஃபைனல்  கமெண்ட்  -  எவர் க்ரீன் லவ் ஸ்டோரி இது .  சூப்பர்   ஹிட்  பாடல்களை  சிச்சுவேஷனோடு காண  யூ ட்யூப்பில் கண்டு மகிக்ழுங்கள் . ரேட்டிஞ்  3.25 / 5