Showing posts with label த்ரில். Show all posts
Showing posts with label த்ரில். Show all posts

Saturday, December 31, 2011

DANGER - கிருஷ்ணவம்சியின் தெலுங்கு த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://moviegalleri.net/wp-content/gallery/abaayam-movie-stills/abaayam_movie_stills_3916.jpgடைரக்டர் கிருஷ்ணவம்சி எப்பவும் மாந்திரீகம், த்ரில்லர் ஓரியண்டட் சப்ஜெக்டா எடுப்பார்.. இந்தப்படமும் அதே லைன்தான்.. படம் பூரா ஓடிக்கிட்டே இருக்கற கேரக்டர்கள் கொண்ட STORY KNOT.

ராஜேஷ்குமாரின் நாவல்ல 3 லைன் வெவ்வேறா போகுமே, அது மாதிரி திரைக்கதை, ஊடால இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்ல வர்ற மாதிரி நரபலி மாந்திரீகம் கலந்து கதை சொல்லி இருக்கார்.. 

ஸ்வாதி காலேஜ் கேர்ள், ஃபாரீன் மாப்ளை  மேரேஜ்க்கு ஃபிக்ஸ் ஆயாச்சு,அவரோட காலேஜ் மேட்ஸ் ஷெரீன், மற்றும் 3 பசங்க மேரேஜ்க்கு முன்னே ஒரு டிஸ்கொத்தே பார்ட்டிக்கு போலாம்னு  கிளம்பறாங்க.. வழில ஒரு நரபலி சம்பவத்தை பார்த்துடறாங்க..ஒரு மினிஸ்டர் தன் ஜோசியர் கம் சாமியார் அட்வைஸ் படி ஒரு குழந்தையை நரபலி கொடுத்தா சி எம் ஆகிடலாம்னு நினைக்கறாரு.. அது படி ஏதோ குப்பத்துல இருந்து ஒரு குழந்தையை கடத்திட்டு வந்து நரபலி குடுக்கறப்பதான் ஹீரோயின் & குரூப் அந்த நரபலி  சம்பவத்தை ஹேண்டி கேமரால ஷூட் பண்ணிடறாங்க.. வில்லன் குரூப் அந்த வீடியோவை பறிமுதல் செய்ய நடத்தும் துரத்தல்கள்தான் படம்,.,.


http://moviegalleri.net/wp-content/gallery/abaayam-movie-stills/abaayam_movie_stills_3394.jpg
இயக்குநர் அந்த காலேஜ் ஃபிரண்ட்சை அறிமுகப்படுத்தி கதைக்குள்ள போகவே ஒரு மணி நேரம் எடுத்துக்கிட்டார்.. அது பெரிய மைனஸ்.. படம் இளமைத்துள்ளலோட இருக்கனும்னு நினைச்சு பண்ணார் போல.ஒரே காமெடி கலாட்டாவா ஓப்பனிங்க்ல கொடுத்துட்டோம்னு தப்பா நினைச்சுட்டார்.. கொட்டாவிதான் வருது.. அவங்க 5 பேரும் லொட லொடன்னு பேசிட்டே இருக்கறது செம அலுப்பு.. 

நரபலி சம்பவம், போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட் இந்த 2ம் நடந்த பின் தான் படம் சூடு பிடிக்குது..  அதுக்குப்பின் திரைக்கதை இறக்கை கட்டிட்டு பறக்குது.. ஹீரோயிசம் இல்லாத படம்.. 

ஸ்வாதி தெத்துப்பல் சிரிப்பை பார்த்துட்டே  இருக்கலாம் போல.. வழக்கமா அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் செமயா இருக்கும், ஆனா இந்தப்படத்துல மொத்தமே அவருக்கு 6 டிரஸ்தான்.. டூயட் சீனும் இல்லாததால் அவருக்கு தன் வெரைட்டி டிரஸ்ஸிங்க் காட்ட வழி இல்லை.. ஒரே ஒரு சீன்ல அழறார், மனசுக்கு கஷ்டமா இருக்கு ஹி ஹி ( அழகான பொண்ணுங்க அழுதா எனக்கு பிடிக்காது அவ்வ் ) நளினி, ஜீவிதா போன்ற நடிகைகளுக்குப்பிறகு முக பாவனையில் பயத்தை பிரமாதமா பதிவு செய்யற நடிகைகள் கண்ணுக்கே தட்டுப்படறதில்லை..

போராளி படத்துல வர்ற நரேஷ் 3 ஃபிரண்ட்ஸ்ல ஒருத்தரா வர்றார்.. பிரமாதம்னு சொல்ற அளவு இல்லைன்னாலும் நாட் பேடு.. இன்ஸ்பெக்டரா வர்றவர் நடிப்பு செம.. நயவஞ்சக சிரிப்போட அவர் ஆர்ப்பாட்டம் பண்ணாத அமைதி டைப் வில்லன் ரோலை நல்லா பண்ணி இருக்கார்.. அதே மாதிரி மினிஸ்டர் மகனா வர்ற மன நலம் குன்றிய துணை வில்லன் தோற்றம் , கெட்டப் எல்லாம் கவனிக்க வைக்குது.. 

பிரம்மானந்தம் நம்ம ஊரு வடிவேல் மாதிரி , அவர் வர்ற சீன் எல்லாம் செம சிரிப்பு.. ரொம்ப சீரியசா போய்ட்டிருக்கற திரைக்கதையை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்க அவர் காமெடி யூஸ் ஆகுது.. 

http://www.jointscene.com/ahtees/admin/customer/content/119_5_sherin18.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில் 2 கிளாமர் ஹீரோயின்கள் இருந்தும் டூயட் வைக்காதது, திரைக்கதை வாய்ப்பு அளித்தும் இருவரையும் கண்ணியக்குறைவில்லாமல் படம் பிடித்துக்காட்டியது.. 

2. ஊரையே அல்லோலகல்லோலப்படுத்தும் அந்த சேசிங்க் சீனில் நடு ரோட்டில் பல வாகனங்கள் அணிவகுக்க நடுவில் மாட்டிக்கொண்ட கிரிக்கெட் ஆடும் சிறுவன் பந்தை கேட்ச் பண்ணும் சீன் கலக்கல்

3. போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட்டை தத்ரூபமாக படம் பிடித்த விதம்

4. அடர்ந்த காடுகளில் படம் பிடித்த  ஒளிப்பதிவு நேர்த்தி, மற்றும் பின்னணி இசை.. கதையில் 3 பசங்க இருந்தும் ஃபைட் சீன் எதுவும் வைக்காதது..

http://2.bp.blogspot.com/-9dKlH1bjKeA/TiLqNeP_ftI/AAAAAAAAFzw/hUlCAB2_sy8/s1600/Sherin_hot_latest.jpg

இயக்குநரின் சில சறுக்கல்கள்

1.  ஃபாரீன் மாப்ளை ஸ்வாதியை பெண் பார்க்க வர்றப்ப ஸ்வாதி குளீக்க மாட்டேன் , இன்னைக்கு சண்டே தானே என்கிறார், உடனே அவர் அம்மா இன்னைக்கு மாப்ளை உன்னை பொண்ணு பார்க்க வர்றார் போய் குளி என்கிறார், அடுத்த சீனில் ஷெரீன் தன் அம்மாவிடம் இன்னைக்கு சாட்டர்டே, என் ஃபிரண்டை பொண்ணு பார்க்க வர்றாங்க என்கிறார்.. ஒய்? 

2. மூன்று நண்பர்களில் ஒருவர் வில்லனின் பிடியில், துப்பாகி முனையில், மீதி 4 பேரும் ஒளிந்திருக்கும் இடத்துக்கு வில்லன் வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறான், அப்போ ஒரு வார்னிங்க் குடுக்கறதுக்காக வில்லனுக்கு தெரியாம டேஞ்சர் டேஞ்சர் என 8 முறை டைப் பண்ணி அனுப்பறார், மற்ற 4 பேரும் குழம்பறாங்க, ஏன் அவ்ளவ் கஷ்டம்? டேஞ்சர், ரன் ரன் டோண்ட் ஸ்டே ஹியர்னு மெசேஜ் அனுப்பினா வேலை முடிஞ்சது..

3. ஒரு சின்ல வில்லனா வர்ற எஸ் ஐ  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தனோட பாதத்துல சுடறார், ஆனா அவர் அடுத்த ஷாட்ல கெண்டைக்கால்ல காயம்+ரத்தம்???

4. க்ளைம்மாக்ஸ்ல இன்ஸ்பெக்டர் கைல வெச்சிருந்த ரிவால்வரை  காலேஜ் பசங்க பிடுங்கிக்கராங்க, அதுக்குப்பிறகு அரைமணி நேரம் கழிச்சு அவர் தன் கால்ல ஸாக்ஸ்ல மறைச்சு வெச்சிருந்த ரிவால்வரை எடுத்து சுடறார். ஏன்? அப்போதான் நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதா? ( நல்ல நேரம் சதீஷ், விளம்பர சார்ஜ் ஆக ஒரு வெஜ் பப்ஸ்  ப்ளீஸ் ஹி ஹி )

5. போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட் ஆனதும் அதுல இருந்து படு காயங்களோட எஸ் ஆன போலீஸ் 3 பேர் சீரியசா இருக்காங்க, 50,000 ரூபா குடுத்தா நான் கண்டுக்காம போயிடறேன்னு சொல்றாரே? இந்தக்காலத்துல ஆடு மாடு அடிச்சாலே அந்த தொகை கறந்துடுவாங்களே, 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் ஆக்சிடெண்ட்ல படு காயம் அடைஞ்சிருக்கங்க, அதுக்கான காம்பன் ஷேஷன் தொகை அவ்வளவு கம்மியாவா கேப்பாங்க?

6. ஸ்வாதி & குரூப் வீட்ல பேரண்ட்ஸ் கிட்டே  நைட் 11 மணிக்கு வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகிடுவோம், சினிமா போறோம்னு பொய் சொல்லி நைட் பார்ட்டிக்கு போறாங்க, இன்னொரு சீன்ல 11 மணிக்குதான் பார்ட்டி ஸ்டார்ட் ஆகுதுன்னு ஒரு வசனம் வருது.. 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/05/colours-swathi-hot-photo-10.jpg

மனதில் நின்ற வசனங்கள்

1.  குழந்தையை சாப்பிட விடுங்க.. 

யானைக்கு தீனி போடற மாதிரி நீ சமைச்சு போடு, அவன் கழுதை மாதிரி ஊர் மேஞ்சுட்டு வரட்டும்.. 

2. கில்மா லேடி - அய்யய்யோ, என் ஹஸ்பெண்ட் வந்துட்டாரு, நீ கிளம்பு சீக்கிரம்..

அவர் எதுக்கு இங்கே வந்தாரு?

வாட் நான்சென்ஸ், இது அவர் வீடுடா,, ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

3. டேய், அரை மணி நேரமா கால் பண்றேன், எங்கேடா இருந்தே?

தூங்கிட்டு இருந்தேன்

யார் பெட்ரூம்ல? யார் கூட ? ( குறவன் ஜாடை மறவனுக்குத்தானே தெரியும்?)

4. உனக்கு எவன் லைசன்ஸ் தந்தான்?

பிரம்மானந்தம் - நினைவில்லை.. 

நேஷனல் பர்மிட் இருக்கா?

பிரம்மானந்தம் - அப்டின்னா என்ன?

5. பிரம்மானந்தம்- எனக்கு ஒண்ணும் புரியலை.. 

நாங்க பேசுனது ஹிந்தி.. 

சொல்லிக்குடுங்க, நானும் புரிஞ்சுக்கறேன்

6. கில்மா லேடி - நீ சுத்த வேஸ்ட்ய்யா..

எப்படிடி கண்டு பிடிச்சே?


http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sherin-hot-stills/sherin-hot-pics-2.jpg

7.  குழந்தை அழற சத்தம் இந்த காட்ல கேக்குது.. 

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

குழந்தையோட அப்பா கிட்டே கேட்டு சொல்றேன்.. 

8. பிரம்மானந்தம்-எதுக்குய்யா போலீஸ் உங்களை ஷூட் பண்றாங்க..?

நாங்க ஒரு தப்பு பண்ணிட்டோம், போலீஸ் ஜீப்பையே ஆக்சிடெண்ட் பண்ணிட்டோம்..

பிரம்மானந்தம் -அய்யய்யோ, எனக்கு 4 சம்சாரம்யா, அதுல ஒண்ணை உங்களுக்கு தள்ளி விட்டுடறேன், என்னை எப்படியாவது எஸ் ஆக விடுங்கடா..

ஏன் ,? நாலையும் தந்துடலாமே? மனசு வராதே?

9. பிரம்மானந்தம்- சுத்தம், போலீஸ் துரத்துது.. இந்த கார் ஏன் அங்கப்பிரதட்சணம் பண்ணுது? அவ்வ்வ்வ்

10.  புல்லட் பட்டா ரத்தம் வரும் தெரியும்.. ஆனா போலீஸ் வருதே?

பிரம்மானந்தம்- ஹூம், பிரச்சனையும் கூடவே வரும்.. இனி 

11. டாக்டர் - உதவிக்கு கம்பவுண்டர் நோ, நர்ஸ் நோ , எனக்கு ஃபேமிலியும் நோ.. 

12.  நான் அரசியலே இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படறேன்

சி.பி கமெண்ட் -  த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், டி வி ல போட்டா 

http://www.dailomo.com/wp-content/uploads/2011/12/actress-Swathi-cute-stills-441.jpg

இது டப்பிங்க் படம் என்பதால் விகடன் ல விமர்சனம் போட மட்டாங்க, இருந்தாலும் தர நிர்ணயிப்புக்காக எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ஸ்ரீகிரு்ஷ்ணால பார்த்தேன் ( தமிழ்ல அபாயம் கற பேர்ல டப் ஆகி இருக்கு )

டிஸ்கி 1 - கஷ்டப்பட்டு விமர்சனம் எழுதி இருக்கேன், யாராவது விமர்சனத்தை விட ஸ்டில்ஸ் தான் நல்லாருக்குன்னு கமெண்ட்ஸ் போட்டா செம காண்ட் ஆகிடுவேன் ஹி ஹி 

டிஸ்கி 2 -

மகான் கணக்கு - ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் அடாவடிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி -3 - எதிர்காலத்தில் யாருக்கும் புற்றுநோயே வராமல் தடுக்க- http://nesampeople.blogspot.com/2011/12/blog-post_29.html?showComment=1325265343969#c3536983278402745761