Showing posts with label சிவப்பு - இலங்கை அகதிகள் சம்பந்தப்பட்ட படம்?? - இயக்குநர் சத்யசிவா. Show all posts
Showing posts with label சிவப்பு - இலங்கை அகதிகள் சம்பந்தப்பட்ட படம்?? - இயக்குநர் சத்யசிவா. Show all posts

Sunday, February 09, 2014

சிவப்பு - இலங்கை அகதிகள் சம்பந்தப்பட்ட படம்?? - இயக்குநர் சத்யசிவா

இலங்கைத் தமிழர் உணர்வைக் காட்டும் ‘சிவப்பு’: இயக்குநர் சத்யசிவா

‘‘உணர்வுபூர்வமான விஷயங்களை ரொம்ப எந்திரத்தனமா சொன்னா எந்திரிச்சுப் போயிடுவாங்க. அதனால, படத்தோட போக்கை கொஞ்சம் மாத்தினேன். சுவாரசியமா கதை போயிக்கிட்டே இருக்கும். திடீர்னு நெஞ்சுல அடிக்கிற மாதிரி காட்சி இருக்கும். க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் ஒரு வலியோட எல்லாரும் வெளியே வருவாங்க. உண்மைய சொல்லிருக்கேன்’’ என்று ‘சிவப்பு’ படத்தைப் பற்றிக் கேட்டாலே ஆயிரம் வாட்ஸ் பல்பு போல சந்தோஷமாய் சிரிக்கிறார் இயக்குநர் சத்ய சிவா. ‘சிவப்பு’ படத்தைப் பற்றி அவரிடம் பேசியதில் இருந்து...


‘சிவப்பு’ எந்த மாதிரி கதைக்களம்..?



காதல் கதைதான். காதல்தான் முக்கியமா இருக்கும். அதைச் சுற்றி அரசியல், தமிழ் மக்களின் உணர்வுகள் இப்படி எல்லாமே கலந்திருக்கும். சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக் குடி, பாண்டிச்சேரி என கடல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கி றோம்.


ராஜ்கிரண், செல்வா, தம்பி ராமையா, நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி எல்லாருமே தங்கள் ரோலை சிறப்பா செஞ்சிருக்காங்க. ராஜ்கிரண் இதுவரை நிறைய படங்கள்ல நடிச்சிருக் காரு. ஆனா, எந்த ஒரு படத்தின் விளம்பரப் பணிக்கும் அவர் போன தில்லை. முதன்முதலா நம்ம படத்துக்கு வர்றதா சொல்லியிருக்கார். மது அம்பாட் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம். என் வயசு அவரோட அனுபவம். அவரோட சேர்ந்து இந்த படத்துக்காக பணியாற்றியது மறக்கவே முடியாது. முக்கியமா, மனுஷ்யபுத்திரன் க்ளைமாக்ஸ்ல முக்கியமான கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கார்.


பட விளம்பரங்களைப் பார்த்தா இலங்கை அகதிகள் சம்பந்தப்பட்ட படம்போல தெரியுதே?


முழுக்க இலங்கை சம்பந்தப்பட்ட படம் கிடையாது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்தான் கதைக் களம். அங்கே ராஜ்கிரண் மேற்பார்வை யாளரா இருக்கிறார். அகதி முகாம்ல இருக்குறதுக்கு பலருக்கு விருப்ப மில்லை. அங்கிருந்து ஆஸ்திரேலி யாவுக்கு தப்பிச்சுப் போகணும்னு நெனைக்கிறாங்க. அங்கே போனா சீக்கிரம் குடியுரிமை வாங்கிடலாம்கிறது அவங்க எண்ணம். உயிரைப் பணயம் வைச்சு முகாம்ல இருந்து போறாங்க. அப்படி போறவங்க, சிலரால ஏமாற்றப் படுறாங்க. முகாமுக்கும் திரும்ப முடியாம, ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாம தவிக்கிறாங்க. அப்போ.. ராஜ்கிரண்கிட்ட தஞ்சம் கேட்குறாங்க. அந்த இடத்துல இலங்கைப் பெண் ணுக்கும் தமிழ்ப் பையனுக்கும் நடக்குற காதல் கதை. அந்த காதலால் ஏற்படுற பிரச்சினைகள்தான் ‘சிவப்பு’ கதை.



உண்மையில் நடப்பதை கதையா பண்ணியிருக்கீங்களா?



சம்பவங்கள் உண்மை இல்லை. உணர்வுகள் உண்மை. கற்பனையையும் சேர்த்து சொல்லியிருக்கேன்.

இந்த மாதிரியான கதைகள்ல யதார்த்தம் ரொம்ப முக்கியம். ‘சிவப்பு’ அப்படி இருக்குமா?


இலங்கை சம்பந்தப்பட்ட படத்தை யதார்த்தமா எடுத்திருக்கேன்னு சொல் றதைவிட, படத்தோட தொடக்கத்துல இலங்கையோட வரலாற்றைச் சொல்லி யிருக்கேன். தமிழர்கள்லயே பலர் இலங்கை வரலாறு தெரியாம இருக்காங்க. இந்த படம் பார்த்தா இலங்கைக்கும் நமக்குமான உறவு என்ன, இலங்கைத் தமிழர்கள் யாரு அப்படிங்குற விஷயத்தை எல்லோரும் தெரிஞ்சுக்க முடியும். ரொம்ப ரிஸ்க் எடுத்து அதை சொல்லியிருக்கேன்.


அது இல்லாம, ஒட்டுமொத்தமா இலங்கைத் தமிழ் மக்களோட வேண்டு கோள் என்னங்கிறதை முகாம்களில் இருக்கிறவங்ககிட்ட கேட்டேன். ‘எல்லோருமே அங்கிருந்து தமிழ்நாட்டுக் குப் போகணும் நினைச்சு வர்றீங்க. இங்க வந்ததும் ஏன் ஆஸ்திரேலியா போகணும்னு நினைக்கிறீங்க?’ இப்படி நிறைய கேள்விகள் கேட்டேன். அவங்க சொன்னது பயங்கரமா பாதிச்சுது. அவங்க சொன்ன பதில்களை சேர்த்துதான் படமா பண்ணியிருக்கேன்.


‘தூங்கிட்டு இருப்போம். படபடன்னு ஹெலிகாப்டர் சத்தம் கேட்கும். உடனே எந்திரிச்சு ஏதாவது இடத்துல போய் உட்காந்துக்குவோம். இப்பவும் அந்த சத்தம் எங்களை ரொம்ப பாதிக்குது..’’ அப்படியெல்லாம் சொன்னாங்க. இதையெல்லாம் காட்சிகளா படத்துல வச்சிருக்கேன். இந்த படத்துல உணர்வுபூர்வ விஷயம் நிறைய இருக்கு.



இலங்கையைப் பற்றிய கதையை படமா எடுப்பது போராட்டமா இருந்திருக்குமே..?


‘சோகம் என்பது இலங்கையில இருக்கிறவங்களுக்கு மட்டுமில்ல.. இலங்கையைப் பத்தி படம் எடுக்கிறவங் களுக்கும்தான்’னு காமெடியா அடிக்கடி சொல்லுவேன். அது இந்த படம்மூலம் உண்மையா ஆயிடுச்சு. ‘இலங்கை சம்பந்தமான படமா.. அய்யோ பிரச்சினை வருமே’னு எல்லாரும் தயங்குறாங்க. ஒரு உணர்வை வெளிக்கொண்டு வரலா மேங்கிற எண்ணம் யாருக்கும் இருக்கிற தில்ல. இந்த படத்தை பண்ணாதேன்னு சொன்னவங்கதான் நிறைய பேர். பண்ணுனு சொன்னது கொஞ்ச பேர் தான். இந்த படம் இந்த அளவுக்கு வந்து ருக்குன்னா தயாரிப்பாளர் முக்தா சீனி வாசனுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.



படம் சென்சார்ல நின்னுடும். ரிலீஸ் ஆகாது.. அப்படி.. இப்படின்னாங்க. தமிழ் சினிமாவுல நிறைய அனுபவம் உள்ளவங்களே சொன்னப்ப ரொம்ப பயந்துட்டேன். படம் சென்சார் ஆனதும் என் பயமெல்லாம் போய்விட்டது. என் ‘கழுகு’ படத்துக்குகூட சென்சார்ல நிறைய கட் பண்ணச் சொன்னாங்க. ‘சிவப்பு’ படத்துல ஒரு கட் கிடையாது, ஒரு டயலாக் மியூட் கிடையாது. ‘யூ’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க.


அனாதையா இருக்கிற மக்களை ஒண்ணு.. காப்பாத்துங்க. இல்லை.. கைவிட்டுருங்க. அவங்களை வச்சி அரசியல் பண்ணாதீங்க. அது கேவலம்... அப்படினு சொல்லிருக்கேன். இதை ராஜ்கிரண் வசனமா பேசுற இடம், பார்ப்பவர்கள் நெஞ்சில் கண்டிப்பா உறைக்கும்னு உறுதியாக சொல்றேன்.



படத்தை நிறைய பேருக்கு போட்டு காட்டிட்டேன். படம் பார்த்த சில அரசியல் தலைவர்கள்கூட, ‘ஒரு அரசியல்வாதியா இது தப்புன்னு தோணுது. ஆனா, ஒரு மனுஷனா சரின்னுதான் தோணுது’ அப்படின்னு சொன்னாங்க. அதுக்காக யார் மனசையும் புண்படுத்துற மாதிரி நான் எதுவும் சொல்லல. உண்மையை சொல்லிருக்கேன். இயக்குநர் சொன்னது உண்மைதான்னு எல்லார் மனசும் கண்டிப்பா நினைக்கும்.

சீரியஸ் விஷயத்துல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுறீங்க போல இருக்கு. அடுத்து ‘உஸ்தாத் ஹோட்டல்' படத்தை தமிழ் ரீமேக் பண்றீங்களே. அதுபற்றி..?



கழுகு, சிவப்பு மாதிரியான படங்கள்ல இருந்து விலகி உஸ்தாத் ஹோட்டல் என்னை வேறொரு இயக்குநரா வெளிப்படுத்தும். நான் கலர்ஃபுல்லா பண்ணப்போற முதல் படம். ரீமேக் படம்னு ஒரு இடத்துலகூட தோணாது. ஏன்னா ‘உஸ்தாத் ஹோட்டல்’ முழுக்க ஒரு முஸ்லிம் கலாச்சாரம். அதே கதைதான். ஆனா ‘தலப்பாக்கட்டி’யா மாறியிருக்கும். மகேஷ் முத்துசாமி கேமரா, இமான் இசைனு ரொம்ப சூப்பரான டீமோட வேலை செய்யப்போறேன். விக்ரம் பிரபு, நஸ்ரியா, ராஜ்கிரண் நடிக்கிறாங்க. இதுவரைக்கும் கெட்டப் சேஞ்ச் பண்ணாத ராஜ்கிரண் முதன்முறையா கெட்டப் சேஞ்ச் பண்ண இருக்கார். கதையே அவரைச் சுற்றித்தான் பயணிக்கும் என்பதால் ஒப்புக்கொண்டார்.


thanx - the tamil hindu