Showing posts with label கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, February 29, 2020

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் - சினிமா விமர்சனம்

#KannumKannumKollaiyadithaal  க்கான பட முடிவுகள்


ஆரவாரமா விளம்பரம் பண்ணி பயங்கர எதிர்பார்ப்போட வர்ற படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகிடும், ஆனா சத்தமே இல்லாம எதிர்பார்ப்பும் இல்லாம வர்ற படங்கள் செம ஹிட் அடிச்சிடும், இது இரண்டாவது வகை


ஹீரோவும் அவரது நண்பரும் 420. திமுக காரங்க மாதிரி டெக்னிக்கலா திருடறவங்க . இப்போ அரசியல்வாதிங்க எல்லாருமே திருடங்க தான் . ஆனா ஆதாரம் இல்லாம மாட்டிக்காம திருடறது ஒரு கலை இல்லையா? அந்த திருட்டுக்கலையை ஹீரோ பிரமாதமா பண்றாரு .


ஆன்லைன்ல லேப்டாப் , மொபைல் ஆர்டர் பண்றது பார்சல் வந்ததும் பணம் குடுத்து பர்சேஸ் பண்ணி பின் முக்கிய பாகங்களை நைசா கழட்டி எக்சேஞ்ச் [பண்ணி வித்துடறது. இந்த வேலையை பண்றாரு


ஹீரோயினை சந்திக்கறார். ஹீரோயினுக்கு ஒரு தோழி மாப்பிள்ளையும் பொண்ணும் மணமேடைல கிருக்கும்போது மாப்பிள்ளைத்த்தோழனும், பெண்ணின் தோழியும் சிங்க் ஆகற மாதிரி இப்போ 2 செட் ஜோடி செட் ஆகிடுச்சு .ஒரு திருட்டு ஜோடி திமுக காங் மாதிரின்னா இன்னொரு திருட்டு ஜோடி அதிமுக பாஜக மாதிரி


ஹீரோவும் , ஃபிரண்டும் திருடனுங்கனு ஹீரோயினுக்கும் தோழிக்கும் தெரியாது


இவங்களை பிடிக்க போலீஸ் ஆஃபீசர் மெனக்கெடறார்


செஞ்ச திருட்டெல்லாம் போதும் , கோவா போய் எதுனா தொழில் செஞ்சு பிழைச்சுக்கலாம்னு 2 செட் ஜோடியும் போறாங்க


அங்கே போனதும் ஒரு ட்விஸ்ட்


இடைவேளைக்குப்பின் ஒரு ட்விஸ்ட் , க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட்

லாஜிக் மிஸ்டேக்ஸ் பெரிய அளவில் இல்லாம பிரமாதமா திரைக்கதை அமைச்சிருக்கார் இயக்குநர்


ஹீரோவா துல்கர் சல்மான், அனாயசமா பண்ணி இருக்கார் .துள்ளலான நடிப்பு , ஹீரோவின் நண்பனா ரக்சன் நல்ல சரளமான வசன உச்சரிப்பு , டைமிங் ஜோக்கில் சந்தான வாசம்


ஹீரோயினா நித்து வர்மா , ஆஹா ஓஹோ ஃபிகர் இல்லைன்னாலும் ஓக்கே ரகம் தான் , ஹீரோயின் தோழியா வரும் நிரஞ்சனி அகத்தியன் ஹீரோயினை விட கலர் கம்மியா இருந்தாலும் சில இடங்களில் அவரை விட நல்லாவே நடிக்கிறார்

போலீஸ் ஆஃபீசரா இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேன்ன் கலக்கிட்டார் . அவர் பாடி லேங்க் வேஜ் ஹேர் கட் , வசன மாடுலேசன் எல்லாம் அருமை /.; காக்க காக்க சூர்யா , என்னை அறீந்தால் அஜித் , என அவர் நடிப்புக்கு கோச்சிங் அவர் படங்கள்ல இருந்தே


ஏன் இவங்களைப்பிடிக்கெ இவ்ளோ துடிக்கறே என ஹையர் ஆஃபீசர் கேட்கும்போது கவுதம் ஃபிளாஸ்பேக் சொல்கையில் அரங்கம் அதிர்ந்தது

வாரணம் 1000 பட சீனை இவரை வெச்சே நக்கல் பண்ணியது அட்டகாசம்


மொத்தப்படமும் ரெண்டே முக்கால் மணி நேரம் என்றாலும் போர் அடிக்கும் காட்சிகளே இல்லை

நீண்ட நாட்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ரொமாண்டிக் த்ரில்லர்

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 துல்கர் ன் 25 வது படம்னு டைட்டில் ல போடறப்பதான் விஷயமே நமக்கு தெரியுது.போஸ்டர்கள்ல அதை மென்ஷன் பண்ணி இருக்கலாம்.திரைக்கதையில் கச்சிதமா ஸ்கோர் பண்ணுன இயக்குநர் மார்க்கெட்டிங்க்ல கோட்டை விட்டுட்டார்.ஓப்பனிங் ரஷ் இல்லை #KannumKannumKollaiyadithaal


2 இயக்குநரோ,தயாரிப்பாளரோ இருவரில் ஒருவர் ரஜினி ரசிகர் போல,படம் பூரா கொட்டிக்கிடக்குது ரஜினி ரெப்ரன்ஸ் #KannumKannumKollaiyadithaal


3 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு எனது டைட்டில் சாய்ஸ்


திருடா திருடா திருடி திருடி #KannumKannumKollaiyadithaal4 ஒரு த்ரில்லர் படமா இருந்தாக்கூட இயக்குநர் போற போக்குல ஒரு அழுத்தமான கருத்தை பதிவு பண்றார். காதலிக்கற மாதிரி பொண்ணுங்க ஏமாத்துனாலும் ஆண்கள் காதலியை ஏமாத்தமாட்டாங்க,அதுவும் தன்னை ஏமாத்துன பெண்ணா இருந்தாலும்.... #KannumKannumKollaiyadithaal


நச் டயலாக்ஸ்1 பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் னு பழமொழி இருக்கே?


ஒரே தப்பை ரெகுலரா பண்றவன்தான் மாட்டிக்குவான்,ஒவ்வொரு டைமும் புதுப்புது தப்பா பண்றவன் மாட்டிக்க மாட்டான் #KannumKannumKollaiyadithaal
2 என்ன ப்ரோ?

ப்ரோனு சொன்னதும் தான் ஞாபகம் வருது , 2 ப்ரோ பக்கத்து பக்கத்து ல இருந்தும் இணையவே மாட்டாங்க , எப்டி?

தெரியலையே?

ஐ ப்ரோ ( eye brow) #KannumKannumKollaiyadithaal  3 என்னப்பா , ஃபோன்ல குசு குசு?


இது லவ் மேட்டர்பா
லவ்வா? மேட்டரா? #KannumKannumKollaiyadithaal


4 இதுவரை அவன் செஞ்ச தப்பை வெச்சு பிடிக்க முடியலை , ஆனா இனிமே அவன் பண்ற தப்பை வெச்சு பிடிக்க முடியும் #KannumKannumKollaiyadithaal  


5 ம்த்தவங்களுக்கு நாம் பண்ற உதவி நமக்கு சின்ன விஷயமா இருக்கலாம், ஆனா அவங்களுக்கு அது பெரிய உதவியா இருக்கும் #KannumKannumKollaiyadithaal


6 ஏண்டா? லவ்வர் கூட ஃபோன்ல தானே பேசறீங்க? என்னமோ நேர்ல கட்டிப்பிடிச்சு கிஸ் குடுக்கற மாதிரி ஒரு ரீ ஆக்சன் காட்றீங்க? #KannumKannumKollaiyadithaal


7 மிஸ்! உங்க பேரு என்ன?>


வர்ஷா
ஓஹோ, வருசா வருசம் பேரை மாத்திக்குவீங்களா? #KannumKannumKollaiyadithaal


8 மத்த ஊருல தண்ணி அடிச்சா தப்பா பாப்பாங்க ,ஆனா கோவாவுல தண்ணி அடிக்கலைன்னா தான் தப்பா பார்ப்பாங்க #KannumKannumKollaiyadithaal


திரைக்கதையில் சில தவறுகள்


1 லாஜிக் மிஸ்டேக் 1 - வெளியூர் போறவங்க கைல ஹாட் ஹேஷா 6 லட்சம் ரூபா பிளாக் மணி எடுத்துட்டுப்போவாங்களா? வழில போலீஸ் செக்கிங்ல அதுக்கு கணக்கு கேட்டா எப்படி சமாளிப்பாங்க ? #KannumKannumKollaiyadithaal


2 லாஜிக் மிஸ்டேக் 2 - சுமார் 71 கோடி பணத்தை ஹீரோவும் , நண்பரும் 2 பைகல லக்கேஜ் பேக்ல வெச்சு பைக்ல போறாங்க ஹை வேல பல்லாயிரம் கிமீ போக வேண்டிய சூழல்ல இது சாத்தியமா? #KannumKannumKollaiyadithaal  

3 க்ளைமாக்ஸ் ல ஹீரோ, ஹீரோயின் , நண்பன், தோழி 4 பேரும் பைக்ல பைக் ரிலே ல ஜாய்ன் பண்ணி எஸ் ஆக ற மாதிரி காட்றாங்க , மத்த பைக்ல எல்லாம் ஆண் மட்டும், இவங்க 2 பேர் மட்டும் ஜோடியோட , பேக் சீட்ல லக்கேஜ்ல பணம்,, போலீஸ் க்கு டவுட் வராதா?சி.பி கமெண்ட் -கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் − இரும்புத்திரைக்குப்பின் தமிழில் வந்த டெக்னிக்கல் த்ரில்லர் மூவி.ஏ சென்ட்டர் ஹிட் பிலிம்.இயக்குநரின் க்ரிமினல் ப்ரெய்ன் பல இடங்களில் அப்ளாஸ் வாங்குது.

கவுதம்,துல்கர் நடிப்பு குட்,விகடன் 43 ,ரேட்டிங் −3 /5 #KannumKannumKollaiyadithaal